Tuesday, October 27, 2009

ஆபாச சினிமா போஸ்டர்கள் - செருப்பால் அடித்து புதுவையில் போராட்டம்


நடிகைகளின் படு ஆபாசமான போஸ்கள் அடங்கிய போஸ்டர்களை செருப்பால் அடித்தும், கிழித்தும் பெண்கள் புதுச்சேரியில் ஆவேசப் போராட்டம் நடத்தினர்.

கலாச்சாரம், மனது ஆகியவற்றை சீரழிக்கும், ஆபாச சினிமா படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாதர் தேசிய சம்மேளன அமைப்பினர், புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ரத்னா திரையரங்கம் முன் போராட்டம் நடத்தினர்.

அங்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை, செருப்பால் அடித்தும், கிழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு, இந்திய மாதர் தேசிய சம்மேளன நகர தலைவர் ராஜலட்சுமி, நகர செயலர் லதா ஆகியோர் தலைமை தாங்கினர். பொது செயலர் சரளா, மாநிலத் தலைவர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தடை செய்க...

பெண்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்படும் சினிமா படங்களைத் தடை செய்ய வேண்டும். ஆபாச திரைப்படங்களை வெளியிடும் சினிமா தியேட்டர் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். இளைஞர்களை சீரழிக்கும் ஆபாச திரைப்படங்களை வெளியிடக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் [^] வலியுறுத்தினர்.

ஹ்ருத்திக் வைத்த மது விருந்து: நடிகர், நடிகைகள் அமளி- போலீஸ் எச்சரிக்கை


மும்பையில் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது ஓவராக சத்தம் போட்டு ஆட்டம் ஆடியும், பாட்டு பாடியும், மது அருந்தியும் பெரும் அமளியாகி விட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து அமர்க்களம் செய்த நடிகர், நடிகைகளை கடுமையாக எச்சரித்தனர். இதனால் விருந்து பாதியில் நின்றது.

ரோஷன், மும்பையில் ஜுகு பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் 9வது மாடியில் வசித்து வருகிறார். தனது தாயாரின் பிறந்த தினத்தையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் தனது வீட்டில், நண்பர்களுக்கு விருந்து அளித்தார்.

இதில் ஷில்பா ஷெட்டி, கரீனா கபூர், அமிஷா படேல், சோனாலி பெந்த்ரே, துல்ஷார் கபூர் உள்பட ஏராளமான இந்தி நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர். இயக்குநர் கரண் ஜோகரும் கலந்து கொண்டார்.

மது விருந்துடன் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது பாடல்களை படு சத்தமாக வைத்துக் கொண்டு ஆடிப் பாடியுள்ளனர். இதனால் அக்கம் பக்கத்தினர் பெரும் தொந்தரவுக்கு ஆளானார்கள்.

அதிகாலை நேரத்தில் இப்படி அமர்க்களப்படுத்தி அக்கம் பக்கததினரின் நிம்மதியை சீர்குலைத்ததால், குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸுக்குப் போன் செய்தனர்.

விரைந்து வந்த போலீஸார், அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சத்தம் போட்டு, அமளி துமளி ஏற்படுத்திய நடிகர், நடிகைகளை கண்டித்தனர்.
இதனால் பாடல்களை நிறுத்தினர், ஆட்டம் பாட்டத்தையும் நிறுத்தினர். இருப்பினும் போலீஸார் அங்கிருந்து நகர்ந்தவுடன் தங்களது ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். பாடல்களின் சத்தத்தை குறைத்து வைத்துக் கொண்டு விடிய விடிய ஆடிப் பாடினர்.

த்ரிஷாவை ஓரம்கட்டிய நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம்!!

தெலுங்கில் முன்னணி நடிகையான திர்ஷாவையே சம்பள விஷயத்தில ஓரம் கட்டிவிட்டார் நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம்.

இங்கே வடிவேலு ரேஞ்சுக்கு தெலுங்கில் கலக்கி வருபவர் பிரம்மானந்தம். முன்னணி நடிகர்கள் அனைவரும், தங்கள் படங்களில் பிரம்மானந்தம் கட்டாயம் இருக்க வேண்டும் என நிபந்தனையே விதிக்கின்றனராம்.

தமிழில் கில்லி, மொழி, சரோஜா போன்ற படங்களில் நடித்தார். இப்போதும் பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் - தெலுங்கில் அவருக்கு கிடைத்துவரும் வரவேற்பைப் பார்த்த தயாரிப்பாளர்கள் அவர் கேட்கும் முன்பே சம்பளத்தை அள்ளித் தருகிறார்களாம்.

நமோ வெங்கடேசா என்ற தெலுங்குப் படத்தில் நடிக்க பிரம்மானந்தத்துக்கு நாளொன்றுக்கு ரூ 3 லட்சம் என நிர்ணயித்துள்ளார்கள். இந்தப் படத்துக்கு மொத்தம் ரூ.80 லட்சத்துக்குமேல் தரப்பட்டதாம் பிரம்மானந்தத்துக்கு. ஆனால் த்ரிஷாவுக்கு இதைவிட குறைவாக ரூ.60 லட்சம்தான் சம்பளமாகத் தந்தார்களாம்.

பொதுவாக தமிழ் [^]ப்படங்களில்தான் கதாநாயகியை விட நகைச்சுவை நடிகருக்கு மவுசு கூடுதலாக இருக்கும். இங்கே நடிகர் [^] வடிவேலு மட்டும் ஒரு நாளைக்கு சம்பளமாக ரூ.7 லட்சம் வாங்குகிறாராம். சில நேரங்கலில் ரூ.5 லட்சத்துக்கும் ஒப்புக் கொள்கிறாராம், தயாரிப்பாளரைப் பொறுத்து.

இந்த நிலை இப்போது தெலுங்கிலும் உருவாகியுள்ளது.

டாப்லெஸ்' கரீனா - கலக்கும் குர்பான்!

சைப் அலி கானுக்கு முன்பு மேலாடை எதுவும் இன்றி வெளி்ப்படையாக கரீனா கபூர் நிற்பது போன்ற போஸ்கள் குர்பான் படம் குறித்த எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளன.

ஏற்கனவே இப்படத்தின் இசை இந்தி ரசிகர்களை கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த மேலாடை இல்லாத கரீனா கபூரின் போஸ்களும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளதால் படத்தின் தயாரிப்பாளரான கரண் ஜோஹர் குஷியாக உள்ளார்.

ரென்சில் டிசில்வா படத்தை இயக்குகிறார். இவருக்கு இது முதல் படம். ஆனால் 18 ஆண்டு கால விளம்பரப் பட இயக்குநர் என்ற பெரிய அந்தஸ்து இவரிடம் உள்ளது. இதுதவிர அக்ஸ், ரங் தே பசந்தி, ராவணன் ஆகிய படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார் ரென்சில். இயக்கத்தில் குர்பான்தான் முதல் படம்.

இதுகுறித்து ரென்சில் கூறுகையில், எனக்கு சைப் அலிகானை நன்கு தெரியும். அவர் மூலமாக கரீனாவையும் நன்கு அறிய முடிந்தது. விளம்பர உலகத்தில் இருந்ததால் அவர்களை கையாள்வது எளிதாக இருந்தது என்றார் ரென்சில்.

அதை விடுங்க, கரீனா டாப்லெஸ்ஸில் நடித்துள்ளாரா என்று கேட்டபோது, உண்மையான காதலர்களை திரையில் கையாளுவது நிச்சயம் கஷ்டமானது. திரையில் அவர்களது கெமிஸ்ட்ரியை அப்படியே காட்டுவதும் சற்று யோசிக்க வேண்டியது. காரணம், இவர்களை நிஜ வாழ்க்கையில் அத்தனை பேரும் கூர்ந்து பார்க்கிறார்கள். எனவே திரையில் இவர்கள் எதையாவது செய்தால் அது நிஜத்தைப் பாதிக்கக் கூடும்.

ஆனால் கரீனாவும், சைப் அலியும் புரபஷனல்கள் என்பதால் நல்லஒத்துழைப்புடன் நடித்துக் கொடுத்தார்கள். இதற்கு முன்பு செய்யாத பலவற்றை இப்படத்துக்காக செய்துள்ளனர். அவர்களது கெமிஸ்ட்ரி அட்டகாசமாக வந்துள்ளது.

டாப்லெஸ்ஸாக கரீனா தோன்றுவது படத்தில் வரும் ஒரு காட்சிதான். ஆனால் வி சானலில் அல்லது வேறு இசை வீடியோக்களில் வருவது போல இது இருக்காது. ஒரு பெண்ணின் முதுகைக் காட்டும் காட்சி மட்டுமே இது.

நன்கு கூர்ந்து இப்படத்தைக் கவனித்தால், முதுகுப் பகுதி மட்டுமே ஆடையின்றி இருக்கும், டாப்லெஸ் அல்ல என்பதை அறிய முடியும்.

இது மட்டுமல்லாமல், ஒரு குண்டுக் காயம் ஏற்பட்டால் ஏற்படும் காயத்தைக் கூட மிகத் துல்லியமாக இந்தப் படத்தில் நாங்கள் காட்டியிருக்கிறோம். எல்லாம் டெக்னாலஜியின் புண்ணியத்தால்.

கரீனா கபூர் வெறும் முதுகுடன் இருப்பது போன்ற காட்சி படத்தில் முக்கிய இடத்தில் வருகிறது. எனவேதான் இதையே போஸ்டராக மாற்றி விட்டோம் என்றார் டென்சில்.

பிராண்ட் அம்பாசடர் ஆன கரீனா..

இதற்கிடையே, கரீனா கபூர், இத்தாலிய வாட்ச் நிறுவனமான குரோனோடெக்கின் பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கவர்ச்சிகரமான இரு வேடங்களில் - பூணைப் பெண், கடற்கன்னி - இதற்கான விளம்பரத்திலும் நடித்துள்ளாராம்.

Monday, October 26, 2009

நான் தமிழன்... ஓங்கி குரல் கொடுக்கும் இளம் ஹீரோ!


நான் தமிழன் என்ற குரலை அழுத்தமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெய் ஆகாஷ். (பின்னாடி ஒன்ணும் பிளான் இல்லீயே?) தெலுங்குல என்னை ஓஹோன்னு கொண்டாடுறாங்க. ஆனால் தாய் மொழியான தமிழ்லே ஜெயிக்கலேன்னா எப்படிங்க? அதனாலதான் நானே இயக்கி, நானே ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிட்டேன். இந்த முறை விடறதில்லே என்றார் அழுத்தமாகவும், அளவுக்கதிகமான நம்பிக்கையோடும்!

டெய்ஸி போபண்ணா, நிதி சுப்பையா, சுஹாசினி ஆகிய முப்பெரும் அழகிகளுடன் ஜெய் ஆகாஷ் நடித்து அவரே இயக்கும் படம்தான் காதலன் காதலி. ஒரு பிஎச்டி வாங்குற அளவுக்கு காதலை ஆராய்ச்சி பண்ணி இந்த கதையை தயாரிச்சிருக்கேன் என்ற ஜெய் ஆகாஷை மடக்கி, இப்படியெல்லாம் படமெடுக்கிற அளவுக்கு உங்களுக்கு காதலை கற்றுத்தந்த அழகி யாருங்க? என்றால் அதை மட்டும் கேட்காதீங்க பாஸ் என்று எஸ்கேப் ஆகிறார்.

நமக்கு தெலுங்கிலேயும் மார்க்கெட் இருக்கறதால இந்த படத்திலே புது ஹீரோயின்சை போட வேண்டியதா போச்சு. ஏன்னா பிரஷ்ஷாக பார்க்கும் போது இரண்டு மொழி காரர்களுக்கும் இது நம்ப ஏரியா கதைங்கிற ஃபீலிங் வருமே என்றார். முக்கியமாக காமெடி வேடத்தில் கலக்கியிருக்கும் பிரம்மானந்தம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் பரிச்சயமானவர். சரி, ஜெய் ஆகாஷின் இயக்குனர் அவதாரம் பற்றி யூனிட் என்ன சொல்லுது? அவருக்கு ஏதோ பத்து வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிற மாதிரி படப்பிடிப்பு நடந்திச்சு. ஒரு நாள் கூட அவரு டயலாக் பேப்பரை படிச்சு டயலாக் சொல்லிக் கொடுத்ததில்லே. எல்லா டயலாக்கும் அவரு மனசுக்குள்ளேயே இருக்கு. அப்படியே ஸ்பாட்ல இறக்கி வைக்கிறாருங்க என்றார்கள்.

தொடர்ந்து இயக்குகிற ஐடியா இருக்கிறதாம். ஆனால், அதில் ஜெய் ஆகாஷ் மட்டுமே ஹீரோவாக நடிப்பார் என்பது கூடுதல் தகவல்!

நடிகர், நடிகைகள் கண்டனக் கூட்டமே நடக்கிவில்லை

சென்னை:நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்கு ஆதாரங்கள் ஏதுமில்லை என்று கூறி நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.

அவதூறு செய்தி தொடர்பாக நடிகர் சங்கக் கட்டட வளாகத்தில் கண்டன கூட்டம் நடத்திய நடிகர், நடிகைகள் பத்திரிகையாளர்களை ஆபாசமாகத் தாக்கிப் பேசினர். அவதூறு செய்தி வெளியிட்ட பத்திரிகையை மட்டும் கண்டிக்காமல் பொத்தாம் பொதுவாக அனைத்துப் பத்திரிகையாளர்களையும் கேவலமான முறையில் திட்டினர். நடிகர் சூர்யா, அனைத்துப் பத்திரிகையாளர்களையும் பொத்தாம் பொதுவாக ஈனப்பயல்கள் என்றும், அவர்களை நசுக்க வேண்டும் என்றும் பேசினார்.

இன்னொரு நடிகரான விவேக்கும், எல்லா பத்திரிகைகாரர்களையும் கேவலமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார். பத்திரிகையாளர்களின் குடும்பத்தாரையும் ஆபாசமாகத் திட்டியவர், பத்திரிகையாளர்களின் அக்கா, அம்மா, ஆயா என அனைவரின் போட்டோக்களுக்கும் சின்ன ஜட்டி மட்டும் மாட்டி அதை போஸ்டர் அடித்து தமிழகம் எங்கும் தன் செலவிலேயே ஒட்டப் போவதாக அறிவித்தார்.

சத்யராஜ், குறிப்பிட்ட ஒரு பத்திரிகையாளரை வேசி மகன் என்று திட்டியதோடு, இதை ஆதரிக்குமாறு அனைத்து நடிகர் நடிகைகளையும் கேட்டுக் கொண்டார். 'நான் பேசிய வார்த்தையில் மாற்றமில்லை. எவன் என்னத்தைப் புடுங்குறான்னு பார்க்கலாம்!' என்று முழங்கினார் மேடையில்.

நடிகை ஸ்ரீபிரியா, சேரன், விஜயகுமார், அவர் மகன் அருண் விஜய் ஆகியோரும் ஆபாசமாகவும் வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பேசினர்.

இவை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்களை தாக்கி பேசிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி பத்திரிகையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நடிகர் நடிகைகள் பேசிய வீடியோ பேச்சு ஆதாரமாக தரப்பட்டது.

மேலும் தமிழக அரசு இந்த வழக்கை நேர்மையாக நடக்க அனுமதிக்காது என்று கோரி, வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் துரைசாமி, பத்திரிகையாளர்கள் கூறிய புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்தார்.

இப்படியொரு கண்டனக் கூட்டமே நடக்கவில்லை என்றும், நடிகர்- நடிகைகள் ஆபாசமாகப் பேசியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் போலீஸ் தரப்பில் விசாரித்து கூறப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கு பத்திரிகையாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் புகாருக்கு ஆதாரமில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவித்ததை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

கண்டனக் கூட்டமே நடக்கிவில்லை என முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்ட நடிகர்கள் மற்றும் போலீசாரின் செயல் அவர்களை திகைப்புக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பிரஸ் கிளப் நிர்வாகியும் பத்திரிகையாளருமான அன்பு, "என்ன சொல்வதென்றே தெரியவில்லை... உண்மைகளை எந்த அளவு பொய்யாகக் காட்ட முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். இனி சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளோம். அந்த மன்றத்தில் நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்.

சிவப்புக் கொடி கணவர் வீட்டாருடன் மீனா லடாய்?


இனி அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்கவும் தயார் என அறிவித்துள்ளார் மீனா.

தொன்னூறுகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து, இப்போது பெங்களூரில் வசிக்கும் சாப்ட்வேர் என்ஜினீயர் வித்யாசாகரைத் திருமணம் [^] செய்து கொண்ட மீனா, சில தினங்கள் நடிப்பை விட்டு ஒதுங்கியிருந்தார்.

திருமணமானாலும் கணவர் வீட்டுக்குச் செல்லாமல் தாய் வீட்டிலேயே இருந்து வருகிறாராம் மீனா. இது வித்யாசாகர் வீட்டில் சலசலப்பைக் கிளப்பியுள்ளதாம்.

மேலும் மீனா கண்டிப்பாக சிநிமாவில் நடிக்கக் கூடாது என அவரது மாமியார் வீட்டினர் கூறியதால், இப்போது கணவர் வீட்டுக்கே செல்லாமல் சென்னையில் முகாமிட்டுள்ளாராம்.

இந்த நிலையில் திடீரென்று மீண்டும் நடிக்க வந்துள்ளார் மீனா.

மலையாளத்தில் 'தம்பிக்கோட்டை' என்ற படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் கதாநாயகனாக நரேனும், நாயகியாக பூனம் பாஜ்வாவும் நடிக்கின்றனர். நரேனுக்கு அக்காவாக இந்தப் படத்தில் நடிக்கிறார் மீனா.

கணவர் குடும்பத்தினர் விரும்பாத நிலையில் மீனா திடீரென்று சினிமாவில் நடிக்க வந்திருப்பது மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம். இதுபற்றி மலையாள பத்திரிகைகள் பரபரப்பான செய்தியாக வெளியிட்டு வருகின்றன.

விஷயம் தெரிந்து தமிழிலும் அக்கா அண்ணி என செகன்ட் இன்னிங்க்ஸ் ஆட வாங்க அன அழைப்பு மேல் அழைப்பு விடுகிகறார்களாம். கண்டிப்பாக நடிக்கிறேன் என்று அனைவருக்கும் பச்சைக் கொடி காட்டிவிட்டாராம் மீனா!

அப்ப.. சிவப்புக் கொடி கணவர் வீட்டாருக்கா?

Followers