Saturday, June 13, 2009

எனக்கு 2, லட்சுமிக்கு 8 உதடுகள் உரசிக் கொள்வது போல'!

முத்திரை படம் பெரிதாகப் பேசப்படுமோ இல்லையோ, அதன் நாயகிகளுக்கு நாயகர்கள் கொடுத்ததாக கூறப்படும் முத்தம் படு பெரிதாக பேசப்பட்டு வருகிறது.மறைந்த ஒளிப்பதிவாளர்-இயக்குநர் ஜீவாவின் மனைவி அனீஸ் உருவாக்கும் படம்தான் முத்திரை. நிதின் சத்யா, அவருக்கு ஜோடியாக மும்பையின் மஞ்சரி பாத்னிஸ், டேணியல் பாலாஜி, அவருக்கு ஜோடியாக லஷ்மி ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஹீரோக்கள் கடந்த சில நாட்களாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

முதலில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நிதின் சத்யா. தானும், மஞ்சரியும் சேர்ந்து ஒரு லிப் லாக் காட்சியில் நடித்திருப்பதாக அவர் கூறப் போக ரசிகர்களிடையே உற்சாகம் கூடியது.

ஆனால் அப்படி எந்தக் காட்சியிலும் நடிக்கவி்ல்லை என்று மஞ்சரி மறுக்கவே பரபரப்பானது. நிதின் சத்யா சொல்ல வந்தது வேறு, அது தவறான கோணத்தில் செய்தியாக வந்து விட்டது என்று கூறியிருந்தார் மஞ்சரி.

இந்த நிலையில் இப்போது இன்னொரு ஹீரோவான டேணியல் பாலாஜி புது தகவலை வெளியிட்டுள்ளார். நானும், லஷ்மி ராயும் கூட முத்தக் காட்சியில் நடித்துள்ளோம். ஒன்றல்ல, இரண்டல்ல, பத்து முத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம் என்று டீடெய்லோடு கூறியுள்ளார் பாலாஜி.

இதனால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. இதுகுறித்து பாலாஜி கூறுகையில், லஷ்மி ராய் ரொம்ப அழகு. அவர் பக்கத்தில் போனால் எந்த ஆணுக்கும், காதல் மூடு வரும். எனக்கும் கூட அப்படித்தான்.

முத்தக் காட்சியில் நடித்தபோது ரொம்ப கூலாக இருந்தார். அவரது மார்புப் பகுதியில் முத்தமிடுவது போன்ற ஒரு காட்சியில் நடிக்க நான் தயங்கினேன். ஆனால் அவரோ, கூச்சப்படாதே, சும்மா கொடு என்று உற்சாகமூட்டினார்.

இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியில் பத்து முத்தங்களை இருவரும் பகிர்ந்து கொண்டோம். நான் எட்டு முத்தம் கொடுத்தேன். அவர் 2 முத்தம் கொடுத்தார் என்று கூறியுள்ளார் பாலாஜி.

ஆனால் பாலாஜி கூறுவது போலவோ அல்லது நிதின் சத்யா கூறுவது போலவோ ஒரு முத்தக் காட்சியும் படத்தி்ல இல்லை என்று தயாரிப்பு நிர்வாகத் தரப்பில் கூறுகிறார்கள்.

பாலாஜி மற்றும் லஷ்மி ராயின் உதடுகள் உரசிக் கொள்வது போல மட்டுமே காட்சி உள்ளது. மற்றபடி இருவரும் உதடுகளைக் கவ்வி முத்தமிட்டுக் கொள்வது போல எந்தக் காட்சியும் இல்லை என்கிறது அந்த செய்தி. இரு ஹீரோக்களும் இந்தப் படத்தை வைத்து தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்வது போலத் தெரிகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

'வாய்'மை என்னவோ..

கோயில்-தடுத்து வைத்துள்ள த்ரிஷா


"என்னுடைய ரசிகர்கள் பலர் எனக்கு கோயில் கட்டியே தீருவது என்று புறப்பட்டுவிட்டார்கள். நான்தான் அவர்களைத் தடுத்து நிறுத்தி வைத்துள்ளேன்..." என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்கிடையே பத்திரிகையாளர்களைச் சந்தித்த த்ரிஷா, இதுபற்றி கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் எனக்கு ஏராளமான ரசிகர் மன்றங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 1000 மன்றங்கள் உள்ளன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களுடன் பேசுவேன்.
வர்களுக்கு சமூக சிந்தனை அதிகம். ஏராளமான நல்ல காரியங்கள் செய்து வருகிறார்கள்.
இந்தப் பணிகள் தொடர வேண்டும் என்பதற்காகவே அவர்களை ஊக்குவித்து வருகிறேன்.

சமீபத்தில் எனது ரசிகர்கள் என்னைச் சந்திக்க வீட்டுக்கு வந்தனர். எனக்கு கோவில் கட்டப் போவதாகவும் அதற்கு அனுமதி வேண்டும் என்றும் கேட்டனர்.எனக்கு மிகுந்த அதிர்ச்சியாகிவிட்டது. நான் ஒரு நடிகை. எனக்கு கோயில் எதற்கு. அதெல்லாம் தெய்வங்களுக்கு மட்டும்தான் என்று கூறி அவர்களைத் தடுத்தி நிறுத்தி வைத்துள்ளேன்.

நல்ல பணிகளைச் செய்து வருவதால் இன்னும் ஏராளமான மன்றங்களைத் திறக்கவும் திட்டமிட்டுள்ளேன், என்றார் த்ரிஷா.

இந்திப் படத்தில வேற நடிக்கிறார்... இன்னும் என்னவெல்லாம் குண்டு வைத்திருக்கிறாரோ!

Friday, June 12, 2009

இன்று மூன்று படங்கள்


வாரம் மூன்று படங்கள் வெளியாவது தமிழ் திரையுலகியில் சாதாரண நிகழ்வாகிவிட்டது. இன்றும் மூன்று நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

பல மாதங்களாக போக்குக் காட்டிக் கொண்டிருந்த மஞ்சள் வெயில் இன்று திரைக்கு வருகிறது. சந்தியாவின் முத்த சர்ச்சையால் படத்துக்கு கிடைத்த பப்ளிசிட்டி மட்டுமே தயா‌ரிப்பாளர்களின் ஒரே நம்பிக்கை. பிரசன்னா, பாலா, ஆர்கே நடித்திருக்கும் இப்படம் வழக்கமான முக்கோண காதல் கதை.

அ‌ஜித், விஜய் போல வரவேண்டும் என்பதற்காக தனது பெயரை வி‌ஜித் என மாற்றிக் கொண்டு கோடம்பாக்கம் வந்திருக்கிறார் பிரான்சில் வேலை பார்த்து வந்த ஒரு இளைஞர். அவரது முதல் படமான ராகவனும் இன்று திரைக்கு வருகிறது. நாயகியாக அறிமுகமாகியிருப்பவர் ராதிகா மல்ஹோத்ரா. செல்வராகவனின் முன்னாள் உதவியாளர் பரந்தாமன் படத்தை இயக்கியிருக்கிறார்.

கல்பாத்தி எஸ் அகோரம் தயா‌ரித்திருக்கும் மாசிலாமணி மூன்றாவது படம். படத்தின் அத்தனை ஓட்டைகளையும் பூசி மொழுக சன் குழுமத்தின் விளம்பரம் இருப்பதால் தைரியமாக களம் இறங்குகிறது.

காதலில் விழுந்தேன் படத்தில் நடித்த நகுல், சுனேனா மீண்டும் இதில் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். குப்பத்து பையனுக்கு கலாஷேத்ராவில் நடனம் படிக்கும் பெண்ணிடம் ஏற்படும் காதல்தான் கதை. ஆர்.என்.ஆர்.மனோகர் படத்தை இயக்கியிருக்கிறார்.

நாடோடிகள், ஒளியும் ஒலியும் ஒற்றுமை

நாடோடிகள் படத்தில் நடிக்கும் அபிநயாவுக்கும், ஒளியும் ஒலியும் படத்தில் நடித்திருக்கும் கீதாவுக்கும் ஒரு ஒற்றுமை. திரையில் பார்த்தால் தெ‌ரியாத இந்த ஒற்றுமையை சம்பந்தப்பட்ட இருவராலும் கூட எடுத்துக்கூற முடியாது.

ஆம், இருவருமே வாய் பேச முடியாதவர்கள். காதும் கேட்காது. ஆனால், படத்தில் இந்த குறை தெ‌ரியாத அளவுக்கு வாய் அசைத்து நடித்துள்ளார்கள். அவர்களின் உதட்டசைவுக்கேற்ப டப்பிங் குரல் கொடுக்கப்பட்டிருக்கிறது. (இந்த ஒரு ஒற்றுமையைத் தவிர நாடோடிகளுக்கும் ஒளியும் ஒலிக்கும் எந்த சம்பந்தமுமில்லை).

ஒளியும் ஒலியும் படத்தில் இதேபோல் மேலும் சில ஆச்ச‌‌ரியங்கள் இருக்கின்றன. பத்து வருடங்களுக்குப் பிறகு நாகேஷின் மகன் ஆனந்தபாபு நடித்திருக்கிறார். சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம் கான்ஸ்டபிள் கந்தசாமி என்ற வேடத்தில் தப்பட்டை அடித்து பாட்டுப் பாடி நடித்திருக்கிறார். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்து கதை என்பது இன்னொரு சுவாரஸியம்.

தேசிய விருது பெற்ற குறும்படத்தை இயக்கிய சக்தி செல்லம் படத்தை இயக்கியிருக்கிறார்.

அநாக‌‌‌ரீகமாக நடந்து‌கிட்டாங்க – ரகசியா புகார்


எத்தனை குறைவான காஸ்ட்யூம் கொடுத்தாலும் குறை சொல்லாமல் ஆடிவிட்டு செல்கிறவர் ரகசியா. அவரையே அய்யோ என புலம்பவிட்டிருக்கிறார்கள் சிலர்.

மண்டபம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட ரகசியாவை ஒப்பந்தம் செய்திருந்தார் தயா‌ரிப்பாளர் சபாபதி. சொன்ன தேதியில் புதுச்சே‌ரி வந்தார் ரகசியா. பாடலை படம் பிடித்த இடத்தில் ரகசியாவிடம் சிலர் (ரகசியாவின் பெருந்தன்மை, அந்த சிலர் யார் என்று பெயர் குறிப்பிடவில்லை) அநாக‌‌‌ரீகமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அதையும் பொறுத்துக் கொண்டு ஆடியிருக்கிறார். அதன் பிறகுதான் தயா‌ரிப்பாள‌‌ரின் அதிபயங்கர கிளைமாக்ஸ் ரகசியாவுக்கு தெ‌ரிய வந்திருக்கிறது.

பேசிய சம்பளத்தை செட்டில் செய்யாமலே கம்பி நீட்டியிருக்கிறார் தயா‌ரிப்பாளர். போனில் தொடர்பு கொண்டதற்கும் நோ ரெஸ்பான்ஸ். பிறகு சொந்த காசில் சென்னை திரும்பியவர் சூட்டோடு சூடாக நடிகர் சங்கத்தில் தயா‌ரிப்பாளர் மீதும், படத்தின் நாயகன் தமிழரசன் மீதும் - இவர் படத்தின் பினாமி தயா‌ரிப்பாளர் என்கிறார்கள் - புகார் கொடுத்திருக்கிறார்.

தயா‌ரிப்பாளர் தரப்பிலிருந்து விரைவில் விளக்க உரை ஒன்றை எதிர்பார்க்கலாம்

மாயாண்டி குடும்பத்தார்

பத்து இயக்குனர்கள் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் என்ற விளம்பர வாசகங்களுடன் வெளிவந்திருக்கிறது இராசு மதுரவனின் மாயாண்டி குடும்பத்தார். காதல், பாசம், வீரம், துரோகம், பொறாமை, கோபம் என அனைத்தும் கலந்து காவியமாக மணக்கிறது இந்த கிராமத்து கதம்பம்.

அண்ணன், தம்பி குடும்பத்தின் சொத்து தகராறு என்ற மெல்லிய இழைதான் கதை. அதில் இராசு மதுரவன் தொடுத்திருக்கும் சரம், சில நேரம் கண்ணில் நீரை வரவழைக்கிறது, சில நேரம் சி‌ரிப்பில் வயிறை குலுங்க வைக்கிறது.

மாயாண்டியாக வரும் மணிவண்ணன் குடும்பத் தலைவர். நடிப்பிலும் இவரே தலைவர். மகன் தருண்கோபியின் படிப்புக்காக கண்ணீர்விட்டு கதறும்போது நம்மையும் கலங்கடிக்கிறார். மாயாண்டி மணிவண்ணனுக்கு மைல் கல்.

தருண்கோபியின் மீதுதான் மொத்த கதையும் பயணிக்கிறது. சும்மாவே சோகத்தை காட்டும் முகம் என்பதால் அண்ணிகள் அவமானப்படுத்தும்போதும், காதலியை பி‌ரியும் போதும் காட்சியோடு ஒன்றிப் போகிறது தருணின் நடிப்பு. சேரனின் இரண்டாவது அவதாரம்போல் எப்போதும் சோகத்தையே பிழிந்து கொண்டிருப்பது ஏனோ?

மணிவண்ணனின் மகன்களான சீமான், பொன்வண்ணன், ஜெகன்நாத், மணிவண்ணனின் அண்ணன் ‌ஜி.எம்.குமா‌ரின் மகன்களான நந்தாபெ‌ரியசாமி, ரவிம‌ரியா, சிங்கம்புலி ஆகியோ‌ரில் கவர்வது மூளை வளர்ச்சி குறைந்தவராக வரும் சிங்கம்புலி. குழந்தை எப்படி பிறக்கும் என்ற இவரது கேள்வி ஏற்படுத்தும் சி‌ரிப்பு அலை தியேட்ட‌ரில் அடங்க வெகு நேரமாகிறது. அண்ணன்கள் அடித்துக் கொள்ளும்போது ஜஸ் சப்பிக் கொண்டே இவர் அடிக்கும் கூத்து அடேங்கப்பா.

மணிவண்ணன் இறந்ததும் அவரது மூத்த மகன்களின் மனைவிகள் கொழுந்தன் தருண்கோபியை அவமானப்படுத்தி விலக்குவது கிராமத்து யதார்த்தம். தம்பியின் தனி சமையலை ருசி பார்க்கும் பாசக்கார அண்ணன்கள் பொன்வண்ணன், சீமான், ஜெகன்நாத்.

பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் இராசு மதுரவனுக்கு டாக்டரேட் தரலாம். தருண்கோபிக்கு கறி சோறு இல்லை என்பது தெ‌ரிந்து அண்ணன்கள் பணம் கொடுத்து சாப்பிடச் சொல்வதும், பி‌ரியாணி வாங்கித் தருவதும் சின்ன உதாரணம்.

பெ‌ரிய உதாரணம், காது குத்துக்கு செல்லும் தருண்கோபி, திங்க வந்துட்டான் என்ற மச்சானின் அவமதிப்பை கேட்டு சாப்பிடாமல் ஐம்பதாயிரம் மொய் எழுதிவரும் காட்சி. அய்யா என்னை பெத்தவன் சாகலைடா, நீதா‌ண்டா என்னை பெத்தவன் என்று அக்கா தீபா நடுரோட்டில் புரளும்போது நம்மீதும் ஒட்டிக் கொள்கிறது அந்த சோகப்புழுதி.

சீமானின் கம்பீரக்குரலில் ஒலிக்கும் பேசாம பேசாம இருந்து கோழிக்குஞ்சை தூக்குதடா பருந்து பாடல் நரம்பை முறுக்கேற்றுகிறது. இசை சபேஷ் முரளி. சபாஷ் சொல்ல வைக்கின்றன மற்ற பாடல்களும். மேட்டுபட்டி கிராமத்து வாழ்வை அப்படியே கேமராவில் வடித்திருக்கிறார் பாலபரணி.

அளவுக்கதிகமான சோகமும், இடைவேளைக்குப் பிறகு வரும் தொய்வான சில காட்சிகளும், ஒரு குடும்பத்தினர் விட்டுக் கொடுப்பதும், இன்னொரு குடும்பம் பகை வளர்ப்பதுமான பழைய சினிமா ஃபார்முலாவும் படத்தின் குறைகள். ஆனாலும்,

கிராமத்து மனிதர்களின் உணர்ச்சிகளை திரையில் கொண்டுவரும் முயற்சியில் எளிதாக ஜெயித்திருக்கிறார் இராசு மதுரவன்.

மிஷ்கின் - நரேன் லடாய்!

மிக நெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குநர் மிஷ்கினும் நடிகர் நரேனும் பிரிந்து வெவ்வேறு பாதைகளில் பயணிக்கத் துவங்கிவிட்டனர்.

மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி மூலம்தான் நரேன் அறிமுகமானார். அடுத்து அவரது இயக்கத்தில் அஞ்சாதே படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் நரேனை மிகச் சிறந்த நடிகராகக் காட்டின. இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைவார்கள் என்று பேசப்பட்டது.

அதற்குள் மிஷ்கினே நாயகனாக மாறிவிட்டார் நந்தலாலா மூலம். ஆனால் அந்தப் படம் எப்போது வரும் என்பது தெரியவில்லை.

இதற்கிடையே, மிஷ்கினுக்கும் நரேனுக்கும் தனித்தனியாக வெற்றிப் படங்களைத் தரவேண்டும் என்ற ஈகோ மோதல் வந்துவிட்டதாம். அதன் விளைவு, நரேன் இரு மலையாளப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவிட, நந்தலாலாவுக்கு அடுத்து தான் இயக்கும் புதிய படத்தில் நரேனை நாயகனாகப் போடாமல் விட்டுவிட்டார்.

யுத்தம் செய் என்ற தலைப்பில் இந்தப் படம் தயாராகிறது. நாயகன் சேரன்!

சூழ்நிலைக் கேற்ற தலைப்போ!

நயன் மீண்டும் 'மர்மப் பேச்சு'!


பிரபுதேவாவுடன் திருமணக் கோலத்தில் இருப்பது போல ஒரு பத்திரிகையில் இன்று படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் உண்மையானதல்ல என்றும் அது திட்டமிட்ட பொய், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்றும் நயன்தாரா மறுத்துள்ளார்.

அந்தப் பத்திரிகை மீது வழக்குப் போடுவது குறித்து யோசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவும் நயன்தாராவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அனைத்துப் பத்திரிகைகள் மற்றும் இணையத் தளங்களிலும் செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து இன்று வெளியான ஒரு வார இதழில் பிரபு தேவாவும் நயன்தாராவும் திருமணக் கோலத்தில் இருப்பது போல படங்கள் வெளியாகின.

இந்தப் படம் உண்மையல்ல என்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்றும் நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

"எனது திருமணம் [^] தனிப்பட்ட விஷயம். என் திருமணத்தை நான்தான் அறிவிக்க முடியும். இப்போதைக்கு கை நிறைய படங்கள் உள்ளன. அவற்றை முடிப்பதில்தான் என் முழுக் கவனமும்" என மீண்டும் மர்மமாகவே பேசியுள்ளார் நயன்தாரா.

இந்தப் படத்தை வெளியிட்ட பத்திரிகை மீது என்ன நடவடிக்கை எடுப்பது என யோசித்து வருவதாகவும், இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுனாமி எச்சரிக்கை...! -தப்பித்த ' ஆயிரத்தில் ஒருவன்' யூனிட்?


போகிற போக்கில் 'இப்படத்தில் ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கு எங்களுடைய நன்றி' என்பார்கள் பட விழாக்களில். ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் என்று கூறப்படும் சமானியர்களை பாராட்டியதாக எந்த விழாவும் நமக்கு நினைவில் இல்லை. ஆனால், அந்த எண்ணத்தை சுக்கு நூறாக போட்டு உடைத்தார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.

'ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக பிரதிபலன் பாராமல் உழைத்தது ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள்தான். இந்த படம் வெளிவந்தால் கார்த்தி, பார்த்திபன், செல்வராகவன், நான் என்று ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முன்னேற்றமும், பொருள் வரவும் உண்டு. ஆனால் ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கு அப்படியில்லை. அவர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும் அதே சம்பளம்தான். அதே தினக்கூலிதான். ஆனால் எங்களை விட அவர்களின் உழைப்புதான் அதிகம். அவர்களுக்கு என் நன்றி' என்றார் ராம்ஜி. கூடவே அவர் சொன்ன சம்பவம் ஒன்று, பயங்கரம்!

ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்புக்காக கடல் சூழ்ந்த இடம் ஒன்றிற்கு போய்விட்டோம். கிட்டதட்ட ஒரு சின்ன தீவு அது. ஒரே ஒரு பலூன் லைட் உதவியுடன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மற்றபடி எங்கும் இருட்டு. ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் சுமார் 2000 பேர் திரண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான் கரையிலிருந்து ஒரு எஸ்எம்எஸ்! இன்னும் சிறிது நேரத்தில் சுனாமி வரக்கூடிய அபாயம் இருக்கிறது. தப்பிக்கவும் என்று! கைவசம் இருந்த ஒன்றிரண்டு இயந்திர படகுகள் மூலம் அத்தனை பேரும் கரைக்கு வந்தோம். அவ்வளவு அவசரத்திலும், ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் நடந்து கொண்ட முறை எங்களை வியக்க வைத்தது என்றார் ராம்ஜி.

தினக்கூலிகளை பாராட்டியதற்காகவே ஒரு பாராட்டு அவருக்கு!

அக்ஷய் ஜோடியாக இந்தியில் அறிமுகமாகும் த்ரிஷா!


'நமக்குப் பின்னால வந்த அசின் போயாச்சு, ஜெனிலியா போயாச்சு... அட பத்மப்ரியாவுக்கு கூட ஒரு செம சான்ஸ் கிடைச்சிருக்கு. நாம இன்னும் ஹைதராபாத் தாண்ட முடியலியே...' என கடுப்புடன் பார்ட்டிகளில் இனி த்ரிஷா புலம்ப மாட்டார்!

இப்போது அவரும் 'பாலிவுட் புகழ்' த்ரிஷாவாகிவிட்டார்.

ஆம்... அக்ஷய் குமார் ஜோடியாக ஒரு இந்திப் படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார். அபியும் நானும் படத்தைப் பார்த்து ரொம்ப இம்ப்ரஸ் ஆகிவிட்ட அக்ஷய் உடனே த்ரிஷாவைக் கூப்பிட, இவரும் மும்பைக்குப் பறந்து போய் அக்ஷயுடன் டிஸ்கஷனை முடித்தார். இன்னும் மூன்று மாதங்களில் படப்பிடிப்பும் தொடங்கப்போகிறது!

இந்த வாய்ப்பின் மூல காரணம் ப்ரியதர்ஷன். இவர்தான் இந்தப் படத்தை இயக்கப் போகிறவர். த்ரிஷாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய 'பெருமை'க்குரியவர் அல்லவா...

இந்த வாய்ப்பு குறித்து த்ரிஷா இப்படிக் கூறுகிறார்:

"நான் நிச்சயம் ஒரு நாள் இந்திப் படத்தில் நடிப்பேன் என்பது தெரியும். ஆனால் அதற்காக சான்ஸ் கேட்டு யார் பின்னாலும் போகவில்லை. லேசா லேசா படத்துக்குப் பிறகு வேறு படம் நடிக்கும் ஐடியாவிலேயே நான் இல்லை. அப்போது ப்ரியதர்ஷன்தான் என்னை சமாதானப்படுத்தி தொடர்ந்து படங்களை ஒப்புக் கொள்ள வைத்தார். இப்போது அவர் மூலமாகவே ஒரு உயர்ந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் என் கேரக்டர் என்னவென்று கூறமாட்டேன். ஆனால் நான்தான் முழு கதாநாயகி. அக்ஷய்க்கு என்னை ரொம்பப் பிடித்துவிட்டது... அதில் எனக்கு மிகுந்த பெருமை...", என்றார்.

இயக்குநர் [^] பிரியதர்ஷன் கூறுகையில், "த்ரிஷா என்னுடைய தேர்வல்ல... அக்ஷயின் தேர்வு. எனக்கு வேண்டிய நடிகையையே அவர் தேர்வு செய்ததில் மகிழ்ச்சிதான். இந்தப் படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படம். எல்லாருக்கும் பிடித்த மாதிரி இருக்கும்...", என்றார்.

த்ரிஷா இந்திப் படம் நடிப்பதில் அவரது அம்மா [^] உமா கிருஷ்ணனுக்குதான் ஏக சந்தோஷமாம். மும்பையின் அந்தஸ்தான பகுதியில் பெரிய பங்களாவாக வாங்குங்க என்று இப்போதே ஆர்டர் கொடுத்துவிட்டாராம்!

திமுக எம்பி ரித்தீஷ் மிரட்டுகிறார்-டிஜிபியிடம் புகார்


ராமநாதபுரம்: பத்திரிக்கையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கூறி திமுக எம்.பி. நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மீது தமிழக காவல்துறை டிஜிபி-யிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வெளி வரும் ஒரு வார இதழ் ராமநாதபுரம் தொகுதி திமுக எம்பி ரித்தீஷ் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து நடிகரும், திமுக எம்பியுமான ரித்தீஷ், அவரது உறவினர்கள் சிலர் அந்த பத்திரிக்கையாளரையும், பத்திரிக்கை நிர்வாகியையும் போனில் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பத்திரிக்கை நிர்வாகம் சார்பில் தமிழக போலீஸ் டிஜிபி, தென் மண்டல ஐஜி, ராமநாதபுரம் டிஐஜி, ராமநாதபுரம் எஸ்பி ஆகியோரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில்தான் மத்திய அமைச்சரான ஜெகத்ரட்சகனின் பல் மருத்துவக் கல்லூரியில் பெருமளவில் டொனேஷன் வசூலிப்பதாக வட இந்திய தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியிட்டார்கள்.

இந்த நிலையில் ரித்தீஷ் கொலை மிரட்டல் [^] விடுத்ததாக புகார் எழுந்துள்ளது குறி்ப்பிடத்தக்கது

பேராசிரியைகள் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிய தடை!

கான்பூர்: மாணவிகளுக்கு ஜீன்ஸ், டைட்ஸ் போட தடை விதித்த கான்பூர் கல்லூரிகள் தற்போது பேராசிரியைகள் கையில்லாத ஜாக்கெட், இறுக்கமான ரவிக்கை ஆகியவற்றை அணிந்து வர தடை விதித்துள்ளது.

கலாச்சாரத்தை காப்பது, ஆபாச தோற்றத்தைத் தவிர்ப்பது, ஈவ் டீசிங்கை தடுப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கான்பூரில் உள்ள சில கல்லூரிகளில் மாணவிகள் ஜீன்ஸ் அணியவும், டைட்டான உடைகளை போட்டு வரவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.

இதற்கு மாணவிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியைகள் மட்டும் கையில்லாத ஜாக்கெட் உள்ளிட்டவற்றைப் போட்டு வரலாம், எங்களுக்கு மட்டும் கட்டுப்பாடா என்று அவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இதையடுத்து கல்லூரி ஆசிரியைகளுக்கும் இப்போது கட்டுப்பாடுகளை விதித்துள்ளன கான்பூர் கல்லூரிகள்.

அதன்படி கை இல்லாத ஜாக்கெட் போடக் கூடாது. ரவிக்கை இறுக்கமாக, உடலை ஒட்டியபடி இருக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளைப் போல எதிர்ப்பு தெரிவிக்காமல் சமர்த்தாக இந்த கட்டுப்பாட்டை ஆசிரியைகள் ஏற்றுக் கொண்டுள்ளனராம்.

அதுக்கு இது, சரிக்குச் சரியாப் போச்சு!

ஏஜென்ட்டுடன் பிரிட்னி ஸ்பியர்ஸின் காதல்!

பாப் இளவரசி பிரிட்னி ஸ்பியர்ஸ், தனது ஏஜென்ட் ஜேசன் டிராவிக்குடன் காதலில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.27 வயதாகும் ஸ்பியர்ஸின் சிறு வயது தோழன்தான் டிராவிக். ஸ்பியர்ஸின் ஏஜென்ட்டாகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

இந்தக் காதலுக்கு ஸ்பியர்ஸின் தந்தை ஜேமி ஸ்பியர்ஸும் பச்சைக் கொடி காட்டி விட்டாராம்.

இதுகுறித்து இங்கிலாந்து வார இதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி [^]யில், இருவரும் படு தீவிரமாக பழி வருகின்றனர். ஸ்பியர்ஸின் அப்பாவுக்கம், டிராவிக்கை பிடித்துப் போய் விட்டது. இதுவரை ஸ்பியர்ஸுக்குக் கிடைத்ததிலேயே நல்ல விஷயம் டிராவிக்கை அவர் காதலிப்பதுதான் என்று கூறுகிறது அந்த செய்தி.

ஸ்பியர்ஸ் ஏற்கனவே கெவின் பெடர்லைனைக் கல்யாணம் செய்து அவர் மூலம் 3 வயது சீன் பிரஸ்டன், 2 வயது ஜெய்டன் ஜேம்ஸ் என இரு குழந்தைகளுக்கு தாயானாவர்.

37 வயதாகும் டிராவிக், இப்போது ஸ்பியர்ஸ் எங்கு சென்றாலும் உடன் செல்கிறார். கடந்த மாதம் பஹாமஸ் தீவுக்கு இருவரும் ஜோடியாக சென்று அனுபவித்து விட்டு வந்தனராம்.

டிராவிக் மீது ஸ்பியர்ஸுக்கு முன்பிருந்தே காதல் இருந்ததாம். இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு பெடர்லனைக் கல்யாணம் செய்து கொண்டார் அவர். இப்போது பெடர்லைனைப் பிரிந்து விட்டதால் லைன் கிளியராகி டிராவிக்குடன் காதலில் ஈடுபட்டுள்ளாராம்.

தற்போது இருவரும் லண்டனில் உள்ளனர். அங்கு பிரிட்னி பங்கேற்கும் தி சர்க்கஸ் என்ற பாப் இசை [^] நிகழ்ச்சியில் டிராவிக்கும் கலந்து கொள்கிறார்.

ஜெயசித்ராதான் எனக்கு ஜோடியா வேணும்!-பாலச்சந்தரின் விருப்பம்


'எனக்கு ஜோடியா ஜெயசித்ராவையே போடுங்கப்பா... நல்ல அண்டர்ஸ்டான்டிங்கானவங்க'-இப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல... ஜெயசித்ராவை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தர்தான்.இப்போது இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தாமிரா இயக்கும் ரெட்டைச் சுழி எனும் படத்தில் 'ஹீரோவாக' நடித்து வருகிறார் கே பாலச்சந்தர். இதில் இன்னொரு ஹீரோ இயக்குநர் பாரதிராஜா.

இந்தப் படத்தில் கேபிக்கு மட்டும் ஜோடி உண்டு. அந்த ஜோடியாக ஜெயசித்ரா நடிக்கிறார்.

சினிமா , அரசியல் என பல 'ரவுண்டு'கள் பார்த்துவிட்ட ஜெயசித்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம் இது.
இந்தப் படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறியதாவது:

கேபி சார்தான் சொல்லத்தான் நினைக்கிறேன் படம் மூலம் எனக்கு புதிய வாழ்க்கையைக் காட்டியவர். புதுப்புது அர்த்தங்கள் மூலம் என்னுடைய இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினார்.

இப்போது மீண்டும் அவரே என்னுடைய நடிப்பு வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக ஜெயசித்ராவைப் போடுங்க... நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உள்ள 'பொண்ணு' (??!!), என படத்தின் இயக்குநரிடம் அவரே கேட்டுக் கொண்டது என் நடிப்பு மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது...", என்று உணர்ச்சிவசப்பட்டார் ஜெயசித்ரா.

Thursday, June 11, 2009

ரூ. 619 கோடிக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவை வாங்கும் ரியல் மாட்ரிட்!

லண்டன் : மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணிக்காக விளையாடும் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை சுமார் ரூ. 619 கோடி கொடுத்து வாங்கப் போவதாக ரியல் மாட்ரிட் அணி தெரிவித்துள்ளது.

போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர். கடந்த 2003ம் ஆண்டு முதல் இங்கிலாந்தை சேர்ந்த கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார். இதற்காக அவர் கிடைத்த தொகை சுமார் ரூ. 57 கோடி. இந்நிலையில் கடந்த 2008ல் அவர் மான்செஸ்டர் அணியில் இருந்து விலகி கொள்வதாக அணி நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

ஆனால், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர் அலெக்ஸ் பெர்குசன் கேட்டுக் கொண்டதை அடுத்து அவர் தொடர்ந்து அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது மான்செஸ்டர் அணி கிறிஸ்டியானோ ரொனால்டோவை அவரது சொந்த விருப்பத்துக்கு ஏற்ப வேறு அணிக்கு மாற அனுமதித்துள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு முன் ரூ. 57 கோடிக்கு வாங்கிய ரொனால்டோவை தற்போது சுமார் ரூ. 619 கோடிக்கு விற்கப் போவது மான்செஸ்டர் அணி தான். இதனால் அவர்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும்.

இது மான்செஸ்டர் யுனெடெட் அணியின் இணையதளம் வெளியிட்டு செய்தியில்,

ரொனால்டோவை சுமார் ரூ. 619 கோடி கொடுத்து ரியல் மாட்ரிட் வாங்க முன் வந்துள்ளது. அவர் ஏற்கனவே அணியில் இருந்து விலக வேண்டும் என கூறி வருவதால் வீரர்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து இம்முடிவை எடுத்தோம்.

இதையடுத்து ரொனால்டோவுடன் பேச ரியல் மாட்ரிட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இது தொடர்பான இறுதி அறிக்கை வரும் 30ம் தேதி வெளிடப்படும் என்றார்.

சாய்பாபா சிலைக்கு முத்தம்... காட்சியை வெட்டிய சென்சார்

ஷீரடி சாய்பாபா சிலையை கதாநாயகி கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போல படமாக்கப்பட்ட காட்சியை வெட்டியது சென்சார் போர்டு.அகினா புரொடக்ஷன்ஸ் தயாக்கும் படம் ராகவன்.

இதில் புதுமுகம் விஜித் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவர், ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர். கதாநாயகியாக ராதிகா மல்கோத்ரா அறிமுகம் ஆகிறார். இவர், நடிகை நமீதாவின் உறவுக்காரப் பெண்.
செல்வராகவனிடம் உதவியாளராக இருந்த பரந்தாமன், இந்த படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து நேற்று தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.
படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், ஒரு காட்சியை மட்டும் கடுமையாக ஆட்சேபித்தார்கள்.

கதாநாயகி ராதிகா மல்கோத்ரா, ஷீரடி சாயபாபாவின் சிலைக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சி அது. அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழுவினர் கூறினார்கள்.
தயாரிப்பாளர் எம்.செல்வராஜ், இயக்குநர் பரந்தாமன் ஆகியோர் சம்மத்துடன் அக்காட்சி வெட்டப்பட்டது.

இதுபோன்ற தேவையில்லாத காட்சிகளை வைக்காதீர்கள் என்றும் அறிவுரை கூறினார்களாம். இருவரும் சம்மதித்ததால், அந்த காட்சியை தணிக்கை குழுவினர் வெட்டி எறிந்தார்கள்.

மைக்ரோ மினி' மீனாட்சி ...! பொதுநிகழ்ச்சிகளில் நாகரீகமாக உடையணிந்து வரவேண்டும்


பொதுவாகவே நமது புகைப்படக் கலைஞர்களுக்கு நடிகைகளைக் கண்டால் உற்சாகம் ஊற்றெடுக்கத் துவங்கிவிடும்.அதுவும் கவர்ச்சி பிரளயமாய் வந்துவிட்டால் கேட்கவா வேண்டும்... பிளாஷ் மழையில் நனைத்து விடுவார்கள்.

நேற்று அப்படி நனைந்தவர் மீனாட்சி. இடம்.. சத்யம் சினிமாஸ். படம்.. மலை மலை.

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு கறுப்பு மைக்ரோ மினியில் கவர்ச்சி கண்களைக் கூசச் செய்யுமளவுக்கு வந்திருந்தார் மீனாட்சி.ஆடியோ வெளியீட்டை, ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, 'மைக்ரோ மினி மீனாட்சியை' ஆன மட்டும் க்ளிக்கித் தள்ளினார்கள் புகைப்பட கலைஞர்கள்.

சத்யம் வளாகமே இந்தக் கவர்ச்சிக் கண்காட்சியை பார்த்துக் கொண்டிருக்க, ஒண்ணுமே தெரியாத மாதிரி வேறுபக்கம் பார்த்துக் கொண்டிருந்தார் மீனாட்சி.சரி... பொதுநிகழ்ச்சிகளில் நாகரீகமாக உடையணிந்து வரவேண்டும் என்று கொஞ்சநாளைக்கு முன் ஸ்ரேயாவுக்கு கட்டுப்பாடெல்லாம் போட்டார்களே... என்னாச்சு அது!

"எலி வளர்க்கிறேன்..." நடிகை தேவி க்ருபா அலட்டல்!


"நடிக்க வராமலிருந்தா டாக்டராயிருப்பேன்"னு சொல்ற நடிகைகளுக்கு மத்தியிலே, "படிப்பே வரலை"ன்னு சொல்ற துணிச்சல்காரி நம்ம தேவி க்ருபா! "நினைப்பெல்லாம் நடிப்பு மேல இருந்தா படிப்பு எப்படி வரும்? அதனாலே நீ நடிக்கவே போ"ன்னு வீட்டிலேயும் பர்மிஷன் கொடுத்திட்டாங்களாம். ஆக, கோடம்பாக்கத்தின் குது£கல வரவுகளில் மேலும் ஒரு பூங்கொத்தாக சேர்ந்திருக்கிறார் தேவி க்ருபா. 'பயம் அறியான்' படத்தின் ஹீரோயின்.

பிறந்தது சென்னை என்றாலும், வளர்ந்தது தாய்லாந்து தலைநகர் பாங்காக். வாழ்க்கையே சினிமாதான்னு தீர்மானிச்சதாலே சினிமா டெக்னாலஜி படித்தாராம் அங்கே. சென்னைக்கு உறவினர்களை சந்திக்க வரும்போது ஸ்டில்ஸ் ரவி இவரை போட்டோ எடுத்திருக்கிறார். இவர் பிளாஷ் பட்ட ரொம்ப பேரு தமிழ்சினிமாவிலே பெரிய்ய்ய்ய்ய இடத்தை பிடிச்சிருக்காங்க. அந்த சென்ட்டிமென்ட் தேவி க்ருபாவுக்கும் வொர்க் அவுட் ஆக, இதோ-கோடம்பாக்கத்தின் ஜில் வரவுகளில் ஒன்றாகிவிட்டார் இந்த க்யூட் ராணி.

"சைக்கோ, வில்லி, காமெடி கேரக்டர் இருந்தா சொல்லுங்க. ஹீரோயினா நடிச்சு மரத்தை சுத்தி வந்து ஆடுறதை விட, நடிக்க வாய்ப்புள்ள ரோல்னா அது நான் மேலே சொன்னதுதான்" என்கிறார் தேவி. பொல்லாதவன் பட வில்லன் கிஷோர்தான் பயம் அறியான்லே இவருக்கு ஜோடி. "படத்திலே எனக்கு ரொம்ப துணிச்சலான ரோல். படம் வந்தா கோடம்பாக்கம் என்னை கைதட்டி வரவேற்கும்" என்றார் தேவி க்ருபா.

"நடிகைன்னா எல்லா ரோலிலேயும் நடிக்கணும். கவர்ச்சியா நடிக்க மாட்டேன்னு கண்டிஷன் போட மாட்டேன்"னு மனசையும், வயசையும் ரிலாக்சா வச்சிருக்கு பொண்ணு. எல்லாத்திலேயும் வித்தியாசம்தான் போலிருக்குன்னு ஆச்சர்யப்பட்டால், ஆமான்யாங்கிற மாதிரி இன்னொரு மேட்டரும் சொல்லிச்சு. என்னவாம்?

எல்லா நடிகைகளும் நாய் வளர்க்க பிரியப்படுவாங்க. இவரு எலி வளர்க்கிறாராம். அதுவும் வெள்ளை எலி. "ஒரு முறை பாங்காக் வாங்க, எலி காட்டுறேன்" என்றார். அட, கிலி பிடிக்க வைக்குறாங்களே சாமீய்....

மக்கள் டிவியில் ரஷ்ய படங்கள்

மக்கள் டிவியில் வரும் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்களில் இரு மிகச் சிறந்த ரஷ்ய படங்கள் திரையிடப்படுகின்றன.மக்கள் டிவியில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் உலக அளவில் பிரபலமான திரைப்படம் ஒன்று திரையிடப்படுகிறது. அந்த வரிசையில் இந்த வாரம் பிரபல பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய த திரி மஸ்கட்டர்ஸ் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ரஷ்யப் படம் ஞாயிறு மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

ரஷ்ய மொழியில் 1978ல் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய இந்த படத்தை ஜார்கி யுங்வால்ட் கில்கிவிச் இயக்கியுள்ளார். சிறந்த இசையால் உலக முழுவதும் பேசப்பட்ட இந்த படம் டார்டாக்னன் மற்றும் மூன்று வேட்டைக்காரர்கள் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.சனிக்கிழமை மாலை 6.03 மணிக்கு 'சாரி செய்யாத் தெருவில் ஒரு வசந்த காலம்' என்ற படம் ஒளிப்பரப்பாக இருக்கிறது. வேலை செய்யும் இளைஞன் படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் மாலை கல்லூரிகளில் படிக்க செல்கிறான். கல்லூரியில் படிப்பில் மீது ஆர்வம் ஆசிரியையின் மீது காதலாக மாறுவதாக என கதை செல்கிறது.

இந்த படத்தை மார்லென் குட்டிசெவ் மற்றும் பெலிக்ஸ் மைரோனர் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

தமன்னா...முத்தம்னா 'தகராறுன்னா!'

'எங்க படத்தில நீங்கதான் மேடம் கதாநாயகி... அதுவும் ஸோலோவா...' என்றதும் காதைத் தொடும் தாராள சிரிப்பு காட்டும் தமன்னா... 'அதுல ஒரு முத்தக் காட்சி இருக்குது மேடம்' என்றதும் அந்த சிரிப்பை ஸ்லோவாக மறைத்துவிட்டு முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்கிறாராம்.

அரைக்கோடிக்கும் அதிகமாக சம்பளம் கேட்கும் தமன்னா, ஆடைத் தள்ளுபடியில் 50 சதத்தை தாண்ட மாட்டேன் என்று அடம் பிடிப்பதாக கோலிவுட் படைப்பாளிகளுக்கு ஒரே குறை.

அதேபோல என்னதான் அதிக சம்பளம் கொடுப்பேன் என்று இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆசை காட்டினாலும், திரையில் லிப் லாக்குக்கும் நோ சொல்லிவிடுகிறாராம்.

அது என்ன அவ்வளவு கறார்...?

'நான் முதலில் நடிக்க வந்தது தமிழில்தான் என்றாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாகவே திகழந்தேன். ஆனால் அங்கும் கூட என் கொள்கையில் உறுதியாகவே இருந்தேன். முத்தக் காட்சியில் நடிப்பது தேவையற்றது. அன்பைக் காட்ட, அல்லது காதலின் தீவிரத்தைக் காட்ட முத்தம் ஒன்றுதானா வழி...?', என்று அசரடிக்கிறார் தமன்னா.

ஒருவேளை பாலிவுட் வாய்ப்புகளுக்காக அதை ரிசர்வ்ல வைத்திருப்பாரோ!

அஜீத், விஜய் பட இயக்குனர்கள்...? குழப்பத்தில் கோடம்பாக்கம்!

விட்டா உச்சி மாநாட்டை கூட்டி, நச்சுன்னு நச்சுன்னு விவாதிப்பாங்க போலிருக்கு. அப்பவும் ஒரு முடிவுக்கு வருவாங்களாங்கறதுதான் டவுட்! வர்ற செய்திகளையும் நம்பறதா வேணாமான்னு ஒரே குழப்பம். அஜீத்தோட ஐம்பதாவது படத்தை சீமான் இயக்குறாரு தெரியுமான்னு பீதியை கிளப்புறாங்க. இந்த பக்கம் திரும்பினா, விஜயோட ஐம்பதாவது படத்தை பேரரசு இயக்கலே தெரியுமான்னு நிம்மதிக்கு உத்தரவாதம் தர்றாங்க. என்னதான் நடக்குது கோடம்பாக்கத்திலே?

முதல்ல தல மேட்டருக்கு வருவோம். நீண்ட காலமாகவே தயாரிப்பாளர் தாணு, அஜீத்திடம் கால்ஷீட் கேட்பதாக தகவல். இந்த நேரத்திலே சீமானும் தாணுவிடம் ஒரு கதை சொன்னாராம். கதை பிடித்திருந்ததால் 'விக்ரம், அல்லது அஜீத்துடன் பேசுறேன்' என்றாராம் தாணு. அதற்குள் அஜீத்தின் ஐம்பதாவது படத்தை சீமான் இயக்குகிறார் என்று செய்திகள் கசிய துவங்கிவிட்டது. ஒரு சிங்கிள் பைசா கூட இன்னும் யாருக்கும் கைமாற வில்லை என்கிறது கோடம்பாக்கத்து பட்சி.

இந்த பக்கம் விஜயின் 50 வது படத்தை இயக்குவது யாருன்னு பந்தயம் போட்டு, தெருவுக்கு தெரு சூதாட்ட கிளப்பே நடத்துவாங்க போலிருக்கு. சங்கிலி முருகன் தயாரிக்கிறார்னு ஒரு நியூஸ். படிச்சிட்டு பக்கத்தை திருப்பறதுக்குள்ளே, இல்லையில்லை... இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்னு இன்னொரு நியூஸ். பேரரசு, பேரு தெரியாத அரசுன்னு ஒரு டஜன் டைரக்டரோட பேரை எழுதிட்டாங்க. இப்போ கடைசியா ஒரு தகவல் உலவுது.

விஜயோட ஐம்பதாவது படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறாராம். கதை, வசனம் மட்டும் எஸ்.பி.ராஜ்குமார் என்கிறது கோடம்பாக்கம். இதுவாவது உண்மையாகி இந்த மேட்டருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைங்கப்பா.

மும்தாஜ் பாவத்தை இந்த படத்திலே போக்கிட்டாரு! -வாலி ஜிகிர்தண்டா!


மேடை முழுக்க சேர்கள். எல்லாரும் மலை மலையா பேசி 'டயர்ட்' ஆக வைக்காமல் சுருக்கமாக பேசியதால் 'மலை மலை' ஆடியோ வெளியீட்டு விழாவில், ஒரே ஸ்வீட் மூட்! வாலிப கவிஞர் வாலி பாடல்களை வெளியிட வெற்றிப்பட ஹீரோ சூர்யா பெற்றுக் கொண்டார்.

ஜிகிர்தண்டா குடிச்ச மாதிரியே இருக்கும் வாலியின் பேச்சை கேட்டால். நிகழ்ச்சியன்று அவரது பேச்சு டபுள் ஜிகிர்தண்டா! 'மல மல மருத மல'ன்னு மும்தாஜுக்கு பாட்டு எழுதினேன். அந்த படத்தை இயக்கியது வெங்கடேஷ்தான். அந்த பாவத்தை போக்கணும்னுதான் இந்த படத்துக்கு மலை மலைன்னு பேர வச்சு, அதுல ரெண்டு வேலையும் செருகி வச்சுட்டாரு போலிருக்கு. அருண் விஜய்க்காக இந்த படத்திலே ஒரு வரி எழுதியிருக்கேன். அது சாதாரணமான வரி இல்லை. தாழம்பூ படத்துக்காக எம்ஜிஆருக்கு எழுதிய வரி.

எனக்கும் அவருக்கும் அந்த நேரத்திலே கருத்து வேறுபாடு வந்திருச்சு. அவரு படத்துக்கு பாட்டெழுத மாட்டேன்னு நான் பிடிவாதமா மறுத்திட்டேன். படமே முடிஞ்சு பாடலுக்காக வெயிட்டிங். தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் வீடு தேடி வந்திட்டாங்க. சின்னவரு விஷயத்திலே நீங்க இப்படி பிடிவாதமா இருக்க கூடாது. வந்து பாட்டெழுதுங்கன்னு கூப்பிட்டாங்க. நான் போகலே. அப்புறம் அவரே அவருடைய காரை அனுப்பி என்னை கூப்பிட்டு வரச் சொன்னாரு. அப்போ அவருக்காக நான் எழுதிய வரிகளைதான் இப்போ அருண் விஜய்காக எழுதியிருக்கேன்.

சினிமாவிலே யாருக்கு எந்த நேரத்திலே வெற்றி கிடைக்கும்னு உறுதியா சொல்ல முடியாது. திடீர்னு சூப்பர் ஸ்டாரா ஆயிருவாங்க. அந்த வாய்ப்பு இந்த படத்து மூலமா அருண் விஜய்க்கு ஏன் கிடைக்க கூடாது? அவரு பெரிய ஸ்டாரா வரணும்னு வாழ்த்துறேன் என்றார் வாலி.

இசைஞானி பையனுக்கு ஞானம் இல்லாமலிருக்குமா? செல்வ ராகவன் பேட்டி!

ஆளே மாறியிருக்கிறார் செல்வராகவன். என்ன மூடில் பேசுகிறார் என்பதை யூகிக்க விடாமல் குறுக்கே நிற்கும் அவரது கருப்பு கண்ணாடிக்கு 'குட்பை' சொல்லிவிட்டார். பேச்சில் அளவு கடந்த நிதானம். கூரான கேள்விகளையும், கோபப் படாமல் எதிர்கொள்ளும் ஜோரான பதில்கள்... ஆஹா, 'ஆயிரத்தில் ஒருவன்' பிரஸ்மீட் ரொம்பவே வித்தியாசமான அனுபவம்!

பார்த்திபன், கார்த்தி இரண்டு பேர்லே யாரு ஆயிரத்தில் ஒருவன்?

படத்தின் தயாரிப்பாளர்தான் ஆயிரத்தில் ஒருவன்! முதல்ல 12 கோடியில் இந்த படத்தை முடிச்சிடலாம்னு ஆரம்பிச்சோம். இப்போது முப்பத்தி ரெண்டு கோடி ஆயிருச்சு. ஆனாலும் எந்த கேள்வியும் கேட்காம பணத்தை இறைக்கிறார். அதனால் அவருதான் ஆயிரத்தில் ஒருவன்.

ரீமாசென்னுக்கு ரொம்ப டார்ச்சர் கொடுத்தீங்களாம். அவரு உங்க மேல ரொம்ப கோபமா இருக்காராம், அப்படியா?

அவங்களுக்கு மட்டுமா டார்ச்சர் கொடுத்தேன்? படத்திலே நடிச்ச எல்லாருக்கும் டார்ச்சர்தான். ஆனால் ஆடியோ ரிலீசுக்கு ரீமா வருவாங்க பாருங்க. என் மேலே கோவமா இருக்காங்களான்னு அவங்ககிட்டேயே கேளுங்களேன்!

இந்த படத்தை பல வருஷமா எடுத்திட்டு இருக்கீங்களே?

அப்படி சொல்ல முடியாது. மொத்தம் 256 நாட்கள் ஷ§ட் பண்ணிருக்கோம். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு நான் ஆயிரத்தில் ஒருவனைதான் ஷ¨ட் பண்ணிட்டு இருக்கறதா நினைக்கிறீங்க. அதுக்கு இடையிலே நான் தெலுங்கில ஒரு படத்தை கொடுத்திட்டு வந்தேன். இந்த படம் டிலே ஆகறதுக்கு இயற்கையும் ஒரு காரணம். ஐந்து நாளில் முடிக்கிற ஷ¨ட்டிங் மழை வந்து பதினைந்து நாளுக்கு இழுக்கும். அதுமட்டுல்லே, படத்தில் இரண்டு மணி நேரம் கிராபிக்ஸ் இருக்கு. அதன் காரணமாகவும் டிலே ஆகுது. ஆகஸ்ட்டில் ரிலீஸ் பண்ணிடுவோம்.

ஜி.வி.பிரகாஷ் மியூசிக் பண்றார். ஏன் யுவன்சங்கர்ராஜாவை விட்டுட்டீங்க? அவருக்கு அவ்வளவு ஞானம் இல்லேன்னு முடிவு பண்ணிட்டீங்களா?

இசைஞானியோட பையனுக்கு ஞானம் இல்லாம இருக்குமா? அவரு ரொம்ப பிசியான இசையமைப்பாளர். இந்த படத்துக்கு எல்லாத்தையும் விட்டுட்டு ரெண்டு வருஷம் உட்காரணும். அந்த டெடிக்கேஷன் பிரகாஷிடம் இருந்திச்சு. அதுமட்டுமில்லே, நானும் யுவனும் தொடர்ந்து வொர்க் பண்ணுறதால அவரு அடுத்து என்ன பேசுவார்ங்கிற வரைக்கும் யூகிக்க முடியும். புதுசா இருக்கட்டும்னுதான்...

ஏன் 'ஆயிரத்தில் ஒருவன்' என்று பழைய டைட்டில். புதுசா கிடைக்கலியா?

இங்கிலீஷ்ல ஈசியா பேரு வச்சிடுறாங்க. 'பைரேட்ஸ் ஆஃப் கரிபியன்' அது இதுன்னு. ஆனா தமிழ்லே வைக்கும் போது தடுமாற வேண்டியிருக்கு. 'காட்டுக்குள்ளே மூணு பேர்'னு வச்சா நல்லாவா இருக்கும்? டைட்டிலில் ஒரு பிரமாண்டம் இருக்கணும்னு நினைச்சோம். அதுக்கு ஆயிரத்தில் ஒருவன் பொருத்தமா இருந்திச்சு.

ரீமாசென், ஆன்ட்ரியா ரெண்டு பேர்லே கார்த்திக்குக்கு யாரு ஜோடி?

படத்திலே கார்த்திக்குக்கு ஜோடியே கிடையாது. ஆன்ட்ரியாவுக்கு தொல் பொருள் ஆராய்ச்சியாளர் வேடம், என்றார் செல்வராகவன்.

Wednesday, June 10, 2009

சுல்தானை முந்தும் சிவப்பு மழை

கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட சிவப்பு மழை சத்தமில்லாமல் இன்னொரு சாதனையையும் செய்யவிருக்கிறது.ஐம்பதுக்கும் மேற்பட்ட கின்னஸ் சாதனைகளை செய்தவர் சுரேஷ் ஜோகிம். இவர் பன்னிரெண்டே தினங்களில் எடுத்தப் படம் சிவப்பு மழை. இதற்குமுன் 13 நாட்களில் எடுக்கப்பட்ட பாஸ்ட் பார்வேர்ட் என்ற ஆங்கிலப் படமே குறைவான தினங்களில் எடுக்கப்பட்ட படமாக இருந்தது. சுரேஷ் ஜோகிமின் சிவப்பு மழை அந்த சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை 23 நாடுகளில் வெளியிடுகிறார் சுரேஷ் ஜோ‌கிம். ஆங்கிலம், பிரெஞ்சு உள்பட மொத்தம் 30 மொழிகளில் சப் டைட்டில் போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

ர‌ஜினியின் அனிமேஷன் படமான சுல்தான் தி வா‌ரியரை தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடுவதோடு பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் சப் டைட்டிலுடன் வெளியிட முடிவு செய்திருந்தனர். அதிக மொழிகளில் சப் டைட்டிலுடன் வெளியாகும் படம் என்ற பெருமை சுல்தான் படத்துக்கு கிடைக்க இருந்தது. அதனை சுரேஷ் ஜோ‌கிமின் படம் தட்டிப் பறித்திருக்கிறது.

சிவப்பு மழையில் ஹீரோவாக நடித்திருக்கும் சுரேஷ் ஜோ‌கிமுக்கு ஜோடி மீரா ஜாஸ்மின். கிருஷ்ணமூர்த்தி படத்தை இயக்கியிருக்கிறார்.

தருண்கோபி – புதிய சி‌ரிப்பு நடிகர்

சி‌ரிப்பு போலீஸ் மாதி‌ரி இது சி‌ரிப்பு நடிகர். பத்தி‌ரிகையாளர் சந்திப்பில் நரம்பு புடைக்க தருண்கோபி சொன்ன விஷயங்கள்தான் அவருக்கு இந்த நக்கல் பட்டத்தை வழங்கியிருக்கிறது. அப்படி என்ன சொன்னார் பிரஸ்மீட்டில்?

தருண்கோபி நடித்திருக்கும் மாயாண்டி குடும்பத்தார் சுமாராக ஓடிக் கொண்டிருக்கிறது. அதுபற்றி பகிர்ந்து கொள்ள பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தவர், கிடைத்த சந்திலெல்லாம் தனது முந்தையப் படங்களின் ஹீரோக்கள் சிம்பு மற்றும் விஷாலை பெயர் சொல்லாமல் பொளந்துகட்டியது வேடிக்கை.

இயக்குனர்கள்தான் ஹீரோக்களை உருவாக்குகிறார்கள். அவர்களை மதிக்காத ஹீரோக்களுக்கு பாடம் கற்பிக்கும் அளவுக்கு மாயாண்டி குடும்பத்தார் வெற்றிபெறும். படத்தின் வெற்றியை சகிக்காத சில ஹீரோக்கள் தங்களது ரசிகர்களை வைத்து போஸ்டரை கிழிக்கிறார்கள், என்னுடைய படத்தில் சாணி அடிக்கிறார்கள். அதையும் மீறி படம் ஓடும் என்றார் சீ‌ரியஸாக. கேட்டுக் கொண்டிருந்தவாகள் பக்கத்தில் கிளுகிளு சி‌ரிப்பு.

இவர் அடுத்து புதுமுகங்களை வைத்து இயக்கும் படத்தின் பெயர் வாடி போடியாம். சிம்புவின் போடா போடிக்கு போட்டியா என்று கேட்டால் அப்படியெல்லாம் இல்லையாம். (இதையும் நாங்க நம்பணுமாக்கும்?) பிரஸ்மீட் முடிந்த பிறகும் நிரூபர்கள் பக்கம் சி‌ரிப்பலை ஓயவில்லை. எறும்பைப் பார்த்து யானைக்கு பொறாமை என்றால் யாருக்குதான் வராது சி‌ரிப்பு.

மிஷ்கி‌ன், சேரன் இணையும் யுத்தம் செய்


சொன்னதை செய்வதில் அரசியல்வாதிகள் எப்படியோ..? மிஷ்கின் சொன்னதை நிறைவேற்றுவதில் சொக்கத்தங்கம். பொக்கிஷம் ஆடியோ விழாவில் சேரனை வைத்துப் படம் இயக்க ஆர்வமாக இருப்பதாக தெ‌ரிவித்தார். வெறும் சம்பிரதாய அறிவிப்பாக அதனை காற்றில் விடாமல் சேரனுக்காகவே செய்திருக்கிறார் ஒரு ஆ‌க்சன் கதை.

மிஷ்கினின் நந்தலாலா ஏற்கனவே முடிந்துவிட்டது. தேர்தல், ஐபிஎல் என அடுத்தடுத்து வில்லன்கள் வந்ததால் படத்தின் ‌ரிலீஸ் தள்ளிக்கொண்டே போகிறது. சூர்யாவை வைத்து யு டிவி-க்காக இயக்குவதாக இருந்த முகமூடி படமும் பைனான்ஸ் பிரச்சனையால் தொடங்கப்படும் சூழலில் இல்லை.

இந்நிலையில்தான் சேரனை வைத்து படம் இயக்கும் தனது ஆசையை வெளியிட்டார் மிஷ்கின். அவருக்காக கதையை தயார் செய்துவிட்டே விருப்பத்தை தெ‌ரிவித்திருப்பார் போலிருக்கிறது. வாரம் இரண்டு கழிவதற்குள் படத்தின் பெயரையே அறிவித்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

யுத்தம் செய்... இதுதான் சேரனை வைத்து இயக்கும் படத்துக்கு மிஷ்கின் வைத்திருக்கும் பெயர். சிகரெட்டை உள்ளே இழுத்து சோகத்தை வெளியேவிடும் கதாபாத்திரங்களில் மட்டுமே இதுவரை நடித்திருக்கிறார் சேரன். யுத்தம் எல்லாம் அவர் செய்வாரா? டைட்டிலிலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்திட்டீங்களே சார்.

கவர்ச்சியாக நடிக்க ஆசை - ப்ரியங்கா ஓப்பன் டாக்

கவர்ச்சியாக நடிக்கணுமா...? என்று நடிக்க தயங்கும் நடிகைகளுக்கு மத்தியில் இப்படி சொல்லும் ப்ரியங்கா, வெயில் படத்தில் உருகுதே மருகுதே என்று வந்து அனைவரையும் உருகவும் மருகவும் வைத்தவர்.

இவருக்கு கேரள அரசு சமீபத்தில் 2008ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான விருதை வழங்கியது. விருது அறிவிப்பு வெளியானதைக் கேட்ட ப்ரியங்கா... அப்படியே ஷாக் ஆகி விட்டார்.

ஏனென்றால் விருது கிடைக்கும் என்று அவர்தான் எதிர்பார்க்கவே இல்லையே. கடும் போட்டிக்கு மத்தியில் தான் இந்த விருது கிடைத்துவிட்டது குறித்து சந்தோஷப்படும் ப்ரியங்கா, பேர் சொல்லும்படியான கேரக்டர்களிலே நடிக்க ஆசை என்று சொல்வதற்கு பதிலாக கவர்ச்சியாக நடிக்க ஆசை என்று சொல்கிறார்.

ஆனால் கூடவே ஆபாசமாக நடிக்க மாட்டேன் என்றும் சொல்கிறார்.

கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள் தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க...

ரசிகைகள் ஏராளம்; பிளாப் படங்கள் தாராளம்


அலைபாயுதேவில் அறிமுகமான மாதவனுக்கு பேர் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் அதன் பிறகு வெளிவரவில்லை.

ஆனாலும் அடிக்கடி படங்கள் கொடுக்கும் நடிகர்களில் மாதவன் முன்னுக்கு நிற்கிறார். ஆனால் அத்தனையும் சொத்தையான படங்கள்.

இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் வெளியான குரு என் ஆளு, யாவரும் நலம் போன்றவற்றை சொல்லலாம்.

இதற்கு முன்பு நடித்த படங்களும் இதே போன்று பிளாப் ஆனவைதான். என்றாலும் மாதவனுக்கு தொடர்ந்து படங்கள் வெளியாகிக் கொண்டே தான் இருக்கின்றன. சாக்லேட் பாயான தனக்கு ஏராளமான ரசிகைகள் என்று அடிக்கடி சொல்லும் மாதவன் நம்பியிருப்பது பெண் ரசிகைகளைத்தான்.

ரசிகைகள் எவ்வளவும் இருந்தாலும், சாக்லேட் பாய் ஆனாலும் படத்தில் கதை இல்லை என்றால் தியேட்டரில் மூன்று நாட்கள் கூட படம் ஓடாது என்பது மாதவனுக்கு எப்போது புரியப்போகிறதோ!

ஆடியோ சிடி விற்பனையில் கலக்கிய கந்தசாமி

கந்தசாமி படத்தின் வெளிநாட்டு உரிமை, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளுக்கான ரைட்ஸ் போன்றவற்றிற்காக பல கோடிகளை சம்பாதித்துக் கொடுத்த கந்தசாமி, தற்போது ஆடியோ சிடி விற்பனையிலும் சாதனை படைத்திருக்கிறார்.

தமிழ் படங்களின் ஆடியோ சிடிக்கள் ஆயிரம், ரெண்டாயிரம் விற்றாலே பெரிய விஷயம் என்றிருக்கிற இன்றைய கால கட்டத்தில், ஒரே வாரத்தில் ஒரு லட்சம் ஆடியோ சிடிகள் விற்பனையாகி இருப்பதாக தயாரிப்புத் தரப்பு கூறுகிறது.

Viduppu.comஇதற்கு முன்பு இவ்வளவு குறுகிய காலத்தில் எந்த படத்தின் ஆடியோ சிடியும் இவ்வளவு விற்பனையானதில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

தோரணை ரிசல்ட் - கடுப்பில் விஷால்

தொடர்ந்து ப்ளாப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த விஷால் சத்யம் படத்தில் மொட்டை போட்டு நடித்தார்.

இதற்கு முன்பு பல நடிகர்கள் மொட்டை போட்டு நடித்த படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களை மொட்டை போடாமல் பார்த்துக் கொண்டன.

அந்த நினைப்பில் மொட்டை போட்ட விஷாலுக்கு அந்த படமும் ஊத்திக் கொள்ள, அடுத்துத் தோரணையாவது கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்... ஆனால் என்ன செய்வது? தோரணையும் கை கொடுக்காத நிலையில் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் விஷால்.

நல்ல கதையை வைத்திருக்கும் இயக்குநர்கள் இன்னும் கொஞ்ச நாள் கழித்து விஷாலை சந்திக்கலாம். ஏனென்றால், தோரணையின் தோல்வியால் இப்போது ஏகத்துக்கும் கடுப்பில் இருக்கிறார் அவர்.

தமிழுக்கு வர நல்ல ஸ்க்ரிப்ட் வேணும்-அசின்!


தமிழில் நான் நடிக்க மறுப்பதாகச் சொல்லப்படுவதில் உண்மையில்லை. நிச்சயம் நான் தமிழில் நடிக்க தயார். ஆனால் அதற்கு நல்ல கதை வேண்டும் என்கிறார் அசின்.இந்தியில் கஜினி பெற்ற பெரும் வெற்றியால் நிரந்தர மும்பைவாசியாகிவிட்ட அசின், எப்போதாவது
ஒரு முறை அதுவும் அவசியம் இருந்தால் மட்டுமே சென்னைக்கு வருகிறார்.

சமீபத்தில் கமலுடன் நடிக்கும் 19 ஸ்டெப்ஸ் படத்தில் நடிக்க சென்னை வந்தார். பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

லண்டன் ட்ரீம்ஸ் இந்திப் படத்துக்குப் பிறகு மேலும் இரு இந்திப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும், இந்த 19 ஸ்டெப்ஸ் மட்டுமே தான் இப்போதைக்கு நடிக்கும் தமிழ்ப்படம் என்றும் அவர் கூறினார்.

தமிழில் நடிக்க அதிக சம்பளம் கேட்பது ஏன் என்று அவரிடம் கேட்டனர்.

என் சம்பளம் பற்றி யாரும் என்னிடம் குறையாக சொல்லவில்லையே, என்றவர், சம்பளம் ஒரு பொருட்டல்ல. நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் நிச்சயம் நடிப்பேன், என்றார்.

ஏற்கெனவே நல்ல சம்பளத்துடன் தனக்கு வந்த இரு தெலுங்குப் பட வாய்ப்புகளை மறுத்துவிட்டதாகத் தெரிவித்த அசின், விஜய்யின் 50வது படத்தில் நடிக்க முடியாமல் போனதற்குக் காரணம் தன்னிடம் தேதிகள் இல்லாததே என்றார்.

முத்தம்: இயக்குநரை 'மொத்தும்' சந்தியா!

மஞ்சள் வெயில் படத்தில் என்னுடைய முத்தக் காட்சி குறித்து செய்தி வெளியிட்டு விளம்பரம் தேடப் பார்க்கிறார் இயக்குநர் வசீகரன் (ராஜா) என பாய்ந்துள்ளார் நடிகை சந்தியா.பாலா, பிரசன்னா மற்றும் சந்தியா நடித்த மஞ்சள் வெயில் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படம் குறித்து சமீபத்தில் ஒரு செய்தியை பத்திரிகையாளர்களுக்குச் சொல்லியிருந்தார் படத்தின் இயக்குநர்.

அதில், மஞ்சள் வெயில் படத்தில், கதையின் அவசியம் கருதி நடிகை சந்தியா ஒரு அழுத்தமான லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடித்திருப்பதாகவும், அதை சென்சாரும் ஓகே செய்திருப்பதாகவும் கூறினார்.இதனால் மேலும் பல முத்தக்காட்சி ஆஃபர்கள் சந்தியாவுக்குக் குவிந்துவிட்டனவாம். நிறைய இயக்குநர்கள் போன் போட்டு முத்தக் காட்சிக்கு நீங்க தயாரா? என்று நேரடியாகவே கேட்கிறார்களாம்.

இதனால் எரிச்சலடைந்த சந்திய, மஞ்சள் வெயில் படத்தில் முத்தக் காட்சியில் நடிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சந்தியா அளித்த பேட்டி:

'மஞ்சள் வெயில்' படம் அழகான காதல் கதை. நான் காயத்ரி என்ற பெயரில் கல்லூரி மாணவியாக வருகிறேன். இந்தப் படத்தில் இதில் முத்தக் காட்சியில் நான் நடித்திருப்பதாக வந்த செய்தி பார்த்து அதிர்ந்தேன்.

கதாநாயகனை முத்தமிட்டு நடித்ததாக அவதூறு செய்தி பரப்பியுள்ளனர். விளம்பரத்துக்காக இயக்குனர் இதைச் செய்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. நான் அப்படி நடிக்கவில்லை. இனியும் நடிக்க மாட்டேன்.

சமீபத்தில் எனக்கொரு பட வாய்ப்பு வந்தது. அருமையான கதை. சிறந்த இயக்குனர் . அதில் நடிக்கவே நானும் விரும்பினேன். ஆனால் அதில் லிப்டு லிப் முத்தக் காட்சி ஒன்று இருப்பதாக இயக்குநர் [^] சொன்னார். அக்காட்சி அவசியம் என்றும் நான் அப்படி நடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். அதெல்லாம் முடியாது என்று கூறி, அந்தப் பட வாய்ப்பையே உதறிவிட்டவள் நான்...", என்றார்.

ஜெயம் ரவி திருமணம்... அசின் வராதது ஏன்?

ஏறி வந்த பைக்கையே எட்டி உதைக்கிற வழக்கம் சினிமாவிலே சகஜம்! மிஸ் திருவனந்தபுரம், மிஸ் கொச்சின் என்று உள்ளூரில் வித்தை காட்டிக் கொண்டிருந்த அசினை, முதன்முதலாக மலபார் பீடியாக்கி, மை ஃபேர் லேடியாக்கியது எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமிதான். ஜெயம் ரவியோடு ஜோடி சேர்ந்ததன் மூலம் தமிழ்சினிமாவில் அழுத்தமான இடத்தை பிடித்த அசின் அப்படியே ஃபாரின் வரைக்கும் போய் ஹாலிவுட் கலக்கலாகவும் பிரமோஷன் ஆனார்.

ஆனால், அ-னா சொல்லிக் கொடுத்தவரை மறப்பது எப்படி சரியாகும்? சமீபத்தில் நடந்த ஜெயம் ரவி திருமணத்திற்கு அழைப்பு அனுப்பப்பட்டதாம் அசினுக்கு. ஆனால், திருமணத்திற்கும் வரவில்லை. ரிசப்ஷனிலும் தலைகாட்டவில்லை. ஏன் இந்த புறக்கணிப்பு?

அக்கம் பக்கத்தை தாண்டிப்போய் மலபார் ஏரியாவில் விசாரித்தால் கூட, அசின் தரப்பில் சொல்லுகிற ஒரே பதில், 'நேரில் வந்து இன்விடேஷன் வைக்கவில்லை' என்பதுதானாம். தமிழ்நாட்டை தாண்டி வாய்ப்பு இல்லாமல் போயிருந்தால் இந்த பந்தாவும், பதிலும் வந்திருக்காதோ?

சம்பள இழுபறி...? சினேகா ஃபெயில்!

சினேகாவுக்கும் பாவனாவுக்கும் செம போட்டி. இறுதி வெற்றி யாருக்கு? கடந்த வார ரேஸ் கேள்வி இது. இதோ ரிசல்டே வந்திருச்சு. 'அசல்' படத்தில் தல அஜீத்தோட நடிக்கிற வாய்ப்பு பாவனாவுக்குதானாம். கடந்த சில மாதங்களாகவே இழுபறியாக இருந்த ஒரே விஷயம் படத்திலே வர்ற இரண்டாவது ஹீரோயினுக்கு யாரை செலக்ட் பண்ணலாம்? என்பதுதான். மம்தாவில் ஆரம்பிச்சு, மார்க்கெட்லயே இல்லாத ஹீரோயின் வரைக்கும் தேடி உதட்டை பிதுக்கிய டைரக்டர் சரண், இறுதியாக யோசிச்ச நடிகைகள்தான் சினேகாவும், பாவனாவும்.

ஒரே நேரத்தில் இரண்டு பேரிடமும் பேச்சு வார்த்தைகளை துவங்கினார்கள். இருவரில் யாரு கிடைச்சாலும் ஓ.கே என்ற அஜீத்தின் அனுமதியோடு நடந்த பேச்சு வார்த்தையில் எல்லா விஷயத்துக்கும் விட்டுக் கொடுத்தாராம் பாவனா. ஆனால் சம்பள விஷயத்தில் கொஞ்சம் கறாராகவே இருந்தாராம் சினேகா.

பாவனாவுக்கு அட்வான்ஸ் கொடுத்து இழுபறிக்கு முடிவு கட்டியதால், இம்மாதம் படப்பிடிப்பை துவங்கப் போகிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறுகிறதாம். ஏன் மலேசியா? ஒருவேளை பில்லா சென்ட்டிமென்டோ என்னவோ!

என்ன செய்யப் போகிறார் அஜீத்? கணக்கெடுப்பும், கவன ஈர்ப்பும்!

நமக்குள்ளே பிரச்சனை இருந்தாலும் நடுவிலே யாரும் நுழைஞ்சிடக் கூடாதுன்னு பேசி வச்சிருப்பாங்க போலிருக்கு. விஜயின் ஒவ்வொரு மூவ்க்கும் ஒரு பதிலடி கொடுக்கிறார் அஜீத். இத்தனைக்கும் சமீபகாலமாக பகையை மறந்து உறவை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இருவரும். இவர் வீட்டில் அவர். அவர் வீட்டில் இவர் என்று உலகமே வியக்கிற அளவுக்கு விரிசலை அடைத்துவிட்டார்கள். இந்த நேரத்தில் அஜீத்தின் மூவ் இந்த மேட்டரின் முதல் வரியை நியாயப்படுத்துகிறது.

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜீத்-விஜய், இந்த வரிசைக்குள் யாரும் நுழைந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையாகவும் இருக்கலாம். தமிழகம் முழுவதும் உள்ள தனது முப்பதாயிரம் ரசிகர் மன்றங்களின் லிஸ்டை பக்காவாக தயாரிக்க சொல்லியிருக்கிறாராம் அஜீத். இந்த பணியை அஜீத்தின் ஆரம்பகால நண்பரும், தற்போதைய மேனேஜருமான சுரேஷ் சந்திரா செய்து வருகிறார்.

விஜய் கட்சி ஆரம்பிக்க போகிறார் என்று செய்திகள் வருகிற இந்த நேரத்தில் தனது ரசிகர் மன்ற விபரங்களை கணக்கெடுத்து அவைகளை ஒழுங்கு படுத்த கட்டளையிட்டிருக்கும் அஜீத், அடுத்து என்ன செய்வார் என்ற ஆவல் எழுந்துள்ளது திரையுலகத்தினர் மத்தியில். சென்னையில் இருந்தால் கூட ரசிகர்களை சந்திப்பதில் பெரும் ஆர்வம் காட்டாதவர் அஜீத். அவங்கவங்க வேலையை பார்க்கலாமே? எதுக்கு டயத்தை வேஸ்ட் பண்ணணும் என்கிற ஆள் அவர். இந்த நேரத்தில் இந்த கணக்கெடுப்பு, வெறும் வாயை மெல்ல வைக்கவா? அல்லது நெசமாவே ஏதாவது விஷயம் இருக்கா?

கிரகலட்சுமி அப்பீல் தள்ளுபடி!

நடிகர் பிரசாந்துடன் நடந்த திருமணம் செல்லாது என்று குடும்ப நல கோர்ட்டு சொன்ன தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கிரகலட்சுமி தொடர்ந்த அப்பீல் மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

நடிகர் பிரசாந்திற்கும் கிரகலட்சுமிக்கும் கடந்த 2005-ல் திருமணம் நடந்தது. பல காரணங்களால் இருவரும் பின்னர் பிரிந்தனர்.

அப்போதுதான் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணமானவர், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார், எனவே இந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று பிரசாந்த் சார்பில் குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல கோர்ட்டு அவர்களது திருமணத்தை செல்லாது என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கிரகலட்சுமி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.

'குடும்ப நல கோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதித்து, அதை ரத்து [^] செய்ய வேண்டும்' என்றும் கோரியிருந்தார்.

இவ்வழக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் ரவிராஜ பாண்டியன், ஜனார்த்தன ராஜா [^] ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பிரசாந்த் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குடும்ப நல கோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தர விட்டனர்.

அசல் அஜீத்துக்கு இன்னொரு ஜோடி பாவனா!

ஒரு வழியாக 'தல'யாய பிரச்சனை ஒன்று தீர்ந்துவிட்டது... அசல் படத்தில் அஜீத்துக்கு சரியான ஜோடி அமைவதில் பெரிய தாமதம் ஏற்பட்டுவிட்டதால், படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே வந்தது. இப்போது அந்த வேடத்தில் நடிக்க பாவனாவிடம் பேசி முடித்துள்ளார் இயக்குநர் [^].

சரண் இயக்கத்தில் சிவாஜி [^] புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமான அசல் சில வாரங்களுக்கு முன் பூஜையுடன் துவங்கியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் [^] இந்தப் படத்தைத் துவக்கி வைத்தார்.

அஜீத்துக்கு ஜோடியாக பிரபல இந்தி [^] நடிகை சமீரா ரெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு இன்னொரு ஜோடியும் உண்டு. இந்த வேடத்துக்கு நாயகியை வலைவீசித் தேடி வந்தனர். ஆனாலும் பொருத்தமான நடிகை கிடைக்காததால் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே வந்தது.

இந்த நிலையில் சினேகா, பாவனா இருவரிடமும் இந்த வேடத்துக்கு பேச்சு நடத்தப்பட்டது. இப்போது பாவனா இறுதி செய்யப்பட்டுள்ளார்.

பாவனா நடித்து வெளியான கடைசி தமிழ்ப் படம் ஜெயம் கொண்டான்.

அதன் பிறகு தெலுங்குப் பட உலகில் பிஸியாகிவிட்டார். தமிழ்ப் படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவும் இல்லை.

இந்நிலையில் அவருக்கு தெலுங்குப் படவுலகமும் பெரிதாகக் கைகொடுக்காததால், மீண்டும் தமிழில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என விரும்பினார். அதற்கு சரியான வாய்ப்பாக அசல் அமைந்துள்ளது.

எதிர்பார்த்து போலவே எல்லாம் அமைந்துவிட்ட சந்தோஷத்துடன் முதல்கட்ட படப்பிடிப்பு [^]க்காக மலேஷியா பறக்கிறது அசல் குழு.

மூஞ்சில சாணி அடிக்கிறாய்ங்க- தருண்கோபி

வேண்டுமென்றே போஸ்டர்களில் என் மூஞ்சியில சாணி அடிக்கிறாங்க, சிலர் என் முகத்தை மட்டும் கிழித்தெறிகிறார்கள், என்று நிருபர்களிடம் குறைப்பட்டுக் கொண்டார் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் ஹீரோவான இயக்குநர் தருண் கோபி.

திமிரு, காளை என இரு படங்களை இயக்கியவர் இந்த தருண்கோபி. சமீப காலமாக தனது படங்களில் நடித்த சிம்பு மற்றும் விஷாலை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இவர் முக்கியப் பாத்திரத்தில் நடித்த மாயாண்டி குடும்பத்தார் எனும் படம் [^] சமீபத்தில் வெளியானது. படம் குறித்து பரபரப்பாக ஏதாவது சொன்னால்தான் பிக்கப் ஆகும் என்பதால், நிருபர்களைச் சந்தித்த தருண் கோபி, வேண்டுமென்றே தனக்கு எதிராக சிலர் பிரச்சாரம் செய்வதாகக் குற்றம் சாட்டினார்.

ஆனால் அப்படிச் செய்பவர்கள் யார் என்பதை மட்டும் சொல்லவில்லை.

பின்னர் அவர் கூறுகையில், "இயக்குநர் [^]கள்தான் நடிகர்களை உருவாக்குகிறார்கள். அதனால் இயக்குநர்களும் நல்ல நடிகர்களே என்பதை மெய்ப்பித்துள்ளது மாயாண்டி குடும்பத்தார்.

ஆனால் சிலர் என்மீதுள்ள பொறாமையில், நான் எங்கே பெரிய ஹீரோவாகிவிடுவேனோ என்ற கடுப்பில் என்னுடைய போஸ்டர்களில், மூஞ்சி மேலயே சாணியை அடிக்கிறார்கள். என் முகம் உள்ள அந்தப் பகுதியை மட்டும் கிழித்து எறிகிறார்கள்.

ஆனால் நான் ஓய மாட்டேன். அடுத்து 'காட்டுப் பய' என்ற படத்தில் நான்தான் ஹீரோ. அதற்கு முன்பு 'வாடி போடி' என்ற படத்தை இயக்குகிறேன். இதில் மட்டும் வேறு நாயகன் நடிப்பார், என்றார்.

நல்ல கருத்தாழமிக்க தலைப்பு... இப்படியே கன்டினியூ பண்ணுங்க... சினிமா வெளங்கீரும்!

லோஹனுக்கு 'கர்வ்' காலி! கடுமையான எடைக் குறைப்பு பயிற்சிகள் காரணமாக செக்ஸியான வளைவு

கடுமையான எடைக் குறைப்பு பயிற்சிகள் காரணமாக செக்ஸியான வளைவு சுளிவுகள் தனது உடலை விட்டுப் போய் விட்டதாக வருத்தப்படுகிறார் ஹாலிவுட் ஹாட் கேர்ள் லின்ட்சே லோஹன்.

22 வயதாகும் லோஹன் இப்போது தயிர்வடை தேசிகன் சைஸுக்கு மாறி விட்டார். படு ஒல்லிக் குச்சியாக மாறி விட்ட அவரிடம், முன்பு இருந்த அழகிய செக்ஸியான வளைவுகளை உடலில் காண முடியவில்லை.

அவர் அணியும் உடைகள் எல்லாம் ஏதோ ஹேங்கரில் மாட்டப்பட்ட டிரஸ் போலத்தான் தொங்கிக் கொண்டுள்ளன.

தனது 15 வயது தங்கச்சி அலியுடன், லாஸ் ஏஞ்செலஸிஸ் ஷாப்பிங்குக்கு வந்த லோஹனைப் பார்த்து பலரும் வியந்து போய் விட்டனர். நம்ம லோஹனா என்று அவர்களுக்கு குழப்பம். அப்படி ஆளே மாறிப் போய் காணப்பட்டார் லோஹன்.

சைஸ் ஸீரோ என்ற மகா மோசமான பழக்க வழக்கம் இப்போது லோஹனை மட்டுமல்ல, உலக நடிகைகள், மாடல் அழகிகளை வாட்டி வதைத்து வருகிறது.

சைஸ் ஸீரோவை எட்ட வேண்டும் என்பதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வந்தார் லோஹன். அதன் விளைவாக ஒல்லிக் குச்சி உடம்புக்காரியாகி விட்டார்.

லோஹனைப் பார்த்தாலே பாவமாக இருக்கிறது, ஏதோ ரொட்டியே கிடைக்காமல் பட்டினியில் வாடுபவரைப் போல இருக்கிறார் என்று கடைக்கு வந்த ஒரு வாடிக்கையாளர் கிண்டலடித்தபடி சென்றாராம்

Tuesday, June 9, 2009

ஜோதா அக்ப‌ரின் சாதனை

67வது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது ஜோதா அக்பர். இதிலென்ன ஆச்ச‌ரியம்? இதை‌விட அ‌திகமாக ஓடிய படம்கூட இங்கு இருக்கிறதே.

இருக்கலாம். ஆனால் ஜோதா அக்பர் ஓடிக் கொண்டிருப்பது யுகே-யில். ஆம், வெளியான முதல் நாளிலிருந்து இன்று வரை அங்கு ஜோதா அக்பர் தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது. 67 வாரங்கள் முடிவில் 7.65 கோடிகளை இப்படம் வசூலித்திருக்கிறது. இதைவிட சிங் இஸ் கிங்கின் வசூல் அதிகம்.

ஆ‌க்சய் குமா‌ரின் இந்தப் படம் 42 வாரங்கள் முடிவில் 10.29 கோடிகளை குவித்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் அடுத்த இடத்தில் வருகிறது கோல்மால் ‌ரிட்டர்ன்ஸ். பதிமூன்று வாரங்களாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இதுவரை 2.71 கோடிகளை வசூலித்துள்ளது.

இந்திப் படங்கள் பல வாரங்கள் யுகே-யில் ஓடுவதே சாதனைதான். அதுவும் நல்ல வசூலுடன் ஓடுவது மறுக்க முடியாத சாதனை, சந்தேகமில்லை.

சென்னையில் ரீமாசென்! சிக் புக் பார்ட்டி?


திருவிழா முடிஞ்சுது, உறுமி மேளத்தை ஓரமா வையின்னு சொந்த ஊருக்கு போயிருந்தார் ரீமாசென். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக ஆயிரம் நாளுக்கு மேலே கால்ஷீட் கொடுத்த வெறுப்புதான் இந்த ஓட்டத்துக்கு காரணம். நல்லவேளையாக டப்பிங் பேசுறோம்னு எக்ஸ்ட்ரா லக்கேஜை சுமக்காதது இன்னொரு திருப்தி அவருக்கு. ஆனாலும், அவார்டு, ரிவார்டுன்னு என்னென்னவோ சொல்லி குழப்பிய செல்வராகவன், "நீங்களே டப்பிங் பேசுங்களேன்"னு பிட் டை போடவும் தவறலே.

எதுவும் வேணாம் சாமின்னு சென்னையை காலி செய்த ரீமா, இருப்பு கொள்ளாமல் கடந்த வாரம் மீண்டும் சென்னைக்கு வந்தாராம். இது தொழில் முறை பயணமல்ல. சும்மா ஒரு பார்ட்டிக்காக. தனது செலவில் படத்தில் பணியாற்றிய முக்கிய கலைஞர்களுக்கு ஒரு பார்ட்டி வைத்தாராம். (போயிருந்தா கூட்டு குடிநீர் திட்டத்தை நேர்லே பார்த்திருக்கலாம்)

படத்திற்கு சம்பந்தமில்லாத சில ஹீரோ, ஹீரோயின்களையும் அழைத்திருந்தாராம். வளர்ந்த ஹீரோ, வாளிப்பான ஹீரோ என்று துள்ளிக் கொண்டு வந்திருந்தார்கள். இன்னொரு பக்கம் சந்தியாவிலிருந்து, எஸ்.எஸ்.மியூசிக் லேகா வரைக்கும் ஆஜர். ஒரு கட்டத்தில் பருவ நிலை இடியும் மின்னலுமாக களை கட்டியதாம்.

வந்த இடத்திலே பேசுறோமேன்னு சங்கோஜப்படாம தனது தீராத விளையாட்டு பிள்ளை தொடர்பான விஷயங்களையும் பேசி கிளியர் பண்ணிக் கொண்டாராம் விஷால். பார்ட்டின்னா ட்யூட்டிய பார்க்க கூடாதுன்னு யாரு சொன்னா?

மாசிலாமணி நல்லாயிருக்கு! கலாநிதி மாறன் பாராட்டு


படத்தோட செய்கூலி கால் பங்காக இருந்தாலும், பப்ளிசிடி விஷயத்திலே அதை விட நு£று பங்கு செலவு செய்கிறது சன் டி.வி. இவங்க கொடுக்கிற பப்ளிசிடியே போதும். படம் ஓடிடும் என்பதால், எல்லா தயாரிப்பாளர்களுக்கும் முதல் சாய்ஸ் சன் தான். ஆனால் அவர்களோ, இனி ஸ்டார் அந்தஸ்து உள்ள படங்களை மட்டுமே வாங்குவதென்று தீர்மானித்திருக்கிறார்களாம். (ஹையோடா) "படம் நெடுகிலும் பிணமாகவே நடிச்சேன். ஆனால் சி சென்ட்டர் என்று சொல்லப்படும் கிராமபுறங்கள் வரைக்கும் சுனைனான்னா யாருன்னு தெரிய வச்சது சன் டிவிதான்" என்று சந்தோஷப்பட்டிருக்கிறார் சுனைனா. அந்தளவுக்கு சன் மேல் நன்றி செலுத்துகிறார்கள் அனுபவித்த ஹீரோக்களும், ஹீரோயின்களும்.

மீண்டும் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது நகுலுக்கும் சுனைனாவுக்கும். மாசிலாமணி படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும், சன் குழும தலைவர் கலாநிதி படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டினார் என்பதுதான் நகுல்-சுனைனா மகிழ்ச்சிக்கு காரணம்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் கலாநிதி மாறனுக்கு பிரத்யேகமாக படம் திரையிடப்பட்டது. வெளியே வந்தவர், படத்தின் இயக்குனரை பாராட்டியதோடு இந்த படத்தை தேர்வு செய்த தனது அலுவலக அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்தாராம்.

நகுல் சன்னின் செல்லப்பிள்ளை ஆகிவிட்டதால், இனி இந்நிறுவனம் நேரடியாக தயாரிக்கும் படங்களிலும் நடிப்பார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இனி 'எடிட்டர் சரத்குமார்!'


மீண்டும் தனது பழைய வாழ்க்கைக்கே திரும்புகிறார் சரத் குமார்.
ஆம்... பத்திரிகை நிருபராக இருந்து, நடிகராகி, அரசியல் கட்சி துவங்கி மீண்டும்...பத்திரிகையாளராக மாறியிருக்கிறார்.

'மீடியா வாய்ஸ்' எனும் புதிய ஆங்கில வாரப் பத்திரிகையின் ஆசிரியராக இன்று அவர் தன்னை அறிவித்துள்ளார்.இனி சரத்குமாரின் அகில இந்திய சமத்துவக் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாகத் திகழுமாம் இந்த மீடியா வாய்ஸ்.

இன்று காலை எழும்பூர் நீதி மன்றத்துக்கு வந்த சரத்குமார் (இங்குதான் பத்திரிகை பதிவாளர் அலுவலகம் உள்ளது) அங்குள்ள பெருநகர நீதிபதி முன்பு தன்னை மீடியா வாய்ஸின் ஆசிரியராக பதிவு செய்தார். பின்னர் அதை கூடியிருந்த பத்திரிகையாளர்களிடமும் அறித்தார்.

சமத்துவ மக்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 31ம் தேதியன்று இந்தப் பத்திரிகை வெளி வருமாம். அ.ச.ம.கவின் மூன்றாவது பிறந்த நாளுக்கு தன்னுடைய பரிசு இது என்று அறிவித்துள்ளார் சரத்

பம்மல் கே. சில்வஸ்டர் ஸ்டெலோன்!

கமல்ஹாசன்- சிம்ரன் நடித்த தமிழ்ப் படமான பம்மல் கே சம்பந்தம் இப்போது இந்தியில் தயாராகிறது, அக்ஷய் குமார் நடிப்பில்.

2002ல் வெளியான பம்மல் கே சம்பந்தம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படமாகும். பிஎல் தேனப்பன் தயாரிக்க மவுலி இயக்கியிருந்தார். தமிழில் பெரும் வெற்றி என்று சொல்ல முடியாவிட்டாலும் முதலுக்கு மோசமில்லாமல் ஒடிய வகையில், கமலின் வெற்றிப் பட வரிசையில் இடம் பெற்றது பம்மல் கே சம்பந்தம்.

அந்தப் படத்தில் ஸ்டன்ட்மேனாக வரும் கமல் பேசும் சென்னை [^] பாஷையும், தனது நண்பர்களுடன் அவர் அடிக்கும் லூட்டியும் வயிறுகுலுங்க சிரிக்க வைத்தன. சினேகா-அப்பாஸும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இந்தக் கதையில் ஒரே ஒரு மாறுதல் மட்டும் செய்து 'கம்பக்த் இஷ்க்' என்ற பெயரில் இந்தியில் எடுக்கிறார் சஜித் நாடியாவாலா. சபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடி கரீனா கபூர். சிம்ரன் ஏற்ற டாக்டர் வேடத்துக்கு மாற்றாக இவர் விளம்பர மாடலாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் இன்னொரு மெகா சிறப்பு உள்ளது.

அது பிரபல ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் சில்வஸ்டர் ஸ்டெலோன் இந்தப் படத்தில் கெளரவ வேடத்தில் நடிப்பது. பம்மல் கே சம்மந்தத்தில் கமல் கோலிவுட் ஸ்டன்ட்மேனாக வருவார். ஆனால் அக்ஷய் குமாரோ, ஹாலிவுட் ஸ்டன்ட்மேனாக வருகிறார்.

எனவே அந்த கேரக்டரின் நம்பகத் தன்மையை அதிகரிப்பதற்காக ஒரு சில காட்சிகளில் ஸ்டெலோனை நடிக்க வைக்கிறார்களாம்.

துடித்த ரசிகர்கள்-பிழைத்த ஜெனீலியா!

போட்டோ ஷூட்டுக்கு வந்திருந்த ஜெனீலியாவை ரசிகர்கள் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டு முண்டியடித்ததால் பீதி அடைந்த படக்குழுவினர் போலீஸாரை வரவழைத்து தப்பிச் சென்றனர்.ஷாகித் கபூருக்கு ஜோடியாக ஜெனீலியா புதிய இந்திப் படம் [^] ஒன்றில் நடிக்கிறார். கோஷ் இயக்கும் இப்படத்தின் போட்டோ ஷூட்டை மும்பையின் பந்த்ரா பகுதியில் வைத்திருந்தனர்.

இதில் நடிப்பதற்காக ஜெனீலியா படு கவர்ச்சியான உடை அணிந்து வந்திருந்தார்.

இதை அறிந்து ரசிகர்கள் திரண்டு விட்டனர். ஜெனீலியா அருகில் போக முயற்சித்தனர். ஒரு கட்டத்தில் அவரது கவர்ச்சி [^] உடையால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் சிலர் தொட்டுப் பார்க்கவும் துடித்தனர்.

ரசிகர்கள் [^] ஓவராக முண்டியடித்ததால் படக்குழுவினர் பீதி அடைந்தனர். விபரீதமாக நடப்பதைத் தடுக்கும் வகையில் போலீஸாரை வரவழைத்தனர்.

போலீஸார் வந்து லத்திகளால், ரசிகர்களை விரட்டியடித்தனர். பின்னர் படக்குழுவினரிடம், இதற்கு மேலும் இங்கு இருந்தால் நல்லதாக இருக்காது, எனவே பேக்கப் ஆகி விடுங்கள் என்று அட்வைஸ் கூறினர்.

அதுவும் சரிதான் என்று எண்ணிய படக்குழுவினர் ஜெனீலியா உள்ளிட்டோருடன் இடத்தைக் காலி செய்து விட்டுப் பறந்தனர்.

காதலில் மஞ்சரி..!


நடித்த முதல் படமே இன்னும் வரவில்லை. அதற்குள் மும்பையில் ஒரு காதலனைப் பிடித்து விட்டார் முத்திரை நாயகி மஞ்சரி.

முத்திரை படத்தில் அறிமுகமாகும் மும்பை [^] வரவு மஞ்சரி. அரபுக் குதிரை போல அட்டகாசமாக இருக்கும் மஞ்சரி, முத்திரையில் முத்தக் காட்சியில் சூடு பறக்க நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அமீர்கானின் தயாரிப்பில் உருவான சூப்பர் ஹிட் ஜானே துய யா ஜானே நா படத்தின் மூலம் ஹிட் ஆனவர் மஞ்சரி.

தமிழிலும் தனது முத்திரையைப் பதிக்க வந்திருக்கும் மஞ்சரி இப்போது காதல் வலையில் விழுந்துள்ளாராம். ஆனாலும் இதுவரை தனது காதலை காதலரிடம் சொல்லவில்லையாம். அவரும் சொல்லவில்லையாம்.

இன்னாமா இது கொயப்பமா கீதே..?

அது ஒன்றும் இல்லை. புனேவில் நடந்த ஜானே... படப்பிடிப்பின்போதுதான் சக நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டாராம் மஞ்சரி.

அவருடன் சாதாரணமாகத்தான் முதலில் பழகினாராம் மஞ்சரி. இப்போதோ அவரை தனது நெஞ்சத்துக்கு ஷிப்ட் செய்து விட்டாராம்.

இருந்தாலும் இருவரும் இதுவரை ஒருமுறை கூட ஐ லவ்யூ டா செல்லம் என்று சொல்லிக் கொண்டதில்லையாம். அவர் முதலில் சொல்லட்டும் என காத்திருக்கிறேன் என்கிறார் கண்களில் பட்டர்பிளை பறக்க.

ஐஸ்வர்யா கேரவன் பறிமுதல்: ராவணா ஷூட்டிங் ரத்து

ஊட்டி: தக்க அனுமதி பெறாமல் ஊட்டியில் இயக்கப்பட்டு வந்த ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகர் நடிகைகளின் கேரவன்களை போக்குவரத்துத் துறையினர் கைப்பற்றினர்.

தமிழ் - தெலுங்கு மற்றும் இந்தியில் இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ராவணா (அசோகவனம்) படத்தின் படப்பிடிப்பு உதகையில் நடந்துவருகிறது.

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், விக்ரம், கார்த்திக் , ப்ரியாமணி என இந்தியாவின் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் ஊட்டியில் துவங்கியுள்ளது.

இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்துள்ள ஐஸ்வர்யா ராய், விக்ரம் போன்றவர்களுக்கு தனித்தனியாக கேரவன்கள் ஊட்டிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன (ஊட்டியே ஒரு மெகா கேரவன்தான்... ஆனா பலாப்பழ ஈழக்கள் மாதிரி குவிந்துவிடும் ரசிகர்களைத் தவிர்க்கவே கேரவனாம்!).

இந்த கேரவன்களுக்கு உரிய வரி கட்ட படப்பிடிப்புக் குழு தவறிவிட்டதாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மோகன்ராமுக்குத் தகவல் வர, அப்பகுதி போக்குவரத்து ஆய்வாளருடன் அவர் ஆலோசனை செய்தார்.

பின்னர் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே சென்று பார்வையிட்டனர் இருவரும். அப்போதுதான் அங்கிருந்த கேரவன் ஒன்றின் எஞ்சின் எண் திருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த வாகனத்தை கைப்பற்றி உதகைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து சென்னையிலுள்ள போக்குவரத்து துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் கேரவன் வாகனங்கள் குறித்த சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஒரு கேரவன் வாகனம் இதேபோல முறைகேடு செய்யப்பட்ட எஞ்சின் எண்ணோடு இயங்கிக் கொண்டிருப்பது கண்டுபிடுக்கப்பட்டது. இவை தவிர மேலும் இரு கேரவன்களும் இதேபோன்ற முறைகேட்டுடன் இயங்கிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

இந்த 4 கேரவன்களின் மொத்த மதிப்பு ரூ. 2 கோடிக்கும் மேல் என்கிறார்கள். இவை அனைத்துமே ராவணா படப்பிடிப்புக்காக கொண்டு வரப்பட்டவை.

வாகனங்களின் என்ஜின் எண்களை திருத்துதல், வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட போக்குவரத்து [^] விதிகளின்படி இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணிரத்னத்தின் படம் தொடர்புடைய பிரச்சினை இது என்பதால், சென்னையில் உயர் அதிகாரிகள் மட்டத்தில் தீவிர ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கேரவன்கள் இல்லாததால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லையாம். படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இதே பிரச்சினைக்காக கொடைக்கானலில் நடந்த ராவணா படப்பிடிப்பு [^] நிறுத்தப்பட்டது நினைவிருக்கலா

'வைகை'யில் 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே...'!


பாலா- விசாகா நடிக்கும் புதிய படம் 'வைகை.' முழுக்க முழுக்க உண்மை காதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் இது.

சபேஷ் முரளி இசையமைக்க, சுந்தரபாண்டி இயக்குநராக அறிமுகமாகும், இப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒன்றை அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் பயன்படுத்தியிருப்பது.

ராஜாவின் இசையில் ஒரு பாடலை கேட்கும்போதே, முடிவு செய்துவிடலாம், இந்தப் பாடலை வேறு எந்த வடிவிலும் மாற்ற முடியாது... அதன் முதலும் முடிவும் இப்படித்தான் இருக்கும் என்பதை.அப்படிப்பட்ட பாடல்களை ரீமிக்ஸ் என மிக்ஸியில் போட்டு அடித்துக் கலக்கி குற்றுயிரும் குலையுயிருமாகத் தருவதை நவீன ட்ரெண்ட் என்று கூறிவருகின்றனர் இன்றைய இளம் இசையமைப்பாளர்கள். இதில் இளையராஜாவின் மகன் யுவனும் அடக்கும் என்பது ஒரு வேதனையான உண்மை.இந்த நேரத்தில் ராஜாவின் பாடல் ஒன்றை முழுமையாக தனது படத்தில் பயன்படுத்தியுள்ளாராம் சுந்தர பாண்டி.

அவர் கூறுகையில்,

"இசைமேதை இளையராஜாவின் இசையில் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் இடம்பெற்ற 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே...' பாடலை, 'வைகை' படத்தில் ரீமிக்ஸாக வைக்க நினைத்தோம்.

'ஆயிரம் தாமரை மொட்டுக்களே...' பாடலை எப்போது யார் எங்கே கேட்டாலும், பாடல் முடியும் வரை அங்கேயே நின்று கேட்டுவிட்டுத்தான் நகர்வார்கள்.உலகின் உயர்தரமான எந்த இசைக் கருவிகளைக் கொண்டு மாற்றி இசையமைத்தாலும் கூட இப் பாடலை ரீமிக்ஸ் வடிவில் நம்மால் ரசிக்க முடியாது என்பதே உண்மை.

ராஜாவின் இசையை மீறி எந்த ஒரு சாதனையையும் எங்களால் செய்துவிட முடியாது என்பதால், அவரது பாடலை சிறு சேதாரமும் இல்லாமல் அப்படியே படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம். ரீமிக்ஸ் என்ற பெயரில் அந்தப் பாடலைக் கெடுக்க விரும்பவில்லை. அதுதான் இளையராஜாவுக்கு நாங்கள் செய்யும் மரியாதை..." என்றார்.

இது ரீமிக்ஸ் பார்ட்டிகளுக்கும் புரிஞ்சா சந்தோஷம்தான்!

கெட்டவனை விட்டாச்சு... சிம்பு பல்டி!

ஆம்ஸ்டர்டாம்ஸ் நாட்டில் இருக்கிறார் சிம்பு. ஏனிந்த திடீர் பயணம்? வேறொன்றுமில்லை, ரெஸ்ட்! ஆனாலும் துரத்தி பிடித்து கேள்வி கேட்டாராம் நம்ம ஊரு நண்பர் ஒருவர். உங்க அடுத்த படம் கெட்டவனா? வாலிபனா?

'இரண்டுமே இல்லை. போடா போடிதான்' என்றவர், 'மீடியாவிலே அவங்களா எழுதிக்கிட்ட படம்தான் வாலிபன்' என்று சொல்லி, வெறுப்பை ஈ-மெயிலில் அனுப்பி விட்டார். (சுத்தம்) 'என்னோட பிரண்ட் விக்கிக்காக நான் நடிக்கப்போற படம்தான் போடா போடி. எல்லாமே ஏற்கனவே பிளான் பண்ணியதுதான். சரத் சார் பொண்ணு வரலட்சுமிதான் ஹீரோயின். தரண் மியூசிக். ஆனா இரண்டு பேரையும் நான் மாத்திட்டதா வந்த தகவலும் சரியில்லே. (போட்டு தாக்குங்க) இந்த மாசம் சென்னைக்கு வந்திருவேன். வந்தவுடன் செய்யுற முதல் வேலை போடா போடி சம்பந்தமான வேலைதான்' என்றாராம் சிம்பு.

மெயிலோடு மெயிலாக சிம்பு ஃபீல் பண்ணிய இன்னொரு விஷயம், 'கெட்டவன்னு பேரு வச்சுதான் எல்லாம் விளங்காம போச்சு. அப்பா ஒரு தலை ராகம்னு பேரு வச்சி ஜெயிக்கலையா? நாமளும் நெகட்டிவ்வா யோசிப்போமேன்னு நினைச்சேன். அது வொர்க் அவுட் ஆகலே. இனி டைட்டில் கூட பாசிட்டிவாதான் வைக்கணும் போலிருக்கு' என்றாராம்.

'போடா போடி' வேலையிலே முதல் வேலையா ஐந்து பாடல்களின் கம்போசிங் முடிஞ்சிருச்சாம். ஒரு பாடல் சிம்பு பாடறாருன்னு தனியா சொல்லணுமா என்ன?

கார் விபத்தில் சிக்கிய கார்த்திகா!


திண்டுக்கல் சாரதியில் நடித்த கார்த்திகா, திடீரென்று திருமணம் செய்து கொண்டு கேரளா போய் விட்டார். பொதுவாக திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு போகிற அத்தனை பேரும், போன வேகத்தில் திரும்பி வந்து மேக்கப் பாக்சை திறக்கும் நிலையில், 'தொடர்ந்து நடிக்க கணவர் பர்மிஷன் கொடுத்திருக்கிறார்' என்று அறிவித்தவர் இவர்.

கார்த்திகாவின் களையான முகத்தில் கவலை ரேகைகள் இப்போது. வேறொன்றுமில்லை, முந்தாநாள் நடந்த விபத்துதான் கவலைக்கு காரணம். தனது கணவரை அமெரிக்காவுக்கு விமானத்தில் அனுப்பிவிட்டு குடும்பத்தோடு எர்ணாகுளம் திரும்பிக் கொண்டிருந்தாராம். அங்குதான் இருக்கிறது கார்த்திகாவின் வீடு. வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஓரிடத்தில் தடுமாறி விபத்திற்குள்ளாகியது. காரே தலைகீழாக கிடக்க, உள்ளேயிருந்து ஒரே கூக்குரல்.

அந்த வழியாக போனவர்கள் பதறிப்போய் இவர்களை காப்பாற்றினார்களாம். நல்லவேளையாக பலத்த காயம் எதுவும் இல்லாமல் வெறும் சிராய்ப்புகளோடு தப்பித்தனர் கார்த்திகாவும், அவரது குடும்பத்தினரும். தற்போது 'பாலைவனச் சோலை' என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்திகா. விஷயத்தை கேள்விப்பட்ட இந்த யூனிட்டை சேர்ந்தவர்கள் போன் போட்டு விசாரித்தார்களாம். அதுமட்டுமல்ல, திண்டுக்கல் சாரதியில் கார்த்திகாவின் கணவராக நடித்த கருணாசும் கவலையோடு விசாரித்தாராம்.

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது


சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், சிங்கப்பூர் கலைஞர்கள் சங்கம் சார்பில், லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது [^] வழங்கி கெளரவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்கத்தை சேர்ந்த நடிகர் [^]கள், சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தில், ராஜராஜ சோழன் என்ற நாடகத்தை நடத்தினார்கள்.

நாடகத்தின் முடிவில், `சிங்கப்பூர் தமிழ் [^] நாடக வரலாறு' என்ற நூலை, கம்பன் கழக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் வெளியிட, அழகப்பன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் எஸ்.எஸ்.ஆருக்கு வாழ்நாள் சாதனை விருதை இயக்குநரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் வழங்கினார்.

முடிக்காக இழந்த வாய்ப்புகள்!-மந்திரா பேடி

சின்ன இடைவெளிக்குப் பிறகு சென்னைக்கு வந்திருந்தார் பிரபல பாலிவுட் நடிகையும், கிரிக்கெட் வர்ணனையாளருமான மந்திரா பேடி.

சென்னையில் ஒரு பர்ப்யூம் மற்றும் பெண்கள் ஆடையகத்தைத் திறந்து வைக்க வந்திருந்த மந்திரா, பின்னர் நிருர்களிடம் கூறியதாவது:

சின்ன வயதிலிருந்தே எனக்கு பர்ஃப்யூம்ஸ் மற்றும் ஆண்கள் அணியும் உடைகள்தான் பிடிக்கும்.இந்த புதிய ஹேர்ஸ்டைல் பற்றி நிறையப் பேர் குறையாகக் கேட்கிறார்கள். இந்த முறை டிஎல்எப் போட்டிக்காக நான் செய்துகொண்ட புதிய ஹோர்ஸ்டைல் இது. செட்மேக்ஸ் ஒப்பந்தத்தில் இதுவும் ஒன்று.

இந்த குட்டை முடி காரணமாக நான் சில பட வாய்ப்புகளையும் இழந்துவிட்டேன். அதுதான் கஷ்டமாக உள்ளது.

நிச்சயம் என்னுடைய அடுத்த கிரிக்கெட் வர்ணனையின்போது நீண்ட கூந்தலோடு என்னைப் பார்ப்பீர்கள்," என்றவரை... 'அட அதுக்குள்ள அவ்வளவு நீளத்துக்கு முடி வளர்ந்து விடுமா உங்களுக்கு மட்டும்?' என்று நிருபர்கள் மடக்க...

'அரே யார்... விக் இருக்க எனக்கென்ன கவலை!' என ஒரு லுக் விட்டார்...

க்ளீன் போல்டு!

Monday, June 8, 2009

சந்தியாவின் முத்தத்துக்கு 'யு' தந்த சென்சார்!


இதோ அதோ என இழுத்தடித்துக் கொண்டிருந்த மஞ்சள் வெயில் ரிலீஸ் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
வருகிற 12-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் பெயரும் நடித்த நாயகர்களின் பெயரும் (பெயர் மட்டும்தாங்க!) சைவமாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் அக்மார்க் அசைவ மேட்டர் ஒன்று உள்ளது.

அது சந்தியாவுடனான லிப்பாலஜி!

சந்தியாவுடன் உதட்டுச் சண்டை போடும் 'பாக்கியம் பெற்ற அதிருஷ்டசாலி' பிரசன்னாவா... பாலாவா?

'அது மட்டும் சஸ்பென்ஸ்... இந்த முத்தத்தைப் பார்க்கும் ஒவ்வொரு காதலனும் தானே தனது காதலியுடன் அப்படி இருப்பதைப் போல உணர்வார்கள். அப்படி அனுபவித்து முத்த மழை மொழிந்துள்ளனர் இந்தப் பட ஜோடி. ஆனால் அதையும்கூட ஆபாசமில்லாமல் காட்டியிருக்கிறோம் (!?).

இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் பெரிதும் பாராட்டினர். அவர்களில் ஒருவர் படத்தின் தெலுங்கு உரிமையை விலைக்குக் கேட்டார் என்றால் இந்தப் படத்தின் தரம் உங்களுக்கே புரியும்' என்கிறார் படத்தின் இயக்குநர் ராஜா என்கிற வசீகரன்.

குடும்ப குத்து விளக்காக வலம் வந்த சந்தியா எப்படி இந்த உதடு மேட்டருக்கு ஒப்புக் கொண்டார்?

"அது பெரிய விஷயமில்ல... தொழில் மேல அக்கறை உள்ள யாருமே, கதைக்காக சில நேரங்களில் விட்டுக் கொடுத்துப் போய்விடுவார்கள். சந்தியாவும் அப்படித்தான். இந்தக் கதைக்கு அந்த முத்தக் காட்சி கட்டாயம் தேவை என்பதை உணர்ந்து, நடிக்க மனப்பூர்வமா ஒப்புக் கொண்டார். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தில் ஒரு பாடலை சொந்தக் குரலிலும் பாடியுள்ளார்," என்றார் ராஜா.

நல்லாத்தான் காட்டுறாய்ங்க சீன்!

கருணாஸின் சுறுசுறுப்பு


கருணாஸைப் பார்த்து வியந்து நிற்கிறது கோடம்பாக்கம். ஆனானப்பட்ட வடிவேலு, விவேக்கிற்கே ஹீரோ வேஷம் கிளிக்காகாத நிலையில், ஹீரோவாக இரண்டாவது படத்தை தொடங்கியிருக்கிறார் கருணாஸ். அதுவும் எப்படி?

அம்பாசமுத்திரம் அம்பானி என்று படத்தின் பெயரை அறிவிக்கும் முன்பே பாடல் கம்போஸிங்கை தொடங்கினார் கருணாஸ். மொத்தம் ஐந்து பாடல்கள். படப்பிடிப்பை உறுதி செய்யும் முன்பே ஹீரோயின், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தயார். நேற்று ராஜா அண்ணாமலைபுரத்தில் படப்பிடிப்பு தொடங்கியது.

தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோவும், கருணாஸும் கிறிஸ்தவர்கள் என்பதால், அங்குள்ள தேவாலயத்தில் படத்தின் தொடக்க விழாவை சிம்பிளாக முடித்து, கருணாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை சுடத் தொடங்கினார் இயக்குனர் ராம்நாத். உடன் ஹீரோயின் நவ்நீத் கவுர்.

திண்டுக்கல் சாரதியை கரை சேர்த்ததில் சன் பிக்சர்சுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. கருணாஸுக்கு தெரியாத விஷயமா இது. நேற்று நடந்த தொடக்க விழாவிலும் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ் சக்ஸேனாதான் தலைமை விருந்தாளி.

ம்... அம்பானி கோடு போட்டிருக்கிறார். ரோடு போடுவதை இனி சன் குழுமம் பார்த்துக் கொள்ளும்.

சிட்டி ஆஃப் காட் உலக ‌சி‌னிமா

குற்றவாளிகளின் உலகை மையப்படுத்தி அதிக திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவை பெரும்பாலும் ஒரு தனி நபரின் கதையினூடாக அவ்வுலகை காட்சிப்படுத்த முயல்பவை. இவ்வகை கதை கூறும் முறையால் குறிப்பிட்ட நபரின் பலங்களும், பலவீனங்களும், அவரது கருணையும், கொடுரமும் மற்றும் அவர்களுக்கேயுரிய ஆளுமையும், அடிமைத்தனமும் அவ்வுலகின் குணங்களாக கருதப்படும் சாத்தியமுள்ளது. இந்த காரணத்தால், குற்றவாளிகளின் உலகின் ஒரு பகுதியை மட்டும் காட்சிப்படுத்தும் முயற்சிகளாக அப்படங்கள் சுருங்கி விடுகின்றன.

பெர்னாண்டோ மெய்ரெலஸின் சிட்டி ஆஃப் காட் தனி மனிதனின் கதை அல்ல. ஒரு இடத்தின் கதை. இளம் குற்றவாளிகள் மலிந்த பிரெசிலின் சேரிப் பகுதி ஒன்றின் கதை.

பெர்னாண்டோ மெய்ரெலஸ் சமகால லத்தீன் அமெரிக்க இயக்குனர்களில் முக்கியமானவர். இவர் பிறந்தது பிரெசிலிலுள்ள சா பாவ்லோ நகரம். படித்தது கட்டிடக் கலை. சினிமா மீதுள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் சேர்ந்து இவர் இயக்கிய எக்ஸ்பெரிமெண்டல் வீடியோஸ் பிரெசிலின் பிலிம் பெஸ்டிவெல்லில் பல விருதுகளை வென்றது.
இவரது சிட்டி ஆஃப் காட் உலகின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் அலைந்து கொண்டேயிருக்கும் கேமரா இயக்கம், துல்லியமான எடிட்டிங், கதை கூறும் முறை ஆகியன நவீன சினிமாவில் தனியொரு இடத்தை இப்படத்துக்கு பெற்றுத் தந்துள்ளது. அனைத்திற்கும் மேலாக இப்படம் கொண்டாடப்பட காரணம், பெர்னாண்டோ இப்படத்தில் எடுத்திருக்கும் கதைக்களன்.

பிரெசிலின் தலைநகரான ரியோடி ஜெனிரோவுக்கு வெளியே நகரின் தூய்மையை பேணுவதற்கென ஏழைகளுக்கும், வீடில்லாதவர்களுக்கும் அரசு உருவாக்கிக் கொடுத்திருக்கும் குடியிருப்பு சிட்டி ஆஃப் காட். மின்சாரம் உள்பட எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்த கடவுளின் நகரில் இயல்பாக உருவாகும் இளம் குற்றவாளிகளின் உலகை எந்த சிம்பதி கண்ணாடியும் இன்றி அணுகி ஆராய்கிறது படம்.

இந்த நகரைச் சேர்ந்த ராக்கெட் என்ற பத்திரிகை புகைப்பட கலைஞனின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள் என 3 காலகட்டங்களை விவரிக்கிறது படம்.

கத்திகள் கணப்பொழுதில் மின்னி மறையும் ஆரம்ப காட்சி பார்வையாளர்களை நேரடியாக படத்துக்குள் இழுத்து செல்கிறது. படத்தின் கதை அதன் இறுதிப் பகுதியிலிருந்து தொடங்குகிறது. போலீஸ், லில் டைஸின் போதைக்கும்பல் என இரு ஆயுதப்படைகளுக்கு நடுவே சிக்கிக் கொள்கிறான் ராக்கெட். பதற்றத்துடன் அவன் தப்பிக்க முயற்சிக்கும்போது காட்சி டிஸ்சால்வ் ஆகி அறுபதுகளில் ராக்கெட் சிறுவனாக இருந்த காலகட்டத்திற்கு செல்கிறது.

இதுபோன்ற பிளாஷ்பேக் யுக்தியின் வழியாக ராக்கெட் உள்பட அரை டஜன் கதாபாத்திரங்களின் கதைகள் படத்தில் சொல்லப்படுகிறது. இத்தனை பிளாஷ்பேக்குகளையும் படத்தின் ஓர்மை சிதையாமல் படத்தில் பொருத்தியிருப்பது திரைக்கதையின், இயக்கத்தின், எடிட்டிங்கின் சாதனை.

அறுபதுகளில் சிறுவனாக இருக்கும் ராக்கெட் புகைப்பட கலைஞனாக விரும்புகிறான். அவன் வயதையொத்த லில் டைஸின் விருப்பம் கொள்ளையடிப்பதிலும், கொலை செய்வதிலும் குவிந்துள்ளது. ராக்கெட்டின் விருப்பம் அந்த நகரத்துக்கு பொருத்தமிலல்லாததும், கடினமுமாக இருப்பது அந்நகரின் மோசமான தனித்துவம்.

தனது பத்து வயதுக்குள் பல கொலைகளை செய்கிறான் லில் டைஸ். இந்த கொலைகள் அவனை இளம் வயதிலேயே மிகப் பெரிய கொள்ளைக்காரனாக மாற்றுகிறது. தனது நண்பன் பின்னியுடன் சேர்ந்து அந்த நகரில் உள்ள அனைத்து போதை மருந்து வியாபாரிகளையும் அவன் கொன்றொழிக்கிறான். அந்த நகரத்தின் தனிப்பெரும் போதை மருந்து கடத்தல்காரனாக அவன் உருவெடுக்கும்போது, அவனது அழித்தொழிப்பிலிருந்து தப்பிக்கும் கேரட் என்பவனுடன் இறுதிகட்ட போர் நடக்கிறது. போலீஸ் துணையுடன் உயிர் பிழைக்கும் லில் டைஸ் அந்நகரத்தின் பத்து வயதிற்கும் குறைவான சிறார்களால் சுட்டுக் கொல்லப்படுகிறான். தங்களது குற்றச் செயல்களை லில் டைஸ் கட்டுப்படுத்தி அதிகாரம் செய்வதே அந்த சிறார்களின் செயலுக்கு காரணமாகிறது என்பது நம்மை துணுக்குற வைக்கிறது.

கடவுளின் நகரில் குற்றம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அதுபோலவே அதன் விளைவுகளும். ஹோட்டலில் கொள்ளையடிக்கும் கும்பலில் ஒருவன் போலீஸால் சுட்டுக் கொல்லப்படுகிறான். இன்னொருவனான கிளிப்பர் மனம் திருந்தி வேலைக்கு செல்லும் முடிவை எடுக்கிறான். போலீஸ் அவர்களை துப்பாக்கியுடன் தேடிக் கொண்டிருக்கும் வேளையில் அது பற்றி எந்த கவலையும் இன்றி அவர்களை கடந்து செல்கிறான் கிளிப்பர். அதேநேரம், போலீஸின் துப்பாக்கிக்கு பயந்து ஓடும் அப்பாவி அநியாயமாக சுட்டுக் கொல்லப்படுகிறான். இயல்பான பதற்றம்கூட உயிரை பறித்துவிடும் அபாயகரமான இடமாக இருக்கிறது கடவுளின் நகரம்.

இன்னொரு காட்சியில் லில் டைஸின் நண்பனான பின்னி குற்ற உலகிலிருந்து விலகி தனது தோழியுடன் அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கிறான். இறுதி பிரிவு உபச்சார விழா நடக்கிறது. அங்கு லில் டைஸின் உயிரை பறிப்பதற்காக வருகிறவனின் துப்பாக்கி தவறுதலாக இனிமையான பின்னியின் உயிரை பறித்து விடுகிறது.

அதேபோல லில் டைஸால் பாதிக்கப்படும் நாக் அவுட் நெட்டின் மரணம் அவனால் பரிவு காட்டப்பட்ட சிறுவனால் நிகழ்கிறது. கொள்ளை ஒன்றில் சிறுவனின் தந்தை மரணமடைவதற்கு நாக் அவுட் நெட் காரணமாக இருந்தான் என்பது பிளாஷ்பேக்கில் தெரிய வருகிறது.

கடவுளின் நகரில் மரணம் கண்ணி வெடியைப்போல எங்கும் சிதறிக் கிடக்கிறது. தவறுதலான சிறு நகர்வு போதும்… அனைத்தும் அஸ்தமனமாகிவிடும்! இந்த நிச்சயமின்மையே குற்றவாளிகளை மேலும் கடுமையானவர்களாக, இரக்கமற்றவர்களாக மாற்றுகிறது. லில் டைஸின் அதீத கொலை வெறிக்கு பின்புலமாக பெண் துணை இல்லாததும் ஒரு காரணமாக காட்டப்படுகிறது.

webdunia photo FILE
படத்தில் பார்வையாளர்களை அதிர வைப்பது ஐந்து முதல் பத்து வயது வரையிலான சிறுவர்கள். போதைப் பொருள் வியாபாரத்தின் டெலிவரி பாயாக, டீலர்களாக இந்த சிறுவர்களே இருக்கிறார்கள். துப்பாக்கி சாதாரண விளையாட்டுப் பொருளாக இவர்களிடம் புழங்குகிறது. சாதாரண முதல் அசாதாரண காரணங்கள் வரை அனைததிலும் இந்த சிறுவர்களே கொல்பவர்களாகவும், கொல்லப்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

படத்தின் கதை லீனியராக ஒரே நேர்கோடாக தெரிந்தாலும் அதனை நான் லீனியராக பிளாஷ்பேக் யுக்தியின் வழியாக முன்னுக்குப் பின்னாக அடுக்கி படத்திற்கு கலாபூர்வமான அழகை தந்திருக்கிறார் படத்தின் படத்தொகுப்பாளர். சம்பவங்களை கூறும் முறையில் பல இடங்களில் ஆச்சரியப்பட வைக்கிறார் இயக்குனர்.

தனது தோழிக்காக போதைப் பொருள் வாங்க தனது முன்னாள் பள்ளித் தோழனும், போதைப் பொருள் டீலருமான பிளாக்கியை காணச் செல்கிறான் ராக்கெட். பிளாக்கியின் அபார்ட்மெண்டில் இருக்கும்போது அங்கு தனது ஆட்களுடன் வருகிறான் லில் டைஸ். இப்போது கேமரா அதே கோணத்தில் நிலைத்து நிற்க, காட்சி டிஸ்சால்வ் ஆகி, அபார்ட்மெண்ட்டின் கதை என்ற தலைப்புடன் அந்த அபார்ட்மெண்ட் எப்படி பிளாக்கியின் கைக்கு வந்தது என்பது விவரிக்கப்படுகிறது. இதில் கேமரா ஒரே கோணத்தில் நிலைத்து நிற்க, கதாபாத்திரங்கள் பிரேமுக்குள் வந்து செல்வதை வைத்தே கதை சொல்லப்படுகிறது.

வறுமை, இழப்பு, சோகம் என பார்வையாளர்களை உணர்ச்சியேற்றக்கூடிய அனைத்து அம்சங்கள் இருந்தும் அந்த திக்கில் படத்தை நகர்த்தவில்லை பெர்னாண்டோ மெய்ரெலஸ். சதா நகர்ந்தபடி இருக்கும் கேமரா, காட்சிகளை வேகமாக நகர்த்தும் துரித எடிட்டிங், டாக்குமெண்டிரியை எடுக்கும் மனநிலை ஆகியவற்றின் வழியாக உணர்ச்சிகளை மட்டுப்படுத்தி பிரெசில் சேரிப் பகுதி வாழ்வின் நிலையாமையை படத்தில் பிரதானப்படுத்தியிருக்கிறார். இதற்கு இசையும், ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் பெரும் பங்களிப்பு செய்திருக்கின்றன.

பெர்னாண்டோவின் இந்தப் படம் எழுத்தாளர் இ.எ‌ல். டா‌க்‌ட்ரோ‌ எழுதிய சிட்டி ஆஃப் காட் நாவலை தழுவி எடுக்கப்பட்டது. 600 பக்கங்களை கொண்ட இந்த நாவலில் 350 கதாபாத்திரங்களை நாவலாசிரியர் அறிமுகப்படுத்துகிறார். கதையை படமாக்கிய விதத்தில் நாவலாசிரியரை பெர்னாண்டோ எளிதாக புறந்தள்ளிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்!

மலையாளி கொல்லப்பட்டிருந்தால் ராஜபக்சேவுடன் நாராயணன் கை குலுக்கியிருப்பாரா?-சீமான்


பெங்களூர்: ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், நாராயணன் பல்லிளித்துக் கொண்டு ராஜபக்சவுடன் கை குலுக்குவாரா? ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், ஏ.கே அந்தோனி ஆயுதம் கொடுப்பாரா? என்று இயக்குநர் சீமான் காட்டமாக கேட்டுள்ளார்.

பெங்களூரிர், கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நேற்று காலை நடைபெற்றது.

அதற்கு முன்னதாக பெங்களூர் கிழக்கு ரயில் நிலையம் அருகே உள்ள திடலில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்க தலைவர் சி.இராசன் தலைமை உரையாற்றினார். கூட்டத்தி்ல இயக்குநர் சீமான் சிறப்புரையாற்றினார்.

தமிழீழ எதிர்ப்புப் போக்கை கடைப்பிடிப்பதைக் கண்டித்து தினகரன் நாளிதழ் தீவைத்து எரிக்கப்பட்டது.

சீமான் பேசுகையில்,

இனவெறி பிடித்த இலங்கை அரசு, சீனாவும், பாகிஸ்தானும் கொடுத்த ஆயுதத்தையும், இந்தியா கொடுத்த ஆயுதத்தையும், பயிற்சியையும் பயன்படுத்தி தமிழினத்தை முற்றாக அழிக்கப் பார்க்கிறது.

தமிழ் நிலத்தை சுடுகாடாக்கிவிட்டு, நாடு அமைதியாக இருப்பதாக கொக்கரிக்கிறது. இந்த அமைதியில், சிங்களவன் நிம்மதியாக இருக்கமுடியாது.

இனி, புலிகள் மரபு வழி யுத்தம் செய்யப் போவதில்லை.

சிங்களவனே, நீ ஒரு பள்ளியில் குண்டு போட்டால், புலிகளின் குண்டு பத்து பள்ளிகளின் மேல் விழும்.

ரத்த உறவுகள் மானபங்கபடுத்தப்பட்டு, கொல்லப்படும் வேதனையை தமிழன் மட்டுமே அனுபவித்து வந்தான்,

இனி இந்த கொடுமைகளையெல்லாம் சிங்களவன் அனுபவிக்க போகிறான். அப்போது, மனித உரிமை பற்றிப் பேச எந்த வல்லாதிக்க அரசுக்கும் அருகதை கிடையாது.

தமிழினத்தை சொந்த மண்ணிலே, முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்கிறான் சிங்களவன்; அந்த சிங்களவனுக்கு ஆதரவாக, ஐ.நா. மன்றத்தில் முதல் கையெழுத்துப் போட்டு ஆதரவு தெரிவிக்கிறது இந்தியா.

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், நாராயணன் பல்லிளித்துக் கொண்டு ராஜபக்சவுடன் கை குலுக்குவானா?

வழக்கை முடிக்க இறப்பு பத்திரம் கேட்கிறான். அடேய் பாவி, உனக்கு வழக்கு முடிக்க தமிழினத்தின் வாழ்க்கையா முடிய வேண்டும்?

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், ஏ.கே அந்தோனி ஆயுதம் கொடுப்பாரா??

சிங்களவன் தமிழச்சி சேலையை உருவி மானப்பங்கபடுத்தறான். அந்த சிங்களவனிடம் கை குலுக்கிட்டு வந்து தமிழ்நாட்டில் நம் தமிழ் தாய்மார்களுக்கு சேலை கொடுத்து வாக்கு கேட்கிறான்… என்ன மானங் கெட்டத் தனம்?

குடும்ப நலனுக்காக இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா?

இனத்தைக் காக்க குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா??

மே-17 ந்தேதி, பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்தி வந்தவுடன் தமிழ்நாடே இழவு வீடாகி போனது. தமிழினமே செத்துப் போனது.

பிரபாகரன் நலமாக உள்ளார் என்ற செய்தி கிடைத்தவுடனே, தமிழினமே உயிரெழுந்தது. இப்போது புரிந்து கொள்ளுங்கள்…. தமிழினத்தின் உயிர் யார்? என்பதை….

தமிழினத்தின் ஜீவநாடி, பிரபாகரனின் கையில் தான் உள்ளது.

கம்யூனிச நாடுகளான சீனமும், கியூபாவும், வியட்நாமும் கூட சிறிலங்காவிற்கு ஆதரவளிப்பதேன்? ராஜபக்ச காட்டியும், கூட்டியும் கொடுப்பதால் தான்…..

சீனாவிற்கு அம்பாந்தோட்டையில் துறைமுகத்திற்கு நிலம் தருகிற ராஜபக்ச தேசியவாதியா?

அன்னை நிலத்தை, அந்நியனுக்கு தராமல் போராடும் பிரபாகரன் தீவிரவாதியா?

அன்று, பண்டாரவன்னியனுக்கு ஒரு காக்கை வன்னியன்!

கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்!!

இன்று, பிரபாகரனுக்கோ…..’கருணா’க்கள் !!!

துரோகிகளாலேயே, இந்த இனம் தொடர்ந்து வீழ்த்தப்படுகிறதே என்றார் சீமான்.

கூட்டத்தின்போது ராஜபக்ச உருவபொம்மை தூக்கிலிடப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது. சோனியா,கருணாநிதி ஆகியோரை தமிழின இரத்தம் குடிக்கும் எதிரியாக,துரோகியாக… உருவகப்படுத்தி, பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

நயன் கையில் பிரபு தேவா டாட்டூ


ஊரே நயன்தாரா - பிரபு தேவா ரகசியம் கல்யாணம் பற்றி பேசிக் (பினாத்தி?!) கொண்டிருக்க, 'அதெல்லாம் நீங்க சொல்லக் கூடாது... நான்தான் சொல்வேன்', என்று எல்லோர் வாய்க்கும் ஊரடங்கு போட்டுவிட்டு சட்டென்று காணாமல் போய்விட்டார் நயன்தாரா.

பிரபு தேவா எங்கிருக்கிறார் என்று தெரியாது என கற்பூரம் அடிக்காத குறையாகச் சொல்கிறார் சுந்தரம் மாஸ்டர்... (விட்டா உங்க கையிலேயேகூட கற்பூரம் கொளுத்திவிடுவார்!).

ஆனால் திருமணம் நடந்ததா இல்லையா என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லமாட்டேனென்று அடம் பிடிக்கிறார் மனிதர்.

இந் நிலையில் ஆதவன் படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு டாட்டூ கலைஞரை வரவழைத்த நயன்தாரா, தனது கையில் 'பிரபு' என டாட்டூ வரைந்து கொண்டாராம். இதில் P என்ற எழுத்து மட்டும் ஆங்கிலத்தில். மற்ற இரு எழுத்துக்களும் தமிழில் வருமாறு வரைந்து கொண்டாராம் (தமிழ் உணர்வாளர்கள் கவனிக்க!).

இதற்கு முன்பே ஒருமுறை ஹைதராபாத்தில் டாட்டூ கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நயனிடம், 'டாட்டூ வரைந்து கொள்கிறீர்களா மேடம்' என கடைக்காரர்கள் கேட்க, 'ஓயெஸ்... பிரபுன்னு வரைங்க' என்றே சொன்னாராம்.

இந்தத் தகவலை சொல்லிக் கொண்டிருந்த நயனுக்கு நெருக்கமான பிஆர்ஓவிடம், சக நிருபர் கடுப்பாக சொன்னது... 'உண்டு இல்லை... நிஜம் பொய் இதுல ஏதாவது ஒண்ணொ சொல்லித் தொலைங்கய்யா... இன்னும் நிறைய இருக்கு எழுத!'

என்னோட கவர்ச்சி? 'குத்து' திவ்யா குதூகலம்

தலைவிரித்தாடுது ஹீரோயின் பஞ்சம் என்பதற்கு சமீபத்திய உதாரணம் குத்து திவ்யா! கன்னடத்தில் சூப்பர் ஸ்டாரிணியாக இருந்தாலும், தமிழில் அவர் ஒன்றும் தேவதையல்ல. ஆனாலும், அவரே வேணாம்னு மறுக்கிற அளவுக்கு தமிழ்லே இருந்து ஆஃபர் குவியுதாம். ஸ்ரீகாந்தும், வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணுவும் நடிக்கிற 'துரோகி' படத்திற்கு ஜோடியா நடிக்க அழைத்தார்களாம். இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்ல நடிக்கறதில்லேன்னு ஒதுங்கிகிட்டாராம் திவ்யா. அப்படின்னா வாரணம் ஆயிரத்திலே நடிச்சாரே எப்படியாம்?

'அது விதிவிலக்கு. காரணம், என்னோட கேரக்டருக்கும் அதிலே வெயிட் இருந்திச்சு' என்றார். வருஷத்துக்கு ஒரு படமாவது தமிழ்லே நடிக்கணும். அதுக்காகதான் என்னோட டைட் ஷெட்யூலிலேயும் தமிழ்லே நடிக்க தேதிகளை ஒதுக்குறேன். இப்போ ஜீவா நடிக்கிற சிங்கம் புலி படத்திலே அவருக்கு ஜோடியா நடிக்கிறேன். செல்போன் விக்கிற கேரக்டர் எனக்கு. நடிக்கறதுக்கு நிறைய ஹோப் இருக்கு. குத்து படத்திற்கு பிறகு அவ்வளவு கிளாமரா தமிழ்லே நடிக்கலையேன்னு கேட்கிறாங்க. அந்த படம் மாதிரி டூ பீஸ்லே நடிக்கலேன்னாலும், சிங்கம் புலியிலே என்னோட கவர்ச்சியும் ஸ்பெஷலா பேசப்படும் என்றார் திவ்யா.

வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவோட பேத்திதான் திவ்யா. அப்போ வெளிநாட்ல டூயட் இருக்கும்னு நம்பலாம்!

பூமிகாவின் ஹனிமூன்! தெருவுக்கு தெரு ஹாட் சேல்...


சிம்ரன், மாளவிகா போன்றவர்கள் போராடி தோற்ற மண் இது! ஏதோ சுதந்திர போராட்டமளவுக்கு பில்டப் இருக்கே என்று ஃபீல் பண்ண வேண்டாம். அதைவிட பெரும் போராட்டம் இது. திருமணத்திற்கு பிறகு நடிக்க வந்தால், சீச்சி பழம் புளிக்கும் கதைதான். வேறு வழியில்லாமல் சொந்த ஊருக்கே மூட்டை கட்டி விட்டார் சிம்ரன். இவராவது பரவாயில்லை. மாளவிகாவுக்கு என்ட்ரி விசாவே கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பூமிகாவுக்கு மட்டும்தான் புதுப்புது படங்களாக கிடைக்கின்றன. அதுவும் ஹீரோயினாகவே! தமிழில் ஸ்ரீகாந்த்துடன் 'மா' படத்தில் நடிப்பதாக புக் ஆனார். படம் என்ன ஆனது என்று கேட்டால், கோடம்பாக்கத்தில் ஒரு இருமல் சத்தம் கூட இல்லை! ஆனால் வரும் என்கிறார்கள். மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். 'கல்யாணம் ஆன நடிகைகளை ஒதுக்குற பழக்கம் இங்கதான் இருக்கு. இந்தியிலோ, மலையாளத்திலோ இல்லை' என்கிற பூமிகா, 'மா' வ(ள)ராமல் போனாலும், தமிழில் வாய்ப்பு கிடைத்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறாராம்.

இதையெல்லாம் விடுங்க... கோடம்பாக்கத்தின் ஹாட் சேல் பூமிகாவோட பலான படம்தான் தெரியுமா? அவங்க ஹனிமூன்லே எடுத்ததுன்னு சொல்லி தெருவுக்கு தெரு ரிலீஸ் பண்ணுது ஒரு கோஷ்டி! பூமிகாவுக்கு தெரியுமா?

கைவிட மாட்டேன்! -ரசிகர்களுக்கு விஜய் டானிக்!


ஜுன் 22 விஜய் பிறந்த நாளின் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்! 'இந்த முறை கட்சி. விரைவில் ஆட்சி' என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்க, விஜய் தரப்போவது என்ன? பெரும் கேள்வியுடன் கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னைக்கே வந்துவிட்டார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள். 'தலைவா, கட்சி எப்போ?' என்று அவர்கள் கரகோஷமிட, 'அமைதி...அமைதி' என்றார் விஜய்.

'நேற்றைய தொண்டன், இன்றைய தலைவன். இன்றைய தொண்டன் நாளைய தலைவன். என்னை நம்பி வந்த உங்க யாரையும் கைவிட மாட்டேன். நான் வளரும்போது என்னோட சேர்ந்து நீங்களும் வளருவீங்க. முன்பெல்லாம் எம்ஜிஆர் மன்றத்திலே சேரப்போறேன்னு வீட்டிலே சொன்னா, தாராளமா சேருய்யான்னு சப்போர்ட் பண்ணுவாங்க தாய்மார்கள். அதே மாதிரி இப்போ போயி விஜய் மன்றத்திலே சேரப்போறேன்னு சொல்லி பாருங்க. தாராளமாக சம்மதிப்பாங்க உங்க வீட்டிலே' என்றார் விஜய்.

முதல் கட்டமாக ஜுன் 22 ந் தேதி வட சென்னை பள்ளிக்கூடம் சிலவற்றிற்கு 20 கம்ப்யூட்டரும், தென் சென்னை பள்ளிக்கூடம் சிலவற்றிற்கு 20 கம்ப்யூட்டரும் வாங்கி தரப் போகிறாராம். பிரியாணி பொட்டலத்திலிருந்து கம்ப்யூட்டருக்கு மாறியிருக்கிறார் விஜய். டெக்னாலஜி வளர, வளர உதவிகளும் அதற்கேற்ப மாறுது போலிருக்கு. வாழ்க!

சரி, கட்சிய பற்றி சொல்லலியே? அட, அதை அவருல்ல சொல்லணும்!

சிக்கு புக்கு... சிக்மகளூர்... சிட்டு ஸ்ரேயா!


நான் கடவுள் என்ற உலகத் தரமான படத்துக்குப்பின் வெளியான சர்வம் இப்படியாகும் என்று ஆர்யா கனவிலும் நினைத்திருக்க மாட்டார். இளையராஜா [^]வின் தயவுடன் யுவன் ஷங்கர் ராஜா கொஞ்சம் காப்பாற்றினார்.

இப்போது கவலையை மறக்க தன் 'ஜோடி' ஸ்ரேயாவுடன் சிக்மகளூரில் கேம்ப் போட்டிருக்கிறார் மனிதர். அய்யய்யோ... நீங்க தப்பா எடுத்துக்காதீங்... சிக்கு புக்கு என்ற படத்துக்காகத்தான் இந்த கேம்ப்.

மறைந்த ஜீவாவின் உதவியாளர் மணிகண்டன் இயக்கும் படம் இது.

மனதை வருடும் மென்மையான காதல் கதையாம் இந்தப் படம். சர்வத்தில் சாதாரணமாய் வந்து போனவர் இதில் மீண்டும் வித்தியாசமான கெட்டப்பாம்.

தோரணையில், தன் தோற்றம் குறித்து வந்த பரவலான விமர்சனங்களால் விசனம் கொண்ட ஸ்ரேயா இந்த்ப படத்துக்கென ஒரு சுற்று பெருக்க முடிவு செய்து, பிடித்த அயிட்டங்களையெல்லாம் 'நொறுக்கத்' தொடங்கியுள்ளாராம்.

கவர்ச்சி [^] போதாது என்று நினைத்தார்களோ என்னமோ, ப்ரீத்தா ராவ் என்ற இன்னொரு நாயகியையும் உரித்த கோழியாக்க முடிவு செய்துள்ளார்களாம்.

ஹரிஹரன் - லெஸ்லி லீவிஸ் இசையமைக்கின்றனர்.

இந்தப் படம் தவிர மதராஸ்பட்டணம் என்ற வரலாற்றுப் படத்திலும் வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளார் ஆர்யா என்பது கூடுதல் தகவல்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம்


அலிகார்: இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.

உ.பி. மாநிலம் அலிகாரில் உள்ள முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த கண்கவர் நிகழ்ச்சியில் ரஹ்மான் டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் பேசுகையில், ஹாலிவுட்டில் அடுத்து நான் பீட்டர் பில்லிங்ஸ்லேயின் காதல் காமெடிப் படமான கப்புள்ஸ் ரீட்ரீட் என்ற படத்திற்கு இசையமைக்கப் போகிறேன்.

இந்தப் படத்தில் எந்த இந்தியத் தொடர்பும் இல்லை. எனவே இதை எனது முதல், முழுமையான ஹாலிவுட் படம் என்று கூறலாம்.

முழுக்க முழுக்க ரஹ்மானின் இசையாக இப்படத்தின் இசை இருக்கும். எனவே இந்தப் படத்தின் மூலம் நான் அமெரிக்க திரைத் துறைக்குள் முதல் முறையாக, முழுமையாக பிரவேசிக்கிறேன் என்று கூடக் கூறலாம்.

இந்த ஆண்டு இப்படம் வெளியாகிறது. யுனிவர்சல் ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

ஆஸ்கர் விருது இந்தியத் திரைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு மிகத் தாமதமாகவே கிடைத்தது. இந்திய இசைத் துறை மிகவும் தாமதமாகவே மேற்கத்திய உலகால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார் ரஹ்மான்.

நிகழ்ச்சியில், பிரபல உருது அறிஞர் கோபி சந்த் நரங்குக்கும் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.

முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஜாகிர் உசேன், அப்துல் கலாம் ஆகியோருக்கும் அலிகார் பல்கலைக்கழகம் ஏற்கனவே கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தற்போது அந்த பெருமையாளர்கள் பட்டியலில் ரஹ்மானும் இணைந்துள்ளார்.

நவ்யாவின் நிபந்தனையுடன் படமான படுக்கை காட்சி!


பத்திரிகைகளுக்கு படம் தரக்கூடாது என்ற நிபந்தனையுடன் ரசிக்கும் சீமானே படத்தின் குளியல் காட்சி மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் நடித்தார் நவ்யா நாயர்.

ஸ்ரீகாந்த்- நவ்யா நாயர் ஜோடியாக நடிக்கும் படம் ரசிக்கும் சீமானே. இந்தப் படத்தை வித்யாதரன் என்பவர் இயக்குகிறார்.

படத்தின் கதைப்படி முரட்டு தாதாவான ஸ்ரீகாந்த் (?!) நவ்யாவின் அழகில் மயங்கி அவரை மிரட்டி அனுபவிக்க முயற்சிப்பார். கிட்டத்தட்ட கற்பழிப்புக்கு சமமான ஒரு படுக்கையறைக் காட்சி அப்போது இடம்பெறும்.

இதற்கு ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ள மறுத்தாராம் நவ்யா. ஆனால் இந்தக் காட்சி இல்லாவிட்டால் கதையே நகராது என இயக்குநர் அடம்பிடிக்க, 'பத்திரிகைகளுக்கு மட்டும் படத்தைக் கொடுத்துடாதீங்க' என்ற நிபந்தனையோடு நடித்துக் கொடுத்துள்ளார்.

இதே படத்தில் ஒரு குளியல் காட்சியும் இடம்பெறுகிறதாம். அதற்கும் முதலில் மறுத்தவர், பின்னர் அதே பழைய நிபந்தனையுடன் நடித்துக் கொடுத்தாராம்.

நவ்யா கிட்ட வேலை வாங்கத் தெரிஞ்ச இயக்குனர்!.

'பராசக்தி' பாடல்கள் ரீமிக்ஸ்!


57 ஆண்டுகளுக்கு முன் முதல்வர் கருணாநிதி படைத்த சமூக சீர்திருத்தப் படம் பராசக்தி. இந்தப் படத்தின் வசனங்கள் மட்டுமல்ல, பாடல்களும் சமூகப் புரட்சியை நிகழ்த்தின.

தமிழ்த் திரையுலகின் முக்கியமான மைல்கல் இந்தப் படம் என்றாலும் மிகையல்ல. கிட்டத்தட்ட 57 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் பாடல்களை மட்டும் ரீமிக்ஸ் செய்து, 'கலைஞர் போற்றுதும் கலைஞர் போற்றுதும்' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட இந்தப் பாடல்கள் வெளியிடப்பட்டன.

கருணாநிதியி 86-வது பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பராசக்தியில் அவர் எழுதிய பாடல்களை தனது குழுவை வைத்து மேடையில் நடன நிகழ்ச்சியை நடத்தினார் பிரபல நடன இயக்குநர் கலா.

இந்த நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் நடந்தது. இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சியைக் காண வந்த முதல்வர் கருணாநிதி தொடர்ந்து, பாடல்கள்- நடனங்களைப் பார்த்து ரசித்தார்.

பராசக்தி படத்தைத் தயாரித்த ஏவிஎம் நிறுவனத்தின் சரவணன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பின்னர் இந்தப் பாடல்கள் அடங்கிய சிடிக்களை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட அதை ஏவிஎம் சரவணன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் திண்டுக்கல் பழனி குழுவின் தப்பாட்டம் மற்றும் ஏகே பழனிவேலின் தவில் கச்சேரியும் நடத்தப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல்வர் இறுதிவரை அமர்ந்து ரசித்தார்.

அமைச்சர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, கேபிபி சாமி மற்றும் தமிழரசி ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Sunday, June 7, 2009

தேவாவுக்கு தேறுதல் சொன்ன பிரசன்னா

ஆதரவா பேசுறதுக்கே பயப்படுறாங்க நட்சத்திரங்கள். இப்படிதான், இளையராஜாவை கு‌ஷ‌ிப்படுத்தும்னு நினைத்து, எல்லா இயக்குனர்களும் ராஜாவோடு ஒரு படத்துலயாவது வொர்க் பண்ணணும்னு சொல்லி வச்சார் மிஷ்கின். அடுத்து பேச வந்த ராஜா, நீ எனக்கென்ன மீடியேட்டரா என்று திட்டியதன் அர்த்தம் புரியாமல் இன்னும் திணறிக் கொண்டிருக்கிறார் மிஷ்கின்.

இதேபோலொரு சம்பவம் இரண்டொருநாள் முன்பு நடந்தது.

ஒரு காலத்தில் வருடத்துக்கு இரண்டு, இரண்டரை டஜன் படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு கடந்த இரண்டு வருடங்களாக படங்களே இல்லை. இந்த நீண்ட இடைவெளியை முடிவுக்கு கொண்டு வந்தது சுரேஷ் கிருஷ்ணாவின் ஆறுமுகம். இந்தத் தகவலை பலரும் குறிப்பிட, உணர்ச்சிவசப்பட்டுப் போனார் பிரசன்னா.

இரண்டு வருடம் உங்களுக்கு படம் கிடைக்கலைன்னு சொல்லாதீங்க. இரண்டு வருடம் உங்களை தமிழ் சினிமா பயன்படுத்திக்கலை, அதுதான் உண்மை என்று அவர் பொங்க, விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு ஆச்சரியம். சாஃப்டான ஹீரோவிடம் இப்படியொரு ஹீட்டான பேச்சா?

நல்ல வேளையாக இளையராஜா மாதிரி சேம்சைடு கோல் எதுவும் அடிக்கவில்லை தேவா. தேனிசை தென்றலாயிற்றே!

உண்மையை ஒத்துக்கொண்ட மிஷ்கின்

நந்தலாலா படத்தை ஜப்பான் இயக்குனர் டானிஷ் கிட்டானோவின் கிக்கிஜிரோ பாதிப்பில் மிஷ்கின் எடுத்திருப்பதாக முன்பு குறிப்பிட்டிருந்தோம். இதனை மறுத்த மிஷ்கின், படம் வந்த பிறகு இதுபற்றி பேசுவோம் என அந்த உரையாடலை முடித்துக் கொண்டார்.

இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜப்பான் படம் ஒன்றின் பாதிப்பில் நந்தலாலாவை எடுத்திருப்பதாக ஒத்துக்கொண்டார் மிஷ்கின். படத்தில் தனது சொந்த வாழ்க்கையின் பாதிப்பும் இருப்பதாக அவர் கூறினார்.

கஜினி படம் கிறிஸ்டோபர் நோலனின் மெமண்டோ படத்தின் பாதிப்பில் எடுத்தது என்பதை முதலில் மறுத்த ஏ.ஆர். முருகதாஸ், புகைப்பட ஆதாரத்துடன் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்ட பின், மெமண்டோவிலிருந்து கஜினி சூர்யா கதாபாத்திரத்தை உருவாக்கியதை ஒத்துக்கொண்டார்.

தற்போது கே.எஸ். ரவிக்குமாரின் ஜக்குபாய் படம், ழான் ரெனேயின் வசாபியை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. கே.எஸ். ரவிக்குமார் உண்மையை என்போது ஒத்துக்கொள்வார் என்பது தெரியவில்லை.

உரிமைக்குரல்..விஜய்யின் 50வது படம்!

தனது 50-வது படத்துக்கு உரிமைக்குரல் என்று பெயர் சூட்டியுள்ளார் விஜய்.

ஸ்ரீதர் இயக்கத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்து வெள்ளி விழா கொண்டாடிய படத்தின் தலைப்பு இது.

இந்தப் படத்தை இயக்குபவர் எல்லோரும் எதிர்பார்த்தது போல ஜெயம் ராஜா அல்ல. அதிரடி கரம் மசாலா இயக்குநர் பேரரசு!

தனது மீனாட்சி ஆர்ட்ஸ் பேனரில் இந்தப் 50வது படத்தைத் தயாரிக்கப் போகிறவர் சங்கிலி முருகன். கதாநாயகி தமன்னா.

ஆரம்பத்தில் இந்தப் படத்தை எஸ்ஏ சந்திரசேகரன் தனது சூரியன் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்காக தயாரிப்பார் என்றுதான் அறிவிக்கப்பட்டது. ஆனால் காதலுக்கு மரியாதை ராசியை நினைவு கூர்