Saturday, July 18, 2009

குஷ்புவின் ஐந்தாம்படையில் சிம்ரன் பாடல் காட்சியில் கட்

குஷ்புவின் அவ்னி சினி கிரியேஷன்ஸ் தயாரித்து சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள ஐந்தாம்படை படத்தில் சிம்ரன் பங்கேற்ற பாடல் காட்சியில் சென்சார் போர்டு கத்திரி போட்டுள்ளது.

ஐந்து சகோதரர்கள் பற்றிய படம் இது. நாசர் மூத்த அண்ணனாக வருகிறார். சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ளார். விவேக்கும் ஒரு சகோதரராக வருகிறார்.

சுந்தர்.சிக்கு ஜோடியாக டெல்லியைச் சேர்ந்த அதிதி நடித்துள்ளார். சிம்ரன் முக்கிய வேடத்தில் வருகிறார்.

படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பினர். அப்போது சிம்ரன் இடம் பெற்று ஆடியிருந்த ஒரு பாடல் காட்சியில், உடன் நடிப்பவர்களின் தொப்புள்கள் படு குளோசப்பில் காட்டப்பட்டிருந்தன.

இது உள்பட 3 இடங்களில் வெட்ட பரிந்துரை செய்தனர். ஆனால் இயக்குநர் பத்ரி அதற்கு ஆட்சேபித்தார். இருப்பினும் உறுப்பினர்களில் ஒருவரான முக்தா சீனிவாசன் இதை வெட்டினால் படம் தரமானதாக மாறி விடும் என்று கூறியதைத் தொடர்ந்து காட்சிகளை வெட்ட பத்ரி சம்மதித்தார்.

இதையடுத்து படத்துக்கு யு சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து படம் திரைக்கு வருகிறது.

'கிக்' தர வரும் ஹன்சிகா!


இந்தியிலிருந்து, தெலுங்குக்கு நடிக்க வந்த ஹன்சிகா மோத்வானி அடுத்ததாக தமிழுக்கும் வருகிறார்.

பாலிவுட்டிலிருந்து டோலிவுட்டிற்கு இடம் பெயர்ந்த நாயகி ஹன்சிகா. குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து இப்போது நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஹூண்டாய் சான்ட்ரோ விளம்பரத்தில் தோன்றி நடித்துள்ள ஹன்சிகா, தெலுங்கில், தேசமுத்ரு, காந்த்ரி, மஸ்கா, பில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கன்னடத்திலும் புனீத் ராஜ்குமாருடன் பிந்தாஸ் என்ற படத்தில் நடித்தார். இந்தியில், ஹிமேஷ் ரேஷ்மயாவின் ஆப் கா சுரூர் படத்தில் அவருடன் ஜோடி போட்டு நடித்தார். கோவிந்தாவுடன் மனி ஹே தோ மனி ஹை என்ற படத்தில் தலை காட்டினார்.

தற்போது கிக் மூலம் தமிழுக்கும் வருகிறார் ஹன்சிகா. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கிக், இப்போது ஜெயம் ராஜா [^] இயக்க, ஜெயம் ரவி நடிக்க தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கவுள்ளார். முன்பே தமிழில் ஹன்சிகாவுக்கு சில வாய்ப்புகள் வந்தபோது அவர் மறுதலித்து வந்தார்.

இந்த நிலையில் கிக் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அவர் தட்டாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் மூலம் தமிழில் லேன்ட் ஆகி விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் ஹன்சிகா.

'கிக்' ஹன்சிகாவுக்கு 'கிளிக்' ஆனா சரி..

மடோனா நிகழ்ச்சிக்காக போடப்பட்ட மேடை சரிந்து ஒருவர் பலி


மார்ஷெல் (பிரான்ஸ்): பிரான்ஸில் இங்கிலாந்து பாப் பாடகி மடோனா பங்கேற்கவிருந்த நிகழ்ச்சியின் மேடை சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.

தெற்கு பிரான்ஸில் உள்ள மார்ஷெல் நகரில் உள்ள வெலட்ரோம் ஸ்டேடியத்தில் மடோனாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக அந்த ஸ்டேடியத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வியாழக்கிழமையன்று அந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர்.

தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து இறந்தவரின் உடலையும், காயமடைந்தவர்களையும் மீட்டனர்.

ஸ்டிக்கி அன்ட் ஸ்வீட் என்ற பெயரில் மடோனா தற்போது பிரான்ஸில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மார்ஷெல் நகரில் ஞாயிற்றுக்கிழமை அவர் கச்சேரி செய்யவிருந்தார்.

தற்போது இந்த விபத்தைத் தொடர்நது மடோனாவின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மடோனா நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையின் மேல் பகுதி சரிந்து விழுந்ததால் அதன் மேல் அமர்ந்திருந்தவர்கள் கீழே விழுந்து இடிபாடுகளில் சிக்கி இந்த அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டது.

படுகாயமடைந்தவர்களில் ஒருவர் அமெரிக்கர், இன்னொருவர் இங்கிலாந்து [^]க்காரர் ஆவார். கொல்லப்பட்ட நபர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.

வக்கீல்களை கிண்லடித்த சிவகாசி படம்- மன்னிப்பு கேட்கிறார் விஜய்

சென்னை: சிவகாசி படத்தில் வக்கீல்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதற்காக நடிகர் விஜய், இயக்குநர் பேரரசு மற்றும் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டால் ஏற்றுக் கொள்வோம் என வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பிரச்சினையை முடிக்க, விஜய் மற்றும் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்கும் சூழல் உருவாகியுள்ளது.

பட அதிபர் ஏ.எம்.ரத்னம் தயாரித்த படம் சிவகாசி. பேரரசு இயக்கிய இந்த படத்தில் நடிகர் விஜய், காமெடி நடிகர் பாஸ்கர், நடிகை அசின் ஆகியோர் நடித்தனர்.

2005-ம் ஆண்டு தீபாவளிக்கு ந்த படம் வெளிவந்தது.

படத்தில் வக்கீல் வேடத்தில் எம்எஸ் பாஸ்கர் நடித்திருந்தார். அவர் வருகிற காட்சிகள் வக்கீல்களின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் இருப்பதாக தமிழ்நாட்டில் உள்ள 13 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் வக்கீல்கள் வழக்கு தொடர்ந்தனர்.

வக்கீல்களை தாக்கும் வகையில் படம் எடுக்கப்படவில்லை என்றும் ஆகவே 13 கோர்ட்டுகளில் உள்ள வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று பட அதிபர் ரத்னம், நடிகர் விஜய், இயக்குனர் பேரரசு ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

விஜய் மன்னிப்பு கேட்டால் ஏற்றுக் கொள்வீர்களா?

இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விஜய் தரப்பில் வக்கீல் பீமனும், வக்கீல்கள் சார்பில் தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரனும் ஆஜர் ஆகி வாதாடினார்கள்.

சிவகாசி படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கவில்லை. அதிலுள்ள கருத்துக்கள் அவதூறு என்ற பிரிவில் வராது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே இதுபோன்ற வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது, என்று விஜய்யின் வக்கீல் பீமன் வாதாடினார்.

ஆனால் பிரபாகரன் இதை மறுத்தார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ஆகியோர் நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்படவில்லை. வர்த்தகத்துக்காக மலிவான காமெடிக்கு வக்கீல்களை இழுத்துள்ளனர்.

ஆகவே இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 499, 500 பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளை ஐகோர்ட்டு ரத்து செய்யக்கூடாது. ஏற்கனவே ஒரு புகைப்படத்தை விமர்சனம் செய்ததற்கே அவதூறு என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு கூறியுள்ளது, என்றார் அவர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒரு வேளை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? என்று பிரபாகரனிடம் கேட்டார்.

"பட அதிபர் ரத்னம், இயக்குனர் பேரரசு, நடிகர் விஜய் ஆகிய மூன்று பேரும் கோர்ட்டுக்கு வந்து எழுத்து மூலமாக மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்தால் அதை இக்கோர்ட்டு பரிசீலித்து எந்த உத்தரவை பிறப்பித்தாலும் அதை ஏற்க தயாராக இருக்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு கோர்ட்டு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்...", என்று பதிலளித்தார் பிரபாகரன்.

பின்னர் வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதற்கிடையில், விஜய்யை எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடித்து வைக்குமாறு ஏஎம் ரத்னம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நீதிபதியே இந்த யோசனையைத் தெரிவித்திருப்பதால், விஜய் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே அடுத்த விசாரணையின்போது விஜய் மன்னிப்புக் கேட்பார் எனத் தெரிகிறது.

நடிகை அசின் பெறும் 150வது விருது!

நடிக்க வந்ததிலிருந்து விருதாக வாங்கிக் குவித்து வருகிறார் நடிகை அசின். இந்த ஆண்டு அவர் பெறவிருக்கும் கலைமாமணி, அவருக்கு 150 விருதாகும்.

கலைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருது பெறுவோர் பட்டியலில் நடிகை அசின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உயர்ந்து விருது கலைமாமணி. முன்பெல்லாம் ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்து வந்த இந்த விருது, இப்போது ஆண்டுக்கு 100 பேருக்காவது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு 70 பேருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் காரணமாக விருது வழங்கும் விழா தள்ளி வைக்கப்பட்டது. விருதுப்பட்டியலில் நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளி்ட்டோர் இடம் பெற்றுள்ளனர். நடிகை அசினும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

அசின் நடிக்க வந்து 5 ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால் இந்த குறுகிய காலத்துக்குள் தனது நடிப்புத் திறமைக்காக அவர் பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 149. இந்த கலைமாமணி விருதினையும் சேர்த்தால் 150 விருதுகள் ஆகிவிட்டன.

விரைவில் கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கும் விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விருதினை அசின் உள்பட 70 கலைஞர்களுக்கு வழங்குகிறார்.

ஸ்னேகாவுடன் காதலா..?-பிரசன்னா


நடிகை ஸ்னேகாவுடன் நெருக்கமான பழக்கம் இருப்பது உண்மைதான் என்றும், அது காதல் இல்லை என்றும் பிரசன்னா கூறினார்.

ஸ்னேகாவும், பிரசன்னாவும் முதன்முதலாக, 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இன்றுதான் படம் ரிலீஸாகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அமெரிக்காவிலேயே நடந்தது. படப்பிடிப்பின் போது ஸ்னேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் எங்கும் சேர்ந்தே செல்வதாகவும் கூறப்பட்டது.

படத்திலும் இருவருக்கும் முத்தக்காட்சிகள் உள்பட மிக நெருக்கமான காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. வெகு இயல்பாக அந்தக் காட்சிகளில் தோன்றியிருந்தனர் இருவரும். கெமிஸ்ட்ரி எக்கச்சக்கமாக ஒர்க் அவுட் ஆகிவிட்டதென கோலிவுட் முழுக்க கிசுகிசுக்கப்பட்டது.

நேற்று பத்திரிகையாளர்களைச் சந்திக்க வந்திருந்த பிரசன்னாவிடமே இதுகுறித்து கேட்டுவிட்டனர் நிருபர்கள்.

அதற்கு பிரசன்னா அளித்த பதில்:

காதல் காட்சி இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நானும், ஸ்னேகாவும் நெருக்கமாகப் பழகினோம். இயக்குநர் எப்படி நடிக்கச் சொன்னாரோ, அதைத்தான் இரண்டு பேரும் செய்தோம். சேர்ந்தே ஷாப்பிங் போனோம். பெரும்பாலும் இருவரும் ஒன்றாக இருந்தோம். நல்ல இணக்கமான புரிதல் வேண்டும் என்பதால் அப்படி பழகினோம். முத்தம் கொடுத்தது கூட இந்த மாதிரி ஒரு சூழலில்தான். ஆனால் அது காதல் இல்லை.

அந்த படத்தில் ஸ்னேகா இல்லாமல், வேறு ஒரு கதாநாயகி நடித்திருந்தாலும் இந்த நெருக்கம் இருந்திருக்கும்.

நானும், ஸ்னேகாவும் நல்ல நண்பர்கள். இந்த விஷயத்தை அவர் எப்படி எடுத்துக் கொள்ளப்போகிறார்? என்று தெரியவில்லை. இதுபற்றி அவரிடம் நான் எப்படி பேசப் போகிறேனோ என்றும் தெரியவில்லை.

எங்கள் நட்பில் விரிசல் வரக்கூடாது என்று நினைக்கிறேன். ஸ்னேகாவுக்கும், எனக்குமான நட்பு தொடர வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன், என்றார்.

ஸ்னேகாவும் கிட்டத்தட்ட இதே பதிலைத்தான் சொல்லியிருந்தார்.

ஒத்திகை இன்னும் தொடர்கிறது போல!

'ஸ்ரீதேவி இருக்காக.. தபு இருக்காக...'


ஆசின் படு குஷியாக இருக்கிறார். கை நிறைய வாய்ப்புகள் வருவதால் மட்டுமல்ல, தனது அண்டை அயலார் குறித்தும்தானாம்.

தென்னகத்திலிருந்து இந்திக்குப் போய் வெற்றிக் கொடி நாட்டிய கனவுக் கன்னிகளான ஸ்ரீதேவி, ஹேமமாலினிக்குப் பிறகு இப்போது அந்த இடத்தை கிட்டத்தட்ட ஆசின் பிடித்து விட்டார் என்ருதான் சொல்ல வேண்டும்.

ஆசினுக்காக அங்குள்ள ஹீரோக்கள் அலை மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் குஷியாக இருக்கும் ஆசின், லோகன்ட்வாலா பகுதியில் உள்ள சொந்த வீட்டில் தங்கி இந்தியில் நிலையான இடத்தை நோக்கி மெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தனது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் குறித்து ரொம்பப் பெருமையாக பேசுகிறார் ஆசின். முன்னாள் கனவுக் கன்னியான ஸ்ரீதேவிதான், ஆசினுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கிறாராம்.

இது குறித்து ஆசின் கூறுகையில், எனக்குப் பக்கத்து வீட்டில்தான் ஸ்ரீதேவி இருக்கிறார். எதில் பிளாட்டில் இருக்கிறார் தபு.

ஸ்ரீதேவியின் பொண்ணு குஷி எனக்கு ரொம்ப பிரண்ட் ஆகி விட்டாள். எப்பப் பார்த்தாலும் ஓடி வந்து ஒட்டிக் கொள்கிறாள். என்னுடன் செல்லமாகி விட்டாள்.

தபுவை இன்னும் நான் பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும்போது பார்ப்பேன் என்கிறார் ஆசின்.

சரி பாலிவுட்டில் நிறைய தோழிகள் கிடைத்து விட்டனரா என்று கேட்டால், அப்படியெல்லாம் சொல்ல முடியாது. அதேசமயம், எனக்கு யாரும் எதிரிகளும் இல்லை. சோனம் கபூர் என்னுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இப்போதைக்கு அவர்தான் குளோஸ் பிரண்ட் என்கிறார் ஆசின்.

மற்றவர்கள் எல்லாம் எப்போது ஆசின் மார்க்கெட் குளோஸ் ஆகப் போகிறதோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ, என்னவோ...

Thursday, July 16, 2009

விளையா‌ட்டு ‌விப‌ரீதமானது

பல இட‌ங்க‌ளி‌ல் சாகச‌ங்க‌ள் பு‌ரியு‌ம் போது ஏதாவது ‌‌விப‌ரீதமா‌கி ‌விப‌த்து ஏ‌ற்படுவது‌ண்டு. அது சகஜ‌ம்தா‌ன்.

ஆனா‌ல் ‌சில இட‌ங்க‌ளி‌ல் ‌விளையா‌ட்டே ‌வினையா‌கி ‌விடுவது‌ம் உ‌ண்டு. அ‌த‌ற்கு ஒரு உதாரண‌ம்தா‌ன் நா‌ம் கூற‌ப்போகு‌ம் இ‌ந்த கதை.

இது கதை அ‌ல்ல ‌‌நிஜ‌ம்.

பொதுவாக இ‌த்தா‌லி நா‌ட்டி‌ல் ஒரு பழ‌க்க‌ம் உ‌ண்டு. அதாவது, இ‌த்தா‌லி நா‌‌ட்டி‌ல் நட‌க்கு‌ம் ‌ திருமண‌த்‌தி‌ன் போது மணமக‌ள் வை‌த்‌திரு‌க்கு‌ம் பூ‌ங்கொ‌த்தை, திருமண‌ம் முடி‌ந்தது‌ம் தூ‌க்‌கி ‌‌ வீசுவா‌ர்க‌ள். அதனை யா‌ர் ‌பிடி‌க்‌கிறா‌ர்களோ அ‌ல்லது அது யா‌‌ர் ப‌க்க‌ம் போ‌ய் ‌ விழு‌கிறதோ அவ‌ர்களு‌க்கு ‌விரை‌வி‌ல் ‌திருமணமாகு‌ம் எ‌ன்பது ஒரு ந‌ம்‌பி‌க்கை.

எனவே, ஒ‌வ்வொரு ‌திருமண‌த்‌தி‌ன் போது‌ம் பூ‌ங்கொ‌த்து தூ‌க்‌கி எ‌றிய‌ப்படு‌ம். அதனை‌ப் ‌ பிடி‌க்க, க‌ல்யாண‌ம் ஆகாத பெ‌ண்க‌ள் ம‌ற்று‌ம் ஆ‌ண்களு‌க்கு இடையே பெரு‌ம் மோத‌ல் ஏ‌ற்படு‌ம். இறு‌தியாக பலரு‌ம் அதனை ‌பி‌‌ய்‌த்து வை‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள்.

இ‌தி‌ல் ஒரு பு‌துமைய‌ை‌ப் புகு‌த்த ‌விரு‌ம்‌பியது ஒரு ‌திருமண த‌ம்ப‌தி‌யின‌ர்.

அதாவது, இத்தாலி நாட்டில் டஸ்கன் நகரில் ஒரு திருமணம் நடந்தது. பூ‌ங்கொ‌த்து ‌ வீசு‌ம் சம்பிரதாயத்தில் புதுமை புகுத்த விரும்பிய புதுமணமக்கள், பூங்கொத்தை வீசும் நிகழ்ச்சிக்கு ஒரு விமானத்தை வாடகைக்கு எடு‌த்தா‌ர்‌க‌ள்.

மணமக்களின் உறவினர் ஒருவரை விமானத்தில் அனுப்பி அதில் இருந்தபடி பூங்கொத்தை வெளியில் எறியச் செய்தனர். அ‌ப்போதுதா‌ன் வ‌ந்தது ‌விப‌ரீத‌ம். பூங்கொத்தை அவர் எறிந்தபோது, சில பூக்கள் விமானத்தின் என்ஜினில் சிக்கிக்கொண்டன. இதனால் விமானம் ஓ‌ட்டுந‌ரி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டை இழ‌ந்து தாறுமாறாக ஓடி, ஒரு இளைஞர் விடுதி மீது விழுந்தது.

இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல் விமானத்தில் பயணம் செய்த 2 பேர் காயம் அடைந்தனர். விமானிக்கும் லேசான காயம் ஏற்பட்டது.கீழே ‌விழு‌ந்த‌தி‌ல் விமான‌ம் பெருமளவு சேதமடை‌ந்தது.

ச‌ந்தோஷமாக முடிய வே‌ண்டிய ‌‌திருமண‌ம்,விளையா‌ட்டா‌ல் ‌விப‌ரீதமானது.

தோற்றத்தை மாற்றும் சூர்யா


படத்துக்குப் படம் தோற்றத்தை மாற்றுவதில் சூர்யா இன்னொரு கமல். வாரணம் ஆயிரம் படத்தில் பதினாறு வயது இளைஞனாக தெ‌ரிவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சியை அவரது தந்தை சிவகுமார் விவ‌ரித்ததை கேட்ட பலருக்கும் நெஞ்சு பதறிப் போனது.

அதே படத்தில் சிக்ஸ்பேக்கில் சட்டை இன்றி தோன்றியபோது, இது சாத்தியமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது.

தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ஆதவன் படத்தில் அதே சிக்ஸ்பேக்கில் நடிக்கும் சூர்யா, அடுத்து நடிக்கும் சிங்கத்துக்காக தனது தோற்றத்தை மாற்ற உள்ளார்.

ஹ‌ரி இயக்கும் சிங்கத்தில் சூர்யாவுக்கு போலீஸ் அதிகா‌ரி வேடம். காக்க காக்க படத்துக்குப் பிறகு காக்கி அணிந்து நடிக்கிறார். இந்தப் படத்துக்காக தனது உடல் எடையை அதிக‌ரிக்க இருக்கிறாராம் சூர்யா. போலீஸ் அதிகா‌ரி வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தவே இந்த மாற்றம். ஹ‌ரியின் சாமி படத்தில் நடித்தபோது விக்ரமும் உடல் எடையை அதிக‌ரித்தது நினைவிருக்கலாம்.

சிங்கத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் படம் தயாராகிறது. அடுத்த வருடம் பிப்ரவ‌ரியில் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

ஒரு நீச்சல் உடையும், இரண்டு நடிகைகளும்!


நீச்சல் உடையில் நடிக்கிறீங்களே என்று கேட்கிறாங்க. குளிக்கும் போது நீச்சல் டிரஸ் போடாம புடவையா கட்டிக்க முடியும்? இன்னும் நாலு முக்கு முங்கி எழுந்தாலும் கோவம் தீரப்போவதில்லை என்பது மாதிரியே பேசி வந்த ப்ரியாமணி இனியும் இதுபோன்ற கேள்விகள் வந்தால் கவலைப்படாமல் விளாசலாம். தன்னை நோக்கி வந்த கேள்விகளுக்கும் இதே பதிலைதான் சொல்லியிருக்கிறார் ஸ்ருதி கமல்ஹாசன்.

இந்தியில் இவர் நடித்து வரும் லக் படத்தில் ஒரு காட்சியில் நீச்சல் உடையில் வருகிறார் ஸ்ருதி. இது தொடர்பாக மீடியாக்களிடம் பேசிய ஸ்ருதி, நீச்சல் டிரஸ்லே நடிக்கிறீங்களேன்னு கேட்கிறாங்க. குளிக்கும் போது இந்த டிரஸ்தானே எல்லாரும் போடுவாங்க? என்று எதிர்கேள்வி கேட்க, முகத்தில் தண்ணீரை பீய்ச்சியடிக்கிற பதிலா இருக்கே என்று அசந்து போவுது மீடியா.

அப்பாவுக்கு பொண்ணு தப்பாம பொறந்திருக்கு. அவரும் இப்படிதான் சுற்றி வளைச்சு பேசினாலும், சொல்ல வந்ததை பளிச்சுன்னு சொல்லிடுவார் என்கிறது பிரஸ் வட்டாரம். பொண்ணு சொல்லியிருக்கும் இன்னொரு பதில், அப்பா கமல் ஹாசனையே அசத்துற பதில். திறமையும் கடவுள் நம்பிக்கையும் இருந்தா எதை வேணும்னாலும் சாதிக்கலாம்.

அப்பா நாத்திகராச்சே என்றால், அது அவரது கொள்கை. ஆனால் என்னோட சுதந்திரத்தில் அவர் எப்பவுமே தலையிட்டது இல்லை. இந்த விஷயத்திலேயும் தலையிட மாட்டார். இவ்வளவு தெளிவா பேசுற பொண்ணு அப்படியே தமிழ்லேயும் நடிக்கலாமே...

53 காஸ்ட்யூம், 53 இடங்களில் ஷ§ட்டிங்...! -விழியில் விழுந்த படம்

இனிமே, அவங்கவங்க முகத்திற்கு அவங்கவங்களே பிளீச்சிங் பண்ணிக்க வேண்டியதுதான் போலிருக்கிறது. எங்கெங்கோ போய் சினிமா வாய்ப்பு தேடுவதற்கு பதிலாக தானே படத்தை தயாரித்து நடித்துவிட்டால்? நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பும் ஆச்சு. வரவும் ஆச்சு. இப்படி வந்திருக்கும் ஒரு இனிய முகம்தான் அஜாஸ். அமெரிக்காவில் சாப்ஃட்வேர் என்ஜினியராக இருக்கிறாராம். நண்பர்களுடன் சேர்ந்து விழியில் விழுந்தவள் என்ற படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியருப்பதோடு ஹீரோவாக நடித்தும் இருக்கிறார் அஜாஸ்.

ஒவ்வொரு பிரேமையும் சிஜி வொர்க் பண்ணியிருக்கோம். நாங்களே சாப்ட்வேர் ஆளுங்களால இருக்கறதாலே இந்த பர்பெக்ஷன் முக்கியம்னு நினைக்கிறோம்னு பேச ஆரம்பிக்கிறார். தன்னுடன் நடிக்கப் போகும் இரண்டு நாயகிகளையும் நேரடியாக கேரளாவுக்கு போய் தேடி பிடித்து கொண்டு வந்திருக்கிறார். ஆச்சர்யம் என்னவென்றால், இவங்களும் ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்ட்டுகள்தானாம்.

படத்திலே சொல்லும் படி என்ன இருக்கு? படமே அப்படிதான் இருக்கு என்றவர் (தன்னம்பிக்கை?) ஒரு பாடல் காட்சி பற்றி குறிப்பிட்டார். இந்த பாடல் காட்சியில் நான் 53 காஸ்ட்யூம்லே வர்றேன். அது மட்டுமல்ல, அந்த 53 காஸ்ட்யூமுக்கும் 53 இடங்களில் ஷ§ட்டிங் பண்ணியிருக்கோம் என்றார். காசை தண்ணியா செலவு பண்ணுவாங்க. ஆனால் இவங்க காஸ்ட்யூமா செலவு பண்ணியிருக்காங்க போலிருக்கு.

பட விஷயத்தில் அவசரம் இல்லை -'நாடோடிகள்' அனன்யா பேட்டி


பாசிட்டிவ். இதுதான் 'நாடோடிகள்' அனன்யாவின் முதல் படம். ஆரம்பமே அசத்தலான சென்ட்டிமென்ட். தொடர்ந்து வந்த இரண்டாவது படமான நாடோடிகள் அந்த சென்ட்டிமென்ட்டில் மேலும் கொஞ்சம் டானிக்கை ஊற்ற, இன்றைய தேதியில் அனன்யா செல்லுமிடமெல்லாம் சிறப்பு. தமிழிலும் மலையாளத்திலும் நிறைய அழைப்புகள். ஆனாலும் சற்று நிதானமாகவே படங்களை ஒப்புக் கொள்கிறாராம். ஏன்?

எல்லா படங்களையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட மாட்டேன். ஒரு படத்தில் நடித்தாலும் அது நாலு பேர் பாராட்டுகிற படமாக இருக்க வேண்டும். நான் மலையாளத்தில் நடித்த பாசிட்டிவ் படத்தை அடுத்து ஒன்றரை வருஷம் கழித்துதான் நாடோடிகள் படத்தை ஒப்புக் கொண்டேன். இப்போது தெலுங்கில் '23 டி' என்ற படத்திலும், மலையாளத்தில் கே.மது டைரக்ஷனில் 'ரகசிய போலீஸ்' படத்திலும் நடிக்கிறேன். இதில் நான்கு ஹீரோயின்களில் நானும் ஒருத்தி. அதற்காக எனக்கு வருத்தம் இல்லை. ஏனென்றால் நான் ஒரு சீனில் மட்டுமே வந்தாலும், எனது பெயர் சொல்லுகிற மாதிரி அந்த கேரக்டர் இருக்கும். ஒரு வேடிக்கையான ஒற்றுமை என்னவென்றால் நான் நடித்து வரும் இரண்டு படங்களுமே இன்வெஸ்ட்டிகேட்டிங்கை அடிப்படையாக கொண்ட கதை.

ஹிட் ஆகிற கதையை மட்டுமே தேர்வு செய்கிற அளவுக்கு நீங்கள் பழுத்த அனுபவசாலியா என்ன?

அப்படி சொல்ல முடியாது. ஆனாலும், என்னுடைய அப்பா பி.என்.கோபால கிருஷ்ணன் நாயர், அம்மா பிரசிதா நாயர், தம்பி அர்ஜுன் எல்லாம் உட்கார்ந்துதான் கதை கேட்போம். அவங்க எல்லாருக்கும் பிடித்திருக்கிற மாதிரி கதையா இருந்தால் ஓ.கே சொல்லிவிடுவேன்.

கொஞ்சம் குண்டாக இருந்தால் தமிழ் பட ரசிகர்களுக்கு பிடிக்கும். படத்தில் நொறுக்குத்தீனி தின்று தின்று இன்னும் குண்டாகி விட்டீர்கள் போலிருக்கிறதே?

ஷ§ட்டிங்கின்போது நிறைய சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாகினேன் என்பது உண்மைதான். ஆனால், அடிப்படையில் எனக்கு அப்படி தின்கிற பழக்கம் இல்லை. கொஞ்சம் டயட்டில் இருந்து உடம்பை குறைக்கலாமா என்றுகூட யோசிக்கிறேன்.

நாடோடிகள் படத்தில் உங்களுக்கு ஜோடியாக நடித்த சசிகுமாரை இப்பவும் மாமா என்றுதான் அழைப்பதாக சொல்கிறார்களே, நிஜமா?

ஐயய்யோ... இப்படியெல்லாம் கூட கதை கட்டி விடுகிறார்களா என்ன? நான் யாரை பார்த்தாலும் சேட்டா என்றுதான் அழைப்பேன். மலையாளத்தில் அண்ணா என்று அர்த்தம். சசிகுமாரையும் சேட்டா என்றுதான் அழைக்கிறேன்.

பெரிய ஹிட் வரும்போது அதை பயன்படுத்தி நான்கைந்து படங்களை ஒப்புக் கொள்வதுதான் பொதுவான இயல்பு. இன்னும் ஒரு தமிழ் படம் கூட ஒப்புக் கொள்ளவில்லை என்கிறீர்களே, தமிழ்நாடு வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டீர்களா?

சத்தியமாக இல்லை. எனக்கு அங்கு மக்கள் கொடுத்திருக்கிற வரவேற்பை நிறைய கேள்விப்படுகிறேன். தமிழ்நாட்டிலிருக்கிற என்னுடைய தோழிகள் போன் செய்து சொல்கிறார்கள். ஆனால், நல்ல கதையாக அமைய வேண்டும் என்று காத்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் அறிவிப்பு வரும் பாருங்கள். நாடோடிகள் படம் கேரளாவில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. எப்போது வரும் வரும் என்று இங்குள்ள என் தோழிகள் ஆவலோடு கேட்கிறார்கள். படம் இங்கு வந்தால் நான் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது போலிருக்கிறது. நானும் அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன் என்ற அனன்யா சீரியஸ்சாக கல்லு£ரி பக்கமும் போய் வருகிறார்.

ஏனென்றால் இப்போது இவர் படித்து வருவது கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ். அதுவும் கடைசி வருஷம்!

கந்தசாமி குழந்தைகளுக்கான படம்! -விக்ரம்


விக்ரமின் அடுத்தடுத்த படங்களின் லிஸ்ட் ரொம்ப தெளிவாக இருக்கிறது. "முன்ன மாதிரி இல்லே. ஒரு படத்தை முடிச்சிட்டு அடுத்த படத்துக்கு வெயிட் பண்ணி கதை கேட்டு நடிக்கிற வழக்கத்தை இப்போ மாத்திட்டேன். வரிசையா டைரக்டர்களை முடிவு பண்ணி வச்சிருக்கேன்" என்கிறார் விக்ரம். கந்தசாமி போன்ற மெகா பட்ஜெட் படங்களில் நடிச்சிட்டு, மீண்டும் சின்ன பட்ஜெட்டுக்கு வருவது சிரமமாச்சே? என்றால், அதையும் தெளிவாக அணுகுகிறார் விக்ரம்.

என்னுடைய மார்க்கெட் இப்போ தமிழில் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுவதும் பரவியிருக்கு. கந்தசாமியின் தெலுங்கு உரிமையும், மலையாள உரிமையும் பல மடங்கு உயர்ந்திருக்கு. ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியிருப்பதால், பட்ஜெட்டை பற்றி கவலைப்பட வேணாம்னு நினைக்கிறேன். ஆனால் எதுவாக இருந்தாலும் கதைதான் ஒரு படத்தின் பட்ஜெட்டை தீர்மானிக்குது என்றார்.

விக்ரம் சொல்லும் இன்னொரு தகவல் ரொம்ப புதுசு. இதுவரைக்கும் நாம் கந்தசாமியை ஒரு காஸ்ட்லியான ஆக்ஷன் பிலிம் என்றுதானே நினைத்தோம்? இது குழந்தைகள் விரும்புகிற படம் என்கிறார் விக்ரம். சுசி கணேசன் என்னிடம் சொன்ன எட்டு கதைகளில் இருந்து இந்த கதையை தேர்ந்தெடுத்தேன். என் கேரியர்ல முதன்முதலா இது குழந்தைகளுக்கான படமாக இருக்கும் என்றார்.

'பசங்க' படம் வந்ததில் இருந்தே குழந்தைகளை குறிவைச்சு அடிக்கிறாங்கப்பா...

வடிவேலு மீது விஜயகாந்த் மேனேஜர் தொடர்ந்த வழக்கு - ஒத்திவைப்பு


சென்னை: நடிகர் வடிவேலு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மேனேஜர் சதீஷ் குமார் தொடர்ந்த வழக்கு திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விஜயகாந்த் ரசிகர்களுக்கும், வடிவேலுவுக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு மோதல் மூண்டது. இது தொடர்பாக வடிவேலு தரப்பு மீது போலீஸில் விஜயகாந்த்தின் மேனேஜர் சதீஷ் குமார் புகார் கொடுத்தார்.

ஆனால் இது தொடர்பாக போலீஸார் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். விருகம்பாக்கம் போலீஸார், வடிவேலு மீது தான் கொடுத்த புகாரைப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு வடிவேலு உள்ளிட்ட 14 பேருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வடிவேலு ஆஜராகவில்லை. இதையடுத்து திங்கள்கிழமைக்கு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.

அடுத்து, மதுரை புறநகர்!

மாயாண்டி குடும்பத்தார் என்ற பிரமாதமான உணர்ச்சிப் பெருக்குடன் கூடிய படத்தைக் கொடுத்த ராசு மதுரவன் அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார். பெயர் - மதுரை புறநகர்.

நடிகர்களை இயக்குவிக்கும் இயக்குநர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு மதுரவன் இயக்கிய படம் மாயாண்டி குடும்பத்தார்.

உணர்ச்சிமயமான கதையுடன் கூடிய இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பெண்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.

இப்படத்தை இயக்கிய ராசு மதுரவன், மாயாண்டி வெற்றிப் படமானதால், தனது குடும்பத்தாருடன் மதுரைக்குச் சென்று அங்குள்ள பாண்டி கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டார்.

இதைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார். இதுவும் மதுரைக் கதைக்களம்தான். பெயர் மதுரை புறநகர்.

இப்படத்தின் ஹீரோ அர்ஜூன். நாயகி உள்ளிட்டோரின் தேர்வு நடந்து கொண்டிருக்கிறதாம். ஸ்கிரிப்ட் இறுதியானவுடன் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுளளனராம்.

இந்தப் படத்தை முடித்த பின்னர் தயாரிப்பில் குதிக்கிறார் ராசு மதுரன். புதிய கம்பெனி ஒன்றைத் தொடங்கி வருடத்திற்கு 2 படங்களை எடுக்கப் போகிறாராம்.

டெனிஸின் 'டாப்லெஸ்' பரேட்!

ஹாலிவுட் ஹாட் ஸ்டார்களில் ஒருவரான முன்னாள் பான்ட் கேர்ள், டெனிஸ் ரிச்சர்ட்ஸ், ஒரு ரியாலிட்டி ஷோவில் டாப்லெஸ்ஸாக காட்சி அளித்து கேமராக்காரர்களை சுறுசுறுப்பாக்கி விட்டார்.

முன்னாள் ஜேம்ஸ் பான்ட் பட நாயகி டெனிஸ். சமீபத்தில் இந்தியில் வெளியான கம்பக்த் இஷ்க் படத்தில் அக்ஷ்ய குமாருடன் நடித்திருந்தார். சூடான முத்தமும் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஈ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டெனிஸ் ரிச்சர்ட்ஸ் - இட்ஸ் காம்பிளிகேட்டட் என்ற ரியாலிட்டி ஷோவின் போது டாப்லெஸ்ஸாக மாறி பரபரப்பை ஏற்படுத்தினார் டெனிஸ்.

பீச் ஒன்றில் இதுதொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது பிரா, பேன்டீஸுடன் படுத்திருந்த டெனிஸ், தடாலடியாக பிராவை களைந்து டாப்லெஸ்ஸானார்.

இதைப் பார்த்து கேமராக்கள் அவர் பக்கம் திரும்பின. அதற்காகவே காத்திருந்தது போல டெனிஸ் சிறிது நேரம் டாப்லெஸ்ஸாகவே படுத்திருந்தார்.

பின்னர் கேமராக்களின் நலனை முன்னிட்டு திரும்பி போஸ் கொடுக்கவும் செய்தார்.

டெனிஸின் இந்த செயலால் அங்கு கூடியிருந்தார் வியப்படைந்தனர். சில விநாடிகளுக்கு இந்த டாப்லெஸ் கண்காட்சி நீடித்தது.

ஸ்பீல்பெர்க்-அனில் அம்பானி 825 மில்லியன் டாலர் ஒப்பந்தம்!

மும்பை: ஹாலிவுட்டின் மாபெரும் இயக்குன- தயாரிப்பாளர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்துட்டுள்ளார் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் அனில் அம்பானி.

இந்த ஒப்பந்தப்படி அனில் திருபாய் அம்பானி குழுமமும் ஸ்பீல்பெர்கின் ட்ரீம் ஒர்க்ஸ் ஸ்டுடியோவும் இணைந்து ஆண்டுக்கு ஆறு திரைப்படங்களை உருவாக்க உள்ளன. இதற்கான முதலீட்டின் ஒரு பகுதியாக 825 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது அனில் திருபாய் அம்பானி குழுமம்.

இந்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. சர்வதேச சினிமாவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது.

இதுகுறித்த முறையான அறிவிப்பை நேற்று நியூயார்க்கில் ஸ்பீல்பெர்க்கும், அனில் அம்பானியும் கூட்டாக வெளியிட்டனர். பின்னர் நிருபர்களிடம் இருவரும் பேசினர்.

அனில் அம்பானி கூறியதாவது:

இந்தப் படங்களை ட்ரீம்ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்து வால்ட் டிஸ்னி மூலம் வெளியிடும். இந்தியாவில் மட்டும் இந்தப் படங்களுக்கான டிடிஎச், டிவிடி உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் ரிலையன்ஸ் பிக் எண்டர்டெயின்மெண்டுக்கு சொந்தமாக இருக்கும்.

இந்தப் படங்களுக்கான முதலீட்டில், 350 மில்லியன் டாலர் என்னுடைய தனிப்பட்ட பங்கு. 150 மில்லியன் டாலர் டிஸ்னியின் பங்கு. 350 மில்லியன் டாலர்களை பொதுமக்களிடம் பங்குகள் மூலம் திரட்டுகிறோம், என்றார்.

இந்த நிறுவனத்தின் முதல் படைப்பு வரும் 2010-ம் ஆண்டு வெளியாகும்.

இதுகுறித்து ஸ்பீல்பெர்க் கூறுகையில், "ஒரு புதிய எதிர்காலத்துக்கான கதவுகளைத் திறந்துள்ளது ரிலையன்ஸ். அவர்களின் ஒப்பந்தம் மற்றும் ஒத்துழைப்பு எங்கள் கனவுகளை மேலும் விரிவடையச் செய்துள்ளது. விரைவில் இந்தியாவுக்கு வந்து அங்குள்ள படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களைச் சந்திக்கவிருக்கிறேன் என்றார்.

'அப்பாவி' சுஹானி!

அப்பாவி என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாகிறது. சுஹானி நாயகியாக நடிக்க, கே.பாக்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இப்படத்தில் கெளதம் நாயகனாக நடிக்கிறார்.

தேவி விஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தண்டபாணி தயாரிக்கும் இப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாராகிறது.

பாஸ் படத்தை இயக்கி வரும் ஆர். ரகுராஜ் அப்பாவியை இயக்குகிறார்.

சமூக விரோத சக்திகளால் நாட்டின் வளர்ச்சி எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும், அப்படிப்பட்ட சமூக விரோத சக்தியால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி எப்படி அவர்களை பழிவாங்குகிறான் என்பதே இப்படத்தின் கதையாகும்.

பழிவாங்கும் காட்சிகளை இந்தியத் திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாக படம் பிடிக்கிறார்களாம்.

படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து கர்நாடகா, கேரளாவில் வளருகிறது. ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்க, வி.டி.விஜயன் எடிட்டிங்கைக் கவனிக்க, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, வைரமுத்து, நா.முத்துக்குமார் பாடல்களை எழுத உருவாகிறது அப்பாவி.

லிங்குசாமியின் பையாவில், பொங்கிவரும் காதல்


நெடுந்தூர பயணத்தில் வழித்துணையாக காற்றும், கவிதை போல ஒரு பெண்ணும் வந்தால் எப்படியிருக்கும்? அவளே வாழ்க்கை துணையாகவும் வந்தால்...

இதுதான் பையா படத்தின் கதை என்கிறார் லிங்குசாமி. பிரேக் டவுன் ஆகாத பஸ்சை போல தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த லிங்குவை பீமா ஒரு பிரேக் அடித்து நிறுத்தியது. அதன்பின் முன்னிலும் வேகமாக ஓட்டமெடுத்திருக்கிறார் இவர். என்னை தோல்வி சீண்டும்போதுதான் வெற்றியை நோக்கி ஒரு வெறி வரும். இப்போது அது எனக்கு வந்திருக்கு என்கிறார் லிங்கு.

பைய என்றால் மெல்ல என்று அர்த்தம். பையா என்ற இளமையான துறுதுறுப்பானவன் என்று அர்த்தம். மனசுக்குள் மெல்ல நுழைந்து கனமாக இடம் பிடிக்கும் கதைதான் இது என்று பூடகமாகவே பேசுகிற லிங்குசாமி, அவசரமோ ஆர்ப்பாட்டமோ இல்லாமல் ஷ§ட்டிங்கை நடத்தி வருகிறார். காரணம், முழு ஸ்கிரிப்டையும் அச்சடித்து அதன்படியே எடுத்து வருவதால்தான்!

காதலின் தீராத பக்கங்களில் எதையெதையோ, யார் யாரோ எழுதினாலும், லிங்குசாமியின் பேனாவுக்கும் காதலுக்கும் ஒரு இளமையான நெருக்கம் இருக்கும். இதை அவரது முந்தைய படங்கள் தனித்துவமாக நிருபித்திருக்கின்றன. இந்த படத்தில் அது கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கும் என்கிறார்கள். சாக்லெட்டுக்கு உறை போடாமலே கொடுத்தால் இன்னும் சவுகர்யம்தானே?

தெலுங்கில் பிசியாகும் ஷாம்

அதிர்ஷ்டம் எந்தப் பக்கம் வரும், எந்த ரூபத்தில் வரும் என்பதை கணிக்கவே முடியாது. ஆனால் வரும்போது வளர்ச்சியை வாரிக் கொண்டு வரும். ஷாமைக் கேட்டால் அப்படித்தான் சொல்வார்.

தமிழில் பெரிய ஹீரோவாக உயர முடியாமல் போன ஒரு சில திறமைசாலிகளில் ஷாமும் ஒருவர். மாதவனுக்கு கடும் போட்டியாக இருப்பார் என ஒரு காலத்தில் இவர் கணிக்கப்பட்டார். ஆனால் இதுவரை முன்னணி ஹீரோ வரிசையில் சேர முடியாத துர்பாக்கியசாலியாக இருக்கிறார் ஷாம்.

12பி, ஏபிசிடி, இயற்கை, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே என்று பல படங்களில் நடித்திருந்தாலும் கூட இதுவரை முன்னேற்றத்தைக் காணாமல் இருக்கிறார் ஷாம்.

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் தெலுங்கில் ஷாமுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அவர் முதன் முதலில் தெலுங்கில் நடித்த கிக் அங்கு மெகா ஹிட் ஆகியுள்ளது. கோடிக்கணக்கில் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. ஷாம் மீது தெலுங்குத் திரையுலகின் ஒட்டுமொத்த பார்வையும் குவிந்துள்ளது.

அத்தோடு நில்லாமல் ஏகப்பட்ட படங்களும் வந்து குவிந்துள்ளனவாம். திக்குமுக்காடிப் போயுள்ள ஷாம், அதிலிருந்து நான்கு படங்களைத் தேர்வு செய்து நடிக்கவுள்ளார்.

கிக் படத்தில் ஷாம் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஆனால் ஒரு சீனில் கூட அவர் யூனிபார்மில் இருக்க மாட்டார். படு ஸ்டைலான போலீஸ் அதிகாரியாக கலக்கி எடுத்திருக்கும் ஷாமுக்கு அங்கு ஏகோபித்த வரேவற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தின் திரைக்கதை அமைப்புதான் படத்தை வெற்றி பெற வைத்துள்ளது. இதே படத்தைத்தான் இப்போது ஜெயம் ரவி நடிக்க, அவரது அண்ணாச்சி ஜெயம் ராஜா தமிழில் ரீமேக் செய்யவுள்ளார்.

தமிழ் ரீமேக்கிலும் தெலுங்கில் செய்த கேரக்டரை அப்படியே செய்யவுள்ளாராம் ஷாம்.

எப்படி 'பாய்' இப்படி கலக்குனீங்க என்று ஷாமிடம் கேட்டால், எனது பெரியப்பா ஜாபர் அலிதான் இதற்குக் காரணம். அவரை மனதில் வைத்துதான் இந்த கேரக்டரை செய்தேன் என்கிறார் படு குஷியாக.

அஜீத்துக்கு ஷாம்லி செய்த 'சிபாரிசு'!


அஜீத்தை திருமணம் செய்ய அக்கா ஷாலினிக்கு நான்தான் சிபாரிசு செய்தேன் என ஷாம்லி கூறியுள்ளார்.

பேபியாக இருந்த காலத்திலேயே பிஸியான நடிகையாக திகழ்ந்த ஷாம்லி, 'குமாரி'யான பிறகு நடித்த முதல் தெலுங்குப் படம் 'ஓய்' சக்கைப் போடு போடுகிறது ஆந்திராவில். அந்த சந்தோஷத்தில் ஷாம்லி அளித்த பேட்டி:

ஆரம்பத்தில் இந்தப் படம் குறித்த பல தகவல்கள் யாருக்கும் சொல்லப்படவில்லை. காரணம் என்னை குழந்தை நட்சத்திரமாகத்தான் பலரும் பார்த்திருப்பார்கள். வளர்ந்த பிறகு என் தோற்றம் நிறைய பேருக்கு தெரியாது. படம் ரிலீஸ் வரை அந்த சஸ்பென்ஸ் இருக்கும் என படக்குழுவினர் விரும்பினார்கள். அதனால்தான் பட விஷயங்கள், ஸ்டில்கள் எல்லாமே ரகசியமாக வைக்கப்பட்டது.

ஓய் கதை பிடித்ததால் ஒப்புக்கொண்டேன். இப்போது தொடர்ந்து நடிக்கும் ஐடியா இல்லை. அடுத்து சிங்கப்பூர் யுனிவர்சிட்டியில் திரைப்படம் சம்பந்தமாக படிக்கப் போகிறேன். இது 9 மாத கோர்ஸ்தான். நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன். படித்துக்கொண்டே நடிப்பேன்.

எல்லோரும் என்னை கவர்ச்சியாக நடிப்பீர்களா என்றே கேட்கிறார்கள். ஜீன்ஸ், டீசர்ட், குர்தா போன்ற மாடர்ன் உடைகளை வேண்டுமானால் அணிவேன். ஆனால் நிச்சயம் கவர்ச்சியாக மட்டும் நடிக்க மாட்டேன். நிறைய படங்கள் கவர்ச்சி இல்லாமலேயே நல்ல கதைகளுக்காக ஓடுகின்றன.

ஷாருக்கான் என்றால் எனக்கு உயிர். அஜீத் என் அக்கா ஷாலினியைத் திருமணம் செய்யும் முன் என்னிடம் சிபாரிசு, உதவியெல்லாம் கேட்பார். சிபாரிசு செய்தால் என்ன தருவீர்கள் என்று கேட்பேன். ஷாருக்கானிடம் கூட்டிப்போவேன் என்பார். சொன்னபடியே திருமணம் ஆனதும் அழைத்து போனார். ஷாருக் என்னை கட்டிப்படித்து நீ குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்களை பார்த்தேன். நடிப்பு நன்றாக இருந்தது என பாராட்டினார் என்றார் ஷாம்லி.

சென்னையில் செட்டிலான சுதா சந்திரன்!

மயூரி புகழ் சுதா சந்திரன் சென்னையிலேயே செட்டிலாகி விட்டார்.

ஆந்திராவிலிருந்து தமிழுக்கு நடிக்க வந்தவர் சுதா சந்திரன். 80களில் அவர் நடித்து வெளியான மயூரி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்தில் ஒரு காலை இழந்த சுதா சந்திரன், செயற்கைக் காலுடன் அந்தப் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல், நடனமும் ஆடி அனைவரையும் வியப்படைய வைத்தார்.

அப்போது செயற்கைக் கால்கள் அவ்வளவாக பிரபலமாக இல்லாத நேரம் என்பதால் சுதா சந்திரனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து சின்னத் தம்பி பெரிய தம்பி, தாயே நீயே துணை, வசந்தராகம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தார் சுத.

இதையடுத்து மும்பைக்கு சென்ற அவர் அங்கு ரவி என்பவரை மணந்து கொண்டு செட்டிலாகி விட்டார். இதையடுத்து அவர் இந்தி டிவி தொடர்களில் நடித்துப் பிரபலமானார்.

இப்போது மீண்டும் தமிழுக்குத் திரும்பியுள்ளார் - ஆனால் டிவி தொடர்கள் மூலமாக.

குட்டி பத்மினியின் கலசம் தொடரில் இவரது வில்லத்தனமான நடிப்பு, அத்தொடரின் நாயகி ரம்யா கிருஷ்ணனை விட பிரபலமாகி விட்டது.

இதையடுத்து தற்போது ராதிகாவின் அரசி தொடரிலும் வில்லத்தனத்தில் கலக்கி வருகிறார்.

இடையில் விஷால் நடித்த சத்யம் படத்திலும் நடித்திருந்தார் சுதா சந்திரன்.

இப்போது ஏகப்பட்ட தமிழ் தொடர்கள் வருவதால் சென்னையிலேயே செட்டிலாகி விட முடிவெடுத்த அவர் சட்டுப் புட்டென்று ஒரு வீட்டை வாங்கி வந்து விட்டாராம்.

இனிமேல் அதிக தமிழ்த் தொடர்களில் நடிப்பேன் என்கிறார் புன்னகையுடன்.

லக் படத்தில் ஆக்ஷன் காட்சியில் ஸ்ருதி கமல்

இந்தி மூலம் நடிக்கப் புகுந்துள்ள கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி கமல்ஹாசன், முதல் படமான லக்கில், அதிரடி சண்டைக் காட்சியில் நடித்துள்ளாராம்.

இளம் நடிகர் இம்ரான் கானுடன் இணைந்து லக் படத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி. நீச்சல் உடைக் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்ருதி, இப்படத்திற்காக சண்டைக் காட்சிகளிலும் அசத்தியுள்ளாராம்.

அதுவும் சாதாரண சண்டை இல்லையாம், அதிரடியான காட்சியாம்.

இதுகுறித்து ஸ்ருதி சொல்வதைக் கேட்போம்...

'லக்' படத்தில் ஒரு கடினமாக காட்சி தென் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்டது. இந்தக் காட்சியில் ஓடும் ரயில் முன்பாக இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் நான் நின்றுகொண்டு நடித்தேன்.

பயங்கர உஷ்ணத்தில் ஓடும் ரெயில் முன்பாக நான் நின்றபடி நடித்ததால் எனக்கு உடலில் கொப்புளங்களே வந்து விட்டன. அந்த அளவுக்கு உஷ்ணம் கடுமையாக இருந்தது. மயிர்க்கூச்செறியச்செய்யும் காட்சி அது.

இந்த சண்டைக்காட்சிகளில் நடித்ததால் என் சருமத்தின் நிறமே மாறிப் போய்விட்டது என்கிறார் ஸ்ருதி.

பொறாமைக்குரிய 'பாடி'முதல் பத்து இடங்களைப் பிடித்த முத்தான அழகிகள்.-மேகான் பாக்ஸ்!


மேகான் பாக்ஸின் பெருமைப் பெட்டியில் இன்னும் ஒன்று புதிதாக சேர்ந்துள்ளது. அது 2009ம் ஆண்டின் மிகவும் பொறாமைக்குரிய உடலமைப்பைக் கொண்டவர் என்பதுதான்.

ஹீட் என்ற இதழ் இந்த கணக்கெடுப்பை எடுத்து வெளியிட்டுள்ளது.

அதில், 2009ம் ஆண்டில் அனைவராலும் மிகவும் பொறாமைப்படும்படியான உடலமைப்பைக் கொண்ட பெண்களில் மேகான் பாக்ஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளாராம்.

இதுகுறித்து ஹீட் இதழின் ஆசிரியர் ஜூலியன் லின்லே கூறுகையில், ஆண்கள் மத்தியில் மேகான் பாக்ஸுக்கு பெரும் கிராக்கி இருப்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், அனைவராலும் பொறாமைப்படும்படியான உடலமைப்பைக் கொண்டவர்கள் பட்டியலில் அவருக்கு முதலிடம் கிடைத்திருப்பது வியப்புக்குரியது என்றார்.

இருக்காதா பின்னே, மேகானைப் பார்த்து ஏஞ்செலீனா ஜூலியே குலைநடுங்கிப் போய்க் கிடக்கிறாரே. இந்தப் பட்டியலில் ஜூலிக்கு 5வது இடம்தான் கிடைத்துள்ளதாம்.

முதல் பத்து இடங்களைப் பிடித்த முத்தான அழகிகள்..

1. மேகான் பாக்ஸ்.
2. செரில் கோல்
3. கெல்லி ப்ரூக்.
4. பியான்ஸ் நோல்ஸ்
5. ஏஞ்செலீனா ஜூலி
6. ஜெனீபர் அனிஸ்டன்
7. ஜெசிகா ஆல்பா
8. ஜெனீபர் லோபஸ்
9. கேத்தி பிரிஸ்
10. ரிஹானா

Wednesday, July 15, 2009

மரம் விழுந்ததில் பைக்கோடு சிக்கி பலியான உதவி இயக்குநர்

சென்னை: சாலையோரம் இருந்த பெரிய மரம் திடீரென முறிந்து விழுந்ததில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த திரைப்பட உதவி இயக்குநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். தனியாக திரைப்படத்தை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.

நேற்று முற்பகலில் மோடடார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார். அசோக் நகர் 11வது அவென்யூவில் சிக்னலுக்காக நின்றிருந்தபோது, சாலையோர பிளாட்பாரத்தில் இருந்த பழமையான தூங்குமூஞ்சி மரம் அப்படியே சரிந்து விழுந்தது.

அந்த இடத்தில் ஏராளமான பேர் இருந்தனர். இந்த நிலையில், பாலமுருகன் மீது அந்த மரம் அப்படியே சாய்ந்து நசுக்கியது. இதில் தலை உடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் பாலமுருகன்.

விரைந்து வந்த போலீஸார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மரத்தை வெட்டி, பாலமுருகனின் உடலை மீட்டனர்.

இறந்த பாலமுருகனுக்கு மகேஷ்வரி என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர்.

ஆர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாராம் பாலமுருகன்.

ஜாக்சன் மறைவால் சோகம்-மருத்துவமனையில் எலிசபெத் டெய்லர்

லாஸ் ஏஞ்சலெஸ்: மைக்கேல் ஜாக்சன் மறைவால் ஏற்பட்ட துக்கம் இன்னும் குறையாத நிலையி்ல் சோகத்தில் இருக்கும் ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜாக்சனும், எலிசபெத் டெய்லரும் மிக நெருங்கிய நண்பர்கள். ஜாக்சனின் திடீர் மறைவால் டெய்லர் பெரும் சோகமடைந்துள்ளார்.

ஏற்கனவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் டெய்லருக்கு ஜாக்சனின் மறைவுத் துக்கமும் சேர்ந்து கொண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள மருத்துவமனையில் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து டெய்லருக்கு நெருக்கமான பத்திரிக்கையாளர் சின்டி ஆடம்ஸ் கூறுகையில், ஜாக்சனின் மறைவால் ஏற்பட்ட துக்கம் இன்னும் டெய்லரிடமிருந்து விலகவில்லை.

ஜாக்சன் நினைவிலேயே அவர் உள்ளார். இதுதவிர பலவீனம், களைப்பு, விரக்தி உள்ளிட்டவையும் சேர்ந்து கொண்டதால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜாக்சனை நினைத்து தொடர்ந்து அவர் அழுதபடியே உள்ளார். ஜாக்சன் இல்லாத வாழ்க்கையை அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

லண்டனில் ஜாக்சன் நிகழ்த்தவிருந்த இசை நிகழ்ச்சிகளை காண ஆவலோடு இருந்து வந்தார். ஆனால் அவரது மறைவுச் செய்தி வந்தது முதல் அழுதபடியே உள்ளார்.

மேலும், ஜாக்சனின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், டெய்லரை கலந்து கொள்ள ஜாக்சன் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. காரணம், அவர் ஜாக்சனுக்குத்தான் நெருங்கிய தோழியாக இருந்தார், அவர்களுக்கு நெருக்கமானவராக இல்லை என்பதால். இதுவும் கூட டெய்லரை பாதித்து விட்டது என்று கூறியுள்ளார் ஆடம்ஸ்.

கணவர் சொன்னால் தமி்ழ் படம்-கோபிகா!

ஒரு வழியாக மீண்டும் நடிக்க வந்துவிட்டார் கோபிகா. திருமணத்துக்குப் பிறகு அவர் முதல்முறையாக மலையாளப் படம் ஒன்றில் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு ஸ்வா லே (ஸ்வாந்தம் லேகாகன்) என தலைப்பு வைத்துள்ளனர். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் திலீப்.

இந்தப் படத்தில் கோபிகா கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கிறார். திருமணத்துக்குப் பின் நடிக்க வந்துள்ள தனக்கு இது பொருத்தமான வேடம்தான் என்று மகிழ்ச்சியுடன் கூறும் கோபிகா, இந்தப் படத்தின் கதையைக் கேட்டு ஓகே சொல்லி நடிக்க அனுப்பியதே தன் கணவர்தான் என்று கற்பூரம் அடிக்காத குறையாக சொல்கிறார்.

தமிழ்ப் படம் எப்போது செய்வீர்கள் என்று கேட்டால், "இரண்டு படங்களுக்கு கேட்டுள்ளனர். கதையை என் கணவரிடம் அனுப்பியுள்ளேன். அவர் ஓகே சொன்னதும் நடிப்பது குறித்து பேசுவேன்" என்கிறார்.

சரி, சினிமாவில் கர்ப்பிணியாக நடிக்கும் நீங்கள், நிஜத்தில் எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள்? என நிருபர் ஒருவர் கேட்டதற்கு, "நான் சின்னப் பொண்ணுதானே... இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்" என்றார்.

நரேன்-மஞ்சுவுக்கு பெண் குழந்தை!

கேரளத்தைச் சேர்ந்த நடிகர் நரேன்-அதே மாநிலததைச் சேர்ந்த பின்னணி பாடகி மஞ்சு தம்பதிக்கு மஞ்சுவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

கோழிக்கோட்டில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. தந்தையான மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட நரேன் கூறுகையில்,

வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான நேரம் இதுதான். இந்தக் குழந்தை எங்களின் அதிர்ஷ்ட தேவதையாகக் கருதுகிறோம். மஞ்சு மாதிரியே அழகாக இருக்கிறாள் குழந்தை. பிரசவம் இயல்பான முறையில் அமைந்தது இன்னுமொரு சந்தோஷம் என்றார்.

நரேன் நடித்துள்ள தமிழ்ப் படம் பூக்கடை ரவி விரைவில் வெளியாக உள்ளது. மலையாளத்தில் அவர் நடித்த ராபின்வுட் ரீலீஸுக்குத் தயராகிக் கொண்டிருக்கிறது.

எனக்கும் வேணும்!-ஜெனிலியா


கடந்த ஆண்டு பாலிவுட்டைக் கலக்கியவர் நடிகை ஜெனிலியாதான் . ஜானே து ய ஜானே நா படத்தின் மூலம் டாப் ஹீரோயின்களுள் ஒருவராகப் பார்க்கப்பட்டார்.

ஆனால் இந்த ஆண்டு அவர் நடித்த விளம்பரப் படங்கள் வரிசையாக வருகின்றனவே தவிர, புதிய இந்தி்ப் படம் ஒன்றும் வரும் வழியைக் காணோம். பெரிய பட்ஜெட் படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவும் இல்லை.

என்னாச்சு?

"ஒண்ணும் ஆகல... நான் பிஸியா நடிச்சிக்கிட்டிருக்கேன். இந்த வருஷம் மட்டும் என்னுடைய நான்கு பெரிய படங்கள் வரவிருக்கின்றன.

ஆனா எல்லா நடிகைகள் மாதிரி எனக்கும் யாராவது ஒரு கானுடன் (ஷாரூக்கான், சல்மான்கான், ஆமிர் கான், இம்ரான் கான்) நடிக்க ஆசையாக இருக்கிறது.

இவர்களுடன் ஒரு படத்தில் வந்தாலும் அடுத்த சில மாதங்களுக்கு பரபரப்பாக பேசப்படுவோம். திரையுலகில் அந்தஸ்தும் உயரும். இது எல்லாரும் அறிந்த உண்மை. ஆனால் என்ன செய்வது.... கதைகளுக்கு தேவையான நாயகன் யாரென்பதை இயக்குநர்தானே முடிவு செய்வார்?, என்கிறார் ஜெனிலியா.

இப்போதைக்கு பர்தீன் கானுடன் ஒரு படம் நடிக்க வாய்ப்பு வந்ததாம்... உடனே சம்மதம் சொல்லி நடிக்க ஆரம்பித்துவிட்டாராம்.

பறக்கிற கான்களுக்கு ஆசைப்படுவதை விட, கிடைத்த கானை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் போதும் என நினைத்துவிட்டார் போலிருக்கிறது!

தமிழ் பெயர்..வரி விலக்கு செல்லும்!


தமிழ் பெயர் சூட்டப்பட்ட திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்க அரசுக்கு உரிமை உண்டு என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் அதன் இணைச் செயலாளர் புகழேந்தி என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,

படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டினால் வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு 2006ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தது. இதன் பின்னர் 4 மாதம் கழித்து மீண்டும் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. பழைய படம், புது படம் எது வேண்டுமானாலும் தமிழ் பெயர் இருந்தால் அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு அடிப்படையில் 1950ம் ஆண்டு எடுக்கப்பட்ட `ரத்தக்கண்ணீர்', `மனோகரா' உள்பட பல படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் `மன்மதன்', `போக்கிரி' ஆகிய படங்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டன.

அரசு உத்தரவின் எதிரொலியாக ஜில்லுன்னு ஒரு காதல், தமிழ் எம்.ஏ, எம்டன் மகன் ஆகிய பெயர் கொண்ட படங்கள் வரி விலக்கு பெற வேண்டும் என்பதற்காக `சில்லுன்னு ஒரு காதல்', `கற்றது தமிழ்', `எம்மகன்' என்று தமிழில் பெயரை மாற்றி வைத்து வரி விலக்கைப் பெற்று விட்டனர்.

இந்த வரி சலுகை என்பது படங்களிடையே பாரபட்சமாக உள்ளது. பொதுநலன் கருதிதான் வரிச் சலுகை வழங்க வேண்டும். மற்றபடி வரி சலுகை வழங்க சினிமா சட்டத்தில் இடமில்லை. தமிழ் பெயர் படங்களுக்கு வரிச் சலுகை வழங்குவது தமிழ் வளர்ச்சிக்கோ, சமுதாய வளர்ச்சிக்கோ பயன்படும் வகையில் இல்லை.

இவ்வாறு வீணாக வரி விலக்கு அளிப்பதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60 கோடி வரை கேளிக்கை வரி இழப்பு ஏற்படுகிறது. 2003-2004ல் மட்டும் ரூ.75 கோடி கேளிக்கை வரி கிடைத்தது. ஆனால் 2006ம் ஆண்டு இது 16 கோடியாக குறைந்து விட்டது.

தமிழ் பெயர் என்பதற்காக வரி சலுகை வழங்குவது அரசுக்கு வரி இழப்பு மட்டுமல்லாமல் அரசியல் சட்டத்திற்கும் எதிரானது. எனவே தமிழ் பெயர் கொண்ட படங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதை விசாரித்த தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

எந்தப் படங்களுக்கு வரி சலுகை அளிப்பது, எதற்கு அளிக்க தேவையில்லை என்பதை முடிவு செய்ய மாநில அரசுக்கு உரிமை உண்டு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்தனர்.

கணவர் இயக்க மீண்டும் நடிக்க வருகிறார் மந்த்ரா


ப்ரியம் படம் மூலம் நடிகையாகி, மிகக் குறுகிய காலத்திலேயே தனது நடிப்பு ரவுண்டை முடித்துக் கொண்டு கல்யாணமாகி செட்டிலானவர் மந்த்ரா. இப்போது மறுபடியும் நடிக்கப் போகிறாராம்.

ப்ரியம் படம் மூலம் நடிக்க வந்த மந்த்ரா, குறுகிய காலத்திற்குள் அஜீத் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தார். மூத்த நடிகரான சத்யராஜுடனும் ஜோடி சேர்ந்தார்.

தாராளமான கவர்ச்சியுடன் கலக்கலாக நடித்து வந்த மந்த்ரா, எதிர்பார்த்த அளவுக்கு பெரிய ஹீரோயினாக முடியவில்லை. இதனால் தான் காதலித்து வந்த இயக்குநர் நிவாஸைத் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அதன் பிறகு வெளியுலகில் அவரைப் பார்ப்பதே அரிதாக இருந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இல்லத்தரசியாக இருந்து வரும் மந்த்ராவுக்கு மீண்டும் நடிப்பு ஆசை முளை விட்டுள்ளதாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், குறுகிய காலமே நடித்திருந்தாலும் நான் 75 படங்களை முடித்து விட்டேன். இது ஒரு சாதனைதான்.

இப்போது என்னைப் பார்ப்பவர்கள் மீண்டும் நடிக்கலாமே என்று கேட்கிறார்கள். எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது.

எனது கணவர் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். அதில் நான் நடிக்கிறேன். ஹீரோயினாக அல்ல, முக்கிய கேரக்டரில் நடித்து ரீ என்ட்ரி ஆகிறேன். தொடர்ந்து நடிப்பது குறித்து அதன் பின்னர் முடிவு செய்யவுள்ளேன் என்கிறார் மந்த்ரா.

நவ்யா மனசில் என்ன..?


எனது மனதில் இப்போது திருமணம் என்ற எண்ணமே இல்லை. நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அதை விட முக்கியமான ஒரு லட்சியம் எனது மனதில் உள்ளது. அதை முடித்த பின்னர் தான் திருமணம் என்கிறார் நவ்யா நாயர்.

சில நடிகைகள் குறித்து திடீரென உறுதியான வதந்தி பரவும். அதாவது அவர்கள் காதலிக்கிறார்கள் என்று அந்த வதந்தி இருக்கும், அல்லது திருமணம் செய்யப் போகிறார்கள் என்று செய்தி கிளம்பும்.

இதில் 2வது ரகத்தில் சேர்த்தி நவ்யா. இனி நடிக்க மாட்டார். கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார், தீவிரமாக காதலித்து வந்தவரையே மணக்கப் போகிறார் என்பதுதான் அந்த செய்தி.

இந்த சேதி உண்மையா சேச்சி என்று நவ்யாவிடம் கேட்டால், அதெல்லாம் சத்தியமாக கிடையாது. அப்படி ஒரு திட்டமே இல்லை. கல்யாணப் பேச்சு நடந்ததாக கூறப்படுவதெல்லாம் டூப் என்கிறார் நவ்யா.

தொடர்ந்து அவர் கூறுகையில், இப்போது நான் எம்.பி.ஏ படித்து வருகிறேன். அதை முடிக்க வேண்டும். பிறகு ஒரு லட்சியம் வைத்துள்ளேன். அதுவும் நிறைவேற வேண்டும். அது என்ன என்பதை சொல்ல மாட்டேன்.

இதெல்லாம் முடிந்த பிறகுதான் மற்றவையெல்லாம். அதுவரை திருமணம் கிடையாது என்கிறார் தனது டிரேட் மார்க் புன்னகையுடன்.

நவ்யா மனசுக்குள் அப்படி என்ன பரம ரகசிய லட்சியம் இருக்கும்...??

பூனம் வரணும்... ஜீவா விருப்பம்!

விழியில் விழுந்து இதயம் நுழைஞ்சதெல்லாம் காரணமில்லை. என்னவோ ஒரு அலையடிச்சிருக்கணும்... மீண்டும் பூனம் பாஜ்வாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் ஜீவா. தெனாவட்டு படப்பிடிப்பு நடக்கும் போதே, “நீங்க வேணும்னா பாருங்க. தமிழ்சினிமாவிலே மிகப்பெரிய இடத்தை பிடிக்கப் போகிறார் பூனம் பாஜ்வா. ஏன்னா, அவரோட நடிப்பும், அழகும், திறமையும் சான்சே இல்லை” என்று புல்லரித்தார் ஜீவா. தெனாவட்டு ஹிட் என்றாலும், பூனம் பூரணமான இடத்தை அடைந்தாரில்லை!.

இப்படத்திற்கு பின்பு வந்த சேவல் எதிர்பார்த்த மாதிரி ஓடாததால் மீண்டும் மும்பைக்கே ஓட்டம் பிடித்தார் பூனம். இப்போது மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் ஜீவா. தற்போது இவர் நடித்து வரும் கச்சேரி ஆரம்பம் படத்தில் மனம் கவர்ந்த பூனம்தான் ஹீரோயின். பூபதி பாண்டியன், சீமான் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த திரைவண்ணன் இப்படத்தை இயக்குகிறார்.

முக்கிய செய்தி என்னவென்றால், புதுவசந்தம் தொடங்கி தமிழ்சினிமாவில் ஏராளமான வெற்றிகளை வாரிக்குவித்து, எக்கச்சக்க இயக்குனர்களுக்கும் புதுப்பாதை போட்டு கொடுத்த சூப்பர் குட் பிலிம்ஸ் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தை தயாரிக்கிறது. மகன் ஜீவாவை வைத்து தித்திக்குதே என்று முதல் ரிஸ்க்கை எடுத்த ஆர்.பி.சௌத்ரி, அதே ஜீவா மார்க்கெட்டில் சூடான ஹீரோக்களில் ஒருவராக இருக்கும்போது எடுக்கிற இரண்டாவது படம் இது.

கேரவேன் அது இதுன்னு பில்டப் கொடுத்திருப்பாரோ, பிள்ளை?

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்...


மனம் விரும்புதே உன்னை என்று ஒருத்தரை ஒருத்தர் துரத்தி துரத்தி லவ் பண்ணுகிற காலத்தில், பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் கொண்டு திரிகிறார் ஒருவர். கொஞ்சம் அன்னியோன்னியமாக பழகி அன்பை பொழிவதால், அவளா நீயி என்று அரண்டு போகிறார்களாம் கோடம்பாக்கத்து குமரிகள்.

முதல் படத்திலேயே மனசை குத்தகைக்கு எடுத்த நடிகைதான் இவர். தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுக்கு லேசாக கண் சிமிட்டுவதோடு சரி. மற்றதெல்லாம் நடிகைகள் ஏரியாவில்தான் என்று அதிர்ச்சி ஆட்டம் பாம் போடுகிறது கோடம்பாக்கம். அஞ்சாதே என்று சில ஹீரோக்களுடன் மல்லுக்கு நின்றாலும், இவர் ஜொள் விட்டு திரிவது இந்த வாஜி வாஜி நடிகையிடம்தான் என்கிறார்கள். இவர் நடித்த ஒரு படத்தை பார்த்து தோரணம் போல வார்த்தைகளை கோர்த்து எஸ்எம்எஸ் அனுப்பினாராம் நடிகைக்கு. அதில் உன் இடுப்பழகு அப்படி. இதழோ இப்படி என்று வர்ணித்ததை பார்த்து வாயடைத்து போனாராம் நடிகை.

பெரிய பெரிய ஹீரோக்களுடன் நடிச்சிருக்கேன். ஆனால் அவங்க கூட இப்படி ஒரு எஸ்எம்எஸ் அனுப்பியதில்லை. ஆனால் இந்த பொண்ணு இப்படி அனுப்புதே என்று நினைத்தவர், நன்றி தெரிவித்து நடிகைக்கு போன் போட, இரண்டு பேருக்கும் நடுவில் ஒரே ஃபயர் மயம்!

ரெய்டுல மாட்டி சின்னா பின்னப்படுறதை விட, இப்படி வொய்டுல பால் போடுறது ரொம்ப சேஃப்டின்னு நினைக்குது போலிருக்கு பொண்ணு.

Tuesday, July 14, 2009

வில்லனாகிறார் பாக்யரா‌ஜ்


காலம் மனிதனை எப்படி கவிழ்க்கும் என்று சொல்ல முடியாது. ஆ‌க்சன் படத்தையே கமெடியாக எடுக்கும் ‌ ஹ‌ியூமர்சென்ஸ் உள்ளவர் பாக்யரா‌ஜ். அவரையே படா வில்லனாக்கியிருக்கிறார் ஒருத்தர்.

ஐம்பது பிளஸ்ஸில் இருக்கும் பீல்ட் அவுட் ஹீரோக்கள் குணச்சித்திர வேடம், ஹீரோவுக்கு அப்பா என்று திசைமாறி விட்டார்கள். பாக்யராஜும் சில படங்களில் அப்படி நடித்தார். ஆனாலும், சென்னை மழை மாதி‌ரி எப்போதாவதுதான் வருகின்றன வாய்ப்புகள்.

தனம் படத்தை இயக்கிய சிவா தனது அடுத்தப் படத்துக்கு வில்லனாக பாக்யராஜை கமிட் செய்திருக்கிறாராம். படத்தின் ஹீரோ, ஹீரோயின் முடிவாகாத நிலையில் வில்லனை மட்டும் ஃபிக்ஸ் செய்து அட்வான்சும் கொடுத்திருப்பதாக கேள்வி.

படத்துக்கு குலசேகரனும் கூலிப்படையும் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பாக்யரா‌ஜ் இதில் குலசேகரனா கூலிப்படையா என்பது சீக்ரெட்.

கிரீடம் வெட்கி தலை குனிந்தது ? எவரையும் இழிவாக எண்ணிப் பேசக் கூடாது

ஒரு சமயம் வைகுண்டவாசனான திருமாலின் தலையில் இருந்த கிரீடம், அவரது பாத அணிகளைப் பார்த்து ஏளனம் செய்தது.

நான் திருமாலின் தலை மீது அமர்ந்திருக்கிறேன், நீயோ அவரது காலடியில் கிடக்கிறாய். அதுமட்டுமல்லாமல், மானிடர்கள் கூட அவர்களது வீட்டிற்குள் உன்னை அனுமதிப்பதில்லையே? வீட்டுக்கு வெளியேதான் விட்டுவிட்டு செல்கிறார்கள்.

ஆனால் என்னைப் போன்ற கிரீடங்களை மிகவும் பாதுகாப்பான இடத்திலும், தகுதியான இடத்திலும் அமர வைக்கிறார்கள். உன்னைப் போன்று வெளியே போட மாட்டார்கள் என்று கூறி பாத அணிகளை எள்ளி நகையாடியது கிரீடம்.

பாவம் செருப்புகள், எம்பெருமான் நடக்கும்போது அவைகள் அழுதன. அதைக் கேட்ட திருமால், எனது பாதங்களைப் பாதுகாத்து வரும் பாதுகைகளே, உங்களுக்கு ஏற்பட்ட துக்கம் என்ன என்று கேட்டார்.

அதற்கு, பாதுகைகளும், தங்களது குறைகளைக் கூறின.

குறைகளைக் கேட்ட திருமால், இதற்கா நீங்கள் அழுகிறீர்கள்? கவலையை விடுங்கள். நான் ராம அவதாரத்தின் போது உங்களை 14 ஆண்டுகள் அரியாசனத்தில் அமர வைத்து அரசாட்சி செய்யும்படி செய்கிறேன் என்று வாக்களித்தார்.

அதன்படியே, ராம அவதாரம் எடுத்து, ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்ட போது, பரதன் ராமரின் பாதுகைகளை பெற்று, அவற்றை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி செய்தான். அப்போது பாதுகைகள் தங்களது நிலையை எண்ணி மகிழ்ந்தன.

ஒவ்வொரு நாளும் பரதன் சிம்மாசனத்தின் முன்பு அமர்ந்து பாதுகைகளை வணங்கிய போது, அவனது தலையில் இருந்த கிரீடம் வெட்கி தலை குனிந்து தனது தவறுக்கு மானசீகமாக வருந்தியது.

இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் நீதி என்னவென்றால், எவரையும் இழிவாக எண்ணிப் பேசக் கூடாது. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பதுதான்.

ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நாடோடிகள்


சமுத்திரக்கனியின் நாடோடிகள் திரைப்படம் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

நூற்றில் ஒரு படம்தான் படமாகவும் கற்றுக்கொள்ள பாடமாகவும் இருக்கும். சமுத்திரக்கனியின் நாடோடிகள் அந்தவகை. தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம், தரமணியிலுள்ள ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இந்த நிகழ்வின் போது சமுத்திரக்கனி, படத்தின் ஒளிப்பதிவாளர் கதிர், எடிட்டர் ஏஎல் ரமேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.

திரையிடலுக்குப் பின் மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு மூவரும் பதிலளித்தனர். அபூர்வமாகவே இதுபோன்ற கலந்துரையாடல் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடைபெறும். நாடோடிகள் அதனை சாதித்திருப்பதும் ஒருவகையில் சாதனைதான்.

இந்த கலந்துரையாடலில் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நற்பணி மன்றமெல்லாம் நமக்கு வேணாம்...-நகுலன் பேட்டி


நகுலனிடம் பேசிக் கொண்டிருந்தால் போதும். நவரசங்களையும் பார்த்த சுவாரஸ்யம் கிடைக்கும். தனது படங்களில் தொடர் வெற்றிக்கு பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். என்ன திடீர்னு பத்திரிகையாளர் சந்திப்பு? ஏதாவது லவ் மேட்டரா? என்று எடுத்த எடுப்பிலேயே இடுப்பை கிள்ளினார்கள் நிருபர்கள். ஆஹாஹ்... சாரு.. நானு லவ்வு.. இப்போவா?... என்ன போங்க... ன்னு நகுலன் பதறியதை பார்க்க வேண்டுமே! அப்படி ஒரு ஜர்க்.

நம்ம வாழ்க்கையிலே ஹீரோயின் தேடி வைக்கறதெல்லாம் அம்மாதாங்க. நமக்கு சினிமாவிலே மட்டும்தான் லவ். சுனைனாவோடு லல்வான்னு கேட்கிறீங்க. அவங்க என்னோட பெஸ்ட் பிரண்டு. அவ்வளவுதான் என்றவர் முகத்தில், பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த சந்தோஷம்.

விக்ரம், ஆர்யா மாதிரி வேறு கெட்டப்புகளில் எப்போ நடிக்க போறீங்க? முதல் இடத்தை எப்போ பிடிக்கப் போறீங்க? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு திடுக்கிட்டது போன்ற ரீயாக்ஷன்கள் காட்டி பதிலளித்தார் நகுல்.

எனக்கும் வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்கணும்னு நிறைய ஆசை இருக்கு. ஆனால் அதுக்கேற்ற கதைகள் அமையணும். ஒரு படத்தை முடிச்சிட்டுதான் இன்னொரு படம் பண்ணுவேன். அதனால் கெட்டப் மாற்றினாலும் பெரிய பிரச்சனை ஏதும் வரப்போவதில்லை. முதல் இடமா? இப்போ எனக்கு கிடைச்சிருக்கிற இடமே பெரிய இடம்தான். அதுபோதும். நல்ல நல்ல படங்களில் நடிக்கணும். அந்த படங்கள் நல்லா ஓடணும். அது போதும்.

எல்லா நடிகர்களும் அவங்க ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாத்துறாங்க. நீங்க எப்படி? இந்த கேள்விக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் யதார்த்தமாக பேசினார் நகுல். அதற்காகவே அவரை பாராட்டலாம். "நமக்கு பெரிசா ரசிகர் மன்றம், நற்பணி இயக்கமெல்லாம் வேண்டாம் சாரு. வருவாங்க. போட்டோ எடுத்துப்பாங்க. நடிப்பை பற்றி நாலு வார்த்தை நல்ல விதமா பேசுவாங்க. அது போதும் சார். எதுக்கு பெரிய பெரிய ஆசையெல்லாம்?"

உங்க அத்தான் ராஜகுமாரன் கால்ஷீட் கேட்டா கொடுப்பீங்களா? என்ற கேள்விக்கு, "அவரு படம் எடுக்கும்போது நான் போய் வாய்ப்பு கேட்டேனா? அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும். என் வேலையை நான் பார்ப்பேன். தொழில் வேறு. உறவு வேறு" என்றார் நகுல்.

ரொம்பதான் தெளிவு..

முதல் முறையாக 'கேக்' வெட்டிய இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்.

தனது வாழ்நாளிலேயே முதல் முறையாக கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்.

கே.பாலச்சந்தரும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இணைந்து முதல் முறையாக ஒரு படத்தில் நடிகர்களாக கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அது ரெட்டைச்சுழி.

மிகப் பெரிய நடிகர்களை ஆட்டிப்படைத்த அசாத்திய இயக்குநர்களான இவர்களே வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு நடிகர்களாக களம் இறங்கியிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் ரெட்டைச்சுழி படப்பிடிப்புத் தளத்தில் கே.பாலச்சந்தர் தனது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.

கேக் வெட்டித்தான் பிறந்த நாள் கொண்டாடுவார்கள். அதில் அதிசயம் இல்லை. ஆனால் பாலச்சந்தர் அப்படிக் கொண்டாடியதுதான் அதிசயம். காரணம், இதுவரை அவர் தனது வாழ்நாளில் ஒருமுறை கூட கேக் வெட்டிக் கொண்டாடியதில்லையாம்.

9ம் தேதிதான் பாலச்சந்தர் பிறந்த நாள். படப்பிடிப்புக்காக நெல்லையில் முகாமிட்டிருந்த பாலச்சந்தர், பிறந்த நாளுக்காக சென்னைக்குப் போய் விட்டு நேற்று நெல்லை திரும்பினார்.

வந்தவரை கேக் சகிதமாக வரவேற்றனர் ரெட்டைச்சுழி படக்குழுவினர். பாரதிராஜா மற்றும் படக்குழுவினரின் அன்புக் கட்டளையைத் தட்ட முடியாமல் கேக் வெட்டினார். அவருக்கு பாரதிராஜா கேக் துண்டை எடுத்து வாயில் ஊட்டி விட்டார்.

பாரதிராஜா இதுகுறித்துக் கூறுகையில், நான் சினிமாவுக்கு வந்ததற்கு இருவர்தான் காரணம். ஒருவர் ஸ்ரீதர், இன்னொருவர் பாலச்சந்தர். அவர்களுடைய சாதனை அளவிட முடியாதது. அதைக் கொண்டாடும் வகையிலும்தான் கேக் வைத்துக் கொண்டாட வேண்டும என நான் கேட்டுக் கொண்டேன் என்றார்.

பாலச்சந்தர் கூறுகையில், பாரதியின் அன்பு எனக்குப் புதுத் தெம்பைக் கொடுததுள்ளது. இயக்குநர்களாக இருவரும் சிகரம் தொட்டிருக்கிறோம். நடிகர்களாகவும் நாங்கள் பதிவு செய்வோம் என்றார் போட்டிருந்த மீசை துடிதுடிக்க.

சரி, இந்த 'இளைஞருக்கு' எத்தனை வயது என்று சொல்லவில்லையே... 80 ஆகி விட்டதாம்!

என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை!


கோலிவுட்டில் திடீர் ஹீரோயின் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதாவது முன்னணி நாயகிகள் யாரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. சற்று கூர்ந்து நோக்கினால் இது புலனாகும்.

இதை கிட்டத்தட்ட முன்னணி நாயகிகள் இல்லாத வறட்சி நிலை என்று கூட கூறலாம்.

முதலில் ஆசின். படு வேகமாக தமிழிலும், தெலுங்கிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்த ஆசின், ஒரு அருமையான நாளில் மும்பைக்கு இடம் பெயர்ந்து போனார். இப்போது அங்கேயே செட்டிலாகி விட்டார். நல்ல படம் கிடைத்தால்தான் தமிழில் மறுபடியும் நடிப்பேன் என்கிறார்.

அடுத்து நயனதாரா. கையில் இருக்கும் ஆதவன் படத்தைத் தவிர வேறு எந்தப் படத்திலும் கமிட் ஆகவில்லை நயனதாரா. புதிய கமிட்மென்ட்டில் அவர் இருப்பதால் அந்தப் பஞ்சாயத்தை தீர்த்து விட்டுத்தான் மறுபடியும் அவர் நடிப்பார் என்று பேச்சு உள்ளது.

அடுத்தவர் ஷ்ரியா. கந்தசாமியில் நடித்து முடித்து விட்ட ஷ்ரியா, தற்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.

பிறகு திரிஷா. இவர் புதிதாக பாலிவுட் பக்கம் போன தென்னகத்து நாயகி. புதிய தமிழ்ப் படம் எதையும் இப்போதைக்கு வேண்டாம் என முடிவு செய்து வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்து விட்டார். அக்ஷய்குமாருடன் இணைந்து நடிக்கப் போகும் நாளுக்காக தயாராகி வருகிறார்.

இப்படி முன்னணி நாயகிகள் அனைவரும் சொல்லி வைத்தாற் போல சடாரென்று மாயமாகி விட்டதால், தமிழத் திரையுலகில் முதல் முறையாக முன்னணி நாயகிகள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமன்னா, பிரியா மணி ஆகியோர் மட்டுமே இப்போது பாக்கி உள்ளனர். அவர்களில் தமன்னா படு பிசியாக உள்ளார். பிரியா மணி மட்டும்தான் தற்போது கொஞ்சம் ப்ரீயாக இருப்பவர்.

இந்த நிலையில், கோலிவுட்டில் ஏற்பட்டுள்ள இந்த புதிய சூழ்நிலையைப் பயன்படுத்தி டாப் கியரில் உள்ளே புகுந்து டாப்புக்குப் போகும் ஆசையில் உள்ளாராம் அருந்ததீ புகழ் அனுஷ்கா.

வேட்டைக்காரனில் விஜய்யுடன் ஜோடி போட்டிருக்கும் அவர் அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

விஜய் படத்தைத் தொடர்ந்து சூர்யாவுடன் சிங்கம், அவரது தம்பி பருத்தி கார்த்தியுடன் ஒரு படம் என புக் ஆகியுள்ளார் அனுஷ்கா.

இப்படி முன்னணி நாயகிகள் 'ஒட்டுக்காக' எஸ்கேப் ஆகி விட்டதால் ஹீரோக்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் குழம்பிப் போயுள்ளனராம்.

போனவாளைப் பார்த்து ஏன் புலம்பிண்டிருக்கேள், இருக்கிறவாளை வெச்சு அட்ஜஸ்ட் பண்ணுங்கோண்ணா..

மீண்டும் இணையும் கஜினி நாயகர்கள் - மும்மொழியில் உருவாகிறது

கஜினியைக் கொடுத்த இரு பெரும் நாயகர்களான சூர்யாவும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், மீண்டும் ஒரு மெகா திட்டத்திற்காக இணைகிறார்கள்.

ஒவ்வொரு மொழியாக அடித்தால் போதாது என்றோ என்னவோ, ஒரே நேரத்தில் மூன்று மொழிகளையும் கலக்கும் நோக்கில், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளி்ல இந்தப் படம் உருவாக்கப் போகிறார் முருகதாஸ்.

கஜினி, சூர்யாவுக்கு மிகப் பெரிய பிரேக். அதேபோல இந்தியிலும் கஜினியின் ரீமேக் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தமிழில் கஜினியின் நாயகனான சூர்யாவும், முருகதாஸும் மீண்டும் கை கோர்க்கிறார்கள். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் இப்படம் உருவாகிறது.

படத்தைத் தயாரிக்கப் போவதும் ஒரு பெரும் புள்ளிதான். துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், குருவி படத் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்தான் இந்த மெகா படத்தைத் தயாரிக்கிறார்.

இதுகுறித்து முருகதாஸ் கூறுகையில், ஆமாம், 3 மொழிகளில் இப்படத்தை உருவாக்கப் போகிறோம். சூர்யாதான் 3 மொழிகளிலும் நாயகன். மற்ற கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இது ஒரு முழுமையான ஆக்ஷன் படம். என்ன மாதிரியான ஆக்ஷன் என்பதை தற்போது இறுதி செய்து கொண்டிருக்கிறோம் என்றார் முருகதாஸ்.

சரி, ஷாருக்கானுடன் இணைவது என்னவாயி்ற்று என்று கேட்டபோது, ஷாருக்குடன் ஒரு கதையை டிஸ்கஸ் செய்தேன். அந்தக் கதையை இப்போது படமாக்கப் போகிறோம். எப்போது என்று கூற முடியாது.

நிச்சயம் இது ரமணாவின் ரீமேக் இல்லை. முற்றிலும் புதிய கதை. ஒரிஜினல் கதை என்றார் முருகதாஸ்.

தற்போது சூர்யா ஆதவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து ஹரி இயக்கத்தில் சிங்கத்தில் நடிக்க வேண்டியுள்ளது. இவற்றை முடித்த பின்னர் முருகதாஸ் படத்துக்கு வருகிறார் சூர்யா.

கம்பராமாயணமே ஒரு ரீமேக்தான்-கமல்!


பழைய படங்களை ரீமேக் செய்வது தவறு அல்ல... அப்படிப் பார்த்தால் கம்பராமாயணமே ஒரு ரீமேக்தான், என்றார் நடிகர் கமல்ஹாசன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- கலைஞானி கமல்ஹாசன் இணைந்து நடித்த காலத்தால் மறக்க முடியாத சூப்பர் ஹிட் படமான, 'நினைத்தாலே இனிக்கும்' படத்தின் பெயரை மீண்டும் ஒரு படத்துக்குச் சூட்டியுள்ளனர்.

இது, கேரளாவில் மிகப் பெரிய வெற்றிபெற்ற 'கிளாஸ்மேட்' என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

பிருதிவிராஜ், ஷக்தி (டைரக்டர் பி.வாசுவின் மகன்), கார்த்திக்குமார், பிரியாமணி ஆகியோர் இணைந்து நடித்து இருக்கிறார்கள். ஜி.என்.ஆர்.குமரவேலன் டைரக்டு செய்துள்ளார். கமல்ஹாசன் நடித்த பிளாக்பஸ்டர் படங்களான 'கல்யாணராமன்', 'கடல் மீன்கள்' ஆகிய படங்களை உருவாக்கிய இயக்குநர் ஜி.என்.ரங்கராஜனின் மகன்தான் குமரவேலன். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை நடிகர் கமலஹாசன் வெளியிட, 'நினைத்தாலே இனிக்கும்' படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் கமல்ஹாசன் பேசியதாவது:

விஜய் அன்டனி இசையமைத்த 'நாக்குமுக்க' பாடலை நான் தினமும் கேட்கிறேன் (இது கமலுக்காக ராஜா போட்ட 'அண்ணாத்தே ஆடறார்ட பாடலின் ரீமேக்தான்!). என் மகள் சுருதி ஹாசன் வைத்திருக்கும் செல்போனின் 'ரிங் டோன்' இதுதான். அதனால் அந்த பாடலை நான் தினமும் கேட்கிறேன். சுருதியின் குழந்தை கூட இந்த பாடலை கேட்டால், ஆச்சரியம் இல்லை.

நினைவுகள் இருக்கும்போது, இனிமையான எண்ணங்களும் இருக்கும். பழைய படங்களை மீண்டும் தயாரிப்பது (ரீமேக்) பற்றி இங்கே குறிப்பிட்டார்கள். அது தவறு அல்ல. கம்பராமாயணம் கூட ரீமேக்தான். இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கும் படமும் ரீமேக்தான்.

ஹேராம், குணா... 'பொன் குஞ்சுகள்'!

'ஹேராம்' படம் பற்றி பிருதிவிராஜ் சொன்னார். அவருடைய ரசனை, இன்னும் சிலருக்கும் இருந்திருந்தால், படம் வெற்றிபெற்று இருக்கும். அதேபோல்தான் 'குணா'வும். தவறுக்கு, இந்திய சரித்திரம் தெரியாது. எனக்கு அந்த இரண்டு படங்களும் பொன் குஞ்சுகள்தான்.

தமிழ் நன்றாக பேச தெரிந்த நடிகைகளில் பிரியாமணியும் ஒருவர். அவர் மற்ற மொழிகளையும் கற்று பேச முயற்சிக்கிறார் என்று கேள்விப்பட்டேன். நல்ல விஷயம். எல்லா மொழிகளும் வணக்கத்துக்குரியவைதான்," என்றார் கமல்.

விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ், நடிகர்கள் பிருத்விராஜ், ஷக்தி, கார்த்திக்குமார், விஷ்ணு, நடிகை பிரியாமணி, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

ஷ்ரியா 'சைஸ் ஜீரோ'!

கரீனா கபூர் 'தலைமையிலான' சைஸ் ஜீரோ 'குழுமத்தில்' இணைந்துள்ளார் ஷ்ரியா.

ஒல்லிபிச்சான் என்பதைத்தான் படு நேக்காக சைஸ் ஜீரோ என்று ஜென்டிலாக சொல்லிக் கொள்கிறார்கள். கிட்டப் போய்ப் பார்த்தால் லேசாக எலும்பு எட்டிப் பார்க்கும். அப்படி ஒரு மெலிசான உடம்பை எட்டுவதற்குப் பெயர்தான் சைஸ் ஜீரோ.

இந்த சைஸ் ஜீரோ என்ற வார்த்தை மிகவும் பிரபலமானவது கரீனா கபூரால்தான். அவர் தான் முதன் முதலில் தனது உடலை படு ஒல்லியாக மாற்றி அனைவரையும் வியக்க வைத்தார்.

அவரைத் தொடர்ந்து ஏகப்பட்ட நடிகைகள் சைஸ் ஜீரோவுக்கு மாறினார். ஷில்பா ஷெட்டி கூட சைஸ் ஜீரோவுக்கு மாறினார். இப்போது அந்த வரிசையில், ஷ்ரியாவும் இணைந்துள்ளார்.

சிவாஜி பட நாயகியான ஷ்ரியா, இந்தியிலும் தனது தடத்தை அழுத்தமாக பதிக்க முயன்று வருகிறார். அதற்கு முதல் படியாக சைஸ் ஜீரோவுக்கு மாறியுள்ளாராம்.

கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, வாய்க் கட்டுப்பாடு என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து இந்த சாதனையைப் படைத்துள்ளாராம் ஷ்ரியா.

பாலிவுட் இளசுகளுக்கு மத்தியில் எனது மெலிசு உடம்பு ரொம்பவே டாப்பாக இருக்கும் என்று பெருமையுடன் கூறுகிறாராம் ஷ்ரியா.

ஷ்ரியாவின் இந்தப் புதிய கோலத்தை கோலிவுட் ரசிகர்களும் காணலாம். கந்தசாமி படத்தில் சில காட்சிகளில் தனது உடல் அழகை எடுப்பாக காட்டும் வகையிலான காஸ்ட்யூம்களை அணிந்து ஆடியுள்ளாராம் பாடல் காட்சிகளில்.

காலேஜ் போன மாதிரி இருந்திச்சு! ப்ரியாமணி உற்சாகம்...


மலையாளத்தில் சக்கை போடு போட்ட கிளாஸ் மெட் படம்தான் தமிழில் நினைத்தாலே இனிக்கும் என்ற பெயரில் உருவாகிறது. மீண்டும் கோகிலா, கடல் மீன்கள் போன்ற படங்களை இயக்கி தமிழ்சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்த ஜி.என்.ரங்கராஜனின் புதல்வர் ஜிஎன்ஆர்.குமரவேலன் இப்படத்தை இயக்குகிறார். காலேஜ் டேஸ் படத்தின் கதாநாயகன் ப்ருத்திவிராஜ்தான் இப்படத்திலும் நாயகன்.

இதுவரைக்கும் சுமார் ஐம்பது படங்களில் நடிச்சிட்டேன். என்னுடைய கேரியரில் கிளாஸ் மெட் ரொம்ப முக்கியமான படம். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள் என்றதும், கெடுத்திடாம இருக்கணுமேன்னு ரொம்ப கவலைப்பட்டேன். கதையின் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கங்கே குமரவேலன் மாற்றம் செய்யிறேன்னு சொன்னதும், நான் வேணாம்னு தடுத்தேன். ஆனால், அவர் கேட்கவில்லை. அவர் நினைத்ததைதான் எடுத்தார். இப்போது பார்த்தால் நான் அசந்து போகிற அளவுக்கு வந்திருக்கு படம் என்றார் ப்ருத்விராஜ்.

அப்பா அடிக்கடி சொல்லியிருக்காங்க, ஸ்ரீதேவி மேடம் படப்பிடிப்புக்கு சொன்ன நேரத்திலே வருவாங்க என்று. ப்ரியாமணியும் இன்னொரு ஸ்ரீதேவி மாதிரி அவ்வளவு பஞ்சுவாலிடியா இருக்காங்க என்றார் டைரக்டர் குமரவேலன். அவ்வளவுதான், ப்ரியாமணியின் முகத்தில் அப்படியொரு பரவசம். நாங்க எல்லாரும் ஷ§ட்டிங் ஸ்பாட்டிலேயும் ரொம்ப ஜாலியா அரட்டை அடிச்சிட்டு இருப்போம். எவ்வளவுதான் சிரிச்சிட்டு இருந்தாலும், ஷாட்டுன்னு வந்திட்டா, சோக காட்சிகளில் பிச்சு உதறிடுவார் ப்ருத்வி. நாங்க எல்லாருமே காலேஜ் போன மாதிரி இருந்திச்சு என்றார் ப்ரியாமணி.

படப்பிடிப்பை பற்றி நினைத்தாலே இனிக்கும் என்று இவர்கள் சொல்ல, படமே இனிக்கணும் என்ற கவலை தெரிந்தது இயக்குனரின் முகத்தில். என்னதான் மீன் குஞ்சாக இருந்தாலும், முதல் தடவையாக நீந்துகிறார் இல்லையா?

காக்க வைத்த ஹீரோக்கள்? மீனா அப்செட்!


எத்தனையோ சினிமாவில் கல்யாணம் கட்டிக் கொள்வது மாதிரி நடித்திருந்தாலும், மீனாவின் கழுத்தில் நிஜ தாலி ஏறிய அந்த நிமிடம்... ஐஸ்கட்டியை கொட்டிய ஜில் நிமிடம். ஹனிமூனுக்கு எங்கே போவது என்பதையெல்லாம் இனிமேல்தான் தீர்மானிக்க போகிறதாம் ஜோடி. இதற்கிடையில் தமிழ்சினிமாவின் முன்னணிகளுக்கெல்லாம் நேரில் போய் இன்விடேஷன் வைப்பதையே முதல் பணியாக கருதினார் மீனா.

தன்னுடன் நடித்த ஹீரோக்கள், நடிக்காவிட்டாலும் அன்புசெலுத்திய ஹீரோக்கள் என்று மீனாவின் லிஸ்ட்டில் ஏகப்பட்ட விவிஐபிகள். எல்லாரையும் தனித்தனியாக பார்த்து அழைப்பிதழ் வைத்திருந்தார் அவர். சென்ற இடமெல்லாம் வாழ்த்துக்கள் கிடைத்தது. ஒரு சில இடத்தில் அவரே எதிர்பார்க்காத ஆன்ட்டி ரெஸ்பான்ஸ் என்கிறார்கள்.

அதிலும் தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் இருவர், மீனாவை உட்கார சொல்லு. வர்றேன் என்று சொல்லி பல மணி நேரம் காக்க வைத்தார்களாம். மணிக்கணக்காக காத்திருந்தவரிடம் சாவகாசமாக வந்து அழைப்பிதழை வாங்கினார்களாம்.

ஏன் இந்த கொல வெறி? வேறொன்றுமில்லை, பாசம் வச்ச பச்சக்கிளி பறந்து போவுதேங்கிற சலிப்புதான்!

Monday, July 13, 2009

பாராட்டுங்கள்... பாராட்டுங்கள்..


நாம் எல்லோருமே எப்போதும் மற்றவர்களது குறைகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். அதில்தான் எல்லோருக்கும் ஆர்வமும் அதிகம்.

ஆனால் காதலுக்கும், திருமணத்திற்கும் இது பொருந்தாது. பொதுவாக காதலிக்கும்போது குறைகள் கூட நிறைகளாகத் தெரியும் என்பார்கள். அதுதான் திருமணத்திற்கு பின்பு பெரிய பிரச்சினைகளையும் கிளப்புகிறது. அதுவேறு கதை.

இங்கு நாம் சொல்ல வந்தது என்னவென்றால், ஒவ்வொரு பெண்ணும், தனது காதலனோ, கணவனோ தான் செய்யும் சிறந்த செயல்களுக்கு தன்னைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.

பாராட்டுத்தான் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் டானிக். அவர்கள் செய்யும் ஒரு செயலோ, சமையலோ நன்றாக இல்லாத பட்சத்தில் நீங்கள் கூறும் குறைகளை விட 10 மடங்கு அதிகமாக ஒரு நல்ல செயலை செய்யும் போது பாராட்டிப் பாருங்கள்.

பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்புமிக்க பரிசுப் பொருளை விட, ஒரு அன்பான வார்த்தையும், பாராட்டும் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

அதற்காக பெண்களின் அழகை மட்டும் பாராட்டிக் கொண்டே இருக்காதீர்கள். காதலன் தனது அழகை மட்டும் பாராட்டிக் கொண்டிருக்கும்பட்சத்தில், அவனிடம் எச்சரிக்கையாகிவிடுவார்கள் பெண்கள்.

இவன் நம் மனதைவிட, உடலையே அதிகம் விரும்புபவன் என்று முடிவு கட்டிவிடுவார்கள். அழகினைத் தவிரவும் பெண்களைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் உள்ளன.

பாராட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் போதாது. தனது காதலியின்/மனைவியின் நற்குணங்களை, அவர்களது திறமைகளை கண்டறிய வேண்டும். அப்போதுதான் அவற்றைப் பற்றி நீங்கள் பாராட்ட முடியும்.

மேலும், அவர்களது நண்பர்களிடமும், இவரைப் பற்றி ஓஹோ என்று புகழ்ந்து பாருங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு வாழும்போதே சொர்க்கம் தெரியும்.

ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு பாராட்டும் மனநிலை இருப்பதில்லை. ஒரு பெண் தனது கணவனைப் பற்றி எவ்வளவு குறை பேசினாலும், அவர் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டு வரும்போது அது பலருக்கும் தெரிந்துவிடும் மனைவி மூலமாக.

அவர்களது பாராட்டு, குறை சொல்வதை விட 100 மடங்கு உயர்வாக இருக்கும். அதுபோல ஆண்களும் பாராட்டவும், மனம் விட்டு பேசவும் வேண்டும்.

இதை ஒவ்வொரு ஆணும் கடைபிடித்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் நல்ல பலன் கிட்டும்.

இர‌ட்டை‌த் த‌ம்ப‌திக‌‌ளி‌ன் ‌திருமண‌ம்

ஜீ‌ன்‌ஸ் ‌திரை‌ப்பட‌ப் பா‌ணி‌யி‌ல் ‌திருமண‌ம். இர‌ட்டைய‌ர்களாக‌ப் ‌பிற‌ந்த சகோத‌ரிகளு‌க்கு‌ம், இர‌ட்டைய‌ர்களாக‌ப் ‌பிற‌ந்த சகோதர‌‌ர்களு‌‌க்கு‌ம் ‌சிற‌ப்பாக ‌திருமண‌ம் முடி‌ந்தது. எ‌ன்ன ‌ ஜீ‌ன்‌ஸ் பட‌த்‌தி‌ல் ‌இ‌ன்னொரு ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌ய் ‌மி‌ஸ்‌ஸி‌ங்.

ரஷியாவி‌ன் பெச்சோரா நகரை சேர்ந்த டிமிட்ரி செமியோனாவா எ‌ன்ற பெ‌‌ண்‌ணி‌ற்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். இந்த இரட்டை சகோதரர்களு‌ம் தோ‌ற்ற‌த்‌தி‌ல் ஒ‌ன்று போலவே இரு‌ப்பா‌ர்க‌ள்.

இ‌ந்த சகோதர‌ர்க‌ள், த‌ங்களை‌ப் போல இர‌ட்டைய‌ர்களாக‌ப் ‌பிற‌ந்து தோ‌ற்ற‌த்‌தி‌‌ல் ஒ‌ன்று போல இருக்கும், லிலியா, லியானா சகோதரிகளை ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டு‌ள்ளன‌ர். ர‌‌‌ஷ‌்யா‌வி‌ன் கிறிஸ்தவ தேவாலயத்தில் வெகு ‌சிற‌ப்பாக இ‌ந்த திருமணம் நடந்தது.

ஆனா‌ல், ‌ திருமண‌த்‌தி‌ற்கு வ‌ந்தவ‌ர்க‌‌ள் பலரு‌ம் எ‌ந்த மண‌மகனு‌க்கு, எ‌ந்த மணமக‌ள், யா‌ர் இளையவ‌ர், யா‌ர் மூ‌த்தவ‌ர் எ‌ன்று குழ‌ம்‌பி‌ப் போ‌யின‌ர்.

இர‌ட்டை‌ச் சகோதரர்களின் தா‌ய் கூறுகையில், என் மகன்களில் யார் மூ‌த்தவ‌ன், யார் இளையவ‌ன் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியும். அவர்களுக்குள் உள்ள வேறுபாடு என்ன என்பது எனக்கு தெரியும். ஆனால் பெண்களை பொறுத்தவரை எனக்கு‌ம் குழப்பம் தான்'' என்று ‌சி‌ரி‌த்து‌க் கொ‌ண்டே கூறு‌கிறா‌ர்.

இ‌ந்த ‌விஷய‌த்‌தி‌ல் மணப்பெண்களு‌க்கு எ‌ந்த குழ‌ப்பமு‌ம் இ‌ல்லை. அவ‌ர்க‌ள் ரொம்ப கெட்டிக்காரர்களாக இரு‌க்‌கிறா‌ர்க‌ள். த‌ங்க‌ள் கணவர் ‌திரு‌ம்‌பி இரு‌ந்தாலு‌ம் கூட அவரை ச‌ரியாக எ‌ங்களா‌ல் க‌ண்டு‌பிடி‌க்க முடியு‌ம் எ‌ன்று சவா‌ல் ‌விடு‌கிறா‌ர்க‌ள். (அ‌ப்போ முக‌த்த‌ப் பா‌ர்‌த்தா க‌ண்டு‌பிடி‌க்க‌த் தெ‌ரியாதோ?)

உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌‌ஞ்சா போது‌ம். குடு‌ம்பத்து‌க்கு‌ள்ள ‌பிர‌ச்‌சினை வ‌ந்து‌ட‌க் கூடாது பாரு‌ங்க.

உதயநிதி சினிமாவில் இருப்பது பிடிக்கவில்லை - துர்கா ஸ்டாலின்

துணை முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி மிக இளம் வயதில் தயாரிப்புத் துறையில் கால்பதித்தவர். இவரது ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தொடர்ந்து வெற்றிப் படங்களைத் தந்து தயாரிப்புத் துறையில் முன்னணி ஜம்பவான்கள் வரிசையில் இடம்பிடித்திருப்பவர் உதயநிதி.

ஆரம்பத்தில் சினிமாத் துறையில் வருவதற்கு குடும்பத்தினருடன் கொஞ்சம் போராடவே வேண்டிருந்தது. இருந்தாலும் தாத்தாவும், அப்பாவும் கொடுத்த ஆதரவால் இன்று வெற்றித் தயாரிப்பாளராகி உள்ளார்.

திரைத்துறையில் முன்னணி ஹீரோக்கள் விஜய், சூர்யா, ஆர்யா போன்றவர்களின் நெருங்கிய நண்பர் என்பதும், முதல்வரின் பேரன், துணை முதல்வரின் மக‌ன் என்பதும் தொழிலுக்கு உதவுகின்றன. ஆனால் இதில் எதுவொன்றையும் உதயநிதி பயன்படுத்திக் கொள்வதே இல்லை.

இப்படி ஏறுமுகம் ஒருபுறமிருக்க, அண்மையில் வெளியான தினசரி பேட்டியில், உதயநிதி சினிமாவில் இருப்பது கூட அவ்வளவாக பிடிக்கவில்லை என்றாலும், அவனது விருப்பத்தை தடைபோடுவதில்லை" என்று உதயநிதியின் அம்மா துர்கா ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரக் காதலி - சஸ்பென்ஸ் த்ரில்லர்


இயக்குனர் விக்கி, மின்சாரக் காதலி எனும் சஸ்பென்ஸ் படமொன்றை இயக்குகிறார். ஹிந்தியில் இஷா கோபிகர், ப்ரீத்தி, கிர‌ண்ஜி நடித்து மாபெரும் வெற்றியைத் தந்த 'ஹசீனா' படமே தமிழில் 'மின்சாரக் காதலி' ஆகிறது.

மைக்கேல்ராஜ் என்பவர் வசனம் எழுத, ராஜன் என்பவர் இசையமைக்கிறார். சேகர் என்பவர் பாடல் எழுதுகிறார். அர்ஜுன்மிஸ்ரா என்பவர் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீசுதர்ஸனா பிலிம்ஸ் சுதாகர் என்பவர் தயாரிக்கிறார்.

"என்பவர்" பட்டியலைப் பார்த்தே தெரிந்திருக்கும் இவர்கள் எல்லாமே புதியவர்கள் என்பது. படம் இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

ஹோட்டலில் நடனமாடும் பெண் ஒருவருக்கும், அங்கு வந்து செல்லும் தொழிலதிபர் ஒருவருக்கும் இடையே நடக்கும் காதல், கல்யாணம், கல்யாணத்துக்கு முன் ஏற்படும் தடைகள் அது சம்பந்தமான சஸ்பென்ஸ் என நீள்கிறது கதை.

ஹிந்தியை போல் படம் அமைந்தால் படம் வெற்றிபெறும் என்பது டீமின் எதிர்பார்ப்பு.

எல்லோராலும் பேசப்படும் 'அபிநயா'


நாடோடிகள் படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பில் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்த அபிநயாதான் இப்போது ரசிகர்களின் லேட்டஸ்ட் டாக்.

அபிநயாவுக்குத்தான் வாய் பேச முடியாதே தவிர, இவரைப் பற்றிய பேச்சுக்கள் எட்டு திசையும் ஒலிக்கின்றன. அபிநயா கேட்டும் திறன் இழந்தவராக இருக்கிறாரே தவிர, யாரைப் பார்த்தாலும் இவரைப் பற்றித்தான் கேட்கிறார்கள்.

பேட்டிக்காக பத்திரிக்கை அலுவலகங்கள், சேனல்களிலிருந்து ஒரு நாளில் 10 தடவையாவது போன் வந்துவிடுகிறது இவரது வீட்டிற்கு. குறுஞ்செய்தி வாழ்த்துக்கள், இணையதள இதழ்களில் அபிநயாவின் படங்களும் செய்திகளும் ஊர்வலமாய்...

இப்படி நாலாபக்கமும் அநியாயத்துக்கு நல்ல பெயர் வாங்கியுள்ள அபிநயாவுக்கு நாடோடிகள் டீமான, சமுத்திரக்கனி, சகிச்குமார் அனைவரும் சொல்லியிருக்கும் ஒரே அட்வைஸ், எல்லா படத்தையும் ஒத்துக்காதே, நல்ல படமா, குறைந்த வசனம், நிறைய நடிக்க ஸ்கோப் உள்ள படமா தேர்ந்தெடுத்து நடி என்பதே ஆகும்.

வாழ்த்துக்கள் அபி.

சத்யராஜ் வீட்டிலிருந்து இன்னொரு புதுவரவு


நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா நடிக்கப் போகிறார் எனக் கத்துகிறது கோடம்பாக்கத்து குருவி.

சிபிராஜின் அக்காவான திவ்யா 'லண்டன் மாப்பிள்ளை' எனும் படத்தில் ஹீரோயினாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 'மண்' படத்தை இயக்கிய இயக்குனர் புதியவன்தான் லண்டன் மாப்பிள்ளையையும் இயக்குகிறார். இவர்தான் திவ்யாவை நடிக்கவைக்கும் பூங்வாங்க வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

சத்யராஜ், சிபி இதுகுறித்த பேச்சுவார்த்தையில் ஏறக்குறைய க்ரீன் சிக்னல் போட்டுவிட்டார்கள். ஆனாலும் இன்னும் முடிவாகவில்லை.

இதுகுறித்து திவ்யாவிடம் கேட்டதற்கு, தியேட்டர் டிராமாவில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன். ஆனால் சினிமாவில் நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை" என கோடம்பாக்கத்து முறைப்படி திருவாய் மலர்ந்திருக்கிறார்.

பிரபுதேவா நிறைய சாதிக்கணும்! -கமல்ஹாசன் பேச்சு


நர்த்தனஷாலா! பிரபல நடன இயக்குனர் ரகுராம் புதிதாக துவங்கப் போகும் நாட்டியப்பள்ளி இது. இப்படி ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் இந்த நல்ல காரியத்தை குத்துவிளக்கேற்றி துவங்கி வைக்க வருமாறு அழைத்திருந்தாராம் கமல்ஹாசன், பிரபுதேவா இருவரிடமும். நாங்கள் துள்ளி ஆடிய இடம் இது. எப்போ வேணுமோ சொல்லுங்க, வர்றோம் என்று இருவருமே ஆர்வம் காட்ட, 13ந் தேதி 12 மணிக்கு குது£கலத்துடன் குத்துவிளக்கேற்றினார்கள் இருவரும்.

நானும் ரகுராம் மாஸ்டரும் ஒன்றாகவே சுற்றுவோம். படிச்ச குடும்பத்திலிருந்து நாங்கள் வந்திருந்தாலும் எங்களுக்கு படிப்பு ஏறவே இல்லை. பள்ளிக்கூடத்துக்கு போறேன் என்று பனகல் பார்க்கிலே படுத்து கிடந்து விட்டு வீட்டுக்கு வருவார் ரகுராம். அப்படி ஒரு சிறந்த கல்வியாளர் அவர் என்று கமல் சொல்ல, அடக்க முடியாமல் சிரித்தார் ரகுராம். நானும் அவரும் டான்ஸ் மாஸ்டர்களாக சில படங்களில் வொர்க் பண்ணியிருக்கிறோம் என்ற கமல், பழைய நினைவுகளில் மூழ்கினார். பிரபுதேவாவின் அப்பா தன்ராஜ் மாஸ்டரிடமிருந்து நின்றதால்தான் நான் அந்த இடத்தில் வேலைக்கு சேர முடிந்தது.

பிரபுதேவாவிடம் ஏராளமான திறமைகள் இருக்கு. அவரை வீணடிச்சிட வேண்டாம். லண்டனுக்கு அனுப்பி படிக்க வைங்கள் என்றேன் அவரது அப்பாவிடம். ஆனால், இங்கிருந்தபடியே அங்குள்ள கலைகளை ஏகலைவன் மாதிரி கற்றுக் கொண்டிருக்கிறார் அவர். பிரபுதேவா சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு என்றார் கமல்.

என் பொண்ணு காயத்ரி ரகுராம், இந்த நாட்டியப்பள்ளியை அமெரிக்காவில் நடத்திட்டு இருக்காங்க. 150 மாணவர்கள் படிக்கிறாங்க. அதில் வெள்ளைக்காரர்களும் அடக்கம். அதே மாதிரி ஸ்கூல் இன்னும் நிறைய இடங்களில் திறக்கணும்னு ஆசை இருக்கு. அதையும் கமல்தான் வந்து திறந்து வைக்கணும் என்ற ரகுராம் மாஸ்டரின் ஆசைக்கு மேடையிலேயே ஒப்புதல் அளித்தார் கமல்

'அரைகுறை' பூர்ணா!

நான் தமிழில் அரைகுறையாகத்தான் பேசுகிறேன். இது வருத்தமாக இருக்கிறது. இனிமேல் முழுமையாக தமிழைக் கற்றுக் கொண்டு எனக்கு நானே டப்பிங் பேசப் போகிறேன் என்கிறார் தலையிலடித்து சத்தியம் செய்யாத குறையாக பூர்ணா.

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் தமிழுக்கு வந்த கேரளத்து கதகளி பூர்ணா. அசப்பி்ல் அப்படியே ஆசினைப் போல இருக்கிறார் என்று விஜய் சொல்லியதால் உச்சி குளிர்ந்து போன பூர்ணா, ஆசினைப் போலவே சிரிக்கிறார், தலையை அசைக்கிறார்.

இப்போது பார்த்திபனுடன் வித்தகன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கை நிறையப் படங்கள் இருப்பதால் வாய் நிறைய சிரிப்பும் இருக்கிறது பூர்ணாவிடம்.

உங்க குரல் நன்றாக உள்ளதே, ஏன் டப்பிங் பேசப்படாது என்று யாராவது பூர்ணாவிடம் கேட்டால், உட்கார வைத்து ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்து விடுகிறார்.

எனக்கு நல்ல குரல்தான். ஆனால தமிழ் அரைகுறையா இருக்கே. அதனால்தான் தமிழ் நன்றாக கற்றுக் கொண்டு நானே டப்பிங் பேச உறுதி பூண்டுள்ளேன் என்கிறார்.

அது சரி பூர்ணா, வித்தகன் படத்துக்கு பூர்ணாதான் வேண்டும் என்று விடாப்படியாக கூறி புக் செய்தாராமே பார்த்திபன், மெய்யாலுமா..?

மீண்டும் ஏமாற்றிய எங்கள் ஆசான்!

நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டு, தியேட்டர்களும் அறிவிக்கப்பட்ட நிலையில், எங்கள் ஆசான் திரைப்படம் மீண்டும் சத்தமில்லாமல் முடங்கிவிட்டது.

காரணம்? பணப் பிரச்சினைதான்!

கடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் எங்கள் ஆசான். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவித்து, வெளியாகவிருக்கும் தியேட்டர்களின் பெயர்களையும் விளம்பரங்களில் குறிப்பிட்டனர்.

ஆனால் பணப் பிரச்சினை காரணமாக படம் வெளியாவது தள்ளிப் போனது.

இந்த முறை நிச்சயம் ஜூலை 11-ல் வெளியிட்டு விடுவோம் என அறிவித்தார் தயாரிப்பாளர் தங்கராசு. விஜய்காந்தும் நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

ஆனால் பணப்பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படாததால் இந்த முறையும் சொன்னது போல ரிலீசாகவில்லை எங்கள் ஆசான்.

கஜேந்திரா படத்திலிருந்து எங்கள் ஆசான் வரை விஜய்காந்த் நடித்த படங்கள் அனைத்தும் ஏதோ ஒரு கட்டத்தில் சிக்கலுக்குள்ளாகி பஞ்சாயத்துக்குப் போவது கவனிக்கத்தக்கது.

சுனேனா'.. வற்புறுத்துகிறேனா?-நகுலன்

"சுனேனாதான் என்னுடைய ஜோடியாக நடிக்க வேண்டும் என நான் கட்டாயப்படுத்துவவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. யார் என்னுடைய ஜோடி என்பதை இயக்குநரே தீர்மானிக்கிறார்", என்கிறார் நகுலன்.

பாய்ஸில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகி, சன் பிக்சர்ஸின் காதலில் விழுந்தேன் மற்றம் மாசிலாமணி மூலம் மூன்னணி இளம் நாயகர்களில் ஒருவராக மாறியிருப்பவர் நகுலன். தேவயானியின் தம்பி இவர்.

சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

பாய்ஸுக்குப் பிறகு நான் நடித்த இரு படங்களையும் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்த வெற்றிக்கு காரணம் எங்களது டீம் ஒர்க்தான். சன் டிவியின் விளம்பரங்களும் இந்த வெற்றிக்கு உதவின. ஆனாலும் இது கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி.

எனது படங்களின் நாயகியை நான் தீர்மானிப்பதில்லை. இயக்குநர் - தயாரிப்பாளரே முடிவு செய்கின்றனர். சுனேனாதான் ஜோடியாக வேண்டும் என்று நான் வற்புறுத்துவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. நிஜ வாழ்க்கையி்ல் என்னுடைய ஜோடி யார் என்பதை என் அம்மாதான் முடிவு செய்வார்.

எனக்கான கதைகளை நான்தான் கேட்டு முடிவு செய்கிறேன். என் அக்கா, அத்தான் அல்லது அம்மா யாரும் இதில் தலையிடுவதில்லை. காரணம் தொழில் வேறு, தனிப்பட்ட உறவுகள் வேறு.

என் அக்கா தேவயானியுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு தயக்கமில்லை. வாய்ப்பு வந்தால் சந்தோஷமாக நடிப்பேன்.

அடுத்து நான் கந்தகோட்டை படத்தில் நடிக்கிறேன். அதற்கடுத்து சன் பிக்சர்ஸ் படத்தில் நடிக்கிறேன். ஒரு நேரத்தில் ஒரு படம்தான் என்பதில் தெளிவாக இருக்கிறேன். சூர்யா, விக்ரம் மாதிரி வித்தியாசமாக கெட்டப் மார்றி நடிக்கவும் ஆசைதான். அதற்கேற்ப கதை அமைந்தால் ஒப்புக் கொள்வேன், என்றார் நகுலன்.

தனது மேனேஜராக மூர்த்தி, பிஆர்ஓவாக விகே சுந்தரை நியமித்திருப்பதாகவும் இன்று அறிவித்தார்.

தாத்தா'வை ஹீரோவாக்கும் சசிக்குமார்!

வித்தியாச இயக்குநர் வரிசையில் படு வேகமாக மேலே போய் விட்ட சசிக்குமார் அடுத்த படத்துக்குத் தயாராகி விட்டார்.

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்த புத்திசாலி சசிக்குமார். இயக்குநராக, தயாரிப்பாளராக, நடிகராக அந்தப் படத்தில் அசத்திய சசிக்குமார், இப்போது நாடோடிகள் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் ஆணித்தரமாக நிரூபித்து விட்டார்.

இடையி்ல் பசங்க படத்தை தயாரித்து வெளியிட்டு அதையும் ஹிட்டாக்கி சசிக்குமார் இப்போது தனது நான்காவது படைப்புக்குத் தயாராகி விட்டார்.

இந்தப் படத்தின் இயக்குநர் இவர்தான். ஆனால் படத்தில் நடிக்கவில்லை. இயக்குநர் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படத்தை தமிழ் தவிர இந்தியிலும் ஒரே நேரத்தில் இயக்கி அகலக் கால் வைக்கிறார் சசிக்குமார்.

படத்தின் முக்கிய விசேஷம் என்னவென்றால் சிக்கென்ற இளைஞர்கள் யாரும் இதில் ஹீரோவாக நடிக்கவில்லை. மாறாக 54 வயது முதியவர்தான் இப்படத்தின் நாயகனாம். அந்த நாயகன் ஒரு புதுமுகமாம். அந்தக் கேரக்டருக்குரியவரைத் தேடிக் கொண்டிருக்கிறாராம் சசி. கிடைத்தவுடன் படப்பிடிப்பு தொடங்குமாம்.

கிரியேட்டிவ் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் ரீமிக்ஸ், ரீபிக்ஸ் என்று ஜிம்மிக்ஸ் செய்து கொண்டிருப்போர், சசிக்குமாரிடம் கேட்டு பாடம் கற்றுக் கொண்டால் நல்லாருக்கும்...

ரஜினி வருவாரா? சரத் பதில்!

ஒவ்வொரு முறை நடிகர் சங்கம் தொடர்பான எந்த விழா அறிவிப்பாக இருந்தாலும், ரஜினி கலந்து கொள்வாரா என்று கேள்வி கேட்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள் பத்திரிகையாளர்கள். இந்த முறையும் அது நடந்தது. ஆனால் முன்பு போல் மழுப்பல் பதிலாக இல்லாமல், வருவார் என்று அழுத்தமாக சொல்லி ஆர்வத்தை கிளப்பினார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார். நடிகர் சங்கம் சார்பாக நடக்கும் நாடகவிழாவில் ரஜினி கலந்து கொள்வாரா என்ற கேள்விக்குதான் சரத்குமாரின் இந்த “வருவார்” பதில்.

நடிகர் சங்க வரலாற்றிலேயே முதன்முறையாக போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இந்த தகவலை நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார் சரத். நீண்டகாலமாக இழுபறியாக இருந்த பல விஷயங்கள் குறித்து ஆணித்தரமாக பதில் அளித்தார் அவர். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி இம்முறை முழுமையாக நிறைவேற்றப்படும். சினிமாவுக்கு நாடகம்தான் அடிப்படை. தெருக்கூத்திலிருந்து நாடகம், நாடகத்திலிருந்து சினிமா. சினிமாவிலிருந்து டி.வி. இப்போது மீண்டும் நாடகம் என்று சுழற்சி நடைபெறுகிறது. அதை வலியுறுத்தும் வகையில் ஆகஸ்ட் 15 ந் தேதி முதல், 23 ந் தேதி வரை நாடக விழா நடைபெற உள்ளது என்றார் நடிகர் சங்க தலைவர்.

இந்த நாடகத்திற்கு தலைமை ஏற்கிறாராம் ரஜினி.

மறுபடியும் விஷால்! மாஞ்சா ரெடி...

ஊரை கூட்டி உறுமியடிக்காமல், சைலண்டாக தீராத விளையாட்டு பிள்ளை ஆபிஸ் பூஜையை போட்டிருக்கிறார் விஷால். கையோடு கையாக யுவனின் ட்யூன் போடும் வேலைகளும் துவங்கிவிட்டன. இப்படத்தின் அத்தனை பாடல்களையும் பா.விஜய் எழுதுகிறார். கம்போசிங்கிற்காக மலேசியா போயிருக்கிறார்கள் கவிஞரும் இசையமைப்பாளரும்.

தனது திடீர் சறுக்கலில் இருந்து சுருக்காக வெளிவர துடிக்கிறார் புரட்சி தளபதி. இதற்காக அவர் சில அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக கிசுகிசுக்கிறது சினிமா வட்டாரம். அப்பாவின் அட்வைஸ்படி, பல முன்னணி நிறுவனங்களுக்கு கால்ஷீட் கொடுக்கும் முடிவுக்கு வந்திருக்கிறாராம். முன்பெல்லாம் சொந்த கம்பெனி, அதைவிட்டால் ஒரே மணவாடு என்ற முறையில் லட்சுமி புரடக்ஷன்சுக்கு. இதை தாண்டி வேறு யார் கால்ஷீட் கேட்டாலும், ம்ஹ¨ம் என்றே சொல்லி வந்தார்கள் அண்ணனும் தம்பியும்.

இப்போது முன்னணி நிறுவனங்களுக்கு இவரே அழைப்பு விடுவதாக தகவல். அதுமட்டுமல்ல, சமீபத்தில் வெங்கட் பிரபு, வெற்றிமாறன் இருவரையும் சந்தித்து தனக்காக படம் இயக்கித் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். அவர்களும் சந்தோஷமாக தலையாட்டியிருக்கிறார்கள். மறுபடியும் விஷாலின் கொடி பறக்க மாஞ்சா தயாராகிவிட்டது.

அசத்துங்கய்யா...

ஜாக்ஸனுக்கு கமல், ரஹ்மான், ஸ்ருதி இசை அஞ்சலி

மறைந்த பாப் இசைச் சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்ஸனுக்கு இசையஞ்சலி செலுத்துகிறார் நடிகையும் இசைக் கலைஞருமான ஸ்ருதி கமல்ஹாஸன்.

வருகிற 29ம் தேதி சென்னையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலைஞானி கமல்ஹாஸனும் பங்கேற்பது இன்னொரு சிறப்பு.

ஸ்ருதியின் இசைக்குழு மைக்கல் ஜாக்ஸனின் மறக்க முடியாத பாடல்கள் சிலவற்றை வழங்கி, மறைந்த அந்த மாபெரும் கலைஞருக்கு அஞ்சலி செலுத்துகிறது.

நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பாக ஆஸ்கர் விருது மூலம் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த ஏஆர் ரஹ்மானும் பங்கேற்று தனது இசை அஞ்சலியை மைக்கேல் ஜாக்ஸனுக்குச் செலுத்துகிறார்.

மேலும் சில பெரிய கலாஞர்களையும் இந்த மேடையில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்த மாபெரும் இசை அஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

வாமனன் சூப்பர் ஹிட் - குஷியில் ஜெய்

தான் நடிக்க 3வது படமான வாமனன் ஹிட் பட வரிசையில் சேர்ந்துள்ளதால் ஜெய் குஷியாகியுள்ளார்.

பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக சின்ன ரோலில் வந்து போனவர் ஜெய். இதையடுத்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சென்னை 600028 படத்தில் ஜெய்யின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

அவரது நடிப்பால் கவரப்பட்ட இயக்குநர் சசிக்குமார் தனது முதல் படமான சுப்ரமணியபுரத்தில் தனி நாயகனாக்கி பெரும் பிரேக் கொடுத்தார் ஜெய்க்கு.

சுப்ரமணியபுரத்தில் ஜெய் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அவர் நாயகனாக நடித்த படம்தான் வாமனன். வெள்ளிக்கிழமை ரிலீஸான இப்படம் ஹிட் வரிசையில் சேர்ந்துள்ளது. திரையிட்ட இடமெல்லாம் அமோக வரவேற்பாம். இதனால் ஜெய் குஷியாகியுள்ளார்.

மதுரை, நெல்லை, பொள்ளாச்சி என பல இடங்களிலிருந்தும் எனக்கு போல் கால்கள் வருகின்றன. அனைவரும் படம் சிறப்பாக இருப்பதாக பாராட்டுகின்றனர். ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்து விட்டது.

இது எனக்கு ஹாட்ரிக் வெற்றி. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அடுத்து வரும் படங்களிலும் சிறப்பாக நடிக்க ஆர்வமாக உள்ளேன்.

வாமன் பட இயக்குநர் அகமது திறமைசாலி. அதேசமயம், நடிகர்களின் கருத்துக்களையும் மதித்து ஏற்று செயல்படுத்தினார். தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ள கிப்ட் அகமது என்கிறார் ஜெய்.

அடுத்து கோவா படத்தில் நடிப்பதற்கு தயாராகி விட்டார் ஜெய். இப்படத்தையும் வெங்கட் பிரபுவே இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் அதே இடம், அவள் பெயர் தமிழரசி என அடுத்தடுத்து ஜெய் நடித்த படங்கள் திரைக்கு வரக் காத்துள்ளன. அனேகமாக இந்த ஆண்டு ஜெய்யின் ஆண்டாக இருக்கக் கூடும்.

ஜெய் ஹோ..!

Sunday, July 12, 2009

சென்னையில் எம்.ஜி.ஆர். ஸ்டூடியோ!

ஜெயராம், வினிதா நடித்த நிலா, விஜய் நடித்த சந்திரலேகா ஆகிய படங்களை இயக்கியவர் நம்பிராஜன்.

இப்போது அவர் தனது பெயரை எம்ஜிஆர் நம்பி என்று மாற்றிக் கொண்டு, எம். ஜி. ஆர். ஸ்டூடியோ என்ற பட புதிய நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

எம்ஜிஆர் ஸ்டுடியோவின் முதல் தயாரிப்பாக பொறுத்திரு என்ற திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார் எம்ஜிஆர் நம்பி.

அதோடு சென்னை சாலிகிராமத்தில் எம்.ஜி.ஆர். டிஜிட்டல் ஸ்டூடியோ என்ற பெயரில் அதி நவீன ஒலிப்பதிவு கூடத்தையும் திறந்திருக்கிறார்.

இந்த ஒலிப்பதிவு கூடத்தில் டப்பிங், எடிட்டிங், பாடல் ஒலிப்பதிவு போன்ற பணிகளை செய்ய முடியும். இதற்காக வெளிநாட்டிலிருந்து பல லட்சம் செலவில் அதி நவீன கருவிகளை இறக்குமதி செய்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர். டிஜிட்டல் ஸ்டூடியோவின் திறப்புவிழா நேற்று காலை சென்னையில் நடந்தது.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண், ராதாரவி, சிவசக்தி பாண்டியன், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷோபா சந்திரசேகரன், எம்.எஸ்.விஸ்வநாதன் உட்பட ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.

'ஸ்வேதா - நம்பர் 5/10 வெலிங்டன் ரோடு!': நீச்சலுடையில் கீர்த்தி சாவ்லா!

சிலந்தி படம் தயாரித்த ஜி கம்பெனி அடுத்து மிகப் பிரமாண்ட முறையில் ஒரு படம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ஸ்வேதா - நம்பர் 5/10 வெலிங்டன் ரோடு எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்துக்காக முதல் முறையாக பிகினியில் நடிக்கிறார் 'குடும்பப் பாங்கினி' கீர்த்தி சாவ்லா.

அறிமுக இயக்குநர் ஆதி இயக்கத்தில் முதல்முறையாக டிஜிட்டலில் வெளிவந்த சிலந்தி படம் நல்ல லாபம் தந்தது. இந்தப் படம் தெலுங்கிலும் வெளியானது. டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியும் குறைந்த பட்ஜெட்டில் தரமான படம் தயாரிக்க முடியும், அதை ரசிகர்களை ஏற்க வைக்க முடியும் என நிரூபித்தது சிலந்தி.

இதற்கடுத்து, ஸ்வேதா படத்தை மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஸ்வேதா படத்துக்காக, மிக நீளமான சண்டைக் காட்சி ஒன்று பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலையில் படமாக்கப்பட்டது. இந்த சாலைக்கு Nice Road என்று பெயர் சூட்டியுள்ளனர். இன்னமும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படாத அந்த சாலையில் மிகப் பிரமாண்ட முறையில் 20 பைக்குகளைப் பயன்படுத்தி ரேசுடன் கூடிய சண்டை படமாக்கப்பட்டது. ஒரு ரேஸ் பைக்கின் ஒரு நாள் வாடகை ரூ.15000!

படத்தின் ஹீரோ ஹரீஷ் ஒரு பைக் ரேஸ் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் இந்த சண்டையில் ஈடுபட்ட 20 ஸ்டண்ட் நடிகர்களில் பாதிப்பேர் ஹரீஷின் நண்பர்கள். மீதி ஸ்டன்ட் கலைஞர்கள். காட்சி தத்ரூபமாக வர இப்படியொரு ஏற்பாடாம். மிக அபாயகரமான இந்த சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது, பைக் ரேஸ் வீரர்கள் பல சாகஸங்கள் செய்து அசத்தினார்கள்.

படத்தின் நாயகி கீர்த்தி சாவ்லா. இதுவரை ஹோம்லியாக நடித்து வந்தவர், சிலந்தியில் மோனிகா நடத்திய அதே கவர்ச்சி களேபரத்தை இந்தப் படத்தில் அரங்கேற்றியுள்ளார்.

முதல் முறையாக நீச்சலுடையில் தோன்றி கிளுகிளுப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளாராம் கீர்த்தி சாவ்லா.

ஷிவ் என்ற மாடல் வில்லனாக அறிமுகமாகிறார் இந்தப் படம் மூலம்.

இசை - சூர்யா. ஒளிப்பதிவு எஸ் விவேக்குமார். சண்டைப் பயிற்சி ஃபயர் கார்த்தி. கதை திரைக்கதை வசனம் இயக்கம் சஞ்சய். தயாரிப்பு ஜி கம்பெனி சார்பில் சங்கர். மக்கள் தொடர்பாளர் ஏ ஜான்.

தொடர்ந்து தலக்கோணம், மைசூர் மற்றும் பாங்காக்கில் நடந்து வருகிறது.

செவ்விந்திய சந்தியா..'

காதல் சந்தியா முற்றிலும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார் இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படத்தில்.

காதல் படத்தில் அறிமுகமான சந்தியா அதன் பின்னர் ஏகப்பட்ட படங்களில் நடித்து விட்டாலும் கூட இன்னும் முன்னணி ஹீரோயின் ரேஞ்சுக்கு வர முடியாமல் உள்ளார்.

அதற்கு முக்கிய காரணம், இன்றைய இளம் நாயகிகளுக்கு ஈடாக அவர் கவர்ச்சி காட்டாததே காரணம் என்று ஒரு டாக் உள்ளது.

இருப்பினும் தனது பாலிசியில் சற்றும் தளர்வு இல்லாமல் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை தூக்கிப் பரிசீலித்து நடித்து வருகிறார் சந்தியா.

இந்த நிலையில் சிம்புதேவன் இயக்கத்தி்ல் உருவாகும் இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார் சந்தியா.

இப்படத்தில் செவ்விந்தியப் பெண் வேடத்தில் வருகிறாராம் சந்தியா. இந்தப் படம் எனது நடிப்பை பறை சாற்றுவதாக அமையும். தொடர்ந்து நிறையப் படங்கள் இப்படம் மூலம் கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையுடன் உள்ளார் சந்தியா.

அதேசமயம், லேசு பாசான கவர்ச்சிக்கும் சந்தியா இப்போது ரெடியாகி விட்டாராம்.

பொன்னர்-சங்கர்: கருணாநிதி தொடங்கி வைத்தார்

பிரசாந்த் நடிக்கும் பொன்னர் சங்கர் வரலாற்றுத் திரைப்படத்தை தமிழக முதல்வர் கருணாநிதி இன்று துவக்கி வைத்தார்.

முதல்வர் கருணாநிதி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவல் 'பொன்னர்-சங்கர்'.

கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த பொன்னர்- சங்கர் சகோதரர்களின் வீர வரலாற்றைச் சித்தரிக்கும் இந்த வீர காவியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகுந்த முக்கியம் வாய்ந்த பதிவாகப் பார்க்கப்படுகிறது.

கலைஞரை விமர்சிப்போரும் கூட போற்றிப் பாராட்டும் அளவு சிறப்பு பெற்றது பொன்னர் - சங்கர் நாவல்.

கொங்கு மண்டலத்தின் கலை, கலாச்சாரம், பண்பாட்டை மிக நுணுக்கமான முறையில் சித்தரித்திருப்பார் இந்த நூலில் கலைஞர்.

இந்த நாவலைப் படமாக்க பல இயக்குநர்கள் ஆர்வம் காட்டிய போதும், அந்த வாய்ப்பு நடிகர் தியாகராஜனுக்குக் கிடைத்துள்ளது. அவர் மகன் நடிகர் பிரசாந்த் பொன்னர்-சங்கர் ஆகிய இரு வேடங்களில் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

தியாகராஜன் தயாரித்து இயக்குகிறார்.

இந்த படத்தின் தொடக்க விழா வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடந்தது.

படப்பிடிப்பை முறைப்படி துவக்கி வைத்த கருணாநிதி, விழாவில் பேசியதாவது:

பொன்னர்-சங்கர் படத்தொடக்க விழா வள்ளுவர் கோட்டத்தில் நடப்பது மனதுக்கு இதம் தரும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடராக எழுதப்பட்ட வரலாற்று ஓவியம் நிழற்படமாக, பேசும் படமாக, பலரும் இதுபற்றி பேசும் படமாக வெளிவர இருக்கிறது என்பதை நண்பர்கள் எடுத்துரைத்தார்கள்.

இந்த படத்தில் பல கதாபாத்திரங்கள் உலா வர உள்ளன. ஒவ்வொரு பாத்திரத்தையும் ஏற்று நடிப்பவர்கள் தகுதியானவர்கள்-பண்பட்ட நடிகர்கள். அவர்களை எல்லாம் இணைத்து இயக்குனர் தியாகராஜன் இயக்குகிறார்.

ஏற்கனவே 2 வேடங்களில் ஜீன்ஸ் படத்தில் நடித்து பெரும்புகழ் பெற்றவர் பிரசாந்த். இந்த படத்தில் பொன்னராகவும், சங்கராகவும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

முன்பு நடித்ததை விட இந்த படத்தில் பெரும் புகழை ஈட்டி தருவானாரால் அதைவிட எனக்கு வேறு பெருமை இல்லை. பிரசாந்த் நல்ல நடிகர். படித்த இளைஞர். மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். இடைப்பட்ட காலத்தில் கலைத்துறையில் இருந்து ஒதுங்கி காணப்பட்டாலும் இந்த படத்துக்கு பிறகு கலை உலகம் அவரை முழுமையாக பயன்படுத்தியே தீரும். அத்தகைய கட்டாயத்தை இந்தப் படம் ஏற்படுத்தும்.

வள்ளுவர் கோட்டத்தின் பின்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை சுற்றி பார்த்தாலே புரிந்துவிடும், தியாகராஜன் தயாரித்து தரும் இந்த படம் எத்தனை பிரமாண்டமாக அமையும்....பெரும் வெற்றியை பெறும் என்று!

தியாகராஜன் நல்ல இயக்குனர். திறமையான கலைஞர். அவரது உழைப்போடு, ஒத்துழைப்போடு இந்த படத்தின் வெற்றி விழாவிலும் கலந்து கொண்டு வாழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன், என்றார் கருணாநிதி.

தலையூர் காளியாக நெப்போலியன்...

இந்த படத்தில் மத்திய அமைச்சர் நெப்போலியன் தலையூர் காளி என்ற முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் ராஜாவாக நடித்த முதல் காட்சி இன்று கருணாநிதி முன்னிலையில் படமாக்கப்பட்டது.

ஏவி.எம்.சரவணன் கிளாப் செய்ய கருணாநிதி கேமராவை இயக்கி வைத்தார். மேடையில் ராஜ கம்பீரத்தோடு நெப்போலியன் கேமிரா முன்பு தோன்றியதை அங்கு திரண்டு இருந்தவர்கள் கைதட்டி ஆராவரம் செய்தனர்.

ராஜ்கிரண்

பொன்னர்-சங்கர் படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிப்பவர் ராஜ்கிரண். கலைஞரே இவரைத்தான் அந்த குறிப்பிட்ட வேடத்துக்கு பரிந்துரைத்தாராம்.

சத்யராஜ், பிரகாஷ்ராஜ், பொன் வண்ணன், ரியாஸ்கான், மனோரமா, குஷ்பு, அம்பிகா, சீதா உள்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்.

விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன், பாக்யராஜ், அபிராமி ராமநாதன், ஏவி.எம்.சரவணன், ராஜ்கிரண் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்கள்

டைரக்டராகும் 'சோபிக்கண்ணு'!


பசங்க படத்தில் கலக்கலான சோபிக் கண்ணு கேரக்டரில் நடித்த வேகா, இயக்குநராகும் ஆசையில் மும்முரமாக தன்னைத் தயார்படுத்தி வருகிறார்.

இயக்குநர் சசிக்குமாரின் தயாரிப்பில், பாண்டிராஜின் யதார்த்தமான இயக்கத்தில் குட்டிப் பசங்களின் லூட்டியுடன் வெளியான பசங்க படத்தில் நாயகியாக நடித்தவர்தான வேகா.

சோபிக்கண்ணு என்ற கேரக்டரில் கலக்கலாக நடித்திருந்தார் வேகா. அதிலும் அவர் புருவத்தை அங்கிட்டும், இங்கிட்டும் ஏற்றி இறக்கிக் காட்டிய ஸ்டைலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு.

நடிகையாக அறிமுகமானாலும் கூட வேகாவின் மனதுக்குள் இயக்குநராகும் ஆசை தீராத தாகமாக இருக்கிறதாம். இதனால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கதையை ரெடி செய்து கொண்டிருக்கிறாராம்.

சரியான சந்தர்ப்பம் வாய்க்கும் போது இயக்குநராகி விடுவேன் என்கிறார் தனது டிரேட் மார்க் அகலச் சிரிப்புடன்.

சோபிக்கண்ணுக்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து நிறையப் படங்கள் வருகிறதாம். இருந்தாலும் தனக்குப் பொருத்தமான கேரக்டராக இருந்தால்தான் நடிப்பாராம். அவசரப்பட்டு அள்ளிப் போட்டுக் கொள்ள அவர் விரும்பவில்லையாம்.

பிரிட்டன் பல்கலை. வழங்கிய டாக்டர் பட்டம்- பெற்றார் ஷாருக்


லண்டன்: இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷயர் பல்கலைக்கழகம் வழங்கிய கெளரவ டாக்டர் பட்டத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் பெற்றுக் கொண்டார்.

கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் சிறப்பான சேவையாற்றியதற்காக ஷாருக் கானுக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள வாஷிங்டன் மேபேர் ஹோட்டலில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் ஷாருக் கானுக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. இந்த ஹோட்டலை இந்தியரான ஜோகிந்தர் சிங் சங்கார் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் ஷாருக் கூறுகையில், இந்தப் பெருமை மிகு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களில் ஒருவராக என்னை நான் நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன். இந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்யக் காத்திருக்கிறேன் என்றார் ஷாருக்.