Friday, July 10, 2009

"அத்தான் அத்தான்..." சசியை-அனன்யா ஜில் ஜில்!


குண்டு பம்ளிமாஸ் அனன்யாதான் இப்போ தமிழ்சினிமாவின் அடுத்த குஷ்பு. முதல் படமான நாடோடிகள் செம ஹிட் என்பதால், பொண்ணு கர்சீப்பை போட்டு, இடத்தை பிடிக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. போற இடத்திலே எல்லாம் பிரமாதமான நாற்காலியோடு வருகிறார்கள் இயக்குனர்கள். ஆயிரம் இருந்தாலும், முதல் பட அத்தானோடு பொத்தானை போல இணையத்தான் ஆசையாம் இந்த ஜுனியர் குஷ்புவுக்கு.

சசிகுமாரை எங்கே பார்த்தாலும் படத்தில் பேசியது போலவே "அத்தான் அத்தான்" என்கிறார். ஷ¨ட்டிங் நெனப்பு போகலே போலிருக்குன்னு மற்றவங்க நினைச்சிட்டு இருந்தா, "இல்லேங்க. அவரு என்னோட நிஜமான ரிலேட்டிவ்தான்"னு புது பிட்டை போட்டு குட்டைய குழப்புறாங்களாம். கொஞ்சம் கூச்சமா இருந்தாலும், இந்த படத்தின் இம்ப்பேக்ட் இன்னும் அவங்ககிட்டே குறையல பாருங்க. அதுதான் நாடோடிகளின் ஹிட் என்கிறார் சசிகுமாரும்.

ஆனாலும் "பொது இடத்திலே இப்படி கூப்பிடாதம்மா" என்றும் அட்வைசித்திருக்கிறாராம் சசி. "யாரு வேணா என்ன வேணா நினைக்கட்டும். நான் அப்படிதான் கூப்பிடுவேன்"னு அடம் பிடிக்குது பொண்ணு. வெறும் வார்த்தையோடு இருந்தா இந்த வெளையாட்டை ரசிக்கலாம். அதுக்கு மேலே போனா?

அதுக்கு நான் கியாரண்டி என்கிறார் சசி. என்னவோ போங்க. எலியா இருந்தா விரட்டலாம். கிளியா போச்சே? 'வாங்க பழகலாம் பாலிசி'தான் போலிருக்கு!

முத்துக்குமார் பெயர் சூட்டுங்கள்!-சத்யராஜ்


தான் அடுத்து நடிக்கும் குருசி்ஷ்யன் படத்தில் சுந்தர் சி கதாபாத்திரத்துக்கு தியாகி முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும் என நடிகர் சத்யராஜ் கோரிக்கை விடுத்தார்.

சக்தி சிதம்பரம் இயக்கத்தில், சுந்தர் சி மற்றும் சத்யராஜ் இருவரும் இணைந்து குரு சிஷ்யன் என்ற படத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் நடந்தது.

விழாவில் பிரபல இயக்குநர்களும், அவர்களிடம் உதவியாளர்களாக இருந்து பின்னர் பிரபல இயக்குநர்களானவர்களும் பங்கேற்றுப் பேசும்படி ஏற்பாடு செய்திருந்தார் சக்தி சிதம்பரம்.

பாக்யராஜ்-பார்த்திபன், ராம.நாராயணன்-பேரரசு, மணிவண்ணன்-சீமான், கே.எஸ்.ரவிக்குமார்-சேரன் ஆகிய குரு-சிஷ்யர்கள் தங்கள் அனுபவங்களை, படவிழாவில் பகிர்ந்துகொண்டது சினிமாவை விட சுவாரஸ்யமாக இருந்தது.

நடிகைகளை திரும்பச் சொல்வது ஏன்...?

நடிகர் - இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது:

"எங்க டைரக்டர் கிட்ட வேலை பார்த்த நாட்கள் மறக்கமுடியாதவை. அடிக்கடி எங்க டைரக்டர் பாரதிராஜாகிட்ட, 'நடிகர்- நடிகைகளை இந்த பக்கம் திரும்பு...அந்த பக்கம் திரும்பு என்று சொல்கிறீர்களே...அது எதற்காக?' என்று சந்தேகம் கேட்பேன். 'அதை திரையில் பார்த்து தெரிந்துகொள் அல்லது ஐந்து வருடங்கள் உதவி டைரக்டராக வேலை செய், தெரியும்!' என்பார். எதுக்காக அவர் அப்படிச் சொன்னார் என்பதை நான் இயக்குநரான பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

இன்னொன்று, குறைந்த பட்சம் வெளியில் நடக்கும் சமாச்சாரங்களை தொடர்ந்து கவனிச்சிக்கிட்டே இருக்கணும்னு எங்க டைரக்டர் சொல்வார். அது ஒவ்வொரு உதவி இயக்குநருக்கும் மிக மிக முக்கியமானது...", என்றார்.

அவரது சிஷ்யர்களுள் ஒருவரான பார்த்திபன் பேசுகையில், "உலகிலேயே மிக அழகான உறவு, குரு-சிஷ்யன் உறவுதான். எனக்கு கிடைக்கும் பாராட்டு, புகழ் அத்தனையும் என் குரு பாக்யராஜுக்கே போய் சேரும்", என்றார்.

வாய்ப்பு கொடுங்க...!

இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் பேசியது:

"ஒரு இயக்குநராகத் தெரிந்து கொண்டதைவிட நடிகராக நிறைய தெரிந்து கொண்டேன்.

இப்போது எனக்கு நடிப்பதற்குத்தான் வாய்ப்பு வருகிறது. டைரக்டு செய்வதற்கான வாய்ப்பு வருவதில்லை. சசிகுமார் போன்றவர்கள் எனக்கு அந்த வாய்ப்பை தரவேண்டும்", என்றார்.

மணிவண்ணன் சி்யர்களுள் ஒருவரான சீமான் இப்படிப் பேசினார்:

"அமைதிப்படை கதையை ஒரு நீச்சல் குளத்தின் அருகில் அமர்ந்துதான் முடிவு செய்தோம்.

ஒரு ஊருக்குள் இரும்பு தொப்பி போட்ட போலீஸ்காரன் வருகிறார் என்று ஒரு உதவி இயக்குநர் சொல்ல-ஏன் வந்தான்? என்று இன்னொரு உதவி இயக்குநர் கேட்க-அந்த ஊரில் நடக்கும் ஜாதி கலவரத்தை அடக்க என்று இன்னொருவர் சொல்ல-அந்த கலவரத்துக்கு காரணம் என்ன? என்று கேட்க-அந்த ஊரில் உள்ள ஒரு அரசியல்வாதி என்று பதில் சொல்ல...அமைதிப்படை கதை இப்படித்தான் உருவானது... புதிய சாதனைப் படைத்தது," என்றார்.

சம்பள விஷயத்தைக் கற்றுத் தராத ரவிக்குமார்!

கே.எஸ்.ரவிகுமார் பேசும்போது, "சேரன் என்னிடம் உதவி இயக்குநராக இருந்தபோதே அவருக்குள் ஒரு நடிகர் இருப்பதை கவனித்தேன். அவருக்கு கிடைக்கும் பாராட்டுகளை பார்த்து, நான் சந்தோஷப்படுகிறேன்," என்றார்.

அவரது சிஷ்யர் சேரன் பேசும்போது, "எவ்வளவு உயரத்துக்கு போனாலும் சிஷ்யர்கள், சிஷ்யர்கள்தான். குருக்களை மிஞ்ச முடியாது. எங்க டைரக்டர் எடுத்த மாதிரி, ஒரு `தசாவதாரத்தை' நாங்க எடுக்க முடியுமா? எல்லா விஷயத்தையும் எங்களுக்கு கற்றுக்கொடுத்த டைரக்டர், சம்பள விஷயத்தை மட்டும் கற்றுக்கொடுக்கவில்லை. அந்த விஷயத்தில், நான் ஒரு ஏமாளி" என்றார்.

ராம.நாராயணன்- பேரரசு


இயக்குநரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான ராம.நாராயணன் பேசியதாவது:

"பாட்டெழுத வேண்டும் என்றுதான் நான் சினிமாவுக்கு வந்தேன். இயக்குநராகி விட்டேன். அதேபோல் என்னிடம் உதவி டைரக்டராக இருந்த பேரரசுவும் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவுக்கு வந்தார். இரண்டு பேருமே குறுகிய காலத்தில் படம் எடுப்பவர்கள்.

`திருப்பதி ஏழுமலை வெங்கடேசா' என்ற படத்தை 24 ஆயிரம் அடியில், 22 நாட்களில் எடுத்து முடித்தேன். இப்போது உள்ள சில டைரக்டர்கள், 5 லட்சம் அடிக்கு படம் எடுக்கிறார்கள்", என்றார்.

பேரரசு பேசும்போது, "எளிமையே வலிமை என்பது எங்கள் குருநாதர் ராம.நாராயணனின் தாரக மந்திரம். அவர் வழியில்தான் நானும் செல்கிறேன்" என்று கூறினார்.

விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், சுந்தர் சி, சசிகுமார், எடிட்டர் மோகன், டைரக்டர் ராஜா மற்றும் பலரும் பேசினார்கள். ஷக்தி சிதம்பரம் நன்றி கூறினார்.

'மதுரையில் திரைப்பட கல்லூரி வேண்டும்'

சென்னை: மதுரையில் அரசு திரைப்பட கல்லூரியே அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது மதுரையில் அரசு திரைப்படக் கல்லூரி அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த செய்தி-ஒலிபரப்புத்துறை அமைச்சர் பரிதிஇளம் வழுதி,

இந்தியாவிலேயே 3 திரைப்படப் பயிற்சி கல்லூரிகள்தான் உள்ளன. புனே, கொல்கத்தா ஆகிய இடங்களில் மத்திய அரசு சார்பில் திரைப்பட பயிற்சி கல்லூரிகள் நடத்தப்படுகின்றன.

சென்னையில் மட்டும்தான் தமிழக அரசின் சார்பில் கல்லூரி நடத்தப்படுகிறது. புதிதாக திரைப்பட கல்லூரி தொடங்க வேண்டும் என்றால் 15 முதல் 20 ஏக்கர் நிலமும் ரூ. 25 கோடி பணமும் தேவைப்படும். சென்னை திரைப்பட கல்லூரிகளிலேயே அனைத்து வசதிகளும் உள்ளன. பல்வேறு இடங்களில் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்றார்.

அப்போது மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்எல்ஏ நன்மாறன் எழுந்து,

திரைப்படத்துறை என்பதைப் பற்றிய வரலாற்றோடு தமிழக முதல்வரின் வரலாறு பின்னிப் பிணைந்திருப்பதை நாடு அறியும்.
தென் மாவட்டங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் ஒரு ஆவலோடு ரயிலேறி இங்கு வந்து படுகிற அவஸ்தை சாதாரணமானதல்ல.

எதிர்வரும் காலத்தில் மதுரையில் அரசு திரைப்பட கல்லூரி அமைக்கப்படுவது பற்றி வெகு விரைவில் அது பரிசீலிக்கப்படும் என்ற உறுதிமொழியை தமிழக முதல்வர் வழங்கினால் இந்தத் துறையின் வளர்ச்சிக்கு மகுடம் சூட்டியதைப் போல் இருக்கும். எனவே முதல்வர் அந்த உறுதியை அளிப்பாரா என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி,

திரைப்படத் துறையினுடைய வாழ்க்கையோடு என்னுடைய வாழ்க்கையும் வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது என்று உறுப்பினர் நன்மாறன் சொன்னார். என்னைவிட அதிகமாக என்னுடைய நண்பர் எம்.ஜி. ஆரின் வாழ்க்கைதான் திரைப்படத் துறையோடு சிகரம் வைத்ததைப்போல பின்னிப் பிணைந்து கிடந்த காரணத்தால் அவருடைய பெயரால் இங்கே இந்த ஆட்சியில் ஒரு கல்லூரி திரைப்படப் பயிற்சிக்காக ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரையிலே 'பரிசீலிக்கப்படுகிறது' என்றுதான் சொல்லச் சொல்கிறார். பொதுவாக சட்டமன்றத்திலே 'பரிசீலிக்கப்படும்' என்று சொன்னாலே அது ஏறத்தாழ இல்லையென்றுதான் அர்த்தம் என்றார்.

Thursday, July 9, 2009

ஜாக்சன் இறுதிச் சடங்கு செலவு ரூ. 7 கோடி

லாஸ் ஏஞ்சல்ஸ்: பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் இறுதி சடங்கிற்கு சுமார் ரூ. 7 கோடி செலவானதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 25ம் தேதி மரணமடைந்த மைக்கேல் ஜாக்சனின் இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. வாழும் போது பல சர்ச்சைகளை சந்தித்த ஜாக்சனின் மரணத்திலும் மர்மம் நீடிக்கிறது.

இந்நிலையில் அவரது இறுதி சடங்கினால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நிர்வாகம் பண கஷ்டத்தில் சிக்கியுள்ளது. இது நகர செய்தி தொடர்பாளர் சாரா ஹாமில்டன் கூறுகையில்,

ஜாக்சனின் இறுதிசடங்கு நிகழ்ச்சிக்கு சுமார் ரூ. 7 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் வீதிகளில் காவலிருந்த போலீசார், சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்ட பணிகளும் அடங்கும்.

இறுதி ஊர்வலத்துக்கான பாதுகாப்பில் 3 ஆயிரம் போலீசார் பயன்படுத்தப்பட்டனர். சுமார் ஆயிரம் போலீசார் திடீர் தேவைகளுக்கான உதவிகளை செய்ய கைவசம் வைக்கப்பட்டிருந்தனர்.

உலக பொருளாதார நெருக்கடி அமெரிக்காவை புரட்டு போட்டி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் ஏற்கனவே ரூ. 2 ஆயிரத்து 600 கோடி கடனில் ஓடி கொண்டிருக்கிறது. இதனால் ஜாக்சன் இறுதிசடங்கு செலவுகளுக்கு உதவுமாறு எங்களது வெப்சைட்டில் விளம்பரம் செய்தோம்.

இதுவரை ரூ. 8 லட்சம் கிடைத்துள்ளது. தொடர்ந்து பணம் வந்து கொண்டிருந்த நிலையில் அதிகம் பேர் எங்கள் இணையதளத்தை பார்த்த காரணத்தால் அது இணைய தொடர்பை இழந்துவிட்டது.

நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் இருந்தே எங்களது இணையதளம் செயல்படவில்லை. நேற்று காலை வரை இது தான் நடந்தது என்றார்.

இந்நிலையில் அந்நகர அட்டார்னியின் செய்தி தொடர்பாளர் ஜான் பிராங்ளின் கூறுகையில், அடுத்த முறை இது போல் எதுவும் நடக்க கூடாது என அட்டார்னி விரும்புகிறார். ஒரு தனியார் செயலுக்கு நகர நிர்வாகம் பொறுப்பேற்று கொள்ள கூடாது. அதுவும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பொருளாதார நெருக்கடியால் திணறும் ஊர்களில் இது கடினமானது என்றார்.

கமல்... சர்ச்சை கிளப்பிய விஜய் வசனம்!


கவிஞர் பா விஜய் முதல்முறை கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள படம் ஞாபகங்கள்.

இந்தப் படத்தில் வரும் ஒரு வசனம் பெரும் சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

படத்தில் ஒரு காட்சியில் ரஜினியின் அடுத்த படம் குறித்து கதாநாயகி கேட்பது போல வரும். இதற்கு பதிலளிக்கும் பா விஜய், 'ரஜினி இப்போது எந்திரன் படத்தில் நடிக்கிறார் என்றும், அடுத்த ஆண்டு படம் ரிலீஸாகும்' என்றும் கூறுவார்.

அடுத்தாக கதாநாயகி இப்படிக் கேட்பார்:

கமல் எப்படியிருக்கார்… கன்னமெல்லாம் இன்னும் கொழுக் மொழுக்குன்னு அப்படியே இருக்கா?

பா விஜய்: இப்போ அவரை விட பெரிய பெரிய நடிகர்களெல்லாம் வந்தாச்சு தமிழ் சினிமால…!!

கதாநாயகி இன்னும் அந்தக் கால நினைவுகளில் இருப்பதைச் சுட்டிக்காட்டும் விதத்தில் இந்த வசனம் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அது சலசலப்பைக் கிளப்பியுள்ளது.

படத்துக்கு கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி தயாரித்துள்ளவர் பா.விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், பேரரசுக்கு நீதிபதி கிடுக்கிப் பிடி!

சினிமா என்ற பெயரில் எந்தத் தொழில் செய்பவரை வேண்டுமானாலும் இஷ்டத்திற்கு விமர்சிக்கலாமா என்று நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் பேரரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஏ.எம்.ரத்தினம் தயாரித்த படம் சிவகாசி. பேரரசு இயக்கிய இப்படத்தில் விஜய், ஆசின் நடித்துள்ளனர். 2005ம் ஆண்டு இது வெளியாகி பெரும் வெற்றியையும் பெற்றது.

இந்த நிலையில் இப்படம் வக்கீல்களின் பெயரைக் கெடுக்கும் வகையில் இருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் 13 கோர்ட்டுகளில் வக்கீல்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதுதொடர்பாக விஜய், தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில், விஜய், பேரரசு, தயாரிப்பாளர் ரத்னம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இந்த படம் உள்நோக்கத்துடன் எடுக்கப்படவில்லை. வக்கீல்களின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் எடுக்கவில்லை. ஆகவே, எங்கள் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து சிவகாசி படம் தொடர்பாக மாஜிஸ்திரேட் கோர்ட்டுளில் நிலுவையில் உள்ள வழக்குளை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்குகளை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் நேற்று நீதிபதி ஆர்.ரகுபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

நடிகர் விஜய் தரப்பில் வக்கீல் பீமனும், வக்கீல்கள் சார்பில் வக்கீல் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரனும் ஆஜராகி வாதாடினார்கள்.

வக்கீல் பீமன்:- சினிமா என்பது கேளிக்கைக்காக எடுக்கப்படுவதாகும். கேளிக்கை என்ற பெயரில் நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை. படம் தொடங்கும் முன்பே கதை, சம்பவம், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே
என்று எச்சரிக்கை விடுத்து டைட்டில் போடுகிறோம்.

ஒரு எல்லை இல்லையா..?

நீதிபதி: கேளிக்கை என்பதற்கும் ஒரு எல்லை உள்ளது. கற்பனையே என்று கூறிவிட்டு, எதை வேண்டுமானாலும் காட்டலாமா? கேளிக்கை என்ற பெயரில் டாக்டர்கள், வக்கீல்கள் போன்றவர்களை விமர்சிக்கலாமா?

பீமன்: ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கிவிட்டோம்.

நீதிபதி:- நீக்கப்பட்டது குறித்து விளம்பரம் செய்தீர்களா? படத்தை வெளியிடும் முன்பு எவ்வளவு விளம்பரப்படுத்துகிறீர்கள், அதேபோன்று காட்சிகள் நீக்கியதற்கும் விளம்பரப்படுத்தினீர்களா?

ஒவ்வொரு தொழிலிலும் நல்ல விஷயமும் உள்ளது. மோசமான விஷயமும் உள்ளது. நீங்கள் ஒரு தொழிலில் உள்ள மோசமான விஷயங்களை தான் சித்தரித்துள்ளீர்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக ஏராளமான வக்கீல்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள். இப்போதும் பெரும்பாலான வக்கீல்கள் அரசியல்வாதிகளாக உள்ளனர்.

பீமன்: நடிகர்கள் எல்லாம் பணம் வாங்கிக்கொண்டு நடிக்கிறார்கள். குற்றச்சாட்டு அனைத்தும் இயக்குனர் மீது கூறப்பட்டுள்ளது. யாரையும் புண்படுத்தும் நோக்கில் உள்நோக்கத்துடன் இந்த படம் எடுக்கப்படவில்லை.

இந்த படத்தை வெளியிடுவதில் தவறு இல்லை என்று கருதி மத்திய சினிமா தணிக்கை துறையும் சான்றிதழ் வழங்கியுள்ளது. எதையும் நேரடியாக கூறினால்தான் அவதூறு ஏற்படும். இந்த படத்தை பொறுத்தவரையில் அவதூறு என்பதற்கு இடமே இல்லை.

எஸ்.பிரபாகரன்: வக்கீல் தொழிலை பாதிக்கும் வகையில் இந்த படத்தில் காட்சிகள் உள்ளன. நடிகை அசின் ஒரு வக்கீலை தாக்குவதுபோல் உள்ளது. `கவுரவம்' படத்தில் வக்கீலை உச்சக்கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் `சிவகாசி' படத்தில் வக்கீல்களை மட்டமாக விமர்சித்துள்ளனர். இதில் உள்நோக்கம் உள்ளது.

மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் 13 வழக்குகளையும் தொடர்ந்தது வக்கீல்கள்தான். பல காட்சிகளை நீக்க வேண்டுமென்று சென்சார் போர்டுக்கு நோட்டீசு அனுப்பினோம். ஒருவரி வசனம்கூட படத்தில் நீக்கப்படவில்லை.

சினிமா வர்த்தகம் செய்ய அடிப்படை உரிமை உள்ளது. ஆனால் அதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. பொழுதுபோக்கு என்ற பெயரில் இந்த படத்தில் வக்கீல்களை தவறாக சித்தரித்து காட்டியுள்ளனர்.

எனவே, படஅதிபர், இயக்குனர் மட்டுமல்லாது, படத்தில் நடித்த நடிகர்களும் அவதூறு சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று வாதிட்டார்.

வழக்கு விசாரணை வருகிற 16ம் தேதி மீண்டும் நடைபெறுகிறது.

நமீதாவே உன்னை நம்பி...


நமீதாவின் முழுக் கவர்ச்சியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படமான இந்திரவிழா நாளை வெளியாகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே ராஜேஸ்வர் இயக்கியிருக்கும் படம் இந்திரவிழா. இதில் நாயகனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக ஹேமமாலினி களமிறங்கியுள்ளார்.

ஹேமமாலினி இருந்தாலும் கூட நமீதாவின் கவர்ச்சி எல்லை கடந்த தீவரவாதம் போல படு உக்கிரமாக இருக்கிறதாம். கவர்ச்சியில் நமீதாவுடன் மல்லுக்கட்டும் அளவு ஆடைக் குறைப்பு புரட்சி செய்துள்ளாராம் ஹேமமாலினி. ஆனாலும் நமீதாவின் கவர்ச்சிதான் இந்தப் படத்துக்கு சகலமுமாக இருக்கிறது.

படத்தின் விளம்பர டிசைன்கள், பேனர்கள், கட் அவுட்டுகளில் தம்தூண்டு ட்ரெஸ்ஸில் நமீதா கிக்காக போஸ் கொடுக்கும் ஸ்டில்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

கெளரவ நடிகர் ரேஞ்சுக்கு சின்ன ஸ்டாம்பு சைசில் கதாநாயகனின் படத்தைதப் போட்டு வைத்துள்ளனர். சில போஸ்டர்களில் அதையும் காணோம்.

படத்தின் முக்கால்வாசி காட்சிகளில் நமீதாவுக்கு நீச்சலுடைக்கு சமமான காஸ்ட்யூம் மட்டும்தான் என்பதால், கவர்ச்சிப் பிரியர்கள் கல்லாவை நிரப்பி விடுவார்கள் என நம்புகிறார் ராஜேஸ்வர்.

'இனி அல்லாரும் மச்சான்ஸ்...!'

இதற்கிடையே, இனிமேல் நடிகை நமீதா ஆண்களை அண்ணா என்று அழைக்க மாட்டாராம். மாறாக காதுகள் இனிக்கும் வகையில் மச்சான்ஸ் என்றுதான் அழைக்கப் போகிறாராம்.

சிவாஜி கணேசன் தனது ரசிகர்களை பிள்ளைகளே என்று அன்பாக அழைப்பார். ரஜினியோ கண்ணா என்பார். விஜய்யோ 'ண்ணா' என்பார்.

இப்படிப்பட்ட தமிழ் சினிமா பரம்பரையில் வந்தவரான நமீதா தனது ரசிக மக்களை, குறிப்பாக ஆண்களை மச்சான்ஸ் என்று எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக கூப்பிட்டு வருகிறார். இருப்பினும் படப்பிடிப்புத் தளத்தில் மட்டும் சிலரை அண்ணா என்று அவர் அழைப்பதாக அப்படி அழைக்கப்பட்டவர்கள் மன வருத்தம் அடைந்ததாக செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் அவர்களின் மனம் குளிரும்படியான ஒரு செய்தியை அவிழ்த்து விட்டுள்ளார் நமீதா.

எனக்கு ஆண்கள் அனைவருமே மச்சான்ஸ்தான். யாரையும் அண்ணா என அழைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் நமீதா.

ஜெகன்மோகினி படப்பிடிப்பின்போது, தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் நமீதா பேசுகையில், வடிவேலு சார் காமெடி எனக்கு மிகவும் பிடிக்கும். நான்தான் இப்படத்தில் வடிவேலு சாரும் கண்டிப்பாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

ஆனால், அண்ணன், தங்கை வேடத்தை எங்களுக்குக் கொடுக்காதீர்கள், காமடியாக வையுங்கள் என்று கூறியிருந்தேன். இருந்தாலும் இப்படத்தில் எனக்கு அண்ணனாகத்தான் அவர் வருகிறார்.

ஆனால் அவரை அண்ணா என்று நான் அழைக்க மாட்டேன். சார் என்றுதான் கூப்புடுவேன். என்னைப் பொருத்தவரை ஆண்கள் எல்லோருமே எனக்கு மச்சான்ஸ்தான். யாரையும் அண்ணா என கூப்பிட மாட்டேன்.

எனக்குக் கல்யாணமாகும் வரை எனது உடலை அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் வைத்துக் கொள்ளும் கடமை எனக்கு உள்ளது. கல்யாணத்தை ரகசியமாக நடத்த மாட்டேன். எல்லோரையும் கூப்பிட்டு விருந்து வைப்பேன் என்று கூறுகிறார் நமீதா.

நமீதாவின் இந்த இனிப்பான செய்தி வந்த நாள்தான் ரசிகர்களுக்கெல்லாம் இனிய நாள்...

குரு சி்ஷ்யனில் ஹேமமாலினி

இந்திரவிழாவில் நமீதாவுக்கே போட்டியாய் கவர்ச்சியாட்டம் போட்டிருக்கும் ஹேமமாலினி அடுத்து சத்யராஜ் - சுந்தர் சியுடன் கபடி ஆடத் தயாராகிவிட்டார். படம் குரு சிஷ்யன்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து சக்கைபோடு போட்ட குருசி்ஷ்யன் படத்தின் ரீமேக்கல்ல இது. அதன் தலைப்பை மட்டும் உருவிக் கொண்டிருக்கிறார், இந்த மாதிரி வேலைகளில் கை தேர்ந்தவரான ஷக்தி சிதம்பரம்.

ஏற்கெனவே ரஜினி படத் தலைப்பான ராஜாதி ராஜாவை பயன்படுத்தி ஓரளவு கல்லா கட்டியதால், அந்த சென்டிமெண்டில் இந்த முறை குருசிஷ்யன் தலைப்பை வைத்துள்ளாராம் (கதையை எங்கிருந்து சுட்டிருக்கிறாரோ!).

இந்தப் படத்தில் சத்யராஜ் - சுந்தர் சி இருவரும் முதல்முறை இணைந்து நடிக்கிறார்கள்.

இருவருக்கும் ஜோடியாக படத்தின் ஸ்டில்களில் போஸ் கொடுக்கிறார் ஜேமமாலினி.

இன்று பூஜையுடன் படப்பிடிப்பைத் துவங்கியுள்ள சக்தி சிதம்பரம், டிசம்பரில் ரிலீஸ் செய்யப் போவதாக உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம், பழைய சண்டைகளை மறந்து சுந்தர் சியுடன் சமாதானமாகியிருக்கும் வடிவேலு. சத்யராஜ், *சுந்தர் சியை விட இந்தப் படத்தில் வடிவேலுவுக்குத்தான் முக்கியத்துவம் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன...

ஹீரோவா நடிச்சு படம் தோத்தா பழி போடுறாங்க - வடிவேலு புலம்பல்

இனிமேல் ஹீரோவா நடிக்க மாட்டேன். கதாநாயகனாக நடித்து படம் தோல்வி அடைந்து விட்டால் நம் மீது பழி போடுகிறார்கள். எனவேதான் இந்த முடிவு என்று கூறியுள்ளார் வடிவேலு.

வைகைப் புயல் வடிவேலு இரு படங்களில் நாயகனாக நடித்தார். முதலில் நடித்த இம்சை உரசன் ஓஹோவென ஓடியது. 2வது படமான இந்திரலோகத்தில் நா. அழகப்பன் தாறுமாறாக ஊத்திக் கொண்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வடிவேலு. அவர்களிடம் பேசுகையில், இதுவரை நான், 490 படங்களில் நடித்து விட்டேன். இப்போது தயாரிப்பில் உள்ள ஆதவன், என்னுடைய 490வது படம். கொஞ்ச நாட்களுக்கு முன்பு என் உடம்பு அதிக எடை போட்டுவிட்டது. டான்ஸ் ஆட முடியவில்லை.

எனவே உடற்பயிற்சி செய்தும், சாப்பாட்டின் அளவை குறைத்தும் உடம்பை மெலிய வைத்தேன். இதுவரை 5 கிலோ குறைந்து இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் குறைக்க வேண்டும்.

இனிமேல் நான் கதாநாயகனாக நடிப்பதில்லை என்று முடிவு செய்து இருக்கிறேன். படம் தோல்வி அடைந்தால், பழியை தூக்கி என் மீது போட்டு விடுகிறார்கள்.

சாப்பாட்டில் கொஞ்சம் உப்பு போட்டு இருக்கலாம் என்று சொன்னால், புரொடக்ஷனில் தலையிடுகிறார் என்கிறார்கள். டப்பிங் பேசும்போது, இந்த வரியை இப்படி எழுதியிருக்கலாமே என்றால், எடிட்டிங்கில் தலையிடுகிறார் என்கிறார்கள். சட்டையில், பட்டன் சரியில்லை என்றால், காஸ்ட்யூமில் தலையிடுகிறார் என்கிறார்கள்.

ஒரு கதாநாயகனுக்கு எதையும் கேட்க உரிமை இல்லையாண்ணே? இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு நடித்து முடித்தால், நன்றாக நடித்த சீன்களை எல்லாம் தயாரிப்பாளர் குடும்பத்தோடு வந்து வெட்டுகிறார். அதனால்தான் இந்த முடிவுக்கு வந்து இருக்கிறேன்.

கதாநாயகனாக நடித்தால் பொறுப்பு முழுவதும் என் தலையில் விழுந்து விடுகிறது. பயம்-பீதியாக இருக்கிறது. வெறுத்துப் போய்ட்டேண்ணே.

ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து முடிப்பதற்குள், 10 படங்களில் காமெடியா நடிச்சுட்டுப் போய்டலாம்ணே என்கிறார் வடிவேலு.

மெய்தாண்ணே...!

ஆசினை அரட்டிய அனாமதேயப் பேர்வழி!

சிங்கப்பூர் சென்றிருந்த ஆசினை ஒரு மர்ம நபர் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்ததால் ஆசின் பெரும் பீதியடைந்து விட்டாராம்.

சமீபத்தில் ஆசின் சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்போது 20 வயதுக்குள்ளிருக்கும் ஒரு நபர் ஆசினை பின் தொடர்ந்து வந்துள்ளார். ஆசின் எங்கு போனாலும் இந்த நபரும் போய் அங்கு நின்றிருக்கிறார்.

ஆசினுக்கு இது பெரும் குழப்பமாக இருந்திருக்கிறது. சரி, தீவிர ரசிகர் போலும் என விட்டு விட்டார் ஆசின்.

ஆனால் ஆசின் தங்கியிருந்த ஹோட்டலுக்கும் வந்து விட்டார் அந்த மர்ம நபர். ஆசினை நெருங்கிய அவர், அங்கு கூடியிருந்த கூட்டத்தை விலக்கி விட்டார். பின்னர் ஆசினை அவரது அனுமதியில்லாமலேயே போட்டோ எடுக்க ஆரம்பித்து விட்டார்.

இதைத் தடுக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்திய அவர், நான் ஆசினின் பாடிகார்டு, யாரும் வராதீர்கள் என்று அவர்களையே விலக்கி விட்டுள்ளார். குழம்பிப் போன ஆசின் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

அடுத்த நாள் ஆசின் கலந்து கொண்ட நிகழ்ச்சி அரங்கத்திற்குள் வந்த அந்த நபர், அங்கிருந்து பாதுகாப்பாளர்களை அணுகி, தான் இந்தூரிலிருந்து வந்துள்ளதாகவும், முக்கிய விஷயமாக ஆசினைப் பார்கக வேண்டும் என்று டுபாக்கூர் விட்டு ஆசின் சாப்பிட்டுக் கொண்டிருந்த டைனிங் டேபிளுக்கே வந்து விட்டாராம்.

அதேபோல, ஷாப்பிங் போன இடத்திலும் ஆசினைப் பின் தொடர்ந்து வந்துள்ளார்.

அடுத்த நாள் காலை ஹோட்டலைக் காலி செய்து விட்டு ஆசின் ஊருக்குக் கிளம்பியுள்ளார். போகும் வழியெல்லாம், ஏர்போர்ட்டிலும் அந்தப் பார்ட்டி இருந்து விடக் கூடாதே என்று பயந்து கொண்டே போனாராம் ஆசின். நல்ல வேளையாக அந்த நபர் அங்கு வரவில்லையாம்.

இது உண்மைதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார் ஆசினின் மேனேஜர்.

தற்போது மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளாராம் ஆசின்.

ரஹ்மானுக்கு லண்டன் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்


சர்வதேச திரையுலகில் இந்தியாவை தலைநிமிரச் செய்த ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மானுக்கு பிரிட்டனின் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம் நேற்று டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

இசைத் துறையில் ரஹ்மான் செய்துள்ள அபார சாதனைகளுக்காக இந்த பெருமைக்குரிய விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இதற்கான விழா லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் விமரிசையாக நடந்தது.

மிடில்செக்ஸ் பல்கலைக் கழக துணைவேந்தர் ரஹ்மானுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். இந்த விருதினைப் பெறும் அளவுக்கு ரஹ்மான் என்னென்ன சாதனைகள் புரிந்தார் என்பதையும் பல்கலைக் கழகம் சிறு கையேடாகவே வழங்கியிருந்தது.

விழாவில் சென்னையிலிருந்து ஆடியோ மீடியா நிறுவனத்தைச் சேர்ந்த செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழா நிறைவில், மிடில்செக்ஸ் பல்கலைக் கழக துணைவேந்தர், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் ரஹ்மானுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

செல்வராகவன்-விஷால் மோதலா?

தனியா நின்னு சிரிச்சா போதும். தலைக்கு தேய்ச்சிக்கோன்னு எலுமிச்சம் பழம் கொடுக்கிற ஊருடா இது. இரண்டே படம் அடிவாங்கினா போதும். அப்படி இப்படின்னு ஒரே கதை. விஷாலோட நிலைமையை இமயமலை வரைக்கும் ஏத்தி விட்ருச்சு ரூமர் கூட்டம். விஷால் இமயமலை பயணம். அங்கு அமைதியாக இருந்து தியானம் செய்கிறாராம். இப்படி ஒரு செய்தி கடந்த வாரம் காட்டு தீயாக பரவி, வேட்டு வைத்தது விஷாலின் இமேஜுக்கு.

என்ன சார் இமயமலைக்கு போயிட்டீங்களாமேன்னு அவரை கேட்டால், ந்தா இருக்கிற ஐதராபாத் போயிருந்தேன். அதுக்குள்ளேவான்னு சிலுத்துக்கிறாரு. சென்னையிலிருந்து ஒரே போன் மேல் போன் அடித்தார்களாம். இப்படி ஒரு செய்தி வந்திருக்கேன்னு. அப்படியெல்லாம் இல்லேன்னு சொல்லி சொல்லி மாஞ்சு போனாராம் விஷால். அது முடியறதுக்குள்ளே அடுத்த செய்தி. இது நிஜமா, இல்லையான்னு திருவாளர் தோரணையாளர்தான் சொல்லணும்.

கடந்த வாரம் செல்வராகவனையும், விஷாலையும் மீட் பண்ண வச்சாராம் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர். கைவிட்டதாக சொல்லப்பட்ட இவர்களின் புராஜக்டை, தானே எடுத்து தயாரிக்கலாமே என்ற நப்பாசைதான். ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்த பேச்சு வார்த்தை, கதையை பற்றி பேசும் போது கசமுசா ஆகி, காச் மூச்சில் முடிந்ததாம். உனக்கென்ன தெரியும், கதைய பற்றி? வாயை மூடுன்னு செல்வா எகிற, நீ வாயை மூடுன்னு விஷால் சீற, பில்லை கொடுத்தோமா, பெட்டியை கட்டினோமான்னு ஐதராபாத்துக்கே போய்விட்டாராம் அந்த அப்பாவி தயாரிப்பாளர்.

வர்ற செய்தியெல்லாம் ஒரு தோரணையாதான் இருக்கு. என்ன செய்ய? எப்படி தடுக்க?

(உ)டான்ஸ் புலி! பிரபுதேவாவை காய்ச்சும் மனைவி


நயன்தாரா நடித்து மலையாளத்தில் தயாராகி வரும் பாடிகாட் படம் இன்னும் முடியவே இல்லை. அதற்குள் அப்படத்தின் தயாரிப்பாளருக்கும், நயன்தாராவுக்கும் லடாய் ஆரம்பம் ஆகியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் நம்ம ஊரு மைக்கேல் ஜாக்சன்தான்.

இப்படத்தின் பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைக்கிற பொறுப்பை பிரபுதேவாவிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று நயன்தாரா வற்புறுத்தியதாகவும், அதனால் படத்தின் பட்ஜெட் எகிறி விட்டதாகவும் பேட்டியளித்திருக்கிறார் தயாரிப்பாளர். இந்த பாடல் காட்சிகளுக்கு தான் இயக்கிக் கொண்டிருந்த இந்தி படப்பிடிப்பை விட்டு விட்டு வந்து நடனம் அமைத்தார் பிரபுதேவா. அதுவும் பணம் வாங்கிக் கொள்ளாமலே என்று முன்பு தகவல்கள் வந்தன. ஆனால், உண்மை அதுவல்ல என்பதை பகிரங்கமாக போட்டு உடைத்துவிட்டார் தயாரிப்பாளர்.

இது நயன்தாராவை கோபத்தில் ஆழ்த்த அவரும் பதிலுக்கு தயாரிப்பாளர் மேல் புகார் வாசித்திருக்கிறார். செய்தி எப்படியோ இறக்கை கட்டி, திருமதி பிரபுதேவாவான ரமலத்தின் காதுக்கு வர, கர்ண கடூர கோபம் வந்துவிட்டதாம் அவருக்கு. ஏன்? இந்த காதல் விவகாரம் பத்திரிகைகளில் வரும்போதே பிரபுதேவாவை விசாரித்தாராம். அதற்கு இதையெல்லாம் நம்ப வேண்டாம் என்று கூறியிருந்தாராம் பிரபு.

இப்போது பிரபுதேவாதான் வேண்டும் நயன்தாராவே வற்புறுத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர். அது எப்படி என்கிறாராம் ரமலத். பதில் சொல்ல முடியாமல் பம்முகிறாராம் (உ)டான்ஸ் புலி.

ஸ்ரேயா மனசுல யாரு? குழப்பியடிக்கும் நடிகர்!


பிரபுதேவா மாதிரியே பிட்டை போட்டு, நயன்தாரா மாதிரியே நட்டை கழட்டிடுவாரு போலிருக்கு நிதின் சத்யாவும். ஏணி வச்சாலும் யோசிக்க முடியாத ஒரு செய்தி கடந்த ஒரு வருஷத்துக்கும் மேலாகவே ஓடிட்டு இருக்கு கோடம்பாக்கத்தில். நடிகை ஸ்ரேயாவுக்கும் நிதின் சத்யாவுக்கும் ஒரு இதுவாம். சிவாஜி படப்பிடிப்பு நேரத்திலேயே மவுண்ட் ரோடுக்கு பக்கத்திலே இருக்கும் ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டு ரெண்டு பேரும் டிஸ்கஷனில் இருந்ததாக செய்தி. கண்ணும் காதும் வச்சா மாதிரி நடந்து முடிஞ்ச ஒரு விஷயம் எப்படி வெளியே போச்சுன்னு ஒரே வருத்தம் ஸ்ரேயாவுக்கு. நீதான் சொல்லிட்டே என்று நிதினை கடிந்து கொண்டதாகவும் செய்தி. இதுக்கெல்லாம் தனது முட்டைக்கண்ணை விரித்து முடியலேன்னு அலுத்துக் கொண்ட நிதின், முதன் முதலா பதில் சொல்லியிருக்காரு.

எப்படி? அந்த விஷயத்தை பற்றி கேட்காதீங்க. அது எங்களுக்குள்ளே நடந்த பர்சனல் விஷயம். படத்தை பற்றி கேட்டா பதில் சொல்ல முடியும். இப்படி பர்சனலை கேட்டா என்னன்னு சொல்றது?

இல்லேங்கிற விஷயத்தை இருக்குங்கிற மாதிரியே சொல்றாங்களேப்பா! இத விடுங்க. மயிலுன்னு நினைச்சா அது மட்டன் கறிக்கு ஆசைப்படுதே, என்னத்தை சொல்ல?

Wednesday, July 8, 2009

வைரமுத்துவின் வாரிசு அரசியல்

கலைஞரோடு நெருக்க‌ம் கொண்டதாலோ என்னவோ வைரமுத்துவின் செயல்களில் கலைஞரின் டச் இருக்கத்தான் செய்கிறது.

வந்தாச்சு, வளர்ந்தாச்சு, நல்லதா நாலு காசு பார்தாச்சு. அடுத்தது வாரிசுகளை செட்டில் பண்ணிட வேண்டியதுதான். தயாராகிவிட்டார் வைரமுத்து.

தான் பாடல்கள் எழுதவிருக்கும் ரஜினியின் எந்திரன் படத்திலிருந்து ஒரு பாடலை தன் மகன் மதன்கார்க்கி எழுத ஏற்பாடு செய்துவிட்டார். ரஜினி-ஐஸ்வர்யாராயும் பாடும் பாடலை கார்க்கி எழுதுகிறார். ரஜினியிடம், ஷங்கரிடமும் பர்மிஷன் வாங்கியது வைரமுத்துவேதான்.

இதனைத் தொடர்ந்து 'இளமை இதோ இதோ' படத்தில் மூன்று பாடல்களை கார்க்கி எழுதியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் கார்க்கி, திரையுலகில் ஒரு வலம் வருவார் என்று தமக்கு நெருக்கமானவர்களிடம் பெருமையோடு சொல்லிக் கொண்டுள்ளாராம் கவிவ்பேரரசு.

இனி என்ன? அறிவாலயம், கவியரங்கம் என கார்க்கி பிஸியாக வேண்டியதுதான் பாக்கி.

தியேட்டர்களில் பார்... நோ சொன்ன முதல்வர்!


திரையரங்குகளில் பார்வைக்க வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி வந்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் ஒரு பிரிவினருக்கு, அதிர்ச்சி தரும் வகையில் அனுமதி மறுத்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.

இந்த பார் கோரிக்கைக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் குறிப்பிட்ட சிலரைத் தவிர மற்றவர்கள் கடும் ஆட்சபணை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரும், திரைப்பட சலுகைகள் சீரமைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான அபிராமி ராமநாதன், திரையரங்குகளில் கட்டாயம் பார் வைக்க அனுமதிக்கக் கூடாது. திரையரங்க வளாகத்தைச் சுற்றி குறிப்பிட்ட தூரத்துக்கு மதுக்கடைகளும் இருக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து திரையரங்குகளில் மது மற்றும் பார்களுக்கு அனுமதி கிடையாது என முதல்வர் முடிவெடுத்துள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்திய செய்தி விளம்பரத் துறை, விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என தெரிவித்துள்ளது.

இளையராஜா விலகிக் கொண்ட படம்! ஏன்?


'கண்களும் கவி பாடுதே' என்று ஒரு படம். சில மாதங்களுக்கு முன்பு துவங்கி படத்தையே முடித்துவிட்டார்கள். இப்படத்தின் ஆரம்பம் ரொம்ப சுவாரஸ்யமானது. படத்தின் இயக்குனருக்கு இளையராஜா என்றால் இஷ்டம். என் படத்திற்கு அவர்தான் இசையமைக்க வேண்டும். இல்லையென்றால் இந்த படமே வேண்டாம். இப்படி உறுதியோடு தயாரிப்பாளரிடம் பேசி, ராஜாவையும் ஒப்பந்தம் செய்தார். இசைஞானிக்கு பிடித்த மூகாம்பிகை கோவில் மண்டபத்தில் வைத்துதான் கதையையே சொன்னாராம். இப்படியெல்லாம் சென்ட்டிமென்ட் சிமெண்ட் ஊற்றிக் கட்டப்பட்ட கண்களும் கவி பாடுதே, இறுதி வடிவம் பெறும்போது மேற்படி படத்தில் ராஜாவும் இல்லை. டைரக்டரும் இல்லை.

உளவுத்துறை என்ற படத்தை இயக்கிய ஏ.ஆர்.ரமேஷ் என்பவர் மீதி படத்தை முடிக்கும் வேலையில் இறக்கிவிடப் பட்டிருக்கிறாராம். இடையில் என்ன கசமுசாவோ? அதில் நுழைய வேண்டாம்.

இப்படத்தின் பின்னணி இசையை இப்போது லேகா-சோனாட்டோன் நிறுவனம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டே நாட்களில் முழு படத்திற்கும் பின்னணி இசையை முடித்துவிட்டது இந்நிறுவனம். இங்கிருக்கிற ஆயிரக்கணக்கான இசை டிராக்குகளில் இருந்து வேண்டும் மட்டும் இசையை ருசித்த ஏ.ஆர்.ரமேஷ் இவற்றையெல்லாம் பயன்படுத்தி செதுக்கிக் கொண்டு போயிருக்கிறாராம் படத்தை.

அடிஷனல் வேலையாக ஸ்பெஷல் எபெஃக்ட்ஸ் துறையிலும் கால் பதித்திருக்கிறார் லேகா-சொனாட்டோன் நிறுவனத்தின் இந்திய பொறுப்பாளர் லேகா ரத்னகுமார். சிம்ப்ளி சூப்பர்ப் என்று சொல்ல ஆசைப்படுகிறவர்கள், ஒரு முறை இவரது ஸ்டுடியோ பக்கம் எட்டிப்பார்க்கலாம். சரி போகட்டும். ராஜா விஷயம் என்னாச்சு?

அதுபற்றி அவரே கவலைப்படலே, நமக்கெதுக்கு?

தேஜா ஸ்ரீக்கு போட்டியாக ஒரு தேஜ ஸ்ரீ!

படா படா வில்லன்களையே படுக்க வச்சு கொல பண்ணின ஹீரோயின் தமிழ்சினிமா வரலாற்றிலேயே நம்ம ஹாசினிதான் போலிருக்கு. அதுவும் சும்மா இல்லே. அந்த வில்லன்களை எல்லாம் கற்பழித்து(?) கொலை செய்தார். இவர் அறிமுகமான வேள்வி படத்தில்தான் இப்படிப்பட்ட வில்லங்க சீன்கள். ஆனாலும், பொம்பளைக்கு இது ஆவாதும்மா. நல்ல காதல் படமா நடி. பசங்க மனசில இடம் புடின்னு நாலா பக்கத்திலிருந்தும் ஒரே அட்வைஸ் இவருக்கு.

நல்ல கதைக்காக வெயிட் பண்ணிட்டிருந்தேன். நல்லவேளை, கடவுள் மாதிரி விஜய் ஷங்கர் வந்தாரு என்றார் ஹாசினி. ஒரு விஷயம் தெரியுமா? இப்போ நான் தேஜஸ்ரீன்னு பேரு மாத்திட்டேன் என்றார். (அப்போ தேஜா ஸ்ரீ ரிட்டையர் ஆயிட்டாரா?)

பக்கத்திலேயே நின்ற விஜய் ஷங்கர், இது அழகான காதல் கதை சார். லவ் பண்ணுறாங்க. சந்தோஷமா இருக்காங்க. காதல் கை கூடலேன்னா சூசைட் பண்ண போயிடுறாங்க. இது சரியான்னு அலசுற படம்தான் நான் இயக்கப் போகும் 'உயிர் நனைகிறதே' படம் என்றார். தேஜஸ்ரீக்கு ஜோடியாக பிறப்பு, மிட்டாய் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் பிரபா நடிக்கிறார்.

லேட்டஸ்டா ஒளியும் ஒலியும்ங்கிற படத்திலே நடிச்சிருக்கேன். இதை எங்கேயும் போயி சொல்லாதேங்கிறாங்க. பாவம், அவரும் ஒரு டைரக்டர்தானே? படமே இல்லாம வீட்டில் இருக்கிறதுக்கு கிடைக்கிற படத்திலே நடிக்கலாம்னு கதை கேட்காம கூட நடிச்சேன். இனிமே கதை கேட்டு கவனமா, செலக்டிவா நடிக்கலாம்னு இருக்கேன் என்றார். க.கெ.பி.சூரிய நமஸ்காரம்? போகட்டும். படத்தின் தயாரிப்பாளர் எப்படி? புது தயாரிப்பாளர். பெயர் ராஜாமுகமது.

ரொம்ப நம்பிக்கையோட இந்த படத்தை எடுக்கப் போறோம். இரண்டு பாடல்களை ஃபாரின்லே ஷ¨ட் பண்றதா ஐடியா இருக்கு. கும்பகோணம், மயிலாடுதுறையை சுற்றி ஷ¨ட்டிங் வச்சிருக்கோம். ஸ்ரீகாந்த் தேவா எங்களுக்காக ஸ்பெஷலா வொர்க் பண்றேன்னு சொல்லியிருக்கார். அதுவே பெரிய சந்தோஷம் என்றார்.

அப்படியே மனசையும் நனைய வைங்க...

நிமிருகிறது நமீதாவின் மார்க்கெட்!


சற்றே சரிந்திருந்த நமீதாவின் மார்கெட், கே.ராஜேஷ்வர் புண்ணியத்தில் 'நிமிர்ந்து' நிற்கிறது. இந்த வாரம் ரிலீஸ் ஆகவிருக்கும் இந்திரவிழா பட விளம்பரங்களில் நமீதாவின் படங்கள் மட்டுமே பிரதானமாக இடம் பெற்றிருப்பது ஒரு காரணம் என்றால், திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு ஷோ போட்டாராம் ராஜேஷ்வர். முழு படமும் காண்பிக்கப்படாமல், படத்தில் வரும் ஸ்ரீகாந்த், நமீதா கிளுகிளு காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டதாம். அவ்வளவுதான், பெட்டியை கையோடு எடுத்துப் போகிற அளவுக்கு ஒரே போட்டா போட்டியாம்.

நல்ல நேரத்தில் இப்படி ஒரு ஐடியா செய்தார் ராஜேஷ்வர். இல்லையென்றால் தியேட்டருக்கு திண்டாடியிருப்பார் என்கிறார்கள் சினிமா வட்டாரங்களில். ஏனாம். இம்மாதம் ஏராளமான படங்கள் ரிலீஸ் ஆகின்றன. வைகை, மோதி விளையாடு, மலையன், வாமனன், வேலுபிரபாகரனின் காதல் கதை என்று வரிசை கட்டி நிற்கிறது படங்கள். ஆனால் ஏபிசி என்று சொல்லப்படும் மூன்று சென்ட்டர்களிலும் தியேட்டர் கிடைப்பதுதான் குதிரை கொம்பு.

கடந்த மாதமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய இந்திரவிழாவை, இந்த முறையும் விட்டால், ஆகஸ்ட்டில் வரப்போகும் அதிரடி படங்களுக்கு முன் சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்ததாம் ராஜேஷ்வருக்கு. அதனால்தான் இப்படி ஒரு விளம்பர ஏற்பாடு.

முதல்ல சதைய காட்டுவோம். அப்புறமா கதைய காட்டுவோம்னு நினைச்சிருப்பாரு போலிருக்கு. ஐடியா வொர்க் அவுட் ஆச்சே, அதுபோதும் போங்க...

இந்தா பிடி சர்டிபிகேட்! மீராநந்தனுக்கு ஸ்கூல் தந்த அதிர்ச்சி

படிக்கும் போதே நடிக்க வந்த நடிகைகள் மீண்டும் பள்ளிக்கூடம் பக்கம் போனால், சொல்லிக் கொடுத்த டீச்சர்களே ஆட்டோகிராப் கேட்கும் அவலம் நம்ம ஊர்லேதான். ஆனால், கேளராவில் வேறு ட்ரீட்மென்ட்.

அப்படி ஒரு ட்ரீட்மென்ட்டை அனுபவித்துவிட்டாராம் மீரா நந்தன். நடிக்கிற ஆசையில் ஸ்கூலுக்கு லாங் லீவ் போட்டுவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார். வால்மீகி கொடுத்த தெம்பு, போதிய அளவில் இல்லாததால் மீண்டும் படிக்க போகலாம் என்ற முடிவை எடுத்தாராம். போன இடத்தில்தான் பொல்லாங்கு. பிடிங்கம்மா ஒங்க சர்டிபிகேட்டை என்று கூறிவிட்டதாம் ஸ்கூல் நிர்வாகம். ஆனாலும், அழுது அடம் பிடித்து, விட்ட இடத்திலிருந்து படிப்பை தொடர்கிறாராம் மீரா நந்தன்.

நம்ம ஊர் சந்தியா கூட பாதிப்படிப்பில் நடிக்க வந்தார். நல்லவேளையாக திரும்பவும் ஸ்கூலுக்கு போகாமல், நேரடியாக பத்தாம் வகுப்பு எழுதினார். தேறினாரா என்பதெல்லாம் தேவையில்லாத கேள்வி. படித்துக் கொண்டிருக்கும் போதே நடிக்க வந்த பாக்யராஜின் மகள் சரண்யா, இப்போது நடிப்புக்கு நல் வணக்கம் போட்டுவிட்டு வெளிநாட்டில் படிக்க போய்விட்டார். பூ பட நாயகி பார்வதிக்கு படிப்பு மீது தீரா காதல். ஏராளமான வாய்ப்புகள் வந்தும், கொஞ்சம் பொறுங்க. படிப்பை முடிச்சிடுறேன் என்று புத்தகமும், கையுமாக பொழுது போக்க ஆரம்பித்துவிட்டார்.

இப்படிப்பட்ட மாணவிகள் திரும்பவும் சினிமாவுக்கு வந்து மக்களுக்கு பாடம் கற்பிப்பது எப்போதாம்?

Tuesday, July 7, 2009

சத்தமில்லாமல் ஒரு சமூகப் புரட்சி


கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் கிராமம் தேக்கு மரத்திற்கு புகழ்பெற்றது. இனி இன்னொன்றும் இந்த கிராமத்தின் சிறப்பாக இடம்பெற உள்ளது. அதுதான் வரதட்சணையற்ற திருமணங்கள்.

ஆம், நிலம்பூர் கிராமத்தில் வரதட்சணைக் கொடுமை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதன் காரணமாக அங்கு வரதட்சணையற்ற திருமணங்கள் அதிகளவில் நடந்து வருகிறது.

திருமணமங்கள் என்பது சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்ட காலம் மாறி ரொக்கத்திலும், சவரனிலும் நிர்ணயிக்கப்படும் காலமாகிவிட்டது. வரதட்சணை கொடுக்க முடியாத காரணத்தால் எத்தனையோ கன்னிகள் முதிர் கன்னிகளாகிவிட்டனர்.

இந்த வரதட்சணைக் கொடுமை இந்தியாவின் பல நகரங்களிலும் தலை விரித்தாடுகிறது. அதிலும் கேரளாவில் இது அதிகம். இதற்கெல்லாம் எங்கு வழி பிறக்கப் போகிறது என்றுதான் பல பெற்றோர்களும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

வழி பிறந்துள்ளது நிலம்பூர் கிராமத்தில்.

சுமார் 40 ஆயிரம் பேர் வசிக்கும் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் கிராமத்தில், வரதட்சணை பிரச்சினையால் பல பெண்கள் 30 வயதாகியும் திருமணமாகாமல் இருப்பதும், மேலும், பல பெண்கள் பேசப்பட்ட வரதட்சணைக் கொடுக்காத காரணத்தால் விவகாரத்தாகி பெற்றோர் வீட்டில் வசிப்பதும், வரதட்சணைக் கொடுத்தே பல குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு அடி பாதாளத்தில் சென்றதும் அங்குள்ள கிராம பஞ்சாயத்து தலைவர் ஆர்யதன் சவுக்கத்தின் கவனத்திற்கு வந்தது.

முதலில் சொந்தமாக வீடில்லாமல் வாழ்பவர்களை கண்டறிந்தார். அவர்கள் ஏன் சொந்தமாக வீடில்லாமல் வாழ்கிறார்கள் என்பதை ஆராய்ந்த போது, பலரும், தங்களது மகள் திருமணத்திற்காக சொந்த வீட்டை விற்று வரதட்சணை வழங்கியிருப்பது தெரிய வந்தது.

வரதட்சணை பிரச்சினை இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்திருப்பது குறித்து கவலைப்பட்டார். கவலைப்பட்டதோடு நின்றுவிடாமல், அதனை மாற்ற நடவடிக்கையும் எடுத்தார். வரதட்சணையை ஒழிக்கும் நோக்கத்தோடு ஒரு குழுவை அமைத்தார்.

இந்த குழுவினர், வீடு வீடாகச் சென்று வரதட்சணைக் கொடுமையால் பல குடும்பங்கள் சீரழிந்து கிடப்பதை எடுத்துக் கூறி, அதனால் எத்தனை பெண்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதையும் பட்டியலிட்டனர்.

இதோடு நின்றுவிடாமல் வரதட்சணை விழிப்புணர்வை ஏற்படுத்தும் தெருக் கூத்துகள், திரைப்பங்கள் காட்டப்பட்டன.

முதலில் இதற்கெல்லாம் எந்த பலனும் இல்லாமல் இருந்தது. ஆனால் நாளடைவில் மக்களின் மனதில் சிந்தனை ஓடியது. விழிப்புணர்வு ஏற்பட்டது. அப்படி விழிப்புணர்வை அடைந்த மக்களிடம், வரதட்சணை வாங்க மாட்டோம், கொடுக்கவும் மாட்டோம் என்று உறுதி மொழியும் வாங்கப்பட்டது.

அப்போதே அந்த கிராமத்தில் வரதட்சணை என்ற பேய் ஓடோடிவிட்டது.


கடந்த 2 மாதங்களில் வரதட்சணை கொடுத்து எந்த திருமணமும் நடைபெறவில்லை. ஏழைப் பெண்கள் சிலருக்கும் எளிய முறையில் திருமணமாகியுள்ளது என்பதுதான் அந்த கிராமத்தில் ஏற்பட்ட சமூக புரட்சியின் பலன்.

நிலம்பூர் கிராமத்திற்கு ஒரு விடிவெள்ளி தோன்றியது போல இந்தியாவிற்கும் ஒரு விடிவெள்ளி தோன்றினால் பல பெண்களின் வாழ்க்கை விடியும் என்பது உறுதி.

புதிய கலாச்சாரம்: உடலில் பச்சைகுத்தும் முன்னணி நடிகைகள்

முன்னொரு காலத்தில் பச்சை குத்துதல் ஆதிவாசி மக்களின் கலாச்சாரமாக திகழ்ந்தது.
தற்போது இது ஒரு புதிய “பேஷன்” ஆக அதாவது கலாசாரமாக மாறிவிட்டது. பாலிவுட் சினிமா உலகில் நடிகர், நடிகைகள் பச்சை குத்தும் கலாச்சாரத்தை தொடங்கி வைத்தனர்.

சுனில்ஷெட்டி, ஜான் ஆபிரகாம், ராக்கிஷவாந்த், சல்மான்கான், சுஸ்மிதாசென், சஞ்சய்தத் போன்ற முன்னணி இந்தி நடிகர், நடிகைகள் தங்களது உடலில் பச்சை குத்தி வலம் வருகின்றனர்.

இவர்களில் நடிகர் சஞ்சய்தத் பச்சை குத்துவதில் மிகவும் ஆர்வம் உள்ளவராக திகழ்கிறார். இவர் தனது உடலில் 4 இடங்களில் பச்சை குத்தியுள்ளார். மார்பில் தந்தை சுனில்தத் பெயரை தேவநகரி எழுத்திலும், தாய் நர்கீஸ் பெயரை உருது மொழியிலும் குத்தியுள்ளார்.

கழுத்தில் ஓம் என்ற எழுத்துடன் கூடிய லியோ சின்னத்தையும் தனது ஒரு கையின் மணிக்கட்டில் சிங்கத்தின் படத்தையும், மற்றொரு கை மணிக்கட்டில் தனது மனைவி மானியதாவின் பெயரையும் பச்சையாக குத்தி வைத்துள்ளார்.

மாடலிங் துறையில் இருந்து தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக திகழும் தீபிகா படுகோனே கழுத்தில் பச்சை குத்தியுள்ளார். ரன்பீர்கபூர் “ஆர்.கே.” என தனது பெயரை ஆங்கிலத்திலும், நடிகை அம்ருதா அரோரா தனது முதுகிலும் பச்சை குத்தியுள்ளனர்.

தற்போது இந்தி சினிமா உலகில் காதல் ஜோடிகளாக வலம் வரும் சயீப் அலிகான், கரீனா கபூரும் கைமணிக்கட்டில் பெயர்களை பச்சையாக குத்தியுள்ளனர்.

“பாலிவுட்” படஉலகை கலக்கிய இந்த கலாச்சாரம் தற்போது கோடம்பாக்கத்திலும் அதாவது “கோலிவுட்” படஉலகையும் ஆக்கிரமித்து உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழ்பவர்கள் பச்சைகுத்தும் கலாச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இவர்களில் மிகவும் பரபரப்பாக திகழ்பவர் நடிகை நயன்தாரா. இவருக்கும், பிரபுதேவாவுக்கும் காதல் என ”கிசுகிசு”க்கள் உலா வருகின்றன. இதை நயன்தாரா கடுமையாக மறுத்துள்ளார்.

ஆனால் அவர் பிரபு தேவாவின் பெயரை தனது கையில் பச்சை குத்தியுள்ளார். “பி” என ஆங்கிலததிலும், “தேவா” என தமிழிலும் பச்சை குத்தியுள்ளார். ஐதராபாத்தில் நடந்த ஒரு நிறுவன திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது ரசிகர்கள் இதை கண்டுபிடித்தனர். இது தற்காலிகமான பச்சைதான் என்று கூறி சமாளித்து விட்டார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக திகழும் “திரிஷா” தனது பெயரை மார்பில் பச்சை குத்தியுள்ளார். இதை அவர் நடித்த கிரீடம், பீமா, குருவி உள்ளிட்ட படங்களில் பார்க்க முடியும்.

நடிகர் கமலஹாசனின் மகள் சுருதியும், தனது பெயரை பச்சை குத்தியுள்ளார். “ஷ்ருதி” என முதுகில் தமிழில் எழுதியுள்ளார். பிரியாமணி தனது மார்பில் படத்தை பச்சை குத்தியுள்ளார்.

நடிகர், நடிகைகளை பார்த்து தற்போது சென்னையில் கல்லூரி மாணவ- மாணவிகளிடையே பச்சை குத்தும் கலாச்சாரம் பரவி வருகிறது. அவர்கள் தாங்கள் விரும்பும் காதலர்கள், நண்பர்கள் பெயர்கள் மற்றும் படங்களை உடலில் வரைந்து கொள்கின்றனர்.

பச்சை குத்தும்போது உடலில் ஏற்படும் துளைகளால் அழகு அதிகரிப்பதாக சிலர் விரும்புகின்றனர். பலரோதான் “செக்ஸ்”சியாக, கவர்ச்சியாக தெரிய வேண்டும் என்பதற்காக பச்சை குத்திக் கொள்வதாகவும் தெரிய வந்துள்ளது

சென்டிமென்ட் சீன்களில் நடித்த போது என்னை அழ வைத்த நாடோடிகள் படம் -அபிநயா


நாடோடிகள் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்திருப்பவர் அபிநயா.
ஹைதராபாத்தில் மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்த இவர் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தது குறித்து கூறியதாவது:-

எனது அப்பா ஆனந்த் முன்னாள் ராணுவ வீரர். தற்போது தெலுங்கிய சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். எனவே நான் மாடலிங்கில் நுழைய அவர் எந்த தடையும் விதிக்கவில்லை. மாறாக எனக்கு உதவிகள் செய்தார்.

நான் விளம்பரங்களில் நடித்த போது என்னுடனே இருந்து எனது தவறுகளை சுட்டிக் காட்டி திருத்தினார். அம்மாவும் எனது வார்த்தை உச்சரிப்பில் இருந்த தவறுகளை சொல்லி எனக்கு மிகவும் உதவினார். ஒருநாள் ஹைதராபாத் விமான நிலையம் அருகில் உள்ள இடத்தில் விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது கேரள விளம்பர கம்பெனி நிறுவனத்தினர் வந்து எனது தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

பின்னர் எனது போட்டோக்கள் அடங்கிய ஆல்பத்தை வாங்கி கொண்டு சென்று விட்டனர். திடீரென ஒருநாள் டைரக்டர் சமுத்திரகனி என் அப்பாவுக்கு போன் செய்து பேசினார். தனது புதிய படத்திற்காக கேரளா சென்று நாயகியை தேடிய போது விளம்பர நிறுவன கம்பெனியில் இருந்த எனது ஆல்பத்தை பார்த்ததாக கூறிய அவர் எனது கதாபாத்திரம் குறித்து கூறினார்.

படத்தில் ஹீரோ, ஹீரோயின் என யாரும் கிடையாது. 7 முக்கிய கதாபாத்திரங்களில் நீங்களும் ஒருவராக நடிக்கிறீர்கள் என சமுத்திரகனி கூறினார். இருந்தாலும் சசிகுமாரின் தங்கை கதாபாத்திரம் என்பதால் எனக்கு சற்று குழப்பமாக இருந்தது.

ஆனால் படத்தின் கதை என் அப்பாவுக்கு பிடித்திருந்தது. அவர் விரும்பியதால் நான் அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன். விளம்பரங்களில் நடித்த அனுபவம் இருந்ததால் படத்தில் நடிக்க கஷ்டமாக தெரியவில்லை.

படப்பிடிப்பு ரொம்ப ஜாலியாக இருந்தது. சென்டிமென்ட் சீன்களில் நடித்த போது உண்மையிலேயே அழுது விட்டேன். நிறைய படங்களில் நடிக்க வேண்டும். அதுவும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

சென்னையில் வேகமாக பிரபலமாகும் சல்சா டான்ஸ்


சென்னை நகரை சல்சா காய்ச்சல் படு வேகமாக பீடித்துள்ளது. சல்சா நடன பயிற்சிப் பள்ளிகள் பெருமளவில் பெருகி வரும் நிலையில் இதுதொடர்பான நடன நிகழ்ச்சிகளும் இப்போது அதிக அளவில் நடைபெறுகின்றன.

ஸ்பானிஷ் மொழி பேசும் கரீபிய தீவு மக்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த சல்சா டான்ஸ். ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நடன வடிவங்களின் கலவைதான் இது.

இசையும், நடனமும் இணைந்த அட்டகாசமான டான்ஸ் இது.

இந்த டான்ஸை ஜோடி ஜோடியாகத்தான் ஆட முடியும். தனியாக ஆட முடியாது. தனியாக ஆடும் ஆட்டமும் இருக்கிறது. இருந்தாலும் ஜோடி போட்டு ஆடினால்தான் சல்சாவுக்கே தனி மதிப்பு.

சல்சா என்பதற்கு ஸ்பெயின் மொழியில் மசாலா மணம் என்று பொருள்.

இப்போது சென்னை நகரிலும் சல்சா டான்ஸ் காய்ச்சல் படு வேகமாக பரவி விட்டது. எங்கு பார்த்தாலும் சல்சா கற்றுத் தரப்படும் என போர்டுகளைப் பார்க்கலாம். அதேபோல சல்சா நடன நிகழ்ச்சிகளும் சக்கை போடு போடுகின்றன.

சென்னையில் உள்ள ஹவானாவில் சல்சா நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏகப்பட்ட கூட்டம். வந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் காதல் ஜோடிகள்தான்.

டிஜே பிளைஸின் கீபோர்ட் இசையுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக களை கட்டியது சல்சா.

ஆடியவர்களிலேயே அதிகம் கவர்ந்தவர்கள் சுதர்சன்- கரேன் ஜோடி தான். அட்டகாசமான வளைவுகளுடன் அவர்கள் நெளிந்து, வளைந்து ஆடியது கூட ஆடியவர்களை மிரட்டியது.

ஏகப்பட்ட பிரபலங்களையும் கூட இந்த பார்ட்டியில் பார்க்க முடிந்தது.

இரவு ஏற ஏற ஆட்டத்தின் வேகமும் கூடி கரீபியத் தீவுகளே இங்கு இடம் பெயர்ந்து வந்து விட்டதோ என்ற மாயையை ஏற்படுத்தியது.

கற்பழிப்பு: ரூ.5 கோடி செலவில் ஆந்திர முதல்வர் செய்த சதி - ரோஜா

ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற கொடிய நோக்கத்தில் கோவூர் எம்எல்ஏ ராமராவ் மீது வீண் பழிபோட முதல்வர் ராஜசேகர ரெட்டி நாடகமாடி வருகிறார். இதற்காக அவர் ராமாராவ் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த கேரள பெண்களுக்கு ரூ. 5 கோடி கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் நடிகையும், தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியுமான ரோஜா.

ஆந்திர மாநிலம் கோவூர் பகுதி தெலுங்குதேசம் கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் டிவி ராமாராவ். இவர் ஸ்புருகா என்ற நர்சிங் கல்லூரி நடத்தி வருகிறார்.

சமீபத்தில் இந்த கல்லூரியில் படித்த ஒரு மாணவி, எம்எல்ஏ தன்னை கெடுத்து விட்டதாக புகார் தெரிவித்தார். இவரை தொடர்ந்து மேலும் நான்கு மாணவிகள் எம்எல்ஏ ராமாராவ் தங்களை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தாங்கள் அதிலிருந்து தப்பி விட்டதாகவும், ஆந்திர கவர்னர் என்டி திவாரியிடம் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து ஆந்திர முதல்வர் இந்த விஷயத்தை சிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்தார். இது குறித்து மத்திய அரசு கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என கேரள வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆனால், அந்த எம்எல்ஏவும், தெலுங்குதேசம் கட்சியும் இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ளனர்.

இது குறித்து ரோஜா கூறுகையில், ராமாராவ் மீது கேரள மாணவிகள் சுமத்திய குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இது ஒரு பொய் புகார்.

இந்த புகாரை கொடுக்க, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்களுக்கு ரூ. 5 கோடி பணம் கொடுத்துள்ளார். அந்த பெண்கள் பணத்தை வாங்கி கொண்டு புகார்களை தெரிவித்துள்ளனர்.

இந்த சதி திட்டத்துக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் படி காங்கிரஸ் கட்சியினருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஆந்திர மக்கள் மத்தியில் தெலுங்கு தேசம் கட்சியின் பெயரை கெடுக்க சதி நடந்துள்ளது. தெலுங்குதேசம் ராமாராவுக்கு எப்போதும் துணை நிற்கும் என்றார் ரோஜா.

செங்கோட்டையில் மேக்னாவுடன் ஆட்டம் போட்ட தனுஷ்

செங்கோட்டையில் குட்டி படத்தின் பாடல்காட்சியில் தனுஷ், மேக்னா நாயுடு செமத்தியான ஆட்டம் போட்டனர். தனுஷ் படப்பிடிப்பு நடக்கும் செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் குவிந்ததால் படப்பிடிப்பு சற்று தாமதமானது.

யாரடி நீ மோகினி வெற்றி கூட்டணியான நடிகர் தனுஷ், இயக்குனர் ஜவஹர் மீண்டும் குட்டி படம் மூலம் இணைந்துள்ளனர். ஸ்ரேயா, மேக்னா நாயுடு என இரண்டு கவர்ச்சி கன்னிகள் படத்தில் இடம்பிடித்துள்ளனர்.

ஜெமினி பிலிம் சர்க்கியூட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் சூட்டிங் தற்போது இயற்கை எழில் கொஞ்சும் தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, தென்மலை ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று செங்கோட்டை ரயில் நிலையத்தின் உள்பகுதியில் தனுஷ், மேக்னா நாயுடு பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில் தனுஷ் வேர்கடலை சாப்பிட்டுக் கொண்டே, மேக்னாவுடன் இணைந்து செம ஆட்டம் போட்டார்.

இந்த பாடல் காட்சி பின்னர் பிளாட்பாரத்திலும் படமாக்கப்பட்டது. செங்கோட்டையில் இருந்து தென்மலை வரை உள்ள மீட்டர்கேஜ் பாதை, 4 குகைகள், 13 கண் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கண்டெய்னர், ஏற்றிச் செல்லும் பிளாட்பார ரயிலிலும் தனுஷ், மேக்னா நாயுடு ஆகியோர் ஆடிபாடி வருவது போன்று பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

வரும் 9ந் தேதி வரை இப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது.

நடிகர் தனுஷ் செங்கோட்டைக்கு வந்திருக்கும் தகவல் அறிந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் சிறுவர்களும் திரண்டு வந்தனர். சிறுவர்கள் தனுஷை அருகில் வந்து தொட்டு பார்த்தனர். இதையடுத்து அவருடைய தனியார் பாதுகாவலர்கள் படை சிறுவர்களை விரட்டிவிட்டனர்.

உடனே தனுஷ் பாதுகாவலர்களை சத்தம் போட்டு சிறுவர்களிடம் கை குலுக்கினார். சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர். இதனால் படப்பிடிப்பில் லேசான தாமதம் ஏற்பட்டது. மாலையில் சாரல் பொழிந்ததால் படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்பட்டது.

தமிழ்ப் படம் இப்போதைக்கு இல்லை!-ஏவிஎம்

அடுத்தடுத்து சிவாஜி மற்றும் அயன் என பெரும் வெற்றிப் படங்களைத் தந்தாலும் அடுத்த தமிழ்ப் படம் தயாரிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை ஏவி எம் நிறுவனம்.

இப்போது தமிழுக்கு பதில் தெலுங்குப் படங்கள் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது ஏவிஎம்.

சமீபத்தில் வருண்தேஜ்- விமலாராமன் நடித்த 'எவரைனா எப்புடைனா' எனும் படத்தை வெளியிட்டது ஏவிஎம். அந்தப் படம் எதிர்பாராத வெற்றியைப் பெறவே, மீண்டும் தெலுங்கிலேயே புதிய படத்தைத் தொடங்கிவிட்டது இந்த நிறுவனம்.

ராமாநாயுடுவின் பேரன் ரானா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு லீடர் என தலைப்பிட்டுள்ளனர். இந்தப் படத்தை இயக்குபவர் சேகர் கம்முல. இவர் ஏற்கெனெவே ஹேப்பி டேஸ் எனும் வெற்றிப் படத்தை இயக்கியவர்.

தமிழ் திரையுலகில் இன்னும் சாதகமான சூழல் வரும்போது படம் தயாரிக்கலாம் என அமைதி காக்கிறது ஏவிஎம்.

அசைவமும் அசினும்...!

வாய கட்டி, வயிற்றை கட்டிதான் சம்பாதிக்கிறாங்க ஒவ்வொரு நடிகையும். நடிக்கும் போது குண்டூசியா இருக்கிற இவங்க, திருமணத்திற்கு பிறகு குண்டூஸ் ஆகிவிடுவதற்கு காரணம், டயட் கண்ட்ரோல் இல்லாமல் போவதுதான். (சினிமாவில் நடிக்கும் போதுதான் இதை திண்ணாதே, அதை திண்ணாதே என்ற கட்டுப்பாடெல்லாம்)

சாப்பாட்டு விஷயத்தில் எப்பவுமே விட்டுக் கொடுக்கிற வழக்கம் இல்லையாம் அசினுக்கு. அப்பா வேட்டைக்கு போய் கொண்டு வரும் முயல்கறி என்றால், அசினின் நாக்கில் ஆல்கஹாலே ஊறுமாம். என்ன செய்வது? சிக்கன், மீன் என்று வறுத்துக்கட்டினாலும், முயல் விஷயத்தில் முன்பு போல் முயல்வதை விட்டுவிட்டார் அசின்.

இந்த லட்சணத்தில் பிராணிகளுக்காக வரிந்து கட்டும் அமைப்பு ஒன்று அசினிடம், அசைவம் உண்ணாமை குறித்து நாங்கள் நடத்தும் பிரச்சாரத்தில் உங்கள் பங்கும் இருக்க வேண்டும் என்றார்களாம். திண்டுக்கல் பூட்டுக்கு திருடனா காவல்? அதிர்ந்து போன அசின், நானே நல்லா வெளுத்துக்கட்டுவேன். என்னை கண்ட்ரோல் பண்ணாம மற்றவங்களை அட்வைஸ் பண்ணுவதில் எனக்கு இஷ்டம் இல்லே என்றாராம்.

அசைவத்தை வெட்டுற அரிவாள் மாதிரியே வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என்று பேசுறாரே? ஆச்சர்யம்தான்!

பார்..இரண்டு படும் தியேட்டர்காரர்கள்!!

சென்னை: திரையரங்குகளில் பார் வைக்க அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் துணைத் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

தியேட்டர்களில் பார் வைக்க அனுமதிக்க வேண்டும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் (குசேலன் விவகாரத்தில் போர்க்கொடி தூக்கியவர்கள்) முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்தக் கோரிக்கையை மீண்டும் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு பெரும்பாலான திரையரங்க நிர்வாகிகள் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் திரைரங்கு சங்க துணைத் தலைவர் ஜெயகுமார், கூடுதல் செயலாளர் எம்.வி.ராமு, பொருளாளர் பழனியப்ப செட்டியார் ஆகியோர் முதவர் கருணாநிதிக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் அவர்கள் எழுதியுள்ளதாவது:

எங்கள் சங்கத்தில் இருந்து சிலர் தியேட்டர்களில் பார் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வருக்கு வைத்திருப்பதாக செய்தி அறிந்தோம். எந்த கோரிக்கையும் பொது மகாசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாக இருக்க வேண்டும். தனி நபர் கருத்தாக இருக்கக்கூடாது.

தியேட்டர்களில் பார் வைக்கவேண்டும் என்பது குறித்து பொதுக்கருத்து எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அதுகுறித்து அனைவரிடமும் பேசப்படவுமில்லை. உண்மையில் பெரும்பாலான திரையரங்குகள் அருகில் கூட பார்கள் இருக்க கூடாது என்றே விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

எனவே பார் வைக்க அரசு அனுமதி அளிக்கக் கூடாது, என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

குடும்பங்கள் வருவதே நின்றுவிடும்!

இதற்கிடையே, தியேட்டர்களில் பார்களை அனுமதித்தால் குடும்பத்துடன் யாரும் தியேட்டருக்கு வருவே மாட்டார்கள். இந்நிலை உருவாக அனுமதிக்கக் கூடாது என சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.

சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டம் அபிராமி ராமநாதன் தலைமையில் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில் தியேட்டர்களில் பார் வைக்க அனுமதித்தால் குடும்பங்களாக வருபவர்கள் தியேட்டர்களுக்கு வருவதையே நிறுத்தி விடுவார்கள். குடித்து விட்டு வருபவர்கள் தியேட்டர் உள்ளே இருக்கைகளையும் கெடுத்து விடுவார்கள்.

எனவே தியேட்டர்களுக்கு உள்ளே பார் வைக்க அனுமதிக்கவேண்டாம் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.

திரையரங்கு அருகில் பார்கள் இருக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும். பொது இடங்களில் குடிப்போர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

'வைகை'யைப் புகழும் கலா மாஸ்டர்!

சுந்தரபாண்டி இயக்கத்தில், பிபிஜிசி சங்கர் தயாரிப்பில் உருவாகியுள்ள வைகை படம் பற்றிதான் கோலிவுட்டில் முழுக்க பேச்சாக இருக்கிறது. விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த அத்தனை விஐபிக்களும் படம் குறித்து வெளியிடும் பாஸிடிவ் கருத்துக்கள் இயக்குநரையும் தயாரிப்பாளரையும் உற்சாகத்தில் துள்ள வைத்துள்ளன.

மதுரை பின்னணியில், ஒரு நிஜ காதல் கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தப் படம் குறித்தும் அதன் நாயகன் பாலா (நாகரீகக் கோமாளியில் நடித்தவர்)குறித்தும் சமீபத்தில் பிரபல நடன இயக்குநர் கலா மானாட மயிலாட நிகழ்ச்சியில் மனம் திறந்து பாராட்டியது, படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது.

மானாட மயிலாட நிகழ்ச்சியின் இடையே கலா கூறுகையில்,

சமீபத்தில் வைகை படம் பார்த்தேன். மிக அருமையாக இயல்பாக நடித்திருந்தார் பாலா. எந்தக் காட்சியிலும் ஓவர் ஆக்டிங்கே இல்லை.

இதே மானாட மயிலாட நிகழ்ச்சியில் மிகச்சிறந்த பர்பார்மன்ஸுக்காக முதல்பரிசு வாங்கியவர் பாலா என்பதில் எனக்கு கூடுதல் பெருமை. நிச்சயம் இந்தப் படம் பெரிய வெற்றி பெறும்...என்றார் கலா.

பாலாவும் ப்ரியதர்ஷினியும் மானாட மயிலாட இறுதிச் சுற்றில் வென்றி பரிசு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

செக்ஸுக்கு நான் ரெடி - மினிஷா

செக்ஸ் பற்றி ரகசியமாக பேசியதெல்லாம் அந்தக் காலம். எனக்கு செக்ஸ் பெரிய விஷயமே இல்லை என்று படு பட்டவர்த்தனமாக பேசியுள்ளார் பாலிவுட் ஹாட் ஸ்டார் மினிஷா லம்பா.

கைட்ஸ் படத்தில் நடித்து வரும் மினிஷா செக்ஸ் குறித்து விலாவாரியாக பேசியுள்ளதன் சுருக்கம்...

கைட்ஸ் ஒரு ரொமான்டிக் படம். சமீப காலத்தில் இப்படி ஒரு ரொமான்டிக்கான படம வந்ததில்லை என்று கூறலாம்.

செக்ஸ் குறித்த பாலிவுட்டின் பார்வை விரைவில் மாறி விடும். எனக்கு 15 வயதாக இருக்கும்போது எனது அம்மாவிடம் செக்ஸ் குறித்து விரிவாக கேட்டறிந்தேன்.

ஒரு காதலன், காதலி அல்லது கணவன், மனைவியின் தனிமையான தருணங்களின்போது அழகு மிளிரும். அதை அப்படியேதான் சினிமாவில் காட்ட முடியும். அப்படி காட்டினால்தான் அது இயற்கையாக இருக்கும்.

யாராவது என்னிடம் செக்ஸ் குறித்துப் பேச முன்வந்தால் நான் தயக்கமே காட்ட மாட்டேன். அந்த சப்ஜெக்ட் குறித்து வெளிப்படையாக, விரிவாக பேச நான் தயார் என்கிறார் மினிஷா.

கோலிவுட்டில் எல்லோரும் 'திரிஷா' காலத்தில் இருக்கிறோம். மினிஷாவோ, விட்டால் 'மினி ஷோ'வே நடத்திக் காட்டி விடுவார் போல..!

நெவர்லேன்ட் பண்ணையில் ஜாக்சன் ஆவியைப் பார்த்தோம் -ரசிகர்கள் கூறுகிறார்கள்

லாஸ் ஏஞ்சலெஸ்: மைக்கேல் ஜாக்சன் இன்னும் சாகவில்லை. அவர் டிராமா போடுகிறார். அட்டகாசமாக அவர் திரும்பி வருவார் என்று கூறும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நிலையில் ஜாக்சனின் ஆவியைப் பார்த்ததாக சில ரசிகர்கள் கூறியுள்ளனர்.

ஜாக்சனுக்குச் சொந்தமான நெவர்லேன்ட் பண்ணையில் ஜாக்சனின் ஆவி நடமாடியதைப் பார்த்ததாக இவர்கள் கூறுகிறார்கள்.

இதையடுத்து அதுகுறித்த செய்திகளைப் பார்ப்பதற்காக இணையதளங்களை மொய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

ஜாக்சனின் பண்ணை வீட்டின் சுவரில் ஜாக்சனின் நிழல் உருவம் தென்பட்டு பின்னர் மறைந்து விட்டதாக இந்த ரசிகர்கள் சிஎன்என் தொலைக்காட்சியின் இன்சைட் நெவர்லன்ட் என்ற நிகழ்ச்சியின்போது தெரிவித்தனர்.

அந்த நிழல் உருவம் சுவரில் தோன்றி பின்னர் பண்ணை வீட்டின் காரிடார் வழியாக நடந்து போனதாகவும். அதன் பின்னர் அது மறைந்து விட்டதாம்.

அது நிச்சயம் ஜாக்சனின் ஆவியாகத்தான் இருக்க வேண்டும் எனவும் அந்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்து, நான்தான் ஜாக்சன் என்று யாரும் சொல்லிக் கொண்டு கிளம்பாமல் இருந்தால் சரி.

மம்மா மியா: சரத் மகள் அசத்தல் நடனம்!


சென்னையில் கடந்த இரு தினங்களாக நடந்த மம்மாமியா நடன நாடக நிகழ்ச்சியில் சரத்குமார் மகள் வரலட்சுமியின் நடனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் 'மம்மா மியா' நடன நிகழ்ச்சி, சென்னையில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், சரத்குமார், ராதிகா மற்றும் ராம்கி ஆகியோர் கலந்துகொண்டு நடனம் ஆடினார்கள்.

அமெரிக்க கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட 'மம்மா மியா' என்ற நடனத்தை முறைப்படி கற்று தேர்ந்தவர் வரலட்சுமி.

ஒரு மகள் தன் தந்தையைத் தேடுவது போன்ற ஒரு நாடகத்தை நாட்டியமாக நேற்று அரங்கேற்றினார் வரலட்சுமி.

இந்த நடன குழுவில், வரலட்சுமி உள்பட 50 பேர் நடனமாடினர்.

நடன நாட்டியத்தின் முதல் நிகழ்ச்சி, சென்னை மியூசிக் அகடமியில் 2 நாட்கள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அந்தரத்தில் பறந்தபடி வரலட்சுமி ஆடியபோது, அரங்கம் அதிர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் சரத்குமார், மனைவி ராதிகாவுடன் கலந்து கொண்டார். ராதிகாவின் தங்கை நிரோஷா, கணவர் ராம்கியுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

நடன நிகழ்ச்சியின் முடிவில் சரத்குமார், ராதிகா, ராம்கி ஆகியோரும் மேடையில் நடனம் ஆடினர்.

இந்த நடன நாட்டியத்தை தொடர்ந்து நடத்த உள்ளார் வரலட்சுமி.

ரத்த வங்கி.. இணையத்தில் கலக்கும் மம்முட்டி


நடிகர் மம்முட்டி தனது பெயரில் ஒரு அட்டகாசமான புதிய இணையதளம் (www.mammootty.com) துவங்கியுள்ளார். இந்த இணையதளத்தில் மம்முட்டி பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் சிறப்புப் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. பல சமூக நலத் திட்டங்களும் விரைவில் இதில் இடம்பெற உள்ளன.

ஏற்கெனவே இந்த இணையதளம் துவங்கப்பட்டிருந்தாலும், அது திருப்தியாக இல்லாததால், புதிதாக அதை மாற்றியமைத்துள்ளார் மம்முட்டி.

இந்த புதிய தளத்தின் துவக்க விழா நேற்று கொச்சியில் நடந்தது. இந்த இணைய தளத்திலேயே இலவச ரத்த வங்கி சேவையையும் பெறலாம்.

அதன் மூலம் வேண்டிய வகை ரத்தத்தை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெற முடியும். ஏற்கனவே மம்முட்டி ரசிகர் மன்றத்தினர் ரத்த வங்கி தொடங்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

'ரத்ததானம் செய்ய விரும்பும் யாரும் இந்த தளத்தைப் பயன்படுத்தி ரத்தம் தரலாம்' என மம்முட்டி நேற்று அறிவித்தார்.

இது வெறும் வெப்சைட் மட்டும் அல்ல. மற்ற வெப்சைட்டுகளின் நுழைவு வாயிலாகவும் இது திகழும், எனும் மம்முட்டி, வரும் நாட்களில் பல புதிய சமூக சேவை திட்டங்களையும் இந்த தளத்தின் மூலம் அறிமுகப்படுத்தவிருக்கிறாராம்.

இது அரசியலில் நுழைவதற்கான முயற்சியா என்றால், 'இல்லையில்லை, ஆத்ம திருப்திக்காக!' என சிரித்தார் மம்முட்டி.

Monday, July 6, 2009

காவிரிப் பிரச்சனையை தீர்த்து வைக்கும் மாணவர்கள்

காதல் பிரச்சனையை ஆரம்பிக்கும் அல்லது தீர்த்து வைக்கும் கல்லூரி மாணவர்களைத்தான் தமிழ் சினிமா பார்த்துள்ளது. இப்போது காவிரி பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் கல்லூரி மாணவர்களை 'தம்பியுடையான்' மூலமாக பார்க்கப் போகிறது.

டெல்டா மண்ணுக்கு சொந்தக்காரரான ராஜா மகேஷ் தன்னுடைய தம்பியுடையானில் திருவாரூர், நாகை விவசாயிகள் மற்றும் மிராசுகளின் வாழ்க்கை நிலைமைகளை பதிவு செய்து வருகிறார்.

விவசாயத்துக்கு தண்ணீரின்றி தகிக்கும் பொருளாதார சங்கடங்களால் தங்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் வாழ்க்கையை மண்ணி‌ன் மைந்தனாக வேதனையோடு தம்பியுடையானில் காட்டியுள்ளாராம்.

இந்தப் படத்துக்கு கல்லூரி முதல்வர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று முதலில் மெளலியையும், அடுத்து விசுவையும் அழைக்க இருவருமே எஸ்கேப். காரணம், கர்நாடகா பயன்தானாம்.

சமுதாயப் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல சின்னத்திரையில் மைக்கோடும் மக்களோடும் முழங்கும் விசு போன்றவர்களைத்தான் வாய்ச்சொல் வீரர் என்பார்களோ...

வெள்ளியங்கிரியில் ஸ்ரேயா


வெள்ளியங்கிரி ஏதோ படம் போலவும் ஸ்ரேயா அதில் நடிக்கப் போவதாகவும் நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள். ஸ்ரேயா சென்று வந்துள்ள இடம்தான் வெள்ளியங்கிரி.

ஜக்கி வாசுதேவால் நிர்மாணிக்கப்பட்டுள்ள யோக லிங்கத்தை கண்ணாரத் தரிசித்த ஸ்ரேயா, ஈஷா யோகா மையத்தில் மூன்று நாட்கள் தங்கி தியானமும் செய்திருக்கிறார்.

வெள்ளியங்கிரி விசிட்டுக்கு பின் இமயமலைக்கும் இன்னொரு ஆண்மீக டிரிப் அடித்துள்ளார். என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்குன்னு நினைக்கப்படாது. நம் திரையுலக நட்சத்திரங்களுக்கு எப்ப என்ன வரும்னு சொல்ல முடியாது.

இன்கம்டாக்ஸ் ரெய்டு, வாரண்டு, வக்கீல் நோட்டீஸ் போல அப்பப்ப ஆன்மீக தாகமும் வரும். அதை அள்ளிப் பருகிய ஆனந்தத்தை யாருகிட்ட சொல்ல முடியும் அவங்களுக்கு நம்மை விட்டா?

மைக்கேல் ஜாக்ஸன் படத்தில் பிரபுதேவா!


'களவாடிய பொழுதுகள்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபுதேவா உற்சாகமின்றி காணப்படுகிறார். நயனின் காதல், கல்யாணச் செய்திகள் பத்திரிக்கைகளில் அடிபட்டதில் மனுஷன் ரொம்பவே நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டாராம்.

தனிமை விரும்பியாக யாரிடமும் மூச்சு பேச்சின்றி இருக்கும் பிரபுதேவாவுக்கு ஜாக்ஸனின் மறைவுச் செய்தி ரொம்பவே பாதித்துவிட்டதாம். ஜாக்ஸன் இறந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்ததும் அழுதேவிட்டாராம்.

அதிலிருந்து ஒருவழியாக தேறியுள்ள அவர், ஜாக்ஸனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தா‌ல் அதில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். ஒரு உன்னதமான கலைஞனுக்கு அந்தக் கலையுலகில் உள்ள இந்த சாதாரணமானவன் செய்யும் கடமையாகவே அதை நினைக்கிறேன் என்று உணர்ச்சிவசமாக பேசி வருகிறாராம்.

என்னதாம் இருந்தாலும் ஒரு காலத்தில் தென்னிந்திய மைக்கேல் ஜாக்ஸன் என்று புகழப்பட்டவராயிற்றே, இருக்காதா பின்னே!

வேட்டைக்காரனில் ப்ரியாமணியா?


நாமதான் இந்திரன் தோட்டத்து முந்திரின்னு நினைச்சுகிட்டு இருக்கும்போது, அதெல்லாம் கிடையாது எந்திரின்னா எப்படியிருக்கும்? அப்படிதான் இருக்கு ப்ரியாமணி நிலைமை! தமிழ், தெலுங்கு, மலையாளம்னு கலந்து கட்டி அடிக்கிறளவுக்கு திறமை இருக்கு. சிற்பம் மாதிரி ஸ்ட்ரெச்சர் இருக்கு. ஹ§ம், இருந்தும் என்ன பண்ணுறது? விஜய், அஜீத் மாதிரி முன்னணி ஹீரோக்களோட டூயட் பாட முடியலையே? இந்த ஏக்கத்தை போக்க என்னென்னவோ து£து விட்டும், கதை நடக்கல. காரியமும் கைகூடலே. இந்த நேரத்திலேதான் வேட்டைக்காரன் படத்திலே நடிக்க ஒரு அழைப்பு வந்திச்சாம். அதுவும் இரண்டாவது நாயகி கேரக்டருக்கு. படமே எழுபது சதவீதம் முடிஞ்சாச்சு. இனிமேல் எதற்கு இன்னொரு நாயகி? வேறொன்றுமில்லை, இந்த கேரக்டருக்கு முன்னணி நாயகிகளை தேடி அலுத்துப் போனவர்கள், புதுமுகத்தை போட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு இப்போது வந்திருக்கிறார்கள்.

அனுஷ்கா ஃபுல் மீல்ஸ். நான் ஆஃப் பாயிலா என்று அலறாத குறையாக வருந்திய ப்ரியாமணி, வேட்டைக்காரனில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டதாக தகவல். அதனால்தான் இந்த புதுமுக முடிவு. இதற்கிடையில், ஆறுதல் சொல்ல நீள்கிற விரலாக விஷால் வந்து கண்ணீரை துடைத்திருக்கிறார். தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவராக நடிக்கிறாராம் ப்ரியாமணி. முதலில் முடியாது என்று மறுத்தவர்தான் இப்போது சரி என்று சம்மதித்திருக்கிறார். பின்னணியில் என்ன நடந்தது என்பது நமக்கெதுக்கு?

ஆனால், இந்த ரோலும் இவருக்கு நேரடியாக கிடைக்கவில்லை என்பது இன்னொரு ஷாக். முதலில் நடிக்க சம்மதித்திருந்த ரீமாசென், என்னவோ கடைசி நேரத்தில் விலகிக் கொண்டாராம். இதனால் ரீமாசென் ரோலுக்கு செலக்ட் செய்யப்பட்டிருக்கிறார் ப்ரியாமணி.

இந்திக்குப் போகும் நாடோடிகள்!


தமிழில் மெகா ஹிட் ஆகியுள்ள நாடோடிகள், சூட்டோடு சூடாக இந்திக்குப் போகிறது.

சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரக் கனியை நடிகராக அறிமுகப்படுத்தி தன்னுடன் நடிக்க வைத்தார் சசிக்குமார். பெரிய இயக்குநராக சமுத்திரக் கனி அப்போது ஹிட் ஆகியிருக்காவிட்டாலும் கூட இயல்பான நடிகராக அசத்தியிருந்தார்.

இந்த நிலையில் சமுத்திரக்கனி இயக்கி நாடோடிகள் படத்தில் நடிகராக மட்டும் பங்கேற்றார் சசிக்குமார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். போட்ட இடமெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது நாடோடிகள்.

இந்த வேகத்தில் இப்போது இந்திக்கும் இப்படத்தைக் கொண்டு போகிறார் சமுத்திரக் கனி. அவரே இந்தியிலும் இயக்கப் போகிறார். ஷாஹித் கபூர், ஸ்லம்டாக் மில்லியனர் படப் புகழ் தேவ் படேல் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனராம்.

படத்தின் நாயகி உள்ளிட்ட இதர கலைஞர்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

மும்பையைச் சேர்ந்த குளோபல் இன்போன்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

முன்பை விட சமீப காலமாக அதிக அளவிலான தமிழ்ப் படங்கள் இந்திக்குப் போக ஆரம்பித்துள்ளன. கஜினியின் மெகா ஹிட்டுக்குப் பின்னர் சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களை இந்திக்காரர்கள் ரீமேக்க ஆர்வம் காட்டுகின்றனராம்.

கஜினி 'ஹிட்'டை வெல்லுமா நாடோடிகள்..?

ரஹ்மான் கொடுத்த ரெண்டே பாடல்! காத்திருக்கும் கவுதம்


லாஸ் ஏஞ்சல்சில் இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். (மைக்கேல் ஜாக்சன் இறுதி சடங்குக்கு போவீங்களா?) கடந்த ஒரு மாதமாகவே அங்கே சென்றிருக்கும் இசைப்புயல், முழுக்க முழுக்க இசையில் மூழ்கிவிட்டார். தமிழ்ப்படங்களுக்காக கம்போசிங் நடக்கிறதா என்ன? அதெல்லாம் இல்லையாம். இவையெல்லாம் பாலிவுட், மற்றும் ஹாலிவுட் படங்களுக்காக.

விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பாடல்கள் மட்டும் இசைத்து தருவதாகவும், ரீரெக்கார்டிங்குக்கு வேறு யாரையாவது பார்த்துக் கொள்ளும்படியும் ரஹமான் சொன்னது பொய்யா? நிஜமா? "அது போக போக தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்" என்று பதில் வந்திருக்கிறது கவுதம் தரப்பிலிருந்து. ஆனால்..? இதுவரை இப்படத்திற்காக ரஹ்மான் போட்டுக் கொடுத்திருக்கும் பாடல்கள் ரெண்டே ரெண்டுதான்.

இம்மாத இறுதியில் சென்னைக்கு வரும் இசைப்புயல், விண்ணை தாண்டி வருவாயாவுக்காகவும் நேரத்தை செலவிடுவார் என்று நம்பப்படுகிறது. இன்னும் இரண்டு பாடல்களாவது போட்டுக் கொடுப்பார் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு குறைந்தது ஒரு மாதமாவது செலவிடும் ரஹ்மான், இரண்டு பாடலுக்கு இரண்டு மாதம் எடுத்துக் கொண்டாலும், இதை ஷ§ட் பண்ணுகிற நேரத்தையெல்லாம் கணக்கிட்டால் படம் இப்போதைக்கு இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

இடையில் வேறு படத்தை முடித்துவிடலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் சிம்பு. (ஆமாம், இந்த படத்திலே ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாட ஆசைப்பட்டீங்களே... என்னாச்சு சிம்பு?)

இத்தாலி, அமெரிக்காவில் முன் தினம் பார்த்தேனே...

செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில் லேட்டஸ்டாக வந்த படங்கள் வேட்டையாடு விளையாடு, இந்திரலோகத்தில் நா.அழகப்பன். இது போன்ற மெகா பட்ஜெட் படங்களை மட்டுமல்ல, ஏராளமான மீடியம் பட்ஜெட் படங்களையும் எடுத்து தமிழ்சினிமாவின் பேலன்ஸ்டு தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றவர் நாராயணன். அதுமட்டுமல்ல, சின்னத்திரையிலும் இவரது சீரியல்கள், ரொம்பவே ஃபேமஸ்! செவன்த் சேனலின் தற்போதைய தயாரிப்பு, முன் தினம் பார்த்தேனே...

கவுதம் மேனனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குகிறார். முன்னணி ஹீரோக்களை தேடாமல், புதுமுகங்களே போதும் என்று கூறிவிட்டார் போலும். படத்தில் நடிக்கும் எல்லோருமே புத்தம் புதுசுகள்...! புதுமுகங்கள் என்றாலும், முன்னணி முகங்களுக்கு செலவு செய்வது போல் செய்து கொண்டிருக்கிறார் நாராயணன்.

இப்படத்தின் இரண்டு பாடல்களை இத்தாலியிலும், அமெரிக்காவிலும் படமாக்கியிருக்கிறார்கள். இதுவரை இந்திய சினிமா எதிலும் படம் பிடிக்கப் படாத இடங்களை தேடி தேடி படமாக்கியவர்கள், அதை சூப்பர் 35 கேமிராவில் பதிவு செய்திருக்கிறார்களாம்.

வெளிநாட்டுக்கு போனாலும் பறந்து பறந்து அடிக்கறதை பழக்கமா வச்சிருக்கிற தமிழ்சினிமாவில், திகட்ட திகட்ட ஒரு காதல் கதையை படமாக்குவதற்காக ஒவ்வொரு நாடாக சுற்றுகிறார் மகிழ் திருமேனி. குருநாதர் படத்தை போல பாடல்கள் வேண்டும். ஆனால், அதற்காக ஹாரிஸ், ரஹ்மான் என்று அலைபாயாமல் தமண் சாய் இசையே போதும் என்றும் கூறிவிட்டாராம் மகிழ்.

(தயாரிப்பாளரையும்) மகிழ்வித்து மகிழ்...!

இரண்டு ராஜாக்கள் இணையும் புதிய படம்!


இளசுகளோட தேசத்தின் இன்ப சாவி, இப்போது யுவன் கையில்! மீடியத்துக்கு மேலே, மொகவுக்கும் கீழேங்கிற அளவுகோலோட சம்பளம் வாங்குவதால், யுவன் ஆர்மோனியத்தில் எப்போதும் பண மழை!

ஜெயம் ராஜா இயக்கும் படங்களின் பாடல்களில் இனிப்பு கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். முதல் படமான ஜெயம் ல் துவங்கி லேட்டஸ்டாக வந்த சந்தோஷ் சுப்பிரமணியன் வரைக்கும், ஒவ்வொரு படத்தையும் ஹிட்டாக்குவதோடு, மியூசிக்கல் ஹிட் ஆக்குவதும் ராஜாவின் யுக்திகளில் ஒன்று. இந்த ராஜாவும், அந்த (யுவன்சங்கர்) ராஜாவும் இணையப் போகிறார்கள் முதன்முறையாக!

தெலுங்கில் ரவிதேஜா, இலியானா, ஷாம் இணைந்து நடித்த கிக் என்ற படம், அங்கு சக்கை போடு போட்டது. அதன் தமிழ் உரிமையை வாங்க பெரும் போட்டி. இறுதியில் வென்றவர் எடிட்டர் மோகன்தான். இதற்கு முன்பே இவர் வாங்கிய பல தெலுங்கு படங்களில் தமிழில் பெரிய வெற்றி பெற்றதால் கூட, இவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கலாம். இதில்தான் இப்போது ஜெயம் ரவி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. ரவியோடு ஜோடி சேர்ந்த சதா, அசின், த்ரிஷா, ஜெனிலியா என்று எல்லாருமே மும்பைக்கு போய்விட்டார்கள். அடுத்து தமன்னா போலிருக்கிறது. வாழ்க!

இப்போதே பட்டிதொட்டியை பரபரப்பாக்கியிருக்கும் ஜெயம் ரவி, இப்படம் வெளி வந்தால் தமிழ்சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராகிவிடுவார் என்கிறது கோடம்பாக்கம் கருத்துக்கணிப்பு ஒன்று. இப்படம் சம்பந்தமாக அறிவிக்கப்படாத இரண்டு விஷயங்கள்.

ஒன்று- தமிழிலும் ஷாம் நடிப்பாரா? இரண்டு- படத்தின் டைட்டில் என்ன? இம்மாத இறுதிக்குள் விஷயம் தெரிஞ்சுரும்...

ரமலத்துடன் நயன்தாரா பேச்சு! உங்க கணவரை நான் உங்ககிட்டேயிருந்து பிரிச்சிடுவேன்னு நினைக்காதீங்க

நயன்தாராவை பற்றி கிசுகிசுவோ செய்திகளோ இல்லாமல் சூரியன் விடிவதே இல்லை. அந்தளவுக்கு மீடியா லேடி ஆகிவிட்டார் நயன். பிட்டுக்கு மண் சுமந்த சிவன் மாதிரி பிட்டுக்கு நயன் சுமக்கிறார்கள் அநேக சுதந்திர நிருபர்கள். (ஃப்ரீ லேன்சர்ஸ்) பிரச்சனையே இவங்களாலதான் என்று நறநறக்கிறாராம் நயன். எதையாவது எழுதி பரபரப்பை கிளப்பிவிட்டுடுறாங்க. நேரடியா நம்மை சந்திக்கிற நிருபர்களுக்கும் இந்த கிசுகிசுக்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது நயனின் சமீபத்திய வருத்தம். இதையும் ஒரு பிட்டா எழுதுவீங்களாங்ணா...?

நயன்தாரா பற்றி இன்னொரு செய்தி. திடீரென்று ஒரு நாள் திருமதி பிரபுதேவாவுக்கு போன் வந்ததாம். போனை எடுத்த ரமலத்துக்கு பெருத்த கோபம், சந்தோஷம், துக்கம் எல்லாமே! "உங்க கணவரை நான் உங்ககிட்டேயிருந்து பிரிச்சிடுவேன்னு நினைக்காதீங்க. அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லவே இல்லை. நீங்க தைரியமா இருக்கலாம். இதுபற்றி இனிமே குழப்பிக்க வேண்டாம்" என்று கூறினாராம்.

கேட்கவே சந்தோஷமா இருக்கே? (அவுங்களுக்கு) இன்னொரு மேட்டர். துபாயில் இருக்கும் தனது அண்ணனை அறிமுகப்படுத்த பிரபுதேவாவோடு போயிருந்தார் அல்லவா? அதே நாளில் துபாயில்தான் இருந்தார் சிம்பு. இவர் அங்கு வந்திருப்பதை கடைசி நேரத்தில் தெரிந்து கொண்ட நயன், சிக்கல் சிங்கிளா வந்திரப்போவுதோன்னு நினைத்தாராம். ஆனால் அஞ்சினாரில்லை.

எரிநட்சத்திரம் மேலே விழுந்தாலும் எடுத்து போட்டுட்டு போறதுதானே காதல்?

ஹாரிபாட்டர் நடிகருக்கு 'ஸ்வைன் ப்ளூ'

ஹாமில்டன்: ஹாரிபாட்டர் படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நன்கு குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

ஜே.கே.ரவுலிங்கின் நாவல்களின் அடிப்படையி்ல எடுக்கப்பட்ட ஹாரிபாட்டர் திரைபடங்கள் உலக திரைப்பட வரலாற்றில் இல்லாத வகையில் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருந்த ரவுலிங் இதன்மூலம் பெரும் பணக்காரராக ஆகிவிட்டார்.

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகன் ஹாரிபாட்டரின் நண்பனாக ரான் வெஸ்லி என்ற பாத்திரத்தில் நடித்து வரும் ரூபர்ட் கிரின்ட் (20) என்பவருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் வரும் 15ம் தேதி ஹாரிபாட்டர் வரிசையில் அடுத்து வெளியாக இருக்கும் ஆறாவது படமான ஹாரிபாட்டர் அன்ட் த ஹால்ப் பிளட் பிரின்ஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இது குறித்து அவரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அவருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உண்மை தான். தற்போது அவர் நன்றாக தேறி வருகிறார். முழுமையாக குணமடைந்து நாளை லண்டனில் நடக்கவிருக்கும் ஹாரிபட்டர் அன்ட் த ஹால்ப் பிளட் ரின்ஸ் படத்தின் பிரிமியர் ஷோவில் அவர் கலந்து கொள்வார் என்றார்.

இந்தியாவில் 136 பேருக்கு...

இந்நிலையில் இன்று தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த கணவன், மனைவிக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த குல்வந்த் சிங், அனிதா கல்ரா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவில் ஸ்வைன் ப்ளூவால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 99 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.

குழந்தைகளின் ஆயாவுடன் ஜாக்சன் காதல்!

குழந்தைகளைப் பார்த்துக் கொண்ட செவிலிப் பெண்ணுடன் ஜாக்சனுக்கு ரகசிய காதல்

லண்டன்: தனது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக வந்த உகாண்டாவைச் சேர்ந்த செவிலிப் பெண்ணுடன் மைக்கேல் ஜாக்சன் தனது வாழ்நாளின் கடைசி நாட்களில் ரகசியக் காதல் புரிந்து வந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

இதை ஜாக்சனின் தனிப்பட்ட புகைப்படக்காரரான இயான் பார்க்லி கூறியுள்ளார்.

இதுகுறித்து பார்க்லி கூறுகையில், உகாண்டாவைச் சேர்ந்தவர் கிரேஸ் ருவாரம்பா. இவர் ஜாக்சனின் குழந்தைகளான பிரின்ஸ மைக்கேல், பாரிஸ் காத்தரீன், பிரின்ஸ் மைக்கேல்-2 ஆகியோரைப் பார்த்துக் கொள்வதற்காக ஜாக்சனின் இல்லத்தில் தங்கியிருந்தார்.

இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இது ஜாக்சன் வீட்டில் பணியாற்றிய அனைவருக்கும் நன்கு தெரியுமாம்.

கிரேஸும், ஜாக்சனும் ஒருவரை ஒருவர் விரும்பினர். குழந்தைகளுக்கும் ருவாரம்பாவைப் பிடிக்கும். அவரை அம்மா என்றுதான் அவர்கள் அழைப்பார்கள் என்று கூறியுள்ளார் பார்க்லி.

ஜாக்சனின் தலைமைப் பாதுகாவலராக முன்பு வேலை பார்த்த மாட் பிட்ஸ் கூட சமீபத்தில் இதை மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஜாக்சனுக்கு ரகசியக் காதலி ஒருவர் இருந்தார். இருந்தாலும் பெயர் சொல்லும் அளவுக்கு அவர் பிரபலமானவர் இல்லை என்று கூறியிருந்தார்.

ஆனால் அவர் கிரேஸ்தான் என்று இன்னொரு பாதுகாவலர் கூறியிருந்தார். இருவரும் முதலாளி, தொழிலாளி போல பழகவில்லை. கல்யாணமான தம்பதி போலத்தான் காணப்பட்டனர் என்று கூறியிருந்தார் அந்தப் பாதுகாவலர்.

தற்போது இது உண்மைதான் என்பதை தெளிவாக்கியுள்ளது பார்க்லியின் பேட்டி.

Sunday, July 5, 2009

சரக்கடிக்கிற பழக்கம் இல்லே... -கீர்த்தி சாவ்லா

முதல்வர் கலந்து கொண்ட நீயின்றி நானில்லை படத் துவக்கவிழாவுக்கு தாமதமாக வந்த கீர்த்தி சாவ்லா காவலர்களால் நிறுத்தப்பட்டு சிறிது நேர விசாரிப்புக்கு பின்பு வேறு வழியாக மேடைக்கு அனுப்பப்பட்டார். முதல்வரின் முந்தைய படமான உளியின் ஓசை பட நாயகி என்பதற்காகதான் இந்த சலுகை. லேட்டா வந்ததால் அப்செட் ஆகியிருந்த கீர்த்தி, இயக்குனர் இளவேனிலிடம் மன்னிப்பே கேட்டாராம் இதற்காக!



அறிமுக ஹீரோக்களாக இருந்தாலும் பரவாயில்லை என்று தாராளம் காட்டும் கீர்த்தி, லேட்டஸ்டாக நடித்துக் கொண்டிருப்பது அகராதி என்ற படத்தில். இதில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். ஒரு சில சீன்களில் வந்து போகிறார். பாடல் காட்சியை படம் பிடிக்க, பிரான்ஸ் போயிருந்தார்களாம். போன இடத்தில் கீர்த்தி வியந்தது ஊரை அல்ல. கடற்கரையைதான். அங்கே கிடக்கிற மண்ணு கூட அத்தனை வெள்ளையா இருக்கு தெரியுமா என்றார் வெள்ளந்தியாக.

இன்டர்நெட்டில் உலா வரும் ஒரு க்ளிப்பிங்ஸ் ஒன்று 'அடடா, இந்த கிளியும் சரக்கடிக்குமா?' என்ற ஐயத்தை தர, அதுபற்றியும் அவரிடம் கேட்டாகிவிட்டது. "ஐயோ, சாரு. அது நான் இல்லே. யாரும் மார்ஃபிங் பண்ணியிருக்காங்க. எனக்கு சரக்கடிக்கிற பழக்கமே இல்லை" என்றார். அழகான பொண்ணுங்க பொய் சொன்னாலும் அழகுதான் போங்க.

மீண்டும் இணைந்த சந்தியா! சக்கரக்கட்டியான சந்திப்பு

சந்தியா வந்தனம் எப்பவுமே பெஸ்ட் என்கிறார்கள் சமஸ்கிருத பண்டிதர்கள். வந்தனம் சொல்ற இடத்திலே சந்தியா இருந்தா, அதுவும் பெஸ்ட்டாதானே இருக்கணும்? இல்லேங்கிறாங்க சிலர்.

கடந்த வாரம் தான் நடித்த மஞ்சள் வெயில் படத்தை நடிகர் நடிகைகளுக்காக பிரத்யேகமாக திரையிட்டார் சந்தியா. வாசலில் நின்று எல்லாரையும் வரவேற்றவர், படத்தை ஆரம்பிக்க மட்டும் டிலே செய்து கொண்டே இருந்தாராம். ஏன்? முக்கியமானவர், மனம் கவர்ந்தவர் வந்தால்தானே? இத்தனைக்கும் ப்ரிவியூ தியேட்டருக்கு எதிரேதான் இருக்கிறது மனம் கவர்ந்தவரின் ஆபிஸ். ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு நடிகர் வர, படம் துவங்கியது. இப்படி நடிகைகயை மட்டுமல்ல, மற்றவர்களையும் காக்க வைத்தவர், நம்ம சக்கரக்கட்டி நடிகர்தான்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சண்டையிட்டு பிரிந்த இந்த ஜோடி, மீண்டும் இணைந்து விட்டது. பிரிவுக்கு காரணமாக இருந்த சங்கீத நடிகையின் தம்பியிடம் நீ பேசவே கூடாது என்ற கண்டிஷனில்தான் ஒன்று சேர்ந்தாராம் ஹீரோ. வேடிக்கை என்னவென்றால், சங்கீத நடிகையின் தம்பியும், சந்தியாவும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கிறார்கள். பேசிக்கொள்ளாமலே எப்படி காதல் காட்சியில் நடிப்பார்களாம்? அது அவங்க பிரச்சனை. நமக்கெதுக்கு?

கடலில் சிக்கிய ஸ்ருதி! லக் படப்பிடிப்பில் திடுக்!

தமிழில் சொன்னால் மோதிரக் கையால் குட்டு. ஆங்கிலத்தில் சொன்னால் லக்! உலகநாயகன் கமலஹாசனின் மகள் ஸ்ருதி நடிக்கும் முதல் படத்தின் பெயரே லக்! அப்பாவுக்கு லக் (அதிருஷ்டம்) மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த லக்கை ரொம்பவே நம்பிக் கொண்டிருக்கிறாராம். அமீர்கானின் உறவினரான இம்ரான்கான்தான் ஸ்ருதிக்கு ஜோடியாக நடிக்கிறார். பதினைந்து வருஷத்துக்கு முன்னாடியிலிருந்தே அவரு எனக்கு ஃபிரண்டு. அண்ணா என்றுதான் கூப்பிடுவேன்.


ஆனால், அவரோடு டூயட்ல ஆடணும்ங்கிற போதுதான் கொஞ்சம் சிரமமாக இருந்திச்சு என்கிற ஸ்ருதி, இன்னொரு சிரமத்தையும் சொன்னார். இது படப்பிடிப்பில் நடந்த சிரமம். தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகர் கடலில் லக் படப்பிடிப்பு நடந்ததாம்.

கையிலிருந்த சின்ன சின்ன மீன்களை கடலில் எறிந்து கொண்டிருந்தார்களாம் ஸ்டண்ட் மேன்கள். மீனுக்கு ஆசைப்பட்டு திடீரென சுறா மீன்கள் குவிய ஆரம்பிக்க, நிலை கொள்ளாமல் ஆடியதாம் படகு. தண்ணீரில் தடுமாறி விழுந்த ஸ்ருதியும், இம்ரானும் எப்படியோ மீட்கப்பட்டிருக்கிறார்கள். இம்ரானுக்கு சுறா மீன் வாலால் செம இடியாம்.

இனிமேல் இதுபோன்ற காட்சிகளில் நடித்து ரிஸ்க் எடுக்கக் கூடாதுப்பா என்கிறார் ஸ்ருதி. சுறா மீன்கள் வந்ததே ஸ்ருதியை இடிப்பதற்காக கூட இருக்கலாம்!

அனன்யாவுக்கு பெயர்வைத்த சசிகுமார்

நாடோடிகள் படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார் அனன்யா.

இவருடைய இயற்பெயர் ஆயில்யா. இவரது பெயரை சசிகுமார்தான் அனன்யா என்று மாற்றியிருக்கிறார். (பேர் கூட நல்லாவே வைக்கிறாரே...) சசிகுமார் பெயர் வைத்த ராசியோ என்னவோ அனன்யா நடித்த முதல் படமே சூப்பர் ஹிட்டாகி விட்டது.

ஏகப்பட்ட மகிழ்ச்சியுடன் இருக்கும் அனன்யா இதற்கு முன்பு தான் நடித்து வெளியாகாமல் இருந்த படங்கள் எல்லாம் விரைவில் வெளிவந்து விடும் அதன் பிறகு நான்தான் டாப் என்கிறார். கிளாமர் பற்றிக் கேட்டால் ‘நல்ல கேரக்டர்கள் பண்ண வேண்டும் என்பது தான் எனது ஆசை...

அதை விட்டுவிட்டு கிளாமர் கவர்ச்சி பக்கம் எல்லாம் போகமாட்டேன்...’ என்கிறார்.

கிளாமர் பக்கம் போவாரா? இல்லை நாடோடிகள் பாதையைத் தொடருவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்...

எக்ஸ்க்ளூசிவ்: சசிகுமாரின் படத்தைத் தயாரிக்கும் விக்ரம்!

கோடம்பாக்கம் நேசர்களுக்கு ஒரு ஸ்பெஷல் செய்தி... அடுத்த படத்தை இயக்கத் தயாராகி விட்டார் தியேட்டர் உரிமையாளர் - விநியோகஸ்தர்- தயாரிப்பாளர் - இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார்.

இந்தப் படத்திலும் முழுக்க முழுக்க புதுமுகங்களை மட்டுமே அறிமுகப்படுத்தப் போகிறார். பிரபலங்களுக்காக சமரசம் செய்து கொள்ளாத மனசு என்பதால்தான் இந்த முடிவாம்.

ஆனால் படத்தைத் தயாரிப்பது என்னவோ ஒரு பெரிய பிரபல நடிகர்தான். அவர் நம்ம சீயான் விக்ரம்!

படத்தில் அவர் தயாரிப்பாளர் மட்டும்தானாம். மற்ற அனைத்தும் சசிகுமாரின் விருப்பத்துக்கே விட்டுவிட்டாராம் விக்ரம்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். இப்போதைக்கு வடபழனி பேருந்து நிலையம் பின்புறம் ஒரு தனி அலுவலகத்தில் டிஸ்கஷன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதைவிட பெரிய செய்தி... படத்தை வாங்க இப்போதே வரிசையில் காத்திருக்கத் தயாராகிவிட்டார்கள் விநியோகஸ்தர்கள் என்பதுதான்...

அடடா... கேக்கவே சந்தோஷமா இருக்கே!

நாடோடிகள்.. சாதனை மேல் சாதனை!!

சசிகுமார் நடித்து தயாரித்து இயக்கி நடித்து சக்கைப் போடு போட்ட சுப்பிரமணியபுரத்தையே தூக்கிச் சாப்பிட்டுவிட்டது அவர் நாயகனாக மட்டும் நடித்து வெளிவந்துள்ள லேட்டஸ்ட் சென்சேஷன் 'நாடோடிகள்'.

ரசிகர்கள் ஆர்ப்பரிப்பிலும் வசூலிலும் திரையரங்குகள் அதிர்வது ஒருபக்கம் (ஒரு வார கலெக்ஷன் ரூ.4 கோடி என்கிறது கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ்!!)... இந்த வாரம் மட்டும் 20 கூடுதல் பிரிண்டுகள் போடப்பட்டுள்ளன. 26 திரையரங்குகளில் கூடுதலாகத் திரையிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஒரே ஒரு காட்சியாக மட்டும்தான் இந்தப் படத்தை சத்யம் திரையரங்கில் (அதுவும் சிறிய அரங்கில்) வெளியிட்டனர். படத்தின் வசூலைப் பார்த்ததும், இப்போது பெரிய அரங்கில் கூடுதல் காட்சிகளுடன் கலக்கிக் கொண்டிருக்கிறது நாடோடிகள்.

மறுபக்கம் இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பு செலவை விட அதிகமாம் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ள விலை என்கிறார்கள் சில தயாரிப்பு நிர்வாகிகள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி தெலுங்குப் பதிப்பைத் தயாரித்த பெல்லம்கொண்டா சுரேஷ்தான் இந்தப் படத்தையும் வாங்கியுள்ளார்.

இன்னொன்று நாடோடிகளின் தொலைக்காட்சி உரிமையை ஜீ நிறுவனம் பெற்றுள்ளது. ரூ.1.30 கோடிக்கு பேசி முடித்து, சன் - கலைஞர் தொலைக்காட்சிகளை மலைக்க வைத்துள்ளனர் ஜீ நிறுவனத்தினர்.

எப்பூடி!

கண் இமைக்கும் நேரத்தில்...

முற்றிலும் புதுமுகங்களுடன் கண் இமைக்கும் நேரத்தில் என்ற புத்தம் புதிய திரைப்படம் உருவாகிறது.

ஜே.கே. பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படத்தை கே.பி.சுந்தரேசன் இயக்கியுள்ளார். சரத் பிரியதேவ் இசையமைத்துள்ளார்.

சச்சின் சூர்யா ஹீரோவாக நடிக்க அவருடன் இணைகிறார் கிருஷ்ணமீரா என்ற புதுமுகம்.

முற்றிலும் புதுமுகங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலத்தி்ல் வைத்து நடத்தியுள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் திரைக்கு வரவுள்ளதாம் கண் இமைக்கும் நேரத்தில்.

எந்திரனில் நடிக்கும் சூப்பர் ஜிப்ஸி!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் பற்றி நாளும் ஒரு செய்தி மீடியாவை ஆக்கிரமித்து வருகிறது. ஜோதியில் நாமும் ஐக்கியமாகி விடுவோம்.

இன்ரைய எந்திரன் ஸ்பெஷல் இதோ...

எந்திரனில் சில முக்கிய, ஆனால் ஜாலி காட்சிகளில் ஒரு எந்திரம் நடிக்கப் போகிறது.

எந்திரம் என்றதும் ரோபோ என நினைத்துவிட வேண்டாம். இது ஒரு கார்... மாருதி ஜிப்ஸி. இதில் என்ன புதுமை என்கிறீர்களா...

இந்தக் கார் சாதாரண காரல்ல... அட்டகாசமான புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட சூப்பர் கார்.

காரை மறுவடிவமைப்பு செய்திருப்பவர் பெயர் ஜாஃபர். சென்னை புதுப்பேட்டை கார் மெக்கானிக் மற்றும் டிசைனர்.

அஹமத் ஆட்டோ-மோட்டீவ் இன்டஸ்ட்ரி என்கிற பெயரில் திருவொற்றியூரில் மாடிஃபிகேஷன் பட்டறை வைத்திருக்கிறாராம்.

"முதலில் இந்த ஜிப்ஸியை தேர்தல் பிரசாரத்துக்காக ரெடி செய்தேன். தேர்தல் முடிஞ்சதும் டாய் கார் மாதிரி மாற்றினேன். ஒருவர் இந்த ஜீப்பைப் பார்த்துட்டு நேராக ஷங்கர் சார்கிட்ட கொண்டு போய் விட்டுட்டார். ஜீப்பைப் பார்த்ததும் த்ரில்லானவர், 'எந்திரன் படத்தில் இந்த ஜீப்பும் நடிக்குது'ன்னு சொல்லிட்டார்", என்றார் மகிழ்ச்சியாக!

'கிட்டத்தட்ட பஸ்ஸுக்கு இணையான உயரத்தில் இருக்கிறது இந்த ஜிப்ஸி. டிராக்டரில் உள்ள 20 இன்ச் அளவு கொண்ட முன் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பம்பர் மற்றும் ரோல் பார்கள் முழுவதும் பிவிசி பைப்புகளால் செய்யப்பட்டு இருக்கிறது. இன்ஜினிலும் பல மாறுதல்கள் செய்துள்ளார். இந்த மாற்றத்துக்காக மட்டும் இரண்டரை லட்ச ரூபாய் வரை செலவழித்திருக்கிறாராம் ஜாஃபர்!

கவிஞரைக் காய்ச்சிய 'பேனாக்கள்'!

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்? என்ற புதிய படத்தை இயக்குகிறார் கவிஞர் தபூ சங்கர்.

இந்தப் படத்துக்காக ஒரு பிரஸ் மீட் வைத்திருந்தார்கள்.

இன்னமும் ஆரம்பிக்கப்படாத இந்தப் படம் குறித்து தபூ சங்கர் ஏக பில்ட்அப் கொடுக்க, டென்ஷனான மூத்த செய்தியாளர்கள் சிலர் கேள்விகளால் காய்ச்சி எடுத்துவிட்டார்கள் தபூ சங்கரை.

சரி... இந்த தலைப்புக்கு என்னங்க அர்த்தம்?, என ஒரு மூத்த நிருபர் கேட்க, தபூவுக்கு கோபம் வந்துவிட்டது. சார், அது கவிதைங்க. அதுக்கெல்லாம் அர்த்தம் கேட்டா எப்படி? என்றார்.

நீங்க வெச்ச தலைப்புக்கே உங்களுக்கு அர்த்தம் சொல்லத் தெரியலியே... இந்தப் படத்தை சாதாரண ஜனங்களும் விளங்கிக்கிற மாதிரி எப்படி எடுக்கப் போறீங்க? - இது இன்னொரு நிருபர்.

சரி... இந்தப் படம் எப்படி இருக்கும் என்றாவது சொல்ல முடியுமா? என ஆரம்பித்தார் அடுத்த நிருபர்.

அதற்கு தபூ சங்கர், 'இது சேரன் படம் மாதிரி இருக்கும்'என்றார்.

உடனே குறுக்கிட்ட இன்னொருவர், 'அவர் படமே ஓட மாட்டேங்குது... இதுல அவரை மாதிரி படமெடுக்க நீங்க வந்துட்டீங்களா...சசிகுமார் படம் மாதிரி இருக்குமாங்க?' என்றார் நக்கலாக.

தபூ சங்கருக்கு கோபம் வந்துவிட்டது. ஆத்திரத்தில்,

'சசிகுமாரெல்லாம் இப்ப வந்தவருங்க. அவர்கூட என்னை கம்பேர் பண்ணாதீங்க. சேரன் எவ்வளவு சக்ஸஸ் கொடுத்தார்? அருமையான படங்களைக் கொடுத்த அவரைப் போன்ற ஒரு படைப்பாளி நான்...' என தம் கட்டி பேசிக் கொண்டிருக்க, கலைந்தது நிருபர் கூட்டம்!

ஜெயிக்கிறவங்களுக்குதான் சினிமா சொந்தம்னு விளங்க வைக்கும் பொறுமை நிருபர்களுக்கும் இல்லை, விளங்கிக் கொள்ளும் மனநிலையில் தபூ சங்கரும் இல்லை!

ஸ்லம்டாக் .. பட குழந்தை நடிகர் அசாருதீனுக்கு வீடு கிடைத்தது

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான அசாருதீன் இஸ்மாயிலுக்கு புது வீடு கிடைத்து விட்டது. அந்த வீட்டுக்கு தனது குடும்பத்தினருடன் குடி போயுள்ளான் அசார்.

ஆஸ்கர் விருதுகளை இந்தியாவின் பக்கமும் திருப்பி விட்ட ஸ்லம்டாக் படத்தில் நடித்த சிறுவன் அசாருதீன் இஸ்மாயில். இவன் ஒரு குடிசைவாசி. மும்பை ரயில் டிராக் பகுதியில் உள்ள சேரிப் பகுதியில் வசித்து வந்தான் அசாருதீன். சமீபத்தில் அசாருதீன், இன்னொரு குழந்தை நட்சத்திரமான ரூபினா அலி உள்ளிட்டோரின் குடிசைகளை ரயில்வே அகற்றி விட்டது.

இதனால் வீடு இழந்தனர் இந்த குழந்தை நட்சத்திரங்கள். இந்த நிலையில் அசாருதீனுக்கு புது வீடு கிடைத்து விட்டது.

ஏற்கனவே இருந்த குடிசைப் பகுதிக்கு வெகு அருகில்தான் இந்த புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. ஸ்லம்டாக் படக் குழுவினரே இந்த வீட்டை வாங்கி அசாருதீனுக்கு அளித்து்ளனர்.

புது வீட்டுக்குப் போயுள்ள சந்தோஷத்தில் தன்னைப் பார்க்க வரும் விருந்தினர்களிடம் வீட்டைச் சுற்றிக் காட்டி மகிழ்கிறான் அசாருதீன்.

இந்த வீடு நன்றாக உள்ளது. அழகாக உள்ளது. என்ன, எனது பழைய பந்த்ரா நண்பர்களைப் பிரிந்ததுதான் வருத்தமாக இருக்கிறது. அவ்வப்போது போய்ப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்கிறான்.

ஜூஹு பகுதியிலிருந்து சிறிது தொலைவில் இந்தப் புதிய வீடு உள்ளது. வீட்டின் அளவு 250 சதுர அடியாகும். தரைதத்தளத்தில் உள்ளது. மின்சார வசதி, குடிநீர் என எல்லாமே உள்ளேயே இருக்கிறது.

42 ஆயிரம் டாலர் கொடுத்து இந்த வீட்டை வாங்கிய ஸ்லம்டாக் குழுவினர் அமைத்த ஜெய்ஹோ டிரஸ்ட் அசாருதீனுக்கு பரிசளித்துள்ளது.

வீடு அசாருதீனுக்காக வாங்கப்பட்டது என்றாலும் கூட அவனுக்கு 18 வயதாகும்போதுதான் அவனது பெயருக்கு சொந்தமாகும்.

அசாருதீனைப் போலவே அடுத்து ரூபினா அலிக்கும் பொருத்தமான வீட்டை ஜெய்ஹோ டிரஸ்ட் பார்த்து வருகிறதாம்.

மைக்கேல் ஜாக்சனுக்கு 25,000 டாலர் செலவில் சவப்பெட்டி

பாப் ராஜா மைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கத்தை ஆடம்பரமாக நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஏற்பாட்டையும் கிராண்ட் ஆக செய்கின்றனர். சவப்பெட்டி மட்டும் 25 ஆயிரம் டாலர் செலவில் உருவாக்கியுள்ளனராம்.

தி புரோமெதியான் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சவப்பெட்டி தங்க முலாம் பூசப்பட்டதாகும். வெண்கலத்தால் ஆன அந்த சவப்பெட்டியின் உள்ளே வெல்வெட் விரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடம்பர சவப்பெட்டியை ஜாக்சனின் சொந்த மாகாணமான இன்டியானாவைச் சேர்ந்த பேட்ஸ்வில்லி காஸ்கட் கம்பெனி என்ற நிறுவனம் தயாரித்துக் கொடுத்துள்ளது.

ஜாக்சனின் உடல் அடக்கம் நாளை மறு நாள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளன.

Followers