Friday, June 26, 2009

கடத்தல் கதையில் தனுஷ்

ரீமேக் படங்களில் நடிக்க தனுஷ் ஆர்வம் காட்டுகிறார். ரீமேக் படமான பரட்டை என்கிற அழகு சுந்தரம் வெற்றி பெறாவிட்டாலும் அடுத்து நடித்த யாரடி நீ மோகினி அவருக்கு பெயர் வாங்கித் தந்தது. தற்போது நடித்து வரும் குட்டி படமும் தெலுங்கில் வெளியான ஆ‌ரியா படத்தின் ‌ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டி, ஆடுகளம் என பிஸியாக இருக்கும் தனுஷ் மேலுமொரு ‌ரீமேக் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் வெளியான ரெடி என்ற படத்தை தனுஷுக்காக தேர்வு செய்துள்ளனர். ராம், ஜெனிலியா ரெடியில் நடித்திருந்தனர். படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்கியிருந்தார்.

பொறியியல் கல்லூ‌ரி மாணவர் ராம். அவருடைய நண்பர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் பெண்ணின் பெற்றோர் வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கின்றனர். நண்பனுக்காக அவரது காதலியை கடத்தி வருகிறார் ராம். கடத்தி வந்த பிறகுதான் அது நண்பனின் காதலி அல்ல வேறொருவ‌ர் என்பது தெ‌ரிகிறது. இந்த தவறு ராமை எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது என்பது கதை.

மலையாளத்தில் மோகன்லால், ஐஸ்வர்யா நடித்த பட்டர்பிளை படத்தின் சாயலில் இருக்கும் ரெடி, தெலுங்கில் மிகப்பெ‌ரிய வெற்றியை பெற்றது. அதைதான் தமிழில் தனுஷை வைத்து ‌ ரீமேக் செய்கிறார்கள். படத்தை இயக்குவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

ஆர்யாவின் படித்துறை


ஆர்யாவின் த ஷோ பீப்பிள் தயா‌ரிப்பு நிறுவனம் படம் தயா‌ரிப்பது தெ‌ரியும். த ஷோ பீப்பிளின் முதல் தயா‌ரிப்புக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

நடிப்பு, பட விநியோகம் என்று இரு துறைகளில் கால் பதித்த ஆர்யா மூன்றாவதாக தயா‌ரிப்பில் ஈடுபடப் போவதாக தெ‌ரிவித்திருந்தார். தனது தயா‌ரிப்பு நிறுவனம் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் என்றும் அவர் தெ‌ரிவித்திருந்தார்.

சொன்னது போலவே அவரது த ஷோ பீப்பிள் தயா‌ரிக்கும் முதல் படத்தை சுகா இயக்குகிறார். இவர் பாலாவின் அசிஸ்டெண்ட். சுரேஷ் கண்ணன் என்ற தனது பெயரை சினிமாவுக்காக சுகா என சுருக்கியிருக்கிறார்.

அபிஷேக் என்ற புதுமுகம் ஹீரோவாகவும், நாடோடிகள் அனன்யா ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இசை இளையராஜா. படத்துக்கு படித்துறை என்ற பெயரை தேர்வு செய்துள்ளார் சுகா.

சொந்தப்பட நிறுவனம் தொடங்கி அதில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் ஆர்யாவுக்கு ஆளுயர வெல்கம் போர்ட் வைத்து வாழ்த்தலாம்.

சிம்புவின் சீக்ரெட் லிஸ்ட்


என்னத்த க‌ண்ணையாவின் வரும்... ஆனா வராது... காமெடியின் நிலையில் இருக்கிறது போடா போடி. படம் வரும் என்கிறார் படத்தின் இயக்குனர். வராது என்கிறார்கள் ஹீரோ சிம்பு தரப்பில். நடுவில் வில்லங்கமாக வந்திருக்கிறது வாலிபன் படம்.

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயா‌ரிப்பில் சிம்பு நடிப்பதாகக் கூறப்படும் வாலிபன் படம் குறித்தும் பல வதந்திகள். அப்படியொரு ப்ராஜெக்டே இல்லை என்கிறார்கள் சிலர். சிம்புவும் இதுகுறித்து உறுதியாக எதையும் கூறவில்லை. அதேநேரம் வாலிபன் படத்தில் நடிக்கும் ஹீரோயினை தேர்வு செய்ய முழுவீச்சில் இறங்கியிருக்கிறார் சிம்பு.

சிம்புவின் முதல் சாய்ஸ் இலியானா. அ‌ஜித், விஜய், சூர்யா, விக்ரம்... ஏன் ர‌ஜினியுடனேயே நடிக்க மறுத்தவர் இலியானா. அவரை எப்படியாவது வாலிபனில் நடிக்க வைப்பது என முயன்று வருகிறார் சிம்பு. அவர் ஒத்து வராதபட்சத்தில் சினேகா உல்லால், அனுஷ்கா என வேறு சிலரையும் லிஸ்டில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

விண்ணைத் தாண்டி வருவாயா முடிந்த பிறகு சிம்பு படத்தில் நடிக்குப் போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பது தெ‌ரிந்துவிடும்.

மேகான் பாக்ஸ் - ஏஞ்செலீனா ஜூலி மோதல்!

எல்லா விஷயத்திலும் தன்னைக் காப்பி அடித்து வருகிறார் மேகான் பாக்ஸ் என்று கோபத்தில் உள்ளாராம் உதட்டழகி ஏஞ்செலீனா ஜூலி.

ஜூலிக்கும், மேகான் பாக்ஸுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்து ஹாலிவுட்டில் சுவாரஸ்யமான ஒப்புமை உரையாடல்கள் நிறைய வலம் வருகின்றன.

ஜூலி, பாக்ஸின் உதடுகளுக்கு உள்ள ஒற்றுமைகள் அதில் ரொம்ப சுவாரஸ்யமானது, பிரபலமானது. இதேபோல இருவரையும் ஒப்புமைப்படுத்தி பல செய்திகள் வருவது சகஜம்.

ஆனால் ஜூலி இவற்றை விரும்புவதில்லை. நான்தான் ஒரிஜினல், பாக்ஸ் ஒரு காப்பி கேட் என்று கோபத்துடன் கூறுகிறார் ஜூலி.

எல்லா விஷயத்திலும் என்னை காப்பி அடிக்கிறார் பாக்ஸ். பச்சை குத்திக் கொள்வது, ஸ்டைல், பேஷன் என எல்லாவற்றிலும் என்னை அவர் பின்பற்றுகிறார். இது தவறு, நல்ல விஷயமல்ல என்கிறாராம் ஜூலி.

சமீபத்தில் பாக்ஸ் மீதான ஜூலியின் கோபம் மேலும் அதிகரித்தது. அதற்குக் காரணம், டாம்ப் ரைடர் படத்தின் தொடர்ச்சிப் படத்தில் நடிக்க மேகான் பாக்ஸை புக் செய்துள்ளனர்.

இதனால் கோபமடைந்துள்ளார் ஜூலி. 2001ம் ஆண்டு வெளியான டாம்ப் ரைடரில் ஜூலிதான் கலக்கியிருந்தார். லாரா கிராப்ட் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ஜூலி.

இந்த நிலையில் டாம்ப் ரைடர் சீரிஸில் 3வது படம் உருவாகவுள்ளது. அதில், தன்னைப் போடாமல் மேகானைப் போட்டதால் கடுப்பாகியுள்ளார் ஜூலி.

இதை வெளிப்படையாகவும் அவர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து ஜூலி கூறுகையில், டாம்ப் ரைடர் தொடர்ச்சியில் ஹீரோயின் இளம் வயதுப் பெண்ணாக இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் என்னா, நான் என்ன கிழவியாகி விட்டேனா?

மேகான் பாக்ஸ், இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருக்க மாட்டார். இது சரியான முடிவல்ல என்று கூறியுள்ளார் ஜூலி.

அங்கேயும் இங்க மாதிரிதானா...!

பிரபுதேவா-சிம்பு, விக்ரம், தனுஷ் அதிர்ச்சி


பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு இந்தியாவன் மைக்கேல் ஜாக்சன் எனப் புகழப்படும் பிரபுதேவா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஜாக்சனின் ஸ்டைலைத்தான் நான் பின்பற்றி வருகிறேன். அவரது மரணம் எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

மைக்கேல் ஜாக்சன் பாணி நடனத்தை இந்தியத் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் பிரபுதேவா. அவரது முக்காலா முகாபுலா நடனம், அப்படியே மைக்கேல் நடனத்தை தழுவியது.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அழைக்கப்பட்டவர் பிரபுதேவா. அவர் ஜாக்சன் மறைவுக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபுதேவா கூறுகையில், மைக்கேல் ஜாக்சன் புகழ்பெற்ற பெரிய மனிதர், சிறந்த பாடகர், நடன மேதை, இசையமைப்பாளர்.

எனக்கு வழிகாட்டி அவர்தான். அவரது நடன ஸ்டைலைத்தான் நான் பிற்பற்றுகிறேன். அவர் மறைந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீளவில்லை என்று கூறியுள்ளார் பிரபுதேவா.

இதேபோல நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில உலக புகழ்பெற்ற பிரபல நடனக் கலைஞரும், பாப் இசை பாடகருமான மைக்கேல் ஜாக்சன் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.

பாப் இசையோடு நடனத்தைக் கலந்து பல புதுமைகளை புகுத்தி அழியாத முத்திரை பதித்த ஒரு மாபெரும் கலை பொக்கிஷம். தமிழ் திரையுலகில் பல நடன நடிகர்கள் அவரின் அடிச்சுவட்டை பின்பற்றி புகழடைந்துள்ளனர்.

உலகத்தின் கலை வரலாற்றில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. மாபெரும் கலை வித்தகர்.

மைக்கேல் ஜாக்சனின் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறோம் என்று கூறியுள்ளனர்.

நடிகர் விக்ரம் கூறுகையில், ஜாக்சன் மறைந்த அதிர்ச்சி செய்தி கேட்டு வருத்தமுற்றேன். என்னுடைய தலைமுறை அவருடனேயே வளர்ந்தது.

பிராங்க் சினாட்ரா, எல்விஸ் பிரஸ்லி போன்ற மேதைகளைக் காட்டிலும் பிரபலமானவராக, புகழ் பெற்றவராக விளங்கியவர் ஜாக்சன்.

தமிழ், இந்தி திரையுலக நடனங்களிலும் அவரது தாக்கம் அதிகம் என்றார் விக்ரம்.

இதேபோல சிம்பு, தனுஷ் ஆகியோரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

தனுஷ் கூறுகையில் எப்படி நடிகர்களுக்கு புரூஸ்லி முக்கியாக இருந்தாரோ அதேபோல, நடனத்துக்கு மைக்கேல் ஜாக்சன். நமது நடனங்கள் எல்லாமே ஜாக்சனின் ஸ்டைலைத் தழுவியதுதான்.

எனக்கு வழிகாட்டுபவராக அவர் இருந்தார். படிக்காதவன் படத்தில் அவரது ஸ்டைலைப் பின்பற்றி ஆட முயன்றேன். அவர் பெரிய சகாப்தம். அவர் மரணமடைந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை என்றார்.

மைக்கேல் ஜாக்ஸன்... சாதனைகளும் வீழ்ச்சியும்!

மைக்கேல் ஜாக்ஸன் இசையுலகில் அடியெடுத்து வைத்த போது நிறவெறி தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது எங்கும். ஆனால் அந்த நிறவெறியை மிஞ்சும் அபார இசைஞானம் ஜாக்ஸனுக்கு இருந்தது.

அவரது வாழ்க்கை முழுக்க முழுக்க நம்ப முடியாத ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருந்தது.

மிக மிக குறைந்த வயதில், அதாவது 5 வயதிலேயே சர்வதேசத் தரத்தில் இசையை உருவாக்கியவர் ஜாக்ஸன்.

தன்னுடைய 4 சகோதரர்களோடு சேர்ந்து 'ஜாக்சன் 5' இசைக் குழுவை துவக்கினார். மைக்கேல் ஜாக்சனின் தந்தை பெயர் ஜோ ஜாக்சன். அவருடைய தாய் கேத்ரின். எஃகு நிறுவனம் ஒன்றில் தொழிலாளராக பணியாற்றிய ஜாக்சனின் தந்தை இளம் வயதிலேயே தன்னுடைய மகனின் இசை ஆற்றலை உணர்ந்து ஊக்குவித்தார்.

ஜாக்சனின் குரல் வளமே அவரது இசைக் குழுவை பிரபலமாக்கியது. வாய்ப்புகள் அந்த குழுவை தேடி வந்தன.
உள்ளூரில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்த சகோதரர்கள் பின்னர் பல்வேறு நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி புகழ் பெற தொடங்கினர். பாடகராகவும், நடனக் கலைஞராகவும் விளங்கிய சிறுவன் ஜாக்சனின் வசீகரம் அனைவரையும் கவர்ந்து இழுத்தது.

கனவிலும் நினைக்க முடியாத புகழ்...

10 வயதில் ஆல்பத்திற்கான இசை ஒப்பந்தம் அவரை தேடி வந்தது. அதன் பிறகு அவருடைய இசைக்குழு மேலும் புகழ் பெற்றது.

இசையுலகின் போக்கையே மைக்கேல் ஜாக்சன் மாற்றி அமைத்தார் என்றால் மிகையல்ல. வெள்ளையரின் இசைக் குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அவர் தனிப்பாடகராக அறிமுகமாகி புகழ் பெற்றார். இதன் மூலம் பரவலான அளவில் புகழ் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பாடகராக அவர் உயர்ந்தார்.

ஜாக்சன் பாடிய தனிப் பாடல்கள் புகழ் பெற்றதோடு, அவற்றோடு இணைந்த அவரது நடனமும் ரசிகர்களை கவர்ந்தது.

பீட் இட், பில்லி ஜீன் போன்ற தனிப் பாடல்கள் எங்கும் ஒலிக்க தொடங்கின. ஜாக்சன் எழுச்சி பெற தொடங்கிய காலத்தில்தான் எம் டிவி அறிமுகமானது. மைக்கேல் ஜாக்ஸனைப் பயன்படுத்தி எம்டிவி பெரும்புகழ் பெற்றது. அதேபோல ஜாக்ஸனுக்கும் பெரும் உதவியாக அமைந்தது எம்டிவி.

இதன் மூலம் மைக்கேல் ஜாக்சன் கோடிக்கணக்கான டாலர்களை ஈட்டினர். எம் டிவி மூலம் மைக்கேல் ஜாக்சன் அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் ஆனார். 1982ல் வெளியான திரில்லர் ஆல்பம் இசையுலகில் அவரை முடிசூடா மன்னனாக்கியது.

1984ல் எட்டு கிராமிய விருதுகள் அவரைத் தேடி வந்தன. அவர் பாடிய ஒவ்வொரு தனிப் பாடலும் புகழ் பெற்றன. இதன் காரணமாக இசையுலகம் ஆல்பத்தை தயாரித்து சந்தைப்படுத்திய விதமே மாற்றம் அடைந்தது. பாப் இசையின் ஒரே அத்தாரிட்டி எனும் அளவுக்கு மைக்கேல் ஜாக்சன் உயர்ந்தார்.

மைக்கேல் ஜாக்சனை பின்பற்றி நூற்றுக்கணக்கான பாப் பாடகர்கள் உருவானார்கள். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தனர்.

இந்தியாவில் முழு அளவில் அங்கீகாரம் பெற்ற ஒரே மேற்கத்திய இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்ஸன்தான். இங்கும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சர்ச்சை நாயகன்...

1984-ம் ஆண்டுக்குப் பின் அவரது இசையுலகப் பயணம் சர்ச்சைகளும் வழக்குகளும் நிறைந்ததாக மாறியது.

1984 ஆம் ஆண்டு பெப்சி விளம்பரம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது அவருடைய முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பெரும் அனுதாபத்தைப் பெற்றுத் தந்த நிகழ்வு இது.

இதனால் அவருக்கு நஷ்டஈடாக 1.5 கோடி டாலர்களைக் கொடுத்தது பெப்சி. இந்தத் தொகையை நன்கொடையாக வாரி வழங்கி உலக மக்கள் மனங்களில் உயர்ந்தார் ஜாக்ஸன்.

ஆனால் அதன்பிறகு அவர் தனது உடலை பலமுறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். அடிக்கடி தன்னுடைய முகத்தை மாற்றி அமைத்துக் கொண்ட அவர், தன்னுடைய தோலை பிளிச்சிங் செய்து முழுமையான வெள்ளைக்காரரைப் போல தோற்றமளித்தார். தோலின் நிறம் மாறினாலும், அதன் ஆரோக்கியம் கெடத் துவங்கிவிட்டது இந்த ஆபரேஷன்களால்.

பிராண வாயு அறையில் படுத்து உறங்குவதாக சில காலம் தகவல்களைப் பரப்பி விட்டார் ஜாக்ஸன். பின்னர் அவர் மாஸ்க் அணிந்தபடி நிகழ்ச்சிகளுக்கு வந்து போனார்.

சிம்பன்சி குரங்கு ஒன்றை செல்லப் பிராணியாக வளர்த்து வருவதாகக் கூறினார். 1988ல் வெளியான "மூன்வாக்" சுயசரிதையில் தன்னை பற்றி பல விஷயங்களை ஜாக்சன் தெளிவுபடுத்தியிருந்தார்.

ஆனால் 1993ம் ஆண்டு 13 வயது சிறுவனை பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தியதாக ஜாக்சன் மீது குற்றஞ்சாட்டப்பட்ட போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் அவரது செல்வாக்கும் பாதிக்கப்பட்டது.
பல ஆண்டு நீடித்தஇந்த வழக்கு காரணமாக ஜாக்சனின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. கோர்ட்டுக்கு வெளியே வழக்கை முடித்துக் கொள்ள ஒரு பெரும் தொகையை நஷ்டஈடாகக் கொடுத்தார். பின்னர் பஹ்ரைன் மன்னரின் 2வது மகன் அவர் மீது வழக்கு தொடுத்தார். வழக்குகளால் ஏற்பட்ட செலவுகளை அடைக்க அவர் பெருமளவில் கடன் பட்டார்.

பின்னாளில் ஜாக்சனைப் பற்றி நல்ல செய்திகளே இல்லை எனும் அளவுக்கு எதிர்மறையான செய்திகளே அதிகம் வெளியாகின.

அள்ளிக் கொடுத்தவர்...

வெறும் பணம் சம்பாதிப்பது மட்டுமே அவர் குறிக்கோளாக இல்லை. தான் சேர்த்த ஏராளமான பணத்தை ஏழை மக்களுக்கு உதவ பல அறக்கட்டளைகளுக்கு அள்ளிக் கொடுத்துள்ளார் ஜாக்ஸன்.

நீரிழிவு ஆய்வு மற்றும் புற்றுநோய் கழகத்திற்காக அவர் கோடிக்கணக்கான தொகையை நிதியாக திரட்டி தந்தார்.

பெப்சி நிறுவனம் தனக்கு நஷ்டஈடாக அளித்த 1.5 கோடி டாலர்களை அவர் நன்கொடையாகவே வழங்கி விட்டார்.

ஹீல் த வேர்ல்டு அறக்கட்டளை மூலம் உலகால் கைவிடப்பட்ட சிறுவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதற்காகவே நெவர்லாண்டு பண்ணையை வாங்கினார். இந்த பண்ணையின் பரப்பளவு 2500 ஏக்கர்கள். சிறுவர்களுக்காக அதனை சொர்கலோகமாகவே மாற்றினார் ஜாக்ஸன். ஆனால் அவரது இமேஜை பெருமளவு சிதைத்ததும் இந்த நெவர்லாண்டு பண்ணை வாழ்க்கைதான்.

இதனால் ஒரு கட்டத்தில் இந்தப் பண்ணையையே இழுத்து மூடும் அளவுக்குப் போனது.

பல மில்லியன் டாலர்களைச் சம்பாதித்த ஜாக்ஸனின் இறுதிக் காலம் பெரும் கடனாளியாக அவரை மாற்றியிருந்தது. இறக்கும் தருவாயில் அவருக்கு இருந்த கடன் அளவு 500 மில்லியன் டாலர்கள் என்கின்றன செய்திகள்.

இந்த நாட்களில் அவர் மேடைகளில் ஏறியதை விட கோர்ட் படிகளில் ஏறியதே அதிகம். அவரது நெவர்லாண்டு பண்ணை வீட்டை ஏலத்தில் விடக் கூட ஒரு கட்டத்தில் முயற்சிகள் நடந்தன.

இந்தச் சிக்கலை எல்லாம் சமாளிக்கவே, மீண்டும் இசை நிகழ்ச்சிகளை முழுவீச்சில் நடத்த முடிவு செய்து அறிவிப்பும் வெளியிட்டார் ஜாக்ஸன். இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் பணம் பெற்று ஓரளவு கடன்களையும் அடைத்தார் ஜாக்ஸன்.

ஜூலை 13-ம் தேதி லண்டனில் 50 மேடை நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வந்தன. பல ஐடி ஊழியர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு லண்டனுக்குப் போய் ஜாக்ஸன் இசை நிகழ்ச்சியைக் காணத் தயாராக இருந்தார்கள்.

அதற்குள் இயற்கை ஜாக்ஸனை தன்னோடு இணைத்துக் கொண்டு, கோடிக்கணக்கான அவரது ரசிகர்களை பெரும் துயரில் தள்ளிவிட்டது.

மச்சக்காளையை மடக்கிப் போட்ட காஜல்!


த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா நடிக்கிற தெலுங்கு படங்களை சைலண்ட்டாக தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு கதைக்காகவும், ஹீரோவுக்காகவும் ஓடிய படங்கள் இங்கு சதைக்காகவே ரசிக்கப்படுகின்றன என்பது சொல்லாமலே புரியும். சென்னையை தாண்டி இந்த ஜிகினா சுந்தரிகளின் ஆட்டத்தை காண தவியாய் தவிக்கிற ரசிகர்கள், டப்பிங் பட பாகுபாடில்லாமல் கலெக்ஷனை கொட்டுவதால் அந்த ஏரியாவுலேயும் இப்போது பரபரப்பு.

மேற்படி தங்க தாரகைகளை தொடர்ந்து பிட்டு பட நாயகி லெவலுக்கு டூ பீஸ் தரிசனம் தர வந்திருக்கிறார் ப்ரியாமணி. இவரது படங்களையும் டப்பிங் செய்து வெளியிட்டு வருகிறார்கள். இப்போது லேட்டஸ்டாக அதில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். இன்னொரு ஜோதிகா என்று இவர் வந்த புதிதில் வர்ணித்த பத்திரிகைகள், ஒரு படம் கூட ஓடாமல் போனாலும், தனது வர்ணிப்பை நிறுத்தவில்லை.

இதற்கு முன்பு வந்த தனது படங்கள் மண்ணை கவ்வினாலும், வரப்போகும் படமான மோதி விளையாடு தனக்கு வெற்றியை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது காஜலுக்கு. எதற்கும் இருக்கட்டும் என்று, தெலுங்கிலும் தனது பெரிய கண்களை அலையவிட்டு வாய்ப்புகளை தேடிக் கொண்டார். அங்குள்ள முன்னணி இயக்குனர் தேஜா இயக்கிய படம் ஒன்றில் இவர்தான் முழுநீள நாயகி. (ள உச்சரிப்பு முக்கியம்)

நல்ல வெயிட்டான கதையில் காஜலின் கவர்ச்சிக்கும் ஒரு வெயிட் இருப்பதால், இந்த படத்தை டப்பிங் லிஸ்ட்டில் வைத்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள். தமிழில் மச்சக்காளை என்ற பெயரில் வரப்போகிறதாம். ஜொள்ளாபிஷேகத்திற்கு ரசிகர்கள் தயாராகலாம்.

ஒப்புக்கொண்ட படத்திலிருந்து விலகல்! த்ரிஷா திடுக்...

பனை மரத்திலே இடி இடிச்சா பாக்கு மரத்திலே வெடிப்பு விட்ட மாதிரி ஆயிருச்சு பாலகிருஷ்ணாவுக்கு. தெலுங்கிலே இன்னும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் பாலகிருஷ்ணா, இப்போதும் கலெக்ஷன் புலியாகவே கர்ஜித்துக் கொண்டிருக்கிறார். பேத்தி வயசு பொண்ணுங்களோட, இந்த தாத்தாக்கள் ஆடுறதை, மானாட மயிலாட ரேஞ்சுக்கு ரசிக்கறது அங்குள்ள ரசிகர்களுக்கு ஆனந்தம், பரமானந்தம். அப்படிதான் இந்த பாலகிருஷ்ணா, இளம் நடிகைகள் ஒருத்தர் விடாம ஆட்டிப்படைக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரைக்கும் தெலுங்கில் என்னென்ன படத்திலே நடிக்கிறீங்க? என்று த்ரிஷாவிடம் கேட்டால், அவரோட இவரோடன்னு போடுற லிஸ்ட்டுல பால கிருஷ்ணாவும் இருந்தார். இப்போ த்ரிஷா இந்தி படத்திலே நடிக்க போய்விட்டதால், பாலகிருஷ்ணா படத்தை லிஸ்ட்டில் இருந்தே து£க்கிவிட்டாராம்.

இதனால் பாலகிருஷ்ணா நடிக்கும் 'பீஷ்மா' என்ற படத்திற்கு பொருத்தமான ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே கொடி நாட்டும் ஹீரோயின்களில் முக்கியமானவர்களான அனுஷ்கா, ஸ்ரேயா, நயன்தாரா வரைக்கும் கேட்டு பார்க்கிறார்களாம். தமிழில் ஒப்புக்கு சப்பாணியாக கூட இருக்க முடியாத ஷீலா, தெலுங்கில் இன்றைய தினம் ரசிகர்களின் 'ஆஹா' லிஸ்ட்டில் இருப்பதால், அவர் வரைக்கும் இறங்கியிருக்கிறார்களாம்.

தாத்தாவுக்காக மனசு இறங்குமா பொண்ணு?

தியேட்டர்களில் மது பார்! அதிபர்கள் கோரிக்கை...

சப்பை படமாக இருந்தாலும், இனிமேல் 'ஃபுல்' திருப்தியோடு வெளியே வருவார்கள் ரசிகர்கள். ஏன்? வேறொன்றுமில்லை, 'எல்லாம் இன்ப மய பாலிசிக்கு' அடி போட்டு வருகிறது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். இவர்கள் வைத்திருக்கும் ஒரு கோரிக்கை, இனி குடிமகன்களின் தேசத்தில் குய்யாலக்கடியை ஏற்படுத்தக் கூடும்.

திரையரங்க வளாகத்திலேயே பார் நடத்த எங்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்களாம் அரசிடம். "ஏற்கனவே தியேட்டருக்குள்ளே பெண்கள் வர்றதில்லே. இந்த லட்சணத்தில் பாரையும் திறந்திட்டா சுத்தம்". செய்தியை கேள்வி பட்டவுடனேயே மக்கள் முணுமுணுப்பது இப்படிதான். ஆனால், திரையரங்க தரப்பு என்ன சொல்கிறது இந்த முணுமுணுப்புக்கு?

இப்போ மட்டும் என்ன வாழுதாம்? காம்ப்ளக்ஸ் திரையரங்கங்களை விடுங்கள். சாதாரண தியேட்டர்களில் குடிக்காமல் வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவுதான். பக்கத்தில் உள்ள டாஸ்மாக்கில் சரக்கடித்துவிட்டு வந்துதான் படமே பார்க்கிறாங்க. எங்கேயோ போய் குடிச்சிட்டு வந்து இங்கே பார்க்கறதுக்கு இங்கேயே குடிச்சிட்டு பார்த்தா எங்களுக்கும் வருமானம் வருமில்லே? அதுமட்டுமில்லே, முன்னெல்லாம் தமிழகம் முழுக்க 2600 தியேட்டர்கள் இருந்திச்சு. இப்போ, 1400 தான் இருக்கு. அதிலேயும் 400 தியேட்டர்கள் இப்பவோ, அப்பவோ கண்டிஷன்ல இருக்கு.

எங்களுக்கு வருமானம் வரணும். தியேட்டர்கள் இனிமேலும் ஷாப்பிங் காம்பளக்சாகவோ, கல்யாண மண்டபமாகவோ மாறாம தடுக்கணும்னா ஒரே வழி பார் ஓப்பன் பண்ணுறதுதான். எங்க கோரிக்கையை பரிசீலனை செய்வாங்கன்னு ஆவலோட காத்திருக்கோம் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள்.

எங்கேங்க முழுசா படத்தை பார்க்க முடியுது? இப்பவே குடிச்சிட்டு வந்து, ஸ்கிரீன்லே வர்ற ஹீரோ ஒன்ணு சொன்னா, அதுக்கு பதிலை இங்கே எதிர்ல உட்கார்ந்திகிட்டு சொல்றான். சீரியஸ் ஆன சீன்லே கூட தியேட்டரே கொல்லுன்னு சிரிக்குது. இதிலே பார் வைக்கவும் அனுமதி கொடுத்தாச்சுன்னா படத்தை முழுசா பார்த்தாப்லதான் என்கிறார் ஒரு ரசிகர். ஹ¨ம், அவங்கவங்க ப்ராப்ளம் அவங்கவங்களுக்கு!

13 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையை வசீகரித்த ஜாக்சன்

பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் இசை ஆசி, இந்தியாவுக்கும் கிடைத்தது - 13 ஆண்டுகளுக்கு முன்பு.

அது 1996ம் ஆண்டு. மும்பையே மெய் மறந்து கிடந்தது. காரணம், மைக்கேல் ஜாக்சனின் இசைக் காற்று அங்கு வீசியதே.

சிவ உத்யோக் சேனா என்ற அமைப்புதான் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமைப்பைத் தொடங்கியவர் வேறு யாருமல்ல, பால் தாக்கரேதான். 27 லட்சம் மராட்டியர்களுக்கு வேலை தர வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட அமைப்பு அது.

இந்த அமைப்புதான் ஜாக்சன் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அக்டோபர் 30ம் தேதி இதற்காக மும்பைக்கு வந்தார் ஜாக்சன்.

அவரை நடிகை சோனாலி பெந்த்ரே, மகாராஷ்டிர மாநில பாரம்பரிய சேலை அணிந்து விமான நிலையத்தில் வரவேற்றார். ஜாக்சனுக்கு ஆரத்தி எடுத்தும், நெற்றியில் திலகமிட்டும் வரவேற்பு அளித்தார் பெந்த்ரே.

அதன் பின்னர் 20 கார்கள் புடை சூழ விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடந்த மைதானத்திற்கு டயோட்டா காரில் அழைத்துச் செல்லப்பட்டார் ஜாக்சன்.

வழியெங்கும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்தபடி புன்முறுவலுடன் சென்றார் ஜாக்சன். ஆங்காங்கே காரை நிறுத்தி ரசிகர்களைப் பார்த்து கைகளை உயர்த்தியும், பறக்கும் முத்தங்களையும் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

இந்தியத் தெருக்களில் நடந்து போய் மக்களையும் சிறுவர்களையும் சந்திக்க விரும்பிய மைக்கேல் ஜாக்ஸனைக்கு மகத்தான வரவேற்பும் அன்பும் பரிசாகக் கிடைத்தது. இந்தியக் குழந்தைகளுக்கு தன் பறக்கும் முத்தங்களைத் தந்தபடி, மக்கள் வெள்ளத்தில் மிதந்த ஜாக்ஸனுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்திய மண்ணை அன்று வசீகரித்த ஜாக்சன் அதன் பின்னர் இந்தியாவுக்கு வரவில்லை. முதலும் கடைசியுமாக ஜாக்சனை இந்தியா தரிசித்தது அன்றுதான்.

இந்தியாவைப் பொறுத்தவரை மைக்கேல் ஜாக்ஸனின் பாதிப்பு மிக மிக அதிகம். நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என பலரும் ஏதாவது ஒரு விதத்தில் மைக்கேல் ஜாக்ஸனின் இசையின் பாதிப்பில் ஆட, இசையமைக்க, பாட முயன்று கொண்டிருந்தது ரசிகர்கள் அறிந்த வரலாறு.

ஸ்வாட் பள்ளத்தாக்கு அகதிகளுக்கு தாராள உதவி - ஜூலிக்கு போன் செய்து சர்தாரி நன்றி

இஸ்லாமாபாத்: வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் தலிபான்களுக்கு எதிரான போரின்போது இடம் பெயர்ந்துள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு நிதியுதவி செய்ததற்காக ஹாலிவுட் நடிகை ஏஞ்செலீனா ஜூலி மற்றும் அவரது கணவரும் நடிகருமான பிராட் பிட் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி.

பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்திலிருந்து தலிபான்களை விரட்டியடிக்க கடும் யுத்தம் புரிந்து வருகிறது பாகிஸ்தான் ராணுவம்.

இதன் காரணமாக அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்டவற்றை ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வழங்கி வருகின்றன.

அதேபோல ஜூலி - பிராட் நடத்தி வரும் ஜூலி -பிட் பவுண்டேஷனும் பெருமளவிலான நிதியுதவியை அறிவித்துள்ளது.

இதையடுத்து ஜூலி, பிராட் பிட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதிபர் சர்தாரி, அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், அவர்களை பாகிஸ்தானுக்கு வந்து செல்லுமாறும் அழைப்பு விடுத்தார்.

ஜூலி - பிட் பவுண்டேஷனின் வேலை என்ன..?

உலகம் முழுவதும் எங்கு மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட்டாலும், அந்தப் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி, பொருளதவி உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது ஜூலி - பிட் பவுண்டேஷன்.

ஐ.நா. அகதிகளுக்கான ஹை கமிஷனின் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார் ஜூலி. இடம் பெயர்ந்த பாகிஸ்தான் மக்களுக்கு அவரது அமைப்பு 10 லட்சம் டாலர் நிதியுதவியை அளித்துள்ளது.

ஸ்வாட் பள்ளத்தாக்கிலிருந்து இடம் பெயர்ந்துள்ளவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை என்றும் ஜூலி கூறியுள்ளார். இதற்காகத்தான் நன்றி கூறியுள்ளார் சர்தாரி.

ஈழத் தமிழர்களையும் பார்ப்பாரா ஜூலி..?

ஸ்வாட் பள்ளத்தாக்கிலிருந்து பல லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ள வந்துள்ளதற்காக அனுதாப்படும் ஜூலி, அவர்களை விட மிக மிக மோசமான நிலையில் இருக்கும் ஈழத் தமிழர்களின் பக்கமும் தனது கருணைப் பார்வையைத் திருப்பினால் நலமாக இருக்கும்.

என் வயசை ஏழுமலையானிடம் கேளுங்க!-விஜயசாந்தி

திருப்பதி திருமலைக்கு பிறந்தநாள் கொண்டாட வந்த விஜயசாந்தியிடம் வயதைக் கேட்ட நிருபருக்கு, அதை அந்த ஏழுமலையானிடம்தான் கேட்க வேண்டும் என்றார் நடிகை விஜயசாந்தி.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி.யும், நடிகையுமான விஜயசாந்தி தனது பிறந்த நாளைக் கொண்டாட திருப்பதி திருமலைக்கு வந்தார்.

ஏழுமலையானுக்கு நேற்று முன்தினம் நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு சாமி கும்பிட்ட விஜயசாந்தி, பின்னர் வெளியில் வந்தபோது அவரை ரசிகர்கள் சூழந்து கொண்டு வாழ்த்துக் கோஷம் எழுப்பினர்.

ரசிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு நிருபர்களும் விஜயசாந்தியை சந்திக்க முயன்றனர்.

உடனடியாக அவர்களை தனியாக நிற்க வைத்த விஜய்சாந்தியின் உதவியாளர்கள், அங்கேயே ஒரு மினி பிரஸ்மீட் நடத்தினர்.

அவரது அரசியல் பிரவேசம் எதிர்பார்த்த வெற்றியைத் தராதது குறித்து கேட்டதற்கு, நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டார்.

அப்போது ஒரு நிருபர், உங்க வயசு என்ன மேடம்? என்றார்.

நடிகைகளுக்கு எட்டிக் காயாய் கசக்கும் இந்தக் கேள்வி, விஜயசாந்திக்கு மட்டும் இனிக்கவா செய்திருக்கும். மகா கடுப்புடன் அவரை நோக்கிய அதிரடி நாயகியான விஜயசாந்தி, 'அதை என்கிட்ட கேக்காதீங்க... அந்த ஏழுமலையான்கிட்டேயே கேளுங்க', என்றார்.

சரிதான்... அவருக்கு வேற வேலையே இல்லையா? என பதிலுக்கு அந்த நிருபர் கேட்டதை காதில் வாங்காமலேயே நடையைக் கட்டினார் விஜயசாந்தி!

இந்திர விழா... நமீதாவின் நூதன பிரச்சாரம்!


தனது இந்திர விழா படத்தை திரண்டு வந்து பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்து 22 ஆயிரம் இமெயில்களை ரசிகர்களுக்கு அனுப்பியுள்ளாராம் நடிகை நமீதா.

நமீதா என்ன செய்தாலும் பெரிய செய்தியாகி விடுகிறது. குறிப்பிட்ட படத்துக்கு அல்லது அவர் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அதுவே பெரிய விளம்பரமாகவும் அமைந்துவிடுகிறது.

நமீதாவுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய இந்திர விழா படத் தயாரிப்பாளர் அவருக்கு ஒரு யோசனை கூறியுள்ளார்.

அவரது ரசிகர் மன்றத்தில் உள்ளவர்கள் மற்றும் தெரிந்த நபர்களுக்கெல்லாம் தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதி அதை இமெயில் மூலம் அனுப்பி வைப்பதே அந்த யோசனை.

அந்த இமயிலில், தானும் ஸ்ரீகாந்தும் நடித்துள்ள புதிய படமான இந்திர விழைவைக் காண வருமாறு அழைப்பு விடுத்துள்ளாராம். மேலும் அதிலேயே படத்தின் சிறப்புகள், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் விவரங்களையும் அவர் அனுப்பியுள்ளார்.

நமீதாவின் மெயில் கிடைத்த சந்தோஷத்தில் உடனே அனைத்து ரசிகர்களும் பதிலும் அனுப்பி உள்ளார்களாம்.

இதுபற்றி நமீதா கூறுகையில், இந்த இ-மெயில் விளம்பர யோசனையை தயாரிப்பாளர் சஞ்சீவ்சர்மாதான் சொன்னார். அது வித்தியாசமாகவும் இருந்தது. உடனடியாக தமிழ், ஆங்கிலத்தில் ரசிகர்களுக்கு இ-மெயில் அனுப்பினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. நிறைய ரசிகர்கள் வாழ்த்து அனுப்புகிறார்கள். அவர்களுக்கு உடனுக்குடன் பதிலும் அனுப்பி வருகிறேன், என்கிறார்.

கமலுக்கு மறுப்பு சொன்ன ரசிகர்கள்


ராணுவம் மாதி‌ரி கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் கமல் தனது ரசிகர் மன்றங்களை. அவர் சொல்வதை அட்சரம் பிசகாமல் கடைபிடிக்கிறவர்கள் அவரது ரசிகர்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் கமலுக்கு மறுப்பு தெ‌ரிவித்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி கமல் திரைத்துறைக்கு வந்து ச‌ரியாக ஐம்பது வருடம் நிறைவு பெறுகிறது. ஐம்பது வருடங்களுக்குமுன் இதே நாளில்தான் அவர் களத்தூர் கண்ணம்மா படத்தில் அறிமுகமானார். இதை பிரமாண்டமாக கொண்டாட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம். ஆனால், எளிமையாக கொண்டாடினால் போதும் என்று கமல் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.

கமல் பேச்சுக்கு மறுப்பு தெ‌ரிவிக்காத அவரது ரசிகர்கள் இந்த விஷயத்தில் மட்டும் அவரது கோ‌ரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. ஐம்பதாவது பொன் விழாவுக்கு பிரமாண்டமான விழா எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து கமலின் சம்மதத்தையும் பெற்றிருக்கிறார்கள். அன்றைய தினம் கமலின் புதிய படமான உன்னைப்போல் ஒருவனை ‌ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற அவர்களது கோ‌ரிக்கையையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் கமல்.

உன்னைப்போல் ஒருவனின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிந்துவிடும். போஸ்ட் புரொட‌க்சன் பணிகளில் சில வாரங்கள் நடக்கும். ஜூலையில் ‌ரிலீஸுக்கு தயாராகிவிடும் இப்படம் ரசிகர்களின் வேண்டுகோளுக்காக ஆகஸ்ட் 12 திரைக்கு வருகிறது.

பிரபுதேவா இப்போ தயாரிப்பாளர்


மகனின் இறப்பு, நயன்தாராவுடனான ரகசிய திருமண சர்ச்சை என பட்டக்காலிலேயே பட்டாலும், பதட்டமாகவில்லை பிரபுதேவா.
ஒட்டுமொத்த பக்குவத்தையும் குத்தகைக்கு எடுத்ததுபோல அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்துகிறார்.

பிரபுதேவாவுக்கு டான்ஸாடதான் தெரியும், நடிக்கத்தான் தெரியும் என அவரது திறமையை சுருக்கி பார்த்துக் கொண்டிருந்தபோதே, இயக்குனர் அவதாரம் எடுத்து முதல்படத்திலேயே முத்திரை பதித்தார். சித்தார்த்-த்ரிஷா நடித்த 'நு ஒஸ்தானன்டே நா ஒத்தன்டானா' தெலுங்கு படம்தான் பிரபுதேவா இயக்கிய முதல் படம். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் 'பவுர்ணமி' படத்தை இயக்கிய பிரபுதேவா தமிழிலும் 'போக்கிரி', 'வில்லு' இந்தியில் 'வான்டட்' என பல மொழிகளிலும் ஆக்ஷ்ன்-கட் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

இன்னொரு பெரும் பொறுப்பையும் தூக்கி சுமக்க ஆயத்தமாகிவிட்டார் பிரபுதேவா. அதாவது முதலாளியாகிறார். சித்தார்த் நடிக்கும் தெலுங்கு படம்மூலம் தயாரி்பபாளராகிறாராம் பிரபுதேவா. அப்படத்தை அவரே இயக்கவும் உள்ளார். படத்தின் பெயர், நாயகி இன்னும் முடிவாகாத நிலையில் நவம்பர் மாதம் இப்படத்தை தொடங்குகிறார் பிரபுதேவா.

அரசியலுக்கு வர்றார் அஜித் : கிளப்பும் மீடியாக்கள்


மலேசியாவில் 'அசல்' படப்பிடிப்பில் சிவனேன்னு தனது வேலையை செய்து வருகிறார் அஜித்.
அதற்குள் அவர் அரசியலுக்கு வரப்போவதாக வாரஇதழ் ஒன்று பரபரப்பை பற்றவைத்துள்ளது.

தனது ரசிகர்மன்றத்தை மக்கள் இயக்கமாக இன்று ஆரம்பித்திருக்கலாம் விஜய். ஐந்து வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றம் இயக்கமாக செயல்படும் என அறிவித்தார் அஜித். "இயன்றதைச் செய் இல்லாதவருக்கு" என்பதுதான் தனது இயக்கத்துக்கு அஜித் சொல்லிக்கொடுத்த மந்திரம். தமிழகத்தில் மட்டும் அஜித்துக்கு 35 ஆயிரம் மன்றங்களும், எண்ணிக்கையில் கோடியை தாண்டும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இவர்கள் தன்னை எளிதான முறையில் தொடர்பு கொள்ளவும் இயக்கத்தை பலப்படுத்தவும் சில திட்டங்களை தீட்டியுள்ளாராம் அஜித். அதன்படி இணையதளம் ஒன்றை ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமைகளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ரசிகர்களுடன் பேசி சமூக பணிகளை முடுக்கி விடும் எண்ணம் அஜித்திடம் உள்ளது.

இதனை வைத்துக்கொண்டு விஜய் பாணியில் அஜித் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற தோற்றத்தில் வாரஇதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இதுபற்றி அஜித் தரப்பில் நாம் விசாரித்தபோது, 'அஜித்திடம் அப்படியொரு எண்ணம் இருந்ததும் இல்லை இருக்கப்போறதும் இல்லை. கடந்த 15 வருடங்களில் மட்டும் அஜித் செய்த உதவியினால் உயிர் பிழைத்தவர்கள் நிறைய. நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு விளக்கேற்றிவைத்த பெரிய மனசுக்காரர். ஆனால் செய்த உதவிகளை விளம்பரம் செய்து கொண்டதே இல்லை. இதுதான் அவருக்கு ஆத்மதிருப்தியை தருகிறது. அப்படிப்பட்டவருக்கு அரசியல் ஆசையெல்லாம் வராது" என்றார்.

"ஒருவேளை அஜித் அரசியலுக்கு வந்தாலும் சந்தோஷமே! கக்கன், காமராஜர் வழியில் அப்பழுக்கற்ற ஒரு அரசியல் தலைவர் தமிழகத்திற்கு கிடைக்கும்" என்கிறார் ரசிகர் ஒருவர்.

ரஜினி-கமல் இணைவார்களா?: கேஎஸ் ரவிக்குமார் பேட்டி

ரஜினி, கமல் இருவருமே இணைந்து நடிக்கும் சூழல் வரும் என்றும், அப்படி ஒரு சூழலை உடனிருப்பவர்கள்தான் உருவாக்க வேண்டும் என்றும் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆனந்த விகடன் வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி:

ரஜினி கமல் இருவரும் சேர்ந்து நடித்தால் அந்த பட்ஜெட்டை தாங்குற அளவுக்கு தயாரிப்பாளர் அமையணும்.

கமல் ரஜினி சேர்ந்து நடிக்கிற சூழல் மறுபடியும் வரும்னு நினைக்கிறேன். சேர்ந்து நடிக்கணும்னு அவங்களா நினைக்க மாட்டாங்க. யாராவது தூண்டிவிடணும்.

ஆனா இந்த விஷயத்துல நானா எதுவும் செய்ய மாட்டேன். போய்க் கேட்டா, 'படம் பண்ணி பணம் பார்க்க ஆசைப்படறான்'னு நினைப்பாங்க.

அதனால அந்த மாதிரி விஷயத்தை நான் நினைச்சுக் கூடப் பார்க்கிறதில்ல, என்று அவர் பதில் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு மணிரத்னம் ஒருமுறா ரஜினியையும் கமல்பாசனையும் இணைத்து ஒரு படம் எடுக்க முயன்றார். ஆனால் அப்படி நடித்தால் வரக்கூடிய சிக்கல்கள், ரசிகர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு அந்த முயற்சியை ரஜினி - கமல் இருவருமே ஏற்கவில்லை என கூறப்பட்டது.

கமல் விலகல்: 19 ஸ்டெப்ஸ் கைவிடப்படுகிறது?

கமல் ஹாஸன் நடிக்க மறுத்துவிட்டதால் அவரது நண்பர் பரத் பாலா தயாரித்து இயக்குவதாக அறிவிக்கப்பட்ட 19 ஸ்டெப்ஸ் படம் கைவிடப்படும் நிலையில் உள்ளது.

இந்தப் படத்தில் கமல் ஹாஸன் சிறப்புத் தோற்றத்திலும், ஜப்பான் நடிகர் தாடனோ அஸனோ நாயகனாகவும் நடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. அசின் களறி சண்டை வீராங்கனையாக இந்தப் படத்தில் நடிப்பதால், அவருக்கு ஒருமாத களறிச் சண்டையும் கற்றுத் தரப்பட்டது.

வால்ட் டிஸ்னியுடன் இணைந்து பரத்பாலா தயாரிக்கும் இந்தப் படம் இப்போது எடுக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

காரணம் இந்தப் படத்தில் நடிப்பதாக கமல் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. குறிப்பாக கவுரவ வேடத்தில் நடிப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லையாம். கமல் நடிக்காதபட்சத்தில் படத்துக்கு நட்சத்திர அந்தஸ்து இருக்காது என்பதால் படத்தைக் கைவிடும் முடிவில் இருக்கிறாராம் பரத்பாலா.

Thursday, June 25, 2009

தம்மரே தம்... தடுமாறிய ரஜினி!


பள்ளிக்கூடம் இருக்கும் ஏரியாக்களில் இருந்து ஆயிரம் அடிக்கு அப்பால்தான் தம்மடிக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை போட்டு விட்டாராம் அதிபர் ஓபாமா! (ஆமாவா?, சொல்லுங்களேன், அமெரிக்க நண்பர்களே..) அதுமட்டுமா? ஹோட்டல்களில் தம்மடிக்கவும் தடை. அதற்காக தனி பகுதி இருக்கிறதாம். அங்கே போய் வேண்டுமானால் குப் குப்-லாம்!

சென்னைக்கு திரும்பிவிட்டது எந்திரன் டீம். ஆனால் அமெரிக்காவில் இருந்தபோது ரொம்பவே சிரமப்பட்டது நம்ம சூப்பர் ஸ்டார்தானாம். அடிக்கடி சிகரெட் வேணும் அவருக்கு. படப்பிடிப்பில் பரவாயில்லை. தங்கியிருந்த ஹோட்டல் அறையில்தான் சிக்கலே. உள்ளே எங்கேயும் சிகரெட் பிடிக்க அனுமதியில்லை. புகை ஏரியாவில் ஒரே கூட்டம். வேறு வழியில்லாமல் சாலைக்கு வந்து சுதந்திரமாக தம்மடித்தாராம்!

ஆணானப்பட்ட ரஜினியே அளந்து அளந்து புகைக்கும்போது, அசல்டாக புகை பிடிக்கிறார் ஆன்ட்ரியா. படப்பிடிப்பில் ஷாட்டுக்கு நடுவே, இவரது குப் குப் ஸ்டைலை பார்த்து ஆடிப்போயிருக்கிறது ஸ்டுடியோ வட்டாரம். நல்லவேளையாக ஏ.வி.எம் போன்ற ஸ்டுடியோ வளாகத்தில் ஓபாமாக்கள் இல்லை என்பதே ஆறுதல்

தயாரிப்பாளர்கள் படகு மாதிரி! ஆயிரத்தில் ஒருவன் ரவீந்திரன் பேச்சு


தமிழ்சினிமாவில் ஆயிரத்தில் ஒருவன் தயாரிப்பாளர் ரவீந்திரன் மீதுதான் இப்போது அனைவரின் கண்ணும். ஒரே நேரத்தில் கிட்டதட்ட நாற்பது கோடியை தனது இரண்டு படங்களில் விதைத்திருக்கிறார்! இவரது மற்றொரு தயாரிப்பு வாமனன். கொள்ளாத சுமையோடு வாக்கிங் போனாலும், பொல்லாத சிரிப்புணர்வு இவரிடம் இருப்பதுதான் ப்ளஸ்!

சமீபத்தில் ஒரு புகைப்படம் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார் ரவீந்திரன். “நாங்க எல்லாம் ஒரே படகுலே போயிட்டு இருக்கோம். ஏன் படகுன்னு சொல்றேன்னா, தண்ணியிலே இறக்குற வரைக்கும்தான் எங்க கண்ட்ரோல்ல இருக்கும். அதுக்கு பிறகு அது எங்கே இழுதிட்டு போவுதோ, அங்கெல்லாம் நாங்களும் போகணும். ஆனாலும் ஒரு நம்பிக்கை இருக்கு. சேஃப்ட்டியா போயி இறங்கிடுவோம்னு” என்றார்.

படத்தை வியாபாரம் செய்யும் போதுதான் எப்படி எப்படியெல்லாம் எழுதி வாங்குறாங்கன்னு புரியுது. அந்த ரைட்ஸ், இந்த ரைட்ஸ், ஃபிளைட்லே போகும் போது படம் பார்த்தால் அந்த ரைட்ஸ். எதிர்காலத்திலே வரப்போற புளு ரேஸ் ரைட்சை கூட வாங்கிடுறாங்கன்னா பாருங்களேன். நானும் உலகத்திலே எங்கெங்கோ போயிருக்கேன். ஆனால் எங்கும் கிடைக்காத நிம்மதி, என் ஆபிஸ் டேபிளில் வைத்திருக்கும் அந்த படத்தை பார்க்கும் போது கிடைக்குது என்றார். அது என்ன படம்?

தன் பையனோட பிறந்த நாளுக்கு குடும்பத்தினர் எல்லாரும் ஒண்ணா நின்று எடுத்துகிட்ட அந்த படம்தானாம்! புகைப்படம் பட விழாவில் இதைவிட பொறுத்தமாக என்ன பேசிவிட முடியும்?

முருகன் கோவிலில் விஜய்! புதிதாக கிளம்பும் பூதம்!


அரசியலுக்கு வருவதற்கு முன்னாடியே பூசலாம்னு சேறு குழைச்சி வச்சிட்டு தயாராக இருக்கு ஒரு கோஷ்டி! தெரிஞ்சோ தெரியாமலோ அவங்களுக்கு தோளை காட்டியிருக்காரு விஜய். எப்படி?

இலவச கம்ப்யூட்டர் மையம், மருத்துவ உதவின்னு சில முக்கியமான விஷயங்களை செஞ்சவர், அப்படியே அன்னதானத்துக்கும் கிளம்பினார். இந்த அன்னதானத்தை எங்காவது வெளியில் வைத்து நடத்தியிருக்கலாம். ஆனால் ரசிகர்கள் தேர்ந்தெடுத்தது வடபழனி கோவில் வளாகத்தை. விஜய் கோவிலுக்குள் வருவாரா? மாட்டாரா? அவர்தான் கிறிஸ்துவர் ஆச்சே? என்ற பலவித யூகங்களை எழுப்பி காத்திருந்தார்கள் ரசிகர்களும், பொதுமக்களும். ஆனால் வந்தவர், அப்படியே கோவில் சன்னிதானம் வரைக்கும் சென்றுவிட்டார்.

முருகன் முன்பு பயபக்தியோடு வணங்கியவருக்கு, பரிவட்டம் கட்டி, இறைவனுக்கு போடப்பட்ட மாலையை விஜய்க்கும் போட்டு, சிறப்பு பெருமைகளை செய்தனுப்பியது கோவில் நிர்வாகமும். இவையெல்லாம் நிமிடத்தில் நடந்து முடிந்திருந்தாலும், இப்போது கிளம்பியிருக்கிற அக்கப்போர் என்ன தெரியுமா? இத்தனை வருடங்களாக பிறந்த நாள் கொண்டாடுகிறார் விஜய். ஆனால், வேளாங்கண்ணி போன்ற கிறிஸ்துவ ஆலயங்களுக்கு போவாரே தவிர, ஒரு முறை கூட, இந்து கோவில்களுக்கு சென்றது கிடையாது. இப்போது மட்டும் வருவது எதற்காக? அரசியல் கட்சி துவங்கப் போகிறோம். இந்துக்களின் ஆதரவு தேவை என்பதற்காகவா?

இதுதான் இப்போது கிளம்பியிருக்கும் குற்றச்சாட்டு. இதற்கெல்லாம் பதில் சொல்வாரா விஜய்?

டமால்...! விரிசல் விழுந்த மற்றொரு சினிமா லவ்!

ஆக்ஷன்னு ஆரம்பிக்கும் போது துவங்குகிற காதல், கட்டுன்னு சொல்லும் போது முடிஞ்சிருக்கும்! பெரும்பாலான நடிகைகளின் காதலுக்கு ஆயுள் அதிகபட்சம் இந்த சில நிமிடங்கள்தான். கேமிராவுக்கு முன்னால், சில நிமிடங்கள் என்றால் கேமிராவுக்கு வெளியே சில நாட்கள்தான் போலிருக்கிறது. அதையும் மீறி வாழ்வாங்கு வாழ்கிற காதல்கள் உண்டு. அது மிக மிக சொற்பமே!

சரி விஷயத்துக்கு வந்துவிடுவோம். மீராஜாஸ்மின், மாண்டலின் ராஜேஷ் காதல் புட்டுக்கிச்சாம்! “உங்க வசதிக்கும் அழகுக்கும் நீங்க இருக்க வேண்டிய இடமே வேறம்மா” என்று பக்கத்திலிருந்து கொண்டே இந்த காதலை பஞ்சராக்கியவர், சாதாரண ஹேர் டிரஸ்சர் என்கிறார்கள். பாவம், சினிமா கொடுக்கிற சம்பளத்தை விடவா, மாண்டலின் அதிகம் சம்பாதித்து விடும்?

பிரபல வார இதழ் ஒன்றிற்கு பதிலளித்திருக்கும் மாண்டலின் ராஜேஷ், அது முடிஞ்சு போன கதை. அதை திரும்ப திரும்ப கிளறினால் வருத்தம்தான் மிஞ்சும். என்னமோ நடந்துச்சு. போயிருச்சு. விட்டு விடுங்கள். நாம நினைக்கிறது எல்லாமா நடக்குது? மறுபடியும் சங்கீதத்துக்கு வந்துவிட்டேன். நிறைய கச்சேரி பண்றேன். காலம் எல்லாத்தையும் சரி பண்ணிவிடும் என்கிறார்.

இதுபற்றி கேட்கலாம் என்று போன் அடித்தால், வழக்கம் போல தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் மீராஜாஸ்மின். குறிப்பாக ராஜேஷின் தொடர்பு எல்லைக்கு அப்பால்...

பாடகராகிறார் சூர்யா!


கோலிவுட்டில் இன்றைய ட்ரெண்ட் என்ன தெரியுமா... நடிகர்கள், தங்களுக்கான பாடலை தாங்களே பாடுவதுதான்.

கமல்ஹாசனில் தொடங்கி இன்றைய சுள்ளான்கள் வரை அவரவர் தங்கள் குரல் வளத்தை ரசிகர்களிடம் சோதித்துப் பார்த்துவிட்டனர்.

ஹீரோக்கள் சொந்தக் குரலில் பாடுவதால் அப்படி ஒன்றும் ரசிகர்களுக்கு சுகமாக இருந்துவிடப் போவதில்லை. ஆனால் பல நேரங்களில் படத்தின் விளம்பரத்துக்கு இந்த சொந்தக் குரல் பாடல்களும் உதவுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, இப்போது சூர்யாவும் தன் குரல் வளத்தைக் காட்ட களமிறங்கியுள்ளார்.

தனது 25வது படமான சிங்கம் படத்தில் தன் சொந்தக் குரலில் அவர் ஒரு பாடல் பாடவிருப்பதாகக் கூறப்படுகிறது (ஷூட்டிங் தொடங்கும் முன்பே பப்ளிசிட்டியா!)

ஹரி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர் அனுஷ்கா என்று கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் ஹீரோயின் விஷயம் இறுதி செய்யப்படவில்லையாம்.

இது சூர்யாவுக்கு 25வது படம் என்பதால், அதை மறக்கமுடியாத அனுபவமாக்கும் வகையில் பல புதுமைகளை செய்யப் போகிறார்களாம் ஹரி அண்ட் கோ.

அதில் ஒன்றுதான் சூர்யாவை சொந்தக் குரலில் பாடவைப்பது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்களாம்.

படத்தைத் தயாரிப்பது சூர்யாவின் உறவினர் ஞானவேல். பருத்திவீரன் படத்தில் அமீரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாரே... அவர்தான் இவர்!

நடிக்க மறுத்த நாயகிகள்!- கருணாஸ் பரபரப்பு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் நாயகனானால் அதை நடிகைகள் விரும்புவதில்லை. என்னுடன் ஜோடியாக நடிக்க மோனிகா, பாமா, அஞ்சலி உள்ளிட்ட பல நாயகிகள் மறுத்துவிட்டனர், என பரபரப்பாக பேட்டியளித்துள்ளார் நடிகர் கருணாஸ்.

நந்தா படத்தில் காமெடியனாக அறிமுகி பின்னர் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியவர் கருணாஸ்.

திண்டுக்கல் சாரதி படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார்.

இப்போது அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்க எந்த கதாநாயகியும் முன்வரவில்லையாம். இதனால் மும்பையைச் சேர்ந்த நவ்னீத் கவுரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதுகுறித்து கருணாஸ் கூறியதாவது:

ரஜினிகாந்தில் இருந்து சத்யராஜ், சரத்குமார் வரை பெரிய நடிகர்கள் எல்லாம் வில்லனாக இருந்துதான் கதாநாயகன் ஆகியிருக்கிறார்கள். வில்லன்கள் கதாநாயகன் ஆகும்போது, நகைச்சுவை நடிகர்கள்நாயகன் ஆகக்கூடாதா? என்ற கேள்வியின் விளைவாகத்தான் கதாநாயகனாக நடிக்கவே முடிவு செய்தேன்.

திண்டுக்கல் சாரதி படத்தை அதன்பிறகுதான் ஒப்புக் கொண்டேன். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க பல கதாநாயகிகள் மறுத்து விட்டார்கள். இறுதியாக, மலையாள நடிகை கார்த்திகா சம்மதித்தார்.

அடுத்ததாக இப்போது, 'அம்பாசமுத்திரம் அம்பானி' படத்தில் நாயகனாக நடிக்கிறேன். ஆனால் இந்தப்படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க ஒரு நடிகையும் முன்வரவில்லை. அட... வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கிற கதாநாயகிகளைக்கூட கேட்டுப்பார்த்தோம். நடிக்க மறுத்து விட்டார்கள்.

'அழகி' படத்தின் மூலம் பிரபலமான மோனிகாவை நடிக்க வைக்கலாம் என்று நான்தான் சொன்னேன். 'அவர், 'சிலந்தி' என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்துவிட்டார். டி.வி. நிகழ்ச்சிகளில் வேறு வருகிறார். எனவே வேண்டாம்' என்றார்கள் தயாரிப்பாளரும்,இயக்குநரும். இருந்தாலும் பரவாயில்லை என்று நான்தான் கூறி, அவரை ஒப்பந்தம் செய்ய அணுகினோம்.

ஆனால் அந்தப் பொண்ணு 'கருணாஸ் ஜோடியாக நடிக்க மாட்டேன்' என்று கூறிவிட்டார்.

அடுத்து 'முனியாண்டி விலாஸ்' பூர்ணா, `'எல்லாம் அவன் செயல்' பாமா, 'ராமன் தேடிய சீதை' ரம்யா நம்பீசன் ஆகியோரையும் நடிக்க கேட்டாம். மறுத்து விட்டார்கள். கடைசியாக, 'கற்றது தமிழ்' படத்தில் கதாநாயகியாக நடித்த அஞ்சலியிடம் கேட்டோம். அவருக்கு இப்போது படங்ககளும் இல்லை. ஆனால் அவரும் நடிக்க மறுத்து விட்டார்.

'கற்றது தமிழ்' படத்தை வாங்கி வினியோகம் செய்தவனே நான்தான். அதனால் இரண்டே கால் கோடி ரூபாய் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. அந்தப் படத்தை நான் ரிலீஸ் செய்திருக்காவிட்டால், அஞ்சலி கதாநாயகியாகவே ஆகியிருக்க முடியாது. அதற்கான நன்றியைத்தான் அந்தப் பொண்ணு இப்படி காட்டிடுச்சி.

நான், எந்த நடிகையிடமும் மடியில் படுத்து கொஞ்ச வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர்களிடம் போய் தேதி கேட்கவில்லை. தனிப்பட்ட முறையில் என் ஒழுக்கம் என்னவென்று எல்லாருக்கும் தெரியும். ஒரு நடிகை கூட என்னை விரல் நீட்டி தப்பாக பேச முடியாது. அப்படி ஒழுக்கமாக இருக்கிறவனுக்கு கதாநாயகிகள் செய்கிற மரியாதையைப் பாருங்க...

இப்போது மும்பை நடிகையான நவ்னீத் கவுரை அம்பாசமுத்திரம் அம்பானிக்காக ஒப்பந்தம் செய்துள்ளோம்... இந்த லட்சணத்துல உள்ளூர் நடிகைக்க எப்படி சான்ஸ் கொடுக்கத் தோணும்...", என்றார் கருணாஸ்.

துபாய் ரசிகர்களிடம் சிக்கித் தவித்த நயனதாரா - பிரபுதேவா

துபாய் சென்ற நயனதாராவும், பிரபுதேவாவும் ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டனர். அவர்களின் முற்றுகையால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

நயனதாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் மலர்ந்து இப்போது கல்யாணத்தில் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் தனி பங்களா ஒன்றில் இருவரும் குடித்தனம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

திருமணச் செய்தியை இருவரும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில், நயனதாராவும், பிரபுதேவாவும் துபாய்க்கு ஜோடியாக சென்றுள்ளனர். துபாயில்தான் நயனதாராவின் அண்ணன் வசிக்கிறார். அவரிடம் பிரபுதேவாவை அறிமுகப்படுத்தவே நயன் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.

துபாய் சென்ற இருவரும் ஜோடியாக ஷாப்பிங் மால் ஒன்றுக்கு போனார்கள். பல்வேறு வகையான அழகு சாதனப் பொருட்கள், செருப்பு உள்ளிட்டவற்றை வாங்கிக் குவித்தார் நயன்.

இந்த நிலையில் தமிழர்கள் அதிகம் இருந்த ஒரு கடைக்குத் தெரியாத்தனமாக போய் விட்டனர். இருவரையும் ஜோடியாக பார்த்த ரசிகர்களுக்கு குஷியாகி விட்டது.

இருவரையும் சூழ்ந்து கொண்டனர். கையில் இருந்த கேமராக்கள், செல்போன் கேமராக்கள் மூலம் இருவரையும் படம் பிடித்துத் தள்ளினர். ஆளாளுக்கு ஆட்டோகிராபும் கேட்டனர். இருவரையும் ஜோடியாக சேர்ந்து நிற்குமாறு கூறி புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால் அதற்கு மட்டும் பிரபுதேவா, நயன் சம்மதிக்கவில்லையாம்.

ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு நீண்ட நேரமாக விடாததால் நயனதாராவும், பிரபுதேவாவும் அங்கிருந்து கிளம்ப பெரும்பாடு பட வேண்டியதாயிற்று.

ஒரு வழியாக அத்தோடு ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு ரசிகர்களின் அன்புப் பிடியிலிருந்து மீண்டு வெளியேறினார்களாம் நயனும், பிரபுதேவாவும்.

விஜய்-50: இயக்குநர் ராஜகுமார்?


விஜய் நடிக்கவுள்ள 50வது படத்தை இயக்குநர் எஸ்.பி. ராஜகுமார் இயக்கப் போகிறார்.

அழகர் மலை படத்தின் இயக்குநர்தான் ராஜகுமார். அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சங்கிலி முருகன் தயாரிக்க, விஜய், தமன்னா ஜோடி போட, வைகைப் புயல் வடிவேலு செமத்தியான காமெடி பண்ணப் போகும் விஜய்யின் 50வது படத்தை ராஜகுமார் இயக்கப் போகிறாராம்.

அழகர் மலையும், சங்கிலி முருகனின் தயாரிப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு இசையமைக்கப் போவது இளையராஜா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் படத்துக்கு இசையமைக்க வருகிறார் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வேட்டைக்காரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இந்தப் படத்தை முடித்து விட்டு தனது 50வது படத்திற்கு வருகிறார் விஜய்.

சங்கிலி முருகனின் கல்யாணி ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தை ஜெயம் ராஜா இயக்கக் கூடும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ராஜகுமாருக்கு அந்த வாய்ப்பு போயுள்ளதாம்.

அழகர் மலை படத்தின் இயக்கம் பிரமாதமாக வந்திருப்பதாக அறிந்த பின்னரே ராஜகுமாரை தேர்வு செய்தாராம் விஜய்.

படத்தின் தலைப்பாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த உரிமைக் குரல் இறுதிக் கட்ட பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது.

விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

விபச்சாரம்: புது நடிகை-2 இயக்குநர்கள் கைது!

சென்னை: சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட புதிய பட கதாநாயகியை மாநகர் போலீச்ர் கைது செய்தனர். அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரு இயக்குநர்களும் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.

சென்னையில் விபசாரத்தில் ஈடுபடுவோரை பிடிக்க விபசார தடுப்பு பிரிவு போலீசார் மீண்டும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வடபழனி பஸ் நிலையம் அருகே இரு திரைப்பட இயக்குநர்கள் இளம்பெண்களின் படங்களைக் காட்டி இளைஞர்களை விபச்சாரத்துக்கு அழைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக மாநகர விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீசார், துணை கமிஷனர் விஜயகுமாரி, உதவி கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையில் சம்பவ இடத்துக்கு கிளம்பினர். அனைவரும் சாதாரண உடையில் களமிறங்கினர்.

அப்போது சுமார் நடுத்தர வயது ஆள் ஒருவர் போலீசாரிடம் சென்று, ரூ 5000 கொடுத்தால் சினிமா நடிகை போன்ற அழகான பெண்னுடன் செக்ஸ் வைத்து உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்தாராம். உடனே ஒப்புக்க கொண்ட போலீசார், அந்த நபரின் காரைப் பின்தொடர்ந்துள்ளனர். சின்மயா நகரில் ஒரு வீட்டின் முன் நின்றது அந்தக் கார்.

உடனடியாக போலீசார் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரிய வந்தது.

விபச்சாரத்தில் வீணா (19) என்ற சினிமா நடிகையும் ஈடுபட்டிருந்தார். இவர் கேரளத்துப் பெண். உனக்காகப் பிறந்தேன் என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். முருகதாஸ் எனும் புதிய படத்தில் நாயகியாகவும் நடிக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் விபசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் வீணா.

"படங்களில் நடிக்க அடிக்கடி சென்னை வந்து செல்வேன்.இப்போது இரு புதிய படங்களில் நடித்துக் கொண்டுள்ளேன். அவற்றில் உனக்காகப் பிறந்தேன் விரைவில் வெளியாக உள்ளது. முருகதாஸ் படப்பிடிப்பில் உள்ளது. அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் விபச்சாரத்தில் ஈடுபட்டேன்..." என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

வீணாவை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக பழம் பெரும் நாடக நடிகரும், சினிமா டைரக்டருமான விஜயகுமார் என்ற விஜயசாரதி (70) மற்றும் மலையாள பட டைரக்டர் ஜோசப் என்ற வர்கீஸ் (38) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

விஜயசாரதியின் சொந்த ஊர் சேலம் ஆத்தூர். இவர் கடந்த 40 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வருகிறார்.

விஜயசாரதி மற்றும் வர்கீஸ் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வீணா, பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஸ்வாதிகா...ஹீரோ மகேந்திரன்!


குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்த மகேந்திரன் இப்போது வாலிபனாகி ஹீரோவாகி விட்டார்.

நாட்டாமை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தொடர்ந்து பாண்டியராஜன் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என 6 மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள மகேந்திரன் இப்போது ஹீரோவாகி விட்டார்.

இடையில், சன் மற்றும் கலைஞர் டிவிகளில் நடந்த நடன போட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் மகேந்திரன். இந்த நிலையில் ஹீரோவாகியுள்ளார்.

மாருதி குளோபல் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் லலிதா காலனி படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் மகேந்திரன். அவருக்கு ஜோடி போடப் போவது ஸ்வாதிகா.

இப்படத்தின் தொடக்க விழா ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது.

இளமை கொப்பளிக்கும் ஸ்வாதிகா, துள்ளலாக காணப்படும் மகேந்திரன் ஜோடி போடும் படம் என்பதால் படத்தில் இளமை ததும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோபம் கொண்ட ராஜா...' பாக்யராஜின் ப்ளாஷ்பேக்


திரையுலகில் தனக்கு முந்தைய சாதனையாளர்கள் பற்றித் தெரிந்து கொள்ளாத எவரும் சாதிக்க முடியாது, என்றார் இயக்குநர் பாக்யராஜ்.

ஏழு புதுமுகங்கள் நடித்துள்ள புதிய படம் புகைப்படம். இந்தப் படத்‌தி‌ல்‌ பு‌துமுகங்‌கள்‌ யா‌மி‌னி‌, பி‌ரி‌யா‌ ஆனந்‌த்‌, மி‌ருணா‌ளி‌னி‌, நந்‌தா‌, அம்‌ஜத்‌, சி‌வம்‌,ஹா‌ரீ‌ஸ்‌, டி‌.கே‌.மதன்‌ ஆகி‌யோ‌ருடன்‌ சண்‌முகசுந்‌தரம்‌, வெ‌ங்‌கட்‌, நீ‌லி‌மா‌, தே‌வகி‌, ஞா‌னசம்‌பந்‌தம்‌, சி‌வபா‌லன்‌, முத்‌துரா‌ஜ்‌ உட்‌பட பலர்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌.

கங்‌கை‌ அமரன்‌ இசை‌யமை‌க்‌க பா‌டல்‌களை‌ நா‌.முத்‌துக்‌குமா‌ர்‌, கவி‌ஞர்‌ வி‌வே‌கா‌, கங்‌கை‌ அமரன்‌, ரா‌ஜே‌ஷ்‌லி‌ங்‌கம்‌ ஆகி‌யோ‌ர்‌ எழுதி‌ உள்‌ளனர்‌. வி‌ஜய்‌ ஆம்‌ஸ்‌ட்‌ரா‌ங்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. படத்‌தொ‌குப்‌பு‌ - பி‌.லெ‌னி‌ன்‌. பிஆர்ஓ பாலன்.

இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

பாடல்களை இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட, இயக்குநர் மகேந்திரன் மற்றும் நடிகர் மோகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் பாக்யராஜ் பேசியதாவது:

சினிமாவில் என்றல்ல... எந்தத் துறையாக இருந்தாலும் பழைய விஷயங்களை, முன்னோடிகளின் சாதனைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் புதிதாகச் சாதிக்க முடியாது.

இலக்கணம் தெரிஞ்சாதான் அதை உடைக்க முடியும். மரபுக் கவிதை தெரிஞ்சாதான் புதுக்கவிதை எழுதமுடுயும்.

என்னை எல்லோரும் திரைக்கதையில் மன்னன் என்கிறார்கள். நான் சிறப்பாக திரைக்கதை அமைப்பதற்கு தூயவன், கலைஞானம் போன்றவர்களை என்னுடன் வைத்துக் கொண்டதுதான் காரணம். அதனால்தான் ஜெயிக்க முடிந்தது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் கங்கை அமரனைப் பார்க்கும் போது எனக்கு பழைய நினைவுகள் வருகின்றன.

நான் முதன்முதலாக இயக்கிய 'சுவரில்லா சித்திரங்கள்' படத்துக்கு இசையமைத்தவர், கங்கை அமரன்தான். அந்த படம் வெற்றி பெற்றது. அடுத்து, என்னுடைய 'மவுனகீதங்கள்' படத்துக்கும் அவர்தான் இசையமைத்தார். அந்த படம் வெள்ளிவிழா கொண்டாடியது. பாடல்கள் படுபிரபலம்.

ஏவி.எம்.நிறுவனத்துக்காக, 'முந்தானை முடிச்சு' படம் செய்தபோது, இசையமைப்பாளராக கங்கை அமரனைத்தான் என்றேன் நான். ஏவி.எம். நிறுவனத்தினர், இளையராஜாவை இசையமைக்க வேண்டும் என விரும்பினார்கள். எனக்கு ராஜாகிட்ட போக தயக்கமாக இருந்தது. ஒரு கட்டத்தில், கங்கை அமரனே என்னிடம் வந்து, 'இந்தப் படத்துக்கு அண்ணன் இசையமைக்கட்டும். நான் அடுத்த படத்துக்கு பண்ணுகிறேன்', என்றார்.

ராஜாவின் கோபம்...

நான், இளையராஜாவிடம் சென்று இசையமைக்கக் கேட்டேன். 'நீ, அமரன் பெயரைத்தானே சிபாரிசு செய்தாய். இப்போ நான் எதுக்கு... அமரே பண்ணட்டும், போய்யா' என்றார். 'அமரன் யார், ஆப்பிரிக்காக்காரரா, உங்க தம்பிதானே...' என்று அவரை சமாதானம் செய்வதற்குள் போதும்...போதும்...என்றாகி விட்டது. ஆனால் இதெல்லாம் ஒரு சுவையான அனுபவங்களாக அமைந்தன. எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்களிடம் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என நினைத்து பெருமைப்படுகிறேன்...', என்றார்.

மகேந்திரன்

இயக்குநர் மகேந்திரன் பேசுகையில், எவ்வளவு பெரிய படம், நட்சத்திரங்கள் நடித்தாலும் திரைக்கதை சரியாக இல்லாவிட்டால் படம் வெற்றிபெற முடியாது, என்றார்.

நடிகர் மோகன், கவிஞர்கள் நா.முத்துக்குமார், விவேகா, இசையமைப்பாளர் கங்கை அமரன், ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங், 'ஆயிரத்தில் ஒருவன்' பட அதிபர் ரவீந்திரன் ஆகியோரும் பேசினார்கள்.

'புகைப்படம்' படத்தின் தயாரிப்பாளர் என்.சி.மணிகண்டன் வரவேற்று பேசினார். இயக்குநர் ராஜேஷ்லிங்கம் நன்றி கூறினார்.

பாப் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்ஸன் மரணம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பாப் இசை உலகின் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்ஸன் இன்று அதிகாலை 2.26 (அமெரிக்க நேரம்) மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 50. அவரது மரணத்தை போலீசாரும், ஜாக்ஸன் குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்டவர் மைக்கேல் ஜாக்ஸன். 1958-ல் அமெரிக்காவின் இந்தியானாவில் பிறந்தார். தனது 9 வயதிலேயே இசைத்துறையில் கால் பதித்த ஜாக்ஸன், வெற்றிகரமான பாப் பாடகராக மேடைகளைக் கலக்க ஆரம்பித்தார். தி ஜாக்ஸன் 5 எனும் பெயரில் தனி இசைக் குழுவைத் தொடங்கிய ஜாக்ஸன், 1970-ல் அந்தசக் குழுவின் சூப்பர் ஸ்டாராகவும், உலக பாப் இசையின் மிகச் சிறந்த பாடகராகவும் பார்க்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது ஜஸ்ட் 12 மட்டுமே.

1972-ம் ஆண்டு 'பென்' எனும் பெயரில் தனது தனி ஆல்பத்தை வெளியிட்டார். 6 வருடங்களுக்குப் பின் தனது முதல் திரைப்படமான 'தி விஸ்'ஸில் நடித்தார்.

பின்னர்தான் தனது நண்பர் ஜோனுடன் இணைந்தார். 1979-ல் ஆஃப் தி வால் மற்றும் 1982-ல் த்ரில்லர் ஆகிய ஜாக்ஸனின் இசை ஆல்பங்கள் சரித்திரம் படைத்தன. ஆஃப் தி வால் ஆல்பம்தான் டிஸ்கோ இசையை உலகம் எங்கும் பிரபலப்படுத்தியது. 10 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகின. அன்றைக்கு உலகையே வாய்பிளக்கச் செய்த சாதனை இது.

த்ரில்லருக்கு மட்டும் 8 கிராமி விருதுகள் கிடைத்தன. உலக இசையின் சக்ரவர்த்தியாக அறிவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன். உலகமே இனம் மொழி நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவரது இசைக்காக உருகியது.

த்ரில்லர் ஆல்பம் மட்டுமே 41 மில்லியன் விற்றுத் தீர்ந்தன. இன்றும் பாப் இசையில் அதிகம் விற்பனையாகும் ஆல்பங்களில் ஒன்றாகவே த்ரில்லர் திகழ்கிறது. இது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.

இசையிலும் கூட நிறவெறி கொண்டிருந்த மேற்குலக நாடுகளில் ஜாக்ஸனின் வருகை ஒரு புதிய விடியலாகத் திகழ்ந்தது. வேறு வழியே இல்லாமல் வெள்ளையர்கள், ஜாக்ஸனைக் கொண்டாடும் அளவுக்கு, இசையை தனது வசப்படுத்திக் கொண்டிருந்தார் ஜாக்ஸன். பணம், வியாபாரம் இரண்டிலும் வெல்பவருக்கே உலகம் சொந்தம்... நிறமும் இனமும் ஒரு பிரச்சினையில்லை என்பதை அவரது முன்னேற்றம் உலகுக்கு எடுத்துச் சொன்னது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புதிய தன்னம்பிக்கை தருவதாகவும் அது அமைந்தது.

1992-ம் ஆண்டு ஹீல் த வேர்ல்டு எனும் அறக்கட்டளையைத் துவங்கினார் மைக்கேல் ஜாக்ஸன். இந்த அமைப்பு மூலம், உடலால் மனதால் நிறவெறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளை செய்வதாக அறிவித்தார்.

ஆதரவற்ற பல சிறுவர்களை இந்த அமைப்பின் மூலம் பராமரிப்பதற்காக அமெரிக்காவில் நெவர்லாண்ட் எனும் பெரிய பண்ணை இல்லத்தை வாங்கினார். அங்கேயே இந்த சிறுவனர்களுடன் பொழுதைக் கழித்தார். இங்குதான் வந்தது வம்பு. சிறுவர்களை அவர் பாலியல் தொந்தரவு செய்வதாக அவர் மீது புகார்கள் எழுந்தன, வழக்குகள் தொடுக்கப்பட்டன, கோர்ட்டுக்கு வெளியே செட்டில்மெண்டுகள் நடந்தன. இந்த சிக்கல்களில் சிக்கித் தவித்த ஜாக்ஸனால் மீண்டும் ஒரு இசை ஆல்பத்தைத் தர முடியாமல் போனது. ஆனாலும் பாப் உலகின் மன்னனாகவே கடைசி வரை அவர் பார்க்கப்பட்டார்.

1994-ல் எல்விஸ் பிரஸ்லேயின் மகள் லிசா மேரியைத் திருமணம் செய்து கொண்டு, தன்மீதான 'சிறுவர் பாலியல் தொந்தரவு' புகார்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முயன்றார். ஆனால் இந்தத் திருமணமும் இரு ஆண்டுகள்தான் நீடித்தது.

லிசா மேரியை விவாகரத்து செய்த கையோடு 1996-ல் டெபி ரோவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகளும் பிறந்தனர். 1999-ம் வரைதான் இந்தத் திருமண உறவும் நீடித்தது. பின்னர் வேறொரு பெண் மூலம் மூன்றாவது குழந்தையும் பிறந்தது அவருக்கு. மூவருமே ஆண் குழந்தைகள். ஜாக்ஸன் மகன்களின் பெயர் மைக்கேல் பிரின்ஸ், மைக்கேல் பிரின்ஸ் 1 மற்றும் மைக்கேல் பிரின்ஸ் 2.

2005-ம் ஆண்டு அனைத்து பாலியல் புகார் வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்ஸன்.

மீண்டும் ஒரு சாதனையைப் படைக்க ஆர்வமாக இருந்த அவர், வரும் ஜூலை 13-ம் தேதி முதல் லண்டன் மற்றும் பிரிட்டனின் குறிப்பிட்ட நகரங்களில் 50 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் தீவிரமான ஒத்திகையும் நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சிகள் மூலம் தனது இமேஜை திரும்பப் பெற முடியும், புதிய இசை ஆல்பத்தை உருவாக்க முடியும் என்று பலமான நம்பிக்கை கொண்டிருந்தார்.

'இறுதித் திரை' எனும் பெயரில் நடக்கவிருந்த இந்த இசை நிகழ்ச்சி இறுதிவரை நடக்காமலே போனது.

ஜாக்ஸன் உடல் நிலை குறித்த வதந்திகள் பல ஆண்டு காலமாகவே இருந்து வருகின்றன. கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவரான அவர் தன் உடல் முழுவதையுமே தொடர் காஸ்மெடிக் சர்ஜரி மூலம் சிவப்பாக மாற்றிக் கொண்டார். முகத்தில் மட்டும் பல முறை காஸ்மெடிக் சிகிச்சை நடந்துள்ளது. இதனால் அவரது முகம் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உரு மாறத் துவங்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த காஸ்மெடிக் சிகிச்சைகளே அவருக்கு தோல் புற்றுநோய் வரவழைத்துவிட்டது என்றும் சொல்கிறார்கள்.

மருத்துவ பரிசோதனைக்காக அவரது உடல் லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது மரணம் இயற்கையானதுதான் என்றாலும், அதை உடனடியாக உறுதிப்படுத்த முடியாது என்றும், ஜாக்ஸன் போன்ற மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்த ஒருவரது மரணத்தை ஆராயாமல் சாதாரணமாக விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த பரிசோதனை என்றும் ஜாக்ஸனின் முன்னால் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Wednesday, June 24, 2009

ஐஸ்வர்யா ராய் மீது வழக்கு!

சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் காற்றாலைக்கு பழங்குடியினர் நிலத்தை சட்டவிரோதமாக வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் நடிகை ஐஸ்வர்யாராய் மீது மகாராஷ்ட்ர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரபல காற்றாலை நிறுவனமான சுஸ்லான் எனர்ஜி மகாராஷ்ட்ராவின் நந்தர்பார் மற்றும் துல் மாவட்டங்களில் காற்றாலைகள் அமைக்க ஏராளமான நிலங்களை வாங்கியது.

பழங்குடி மக்களுக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. அப்படி வாங்கப்பட்ட இந்த நிலங்களில் காற்றாலைகள் அமைக்க அரசின் சலுகைகளைப் பெற்றுக் கொண்ட சுஸ்லான், பின்னர் காற்றாலை அமைக்காமல், நிலங்களை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்களுக்கு எக்கச்சக்க விலைக்கு விற்று லாபம் பார்த்ததாக கூறப்படுகிறது.

எனவே பழங்குடி மக்களை ஏமாற்றி மோசடி செய்து இந்த நிலங்கள் வாங்கப்பட்டிருப்பதாக மகாராஷ்ட்ர அரசு கடந்த முறை சட்ட சபையிலேயே அறிவித்தது நினைவிருக்கலாம்.

நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன், ட்விங்கிள் கன்னா மற்றும் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர் சிங் ஆகியோர் பெயர்களில் இந்த நிலங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மகாராஷ்ட்ர அரசே எழுப்பியுள்ள இந்தப் புகாரின் அடிப்படையில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் மற்றும் அமிதாப் பச்சன்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கரும் இந்த நிலங்களை வாங்கியிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என அவர் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.

பாலிவுட் செக்ஸ் பாம் ராக்கி சாவந்த் சுயம்வரம்-16 பேரை மணக்க ராக்கி விருப்பம்!

தனக்குப் பிடித்த வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய சுயம்வரம் நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பாலிவுட் செக்ஸ் பாம் ராக்கி சாவந்த், அதில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பேரும் தன்னைக் கவர்ந்து விட்டதால் அத்தனை பேரையுமே மணக்க விரும்புவதாக கூறி அதிரடித்துள்ளார்.

ராக்கி சாவ்ந்த் கா சுயம்வர் என்ற பெயரில் சுயம்வர நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் ராக்கி. தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான ரியாலிட்டி ஷோ என இதை அவர் வர்ணித்திருந்தார்.

ராக்கியின் இந்த சுயம்வர அறிவிப்பைக் கேட்டதும் நாடு முழுவதிலுமிருந்து 12,515 பேர் மனு செய்தனர்.

இவர்கள் குறித்து ஆராய்ந்து, பலரை நிராகரித்து, சல்லடை போட்டு சலித்து இப்போது 16 பேரை இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்துள்ளார் ராக்கி. ஆனால் அவர்களில் ஒருவரை தேர்வு செய்ய முடியாமல் குழப்பமாகி விட்டதாம். காரணம், 16 பேரும் பக்கவாக, பர்பக்ட் ஆக இருப்பதால், யாரை விடுவது, யாரை தேர்வு செய்வது என்று அவருக்குப் புரியவில்லையாம்.

இதுகுறித்து செய்தியாளர்களைக் கூட்டி ராக்கி பேசுகையில், மகாபாரத்தில் திரவுபதி இருந்தது போல நானும் மாடர்ன் திரவுபதி ஆக விரும்புகிறேன்.

காரணம், நான் தேர்வு செய்த 16 பேரும் அட்டகாசமானவர்கள். இவர்கள் அனைவரையும் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

உதய்ப்பூரில் நடந்த இந்த சுயம்வரம் நிகழ்ச்சியை நான் நன்றாக அனுபவித்தேன். எனக்கு ஒரு இளவரசியைப் போன்ற எண்ணம் ஏற்பட்டது. உதய்ப்பூரின் இளவரசியாக என்னை நான் நினைத்துக் கொண்டேன். இது மிகச் சிறந்த அனுபவம் என்றார் ராக்கி.

உதய்ப்பூரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் போட்டியாளர்களை தங்க வைத்து ஒவ்வொருவரையும் நேரிலும் பரிசீலித்தார் ராக்கி என்பது குறிப்பிடத்தக்கது.

சிரி சிரி சிரி சிரி ஜோக்

குடும்பம்
எங்க எம்.டி ஒரு செண்டிமென்டல் டைப். குடும்பம் மாதிரி பழகுவார்.
அப்படியா?
ஆமாம், அவர் ஊருக்கு போற அன்னிக்கு யாரும் எண்ணெய் தேச்சு குளிக்கக் கூடாதுன்னு சர்குலர் அனுப்பினார்னா பாத்துக்கயேன்!

அரசு அ‌திகா‌ரி

அ‌ங்க எ‌ன்ன அ‌வ்ளோ கூ‌ட்ட‌ம்
ஒரு அரசு அ‌திகா‌ரியோட ‌வீடு அது.
அ‌ந்த அ‌திகா‌ரி ரொ‌ம்ப கடமை உண‌ர்‌ச்‌சி ‌மி‌க்கவ‌ர்னு ‌நினை‌க்‌கிறே‌ன்.
‌ நீ வேற.. அலவலக‌த்துல ரெ‌ய்டு அது இது‌ன்னு வ‌ர்றதால ‌வீ‌ட்லயே எ‌ல்லா வேலையையு‌‌ம் முடி‌ச்‌சிடுவா‌ர்.

கேவல‌ப்படு‌த்துறா‌ங்க

ப‌ன்‌றி : ம‌க்க‌ள் ந‌ம்மல ரொ‌ம்ப கேவல‌ப்படு‌த்துறா‌ங்க டா ம‌ச்சா‌ன்
எ‌லி : ஏ‌ன்டா அ‌ப்படி சொ‌ல்ற?
ப‌ன்‌றி :பி‌ன்ன எ‌ன்னடா? அவ‌ங்களு‌க்கு வ‌ர்ற கா‌ய்‌ச்சலு‌க்கு எ‌ல்லா‌ம், ப‌ன்‌‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல், எ‌லி ஜூர‌ம்,சி‌‌க்க‌ன் கு‌னியா‌ன்னு ந‌ம்ம பெயர வை‌க்‌கிறா‌ங்க.

பாட‌ம்

ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு
சிறுவன் : நீங்க பாட‌ம் நட‌த்‌தி முடி‌‌ச்சது‌ம் அவனே எழு‌ந்து‌க்குவா‌ன்

உலகம் உருண்டை

ஆ‌சி‌ரியர் : உலகம் உருண்டைன்னு எப்படி நிரூபிப்பே.
சிறுவன் : நா‌ன் ஏ‌ன் ‌நிரூ‌பி‌க்கணு‌ம். நா‌ன் ஒ‌ண்ணு‌ம் அ‌ப்படி சொ‌ல்ல‌லியே

முட்டாள்
ஆ‌சி‌ரியர் : உ‌ங்க‌ள்ல முட்டாள்னு யாராவது ‌நினை‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌ந்தா எழுந்து நில்லுங்க.
வெகு நேரம் கழித்து ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
ஆ‌சி‌ரிய‌ர் : நீ ஏன் உன்னை முட்டாள்ன்னு நினைக்கிறே.

மாணவன் : நான் அப்படி நினைக்கலே. நீங்க தனியா நிக்கறத பார்க்க பாவமா இருந்தது. அது தான்.

காதலிப்பது எப்படி ? கண்ணோடு கண் பார்க்க விதிமுறைகள்


காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் காதலர்களுக்கு கண் இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்த்துத்தான் காதலிக்கிறார்கள்.

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் மட்டுமே காதல் மலர்கிறது. அண்ணல் நோக்குவதில்தான் முக்கிய விஷயமே இருக்கிறது.

அதற்குத்தான் சில விதிமுறைகளை இங்கு கொடுக்கின்றோம்.

கண்ணோடு கண் பார்த்தல் என்பதே காதலுக்கு நல்லது. பெண்களின் பிற பாகங்களை ஆர்வமாகப் பார்ப்பது பெண்ணுக்கு கோபத்தை உண்டாக்கிவிடும்.

இயல்பாக பார்க்க வேண்டுமேத் தவிர, பார்வையிலேயே விழுங்கிவிடுவதைப் போல் ஆர்வம் காட்டக் கூடாது.

பார்வை நம் மீது இல்லாத நேரங்களிலும் நாகரீகமான பார்வை மட்டுமே காட்ட வேண்டும்.

பார்வையில் அன்பு தெரிய வேண்டும்.

பேச ஆரம்பிக்கலாமா என்பது போல அனுமதி கேட்கும் தொணியில் உங்களது பார்வை அமைய வேண்டும்.

முதலில் நீங்கள் விரும்புபவரைப் பார்க்கும் போது, அவர் இன்று அழகாக இருப்பதை பாராட்டுவது போல் உங்கள் பார்வை இருக்க வேண்டும்.

காதல் பார்வை பற்றி பெண்கள் கூறிய கருத்துக்களை இங்கு கூறுகிறோம்..

முதல் பார்வையிலேயே காதல் வரவில்லை. ஆனால் அடுத்தடுத்து அவர் பார்த்த சமயங்களில் ஏதோ ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டது உண்மை. அவர் பார்வையில் இரு‌ந்த காதலும், அன்பும் அவர் மீது மரியாதை, நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது எ‌ன்ற பெரு‌ம்பாலான பெ‌ண்க‌ள் கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

ஆனால் பெரும்பாலான ஆண்கள் முதல் பார்வையிலேயே பெண் மீது காதல் வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள்.

பெண் சாதாரண பார்வை மூலமாகவே ஆணை காதலில் விழச் செய்துவிட முடியும்.

ஆனால் ஆண் பெண்ணை காதலில் விழச் செய்வதற்கு கொஞ்சம் கூடுதலாகவே உழைக்க வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை.

நன்றி : காதலிப்பது எப்படி?

Tuesday, June 23, 2009

இறுதி கட்டத்தில் கண்டேன் காதலை!

தமிழில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள மோசர் பேரின் 'கண்டேன் காதலை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது.

ஜி தனஞ்செயன் தயாரிக்க, ஆர் கண்ணன் இயக்கும் இந்தப் படம், இந்தியில் சூப்பர்ஹிட்டான ஜப் வி மெட் படத்தின் ரீமேக் ஆகும். பரத் - தமன்னா முதல் முறையாக இந்தப் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். படம் வெளிவருவதற்கு முன்பே இந்த ஜோடி குறித்த பரபரப்பான செய்திகள் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது, படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி, பழனி, கொடைக்கானல் என தமிழகத்தின் எழில் கொஞ்சும் பகுதிகளில் வெளிப்புறப்படப்பிடிப்பு நடந்துள்ளது. சில காட்சிகள் மட்டும் சென்னையில் படமாக்க வேண்டியுள்ளதாம்.

இறுதிக் கட்டப் படப்பிடிப்பு ஜூலை 8-ம் தேதி துவங்கி மாத இறுதிக்குள் முடிந்துவிடும் எனத் தெரிகிறது.

'கண்டேன் காதலைப் பொறுத்தவரை எல்லாமே திட்டமிட்டபடி சரியாக நடக்கிறது. ஆகஸ்டில் படத்தின் ஆடியோ ரிலீஸை வைக்கத் திட்டமிட்டுள்ளோம்', என்கிறார் தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு கதாநாயகியின் தாத்தா வேடத்தில் நடிக்கிறார் பழைய நடிகர் ரவிச்சந்திரன். மனோபாலா, தீபா வெங்கட், சபன் சரன், முன்னா, சந்தானம் என பெரிய நட்சத்திரக் கூட்டமே உண்டு படத்தில்.

வித்யாசாகர் இசையமைத்துள்ளார், பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். மோசர் பேருடன் இணைந்து ப்ளூ ஓஷியன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

பணம் பறித்த வழக்கில் ஸ்லம்டாக் மில்லியனர் பட நடிகர் கைது

தாதா சோட்டா ஷகீலின் தம்பி என்று கூறிக் கொண்டு மும்பையைச் சேர்ந்த ஒரு ஆடை வடிவமைப்பாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த நடிகர் அஜீத் பாண்டே என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

பிரபல தயாரிப்பாளர் ராமானந்த் சாகரின் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்புப் பிரிவு தலைவராகவும், ஆடை வடிவமைப்பு இயக்குநராகவும் பணியாற்றி வருபவர் பாதிக்கப்பட்ட அந்த நபர்.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஜாவேத் கூன் என்ற கேரக்டரில் நடித்தவர்தான் அஜீத் பாண்டே. டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இயக்குநரை அணுகிய அவர் தனது பெயர் இர்பான் ஹுஸ்ரி என்றும், சோட்டா ஷகீலின் தம்பி எனவும் கூறி மிரட்டியுள்ளார். அஜீத் பாண்டே என்பவருக்கு தொடர்களில் நடிக்க வாய்ப்பு தர வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து இணை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா கூறுகையில், பாதிக்கப்பட்ட நபரரை அணுகிய பாண்டே, தன்னை ஹூஸ்ரி என்று அறிமுகப்படுத்தியுள்ளார். சோட்டா ஷகீலின் தம்பி என்றும் கூறியுள்ளார். அஜீத் பாண்டேவுக்கு நடிக்க வாய்ப்பு தருமாறும் மிரட்டியுள்ளார்.

ஆனால் அப்படியெல்லாம் திடீரென யாருக்கும் வாய்ப்பளிக்க முடியாது என அந்த இயக்குநர் கூறவே, அப்படியானால் ரூ. 20 லட்சம் கொடு, இல்லாவிட்டால் உயிருடன் இருக்க முடியாது என்று மிரட்டியுள்ளார். பின்னர் அவர் போய் விட்டார்.

இதுகுறித்து அந்த இயக்குநர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தினர். இயக்குநரின் செல்போனில் முன்பு பேசியிருந்தார் பாண்டே. அதை வைத்து எங்கிருந்து போன் வந்தது என்பதை அறிந்தோம்.

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா என்ற இடத்தில் அந்த போனுக்கான சிம் கார்டு வாங்கப்பட்டிருந்தது. அஜீத் பாண்டேதான் தனது பெயரில் அதை வாங்கியிருந்தார் என்றும் தெரிய வந்தது.

இதையடுத்து பாண்டேவுக்கு வலை விரிக்கப்பட்டது. பயந்தார் ரயில் நிலையத்தில் வைத்து பாண்டேவை போலீஸார் கைது செய்தனர் என்றார் ராகேஷ் மரியா.

ஜெய் ஹனுமான் உள்ளிட்ட சில முக்கிய சீரியல்களில் நடித்தவராம் இந்த பாண்டே.

நடிக்க வாய்ப்பு கேட்டு தாதாவின் பெயரை பயன்படுத்திய பாண்டே இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உயிர் தப்பிய நடிகை யமுனா!


சென்னை: நடிகை யமுனாவின் கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் நடிகை யமுனா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

பொறந்த வீட்டுப் பட்டுப் புடவை, மௌனப் போராட்டம் போன்ற படங்களில் நடித்தவர் யமுனா. இப்போது அரவிந்தராஜ் இயக்கத்தில் அம்மன் எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் இது.

இந்தத் தொடரின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்து வந்தது. நேற்று படப்பிடிப்பை முடித்துக் கொண்டு பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார் யமுனா.

கரூர் அருகே அவரது கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு டேங்கர் லாரி மோதியது. மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரியத் துவங்கியது. உடனடியாக காரிலிருந்து குதித்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் யமுனா.

ஆனால் அந்தக் கார் முற்றாக எரிந்துபோனது. கார் டிரைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. யமுனாவும் டிரைவரும் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

'அம்மன் தொடரில் நடித்து வரும் என்னை அந்த அம்மன்தான் இவ்வளவு பெரிய விபத்திலிருந்து காப்பாற்றினார்' என யமுனா நிருபர்களிடம் தெரிவித்தார்.

இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திற்கு ஜமாத் பேரவை கண்டனம்


நபிகள் நாயகத்தின் பெயரை பட விளம்பரத்திற்குப் பயன்படுத்திய செயல் கண்டனத்துக்குரியது என்று ராஜாதி ராஜா பட இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திற்கு, சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை பொதுச் செயலாளர் மேலை நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜாதி ராஜா படம் சமீப காலமாக பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறது.

முதலில் இப்படத்தை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் நடிகை சுஹாசினி. இதற்குக் கண்டனம் தெரிவித்த ஷக்தி சிதம்பரம், சுஹாசினியின் கணவர் மணிரத்தினம் மட்டும் காப்பி அடிக்காமலா படம் எடுக்கிறார் என்று விளாசியிருந்தார்.

இந் நிலையில் ராஜாதி ராஜா படம் தொடர்பான விளம்பரங்கள் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன.

மற்ற படங்களையும், நடிகர்களையும் கிண்டல் செய்வது போல ராஜாதி ராஜ பட விளம்பரங்கள் இருப்பதாக ஏற்கனவே திரையுலகில் முனுமுனுப்பு நிலவுகிறது.

இந் நிலையில் மதச் சிக்கலில் மாட்டியுள்ளார் ஷக்தி சிதம்பரம். சில நாட்களுக்கு முன்பு இயேசு நாதர் படத்தைப் போட்டு, சிலுவைன்னா ஏசு, ராஜான்னா மாஸு என்று ஒரு விளம்பரம் வந்தது.

அதேபோல விஷ்னுன்னா அவதாரம், ராஜான்னா ஆரவாரம், ஐயப்பன்னா பள்ளிக்கட்டு, ராஜான்னா ஜல்லிக்கட்டு என்று குண்டக்க மண்டக்க விளம்பரத்தைக் கொடுத்துத் தள்ளியிருந்தனர்.

இந் நிலையில் தற்போது நபிகள் நாயகத்தின் பெயரையும் தனது விளம்பத்தில் சேர்த்து சிக்கலில் மாட்டியுள்ளார் ஷக்தி சிதம்பரம்.

இதற்கு சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. அமைப்பின் பொதுச் செயலாளர் மேலை நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நேற்று தமிழகத்தில் முன்னணி செய்தித்தாள்களில் சினிமா விளம்பரம் பகுதியில் ராஜா [^]தி ராஜா என்ற திரைப்படத்தின் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

அதில் மெக்கா, மதினா' படத்தை ஒரு பகுதியிலும், அந்த திரைப்படத்தின் ஹீரோ படத்தை ஒரு பகுதியிலும் பிரசுரித்து, ஒரு அவதூரான வசனத்தையும் சேர்த்து வெளியாகியுள்ள விளம்பரம் ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்துகின்ற செயலாக உள்ளது.

இச்செயலை செய்த படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால், சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதேபோல, சென்னை சுன்னத் வல் ஜமாஅத் மசூதி கூட்டமைப்புத் தலைவர் முகம்மது சிக்கந்தரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குனர் ஷக்தி சிதம்பரம் உடனடியாக இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கிருஷ்ணலீலை – ஒரு தாயின் சபதம்


கவிதாலயா தயா‌ரிப்பில் ‌ஜீவன் நடிக்கும் படம், கிருஷ்ணலீலை. படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஸெல்வன் படத்தை இயக்கியிருக்கிறார்.

ஜீவனின் ப்ளேபாய் இமேஜை மாற்றுவதாக கிருஷ்ணலீலை இருக்கும் என்றார் ஸெல்வன். தனது தாயின் சபதத்தை நிறைவேற்றுகிறவராக இதில் நடித்திருக்கிறார் ‌‌ஜீவன்.

கலெக்டர் அலுவலகம் அருகில் டீக்கடை வைத்திருப்பவர் ‌‌ஜீவனின் தாய். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மனுக்கள் பொட்டலம் கட்ட ‌ஜீவனின் தாயின் கடைக்கு வருகிறது. இது சிறுவனான ‌‌ஜீவனை உறுத்துகிறது. மனுக்களை எடுத்துக் கொண்டு கலெக்டர் அலுவலம் செல்கிறார் ‌ஜீவன். இது பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

கோபமாகும் கலெக்டா ‌ஜீவனின் தாயின் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்துகிறார். காயப்படும் அந்த தாய், என்னுடைய மகனையும் கலெக்டராக்கி இந்த அநியாயங்களை தட்டி கேட்பேன் என்கிறார். அதன்படி ‌ஜீவனை படிக்க வைத்து கலெக்டராக்குகிறார். கலெக்டராகும் ‌ ஜீவன் அநியாயங்களை தட்டிக் கேட்பார் என நீங்களே ஒரு ஸ்கி‌ரின்ப்ளே எழுதினால் ஏமாந்தீர்கள்.

மாவட்ட ஆட்சியாளராவார் என்று எதிர்பார்த்த ‌‌ஜீவன் ஆக்டராகிறார். நடிகராக இருந்து கொண்டே அவர் தாயின் சபதத்தை எப்படி நிறைவேற்றுகிறார், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது கிருஷ்ணலீலை.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தை ‌ரிலீஸ் செய்யும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.

தமிழ் ஸ்டுடியோவின் மடல்விடு தூது

தமிழ் கலாசார சூழலில் சில ஆச்ச‌ரியமான விஷயங்களை செய்து வருகிறது தமிழ் ஸ்டுடியோ டாட் காம். குறும் படங்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் இவ்‌விணையதளம் மடல் எழுதுங்கள்... ப‌ரிசை வெல்லுங்கள் என்ற பெய‌ரில் போட்டியொன்றை அறிவித்திருக்கிறது.

தகவல் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்தக் காலத்தில் மடல் எழுதுவது… அதாவது கடிதம் எழுதுவது என்பது அருகிவிட்டது. சுத்தமாக இல்லை என்றே கூறலாம். மடல் எழுதுவது என்பது தொலைபேசியில் பேசுவது போல செய்திகளை தெ‌ரிவிப்பது மட்டுமல்ல. அது ஒரு இலக்கிய வடிவம். புகழ்பெற்ற இலக்கிய மேதை காப்காவின் கடிதங்கள் அவரது படைப்புகளுக்கு நிகராக போற்றப்படுகின்றன. மேலும், மனங்கள் நேரடியாக பேசுவதற்கு ஒப்பானது மடல் எழுதுவது. அதற்கு இணையாக கூறுவதற்கு வேறு தொழில்நுட்ப ஊடகங்கள் ஏதுமில்லை.

வேகமாக அழிந்துவரும் மடல் எழுதும் கலாசாரத்தை மீட்டெடுக்க ஒவ்வொரு மாதமும் மடல் எழுதும் போட்டியை தமிழ் ஸ்டுடியோ நடத்துகிறது. சிறந்த மடல் எழுதியவருக்கு ரூபாய் 500 ப‌ரிசாக அளிக்கப்படும். மேலும், இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடிக்கும் மடல்களை எழுதியவர்களும், முதல் ப‌ரிசு பெறுகிறவரும் தமிழின் முன்னணி எழுத்தாளர் ஒருவருடன் சந்தித்து உரையாட ஏற்பாடு செய்யப்படும். இந்த சந்திப்பு மாலை நேர தே‌நீர் உரையாடலாக இருக்கும்.

மாதந்தோறும் நடக்கும் குறும்பட வட்டத்தில் மடல்கள் அவற்றை எழுதியவராலேயே வாசிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு எம்.அருண், 349, கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், சென்னை 96 என்ற முகவ‌ரியில் தொடர்பு கொள்ளலாம்.

விவேக் ஹீரோவாகும் நான்தான் பாலா


சேது, நந்தா படங்களுக்குப் பிறகு வார இதழ் ஒன்றில் தனது வாழ்க்கைக் கதையை இவன்தான் பாலா என்ற பெய‌ரில் எழுதினார் இயக்குனர் பாலா. அந்த டைட்டிலை சிறிது மாற்றி நான்தான் பாலா என்ற பெய‌ரில் ஒரு படம் தயாராகிறது.

விவேக் மற்றும் புதுமுகம் ஜே.வி. இதில் ஹீரோக்களாக நடிக்கின்றனர். கொண்டித்தோப்பு சுப்பு படத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கும் விவேக், மகனே என் மருமகனே படத்தில் இரு ஹீரோக்களில் ஒருவராக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலஷ்மி கலா புரொட‌க்சன் தயா‌ரிக்கும் இந்தப் படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார். சாமி படத்தில் காமெடிக்காக போட்ட அக்ரஹாரத்து வேஷத்தை இந்தப் படத்தில் ஹீரோயிசமாக மாற்றியிருக்கிறார் விவேக். அக்ரஹாரத்தைச் சேர்ந்த பாலா என்கிற கேரக்ட‌ரில் விவேக்கும, அடியாள் பூச்சியாக ஜே.வி.யும் நடிக்கின்றனர். இவர்கள் இடையே நடக்கும் கண்ணாமூச்சி ரேரே தான் கதை.

கஞ்சா கருப்பு, மயில்சாமி, சார்லி, சரண்யா, நாசர் ஆகியோரும் நடிக்கிறார்கள். முல்லை செல்வரா‌ஜ் வசனம் எழுதுகிறார். இசை வித்யாசாகர். வாலி, வைரமுத்து பாடல்கள் எழுதுகின்றனர். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஒரு படம் பத்து காதல்கள்


ஒரு காதலை சொல்வதற்கே நாக்கு தள்ளிப் போகிறது. இதில் பத்து காதல்களை வைத்து படமெடுக்கிறார்கள். அந்த பத்தரைமாற்று தங்கம், திரைப்படக் கல்லூ‌ரி மாணவர் ஆர்.வி.பார்த்திபன்.

பத்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் (இவர்கள் அனைவரும் இறுதியாண்டு படிப்பவர்கள்) பத்து முதலாமாண்டு மாணவிகளை காதலிக்கிறார்கள். இதுதான் படத்தின் கதை. இதனை எழுதியிருப்பவரும் ஒரு பொறியியல் கல்லூ‌ரி மாணவிதான். பெயர் ஏ.நிர்மலா. படத்தின் வசனத்தையும் இவரே எழுதியிருக்கிறார்.

படத்துக்கு தேவைப்படும் பத்து ஹீரோக்களையும் சென்னை, தேனி, கோவை என்று வெ‌வ்வேறு ஊர்களிலிருந்து பொறுக்கி எடுத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பொறியியல் கல்லூ‌ரி மாணவர்களாம். மாணவிகளாக நடிக்க ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.

படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறவர் திரைப்படக் கல்லூ‌ரி மாணவர் நிர்மல் ரா‌ஜ். ராகவ் என்பவர் இசையமைக்கிறார். தாமரை, நா.முத்துக்குமார், லலிதானந்த் பாடல்கள் எழுதுகின்றனர். படத்துக்கு உன் வருகைக்காக ஆனந்தி என பெயர் வைத்துள்ளனர்.

முன்பு திரைப்படக் கல்லூ‌ரி மாணவர்கள் வித்தியாசமான படங்களை எடுத்தனர். இப்போது ஒன்றுக்கு பத்து காதலை சொல்வதை வித்தியாசம் என நினைக்கின்றனர். ம்... சிலபஸை சேஞ்ச் பண்ணியாகணும்.

ஒரு நடிகை உருவாகிறார்

இசையருவி தொலைக்காட்சியில் அனைவருக்கும் பிடித்தமான காம்பியரர் மகேஸ்வ‌ரி பெ‌ரிய திரைக்கு வந்திருக்கிறார்.

சின்னத்திரை கலைஞர்கள் பெ‌ரிய திரைக்கு வருவது சகஜம். அப்படிதான் மகேஸ்வ‌ரியும் பெ‌ரிய திரையில் நுழைந்திருக்கிறார். இவர் தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

பெரும் பொருட் செலவில் தாணு தயா‌ரித்துவரும் கந்தசாமியில் ஹீரோயின் ஸ்ரேயாவின் தோழியாக வருகிறார் மகேஸ்வ‌ரி. என்னுடைய கே‌ரிய‌ரில் மிகப் பெ‌ரிய வாய்ப்பு. இயக்குனர் சுசி.கணேசனுக்குதான் நன்றி சொல்ல வேண்டும் என்று உணர்ச்சிவசப்படுகிறார்.

மகேஸ்வ‌ரி நடிக்கும் இன்னொரு படம் ஓடிப்போலாமா. சங்கீதாவின் தம்பி ப‌ரிமள் ஹீரோ. சந்தியா ஹீரோயின். சந்தியாவுக்கு இணையான வேடத்தில் மகேஸ்வ‌ரி.

ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன், ஒரு பாடலுக்கு ஆடமாட்டேன் என்றெல்லாம் விதிமுறை பேசுவதில்லை மகேஸ்வ‌ரி. குயில் படத்தில் இவர் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.

எந்த வேடம் வந்தாலும் நடிக்க‌த் தயார் என்று திறந்த புத்தகமாக இருப்பதால் இவரைத் தேடி வாய்ப்புகள் குவிகிறது. இப்போது செய்தியின் தலைப்பை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.

தேவைப்பட்டால் போராட்டம் - விஜய் அதிரடி


என்னுடைய கல்யாண மண்டபத்தை இப்போ பார்த்தா மினி ஹாஸ்பிடல் போலவே இருக்கு. மகிழ்ச்சியும், பரவசமுமாக நடிகர் விஜய் இதை சொன்ன இடம் அவரது வடபழனி ஜேஎஸ் திருமண மண்டபம். இலவச மருத்துவ ஆலோசனை, இலவச சிகிச்சை, ரத்ததானம் என உண்மையிலேயே மினி ஹாஸ்பிடல் போலதான் இருந்தது திருமண மண்டபம்.

என்னுடைய ரசிகர்கள் தங்கள் தகுதிக்கு மீறி நல்ல விஷயங்கள் செய்றாங்க என்று பேச்சைத் தொடங்கினார் விஜய். அவரது பிறந்தநாள் குறித்து கேட்டதற்கு, ‘மற்ற பிறந்தநாட்களை விட இந்த பிறந்த நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன். இந்த பிறந்த நாளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை திறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை நிறைவேற்றியும் இருக்கிறேன்’ என்றார்.

அரசியல் கட்சி தொடங்கப் போகிறீர்களா?

நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் ரொம்ப நாட்களாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்யலாம் என்ற அவர்களின் கருத்தை நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். அரசியலுக்கு வரலாமா என கருத்து கேட்டது உண்மைதான். மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தினேன்.

ரசிகர்களிடம் மட்டுமில்லாது பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்டேன். அவர்கள் எனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்கள். அதை என் மூளையில் ஏற்‌றிக் கொண்டு என்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அவர்கள் கருத்து‌ப்படி இப்போது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டேன். அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.

உங்கள் ரசிகர்களை இனி தொண்டர்கள் என்று அழைக்கலாமா?

அவர்கள் எப்போதோ தொண்டர்களாகிவிட்டார்கள்.

அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக உங்களுக்கு மிரட்டல் ஏதாவது வந்ததா?

இல்லை. யாரும் மிரட்டுற அளவுக்கு நான் சீன் காட்டவில்லையே. இப்படியே மிரட்டல் வந்தாலும் அதை எதிர்கொள்வேன்.

மக்கள் இயக்கம் ஆரம்பித்திருக்கிறீர்கள், பொதுப் பிரச்சனைக்காக போராடுவீர்களா?

என்னுடைய ரசிகர்கள் இனி உள்ளூர் பிரச்சனைக்காக போராடுவார்கள். தேவைப்பட்டால் அந்த போராட்டங்களில் நானும் கலந்து கொள்வேன்.

வேட்டைக்காரன் எப்போது வெளியாகிறது?

70 சதவீத படப்பிடிப்பு இதுவரை முடிந்திருக்கிறது. தீபாவளிக்கு படம் வெளிவரும். என்னுடைய ஐம்பதாவது படத்தை சங்கிலி முருகன் தயா‌ரிக்கிறார். இயக்குனர் யார், ஹீரோயின் யார் என்பதை வேட்டைக்காரன் முடிந்த பிறகு முறைப்படி அறிவிப்பேன்.

பத்தி‌ரிகையாளர்கள் மீண்டும் அரசியல் பற்றி கேட்கவே, மைக்கை ஆஃப் செய்த விஜய், அன்னதானம் செய்ய வேண்டியிருக்கு என்று அங்கிருந்து கிளம்பினார். முன்னதாக ரங்கராஜபுரம் மற்றும் அருணாச்சலம் ரோடு ஆகிய இரு இடங்களில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களை அவர் தொடங்கி வைத்தார்.

அழகான பொண்ணு நமிதா


எல்லோரும் மறந்திருந்த வேளையில் அதிரடியாக நினைவுப்படுத்தினார் இயக்குனர் திரு. எதை என்று சொல்வதற்குமுன் ஒரு கேள்வி. நமிதா நடித்த அழகான பொண்ணுதான் படம் நினைவிருக்கிறதா?

நினைவு இல்லையென்றாலும் பரவாயில்லை. அந்தப் படத்தைதான் சில நாட்கள்முன் நினைவுப்படுத்தினார் திரு.
webdunia photo WD

திருவின் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் அழகான பொண்ணுதான். நமிதா படத்தின் ஹீரோயின். ராஜ கார்த்திக் என்ற பதினெட்டு வயது பாலகன் நாயகன். நாற்பது பிளஸ் வயதுள்ள நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நமிதாவுக்கு பதினெட்டில் ஹீரோவா? ஆச்ச‌ரியப்பட்டவர்களை, படத்தின் கதையே அதுதான் என்று மேலும் ஆச்ச‌ரியப்படுத்தினார் திரு.

படத்தில் பழங்குடி பெண்ணாக வருகிறார் நமிதா. அவர்கள் இனத்திலேயே நமிதாதான் பேரழகி. அவரை பதினெட்டு வயது இளைஞன் காதலிக்கிறான். அதில் ஏற்படும் பிரச்சனைகள் கதை.

படத்தை ஆடம்பரமாகதான் தொடங்கினார்கள். ஆனால், தொடங்கங்கியதோடு ச‌ரி. அதன்பிறகு படம் குறித்து எந்த தகவலுமில்லை. இந்நிலையில் சில நாட்கள் முன் பத்தி‌ரிகையாளர்களிடம் படம் குறித்து திரு பேசினார்.

படம் ஏறக்குறைய முடிந்துவிட்டதாகவும், அடுத்த மாதம் படம் திரைக்கு வந்துவிடும் என்றும் அப்போது அவர் தெ‌ரிவித்தார். படத்துக்கு சுந்தர் சி.பாபு இசையமைத்துள்ளார். கே.வி.சுரேஷ் கேமரா. கவர்ச்சிக்காக இல்லாமல் நமிதாவை நடிப்புக்காக ஒப்பந்தம் செய்ததாகவும் அவர் தெ‌ரிவித்தார். படம் வரும்போது பார்க்கத்தானே போகிறோம்.

அச்சமுண்டு இயக்குநரை பாராட்டிய டேனி பாய்ல்!

தான் திரைப்படம் எடுக்க வந்ததன் பலனை ஒரே படம் மூலம் கிட்டத்தட்ட அடைந்தேவிட்டார் அச்சமுண்டு அச்சமுண்டு இயக்குநர் அருண் வைத்தியநாதன்.

ஆம்... தனது ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்காக சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7 ஆஸ்கார் விருதுகள் வாங்கிய பிரபல ஆங்கிலப்பட இயக்குநர் டேனி பாய்ல், ஷாங்காய் திரைப்பட விழாவில் பங்கேற்ற அருண் வைத்தியநாதனை வாழ்த்திப் பாராட்டியுள்ளார்.

சினேகா, பிரசன்னா நடித்துள்ள அச்சமுண்டு அச்சமுண்டு படம், முழுக்க முழுக்க ரெட் ஒன் கேமிராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனால் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

சமீபத்தில் ஷாங்காய் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. விழாவுக்கு வந்திருந்தவர்கள் படத்தைப் பெரிதும் பாராட்டி வாழ்த்தினர். அப்படி வாழ்த்தியவர்களில் முக்கியமானவர் ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் இயக்குநர்.

படம் நன்றாக உள்ளதாகவும், படக் குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் அவர் இயக்குநர் அருண் வைத்தியநாதனிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் வெளியிடவிருப்பதாக படத்தின் பிஆர்ஓ நிகில் முருகன் தெரிவித்துள்ளார்.

தணிக்கைக் குழுவினர் இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

'அக்ஷய் நல்ல கிஸ்ஸர்!'-டெனிஸ்

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நல்ல கிஸ்ஸர் என்று சான்றிதழ் கொடுத்துள்ளார் ஹாலிவுட் நடிகையும், முன்னாள் ஜேம்ஸ் பான்ட் பட நாயகியுமான டெனிஸ் ரிச்சர்ட்ஸ்.

அக்ஷய் குமார், கரீனா கபூர் இணைந்து நடித்துள்ள படம் கம்பக்த் இஷ்க். இப்படத்தில் டெனிஸ் ரிச்சர்ட்ஸும் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சிலாகித்து கூறுகிறார் டெனிஸ்.

அக்ஷய் குமார் மிகவும் சிம்பிளாக இருக்கிறார். எளிமையாக பழகுகிறார். மிகவும் திறமையானவர். அவருடைய திறமை பாலிவுட்டில் வேறு யாருக்கும் இருக்காது என்று நினைக்கிறேன்.

எனக்கு மிகவும் உதவிகரமாக, தோழமையாக இருந்தார். முக்கியமாக நன்கு கிஸ் அடிக்கிறார். அதனால்தான் இந்தியாவின் செக்ஸி நடிகராக அவர் திகழ்கிறார் என நினைக்கிறேன்.

ஆரம்பத்தில் இந்தியில் பேசுபவர்களைப் பார்த்தாலே பயமாக இருந்தது. மொழி எனக்கு புரிபடவில்லை. இருந்தாலும் என்னுடன் நடித்த சக கலைஞர்கள் உதவிகரமாக இருந்தார்கள். இன்னொரு பாலிவுட் படத்திலும் நடிக்க ஆசையாக இருக்கிறது என்றார் டெனிஸ்.

டெனிஸ் 1999ம் ஆண்டு வெளியான தி வேர்ல்ட் இஸ் நாட் இனப் படத்தில் ஜேம்ஸ் பாண்ட்டின் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் டெனிஸ் மட்டுமல்ல சில்வர்ஸ்டர் ஸ்டாலோன், பிரான்டன் ரூத் ஆகியோரும் கூட இருக்கிறார்கள்.

பெரும் பொருட் செலவில் தயாராகியுள்ள ஜூலை 3ம் தேதி கம்பக்த் இஷ்க் ரிலீஸாகிறது.

ரஜினியால் அதிர்ஷ்ட நடிகையானேன்! - ஸ்ரேயா பேட்டி

ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி எல்லோரும் என்னை ஓரம் கட்டினார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி சார்தான் என்னை அதிலிருந்து காப்பாற்றி அதிர்ஷ்டசாலி நடிகையாக்கினார்", என்கிறார் நடிகை ஸ்ரேயா.

இதுகுறித்து சமீபத்தில் ஸ்ரேயா அளித்த பேட்டி:

நான் அறிமுகமானது எனக்கு 20 உனக்கு 18 படத்தில்தான். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. அடுத்து ஜெயம் ரவியுடன் 'மழை' படத்தில் நடித்தேன். பொதுவாக தமிழில் ஜெயம் ரவிக்கு ஒரு ராசி உண்டு. அவருடன் நடிக்கும் புதுமுக நடிகைகள் எல்லோரும் பிரபலமாகி விடுவார்கள். சதா, திரிஷா, அசின், ஜெனிலியா என அப்பட்டியல் நீள்கிறது. நானும் இந்தப் பட்டியலில் வந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் எனக்கு அது நேர் விரோதமாக அமைந்துவிட்டது. அவருடன் நான் நடித்த 'மழை' படம் சரியாகப் போகவில்லை. என் முதல்படமும் சுமாராகத்தான் அமைந்தது. உடனே எனக்கு ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி விட்டார்கள்.

இனி தமிழ் படங்கள் அவ்வளவுதான் என்று நினைத்து தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அப்போதுதான் சூப்பர்ஸ்டார் ரஜினி சாருடன் 'சிவாஜி' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சிவாஜி வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

அதிர்ஷ்டமில்லாமலிருந்த நான் ரஜினியால் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியானேன். ராசி இல்லாத நடிகை என்ற 'இமேஜ்' விலகியது. இன்று என் நடிப்பு வாழ்க்கை ஹாலிவுட் வரை நீண்டதற்குக் காரணம் சிவாஜி என்ற படமும், ரஜினிசாரும்தான்.

நம்பர் ஒன் நடிகை போட்டியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லா நடிகைகளுமே ஒவ்வொரு கால கட்டத்தில் நம்பர் ஒன் ஆக இருப்பார்கள். யாருக்கும் அது நிரந்தரமானது அல்ல... நான் சாய்பாபா பக்தை. எந்த கஷ்டம் வந்தாலும் அவர் கைவிடமாட்டார்", என்றார் ஸ்ரேயா.

நான் யாருக்கும் போட்டியில்லே! த்ரிஷா விளக்கம்...


நந்திக்கு பழக்கம் நடுவாப்லே நிக்கிறது.... நத்தைக்கு பழக்கம் செவனேன்னு நடக்கிறது... நம்மாளுகளோட பழக்கம் என்ன? சிண்டையும் முடியணும், சிக்கையும் எடுக்கணும்!

த்ரிஷா இந்தி படத்திலே நடிக்க போனாலும் போனார். அசினுக்கு போட்டியாகதான் இந்திக்கு போயிருக்கார். அங்கேயுள்ள பெரிய பெரிய ஆளுகளுக்கெல்லாம் போன அன்னைக்கே பெரிய பார்ட்டி வச்சாருன்னு கொளுத்தி போட ஆரம்பிச்சிட்டாங்க. தகவல் அறியும் சட்டத்தை இப்படி தவறா பயன்படுத்துறவங்க மேலே கோவப்படாம பதில் சொல்றதுதான் புத்திசாலித்தனம். த்ரிஷாவும் சீரியஸ் ஆக பதில் சொல்லியிருக்கார். என்னன்னு?

நான் இந்தியில் நடிக்கணும்னு சான்ஸ் தேடி அலையலே. அதே மாதிரி எனக்கு முன்னாடி போயி, இந்தியிலே ஒரு இடத்தை பிடிச்சிருக்கிற அசினுக்கு போட்டியா நடிக்கணும்னும் போகலே. மத்தவங்க என்ன செய்யுறாங்கன்னு பார்க்கிறதுதான் என்னோட வேலை மாதிரி எழுதுறாங்க. அதெல்லாம் உண்மை இல்லை.

நான் நடிச்ச அபியும் நானும் படத்தை பார்த்திட்டு, அவரா விரும்பி என்னை இந்திக்கு கூப்பிட்டார் அக்ஷய் குமார். என்னை தமிழ்லே அறிமுகப்படுத்திய பிரியதர்ஷன் இந்த படத்தை டைரக்ட் பண்ணுறாரு. இதைவிட எனக்கு வேறென்ன வேணும்? அவங்க கூப்பிட்டதும் போயிட்டேன். இந்த படத்தை தயாரிக்கிறது அக்ஷய் குமார்ங்கிறது இன்னும் கூடுதல் சந்தோஷம். இதிலே எங்கிருந்து வந்தாரு அசின்?

நான் என் வேலையை பார்க்கிறேன். யாருக்கும் யாரும் போட்டியில்லை என்று நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். புரளி இதோடு ஓயுமா? அல்லது இன்னும் வருமா? என்பவர்களுக்கு... வாழ்க்கைன்னா ஒரு சுவாரஸ்யம் வேணாமா? பேசாத த்ரிஷாவை பேச வைக்கணும்னா இப்படியெல்லாம் எழுதினாதானே முடியுது?

பர்தாவில் வந்து வழிபட்ட காத்ரீனா

பர்தா அணிந்து, ஆஜ்மீர் சென்ற காத்ரீனா கைப் அங்குள்ள புகழ் பெற்ற தர்காவில் வழிபட்டார்.

காத்ரீனா நடித்துள்ள நியூயார்க் என்ற புதிய படம் ஜூன் 26ம் தேதி ரிலீஸாகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் காத்ரீனா கைப், ஆஜ்மீர் தர்காவுக்கு வந்தார்.

பக்தர்கள் கூட்டத்தில் சிக்கி விடக் கூடாது என்பதற்காகவே அதிகாலையில் காத்ரீனா வந்ததாக கூறப்படுகிறது. தர்காவுக்கு வந்த அவர் அங்கு மனமுருக வழிபட்டார்.

பர்தா அணிந்தபடி அவர் வந்ததால் யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. அவருடன் படக்குழுவினர் சிலரும் வந்திருந்தனர்.

முன்பொருமுறை நமஸ்தே லண்டனில் நடித்தபோதும் ஆஜ்மீர் தர்காவுக்கு வந்திருந்தார் காத்ரீனா. அப்போது அவர் குட்டை சட்டையுடன் வந்ததால் பிரச்சினை ஏற்பட்டது. கவர்ச்சியான உடையுடன் வருவதா என்று தர்கா நிர்வாகிகளும், பக்தர்கள் சிலரும் ஆட்சேபனை எழுப்பினர்.

இதை மனதில் கொண்டே இம்முறை எந்தவிதப் பிரச்சினையும் வந்து விடக் கூடாது என்பதற்காக பர்தா அணிந்து வந்திருந்தார் காத்ரீனா.

ஸ்னேகா..தெலுங்கில் அச்சமுண்டு!


பிரசன்னா, ஸ்னேகா நடிப்பில் உருவாகியுள்ள அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை தெலுங்கிலும் டப் செய்கிறார்கள்.

அமெரிக்க வாழ் தமிழரான அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அச்சமுண்டு அச்சமுண்டு. ரிலீஸுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஒரு விருதையும் பெற்று விட்ட இப்படம் திரைப்பட விழாக்களையும் வலம் வந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில், ஜூலை 10ம் தேதி தமிழகத்தில் திரைக்கு வருகிறது. இப்படத்தை தற்போது தெலுங்கிலும் டப் செய்து வெளியிடவுள்ளனராம்.

முதல் முறையாக ரெட் ஒன் கேமராவில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம், முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்ட படம் என்ற பல்வேறு சிறப்புகளைத் தாங்கி வரும் இப்படம் தெலுங்கிலும் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.

பிகினிக்கும் ஓகேதான்!' - ஸ்ருதி ஹாஸன் நீச்சல் உடைக் காட்சி

அப்பா அருகில் இல்லையென்றால் நீச்சல் உடைக் காட்சி மற்றும் முத்தக் காட்சிகளில் நடிக்க எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றார் கமல்ஹாஸன் மகள் ஸ்ருதி ஹாஸன்.

சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஸ்ருதி ஹாஸன் அளித்த பேட்டி:

பிகினி உடையில் நடிப்பதை நான் வரவேற்கிறேன். இதில் தவறு எதுவும் இல்லை. காரணம், பிகினியில்தான் ஒரு பெண் தனது உடல் அழகை முழுமையாக வெளிப்படுத்த முடியும். நான் பிகினியில் நடிக்க விரும்புகிறேன். அந்த மாதிரி காட்சி ஒன்று வரவிருக்கும் எனது படம் ('லக்') ஒன்றிலும் கூட உள்ளது.

ரொம்ப நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளைப் படமாக்கும்போது அப்பா செட்டில் இருப்பதை நான் விரும்புவதில்லை. அவர் பக்கத்தில் இல்லாத காட்சிகளில் பிகினியில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடிப்பவர் இம்ரான் கான். சிறுவயதிலிருந்தே என்னை அறிந்தவர் இம்ரான். அதனாலென்ன... அவருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க இது தடையாக இருக்கவில்லை.

லக் படத்தின் காட்சிகள் எதையும் இதுவரை என் அப்பாவுக்கு போட்டுக் காட்டவில்லை. முழுவதுமாக எடுத்து முடித்த பிறகே படத்தைக் காட்டுவோம்.

உன்னைப்போல் ஒருவன் படத்தில் நான் நடிக்கவில்லை. இசை சிறப்பாக வந்துள்ளது. என் வேலையில் என் அப்பா குறுகிகிடுவதில்லை. காரணம் அதை நான் விரும்புவதில்லை. இந்தப் படத்தின் இசையில் பல ஆச்சர்யங்கள் இருக்கும்..." என்றார்.

அசல் படத்தில் செகன்ட் ஹீரோயினா? பாவனா கோபம்!


அசல் படத்திலே நீங்க செகன்ட் ஹீரோயினாமேன்னு கேட்டா, போன்லேயே மிளகாப் பொடியை தூவுகிறார் பாவனா. “முதல்ல ஒரு ஹீரோயினுக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணிட்டாங்க. அப்புறம் இன்னொரு ஹீரோயினை கொஞ்சம் லேட்டா தேர்வு செஞ்சு அட்வான்ஸ் கொடுக்கிறாங்க. அப்படின்னா இரண்டாவதா அட்வான்ஸ் வாங்கினவங்க எல்லாரும் ரெண்டாவது ஹீரோயின் ஆயிருவாங்களா? நல்லாயிருக்கு சார் உங்க லாஜிக்கு” என்கிறார் காரசாரமாக.

ஐம்பது நாட்கள் கால்ஷீட் வேணும்னு கேட்டார் சரண் சார். வேறு படங்களுக்கு முன்னாடியே கொடுத்திருந்த தேதிகளையெல்லாம் அட்ஜஸ்ட் செய்து, ஐம்பது நாட்கள் ஒதுக்கி கொடுத்திருக்கேன். மலேசியா, லண்டன்லே ஷ¨ட்டிங். பொதுவாகவே வெளிநாட்டுக்கு போறதுன்னா ரொம்ப ஜாலியா இருக்கும். இந்த படம் சிவாஜி புரடக்ஷன் என்பதால் இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சியா இருக்கு. ஏன்னா பாரம்பரியமான கம்பெனியிலே நடிக்கறது பெருமைதானே என்றார் பாவ்ஸ்.

இனிமே தமிழ்லே கதையை மட்டும் கேட்டுட்டு நடிக்க போறதில்லே, அதிலே என்னோட கேரக்டருக்கு எந்தளவுக்கு இம்ப்பார்ட்டன்ஸ் இருக்குன்னு கேட்டுதான் நடிப்பேன்னு சபதம் போட்டிருந்தவர், அசல் விஷயத்தில் ஒரு நிபந்தனையும் போடவில்லையாம். பாவனாவோட கேரக்டரை மட்டும்தான் சொன்னாராம் சரண்.

இன்னொரு ஹீரோயின் படத்திலே இருந்தாலும், ஒரு பயமும் எனக்கு இல்லே. ஏன்னா என் கேரக்டரோட வெயிட் அப்பிடின்னார் பாவனா. படம் வரும்போது தெரிஞ்சிடப் போவது!

அயன் இயக்குனர் கே.வி.ஆனந்துக்கு விஜய் அழைப்பு?


“வேற நியூசே கிடைக்கலியா? போரடிக்குது” என்று நீங்கள் அலுத்துக் கொண்டாலும் சரி. இன்றைய நிலவரத்தை சொல்லாமல் விட்டால் விஜய் ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதால் இந்த தகவல். வேறொன்றுமில்லை, விஜயின் 50 வது படத்தை பற்றிய தகவல்தான்!

“வேட்டைக்காரன் ரிலீசுக்கு பிறகுதான் தனது 50 வது படத்தை பற்றி சொல்ல முடியும்” என்று விஜய் அறிவித்தாலும், டைரக்டரை தேர்வு செய்கிற வேலையில் சுறுசுறுப்பாக இருக்கிறது அவரது மூளை. பேரரசு, ஜெயம் ராஜா, ஹரியை அடுத்து பூபதி பாண்டியனோடு முடிந்த இந்த தேடுதல் வேட்டை, திருப்தியுறாமல் மீண்டும் தொடர ஆரம்பித்திருக்கிறது. இந்த லிஸ்டில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.

சிவாஜி கலெக்ஷனையே சில இடங்களில் மிஞ்சிவிட்டது அயன். கனா கண்டேனுக்கு பிறகு தனது இரண்டாவது படத்திலேயே டாப் டைரக்டர்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டார் அயன் பட இயக்குனர் கே.வி.ஆனந்த். சில முன்னணி நிறுவனங்கள் “பிடிங்க அட்வான்சை” என்று ஆனந்தை துரத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு போய் ரிலாக்ஸ் பண்ணிக் கொண்டிருந்த ஆனந்த், அடுத்த படத்திற்கு அவசரமே படவில்லை. இந்த நிலையில்தான் “நம்ம படத்தை இயக்கலாமே” என்று விஜயே தூது அனுப்பியதாக தகவல்.

“அயன் மாதிரி ஸ்டைலிஷா ஒரு படம் பண்ணுற எண்ணம் இருக்கு. கதையிலே தலையிடாமல் இருந்தால் நாம் சேர்ந்து வொர்க் பண்ணலாம்” என்று ஆனந்தும் பச்சைக் கொடி காட்டியிருக்கிறாராம். இந்த ரயிலிலாவது விஜய் ஏறுவாரா? அல்லது அடுத்த ரயிலுக்கு காத்திருப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

அக்கறையா ஆரம்பிச்சு சக்கரையால கெட்டுச்சு! டி.ராஜேந்தர் திடுக்...


இந்நேரம் துபாயில் இருப்பார் விஜய டி.ராஜேந்தர். கவலையை மறப்பதற்கான ஜாலி ட்ரிப்பாம் இது. பிள்ளைய பெத்தா கண்ணீரு என்பது அவருக்கு தெரியாதா என்ன? ஆனால் இந்த கண்ணீரு பிள்ளை கொடுத்த குடைச்சலால் அல்ல. பிள்ளைய நினைச்சு வந்த கண்ணீரு!

அஜீத்தை வைத்து பல்வேறு படங்களை எடுத்தவரும், அவரது பினாமி என்று வெளியுலகில் கிசுகிசுக்கப்பட்டவருமான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி நீண்ட இடைவேளைக்கு பிறகு பட தயாரிப்பில் இறங்கினார். சிம்புவையும், குறளரசைனையும் அந்த படத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தவர், டிஆரை அணுகி விஷயத்தை சொல்ல, ஆஹா பண்ணலாமேன்னாரு டிஆரும்!

இதில் இரட்டை வேடத்தில் சிம்பு நடிப்பதாக முடிவானது. இன்னொரு முக்கிய கேரக்டரில் குறள் அறிமுகமாவதாக ஏற்பாடு. சிம்பு இருந்தால், அந்த இடத்தில் நிழலாக யுவனும் இருப்பாரே? இசை யுவன் என்றும் முடிவானது. பைசா அட்வான்ஸ் இல்லாமல் பிராஜக்ட் தயாரானது. ஆனால், திடீரென்று படத்தையே டிராப் செய்துவிட்டாராம் சக்கரை.

ரொம்ப அக்கறையா ஆரம்பிச்ச பிராஜக்ட் இப்படி சக்கரையால் கெட்டதே என்ற வருத்தத்தில் தாட், பூட் என்று குதித்த டிஆர், கையிலே பணம் இல்லேன்னா சும்மா இருந்திருக்கலாமே, எதுக்கு சிம்பு பேரை கெடுக்கணும்?. ஏற்கனவே அவரு துவங்கின படங்கள் டிராப் ஆகுதுன்னு இன்டஸ்ரியிலே பேர் இருக்கு. அதை வலுவாக்கிற மாதிரி ஆயிருச்சே நீங்க செஞ்ச வேலை என்றாராம் சக்கரவர்த்தியிடம்.

சம்பளத்தை இரண்டு கோடியாக குறைத்திருக்கிறாராம் சிம்பு. இந்த சிறப்பு தள்ளுபடியை எந்த தயாரிப்பாளர் பயன்படுத்தப் போகிறாரோ?

Monday, June 22, 2009

த்‌ரிஷா படத்துக்கு ர‌ஜினி பெயர்


த்‌ரிஷாவின் நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகிறதோ இல்லையோ. மாசத்துக்கு ஒரு டப்பிங் படம் டாணென்று வந்துவிடுகிறது.

இந்த மாதம் ரவிதேஜாவுடன் நடித்த மதுர திமிரு ‌ரிலீஸானது. அடுத்து தயாராக இருப்பது, குமரன் ர‌ஜினி ரசிகன்.

ர‌ஜினி படப் பெயரை பயன்படுத்துவதுபோய் இப்போது ர‌ஜினி பெயரை நேரடியாகவே பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஆனாலும், இந்தப் படத்துக்கு ர‌ஜினி பெயர் சாலப் பொருத்தம். காரணம் படத்தின் ஹீரோ பிரபாஸ் ர‌ஜினி ரசிகராக நடித்திருக்கிறார்.

தெலுங்கில் பூ‌ரி ஜெகன்நாத் இயக்கிய புச்சிக்காடு மேட் இன் சென்னை என்ற படம்தான் குமரன் ர‌ஜினி ரசிகனாக தமிழ் பேசயிருக்கிறது. இந்தப் படத்தில் சென்னையில் வசிப்பவராக வருகிறார் பிரபாஸ். கதைப்படி அவர் தீவிர ர‌ஜினி ரசிகர். அவரது காதலியாக த்‌ரிஷா நடித்துள்ளார். தெலுங்கு படத்தின் தொடக்க விழாவில் ர‌ஜினி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் வெற்றிபெற்ற இப்படத்தை லட்சுமி வெங்கடேஸ்வரா நிறுவனம் தமிழில் வெளியிடுகிறது. படம் ஆகஸ்டில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"அவங்க தங்கச்சிதான்..." -மீராஜாஸ்மினை வெறுப்பேற்றும் மோனிகா!


நரிக்கு மச்சு வீடு கிடைச்சா சிங்கத்தை பார்த்து சௌக்யமான்னு கேட்குமாம். வீடு கொள்ளாமல் வெற்றி கோப்பைகளை அடுக்கி வைத்திருந்தாலும், உள்ளூரு ஓட்டப்பந்தயத்தில் நொண்டியடிச்ச மாதிரி ஆயிருச்சு மீரா ஜாஸ்மினின் கேரியர். வந்தவங்க, போனவங்க, நின்னவங்க, நொடிச்சவங்கன்னு யாரு கூடவும் ஜோடி போட தயாராகிட்டாரு. வேடிக்கை என்னவென்றால், கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு தங்கச்சியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். ஆனால் அவருக்கு ஜோடியாக நடிப்பது நம்ம மோனிகா. சிலந்தி படத்திலே தண்ணீரில் மூழ்கி தத்தளிக்க வச்சாங்களே, அவங்களேதான்.

சென்னைக்கு வந்ததும் சும்மாயில்லாம, நான் சிவாராஜ் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறேன். மீரா ஜாஸ்மின் அவருக்கு தங்கச்சியா நடிக்கிறாங்க என்று சொல்லி வருகிறாராம். இதுக்கெல்லாம் கவலைப் படுகிறவரா மீரா.

இதற்கிடையில் தனக்கென்று ஒரு வெப்சைட் துவங்கியிருக்கிறாராம் மோனிகா. தமிழில் நான் படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. காரணம், நான் நடிச்ச வர்ணம் படம் வந்திட்டா, தமிழில் நான் எதிர்பார்த்த கேரக்டர்களும் எனக்கு கிடைக்கும். எனக்கென்று ஒரு அடையாளத்தையும் உருவாக்கிக்க முடியும். அதனால் அந்த படத்தின் ரிலீசுக்கு பிறகுதான் தமிழ் படம். அதுவரைக்கும் கன்னடத்தில் நடிக்கிறேனா? திடீர்னு என்னை பார்க்கணும்னு நினைக்கிறவங்களுக்கு, "வெப்சைட் இருக்கு. அதிலேயே என்னை பார்த்துக்கோங்களேன்"னு சொல்லிடுறேன். அதுக்காகதான் இந்த வெப்சைட் என்றார்.

ஏடாகூடமா மெயில் வந்தா, என்ன செய்வாங்களாம்

அமீ‌‌ரின் கிளிநொச்சி, சீமானின் கோபம்


ஈழம் என்றதும் வீரம்வரும் சில‌ரில் அமீரும் ஒருவர். ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேசி சிறை சென்ற பின்னும் அவரது சீற்றம் குறையவில்லை.

அமீர் சினிமா கலைஞனல்லவா... ஈழத்தின் சோகத்தை செல்லுலாயிடில் செதுக்க வேண்டும் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். ஈழத்தைப் பற்றி படமெடுப்பேன் என்று மேடையிலேயே முழங்கியிருக்கிறார். அது வெறும் பேச்சல்ல.

யோகி படத்தின் இறுதிகட்ட பணியில் இருப்பவர் ஈழம் குறித்த படத்தின் கதை விவாதத்தை நடத்தி வருகிறாராம். படத்துக்கு கிளிநொச்சி என்று பெயர் வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் த‌ெ‌ரிவிக்கின்றன.

அமீரைப் போலவே ஈழப் பிரச்சனையை பிரதிபலிக்கும் படத்தை எடுக்கவுள்ளார் சீமான். அ‌ஜித் நடிக்கும் படத்துக்குமுன் இப்படம் தயாராகவுள்ளது. அனேகமாக படத்துக்கு கோபம் என பெய‌‌ரிடப்படலாம் என தெ‌ரிகிறது.

வேட்டைக்கு தயாராகும் ‌‌ரித்தீஷ் இந்தி டியூசனுக்கு போய் வருகிறாராம்.

எம்பியாக பதவியேற்ற முதல் நாளே கலக்கல் காஸ்ட்யூமில் சோனியா காந்தியையே யார்யா இது என்று கேட்க வைத்தவர் ஜே.கே.‌‌ரித்தீஷ். சும்மாவே போஸ்டர் அடித்து ஒட்டுகிறவர் சென்ட்ரல் பாலிடிக்ஸில் புகுந்தால் சும்மாயிருப்பாரா? ஒட்டு மொத்த இந்தியாவை கலங்கடிக்க திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்.

நாயகன் படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிவிட்டவர் அடுத்து வேட்டை புலி என்ற படத்தில் நடிக்கிறார். முன்பென்றால் புலியை உள்ளூ‌‌ரில் மட்டும் உலவவிட்டால் போதும். இப்போதோ எம்பி. இந்தியாவுக்கே தெ‌ரிய வேண்டாமா ஒரு எம்பியின் நடிப்பு திறமை. அதற்கு ச‌ரியான வழி படத்தை இந்தியிலும் எடுப்பதுதான் என ஒரு விசுவாசி எடுத்துக் கொடுக்க அதுபற்றி சீ‌‌ரியஸாக திங்க் பண்ணிக் கொண்டிருக்கிறார் ‌‌ரித்தீஷ்.

அனேகமாக வேட்டை புலி இந்தியிலும் கர்‌ஜிக்கலாம் என்பதுதான் நிலைமை. இதற்காகவே இந்தி டியூசனுக்கு போய் வருகிறாராம். தமிழ் மக்கள்தான் பாவம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். அவர்கள் சோகத்தில் பங்குகொள்ள இனி இந்தி பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். நல்ல சேதிதானே இது.

திரும்பி வருகிறார் திருமதி கோபிகா


குடிகாரன் பேச்சு போலதான் நடிகைகளின் நடிக்க மாட்டேன் ஸ்டேட்மெண்டும். திருமணம் ஆகும்போது கொஞ்சம் தெனாவட்டாகவே சொல்வார்கள், நடிப்பா? சீச்சீ... அந்தப் பக்கமே தலைவச்சு படுக்க மாட்டேன்.

எண்ணி மூன்றே மாதத்தில் பெட்டி படுக்கையோடு மீண்டும் வந்திறங்குவார்கள், நடிப்பதற்கு. அயர்லாந்தில் திருமணமாகி செட்டிலான கோபிகாவும் வந்திருக்கிறா‌ர், அதே நடிப்பு ஆசையுடன்.

அயர்லாந்தில் பணிபு‌ரியும் அ‌ஜிலேஷை சில மாதங்கள் முன் திருமணம் செய்தார் கோபிகா. திருமணத்துக்குப் பின் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, கண்டிப்பாக நடிக்க மாட்டேன், கணவருடன் அயர்லாந்தில் செட்டிலாக தீர்மானித்திருக்கிறேன் என்றார் உறுதியாக.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கோபிகா கலந்து கொண்டார். அவர் நடித்த வெறுதே ஒரு பா‌ரியா படத்துக்காக சிறந்த நடிகை விருது வாங்கவே இந்த திடீர் விசிட். அப்போதும் நடிக்க மாட்டேன் என்ற தனது தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக அவர் தெ‌ரிவித்தார்.

இந்நிலையில் திலீப் நடிக்கும் சொந்தம் லேககன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கோபிகா ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் கோபிகா.

இவரைப் போல சமீபத்தில் திருமணமான காவ்யா மாதவனும் மீண்டும் நடிக்க வருவாரா என்பதே இப்போது மலையாளிகளின் எதிர்பார்ப்பு.

இல்லாத இயக்கத்துக்கு எதற்கு தடை?-சீமான்


விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடையை விலக்க வேண்டும். இல்லாத இயக்கம் என்று அறிவித்துவிட்ட பிறகு புலிகளை தடைசெய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்றார் இயக்குநர் சீமான்.

கோவை புலியகுளத்தில் தமிழர் உரிமை முன்னணி சார்பில் ஈழ ஆதரவாளர் மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது:


அமெரிக்க ஐக்கிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்திருந்தாலும், அந்த மக்கள் தனி ஈழம் கேட்டுப் போராட உரிமை தந்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அதற்குக் கூட உரிமையில்லை. எமது இன மக்கள் அங்கே பல்லாயிரக்கணக்கில் செத்து மடிவதை எதிர்த்துக் குரல் கொடுத்தால் சிறையில் அடைக்கிறார்கள். ஈழ மக்கள் விடுதலைக்காக கு