Saturday, June 20, 2009

ஆக. 12-ல் உன்னைப்போல் ஒருவன்!


கமல்ஹாசனின் அடுத்த படமான உன்னைப் போல் ஒருவன் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகிறது.

இந்த தேதியில்தான் 50 ஆண்டுகளுக்கு முன் கமல் தனது திரையுலக வாழ்க்கையைத் துவங்கினார். அந்தப் பொன்விழாவை நினைவு கூறும் வகையில் உன்னைப்போல் ஒருவன் படத்தை இதே தேதியில் வெளியிடவிருக்கிறார்கள்.

எ வெட்னஸ்டே எனும் சூப்பர் ஹிட் இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்படும் உன்னைப்போல் ஒருவன் படத்தில் கமல்ஹாசனுடன் மோகன்லால் நடித்துள்ளார். இதன் தெலுங்குப் பதிப்பில் மோகன்லாலுக்குப் பதில் வெங்கடேஷ் நடித்துள்ளார்.

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஒரு இசையமைப்பாளராக தனது கேரியரை இந்தப் படத்திலிருந்து துவங்குகிறார்.

இன்னும் இருவாரங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும், படப்பிடிப்பு முடியும்போதே அதன் எடிட்டிங் வேலையும் முடிந்து விடுவதால், போஸ்ட் புரொடக்ஷனுக்கு அதிக காலம் தேவைப்படாது என்றும் இயக்குநர் சக்ரி டோலெட்டி தெரிவித்துள்ளார்.

பெரிய விழா எடுத்து இந்தப் படத்தை வெளியிடும் திட்டத்தில் உள்ளனராம் கமல் ரசிகர்கள்.

கோவைத் தம்பிக்கு 'பால்கே கழக' விருது!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கோவைத் தம்பிக்கு தாதா சாகேப் பால்கே கழக விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியத் திரையுலகின் தந்தை தாதா சாகேப் பால்கே அவர்களின் பெயரால் ஆண்டுதோறும், திரையுலக சாதனையாளர்களுக்கு இந்திய அரசு விருது வழங்கிவருகிறது. திரைப்படத்துறைக்கு வழங்கப்பட்டு வரும் மிக உயர்ந்த விருது இதுவே.

இப்போது, திரையுலகின் முக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து தாதா சாகேப் பால்கே கழகம் என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம், சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறார்கள்.

தாதா சாகேப் பால்கேவின் 140-வது பிறந்தநாள் விழா, அம்மையில் மும்பையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், தமிழகத்தின் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கோவை தம்பிக்கு தாதா சாகேப் பால்கே கழக விருதும், நினைவு பரிசும் அறிவிக்கப்பட்டது.

இந்த விருதை, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் ஆகியோர் கோவை தம்பியிடம் வழங்கினார்கள்.

இந்த விருதைப் பெற்றுள்ள முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கோவைத் தம்பிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் திரையுலக முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

3வது முறையாக நடிகர் சங்கத் தலைவரானார் சரத்குமார்

திரையுலகின் பலமான அமைப்புகளில் ஒன்றான நடிகர் சங்கத்தின் தலைவராக மூன்றாம் முறை தேர்வாகியுள்ளார் நடிகர் சரத்குமார்.

அவர் மட்டுமல்ல, அவருடன் சேர்ந்து அனைத்து நிர்வாகிகளுமே போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதனால் ஜூலை 12-ம் தேதி நடக்கவிருந்த தேர்தலுக்கு அவசியமில்லாமல் போனது.நேற்று மாலை இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரியான பிரறைசூடன்.தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.

2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரைக்கான தேர்தல், ஜுலை 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

1952-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 25-வது தேர்தல் இது. இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு சரத்குமார், துணைத் தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், மனோரமா, பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி, பொருளாளர் பதவிக்கு வாகை சந்திரசேகர் ஆகியோர் மீண்டும் போட்டியிடுவதற்காக, வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள்.

ஆனால் இவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், சரத்குமார் [^] உள்பட அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியாக இருந்த பிறைசூடன் அறிவித்தார்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு சத்யராஜ், முரளி, சார்லி, மும்தாஜ் உள்பட 24 பேர் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இவர்களுடன் வைத்யநாதன் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனு தேர்தல் [^] விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லாததால், தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி பிறைசூடன் அறிவித்தார். அதைத்தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்கள் 24 பேர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 57 ஆண்டுகளில் தலைவர் உள்பட 29 பேர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல்முறை என்று பொதுச் செயலாளர் ராதாரவி தெரிவித்தார்.

புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா, ஜுலை 12-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

சரத் பேட்டி

பின்னர் நிருபர்களுக்கு சரத் குமார் அளித்த பேட்டி:


தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படாத புதிய கட்டிடம் இந்த 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். ஏறக்குறைய ஒரு லட்சம் சதுர அடியில் புதிய கட்டிடம், குளிர்சாதன வசதியுடன் அமையும்.

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 29 பேரும் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற இருக்கிறோம். அப்போது புதிய இடத்தில், சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைப்போம் என்றார்.

இந்த முறையாவது நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் அமைத்து கெளரவம் தேட முயலட்டும் நடிகர் சங்கம்.

Friday, June 19, 2009

அவசரம் காட்டும் ஆதி! சங்கடம் தீர்க்குமா சரித்திரம்?


வெண்ணிலா கபடிக்குழு கதையும், கலெக்ஷனும் மற்ற மொழிக்காரர்களையும் பிரமிக்க வைத்திருக்கிறது. அதனால் இப்படத்தை ரீமேக் செய்ய பெரும் போட்டி. முதல் கட்டமாக தெலுங்கில் எடுக்கவிருக்கிறார்களாம். தமிழில் மிருகம் படத்தில் அறிமுகம் ஆனாரே, ஆதி. அவர்தான் தெலுங்கு வெண்ணிலா கபடி குழுவிலும் ஆட்டம் போட போகிறாராம்.

மிருகம் படத்திற்கு பிறகு, தமிழில் நடிக்க பலர் அழைத்தாலும் மீண்டும் சாமி இயக்கத்திலேயே நடிக்க பிரியப்பட்டார் ஆதி. அவரது விருப்பத்திற்கேற்ப, சரித்திரம் படத்தில் ராஜ்கிரணுக்கு இணையான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். வேக வேகமாக போய் கொண்டிருந்த படப்பிடிப்பு திடீரென்று பிரேக் அடித்து நிற்கிறது.

அர்ஜுன் நடிக்கும் மெய்க்காண் படத்தை துவங்கிவிட்டார் சரித்திரம் தயாரிப்பாளர். கவனம் முழுக்க இதில் இருக்க, சரித்திரம் பெயருக்கேற்ப பின் தங்கிவிட்டது. இப்படத்தை முடித்துவிட்டு வெண்ணிலா ரீமேக்கிற்கு போகலாம் என்று காத்திருந்த ஆதி, இப்போது சாமியை அவசரப் படுத்துகிறாராம். அவரோ, தயாரிப்பாளரை அவசரப்படுத்துகிறார்.

அர்ஜுனா, ஆதியா? யார் அவசரத்தை முதலில் கவனிப்பது? யோசித்துக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர்.

அஜ்மல் கூத்து-ஹோட்டலை மாத்து!


அஜ்மலுடன் தான் தங்குவதால் ஹோட்டல் நிர்வாகம் முகம் சுளித்து காலி செய்யுமாறு கூறி விட்டதால் தற்போது ஹோட்டலை மாற்றி விட்டாராம் மீனாட்சி.

மும்பை புயல் மீனாட்சி, மதுரை மல்லியாக கருப்பசாமி குத்தகைதாரரில் பாவாடை, தாவணியில் வந்து வசீகரித்தார். ஆனால் இப்போது அவரைப் பார்ப்பவர்கள், கண்டிப்பாக இது கருப்பசாமியில் நடித்த மீனாட்சிதான் என்றால் நம்பவே மாட்டார்கள்.

அந்த அளவில் நடிப்பிலும், 'பாடி லாங்குவேஜிலும்' பெத்த மாற்றத்தைக் கண்டுள்ளார் மீனாட்சி.

கவர்ச்சியில் சக்கைப் போடு போடும் அவர் காதல் களியாட்டத்திலும் கலக்கி வருவதாக கூறப்படுகிறது.

வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டலில்தான் வழக்கமாக தங்குவார் மீனாட்சி. அதே ஹோட்டலில்தான் மலையாள நடிகர் அஜ்மலும் தங்குகிறார். இருவருக்கும் நட்பு ஏற்படவே, தடபுடலாக தங்களது நட்பை வளர்த்து வந்துள்ளனர்.

இது ஹோட்டல் நிர்வாகத்துக்குப் பிடிக்கவில்லை. இப்படியெல்லாம் நடந்தா கஸ்டமர்கள் முகம் சுளிப்பார்கள் எனக் கருதிய ஹோட்டல் நிர்வாகம், இடத்தை காலி செய்யுமாறு மீனாட்சியைக் கூறி விட்டதாம்.

இதனால் வேறு ஒரு ஹோட்டலுக்கு ஜாகை மாறி விட்டாராம் மீனாட்சி. ஆனால் அங்கும் இதே பிரச்சினையாம். இதனால் மறுபடியும் வேறு ஒரு ஹோட்டலுக்கு மாறியுள்ளாராம்.

உலக அகதிகள் தின நிகழ்ச்சி- கண்ணீர் விட்ட ஏஞ்செலீனா ஜூலி

வாஷிங்டன்: உலக அகதிகள் தினத்தையொட்டி இன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹாலிவுட் நடிகை ஏஞ்செலீனா ஜூலி கண்ணீர் விட்டு அழுதார்.

இன்று உலக அகதிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி வாஷிங்டனில் ஐ.நா. அகதிகள் ஏஜென்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் ஐ.நா. அகதிகள் ஏஜென்சியின் நல்லெண்ணத் தூதரான ஜூலியும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள அகதிகளின் எண்ணிக்கை, அவர்களின் அவல நிலை உள்ளிட்டவை குறித்து விளக்கிப் பேசப்பட்டது.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜூலிக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. அவரால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைக்கவும் முடியாமல் காணப்பட்டார் ஜூலி.

பின்னர் அவர் பேசுகையில், அகதிகளை நாம் எண்ணிக்கையில் சொல்லக் கூடாது. அவர்கள் தாய்மார்கள், மகள்கள், தந்தைகள், மகன்கள்.

அகதிகளின் நிலை மிகவும் உருக்கமானது. பல அகதிகளை நான் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது வாழ்க்கையை அவர்கள் பெரிய அளவில் மாற்றியுள்ளனர். அவர்களது வாழ்க்கை குறித்து அறிய எனக்கு வாய்ப்பு தந்தமைக்காக அவர்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

அமெரிக்க நிர்வாகம், உலகெங்கிலும் உள்ள அகதிகளின் நல் வாழ்வுக்காக நிறையச் செய்ய முடியும், செய்வார்கள், செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என்றார் ஜூலி.

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நடிகை ஆசினின் உதவியாளர் முத்துக்குமார் கைது


சென்னை: நடிகை ஆசினால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அவரது குடும்பத்தினரால் கடத்தப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்ட ஆசினின் உதவியாளர் நல்லமுத்துக்குமார் சென்னை அருகே கைது செய்யப்பட்டார்.

ஆசினிடம் டச் அப் உதவியாளராக இருந்தவர் நல்லமுத்துக்குமார். இவர் ஆசின் மும்பைக்கு இடம் பெயர்ந்தவுடன் அவருடன் சென்று பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் முத்துக்குமாரின் தாயார் சென்னை புறநகர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது மகன் நல்லமுத்துக்குமார் குறித்த தகவல் இல்லை. அவரை ஆசின் குடும்பத்தினர் கடத்தி வைத்து சித்திரவதை செய்து வருவதாக அறிகிறேன்.

எனது மகனை மீட்டுத் தர வேண்டும் என கோரியிருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸார் ஆசின் தரப்பில் விசாரித்தனர். அப்போது தாங்கள் ஏற்கனவே முத்துக்குமாரை வேலையை விட்டு நீக்கி விட்டதாகவும், இப்போது அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து தெரியாது என்றும் கூறியிருந்தனர்.

இதையடுத்து முத்துக்குமாரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவர் குறித்து ஒரு துப்பும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சென்னை அருகே சோழவரம் பகுதியில் பதுங்கியிருந்த முத்துக்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவரை திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்திற்குக் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னரே என்ன நடந்தது என்பது தெரிய வரும்.

சரத்குமார்-ராதாரவி போட்டியின்றி தேர்வு!

நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக நடிகர் சரத்குமாரும், பொதுச் செயலாளராக நடிகர் ராதாரவியும் போட்டியின்றி தேர்வாகிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.

நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 12ம் தேதி நடக்கிறது.

வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. ஏற்கனவே தலைவர் பதவி வகிக்கும் சரத்குமார் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட மனுதாக்கல் செய்தார். இதுபோல் ராதாரவியும் மீண்டும் பொதுச் செயலாளராக போட்டியிட மனு கொடுத்தார்.

இருவரையும் எதிர்த்து, மனுத்தக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளான நேற்றுவரை வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் நடிகர் சங்கத் தலைவராக சரத்குமாரும், பொதுச்செயலாளராக ராதாரவியும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

துணைத் தலைவர் பதவிக்கு விஜயகுமார், மனோரமா ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு வாகை சந்திரசேகரும் மனுத் தாக்கல் செய்தனர். இவர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

நடிகர் சங்கக் கமிட்டி உறுப்பினர்கள் பதவிக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பதவிகளுக்கு மொத்தம் 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

சரத்குமார் அணியில் சத்யராஜ், முரளி, எஸ்.வி. சேகர், சின்னி ஜெயந்த், குயிலி, மும்தாஜ், பசி சத்யா, அலெக்ஸ், சத்யபிரியா, கே.என். காளை, மயில்சாமி, கே.ஆர். செல்வராஜ், எம். ராஜேந்திரன், ஆர். வீரமணி, பிரவீன்குமார், சவுண்டப்பன், இசையரசன், ஜெயமணி, சி.ஐ.டி. சகுந்தலா, ஏ.கே. ராஜேந்திரன், குமரிமுத்து ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

இவர்களை எதிர்த்து பலர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் தேர்தல் நடக்கும் சூழல் உள்ளது. போட்டியிடுவோர் இறுதிப்பட்டியல் வரும் 26ம் தேதி வெளியாகும்.

இன்று மாலை 6 மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்து இதுகுறித்த முழுமையான விவரங்களைத் தருகிறார்கள் நடிகர் சங்க நிர்வாகிகள்.

'ஆராதனா'... வாணிஸ்ரீ வேடம்-தேவயானியின் ஆசை!'ஆராதனா'... வாணிஸ்ரீ வேடம்-தேவயானியின் ஆசை!


அம்மா வேடத்தில் நடிக்கும் அளவுக்கு எனக்கு வயாசாகிவிடவில்லை. 'ஆராதனா' படத்தை திரும்ப தமிழில் எடுத்தால் அதில் வாணிஸ்ரீ வேடத்தில் நடிக்கத் தயார் என்று நடிகை தேவயானி கூறியுள்ளார்.

'ஆராதனா' படத்தில் வாணிஸ்ரீயா... என்ன கொடுமை இது? என்கிறீர்களா...

'ஆராதனா' ஒரிஜினல் இந்திப் படத்தில் அவர் நடிக்கவில்லை. ஆனால் அந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்ட போது அதில் நடித்தவர் வாணிஸ்ரீ.

சமீபத்தில் ஒரு படத்தில் நடிகை தேவயானி அம்மா வேடத்தில் நடிப்பதாக செய்தி வெளியாக, கொதித்துவிட்டார் தேவயானி.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

அம்மா வேடங்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இப்போது எனக்கு அம்மா வேடத்தில் நடிக்கிற வயசா சொல்லுங்க...

மதர் இந்தியா படத்தை திரும்ப எடுத்தால், அதில் சத்யராஜுக்குக் கூட அம்மாவாக நடிப்பேன். அல்லது ஆராதனா படத்தில் வாணிஸ்ரீ செய்திருப்பாரே அந்த மாதிரி வேடம் என்றாலும் நடிப்பேன்.

எந்தக் கதையும் எனக்குப் பிடித்தமாதிரி இருந்தால்தான் நடிப்பேன்.

நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான்தான் எதையும் தேர்ந்தெடுத்து ஒப்புக் கொள்கிறேன்.

சமீபத்தில் கூட சுரேஷ் கோபியுடன் ஒரு மலையாளப்பட வாய்ப்பு வந்தது. அதை வேண்டாம் என்று கூறிவிட்டேன் தெரியுமா... என்றார்.

கக்கன் நூறாவது பிறந்த நாள் - வெறும் 10 பேரே கூடிய கொடுமை!


சென்னை: அப்பழுக்கற்ற, எளிமையான தூய அரசியல்வாதியாக திகழ்ந்த மறைந்த கக்கனின் நூறாவது பிறந்த நாள் விழாவின்போது கக்கனை அவமதிக்கும் வகையில், வெறும் பத்து பேரே கூடி அஞ்சலி செலுத்தி விட்டுக் கலைந்துள்ளனர் காங்கிரஸ் அலுவலகத்தில்.

நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி, தேசப் பற்று மிக்க ஒரே கட்சி, நூறாண்டுகள் கடந்த கட்சி என்றெல்லாம் காங்கிரஸ்காரர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாய் கிழியப் பேசுவார்கள்.

கதர்ச் சட்டையுடன் காணப்படும் அவர்கள் தங்களது அரும் பெறும் வரலாற்றுப் பாதையை அப்படியே மறந்து போனவர்கள் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டு உள்ளனர்.

குறிப்பாக சுதந்திரப் போராட்ட தியாகிகளை ஒருபோதும் காங்கிரஸ் கெளரவித்ததில்லை என்பது வரலாறு. மாறாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியின்போதுதான் பல தியாகிகளுக்கு புனர்வாழ்வு கிடைத்தது, உரிய கெளரவம் கிடைத்தது.

சில நாட்களுக்கு முன்பு வீர வாஞ்சிநாதனின் நினைவு தினம் வந்தது. காங்கிரஸ்காரர்கள் யாரும் அந்த நாளில் அஞ்சலி செலுத்தியதாக நினைவில்லை.

அதேபோல நேற்று மறைந்த கக்கனின் பிறந்த நாள் நூற்றாண்டின்போதும் அவரை அவமதித்துள்ளது காங்கிரஸ்.

ஒரு போட்டோவை வைத்து வெறும் பத்து பேரே கூடி மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு உடனடியாக அந்த போட்டோவையும் அப்புறப்படுத்தி, கக்கனை அசிங்கப்படுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு கோஷ்டித் தலைவர்களின் பிறந்த நாளின்போதும் கட்சியே அல்லோகல்லப்படும். ஏன், மத்திய அமைச்சராக பதவியேற்றவுடன் கோஷ்டித் தலைவர்கள் கட்சித் தலைமையகத்திற்கு வந்தால் ஏதோ போரில் வென்ற மாவீரர்களுக்குக் கொடுக்கப்படுவதைப் போல தடபுடலாக வரவேற்பு அளித்து ஊரையேக் கலக்குவார்கள்.

ஆனால் கக்கன் போன்ற தியாகிகளின் தன்னலமற்ற சேவை அவர்கள் கண்ணுக்குப் படவே படாது.

மறைந்த கக்கனுக்கு நேற்று 100வது பிறந்த நாள். இவர் காமராஜர் அமைச்சரவையில் இருந்தவர். ஊழல் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கக் கூடியவர். அரசு பேருந்தில்தான் எங்கும் செல்வார். ஒரு பைசா கூட யாரிடமும் பெற மாட்டார். படு எளிமையானவர். லஞ்சம், ஊழல், கரை படியாத கரத்துக்குச் சொந்தக்காரர். எல்லாவற்றுக்கும் மேலாக தலித் வகுப்பைச் சேர்ந்த மிக மிக நல்ல மனிதர்.

கக்கன் உயிருடன் இருந்தபோதே அவரை மறந்து போன கட்சி காங்கிரஸ். ஏழ்மையில் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் அவர் வாடியபோது எம்.ஜி.ஆர்.தான் உதவிக் கரம் நீட்டினார். கக்கனை உரிய முறையில் பாதுகாத்தார். பின்னர் அவர் மறைந்தவுடன், கக்கனுக்கு மணிமண்டபம் கட்டி திராவிடக் கட்சிகளின் தேசப் பற்றை நிரூபித்தவர் கருணாநிதி [^].

தேசத்தின் சொத்தாக மதிக்கப்பட வேண்டிய கக்கனின் நூறாவது பிறந்த நாளை எவ்வளவு சிறப்பாக கொண்டாடியிருக்க வேண்டும் காங்கிரஸ்?. ஆனால் வெறும் பத்து பேர் மட்டுமே கூடி மலர் தூவி கலைந்து போயிருக்கின்றனர்.

நேற்று சத்தியமூர்த்தி பவனில் கக்கனின் போட்டோவை வைத்திருந்தனர். அதற்கு தங்கபாலு, சுதர்சனம், கராத்தே தியாகராஜன், தாமோதரன் என வெறும் 10 பேர் மட்டுமே வந்திருந்தனர்.

அதை விட மிகக் கொடுமை - அந்த பத்து பேரும் மலர் தூவி முடித்த பின்னர் போட்டோவை உள்ளே எடுத்துச் சென்று விட்டனர்.

பிறந்த நாள் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த கக்கனின் மகள் கஸ்தூரி சற்று தாமதமாக வந்தார். அவர் வந்தபோது போட்டோவைக் காணவில்லை. இதையடுத்து அலுவலகத்திற்குள் சென்று தனது தந்தையின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார் கஸ்தூரி.

காமராஜர் ஆட்சி, காமராஜர் ஆட்சி என்று வாய் கிழியப் பேசி வருகிறது காங்கிரஸ். ஆனால் காமராஜர் மற்றும் அவருடன் இருந்த கக்கனைப் போன்றவர்களின் சிந்தனை, செயல், குணம் ஆகியவற்றில் ஒரு துளியாவது இப்போதுள்ள தலைவர்களிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் காமராஜர் போன்றவர்களின் பெயரைச் சொல்லக் கூட அவருக்கு தகுதி உண்டு என்று மூத்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் வருத்தத்துடன் கூறினார்.

மதுரையில் கொண்டாட்டம்


இதற்கிடையே, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கக்கனின் சொந்த ஊரான தும்பைப்பட்டியில், கக்கனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், கக்கன் சிலைக்கு மாலை அணிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சுந்தரம், மாநகர் மாவட்டச்செயலாளர் இரா. அண்ணாதுரை மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பலர் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதிமுக சார்பில் சட்ட மன்ற உறுப்பினர் சாமி, மதிமுக மாவட்டச் செயலாளர் வீர.தமிழ்ச் செல்வன் சிபிஐ புறநகர் மாவட்டச்செயலாளர் காளிதாஸ், மேலூர் தாலுகா செயலாளர் மெய்யர், குமரே சன், தங்கவேல் உள்ளிட்ட தலைவர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆண்ட்ரியாவால் பிரச்சினை: 'இது மாலை நேரத்து மயக்கம்' டிராப்!

நடிகை ஆண்ட்ரியாவால் எழுந்த பிரச்சினை காரணமாக செல்வராகவன்- தனுஷ் கூட்டணியில் உருவாகவிருந்த இது மாலை நேரத்து மயக்கம் திரைப்படம் கைவிடப்பட்டது.

ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பின் தனுஷ் [^]-ஆண்ட்ரியாவை வைத்து இது மாலை நேரத்து மயக்கம் என்ற சைக்கோ-காதல் கதையை உருவாக்கத் திட்டமிட்டிருந்தார் இயக்குநர் செல்வராகவன்.

இந்தப் படத்தை கஸ்தூரி ராஜா [^] தயாரிப்பதாக ஏற்கெனவே விளம்பரங்கள் வந்தன.

இந்த நிலையில் இது மாலை நேரத்து மயக்கம் படத்தில் ஆண்ட்ரியா நடிக்கக் கூடாது என செல்வராகவன் மனைவியும் படத்தின் உதவியாளர்களுள் ஒருவருமான சோனியா (அகர்வால்) எதிர்ப்பு தெரிவித்தாராம்.

ஆயிரத்தில் ஒருவன் ஷூட்டிங்கின்போது, செல்வாவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் பரவியதால், இந்தப் புதிய படத்தில் ஆண்ட்ரியா தேவையில்லை என சோனியா கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஒரு பேட்டியில் ஆண்ட்ரியாவும், தான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றும், படம் ட்ராப் என்றும் கூறியிருந்தார்.

இந்தச் சிக்கல்களால், மாலை நேரத்து மயக்கம் கைவிடப்பட்டதாகவும், அடுத்து ஒரு தெ

அரசியல்..கட்சி.விஜய்காந்த் பயப்படுகிறார்.மன்னிப்பு!-விஜய் பரபரப்பு


"நான் அரசியலுக்கு வருவதை எண்ணி அண்ணன் விஜய்காந்த் பயப்படுகிறார் என்று என் அப்பா சொன்னதாக வந்த தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை. இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், விஜய்காந்தை அந்த செய்தி புண்படுத்தும் என்பதால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று நடிகர் விஜய் கூறினார்.

விஜய் தனிக்கட்சி துவங்குகிறார் என்று பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து சில வார இதழ்களுக்கும் அவர் பேட்டியளித்து வருகிறார். நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்ற ரீதியில்தான் அவரது பதில்கள் அமைந்துள்ளன.

இந் நிலையில், விஜய் அரசியலுக்கு வருவதையெண்ணி விஜய்காந்த் பயப்படுவதாக, விஜய்யின் தந்தை எஸ்ஏ.சந்திரசேகரன் கூறியதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இது விஜய்காந்த் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விஜய் அளித்துள்ள விளக்கம்:

நான் அரசியலுக்கு வர விரும்புவது உண்மையே. அதற்கான ஆலோசனைகளும் நடந்தன. இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

என்னுடைய ரசிகர்கள் என்மீது மிகப் பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். என் அரசியல் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் சக்திக்கு மீறிய உதவிகளை அவர்கள் செய்து வருகிறார்கள்.

இந்த நற்பணி மன்றங்களை அரசியல் அமைப்பாக மாற்றி, இன்னும் பெரிய அளவில் ஜனங்களுக்கு உதவணும் என்பது இவர்களின் விருப்பம். அவர்கள் சொல்வதில் உள்ள உண்மையும், நடைமுறை நியாயமும் எனக்குப் புரிகிறது.

என் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களுக்கும், அவர்களின் எதிர்காலத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக எனக்குள் திட்டம் இருந்தது.

அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் என்னை குடும்பத்தில் ஒருவனாக நினைக்கும் தமிழக மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய ஆசைப்படுகிறேன். அதனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளில், எனக்கும் உடன்பாடு ஏற்பட்டது உண்டு. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.

இது தொடர்பாக ரசிகர்களின் விருப்பத்தை மட்டுமல்லாமல், பொதுமக்களின் கருத்தையும் கேட்டு அறிய விரும்பினேன். இதற்காக சென்னையிலும், சில மாவட்ட தலைநகரங்களிலும் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. படித்த இளைஞர்கள், பெண்கள் என பல பிரிவினரிடம் கருத்துக்களை கேட்டு, என் மூளையில் பதிவு செய்து, அதற்கான தகுந்த நேரத்துக்காக காத்திருக்கிறேன்.

எடுத்தேன், கவிழ்த்தேன் என்று உடனடியாக அரசியலில் குதிப்பதிலும், கட்சி தொடங்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..!

சமீபத்தில் என் தந்தை அளித்த ஒரு பேட்டியில், என்னுடைய அரசியல் பிரவேசத்தை நினைத்து விஜய்காந்த் பயப்படுகிறார் என்று கூறியதாக செய்தி வந்துள்ளது.

நிச்சயம் இது உண்மையாக இருக்காது. காரணம் என் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டவர் விஜய்காந்த். சினிமாவில் எனக்கு பல உதவிகளை செய்தவர். அப்பாவின் நீண்டகால நண்பர். அவர் எங்கே, நான் எங்கே? எங்கோ தப்பு நடந்து இருக்கிறது. அதற்காக, நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல வேறு யாருக்கும் நான் போட்டியாகவே, அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கும் விதத்திலோ இருக்கமாட்டேன். மக்களுக்கு நல்லது செய்யவே நான் அரசியலுக்கு வருகிறேன்... என்றார்.

வரும் 22ம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறாராம்.

Thursday, June 18, 2009

இஸ்லாமுக்கு எதிராக பேசியதாக ஷாருக் கான் மீது வழக்கு!

மும்பை : இஸ்லாம் மதத்தினரின் மனம் புண்படும்படியாகவும், இஸ்லாமுக்கு எதிராகம் பேசியதாக கூறி சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பந்த்ரா காவல் நிலைய முதுநிலை இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஜார்ஜ் கூறுகையில், நடிகர் ஷாருக் கான் முஸ்லீம்களின் உணர்வுகள் புண்படும்படியாக பேசியுள்ளார். இதுகுறித்து பத்திரிக்கைளில் செய்தி வெளியாகியுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காலித் பாபு குரேஷி என்ற வழக்கறிஞர் புகார் கொடுத்தார்.

காலித் பாபு குரேஷி கொடுத்த புகாரில், நபிகள் நாயகம் குறித்து ஷாருக் கான் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது, மிகக் கடுமையான கருத்து அது என்று தனது புகாரில் கூறியிருந்தார்.

அதன்பேரில் தற்போது வழக்குப் பதிவு செய்து ஷாருக் கான் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம்.

ஷாருக்கான் தவிர அவரது பேச்சு இடம் பெற்ற பத்திரிக்கையின் வெளியீட்டாளர் மற்றும் அந்தக் கட்டுரையை எழுதியவர் ஆகியோர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஷாருக்கான் மீது மத உணர்வுகளை வேண்டும் என்றே திட்டமிட்டு அவமதித்தல், புண்படுத்துதல் மற்றும் ஒரே குறிக்கோளோடு பலரும் சேர்ந்து செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜார்ஜ் தெரிவித்தார்.

ராஜ்குமாருக்கு பெங்களூரில் 13 அடி வெண்கல சிலை!


மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருக்கு 2000 கிலோ வெண்கலத்தாலான 13 அடி சிலையை வைக்கிறது கர்நாடக அரசு.

கன்னட சினிமா மற்றும் அரசியலில் தனிப்பெரும் சக்தியாகத் திகழ்ந்தவர் ராஜ்குமார். இரு ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த (ஏப்ரல் 12, 2006) ராஜ்குமாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பெங்களூரில் பிரமாண்ட சிலை வைக்க கர்நாடக அரசு ஏற்பாடு செய்துவருகிறது.

ரூ.22 லட்சம் செலவில், 2000 கிலோ வெண்கலம் கொண்டு உருவாக்கப்படும் இந்த சிலையை வடிப்பவர் நாகராஜ் என்ற சிற்பி. இவர் ராஜ்குமாரின் பரம ரசிகராம்.

கடந்த ஆண்டே முடிந்திருக்க வேண்டிய இந்த சிலையின் பணிகள், கர்நாடக அரசு செலவுக்கு சரியாக பணம் கொடுக்காததால் தாமதமாகி விட்டதாம்.

சிலையின் இறுதிக்கட்டப் பணிகள் இந்த மாதம் முடிந்து விடும் என்றும், பெங்களூர் டவுன்ஹால் பார்க்கில் இந்தச் சிலையை நிறுவ தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் அ‌ஜித் பட படப்பிடிப்பு


மலேசியா அ‌ஜித்துக்கு ராசியான ஊர். இங்கு எடுக்கப்பட்ட பில்லா அவரது திரை வாழ்க்கையில் மிகப் பெ‌ரிய ஹிட்டாக அமைந்தது. தனது ராசியான ஊருக்கு படப்பிடிப்புக்காக நேற்று கிளம்பிச் சென்றார் அ‌ஜித்.

சிவா‌ஜி புரொட‌க்சன் தயா‌ரிப்பில் சரண் இயக்கும் அசல் படத்தில் தற்போது நடித்து வருகிறார் அ‌ஜித். சமீரா ரெட்டி அ‌ஜித்தின் ஜோடி. இரண்டாவது ஹீரோயினாக பாவனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன.

அசல் தாதா கதை. பழிவாங்கும் படலமும் படத்தில் உண்டு. பல வெளிநாடுகளில் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் சரண். முதல்கட்டமாக படத்தின் பாடல் காட்சிக்காகவும், சில வசனக் காட்சிக்காகவும் அ‌ஜித், சமீரா ரெட்டி, பாவனா உள்ளிட்ட அசல் டீம் மலேசியா சென்றுள்ளது.

அசலுக்கு பரத்வா‌ஜ் இசையமைக்கிறார். அறுபது நாட்கள் மலேசிய படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும் என்கின்றன அசல் அலுவலக வட்டார தகவல்கள். மலேசியாவில் அ‌ஜித் பட படப்பிடிப்பு

சினேகா போட்ட சண்டை


1990ல் வெளியாகி தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் ஹிட்டான படம் வைஜெயந்தி ஐபிஎஸ். விஜயசாந்தியை லேடி சூப்பர் ஸ்டாராக்கிய படம்.

இதன் ‌‌ரீமேக்கான பவானி ஐபிஎஸ்-ல் நடித்து வருகிறார் சினேகா. அடித்து வருகிறார் என்று சொல்வதுதான் ச‌ரியாக இருக்கும். அந்தளவுக்கு படம் நெடுக பைட் பண்ணியிருக்கிறார் புன்னகை இளவரசி.

கோட்டா ஸ்ரீனிவாசராவ், சம்பத், மனோ‌ஜ் கே ஜெயன், ரா‌ஜ்கபூர் போன்ற படா வில்லன்களுடன் இந்தப் படத்துக்காக சினேகா மோதியிருக்கிறார். சிக்கலான ரோப் பைட்டிலும் டூப்பே போடவில்லையாம் சினேகா.

தெலுங்கிலிருந்து தமிழக்கு வந்த படம்தான் வைஜெயந்தி ஐபிஎஸ். தெலுங்குக்கு பதில் ம‌ரியாதை செய்வதுபோல் வைஜெயந்தி ஐபிஎஸ்-ன் ‌ரீமேக்கான பவானி ஐபிஎஸ்-ஐ, தெலுங்கிலும் வெளியிடுகிறார்கள். தெலுங்கில் படத்தின் பெயர் Nenu Tanu Aame.

தளபதி தினேஷின் சண்டைக் காட்சிகள் ஆக்ரோஷமாக இருந்தாலும் அதனை ஆற்றுப்படுத்துவது போல் ஐந்து பாடல்களை கம்போஸ் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் தினா. ஐந்தில் கனவுப் பாடலும் உண்டு. காக்கி போட்ட சினேகா கனவுப் பாடலில் கவர்ச்சியாக வருகிறார் என்பதை சொல்லவும் வேண்டுமா?

ஹாலிவுட்டில் ர‌ஜினி ரோபோ


கேட்கிற செய்தியெல்லாம் கிர்ரடிப்பது போலவே இருக்கிறது. ஏழு நாள் தாடியும் எளிமையான உடையுமாக இமயமலைக்கு போகும் கெட்டப்பில் ர‌ஜினி பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் எந்திரன் பட வேலைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் எப்படி? இந்திய சினிமாவில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஹைடெக் பிரமாண்டத்தில்.

விஞ்ஞானி ர‌ஜினி அவரைப் போலவே ரோபோ ஒன்றை உருவாக்குவதும், ஒரு கட்டத்தில் உருவாக்கிய ர‌ஜினிக்கே அந்த ரோபோ கட்டுப்படாமல் காட்டுத் தர்பார் நடத்துவதும், ர‌ஜினி அதனை கட்டுக்குள் கொண்டு வருவதும்தான் எந்திரன் படத்தின் கதை.

படத்தின் முதுகெலும்பே ர‌ஜினி அவரைப் போலவே உருவாக்கும் இந்த ரோபோதான். அதனை ஹாலிவுட் நிறுவனமான ஸ்டேன் வின்ஸ்டன் அச்சு அசலாக ர‌ஜினி போலவே உருவாக்கியிருக்கிறது. டெர்மினேட்டர் வ‌ரிசைப் படங்களில் வரும் ரோபோக்களை வடிவமைத்ததும, உருவாக்கியதும் இந்த நிறுவனம்தான். இவர்கள் பணிபு‌ரிந்த முதல் இந்தியப் படம் என்ற பெருமை எந்திரனுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த ரோபோ உருவாக்கத்துக்காக ஸ்டேன் வின்ஸ்டன் ஸ்டுடியோவுக்கு சென்றிருக்கிறார் ர‌ஜினி. அங்கு அவரது உடலளவுகள் துல்லியமாக எடுக்கப்பட்டு அவரைப் போலவே ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக ஒன்றரை வருடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஸ்டேன் வின்ஸ்டன் ஸ்டுடியோ நிபுணர்கள்.

அடுத்த வருட இறுதியில் எந்திரன் திரைக்கு வந்துவிடும் என்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று இந்திய மொழிகளிலும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அசின் கேட்ட ரெண்டு கோடி? அரண்டு போன தயாரிப்பாளர்!


விஜய் கட்சி ஆரம்பிக்க போகிறார் என்பது ஏறத்தாழ முடிவாகிவிட்டது. முன்னணி வார இதழ்களில் முதல் பக்க செய்தியாகியிருக்கிறது அவரது புதிய பிரவேசம். இனிமேல் அவரது படங்கள் காமா சோமா என்றிருக்க முடியாதல்லவா?

விஜயின் 50 வது பட செய்திகள் ஓரளவுக்கு ஓய்ந்துள்ளது. இப்போது அதையும் தாண்டி ப்ளஸ் ஒன் படத்தை பற்றிய ப்ளஸ் ப்ளஸ் கேள்விகள். இவரது 51 வது படத்தை இயக்கப் போவது யார்? ஜெயம் ராஜா என்று இதுவரை பேசப்பட்டு வந்தது. ஆனால், படத்தை தயாரிப்பதாக சொல்லப்படும் ஆஸ்கர் ரவிச்சந்திரன், ஏ.ஆர்.முருகதாசை அழைத்து பேசினாராம். ஆனால் இவர் நினைத்த மாதிரி அவ்வளவு சுலபமாக முடிந்துவிடவில்லை இந்த பேச்சு வார்த்தை. இறுதியில் தன்னால் இயலாது என்று அவர் ஒதுங்கிக் கொண்டதாக தகவல்.

இதற்கிடையில் அல்டிமேட் குயின் அசினிடம் பேச்சு வார்த்தை நடத்தினாராம் ரவிச்சந்திரன். டிபன் பாக்ஸ் குண்டு மாதிரி, இது அசின் குண்டு! அவர் கேட்ட சம்பளம் அப்படியரு அதிர்ச்சியைதான் கொடுத்திருக்கிறது அவருக்கு. "ஹாலிவுட் வரைக்கும் போய்விட்டேன். நிறைய அட்ஜெஸ்ட்மென்ட்டுகளுக்கு பிறகுதான் டேட்ஸ் தர முடியும். அதனால், இரண்டு கோடி கொடுத்துவிடுங்கள்" என்றாராம்.

ஐயோ அவ்வளவா? என்று கேட்டால், உங்களுக்கு பிசினஸ் இந்தி வரைக்கும் போகுமே என்று திரும்ப பதில் வந்ததாம். இதனால் அசினுக்கும் டாடா சொல்லப்பட்டுவிட்டதாக கேள்வி.

இன்னும் விதையே போடலே. அதுக்குள்ளே அறுவடைய பற்றி பேச ஆரம்பிச்சாச்சு. ஹ¨ம், இதுதான் மாஸ் ஹீரோக்களோட மகிமை?

தேவா குடும்பத்திலிருந்து... ஒரு புதிய குயில்!


குளிர் 100 டிகிரி படத்தின் பாடல்களை கேட்டவர்களுக்கு தெரியும், அது ஹாட் 100 டிகிரி என்று. முந்தைய இசையமைப்பாளர்கள் யாருடைய சாயலும் இல்லாமல் ஆர்மோனிய பொட்டிக்கு சிறகு முளைக்க வந்த அந்த இளைஞர் போ போ சஷி. இன்னிசை தென்றல் தேவா குடும்பத்திலிருந்து வந்திருக்கும் நாலாவது தேவ கானம் இவர்.

அதென்ன போ போ சஷி? "என்னோட பேரு சஷி காந்த். நண்பர்கள் சின்ன வயசிலேர்ந்து கூப்பிடுற செல்லப் பேரு இது. அதனால்தான்" என்றவர் சற்று தயங்கி தயங்கி, அதே நேரத்தில் தனது இசையை போலவே இனிமையாக பேச ஆரம்பித்தார். "பொற்காலம் தொடங்கி, வியாபாரி வரைக்கும் பெரியப்பா தேவா குழுவிலே கீ போர்டு பிளேயராக இருந்தேன். அவருடைய பக்தி பாடல் ஆல்பத்திலே பாடியும் இருக்கேன். என்னோட லட்சியம் மியூசிக் டைரக்டரா ஆகணும் என்பதைவிட, ஹிப் ஹாப் சிங்கரா ஆகணும்ங்கிறதுதான். அதுக்காகதான் என்னோட கெட்டப்பும் இப்படியிருக்கு"

"திடீர்னு ஒரு நாள் காலையிலே பதினொரு மணிக்கு, புதுசா ஒருத்தர் படம் பண்ணுறாங்க. மியூசிக் பண்றியான்னு ஃபிரண்டு கேட்டாரு. சொன்ன இடத்துக்கு போனா, அங்கே ஒரு பொண்ணு. சாதாரணமாகவே நான் கூச்ச சுபாவம். அவங்க பெண்ணாயிருந்ததால் ரொம்ப பேசவே இல்லை. ஆனா கையோடு கொண்டு போயிருந்த டெமோவை கேட்டுட்டு நீங்களே மியூசிக் பண்ணுங்க என்று சொன்னாங்க. அவங்கதான் குளிர் 10 டிகிரி படத்தின் இயக்குனர் அனிதா உதீப். பாடல்கள் வெஸ்டன் ஸ்டைலில் இருக்கணும்னு சொன்னதோட சரி. மற்றபடி எந்த குறுக்கீடும் இல்லாம சுதந்திரமா வொர்க் பண்ணினேன்" என்றார் போ போ சஷி.

தமிழசினிமாவிலிருந்து ஏராளமான பாராட்டுகள். ஆனாலும் சஷியின் அடுத்த படங்கள் தெலுங்கில்தான். இப்போது ஒரே நேரத்தில் இரண்டு தெலுங்கு படங்களுக்கு இசையமைக்கிறார். அதில் ஒன்று நடிகை பூமிகாவின் சொந்தப்படம். குளிர் 100 ல் என்னோட தம்பியும், பிரபல நடிகருமான ஜெய்தான் டிராக் பாடினார். கண்டிப்பா என் இசையில் ஒரு பாடலையாவது அவரை பாட வைப்பேன் என்றவரிடம், தேவான்னா கானா, ஸ்ரீகாந்த் தேவான்னா குத்துப்பாட்டு. நீங்க...? என்றோம்.

பளிச்சென்று பதில் வந்தது அவரிடமிருந்து. "ஹிப்..ஹாப்!" இப்போது அவர் தயாரித்துக் கொண்டிருக்கும் ஆல்பத்தின் பெயர் தக்லாஸ்.

அது வேற உலகம்ப்பா....!

நடிகை ஸ்ரீதேவி திருமணம் முடிந்தது - ரஜினி, கமல் நேரில் வாழ்த்து

நடிகர் விஜயகுமார் - மஞ்சுளாவின் இளைய மகள் ஸ்ரீதேவிக்கும், ஆந்திரா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த நரசிம்மராவ்-உமா தம்பதியரின் மகன் ராகுலுக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடந்தது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடந்த இந்த திருமணத்துக்கு காலை 7.30 மணிக்கே மனைவி லதாவுடன் வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

புதுமணத் தம்பதிகளை ஆசீர்வதித்த ரஜினி, அவர்களுக்கு தனது பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.

அதேபோல நடிகர் கமல்ஹாசனும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதித்தார்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் , நடிகர்கள் பிரபு, பாக்யராஜ், சத்யராஜ், ராதாரவி, தியாகு, சின்னி ஜெயந்த், வையாபுரி, விஜயக்குமார், நடிகைகள் மீனா, பூர்ணிமா, வாணிஸ்ரீ, சங்கவி, மகேஷ்வரி, தயாரிப்பாளர் அமுதா துரைராஜ், தொழிலதிபர் பழனி ஜி பெரியசாமி உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் வந்திருந்து வாழ்த்தினார்.

நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் , ராதாரவி ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர் சங்கம்: சரத்-ராதாரவி மீண்டும் போட்டி

நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் சரத்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது.

நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வரும் ஜூலை 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

ஆரம்பத்தில் இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், மாநில அரசியலில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறிவந்தார் சரத் குமார்.

ஆனால் தனது முடிவை அவர் மாற்றிக் கொண்ட அவர் இன்று மனு தாக்கல் செய்தார். அதே போல ராதா ரவி மீண்டும் பொதுச் செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.

துணைத் தலைவர் பதவிக்கு விஜய்குமார், மனோரமா ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு சந்திரசேகரும் மனு தாக்கல் செய்தனர்.

கமிட்டி உறுப்பினர் பதவிக்கு சத்யராஜ், மும்தாஜ், எஸ்.வி.சேகர், குயிலி, சத்யபிரியா, மயில்சாமி, சிஐடி சகுந்தலா, சின்னி ஜெயந்த் ஆகியோர் மனு செய்தனர்.

நடிகர் சங்கத்தில் மொத்தம் 3200 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 2,636 பேருக்கு ஓட்டுரிமை உண்டு.

தலைவர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் சரத், ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.

வேலைக்காரிதான் என் கணவரை தூண்டியிருப்பார்-ஷைனியின் மனைவி


மும்பை: எனது கணவர் 100 சதவீதம் அப்பாவி. அவர் யாரையும் கற்பழிக்கவில்லை. வேலைக்காரிதான் எனது கணவரை தூண்டிவிட்டு உடலுறவுக்கு அழைத்திருப்பார் என்று பாலிவுட் நடிகர் ஷைனி அகுஜாவின் மனைவி அனுபமா கூறியுள்ளார்.

மும்பையில் உள்ள பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அனுபமா அகுஜா. அப்போது தனது கணவரை தான் நம்புவதாகவும், அவருக்குத் துணையாக இருப்பேன் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து அனுபமா கூறுகையில், வேலைக்காரியை ஷைனி கற்பழித்திருப்பார் என்பது அப்பட்டமான பொய். அதற்கு சான்ஸே இல்லை. எனக்கு எனது கணவரை 15 வருடங்களாக தெரியும். அவர் 100 சதவீத அப்பாவி.

அவர் எனது நல்ல நண்பர், எனது உயிர். அவரால் யாரையும் கற்பழிக்க முடியாது.

சிலர் சேர்ந்து செய்த சதியால்தான் அவர் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு எதிராக யார் சதி செய்கிறார்கள் என்பதை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. அதை போலீஸார்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர் குற்றமற்றவராக விடுதலை ஆவார் என்று முழுமையாக நம்புகிறேன் என்றார் அனுபமா.

மருத்துவப் பரிசோதனையில் ஷைனி குற்றம் [^] இழைத்தது உண்மைதான் என்று தெரிய வந்தால் என்ன செய்வீர்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது கோபத்துடன், சூரியனால் மேற்கில் உதிக்க முடியுமா. எனக்கு எனது கணவர் மீது முழு நம்பிக்கை உள்ளது. நான் அவருடைய பெருமைக்குரிய மனைவி என்றார் அனுபமா.

இதற்கிடையே, ஜூலை 2ம் தேதி வரை ஷைனியை சிறையில் அடைக்க மும்பை [^] கோர்ட் இன்று உத்தரவிட்டது.

இன்றுடன் ஷைனியின் சிறைக்காவல் முடிவடைந்தது. இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 2ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Wednesday, June 17, 2009

நடிகை ஸ்ரீதேவி திருமணம்


நடிகை ஸ்ரீதேவிக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ராகுலுக்கும் நாளை திருமணம் நடக்கிறது. திரையுலக பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி அந்தஸ்துக்கு உயர்ந்தவர்கள் மிகச் சிலரே. அவர்களில் ஒருவர் விஜயகுமார், மஞ்சுளா தம்பதியின் கடைசி மகள் ஸ்ரீதேவி.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் கதி‌ரின் காதல் வைரஸ் படத்தின் மூலம் கதாநாயகியானார். தொடர்ந்து தித்திக்குதே, தேவதையை கண்டேன் படங்களில் நடித்தவர், சில தெலுங்குப் படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.

இவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ராகுலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சென்னை வானகரம் எல்.பி.ஆர். கார்டன்ஸ் பகுதியிலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நாளை இவர்கள் திருமணம் நடக்கிறது.காலை ஏழு முப்பதுக்கு திருமணமும் அதனைத் தொடர்ந்து ஒன்பது மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற இருப்பதாக விஜயகுமார் தெ‌ரிவித்தார்.

மணமக்களுக்கு நமது வாழ்த்துகள்.

சூர்யாவுக்கு கதை சொன்ன வெற்றிமாறன்


ஆடுகளம் படத்தை எடுக்க ஏன் இத்தனை நாட்கள்? வெற்றிமாறனிடம் கேட்டதற்கு, ஆடுகளம் மதுரை பின்னணியில் தயாராகும் படம். நான் சென்னை ஆள். மதுரை பாஷை தெ‌ரிந்து படம் எடுக்க வேண்டியிருக்கு. அதுதான் லேட் என்றார்.

மதுரையில் நடக்கும் படப்பிடிப்புக்கு நடுவில் சென்னை வந்த வெற்றிமாறன், சூர்யாவை சந்தித்து அவுட் லைன் ஒன்றை கூறியிருக்கிறார். இந்த அவுட் லைன் சூர்யாவுக்கு பிடித்திருக்கிறது. கதையை டெவலப் செய்யுங்கள் என்று வெற்றிமாறனிடம் அவர் கூறியிருக்கிறார். ஆடுகளத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் இதுவாகவே இருக்கும் என்கிறார்கள்.

இந்தப் படத்தை மாசிலாமணி படத்தை தயா‌ரித்திருக்கும் கல்பாத்தி எஸ் அகோரம் தயா‌ரிப்பார் என்று தெ‌ரிகிறது.

ஜூலையில் பிலிம்பேர் விருது விழா


தேசிய விருதுக்கு அடுத்து இந்தியாவில் மதிப்பு வாய்ந்ததாக கருதப்படும் விருது, பிலிம்ஃபேர் பத்தி‌ரிகை வழங்கும் பிலிம்ஃபேர் விருதுகள். முதலில் இந்தி சினிமாவுக்கு மட்டுமே இந்த விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. சில வருடங்களாக தென்னிந்திய திரைப்படங்களுக்கும் பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டுக்கான விருதுகள் எங்கு எப்போது வழங்கப்படுகின்றன என்பது குறித்து நேற்று நடந்த பத்தி‌ரிகையார்கள் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. விழா குறித்து பேசிய பிலிமஃபேர் பத்தி‌ரிகையின் ஆசி‌ரியர் ‌ஜித்தேஷ் பிள்ளை, ஜூலை 31 ஆம் தேதி கடந்த ஆண்டுக்கான விருதுகள் ஹைதராபாத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்படும் என்றார்.

பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும். சென்ற ஆண்டு சென்னையில் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. இந்தமுறை ஹைதராபாத். இந்த சுழற்சி முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று ‌ ஜித்தேஷ் பிள்ளை குறிப்பிட்டார். இந்த அறிவிப்பின்போது நடிகை சினேகாவும் உடனிருந்தார்.

கதாநாயகனாகும் கலாபவன்மணி

காமெடி, வில்லன் இரண்டையும் கலந்துகட்டி அடிப்பதில் கலாபவன்மணி வித்தகர். ர‌ஜினியின் எந்திரன் படத்திலும் அப்படியொரு வேடத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறாராம் மணி. சரணின் மோதி விளையாடு, சாமியின் ச‌ரித்திரம் என மேலும் இரு படங்கள் இவர் கைவசம் இருக்கிறது.

வில்லனாக அறிமுகமாகி, காமெடியனாக கால் பதித்து இரண்டு மூன்று படங்களில் ஹீரோவாகவும் நடித்துவிட்டார் மணி. ஆனால், மலையாளத்தைப் போல் தனி ஹீரோவாக எந்த தமிழ்ப் படத்திலும் இதுவரை நடித்ததில்லை. அந்தக் குறையும் விரைவில் மாறப் போகிறது.

ச‌ரித்திரம் படத்தில் மணியின் நடிப்பைப் பார்த்த சாமி, தனது அடுத்தப் படத்தில் மணியையே ஹீரோவாக்க முடிவு செய்திருக்கிறார். கதைக்குதான் நடிகன், நடிகனுக்காக கதை கிடையாது என கறாராக கூறி வருகிறவர் சாமி. அந்த தன்னம்பிக்கையின் வெளிப்பாடுதான் இந்த தீர்மானம். வாழ்த்தி வரவேற்போம்.

ஜாலி ப்ளஸ் ஆக்ஷன்! ஜீவாவின் புது முடிவு

இனி தலைவிரி கோலமாக பார்க்க முடியாது ஜீவாவை. அதிலும் அந்த தடித்த கண்ணாடி மேல் நிரந்தர கோபமே வந்திருச்சு அவருக்கு. போதும் சார். ரொம்ப போரடிச்சிருச்சு. அழுது புரண்டு நடிச்சா இப்போ யாரு பார்க்கிறாங்க. டிரெண்டு மாறிடுச்சு. நானும் அதுக்கேத்த மாதிரி நம்ம டிரெண்ட்டை மாத்திட்டேன் என்கிறார் தெளிவாக.

கதைகேட்க அமரும் போதே "நல்ல என்டர்டெயினிங்கான சப்ஜெக்ட் இருந்தா மட்டும் சொல்லுங்க" என்கிறாராம். எஸ்எம்எஸ் சரியா போகலேன்னு சிலர் நினைச்சிட்டு இருக்காங்க. ஆனால், அந்த படத்திற்கு பிறகு விநியோகஸ்ர்கள் என்மேல நிஜமாகவே ஒரு மரியாதையான அன்பு செலுத்த ஆரம்பிச்சிட்டாங்க. ஏன்னா எல்லா இடத்திலேயும் பணம் போட்டவங்களுக்கு லாபம். நானும் இனிமே அது மாதிரி ஜாலி ப்ளஸ் ஆக்ஷனுக்கு இறங்கிட்டேன் என்றார்.

காட்டிலே ரொம்ப வலிமையுள்ள ரெண்டு மிருங்கள் சிங்கம் புலிதான். அதே வலிமையுள்ள இரண்டு கேரக்டரில் நானே நடிச்சிருக்கேன். முதல் தடவையா டபுள் ஆக்ட் பண்றேனா, லேசா நடுங்குது. ஆனால், ரொம்ப ஜாலியா போயிட்டு இருக்கு படப்பிடிப்பு. இந்த படத்திற்காக நிறைய ஹோம் வொர்க் பண்ணியிருக்கேன். கடல் தண்ணியிலேயே கிடந்து ஊறியிருக்கேன். ஊரே சுனாமின்னு பயந்து ஓடினப்போ, தனியாளா தண்ணியிலே கிடந்து நீச்சல் அடிச்சிருக்கேன். படத்தை பாருங்க, வேற ஜீவா தெரிவான்" என்கிறார் தன்னம்பிக்கையோடு.

பாலா தாடி வளர்க்க சொல்லியிருக்கிறாராம். நம்ம முகத்துக்கு முழுக்க வளராது. இருந்தாலும், அவரு மனசிலே ஒன்ணு வச்சிருப்பார் என்று காத்திருக்கிறார் ஜீவா. எதற்கு? சிங்கம் புலி, கச்சேரியை முடிச்சிட்டு தாடி வளர்க்க!

அவார்டு கிடைக்கும்! ஆன்ட்ரியா நம்பிக்கை


செல்வராகவனும் ஆன்ட்ரியாவும் ஒரே மேடையில் இருந்தால், இரண்டு பேருக்குள்ளும் 'திருட்டுப் பார்வை' இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பது இயற்கைதானே? அந்த பிரஸ்மீட்டில் ஒவ்வொரு நிருபரும் 'குறிப்பறிந்து' நோக்க, அடக்கமாக இருந்து அத்தனை பேரையும் சேதுவாக்கினார் ஆன்ட்ரியா!

ஆன்ட்ரியாவுக்கு என்ன கேரக்டர் என்றெல்லாம் வாயை பிடுங்கினாலும், ஒரு க்ளுவும் கொடுக்கவில்லை செல்வாவும். இந்த நிலையில்தான் பிரஸ்மீட் முடிந்து வெளியே வந்த ஆன்ட்ரியாவை நைசாக ஓரம் கட்டி விசாரித்தார் ஒரு மூத்த நிருபர். "உங்களுக்கும் செல்வாவுக்கும் லவ். விஷயம் தெரிஞ்ச சோனியா அகர்வால், உங்களை கூப்பிட்டு கண்டிச்சதா தகவல். இதெல்லாம் நிஜமா, பொய்யா?"

அவ்வளவுதான், பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்ட ஆன்ட்ரியா, "எங்க ரெண்டு பேருக்கும் லவ்வுன்னா நாங்க ஒன்னா இருக்கிற ஒரு போட்டோவையாவது காட்டுங்க பார்ப்போம். அப்படியெல்லாம் இல்லே. இது திட்டமிட்டு கிளப்பிவிடப்பட்ட வதந்தி. நான் காதலிக்கிற ஆண் எனக்கு மட்டுமே சொந்தமானவராக இருக்கணும் என்று நினைக்கிறவ நான். ஆனா அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆயிருச்சு. நான் எப்படி அவரை காதலிப்பேன். அதுமட்டுமில்லே, நான் யாரை காதலிச்சாலும் வெளிப்படையா தைரியமா சொல்வேன். அதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை" என்றார்.

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திற்கு பிறகு நிறைய படங்களை வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளியதற்கு காரணம், இவர் விரும்பிய கதைகள் அமையாததுதானாம். "ஆயிரத்தில் ஒருவன் வந்த பிறகு நல்ல நடிகை என்ற பேர் கிடைக்கும். சொல்ல முடியாது, அவார்டு கிடைத்தாலும் ஆச்சர்யமில்லே" என்றார்.

மற்ற நடிகைகளை பிடித்துக் கொண்ட குட்டை பாவாடை கலாச்சாரம் ஆன்ட்ரியாவையும் விடவில்லை என்பதையும் இந்த இடத்தில் ஜொள்ளியே ஆகணும்!

கோவா' குழு சென்னை திரும்பியது!


'கோவா' படத்தின் படப்பிடிப்புக்காக கோவா சென்றிருந்த இயக்குநர் வெங்கட்பிரபு, ஹீரோ ஜெய் உள்ளிட்ட குழுவினர் பெரும்பான்மைக் காட்சிகளை படமாக்கிக் கொண்டு சென்னை திரும்பிவிட்டனர்.ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தயாரிக்கும் இந்த படத்தில் நாயகிகளாக பூஜா, ஸ்னேகா ஆகியோர் நடிக்கின்றனர்.

கடைசியாக தான் நினைத்த மாதிரியே ஒரு ஹாலிவுட் நாயகியையும் படத்தில் இடம் பெறச் செய்துவிட்டார் வெங்கட். ஹாலிவுட் நடிகை ஜூலியானா பைன் இதில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.ஆங்கிலத்தில் வெளியான அமெரிக்கன் பை (American Pie) படத்தை உல்டாவாக்கி இந்த 'கோவா'வை வெங்கட் ரெடி செய்வதாகவும் ஒரு பேச்சிருக்கிறது.

வெங்கட் பிரபுவிடம் கேட்டால், "ஏதாவது ஒரு இன்ஸ்பிரேஷன் வேணும்ல... இந்தப் படத்துக்கும் சில ஹாலிவுட் படங்கள் இன்ஸ்பிரேஷனா இருக்கிறதுல என்ன தப்பு!", என்கிறார் தனது அக்மார்க் அப்பாவி சிரிப்புடன்.

ஜனங்க சிரிச்சா போதும், நீங்க என்ன பண்ணாலும் சரிதான்!

பொன்விழா ஆண்டில் கமல்: ஆகஸ்டில் மாநாடு?


வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி வந்தால் கமல் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆம்... பல ஏற்ற இறங்கங்களைக் கண்ட தனது நடிப்பு வாழ்க்கையின் பொன்விழா ஆண்டில் இருக்கிறார் கமல் இப்போது.

5 வயது சிறுவனாக "களத்தூர் கண்ணம்மா” மூலம் தமிழில் அறிமுகமானவர் கமல். அதன் பிறகு சிறுவனாக மக்கள் திலகம் எம்ஜிஆரின் ஆனந்த ஜோதி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். வயது ஏற ஏற வாய்ப்புகள் குறைய, உதவி இயக்குநர், நடன உதவியாளர், ஸ்டன்ட் உதவியாளர் என பல வேலைகளை தனது 20 வயதுக்குள் பார்த்துவிட்டார் கமல். நிறைய நிறைய கற்றுக் கொண்டார்.

அதன் பிறகுதான் பாலச்சந்தரின் பொறுப்பில் வந்தார். துக்கடா வேடங்கள், வில்லன், எதிர்மறை நாயகன் என பல வேடங்கள் போட்டவர், அபூர்வ ராகங்களில் கதையின் நாயகனாக நடித்தார்.அதன் பிறகு நடந்ததெல்லாம் திரையுலக வரலாற்றுப் பக்கங்களில் நிச்சயம் மறைக்க முடியாத சாதனைகள்தான்.

இப்போது திரையுலகில் 50வது ஆண்டை நிறைவு செய்யப் போகிறார் கமல்.

இந்த பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் சிறப்புத் திரைப்படமாக உருவாகிக் கொண்டிருப்பதுதான் அவரது 'உன்னைப்போல் ஒருவன்'.

மாநாடு?


பொன்விழா படம் ஒருபக்கம் இருந்தாலும், ரசிகர்களான தங்களுக்கு உற்சாகம் தரும் விதத்தில் ஏதாவது கமல் செய்தாக வேண்டும் என விரும்புகின்றனர்.எனவே பொன்விழா மாநாடு ஒன்றைக் கூட்டுமாறு கமலுக்கு நெருக்குதல் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த விழாவுக்கு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் போன்றவர்களை அழைக்கலாம் என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருகி்றது. அனைத்து மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான ரசிகர்களைத் திரட்டவும் யோசனை சொல்லியிருக்கிறார்களாம் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள்.ஆனால் மாநாடு மட்டும் வேண்டாம், அதற்கு அரசியல் முத்திரை விழுந்துவிடும் என்று கமல் இத்திட்டத்துக்கு இன்னும் ஒப்புக் கொள்ளவில்லையாம். எப்படியும் அவரைச் சம்மதிக்க வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளார்களாம் நற்பணி இயக்கத்தினர்.

ரத்ததானம்-ரஜினி ரசிகர்களுக்கு இணையதளம்!


ரத்த தானம் செய்வதற்காகவே புதிய இணையதளம் ஒன்றைத் துவக்கியுள்ளனர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள்.தமிழகமெங்கும் ரத்ததானம் செய்ய விரும்பும் ரசிகர்களை ஒருங்கிணைத்து இந்த இணையதளத்தை துவக்கியுள்ளனர்.

www.rajiniblood.com என்ற இந்த இணைய தளத்தை நெல்லையை சேர்ந்த ரஜினி ரசிகர் தாயப்பன், சிவகாசி ரசிகர்கள் பொன்ராஜ், ஆறுமுகம் ஆகியோர் துவங்கியுள்ளனர்.

அவசர தேவைக்கு ரத்தம் தேவைப்படுவோர் தங்களுக்கு தேவைப்படும் ரத்தத்தின் வகை மற்றும் எந்த மாவட்டத்தில் தேவை என்ற விவரத்தை அதில் தெரிவித்தால் உடனடியாக ரத்ததானம் செய்பவர்களுக்கு தெரிவிக்கப்படும். ஏராளமான ரசிகர்கள் ரத்ததானம் செய்ய பெயர்களை இதில் பதிவு செய்து வருகிறார்கள். எனவே அவர்கள் மூலம் தேவையான ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

இது முழுக்க முழுக்க இலவச சேவை.

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நேற்று முதல் இந்த இணைய தளம் [^] செயல்படத் துவங்கியுள்ளது. இந்த தளத்திலேயே யார் ரத்ததானம் செய்யலாம், அதனால் ஏதாவது பாதிப்பு உண்டா போன்ற முக்கிய குறிப்புகளையும் தந்துள்ளனர்.

இதுகுறித்து நெல்லை ரசிகர் தாயப்பன் கூறியதாவது:

இப்படி ஒரு அமைப்பை கடந்த டிசம்பர் 12ம் தேதியே துவங்கிவிட்டோம். இது முழுக்க முழுக்க இலவச சேவையே. ரத்ததானம் செய்யும் ஆர்வமுள்ள சக ரசிகர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சி இது என்றார்.

ஒரு வழியாய் டப்பிங் பேசினார் மாதவன்!

ஒரு வழியாக 'நான் அவள் அது' படத்துக்கு டப்பிங் பேசி முடித்துவிட்டார் மாதவன்.

கவுரவ் ஷர்மா இயக்கும் நான் அவள் அது படத்திற்கு பேசிய சம்பளம் தராததால் டப்பிங் பேச முடியாது என பின்வாங்கினார் மாதவன்.இதனால் வேறு டப்பிங் கலைஞரை வைத்து மாதவனுக்கு டப் செய்து படத்தை வெளியிடப்போவதாக தயாரிப்பாளர் அறிவிக்க, உடனே நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் கவுன்சிலை நாடினார் மாதவன்.

படத்தின் தயாரிப்பாளர்களும் வி்டடுக் கொடுக்காமல் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு தங்கள் தரப்பு நியாயங்களைக் கூறினர்.கடைசியில் இருதரப்பினரையும் சமாதானப்படுத்திய தயாரிப்பாளர் சங்கம், விட்டுக் கொடுத்து போகும் போக்கைக் கடைப்பிடிக்குமாறும், இன்றைக்கு சினிமா உள்ள சிரமமான நிலையில் இதுதான் நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து டப்பிங் பேச ஒப்புக் கொண்ட மாதவன், பரணி ஸ்டுடியோவில் முழுவதுமாக பேசி முடித்தார். மாதவனின் மார்க்கெட் சற்று பிக்கப் ஆகியிருப்பதால், பேசியபடி சம்பளம் தரவும் தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொண்டனர்.

கொரியா போகும் ஞாபகங்கள்!

பா.விஜய் தயாரித்து, நாயகனாக நடித்துள்ள ஞாபகங்கள் திரைப்படம் கொரிய மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

வரும் ஜூலை 3ம் தேதி தமிழகம் மற்றும் உலகமெங்கும் வெளியாகும் ஞாபகங்கள் படத்தை கொரிய மொழியில் டப் செய்து வெளியிடும் வேலையில் விஜய்யின் கொரிய நண்பர்கள் சிலர் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனராம்.

கொரியாவில் இந்தியப் படங்களுக்கு அத்தனை மவுசா?

"ஆம்... இந்தியப் படங்களை அந்த நாட்டு மக்கள் விரும்பிப் பார்க்கிறார்களாம். குறிப்பாக காதல்-ஆக்ஷன் கதைகள் அங்கு வெகுவாக ரசிக்கப்படுவதாகச் சொன்னார்கள். ரஜினியின் சில படங்கள் கூட அங்கே சிறப்பாக ஓடியிருக்கின்றன. சந்திரமுகிக்கு அங்கே பெரிய வரவேற்பிருந்தது.

ஞாபகங்கள் ஒரு அழகான காதல் கதை. எனவே இந்தப் படத்துக்கு மொழிகளைத் தாண்டிய வரவேற்பு நிச்சயம்..", என்கிறார் படத்தின் இயக்குநர் ஜீவன்.

இந்தப் படத்தில் பா.விஜய்க்கு ஜோடியாக ஸ்ரீதேவிகா நடித்துள்ளார்.

''எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை''...


இன்று உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சிங்காரமாக சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் 'கவியரசர்' என்று எம்ஜிஆரின் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசவைக் கவி கவியரசர் கண்ணதாசனின் எண்பத்தி இரண்டாவது (24.06.1927) அவதார நாள்.

தமிழ் எழுத்துலகில் ஆரம்பித்து திரை உலகத்திலே புகுந்து கலைவாணி இட்ட கட்டளையை கட்சிதமாக செய்து முடித்த ஒரே கவியரசன் என்ற பெயருக்கு தகுதியானவர்.

இவர் வருகைக்கு பின்புதான் திரையுலகத்திலே பாடல்கள் பெருமை பெற்றன. இன்றுவரை இந்தக்கவியரசை வெல்ல ஒருவரும் வரவில்லை. திரை உலகில் பெயர் பெற்றாலும் தன் தமிழ்ப்பற்றையும் சரியான முறையிலே பதிவு செய்தவர்.

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது தொடங்கி, அங்கு தமிழருக்கு இன்னல்கள் ஏற்பட்டபோதெல்லம் குரல் கொடுத்தவர் கவியரசர்.

தமிழர்கள் மரபிலே எத்தனையோ கவிஞ்சர்கள் தோன்றி மறைந்திருக்கின்றர்கள். ஆனாலும் தமிழர்கள் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தன்னுடைய எழுத்துக்களை, பாடல்களை, படைப்புக்கள் வழங்கியவர் கண்ணதாசன்.

அவர் எழுத்துக்களில் இதுதான் சிறந்தது என்று சொல்லிவிட முடியாது எல்லா எழுத்துக்களும் ஒவ்வொரு தரப்பினர்க்கும் அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றால் போல் அமைந்ததுதான் கண்ணதாசனின் சிறப்பு.

"அர்த்தமுள்ள இந்துமதம்".. இது ஒரு உபயோகமுள்ள வாழ்க்கைக்கு அர்த்தத்தை சொல்லித்தரும் அற்புதமான காலக் களஞ்சியம்.

தனி ஒரு மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அவரவர் சந்திக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் இன்பமாகட்டும், துன்பமாகட்டும், காதல், பிரிவு, கடமை, தொழில், சோதனகள், வேதனைகள் ஏற்பட்டாலும் அங்கே ஆறுதல் சொல்வது போல் இவரது பாடல்கள் வந்து துணை நிற்கும்.

இது தான் கண்ணதாசனின் சிறப்பு.

உலகத் தமிழர்கள் பெருமைப்படும்படி தமிழுக்கென்று பல படைப்புக்களை தந்துவிட்டுச் சென்ற கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று.

''நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'' என்று சொன்னது போலவே இன்றும் வாழ்ந்து கொண்டு மற்றவர்க்கு தனது பாடல்களால் ஆறுதல் தந்து கொண்டிருக்கும் கவியரசரே நீங்கள் இந்தத்தமிழ் உலகம் வாழும் வரை வாழ்வீர்கள்.

உங்கள் படைப்புக்கள் பல மொழிகளில் இடம்பெற்று உலகமக்கள் மத்தியிலே உங்கள் கருத்துக்கள் சென்றடைய இருக்கின்றது என்பதை இந்த இடத்திலே குறிப்பிட விரும்புகிறோம்.

ஐரோப்பிய மொழிகளில் வெளியாக இருக்கும் கண்ணதாசன் படைப்புக்கள் உலகத் தமிழருக்கெல்லாம் பெருமை தேடித்தரும் என்பதில் பெருமையடைகின்றோம்.

முத்திரை


ஏஎஸ்ஏ புரொட‌க்சன்ஸ் அண்டு எண்டர்பிரைசஸ் தயா‌ரித்திருக்கும் படம் முத்திரை. வில்லனாக இதுவரை நடித்து வந்த டேனியல் பாலா‌ஜி இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

மறைந்த இயக்குனர் ‌ஜீவாவின் அசிஸ்டெண்டும், அவரது படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருப்பவருமான ஸ்ரீநாத் முத்திரையை இயக்கியிருக்கிறார். இயக்குனராக ஸ்ரீநாத்துக்கு இது முதல் படம்.


டேனியல் பாலா‌ஜியுடன் இன்னொரு ஹீரோவாக நிதின் சத்யா நடித்துள்ளார். படத்தைப் பற்றி குறிப்பிடும் ஸ்ரீநாத், அரசியல் கலந்த ஆ‌க்சன் படம் என்று முத்திரையை வகைப்படுத்துகிறார்.

டேனியல் பாலா‌ஜி ஹைடெக் திருடனாக இதில் நடித்துள்ளார். நிதின் சத்யா லோக்கல் திருடன். டேனியல் பாலா‌ஜியின் காதலி லட்சுமிராய். நிதின் சத்யாவுக்கு புதுமுகம் மஞ்ச‌ரி. இந்த நால்வரும் எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள். அந்தப் பிரச்சனை என்ன? அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதே படத்தின் கதை.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தின் கதையை எழுதியிருப்பவர் ‌ஜீவாவின் மனைவி அனீஸ். சலீம் ஒளிப்பதிவு. கலை தோட்டா தரணி. எடிட்டிங் ஆண்டனி.

ஒரு பாடலுக்கு இந்தி நடிகை ராக்கி சாவந்த் ஆடியிருக்கிறார். டேனியல், லட்சுமிராய் முத்தக் காட்சியும் படத்தில் உண்டு. கிஷோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். ஆ‌க்சன் மற்றும் கிளாமர் காட்சிகளுக்காக சென்சார் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் 19ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

மும்பை ஹீரோயின்கள் வேண்டாம் ராதாரவி அட்வைஸ்...


ஆடுபுலி ஆட்டம், வீரமும் ஈரமும் என்று சஞ்சய் ராம் படங்கள் என்றாலே வெட்டு குத்து சமாச்சாரங்கள்தான்! ஆனால் இவர் புதிதாக இயக்கிக் கொண்டிருக்கும் சுர்லா படத்தில் காமெடியும் இருக்கிறதாம். பொதுவா நான் பேசும்போது ரொம்ப காமெடியா பேசுறேன்னு சொல்வாங்க. இவ்வளவு காமெடியா பேசுற நீங்க, ஏன் ஆக்ஷன் படமா எடுக்கிறீங்க? என்று கேட்டவர்களும் உண்டு. இந்த படத்திலே ஆக்ஷனும் காமெடியும் ஈக்குவலா இருக்கும் என்றார் சஞ்சய்ராம். இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிப்பது கஞ்சா கருப்பும், ரமேஷ் கண்ணாவும்தான். காதல் சுகுமாரும் இருக்கிறார். இவருக்கு காமெடியுடன் கூடிய வித்தியாசமான கேரக்டராம்.

அன்புள்ள ரஜினிகாந்த், சோலைக்குயில் போன்ற படங்களை தயாரித்த அழகன் தமிழ்மணி இப்படத்தை தயாரிக்கிறார். நான் கடவுள் படத்தில் ஆர்யாவுக்கு அப்பாவாக நடித்திருப்பாரே, அவர்தான் இவர்! இந்த படத்திலும் மிக முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். இவரது மகன் அஜய் கிருஷ்ணா சுர்லாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.

முக்கியமான காரியங்களில் மூத்தவர்களின் ஆசிர்வாதம் முக்கியமாச்சே? உன்னோட உயரத்திற்கும் கம்பீரத்துக்கும் ஆக்ஷன் படத்திலேதான் அறிமுகம் ஆகணும். நீ வந்து பிரேம்லே நின்னா எல்லாரையும் மறைச்சிடுவே. ஆக்ஷன் ஹீரோவாக நீ வந்தா, பெரிய பெரிய ஹீரோக்கள் மத்தியில் கூட உன்னால கம்பீரமா நிற்க முடியும் என்று அஜய் கிருஷ்ணாவை வாழ்த்தினார் நடிகர் சங்க செயலாளர் ராதாரவி. இந்த படத்தில் இவருக்கும் ஒரு முக்கியமான ரோல் கொடுத்திருக்கிறார் சஞ்சய் ராம். இவருக்காகவே ஸ்பெஷலாக ஒரு விக் தயார் செய்தாராம். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருக்கேன். இது மாதிரி ஒரு ரோலில் நடிப்பது இதுதான் முதல் முறை என்றார் ராதாரவி.

பிரஸ்மீட்டில் ராதாரவி பேசிய முக்கியமான விஷயங்களில் ரொம்ப முக்கியமான விஷயம் இது. தமிழ் படங்களில் நடிக்க மும்பையிலிருந்து ஹீரோயின்களை அழைச்சிட்டு வரணுமா? இங்கே தமிழ்லேயே நல்ல நல்ல பொண்ணுங்க இருக்காங்களே, அவங்களுக்கு வாய்ப்பு கொடுங்களேன். மும்பை ஹீரோயின்கள் நாலு நாள் ஷ§ட்டிங்கிற்கு வராமல் ஓடிட்டா கூட அவங்களை எங்கே போய் தேடுறது?

நூற்றில் ஒரு வார்த்தை! யோசிங்க இயக்குனர்களே....

படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய மம்முட்டி!

திரைப்படத் துறைக்கு வந்து இத்தனை ஆண்டுகளானாலும் இதுவரை சொந்தப் படம் தயாரிக்காதவர் மம்முட்டி.

இப்போது முதல் முறையாக 'பிளே ஹவுஸ்' என்ற பெயரில் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை அவர் தொடங்கியுள்ளார். புதிய படங்கள் தயாரிப்பது, படங்களை வினியோகம் செய்வது, நல்ல பிறமொழிப் படங்களை மலையாளத்தில் வெளியிடுவது போன்ற வேலைகளில் இந்த நிறுவனம் ஈடுபடும்.

இந்த நிறுவனத்தின் தொடக்க விழா சமீபத்தில் கொச்சியில் நடந்தது. பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி கூறுகையில்,

புதிய நடிகர்கள், புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள நிறுவனம்தான் பிளே ஹவுஸ். பிரபல இயக்கும் படங்களையும் தயாரிப்போம்.

இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடு ஜெயராம் நடித்துள்ள கானா கண்மணி படம்தான். இதனுடைய வெளியீட்டு உரிமையை நாங்கள் வாங்கியுள்ளோம் என்றார்.

Tuesday, June 16, 2009

விந்தியாவின் சீரியல் ஆசை? விட மறுக்கிறாரா கணவர்?

அச்சடிக்சு காயறதுக்குள்ளேயே வீடு மாறிடறாங்க. இந்த லட்சணத்திலே எங்கே பிரபலமானவர்களின் முகவரி டைரிய போட்டு, மத்தவங்க பாராட்ட வாங்கி...?ன்னு முணுமுணுத்தார் டைரி பார்ட்டி ஒருவர். இதே லட்சணம்தான் நடிகைகளின் கல்யாண மேட்டர்களிலும்!

போன பொண்ணு திரும்பி வந்தா, புது குணத்தோட என்று சொல்கிற மாதிரி இருக்கிறது ஒவ்வொரு நடிகையின் டைவர்ஸ் செய்திகளும். அதுவும் வெளிநாட்டு தொழிலதிபர்களை கட்டிக் கொள்கிற நடிகைகள் ரொம்ப ஃபாஸ்ட். பிளைட்டில் போய் இறங்குவதற்குள் பிரச்சனை முற்றி அதே பிளைட்டில் திரும்புகிற அளவுக்கு ரொம்ப பக்குவம்!

இவ்வளவு பீடிகை எதுக்கு? நேரடியாக விஷயத்துக்கு வந்திடலாம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கல்யாணம் பண்ணிக் கொண்டு போன நடிகை விந்தியா வீட்டில் விரிசல் என்கிறார்களாம். சீக்கிரம் டைவர்ஸ்சுக்கு அப்ளை செய்யப் போகிறாராம். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டவருக்கு (வாய்ப்பு இருந்தால்தானே நடிப்பதற்கு) மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை. அதற்கு கணவர் குறுக்கே நிற்கிறாராம். அட, தேவயானி, சங்கவி, மீனா மாதிரி சீரியலிலாவது நடிக்க அனுமதித்திருக்கலாம். அதுவும் இல்லை.

டைவர்சுக்கு பிறகு? ஒன்று முழு நேர அரசியல். இல்லவே இருக்கவே இருக்கு, சீரியல்! வாங்கம்மா வாங்க...

கைவிடப்பட்ட திருத்தணி? பரத்-பேரரசுவின் முரசு....!

இலவு காத்த கிளியை போல விஜயின் 50 வது படத்திற்கு காத்திருந்த பேரரசுக்கு கிள்ளி போட்ட வடை கூட கிடைக்கவில்லை. விஜய் கிடைப்பார் என்ற ஒரே காரணத்துக்காக பரத் நடிக்கும் திருத்தணி படத்தை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தவர், இப்போது ஹாய்... என்றபடியே பரத்தின் கூடாரத்திற்கு திரும்பி விட்டாராம்.

திருத்தணியை இயக்குவதோடு தயாரிப்பதும் பேரரசுதான் என்பதே முன்பு இவர்கள் போட்டிருந்த பிளான். ஆனால் பைனான்சியல் பொசிஷன் முன்பு போல் சாதகமாக இல்லை பேரரசுக்கு. வேறு தயாரிப்பாளர் கிடைத்தால் ஓ.கே என்று காத்திருந்தவருக்கு பரத்தே ரூட் போட்டு கொடுத்திருக்கிறார் இப்போது.

தன்னை முதன் முதலாக ஆக்ஷன் ஹீரோவாக்கிய ஷக்தி சிதம்பரத்தின் கம்பெனிக்கே பேரரசுவை தள்ளி விட்டிருக்கிறார். பழனி படத்தில் பரத்தை ஹீரோவாக்கி நாலு காசு பார்த்த ஷக்தி சிதம்பரத்திற்கு மீண்டும் அவர் கால்ஷீட் கொடுத்திருப்பதில் அலாதி சந்தோஷமாம். ஆறுமுகம் ஆடியோ விழாவில் என்னை பி அண் சி ஏரியாவை வரை கொண்டு போய் சேர்த்தது ஷக்தி சிதம்பரம் தயாரித்த பழனி படம்தான் என்று கூறியதோடு நின்றுவிடாமல் மீண்டும் தன்னை அழைத்து ஒரு படத்தை தயாரிக்க சொன்னதே பெரிய விஷயம் என்கிறாராம் ஷக்தி.

சிவகாசி, திருப்பாச்சி, பழனி, திருத்தணி என்ற ஊர் பெயர்களையெல்லாம் விட்டு விட்டு புதுசாக களம் இறங்கப் போகிறார் அண்ணாச்சி. இந்த படத்திற்கு பேரரசு வைத்திருக்கும் பெயர் முரசு. பேரரசய்யா... இப்படியே புதிய பாதைக்கு திரும்பிடுங்க!

பச்சை தெரியாத மாதிரி படம் எடுங்க... நயன்தாராவின் புதிய வேண்டுகோள்!

ஆதவன் படத்திற்காக ஐஸ்லேண்ட் கிளம்பிவிட்டார் நயன்தாரா. அவரோடு ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் போயிருக்கிறார்கள். தாமரை எழுதிய பனித்துளி என்ற பாடல் காட்சியை எடுக்கத்தான் இந்த பயணம். ஒரு வகையில் நயன்தாராவுக்கு இந்த பயணம் அமைதியை கொடுக்கவும் உதவலாம். இங்குள்ள கசமா முசாவை மறந்து தொடர்ந்து பத்து நாட்கள் ஐஸ்லேண்டில் தங்கப் போகிறாராம் நயன்.

நயன்தாரா ஒரு கையில் மட்டும்தான் பச்சை குத்தியிருக்கிறார் என்று செய்திகள் வந்தன. சற்று உற்று பார்த்தால் தெரியும். இன்னொரு கையிலும் பிரபு தேவா பெயரை பச்சை குத்தியிருக்கிறாராம். பாடல் காட்சிகளில் இந்த பச்சை தெரியாத விதத்தில் ஷ¨ட் பண்ணுங்க என்று கேட்டுக் கொண்டாராம் நயன். (செய்யிறதையெல்லாம் செஞ்சுட்டு இது வேறயா?)

தன்னையும் பிரபுதேவாவையும் திருமண கோலத்தில் கிராபிக்ஸ் செய்து வெளியிட்ட ஒரு வார இதழ் மீது வழக்கு போடப் போவதாக ஆரம்பத்தில் கொதித்தவர் இப்போது அடங்கியிருக்கிறாராம். வழக்கு போடுவீங்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில், “எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. இதுக்காக நேரத்தை செலவிட முடியாது“

சரி படத்தை பற்றி பேசுவோம். ஆதவன் படத்தில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம். ராஜீவன் இப்படத்திற்காக கொடைக்கானலிலும், ஏ.வி.எம் ஸ்டுடியோவிலும் செட்டுகள் போட்டாராம். இரண்டும் கொள்ளை அழகு என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள். படமும் அதே மாதிரி வரட்டும்!

ஆயிரத்தில் ஒருவன் பாடல் வெளியீடு... ரீமாவை மொய்த்த கண்கள்!


திரைப்பட நிகழ்ச்சிகளில் கவர்ச்சி உடையில் வந்து கலக்குவது நடிகைகளின் புதிய ட்ரெண்டாகிவிட்டது. சில தினங்களுக்கு முன் மகா குட்டை பாவாடையுடன் வந்து மீனாட்சி கிளப்பிய சூடு ஆறுவதற்குள், ஆயிரத்தில் ஒருவன் பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மஞ்சள் நிற கவர்ச்சி உடையில் வந்து கலக்கி விட்டார் ரீமா சென்.

கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆன்ட்ரியா ஆகியோர் நடித்து, செல்வராகவன் இயக்கியுள்ள படம் 'ஆயிரத்தில் ஒருவன்', விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த பிரமாண்ட படத்தின் பாடல்கள் வெளியீடு வித்தியாசமான முறையில் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது.

ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்த பாடல்கள் அடங்கிய சி.டி.யை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து மேடைக்கு கொண்டு வந்தார்கள். பாடல்களை இயக்குநர் ஷங்கர் வெளியிட, இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

கிட்டத்தட்ட தமிழ் திரையுலகமே திரண்டு வந்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான விவிஐபிக்கள் அரங்கை நிறைத்திருந்தார்கள்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற 4 பாடல்களை மேடையில் லைவாக பாடிக் காட்டினார்கள். படத்தில் பாடிய கலைஞர்களை வைத்தே, ஜிவி பிரகாஷ் நடத்திய இந்த லைவ் இசை நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

தனுஷ் - ஐஸ்வர்யா ஆட்டம்

'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் செல்வராகவனின் தம்பியும், நடிகருமான தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து ஒரு பாடலை சொந்த குரலில் பாடியுள்ளார். "உன் மேல ஆச வச்சேன்" என்ற கலக்கல் பாடல் அது.

நிகழ்ச்சியில் இந்தப் பாடலை தனுஷும் ஐஸ்வர்யாவும் பாடி ஆட, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

இந்தப் பாடலுக்குப் பிறகு தனுஷிடம், உங்கள் வெற்றிக்கு யார் காரணம் என்று கேள்வி கேட்டனர். உடனே அவர் சற்றும் தாமதிக்காமல், என் அம்மா, அப்பா, அண்ணன் மற்றும் மனைவி ஐஸ்வர்யா என்று கூறி கைதட்டல் பெற்றார்.

அதைத் தொடர்ந்து நடிகை பூர்ணா குழுவினரின் பரத நாட்டியம் நடைபெற்றது. நைஜீரியா நாட்டு கலைஞர்களின் பாரம்பரிய நடனமும் இடம்பெற்றது. கேரளாவின் செண்டை மேளம், மற்றும் கதகளி ஆட்டமும் நடந்தது.

படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான பார்த்திபன் பேசும் போது, "ஆயிரத்தில் ஒருவன் படம், உலக அளவில் பேசப்படும் படமாக இருக்கும். ஹாலிவுட் படங்களின் தரம், தொழில்நுட்பம் இந்தப் படத்தில் முழுமையாக இருப்பதைப் பார்க்கலாம். இந்த படத்துக்காக 256 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. நான், 150 நாட்கள் நடித்தேன். ஆனால் எனக்கு வசனங்கள் குறைவு. ஒன்றரை நாளில் டப்பிங் பேசி விட்டேன்" என்றார்.

தமிழ்தான் முக்கியம்!

இயக்குநர் செல்வராகவன் ஆரம்பம் முதலே மேடைக்கு வராமல், தன் மனைவி சோனியாவுடன் பார்வையாளர் வரிசையிலேயே அமர்ந்திருந்தார். பின்னர் கடைசியில் பேச வந்தார்.

அவர் கூறியதாவது:

"எனக்கு ஹாலிவுட், ஆஸ்கார் விருதுகள் மீது ஆசை இல்லை. 'நல்ல படம் கொடுக்கிறார் செல்வராகவன்' என்று ரசிகர்கள் பாராட்டினால் போதும்.

தமிழ்தான் முக்கியம் என்பதால் இந்தியில் வாங்கிய அட்வான்ஸைக் கூட திருப்பிக் கொடுத்துவிட்டேன்", என்றார் செல்வராகவன்.

முன்னதாக நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் லதா ரஜினிகாந்த்.

படத்தின் கதாநாயகிகள் ரீமாசென், ஆன்ட்ரியா இருவரும் படு கவர்ச்சியாக உடையணிந்து வந்து பார்வையாளர்களின் கவனத்தைச் சிதறடித்தனர்.

ஹீரோக்கள் பாடுவதால் பாடகர்களுக்கு ஆபத்தில்லை - சுந்தர் சி பாபு

கதாநாயகர்கள் பின்னணி பாடுவதால் பாடகர்களுக்கு ஆபத்து வரும் என்பதை நான் நம்பவில்லை என்றார் இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு.இப்போதெல்லாம் புதிய படங்களில் குறைந்தது ஒரு பாடலையாவது அந்தப் படத்தின் நாயகர்கள் பாடுவதைக் கவனிக்கலாம்.

இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், கந்தசாமியில் தனக்கான பாடல்கள் முழுவதையும் தானே பாடிக் கொண்டுள்ளார் நடிகர் விக்ரம்.இதே நிலை இன்னும் சில படங்களிலும் தொடர்கிறது. இதனால் தொழில்முறையில் பின்னணி பாடும் கலைஞர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களின் இசையமைப்பாளர் சுந்தர் சி பாபுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இப்படிக் கூறினார்:

முன்பெல்லாம் கமல்தான் அதிகம் பாடுவார். இப்போது கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுமே பாடுகிறார்கள்.

ஆனால் இதனால் பாடகர்களின் வாய்ப்புகள் பறிபோய்விடாது. நடிகர்களால் எல்லா படங்களிலும் பாடுவது சிரமமான விஷயம். விளம்பரத்துக்காக ஓரிரு பாடல்களைப் பாடுகிறார்கள். அவ்வளவுதான்.எஸ்பிபி ஏராளமான படங்களில் ரஜினி , கமலுக்கு கூட (தெலுங்கு) டப்பிங் பேசியுள்ளார். அதற்காக அவர் டப்பிங் கலைஞராகி விடுவாரா... அல்லது நடிகராகத்தான் முடியுமா... அவர் ஒரு பின்னணி பாடகர் என்பதே நிரந்தரம். அப்படித்தான் நடிகர்கள் பாடுவதும், என்றார்.

தற்போது அகம்புறம், மெய்காண், அகராதி படங்களுக்கு இசையமைத்து வரும் சுந்தர் சி பாபு, எக்காரணம் கொண்டும் ரீமிக்ஸ் செய்யக் கூடாது என்பதை கொள்கையாக வைத்துள்ளாராம்.

அடடே...!

தாயாரின் கோரிக்கையை ஏற்று நீச்சல் உடைக்கு கரீனா குட்பை

தனது தாயார் பபிதாவின் கோரிக்கையை ஏற்று இனிமேல் நீச்சல் உடைக் காட்சிகளில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறாராம் கரீனா கபூர்.

பாலிவுட்டின் கலக்கல் நாயகிகளில் ஒருவர் கரீனா கபூர். கவர்ச்சியிலும், நடிப்பிலும் பின்னி எடுப்பவர். இப்போது சைப் அலி கானுடன் நட்பாக இருக்கிறார்.

கரீனா கபூர் தனது தாயார் பபிதா மீது உயிரையே வைத்திருப்பவர். அம்மாவுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர். இந்த நிலையில், தனது தாயாரின் ஒரு கோரிக்கையை மறு பேச்சின்றி ஏற்றுக் கொண்டிருக்கிறாராம் கரீனா.

அது இனிமேல் பிகினி அணிந்து நடிக்காதே என்ற கோரிக்கையை.

இதுகுறித்து அவர் கூறுகையில், டஷான் படத்தில் நான் டூ பீஸ் பிகினி அணிந்து நடித்ததை தான் ரசிக்கவில்லை என்று அம்மா கூறினார். மேலும் பிகினி அணிவதை விடலாமே என்றும் கேட்டுக் கொண்டார்.

அப்போதே இனிமேல் பிகினி அணிய மாட்டேன் என அவரிடம் உறுதியளித்து விட்டேன். எனக்கு பிகினி பிடிக்காது என்று கூற மாட்டேன். பிகினி அசவுகரியமாக இருக்கிறது என்றும் கூற மாட்டேன். ஆனால் அம்மா வுக்குப் பிடிக்கவில்லை. எனவே இனி பிகினி அணிய மாட்டேன்.

தற்போது நடித்து வரும் 3 இடியட்ஸ், ரென்சில் டிசில்வாவின் புதிய படம் ஆகியவற்றில் மிதமிஞ்சிய கவர்ச்சிக் காட்சிகள் எனக்கு வைக்கப்படவில்லை.

என்னையும், எனது சகோதரியையும் வளர்த்து ஆளாக்க எனது தாயார் தனது நடிப்புத் தொழிலையே விட்டவர். பல தியாகங்களைச் செய்தவர். அவருக்காக இதைக் கூட செய்யாவி்ட்டால் எப்படி என்கிறார் கரீனா.

மறுபடியும் படிக்காதவன் கூட்டணி!

தனுஷ் நடித்த படிக்காதவன் கூட்டணி மறுபடியும் இன்னொரு படத்துக்காக இணைகிறது... இந்தப் படத்தை ஹிதேஷ் ஜபக் தயாரிக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெற்றிப்படமான படிக்காதவன் தலைப்பை மறுபடியும் பயன்படுத்தி தனுஷ்-தமன்னாவை வைத்து சுராஜ் எடுத்த படம் படிக்காதவன். விஜயா கம்பைன்ஸ் எடுத்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிட்டது. படம் குறித்து கடும் விமர்சனங்கள் இருந்தாலும், நல்ல லாபம் பார்த்தது.

இப்போது மறுபடியும் சுராஜ் இயக்கத்தில் தனுஷ் தமன்னாவை வைத்து குறுகிய கால அதிரடி தயாரிப்பாக ஒரு படம் தரும் முடிவில் இருக்கிறார் தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக்.

இந்தப் படத்துக்கு உடனடியாக கால்ஷீட்டும் கொடுத்துள்ளாராம் தனுஷ். தமன்னாவும் இப்போது நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் அனுமதியோடு சில குறிப்பிட்ட தினங்களை இந்தப் படத்துக்கு ஒதுக்கித் தந்துள்ளாராம்.

தனுஷ் இப்போது குட்டி மற்றும் ஆடுகளம் படங்களில் நடிக்கிறார். இதில் குட்டி முடிந்த கையோடு இந்த குறுகிய கால படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ரஜினியின் தலைப்புதானா இந்தப் படத்துக்கும்?

சுந்தர்-சத்யராஜ் நடிக்கும் 'குரு சிஷ்யன்'!

ஏதாவது ஒரு பரபரப்பைக் கிளப்பி படத்தை ஓட்டிவிடுவதில் ஷக்தி சிதம்பரத்துக்கு நிபுணர் பட்டமே கொடுத்துவிடலாம்.

ராஜா தி ராஜா என்ற தலைப்பில் லாரன்ஸை வைத்து படமெடுத்து, பலவித விளம்பர உத்திகளுடன் சுமாராக ஒடவைத்துவிட்ட ஷக்தி சிதம்பரத்திடம் இப்போது சிக்கிக் கொண்டிருப்பது குருசிஷ்யன் தலைப்பு.

இந்தத் தலைப்பில் அப்படியே ரஜினியின் பழைய சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்யும் திட்டத்தில் இருக்கிறாராம் ஷக்தி சிதம்பரம்.

இதில் சத்யராஜ் மற்றும் சுந்தர் சி நடிப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினியின் வேடத்தில் சத்யராஜ் நடிப்பாராம்.

பிரபு நடித்த பாத்திரத்தில் சுந்தர் சி நடிப்பார் என்கிறார்கள். ஷக்தி சிதம்பரம் டைரக்டு செய்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார் ஷக்தி சிதம்பரம்.

விஷால் தாயாரிடம் ரூ. 30 லட்சம் நகைகள் கொள்ளை


ஹைதராபாத்: ஜவுளிக் கடையில் நடிகர் விஷாலின் தாயாரிடம் ரூ. 30 லட்சம் நகைகளும் ரூ. 40,000 பணமும் கொள்ளையடிக்கப்பட்டன.

விஷாலின் தாயார் ஜானகிதேவி தெலுங்குத் திரைப்பட இயக்குனர் [^] ஒருவரின் வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்றார்.

பின்னர் துணிக்கடை ஒன்றுக்கு சென்று புடவை எடுக்கச் சென்றார். தனது கை பையை அருகே வைத்திருந்தார். அதில் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் இருந்தன. ரூ. 40 ஆயிரம் பணமும் வைத்திருந்தார்.

ஜானகிதேவி புடவைகளை தேர்வு செய்து கொண்டிருந்தபோது அருகே நின்றிருந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரது பையை எடுத்துக்கொண்டு தப்பியோடியது.

இது குறித்து அவர் சைபராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், நான் துணிக் கடைக்கு சென்றபோது ஒரு பெண் உள்பட 4 பேர் கொண்ட கும்பல் என்னை பின் தொடர்ந்து வந்தது.

நான் புடவை எடுத்துக் கொண்டிருந்தபோது அவர்களும் அருகில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் திடீரென பையை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர் என்றார்.

அந்தக் கடையில் கண்காணிப்பு கேமரா இல்லை என்பதால் கொள்ளையர்களை போலீசாரால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

அந்தக் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கிருஷ்ணா

அண்ணன் இயக்குனராக இருந்தால் முதலில் தம்பியை வைத்துதான் படம் இயக்குவார். செல்வராகவன் - தனுஷ், ஜோதி கிருஷ்ணா - ரவி கிருஷ்ணா, ஜெயம் ராஜா - ஜெயம் ரவி என நமக்கு பல உதாரணங்கள் இருக்கிறது. ஆனால், விஷ்ணுவர்தன், கிருஷ்ணா உறவு வேறு மாதி‌ரி.

கிருஷ்ணாவுக்கு நடிக்க வேண்டும் என்பது லட்சியம். அண்ணன் விஷ்ணுவர்தன் பெ‌ரிய இயக்குனராக இருந்தும் சுலபத்தில் நிறைவேறவில்லை அவரது ஆசை.

அலிபாபா படத்தில் அறிமுகமான போதும் கிருஷ்ணாவை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை விஷ்ணுவர்தன். அலிபாபா சம்பந்தப்பட்ட விழாக்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இத்தனைக்கும் அலிபாபாவை தயா‌ரித்தது, அவர்களின் தந்தை பட்டியல் சேகர்.

இந்நிலையில், தம்பியை வைத்து படம் இயக்குவீர்களா என்ற நிருபர்களின் கேள்விக்கு, கதை அமைந்தால் இயக்குவேன் என்று கூறியிருந்தார் விஷ்ணுவர்தன். அது சம்பிரதாயமான பதில் அல்ல என்பது இப்போது தெ‌ரிய வந்துள்ளது.

சர்வத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்குப் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குகிறார். அதன் பிறகு அவர் இயக்கும் தமிழ்ப் படத்தில் கிருஷ்ணா நடிக்கிறார். இந்த தகவலை விஷ்வர்தனே தெ‌ரிவித்தார். தற்போது கற்றது களவு படத்தில் விஜயலட்சுமியுடன் நடித்து வருகிறார் கிருஷ்ணா.

உலக பணக்கார பெண்களில் ஒரே ஒரு இ‌ந்‌திய‌ர்


உலக பண‌க்கார‌ர்க‌ளி‌ன் ப‌ட்டிய‌லி‌ல் முத‌ல் 10 நப‌ர்க‌ளி‌ல் 4 அ‌ல்லது 5 இ‌ந்‌திய‌ர்க‌ள் இட‌ம்பெ‌ற்று ‌ விடுவா‌ர்க‌ள். ஆனா‌ல், உலக பண‌‌க்கார பெ‌ண்க‌‌ள் ப‌ட்டிய‌லிலேயே ஒரே ஒரு இ‌ந்‌திய‌ப் பெ‌ண்ம‌ணிதா‌ன் இட‌ம்பெ‌ற்று‌ள்ளா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. அவ‌ர் ‌ஜி‌ண்டா‌ல் குடு‌ம்ப‌த்தை‌ச் சே‌ர்‌ந்த சா‌வி‌த்‌‌ரி ‌ஜி‌ண்டா‌ல்.

ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் உலக பணக்கார பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடு‌கிறது. இ‌ந்த ஆ‌ண்டு‌ம் அ‌ந்த ப‌ட்டியலை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது. இந்த ஆண்டு வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்ட பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் வால்மார்ட் நிறுவன அதிபர் கிறிஸ்டி வால்டன். இவர் தொழிலதிபர் ஜான் வால்டனின் மனைவி.

ஜான் வால்டன் 2005ல் நடந்த விமான விபத்தில் இறந்தார். அப்போது அவரது சொத்து ரூ.73,900 கோடி கிறிஸ்டியிடம் வந்தது. அதை இப்போது ரூ.1,00,000 கோடியாக அதிகரிக்கச் செய்துள்ளார் ‌கி‌றி‌ஸ்டி வா‌ல்ட‌ன் (சபா‌ஷ‌்).

2வது இடத்தில் கிறிஸ்டியின் நாத்தனார் (ஜா‌ன் வா‌ல்ட‌னி‌ன் சகோத‌ரி) அலைஸ் உள்ளார். வால் மார்ட் நிறுவனங்களின் நிறுவனர் சாம் வால்டனின் மகள் இவர். இவரது இப்போதைய சொத்து மதிப்பு ரூ.91,650 கோடி.

கடந்த ஆண்டு இப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் லிலியன் பெட்டன்கோர்ட். அப்போது இவரது சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், இப்போது 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இப்போது அவரது சொத்து மதிப்பு ரூ.70,500 கோடி. அழகுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எல்ஓரியல் நிறுவனர் ஈஜின் சுல்லரின் மகள் இவர்.

200 பெ‌ண்க‌ள் அட‌ங்‌கிய உலக பணக்காரர்கள் பட்டியலில், ஜிண்டால் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் சாவித்ரி ஜிண்டால் 9வது இடம் பெற்றுள்ளார். இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய பெண் இவர்தா‌ன் எ‌ன்பது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த் த‌க்கது.

58 வயதாகு‌ம் சா‌வி‌த்‌ரி ‌ஜி‌ண்டா‌ல், ஹூடா அமை‌ச்சரவை‌யிலு‌ம் இட‌ம்பெ‌ற்றவ‌ர். இவர‌் இ‌ந்‌தியா‌வி‌‌ன் பண‌க்கா பெ‌ண்க‌ளி‌ல் முத‌ல் இட‌த்‌தி‌ல் இரு‌ப்பவரு‌ம் ஆவா‌ர். ‌‌ நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினராக இரு‌ந்த ஜி‌ண்டா‌லி‌ன் கணவ‌ர் ஓ.‌பி. ‌ ஜி‌ண்டா‌ல் கட‌ந்த 2005ஆ‌ம் ஆ‌ண்டு ஹெ‌லிகா‌ப்ட‌ர் ‌விப‌த்‌தி‌ல் உ‌யி‌ரிழ‌ந்தா‌ர். கணவ‌ர் உ‌யி‌ரிழ‌ந்ததை‌த் தொட‌ர்‌ந்து,ஹ‌ிசா‌ர் தொகு‌தி‌யி‌ல் நட‌ந்த இடை‌த் தே‌ர்த‌லி‌ல் ‌நி‌ன்று பெரு‌ம் வா‌க்குக‌ள் ‌வி‌த்‌திசா‌த்‌தி‌ல்
வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர் சா‌வி‌த்‌ரி ‌ஜி‌ண்டா‌ல்.

‌‌ ஜி‌ண்டா‌ல் த‌ம்ப‌திகளு‌க்கு 4 பி‌ள்ளைகளு‌ம், 5 மக‌ள்களு‌ம் உ‌ள்ளன‌ர். அ‌தி‌ல் ந‌வீ‌ன் ‌ ஜி‌ண்டா‌ல் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினரு‌ம், தொ‌ழி‌ல் அ‌திபருமாவா‌ர்.

‌ ஜி‌ண்டா‌ல் குழும‌‌ம் சா‌ர்‌பி‌ல் இரு‌ம்பு, ‌‌ ஸ்டீ‌ல், எ‌ரிச‌க்‌தி‌த் துறைக‌ளி‌ல் சுமா‌ர் 15,000 கோடி ரூபா‌ய் முத‌லீடு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்‌தியா‌வி‌ல் ம‌ட்டும‌ல்லாம‌ல், தெ‌ன்அமெ‌ரி‌க்க நாடுகளான ‌சி‌லி, பொ‌லி‌வியா, பெரு ஆ‌கியவ‌ற்‌றிலு‌ம் ‌நிறுவன‌ங்களை நட‌த்‌தி வரு‌கிறது ‌ ஜி‌ண்டா‌ல் குழும‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

மருதுபாண்டி ‌‌ரீமேக்கில் சீமான்?

சாமுண்டி, குருபார்வை, ஜெய்சூர்யா உள்பட ஏராளமான படங்களை இயக்கியவர் மனோ‌ஜ்குமார். இவர் கடைசியாக இயக்கிய படம் அர்ஜுன் நடித்த ஜெய்சூர்யா. படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

ஜெய்சூர்யாவுக்குப் பிறகு மாதவன், பாவனா நடித்த ஆ‌ரியா படத்தை மனோ‌ஜ்குமார் தயா‌ரித்தார். அந்தப் படமும் அவருக்கு தோல்வியாகவே அமைந்தது.

மனோ‌ஜ்குமார் இயக்கத்தில் பல வருடங்கள் முன் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடிய படம், மருதுபாண்டி. ஆ‌க்சன் படமான இதில் ராம்கி ஹீரோவாக நடித்திருந்தார். ஹீரோயின் சீதா. இந்தப் படத்தை ‌ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் மனோ‌ஜ்குமார்.

ராம்கி நடித்த வேடத்தில் சீமானை நடிக்க வைப்பதாக திட்டம். மாயாண்டி குடும்பத்தார் வெற்றி பெற்றதால் சீமான் மீண்டும் மேக்கப் போடுவார் என்பது அனைவ‌ரின் எதிர்பார்ப்பு. இன்னும் சில நாட்களில் சீமான் மருதுபாண்டியாக மாறுகிறாரா என்பது தெ‌ரிந்துவிடும்.

முருகதாஸ் ஹீரோ மாற்றம் - ஷாருக்கானை சந்தித்த முருகதாஸ்

ஏ.ஆர். முருகதாஸின் அடுத்தப் படத்தில் ஷாருக்கான் நடிப்பார் என முதலில் கூறப்பட்டது. ஆனால், அவருக்குப் பதில் வேறு ஹீரோவை தேடி வருகிறார் முருகதாஸ்.

க‌ஜினி வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க முன்னணி இந்தி நடிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். சமீபத்தில் ஷாருக்கானை சந்தித்த முருகதாஸ் அவ‌ரிடம் கதை ஒன்றை கூறினார். ஷாருக்கிற்கு கதை பிடித்துவிட்டது. கண்டிப்பாக சேர்ந்து பணிபு‌ரியலாம் என அப்போது அவர் உறுதி அளித்ததாகவும் தெ‌ரிகிறது.

இந்நிலையில் தனது அடுத்தப் படத்துக்கு ஹீரோவை தேடி வருகிறார் முருகதாஸ். தமிழ், இந்தி இரு மொழிகளில் தயாராகும் படத்தை அடுத்ததாக அவர் இயக்குகிறார். போக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்தப் படத்தை முருகதாஸே தயா‌ரிக்கிறார். இரு மொழிகளில் தயாராகும் படம் என்பதால் அதற்கேற்ற ஹீரோவாக தேடி வருகிறார்கள். அப்படியானால், ஷாருக்கான் படம்?

தற்போது மை நேம் இஸ் கான் படத்தில் நடித்து வரும் ஷாருக், அடுத்து டான் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இந்த இரு படங்களுக்குப் பிறகே அவர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பார் என தெ‌ரிகிறது. அதற்குள் ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளார் முருகதாஸ். ஹீரோ கிடைத்ததும் அதிகார‌ப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

மீண்டும் செல்வராகவன், யுவன் கூட்டணி

துள்ளுவதோ இளமையில் ஆரம்பித்தது செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா நட்பு. அதற்குப் பிறகு வெளிவந்த அனைத்துப் படங்களுக்கும் யுவன்தான் இசை. செல்வாவின் படங்களுக்கு இன்னொரு ப‌ரிமாணத்தை கொடுத்தன யுவனின் இசை என்றால் அதை மறுப்பதற்கில்லை.

இந்த இசைக் கூட்டணியில் பணப் பிரச்சனை அபஸ்வரத்தை கிளப்பியது யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பம். ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து யுவனை அதிரடியாக நீக்கினார் செல்வா. அவர் இசையமைத்த இரு பாடல்களும் படத்திலிருந்தே நீக்கப்பட்டன. இனி இணையவே முடியாது என இருவரும் தனித்தனியே அறிக்கை வேறு விட்டனர்.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த ஆயிரத்தில் ஒருவன் ஆடியோ வெளியீட்டு விழாவில் யுவனைப் பார்த்தவர்களுக்கு இனிய அதிர்ச்சி. மேடையிலேயே அமர வைத்திருந்தனர் யுவனை.

ஒன்றிணையமாட்டார்கள் என்று நிரைனத்தவர்கள் ஒரே மேடையில் தோன்றியதில் சில நல்ல உள்ளங்களுக்கு ஆனந்தத்தில் அழுகையே வந்துவிட்டது. செல்வாவின் அடுத்தப் படமான இது மாலை நேரத்து மயக்கத்துக்கும் ‌ஜி.வி. பிரகாஷ்குமாரே இசையமைக்கிறார். அதற்கு அடுத்தப் படத்தில் மீண்டும் செல்வா, யுவன் கூட்டணி இணையும் என்கிறார்கள் இந்த திடீர் சந்திப்பைப் பார்த்தவர்கள்.

விழாவின் ஹைலைட் தனுஷ், ஐஸ்வர்யா நடனம். இருவரும் இணைந்து ஆயிரத்தில் ஒருவனில் ஒரு பாடல் பாடியுள்ளனர். இந்தப் பாடலை மேடையில் பாடியபடியே இருவரும் ஆட, அப்ளாஸ் அள்ளியது. முன்னதாக படத்தின் சிடியை ஷங்கர் வெளியிட பாக்யரா‌ஜ் பெற்றுக் கொண்டார்.

படத்தின் ஆடியயோ சிடி-யுடன் ஒரு ப‌ரிசு கூப்பனும் தருகிறார்கள். சிடி-‌யிலுள்ள பத்து பாடல்களில் ஆறு பாடல்கள் மட்டுமே படத்தில் இடம்பெறுகிறது. அந்தப் பாடல்கள் எவை என்பதை ச‌ரியாகக் கணித்துச் சொல்கிறவர்களுக்கு ப‌ரிசு.

என்ன ப‌ரிசு என்பதையும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். பெற்றோருக்கு பென்சன், சகோதர, சகோத‌ரிக்கு திருமண உதவி, படிப்பு‌ச் செலவு, ஈழத் தமிழருக்கு நிவாரண உதவி, உறவினருக்கோ, உங்களுக்கோ மருத்துவ செலவு என ஐந்து சாய்ஸ்கள். எதை வேண்டுமானாலும் டிக் செய்யலாம். போட்டியிலும் வித்தியாசமாகவே சிந்தித்திருக்கிறார் செல்வராகவன்.

கவர்ச்சிக் காட்சி: தணிக்கை அதிகாரிகளிடம் அடம்பிடித்த புது இயக்குநர்!

படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்தாலும் பரவாயில்லை... ஆனால் எக்காரணம் கொண்டும் கவர்ச்சிக் காட்சிகளை வெட்டாதீர்கள் என்று தணிக்கைக் குழுவினரைக் கேட்டுக் கொண்டுள்ளார் ஒரு இயக்குநர். அவர் பெயர் ஸ்ரீநாத். மறைந்த இயக்குநர் ஜீவாவின் மனைவி அனீஸ் தயாரித்துள்ள முத்திரை படத்தின் இயக்குநர்.

இப்படத்தில் லட்சுமி ராய் பார் டான்சராக செக்ஸி நடனம் ஆடியுள்ளார். நடன காட்சிகளில் முடிந்த அளவு ஆடைக் குறைப்பு செய்துள்ளதால் இந்த நடனம் குறித்து பரபரப்பாகப் பேசப்படுகிறது.

சில நடன அசைவுகள் மிகவும் செக்ஸியாக இருப்பதாகக் கூறிய தணிக்கைக் குழுவினர், அந்தக் காட்சியை வெட்டிவிடச் சொன்னார்களாம் படத்தின் இயக்குநரிடம். ஆனால் அவரோ, அதெல்லாம் முடியவே முடியாது. எப்படியாவது அந்தக் காட்சியை வெட்டாமல் சான்றிதழ் கொடுக்க முயற்சி செய்யுங்கள் என கேட்டுக் கொண்டாராம்.

'அப்படியானால் ஏ சான்றிதழ்தான் தருவோம் பரவாயில்லையா என தணிக்கைக் குழுவினர் கேட், பரவாயில்லை... தாராளமா ஏ சான்றிதழ் கொடுங்க... ஆனால் எந்தக் காட்சியையும் வெட்டாதீங்க', என கூறிவிட்டாராம் ஸ்ரீநாத்.

அது என்ன அவ்வளவு பிடிவாதம்?

"இந்தப் பாடலை நிறைய செலவழித்து எடுத்தோம். லட்சுமி ராயிடம் ரொம்ப கேட்டுக் கொண்டு கவர்ச்சியாக நடிக்க வைத்தோம். அவருடன் இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்தும் இருக்கிறார் இந்தப் பாடலில். இது தவிர அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைய உள்ளது. இவற்றில் கை வைக்கப் பார்த்தார்கள் சென்சார் அதிகாரிகள். அதனால்தான் ஏ கொடுத்தாலும் கொடுங்க, ஆனா எந்தக் காட்சியும் வெட்டாதீங்க என உறுதியாக சொல்லிவிட்டேன். இப்போது ஏ முத்திரையுடன் வெளியாகிறது, எங்கள் முத்திரை!" என்கிறார் இயக்குநர்.

மஞ்சரி, கிஷோர், பொன்வண்ணன், சரவணன், ஆனந்த், கொச்சின் அனீபா உள்ளிட்டோர் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகியுள்ள முத்திரை திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது

Deva takes 21 days to complete RR for Sooriyan Satta Kalloori


ஒரு படத்துக்கு தேவா பின்னணி் இசையமைக்கிறார் என்றால் அதிகபட்சம் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் அந்த வேலை முடிந்துவிடும் என்று நம்பிக்கையுடன் கூறிவிடுவார்கள் தயாரிப்பாளர்கள். அந்த அளவு வேகம் காட்டுபவர் தேவா.

மூன்றே நாட்களில் தேவா பின்னணி் இசையமைத்துக் கொடுத்த படங்களும் உண்டு.

ஆனால் முதல்முறையாக ஒரு இசையமைப்பாளராக அதிகபட்சம் 21 நாட்கள் எடுத்துக் கொண்டு அவர் இசையமைத்த படம் சிவசக்தி பாண்டியனின் சூரியன் சட்ட கல்லூரிதான்.

புதுமுகங்கள் கஜினி - மித்ரா நடிக்கும் இந்தப் படத்தை பவன் இயக்குகிறார்.

பாண்டியனும்- தேவாவும் இணையும் 10 வது படம் இது.

இந்தப் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் முதல்முறையாக நடிக்கிறார் சிவசக்தி பாண்டியன் என்பது இன்னொரு சிறப்பு

Monday, June 15, 2009

ராக்கி சாவந்த் காட்சிக்கு தடை


தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. இரண்டாவது முறையாக ராக்கி சாவந்த் நடித்த காட்சிகளுக்கு தடை சொல்லியிருக்கிறது தணிக்கைக் குழு.

கவர்ச்சி என்றாலே நினைவுக்கு வரும் அளவுக்கு பாலிவுட்டில் புயல் கிளப்பி வருகிறவர் ராக்கி சாவந்த். முத்த சர்ச்சை உள்பட ஒரு டஜன் சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர். கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார் ராக்கி சாவந்த். ரொம்ப கவர்ச்சியா இருக்கு என்று அந்தப் பாடலின் பல பகுதிகளை வெட்டி எறிந்தது தணிக்கைக் குழு.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு முத்திரை படத்தில் ராக்கியை ஆட வைத்தனர். சென்னை கெயிட்டி திரையரங்கில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டது.

தணிக்கைக் குழு ராக்கியின் இந்தப் பாடலிலும் கத்தி‌ரி வைத்துள்ளது. மும்பை எக்ஸ்பிரஸ் போலவே இதிலும் கவர்ச்சி தூக்கலாம். ராக்கியுடன் இணைந்து ஆடிய லட்சுமிராயின் காட்சிகள் சிலவற்றுக்கும் நோ சொல்லியிருக்கிறது சென்சார். ராக்கி என்றாலே பிரச்சனைதான் போலிருக்கிறது.

படப்பிடிப்பில் கொல கொலயா முந்தி‌ரிக்காய்

தனது புதிய படத்தை பிரமாண்டமான விழாவுடன் சில நாட்கள் முன்பு தொடங்கினார் இயக்குனர் மதுமிதா. வல்லமை தாராயோ என்ற சீ‌ரியஸ் படத்துக்குப் பிறகு இவர் இயக்கும் கொல கொலயா முந்தி‌ரிக்காய் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகிறது.

படத்துக்கு வசனம் எழுதுகிறவர் கிரேஸி மோகன். பேராசையை மையமாக வைத்து படம் உருவாவதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இன்டோர் காட்சிகள் என்பதால் வாடகைக்கு தனியார் இடத்தை தேடிப் போகாமல் தனது அலுவலகத்திலேயே படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மதுமிதா. இதனால் அடையாறிலுள்ள இவரது அலுவலகம் எப்போதும் பிஸியாகவே இருக்கிறது.

பெண் இயக்குனர்களால் நகைச்சுவை படம் எடுக்க முடியாது என்றொரு கருத்து திரையுலகில் உள்ளது. அதனை கொல கொலயா முந்தி‌ரிக்காய் தகர்க்கும் என்கிறார்கள் யூனிட்டில். கிரேஸியின் உதவியுடன் மதுமிதா அதனை சாதிப்பார் என தாராளமாக நம்பலாம்.

வெளிநாட்டில் ஜேம்ஸ் வசந்தன் பாடல்

வெளிநாட்டில் படமாக்கப்படும் பல பாடல்களுக்கு உள்நாட்டில் கூட வரவேற்பு கிடைப்பதில்லை. முழுக்க உள்நாட்டில் எடுக்கப்பட்ட ஜேம்ஸ் வசந்தனின் கண்களிரண்டால் பாடல் வெளிநாடு வாழ் தமிழர்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றது.

இதுவரை சுப்பிரமணியபுரம், பசங்க என்று இரு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். இரண்டு படங்களின் பாடல்களும் உள்ளூ‌ரிலேயே படமாக்கப்பட்டன. முதல் முறையாக இவரது இரு பாடல்கள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளன.

பசங்க படத்துக்குப் பிறகு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துவரும் படம் யாதுமாகி. புதுமுகம் சச்சின், சுனேனா நடிக்கும் இந்தப் படத்தை சோழா பொன்னுரங்கம் தயா‌ரிக்கிறார். பாலகுமார் இயக்கம்.

இந்தப் படத்துக்காக ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த இரு பாடல்கள் சமீபத்தில் பாங்காங்கில் படமாக்கப்பட்டது. இவரது இசையில் தயாரான பாடலொன்று வெளிநாட்டில் படமாக்கப்படுவது இதுவே முதல்முறை.

தொடர்ந்து ஹிட் கொடுத்தாலும் கதை பிடித்திருந்தால் மட்டுமே இசையமைக்க ஒத்துக் கொள்கிறார் ஜேம்ஸ் வசந்தன். இந்த பாலிசியால் பணம் சம்பாதிக்க முடியாதே என்று நண்பர்கள் சொல்வதையும் அவர் கேட்டுக் கொள்வதில்லை. கரன்ஸிக்காக சினிமாவுக்கு வருகிறவர்கள் மத்தியில் கொள்கைக்காகவும் ஒருவர் இருப்பது நல்லதுதானே.

என்ன செய்கிறார் எந்திரன்?

ர‌ஜினி படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாராகும் படம் எந்திரன். இயக்கம் ஷங்கர், ஜோடி உலக அழகி ஐஸ்வர்யா ராய் என
எல்லாமே ஏ கிளாஸ். பாபாவுக்கு பாபா பக்கம் என்று தனி பத்தி ஒதுக்கிய பத்தி‌ரிகைகள்கூட எந்திரன் பற்றி எழுத தயங்குகின்றன. ஏனிந்த பாராமுகம்?

படத்தின் தயா‌ரிப்பு கை மாறியதால்தான் இந்த சுணக்கம் என்கிறார்கள் இன்டஸ்ட்‌ரியில். படத்தைப் பற்றி நாம் ஏதாவது எழுதப்போய் அது அவர்களுக்கு உறுத்தலாக இருந்துவிட்டால் வீணாக கரண்டை கக்கத்தில் விட்டது போலாகிவிடுமே என அனைவருக்கும் சின்ன உதறல்.

தவிர சமீபத்தில் நடந்த அனைத்து சுப கா‌ரியங்களிலும் முதலாளாக கலந்து கொண்டார் ர‌ஜினி. படம் நடிக்கும்போது இப்படி பப்ளிக் த‌ரிசனம் தருகிறவர் அல்லவே சூப்பர் ஸ்டார் என இன்டஸ்ட‌‌ரியிலும் புருவம் உயர்த்துகிறார்கள்.

நாம் விசா‌ரித்ததில் பிஸியாகவே இருக்கிறார் ர‌ஜினி. கடந்த வாரத்தில் மாயாஜாலில் எந்திரன் படத்தின் சில காட்சிகளை ஷங்கர் படமாக்கியிருக்கிறார். இதற்காக பிரமாண்ட அரங்குகள் போடப்பட்டிருந்தன. இங்கு நடந்த ஷூட்டிங்கில் ர‌ஜினியும் கலந்து கொண்டிருக்கிறார்.

விரைவில் அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக எந்திரன் யூனிட் வெளியூர் கிளம்புகிறது. படம் முடிய இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரை அடக்கி வாசிக்க சொல்லியிருக்கிறாராம் ர‌ஜினி. அதுதான் இந்த மவுனம். புயலுக்குமுன் அமைதி

'வஞ்சிக்கோட்டை வாலிபனா'க ஷக்தி


'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் நடிக்கிறார் ஷக்தி. 'சபாஷ்! சரியான போட்டி..' என பெயரிட்டிருந்தால்கூட பொருத்தமாகத்தான் இருந்திருக்கும் அந்த வசனம்.

கந்தர்வா செல்லுலாயிட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் கிருத்திக்கா, வி.என்.பகவத் சிங் தயாரிக்கும் இப்படம் பழைய படத்தின் பெயரை தவிர கதை புத்தம் புது என்கிறார் படத்தின் இயக்குனர் எஸ்.கே.ஜீவா. அவர் சொன்ன இன்னபிற தகவல்கள்.... '

அன்பே வா", 'ஊட்டி வரை உறவு" போல் 85 சதவீதம் பொழுது போக்கு 15 சதவீதம் மனதை தொடும் சென்டிமென்டுடன் உருவாகிறது இப்படம். பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெமினி நிறுவனம் இப்பெயரில் தயாரித்த படம் பெரிய வெற்றி பெற்றது. அந்த சென்டிமென்டுடனும், கதைக்கு பொருத்தமாகவும் இத்தலைப்பு இருந்ததால் இப்பெயரை வைத்தேன்.

ஷக்தி, ரோமா ஜோடியாக நடக்கின்றனர். இது ராஜாகாலத்து கதை அல்ல. அம்பானி போன்ற செல்வந்தரின் ஒரே மகள் ரோமா. உலகிலேயே தான்தான் சிறந்தவள் என்ற எண்ணத்தோடு நடந்து கொள்கிறார். அவரது எண்ணத்தை உடைத்து உண்மையே ஹீரோ எப்படி புரிய வைக்கிறார் என்பதுதான் கதை" என்றார்.

சிங்கப்பூரில் பரத்! கூட்டத்தோடு போட்ட குத்தாட்டம்...


ஒரே நேரத்தில் மூன்று படத்தின் செய்திகள் ரெக்கை கட்டி பறப்பது நம்ம பரத்துக்குதான். கண்டேன் காதலை, ஆறுமுகம், தம்பிக்கு இந்த ஊரு என்று மூன்று படங்களை பற்றிய செய்திகளும் மின்னல் வேகத்தில் சுற்றி வருகின்றன கோடம்பாக்கத்தில். இந்த மூன்றில் முதலில் வரப்போவது ஆறுமுகம்தான். இதற்கிடையில் சிங்கப்பூர் போய் வந்திருக்கிறார் சின்னத் தளபதி. தம்பிக்கு இந்த ஊரு படத்தின் பாடல் காட்சிக்காகதான் இந்த பயணம். அங்குள்ள விமான நிலையத்தில் டெர்மினல் 3 பகுதியில் இந்த பாடல் காட்சியை எடுத்திருக்கிறார்கள்.

பாதுகாப்பு காரணமாக இங்கே படப்பிடிப்புக்கு அனுமதிப்பதில்லையாம். ஆனால், எப்படியோ சாதித்திருக்கிறார்கள். பெண்ணையும் அனுப்பிட்டு முதல் இரவுக்கும் காவலுக்கு நின்ற மாதிரி, பர்மிஷனையும் கொடுத்திட்டு, போலீசையும் கொண்டு வந்து குவிச்சிட்டாங்களாம். பாதுகாப்பு நமக்குதான்னு டைரக்டர் நினைக்க, 'இந்த பாதுகாப்பு உங்களுக்கு இல்லே, விமான நிலையத்துக்கு உங்களால சேதம் வந்திரக் கூடாதே, அதுக்குதான்' என்றார்களாம் போலீஸ் ஆபிசர்ஸ்! 'உங்களால் ஏதாவது பிரச்சனைன்னா, கைது நடவடிக்கைதான்Õ என்று கூடவே பயமும் காட்ட, அத்தனை பேரும் அடக்கமாக இருந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பியிருக்கிறார்கள்.

அ ஆ ஆட்டம் போடு, கூ கூ கூட்டத்தோடு, கூத்தாடு மச்சி, கை காலை வச்சி என்ற கபிலனின் பாடலுக்கு பரத்தும், புதுமுகம் மடால்ஷாவும் ஆடினார்களாம். பின்னாலேயே கூட்டமாக ஐம்பது பேராவது ஆடியிருப்பாங்க என்பதை நாம் தனியாக சொல்லணுமா என்ன?

விஜயகாந்த மேனேஜர் வழக்கு-வடிவேலுவுக்கு நோட்டீஸ்


சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் மேனேஜர் தாக்கப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யக் கோரி நடிகர் வடிவேலு மற்றும் விருகம்பாக்கம் போலீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2007ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உறவினர் இறந்தார். அவரது வீட்டுக்கு எதிரில்தான் வடிவேலுவின் அலுவலகம் உள்ளது.

அப்போது வடிவேலு அலுவலகம் எதிரே விஜயகாந்த்தின் உறவினர்கள், கட்சியினரின் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

அப்போது விஜயகாந்தின் மேலாளர் சதீஷ்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சதீஷ்குமார் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அதை போலீஸார் விசாரிக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து வடிவேலு, அவரது மகன் உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம் சாட்டி அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தக் கோரி சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு நீதிபதி ஜெயபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பதிலளிக்க கோரி நடிகர் வடிவேலுவுக்கும், விருகம் பாக்கம் போலீசாருக்கும் நோட்டீஸ் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார்.

ஆங்கிலத்தில் பேசுவது பெருமையல்ல-சிவக்குமார்


கல்வி மட்டுமே மனிதனை வாழ்வில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரும். தமிழை விட எளிமையான மொழி எதுவும் இல்லை. ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாகக் கருத வேண்டியதில்லை என நடிகர் சிவக்குமார் கூறினார்.

திருப்பூரையடுத்த செங்கப்பள்ளியில் ஸ்ரீ குமரன் பள்ளி திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்தார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு பள்ளிக் கட்டத்தை திறந்து வைத்தார்.

அப்போது சிவகுமார் பேசுகையில்,

கல்வி மட்டுமே மனிதனை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். ஆசிரியர் கற்றுக் கொடுத்த ஒழுக்கமே என்னை வாழ்வில் உயர்வடையச் செய்துள்ளது.

அத்தகைய மனோதிடத்தை கற்றுக் கொடுத்தது ஆசிரியர்கள் தான். ஒவ்வொரு ஆசிரியரையும் நாம் தெய்வமாக வணங்க வேண்டும்.

அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே மாணவர்களை உயர்த்திவிடாது. பெற்றோர் செய்யும் தியாகங்களை குழந்தைகள் புரிந்து நடக்க வேண்டும். அந்த தியாகமே குழந்தைகளை வாழ்வில் உயர்வடையச் செய்கிறது.

ஒவ்வொரு குழந்தைகளிடமும் பல வித தனித்திறமைகள் உள்ளன. அவர்களிடம் உள்ள அற்புதமான விஷயங்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்க வேண்டும்.

பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்வோர் தாய்நாட்டின் கலாசாரத்தையும், பண்பாட்டையும், பெற்றோரையும் மறந்துவிடக்கூடாது.தமிழை விட எளிமையான மொழி எதுவும் இல்லை. ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாகக் கருத வேண்டியதில்லை.

மொழி, கலாசாரம், பண்பாடு நிறைந்த இம்மண்ணில் வாழ விரும்ப வேண்டும். தேவைக்கு ஏற்ற பணத்தை வைத்துக்கொண்டு மற்றதை சமுதாயத்துக்கு செலவிட வேண்டும். இல்லையேல் அப்பணமே வாழ்க்கையே அழித்துவிடும் என்றார்.

குளிர்பான விளம்பரங்கள்-ஸ்ரேயா 'நோ'!

ஒரு படம் ஹிட்டானால் அடுத்து வரிசையாக புதிய படங்களில் நடிப்பதை விட, விளம்பரப் படங்களில் நடித்து கல்லா கட்ட ஆரம்பித்துவிடுவது திரையுலகில் இன்றைய வாடிக்கை. ஓரிரு நாட்கள் கால்ஷீட் இருந்தால் போதும், பல லட்சம்... ஏன் கோடிகளில் கூட சம்பளம் கிடைத்துவிடும்.

முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம் உள்பட பலரும் இந்த வேலையைச் செய்கிறார்கள். ஆனால் வெகு அரிதாகத்தான் ஓரிருவர் சில கட்டுப்பாடுகளோடு விளம்பரப் படங்களை ஒப்புக் கொள்கிறார்கள்.கோக கோலா குளிர்பானத்துக்கு விஜய் [^]தான் விளம்பர தூதர். அஜீத்இப்போது விளம்பரப் படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை.

நமீதா புடவைக் கடை திறப்பு, நகைக்கடை விளம்பரம், மசாலா விளம்பரம், மசாஜ் எண்ணெய் விளம்பரம் என 'ஆபத்தில்லாத' ஐட்டங்களாகப் பார்த்து ஒப்புக் கொள்கிறார்.

த்ரிஷா, அசின் போன்றவர்களும் விளம்பரங்களில் தூள்கிளப்புகிறார்கள்.

ஆனால் குறிப்பிட்ட விளம்பரங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற நல்ல பிடிவாதத்துடன் இருப்பவர்கள் ஒருசிலர்தான். உதாரணத்துக்கு நடிகை [^] ஸ்ரேயா.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று சொல்லப்படும் எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன் என்பது இவர் கொள்கை. உபயோகிப்பவர்களுக்கு எந்த ஆபத்துமில்லாத பொருள்களுக்கான விளம்பரங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற கண்டிஷனோடு ஜவுளிக்கடை, பிரபல நிறுவனங்களின் அழகு சாதனப்பொருட்கள் விளம்பரங்களில் மட்டும் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம் ஸ்ரேயா.

எக்காரணம் கொண்டும் குளிர்பான விளம்பரத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று கறாராகக் கூறி விடுகிறாராம்.

"முன்பு ஒருமுறை குளிர்பான விளம்பரமொன்றில் நடித்தேன். அதனால் நிறைய குழந்தைகள் அந்தக் குளிர்பானத்தை தொடர்ந்து குடிப்பதாகவும், அதனால் உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும் வருத்தப்பட்டனர் குழந்தைகளின் பெற்றோர். அப்போதே, வேண்டாம் இந்த மாதிரி விளம்பரங்கள் என முடிவு செய்துவிட்டேன்", என்கிறார் ஸ்ரேயா.

Sunday, June 14, 2009

அரசியல் பிரவேசம் - முடிவை ஒத்தி வைக்கிறார் விஜய்?

தனது அரசியல் பிரவேசம் குறித்த முடிவை இன்னும் ஆறுமாதம் கழித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் நடிகர் விஜய்.விஜய்யின் பிறந்தநாளன்று ரசிகர்கள் அனைவரையும் கூட்டி தனி மாநாடு நடத்தவும், அன்றே புதிய அரசியல் இயக்கம் ஒன்றைத் துவங்கவும் திட்டமிட்டிருந்தனர் விஜய்யும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரனும்.

உண்மையில் விஜய்யின் தந்தை சந்திசேகரன்தான் விஜய்யை எப்படியாவது அரசியலுக்குள் இழுத்து வந்து விட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறாராம்.

இதற்காக இரு வாரங்களுக்கு முன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கூட்டி ஆலோசனையும் நடத்தினர்.ஆனால் இந்த முடிவிலிருந்து இப்போது திடீரென விஜய் பின்வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்குக் காரணம், இப்போதைய அரசியல் சூழல் நடிகர்களுக்குச் சாதகமாக இல்லாமலிருப்பதும், விஜய்யால் நேரடியாக அரசியலில் ஈடுபட முடியாத நிலையும்தான் என்று கூறப்படுகிறது.

மேலும் விஜய்யின் ரசிகர்களில் பலருக்கும், புதுக் கட்சிக்கு தலைவராக எஸ் ஏ சந்திரசேகரனை ஏற்றுக் கொள்வதில் விருப்பமில்லையாம்.

மாவட்ட அளவில் பொறுப்புகளைப் பெறுவதில் சிலர் கடுமையாக மோதிக் கொண்டாலும், சென்னை போன்ற பகுதிகளில் அரசியல் கட்சிக்கு கைக்காசை செலவழிக்க யாருமே தயாராக இல்லையாம்.இதையெல்லாம் சரிப்படுத்தி, 6 மாதங்களுக்குப் பின்னர், விஜய் வெற்றிப் படம் கொடுத்த பிறகு கட்சி பற்றி தீவுத் திடலில் கூட்டம் கூட்டி அறிவிக்கப் போவதாக நிர்வாகிகளிடம் உறுதி கூறியுள்ளாராம் எஸ்ஏ சந்திரசேகரன்.

விருதுகளை அள்ளிய ஜோதா அக்பர் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆசின், காத்ரீனா கைப், பிபாஷா பாசு ஆகியோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது

மக்காவ் தீவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த ஜோதா அக்பர் படம் விருதுகளை அள்ளியது.

அசுதோஷ் கோவரிகர் இயக்கிய இப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்பட 10 விருதுகளைப் பெற்றது.

சிறந்த நடிகராக ஹிருத்திக் ரோஷன் தேர்வானார். கோவரிகர் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார்.

அனைத்து விருதுப் பிரிவுகளிலும் ஜோதா அக்பர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதா அக்பர் விருதுகளைக் குவித்தாலும் கூட அப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யாவுக்கு விருது கிடைக்கவி்லை. மாறாக, பேஷன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ராவுக்கு சிறந்த நாயகி விருது கிடைத்தது.

சிறந்த நடிகை விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆசின், காத்ரீனா கைப், பிபாஷா பாசு ஆகியோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அம்மா கேரக்டருக்கு தாவினார் தேவயானி

முன்னாள் சினிமா நாயகியும், இன்னாள் டிவி ஹீரோயினுமான தேவயானி, வெள்ளித் திரைக்கு அம்மாவாக ரீ என்ட்ரி கொடுக்கிறார்.நடிகைகளிலேயே மிகவும் வித்தியாசமானவர் தேவயானி. தனக்கென்று தனி பாலிசியே வைத்துள்ள அவர் அதற்கு முரணாக நடந்து கொள்ளவே மாட்டார்.

திருமணமானதும் திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட தேவயானி தற்போது டிவியில்தான் தொடர்ந்து நடித்து வருகிறார்.ஏகப்பட்ட சினிமா பட வாய்ப்புகள் வந்தபோதும் கூட தயக்கமே இல்லாமல் மறுதலித்து விட்டார். ஹீரோயினாக நடிக்க மாட்டேன், மனசுக்குப் பிடித்தால்தான் நடிப்பேன், கோடி கொடுத்தாலும் வில்லத்தனமாக நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறார் தேவயானி.

இடையில் ஐந்தாம்படையில் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார் தேவயானி. தற்போது தான் தயாரிக்கும் திருமதி தமிழ் படத்தில் வக்கீல் கேரக்டரில் வருகிறாராம் தேவயானி. இப்படத்தில் கணவர் ராஜகுமாரன்தான் நாயகன் என்பது தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் தபூசங்கர் இயக்கும் லைலா மஜ்னு விளையாட்டு படத்தில் அம்மா கேரக்டரில் வருகிறாராம் தேவயானி.இப்படத்தின் நாயகன் ராமகிருஷ்ணன். இவருக்குத்தான் அம்மாவாக நடிக்கப் போகிறார் தேவா. குங்குமப்பூவும், கொஞ்சும் புறாவும் படம் மூலம் ஹிட் ஆனவர் ராமகிருஷ்ணன்.

தேவயானிக்காக இந்தப் படத்தில் சூப்பர் ஹிட் அம்மா பாட்டு ஒன்றையும் வைத்துள்ளனராம்.

தமிழில் மட்டுமே பெயர் வைப்போம்! - கருணாநிதியிடம் தயாரிப்பாளர்கள் உறுதி

இனிமேல் வெளியாகிற எல்லா திரைப் படங்களுக்கும் தமிழில் மட்டுமே பெயர் வைப்போம் என்று, முதல்வர் கருணாநிதியிடம் தமிழ் திரைப்பட சீரமைப்பு குழுவினர் உறுதி அளித்தனர்.

தமிழ் திரைப் படங்களுக்கு கேளிக்கை வரியை தி.மு.க. அரசு முழுமையாக ரத்து செய்த காரணத்தால், தங்களுக்கு வந்து கொண்டிருந்த வரி வருவாய் குறைந்து விட்டதாக உள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் அரசிடம் முறையிட்டனர்.வெளிப்புறப் படப்பிடிப்புக்கான கட்டணங்களும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குறைக்கப்பட்டுள்ளது. இப்படி திரைப்படத் துறைக்குச் செய்யப்பட்ட பல்வேறு சலுகைககள் பொது மக்களுக்குச் சென்று சேராததால், இவற்றை ரத்து செய்தால் என்ன என்ற மனநிலைக்கு வந்த கருணாநிதி, இவற்றை மறுசீரமைப்பு செய்து பரிந்துரைக்க ஒரு குழுவை நியமித்தார்.

இதன்படி, திரைப்படங்கள், திரை அரங்குகள், கேளிக்கை வரி விதிப்பு, வெளிப்புற படப்பிடிப்புக்கான கட்டணங்கள், ஏனைய முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்ய ஏவி.எம். சரவணன், அபிராமி ராமநாதன், கோவை மேயர் வெங்கடாச்சலம், ஆலந்தூர் முன்னாள் நகர் மன்றத் தலைவர் ஆர்.எஸ்.பாரதி, உள்துறை செயலாளர் மாலதி, வணிகவரித்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், செய்தித்துறை செயலாளர் முத்துசாமி ஆகியோரைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு, திரைப்படத் துறையினர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்து பேசி விவாதித்து அரசுக்குப் பரிந்துரைகளை அளிக்கும்.

இந்தநிலையில் இந்த குழுவின் முதல் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி [^] தலைமையில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில், தமிழ் திரைப் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கப்படாதது பற்றியும், ஏதோ ஒப்புக்கு மட்டுமே இதை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தொடர்வதாகவும் முதல்வர் கேள்வி எழுப்ப, ஆடிப்போன தயாரிப்பாளர்கள், அந்த சலுகையைப் பறிக்க வேண்டாம் என வேண்டிக் கொண்டனர்.

இதுகுறித்து பின்னர் குழுவின் முக்கிய உறுப்பினரான அபிராமி ராமநாதன் கூறியதாவது:

இன்றைய கூட்டத்தில் தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப் படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் திட்டத்தின் கீழ் சலுகை பெறுவதற்காக, பிறமொழி கலப்பில் பெயரிடப்பட்ட படங்கள் சார்பிலும் மனு செய்யப்படுகின்றன.

தமிழி