
நடிகர்கள்: விஷால், ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், சந்தானம், கிஷோர், ஷாயாஜி ஷிண்டே, லால்
ஒளிப்பதிவு: ப்ரியன்
இசை: மணி ஷர்மா
இணை தயாரிப்பு: ஸ்ரேயா ரெட்டி
தயாரிப்பு: ஜிகே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் விக்ரம் கிருஷ்ணா
இயக்கம்: சபா அய்யப்பன்
மக்கள் [^] தொடர்பு: நிகில் முருகன்
சத்யம் [^] சறுக்கலைச் சரிகட்ட விஷால் மிகவும் மெனக்கெட்டு உருவாக்கியதாகச் சொன்ன படம் தோரணை.
சின்ன வயதில் வீட்டை விட்டு ஓடி சென்னை [^] வந்துவிட்ட அண்ணனைத் தேடி வருகிறார் தம்பி விஷால். தேடிப் பார்த்த பிறகுதான் தெரிகிறது அவர் சென்னை நகரையே கலக்கும் தாதாக்களில் ஒருவர் என்றும், இன்னொரு ரவுடி பிரகாஷ் ராஜால் உயிருக்கு குறி வைக்கப்பட்டிருக்கும் விவரமும்.
பிரகாஷ் ராஜிடமிருந்து அண்ணனைக் காப்பாற்றி எப்படி தன சொந்த ஊருக்கு அழைத்துப் போகிறார் விஷால் என்பதை கலகலப்பாக சொல்ல முயன்றுள்ளார் புதிய இயக்குநர் சபா அய்யப்பன். ஆனால் அதில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த புதிய விஷயத்தையும் அவர் செய்யவில்லை என்பதுதான் குறை.
'மலைக் கோட்டை' மாதிரி ஒரு காமெடி ஆக்ஷன் பார்முலாவை இந்தப் படத்தில் அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் பார்த்த காட்சிகள், எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்கள் என நகர்கிறது கதை.
அதேநேரம் ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்ளவும் வேண்டும்... பாடல் காட்சிகளைத் தவிர மற்ற காட்சிகள் பெரும்பாலும் போரடிக்கவில்லை. குறிப்பாக சந்தானம் முடிந்த வரை கிச்சு கிச்சு மூட்டுகிறார். பொழுது போகிறது.
ஒரு ஆக்ஷன் கதாநாயகனுக்கே உரிய அத்தனை விஷயங்களையும் குறைவில்லாமல் செய்துள்ளார் விஷால். சண்டைக் காட்சிகளில் இன்னும் எந்தளவு வனமுறையைக் காட்டப் போகிறார்களோ தெரியவில்லை. பார்க்கும் நமக்கே உடம்பு வலிக்கிறது.
ஸ்ரேயாவுக்கு உடனடித் தேவை போஷாக்கான ஆகாரம்... விஷால் கொஞ்சம் இழுத்து அணைத்தாலும் ஒடிந்துவிடுவாரோ எனும் அளவுக்கு ஒல்லிப்பிச்சானாக வந்து கொல்லுகிறார்.
கிஷோர் நல்ல நடிகர்தான்... ஆனால் படத்தில் அவருக்கும் சேர்த்து விஷாலே பேசி விடுவதால், பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருப்பதோடு அவர் வேலை முடிந்துவிடுகிறது.
பிரகாஷ் ராஜ் வழக்கமான வில்லன். சில காட்சிகள் என்றாலும் கமிஷனராக வரும் லால் நடிப்பு நச். அவர் அறிமுகமாகும்போதே தெரிந்துவிடுகிறது 'ரொம்ப நல்ல போலீஸ்' என்று!
சந்தானம் பெருமளவு படத்தைக் காப்பாற்றுகிறார். வசன உச்சரிப்பில் இனி கவுண்டர் பாணிதான் கைகொடுக்கும் என தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார். மயில் சாமியும், பரவை முனியம்மாவும் அவருக்கு கை கொடுத்திருக்கிறார்கள்.
கீதா, ஷாயாஜி ஷிண்டே, பாலாசிங் போன்றவர்களும் வந்து போகின்றனர்.
படம் முழுக்க யாராவது ஒருவர் தோரணை என்ற வார்த்தயை உச்சரித்துக் கொண்டே இருப்பது கடுப்படிக்கிறது.
மணிஷர்மாவின் இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. அந்த காஷ்மீர் பாடலின் லொக்கேஷன்கள், ஒளிப்பதிவு அசத்தல். மற்றபடி வெறும் கார்களின் உறுமலும், டமடம ட்ரம்ஸ் சத்தமும்தான் இந்தப் படத்தின் பின்னணி இசை!
படத்துக்காக விஷால் பேட்டி கொடுத்த தோரணையைப் பார்த்துவிட்டுப் போனதாலோ என்னமோ நமக்கு ஏமாற்றம்தான்...
இனி எல்லா ஆக்ஷன் பட இயக்குநர் [^]களுமே தலைப்புடன் தவறாமல் ஒரு 'டேக் லைன்' சேர்க்கலாம், "தயவு செய்து லாஜிக் பார்க்கவே பார்க்காதீர்கள்" என்று!
நகைச்சுவைக் காட்சிகளுக்காக ஒரு முறை பார்க்கலாம்!