Friday, May 29, 2009

பாடை கட்டும் நாயகன்

ஐம்பது லட்சம் இருந்தால் யார் வேண்டுமானாலும் படமெடுக்கலாம். இந்த தாராளமயம் நல்லதா கெட்டதா என்பது ஒருபுறமிருக்க, இந்த அலையில் தினமொரு தயாரிப்பாளர் கோடம்பாக்கத்தில் கரை ஒதுங்குகிறார். அதில் ஒருவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மகேஷ்.

கண்மணி தென்றலே என்ற படத்தை தயாரிப்பதுடன் படத்தின் ஹீரோவாகவும் மகேஷே நடிக்கிறார். கதை...? அதுதான் சுவாரஸியம்.

பிணத்துக்கு பாடை கட்டுவதுதான் ஹீரோவின் தொழில். எந்தவிதமான பாடை வேண்டுமானாலும் ஆர்டர் செய்யலாம். அரை மணியில் தயாராகிவிடும். தேவையான டிஸைனை தேர்ந்தெடுக்க ஹீரோ கைவசம் எப்போதும் பாடைகளின் ஆல்பம் இருக்கும்.

இந்த வித்தியாசமான கதைக்களத்தில் நடக்கும் காதல், மோதல், காமெடிகளை உள்ளடக்கி தயாராகிறது கண்மணி தென்றலே. ரீத்து என்ற நூறு சதவீத தமிழச்சி படத்தின் நாயகி.

படத்தை நல்லா எடுங்க. இல்லைன்னா ஆர்டர் கொடுக்காமலே ரசிகர்கள் பாடை கட்டிடுவாங்க.

ஆக்கர் கேட்கும் ஆங்கில ஸ்கிரிப்ட்


செளந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோ, வார்னர் பிரதர்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்க இருப்பது தெரியும். கவுதம் வாசுதேவ மேனன் போன்ற பிரபல இயக்குனர்கள் மட்டுமின்றி, திறமையான அறிமுக இயக்குனர்களுக்கும் வாய்ப்பளிக்க இருக்கிறதாம் ஆக்கர்-வார்னர் தயாரிப்பு நிறுவனங்கள்.

எந்தப் படத்தை தயாரித்தாலும் அதன் ஸ்கிரிப்டை ஆங்கிலத்தில் முதலிலேயே தரவேண்டும் என்பது வார்னர் பிரதர்ஸ் போட்டிருக்கும் நிபந்தனை. இந்த நிபந்தனையை செயல்படுத்த தாமதம் ஆனதால்தான், கோவா படத்தின் தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டதாம் வார்னர் பிரதர்ஸ்.

இதன் காரணமாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ஸ்கிரிப்ட் கேட்கிறார் செளந்தர்யா ரஜினி. ஆங்கில ஸ்கிரிப்டை தந்தால் மட்டுமே அடுத்தகட்ட வேலைகள் நகர்கின்றன.

விரைவில் ஆக்கர்-வார்னர் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் படங்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.

குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி வடிவேலு


மீண்டும் தனது கணவர் சுந்தர் சி-யை வைத்து படம் தயாரிக்கிறார் குஷ்பு.

சுந்தர் சி இயக்குனராக இருந்தபோது அவர் இயக்கிய படங்களை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்தது. சுந்தர் சி இப்போது ஹீரோ! அவ்னி சினி மேக்சும் அவர் நடிக்கும் படங்களை தயாரிக்கிறது.

ஐந்தாம்படை, வாடா, முரட்டுக்காளை படங்களில் நடித்துவரும் சுந்தர் சி அடுத்து மனோ இயக்கத்தில் வேட்டு படத்தில் நடிக்கிறார். அவ்னி சினிமேக்ஸ் சார்பில் படத்தை தயாரிப்பவர் குஷ்பு.

நாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது முடிவாகாத நிலையில், சுந்தர் சி-யுடன் இணைந்து காமெடி ஏரியாவில் கலக்கப் போவது யார் என்பதை மட்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் குஷ்பு. அவர், வடிவேலு!

தலைநகரம் படத்துடன் சுந்தர் சி-க்கு டாட்டா காட்டிய வடிவேலு பல்வேறு சமரசத்துக்குப் பிறகும் சுந்தர் சி படங்களில் நடிக்க மறுத்தார். அதனால் அதற்குப் பிறகு சுந்தர் சி படங்களில் விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

திடீர் திருப்பமாக வடிவேலு பச்சைக்கொடி காட்ட, விவேக் கழற்றிவிடப்பட்டிருக்கிறார். எல்லாம் குஷ்புவின் முயற்சி என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

தமிழ் ரசிகர்க‌ள் புதுமையை ஆத‌ரிப்பவர்கள் - போர்க்களம் இயக்குனர்


கல்லூ‌ரிக்கு செல்லும் டீன் ஏ‌ஜ் பையன் போலிருக்கிறார் பண்டி சரோ‌ஜ்குமார். அவரது பயோடேட்டாவை கேட்டால் ஆச்ச‌ரியமாக இருக்கிறது. கண்களில் ஆர்வமும், வேலையில் சுறுசுறுப்புமாக இருக்கும் அவரது உற்சாகமான பேட்டியிலிருந்து...

அது என்ன பண்டி சரோ‌ஜ்குமார்? தமிழில் இதுவரை கேள்விப்படாத பெயர்...?

என்னுடைய சொந்த மாநிலம் ஆந்திரா. தெலுங்கு குடும்பம். பண்டி என்பது குடும்பப் பெயர். சின்ன வயதிலேயே சினிமா ஆர்வம். தாய்லாந்து தலைநகர் பாங்காங் போய் அங்குள்ள திரைப்படக் கல்லூ‌ரியில் இயக்குனர் பயிற்சி படித்தேன்.

உங்கள் வயது..?

இப்போதுதான் 24 ஆகிறது.

படம் இயக்குவது என்று முடிவான பிறகு தெலுங்குக்கு போகாமல் தமிழுக்கு வர என்ன காரணம்?

தமிழ் ரசிகர்கள்தான் காரணம். தமிழ் ரசிகர்கள் புதுமையை ஆத‌ரிப்பவர்கள். தமிழ் சினிமாவுக்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணத்தை மீறி எடுக்கப்பட்ட படங்களை அவர்கள் வெற்றி பெற செய்திருக்கிறார்கள். என்னுடைய போர்க்களமும் அப்படிப்பட்ட படம்தான்.

படத்தின் கதை என்ன?

தனி மனிதன் ஒருவன் பல தீய விஷயங்களுக்கு எதிராக நடத்தும் போராட்டமே படத்தின் கதை.
webdunia photo WD

ஆ‌க்சன் படமா?

ஆ‌க்சன் படம்தான். ஆனால் வழக்கமான ஆ‌க்ச‌ன் படங்களிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கும். பே‌ண்டசி பிளஸ் ஆ‌க்சன் என படத்தை வித்தியாசமான தளத்தில் எடுத்திருக்கிறேன். ஹாலிவுட் பாணியில் படத்தின் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு பிரேமும் தமிழ் சினிமாவுக்கு புதுசாக இருக்கும்.

படத்தின் ஹீரோ?

பொல்லாதவன், வெண்ணிலா கபடிகுழு படங்களில் நடித்த கிஷோர் முதல் முறையாக போர்க்களத்தில் நாயகனாக நடிக்கிறார். ஸ்மிதா என்ற பெங்களுரைச் சேர்ந்த பெண் ஹீரோயின். இவர்களுடன் சத்யன், பிஜு மேனன், பொன்வண்ணன், சந்தானபாரதி ஆகியோரும் நடிக்கிறார்கள். நாயகன், பம்பாய் படங்களில் நடித்த டினு ஆனந்த் நீண்ட நாட்களுக்குப் பிறகு போர்க்களத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்யும் எண்ணமிருக்கிறதா?

தமிழில் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தீர்மானிக்க வேண்டிய விஷயம்.

பொதுவாக அறிமுக இயக்குனர்களின் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதில்லை. உங்கள் படத்துக்கு இசையமைக்க எப்படி ஒத்துக் கொண்டார்?

படத்தின் கதையை கேட்டவர் இசையமைக்க உடனே தனது சம்மதத்தை தெ‌ரிவித்தார். இந்தப் படத்துக்கு முதலில் கமிட்டான டெ‌க்‌னீஷியனே அவர்தான்.

மணிரத்னத்துக்கு அனுமதி மறுப்பு?


கொடைக்கானலில் ஓய்வு எடுத்தபின் பழைய ஆரோக்கியத்துக்கு திரும்பியிருக்கிறார் மணிரத்னம். மருத்துவர்களின் ஆறு மாதகால ஓய்வு பரிந்துரையை நிராகரித்து தனது ராவண் படப்பிடிப்பை அடுத்த மாதமே தொடங்குகிறார்.

ராவண் படத்தில் ஆக்ரோஷமான காளைச் சண்டை இடம்பெறுகிறது. பொள்ளாச்சியில் இதனை எடுக்க திட்டமிட்டிருந்தார் மணிரத்னம்.

ஆடு, மாடு, கோழிகளை அடித்து திண்ணலாம். ஆனால், படத்தில் நடிக்க வைக்கக் கூடாது. அது மிருக வதையாகிவிடும். இந்தியாவின் இந்த விசித்திர சட்டத்தால், தேசிங்கு ராஜனைப் பற்றி படம் எடுப்பவர்களும், ராஜா குதிரையேறி வருவதை படம் பிடிக்க பயந்து சாகிறார்கள். குதிரை மீதேறுவது மிருக வதையாகிவிட்டால்...?

இந்த இடியாப்ப சிக்கலால் மணிரத்னம் எடுக்க நினைத்திருந்த காளைச் சண்டை காட்சிக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் காதல் காட்சிகளை எடுக்க தீர்மானித்துள்ளார் மணிரத்னம். அனேகமாக ஊட்டியில் இந்தக் காட்சிகள் எடுக்கப்படலாம் என்கின்றன தகவல்கள்.

'காதல் மன்னன்' ஜெமினி வாழ்க்கை படமாகிறது!


தமிழ் சினிமாவின் காதல் மன்னன் எனப் புகழப்பட்ட மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகிறது.

படத்துக்கு தலைப்பும் "காதல் மன்னன் - தி கிங் ஆப் ரொமான்ஸ்" என்றே சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை எடுப்பவர் ஜெமினியின் மகள்களுள் ஒருவரும் புகழ்பெற்ற பெண்கள் மருத்துவருமான டாக்டர் கமலா செல்வராஜ்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் திரையுலகில் நீடித்த வெகு சில தமிழ் நடிகர்களில் ஜெமினியும் ஒருவர். அந்தக் காலத்தில் ஆக்ஷனுக்கு எம்ஜிஆர், நவரசத்துக்கு சிவாஜி, காதல் படங்கள் என்றால் ஜெமினி என்பதே ரசிகர்களின் தீர்ப்பாக இருந்தது. ஆனால் காதல் என்பதையும் தாண்டி மிகச் சிறந்த நடிப்பைத் தந்தவர் ஜெமினி. அதற்கு உதாரணம் புன்னகை.

மிஸ்ஸியம்மா, கல்யாணப் பரிசு, பாவமன்னிப்பு, வஞ்சிக்கோட்டை வாலிபன், பாச மலர், நாணல், புன்னகை போன்ற காலத்தால் அழியாத பல காவியப் படங்களில் ஜெமினியின் பங்களிப்பு பிரதானமாக இருந்தது.

ஜெமினியின் இந்த திரையுலகச் சாதனைகளை ஒரு உயிரோட்டமுள்ள ஆவணப் படமாக எடுக்கிறார்கள். படத்தை இயக்குபலர் வெங்கட்ராமன்.

இந்தப படம் குறித்து டாக்டர் கமலா செல்வராஜ் இப்படிக் கூறுகிறார்:

என் தந்தையின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். ரகசியங்கள் ஏதுமில்லை. ஜெமினி என்ற இயல்பான நடிகரின் மகள் என்பதே எனக்குப் பெருமை. அவர் மீது பாசம், அதையும் தாண்டிய மரியாதை நிரம்ப உண்டு.

'காதல் மன்னன்' என்ற இந்தப் படம் ஜூலையில் ரிலீஸாகிறது. திரையரங்குகளிலும் வீடியோ வடிவிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

பவுர்ணமி நாகத்தில் முமைத் கானின் டூ பீஸ் ஆட்டம்!


நீச்சல் உடையில் குத்தாட்டம் போடுவது முமைத் கானுக்கு புதிதில்லை என்றாலும், தெலுங்கு அளவுக்கு தமிழில் அவர் பெரிய அளவு பேசப்படவில்லை. தெலுங்கில் இப்போது முன்னணி நாயகியாக வேறு மாறிவிட்டார். ஆனால் தமிழில் இதுவரை அவர் குத்தாட்டப் பாடல்களோடு தன் கலைச் சேவையை நிறுத்திக் கொண்டிருந்தார்.

இப்போது முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார்.

புன்னமி நாகு என்று தெலுங்கில் ஏற்கெனவே அவர் நடித்து வெளி வந்த படம்தான் இப்போது தமிழில் பவுர்ணமி நாகம் என்ற பெயரில் தயாராகிறது.

இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சி முழுவதிலும் நீச்சலுடையில் வருகிறாராம் முமைத் கான். இந்தப் பாடலுக்கு தெலுங்கில் பயன்படுத்திய அதே பாடலை தமிழிலும் பயன்படுத்தியுள்ளார்களாம்.

பீச்சில் டூ பீஸில் அவர் போட்டுள்ள ஆட்டம் இளசுகளை சூடேற்றும் என்கிறார் இயக்குநர்.

புன்னமி நாகுவால் தெலுங்கில் எனக்கு தனி இடம் கிடைத்துவிட்டது. இப்போது அதே படம் பவுர்ணமி நாகமாக தமிழில் வருகிறது. இதுவும் எனக்கு பெரிய திருப்பு முனையைத் தரும் என்கிறார் முமைத் கான் சந்தோஷத்துடன்.

ஹைதராபாத் தொழிலதிபரை மணக்கிறார் சானியா



டெல்லி: ‌இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவுக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த முகமது சோரப் மிர்சா என்ற தொழிலதிபருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

சர்வதேச டென்னிஸ் உலகை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் சானியா மிர்சா. டென்னிஸ் தர வரிசையில் டாப்-30க்குள் இடம்பிடித்த ஒரே வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

விளையாட்டு திறமையாலும், பளிச்சிடும் அழகாலும் இந்திய டென்னிஸ் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

சமீபகாலமாக காயம் காரணமாக பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் திணறி வருகிறார். தற்போது பிரெஞ்ச் ஓபன் தொடரில் விளையாடி வரும் அவர் ஒற்றையரில் முதல் சுற்றிலே தோல்வியடைந்த போதிலும், இரட்டையர் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது தந்தை இம்ரான் மிர்சா கூறுகையில்,

சானியாவுக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த முகமது சோரப் மிர்சாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. சோரப் குடும்பம் எங்களுக்கு உறவு இல்லை. என்றாலும் இரண்டு குடு்ம்பத்தினரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வருகிறோம்.

இவர்களது திருமணத்தை உடனே நடத்தும் எண்ணம் எதுவும் எங்களுக்கு இல்லை. சானியா தொடர்ந்து டென்னிஸ் விளையாடுவார். ஆர்வம் இருக்கும் வரை அவர் விளையாடுவார். திருமணம் எப்போது என்பதை சில காலம் கழித்து முடிவு செய்வோம் என்றார் இம்ரான் மிர்சா.

இந் நிலையில் இவர்களது திருமணம் வரும் ஜூலை 10ம் தேதி நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

விஜய்யோடு ஜோடி சேரப்போகிறாரா சினேகா?


விஜய்யோட ஐம்பதாவது படத்திலே அவருக்கு ஜோடியா நடிக்கப் போவது தமன்னா! (செய்தி ரொம்ப பழசுங்...ணா) படத்திலே இன்னொரு ஹீரோயினும் இருக்கக்கூடும்ங்கிறாங்க. அது யாருங்கிறதுதான் கேள்வி மேல கேள்வியா இருக்கு கோலிவுட்லே!

சஸ்பென்சை அவங்களா உடைக்குறதுக்குள்ளே இன்னும் என்னென்னா சொல்வாங்களோ? நம்ம காதிலே விழுந்ததையும் சொல்லி தொலைச்சுருவோம். நடந்துச்சுன்னா மார் தட்டிக்கலாமே! நடக்கலேன்னா...? மனுஷனுக்குதான் மறதிங்கிற பெரிய சொத்து இருக்கே, அனுபவிக்கட்டும். விடுங்ணா... (ஹிஹி)

அந்த ரெண்டாவது ஹீரோயினுக்கு இப்போதிலிருந்தே உன்னைப்பிடி, என்னைப்பிடி போராட்டமாம். பின் சந்து வழியா ப்ரியாமணி கூட, 'உள்ளேன் ஐயா' சொல்றதா தகவல். இன்னொரு பக்கத்திலேயிருந்து ஸ்ரேயாவும் பிரஷ்ஷர் கொடுக்கிறாராங்களாம். இவங்கள்ளாம் போட்டி போடுறதை பார்த்தா மாசத்துக்கு முப்பது நாளுதானேங்கிற சந்தேகமே வருது. எப்படிதான் நேரம் கிடைக்குதோ? இவங்க போட்டியெல்லாம் ஒரு பக்கம் இருக்க, 'சினேகாவை பார்க்கலாமே' என்று தளபதிகிட்டேயிருந்தே சிக்னல் கிடைச்சிருக்காம்!

ஆமாவா? ஆமாவா? ஆமாவா?

சினேகா பக்கம் கேள்வியை அனுப்பினால் 'பொறுத்திருந்து பாருங்க' என்று கண் சிமிட்டுகிறார்கள். யாராவது புலனாய்வு புலிங்க இருந்தா அந்த பக்கம் மூக்கை நுழைச்சு பாருங்கப்பா...!

லவ்வும் இல்லே, ஒன்னும் இல்லே, ஆளை வுடுங்கப்பா! நடிகை பாய்ச்சல்...


ஐம்பது வயசு ஆளைக் கூட, 'அமலா போனா என்ன, ஒரு விமலா இருக்காங்களே?' என்று சந்தோஷப்பட வைத்த விமலா ராமன், கண்ணிலே கருவளையம் விழுற அளவுக்கு கவலையிலே ஆழ்ந்திருந்தார். எல்லாமே போன மாசம் வரைக்கும்தான். இந்த மாசம் விமலா, இன்னோரு ஆப்பிள் அமலா!

கருவளையத்துக்கு காரணம் என்ன? அது காணாமல் போன மாயம்தான் என்ன? தமிழில் ஒரு படமும் தேறாமல் போனதால் தெலுங்குக்கு போனார் மம்தா. அங்கேதான் இவருக்கும் வருணுக்கும் பிரண்ஷிப்! போதாதா?

பொறியை அள்ளி போகியிலே போட்ட மாதிரி, இரண்டு பேரையும் சேர்த்து வச்சு ரவுண்டு கட்டியது மீடியா. 'அவருக்கும் எனக்கும் காதலும் இல்லே, கண்றாவியும் இல்லே'ன்னு தனித்தனியா பேட்டி கொடுத்தாலும் விடாம துரத்திய மீடியா, லவ் லவ் என்று மறுபடியும் மறுபடியும் மத்தாப்பூ கொளுத்த, பயங்கர கோவாச்சு வந்திருச்சு விமலாவுக்கு!

வருணையும் வரவழைத்து பக்கத்தில் வச்சுகிட்டு தெளிவா புரிய வச்சாராம் தெலுங்கு மீடியாவுக்கு. 'எனக்கும் இவருக்கும் லவ்வு இல்லே, ஏன் பிரன்ட்ஷிப் கூட இல்லே. ஒரு படத்திலே நடிச்சோம். இனிமே அதுக்கு கூட வாய்ப்பு இல்லே. போயிட்டு வர்றீங்களா' என்றாராம் பொங்க பொங்க! இப்போதைக்கு பேனாவை மூடி வச்சிட்டு, வேறொரு கிசுகிசுவுக்காக வெயிட் பண்றாங்க.

மாட்லாடுற ஏரியாவிலே மறுபடியும் மாட்டுமா மல்லிப்பூ?

Thursday, May 28, 2009

தமிழக போலீஸ் படத்துக்கு ரஹ்மான் இசை!


காவல் துறையின் அருமை பெருமைகள், சவால்கள், அவர்கள் மக்களுக்கு எப்படியெல்லாம் நண்பர்களாக உதவுகிறார்கள் என்பதை விளக்கும் 'காவலர் நமது சேவகர்' என்ற படத்தை இரு ஆண்டுகளுக்கு முன் எடுத்தார் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன். இதில் பல நிஜ காவல் துறை உயர் அதிகாரிகளே நடித்திருந்தனர்.

மீண்டும் இதே போன்றதொரு படத்தை எடுக்கும் திட்டத்தில் உள்ளது காவல் துறை.

ஆனால் இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்தால் படம் பெறிய ஏளவில் பேசப்படும், இளைஞர்களைக் கவரும் என நம்பிய காவல்துறை உயர் அதிகாரிகள் பலர், சில தினங்களுக்கு முன் ரஹ்மானைச் சந்தித்து, தங்கள் படத்துக்கு இசையமைத்துத் தர முடியுமா என்று கேட்டார்கலாம்.

ரஹ்மானும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டாராம்.

நீங்கள் படத்தை எடுத்துவிட்டு சொல்லுங்கள்... நிச்சயம் நான் இசை அமைத்துத் தருகிறேன். பாடலும் அப்போதே கம்போஸ் செய்து கொள்ளலாம் என அவர் கூறிவிட, சந்தோஷத்துடன் தயாரிப்பாளரிடம் சீக்கிரம் வேலைகளை ஆரம்பிக்கச் சொல்லி வருகிறது சென்னை மாநகர போலீஸ்.
Tags: tamil, cinema, police, ar rahman, music, new film, abhirami ramanathan, தமிழ், சினிமா, காவலர் நமது சேவகர், ரஹ்மான்.

இரும்புக்கோட்டை.. முரட்டு சிங்கம்-ரூ.1 கோடி செட்!


இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்துக்காக அம்பாசமுத்திரம் அருகே ரூ. 1 கோடி செலவில் இரும்பு கோட்டை போன்ற பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு படபிடிப்பு நடந்து வருகிறது.

ராகவா லாரன்ஸ்- பத்மபிரியா- லட்சுமி ராய்- சந்தியா இணைந்து நடிக்கும் புதிய படம் இரும்புகோட்டை முரட்டுசிங்கம். சிம்புதேவன் இயக்குகிறார்.

பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

இந்த படத்துக்காக அம்பாசமுத்திரம் அருகே உள்ள அடையக்கருங்குளத்தில் ரூ.1 கோடி செலவில் பிரமாண்டமான இரும்பு கோட்டை போன்ற செட் போடப்பட்டுள்ளது.

இந்த அரங்கில்தான் கடந்த நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. நேற்று முன்தினமும், நேற்றும் மழை பெய்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

தமிழில் ஜெய்சங்கர் காலத்துக்குப் பிறகு எடுக்கப்படும் முதல் கௌபாய் படம் என்பதால் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

4ம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்தில் ரஜினி!


ரஜினி குறித்து சிபிஎஸ்இ 4ம் வகுப்பு பொது அறிவுப் புத்தகத்தில் ஒரு பாடம் இடம் பெற்றுள்ளது.

'பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர்' என்று கடந்த ஆண்டு சிபிஎஸ்இ 6ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ரஜினி குறித்த பாடம் இடம் பெற்றிருந்தது. டிக்னிட்டி ஆப் வொர்க் என்ற தலைப்பில் அந்தப் பாடம் அமைந்திருந்தது.

இப்போது இந்தியாவின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்த் என்று 4ம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் ஒரு கேள்வி பதில் பகுதியில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல்வகை துணுக்குகள் என்ற தலைப்பில் 18வது பாடத்தில் ரஜினிகாந்தின் படத்தைப் போட்டு.. இவர் பெயர் என்ன? என்று கேட்கப்பட்டுள்ளது.

படத்தின் அடிக்குறிப்பில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் திரைப்பட நடிகர் என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

ரஜினியுடன் முதல்முறை இணையும் கலாபவன் மணி!


சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன்- தி ரோபோ படத்தில் நடிக்கிறார் நடிகர் கலாபவன் மணி.

ரஜினி படத்தில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை.

வில்லன் நடிப்பில் தனி முத்திரை பதித்தவரான கலாபவன் மணி, இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை... நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடம் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கலாபவன் மணி கூறியதாவது:

நமக்கு மொழி பேதம் கிடையாது. தென் மாநில மொழிப் படங்கள் அனைத்திலும் நடிக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. மலையாளத்தில் மீண்டும் கதாநாயகனாகிவிட்டேன்.

தெலுங்கில் 6 படங்கள் பண்ணுகிறேன். விரைவில் கன்னடம் படமும் நடிக்கப் போகிறேன்.

தமிழ்ப் படங்கள் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். காரணம் எனக்கு பெரிய அங்கீகாரம், அதைவிட பெரிய அளவு சம்பளம் கொடுத்து கவுரவித்தது தமிழ்ப்பட உலகம்தான்.

இப்போதும் சரித்திரம், மோதி விளையாடு போன்ற படங்களில் நடித்துக் கொண்டுள்ளேன்.

இதுவரை ரஜினி சார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. தற்போது தமிழில் அவருடைய எந்திரன் படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் எனக்கு நகைச்சுவை கலந்த குணசித்ர கதாபாத்திரம். இந்த வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல் முறை ரஜினி சார் படத்தில் நடிப்பது உண்மையிலே மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது என்றார் மணி.

நானும் ஒரு மாணவன்...!'-கமல்


சினிமாவில் நானும் ஒரு மாணவன்தான். மாணவனாக இருப்பதற்கு 'திமிர்' வேண்டும். அது எனக்கும் இருக்கிறது என்றார் கமல்ஹாசன்.

திரைக்கதை பயிலரங்கம் எனும் பெயரில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் ஒன்றை கிண்டியில் ஐஐடி கல்வி நிறுவன வளாகத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நடத்துகிறது. ஐஐடி நிறுவனமும் இதில் கை கோர்த்துள்ளது.

இன்று தொடங்கி வரும் ஜூன் 3ம் தேதி வரை 6 தினங்கள் நடக்கும் இந்த கருத்தரங்கின் முறையான துவக்க விழா நேற்று ஐஐடியில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது:

ஒரு படத்தின் வெற்றிக்கான சூட்சுமம், படத்தை பார்க்க வைக்கும் தந்திரம் அடங்கியிருப்பது திரைக்கதையில்தான். அதை முறையாகக் கற்றுக் கொள்வதால் நிறைய அனுகூலங்கள் உள்ளன.

திரைக்கதை தொடர்பான சர்வதேச கருத்தங்கம் ஒன்றை சென்னையில் நடத்த வேண்டும் என்று நானும் இயக்குநர் பாலுமகேந்திராவும் அடிக்கடி பேசிக் கொண்டிருப்போம். இத்தனை நாட்களாக அது எங்கள் கனவாகவே இருந்தது. அந்த கனவு இப்போதுதான் நனவாகி இருக்கிறது.

படங்களுக்கு வெற்றிவிழா கொண்டாடுவதுபோல், இதுவரை நாங்கள் செய்த வேலைகளுக்கு இது வெற்றிவிழா என்றே நினைக்கிறேன்.

சினிமாவைப் பொறுத்தவரையில் நான் இன்னும் மாணவன்தான். ஒரு மாணவனாக இருந்து நிறையே விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

மாணவனாக இருப்பதற்கு திமிர் வேண்டும். அந்த திமிர் எனக்கு இருக்கிறது. எனக்கு பிறகு சினிமாவில் நுழைந்த மணிரத்னத்திடமிருந்து நிறையே தெரிந்து கொண்டிருக்கிறேன்.

புனே திரைப்படக் கல்லூரியை புகழ் பெற்ற பயிற்சி நிறுவனமாக சொல்வார்கள். கம்ப்யூட்டர், இண்டர்நெட் வசதி இல்லாத அந்த காலத்தில் எனக்கு ஒரு புனே திரைப்படக் கல்லூரியாக இருந்தவர் டைரக்டர் பாலுமகேந்திராதான். அவரிடம் அடிக்கடி உரையாடி சினிமா தொடர்பான பலவற்றை கற்றிருக்கிறேன் என்றார் கமல்.

ஐஐடியில் படித்திருப்பேன்..!

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார். அப்போது கூறுகையில், நான் படிப்பை பாதியிலேயே விட்டவன். ஒருவேளை நான் தொடர்ந்து படிக்கும் சூழல் வாய்த்திருந்தால் ஐஐடியில் சேர்ந்திருப்பேன்.

ஒரு படத்தின் திரைக்கதையை விமர்சிக்கும்போது, அது எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்றுதான் பார்க்க வேண்டும். எனக்கு சரி எனத் தோன்றுவது மற்றவருக்கு தவறாகவும் தோன்றக் கூடும். அது அந்தக் கதையின் தன்மைக்கேற்ப மாறும் என்றார்.

முன்னணி திரைப் பிரமுகர்கள், இயக்குநர்கள் அனைவருமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இன்று துவங்கும் இந்த கருத்தரங்கில் ஹாலிவுட்டைக் கலக்கும் இந்திய இயக்குநர் சேகர் கபூர், பாலிவுட்டின் கோவிந்த் நிஹ்லானி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பங்கேற்று திரைக்கதை நுணுக்கங்கள் குறித்து விவாதிக்கிறார்கள்.

மணிரத்னத்தின் ராவண்...தொடரும் சோதனைகள்!


மணிரத்னம் இயக்கும் மெகா படமான ராவண் படத்துக்கு (தமிழில் அசோகவனம்) சோதனைகள் தொடர்கின்றன. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பாதியில் விலகிக் கொண்டதால், இப்போது புதிய ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணியாற்றுகிறார்.

இதுவரை எடுத்த காட்சிகளைப் போட்டுப் பார்த்த மணி ரத்னம் மற்றும் சந்தோஷ் சிவன் இருவருக்குமே திருப்தி இல்லாததால், மீண்டும் அவற்றை ரீஷூட் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் ஏற்கெனவே பல காரணங்களால் தாமதமாகிவிட்ட ராவண் படம் எப்போது முடியும் என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளர் மணிகண்டன் தினச் சம்பளம் அடிப்படையில் பணியாற்றுபவர். விளம்பரப் படங்களில் அவருக்கு நல்ல வருமானம். இந்தியில் பிஸியான கேமரானமேன் இவர்தான்.

இவரை ராவண் படத்துக்கு விரும்பி அமர்த்தினார் மணிரத்னம். ராவண் படத்துக்கு 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் மணிகண்டன். ஆனால் 100 நாட்கள் தாண்டியும் படத்தில் பாதிகூட முடியவில்லையாம். கேரள வனத்துறையினரால் பிரச்சினை, மணிரத்னம் திடீர் உடல் நலக் குறைவால் படப்பிடிப்பை தொடர முடியாமல் போனது போன்ற காரணங்களால் படம் பெருமளவு தாமதமானது.

படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராய் கொடுத்த கால்ஷீட் முடிந்துவிட்டாலும் மணிரத்னத்துக்காக மேலும் இருமாதங்கள் கால்ஷீட்டை நீட்டிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார். விக்ரம் போன்ற மற்ற கலைஞர்களும் சூழல் புரிந்து ஒத்துழைக்கத் தயாராக இருந்தனர். ஆனால் மணிகண்டன் மட்டும் விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.

இந்த இக்கட்டான சூழலில், மணிரத்னத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவன் கைகொடுத்துள்ளார்.

இப்போது காட்சிகளை மறுபடியும் போட்டுப் பார்த்த மணிரத்னம் மற்றும் சந்தோஷ் சிவனுக்கு, இன்னும் பெட்டராக எடுத்திருக்கலாமே என்ற எண்ணம் மேலோங்கிவிட, பல காட்சிகளை மறுபடியும் சுடப் போகிறார்களாம்.

பிரஸ் வரைக்கும் வந்த பிஸ்கோத்து மேட்டர்!


யானைக்கு கட்டு கட்டா கரும்பை போடுறவங்க, எலிக்கு ஒரு மசால் வடைய போடுறதுக்கு என்னென்னாவோ சொல்றாங்களேன்னாரு லைட்மேன் ஒருத்தரு. என்னா மேட்டருன்னு வாய கிளறுனா, ரொம்ப சொச்சம்..., மூவாயிரத்த தாண்டாத பிஸ்கோத்து மேட்டரு!

விஷால் நடிச்ச முந்தைய படத்தோட ஸ்டில்களை பிரஸ்சுக்கு கொடுக்கறதுக்காக நிறைய சிடிக்களை வாங்கி தயார் பண்ணினாராம் சிவாங்கிற பிஆர்ஓ. இந்த வகையிலே சுமார் மூவாயிரத்து சொச்சம் பில்லு. இதை கொடுக்க அப்புறம் இப்புறம்னு இழுக்கடிச்சாங்களாம். சரி கடைசியா என்னாச்சு? அதை சொல்றதுக்கு முன்னாடி ஒரு ப்ளாஷ்பேக்!

திமிரு படத்திலே ஒரு ஆளை நடிக்க வைக்கிறேன்னு ஐம்பதாயிரம் பணத்தை அவருகிட்டேயிருந்து வாங்கிட்டாரு அந்த படத்தோட டைரக்டர்! ஆனா நாளைக்கு வா, நாளைக்கு வான்னு நாளை ஓட்டியவரு கடைசிவரைக்கும் அந்தாளை நடிக்க வைக்கவே இல்லே. ரிலீஸ் நேரத்திலே ஆபிஸ் வாசலுக்கு வந்து அறைகூவல் விட்டாரு அந்த நடிக்காத நடிகர். வேறு வழியில்லாம ஐம்பதாயிரத்தை விஷாலே கொடுத்தாராம்.

ஹ¨ம், மறுபடியும் நம்ம மேட்டருக்கு வருவோம். அப்படியெல்லாம் கொடுத்த விஷால் தரப்பு, சிவாவை பல முறை இழுக்கடிச்சு இந்த மூவாயிரத்து சொச்சத்தை கொடுக்காமலே விட்ருச்சு. இப்போ போயி கேட்டா, தோரணை ஓடினா தர்றோம்ங்கிறாங்களாம்! ஒன்பது கோடி சம்பளம் வாங்குற நடிகர் ஆபிஸ்லே, மூவாயிரத்துக்கு முக்குறதுதான் ஏன்னு தெரியலேன்னாரு லைட் மேன்!

எறும்புக்கே கரும்புகள போடுற ஏரியாவிலே, இந்த பிஸ்கோத்து மேட்டரை பிரஸ் வரைக்கும் கொண்டு வந்திட்டாங்களே, ரொம்ப பாவம்யா....!

ஏ.ஆர்.ரஹ்மான் விளையாட்டு? கத்தை கத்தையா கையிலே நோட்டு....!


கொப்புளிச்சா பன்னீரு, துப்புனா பிரசாதம்னு சும்மாவா சொன்னாங்க பெரிய மனுஷங்களை பற்றி? வேடிக்கையாக கேட்ட ஒரு விஷயத்தை சீரியஸ்சா எடுத்துகிட்டு 'புடிங்க'ன்னு மூணு கோடியை கையிலே திணிச்சுட்டு கிளம்புச்சு ஒரு குரூப்! எங்கேய்யா இந்த அதிசயம்?

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை நேரில் பார்த்து வாழ்த்துக்களை தெரிவிக்கணும்னு நினைச்சாங்க கனரா வங்கி அதிகாரிங்க. போன் அடிச்சதுமே புறப்பட்டு வாங்கன்னு சொல்லிட்டாராம் இசைப்புயல். போனவர்களிடம் சகஜமா பேசிட்டு இருந்தவர், 'சார், எங்களுக்கெல்லாம் லோன் கொடுக்க மாட்டீங்களா?' என்றாராம். அவ்வளவுதான்!

ஏ.டி.எம் மிஷினை விட வேகமா செயல்பட்ட அதிகாரிங்க, அங்கேயே உட்கார்ந்து அரை மணி நேரத்தில் லோன் சேங்ஷன் பண்ணினாங்களாம். கொஞ்ச நஞ்சமில்லே, மூணு கோடி! 'வேண்டாம் சார். வெளையாட்டுக்கு கேட்டேன்'னு ரஹ்மான் சமாளிச்சாலும், விடாம செக்கை கையிலே திணிச்சுட்டுதான் கிளம்புனாங்களாம்.

நமக்கெல்லாம் இப்படி ஒரு வேகத்தோட செயல்படுமா பேங்க்? பின் மண்டையிலே பெட்ரோலை ஊத்திகிட்டு யோசிக்க வேண்டிய கேள்வி

Wednesday, May 27, 2009

ர‌ஜி‌னியை ஆ‌ட்டு‌வி‌த்த ‌பிரபுதேவா


ரேஷ‌ன் மா‌‌தி‌ரி அள‌ந்துதா‌ன் வரு‌கி‌ன்றன எ‌‌ந்‌திர‌ன் ப‌ற்‌றிய செ‌ய்‌திக‌ள். ச‌ன் ‌பி‌க்ச‌ர்‌ஸ் பட‌த்தயா‌ரி‌ப்பை ஏ‌ற்று‌க் கொண்ட பின் எந்திரனிடமிருந்து எட்டியே நிற்கின்றன ஊடகங்கள்.

சமீபத்தில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கினார் ஷங்கர். வழக்கமான செக்யூரிட்டி, கெடுபிடி, அடையாள அட்டை எல்லாம் உண்டு. நடனக் காட்சியை அமைத்தவர் பிரபுதேவா.

இந்தப் பாடலை கிராபிக்ஸ் செய்வதற்கு வசதியாக ப்ளுமேட்டில் படமாக்கினார் ஷங்கர். சரி, எந்த மாதிரி கிராபிக்ஸ் செய்யப் போகிறார்?

அது பரம ரகசியம்! அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? நாம் விசாரித்ததில் நூற்றுக்கணக்கான ரஜினிகளை வெவ்வேறு காஸ்ட்யூமில், வெவ்வேறு ஸ்டைல்களில் திரையில் உலவவிடப் போகிறாராம்.

ஒரு ரஜினிக்கே விசில் பறக்கும். நூறு ரஜினி என்றால்..? அதகளம்தான் போங்க!

சர்வம் தொடர்ந்து முதலிடம் பாக்ஸ் ஆபிஸில்

முதல்வார இறுதியில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது விஷ்ணுவர்தனின் சர்வம். ஐம்பதாவது நாளை கடந்த அயனுக்கு இரண்டாவது இடம்.

5. நியூட்டனின் மூன்றாம் விதி

ஆ‌க்ஷ‌ன் கதையான இது பெ‌ண்களை கவர தவ‌றி‌யிரு‌க்‌கிறது. பட‌த்‌தி‌ன் மு‌க்‌கியமான பல‌வீனமு‌ம் இதுதா‌ன். இதுவரை நாற்பத்து எ‌ட்டு லட்சங்களை வசூலித்துள்ளது நியூட்டனின் மூன்றாம் விதி. வார இறுதி‌யி‌ல் ஒ‌ன்றரை ல‌ட்ச‌‌‌த்தையே தா‌ண்டியு‌ள்ளது.

4. ராஜாதிராஜா

கவ‌ர்‌ச்‌சியை ந‌ம்‌பி வ‌ந்‌திரு‌க்கு‌ம் பட‌ம். ஆர‌ம்ப ஜோ‌ரிலேயே 31 ல‌ட்ச‌ங்களை‌த்தா‌ன் கை‌ப்ப‌ற்ற முடி‌ந்‌திரு‌க்‌கிறது. வார இறு‌‌தி‌யி‌ல் வசூ‌ல் 7.7 ல‌ட்ச‌ங்க‌ள்.

3. பசங்க

போ‌ட்ட காசு‌க்கு பழு‌தி‌ல்லாத கலெ‌க்ஷ‌ன். மூ‌ன்று வார‌த்‌தி‌ல் 80 ல‌ட்ச‌ங்கைள தா‌ண்டி‌யிரு‌க்‌கிறது. வார இறுதியில் 11,3 லட்சங்களை வசூலித்துள்ளது.

2. அயன்

இ‌ந்த வருட‌த்‌தி‌ன் மெகா‌ஹ‌ி‌‌ட் ‌திரை‌ப்பட‌ம். ஐ‌ம்பது நா‌ட்களு‌க்கு‌ப் ‌பிறகு‌ம் அசர‌வி‌ல்லை வசூ‌ல். ஏற‌க்குறைய 7 கோடியை எ‌ட்டி‌யிரு‌க்கு‌ம். வார இறு‌தி வசூல் 19,5 லட்சங்கள்.

1. சர்வம்

34 ல‌ட்ச‌ங்களுட‌ன் தொட‌ர்‌ந்து முத‌லிட‌த்‌தி‌ல் உ‌ள்ளது ச‌ர்வ‌ம். விஷ்ணுவர்தன், ஆ‌ர்யா, ‌த்‌ரிஷா மூவரு‌க்கு‌ம் ஏ செ‌ன்ட‌ர்க‌ளி‌ல் ர‌சிக‌ர்க‌ள் அ‌திக‌ம். ஒரு வார‌த்‌தி‌ல் பட‌த்‌தி‌ன் வசூ‌ல் ஒரு கோடியை தா‌ண்டி‌யிரு‌ப்பதே இத‌ற்கு சா‌ன்று.

ஊனத்தை ஊனப்படுத்தியவர் எடிசன்


டங்ஸ்டன் இழை கொண்ட மின் விளக்குகள் முதல் தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகள் ஏராளம் ஏராளம்.

அவற்றின் முன்னேறிய தொழில்நுட்பங்கள்தான் நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலானவைகள் என்றால் அது மிகையில்லை.

அப்படிப்பட்ட அந்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு ஒரு குறை இருந்தது.

அவருக்கு லேசாக காது கேட்காது. ஆனால் அந்த ஊனத்தையே ஊனமாக்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன்.

ஒரு முறை அவரிடம், உங்கள் வெற்றிக்குக் காரணம் என்ன? என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் வியப்பில் ஆழ்த்தியது.

அதாவது, எனக்கு காது சரியாக கேட்காது. எனவே அடுத்தவர் திட்டினாலும், புகழ்ந்தாலும் எனக்கு கேட்காது. அதனால் நான் எப்போதும் என்னுடைய வேலையை பார்க்க முடிந்தது. அதனால் தான் நான் இவ்வளவு கண்டுபிடிப்புகளை கண்டறிய முடிந்தது என்று கூறினார்.

ஊனத்தையே ஊனமாக்கும் வித்தை ஒரு சிலருக்கு தெரிந்திருக்கிறது. அதனை எல்லோரும் கற்றறிவோம்

விமர்சனம் - ராஜா‌திராஜா


ராஜா‌திராஜா என பெயர் வைத்து ர‌ஜினியின் தர்மதுரை பாதிப்பில் எடுத்திருக்கிறார்கள் படத்தை. லாரன்சின் உச்ச‌ரிப்பு முதல் உடலசைவுவரை அனைத்திலும் ர‌ஜினி... ர‌ஜினி...

கிடைக்கிற வேலை செய்து அண்ணன்கள் மூவரையும் பெ‌ரிய ஆளாக்குகிறார் லாரன்ஸ். அப்பாவின் கடைசி ஆசையாம். ஆனால் அவர்கள்...? ஏழைகளுக்கு உதவுவார்கள் என்று பார்த்தால் சமூகத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுகிறார்கள் மூவரும். அவர்களுக்கு பார்ட்னர் கஞ்சா விற்று மினிஸ்டராகும் மும்தா‌ஜ். நால்வரையும் அவர்கள் ரூட்டிலேயே சென்று நளபாகம் செய்கிறார் லாரன்ஸ்.

மூணு வ‌ரி கதைக்கு முள்ளங்கி பத்தையாக மூன்று ஹீரோயின்கள். முதல் பகுதி மீனாட்சிக்கு என்றால் இரண்டாம் பகுதியை பங்குப் போட்டுக் கொள்கிறவர்கள் ஸ்னிக்தாவும், காம்னாவும். இவர்கள் தொப்புளை போகஸ் செய்வதிலேயே குறியாக இருக்கிறது சுரேஷ் தேவனின் கேமரா.

படத்தின் சவுண்ட் பார்ட்டி கருணாஸ். பாடலும் பின்னணி இசையும் இவர்தானாம். பார்த்து கண்ணா... பறக்கிற ஆசையில் இருக்கிறதை விட்டுரப் போறீங்க. கருணாசுடன் இணைந்து லாரன்ஸ் தனது அண்ணன்களுக்கு தரும் டெலிபோன் ட்‌ரீட்மெண்ட் கொஞ்சமே கொஞ்சம் சுவாரஸியம். அதைவிட அரிவாள் முனையில் நடக்கும் நாட்டாமை மகள்கள் திருமணம் படு ஜோர்.

ஆ.. ஊ.. என்றால் சேலையை உருவிப்போட்டு பன்ஞ் டயலாக்காக உறுமுகிறார் மும்தா‌ஜ். சொந்தக் குரல் வேறு. சோதிச்சிட்டீங்க தாயீ. இழுத்து விடுகிற சிகரெட் புகையில் மட்டும் யதார்த்தமோ யதார்த்தம். நடனத்தில் தனிப் பாணியை பின்பற்றும் லாரன்ஸ் நடிப்பிலும் அதை தொடர்ந்தால் நலம். அண்ணன்களில் போஸ் வெங்கட் தேறுகிறார்.

இறக்கும் தருவாயில் அண்ணன்களை பெ‌ரிய ஆளாக்கு என கடைசி மகனிடம் சத்தியம் வாங்கும் அப்பா, பப்ளிக்காக தலையில் ஆப்பு அடித்து கொலை செய்யும் போலீஸ், கக்கூஸ் அருகில் கஞ்சா விற்று மந்தி‌ரியாகும் பெண்... லா‌ஜிக்கை லா‌ரி ஏற்றி அனுப்பியிருக்கிறார் இயக்குனர். எஞ்சுவது ராணிகளின் கவர்ச்சி ஆட்டம் மட்டுமே.

கதையில் கோட்டைவிட்டு கவர்ச்சி கறிவேப்பிலையை தூவியிருக்கிறார் ஷக்தி சிதம்பரம். மணக்கும் என்று நினைத்திருப்பார்... கசப்போ கசப்பு.

விஷால் படத்தில் நீது சந்திரா?


கேள்விக்குறியுடனேயே கேட்க வேண்டியிருக்கிறது தீராத விளையாட்டு பிள்ளை பற்றிய எந்தச் செய்தியையும்.
திரு இயக்கத்தில் விஷால் நடிக்கும் இந்தப் படத்தின் பெரும் குழப்பமே நடிகைகள் தான். இதில் விஷாலுக்கு மூன்று ஜோடிகள். வானிலை அறிக்கை மாதிரி தினம் ஒரு செய்திகள். த்ரிஷா, ரீமாசென், பிபாசாபாசு, தனுஸ்ரீதத்தா, ப்ரியாமணி என அரை டஜன் நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன ஆனால் அதிர்ஷ்டம் அடித்ததென்னவோ ஸ்ரேயாவுக்கு.

தோரணையைத் தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளையில் நடிக்கிறாராம் ஸ்ரேயா. அப்படியும் இரண்டாவது ஜோடி குறைகிறதே. லேட்டஸ்ட் தகவல், இந்தி நடிகை நீது சந்திரா தீராத விளையாட்டுப் பிள்ளை யூனிட்டின் பரிசீலனையில் இருக்கிறாராம்.

யாவரும் நலம் படத்தில் ஹோம்லியாக வந்து போன நீது சந்திரா, ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் (திமென்) அட்டைப் படத்துக்கு ஏறக்குறைய ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்திருக்கிறார்.

அந்த புகைப்படத்தைப் பார்த்துத்தான் நீதுவை விஷால் டீமுக்குப் பிடித்துப் போனதாக கிசுகிசுக்கிறார்கள்.

இந்த தேடுதல் வேட்டையையே ஒரு படமாக எடுக்கலாமே!

கிசு கிசு பற்றிக் கவலை இல்லை - மஞ்சரி


முத்திரை படத்தில் நிதின் சத்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து நிதின் சத்யாவுக்கும் மஞ்சரிக்கும் அது இது என்று ஏகப்பட்ட கிசுகிசுக்கள்.
ஆனால் இதைப் பற்றியெல்லாம் மஞ்சரி கவலைப்படவில்லை. இதற்கிடையில் முத்தக்காட்சியில் நடிக்க மஞ்சரி மிகவும் ஆர்வம் காட்டியதாக செய்திகள் வெளியாகின. இதைப் பார்த்து கொதிப்படைந்த மஞ்சரி, ‘முத்திரை படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க நான் இயக்குநரிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதைப் பார்த்ததும் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டேன். படத்திற்கு முத்தக் காட்சி அவசியமே இல்லை.

அப்படி இருக்கும் போது நான் ஏன் முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும்? முத்தக் காட்சி இருப்பதாக நிதின் சொன்னதாக எழுதுகிறார்கள். நான் சொல்லாத சில விஷயங்களையும் எழுதிவிடுகிறார்கள். அப்படித்தான் நிதின் சொல்லாததையும் எழுதியிருக்கிறார்கள். நிதின் ஒரு நல்ல நடிகர். எங்களுக்குள் எதுவும் இல்லை... இல்லவே இல்லை...’ என்று காட்டமாக பொரிந்து தள்ளிவிட்டார் போங்கள்.

நெருப்பில்லாமல் புகையுமா....?

இயக்குநர் புகழ் பாடும் நாயகி


மோதி விளையாடு படத்தில் வினய்க்கு ஜோடியாக ஆட்டம் போடுகிறார் காஜல் அகர்வால். இந்தப் படத்தை சரண் இயக்கி வருகிறார்.
‘இந்தப் படத்தின் ஷூட்டிங் மலேசியா, சென்னை, புதுவை என ஏராளமான பகுதிகளில் நடந்தது. ஆனால் எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை. இயக்குநர் சரண் எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்வதுதான் இதற்குக் காரணம்’ என்கிறார் காஜல்.

இவர் இப்படி இயக்குநர் புகழ் பாட காரணம் இல்லாமல் இருக்குமா என்ன? இந்தப் படத்தில் காஜலுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் வழங்கியிருக்கிறார் இயக்குநர். இந்தக் கேரக்டர் பேசப்படும்படியாக இருக்குமாம்... இந்தப் படத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டே இசைக்குழுவையும் நடத்தி வருகிறாராம் காஜல்.

அப்போ படத்தில் ஒரு பாட்டாவது பாடுவீங்கதானே?

உடற்பயிற்சி சாதனத்தில் சிக்கி மைக் டைசன் மகள் பலி


பீனிக்ஸ்: குத்துச்சண்டை வீரர் மைக் டைசனின் நான்கு வயது மகள் வீட்டில் இருந்த உடற்பயிற்சி சாதனம் ஒன்றின் கேபிளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன். இவருக்கு பல மனைவிகள்ர். அவர்களின் மூலம் இவருக்கு ஜெனா (20), மைக்கே (18), ராய்னா (13), அமிர் (11), மைகுல் (7) மற்றும் எக்சோடஸ் (4) என ஆறு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது டைசன் பீனிக்ஸ் நகரில் மைகுல் மற்றும் எக்சோடஸ் ஆகிய என்ற இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருவதாக தெரிகிறது. இந் நிலையில் நேற்று முன்தினம் மைக் டைசனின் கடைசி குழந்தையான எக்சோடஸ் வீட்டில் இருந்தி உடற்பயிற்சி அறைக்குள் சென்று விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு இருந்த உடற்பயிற்சி சாதனம் ஒன்றின் கேபிள் அந்த சிறுமியின் கழுத்தை சுற்றி இறுக்கியது. இதில் குழந்தை அந்த இடத்திலே மயங்கினாள். கழுத்தில் கேபிள் இறுகி அவள் தொங்கி கொண்டிருப்பதை பார்த்த அவளது சகோதரன் மைகுல் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஓடிச் சென்று சிறுமியை மீட்ட தாய் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவி்ட்டனர்.

திரு திரு துறு துறு'... திருட்டு, காதல், மோதல், ஜாலி!


சத்யம் சினிமாஸ், இப்போது முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் களமிறங்குகிறது.

படத்தி்ன் பெயர் 'திரு திரு துறு துறு'. ஜூலையில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் அட்டகாசமான படைப்பாக வெளிவருகிறது.

'திரு திரு துறுதுறு' முழுக்க முழுக்க ரெட் ஒன் காமிராவில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழில் வெளியாகும் இந்தப் படம், ஒரே நேரத்தில் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.

ஒரு குழந்தையைக் கடத்தும் இளைஞன் அவனை ஏற்க மறுக்கும் காதலி, அவர்களது நண்பன் ஆகியோர் படும் பாடுகளையும், கலாட்டாக்களையும் இரண்டரை மணி நேரம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதத்தில் சொல்லியிருக்கிறார்களாம்.

'அஞ்சாதே' புகழ் அஜ்மல் இந்தப் படத்தின் நாயகனாக நடித்துள்ளார். ரூபா என்ற புதுமுகம் நாயகியாக அறிமுகமாகிறார். பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் தங்கப்பதக்கம் வென்ற நந்தினி இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகிறார்.

'கண்ட நாள் முதல்' படத்தில் ப்ரியாவியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் நந்தினி. இவர் எடுத்த ஓட்டம் எனும் குறும்ப

'அழகர் மலையில்' சோனாவின் பிகினி ஆட்டம்!


இசைஞானி இளையராஜாவின் இசை, முதல்முறையாக அவர் ஒரு பாடலில் இசைஞானியாகவே தோன்றுவது, நாயகன் ஆர்கேவின் இயல்பான நடிப்பு, சின்ன இடைவெளிக்குப் பிறகு அவருடன் இணைந்திருக்கும் பானு, காமெடியில் பின்னியெடுத்திருக்கும் வடிவேலு... இப்படி பல சிறப்புகள் கொண்ட அழகர் மலை படத்தில் இன்னொரு 'சிறப்பு'ம் இருக்கிறது.

அதுதான் சோனியாவின் ஜில் தோற்றம். குசேலனுக்குப் பிறகு மீண்டும் வடிவேலுவுடன் ஜோடி போட்டிருக்கும் சோனா, இதில் கேமராவுக்கே வெட்கம் வருகிற அளவுக்கு இந்தப் படத்துக்காக 6 நாட்கள் நீச்சலுடையிலேயே வலம் வந்தாராம்.

'அழகை அம்சமாகக் காட்டினால் சென்சாரும் ரசிப்பார்கள்' என்ற நம்பிக்கையோடு காட்சிகளை 'செம ஹாட் மச்சி' என சொல்லும் விதத்தில் சுட்டுத் தள்ளிவிட்டாராம் இயக்குநர் எஸ்பி ராஜ்குமார்.

படத்தில் நடித்த அனுபவம் குறித்து இப்படிச் சொல்கிறார் சோனா:

"ஆர்கே சார் படத்துல எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைச்சிருக்கு... ரொம்ப சந்தோஷமா உணர்கிறேன். வடிவேலு சார் கூட திரும்பவும் ஜோடியா நடிக்கிறேன். காட்சிகள் அருமையா வந்திருக்கு. கிளாமரா நான் வந்தாலும், ரசிக்கிற மாதிரி அழகா மாத்திட்டாரு அந்த காட்சிகளை இயக்குநர்.

இந்தப் படத்துல நடிச்சது நிஜமாகவே ஒரு இனிய அனுபவம். மறக்க முடியாதது. நிச்சயம் இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும்", என்கிறார் சோனா.

'தலையிடாதீங்க...' நடிகையிடம் சீறிய இயக்குனர்!


தெனமும் ஒரு முறையாவது த்ரிஷா அம்மாவுக்கு போன் அடித்து பெண்ணை பற்றி விசாரிக்கிறது மீடியா. அப்படியாமே... இப்படியாமே...ன்னு இவங்க கேட்கிறது எல்லாமே வாலுல தீ வைக்கிற வம்பு தும்பு மேட்டர்கள்தான். 'என்னைய பற்றி இப்படி கௌப்பி விடுறது யாருன்னு தெரியும். யாருன்னு சொல்லி தேவையில்லாம அவங்களை பெரிய ஆளாக்குவானேன்? அதுக்காகதான் நான் கோவத்தை அடக்கிகிட்டு சும்மாயிருக்கேன்' என்று பல்லை கடிக்கிறார் த்ரிஷா.

'நல்ல பொண்ணுக்கு நாமதானே துணையிருக்கணும். அதைவிட்டுட்டு கொல்லை பக்கத்திலே குழி பறிக்கிற வேலையெல்லாம் எதுக்கும்மா?' என்று கொஞ்சுகிறாராம் அம்மாவும்! இதற்கிடையில் இவர் மேக்கப் இல்லாமல் நடித்த இரண்டு படங்களில், ஒரு படத்தின் ரிசல்ட் ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறதாம் தாயையும் மகளையும்!

இன்னொரு படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்திருந்தாலும், இனி எடுக்கப்பட போகிற காட்சிகளிலாவது மேக்கப் போடலாமா என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்களாம் அப்படத்தின் டைரக்டரை. ஆணானப்பட்ட வம்பு நடிகரையே அடக்கி ஆண்ட அந்த இயக்குனர் 'டோண்ட் சஜஷன்ஸ்' என்று கொஞ்சம் கடுமையாகவே முகத்தை காட்டிவிட்டாராம்.

ச்சும்மா கலகலன்னு ஒரு படத்திலே நடிச்சு, மீண்டும் பழைய பேரை எடுக்கணும்ங்கிற முடிவுக்கு வந்திருக்காங்க அம்மாவும் மகளும்!

நான் மட்டுமா காரணம்? ஆர்யா ஆத்திரம்!


அறிந்தும் அறியாமலும், பட்டியல் படங்களுக்கு பிறகு ஆர்யா நடித்த ஒரு படமும் ஓடவில்லை. ஆனால், இரண்டு கோடி சம்பளத்தை குறைப்பதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறாராம். சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவரும் இந்த விஷயத்தை குறிப்பிட, 'இதே வேலையா போச்சு இவங்களுக்கு' என்று கண் சிவக்கிறாராம் ஆர்யா.

உயிரை கொடுத்து நடிக்கிறேன். உச்சி வெயில்னு பார்க்காம ஓடுறேன். என்னை போயி இவ்வளவு சம்பளம் வாங்குறீயேன்னு சாபம் கொடுக்கலாமா? நான் நடிச்ச படம் ஓடலேன்னா அதுக்கு நான் மட்டுமா காரணம்? என்று நெருக்கமானவர்களிடம் சொல்லி இவர் பிதற்றுவது ஐயோ பாவமாக இருக்கிறதாம்.

இதற்கிடையில் மீண்டும் கூட்டு சேர ஆசைப்பட்ட பிதா இயக்குனருக்கு ஆர்யா சொன்ன பதில், 'ஆளை விடுங்க சாமீய்' கதை கேட்கிற விஷயத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார். அதற்காக ஒரு அறிவாளி கூட்டத்தை தயார் செய்யும் வேலையில் இருக்கிறாராம். இப்போதான் அலாரம் வச்சு எழுப்புது விதி!

பழைய பாடல்களை காப்பாற்றணும்...! பாடலாசிரியர் முனைப்பு


என்னாச்சு கவிஞர்கள் சங்கம்? சும்மா கிடந்த 'சங்க பலகையை' தூசு தட்டி வச்சிட்டு போயிட்டாரு கவிப்பேரரசு வைரமுத்து. கவிஞர்களுக்காக ஒரு சங்கம் துவங்கணும் என்று வாலிபக் கவிஞர் வாலியையும் வைத்துக் கொண்டு அவர் பேசியபோது, தள்ளாத வயதிலும் சந்தோஷமாக கை தட்டினார் வாலி.

பேச்சு பேச்சாதான் இருக்கணும்னு நினைச்சாங்க போலிருக்கு. அதுக்கு பிறகு பேச்சையே காணோம். ஒரு விழாவில் நா.முத்துக்குமாரிடம் இதுபற்றி கேட்டபோது, 'அப்படியா?' என்றார் ஆச்சர்யம் தாளாமல்! அட, இவரு மாதிரி முன்னணி கவிஞர்களுக்கே தெரியாமல் ஒரு முயற்சியா? போகட்டும்...

நா.முத்துக்குமாரின் கருத்தென்ன? அவசியம் இருக்கணும் சார். ஏன்னா எங்க செக்குகள்தான் அடிக்கடி பவுன்ட்ஸ் ஆகுது. எழுதிய பாடலுக்கு பணம் வாங்கறதுக்குள்ளே விழி பிதுங்கி போகுது. சினிமாவில் இருக்கிற மற்ற அமைப்புகளுக்கு அப்படியல்ல. அவங்க உழைப்புக்கான தொகை வராவிட்டாலும் சங்கம் வசூலிச்சு கொடுக்குது. இந்த விஷயத்துக்காகவாவது எங்களுக்கு ஒரு சங்கம் வேணும் என்றார்.

பாபநாசன் சிவன், மருதகாசி போன்ற புகழ் பெற்ற பாடலாசிரியர்கள் எழுதிய எத்தனையோ பாடல்கள் பிரதியெடுக்காமல் அப்படி அப்படியே அழிஞ்சிட்டு வருது. சங்கம்னு ஒன்று இருந்தா, இந்த வேலைகளுக்கென்று ஒரு ஆளை போட்டு அந்த பாடல்களை காப்பாற்றலாம். 'அதையேன் கேட்கிறீங்க? நான் ஆரம்ப காலத்தில் எழுதிய பல பாடல்களின் பிரதி எனக்கே கிடைக்கலே' என்றார். நா.முத்துக்குமார் சொல்றது காதிலே விழுதா கவிஞர்களே...

முன்னாள் அண்ணியும், இந்நாள் அண்ணியும்...! ரசிகர்கள் உற்சாகம்


படம் டப்பா என்றாலும் முதல் பத்து நாட்கள் கலெக்ஷனுக்கு உத்திரவாதம் கொடுக்கிற ஹீரோக்கள் மூவரில் விஷாலும் ஒருவர்! மற்ற இருவர் யார் யார் என்பதை உங்களின் பேரரறிவிற்கே விட்டு விடுகிறோம். இந்த ஒரு காரணத்திற்காகவே 'வச்சுக்கோ...' என்று விஷாலுக்கு வாரியிறைக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

போக்கிரி பட தயாரிப்பாளர் ரமேஷ் தெலுங்கில் பெரிய்ய்ய்ய்ய்ய முதலீடு செய்திருக்கிறாராம். மூன்று முன்னணி ஹீரோக்களை வைத்து தலா இருபத்தைந்து கோடி பட்ஜெட்டில் மூன்று படங்களை எடுத்து வருகிறாராம். இவர்தான் விஷாலை வைத்து தமிழில் புதிய படத்தை தயாரிக்கிறார். புரட்சித்தளபதிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? நவ கோடிகளாம்!

தோரணை படத்தின் ரிசல்ட் என்னவென்றே தெரியாத நிலையில் இப்படி ஒரு சம்பளத்தை கொடுக்க எப்படி முன்வந்தார் ரமேஷ்? வேறொன்றுமில்லை, நாம் முதல் பாராவில் சொன்ன ஃபார்முலாதான்! வியாபார நுணுக்கங்களை விடுங்கள்... பெரும் பிரயத்தனம் எடுத்து ரீமாசென்னுக்கும் அட்வான்ஸ் கொடுத்துவிட்டார்களாம். விஷால் ரசிகர்களுக்கு இதுதான் லேட்டஸ்ட் இனிப்பு. இன்னொரு ஹீரோயினாக முன்பே கமிட் செய்யப்பட்டவர் ஸ்ரேயா என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். ஒரே படத்தில் முன்னாள் அண்ணியும்... இந்நாள் அண்ணியும்!

விஷால் ரசிகர்கள் யோகக்காரர்கள்தான்!

Tuesday, May 26, 2009

ஜீவா, வடிவேலு - கச்சேரி ஆரம்பம்


தந்தை ஆர்.பி. செளத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் கச்சேரி படத்தில் நடிக்கிறார் ஜீவா. பூபதி பாண்டியன், சீமான் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த திரைவாணன் கச்சேரியின் இயக்குனர்.

ஒரு டஜன் படங்களை எட்டிய பிறகும் வடிவேலுவுடன் நடித்ததில்லை ஜீவா. முதல் முறையாக கச்சேரியில் களை கட்டுகிறது இந்த புதிய கூட்டணி. கதைப்படி, ஜீவாவுடனே படம் நெடுக வருகிறாராம் வடிவேலு. இருவரும் அடிக்கும் லூட்டியில் திரையரங்கு திணறும் என்கிறது கச்சேரி யூனிட்.

தெனாவட்டு படத்தில் ஜீவா ஜோடியாக நடித்த பூனம் பஜ்வாதான் இதிலும் அவருக்கு ஜோடி. சென்னை, ஊட்டி, கும்பகோணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் திரைவாணன்.

கிராமத்து கதை என்றாலும் கனவு பாடலுக்கு கடல் கடந்து செல்வதுதானே தமிழ் சினிமாவுக்கு அழகு. ஜீவா, பூனம் பஜ்வா ஜோடி கனவுப் பாடலுக்கு ஆஸ்திரேலியா பறக்கிறது.

டி. இமான் கச்சேரிக்கு இசையமைக்கிறார்.

வதந்தியில் சிக்கிய மாதவன்


அவன் அவள் அது மாதவன், சதா நடித்திருக்கும் படம். இதன் தயாரிப்பாளர் சம்பள பாக்கி வைத்திருப்பதால் மாதவன் டப்பிங் பேசவில்லையென்றும், அவருக்குப் பதில் வேறொருவரை டப்பிங் பேச வைத்து வரும் வெள்ளிக்கிழமை படத்தை ரிலீஸ் செய்கின்றனர் என்றும் கடந்த இரண்டு நாட்களாக பத்திரிக்கைகளில் பரபரப்பு செய்திகள்.
உண்மைதானா இது? இந்தியில் ராம்கோபால் வர்மா தயாரித்த டார்லிங் படத்தின் ரீமேக்தான் அவன் அவள் அது. கொனா வெங்கட் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு முதலில் லீலை என்று பெயர் வைத்திருந்தனர். ஆஸ்கர் பிலிம்ஸ் லீலை என்ற பெயரை ஏற்கனவே சேம்பரில் பதிவு செய்திருந்ததால் மாதவனின் லீலை, அவன் அவள் அது என்று பெயர் மாற்றப்பட்டது.

படத்தின் தயாரிப்பாளர் கவுரவ் சர்மா மாதவனுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பது உண்மை. மாதவன் டப்பிங் பேச முதலில் மறுத்ததும் உண்மை. பரஸ்பரம் சங்கத்தில் புகார் கூறிய இருவரும் இறுதியில் ஒரு தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

மாதவனுக்குப் பதில் வேறொருவரை வைத்து டப்பிங் பேசயிருப்பதாக வந்த செய்திகளை கவுரவ் சர்மா மறுத்தார். ஜூன் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் டப்பிங் பேசித் தருவதாக மாதவன் உறுதியளித்திருப்பதாக அவர் உறுதியளித்தார். அதனை மாதவன் மீறும்பட்சத்தில் வேறொருவரை வைத்து டப்பிங்கை முடித்து படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், சங்கத்தில் இதுகுறித்து ஏற்கனவே பேசிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மாதவன் டப்பிங் பேசினாலும், பேசாவிட்டாலும், அடுத்த மாதம் படத்தை திரையில் எதிர்பார்க்கலாம்.

எஸ் பிக்சர்சின் இரண்டு படங்களில் நந்தா


மௌனம் பேசியது, புன்னகை பூவே என்று வெற்றிப் படங்களில் நடித்த நந்தாவுக்கு அதன்பிறகு சொல்லிக் கொள்ளும் படியான கேரக்டர் அமைந்தது ‘உற்சாகம்’ படத்தில்தான்.
இந்தப் படத்தில் துள்ளும் இளமை ஷெரினுடன் ஜோடி சேர்ந்திருந்தார் நந்தா. படம் சொல்லிக் கொள்ளும்படியாகக் போகவில்லை. இப்போது நந்தா, இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரித்து வரும் ‘ஈரம்‘ மற்றும் ’ஆனந்தபுரத்து வீடு’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் ஈரம் படத்தை ஷங்கரின் உதவி இயக்குநர் அறிவழகன் இயக்கிவருகிறார். த்ரில் படமான ‘ஆனந்தபுரத்து வீடு’ படத்தை மர்மதேசம் புகழ் நாகா இயக்குகிறார்.

நந்தா இப்போது இந்த இரண்டு படங்களையும்தான் வெகுவாக நம்பிக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களும் வெளிவந்துவிட்டால் தன் நடிப்புத் திறமை மூலம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.

நம்பினால் நடக்கும்னு சொல்லுவாங்களே...!

தமிழில் ஒரு 'கெளபாய்' படம்!


நான் ஒரு முழுமையான தமிழ்ப் பெண். தமிழ்ப் படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். என்னைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லையே', என்கிறார் நடிகை பத்மப்பிரியா.

நெல்லை விக்கிரமாசிங்கபுரம் பகுதியில் 'இரும்புகோட்டை முரட்டு சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ், பத்மப்ரியா, லட்சுமி ராய், சந்தியா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஷூங்டிங் ஸ்பாட்டில் நடிகை பத்மபிரியா கூறியதாவது:

நான் தமிழகத்தை சேர்ந்தவள். தாய்மொழி தமிழ்தான். அம்மா நெல்லை மாவட்டம் கோடகநல்லூரை சேர்ந்தவர். அப்பா வேலூர் மாவட்டம். நான் எம்பி படித்து விட்டு ஆய்வு மேற்கொண்டிருந்தேன்.

ஆரம்பத்தில் மாடலிங் பண்ணிக் கொண்டிருந்தேன். பின் வேலை பார்த்து கொண்டே மலையாள படத்தில் நடித்தேன். தமிழ், தெலுங்கு, இந்தி என 30 படங்களில் நடித்துள்ளேன். தமிழில் தவமாய் தவமிருந்து படம் உட்பட 6 படத்தில் நடித்துள்ளேன். எல்லா படத்திலும் எனக்குண்டான கேரக்டரை ரசித்து நடித்துள்ளேன். தொடர்ந்து தமிழல் நடிக்க விரும்புகிறேன். ஆனால் என்னை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இரும்புகோட்டை முரட்டு சிங்கம் படத்தில் 'கெளபாய்' பெண்ணாக நடிக்கிறேன். நீண்ட நாளைக்குப் பிறகு 'கெளபாய்' படம் தமிழில் வருவது பாராட்டுக்குரியது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். இயக்குநர் ஒவ்வொரு சீனையும் ரசித்து எடுக்கிறார். மக்களிடம் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள எல்லா ஊரும் அழகாய் இருக்கிறது. எனக்கு தென்காசி, வீரவநல்லூரில் உறவினர்கள் இருக்கிறார்கள். தமிழ் படங்களில் பெரும்பாலும் என் சொந்த குரலிலேயே பேசி வருகின்றேன் என்றார் பத்மா.

ப்ளேபாயை 'விர்ஜினு'க்கு விற்கும் ஹெப்னர்?


நியூயார்க்: உலகின் முன்னணி செக்ஸ் பத்திரிகையான ப்ளே பாய் மற்றும் அதன் பிரபல இணையத் தளம் உள்ளிட்டவற்றை பிரிட்டிஷ் கோடீஸ்வரர் சர் ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் நிறுவனத்துக்கு விற்க முடிவு செய்துள்ளார்களாம்.

ப்ளே பாய் பத்திரிகை மற்றும் இணையத் தளம் செக்ஸ் படங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு மிகப் பிரபலமானவை. அமெரிக்காவின் 83 வயது 'இளைஞர்' ப்யூஜ் ஹெப்னர் இதன் உரிமையாளர். ரொம்ப ஷோக்குப் பேர்வழி.

56 ஆண்டுகளுக்கு முன் இந்த பத்திரிகையை ஆரம்பித்தார். சக்கை போடு போட்டு வந்த இந்தப் பத்திரிகை மற்றும் இணையத் தளத்தின் லாபம் சமீப காலமாகக் குறைந்துவிட்டதாம். இதைப் போல பல போர்னோ பத்திரிகை மற்றும் இணையத் தளங்கள் பெருகியதே இதற்குக் காரணம்.

ஆனால் தனது ஜாலியான வாழ்க்கையை மெயின்டெய்ன் செய்ய உடனடியாக பெரும் தொகை தேவைப்படுகிறதாம் ஹெப்னருக்கு.

இந்த நிறுவனத்தை விற்று கிடைக்கும் பணத்தில் மிச்ச நாட்களை ஜாலியாகக் கழிக்க முடிவு செய்துவிட்டாராம்.

எனவே 300 மில்லியன் அமெரிக்க டாலருக்கு நிறுவனத்தை விலை பேசியிருப்பதாகச் சொல்கின்றன செய்திகள்.

ஹெப்னரின் மகள் க்றிஸ்டைன்தான் இந்த ப்ளேபாய் நிறுவனத்தின் சிஓஓ என்பது குறிப்பிடத்தக்கது.

கரண்-அஞ்சலி நடிக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’


பத்தாண்டுகளுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ என்ற ஒரு படம் உருவாகிறது.

ஜே.எஸ். 24 ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. செந்தில்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதைக் களமும் பெயரைப் போலவே புதிய, மாறுபட்ட கதைக் களமாம்.

படம் குறித்து இயக்குநர் வி.சி. வடிவுடையான் இப்படிக் கூறுகிறார்:

“இந்தப் படத்தில் உண்மையில் இரண்டு கதாநாயகர்கள். ஒன்று கரண். இன்னொன்று கதை! ஓர் உண்மைச் சம்பவத்தை, சாயம் பூசாமல், வீரியம் கெடாமல், அப்பட்டமாக உள்ளது உள்ளபடி காட்சிப்படுத்தியிருக்கிறோம். இது வாழ்ந்தவர்களின் கதை என்பது ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரியும்” என்கிறார்.

அப்படி என்ன கதை?

“தமிழகத்திலேயே அதிகம் படித்தவர்கள் வசிக்கும் மாவட்டம், குமரி மாவட்டம். ஆனால் அங்குதான் குற்றவாளிகள் அதிகம் என புள்ளிவிபரம் சொல்கிறது. இந்த முரண்பாட்டால் நிகழந்த ஒரு உண்மை சம்பவம்தான் கதை. யதார்த்த வாழ்க்கையில் என் கண்முன் நடந்த காதலும் வன்முறையும் வீரியம் குறையாமல் இந்த கதையோடு பின்னப்பட்டு இருக்கிறது.

இந்த உண்மை சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே படபிடிப்பும் நடந்ததால் காட்சிகள் படமாக்கும் விதத்தை பார்த்து அட! இது அவரோட கதையில்ல!! என்று மக்கள் ஆச்சரியுபட்டவிதமே இப்படத்தின் வெற்றியை மேலும் உறுதிசெய்யும்” என்கிறார் வடிவுடையான்.

இப்படத்தின் வசனகர்த்தா பா.ராகவன் கதை நடந்த இடத்திற்கே சென்று குமரி மாவட்டத்து மக்களின் பேச்சு வழக்கு மாறாமல் உணர்வுகளை வசனமாக்கியிருகிறார் என்கிறார் படத்தின் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்.

கதை பிண்ணனிக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக குமரி மாவட்டத்து பாரம்பரிய இசைக்கருவிகளை பயன் படுத்திருக்கிறார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

கதையின் கதாபாத்திரங்கள் கரணுக்கு ஜோடியாக நடிப்பவர் அஞ்சலி. சரவணன், கஞ்சா கருப்பு,சண்முகராஜ் நந்தாசரவணன் சரவணசுப்பையா பாலசிங் காதல் தண்டபாணி வெண்ணிறஆடை மூர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

அந்தமான், லட்ச தீவுகள், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் படபிடிப்பு நடத்த திட்டமிடபட்டுள்ளனர்.

‘படம் தயாரிப்பது என்று முடிவு செய்தபிறகு குறைந்தது ஐம்பது, அறுபது பேரிடமாவது கதை கேட்டிருப்பேன். இந்தக் கதை என்னைத் தொட்ட அளவுக்கு இன்னொரு கதை மனதை நெருங்கவில்லை’ என்கிறார் தயாரிப்பாளர் ஜே செந்தில்குமார்.

மக்கள் இதயங்களைத் தொட்டா சரிதான்!

வில்லிகள் இல்லாத டி.வி தொடர்!


அகல்யா, பந்தம் போன்ற வெற்றிகரமான சீரியல்களை தயாரித்த சேன் மீடியா, அடுத்ததாக தயாரிக்கும் சீரியல், உறவுகள்! திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 12 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஜுன் 1-ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

குடும்ப கொண்டாட்டங்களை சொல்லி குதூகலப்படுத்த வேண்டிய சீரியல்கள், வில்லத்தனங்களையும், பழிவாங்கல்களையும்தான் சொல்லி குடும்பத்திற்குள் 'குண்டாஸ்'களை புகுத்தியது துரதிருஷ்டம். ஆனால் 'உறவுகள்' அப்படியில்லையாம். தலைப்புக்கு ஏற்றார் போலவே குடும்பத்தில் இருக்கும் உறவுகளின் மேன்மையை மென்மையாக சொல்லப் போகிற சீரியல் என்கிறது சேன் மீடியா. சின்னத்திரை ஹீரோயின்களுக்கும் இரட்டை வேடம் கொடுத்த தாராள கம்பெனி இது! இதற்கு முன்பு இவர்கள் எடுத்த 'பந்தம்' தொடரின் நாயகிக்கு இரட்டை வேடங்களாம்.

கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே போகும் கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தை சொல்லப் போகிற சீரியலாக 'உறவுகள்' தொடரை உருவாக்கி வருகிறார்களாம். 'கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே' என்ற டைட்டில் கார்டுடன் இன்னொன்றையும் தைரியமாக போட்டுக் கொள்ளலாம் இவர்கள். 'தொடரில் இடம்பெறும் எல்லோரும் நல்லவரே!'

'பேச்சுக்கு கூட ஒருவரையும் வில்லனாக்கி பார்க்கவில்லை நாங்கள்' என்று கம்பீரமாக காலரை தூக்கிவிட்டுக் கொள்கிறது உறவுகள் டீம். அர்ச்சனா கிருஷ்ணப்பா என்ற பெங்களூரு அழகியை கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறார்கள். வசனத்தை குமரேசன் எழுத, ஹரிபாபு டைரக்ட் செய்கிறார்.

இயக்குனர்களுக்கு பிடித்த இடுகாடு!


அதென்னவோ தெரியவில்லை, டைரக்டர்களின் ஷ§ட்டிங் ஸ்பாட் ஆகிவிட்டது சுடுகாடு. பாலாவை தொடர்ந்து, வால்மீகி அனந்த நாராயணன். இப்போது பிரதீஷ். பயம் அறியான் என்ற படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பே சுடுகாட்டில்தான் எடுத்தார்களாம். பத்து நாட்களாக அங்கேயே தங்கி, அங்கேயே சாப்பிட்டு, அங்கேயே படுத்துறங்கி... ஆச்சர்யம் என்னவென்றால் படத்தின் இரண்டு ஹீரோயின்களும் அங்கே தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டதுதான். சுடுகாட்டு பாதிப்பாகவும் இருக்கலாம், பிரஸ்மீட்டுக்கு தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வந்திருந்தார் ஹீரோயின்களில் ஒருவரான சனுஜா.

இப்படத்தின் ஹீரோ மகேஷ்ராஜா இங்கே வேலை பார்த்து வந்தாராம். பின்பு லண்டனுக்கு சென்று அங்கே சற்குண ராஜா என்பவரிடம் வேலைக்கு சேர்ந்தவர், மெல்ல மெல்ல அவரது அன்பை சம்பாதித்துக் கொண்டார். மகேஷின் கனவு சினிமாதான் என்பதை புரிந்து கொண்ட சற்குணராஜா, இவரையே ஹீரோவாக்கி பெரும் பொருட் செலவில் ஒரு படத்தை எடுக்க முன்வந்தார். அதுதான் 'பயம் அறியான்' என்ற படம். உண்மையில் சற்குணராஜாதான் இந்த பயம் அறியான் போலிருக்கிறது. ஏனென்றால் பாய்ஸ் மணிகண்டன், பொன்னம்பலம், கொட்டாச்சி என்று மார்க்கெட் ஆட்டம் கண்டவர்களை வைத்து படம் எடுக்கிறாரே?

மாதம் நான்கு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பி.சி.சிவம் என்பவர்தான் இப்படத்தின் இசையமைப்பாளர். இசைக்காக வேலையை விட்டு விட்டு வந்தாராம். ஆனால் சோடை போகவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். ஒரு பாடலை ஜேசுதாஸ் பாடியிருக்கிறாராம். காலையில் பாட ஆரம்பித்தவர் சுமார் ஐந்தரை மணி நேரம் எடுத்துக் கொண்டாராம் பாடலை முடிக்க. கிளம்பும்போது, நான் என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில் இப்படியரு பாடலை பாடியதே இல்லை. உனக்கு தமிழ்சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பாராட்டினாராம் ஜேசுதாஸ்.

பயம் அறியான் படத்தில் மூன்று ஹீரோயின்கள். அத்தனை பேரும் அழகாக இருப்பதால், டைட்டிலை இன்னும் ஒரு முறை சத்தமாகவே படிக்கலாம்!

ஆத்மாவுக்கு ஏது சாந்தி? பா.விஜயின் வெள்ளை அறிக்கை!


தமிழ்சினிமாவில் இல்லாத வழக்கம் இந்த 'வெள்ளை அறிக்கை' விவகாரம்! முதன்முதலாக தனது 'ஞாபகங்கள்' படத்திற்காக வெள்ளை அறிக்கை வாசித்தார் பாடலாசிரியர் பா.விஜய். ஒரு அரசாங்கமே செய்ய அஞ்சும் வேலையை சாதாரண கவிஞன் செய்தது எப்படி? வேறொன்றுமில்லை, இந்த அறிக்கையில் அடங்கியிருக்கிற விஷயம், அரை சொட்டு கண்ணீராவது சிந்த வைக்கும் கேட்கிற ஒவ்வொருவரையும்!

இவர் சூளைமேட்டில் தங்கியிருந்தபோது சந்தித்த ஒரு காதல் ஜோடியை பற்றிய அறிக்கைதான் அது. கதிரவன் என்ற அந்த சிவப்பு சிந்தனையாளனுக்கும், மீரா என்ற வடநாட்டு அழகிக்கும் காதல். கம்யூனிசம் பேசியவரை தீவரவாதி என்று அழைத்துப்போனது போலீஸ். சிறையிலிருந்து அவர் திரும்பி வந்த போது மீரா இல்லை. பெற்றோர்களால் வலுக்கட்டாயமாக வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள்.

ஆற்றாத அழுத கண்ணீரோடு சொந்த ஊர் போன கதிரவன் இறந்துவிட, அவரது டைரியை புரட்ட நேர்கிறது பா.விஜய்க்கு. அந்த டைரியில் கொட்டிக்கிடந்த கதிரவனின் கனவுகளும், நினைவுகளும்தான் இந்த 'ஞாபகங்கள்' திரைப்படமாம்.

இதுல கதை வசனம் இருக்குன்னு சொல்ல முடியாது. வழிய வழிய ரெண்டு பேர் வாழ்ந்த வாழ்க்கை. திகட்ட ரெண்டு பேர் செஞ்ச காதல். கரைஞ்சு கரைஞ்சு அழுத கண்ணீர், சிரிப்பு சத்தம். எல்லாமே எல்லாமே ஞாபகங்களா பதிவு செஞ்சாச்சு! என்ற பா.விஜய், இன்னொரு கேள்வியையும் அழுத்தமாக வைக்கிறார்.

நிச்சயமா இந்த 'ஞாபகங்கள்' படத்தால கதிரோட ஆத்மா சாந்தி அடையாது. ஆத்மாவுக்கு ஏது சாந்தி?

பிடிக்கலேன்னாலும் செய்ய வேண்டியிருக்கு... நடிகை புலம்பல்!


போகிற போக்கை பார்த்தால் சத்குருக்களும், சாமியார்களும் கூட பாவனாவிடம் 'தீட்சை' வாங்கிக் கொள்ளலாம் போலிருக்கிறது. அந்தளவுக்கு பேச்சிலும் செயலிலும் பெருத்த மாற்றம்!

அவுட்டோர் ஷ§ட்டிங் போகும்போது எங்காவது போதி மரத்தடியில் படுத்து உறங்கிவிட்டாரோ? ஆச்சர்யம் தாங்காமல் எப்படிங்க இதெல்லாம்? என்றோம். தெற்றுப்பல் தெரிய 'சிணுங்' என்று சிரித்தவர், மிச்ச தத்துவத்தையும் எடுத்துவிட்டார். 'பல கோடிகள் முதலீடு செய்து தயாரிக்கப்பட்டாலும், அப்படத்தின் வெற்றி என்பது சில ரூபாய்கள் மதிப்பில்தானே இருக்கு?' (பின்றீங்களே தாயீ)

'எனது படம் நாளைக்கு ரிலீஸ் ஆகிறது என்றால், இன்றைக்கே உட்கார்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பிச்சிடுவேன். அந்த படம் ஓடலைன்னா ஓன்ன்ன்னு அழுவேன். அந்தளவுக்கு என்னோட தொழிலை நேசிக்கிறேன் என்றார் பாவனா. (அப்படின்னா அழுத நாளுங்கதான் அதிகமா இருக்கும் போல..)

'இந்தி நடிகைகளை பார்த்தா பொறாமையா இருக்கு. பர்ட்டிக்குலர் ஹீரோ பெயரை சொல்லி அவரு கூட நடிக்க பிடிக்கலேன்னு பளிச்சுன்னு சொல்லிடறாங்க. அதுக்கான காரணத்தை கேட்டாலும், ஒளிவு மறைவில்லாம உடைச்சுடறாங்க. ஆனா, நம்ம ஊர்லே அப்படி சொன்னா அவ்வளவுதான். பொய்யே சொல்லக் கூடாதுன்னு நினைச்சாலும், நமக்கு பிடிக்காத ஆளையும் போற்றி பேச வேண்டியிருக்கு. என்ன செய்யுறது. இதுதான் லைஃப்!'

பாவனா பெருமூச்சு விடுகிற நேரத்தில் பார்க்க இன்னும் கொஞ்சம் கிக்! அதுக்காகவே நிறைய பொய் சொல்லுங்க பாவனா...

Monday, May 25, 2009

பிரபுதேவாவால் நடனத்தில் தேறினேன் - திரிஷா


சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் பிசியாக இருக்கிறார் திரிஷா. “ஆடுகளம்”, “சென்னையில் ஒரு மழைக்காலம்”, படங்களும் கைவசம் உள்ளன. தெலுங்கில் “சங்கம்” படத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்ற திரிஷா அங்கு அளித்த பேட்டி:- தமிழ், தெலுங்கில் தொடர்ந்து நடிக்கிறேன். இரு மாநிலத்துக்கும் படப்பிடிப்புக்காக மாறி மாறி அலைகிறேன். சென்னையில் எனக்கு சொந்த வீடு உள்ளது.

அனால் ஐதராபாத்தில் ஓட்டலில் தங்குகிறேன். சூட்கேசுடன் ஓட்டல் ஓட்டலாக அலைவது எனக்கு சிரமமாக உள்ளது. எனவே ஐதராபாத்தில் சொந்தமாக வீடு வாங்க முடிவு செய்துள்ளேன்.

சினிமாவில் அறிமுகமானபோது எனக்கு ஏற்பட்ட முதல் பயம் நடனம். புதுமாதிரியான டிரெஸ் அணிவது, வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி நடிப்பது போன்றவற்றில் எல்லாம் எனக்கு சிரமம் தெரியவில்லை. வேகப்பாட்டுக்கு நடனம் ஆடத்தான் பயந்தேன். “பாலே” நடனம் எனக்கு தெரியும். அது சினிமாவுக்கு எடுபடாது.

எனக்கு ஏற்பட்ட அச்சத்தை நீக்கியவர் பிரபு தேவா. தெலுங்கில் அவர் இயக்கிய இருபடங்களில் நடித்துள்ளேன். நடன காட்சிகளில் எப்படி ஆட வேண்டும் என்று எனக்கு ஸ்டெப் போட்டு சொல்லி கொடுத்தார். நடனம் சம்பந்தமாக நிறைய ஆலோசனைகளும் சொன்னார்.

அதை பின்பற்றினேன். நடனம் வந்தது. என் ஆட்டத்தை பார்த்து நிறைய பேர் பாராட்டுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் பிரபுதேவாதான். நடனத்தில் என்னை மெருகேற்றியவர் அவர்தான். பிரபுதேவாவால் தான் நடனத்தில் தேறினேன்.

இவ்வாறு திரிஷா கூறினார்.

பாடகரை கண்கலங்க வைத்த பாடல்


படத்தில நடிகர் அழுது பார்த்திருப்பீங்க... ஆனா பாடகர் அழுது பார்த்திருக்கீங்களா?... சாரி... கேட்டிருக்கீங்களா...?
பயம் அறியான் என்ற படத்தை பிரதீஷ் என்கிற புதுமுக இயக்குநர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில “அம்மா நீயிருந்தால் ஒரு தெய்வம் தேவையில்லை....” என்று தொடங்கும் ஒரு பாடல். யாரை பாட வைப்பது என்று யோசித்ததும் உடனே நினைவுக்கு வந்தவர் பாடகர் ஜேசுதாஸ். உடனே இயக்குநர் அதை ‘இந்த பாடலை நீங்கள் பாடினால் நன்றாக இருக்கும்’ என்று ஜேசுதாஸிடம் சொல்ல அவரும் சம்மதித்தார்.

ஸ்டுடியோவில் பாடலின் வரிகளை அனுபவித்துப் பாடிய ஜேசுதாஸ் ஐந்தரை மணிநேரம் திரும்பத் திரும்ப தனக்கு திருப்தி ஏற்படும் வரை பாடிக் கொடுத்துள்ளார். பாடலை முடிக்கும் போது தன்னை அறியாமல் அழுதேவிட்டாராம். அந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் மோகன்ராஜை கூப்பிட்டு வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

படத்தைப் பார்த்து ரசிகர்கள் அழாமல் இருந்தா சரி...

தலைமைச் செயலாளர் வேடம் கமல் படத்தில் லட்சுமி


எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் பழைய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லட்சுமி. கமலுடனும் நடித்துள்ளார். தற்போது ஓரிரு படங்களில் அம்மா, அக்காள், கேரக்டர்களில் தலை காட்டினார்.
டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடத்தி வருகிறார். இளம் நடிகர்கள் லட்சுமியை கண்டு கொள்ளவில்லை. நீண்ட நாட்களாக படங்கள் இல்லாமல் ஒதுங்கி இருந்தார்.

கமல், அவரை மீண்டும் சினிமாவுக்கு கொண்டு வர உன்னைப் போல் ஒருவன் என்ற படத்தில் லட்சுமிக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறார். இப்படம் “ஏ வெட்னஸ்டே” என்ற இந்திப் படத்தின் “ரீ மேக்” ஆகும். இதில் கமலுடன் மோகன்லாலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கமல் மகள் ஸ்ருதி இசையமைக்கிறார். சக்தி இயக்குகிறார்.

தீவிரவாதிகள் பற்றிய கதையே இப்படம். தமிழ், தெலுங்கில் தயாராகிறது. இதில் தலைமைச் செயலாளர் வேடம் இடம் பெறுகிறது. படத்தின் ஜீவனாக அமையும் இக்கேரக்டரில் நடிக்க பழைய நடிகைகள் பலரை கமல் பரிசீலித்தார். இறுதியாக லட்சுமியை தேர்வு செய்துள்ளார்.

படப்பிடிப்பு ஐதராபாத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது. லட்சுமியும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்கிறார். இப்படம் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு ரவுண்ட் வரும் திட்டத்தில் இருக்கிறார் லட்சுமி.

ஷெரீன் அக்கா ஆகிறார்


தமன்னாவின் அக்கா கேரக்டரில் நடிக்கப் போகிறார் முன்னாள் நாயகி ஷெரீன்.

துள்ளுவதோ இளமை - இது மட்டும்தான் ஷெரீன் என்றால் ரசிகர்களுக்கு வரும் நினைவு. அந்தப் படத்துக்குப் பிறகு பெரிய இடத்திற்குப் போவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் தேக்கத்தை சந்தித்தார் ஷெரீன்.

இப்போது ஷெரீன் என்ற பெயரையே கிட்டத்தட்ட ரசிகர்கள் மறந்து போய் விட்டார்கள். இந்த நிலையில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறார் ஷெரீன்.

ஆனால் இந்த முறை நாயகியாக அல்ல - சூப்பர் நாயகி ஒருவரின் அக்காவாக.

தமன்னா, பரத்துடன் இணைந்து நடிக்கும் படம் கண்டேன் காதலை. ஜப் வி மெட் இந்திப் படத்தின் ரீமேக் இது. இதில் தமன்னாவின் அக்காவாக நடிக்கப் போகிறார் ஷெரீன்.

ஜப் வி மெட் படத்தில் நாயகி கரீனா கபூருக்கு தங்கை கேரக்டர்தான் படத்தில் உள்ளது. ஆனால் தமிழுக்காக இதை அக்காவாக மாற்றி விட்டனர். காரணம், வயதில் ஷெரீனை விட தமன்னா இளையவர் என்பதால்.

இந்தப் படத்தில் நடிக்க முதலில் ஷெரீன் சற்று தயங்கியுள்ளார். இருப்பினும் கேரக்டர் தனது கேரியருக்கும் உதவலாம் என்பதால் ஒப்புக் கொண்டாராம்.

மலையாளத்தில் தமன்னா


தமன்னா முதல் முறையாக மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கு, அங்கிருந்து தமிழ் என மாறி வந்தவர் தமன்னா. தமிழுக்கு வந்த புதிதில் ராசியில்லாத நடிகையாக பார்க்கப்பட்டார். ஆனால் இப்போது தமன்னாவின் கால்ஷீட்டைப் பெறுவது குதிரைக் கொம்பாகியுள்ளது. அந்த அளவுக்கு பிசியாகி விட்டார் தமன்னா.

இந்தநிலையில் மலையாளப் பட இயக்குநர் லால், தமன்னாவை அணுகி ஒரு கதையைக் கூறி இதில் நீங்கள்தான் நடிக்க வேண்டும், வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.

கதையைக் கேட்டதுமே நடிக்க ஒப்புக் கொண்டு விட்டாராம் தமன்னா. அந்த அளவுக்கு கதை அவருக்குப் பிடித்துப் போய் விட்டதாம்.

லால், வழக்கமாக நடிகர், நடிகைகளுக்காக கதையை உருவாக்குபவர் இல்லை. கதையை உருவாக்கி விட்டு, அந்தக் கதைக்குப் பொருத்தமான கலைஞர்களைத் தேடுவதுதான் அவரது ஸ்டைல். ஆள் கிடைக்காவி்ட்டால் பொறுமையாக காத்திருந்து நடிக்க வைப்பார்.

அவரே தேடிப் போய் தமன்னாவை நாடியுள்ளதால், நிச்சயம் இது தனக்கான கதைதான் என்பதை உணர்ந்தே நடிக்க ஒப்புக் கொண்டாராம் தமன்னா.

இந்தப் படத்தின் மூலம் 3வது தென்னிந்திய மொழிப் படத்தில் அறிமுகமாகிறார் தமன்னா.

கமல் படத்தில் சத்யராஜ்


இனி ஹீரோவாக நடிப்பதில்லை என்ற முடிவு எடுத்தபின் சத்யராஜின் கலை எல்லை விரிந்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் ஒரு படம் நடிக்கிறார் சத்யராஜ். ஹீரோவின் அப்பாவாக வயதான வேடம். ரஜினி, கமல் படங்களில் வில்லனாக நடிக்க மறுத்தவர், தெலுங்கில் வயதான அப்பாவானது பலருக்கு ஆச்சரியம்.

அதேபோல், விளம்பரப் படங்களிலும் ஆர்வமின்றி இருந்தவர், புதிய முடிவுக்குப் பிறக விளம்பரங்களில் நடிக்க ஆர்பம் காட்டுகிறார். கைவசம் ஏராளமான வாய்ப்புகளாம்.

மலையாள படவுலகம் பலமுறை சத்யராஜை அழைத்திருக்கிறது. அப்போதெல்லாம் நோ சொன்னவர், இப்போது உற்சாகமாக எஸ் சொல்லியிருக்கிறார்.

சத்யராஜ் நடிக்கும் மலையாளப் படத்தை இயக்குகிறவர், கிருஷ்ண குடியில் ஒரு பிரணய காலத்து, மஞ்ஞு போலொரு பெண்குட்டி போன்ற நல்ல படங்களைத் தந்த கமல். இவரது நிறம் திரைப்படம் ப்ரியாத வரம் வேண்டும் என்ற பெயரில் தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திலீப் ஹீரோவாக நடிக்கும் படத்தை கமல் இயக்குகிறார். இதில் வரும் ராணுவ அதிகாரி வேடத்தில் நடிக்க தனது சம்மதத்தை தெரிவித்திருக்கிறார் சத்யராஜ். சும்மா புகுந்து அசத்துங்க சார்!

பிரகாஷ்ராஜ் நடிக்க மறுத்த வேடம்


ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திரம் என்று எந்த இமேஜுக்குள்ளும் அடங்காதவர் பிரகாஷ்ராஜ்.

ஒரு படத்தில் த்ரிஷாவை காதலிப்பார். அடுத்தப் படத்தில் த்ரிஷாவின் அப்பாவக நடிப்பார். அரவாணியாக நடிக்கவும் தயங்கியதில்லை இவர்.

கதாபாத்திரத்தை மட்டுமே பார்க்கும் பிரகாஷ்ராஜ், மத்திய சென்னை படத்தில் ஒரு குறிப்பிட்ட கேரக்டரில் நடிக்க மறுத்துள்ளார்.

ராப்டர் மீடியா பிலிம்ஸ் தயாரிக்கும் மத்திய சென்னையில் ஜெயவந்த் ஹீரோவாக நடிக்கிறார். சென்னை குப்பத்து இளைஞனான இவர், உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்து இயக்குனராக வெற்றி பெற்று, தனது குப்பத்தை மேம்படுத்துவது கதை.

இதில் சினிமாவை விமர்சிக்கும் கதாபாத்திரம் ஒன்று வருகிறது. பிரகாஷ்ராஜ் அதில் நடிப்பதாக அறிவித்திருந்தார்கள் இயக்குனர்கள் விவேகானந்தன் - வீரசிங்கம்.

படத்தின் கதையை கேட்ட பிரகாஷ்ராஜ், எனது தொழிலான சினிமாவை கேவலமாக பேசும் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறியிருக்கிறார். அதனால் அந்த கேரக்டரில் மகாதேவனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பிரகாஷ்ராஜின் கால்ஷீட்டை வீணாக்க விரும்பாத இயக்குனர்கள், அவருக்கென்றே படத்தில் ஒரு கேரக்டரை உருவாக்கியிருக்கிறார்கள்.

குறைந்தது ஆடை - அதிகரித்தது சம்பளம்


கால்ஷீட் கேட்கும் போது ‘கவர்ச்சி எல்லாம் அந்த அளவுக்கு இந்த படத்திற்கு தேவையில்லை’ என்று சொல்லி கால்ஷீட்டை வாங்கிவிடுகின்றனர் நம்மூர் இயக்குநர்கள்.
ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும் நடிகை ‘எனக்கு என்ன காஸ்ட்யூம் சார்...’ என்று கேட்கும் போது தம்மாத்துண்டு துணியை அவரிடம் கொடுத்து ‘இதுதான் உங்க காஸ்ட்யூம்...’ என்று இயக்குநர்கள் சொல்ல மிரண்டு போனார்கள் சில நடிகைகள். (கவர்ச்சி பாம்கள் இதற்கு விதிவிலக்கு)

கீர்த்திசாவ்லாவுக்கும் இந்தப் பிரச்சனை வர, மேடம் உஷாராகிக் கொண்டார். ‘எவ்வளவுக்கு எவ்வளவு ஆடைகுறைப்பு செய்ய வேண்டுமோ அவ்வளவுக்கு அவ்வளவு சம்பளம் அதிகமாகக் கொடுங்கள்’ என்று திருவிளையாடல் தருமி ஸ்டைலில் சொல்ல, தயாரிப்புத் தரப்பும் வேறு வழியில்லாமல் சம்மதித்திருக்கிறது.

சுவேதா 5/10, வெலிங்டன் ரோடு படத்தில் ரொம்பவும் கிளாமராக நடிக்க வேண்டியிருப்பதால் மற்ற படங்களுக்கு வாங்கும் சம்பத்தைவிட இன்னொரு மடங்கு அதிகமாக வாங்கியுள்ளார் கீர்த்தி சாவ்லா.

கவர்ச்சி அதிகமாக இருக்குன்னு தியேட்டரில் டிக்கெட் கட்டணத்தை அதிகரிக்காமல்

போட்டி வேண்டாமே? நடிகர் சங்க தேர்தல் அறிவிப்பு


ஆணானப்பட்ட ராஜேந்தரே, 'தருண்கோபி விஷயத்தில் நடிகர் சங்கத்திடம் புகார் செய்வேன்'னு சொல்ற அளவுக்கு நடிகர்களின் நன் நம்பிக்கை முனையாக இருக்கிறது நடிகர் சங்கம்! அரசியலில் ஆர்வம் காட்ட துவங்கிய பிறகு, நடிகர் சங்க தலைவர் பதவி வேண்டாம் என்று உதறக் கிளம்பிய சரத்குமாரை எல்லாருமாக சேர்ந்து வலுக்கட்டாயமாக உட்கார வைத்தார்கள். அவரும் ஒரே நேரத்தில் இரண்டு பணிகளையும் கவனித்து வந்தார். இப்போது பதவி காலம் முடிந்து மறுபடியும் எலக்ஷன்!

போட்டியே வேண்டாம். நாமளே யாரையாவது தேர்ந்தெடுக்கலாமே என்று விஜயகுமார் சொன்ன யோசனைக்கு எத்தனை பேர் செவி மடுப்பார்களோ தெரியாது. நிச்சயம் அரசியல் கட்சிகள் நடத்தும் தேர்தல் களேபரங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் நடக்கும் நடிகர் சங்க தேர்தலும்.

ஜுலை 12 ந் தேர்தல் என்று அறிவித்திருக்கிறார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார். சிவாஜிக்கு மணி மண்டபம், நலிந்த கலைஞர்களுக்கு உதவி, நடிகர் சங்கத்திற்கென்று பிரமாண்ட கட்டிடம் என்று வாக்குறுதிகளுக்கும் பஞ்சமில்லாமல் இந்த தேர்தல் நடக்கும்.

இந்த முறையும் நீங்களே தலைமையேற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்களாம் சரத்குமாரை. அவர் நிற்காத பட்சத்தில் சத்யராஜ் நிற்பார் என்று தெரிகிறது. தற்போதைய அமைப்பில் செயலாளராக இருக்கும் ராதாரவியும் தலைவருக்கு நிற்கலாம். வழக்கம்போல் மன்சூரலிகான், பாபு கணேஷ் போன்ற ஒப்புக்கு சப்பாணிகளும் களமிரங்குவார்கள்.

கொஞ்ச நாளைக்கு அப்பாவி தமிழனுக்கு 'கொறிக்ஸ்' கிடைக்கும். வாங்கய்யா, வாத்தியாருங்களே....!

போட்டி வேண்டாமே? நடிகர் சங்க தேர்தல் அறிவிப்பு


ஆணானப்பட்ட ராஜேந்தரே, 'தருண்கோபி விஷயத்தில் நடிகர் சங்கத்திடம் புகார் செய்வேன்'னு சொல்ற அளவுக்கு நடிகர்களின் நன் நம்பிக்கை முனையாக இருக்கிறது நடிகர் சங்கம்! அரசியலில் ஆர்வம் காட்ட துவங்கிய பிறகு, நடிகர் சங்க தலைவர் பதவி வேண்டாம் என்று உதறக் கிளம்பிய சரத்குமாரை எல்லாருமாக சேர்ந்து வலுக்கட்டாயமாக உட்கார வைத்தார்கள். அவரும் ஒரே நேரத்தில் இரண்டு பணிகளையும் கவனித்து வந்தார். இப்போது பதவி காலம் முடிந்து மறுபடியும் எலக்ஷன்!

போட்டியே வேண்டாம். நாமளே யாரையாவது தேர்ந்தெடுக்கலாமே என்று விஜயகுமார் சொன்ன யோசனைக்கு எத்தனை பேர் செவி மடுப்பார்களோ தெரியாது. நிச்சயம் அரசியல் கட்சிகள் நடத்தும் தேர்தல் களேபரங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் நடக்கும் நடிகர் சங்க தேர்தலும்.

ஜுலை 12 ந் தேர்தல் என்று அறிவித்திருக்கிறார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார். சிவாஜிக்கு மணி மண்டபம், நலிந்த கலைஞர்களுக்கு உதவி, நடிகர் சங்கத்திற்கென்று பிரமாண்ட கட்டிடம் என்று வாக்குறுதிகளுக்கும் பஞ்சமில்லாமல் இந்த தேர்தல் நடக்கும்.

இந்த முறையும் நீங்களே தலைமையேற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்களாம் சரத்குமாரை. அவர் நிற்காத பட்சத்தில் சத்யராஜ் நிற்பார் என்று தெரிகிறது. தற்போதைய அமைப்பில் செயலாளராக இருக்கும் ராதாரவியும் தலைவருக்கு நிற்கலாம். வழக்கம்போல் மன்சூரலிகான், பாபு கணேஷ் போன்ற ஒப்புக்கு சப்பாணிகளும் களமிரங்குவார்கள்.

கொஞ்ச நாளைக்கு அப்பாவி தமிழனுக்கு 'கொறிக்ஸ்' கிடைக்கும். வாங்கய்யா, வாத்தியாருங்களே....!

ஏரியா மாறிய ரம்யா


தமிழில் வாய்ப்புகள் வராமல் போனதால் வெறுத்துப் போன ரம்யா நம்பீசன் இப்போது தெலுங்குக்கு தனது இடத்தை மாற்றி விட்டார்.

மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்த ரம்யாவை ராமன் தேடிய சீதைக்காக தமிழுக்குக் கூட்டி வந்தார்கள்.

படம் நன்றாக ஓடியது. ரம்யாவுக்கும் நல்லஅறிமுகம் கிடைத்தது. ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள்தான் வரவில்லை. இதனால் தொடர்ந்து மலையாளத்திலேயே நடித்து வந்தார்.

ஆனால் இப்போது ரம்யாவைத் தேடி தெலுங்குப் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளதாம்.

துட்டும் ஜாஸ்தி, அதிக வாய்ப்புகளும் வரும் வாய்ப்பு இருப்பதால் தெலுங்குக்கு முக்கியத்துவம் தரத் திட்டமிட்டுள்ளாராம் ரம்யா. முதல் கட்டமாக சாரை வீரராஜு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரம்யா.

விருமாண்டி படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கண்ணன் இப்படத்தை இயக்குகிறாராம்.

தமிழில் தற்போது ரம்யா வசம் ஒரே ஒரு படமாக ஆட்டநாயகன் மட்டுமே உள்ளது. இதில் ஷக்தியுடன் ஜோடி போட்டுள்ளார் ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் இழுபறியாகிக் கொண்டிருப்பதால்தான் ரூட்டை மாற்றி விட்டாராம் ரம்யா.

கேன்ஸ் திரைப்பட விழா: ஈழத்துக் கலைஞர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு


சர்வதேச அளவில் திரைப்படங்களுக்கான மிகப்பெரிய அங்கீகாரங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படுவது பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடக்கும் திரைப்பட விழா.

தற்போது 62-வது திரைப்பட விழா கேன்ஸ் நகரில் நடக்கிறது.

இந்த ஆண்டு இந்த விழாவின் சிறப்பு அம்சம், ஈழத்துக் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்றிருப்பதுதான்.

நதி என்ற குறும்படம் மூலம் இயக்குநரான மகேந்திரன் பாஸ்கர் இம்முறை இரு மேலும் இரு திரைப்படங்களை இயக்கி அவற்றை கேன்ஸ் விழாவுக்கு அனுப்பியுள்ளார்.

இதில் 'வலி' என்ற திரைப்படம் குறும்படங்களுக்கான் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு உதயா இசையமைத்துள்ளார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட காதல் கடிதம் படத்துக்கு இசையமைத்தவர், உதயா.

மற்றொரு படம் 'ECLUSE' எனும் பெயரில் பாஸ்கர் இயக்கிய பிரெஞ்சு மொழி திரைப்படமாகும். இந்தப் படத்தைத் தயாரித்துள்ளவர் பிஎல் தேனப்பன். அட நம்ம ஊர் தேனப்பன்தாங்க. தனது ராஜலட்சுமி மூவீஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் கேன்ஸ் விழா போட்டிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் இது.

இந்தப்படத்துக்கு இசையமைத்து நடித்துள்ளவரும் பாஸ்கரே. அவருடன் எல்மோடன் நஸிமா, அபிநயா கணேஷ் தம்பையா போன்றவர்களும் நடித்துள்ளனர். பிஆர்ஓ நிகில்.

மே 13-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடந்த இந்த விழாவில் பிரான்சின் கலை பண்பாட்டுக் கழகக் கலைஞர்களான இயக்குனர் பாஸ்கர், படத்தொகுப்பாளர் சங்கர், ஒளிப்பதிவாளர் கீதன் ஆகியோர் பங்கு பெற்றனர். இவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தங்கள் பங்கேற்பை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் வகையில், ஈழத்தில் இலங்கை அரசு செய்து வரும் தமிழினப் படுகொலை, மனித உரிமை மீறல், போன்றவற்றை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து கவனத்தை ஈர்த்தனர்.

ராஜ்கிரண் படம்- வடிவேலு இல்லை


ராஜ்கிரண் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்து, இயக்கி, நடிக்கும் படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட வடிவேலு நடிக்கவில்லை. மாறாக விவேக் நடிக்கவுள்ளார்.

ஒரு காலத்தில் கோடி ரூபாய் சம்பளம் வாங்கி மகா பிசி நடிகர் ராஜ்கிரண். ஆனால் காலத்தின் கோலமாய் அவரது மார்க்கெட் படுத்துப் போனது.

ஆனால் சமீப காலமாக அருமையான கேரக்டர்களில் அசத்திக் கொண்டிருக்கிறார் ராஜ்கிரண். நந்தா படத்தில் வித்தியாசமாக நடிக்கப் போய் அவரது 2வது இன்னிங்ஸ் அபாரமாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் புதிய படம் ஒன்றை தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கப் போகிறார் ராஜ்கிரண்.

இப்படத்திற்கு திருமங்கலத்தில் யானை என வித்தியாசமான பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். இருவரும் புதுமுகங்கள்.

படத்தில் காமெடியைக் கவனிக்கப் போகிறவர் வடிவேலு அல்ல விவேக். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

அதேபோல ராஜ்கிரண் படம் என்றால் நிச்சயம் இளையராஜாதான் இசையமைப்பார். ஆனால் பரத்வாஜ் இசையமைக்கக் கூடும் என்ற பேச்சும் நிலவுகிறது.

விரைவில் விவரங்களை அறிவிக்கவுள்ளாராம் ராஜ்கிரண்.

Sunday, May 24, 2009

தேர்தலில் தோல்வி தயாரிப்பில் வெற்றி


சமுத்திரக்கனி இயக்க, இயக்குனர் சசிகுமார் நாயகனாக நடிக்கும் படம் நாடோடிகள். இதன் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பில் தற்போது உள்ள படம் என்றால் நாடோடிகள்தான். வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என போராடும் மூன்று இளைஞர்கள் பற்றிய கதை இது.

இப்படத்தில் இன்னொரு குறிப்பிடப்பட வேண்டிய செய்தி இயக்குனர் சசிகுமாரின் தங்கையாக பிறவிலேயே வாய்பேச முடியாத அபிநயா என்ற பெண் நடித்துள்ளார். 'வாய் பேச முடியாவிட்டாலும் சொல்வதைப் புரிந்துகொண்டு அழகாக நடித்திருக்கிறார்' என்று பாராட்டுகிறார் சமுத்திரக்கனி.

மேலும், இப்படத்தை குளோபல் இன்ஃபோடெயின் லிமிடெட் சார்பாக தயாரித்தவர் மைக்கேல் ராயப்பன். இவர் தற்போது நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வின் சார்பாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர். தேர்தலில் தோற்ற இவர், நாடோடிகள் மூலம் வெற்றி பெறட்டும்.

நாடோடிகள் வரும் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

கைரேகை‌யி‌ன் மூல‌ம் புலனா‌ய்வு


கைரேகைப் பதிவு மூலம் குற்றவாளிகளைக் கைது செய்யும் நுட்பத்தை உருவாக்கியவர் எட்வர்டு ஹென்றி. இவர் 1890-ஆம் ஆண்டு வாக்கில் வங்காளத்தில் காவல்துறைத் தலைவராக இருந்தவர்.

1901-ம் ஆண்டில் ஸ்காட்லாந்து யார்டில் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரியாக ஹென்றி நியமிக்கப்பட்டார். அங்கு அவர் முதல் முறையாக கைரேகைப் பிரிவைத் தொடங்கினார். பின்னாளில் காவல்துறை ஆணையரான அவர் 1918-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

காவல்துறையில் ஹென்றி ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு `சர்' பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் `சர் ஹென்றி' அழைக் கப்பட்டது அரிது. அவர் பொதுவாக `திருவாளர் கைரேகை' என்று தான் அழைக்கப்பட்டார்.

கைரேகைகளை வகைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய மற்றொரு காவல்துறை அதிகாரி அர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஜூவன் வுசெட்டிக்.

ஒருவரை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு மிகவும் நம்பத்தகுந்த ஆதாரமாக கைரேகை விளங்குகிறது. ஏனெனில் எந்த இரு மனிதர்களின் கைரேகையும் ஒரே மாதிரி இருப்பதில்லை - அவர்கள் ஒன்றாகப் பிறந்த இரட்டையர்களாக இருந்தாலும் கூட!

ஒரு குற்றச் சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை தடயவியல் நிபுணர்கள் முதலில் கைரே கையைத்தான் தேடுவார்கள். பதிவான கைரேகை `பளிச்'சென்று தெரிவதில்லை. எனவே கைரேகை நிபுணர்கள், கைரேகை பதிந்திருக்கக்கூடும் என்று நினைக்கும் இடத்தில் அதற் கென உள்ள பொடியைத் தூவிப் பார்ப்பார்கள்.

கையில் இயல்பாகவே உள்ள எண்ணைப் பசையால் கைரேகைப் பதிவுகள் ஏற்படுகின்றன. பொடி தூவப் படும்போது அது எண்ணைப் பசை பகுதியில் படிவதால் கைரேகைப் பதிவு நன்றாகத் தெரிகிறது.

அந்த கைரேகைப் பதிவுகள் புகைப்படம் எடுக்கப்பட்டு, ஏற்கனவே காவல்துறையினர் வசம் இருக்கும் குற்ற வாளிகளின் கைரேகைகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமானவர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன.

கைரேகைகளை விட்டுவிடக்கூடாது என்பதற்காக குற்றவாளிகள் கையுறைகளை அணிவது உண்டு. ஆனால் கையுறைகளின் பதிவுகளின் மூலமும் அவை வாங்கப்பட்டு எவ்வளவு நாட்களாகின்றன, அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நூல் என்ன, தைக்கப்பட்டிருக்கும் விதம் என்ன என்பது போன்ற விவரங்களை அறியலாம்.

சந்தேகத்துக்கு இடமான ஒருவரிடம் கையுறைப் பதிவுகளுடன் ஒத்துப்போகும் கையுறை இருந்தால் அது குறிப்பிட்ட நபருக்கு எதிரான வலுவான ஆதாரமாகிவிடும்.

தந்தைக்கு கால்ஷீட் மறுத்த மகன்


துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆன தனுஷ் இன்று பல கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

அப்படி இந்த அளவுக்கு அவர் உயரக் காரணம் அவரது தந்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா. அவர்தான் துள்ளுவதோ இளமை படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் எல்லாம்.

அதன்பின் கஸ்தூரிராஜா இயக்கிய ஒன்றிரண்டு படங்களும் சரியாகப் போகவில்லை. அதனால் வேறு நல்ல கதையோடு களமிறங்க வேண்டும் என கதையை ரெடி செய்தார்.

அதன்படி, அந்தக் கதையில் தனது மகன் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்து தனுஷிடம் கால்ஷீட் கேட்க, இப்போது நான் ரொம்ப பிஸி. இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகட்டும் என்று தட்டிக் கழித்திருக்கிறார்.

காரணம், நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் தனது சினிமா பயணம், அப்பா எடுக்கும் படத்தால் ஒரு வேளை தோல்வி அடைந்தால் மீண்டும் இந்த இடத்தைப் பிடிக்கப் போராட வேண்டியிருக்கும் என்றுதான் யோசித்து வருகிறாராம்.

அதனால் நடிகர் விஜய் எடுத்த முடிவையே இவரும் எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். அதாவது, அப்பா எஸ்.ஏ.சி. படத்தில் விஜய் நடிப்பதில்லை என்பதுதான் விஜய் முடிவு.

வசூலில் வெற்றி பெற்ற படங்கள்


ஐம்பது கோடி செலவழித்து 51 கோடி சம்பாதிப்பதில் என்ன வெற்றி கிடைத்துவிடப் போகிறது. ஒரு கோடியோ இரண்டு கோடியோ செவழித்து பல கோடிகள் சம்பாதிப்பதுதான் உண்மையான வெற்றி.

அப்படித்தான் இன்று தமிழ் சினிமாவில் 50, 60 என கோடிகள் செலவு செய்து எடுக்கப்பட்ட பல படங்கள் பாதி பணத்தைக் கூட சம்பாதித்துக் கொடுக்கவில்லை.

ஆனால், ஒன்றரைக் கோடியில் எடுக்கப்பட்ட காதல் படம் பத்து கோடிகளை வசூல் செய்து கொடுத்தது. அதேபோல், ஆறு கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட பருத்தி வீரன் நான்கு கோடிகளை லாபமாக சம்பாதித்துக் கொடுத்தது.

மேலும், மூன்று கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட வெண்ணிலா கபடி குழு மொத்தம் ஏழு கோடியும், ஏழு கோடி செலவு செய்த படிக்காதவன் பனிரெண்டு கோடியும் சம்பாதித்தது.

அதேபோல, இருபது கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படமான அயன் இதுவரையில் 35 கோடிகளை அள்ளியது. ஆக, தமிழ் சினிமாவில் கோடிகளை கொட்டுவதோடு மட்டுமல்லாமல், நல்ல கதைகளையும் தேர்வு செய்ய வேண்டும் என்பது பசங்க படம் மூலமும் வெளிப்பட்டிருக்கிறது.

'காபி் கடை' திறந்த முன்னா!


இரு படங்களில் நடித்துள்ள முன்னா, சென்னையில் ஒரு காபி ஷாப்பைத் திறந்துள்ளார்.

சிலந்தி படத்தில் மோனிகாவுடன் இணைந்து நடித்தவர் முன்னா. அப்படத்தில் நடித்தபோது மோனிகாவை கண்ட இடத்திலும் கிள்ளியதாக புகாருக்குள்ளாகி மீண்டவர்.

இப்போது மணிரத்தினத்தின் ராவணா படத்திலும் சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார் முன்னா. அந்த மெய் சிலிர்ப்பிலிருந்து இன்னும் மீளவில்லையாம் முன்னா.

இந்த நிலையில் திடீரென சென்னையில் ஒரு காபி ஷாப்பை தொடங்கியுள்ளார் முன்னா.

என்ன இந்த திடீர் முடிவு முன்னா என்று கேட்டால், இது ஹாபிக்காக என்கிறாராம். திறந்ததோடு நிற்காமல் அதை திறம்படவும் நடத்தப் போகிறாராம்.

கையில் இப்போது முன்னாவிடம் புதுப் படம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. வரும் வரை காபி கடையைப் பார்க்கும் ஐடியாவில் இருக்கிறாராம்.

பரவாயில்லை, சினிமாக்காரர்கள் இப்போதெல்லாம் விவரமாகத்தான் இருக்கிறார்கள்.

அகம் புறம் படப்பிடிப்பில் தீ விபத்து


அகம் புறம் படப்பிடிப்பில் எதிர்பாராமல் பெட்ரோல் தீப்பற்றிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஷாம்-மீனாட்சி நடிக்கும் புதிய படம் அகம் புறம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

நேற்றைய படப்பிடிப்பில் வில்லன் பெல்லி முரளியோடு ஷாம் மோதுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. காட்சிப்படி வில்லன் மீது பெட்ரோல் ஊற்றி ஷாம் எரிக்க வேண்டும். ஒரு முறை டூப்பை வைத்து ரிகர்சல் பார்த்துக் கொண்ட பின்னர் காட்சி படமாக்கப்பட்டது.

ஷாம் பெட்ரோலை ஊற்றி தீ வைக்க, அது எதிர்பார்த்ததை விட அதிக ஜுவாலையுடன் எரிந்தது. இதில் பக்கத்தில் நிந்றிருந்தவர்கள் மீதும் தீ பட்டது. ஷாம் மீதும் தீ பட்டதைப் பார்த்து இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பதறிப் போனார்கள். யூனிட் ஆட்கள் சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சமீபத்தில் க்ளிக் தெலுங்குப் படத்தில் நடித்தபோது ஷாமுக்கு விபத்து[^] ஏற்பட்டது. அந்தப் படமும் தெலுங்கில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.

கன்னடத்தில் மோனிகா


'அழகி' மோனிகா கன்னடத்தில் புதுப் படத்தில் புக் ஆகியுள்ளார். இப்படத்தில் மீரா ஜாஸ்மினும் இருக்கிறார்.

சின்னப் பெண்ணாக இருந்தது முதல் நடித்துக் கொண்டிருக்கிறார் மோனிகா. ஹீரோயினாக அவர் விஸ்வரூபம் காட்டியது சிலந்தி படத்தில்தான். ஆனால் அத்தனை கவர்ச்சி[^] காட்டியும் கூட தமிழில் அவருக்கு கை நிறையப் படங்கள் வரவில்லை.

ஆனால் கன்னடத்தில் இவரை ஹீரோயினாகப் போட்டு ஒரு படம்[^] தயாரிக்கிறார்கள். கன்னடத்து சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்தான் இப்படத்தின் நாயகன்.

தேவரு கொட்ட தங்கி (கடவுள் கொடுத்த தங்கச்சி) என்பதுதான் படத்தின் பெயர். ஓம் சாய் பிரகாஷ் இயக்குகிறார். சிவராஜ் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் மோனிகா.

சிவராஜ் குமாரின் தங்கை வேடத்தில் நடிக்கிறார் மீரா ஜாஸ்மின். படத்தில் மோனிகாதான் நாயகி என்றாலும் கூட கதைப்படி மீராவுக்கும் வெயிட்டான பாத்திரமாம். இதனால்தான் தான் நாயகி இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை என்று ஒத்துக் கொண்டாராம் மீரா.

ஏற்கனவே சண்டக் கோழி படத்தில் மீராவும், மோனிகாவும் இணைந்து நடித்துள்ளனர். அப்படத்தில் மோனிகாவுக்கு தம்மாத்தூண்டு பாத்திரம். இப்போது கன்னடத்தில் மோனிகா நாயகியாக நடிக்கும் படத்தில் 2வது ரோலில் நடிக்கிறார் மீரா.

தம் அடிக்கச் சொல்லி மும்தாஜிடம் ரசிகர்கள் கலாட்டா


ராஜாதி ராஜா படத்தில் சிகரெட் பிடித்தது போல பிடியுங்கள் என்று கூறி நடிகை மும்தாஜிடம் ரசிகர்கள் கலாட்டாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஷக்தி சிதம்பரம் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள ராஜா[^] திராஜாவி்ல் ராகவ லாரன்ஸ் நடித்துள்ளார். இப்படத்தில் மும்தாஜ் உள்பட நான்கு பேர் நாயகிகள்.

மும்தாஜ் இப்படத்தில் வில்லத்தனமாக நடித்துள்ளார். படத்தில் புகை பிடிப்பது போன்ற காட்சியிலும் நடித்துள்ளார்.

கஞ்சா அழகியாக இருந்து, விபச்சார அழகியாக மாறி பின்னர் படிப்படியாக 'உயர்ந்து' அரசியல்வாதி ஆகி விடும் கேரக்டரில் நடித்துள்ளார் மும்தாஜ்.

படம் ஹிட் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து சென்னையில் உள்ள மினி உதயம் தியேட்டரில் ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்க்க விரும்பினார் மும்தாஜ். இதற்காக அவரும், இயக்குநர்[^] ஷக்தி சிதம்பரம் உள்ளிட்டோர் சென்றனர்.

யாருக்கும் தெரியாத வகையில் அமர்ந்து படம் பார்த்தார் மும்தாஜ். ஆனால் ரசிகர்கள் மும்தாஜ் வந்ததை மோப்பம் பிடித்து விட்டார்கள்.

இதையடுத்து மும்தாஜை சீண்டும் வகையில், படத்தில் மும்தாஜ் வசனம் பேசும்போதெல்லாம் பேசி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அப்செட் ஆனார் மும்தாஜ்.

இடைவேளையின்போது நிலைமை மோசமானது. மும்தாஜை ரசிகர்கள்[^] சுற்றிச் சூழ்ந்தனர். அவர்களை விலக்கி விட ஷக்தி சிதம்பரம் உள்ளிட்டோர் முயன்றனர். ஆனால் முடியவில்லை.

அப்போது குறும்புக்கார ரசிகர் ஒருவர் சிகரெட்டை எடுத்து மும்தாஜிடம் கொடுத்து படத்தில் வருவது போல தம் அடிங்க மேடம் என்று கேட்க கடுப்பான மும்தாஜ், நிஜத்தில் நான் புகை பிடிப்பதில்லை, படத்துக்காகத்தான் அவ்வாறு நடித்தேன் என்றார்.

ரசிகர்களிடம் இருந்து தப்பினால் போதும் என்று நினைத்த மும்தாஜ், அவர்கள் கோரிக்கையின்போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடினார்.

''பாராட்டும் என்னை பாதிக்காது''


யார் பாராட்டினாலும் சரி, விமர்சித்தாலும் சரி, எதுவும் என்னைப் பாதிக்காது என்று கூறியுள்ளார் இசைஞானி இளையராஜா.

ஷங்கரின் சிஷ்யரான அனந்த நாராயணன் இயக்கி அறிமுகமாகும் படம்[^] வால்மீகி. விகடன் டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இசைஞானி இளையராஜா, இயக்குநர்[^] ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இளையராஜாவும், ஷங்கரும் இணைந்து கலந்து கொண்ட விழா என்பதால் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.

நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில், நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போவதில்லை. அதற்கு ஒரே காரணம்தான். அதில் பேசுபவர்கள் என்னைப் பற்றி புகழ்ந்தும், மற்றவர்களை இறக்கி வைத்தும் பேசுவார்கள். அது எனக்குப் பிடிக்காது.

என்னை யார் பாராட்டினாலும் சரி, விமர்சித்தாலும் சரி அது என்னை எந்த வகையிலும் பாதிக்காது.

எனக்கு யாரும் தேவையில்லை. இசை பிறருக்கு வேலையாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை.

புதியவர்கள் நல்ல கதைகளுடன் வர வேண்டும். அப்படி வந்திருப்பவர்தான் அனந்த நாராயணன்.

எப்போதுமே, ஒரு படத்துக்கு இசையமைத்து முடித்துக் கொடுத்தவுடன், அந்தப் படத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. எப்போதுமே நான் தனியாகவே இருக்க விரும்புகிறேன் என்றார் இளையராஜா.

விழாவில் நாயகன் அகில், நாயகி மீரா நந்தன், தேவிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இசைஞானியின் இசைக்கு வாலி பாடல்களை புனைந்துள்ளார்.

''இளைஞர்களின் ரோல் மாடல் பிரபாகரன்''!-பிரகாஷ்ராஜ்


என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, கண்ணா பிரபாகரன்தான்டா சுத்த ஆண்மகன், உன்னோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்[^] வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

சமீபத்திய ஈழப் போர் மற்றும் அதன் முடிவில் பிரபாகரன் குறித்து வந்த தகவல்களைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட பிரகாஷ்ராஜ், 'நான் ஈழத்தில் பிறந்திருந்தால் நிச்சயம் பிரபாகரன் பின்னால்தான் விசுவாசமாக நின்றிருப்பேன்' என்று கூறியுள்ளார்.

பிரபாகரன் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது...

"பிரபாகரனைப் போய் சிலர் சர்வாதிகாரின்னு சொல்றாங்க. சொந்த மக்களையே கொன்று குவித்த ஹிட்லரா அவர்?... தன் மக்களுக்காக களத்தில் நின்று 30 ஆண்டுகளுக்கும் மேல் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய சுத்த வீரன் பிரபாகரன். தாக்குறது அல்ல அவர் நோக்கம்... தற்காப்புதான்.

அவர் என்ன வல்லரசு ஆசையில் உலகம் பூரா வலிந்து தாக்குதல்[^] செய்து நாட்டைப் பிடிக்கவா முயற்சி பண்ணார்?.. கால காலமா தாங்கள் வாழ்ந்த மண்ணை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க போர்க்களம் புகுந்தவர்.

அவர் வாழ்க்கையை நினைத்தால் சிலிர்க்கிறது. எத்தனை நேர்மை... எளிமை... வீரம்...! இந்த இனத்தின் பெருமை பிரபாகரன்.

கொண்ட கொள்கை, லட்சியம் வெல்ல தன் உயிரைப் பணயம் வைத்து எப்போதும் கழுத்தில் சயனைடு குப்பியுடன் காட்சி தந்த பிரபாகரன்[^] தான் இப்போதும் எப்போதும் இளைஞர்களின் ரோல்மாடல். நாமெல்லாம் நேதாஜி, பகத் சிங் பத்தி படிச்சிதான் தெரி்ஞ்சிக்கிட்டோம். ஆனா பிரபாகரன் என்ற சுத்த வீரனைப் பார்த்து வளர்ந்தோம்.

என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், இதோ பார்... இந்த மாவீரன்தான்டா உன் ரோல்மாடல் என்று காட்டி வளர்த்திருப்பேன்...

பிரபாகரனைப் போல் அர்ப்பணிப்பு குணம் உள்ள ஒரு பெரும் தலைவனைப் பெற்றெடுத்ததே ஈழத் தமிழ் மண்ணுக்குள்ள பெருமையா நான் பார்க்கிறேன்.

'வன்னியில் 5 புலி இறக்கிறார்கள்... 50 புலிகள்[^] பிறக்கிறார்கள்' என்ற கவிதை நூறு சதவிகிதம் உண்மையானது என்று கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

சிங்கம் புலியில் இரட்டை வேடம் போடும் ஜீவா


சிவா மனசு சக்தி படத்தின் அமைதியான வெற்றிக்குப் பிறகு, ஜீவா நடிக்கும் படம் சிங்கம் புலி.

சில்வர்லைன் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்திபன், எஸ்.எஸ். வாசன் இந்தப் படத்தின் விசேஷம் ஜீவா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிப்பதுதான். கதாநாயகனும் அவரே வில்லனும் அவரே.

சாய் ரமணி என்பவர் கதை வசனம் எழுதி இயக்குகிறார். சுரேஷ் கிருஷ்ணா மற்றும் ஜனநாதனிடம் உதவியாளராக இருந்தவர் இவர்.

மணிசர்மா இசை[^] அமைக்கிறார். இரட்டை வேடம் என்பதால் கிராபிக்ஸில் தனித்துவம் காட்ட வேண்டும் என்பதற்காக் தேசிய விருது[^] பெற்ற வெங்கியிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்.

இதற்கிடையே ஜீவாவை வைத்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஆர்பி சௌத்ரி.

மாதத்துக்கு ஒரு படம்[^] எடுத்து ரிலீஸ் செய்துவந்த ஆர்பி சௌத்ரி சற்று இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படம் இது.

தெ.ஆப்பிரிக்காவின் ட்யூன் கோஸட்ஸ் மிஸ் ஐபிஎல் அழகியாக தேர்வு


ஜோஹன்னஸ்பர்க்: கிழக்கு லண்டனைச் சேர்ந்த 35 வயது மாடல் அழகியான ட்யூன் கோஸட்ஸ், மிஸ் பாலிவுட் ஐபிஎல் தென் ஆப்பிரிக்கா பட்டத்தை வென்றுள்ளார்.

ஜோஹன்னஸ்பர்க்கில் ஞாயிற்றுக்கிழமை காலை, மான்டி காசினோ என்டர்டெய்ன்மென்ட் வளாகத்தில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் அவருக்கு இந்த பட்டம் சூட்டப்பட்டது.

ஒவ்வொரு ஐபிஎல் போட்டியின் இறுதியிலும் ஒரு அழகி தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். மொத்தம் 48 அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் ஒருவரை மிஸ் பாலிவுட் ஐபிஎல் தென் ஆப்பிரிக்கா பட்டத்திற்கு இணையதள வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்தனர்.

அதில் ட்யூன் கோஸட்ஸ் வெற்றி பெற்றார். இவருக்கு ஷாருக் கானுடன் நடிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். இதுதவிர மேலும் பல பரிசுகளும் வழங்கப்படும்.

இந்த வித்தியாசமான போட்டி தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

ஜோஹன்னஸ்பர்க்கைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் ஜென்னா கிளவுட் (24 வயது) 2வது இடத்தைப் பெற்றார். இவருக்கு முதல் இளவரசி என்ற கூடுதல் பட்டமும் கிடைத்தது. 2வது இளவரசியாக டுடனே நோரே தேர்வானார்.

இதுவரை ஒரு பாலிவுட்[^] படம்[^] கூட பார்த்ததில்லையாம் ட்யூன். இருப்பினும் உடனே போய் பாலிவுட் படங்களைப் பார்க்க வேண்டும் என ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்தி கற்கவும் போகிறாராம்.

இந்தப் போட்டியில் நிறைய இந்தி[^] யப் போட்டியாளர்களும் இருந்தனர். ஆனால் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மூன்று பேர்தான் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் வெற்றி[^] பெற்ற ட்யூனுக்கு தங்கம், வெள்ளி, வைர நகைள், அரிய வகை கற்கள் உள்ளிட்டவை பரிசாகக் கிடைத்தன.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் அழகி மிஷல் மெக்லீன் இந்தப் பரிசுகளை வழங்கினார்.

முன்னதாக மெக்லீன் பங்கேற்ற நடன நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடியும் கலந்து கொண்டு ஆடினார்.

ஐபிஎல்[^] 2வது சீசன் போட்டிகள் இன்றுடன் நிறைவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர்களுக்கு என்றும் துணையாக இருப்போம் - நடிகர் சங்கம்


ஈழத் தமிழர்களுக்கு என்றென்றும் துணையாக இருப்போம் என தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடிகர் சங்க அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு கூடியது.

சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் ஜெயம் ரவி, நெப்போலியன், விஜயகுமார், பாண்டியராஜன், செந்தில், சார்லி, மன்சூர்அலிகான், எஸ்.வி. சேகர்,

ஜே.கே.ரித்தீஷ் எம்.பி..

ஜே.கே.ரித்தீஷ், கே.ராஜன், குண்டு கல்யாணம், கஞ்சா கருப்பு, சின்னி ஜெயந்த், ரியாஸ் கான், ஜெயகோவிந்தன், அஸ்வின் சேகர், சின்னையன், நடிகைகள், மும்தாஜ், சத்யபிரியா, பத்மபிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

பொதுக்குழுவில் தவறாது பங்கேற்குமாறு ரஜினி, கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா[^] , நயன்தாரா, திரிஷா, அசின், பாவனா, பிரியாமணி உள்பட சங்க உறுப்பினர்கள் 2500 பேருக்கு சரத்குமார், ராதாரவி கடிதம் அனுப்பியிருந்தனர்.

தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த்துக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது. ஆனால இவர்களில் ஒருவர் கூட தலை காட்டவில்லை.

இதைக் குறிப்பிட்டு ராதாரவி கண்டித்துப் பேசினார். அவர் பேசுகையில், நடிகர் நடிகைகளுக்கு பிரச்சினைகள் வந்தால் சங்கம் தலையிட்டு தீர்த்து வைக்கிறது. ஆனால் பெரிய நடிகர் நடிகைகள் பலர் சங்க நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை.

நடிகர் சங்கம் எங்கே இருக்கிறது என்று கூட சிலருக்கு தெரியாது. இப்படி ஒத்துழைக்காமல் இருப்பது சரியல்ல.

சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும், அப்போது தான் உங்களை நாங்கள் காப்பாற்ற முடியும் என்றார்.

பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமல், தமிழ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் உடனடியாக நடிகர் சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

- அனைத்து நடிகர் நடிகைகளும் தான் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளருடன் கண்டிப்பாக எழுத்து மூலம் ஒப்பந்தம் போட வேண்டும். ஒப்பந்தம் போடாத உறுப்பினர்களுக்கு ஏற்படும் பிரச்சினையில் சங்கம் தலையிடாது.

- பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் தமிழ் மக்கள் வாழ்வு மலர தென்னிந்திய நடிகர் சங்கம் என்றும் உறு துணையாக நிற்கும்.

- இலங்கை தமிழர்கள் நிதிக்கு 62 லட்சத்து 69 ஆயிரத்து 8 ரூபாயை நிதியாக அளித்த உறுப்பினர்களுக்கு நன்றி.

ஜூலை 12ல் தேர்தல்...

- 2009 2012 ம் ஆண்டிற்கான நடிகர் சங்க தேர்தல் ஜூலை 12 ந் தேதி நடைபெறும்.

- வெளியூரில் நடக்கும் படப்பிடிப்புகளில் மதுரை, சேலம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்ட நாடக நடிகர் சங்க உறுப்பினர்களை துணை நடிகர்களாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

- பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நெப்போலியன், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோரை பொதுக்குழு வாழ்த்துகிறது.

- நடிகர் சங்கதுக்கு ஊதியத்தில் இருந்து 2.5 சதவீதம் தொகையை அளித்த ராதிகா சரத்குமார்[^] , எம்.எஸ்.பாஸ்கருக்கு பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இளையராஜாவின் கோபத்திற்கு ஆளான மிஷ்கின்!


பொதுவாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டார் இசைஞானி இளையராஜா. அது அவரே இசையமைத்த படங்களின் விழாவாக இருந்தாலும்!

அப்படிப்பட்டவர், வால்மீகி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். மேடையில் பேசிய மிஷ்கின் இளையராஜாவை உயர்த்தி பேசும் நோக்கத்துடன் சில வார்த்தைகள் பேச, பின்னாலேயே மைக் பிடித்த இசைஞானிக்கு பொத்துக் கொண்டு வந்தது கோபம்.

"நான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலிருப்பதற்கு காரணம், பாராட்டுரைகள்தான். ஒன்று தன்னையே பாராட்டிக் கொள்வார்கள். அல்லது மற்றவர்களை பாராட்டி தள்ளுவார்கள். யாரும் எனக்கு பட வாய்ப்புகள் வாங்கி தரும் நிலையில் நான் இல்லை. இங்கே மேடையில் பேசிய மிஷ்கின் சொல்லிதான் நான் நன்றாக இசையமைப்பேன் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. நான் வானம்! மின்னல்களோ, இடியோ என்னை ஒன்றுமே செய்யாது. இந்த மிஷ்கின் 'நந்தலாலா' படத்தின் ரீரெக்கார்டிங்கை முடித்துக் கொண்டு பெட்டியை கட்டியவர்தான். அதற்கு பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இப்போதுதான் பார்க்கிறேன்" என்று செம பிடி பிடித்தார்.

பேசிவிட்டு அப்படியே மேடையை விட்டு கீழே இறங்கி நடையை கட்டியதுதான் இன்னும் அதிர்ச்சி. இளையராஜா போன்ற பெரிய மலையை நம்மை போன்ற கூழாங்கற்கள் விமர்சிக்க கூடாதுதான். ஆனாலும் நமது கேள்வி ஒன்றே ஒன்றுதான். நான் வானம், என்னை இடியோ மின்னலோ ஒன்றும் செய்ய முடியாது என்று ஒருவர் பேசுவதும் ஒரு வகையான தற்புகழ்ச்சிதானே ஐயா?

நடிக்க வரும் இயக்குனர்கள்! 'நறநற'க்கும் ஹீரோக்கள்!


கதை சொல்ல அலைந்து திரிந்து கடைசியில் வெறுத்துப் போய், நாமே நடித்தால் என்ன முடிவுக்கு வருகிறார்கள் இயக்குனர்கள். அப்படி வந்தவர்கள் ஹீரோவாக நிலைத்து நின்றுவிடுவதால், கலகலப்பு மாறி கலகலத்து போயிருக்கிறது நடுத்தர ஹீரோக்களின் கூடாரம். (முன்னணி ஹீரோக்கள் இதற்கு விதிவிலக்கு!)

ஓட்டகம் உள்ளே நுழைஞ்சு கட்டடம் சேதமாவதற்குள்ளே ஏதாவது செய்யணும் என்ற முடிவுக்கு வந்த இவர்கள், சில ரகசிய முடிவுகளை எடுத்திருக்கிறார்களாம். அதன்படி 'ஹீரோ வேஷம் போடும் டைரக்டர்களுக்கு எவ்வித ஒத்துழைப்பும் கொடுக்கக் கூடாது. அவர்கள் நடிக்கும் படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தாலோ, அவர்கள் படத்தை பிரமோஷன் செய்யக்கூடிய மற்ற விழாக்களுக்கு அழைத்தாலோ போகக் கூடாது. இன்னும் குறிப்பாக ஒவ்வொரு ஹீரோக்களும் தனக்கு தெரிந்த நடிகைகளிடம் சொல்லி, டைரக்டர்களுக்கு ஜோடியாக நடிக்க போகவே கூடாது' என்று செக் வைத்திருக்கிறார்கள்!

இப்படி கூடி கூடி பேசி ரகசிய முடிவெடுத்திருக்கும் இவர்கள், சங்க(?) தீர்மானங்களை 'வாய்வழி' சர்க்குலராகவே அனுப்பி வருகிறார்களாம். அப்படியிருந்தும் ஸெல்வன் மாதிரி டைரக்டர்களுக்கு கிளி மாதிரி கீர்த்தி சாவ்லாக்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!