Saturday, May 16, 2009

அச்சமுண்டு அச்சமுண்டு ரிலீஸ் தள்ளிப் போவது ஏன்?


பிரசன்னா, சினேகா இருவரும் சிக்கப்பூர் சென்றிருப்பதால், கதை ஜோடிகள் வரவில்லை. ஆனாலும், 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை அமர்க்களமாக நடத்தினார்கள். சிறப்பு விருந்தினராக ஆஸ்கர் வின்னர் ரசூல் பூக்குட்டி வந்திருந்தார்.

'இந்த படம் 'இன்னும் ஏன் ரிலீஸ் ஆகலே?' என்று கேட்கிறார்கள். ரிலீஸ் ஆன படங்களை படவிழாக்களில் திரையிட அனுமதிப்பதில்லை. அதனால்தான் முதலில் படவிழாக்களுக்கு அனுப்பி கைநிறைய அவார்டுகளை வாங்கிய பின் திரையிடலாம் என்று நினைத்தோம்' என்று விளக்கமளித்தார் படத்தின் இயக்குனர் அருண் வைத்யநாதன். 'தமிழ் படங்களை பிற மொழிக்காரர்களும் பார்த்து வியக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படத்தை எடுத்திருக்கிறோம். நாம் எப்படி கொரியன் படங்களை வியந்து பார்க்கிறோமோ, அதே மாதிரி இந்த படத்தையும் பிற மொழிக்காரர்கள் வியந்து பார்ப்பார்கள்' என்று நம்பிக்கை தெரிவித்தார் அருண்.

இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அழைத்ததால் தனது நடிப்பு பயிற்சி கல்லூரியின் துவக்க விழாவை தள்ளி வைத்துவிட்டு வந்திருந்தார் பாலுமகேந்திரா. ரெட் ஐ கேமிராவை பயன்படுத்திய முதல் தமிழ் படம் 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்பதால், அது குறித்து நிறைய பேசியவர், 'நெகட்டிவ்-ல் ஷ¨ட் பண்ணிய மாதிரியே இருக்கு' என்று அருகில் இருந்த நாசரிடம் வியந்ததாக கூறினார்.

விழாவில் பேசிய அனைவருமே, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுக்கு இந்த படம் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றார்கள். அண்ணனுக்கு பெரிய பிரேக் இன்னும் வரலையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. இந்த படம் அந்த வருத்தத்தை போக்கும் என்று நம்புகிறேன் என்றார் தம்பி யுவன்சங்கர்ராஜா!

கார்த்தியின் அடுத்தப்படம் ராஜா வேஷம்! கதாநாயகி யார்?


பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், பையாவை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் அடுத்த படம் ராஜா வேஷம்! பையா படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், அடுத்த படத்திற்கான அவசரங்களில் மூழ்கிய கார்த்தி, தனது உறவினர் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பிலேயே நடிக்கலாம் என்று முடிவெடுத்தாராம்.

கதை கேட்கும் படலம் துவங்கியது. இதில், பூபதி பாண்டியன் சொன்ன கதை மிகவும் பிடித்து போயிருந்ததால், அதையே ஏகமனதாக தேர்வு செய்தார்களாம். ராஜா வேஷத்தில் வடிவேலுவுக்கும் கார்த்திக்குக்கு இணையான வேடம் தரப்பட்டிருக்கிறது.

பொதுவாகவே பூபதி பாண்டியனின் கதையில் ஹாஸ்யம் நிறைந்திருக்கும். அதிலும் வடிவேலு மாதிரி நடிகர்கள் கிடைத்தால் ஊதி தள்ளிவிடுவார். இந்த படத்திற்காக அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் வைகைப்புயல். கிரி, வின்னர் வரிசையில் ஜனங்களை சிரிப்பால் குலுக்கி எடுக்கப் போகிற படமாக உருவாகப் போகிறது ராஜா வேஷம்! கதாநாயகி வேட்டையை ஆரம்பித்திருக்கிற டீம், அங்கே இங்கே பார்வையை மேய விட்டு கடைசியாக கை காட்டியிருப்பது நயன்தாராவை நோக்கி என்கிறார்கள்.

எதுக்கும் புள்ளைய ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க...!

Friday, May 15, 2009

டைரக்டர் “ரீடேக்” எடுத்தார் திரிஷாவை 6 தடவை முத்தமிட்டேன் -ஆர்யா


ஆர்யா-திரிஷா ஜோடியாக நடித்த சர்வம் படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது. விஷ்ணு வர்த்தன் இதை இயக்கி உள்ளார்.
இப்படத்தில் திரிஷா எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பாடல் காட்சிகளில் ஆர்யாவுடன் நெருக்கம் காட்டியுள்ளார். கோவா கடற்கரையில் “பிகினி” உடையில் டான்ஸ் ஆடிய காட்சிகளும் படத்தில் உள்ளது என்கின்றனர். இதற்கு முன் திரிஷா “பிகினி” அணிந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு காட்சியில் ஆர்யாவும் திரிஷாவும் கட்டிப்பிடித்து முத்தமிடும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

திரிஷாவுடன் முத்த காட்சியில் நடித்த அனுபவம் பற்றி ஆர்யா சொல்கிறார்.

திரிஷாவை முத்தமிடும் காட்சியில் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அதில் நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். எங்களை சுற்றி 50 பேர் வரை இருந்தனர்.

அவர்கள் முன்னாள் முத்தமிடுவது சிரமமாக இருந்தது. நிறைய ரீடேக் எடுத்தேன். ஒவ்வொரு முறையும் திரிஷாவை முத்தமிட்டு முடித்ததும் இயக்குனரை பார்ப்பேன். அவர் ரீடேக் என்பார். 5 தடவை முத்தமிட்டேன்.

6-வது தடவை தான் நாங்கள் சரியாக முத்தமிட்டோம். அந்த காட்சி “ஓகே” ஆனது.

இவ்வாறு அவர் கூறினார்.

திரிஷா கூறும்போது, சர்வம் படத்தில் கவர்ச்சியாக நடிக்கவில்லை கோவாவில் நீச்சல் உடையில் ஆடினேன் என்பதும் தவறான தகவல். படத்தை பார்க்கும் போது நான் எப்படி நடித்துள்ளேன் என்பது எல்லோருக்கும் புரியும் என்றார்.

“சுல்தான்” படத்தில் ரஜினி “பஞ்ச்” வசனம்; “நான் பறக்கிற இலை இல்ல மலை”


ரஜினியின் “சுல்தான்” அனிமேஷன் படவேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது. கடந்த வருடம் ஜுன்மாதம் படப்பிடிப்பு துவங்கியது. 70 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது.
தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இதில் ரஜினி ஜோடியாக விஜயலட்சுமி நடிக்கிறார். தெலுங்கு நடிகர் ராகுல் தேவ் வில்லனாக வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஐந்து பாடல்கள் இடம் பெறுகிறது. ரஜினியின் அறிமுக பாடல் ஸ்டைலாக உருவாக்கப்படுகிறது.

ரஜினி இப்படத்துக்கு சொந்தகுரலில் டப்பிங் பேசுகிறார். மயில்சாமி காமெடி கேரக்டரில் வருகிறார்.

இதில் ரஜினியின் அனிமேஷன் உருவம் “சிக்ஸ் பேக்”சில் கட்டுமஸ்தான தேகத்தோடு உருவாக்கப்பட்டு உள்ளது.

இதில் “பஞ்ச்” வசனம் உள்ளது. அடிக்கிற காத்துல பறக்கிற இலை இல்லடா சுல்தான். அசைக்க முடியாத மலை. என்று ரஜினி “பஞ்ச்” வசனம் பேசுகிறார்.

“சுல்தான்” படத்தை இயக்கும் ரஜினி மகள் சவுந்தர்யா படம் பற்றி சொல்கிறார். முழு நீள அனிமேஷனில் சுல்தான் படத்தை உருவாக்கி வருகிறோம். என்தந்தையும் நானும் அடிக்கடி கதைகள் பற்றி விவாதிப்போம். அப்போது தான் “சுல்தான்” பட கரு உருவானது.

இது “சூப்பர் மேன்” போல பறக்கிற கதை இல்லை. ஆனால் சுல்தான் பெரிய வீரனாக தோன்றுவார். காதல். ஆக்ஷன், காமெடி, மோதல் என அத்தனை அம்சங்களுடன் கமர்ஷியல் படமாக வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

“சுல்தான்” படம் தமிழ், தெலுங்கு இந்தி மொழிகளில் ரிலீசாகிறது. ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் வெளியிடப்படுகிறது.

மடோனாவின் 'கசமுசா' படம்!


பாப் ராணி மடோனா, ராப் கலைஞர் கென்யே வெஸ்ட்டின் காதலி ஆம்பர் ரோஸின் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது போன்ற படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


அந்தப் படத்தில் ரோஸின் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் மடோனா. அதை வெஸ்ட் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் நடந்த காஸ்ட்யூம் இன்ஸ்டிடியூட்டின் விழா ஒன்றில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. டெய்லி மெயில் ஆன்லைன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்தப் புகைப்படம் வெளியே வராமல் இருந்தது. ஆனால் படு ஜாலியாக மடோனா கொடுத்த இந்த போஸ், ஆம்பர் ரோஸுக்குப் பிடித்துப் போகவே தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆம்பர் ரோஸின் பின்பக்கத்தை மடோனா பிடித்திருப்பது போன்ற இந்தப் படம் இங்கிலாந்தில் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

டிவி நடிகர் சங்கத் தலைவர் எஸ்.என்.வசந்த் மரணம்


சின்னத் திரை நடிகர் சங்கத் தலைவராக இருந்து வந்த நடிகர்[^] எஸ்.என்.வசந்த் மாரடைப்பால் மரணமடைந்தார்.

மெல்லப் பேசுங்கள் என்ற படத்தின் மூலம் நடிகரானவர் வசந்த். இதே படத்தின் மூலம்தான் பானுப்பிரியாவும் நடிகையாக அறிமுகமானார்.

பெரிய திரையில் சில படங்களில் நடித்துள்ள வசந்த் பின்னர் சின்னத் திரையில் நடிக்கத் தொடங்கினார். நிறைய சீரியல்களில் நடித்துள்ள வசந்த், சின்னத்திரை நடிகர்[^] சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார்.

சமீபத்தில் வசந்த்துக்கு இருதய நோய் ஏற்பட்டது. இதையடுத்து அறுவைச் சிகிச்சை மூலம் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை விஜயா இருதய மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

52 வயதாகும் வசந்துக்கு மனைவி[^] , ஒரு மகள் உள்ளனர். வசந்த் உடலுக்கு திரையுலகினர், சின்னத் திரை நடிகர்[^] , நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

ஜுன் 22-ல் புதிய அரசியல் கட்சி! விஜய் அதிரடி முடிவு...


ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்ட விஷயம்தான். ஆனால் அது இவ்வளவு விரைவில் நடக்கும் என்பதை விஜயே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். தனிக்கட்சி தொடங்க போகிறார் விஜய்.

இன்னும் ஒரே மாதம்தான். சென்னையில் கூடவிருக்கும் மிக பிரமாண்டமான மாநாட்டில் விஜயின் ரசிகர் மன்றம், அரசியல் கட்சியாக பிரமோஷன் ஆகப் போகிறது. மிக முக்கியமான புள்ளி ஒருவர் நமது காதருகே கிசுகிசுத்துவிட்டு போக, கோடம்பாக்கத்தின் சந்து பொந்துகளில் அலைந்து நாம் சேகரித்த தகவல்களும், 'அட ஆமாம்' என்று உறுதிபடுத்தியது! ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாறியதற்கும், நற்பணி இயக்கம் அரசியல் கட்சியாக உருவாவதற்கும் காரணமாக இருப்பது, விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்தான் என்பதை விரல் சூப்புகிற குழந்தை கூட சொல்லும்!

விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது இப்போது எடுத்த முடிவல்ல. 2005 ம் ஆண்டிலேயே தனது ரசிகர்கள் மன்றத்திற்குள் மகளிர் சுய உதவிக்குழுவை போல ஒரு குழுவை உருவாக்கினார் எஸ்ஏசி. சிவகாசியில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார் விஜய்.

கடந்த மூன்று மாதங்களாகவே தனக்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கு பல்வேறு மாவட்டத்திலிருந்து ரசிகர்களை வரவழைக்கும் எஸ்.ஏ.சி, அவர்களது கருத்துக்களை கூர்ந்து கவனிக்கிறாராம். சில நேரங்களில் இந்த கூட்டத்தில் விஜயும் கலந்து கொள்கிறார்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் தனது ரசிகர் மன்ற கொடியை பயன்படுத்தக் கூடாது என்று ஆரம்பத்திலேயே கூறிவிட்டாராம் விஜய். இந்த தேர்தலில் கட்சி கொடியை பயன்படுத்தினால், புதிதாக கட்சி ஆரம்பிக்கிற நேரத்தில், கொடிக்கான முக்கியத்துவமும், ஆர்வமும் குறையும் என்பதால்தான் இந்த விஜய கட்டளை. ஆனால், "தனிப்பட்ட முறையில் யாருக்கு எந்த கட்சியின் மீது ஆசை இருக்கிறதோ, அதற்கு வாக்களியுங்கள்" என்ற சுதந்திரத்தையும் வழங்கினாராம்.

மாவட்ட தலைவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கருத்தை சொல்ல, திருச்சியில் இருந்து வந்திருந்த ராஜா என்பவரின் பேச்சை கேட்டு விஜயே அருகில் வரவழைத்து கைகொடுத்து மகிழ்ந்தார் என்கிறார்கள். அவர் பேசியது என்ன? "எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது எப்படி அவருக்கு சோதனைகள் தரப்பட்டதோ, அப்படி ஒரு சோதனை நமக்கும் வரலாம். அந்த நேரங்களில் நாம் உணர்ச்சிவச படக்கூடாது. திட்டினாலும் வாங்கிக் கொள்வோம். அடித்தாலும் ஏற்றுக் கொள்வோம்" என்றாராம். அவரை தொடர்ந்து பேசிய பலரும், "எல்லாரையும் அனுசரித்துப் போவோம். யாருடனும் சண்டை வேண்டாம்" என்றார்களாம்.

இப்படியாக தமிழகம் மட்டுமல்ல, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவை சேர்ந்த விஜய் ரசிகர்களையும் அழைத்து கருத்துக்களை கேட்டிருக்கிறார் எஸ்.ஏ.சி. எல்லாருடைய ஏகோபித்த வேண்டுகோளின்படியும், ஆர்வத்தின்படியும் வருகிற ஜூன் 22 ந் தேதி, விஜயின் பிறந்த நாளன்று உதயமாகவிருக்கிறது விஜயின் புதிய கட்சி! அன்றைய தினம் சுமார் இரண்டு லட்சம் தொண்டர்களை சென்னையை நோக்கி அழைக்க இருக்கிறாராம் விஜய். கட்சிக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்கிறார்கள். கழகம் என்று முடிகிற மாதிரி பெயர் வைக்கவே பல ரசிகர்களும் விரும்புகிறார்களாம்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக வுக்கு ஆதரவாக, அதே கட்சியில் இணையும் மற்றொரு கூட்டணி கட்சியாக விஜய் கட்சி இருக்கும். அவரது ரசிகர்களும் தேர்தலில் கணிசமாக நிற்க கூடும் என்பதுதான் லேட்ஸ்ட் செய்தி. இந்த தகவல்கள் நிஜமா என்பதை அறிய அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவர் ஜெயசீலனை தொடர்பு கொண்டோம். "எவ்வித கருத்தும் சொல்ல விரும்பவில்லை" என்று ஒதுங்கிக் கொண்டவர், "இந்தமுறை விஜயின் பிறந்த நாள் விசேஷமாக இருக்கும்" என்று மட்டும் சொன்னார்.

Thursday, May 14, 2009

மீண்டும் வரும் அபர்ணா!


கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் பூசல் குறித்த கதைதான் கண்ணுக்குள்ளே. ஆனால் இந்தக் கதையில் வரும் பூசலுக்கான காரணம் வேறு, அதன் கதைக்களம் வேறு என்கிறார் படத்தின் இயக்குநர் மூவேந்தன்.

எஸ்.எஸ்.பிக்சர்ஸ் சார்பில் மூவேந்தன் இயக்கும் படம்[^] தான் கண்ணுக்குள்ளே. மிதுன்தான் நாயகன். அவருக்கு ஜோடியாக அபர்ணா மற்றும் அனு ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.

இவர்களில் அபர்ணா, புதுக்கோட்டை சரவணன் படத்தில் அறிமுகமானவர். இடையில் காணாமல் போயிருந்த அபர்மா மீண்டும் திரும்பி வருகிறார். அனு புதுமுகம்.

இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகும் இப்படம்[^] இசையைப் பின்னணியாகக் கொண்டதாம்.

படத்தின் கதை குறித்து மூவேந்தன் கூறுகையில், கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்படும்போது 2 மணி நேரம் பேசாமல் இருக்கலாம், அதுவே 2 வருடமாக இருந்தால் என்னாகும். அந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் விளைவுகளைக் காட்டுகிறது எனது படம்[^] என்கிறார்.

மூவேந்தன் டிவி[^] சீரியலை இயக்கிய அனுபவம் கொண்டவர். ஆனால் படம்[^] சீரியல் ரேஞ்சுக்கு இருக்காது என்று உறுதியளிக்கிறார்.

ஆண்கள் என்றால் பயம்-ஸ்னிக்தா


ஸ்னிக்தாவுக்கு ஆண்கள் மற்றும் பல்லிகள் என்றால் அலர்ஜியாம். அதேபோல பத்திரிக்கையாளர்களைக் கண்டாலும் பயமாம்.

தெனாலி படத்தில் கமல்ஹாசனின் பயப் பட்டியலைப் போல ஸ்னிக்தாவிடம் நிறைய பயங்கள் அடங்கிய பட்டியல் உள்ளது.

புனேவில் பிறந்த ஸ்னிக்தா அகோல்கர், நம்ம ஊருக்கு வந்தது லேட்தான். ஆனால் இந்தியா[^] முழுவதும் இவரை லட்சக்கணக்கான மக்கள்[^] ஏற்கனவே இந்தி டிவிகளில் பார்த்து ரசித்துள்ளனர் - டிவி சீரியல்கள் மூலம்.

ஏகப்பட்ட மராத்தி, இந்தி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவரைத்தான் மிஷ்கின் கூட்டி வந்து அஞ்சாதே படத்தில் கத்தாழைக் கண்ணாலே பாட்டுக்கு ஆட வைத்து தென்னகத்திலும் பிரபலமாக்கி விட்டார்.

ஸ்னிக்தாவுக்கு காதல்[^] என்றால் பிடிக்காதாம். அது ஒரு நோய் போல என்கிறார். பருப்பு சாதம் என்றால் ரொம்பப் பிடிக்குமாம். அதற்காக உயிரை விடுவேன் என்கிறார்.

தனியாக இருந்தால் கூடவே ஏகப்பட்ட பொம்மைகள் இருக்குமாம். பொம்மைகள்தான் எனது உற்ற தோழர்கள் என்கிறார்.

அப்புறம், ஆண்களைப் பார்த்தால் பயமாம், பல்லிகளைப் பார்த்தால் ரொம்பப் பயமாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் பத்திரிக்கையாளர்களைப் பார்த்தால் காத தூரம் ஓடி விடுவாராம்.

இப்போது நந்தலாலா, ராஜாதிராஜா என இரு படங்களில் நடித்துள்ள ஸ்னிக்தா, புதுப் பட வாய்ப்புக்காக காத்திருக்கிறாராம். ஆனாலும் இது வரை வந்தபாடில்லையாம். இதனால் சற்று விசனத்தில் இருக்கிறார் ஸ்னிக்தா.

நிதினுடன் மஞ்சரி லிப்லாக்!


முத்திரை படத்தில் பாலிவுட் புயல் மஞ்சலி பாட்னிஸுடன் லிப்லாக் காட்சி ஒன்றில் கலக்கியுள்ளாராம் நிதின்.

படம் வெளியாவதற்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது முத்திரை.

நடிப்புத்திறமை மிக்கவர்களான நிதினும், டேணியல் பாலாஜியும்தான் இதில் ஹீரோக்கள். டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த பாலாஜி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்களின் மூலம் நல்ல நடிகராக அறியப்பட்டவர்.

அதேபோல சத்தம் போடாதே படத்தின் மூலம் நன்கு நடிக்கக் கூடியவர் என்று அறியப்பட்டவர் நிதின்.

இப்போது இருவரும் சேர்ந்து முத்திரையில் கலக்குகிறார்கள். வழக்கம் போல ஒரு ஹீரோயினையே இருவருக்கும் ஜோடியாக்காமல், ஆளுக்கு ஒரு ஜோடி கொடுத்துள்ளனர்.

நிதினுக்கு ஜோடி போட்டிருப்பவர் மும்பை[^] வரவான மஞ்சரி பாட்னிஸ். லஷ்மி ராய், பாலாஜியுடன் ஜோடி போட்டுள்ளார்.

இப்படத்தில் ஒரு லிப் லாக் காட்சி இடம் பெறுகிறது. மஞ்சரி - நிதின் பங்கேற்று இந்த முத்தத்தைக்
கொடுத்துள்ளனராம்.

படத்தில் இருவரது ஜோடிப் பொருத்தமும் அமர்க்களாக இருப்பதைப் பார்த்த இயக்குநர்[^] ஸ்ரீநாத், இருவருக்கும் ஒரு லிப் லாக் காட்சியை வைக்க உத்தேசித்தார்.

இதுகுறித்து மஞ்சரியிடம் கூறியபோது அவர் மறுத்து விட்டாராம். இருப்பினும் ஒரு பாடல் காட்சியில் இந்த முத்தக் காட்சி மின்னல் போல வந்து செல்வதாக கூறி அவரை சமாதானப்படுத்தினாராம் ஸ்ரீநாத்.

மொரீஷியஸில் ஒரு பாடல் காட்சியைப் படமாக்கியபோது இடையில்இந்த முத்தக் காட்சியை படமாக்கினார்களாம்.
ஒரே ஷாட்டில் காட்சி ஓ.கே. ஆகி விட்டதாம்.

படத்தில் எங்களது ஜோடி வெகுவாக பேசப்படும் என்கிறார் நிதின் நம்பிக்கையுடன்.

இதேபோல லஷ்மி ராய்க்கும், பாலாஜிக்கும் ஏதாவது 'பச்சக்' காட்சி இருக்கிறதா என்று தெரியவில்லை...

ஆசினுக்கு சல்மானின் புது பரிசு!


ஆசினுக்கு முதலில் வீடு கொடுத்தார். இப்போது நாய்க்குட்டி ஒன்றை பரிசளித்து அசத்தியுள்ளாராம் சல்மான் கான்.

ஆசினின் வரவால் இந்தி்த் திரையுலகில் ஏக களேபரமாகிக் கொண்டிருக்கிறது.

ஆசின் குறித்து தினசரி ஏதாவது ஒரு செய்தி[^] வந்தவண்ணம் உள்ளது.

முதலில் ஆசினுக்கும், சல்மான் கானுக்கும் காதல் என்று செய்தி[^] கள்[^] கிளம்பின. இந்தக் காதலுக்குப் பரிசாக சல்மான் கான் பெரிய வீடு ஒன்றை ஆசினுக்கு வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. சல்மானின் இந்த திடீர் மாற்றத்தால் அவரது காதலி காத்ரீனா கைப் அப்செட் ஆகியுள்ளதாகவும் செய்தி[^] கள்[^] கூறின.

ஆனால் இதை ஆசின் மறுத்தார். ஏன்தான் இப்படியெல்லாம் வதந்தி கிளப்புகிறார்களோ என புலம்பினார்.

இந்த நிலையில் ஆசினுக்கு சல்மான் கான் ஒரு நாய்க்குட்டி வாங்கிக் கொடுத்துள்ளாராம். ஆசினுக்கு நாய் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு சர்ப்ரைஸாக ஒரு விலை உயர்ந்த நாய்க் குட்டியை வாங்கிக் கொடுத்து அசத்தி விட்டாராம் சல்மான்.

இருவரும் இப்போது லண்டன்[^] ட்ரீம்ஸ் படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.

ஆனால் ஆசினுக்கு சல்மான் நாய் வாங்கிக் கொடுத்தது குறித்து ஆசினின் அப்பாவுக்குத் தெரியாதாம். ஆசினுக்கு நாய் பிடிக்கும், ஆனால் அது உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று நான் கூறியுள்ளேன். ஆனால் இப்போது சல்மான் நாய் கொடுத்தாரா என்பது எனக்குத் தெரியாது என்கிறார் ஆசினின் அப்பா ஜோசப்.

அப்பாவுக்குத் தெரியாமயா ஆசின்?, தப்பாச்சே!

நயன்தாராவும், ஒரு ஒளிப்பதிவாளரும்!


ஒளிப்பதிவாளர் சித்தார்த்! கொஞ்சம் மனசு வைத்திருந்தால் நடிகர் சித்தார்த் ஆகியிருப்பார். ஒரு ஹீரோவுக்குரிய அத்தனை லட்சணங்களும் அடங்கியிருக்கிறது சித்தார்த்திடம். ஆனால் 'என் கடன் கேமிரா பிடிப்பதே' என்று ஒளிப்பதிவாளராக அடையாளப் பட்டிருக்கிறார். நள தமயந்தி, மும்பை எக்ஸ்பிரஸ், யாரடி நீ மோகினி, லேட்டஸ்டாக குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் என்று சித்தார்த் ஆடிய களங்கள் ரொம்பவே சிறப்பானவை!

அதிலும் 'மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் கமல் சாருடன் வொர்க் பண்ணியது என்னோட பாக்கியம்' என்றார் நிஜமான சிலிர்ப்போடு! 'கமல் சாருடன் பேசிக் கொண்டிருந்தாலே போதும். அத்தனை விஷயங்களை அறிந்து கொள்ளலாம். அதுவும் குள்ள அப்புவை எப்படி எடுத்தார்கள் என்பதை அவர் சொல்ல சொல்ல பிரமிப்பு' என்றார் சித்தார்த் அந்த பிரமிப்பு மாறாமல்!

நகரத்திலேயே வாழ்ந்து பழகிய சித்தார்த், எப்படி குங்குமப்பூவும், கொஞ்சு புறாவும் படத்தில் கிராமத்தை உள்வாங்கி ஒளிப்பதிவு செய்தார்? பலரும் இவரை வியப்போடு கேட்கிறார்களாம். 'நகரத்திலே வாழ்ந்தாலும், அவ்வப்போது கிராமங்களுக்கு டூர் போகிற வழக்கம் எனக்குண்டு. இந்த படத்தின் கதையை சொல்லும்போதே எனக்குள் ஒரு கிராம வாழ்க்கையை உணர வைத்தார் டைரக்டர் ராஜ்மோகன். ஷ¨ட்டிங் போவதற்கு பதினைந்து நாட்கள் முன்னதாகவே முட்டத்தில் போய் தங்கிவிட்டோம். அந்த ஊர் மக்களின் வாழ்க்கை, அவர்கள் பேசுவது, பழகுவது என்று எல்லாவற்றையும் அப்சர்வ் செய்தோம். இன்று எல்லாரும் என்னை பாராட்டும் போது சந்தோஷமாக இருக்கிறது' என்றார் சித்தார்த்.

நயன்தாராவின் கேரியரில், 'யாரடி நீ மோகினி' முக்கியமான படமாக இருக்கும். 'எல்லாம் அவன் செயல்' என்று டைரக்டர் பக்கம் கை நீட்டினாலும், நயன் வணங்க வேண்டிய திசையில் சித்தார்த்தும் இருக்கிறார் என்பதுதான் மறைக்க முடியாத உண்மை. ஏனென்றால் நயன்தாராவை அவ்வளவு அழகாக படம் பிடித்திருந்தார் சித்தார்த். இதுகுறித்து நாம் பாராட்ட ஆரம்பித்தால், வெட்கத்தோடு மறுக்கிறார் சித்தார்த்!

நிறைகுடங்கள் எப்போது சிந்தியிருக்கின்றன?

'ஈசாவும், ஏசுவும்...' ஏ.ஆர்.ரஹ்மான் ஆறுதல்!


விக்னேஷ் படமான 'ஈசா'வுக்கும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் என்ன சம்பந்தம்? இப்படத்தின் ஆடியோவை வெளியிட ரஹ்மான் வருகிறார் என்றதும் இப்படிதான் கேள்விகள் எழுந்தன ரசிகர்கள் மனதில். அதற்கு அதே மேடையில் விளக்கமளித்தார் ரஹ்மான்.

'இந்த மேடையில் எப்பிடி ரஹ்மான் வந்தாரு? எல்லாருடைய மனசிலேயும் இப்படி ஒரு கேள்வி இருக்குன்னு தெரியும். எனக்கு பதிமூணு வயசிருக்கும் போது 'நவ்ராக்' என்ற இசைக்குழுவில் கீ போர்டு வாசிச்சிட்டு இருந்தேன். அந்த இசைக்குழுவை நடத்திகிட்டு இருந்தவர் ஸ்ரீதர். அவருக்கு எந்த பாடலை பாடுனா ஜனங்க ரசிப்பாங்கன்னு தெரியும். ரொம்ப பொருத்தமா செலக்ட் பண்ணுவார். அவரோட பையன் ஹரன்தான் இந்த படத்தின் மியூசிக் டைரக்டர். அதுக்காகதான் நான் இங்கே வந்தேன். இந்த படம் பெரிய ஹிட் ஆகணும்' என்று வாழ்த்தினார். அப்படியே அவர் சொன்ன இன்னொரு விஷயம், நிச்சயம் அந்த யூனிட்டிற்கே ஆறுதல் கொடுத்திருக்கும்.

'ஈசா என்றால் ஏசு என்றும் அர்த்தம். அந்த ஏசு இந்த படத்தையும், உங்க நம்பிக்கையையும் நிறைவேற்றி கொடுப்பார்' என்றார் ரஹ்மான். இவர் இப்படி பேசவும் ஒரு காரணம் இருந்தது. ரஹ்மானை வரவேற்று பேசிய விக்னேஷ், 'ஈசான்னு பேரு வைக்காதீங்க. அது ஈசனோட பேரு. அவரு உக்கிர தெய்வங்கறதால நிறைய கஷ்டத்தை கொடுப்பாருன்னு பல பேர் சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரியே நான் அவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சேன்' என்றார். விக்னேஷ§க்கு ஆறுதல் தரட்டும் என்பதற்காகதான் இப்படி பேசினாரோ ரஹ்மான்?

இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்...! விஷால்-லிங்குசாமி மோதல்!


சத்யம் ஐபிஎஸ் மாதிரியே உடம்பை முறுக்கிக் கொண்டு நிற்கும் விஷால், சில தினங்களுக்கு முன்பு சண்டக்கோழியாகயும் சிலுப்பிக் கொண்டு நின்றாராம் ஒரு டைரக்டரிடம். இந்த புகைச்சலும் கரைச்சலும், எதற்காக? எல்லாம் பழைய கோவம்தான் என்கிறார்கள்.

'சண்டக்கோழி கதையை பற்றி கேள்விப்பட்டதும் நானே லிங்குசாமி சாரிடம் போய் 'இதிலே நடிக்கிறேன்'னு கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டார். எனக்கு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது சண்டக்கோழிதான்!' இவ்வாறு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பெருந்தன்மையோடு வாக்குமூலம் கொடுத்தார் விஷால். இப்படி பேசி சில நாட்கள் ஆவதற்குள்ளாகவே அதே லிங்குசாமியை விரல் நீட்டி எச்சரித்தாராம் விஷால்!

ஒரு திருமண விழாவில்தான் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். சண்டக்கோழி ரிலீஸ் ஆகி பெரிய ஹிட் ஆனபிறகும், விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவும், லிங்குசாமியும் முறுக்கி கொண்டு நின்றார்கள். எல்லாம் பண விவகாரம்தான். அதற்கு பிறகு விஷாலும், லிங்குவும் கூட அதிகம் பேசிக் கொள்வதில்லை. இந்த நிலையில்தான் இந்த திருமண விழா சந்திப்பு. அத்தனை பேருக்கும் முன்பாக, 'என்னடா விஷால், எப்பிடியிருக்கே?' என்று லிங்குசாமி குசலம் விசாரிக்க, கோபத்தில் முகம் சிவந்தார் விஷால்.

'இந்த வாடா போடான்னு கூப்பிடுறதெல்லாம் எங்கிட்ட வேணாம். விஷால் சார்னு கூப்பிடணும்' என்று விரல் நீட்டி எச்சரிக்க, சைலண்ட் ஆனாராம் லிங்குசாமி.

முத்தம் கொடுக்கிறேன்னு நினைச்சுக்கிட்டு மூஞ்சை நக்குனா இப்படிதான்!

Wednesday, May 13, 2009

‘கிக்’ மூலம் ‘க்ளிக்’கான ஷாம்!


‘12 பி’ படம் மூலம் திறமையான இளம் நடிகராக அடையாளம் காணப்பட்டவர் ஷாம். தொடர்ந்து வந்த இயற்கை அவரது நல்ல நடிப்பின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியது.

தொடர்ந்து, 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே' போன்ற படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த ஷாம், இப்போது அந்தோணி யார், அகம் புறம், சரியா தவறா மற்றும் இந்தியிலும், தெலுங்கிலும் தலா ஒன்று என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே அவர் ‘கிக்’ என்ற தெலுங்கு[^] ப் படத்தில் ரவி தேஜா மற்றும் இலியானாவுடன் இணைந்து நடித்தார்.
சுரேந்தர் ரெட்டி இயக்கிய இந்தப் படம் கடந்த வாரம் வெளியானது. இன்றைய தேதிக்கு தெலுங்கில் வசூல் மற்றும் தரத்தில் முதலிடத்தில் நிற்கிறதாம் இந்தப் படம். குறிப்பாக ஷாமின் ஆக்ஷன் காட்சிகள் பெரிய அளவு பேசப்படுகின்றனவாம் இந்தப்படத்தில்.

இந்தப் படத்துக்காக ஒரு சண்டைக் காட்சியில் ஷாம் நடித்த போது, பெரிய விபத்து நேர்ந்தது அவருக்கு. நடக்கவே முடியாத அளவுக்கு கணுக்காலில் முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். ஆனால் அந்தக் காட்சியின் தொடர்ச்சி சரியாக வரவேண்டும் என்பதற்காக வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்தார் ஷாம்.

ஷாமின் அந்த ஒத்துழைப்பு மற்றும் அவரது துடிப்பான நடிப்பால் ஈர்க்கப்பட்ட இயக்குநர்[^] சுரேந்தர் ரெட்டி, அப்போதே, ‘அடுத்த படம் நாம சேர்ந்து பண்றோம்' என வாக்களித்தார் ஷாமுக்கு.

இப்போது அந்த வாக்கைக் காப்பாற்றியும் உள்ளார். தனது அடுத்த படத்துக்கு ஷாமையே தனி ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு[^] துவங்க இருக்கிறது.

கிக் படத்தின் இரண்டாவது வார வசூல் தெலுங்கு[^] தயாரிப்பாளர்களை பிரமிக்க வைத்துள்ளதாம். அதன் விளைவு, பெரிய பட நிறுவனமான பத்மாலயாவிலிருந்தும் ஷாமிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஆக, தெலுங்கில் முதல் ‘கிக்’கிலேயே க்ளிக்காகிவிட்டார் ஷாம்!

சௌந்தர்யா'-வார்னர் விலகலா?


சௌந்தர்யா ரஜினியின் ஆக்கர்ஸ் ஸ்டுடியோவுடனான கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகியதாக சொல்லப்படுபவை அனைத்தும் ஆதாரமற்றவை, வதந்திகள் என அறிவித்துள்ளது ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிக்கு சொந்தமான நிறுவனம், ஆக்கர் ஸ்டூடியோ. இந்த நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் இதர தென்னிந்திய மொழிகளில் நிறைய படங்கள் தயாரிக்கப் போவதாக வார்னர் பிரதர்ஸ் அறிவித்திருந்தது.

தமிழில் முதல்படமாக 'கோவா'வை இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே போல சூப்பர் ஸ்டார் ரஜினியின் முதல் அனிமேஷன் படமான சுல்தான் - தி வாரியர் படத்தை வார்னர் பிரதர்ஸ் உலகம்[^] முழுக்க வெளியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆக்கர் ஸ்டூடியோவில் இருந்து வார்னர் பிரதர்ஸ் விலகிவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. அது உண்மையல்ல என்று வார்னர் பிரதர்ஸ் இப்போது அறிவித்து இருக்கிறது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் நிர்வாக உதவி தலைவர்[^] ரிச்சர்ட் பாக்ஸ் கூறியதாவது:

"ஆக்கர் ஸ்டூடியோவுடன் நாங்கள் இணைந்து, தொடர்ந்து பணிபுரிகிறோம். எங்கள் 2 நிறுவனங்களும் இணைந்து தென்னிந்திய மொழிகளில் பல படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விட்டன.

சரியான நேரத்தில், எங்கள் திட்டங்களை அறிவிப்போம். ஆக்கர் ஸ்டூடியோவில் இருந்து நாங்கள் விலகிவிட்டதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை," என்றார் ரிச்சர்ட் பாக்ஸ்.

இதுகுறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த்[^] கூறியதாவது:

"ஆக்கர் ஸ்டூடியோவும், வார்னர் பிரதர்சும் இணைந்து வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறன. எங்கள் 2 நிறுவனங்களுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது.

எங்களின் புதிய திட்டங்களை மிக விரைவில் அறிவிக்க இருக்கிறோம். எங்களுக்கு எதிராக வதந்திகளும், கற்பனை செய்திகளும் பரப்பப்பட்டுள்ளன. அதை யாரும் நம்ப வேண்டாம். இது குறித்து ஏற்கெனவே பல முறை நான் தெளிவாக அறிவித்துள்ளேன். ஆனால் உண்மையைச் சொல்லும்போது அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். வதந்திகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். என்னிடம் எப்போது வேண்டுமானாலும் விசாரிக்கலாம்...", என்றார் சௌந்தர்யா.

ஜெயபிரதா ஹோட்டல் அறையில் திடீர் சோதனை


ராம்பூர்: நடிகையும், சமாஜ்வாடி கட்சி வேட்பாளருமான ஜெயபிரதா தங்கியிருந்த ஹோட்டல் அறையில் நேற்றிரவு உத்தரப் பிரதேச போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

ஜெயபிரதாவி்ன் புகழை களங்கப்படுத்த வேண்டுமென்றே இது போன்ற செயல்களை சிலர் செய்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உத்தர பிரேதச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியில் உட்கட்சி பூசல் பெரிதாகி கொண்டே போகிறது. கட்சியின் முக்கிய தலைவர்களான அமர்சிங்-அசம் கான் இடையே மோதல் உச்சகட்டத்தில் உள்ளது.

ஜெயப்பிரதாவை அமர் சிங்[^] தான் ராம்பூர் தொகுதி வேட்பாளராக்கினார். இதை அசம் கான் ஏற்கவில்லை. இதையடுத்து ஜெயப்பிரதாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அவர் மீது நடவடிக்கை[^] எடுக்க முடியாத நிலையில் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்[^] உள்ளார்.

அவரை நீக்கினால் கட்சிக்கு முஸ்லீம்களின் ஓட்டுக்கள் பாதிக்கப்படும் என்பதால் அமர்சிங், அசம் கான் இருவரையுமே கண்டித்து வருகிறார். இதையடுத்து தான் கட்சியை விட்டு விலகுவதாக அமர் சிங்[^] மிரட்டினார். அவரை முலாயம் சமாதானப்படுத்தினார்.

அதே போல அசம் கானை சமாதானப்படுத்தும் வேலையை தனது நண்பரான லாலு பிரசாத்திடம் தந்துள்ளார். அவரும் கானுடன் பேசி வருகிறார்.

இதற்கிடையே தான் நிர்வாணமாக இருப்பது போன்ற ஆபாச போஸ்டர்களை தொகுதி முழுவதும் அசம் கான் ஆதரவாளர்கள் ஒட்டி வருவதாக நேற்று அழுதபடியே புகார் தந்தார் ஜெயப்பிரதா.

இந்நிலையில் நேற்று இரவு உத்தரப் பிரதேச போலீசார் ஜெயபிரதா தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் புகுந்து சோதனை செய்துள்ளனர். அவர்கள் எதற்காக சோதனையிட்டனர் என்று தெரியவில்லை.

முதல்வர் மாயாவதியை தூண்டிவிட்டு அசம் கான் அந்த வேலையைச் செய்துள்ளதாக ஜெயபிரதா சந்தேகப்படுவதாகத் தெரிகிறது.

விஜய்யின் 50வது படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் தமன்னா.


படு வேகமாக முன்னணி நடிகையாகி விட்டார் தமன்னா. அவருடன் ஜோடி போட ஹீரோக்களிடையே ஏகப்பட்ட ஆதரவும், ஆர்வமும் அதிகரித்திருக்கிறதாம்.

இந்த நிலையில் விஜய் யின் ஜோடியாகிறார் தமன்னா. விஜய்[^] நடிக்கப் போகும் அவரது 50வது படத்தில் தமன்னாதான் ஜோடியாம்.

படிக்காதவன், அயன் என இரு ஹிட் படங்களைக் கொடுத்ததால் தமன்னாவுக்கு இப்போது ஏகப்பட்ட டிமான்ட். கை நிறையப் படங்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் கண்டேன் காதலை, பையா ஆகியவை பெரிய பட்ஜெட்[^] படங்கள்.

அடுத்த வாரம் விஜய்[^] படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறாராம் தமன்னா. இப்படத்துக்காக பெரிய சம்பளத்தைத் தருகிறார்களாம்.

சங்கிலி முருகனின் மீனாட்சி ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கப் போகிறது. எனவே கண்டிப்பாக இசைஞானி இளையராஜாதான் இசையமைப்பார் எனத் தெரிகிறது.

இதே நிறுவனம்தான் விஜய்[^] க்கு பெரும் ஹிட்டாக அமைந்த காதலுக்கு மரியாதை படத்தைக் கொடுத்த பட நிறுவனம் என்பது நினைவிருக்கலாம்.

'தந்தையானவன்'...


திரைப்பட பெயர்: Pedar (Father)
மொழி: ஈரானி
இயக்குனர்[^] : மஜித் மஜிதி

" இப்பிரபஞ்சத்தின் முடிவில்லா விரிவின் முன், இழந்த தேசத்திற்கான மன்னனின் கவலைக்கும் உடைந்த பொம்மைக்கான குழந்தையின் கண்ணீருக்கும் அதிக வித்தியாசம் இல்லை "
-இது அமெரிக்காவின் மிகப்பெரும் இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான மார்க் ட்வைன் சொன்னது.

உலக திரைப்பட இலக்கணமும் அறிமுகம் இல்லாத எவரையும் மஜித் மஜிதியின் திரைப்படங்கள் கவர்ந்து விடும் என்பதை சொல்ல தேவையில்லை.

சிறிதும் நாடகத்தன்மை இல்லாது அதிகமான இயல்பும் எளிமையும் குழந்தைகளின் உளவியலை மாறுபட்ட வாழ்வியலை நெகிழ்ச்சியான திரைப்படங்களாக வடிவமைத்தைலையே வழக்கமாக கொண்ட மஜித் மஜீதியின் மற்றொருமோர் உன்னத படைப்பு Pedar.

நாம் எல்லோரும் நம் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் வாழும் இந்த வேளையில் எத்துனையோ பேர் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் இல்லாத அல்லது இழந்து விட்ட தத்தம் உறவுக்காக ஏங்கி கொண்டுதான் இருப்பார்கள்.

அப்படி தந்தையின் பிரிவால் துடிக்கும் ஒரு சிறுவனின் கதை தான் இந்த திரைப்படம்.
---------------------------------------------------------

சிறுவன் மெஹ்ரோலா கடந்த நாலு மாதமாக துறைமுகத்தையொட்டிய மொத்த வியாபார கடையில் கடுமையாக உழைத்து விடுமுறையில் ஊருக்கு கிளம்புகிறான். நாலு மாத சம்பளத்தில் பாதியை மட்டும் கொடுக்கிறான் முதலாளி. மீதியை விடுமுறையில் இருந்து வந்தததும் தருவதாகவும் இல்லாட்டி நீ திரும்பி வரமாட்டாய் என்கிறான்.

முதலாளி மீது கோபம் கொண்டாலும் அதை மறந்து ஊருக்கு போகப்போகும் மகிழ்ச்சியில் மார்கெட்டுகளில் தேடித்தேடி பொருட்களை வாங்குகிறான். எதுவுமே தனக்கில்லை. ஆறுமாத்திற்கு முன் ஒரு விபத்தில் தந்தையையிழந்த அவன் மூன்று தங்கைகளுக்கும் அம்மாவுக்கும் மட்டுமே

தொலை தூர பயணத்தின் முடிவில் ஊர் சென்றடைகிறான். ஒடையில் முகம் கழுவும் போது அவனது தந்தையுடன் எடுத்த புகைப்படம் ஒடை நீரில் விழுந்து அடித்து செல்கிறது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

அதையும் மறந்து தாயையும் தங்கைகளையும் காண மகிழ்ச்சியோடு வீட்டை நோக்கி ஒடும் போது வழியில் நண்பன் லத்தீப்பை சந்திக்கிறான்.

அம்மாவும் தங்கைகளும் உன் வீட்டில் இல்லை. அந்த போலீஸ்காரனுக்கும் உங்க அம்மாவிற்கும் கல்யாணமாகிவிட்டது, எல்லோருமே அவர் வீட்டில் தான் வசிக்கிறாங்க என்ற அதிர்ச்சியை மெஹ்ரோலாவால் நம்பவும் முடியவில்லை. தாங்கி கொள்ளவும் இயலவில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன் அவனது தங்கைக்கு ஏற்பட்ட நோய்க்கு அதிக செலவிட்டதாகவும் அதனாலேயே உங்கம்மாவை அந்த போலீஸ்காரன் கல்யாணம் செய்ததாகவும் ஊரெல்லாம் பேசிக்கிறாங்க என்கிறான் லத்தீப்.

போலீஸ்காரருக்கு சரியான பாடம் புகட்டுகிறேன் என்கிறான் மெஹ்ரோலா.

தாயை பார்த்து கடும் கோபம் கொண்டு அவளை கண்டபடி திட்டுகிறான். ஒரு தந்தையின் பொறுப்போடு பணம் சம்பாதிக்க போன நேரத்தில் தான் ஏமாற்றப்பட்டு போனதாய் வருந்துகிறான்.

ஆனால் தாயோ அவர் மிகவும் நல்லவர். இக்கட்டான நேரத்தில் ஆறுதல் தந்தவர் என்று எவ்வளவு எடுத்து கூறியும் ஆழ்மனத்தில் இருக்கும் தந்தையும் பொறுப்பும் சிறு வயதிற்குண்டான கோவமும் முரட்டுதனமும் அவனை எதையும் ஏற்று கொள்ள மறுக்கிறது.

கோபித்து கொண்டு தங்கள் வீட்டிலேயே தனியாக தங்குகிறான். நண்பன் லத்தீப் மூலம் இரவு உணவை கொடுத்தனுப்புகிறாள் தாய்.

கோபம் குறையாதவனாய் மறுநாள் போலீஸ்காரரை சந்தித்து பணத்தை அவர் முகத்தில் விட்டெறிகிறான் மெஹ்ரோலா. அவரோ உன் தாய்க்கு கொடு இந்த பணத்தை ,எனக்கு வேண்டாம், நான் பணத்திற்காகவும் சுகத்திற்காகவும் எதுவும் செய்யவில்லை. மன அமைதிக்காகவே எதையும் செய்வதாய் கூறுகிறார்.

இள இரத்தம் எதையும் புரிந்து கொள்வதாயில்லை.

தான் சம்பாதித்த பணத்தை கொண்டு தனது வீட்டை அலங்கரித்து மூன்று தங்கைகளையும் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் கூட்டி கொண்டு வந்து விடுகிறான்.

பதறியடித்து ஒடி வருகிறார்கள் தாயும் போலீஸ்காரரும். பயந்து போய் காட்டி கொடுக்கிறான் லத்தீப். குழந்தைகளை அழைத்து சென்று விடுகின்றனர்.

மறு நாள் வீட்டில் மாடிப்படிகளில் விழுந்து அடிபட்டு கடும் காய்ச்சாலால் அவதிப்படுகிறான் மெஹ்ரோலா. மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறார் போலீஸ்காரர். தன் வீட்டிலேயே தங்க வைத்து அவனை குணப்படுத்த சொல்கிறார். தாயும் அன்போடும் அரவணைப்புடன் அவனை காக்கிறாள்.

ஒரு நாள் இரவு யாருக்கும் தெரியாமல் காவல் பணியின் சின்னமான போலீஸ்காரரின் கைத்துப்பாக்கியை எடுத்து அவரை கொல்ல நினைக்கிறான். அது நடக்காமல் போகவே, தன்னையும் அழைத்து கொண்டு போகும்படி கெஞ்சிய நண்பன் லத்தீப்புடன் தான் வேலை செய்யும் நகரத்தை நோக்கி கைத்துப்பாக்கியோடு இரவோடு இரவாக ஒடிப்போகிறார்கள் இருவரும்.

விடிந்ததும் தன் துப்பாக்கியையும் இரண்டு சிறுவர்களையும் காணாத போலீஸ்காரர் எரிச்சலும் ஆத்திரமும் அடைகிறார்.

நாலு நாள் லீவு சொல்லிவிட்டு நகரத்தை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் பயணமாகிறார். அலைந்து திரிந்து கண்டும் பிடித்து விடுகிறார்.

லத்தீப்பை ஊருக்கு அனுப்பிவைத்து விட்டு மெஹ்ரோலாவை கை விலங்கிட்டு தனது மோட்டார் சைக்கிளிலேயே அழைத்து வருகிறார்.

இருவருக்கும் பேச எவ்வளவோ இருந்தும் இருவரும் முறைப்பும் வெறுப்பும் கலந்த பார்வை. சில நேரங்களில் இகழ்ச்சி கலந்த புன்னகை. மட்டுமே.

போலீஸ்காரர் ஏமாந்த தருணத்தில் மோட்டார் சைக்கிளோடு தப்புகிறான் மெஹ்ரோலா. பல கைதிகளை வளைத்து பிடித்த தனது தொழில் முறையால் குறுக்கு வழியில் ஒடி மீண்டும் பிடித்தும் விடுகிறார்.

கண்டபடி திரிந்ததாலும் இருவரும் வழியை தவற விட்டு விடுகின்றனர். கொடிய பாலைவன கோடையில் மோட்டார் சைக்கிளும் பழுதடைய கடும் கோவம் கொள்கிறார் போலீஸ்காரர்.

கை விலங்கை அவிழ்த்து விட்டு “உன் இஷ்டப்படி ஓடு, வழி தெரியாது எங்கு வேண்டுமானாலும் போ” என்கிறார். ஆனால், மெஹ்ரோலா அவரை விட்டு விலகாமல் அருகிலேயே நடக்கிறான்.

திடீரென பாலைவன்ப் புயல் அடிக்கிறது. சூறாவளியாய் சுற்றும் அந்த புழுதி கலந்த மண்ணில் செய்வதாறியாது திகைக்கின்றனர் இருவரும். நாக்கு வறண்டு தாங்கி கொள்ள முடியாமல் மயங்கி விழுகிறார் போலீஸ்காரர்.

செய்வதறியாது திகைக்கிறான் மெஹ்ரோலா. கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒட்டகங்கள் தெரிகின்றன. ஒட்டகங்கள் திரிந்தால் அவ்விடத்தில் தண்ணீர் இருக்கும் என யூகிக்கிறான். அந்த ஒரு புள்ளியை குறி வைத்து ஒடுகிறான். அவன் யூகம் வீணாகவில்லை. சள சளவென்று ஒடும் ஒரு மெல்லிய நீரோடையை காண்கிறான்.

ஒரு நிமிடமும் தயங்காமல் மீண்டும் ஒடி வந்து போலீஸ்காரரை கைகளை பிடித்து ஒடை வரை இழுத்து வருகிறான். இருவரும் ஒடையில் சரிந்து விழுகின்றனர்.

தண்ணீரின் குளுமை அவனுக்கு இதமாய் இருக்கிறது. தனது தந்தையின் பாதுகாப்பான கரங்களில் வீழ்ந்தது போல் தண்ணீரை பருககூட தோன்றாமல் சில நேரம் வீழ்ந்து கிடக்கிறான்.

அவ்வளவு குளிர்ந்த தண்ணீரில் வீழ்ந்து கிடந்தாலும் சுய உணர்வின்றி கிடக்கும் போலீஸ்காரரின் சட்டைபையிலிருந்து ஒரு புகைப்படம் தண்ணீரில் மிதந்து மெஹ்ரோலா முகத்தில் மோதுகிறது.

தான் தனிமையில் இருக்கும் போது போலீஸ்காரர் பார்த்து புன்னகைக்கும் புகைப்படம் அது.

மெஹ்ரோலாவின் தாயும் அவளது குழந்தைகளுமான புகைப்படம் அது.

அதை பார்த்ததும் மெஹ்ரோலாவின் கண்கள் ஒளிர்கின்றன.

இந்த காட்சியோடு நிறைவடைகிறது திரைப்படம்.

சுட்டெரிக்கும் பாலைவனத்திற்குள்ளும் கடவுள் அளித்த நீரோடையாய் சொல்லணா வேதனையுடன் வாழ்ந்த தாய்க்கு கடவுள் அளித்த ஆதரவாய் போலீஸ்காரர் இருந்த்தை சொல்லாமல் சொல்லி முடித்திருக்கிறார் மஜித் மஜீதி.

ஊரை நோக்கி ஓடும்போது தொலைத்த தனது தந்தையின் புகைப்படைத்தை ஆரம்ப காட்சிகளில் பொறுத்தியிருப்பதை சொல்ல வார்த்தைகளில்லை.

தந்தையின் பொறுப்பு பிள்ளைகளை பெற்றால் மட்டும் தான் வர வேண்டும் என்பதில்லை என்பதை சிறுவன் மெஹ்ரோலா பாத்திர படைப்பின் மூலம் சித்தரித்திருக்கும் இயக்குனரின் உணர்வும் கற்பனை திறனும் அனைத்து தந்தையர்களுக்கும் இத்திரைப்படம் ஒரு பாடம்.

பார்க்க பார்க்க திகட்டாத அழகான மலைகளும் நீரோடைகளும் குளுமையில் கற்பனைகெட்டாத இடங்களிலெல்லாம் சென்று ஒரு திரைப்படைத்தை படைத்து ஒவ்வொரு காட்சியையும் ஒரு கவிதையாய் சொல்ல முற்படும் மஜித் மஜீதியை எத்தனை பாராட்டினாலும் தகும்.

மெஹ்ரோலா நடித்த சிறுவன் Hassan Sadeghi நடிப்பு வியக்க வைப்பது.

1996ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்ப்டம் உலக பல திரை விழாக்களில் பங்கு பெற்றதுடன் ஒன்பது உலக விருதுகளை அள்ளியது.

நல்ல சினிமா[^] ரசிகர்கள்[^] கண்டிப்பாக பார்கக வேண்டிய திரைப்படம் இது.

சீமானை விரட்டியடித்த திமுக-காங் தொண்டர்கள்


காரைக்குடி: காரைக்குடியில் ஒரு ஓட்டுச் சாவடிக்கு வந்து இலங்கைத் தமிழர்[^] களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி, அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்த இயக்குனர் சீமானை திமுகவினரும் காங்கிரசாரும் விரட்டியடித்தனர்.

ஓட்டுச் சாவடிக்கு அருகே வந்த சீமான், காங்கிரஸ்[^] வேட்பாளர் ப.சிதம்பரத்துக்கு ஓட்டு போடாதீர்கள், அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று அங்கு வாக்களிக்க வந்தவர்களிடம் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் திமுகவினரும் அவரை சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

அடிதடி நடக்கும் சூழல் ஏற்பட்டதால் போலீசார் அவரை ஒரு ஜீப்பில் அழைத்துச் சென்று தூரமாக ஒரு இடத்தில் இறக்கி விட்டுவிட்டு வந்தனர்.

இதையடுத்து தனது சொந்த ஊரான அரணையூரில் வாக்களித்தார் சீமான்.

அமீருக்கு வாக்கு இல்லை.

அதே போல இலங்கைத் தமிழர் விஷயத்தில் தீவிரம் காட்டி வரும் இன்னொரு இயக்குனரான அமீரின் குடும்பத்தினர் மதுரை கே.கே. நகரில் ஒரு அபார்ட்மென்டில் வசிக்கின்றனர்.

ஆனால் இந்த முறை வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை. இதனால் ஓட்டு போட வந்த அவர் வாக்களிக்க முடியாமல் திரும்பினார்.

அமீரின் உதவியாளர் போல இருக்கும் நடிகர் 'கஞ்சா' கருப்பின் பெயரும் சென்னையில் இல்லை. இதனால் சாலி கிராமத்தில் வசிக்கும் அவர் ஓட்டு போட முடியவில்லை.!

வாக்காளர் பட்டியலில் பெயரில்லை-கமல் எரிச்சல்!


ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களித்து வரும் நடிகர் கமல்ஹாசனின் பெயர் இந்த முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் கமலஹாசன் அதிர்ச்சி அடைந்தார். வாக்களிக்க முடியாமல் போனது பெரும் வருத்தம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற கமல்ஹாசன் தவறியதே இல்லை. காலையிலேயே போய் வாக்களித்து விடுவார் கமல்.

ஆனால் இந்த முறை அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் மாயமாகியுள்ளது. இதனால் கமல்ஹாசனால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிர்ச்சியும், வருத்தமும் தெரிவித்துள்ளார் கமல்.

இதுகுறித்து அவர் கூறுகையில், வாக்காளர் பட்டியலில் என் பெயர் விடுபட்டு விட்டதே, ஏன் என்று தேர்தல்[^] ஊழியர்களிடம் கேட்டபோது, நாங்கள் உங்கள் வீட்டில் உங்களைத் தேடிப் பார்த்தபோது, நீங்கள் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே நான் நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும், தேர்தலில் ஓட்டுப் போடுவது ஜனநாயக கடமை என்று சொல்லி வருகிறேன்.

பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் இதை வலியுறுத்தி வருகிறேன். அப்படிப்பட்ட எனக்கே ஓட்டு இல்லை என்று சொல்கிறார்கள்.

தேசத்தின் நிலையை நிர்ணயிக்கப்போகிற தேர்தல்[^] இது. இதில் எனக்கு பங்கு இல்லை என்றால் வருத்தப்படாமல் இருக்க முடியாது. நான் யார் தெரியுமா? என்ற வீராப்பு குரல் இல்லை இது. நான் யார் என்றே தெரியாத நிலை ஏற்பட்டதற்கான வருத்தக் குரல்தான் இது.

இது பற்றி தேர்தல்[^] அலுவலக ஊழியர்களிடம் விசாரித்தபோது, நீங்கள் ஓட்டுப் போடுவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். வாய்ப்பை மக்கள்தான் கொடுக்க வேண்டும்.

பிரதமரையும், மந்திரிகளையும் நியமிக்கிற தகுதியும், வாய்ப்பும் ஜனங்களுக்குத்தான் உண்டு.

கு.ஞானசம்பந்தனுக்கும் ஓட்டில்லை..

ஓட்டு மூலம் நம் கருத்தை சொல்ல முடியவில்லை என்றால் ஜனநாயகம் என்பதில் அர்த்தம் இல்லையே?... என் நண்பர் கு.ஞானசம்பந்தத்துக்கும் இதேபோல் ஓட்டு கிடையாது என்று சொல்லி விட்டார்கள்.

படித்தவர்களையும் ஒதுக்குகிறார்கள். படிக்காத என்னையும் ஒதுக்கி விட்டார்கள். அப்படியானால் 100 கோடி ஓட்டு என்பது நிஜமா? எங்கேயோ தப்பு நடந்து விட்டது. கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள் தவறு செய்து விட்டார்கள் என்று சொன்னால் ஒத்துக் கொள்ள முடியாது.

நான் வீட்டு வரி, மின்சார வரி கட்டிக் கொண்டு இருக்கிறேன். இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் மனித தவறு நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை.

நான் அரசியல்[^] வாதி அல்ல. ஆனால் எனக்கு அரசியல்[^] தெரியும். முதல்வர்[^] தன்னை பாமரன், சாதாரணமானவன் என்று சொல்கிறார். அவரை விட நான் சாதாரணமானவன். பாமரன்.

எனக்கு ஏற்பட்ட நிலை போன்று இன்னொரு சாமான்யனுக்கு ஏற்படக் கூடாது.

ரூ. 1 லட்சம் நஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் வந்தேன்..

ஹைதராபாத்தில் ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வந்தால் எனக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும். அதைக் கூட நான் பொருட்படுத்தாமல் வந்தேன். ஆனால் எனக்கு ஓட்டு இல்லையென்று சொல்விட்டார்கள். நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல என்றார் கமல்ஹாசன்.

தேர்தல்[^] அதிகாரிகளின் அலட்சியத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. இப்படித்தான் தலைமைத் தேர்தல்[^] ஆணையர் நவீன் சாவ்லாவின் பெயரையும் பட்டியல் மாற்றிக் குழப்பினார்கள். இப்போது நாடறிந்த கமல்ஹாசனின் பெயரையே, வீட்டில் ஆள் இல்லை என்று கூறி நீக்கியுள்ளனர்.

கோடம்பாக்கமும், மான் வேட்டையும்!


'ஆல்பத்தை புரட்டி புரட்டியே 'பல்பு' கண்ணு ரெண்டு ப்யூஸ் ஆகிடும் போலிருக்கே' என்று தவியாக தவிக்கிறார்கள் சில இயக்குனர்கள். இவர்களின் இப்போதைய தேடல் அழகழகான குட்டி மான்கள்! இவர்களுக்காக ஆந்திரா, கேரளா, பெங்களூரு என்று திரும்பிய இடமெல்லாம் தேடுதல் வேட்டை நடத்தும் மீடியேட்டர்கள் எல்லா மான்களையும் ஓட்டி வந்து அடைக்க நினைப்பது இந்த கோலிவுட்டில்தான்!

பொதுவாகவே கோடம்பாக்கத்தில் தலை விரித்தாடுவது ஹீரோயின் பஞ்சம்தான். ஒரு படம் நடிச்சா போதும். சம்பளத்தை கேட்க விரல்கள் போதாது என்ற நிலைக்கு தள்ளப்படும் நாயகிகளிடம், ஏன் இவ்ளோ கேட்கிறீங்க? என்றால், 'இன் குளுசிவ் ஆஃப் ஆல் டாக்சஸ்' என்கிறார்களாம். (அர்த்தம் புரியுதா கண்ணுங்களா?)

இந்த லட்சணத்தில்தான் கோடம்பாக்கத்தில் தயாராகும் மூன்று பட இயக்குனர்கள் பெரும் பிரயத்தனப்பட்டு புதுமுகங்கள் தேடி வருகிறார்கள். விஷால் நடிக்கவிருக்கும் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் விஷாலுடன் ஸ்ரேயா நடிக்கிறார். இவரை சேர்த்து படத்தில் மூன்று ஹீரோயின்கள்! அடுத்து சிம்பு இயக்கப் போகும் கதையில் மூன்று ஹீரோயின்கள். அவர்களில் ஒருவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி.

மேற்படி படங்கள் தவிர்த்து உருவாகிக் கொண்டிருக்கும் புதிய படம் ஒன்றை கவுதம் மேனனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மார்கன் என்பவர் இயக்குகிறார். இதை 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்த செவன்த் சேனல் நாராயணன் தயாரிக்கிறார். இதுவும் ஒரு ஹீரோ, மூன்று ஹீரோயின்கள் கதையாம். இந்த மூன்று படங்களுக்கே ஏழு ஹீரோயின்கள் தேவைப்படுகிறார்கள். இதில்லாமல் ஏராளமான படங்களில் புதுமுக ஹீரோயின்களை நடிக்க வைக்கதான் நினைக்கிறார்கள் இயக்குனர்கள்.

த்ரிஷா கோடி ரூவா கேக்குதுன்னு குறை பட்டுக் கொள்றீங்களே, ஏன்யா கேட்காது?

-மனஸ்வினி

கொடுத்த தேதியை யூஸ் பண்ணுங்க! நடிகை ஷம்மு எச்சரிக்கை...


பார்க்கிறதுக்கு ஜம்முன்னு இல்லைன்னாலும், ஷம்முவிடம் ஒரு அட்ராக்ஷன் இருப்பதால், பலரது கண்களும் அந்தப் பக்கம்தான் வளைய வருகிறதாம். மயிலு, காஞ்சிவரம், மலையன், மாத்தி யோசின்னு நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே ஒரு இடத்தை பிடிச்சிருக்காரு ஷம்மு!

தசாவதாரம் படத்தில் ஒரே ஒரு சீனில் ஷம்முவை நடிக்க வைத்த கே.எஸ்.ரவிக்குமார், 'நான்தான் இந்த பொண்ணுக்கு ஆர்வத்தை தூண்டி விட்டுட்டேன் போலிருக்கு. இல்லைன்னா அமெரிக்காவிலே இருந்து சென்னைக்கு வந்து செட்டில் ஆகுமா?'ன்னு வியந்தார்.

தனக்கு ஸ்கோப் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்ளும் இவருக்கு, இப்போது கதை சொல்ல பெரிய 'க்யூ' நிற்பதுதான் ஆச்சர்யம்! 'கொடுத்த தேதிகளை சரியா யூஸ் பண்ணிக்கோங்க. இல்லைன்னா, நான் அடுத்த படத்தை முடிச்சுட்டுதான் உங்க படத்துக்கு வருவேன்'னு கண்டிஷன் போடுற அளவுக்கு வளர்ந்திருக்கு பொண்ணு. அடிக்கடி படப்பிடிப்பை தள்ளிப் போடும் 'மாத்தி யோசி' குழுவிடமும் இதே அறிக்கையை வாசிச்சிருக்காராம்.

ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மலையன் வந்தால், ஷம்முவை யாராலும் பிடிக்க முடியாது. அவ்வளவு பிஸியாகிவிடுவார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். எக்குதப்பான அழகுக்கு எக்கச்சக்க ஆதரவு தர்றதுதான் நமக்கு கைவந்த கலையாச்சே!

பேசி பேசி போரடிச்சுருச்சு... விஷால் அலுப்பு!


தோரணை ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கக்கூடிய நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஷால். கூடவே வந்திருந்தார் படத்தின் இயக்குனர் சபா ஐயப்பன்! படப்பிடிப்பில் விஷாலிடம் அடி வாங்கியதாக வந்த செய்திகளை மறுத்த ஐயப்பன், 'எங்க ஹீரோவுக்கு வில்லனை அடிக்கவே நேரமில்லை. இதிலே என்னை அடிக்க அவருக்கு எது நேரம்? அதெல்லாம் பொய்யுங்க' என்றார் கவலையோடு!

கிராமத்திலிருந்து அண்ணனை தேடி சென்னைக்கு வரும் ஒருவனின் கதைதான் தோரணை. முதல் பாதி முழுக்க குலுங்க வைக்கும் காமெடி. இரண்டாவது பாதி அதிர வைக்கும் ஆக்ஷன். நான் ஆக்ஷன் ஹீரோவாக ஆகணும்னு நினைச்சு வரலே. லிங்குசாமியோட சண்டக்கோழி கதைய பற்றி கேள்விப்பட்டதும், நானே அவரை தேடிப் போய் வாய்ப்பு கேட்டேன். அந்த படத்திலே இருந்து எனக்கு ஆக்ஷன் ஹீரோ இமேஜ் வந்திருச்சு. காமெடி படங்களில் நடிக்கணும் என்பதுதான் என்னோட ஆசை. ஏற்கனவே மலைக்கோட்டையிலே 'ட்ரை' பண்ணியிருந்தேன். கவுண்டமணிதான் என்னோட ஃபேவரைட். நான் காமெடியிலே ஒருவேளை வெற்றியடைஞ்சா அந்த வெற்றியை அவருக்குதான் அர்ப்பணிக்கிறேன் என்றார் விஷால்.

த்ரிஷா, நயன்தாராவுடன் காதல் பற்றிய வழக்கமான கேள்விகளுக்கு, 'பேசி பேசி எனக்கே போரடிச்சுருச்சு. விட்ருங்க சார்' என்றார் பரிதாபமாக. அடுத்து பூபதி பாண்டியன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம்.

Monday, May 11, 2009

மணிரத்னத்தின் ருக்மணி


நெஞ்சுவலியிலிருந்து முழுமையாக மீண வருகிறார் மணிரத்னம். மே 20ஆம் தேதி அவர் மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராவண் படத்தை இந்தி, தமிழ் இரு மொழிகளில் எடுத்து வருகிறார் மணிரத்னம். ராவணன், அசோகவனம் என இரு பெயர்கள் தமிழுக்கு பரிசீலனையில் உள்ளன. கேரளாவின் அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பை நடத்திய மணிரத்னம், மத்தியப்பிரதேசத்தில் உள்ள கிராமத்திலும் சில காட்சிகளை எடுத்தார்.

மீண்டும் கேரளாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்குப்பின் தற்போது பூரண நலத்துடன் இருக்கிறார் மணிரத்னம். குறைந்தது ஆறு மாதங்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே ஐஸ்வர்யா ராயின் ஒரு மாத கால்ஷீட் வீணாகிவிட்டது. அதனால் வரும் 20 ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.

இது ஒருபுறம் இருக்க, தனது அடுத்தப் படத்துக்கான கதையை மணிரத்னம் தயார் செய்துவிட்டாராம். காதல் கதையான இதற்கு ருக்மணி என்று பெயர் வைத்துள்ளார். ரஹ்மான் இசையில் பாடல்களும் தயார். அமீர்கான், கரீனா கபூர் நடிப்பில் மணிரத்னம் இயக்குவதாக இருந்த லஜ்ஜோ தான் ருக்மணி என்று கூறப்படுகிறது.

வித்தகன் வில்லன்


பச்சைக்கிளி முத்துச்சரத்தில் வில்லனாக நடித்த மிலிந்த சோமன் பையா படத்தில் வில்லனாக நடிக்கிறார். அவர் நடிக்கும் இன்னொரு படம் வித்தகன்.

பார்த்திபன் ரவுத்திரன் என்ற உதவி ஆணையராக வித்தகனில் நடிக்கிறார். மிலிந்த் சோமனுக்கும், போலீஸ் அதிகாரி வேடம். அவரே வில்லனும் கூட.

வழக்கமாக மிலிந்த் சோமன் நடிக்கும் அழுத்தமான வில்லனாக இல்லாமல் காமெடி வில்லனாக அவரது கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் பார்த்திபன்.

கரடுமுரடான வில்லனை காமெடி வில்லனாகப் பார்ப்பது புது அனுபவமாக இருக்கும். வித்தியாச விரும்பி பார்த்திபனின் ஐடியா வாழ்க.

மிலிந்த் காமெடி வில்லன் என்பதால் சீரியஸ் வில்லனாக ரவிஷங்கர் நடிக்கிறார். இவர் பிரபல தொழிலதிபர்.

முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்து வருகிறார் பார்த்திபன்.

விக்ரமுக்கு பதில் கார்த்தி


தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்ட என ஹாட்ரிக் வெற்றியை ருசித்தவர் ஜி. பூபதிபாண்டியன். இறுதியாக வெளியான மலைக்கோட்டைக்குப் பிறகு நீண்ட இடைவெளி. என்ன ஆனது பூபதி பாண்டியனுக்கு?

விக்ரமை வைத்து ராஜா வேஷம் என்ற படத்தை பூபதி பாண்டியன் இயக்குவதாக சொல்லப்பட்டது. பிறகு அந்த புராஜெக்ட் கைவிடப்பட்டது. தனது தம்பியை ஹீரோவாக்கி நானும் என் சந்தியாவும் படத்தை எடுக்க திட்டமிட்டார் பூபதி பாண்டியன். கதை விவாதத்துக்குப் பிறகு அந்தப் படம் குறித்தும் தகவலில்லை.

இந்நிலையில், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் பூபதி பாண்டியன். கார்த்தி ஹீரோ. விக்ரமுக்காக உருவாக்கிய கதை இது என்பது காற்றில் கசிந்துவரும் சேதி. படத்துக்கு ராஜா வேஷம் என்று பெயர் வைத்திருப்பது, செய்தியை மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஹீரோயின் மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

விஜயகாந்தை பின்னுக்குத் தள்ளிய பசங்க

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் விஜயகாந்தை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது பாண்டிராஜின் பசங்க. தொடர்ந்து முதலிடத்தில் சூர்யாவின் அயன்.

5. மரியாதை
விக்தமனின் லாலலலா... பார்முலா காலாவதியாகிவிட்டதை மரியாதையின் வசூல் உணர்த்துகிறது. சென்ற வார இறுதியில் ஏழேகால் லட்சங்களை மட்டுமே மரியாதையால் வசூலிக்க முடிந்துள்ளது. இதுவரை சென்னையில் மொத்த வசூல் 23 லட்சங்கள்.

4. குரு என் ஆளு
இந்த காமெடி காதல் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. சென்ற வார இறுதி 3 நாள் வசூல் ஏறக்குறைய 10 லட்சங்கள். மொத்த வசூல் 38 லட்சங்கள்.

3. நியூட்டனின் 3ஆம் விதி
எஸ்.ஜே. சூர்யாவின் ஆக்சன் அவதாரத்துக்கு பரவலான அங்கீகாரம். திரைக்கதையின் புத்திசாலித்தனமே படத்தின் பலம். முதல் மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ஏறக்குறைய 12 லட்சங்கள் வசூலித்துள்ளது.

2. பசங்க
பாண்டிராஜின் படம் விமர்சகர்கள், ரசிகர்கள் இருதரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது. வரும் நாட்களில் வசூல் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. சென்னையில் முதல் மூன்று நாள் வசூல் 12 லட்சத்து 30 ஆயிரம்.

1. அயன்
சூர்யாவின் படம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் தசாவதாரத்துக்கு அடுத்து அதிக வசூல் அயனுக்கே. வார இறுதியில் 43 லட்சங்களையும், மொத்தமாக சென்னையில் 5.11 கோடிகளையும் வசூலித்துள்ளது.

நடனப்புயலாக ஆசைப்படும் ஸ்ரேயா!


ஒரு படத்திலாவது முழு நீள நடன நடிகையாக நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரேயா.

ஸ்ரேயாவுக்கு இந்த ஆண்டு தமிழில் மிக முக்கியமான காலகட்டம். அவர் விகரமுடன் நடித்த கந்தசாமி, விஷாலுடன் தோரணை, சரத்குமாருடன் நடித்த ஜக்குபாய், தனுஷுடன் நடித்த குட்டி ஆகிய நான்கு மிகப்பெரிய படங்கள் வெளியாகின்றன.

இது தவிர இந்தியில் தீபா மேத்தா படத்திலும் நடித்து வருகிறார். அந்தப் படமும் இந்த ஆண்டுதான் வெளியாகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், முழு நீள நடன நடிகையாக நடிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரேயா கூறியிருப்பதாவது:

சின்ன வயசிலிருந்தே நடனம் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். முறைப்படி நடனம் கற்றுக் கொண்டேன். ஆனால் சினிமாவில் அந்த நடனத் திறமையைக் காட்ட முடியவில்லை என்ற ஏக்கம் இன்னும் உள்ளது.

இதற்காக யாராவது முழு நீள நடனப் படம் ஒன்றை எடுத்தால், சம்பளம் பற்றிக் கூட கவலைப்படாமல் நடித்துக் கொடுப்பேன் என்றார் ஸ்ரேயா.

தமிழில் கந்தசாமிக்குப் பிறகே புதுப்படங்களில் ஒப்பந்தமாகப் போகிறாராம்.

காதலுக்காக ஒரு ரயில்!


அச்சு அசலாக அப்படியே உருவாகிக் கொண்டிருக்கிறது ஜப் வீ மெட்! கண்ணுக்கு மலர்ச்சியாகவும், காதுக்கு குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஏராளமாக செலவு செய்து கொண்டிருக்கும் மோசர்பேர் நிறுவனம், லேட்டஸ்டாக ரயில்வே துறைக்கு கொடுத்த தொகையே ஒரு மினி பட்ஜெட் படத்தை தயாரிக்கும் அளவுக்கு இருக்குமாம்.

ஒரு ரயிலை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால், அதற்கு ஏராளமான பார்மாலிடிஸ் இருக்கிறது. முதலில் ஸ்கிரிப்டை ஒப்படைக்க வேண்டும். ரயில்வே துறையை களங்கப்படுத்துகிற மாதிரி எவ்வித காட்சிகளும் இருக்கக் கூடாது என்ற ஏராளமான கண்டிஷன்கள். இதெல்லாம் கூட ஈசிதான். நாளன்றுக்கு அவர்கள் கேட்கும் தொகை? 'அம்மாடியோவ்...'

அப்படியிருந்தும் சுமார் 18 நாட்கள் ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்தார்களாம். சென்னையில், ரயிலை கடத்தி மற்றொரு ரயிலுடன் இடித்த தீவிரவாதிகளின் வன்முறை சம்பவத்திற்கு முன்பே இது போன்ற காட்சிகளை எடுத்து முடித்திருக்கிறார்கள். அந்த சம்பவத்திற்கு பிறகு ரயில்வே நிர்வாகம் தனது பிடியை இறுக்கிவிட்டது. இப்போது போயிருந்தால் பர்மிஷன் கிடைத்திருக்குமா என்பதே சந்தேகமாம்! நல்லவேளையாக அந்த காட்சிகளை முன்பே எடுத்தோம் என்று சந்தோஷத்திலிருக்கிறது கண்டேன் காதலை டீம்.

ரயிலே கிடைக்காவிட்டாலும் எடுத்திருப்பார்கள். ஏனென்றால் காதலுக்குதான் அப்படி ஒரு சக்தி இருக்கிறதே!

சிம்புவின் ஆட்டோகிராஃப்! புதுமுகங்கள் தேடி ஒரு பயணம்...


'விண்ணை தாண்டி வருவாயா' படத்திற்கு பிறகு தானே டைரக்டர் ஆகப் போகிறார் சிம்பு. ஒரு ஹீரோ, மூன்று ஹீரோயின்கள் சப்ஜெக்ட்! சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஒரு ஹீரோயின். மற்ற இருவரும் புதுமுகங்கள் என்கிறது கோடம்பாக்கத்து குருவி.

ஆட்டோகிராப் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளதாம் கதை. தனது ஆரம்ப கால காதலிகளை இவர் அலட்சியப்படுத்துவாராம். அவர்களின் வேதனையை உள்ளுக்குள் ரசிப்பாராம். பிறகு வேறொரு பெண்ணுடன் இவருக்கு காதல் வருமாம். ஆனால் அவளோ, இவரை நிராகரிப்பாளாம். அப்போதுதான் தனது முந்தைய காதலிகள் நினைவுக்கு வந்து, அவர்களுக்கும் இப்படிதானே வலித்திருக்கும் என்று வருத்தப்பட்டு, அவர்களை தேடி போவாராம். அங்கே என்ன நடக்கிறது என்பது க்ளைமாக்ஸ்.

இதற்காக குறிப்பிட்ட சிலரின் முக சாயலில் உள்ளவர்களை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம். தனது உதவி இயக்குனர்களிடம், 'அவங்க' சாயலில் இருக்கிற மாதிரி இரண்டு புதுமுகங்களை தேடிட்டு வாங்கப்பா என்று உத்தரவிட, அவர்களும் ஆந்திரா கேரளா என்று அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்களாம்.

புதுமுகங்கள் கிடைத்து படம் துவங்கும்போது சில கசமுசாக்கள் எழலாம்! இப்பவே சொல்லிட்டோம்!

Sunday, May 10, 2009

இந்தி அருந்ததி - அனுஷ்காவை நிராகரித்த ஸ்ரீதேவி, போனி கபூர்


தெலுங்கில் எடுக்கப்பட்டு ஆந்திரத்தில் சக்கைப் போடு போட்டு, இப்போது தமிழிலும் கலக்கிக் கொண்டுள்ள அருந்ததீ படத்தின் நாயகி அனுஷ்காவின் கால்ஷீட்டுக்காக கோடம்பாக்கமே தவம் கிடக்கிறது. ஆனால் அவரை வேண்டாம் என தள்ளிவிட்டுள்ளது ஒரு பாலிவுட் நிறுவனம்.

அதுவும் நம்ம முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவி - போனிகபூருக்கு சொந்தமான நிறுவனம்தான் அது.

அருந்ததீயை இந்தியிலும் தயாரிக்க முடிவு செய்த போனிகபூர் - ஸ்ரீதேவி தம்பதியினர் முதலில் அனுஷ்காவைத்தான் இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயன்றனர்.

ஆனால், பாலிவுட்டுக்குப் பரிச்சயமில்லாத இவரை வைத்துப் படமெடுத்தால், படம் போணியாகாது என போனிக்கு விநியோகஸ்தர்கள் அட்வைஸ் பண்ண, இப்போது அந்த வாய்ப்பு தீபிகா படுகோனுக்குச் சென்றுள்ளது.

விரைவில் முறையான அறிவிப்பு வரும் என்கிறார் போனி கபூர். வாய்ப்பு கைநழுவியது தெரிந்து, கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், அனுஷ்கா இப்படிச் சொன்னாராம்:

'இதுக்காக அவங்கதான் வருத்தப்படணும், நிச்சயம் என்கிட்ட வருவாங்க!'

அவ்வளவு கான்பிடன்ஸ் அம்மணிக்கு, சும்மாவா, யோகா டீச்சராச்சே!

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் பிறந்த நாள் கொண்டாடிய நமீதா!


தன் தாத்தாவின் விருப்பத்துக்கிணங்க, நான்கு ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தோடு இன்று பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தார் நடிகை நமீதா.

தமிழ் சினிமாவின் கனவுக் கன்னி, கவர்ச்சிப் புயல் என ஒட்டு மொத்த பட்டங்களையும் (படங்களையும்!) குத்தகைக்கு எடுத்துக் கொண்ட நமீதாவுக்கு இன்று பிறந்தநாள்.

இந்தப் பிறந்த நாளை தமிழகம் முழுவதிலும் உள்ள நமீதா ரசிகர் மன்றத்தினர் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னையில் நமீதா ரசிகர் மன்றத் தலைவர் செல்வம் மற்றும் பிஆர்ஓ ஜான் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

கோடம்பாக்கத்தில் உள்ள காக்கும் கரங்கள் ஆதரவற்றோர் விடுதிக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி, மதிய உணவு போட்டு, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் நமீதா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

பாண்டிச்சேரியில் நமீதா ரசிகர் மன்றம் சார்பில் 7 ட்யூஷன் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வசதியற்ற மாணவ மாணவிகள் இலவசமாக ட்யூஷன் படிக்கலாம். இவர்களுக்கு தன்னார்வ அடிப்படையில் 7 ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தருகிறார்கள். இவர்கள் அனைவரும் தனி வேனில் இன்று சென்னை வந்து நமீதா பிறந்த நாள் விழாவில் பங்கேற்றனர்.

அதேபோல கோவை சோமையனூரில் அமைந்துள்ள நநீதா மாலை நேர ட்யூஷன் சென்டரில் படிக்கும் 76 குழந்தைகளுக்கு இலவச பாட- நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த மையத்துக்கு 3 கம்ப்யூட்டர்களையும் நமீதா சார்பில் வழங்கினர் செல்வம் மற்றும் பிஆர்ஓ ஜான் ஆகியோர்.

மும்பையில் நமீதா...

நமீதா இந்த முறை தனது குடும்பத்தினருடன் மும்பையில் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

இதுகுறித்து மும்பையிலிருந்த அவர் தொலைபேசியில் கூறியதாவது:

"நான் கடைசியாக என் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடியது 2005-ல்தான். அதன்பிறகு தொடர்சச்சியான படங்கள், ஷூட்டிங் காரணமாக படப்பிடிப்புகளிலேயே பிறந்த நாள் கொண்டாடி வந்தேன். என் தாத்தாவுக்கு என்மேல் அளவுகடந்த பாசம். இந்த முறை பிறந்த நாளுக்கு மும்பை வந்துவிட வேண்டும் என்று அவர் கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

அவர் வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை. அதனால் மற்ற வேலைகளையெல்லாம் தள்ளிப் போட்டுவிட்டு, குடும்பத்துடன் கேக் வெட்டி இன்று பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்தேன். இன்று வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோஷ நாளாக அமைந்து விட்டது.

என்னுடைய இந்தப் பிறந்தநாளை சென்னையில் அர்த்தமுள்ளதாக நண்பர்களும் என் ரசிகர் மன்றத்தினரும் கொண்டாடியுள்ளனர். ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு என்னாலான உதவியை தொடர்ந்து செய்வேன். எனக்கு வாழ்த்துச் சொன்ன உள்ளங்களுக்கும், பிறந்த நாளைச் சிறப்பாக ஏற்பாடு செய்தவர்களுக்கும் என் நன்றி," என்றார் நமீதா

கட்சி பிரச்சாரமா? கதறி ஓடுகிறார் ஆர்யா!


'யாருய்யா இப்பிடி கௌப்பிவிட்டது'ன்னு கொதிக்கிறாரு ஆர்யா! வேறொன்றுமில்லை, ஜே.கே.ரித்திஷ¨க்கு ஆதரவா ராமநாதபுரம் தொகுதியிலே இவரு பிரச்சாரம் பண்ண போறதா போன வாரம் முழுக்க பரபரப்பான பேச்சு! அண்டார்ட்டிகாவுக்கும் அயனாவரத்துக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாம் அரசியலுக்கும் ஆர்யாவுக்கும் இடையில்! நிலைமை இப்படியிருக்க, இப்படி ஒரு செய்தி எப்படி பரவிச்சு என்பதுதான் ருத்ரனின் உக்கிரமான கேள்வி.

'தெளிவா சொல்லிடுறேன். இந்த தேர்தலில் மட்டுமல்ல, எந்த தேர்தலிலும் யாருக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்யுற ஐடியா இல்லே. தேர்தலில் ஓட்டு போடுவதோடு என்னோட வேலை முடிஞ்சுது. அதுவும் ஜனநாயக கடமையை மிஸ் பண்ண கூடாதில்லையா?' என்றார் ஆர்யா.

எலக்ஷன் இறுதிகட்டத்தை நெருங்கி வரும் இந்த நேரத்தில் இன்னும் சில செய்திகள். ரித்திஷ§க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய, நமீதாவும் அழைக்கப்பட்டாராம். தனிப்பட்ட முறையில் மரியாதை இருந்தாலும், தேர்தல், அரசியல், என்று அதற்குள் நுழைய நமீதாவுக்கு தெம்பில்லை! எனவே, 'ஆள விடுங்க சாமி' என்று ஒதுங்கிக் கொண்டாராம். ரித்திஷ் எலக்ஷன்லே நின்னா நட்சத்திரங்களை பார்க்கலாம்னு நம்பிக்கொண்டு இருந்த மக்களுக்கு, சாதாரண வையாபுரி கூட சிக்காமல் போனது அதிர்ச்சிதான்!

ஷாங்காய் திரைப்பட விழாவில் 'அச்சமுண்டு அச்சமுண்டு'


பிரசன்னா, சினேகா நடித்து அமெரிக்காவிலேயே தயாரான படம் அச்சமுண்டு அச்சமுண்டு. என்ன அச்சமோ, தமிழகத்தில் இன்னும் படத்தை ரிலீஸ் செய்யவில்லை. ஆனால், பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு ஃபிரஷ் ஆக அனுப்பப்படுகிறது இப்படம்.

லேட்டஸ்டாக ஷாங்காயில் நடக்கும் 12 வது திரைப்பட விழாவில் இப்படத்தை திரையிட தேர்வு செய்திருக்கிறார்கள். எழுபது நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான படங்கள் போட்டியிட்டாலும், தேர்வு செய்யப்படும் படங்களோ வெறும் எழுபது மட்டுமே! அதில் ஒன்று இந்த படம்! ஏற்கனவே 'கார்டன் ஸ்டேட்' திரைப்பட விருது விழாவில் 'ஹோம் குரோன்' விருது வாங்கியிருக்கிறதாம் இந்த படம். இப்போது மேலும் ஒரு கௌரவம்.

அருண் வைத்தியநாதன் இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, படத்தின் தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர். 'தினமும் முப்பதாயிரம் பேர் பார்வையிடும் இத்திரைப்பட விழா மிக முக்கியமான திரைப்பட விழாவாகும். ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் இயக்குனர் டேனி பாய்ல் நீதிபதியாக இருந்து படங்களை தேர்வு செய்ய முன் வந்திருக்கிறார். அதுவே எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி' என்றார் அருண் வைத்தியநாதன்.

அப்படியே தமிழ்நாட்டு பக்கமும் வாங்க சார்...

'மூட்டையோ, முள்ளங்கி பத்தையோ...'


ஸ்கிரிப்ட் உருப்படியா இருந்தா யாரு வேணும்னாலும் நடிக்கலாம்ங்கறதுக்கு மற்றும் ஒரு உதாரணம் ஸெல்வன். ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, பின்பு விக்னேஷ் நடித்த 'சூரி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக ஆனவர் இவர். 'படம் நல்லாதான் இருந்திச்சு. ஆனால், ரிசல்ட்டுதான் பப்படம்'னு எல்லாரும் ஸெல்வனை ஒதுக்கி வைக்க, விடாமல் ஹீரோக்களை துரத்திக் கொண்டிருந்தார் இவரும். இவர் சொன்ன கதை ஜீவனுக்கு பிடித்துப் போனதால், 'கிருஷ்ணலீலை' என்ற படத்தை இயக்குகிற வாய்ப்பு கிடைத்தது. அதுவும் கவிதாலயா தயாரிப்பில். ஆசை யாரை விட்டது?

காலம் என்ற முரட்டு கரம் இப்போது ஸெல்வனையும் தூக்கி ஹீரோ நாற்காலியில் உட்கார வைத்திருக்கிறது. 'த்டோ, இவரு ஈரேவாண்டான்'னு கிண்டலடிச்ச மிச்ச சொச்சங்களை விட்டுவிட்டு பார்த்தால், வாழ்த்த வந்தவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் ஜாஸ்திதான்!

மூட்டைய வச்சாலும் சரி, முள்ளங்கி பத்தைய வச்சாலும் சரி, முக்காம முனகாம அட்ஜஸ்ட் பண்ணிக்கிற ஒரே எடை மிஷின் நம்ம கீர்த்தி சாவ்லாதானே? ஸெல்வன் நடிக்கும் மாக்கான் படத்திற்கும் இவர்தான் அவருக்கு ஜோடியாம். பூஜைக்கு வந்த கீர்த்தியையும், ஸெல்வனையும் பக்கத்து பக்கத்திலே வைச்சு போட்டோ கிளிக்கினார்கள் பத்திரிகையாளர்கள்.

இந்த போட்டோவை வச்சு, ஜோடி பொருத்தம்னு சொல்வாங்களா, ஜோடி வருத்தம்னு சொல்வாங்களாங்கறதுதான் பெரிய டவுட்!

Followers