Saturday, May 9, 2009

'சேது' நாயகி அபிதாவுக்கு 25ம் தேதி கல்யாணம்

சேது பட நாயகி அபிதாவுக்கு கல்யாணம் நிச்சயமாகியுள்ளது. மே 25ம் தேதி கோட்டயத்தில் கல்யாணம் நடைபெறுகிறது.

மலையாளத்தில் தேவதாசி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அபிதா. சேது படத்தின் மூலம் அவரை தமிழுக்கு கூட்டி வந்தார் பாலா. அப்படத்தில் அவருக்கு நிறைய நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் அந்த நேரம் பார்த்து தேவதாசி படத்தை தமிழில் டப் செய்து வெளியிடவே, அபிதாவின் மார்க்கெட் சரிந்தது.

இருப்பினும் டிவி[^] சீரியல்கள் அவருக்கு கை கொடுத்தன. தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார் அபிதா. திருமதி செல்வம், தங்கமான புருஷன் ஆகிய தொடர்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அபிதாவுக்கு திருமணம்[^] நிச்சயமாகியுள்ளது. அவரை மணக்கப் போகும் மாப்பிள்ளையின் பெயர் டி.ஜார்ஜ். கேரளாவைச் சேர்ந்தவர். கோட்டயத்தில் ஒரு கெமிக்கல் கம்பெனியில், தலைமைக் கணக்காளராக இருக்கிறார்.

இவர்களது திருமணம்[^] பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட ஒன்று. வருகிற 25ம் தேதி கோட்டயம், பசிராவில் உள்ள செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க சர்ச்சில் நடைபெறுகிறது.

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து டிவி[^] சீரியல்களில் நடிப்பாராம் அபிதா.

ஈழத் தமிழர்களுக்கு வி்ன்பிரே உதவ வேண்டும்-பாடகி எம்.ஐ.ஏ


நியூயார்க்: இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் கொடூரமான இனப்படுகொலை, இலங்கை அரசு நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல், தமிழர்களின் துயரங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவ வேண்டும் என உலக டாக் ஷோக்களின் முன்னோடியான ஓப்ரா வின்பிரேக்கு இங்கிலாந்தில் பிறந்த, இலங்கைத் தமிழ்ப் பெண்ணான பிரபல பாடகி எம்.ஐ.ஏ. (மாதங்கி அருள் பிரகாசம்) கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த மாதங்கி பிரபல பாடகியாவார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திலும் இவர் பாடியுள்ளார். இந்தப் பாடல் பேப்பர் பிளேன்ஸ் என்ற மாதங்கியின் இசைத் தொகுப்பில் இடம் பெற்றதாகும். இப்பாடலே, ஸ்லம்டாக் மில்லியனர் படத்திலும் இடம் பெற்றது.

இதேபோல பைனாப்பிள் எக்ஸ்பிரஸ் என்ற தொகுப்பையும் வெளியிட்டுள்ளார் மாதங்கி. பேப்பர் பிளேன்ஸ், கிராமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாதங்கியின் தந்தை விடுதலை[^] ப் புலிகள்[^] இயக்கத்தில் இருந்தவர். இதன் காரணமாக விடுதலை[^] ப் புலிகளுக்கு ஆதரவான கருத்தைக் கொண்டவர் மாதங்கி. தனது பாடல்களிலும் கூட விடுதலை[^] வேட்கையை வெளிப்படுத்தும் வகையிலான வார்த்தைகளை இடம் பெறச் செய்வார்.

இவரது பாடல்களில் அடிமைத்தளையிலிருந்து மீள்வது குறித்த வார்த்தைகள் கண்டிப்பாக இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள்[^] மீதான அடக்குமுறைகள், இனப்படுகொலைகள், பெண்களின் அவல நிலை குறித்து உலகத்திற்கு எடுத்துக் காட்டி அவர்களுக்கு உதவுமாறு ஓப்ரா வின்பிரேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மாதங்கி.

சமீபத்தில் டைம் இதழின் 100 சக்திவாய்ந்த மனிதர்களுக்கான விருது விழாவின்போது வின்பிரேவை சந்தித்து ஈழத்து இனப்படுகொலை குறித்து விவரித்தார் மாதங்கி.

அதுகுறித்து மைஸ்பேஸ்.காம் இணையப் பக்கத்தில் மாதங்கி எழுதியுள்ளதாவது..

நான் அவரிடம் ஈழத்து நிலைமையைக் கூறியபோது எனது இரு கைகளையும் வின்பிரே அழுத்தமாக பிடித்துக் கொண்டார். நான் சொன்னது குறித்து அவர் அக்கறை காட்டுகிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

அந்த நிகழ்ச்சியில் மிஷல் ஒபாமாவும் பேசினார். எனக்கு அவரிடம் நெருங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அவரிடமும் கூறியிருப்பேன். இல்லாவிட்டால் ஒரு காகிதத்தை அம்பாக அவருக்கு விட்டு, ஈழத் தமிழர்கள்[^] கொல்லப்படுவதை தடுத்து நிறுத்துங்கள் என்றாவது கோரியிருப்பேன்.

நிச்சயம் ஓப்ரா வின்பிரே இந்த விஷயத்தில் உதவ முடியும். அப்பாவி மக்களுக்காக உதவுங்கள் ஓப்ரா என்று உருக்கமாக கூறியுள்ளார் மாதங்கி.

விஜய்யின் 50 வது படம்-இயக்குனர் யார்?


விஜய்யின் 50வது படத்தை இயக்க 5 இயக்குநர்களை விஜய்யும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனும் ஷார்ட்லிஸ்ட் செய்துள்ளார்களாம். இவர்களில் ஒருவர்தான் இந்தப் படத்தை இயக்குவார் என்கிறது விஜய்க்கு நெருக்கமான வட்டாரம்.

தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் இந்தப் படத்தை தயாரிப்பது சந்திரசேகர் அல்ல, விஜய்க்கு திருப்புமுனை தந்த காதலுக்கு மரியாதை படம் தயாரித்த சங்கிலி முருகனின் மீனாட்சி ஆர்ட்ஸ். இளையராஜாவை இசையமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

படத்தை இயக்கப் போவது யார் என்பதை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இப்போதைக்கு ஜெயம் ராஜா, கேஎஸ் ரவிக்குமார், பேரரசு, சித்திக் மற்றும் செல்வா ஆகியோரில் ஒருவர்தான் இந்தப் படத்தை இயக்கப் போவதாகக் கூறி வந்தார்கள்.

இந்த ஐவரில் ஜெயம் ராஜாவுக்குதான் இந்த வாய்ப்பு என்று உறுதியாக கூறப்படுகிறது. ஜெயம் ராஜாவைப் பொறுத்தவரை இது பெரிய வாய்ப்பல்ல. சுமை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அவர் தொடர்ந்து 4 சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அவருக்கு திரும்பிய பக்கமெல்லாம் வாய்ப்புகள் குவிந்தாலும், எதையும் ஏற்காமல் தனது சொந்த நிறுவனத்துக்காகவே படம் செய்ய கதையைத் தயார் செய்து வைத்திருந்தார். தன் தம்பி ரவி, பேராண்மையை முடித்து வந்ததும், புதிய படம் துவங்குவதாகத் திட்டம்.

அதற்குள் விஜய் மற்றும் அவர் தந்தை ஆகியோர் அன்புத் தொல்லை செய்யவே, தட்ட முடியாமல் இந்தப் படத்துக்கு ஒப்புக் கொண்டாராம். ஆனால் அவர் போட்ட ஒரே நிபந்தனை, படத்தின் இறுதிக் காட்சி முடிந்து பூசணிக்காய் உடைக்கும் வரை, வேறு யாரும் தலையிடக் கூடாது என்பதுதான்!.

ரத்தம் சிந்தாத மாயாண்டி குடும்பம்


முதல் முறையாக பத்து இயக்குனர்கள் இணைந்து நடித்திருக்கும் படம். நாயகனாக இயக்குனர் தருண்கோபிக்கு முதல் படம். சீமான் பாடல் எழுதி அந்த பாடலுக்கு உணர்ச்சி மிக்க நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் படம்.

இத்தனை விஷயங்கள் மாயாண்டி குடும்பத்தாரில் இருக்கிறது. பத்து இயக்குனர்களை நடிக்க வைத்த ராசுமதுரவன், இப்போது இயக்குனர்கள் மத்தியல் ஸ்டார்!

மாயாண்டி குடும்பத்தார் என்ன மாதிரி படம்?

மாயாண்டி என்பவரின் குடும்பத்தைப் பற்றிய கதையே மாயாண்டி குடும்பத்தார். மாயாண்டியாக மணிவண்ணன் நடித்திருக்கிறார். அந்த குடும்பத்தின் உறவும், பகையுமே கதை. இது ஆக்சன் படம். ஆனால் ரத்தம் சிந்தாத ஆக்சன் படம்.

தருண்கோபி, தமிழரசியின் யதார்த்தமான கிராமத்து காதலும் இருக்கிறது. படம் பார்க்கிறவர்களை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்படுத்தும் என்றார் ராசு மதுரவன்.

ஆக, இன்னொரு கிராமத்து கதை தயார். பார்க்க நீங்க தயாரா?

இரண்டாம் கட்டத்தில் முரட்டு சிங்கம்


தயாரிப்பாளர்களுக்கு தலைவலி கொடுக்காத இயக்குனர் சிம்புதேவன். திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி தயாரிப்பு செலவை மிச்சப்படுத்துவதில் இவர் கெட்டி.

லாரன்ஸ், பத்மப்ரியா, லட்சுமிராய், சந்தியா, நாசர், எம்.எஸ். பாஸ்கர், மனோரமா, மெளலி என குட்டி கோடம்பாக்கமே இவரது இரும்பு கோட்டை முரட்டு சிங்கத்தில் நடிக்கிறது. இருந்தும் திட்டமிட்டபடி முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியிருக்கிறார் சிம்புதேவன்.

இரும்புகோட்டை முரட்டு சிங்கம் பதினெட்டாம் நூற்றாண்டு கெளபாய் கதை. இதற்காக பிரமாண்ட அரங்கு பாலகாட்டில் போடப்பட்டது. முதல்கட்ட படப்பிடிப்பு அங்குதான் நடைபெற்றது.

இன்னும் சில நாட்களில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. லாரன்ஸ் உட்பட அனைவரும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

கெளபாய் கதை... அதுவும் சரித்திரக் கதை... அதனை திட்டமிட்டபடி முடிக்கும் சிம்புதேவனின் திறமையை வியந்து பேசுகிறது யூனிட்.

Friday, May 8, 2009

போரை நிறுத்தாமல் சோனியா எப்போது வந்தாலும் எதிர்ப்போம் - பாரதிராஜா


சிவகாசி: இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். அதுகுறித்து பேசாமல் சோனியா காந்தி ஓட்டு கேட்டு எப்போது தமிழகம் வந்தாலும் அதை எதிர்ப்போம் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் சிவகாசியில் நேற்று காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரம் நடந்தது.

இதில் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஆர். சுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினர்.

பாரதிராஜா பேசுகையில்,

அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. எனது இனத்துக்கு ஒரு துரோகம் நடக்கிறது என்பதால் நான் இங்கு வந்தேன். இலங்கையில் அப்பாவி தமிழர்கள்[^] கொல்லப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க பல போராட்டங்களை நாங்கள் நடத்தினோம். இது மத்திய அரசின் காதுகளுக்கு கேட்கவில்லை.

இலங்கை பிரச்சினையில் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டுதான் நாங்கள் எங்களை கட்டுப்படுத்தி இருக்கிறோம். சோனியா என்ன பேசுகிறாரோ அதற்கு மன்மோகன்சிங் வாய் அசைப்பார். இலங்கை ராணுவத்தால் பிரபாகரனை தொடமுடியாது.

அதனால் தான் அவரை சார்ந்தவர்களை லட்சக்கணக்கில் இலங்கை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. அங்குள்ள தமிழர்கள்[^] மாற்று உடைகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள். உலகமே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் சோனியா மட்டும் வாய் திறக்கவில்லை.

போரை நிறுத்தி விட்டு நீங்கள் தமிழகத்துக்கு வாருங்கள் உங்களை ரத்தின கம்பளம் போட்டு வரவேற்கிறோம். அதை செய்யாமல் நீங்கள் எப்போது வந்தாலும் எங்களின் எதிர்ப்பை காட்டியே தீருவோம்.

1962-ல் தமிழகத்தில் ஒரு எழுச்சி இருந்தது. அந்த எழுச்சி தற்போது இங்கு வரவேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்று யார் சொன்னாலும் அவர்களுக்கு எங்கள் இதயத்தை கொடுப்போம் என்றார் பாரதிராஜா.

இயக்குநர்[^] ஆர்.கே.செல்வமணி பேசுகையில்,

தமிழ்நாட்டுக்கு, தமிழ் இனத்துக்கு துரோகம் செய்பவர்கள் யார் என்று சொல்லத்தான் நாங்கள் இங்கு வந்து இருக்கிறோம்.

நமது ராணுவத்தின் மீது நமக்கு வெறுப்புவர காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சிதான். இரண்டரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்றார்.

முத்துக்குமாருக்கு இரங்கல்..

சென்னையில் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமார் இறந்து நேற்றுடன் 100 நாட்களானது. இதையடுத்து நேற்றைய கூட்டத்தின்போது ஒரு நிமிடம் மெளன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

இப்போ ஹீரோ இனி டைரக்டர் : விவேக் புரமோஷன்


'வந்தா மலை போனா....' இப்படி துணிந்து இறங்கும் நம்பிக்கை நட்சத்திரங்களில் விவேக்கின் பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
கலையுலகில் காலூன்றி கால் நூற்றாண்டை தொடப்போகிறார் விவேக். சின்ன சின்ன வேடங்கள், சீர்யஸ் விஷயங்களை சிரிக்க சிரிக்க சொல்லும் காமெடியன் என விவேக்கின் கேரியரில் அடுத்தடுத்த வளர்ச்சி, பத்மஸ்ரீ வரை கொண்டு சென்றுள்ளது. நாலு வருஷத்துக்கு முன் ஹீரோ ஆசையும் உதிக்கவே 'பஞ்சு' படத்தில் ஹீரோவாகிறார் விவேக்' என விளம்பரமெல்லாம் செய்யப்பட்டது. முடிந்தவுடன் பஞ்சு டஸ்ட்பின்னில் போடப்பட்ட பொருளாய் கைவிடப்பட்டது.

இதன்பிறகு 'சொல்லி அடிப்பேன்' படத்தில் நாயகன் வேஷம் போட்டார். விவேக்கின் ஹீரோ ராசி சனி மூலையில் இருக்கிறதோ என்னவோ படம் இன்னும் வரவில்லை. நம்மளே கதை, வசனம் எழுதி ஹீரோவா நடிக்கும் படமாவது வெளிவரும் என்ற நம்பிக்கையில் அதனையும் செய்துபார்த்துவிட்டார் விவேக். சரவண சக்தி இயக்கத்தில் 'கொண்டிதோப்பு சுப்பு' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கும் விவேக் கதை, திரைக்கதை, வசனத்தையும் எழுதியுள்ளார்.

அடுத்து டைரக்ஷ்ன்தானா? விவேக்கிடம் கேட்டபோது, மறைமுகமாக ஒப்புக்கொண்டார். எப்படி? இதோ இப்படி....

"டைரக்ஷ்ன் வாய்ப்பு நிறைய வருது, ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாதுன்னு நான்தான் யோசிக்கிறேன். ஏன்னா அது பெரிய பொறுப்பு. அந்த பொறுப்புக்கு சில அனுபவங்கள் தேவை. அந்த அனுபவத்தை தெரிந்துகொண்டபிறகு அடுத்த வருஷம் ஆனாலும் ஆகும்" என்கிறார்.

கணவரின் வழியில்...


ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மறைவிற்கு பிறகு, அவரது லட்சியத்தை அணையாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் அவரது மனைவி அனீஸ். வெறும் ஒளிப்பதிவாளராக மட்டுமில்லாமல், நல்ல இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். ஜீவாவை போலவே தன்னையும் டைரக்ஷன் துறையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் அனீஸ். முத்திரை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனீசின் பேச்சு ஜீவாவின் ஆத்மாவை குளிர வைத்திருக்கும்!

திரைத்துறைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணிக்க வேண்டும் என்பது என் கணவர் ஜீவாவின் ஆசை. அதற்குள் அவர் மறைந்துவிட்டார். அவர் விட்டு சென்ற பணியை நான் தொடர்வேன். ஜீவானின் நண்பர் டைரக்டர் விக்ரம் பட். முதன் முறையாக அவருடன் இணைந்து முத்திரை படத்தை தயாரிக்கிறேன். இதையடுத்து ஒரு படத்தை நானே இயக்குகிறேன். படத்தின் பெயர் 'அதையும் தாண்டி' இதில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள் என்றார்.

இதையடுத்து பின் குறிப்பு என்ற இன்னொரு படத்தையும் விக்ரம் பட்டுடன் இணைந்து தயாரிக்கிறாராம் அனீஸ். வெற்றிகள் குவியட்டும்...

'ஜெய் ஹோ': ரஹ்மானுக்கு ரூ.1.5 கோடி!


கேரளாவில் இசை[^] நிகழ்ச்சி நடத்தியதற்காக இசை[^] யமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு ரூ.1.5 கோடி சம்பளமாகத் தரப்பட்டது.

ஆஸ்கர் விருதுகளை வென்ற இசை[^] யமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சமீபத்தில் இசை[^] நிகழ்ச்சி ஒன்று நடத்தினார்.

ஜெய் ஹோ எனும் பெயரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ரூ.7 கோடிக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. விளம்பரதாரர்கள் செலுத்திய கட்டணத்தைச் சேர்த்தால் ரூ.10 கேடியைத் தாண்டும் என்கிறார்கள்.

சர்வதேச கேரள அமைப்பு நடத்திய இந்த நிகழ்ச்சியி, பங்கேற்ற ரஹ்மானுக்கு கட்டணமாக ரூ.1.5 கோடி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் வருவாயில் ஒரு பகுதி எச்ஐவி பாதித்த குழந்தைகளின் நலனுக்காகவும், இன்னொரு பகுதி இந்தக் குழந்தைகளின் நலனுக்காக பெரிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டுவதற்கும் செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரு ஆண்டுகளுக்குள் இந்தப் பள்ளி கட்டி முடிக்கப்படும் என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் வஹாப் கூறினார்.

அமீர்கான் எனக்கு வீடு கொடுத்ததாக கூறுவது பொய் - அசின்


'அமீர்கானுக்கும் எனக்கும் காதல்[^] என்றும், அந்தக் காதல்[^] பரிசாக எனக்கு மும்பையில் வீடு வாங்கிக் கொடுத்தார் என்று கூறப்படுவது சுத்தப் பொய்', என்று கூறியுள்ளார் அசின்.

கஜினி என்ற ஒரே இந்திப் படம் மூலம் முதல்நிலை நடிகையாகிவிட்ட அசினுக்கும், அந்தப் படத்தின் நாயகன் அமீர்கானுக்கும் நெருக்கமான உறவு இருப்பதாகவும், அவரது கட்டுப்பாட்டில்தான் அசின் இருப்பதாகவும் செய்திகள்[^] கசிந்தன.

இந்த நிலையில் அசின் மும்பையில் தனி வீடு ஒன்றை பெரும் தொகைக்கு வாங்கியுள்ளார். முன்பிருந்த அபார்ட்மெண்டை காலி செய்துவிட்டு இந்த புதிய வீட்டுக்குப் போய்விட்டாராம். இந்த வீட்டை அவருக்கு வாங்கிக் கொடுத்ததே அமீர்கான்தான் என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து சமீபத்தில் அசினிடம் கேட்கப்பட்டது:

"ஏன்தான் தொடர்ந்து என்னைப் பற்றி இப்படியெல்லாம் எழுதுகிறார்களோ தெரியவில்லை. முன்பு சல்மான்கானுடன் இணைத்து எழுதினார்கள். இப்போது அமீர்கானுடன் இணைத்துப் பேசுகிறார்கள். இதற்கு ஒரு முடிவே இல்லை போலிருக்கிறது.

இது என் சொந்த வீடு. நான் சம்பாதித்த பணத்தில் வாங்கியது. யாரும் எனக்கு வாங்கித் தரவில்லை. என் வசதிக்காகத்தான் மும்பையில் இருக்கிறேன். அமீர்கானுக்காக இல்லை. அவருக்கும் எனக்கும் அந்த உறவும் இல்லை. அவர் என் முதல்பட ஹீரோ, அவ்வளவுதான். அத்துடன் அதை மறந்துவிட்டேன். இப்போது லண்டன்[^] ட்ரீம்ஸில் பிஸியாக இருக்கிறேன்...." என்றார் அசின்.

டூ பீஸுக்கு' கூட கேட்கும் நமீதா


நான் சம்பளம் அதிகம் கேட்பது உண்மைதான். டூ பீஸில்தான் நான் நடிக்க வேண்டும் என நிர்பந்திப்பவர்களிடம் அதிக சம்பளம் கேட்பதில் தப்பில்லை, என்கிறார் நமீதா[^] .

நமீதா[^] அதிக சம்பளம் கேட்பதாகவும், திரைப்படங்களை விட புடவைக்கடை, நகைக்கடை திறப்புகளுக்கே அதிகம முக்கியத்துவம் தருவதாகவும் தமிழ்[^] ப் பட தயாரிப்பாளர்கள் சிலர் குற்றம்[^] சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு நமீதா[^] கூறிய பதில்:

பெரும்பாலான இயக்குநர்கள் என்னைக் கவர்ச்சியாகக் காட்டினால் போதும் என்றுதான் நினைக்கிறார்கள். யாரும் நடிக்க வைக்க முயற்சிக்கவில்லை.

புடவை கட்டிக் கொண்டு நான் நடிப்பதையே இங்குள்ளவர்கள் விரும்பவில்லை. போகிற போக்கில் நான் புடவை கட்டுவதையே மறந்துவிடுவேன் போலிருக்கிறது.

டூபீஸ் உடைகள், தொடை மற்றும் இடுப்பைக் காட்டுவது போலத்தான் காஸ்ட்யூம் இருக்க வேண்டும் என்கிறார்கள். அவர்களிடம் குறைந்த சம்பளமா கேட்க முடியும். என்னை வைத்து சம்பாதிக்கிறார்கள். அவர்களிடம் அதிக சம்பளம் கேட்பதில் என்ன தவறு என்கிறார் நமீதா[^] .

புடவைக் கடை, நகைக்கடை திறப்புக்குப் போவதில் நிறைய வருமானம் இருப்பது உண்மைதான் என்றும், ஒரு படத்தில் நடிப்பதை விட சுலபமாகவும், கண்ணியமாகவும் இருப்பதாகவும் நமீதா[^] தெரிவித்துள்ளார்.

தமிழ்[^] பட உலகில் எல்லோரும் போலியாகவே தன்னிடம் நடந்து கொள்வதாகவும் குறைப்பட்டுக் கொண்டுள்ளார்.

சொல்லிட்டீங்கல்ல... 'ப்பூ... இவ்ளோதானா... வாங்க நிஜமா பழகிப் பார்க்கலாம்னு' இனி கூப்பிடப் போறாங்க!

முத்திரை ஆடியோ வெளியீட்டு விழா


ஜீவாவின் உள்ளம் கேட்குமே படத்தில் சோடாபுட்டி கண்ணாடியுடன் காமெடி செய்வாரே ஸ்ரீநாத்… அவர் ஜீவாவின் முதன்மை அசிஸ்டெண்ட். அவர் இயக்கியிருக்கும் பட‌ம், முத்திரை.

டேனியல் பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் படம். அவருக்கு லட்சுமிராய் ஜோடி. நிதின் சத்யா - மஞ்சரி இணையும் படத்தில் இருக்கிறது. டேனியல் பாலாஜி, நிதின் சத்யா இருவரும் திருடர்களாக படத்தில் நடித்துள்ளனர். அவர்களின் காதலிகளாக லட்சுமிராய், மஞ்சரி. இந்த நால்வரும் எதிர்பாராதவிதமாக ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்வதும், அதிலிருந்து மீள்வதும் கதை.

ராக்கி சாவந்த் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். இந்தப் பால் கெயிட்டி திரையரங்கில் படமாக்கப்பட்டது. இந்திப் படவுலகின் முன்னணி தயாரிப்பாளர் மகேஷ்பட், ஜீவாவின் மனைவி அனீசுடன் இணைந்து முத்திரையை தயாரித்துள்ளார்.

படத்தின் ஆடியோ சிடி-யை மகேஷ்பட் வெளியிட கெளதம் வாசுதேவ மேனன் பெற்றுக் கொண்டார். முத்திரையை தொடர்ந்து அதையும் தாண்டி, பின்குறிப்பு ஆகிய இரு படங்களை மகேஷ்பட்டுடன் இணைந்து தயாரிக்கயிருப்பதாக அனீஸ் தெரிவித்தார்.

முத்திரைக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஆர்யா ஜோடி பிருத்திகா ராவ்


வெரைட்டியான ரோல்களில் நடிப்பதென தீர்மானித்திருக்கிறார் ஆர்யா. நான் கடவுளில் இதுவரை தமிழ் ஹீரோ யாரும் நடித்திராத அகோரி கேரக்டர்.

அடுத்து வெளிவரயிருக்கும் சர்வம் காதலும் திகிலும் கலந்த படம். புதிய ஆர்யாவை இதில் பார்க்கலாம் என்று அடித்து கூறுகிறார் விஷ்ணுவர்தன். அதையடுத்து விஜய்யின் மதராசப்பட்டிணம். சுதந்திர காலகட்டத்து கோபக்கார இளைஞனாக நடிக்கிறார் ஆர்யா.

தெலுங்கில் குணசேகர் இயக்கும் படத்தில் ஆர்யாவுக்கு வில்லன் வேடம். வெரைட்டியான ரோல்களுக்கு நடுவில் லவ் ஸ்டோரி ஒன்றுக்கும் கால்ஷ‌‌ீட் கொடுத்திருக்கிறார். தாம் தூம் படத்தில் ஜீவா முடிக்காமல்விட்ட பகுதிகளை இயக்கிய மணிகண்டன் அடுத்து இயக்கும் படம் சிக்கு புக்கு. ஆர்யா ஹீரோ. இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் ஸ்ரேயா. இன்னொருவர் பிருத்திகா ராவ்.

பிருத்திகா ராவ் தமிழுக்கு புது வரவு. படத்தின் முக்கியமான காட்சிகள் சிலவற்றை ஆஸ்திரியாவில் எடுக்கிறார்கள். படத்தைப் பற்றி கூறிய மணிகண்டன், ஆர்யா, ஸ்ரேயா, பிருத்திகா ராவ் என 3 பேர் இருந்தாலும் இது முக்கோண காதல் கதையல்ல என்றார்.

பையா பைட்!


சத்தமில்லாமல் தயாராகி வருகிறது லிங்குசாமியின் பையா. கலக்கலான காஸ்ட்யூமில் படத்தின் ஹீரோ கார்த்தி வந்தாலும் கரடுமுரடான ஆக்சன் காட்சிகள் படம் நெடுக இருக்கிறதாம்.

கனல் கண்ணன் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர். ஒரு குறிப்பிட்ட சண்டைக் காட்சிக்காக பத்து நாட்கள் பயிற்சி எடுத்திருக்கிறார் கார்த்தி. பயிற்சியே பத்துநாள் என்றால் பைட் எப்படியிருக்கும் என கற்பனை செய்து கொள்ளுங்கள்.

படத்தின் மெயின் வில்லன் மிலிந்த் சேமன். பச்சைக்கிளி முத்துச்சரத்தில் சரத்குமாரை சித்திரவதை செய்யும் அதே ஆள்தான். பையா மிலிந்துக்கு இரண்டாவது தமிழ்ப் படம். தமிழ் ஆர்வலர்கள் பாராட்டும் ஒரு வேலையை இந்தப் படத்தில் செய்திருக்கிறார் லிங்குசாமி.

தமிழ் அதிகம் தெரியாத மிலிந்த் சோமனை சொந்தக் குரலில் டப்பிங் பேச வைத்திருக்கிறார். வடநாட்டு வில்லன் என்பதால் குரலும், மாடுலே­சனும் சரியாக பொருந்திப் போனதாம்.

அப்படியே படத்தின் ஹீரோயின் தமன்னாவையும் தமிழ் பேச வைத்தால் செம்மொழிக்கு செய்த தொண்டாக இருக்கும்.

சிம்பு, ஜெயம் ரவியை ஓழிப்பேனா?


திருட்டுப்பயலே, சந்தோஷ் சுப்ரமணியம்னு வசமா 'கல்லா' கட்டின கல்பாத்தி அகோரம், அடுத்த வசூலுக்கு தயாராகிவிட்டார். 'மாசிலாமணி' என்ற படம்தான் இவரது அடுத்த ரிலீஸ். 'எனக்கெல்லாம் ஐடியாவே இல்லே. திடீர்னு என்னை கூப்பிட்ட அகோரம் சார், உலகத்திலே எந்த நாட்டுக்கு போகணும்னு விருப்பம் இருக்கோ, போங்க! இரண்டு பாடல் காட்சிகளை அங்கதான் எடுக்கிறோம்னாரு. இப்படி கேட்பதை மட்டுமில்லே, கேட்காமலும் கொடுக்கிற தயாரிப்பாளர் கிடைச்சதுதான் எனக்கு பெரிய சந்தோஷம்' என்றார் மாசிலாமணி படத்தின் இயக்குனர் ஆர்.என்.ஆர்.மனோகர். நகுல்-சுனைனா இணையும் இரண்டாவது படம் இது.

இந்த வாய்ப்பை சுனைனாவுக்கு வாங்கி கொடுத்ததே நீங்கதானாமே? உங்களுக்கும் சுனைனாவுக்கும் லவ்வு இருப்பது நிஜம்தானா? எப்போ கல்யாணம்? இப்படி கோக்கு மாக்கா கேள்வி கேட்டு, குய்யோ முய்யோன்னு அலற விட்டுட்டாங்க நகுலை! நெஞ்சிலே கைய வச்சு 'ஐயோ சாரு... என்னோட பிரண்டுங்க அவங்க. நான் என்னோட கேரியரைதான் லவ் பண்றேன். இப்போதான் வளர்ந்துகிட்டு இருக்கேன். இப்போ போயி லவ்வு கிவ்வுன்னு விழுந்தா வாழ்க்கை என்னாவறது? விட்ருங்க பாஸ்'னு எஸ்கேப் ஆனார் நகுல்!

சிம்பு, ஜெயம் ரவியையெல்லாம் ஒழிச்சிட்டுதான் உட்காருவேன்னு சபதம் போட்டுருக்கீங்களாமே? இது அடுத்த கேள்வி. இப்போ நிஜமாகவே தடுமாறிப் போனார் நகுல். 'ஸார்... என்னைய மாட்டி விடணும்னே கேட்கிறீங்களே, அவங்க என்னோட பிரண்ட்ஸ் மட்டுமில்லே, சீனியர்ஸ். அவங்களை மாதிரி வளருனும்னு நினைக்கிறேன். அதுக்காக அவங்களை ஒழிச்சிடுவேன்ங்கிறதெல்லாம் டூ மச். யாரோ உங்ககிட்டே தப்பா போட்டுக் கொடுத்திருக்காங்க போலிருக்கு' பதறியடித்துக் கொண்டு பதில் சொன்னார் நகுல்.

அடித்தட்டு ஹீரோ, பணக்கார பெண்ணை காதலிக்கிற கதைதான். அதை சொல்ற விதத்திலேதான் நாங்க வித்தியாசப்பட்டிருக்கோம் என்ற நகுல், காதலில் விழுந்தேன் சாயலில் இல்லாம முற்றிலும் வேறுபட்ட ஸ்டைலில் நடிச்சிருக்காராம். நம்புறோம்!

Thursday, May 7, 2009

ஆஸ்திரியாவுக்கு போகும் 'சிக்குபுக்கு'


அட இந்தியாவிலிருந்து ஆஸ்திரியாவுக்கு ரெயில் விட்டுட்டாங்களா...? என நீங்கள் ஆச்சர்யப்படுவதற்குள், சிக்குபுக்கு என்பது ரெயில் அல்ல படத்தின் தலைப்பு என்பதை தெரிந்துகொள்ளவும்.

ஆர்யாவும்-ஸ்ரேயாவும் ஜோடிபோடும் படம்தான் 'சிக்குபுக்கு'. மணிகண்டன் இயக்கும் இப்படத்தில் இன்னொரு நாயகியாக ப்ரித்திக்கா ராவ் நடிக்கிறார். நகர்புறத்தில் நடக்கும் யதார்த்தமான காதல் கதையாம் இது. ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, ஹரிஹரன்-லெஸ்லி இசையமைக்கின்றனர்.

படத்துல புதுசா என்ன பண்ணப்போறீங்க? மணிகண்டனிடம் கேட்டோம்.

"சிக்குபுக்கு என்றாலே ரெயில்தான் கண்முன் நிற்கும். படத்தில் காதலுக்கும் ரெயிலுக்கும் தொடர்பு இருப்பதால் இப்படியொரு தலைப்பை வைத்தேன். படத்துல இரண்டு ஹீரோயின் இருப்பதால் முக்கோண காதல் கதை என்று நினைத்துவிடவேண்டாம். கால்வாசி கதை ஆஸ்திரியாவில் படமாக்கப்படவுள்ளது.

19 நாட்கள் அங்கு படப்பிடிப்பை நடத்தப்போகிறோம். இதுவரை எந்தவொரு தமிழ் படமும் அந்நாட்டில் படமாக்கப்படவில்லை. லொகேஷன் புதுசா இருக்கவேண்டும் என்பதற்காக அந்த நாட்டை தேர்வு செய்தோம்" என்றார்.

விஜயலட்சுமியின் ப்ரீஸ்டைல்


அன்னம் அசைவம் சாப்பிட்டா எப்படியிருக்கும். அப்படியிருக்கிறது விஜயலட்சுமியின் திடீர் கிளாமர் அவதாரம்.

‘சென்னை 28’, ‘அஞ்சாதே’ படங்களில் போர்த்திக்கொண்டு நடித்தவர் விஜயலட்சுமி. “அகத்தியனின் பொண்னுப்பா இது. கிளாமரால்லாம் நடிக்க சான்ஸே இல்லை” என பெட்டு கட்டிய வாய்களையெல்லாம் பிணாயில் ஊற்றி கழுவவைத்துவிட்டது அவரது திடீர் கிளாமர் பிரவேசம்.

‘சுல்தான் தி வாரியர்’ படத்துக்காக எடை குறைத்து இடை காட்ட தொடங்கியவர், கிருஷ்ணா ஜோடியாக நடிக்கும் ‘கற்றது களவு’ படத்தில் இன்னும் ‘தாராளம்’ காட்டியுள்ளாராம். படத்தில் அவருக்கு விமான பணிப்பெண் வேடம். எனவே படம் முழுவதும் மார்டன் உடைகளை அணிந்து நடிக்கிறாராம்.

ஆள் கால், ஆடை பாதி என முக்கால் அளவுக்கு வந்துவிட்டவருக்கு முழுசாய் மாறுவதற்கு தேவைப்பட்டது ஸ்டைலான நடைப்பயிற்சி. இதற்காக தனியார் நிறுவனம் நடத்தும் ப்ரீ ஸ்டைல் கோர்ஸ் படித்து வருகிறாராம். கூடுதல் கோச்சிங்காக ஹிப் ஹாப் ஸ்டைலும் கற்றுக்கொண்டு வருகிறாராம்.

“நான் ரொம்ப அடக்கமான பொண்ணு. இப்போ சினிமாவுக்கு தேவைப்பட்டதால் இதையெல்லாம் கற்றுக்கொண்டு வருகிறேன். சின்ன வயசிலிருந்தே பாத்ரூம் பாடகியாக வளர்ந்த எனக்கு சினிமாவில் பாடும் ஆசையும் இருக்கு. எனவே முறைப்படி சங்கீதமும் கற்றுக் கொள்வேன்” என்கிறார்.

பாட்டு லீக் : பதட்டத்தில் விஜய், சிம்பு பட நிறுவனங்கள்


டென்ஷனா இருக்குற நேரம் பாட்டுக் கேட்டா ரிலாக்ஷ் ஆகும்னு சொல்லுவாங்க. ஆனால் விஜய், சிம்பு படங்களை தயாரிக்கும் நிறுவனங்களோ பாட்டை கேட்டுட்டு டென்ஷனாகிவிட்டதாம். கோடிக்கணக்கிலே செலவு செய்யும் படத்தோட பாட்டு திருட்டுத்தனமா வெளிவந்தா டென்ஷன் இருக்காதா பின்ன...

இணையதள ஆர்வளர்களின் காதுகளில் ஓசியில் ரிப்பீட்டாகிக் கொண்டிருக்கிறது விஜய்யின் 'வேட்டைக்காரன்', சிம்புவின் 'விண்ணைத்தாண்டி வருவாயா' பாடல்கள். விஜய் ஆன்டனி இசையில் 'வேட்டைக்காரன்' படத்தில் இடம்பெறும்

"வேட்டாக்காரன்டோய் வேட்டைக்காரன்டோய்...
வேட்ட வேட்ட வேட்ட வேட்ட
வேட்டைக்காரன்டோய்...
வேட்டைக்காரன் பரம்பரைடா
வேட்டையாட வர்ரேன்டா...
வெட்டறுவா ஆயுதம்டா
வேங்கைபோல பாயுவேன்டா..." என்ற பாடல் லீக்காகியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது.

"அன்பே என் காதலனே
நெஞ்சுக்குள்ள பூமகனே
அன்பே காமுகனே
உன்னை காண துடிக்குது என் மனமே..." என்ற பாடலும்

"எந்தன் நெஞ்சில் அற்புதம்
உன்னை பார்த்த மறுகணம்
உன்னை பார்த்த மறுகணம்
காதல் சொல்ல துடிக்குது..." என்ற பாடலும் வெளியாகியுள்ளது.

ஆடியோ சிடிக்கள் தயாராகும் முன்பே இந்த பாடல்கள் எப்படி வெளிவந்தது என்று புரியாமல் முடியை பிய்த்துக் கொள்கின்றன பட நிறுவனங்கள்.

மாட்டிக்கொண்ட சிம்பு


இவ்வளவு நாள் தப்பியோடிய நடிகர் சிம்பு இப்போது நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அவரின் தந்தை விஜய டி. ராஜேந்தரிடம் வசமாக மாட்டிக் கொண்டார். அதனால் அவருக்கு பிரச்சாரம் செய்யவும் கிளம்பிவிட்டார்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் தன் லட்சிய தி.மு.க. சார்பாக போட்டியிடுகிறார் விஜய டி. ராஜேந்தர். ஒவ்வொரு கட்சிக்கும் பல சினிமா நட்சத்திரங்கள் ஓட்டு கேட்டு செல்ல, தனக்காக தன் மகனை அழைத்தார். அவரும் கள்ளக்குறிச்சி தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்படி பிரச்சாரம் விஷயங்கள்தான் தற்போது பிரச்சனை ஆரம்பித்துள்ளது.

அதாவது, தனக்கு சோனியா காந்தி, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மட்டும்தான் அரசியலில் தெரியும், மற்ற யாரையும் எனக்குத் தெரியாது. அப்படி தெரிந்துகொள்ளும் அவசியமும் எனக்கில்லை என்றிருக்கிறார். இதனால் கடுப்பான மற்ற சில தலைவர்கள் சிம்புவின் கார் மோதிய கேஸை மீண்டும் தூசு தட்டலாமாக என்று யோசித்து வருகின்றனர்

நாயகனாக இன்னொரு இயக்குனர்

திரைப்படக் கல்லூரி மாணவரான செல்வம் தற்போது ஸெல்வன் என்று மாற்றிக் கொண்டார். காரணம் இயக்குனர் ஷங்கரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர். அதனால் ஷங்கர் 'ச'க்கு பதிலாக 'ஷ' போட்டதும், தன் 'செ' வை 'ஸெ' என மாற்றிக் கொண்டார்.

அதேபோல், எஸ் பிலிம்ஸ் என்று ஷங்கர் கம்பெனி ஆரம்பித்ததும் ஸெல்வன் எஸ் ஸ்டுடியோ என்று ஒரு ஸ்டுடியோ ஆரம்பித்தார்.

இப்படி பெயர் மாற்றி முதலில் எடுத்த படம் 'சூரி'. அது எதிர்பார்த்த அளவுக்குப் போகாததால் நீண்ட இடைவெளிக்குப் பின் கவிதாலயாவுக்காக 'லீலை' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதையடுத்து தற்போது கதாநாயகனாகவும் உயர்ந்துவிட்டார்.

ஐடியாஸ் சினிமா தயாரிக்கும் படம் 'மாக்கான்'. இந்தப் படத்தில் நடிக்க பல நடிகர்களையும் அணுகியிருக்கிறார் இப்பட இயக்குனர் முரளிசாமி. யாரும் நடித்த முன்வராத காரணத்தால் இறுதியாக ஸெல்வனை ஹீரோவாக்கிவிட்டார்.

அதேபோல, இவருக்கு ஜோடியாக நடிக்க வேதிகா, காம்னா போன்றவர்களும் நடிக்க ஒப்புக்கொள்ளாததால் தற்போது கீர்த்தி சாவ்லா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்டிமெண்டில் விஜய்யின் 50வது படம்


நடிகர் விஜய்யின் 50வது படத்தை யார் யாரோ இயக்கப் போவதாகவும், தயாரிக்கப் போவதாகவும் தினம் ஒரு செய்தி வந்து கொண்டிருந்தன.
ஆனால், தற்போது சங்கிலி முருகன் தயாரிக்கிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது. இவர் ஏற்கனவே விஜயை வைத்து 'காதலுக்கு மரியாதை' என்ற படத்தை தயாரித்தவர். விஜய் ஒரு சிறந்த நடிகர் என்று அனைவராலும் ஒப்புக்கொள்ள வைக்கப்பட்ட படமும் ஆகும்.

இப்படத்தை இயக்கப் போவது ஜெயம் ராஜா. மேலும் சங்கிலி முருகன் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் படமான 'அழகர் மலை' படத்தின் இயக்குனர் எஸ்.பி. ராஜ்குமார்தான் விஜயின் 50வது படத்துக்கு வசனம் எழுதவிருக்கிறார். இவர் ஏற்கனவே 'என் புருஷன் குழந்தை மாதிரி' படத்தை இயக்கியவர்.

விஜய், சங்கிலி முருகன் படத்தில் நடிக்க சென்டிமெண்டும் ஒரு காரணம். காதலுக்கு மரியாதை போல இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதற்காகத்தான்.

கவர்ச்சியே போ... போ... கதையே வா... வா...


நடிகை ஸ்ரேயா கந்தசாமி, ஜக்குபாய், தோரணை, குட்டி, பெயரிடப்படாத இரண்டு படங்கள் என ஆறு படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இருப்பினும் கவர்ச்சி காட்டி.. காட்டி அலுத்துவிட்டது. இனிமேல் கதையம்சம் உள்ள படடங்களில் மட்டுமே நடிப்பதாக இருக்கிறார். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் எல்லாப் படங்களிலும் தனக்கு முக்கியத்துவமும், நடிக்க நல்ல வாய்ப்புள்ள படமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் கிளாமரும் காட்டத்தான் வேண்டியிருக்கிறது.

போதும் இனிமேலும் போரடிக்க விரும்பாமல்... நல்ல கதாபாத்திரங்கள், நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து சிறந்த நடிகை என்ற பெயரெடுக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருக்கிறார்.

அதனால் தற்போது கதை கேட்ட மூன்று படங்களை வேண்டாமென்றிருக்கிறார். அவைகளில் தான் நினைத்தது போன்ற கதாபாத்திரம் இல்லை என்பதோடு, கிளாமராகவும் நடிக்கக் கேட்டார்கள். அதனால் மறுத்துவிட்டேன் என்கிறார். ஆனால், நம் மக்கள் ஜோதிலட்சுமி கவர்ச்சியாக ஆடினாலும் ரசிக்கிறார்களே.

போலீஸ் அதிகாரி வேடம் விஜயசாந்தியை என்னுடன் ஒப்பிடுவது பிடிக்கவில்லை -நமீதா


தமிழில் கவர்ச்சி நடிகையாக கலக்கிய நமீதா தெலுங்கில் தயாராகும் “தேச துரோகி” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இதற்காக கடும் உடற்பயிற்சி செய்து 7 கிலோ எடை குறைத்துள்ளார். சண்டை பயிற்சிகளும் கற்றுள்ளார். தமிழில் தயாரான விஜயசாந்தியின் பழைய வைஜெயந்தி ஐ.பி.எஸ். பட ரீமேக்கில் சினேகா போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் போலீஸ் “கெட்டப்” விஜயசாந்தி அளவுக்கு வருமா? என்று சந்தேகம் கிளம்பியுள்ளது. ஆனால் அவரை விட சிறப்பாக நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பதில் கவனமான இருக்கின்றனர்.

விஜயசாந்தி போல் உங்கள் நடிப்பு இருக்குமா என்று நமீதாவிடம் கேட்ட போது ஆவேசப்பட்டார். அவர் கூறியதாவது:-

முதல் தடவையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன். என்னை சந்திப்பவர்கள் விஜயசாந்தி மாதிரி நடிப்பீர்களா என்று கேட்கின்றனர். இது எனக்கு கோபத்தைதான் ஏற்படுத்துகிறது. நான் மற்றவர்கள் மாதிரி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நானாகத்தான் நடிப்பேன்.

அந்த நடிகை மாதிரி நடிக்க வேண்டும், இந்த நடிகை மாதிரி நடிக்க வேண்டும் என்று சொல்வதையெல்லாம் நான் வெறுக்கிறேன். போலீஸ் துறையில் எனக்கு ரோல் மாடல் கிரன்பேடி அவரை மனதில் வைத்துதான் இந்த வேடத்தில் நடிக்கிறேன்.

சினிமாவில் எத்தனையோ நடிகைகள் போலீசாக நடித்துள்ளனர். அவர்களை பார்த்து நான் நடிக்க மாட்டேன். குறிப்பாக மற்ற நடிகைகளுடன் என்னை ஒப்பிட்டு பேசுவதும் எனக்கு பிடிக்காத விஷயம். எத்தனையோ படங்களில் கவர்ச்சியாகவும், நீச்சல் உடையிலும் நடித்து விட்டேன். இனி போலீஸ் அதிகாரி மாதிரியான நல்ல கேரக்டர்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுப்பேன்.

ரூ. 220 கோடி கேட்டு மைக்கேல் ஜாக்சன் மீது வழக்கு

பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் தனக்கு ரூ. 220 கோடி தர வேண்டி இருப்பதாகவும், அதை பெற்று தர வேண்டும் என கோரிக்கை வைத்து ரெய்மோன் பெய்ன் என்ற பெண் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாப் உலகி்ன் மூடிசூடா மன்னராக இருந்தவர் மைக்கேல் ஜாக்சன். பாப் ஆல்பம் மூலம் கோடி கணக்கில் சொத்து சேர்த்தார். ஆனால் அவற்றை பத்திரமாக காக்க தவறிவிட்டார்.

தற்போது 50 வயதான இவர் மீண்டும் ஒரு இன்னிங்ஸ் வந்து மக்களை இசையால் மிரட்ட தாயராக இருப்பதாக சமீபத்தில் தெரிவித்தார். இங்கிலாந்தின் பிரபல ஓ2 அரங்கில் விரைவில் பாப் நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவருடைய செய்தி தொடர்பாளராக இருந்த ரெய்மோன் பெய்ன் என்ற பெண் அவர் மீது வாஷிங்கடன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், நாங்கள் இருவரும் சுமார் 5 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவருடைய கணக்குகளை மேற்பார்வையிட மற்றும் அவருக்கு ஆர்டர்களை பெற்று தந்துள்ளேன். இதற்காக அவர் எனக்கு தனக்கு வரும் பணத்தில் 10 சதவீதத்தை கொடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.

நான் அவர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். எனது முன்னாள் முதலாளியான அவர் மீது வழக்கு போடுக்கும் நிலைக்கு நான் வந்திருப்பதை நினைத்து வருந்துகிறேன். அவரிடம் இருந்து எனக்கு ரூ. 220 கோடியை வாங்கி தாருங்கள் என அதில் தெரிவித்துள்ளார்.

ஒரு பெண்மணிக்காக ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொல்வதா? - பாரதிராஜா ஆவேசம்


சென்னை: சோனியா காந்தி என்ற ஒரு பெண்மணிக்காக ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தமிழர்களின் முதல் எதிரி என்று ஆவேசமாக கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

இதுகுறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி..

நாங்கள் கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் தமிழ் மக்கள் படும் துயரத்தை கண்டித்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மத்திய அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இலங்கையில் தமிழர்கள் குண்டடிபட்டும், பட்டினியிலும் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

சிவசங்கர் மேனன் 2 முறை கொழும்பு போனார். பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ராஜபக்சேவிடம் போனில் பேசி தமிழ் மக்களை பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் இதெல்லாம் வெட்டி வேலை. யாராவது இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போனாலோ அல்லது போனில் பேசினாலோ, உடனே இலங்கை அதிபர் ஒரு அறிக்கை விடுவார் - தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியா எங்களுக்கு துணை நிற்கிறது என்பார் அவர். ஆனால் தொடர்ந்து அப்பாவிகளை, நிராயுதபாணிகளை அவர்கள் கொன்றுதான் வருகின்றனர்.

இன்றைய இந்த நிலைக்கு முழுக் காரணம் காங்கிரஸ் கட்சிதான். அதுதான் பொறுப்பு. அவர்களால் தடுத்து நிறுத்த முடியும், ஆனால் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.

காங்கிரஸ் கூட்டணி அரசுதான் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குகிறது, இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது, இலங்கை அரசு போரில் வெல்ல பணத்தையும் அள்ளித் தருகிறது.

சோனியா காந்திக்காக அவர்கள் பழி வாங்குகிறார்கள். ஒரு பெண்மணிக்காக ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறுவதை காங்கிரஸ் எதிர்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. அவர்கள் ஜனநாயக ரீதியில் எங்களுடன் மோதட்டும். எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க அவர்களுக்கு உரிமை இருக்கிறதென்றால், அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்க எங்களுக்கும் உரிமை உள்ளது. நாங்கள் வாக்கே அளிக்காதீர்கள் என்று மக்களிடம் கூறவில்லையே..

நாங்கள் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. காங்கிரஸுக்கு எதிராக மட்டுமே நாங்கள் பிரசாரம் செய்கிறோம். வேறு எந்தக் கட்சிக்கு எதிராகவும் நாங்கள் பிரசாரம் செய்யவில்லை. காங்கிரஸைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் மக்கள் வாக்களிக்கட்டும்.

ஜனநாயகத்தில் கருப்புக் கொடி காட்டுவதில் தவறே இல்லை. அது நமது எதிர்ப்பைக் காட்ட ஒரு அடையாளம். முடிந்தால் நாங்கள் கருப்புக் கொடி காட்டுவதை அவர்கள் தடுத்து நிறுத்திக் கொள்ளட்டும்.

மே 11ம் தேதி மாலை 5 மணி வரை காங்கிரஸ் எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் போய் தீவரமாக பிரசாரம் செய்வோம். காங்கிரஸ் கட்சி தமிழர்களின் எதிரி, அக்கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என மக்களிடம் கேட்டுக் கொள்வோம். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்றார் பாரதிராஜா.

வேட்டைக்காரன் பரம்பரைடா...!'.. லீக்காயிடுச்சி விஜய் பாட்டு!


தொடர்ந்து மூன்று படங்கள் சரியாகப் போகாததால் துவண்டிருக்கும் விஜய் இப்போது பார்த்துப் பார்த்து எடுத்து வரும் படம் வேட்டைக்காரன்.

ஏவிஎம் பாலசுப்ரணியன் தயாரிக்கும் இந்தப் படம் விஜய்யின் 49 வது படம். தெலுங்கு ஹாட் அனுஷ்கா ஜோடியாக நடிக்கிறார்.

இயக்குநர் தரணியின் உதவியாளர் பாபு சிவன் இயக்கும் இந்தப் படத்தின் இரண்டாவது கட்டப்படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடந்து வருகிறது.

இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்து வருகிறார். அனைத்துப் பாடல்களையும் இசையமைத்துக் கொடுத்துவிட்டாராம்.

இந்தப் படத்தில் விஜய் அறிமுகப்பாடல் குறித்து ஏக பில்ட் அப் கொடுத்து வந்தார்கள். இந்த நிலையில் அந்தப் பாடல் இன்று இணையதளங்களில் கசிந்து விட்டது.

'வேட்டைக்காரன் பரம்பரைடா...' என்று ஆரம்பமாகும் இந்தப் பாடல், வழக்கமான விஜய் பட பாடல் போலவே அமைந்துள்ளது. குத்தாட்டப் பாடல். இந்த வகைப் பாடல்தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என விஜய் கூறிவருவதால், அவரது டேஸ்டுக்கேற்ப இந்தப் பாட்டை போட்டிருக்கிறார் போலிருக்கிறது விஜய் ஆண்டனி.

விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்களும் லீக்...

இந்தப் பாடல் தவிர, ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்களும் சில தினங்களுக்கு முன் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இந்தப் படம் 25 சதவிகிதம்தான் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடனம்... கெட்ட பழக்கத்தை விடணும்! சூப்பர் நடிகரின் அட்வைஸ்!


வத்திய கொளுத்தி காதிலே சொருகிகிட்டாலும் புத்தி மணக்கவா போவுது? சொல்ல வேண்டிய அட்வைசை சொல்லியாச்சு. இனி அவர் பாடு. அவ பாடுன்னு முணுமுணுக்குகிறார் ஒரு 'ச்செல்லம்ம்ம்ம்ம்...' நடிகர்! ஆந்தைக்கு நரி நாட்டாமையா? அது கெடக்கு போங்க, விஷயத்துக்கு வருவோம்.

நடன நடிகருக்கும், நயன நடிகைக்கும் காதல்னு பால்வாடி பசங்க கூட டிஸ்கஸ் பண்ணிக்கிற அளவுக்கு விஷயம் முத்தி போச்சு. கல்யாணமே பண்ணிக்கப் போறாங்கன்னு வர்ற செய்திகள்தான் குந்துனாப்புல உட்கார வச்சு குழப்பியடிக்குது! காதல் பண்ணுங்க. கல்யாணம் எதுக்குன்னு அட்வைஸ் பண்றவங்களோட எண்ணிக்கை ஜாஸ்தி ஆனதால், நடன பார்ட்டி இப்போது சித்திரை வெயிலாக கொதிக்கிறாராம் யாரை பார்த்தாலும்.

நடிகையின் முன்னாள் 'சினேகிதர்கள்' ஆமாவான்னு நடிகைக்கே போன் போட, அங்கேயும் ஒரே புகைச்சல்! 'இந்த கலவர நிலவரத்திலே திடீர்னு சூப்பர் நடிகரு அழைக்க அங்கே போனராம் நடனம். நடிக்கப் போற இடத்திலே நாலும் நடக்கும். ஒட்டிக்கிற நேரத்திலே ஒட்டிக்கணும். வெட்டிக்கிற நேரத்திலே வெட்டிக்கணும். குடும்பம் வேற, சினிமா வேறன்னு வாழ கத்துக்கிட்டா வாழ்க்கையிலே பிரச்சனையே இல்லை கண்ணா. புர்ர்யுதா'ன்னு கேட்க, புரிஞ்சும் புரியாமலும் தலையாட்டிட்டு வந்திருக்காரு நடனம்!

ஒரே வரியிலே சொல்லணும்னா, நடனம்... கெட்ட பழக்கத்தை விடணும்!

மணிரத்னம், ஷங்கர் மாதிரி வர விருப்பமில்லை!-அமீர்


இயக்குநர்கள் மணி ரத்னம், ஷங்கர் மாதிரி இருங்கன்னு நிறையப் பேர் சொல்றாங்க. நான் அப்படியெல்லாம் ஆக விரும்பல. நான் நானாகவே இருக்க ஆசைப்படுகிறேன், என்றார் இயக்குநர் அமீர்.

எஸ் எம் ராஜூ தயாரித்து இயக்கியுள்ள வர்ணம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சத்யம் வளாகத்தில் நடந்தது. முதல் சிடியை இயக்குநர் பாலுமகேந்திரா வெளியிட, டைரக்டர் அமீர் பெற்றுக்கொண்டார்.

விழாவில் அமீர் பேசியதாவது:

நான் இந்த தியேட்டருக்குள்ள நுழையும்போதே நம்ம பத்திரிகை நண்பர்கள் என்னைப் பார்த்துச் சிரிச்சாங்க. அதுக்கு அர்த்தம் தெரியும். என்னய்யா எந்த விழாவா இருந்தாலும் வந்துடறானேன்னு நினைக்கிறாங்கன்னு எனக்கும் தெரியும்.

சில நண்பர்கள் என்னிடம், 'மணிரத்னம், ஷங்கர் போன்ற பெரிய இயக்குநர்கள் விழாக்களில் கலந்துகொள்வதில்லை. அதுமாதிரி நீங்களும் இருங்கண்ணே' என்றார்கள்.

மணிரத்னம், ஷங்கர் மாதிரி வர எனக்கு ஆசை இல்லை. அதுக்குதான் அவங்க இருக்காங்களே... நான் எதுக்கு காப்பியடிக்கணும். நான் அமீராவே இருக்க ஆசைப்படறேன்.

எம்.ஜி.ஆர்-சிவாஜி ஆகிய இருவருக்கும் முன்னோடிகள் தியாகராஜ பாகவதரும், பி.யு.சின்னப்பாவும். ரஜினிகாந்த்-கமலஹாசன் ஆகிய இருவருக்கும் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் முன்னோடியாக இருந்தார்கள். இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுக்கு ரஜினி-கமல் முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

எங்களை மாதிரி இயக்குநர்களுக்கு பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்றவர்கள் முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

இந்த மாதிரி விழாக்களுக்கு மதித்து கூப்பிடுகிறார்கள் என்றால் என்ன காரணம்... அவர்கள் நம்மீது வைத்திருக்கும் அன்பு. இன்னொன்னு கூப்பிட்டா, மதிச்சி வர்றாங்கப்பா என்ற எண்ணம். இந்த சினிமாவுல இதை சம்பாதிச்சு வெச்சிருக்கிறது எவ்வளவு பெரிய விஷயம் பாருங்க... இன்னொன்னு இந்த மாதிரி விழாக்களில்தான் பெரிய ஜாம்பவான்களைச் சந்திக்க முடியும். உதாரணத்துக்கு, மது அம்பாட் என்ற சிறந்த ஒளிப்பதிவாளரை நான் இந்த நிகழ்ச்சியில்தான் நேரிலேயே பார்த்தேன்..." என்றார் அமீர்.

வர்ணம் திரைப்பட பாடல்களை வெகுவாகப் பாராட்டிய அமீர், இப்போது நல்ல கதைகள் இருந்தால், சூப்பர் ஸ்டார்கள் இல்லாவிட்டாலும் நல்ல வசூல் கிடைக்கும் என்றார்.

இயக்குநர் பாலு மகேந்திரா பேசும்போது, வர்ணம் படப் பாடல்கள் தனது அழியாத கோலங்கள் பட நினைவுகளைக் கிளறிவிட்டதாகக் கூறினார்.

இயக்குநர்கள் எம்.சசிகுமார், சமுத்திரக்கனி, வெங்கட்பிரபு, கவிஞர் நா.முத்துகுமார், நடிகர் சம்பத், நடிகை மோனிகா, ஒளிப்பதிவாளர் மதுஅம்பாட், இசையமைப்பாளர் ஐசக்தாமஸ் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டார்கள்.

'வர்ணம்' படத்தின் இயக்குநர் எஸ்.எம்.ராஜு நன்றி கூறினார்.

ஆறுமாதம் ஓய்வு... மணிரத்னத்திற்கு மருத்துவர்கள் அட்வைஸ்!


'மணிரத்னம் யூனிட்டில் லெக் தாதா'ன்னு ஒரு நியூசை சில மாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தோம். (படிக்காதவர்கள் பின்னாடி போய் தேடிப்பார்க்கவும்) நமது 'ஞான திருஷ்டி' அப்படியே பலித்திருப்பதுதான் வேதனை! நினைத்தது மாதிரியே மணிரத்னத்திற்கு சீரியஸ் அட்டாக் வந்து அட்மிட் ஆனார் மருத்துவமனையில். முதலில் ஐசியூ வில் கடுமையாக சிகிச்சை அளிக்கப்பட்டது. நார்மல் வார்டுக்கு வந்ததும் ராவணன் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் என்று தெரிவிக்கப் பட்டாலும், மருத்துவர்களின் அட்வைஸ், 'இன்னும் ஆறு மாதங்களுக்கு ஷ§ட்டிங் போகவே கூடாது' என்பதுதானாம். (ஆனாலும், இம்மாதம் 20 ந் தேதி படப்பிடிப்பு ஆரம்பம் என்று மணிரத்னம் ஏரியாவில் இருந்து செய்திகள் கசிகிறது)

நமது லெக் தாதா இயக்கியிருந்த 'ஏப்ரல் மாதத்தில்' படத்தை தயாரித்த நிறுவனமும், அதன் தயாரிப்பாளர்களும் படத் தயாரிப்பில் இருந்தே ஒதுங்கிவிட்டார்கள். பின்பு 'புதுக்கோட்டையில் இருந்து சரவணன்' படத்தை இயக்கிய லெக் தாதா, அந்த தயாரிப்பாளரையும் பெரும் கடனாளியாக்கினார். மேற்படி படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த், தான் தயாராக வைத்திருக்கும் 'சொல்லி அடிப்பேன்' படத்தை கூட வெளியிட முடியாதளவுக்கு கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார். இவருக்கும் முடிவு கட்டிய லெக் தாதா, அடுத்து புகழ் பெற்ற விஜயா புரடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வந்தார். மெர்க்குரி பூக்கள் என்ற படத்தை தயாரித்த வகையில் பெரும் நஷ்டத்திற்குள்ளான அந்த தயாரிப்பாளர், இப்போது ஒரு படத்தை துவங்கி இரண்டே நாட்களில் ஷ¨ட்டிங்கையே நிறுத்தி விட்டார். அடுத்தும் ஒரு படத்தை இயக்கினார் லெக் தாதா. (கி.க.சா) தமிழ் பட வரலாற்றிலேயே தனது படம் ரிலீஸ் ஆவதற்கு தானே முட்டுக்கட்டையாக இருந்த ஒரே டைரக்டர் என்ற பெருமையை சம்பாதித்துக் கொண்டார் அப்படத்தின் மூலம். அப்படியும் படம் ரிலீஸ் ஆகி ஒரே வாரத்தில் டப்பா. அப்படத்தின் தயாரிப்பாளர் இன்னமும் கடன்காரர்களுக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

இறுதியாக இவர் சேர்ந்த இடம்தான் மணிரத்னம் யூனிட். சேரும்போதே "வேண்டாம் இந்த விஷப்பரீட்சை" என்று யாரும் எச்சரிக்கை செய்யாததால் மாட்டிக் கொண்டார் மணிரத்னம். இவர் போய் சேர்ந்த நேரம்தான், அவரை மருத்துவமனையில் தள்ளியது என்கிறார்கள் கோலிவுட்டில். படத்தை எடுத்த வரைக்கும் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை பார்க்கலாம் என்று நினைத்தாலும், அதற்கும் தடை போட்டிருக்கிறதாம் மருத்துவர்கள் குழு.

லெக் தாதாவின் அடுத்த விசிட், எந்த நிறுவனமோ?

ஷாரூக் கான் செக்யூரிட்டிக்கு ஆயுள் தண்டனை!


மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் மெய்க்காப்பாளர் யதீந்திர சௌஹானுக்கு மும்பை செஷன்ஸ் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.கடந்த ஆக்ஸ்ட் 16, 2006-ம் ஆண்டு மும்பையில் தனது சக ஊழியர் சந்திர பிரதாப் சிங்கை சுட்டுக் கொன்றார் யதீந்திர சௌஹான். ஷாரூக்கானின் மும்பை இல்லமான 'மன்னத்'துக்கு வெளியில்தான் இந்த கொலை நடந்தது. ஷாரூக்கும் அப்போது வீட்டுக்குள்தான் இருந்தாராம்.

டாப்ஸ் என்ற தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றினார் யதீந்திர சௌஹான். ஷாரூக்கானுக்கு அளிக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு தவிர, இந்த தனியார் நிறுவன செக்யூரிட்டியும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் ஒருவர்தான் ஆயுதமேந்திய தனியார் பாதுகாப்பு ஊழியர்.

சம்பவத்தன்று, யதீந்தர் தனது நாற்காலியிலேயே தூங்கி விட்டாராம். அப்போது வீட்டு சுற்றி காவல் காத்துக் கொண்டிருந்து சந்திரபிரதாப் சிங், "இப்படி வெட்டியாகத் தூங்குகிறாயே... நீ வைத்திருக்கும் துப்பாக்கி துருப்பிடித்துவிடப் போகிறது. அதற்கும் வேலை கொடு" என்று மிகக் கேவலமாகப் பேசிவிட்டாராம்.

அந்த ஆத்திரத்தில் துப்பாக்கியால் சிங்கை நோக்கி சுட்டுவிட்டு, 'இப்போ தெரியுதா என் துப்பாக்கி எப்படி வேலை செய்யுதுன்னு" என சினிமா பாணியில் பேசினாராம். சம்பவ இடத்திலேயே சிங் இறந்துவிட்டார்.

இதையே கோர்ட்டிலும் சொல்லியுள்ளார் சௌஹான். தன் கட்சிக்காரருக்கு கொலை செய்யும் நோக்கம் கிடையாது என்றும், யதேச்சையாக நடந்தது இது என்றும் சௌஹானின் வக்கீல் வாதாடிப் பார்த்தார்.

ஆனால் இதை ஏற்காத நீதிபதிகள், உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துள்ள ஒருவருக்கு அது எத்தகைய ஆபத்தான ஆயுதம் என்று தெரியும். பின் விளைவுகளைத் தெரிந்து கொண்டே இந்த கொலையைச் செய்துள்ள சௌஹானுக்கு ஆயுள் தண்டனைதான் சரியானது என தீர்ப்பளித்துள்ளனர்.

குப்பையிலிருந்து பாட்டு! மியூசிக் டைரக்டரின் புதுயுக்தி...


ஒரே ஒரு விஷயத்திற்காகவே 'தல' நிமிர்ந்து நிற்கலாம் சோழா கிரியேஷன்ஸ் நிறுவனம்! அமராவதி படத்தின் மூலம் அஜீத்தை திரையுலகத்திற்கு அறிமுகம் செய்தவர்களாயிற்றே! தற்போது இவர்களது தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் யாதுமாகி.

இப்படத்திலும் ஒரு புதுமுகம்தான் ஹீரோ. பெயர் சச்சின். விளம்பர படங்கள் எடுத்துக் கொண்டிருந்தவர், தயாரிப்பாளர் பொன்னுரங்கத்தை வேறொரு விஷயமாக பார்ப்பதற்கு போயிருந்தாராம். 'நடிக்கிறீயா?' என்று கேட்ட பொன்னுரங்கம், அந்த ஸ்பாட்டிலேயே ஹீரோவாக்கிவிட்டார் சச்சினை.

வழியோட போறவனை வான்னு கூப்பிட்டா, குழி பறிச்சு குப்புற தள்ளுவதைதான் மொதல் வேலையா பார்ப்பான்! (இது சினிமா புண் மொழி) ஆனால், சச்சின் அப்படிப்பட்டவரல்ல என்கிறது ஒட்டுமொத்த யூனிட்டும். ஃபைட் சீன் ஒன்றில் இவர் சுவரேறி குதித்து ஓட வேண்டுமாம். குதித்த இடத்தில் சரியான முள் ஒன்று. ரத்தம் கொட கொடவென்று கொட்ட, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறீங்களா என்றாராம் டைரக்டர் ஆர்.பாலகுமார். பரவாயில்லே, நான் ஓடுறேன் என்று கூறி வலியை தாங்கிக் கொண்டு ஓடினாராம். 'இதுவே பெரிய ஹீரோன்னா ஒரு நாள் ஷ¨ட்டிங்கே ரத்தாகியிருக்கும்' என்றார் இயக்குனர். (இவரும் ஜெயிச்ச பிறகு அதைதான் பண்ணப் போறாரு!)

சுப்ரமணியபுரம், பசங்க, ஆகிய படங்களை அடுத்து ஜேம்ஸ் வசந்தனின் மூன்றாவது படம் இது. 'நல்ல கதையாக இருந்தா மட்டுமே மியூசிக் பண்ணனும்ங்கிறதை ஒரு கொள்கையாகவே வச்சுருக்கேன். என் ஃபிரண்ட்ஸ் கூட, உனக்கு சிலையா வைக்கப் போறாங்க? பணத்தை வாங்கினோமா, மியூசிக்கை போட்டோமான்னு போக வேண்டியதுதானேன்னு அட்வைஸ் பண்ணினாங்க. ஆனால், நான் இப்படிதான்! இந்த படம் சுப்ரமணியபுரம், பசங்க மாதிரி பெரிய ஹிட் ஆகும்!' என்றார் ஜேம்ஸ் வசந்தன். பிளாஸ்ட்டிக் பாட்டில், தகர டப்பா, வாஷிங் மெஷின் மூடி போன்ற வேஸ்ட் குப்பைகளை யூஸ் பண்ணி ஒரு பாடலுக்கு மியூசிக் போட்டிருக்கிறாராம் 'யாதுமாகி' படத்திற்காக! மேலை நாடுகளில் இந்த ஸ்டைலை 'டிராஷ் மியூசிக்' என்பார்களாம்.

ஜேம்ஸ்... எதற்கும் குப்பை தொட்டியை கிளறும்போது கவனமா பாருங்க. வேற சில படங்களோட மியூசிக் கிடக்கப் போவுது?!

Wednesday, May 6, 2009

நடிகர் நீலுவுக்கு பஹ்ரைனில் "வாழ்நாள் சாதனையாளர் விருது"


நடிப்புத் துறையில் அருஞ்சாதனை புரிந்துவரும் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நீலு அவர்களுக்கு ஒரு மாபெரும் பாராட்டு விழா பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. அவருக்கு "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கப்பட உள்ளது.

வரும் 15-05-2009 ஆம் தேதி, அல் ரஜா பள்ளிக்கூட கலையரங்கில் “நீலுவின் நகைச்சுவை நேரம்” என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீலு அவர்கள் வழங்கும் நகைச்சுவை விருந்து/ கலந்துரையாடல்/ மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

நீலுவைப் பற்றி சில வார்த்தைகள் :

அறிமுகமே தேவையில்லாத அபூர்வ நடிகர் இவர்.

இவரது இயற்பெயர் R. நீலகண்டன். ஜூலை 26, 1936-ஆம் ஆண்டு பிறந்த நீலுவின் பூர்வீகம் கேரளாவிலுள்ள மஞ்சேரி எனும் ஊர். மற்றபடி படித்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். விவாகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர் V.D.Swami & Co. என்ற புகழ்பெற்ற நிறுவனத்தில் பொது மேலாளராக 40 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

நாடகத்துறை :

நடிப்பு என்பது இவரது இரத்தத்தில் இரண்டறக் கலந்தது. நாடகத்துறையில் தனது ஏழாவது வயது முதற்கொண்டே நடிக்கத் தொடங்கியவர். நடிகர் ‘சோ’வின் விவேக் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் 50 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியவர்.

சுமார் 7,000 க்கும் மேலான மேடை நாடகங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் இவர் தோன்றி சாதனை புரிந்துள்ளார். கிரேஸி மோகனின் குழுவிலும் பங்கேற்று நடித்து வருகிறார்.

சினிமாத் துறை :

திரைப்படங்களில் 1966-ஆம் ஆண்டு நடிக்கத் தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடித்து வருபவர். வெள்ளித் திரையில் இவர் தோன்றிய முதற்படம் ‘ஆயிரம் பொய்’. இதுவரை 160 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர்.

அந்நியன், பம்மல் கே. சம்பந்தம், வீராப்பு, பெரியார் போன்ற அண்மையில் வெளியான படங்களிலும் நடித்திருப்பவர். தமிழ்த்திரைப்பட உலகின் முன்னணி நடிகர்கள் சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமல் ஹாஸன், அர்ஜுன், அஜீத், சரத் குமார், பிரபு, கார்த்திக், நாகேஷ், மாதவன் போன்றவர்களுடன் இணைந்து நடித்திருப்பவர்.

தலைசிறந்த இயக்குனர்கள் பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, கே.பாலச்சந்தர், முக்தா சீனிவாசன், பாரதிராஜா, சுந்தர் சி., சங்கர் முதலானோர்களின் இயக்கத்தில் நடித்திருப்பவர்.

இவையன்றி ஒரு மலையாளம் மற்றும் தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.


சின்னத்திரை :

இதுவரை 35-க்கு மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் இவர் நடித்திருக்கிறார். தற்சமயம் இவர் நடித்து வரும் “எங்கே பிராமணன்” ஜெயா டிவியில் தினமும் (திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரம் இரவு 8.00 - 8.30 மணிக்கு) ஒளிபரப்பாகிறது.

V.P.L. (வெட்டிப் பேச்சு லீக்) கலைஞர் டிவியில் தினமும் (திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரம் இரவு 10.00 - 10.30 மணிக்கு) ஒளிபரப்பாகிறது.

சாவி எழுதிய புகழ்பெற்ற “வாஷிங்டனில் திருமணம்” என்ற நகைச்சுவைத் தொடருக்காக இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார் நீலு. 90-களில் தூ‌‌ர்தர்ஷன் தொலைக்காட்சி இத்தொடரை ஒளிபரப்பியபோது அதிக அளவில் TRP மதிப்பீடு பெற்றிருந்தது இத்தொடரின் வெற்றிக்கு ஓர் எடுத்துக்காட்டு.

அதிகம் பேசப்பட்ட மற்றொரு தொலைக்காட்சித் தொடர் மாலியின் “ப்ளைட் 172” என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வானொலி நாடகங்களில் தொடர்ந்து பங்கு பெற்று வருகிறார். கர்னாடக இசையில் பெரிதும் ஆர்வமுள்ளவர்.

இவருக்கு அர்ஜுன், பரத் என்ற பெயரில் இரண்டு மகன்கள் உள்ளனர். இல்லத் துணைவியார் திருமதி சாந்தா நீலகண்டன் சென்னையில் இயங்கும் பள்ளிக்கூடங்களில் புவியியல் ஆசிரியையாக 20 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி, சூடான், குவைத், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் முதலிய நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

மே 15, 2009 அன்று நடைபெறப்போகும் பாராட்டு விழாவில் அவருக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடம்: அல்-ரஜா பள்ளிக்கூடம், மனாமா,

பஹ்ரைன். நேரம் : மாலை : 6.30 மணி.

இந்நிகழ்ச்சிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுமதி இலவசம். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள அப்துல் கையூம் 00973-39628773/ பாரதி தமிழ்ச் சங்கம் பஹ்ரைன் அரரசாங்கத்தின் முறையான அங்கீகாரம் பெற்ற தமிழர் நலம் கா‌க்கும் ஒரு சமூக அமைப்பு.

இவன்
அப்துல் கையூம்
இலக்கியச் செயலாளர்
பாரதி தமிழ்ச் சங்கம்
பஹ்ரைன்

ஜெனிலியாவுக்கு மிரட்டல்! காதலுக்கு வந்த கத்தி...


படம் ஓடுகிறதோ, இல்லையோ, குறைந்தது எண்பது லட்சம் இருந்தால்தான் ஜெனிலியாவை தமிழில் பார்க்க முடியும் என்றாகிவிட்டது. டோலிவுட்டின் டாப் டென் லிஸ்ட்டில் ஜெனிலியாவின் பெயரும் இருப்பதால்தான் இத்தனை சம்பளம்.

சமீபத்தில் இவரிடம் கதை சொன்ன இயக்குனர் ஒருவர், சம்பளத்தை கேட்டு அதிர்ந்து போனாராம். "கொஞ்சம் குறைச்சுகிட்டா தயாரிப்பாளரிடம் பேசுவேன்" என்று கேட்டதும், மல்லிப்பூ முகத்தை கள்ளிச் செடி மாதிரி ஆக்கிக் கொண்டாராம் ஜெனிலியா. "எனக்கு தமிழ்லே என்ன வேல்யூ இருக்கு என்பதை என்னை வச்சு படம் தயாரிச்சவங்களை கேட்டுட்டு வாங்க" என்று அனுப்பி வைத்தாராம். (தவறிப்போய் சச்சின் தயாரிப்பாளரிடம் கேட்டுடாதீங்கப்பு, வசவுதான் கிடைக்கும்)

அதிருக்கட்டும், இதற்கிடையில் காதல் வலையிலும் விழுந்துவிட்டாராம் ஜெனிலியா. நடிகர் ரித்தீஷ¨க்கும் இவருக்கும் காதலாம். (ஐயோ, தமிழ்லே நடிக்கிற ரித்தீஷ் இல்லை, இவரு ஹிந்திவாலா) இந்தி படத்தில் நடிப்பதற்காக மும்பை போன இடத்தில்தான் இந்த கண்றாவி காதலும் வந்து தொலைத்தது ஜெனிலியாவுக்கு. முன்னாள் மராட்டிய முதல்வர் விலாஸ்ராவ் மகன்தானாம் இந்த ரித்தீஷ்.

தேன் கூட்டில் கையை வச்சா ஜில்லுன்னா இருக்கும்? செல்போனில் அவ்வப்போது மிரட்டல் வருகிறதாம். "இந்த காதலை கை கழுவிட்டு ஆந்திராவுக்கே ஓடு" என்பது போன்ற மிரட்டல்களால், பொண்ணு இப்போது நாலு கிலோ லாஸ்....!

ஆறடி குதிரையும், நாலடி காஸ்ட்யூமும்!


'உங்க அன்பு வேணும், அரவணைப்பு வேணும்'னு மிஸ் இந்தியாவே திக்கி திக்கி தமிழ்லே கேட்டால், தர மாட்டோம்னா சொல்லுவீங்க? மனசிலே கையை வைச்சு மானசீகமா சந்தோஷப்பட்டார்கள் ரசிகர்கள். இடம் கள்ளக்காதலன் படத்துவக்க விழா. ஆறடி குதிரை, நாலடி உயரத்தில் காஸ்ட்யூம் அணிந்திருந்தது. முழங்காலுக்கு மேலே வரை பரவியிருந்த அவரது 'சுதந்திர' வேட்கைக்கு ஒட்டு மொத்த ரசிகர்களும் 'ஓ' போட்டார்கள். முதல் பார்வையிலேயே ரசிகர்களை கவர்ந்த இந்த அரேபிய குதிரை, பிரியங்கா!

ஆந்திராவில் ஜுனியர் என்டிஆர் நடித்த 'நாகா' என்ற படத்தை இயக்கிய சுரேஷ், ரம்யா என்ற பெயரில் இந்த 'கள்ளக் காதலன்' படத்தை இயக்குகிறார். 'அவரு நினைச்சிருந்தா ஆந்திராவிலேயே பெரிய பெரிய சூப்பர் ஸ்டார்களை வச்சு வேறு படங்களை டைரக்ட் பண்ணியிருக்க முடியும். ஆனால் என்னை அழைத்து இந்த படத்திலே நடிக்க வந்திருக்கார். அவருக்கு நன்றி' என்றார் சிபிராஜ். இவருக்கு படத்தில் செம நெகட்டிவ்வான வேடமாம். 'எங்க அப்பா சத்யராஜ் யூத்தா இருக்கும்போது இந்த கதையில் நடிச்சிருக்கலாம். அவரை விட்டா நான்தான் இந்த ரோலில் நடிக்க முடியும்' என்று நம்பிக்கை வைத்தார் சிபி.

'கம்பராமாயணத்தில் வரும் அகலிகை படலத்தைதான் கள்ளக் காதலன் படமா சொல்ல முயற்சி பண்ணியிருக்கேன். கௌதம முனிவரின் மனைவியான அகலிகையை இந்திரன் களவாடிய கதைதான் இது. நல்ல இல்லறத்தின் இடையிலே நுழையுற கள்ளக்காதல் எப்படியெல்லாம் ஒருத்தனோட வாழ்க்கையை சூறையாடுது என்பதை வெளிப்படுத்தப் போறேன்' என்றார் ரம்யா! கிளுகிளு காட்சிகளுக்கு பஞ்சமிருக்காதுன்னு சொல்லுங்க!

'அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத போது...'


அந்த மூன்று பாடல்களை கேட்கிற வரைக்கும் 'வர்ணம்' படம் பற்றிய பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை நமக்கு. ஆனால்... பாடல்களை பார்த்தபின்? நிச்சயம் இது ஹிட் லிஸ்டில் இடம் பெறும் என்ற உள்ளுணர்வு மணியடித்தது.

மேடை முழுவதும் 'ஒரு தாய் மக்கள்தான்!' பாலுமகேந்திரா, அமீர், சசிக்குமார், சமுத்திரக்கனி என்று குழு தோழர்களாக கூடியிருந்தார்கள். இவர்களுடன் அமர்ந்திருந்த ஒரே 'வர்ணம்' மோனிகாதான்! 'நான் சதிலீலாவதி படத்தை இயக்கும்போது பார்த்த சின்ன பெண், இன்று வளர்ந்து யுவதியாக நிற்கிறார். படத்தில் அவரை பார்க்கும்போதுதான் நமக்கு இவ்வளவு வயசாகிவிட்டதா என்று தோன்றுகிறது. மோனிகா வாளிப்பில் நடித்த ஒரு படத்தையும் நான் பார்க்கவில்லை. அநேகமாக இந்த படத்தை பார்த்துவிடுவேன் என்று நினைக்கிறேன்' என்றார் பாலுமகேந்திரா. பின்னாலேயே பேச வந்த அமீர், 'நான் கூட காலேஜில் படிக்கும்போது மோனிகா சின்ன பெண்ணா இருந்திச்சு. அதுக்காக எனக்கு வயசாயிருச்சுன்னு அர்த்தமா? அது வேகமா வளர்ந்திருச்சுன்னு எடுத்துக்க வேண்டியதுதான். நமக்கு வயசெல்லாம் ஆகாது' என்று சொல்ல, மோனிகா முகத்தில் ஒரு வெட்கச் சிரிப்பு.

பாடலாசிரியர் நா.முத்துக்குமார், தயாரிப்பாளர் ராஜு பற்றி ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை குறிப்பிட்டார். 'இந்த படத்திற்காக பாடல் எழுதணும்னு என்னை கூப்பிட்டிருந்தாங்க. ஆனால் என்னால போக முடியாத சூழ்நிலை. என் அப்பாவை மருத்துமனையில் சேர்த்திருந்தேன். பண கஷ்டமும் இருந்திச்சு. எங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லே என்று பலரிடமும் கடன் கேட்டேன். ஆனால் யாரும் கொடுக்கலே. ராஜு நான் எதிர்பார்க்காத ஒரு தொகையை கொடுத்தார். பத்து நாட்களில் என் அப்பா இறந்தே போனார். அப்போதுதான் நான் கடன் கேட்ட பலரும், நிஜமாகவே உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம இருந்திச்சா? சில பேர் பணம் வாங்கறதுக்காக அப்படி சொல்வாங்க என்றார்கள். அந்த இக்கட்டான நேரத்தில் ராஜு செய்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்' என்றார் நெகிழ்ச்சியாக!

இப்படத்தை தயாரித்து, இயக்கவும் செய்திருக்கிறார் எஸ்.எம்.ராஜு. ஆச்சர்யம் என்னவென்றால், இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியதில்லையாம். பாடல் காட்சிகளை பார்த்தால், சூடம் கொளுத்தி சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள் ஒருவரும்!

விபச்சாரம்: மீண்டும் கன்னட பிரசாத் கைது!!


விபச்சார தடுப்புச் சட்டத்தில் கைதாகி, குண்டர் சட்டத்தில் சிறைவாசம் அனுபவித்த பின் விடுதலையாகி வெளியில் வந்த விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத் மீண்டும் கைதாகியுள்ளார். காரணம்.. 'அதே' தான்.

சென்னை மற்றும் தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் ஒன் புரோக்கராக, போலீசுக்கு தண்ணி காட்டி வந்தவர் கன்னட பிரசாத்.

திரையுலகின் முக்கிய புள்ளிகளை கைக்குள் போட்டுக் கொண்டு பிரபல நடிகைகள் தொடங்கி, துணை நடிகைகள் வரை தனது விபச்சாரத் தொழிலுக்குப் பயன்படுத்தி வந்தார்.

முதல்முறையாக கடந்த 2002ம் ஆண்டு போலீசில் சிக்கினார் கன்னட பிரசாத். குண்டர் சட்டத்தில் ஓராண்டு அடைக்கப்பட்டார்.

பிறகு ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், தலைமறைவாக இருந்தபடி, ஊருக்கு ஊர் தனது புரோக்கர்களை நியமித்து ஹைடெக்காக விபச்சார தொழிலை நடத்தினார். பெரிய தொழிலதிபர்களிலிருந்து, அரசியல் புள்ளிகள் வரை இவரது வாடிக்கையாளர்களாக இருந்ததையும், இவருக்கு திரையுலக நடிகைகளுடன் இருந்த தொடர்பு, அந்த தொடர்பை ஏர்படுத்திக் கொடுத்த சினிமாக்காரர்கள் குறித்தும் பல்வேறு செய்திகள் உலா வந்தன.

இதைத் தொடர்ந்து 2007ம் ஆண்டு கன்னட பிரசாத், அவனது கள்ளக்காதலி குஷும், 2-வது மனைவி விமலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கன்னட பிரசாத், விமலா இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். குஷும் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார்.

2008ம் ஆண்டு மே மாதம் கன்னட பிரசாத் குண்டர் சட்டம் முடிந்து விடுதலையானார்.

மீண்டும் அதே தொழிலில்...

போலீசுக்கு நன்கு பழக்கமாகிவிட்டதாலும், இந்தத் தொழிலில் கிடைக்கிற வருமானத்தின் காரணமாகவும் விபச்சாரத் தொழிலை விட முடியாத கன்னட பிரசாத், மீண்டும் தன் பழைய தொடர்புகளைப் புதுப்பித்து பரபரப்பாக பிஸினஸில் இறங்கினார்.

இந்த முறையும் நிறைய துணை நடிகைகள், மும்பை, பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரத்தில் இறங்கினார்.

இதற்காகவே தி.நகர் சிஐடி நகரில் பெரிய பங்களா எடுத்து அதில் இளம் பெண்களைத் தங்க வைத்து விபச்சாரம் நடத்தி வந்ததை, விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையிலான போலீசார் கண்டுபிடித்தனர்.

ஏற்கெனவே கன்னட பிரசாத்தின் பழைய கூட்டாளிகள் சிலரைக் கைது செய்திருந்த போலீஸ், அவர்கள் மூலமாக, தலைமறைவாக இருந்த கன்னட பிரசாத்தையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

ஏற்கெனவே நான்கு வழக்குகள் அவர் மீது போடப்பட்டிருப்பதால், இம்முறையும் கன்னட பிரசாத் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

கோலிவுட் வரும் ஹாலிவுட் 'சவுண்ட் பார்ட்டி'!


பொதுவாக கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்குப் பறக்கத்தான் திரைக் கலைஞர்கள் விரும்புவார்கள். ஆனால் குணால் ராஜன் கொஞ்சம் வித்தியாசமானவர்தான்.

இவர் ஹாலிவுட்டிலிருந்து தமிழ் திரைப்பட உலகுக்கு வர ப்ரியப்படுகிறார்.

குணால் ராஜன்?

இருப்பது அமெரிக்கா என்றாலும் புதுவை சாந்தி நகர்தான் இவருக்குப் பூர்வீகம். வயசு அப்படியொன்றும் அதிகமும் இல்லை. ஜஸ்ட் 24தான். கட்டை பிரம்மச்சாரி... ஆனால் இவரது சாதனையோ, சக தமிழனை வாய்பிளக்கச் செய்கிறது.

சவுண்ட் எஞ்ஜினீயரிங் துறையில் ஹாலிவுட்டின் மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவருக்கு சொந்தமாக பிளாக் பாக்ஸ் என்டர்டெயின்மெண்ட் என்ற பெரிய ஸ்டுடியோ ஹாலிவுட்டில் உள்ளது.

இங்குதான் இந்தி கஜினிக்கு சவுண்ட் டிசைன் செய்தார் ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி. அதுமட்டுமல்ல, இங்கு அவருக்குக் கீழ் பணியாற்றும் கலைஞர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் கிராமி போன்ற விருதுகளை வென்றவர்களாக இருக்கிறார்கள்.

அண்மையில் வெளியாகி ஹிட் ஆகியிருக்கும் 'லெய்ட் டு ரெஸ்ட்' எனும் ஹாலிவுட் படத்துக்கு குணால்தான் சவுண்ட் டிசைனராகப் பணியாற்றியுள்ளார்.

இந்தப் படத்தில் இவரது அசாத்திய திறமையைப் பார்த்த பிறகு பிரபலமான ஹாலிவுட் இயக்குநர்களில் பெரும்பாலானோர் குணாலைத் தேடி வர, இவரோ நல்ல தரமான சில தமிழ்ப் படங்களுக்கு சவுண்ட் டிசைனிங் செய்ய வேண்டும் என இங்குள்ள இயக்குநர்களை நாடுகிறார்.

இப்போதைக்கு, வெளிவரும் முன்பே சர்வதேச விருதுகளை வென்றுள்ள அச்சமுண்டு அச்சமுண்டு படத்துக்கு சவுண்ட் டிசைனராகப் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, பல நாட்கள் குணாலுடன் தங்கியிருந்து அவரது சவுண்ட் மிக்ஸிங் மற்றும் டிசைனிங் பணிகளைப் பார்த்து வியந்துள்ளார்.

அச்சமுண்டு அச்சமுண்டு படத்துக்காக இதுவரை எந்த தமிழ்ப் படத்திலும் பார்த்திராத புதிய பாணி ஒலி அமைப்பைக் கொடுத்துள்ளாராம் குணால்.

இதைத்தவிர இயக்குநர் லேகா ரத்னகுமார் ஹாலிவுட்டில் படமாக்கவிருக்கும் புதிய படத்துக்கும் சவுண்ட் டிசைனராகப் பணியாற்றவிருக்கிறார்.

"என்னதான் வெளிநாட்டில் பல விருதுகளைப் பெற்றாலும், நமது கலைஞர்களுடன் பணியாற்றுவதில் தனி திருப்தி உள்ளது. எனக்கு கமல் சார், மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும், அவர்களது படைப்புகள் மேம்பட என்னாலான பங்களிப்பைத் தரவேண்டும் என ஆசையாக உள்ளது.

குறிப்பாக புதுமைகளை எங்கிருந்தாலும் தேடித் தேடி தன் படங்களில் வைக்கும் கலைஞானியின் படங்களுக்கு எனது பாணி சவுண்ட் டிசைனிங்கைத் தரவேண்டும் என்பது தீராத விருப்பம், எப்போது அந்த விருப்பம் நிறைவேறும் என்று தெரியவில்லை, என்றார் குணால் நம்மிடம்.

கவலைப்படாதீங்க... 'கமல் சாரி'டமிருந்து நிச்சயம் உங்களுக்கு அழைப்பு வரும்!

ப்ரியா வி. இயக்கத்தில் பாவனா


கண்ணாமூச்சி ஏனடா படத்துக்குப் பிறகு ப்ரியா வி இயக்கும் படத்தில் நடிக்கிறார் பாவனா.

ஜெயம் கொண்டானுக்குப் பிறகு பாவனாவுக்கு தமிழில் வாய்ப்புகளில்லை. அவரது கவனம் முழுக்க தெலுங்கில். விரைவில் வெளிவர இருக்கும் மகாத்மா படத்தை மலைபோல் நம்பியிருக்கிறார் பாவனா.

வாய்ப்புகள் குறைந்து போனதற்கு, கிளாமராக நடிக்காததே காரணம் எ‌ன்பது இவரது விளக்கம். அதேநேரம், தெலுங்கில் வெளியான 'ஒண்ட்ரி' படத்தில் பாலியல் பலாத்கார காட்சியில் கிளாமரில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

இந்த ஏழு நிமிட 'ஏ' காட்சிக்காகவே படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்யத் துடிக்கிறார்கள். அப்படி ஏதேனும் நடந்தால் தமிழிலும் காஸ்ட்யூமை கம்மி செய்து விடுவார்களோ என்ற பயம் பாவனாவுக்கு. ஒண்ட்ரி தமிழ் பேசாமல் இருக்க என்ன செய்ய முடியுமோ அதற்க மேலாகவே செய்து வருகிறார்.

ப்ரியா வி இயக்கும் படத்தில் ப்ருத்விராஜ் ஹீரோ. அவருக்கு ஜோடி பாவனா. பாவனா அறிமுகமான 'சொப்பனக்கூடு' படத்தின் ஹீரோவும் ப்ருத்விராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபியின் கள்ளக்காதலன்


நாணயம் படத்தில் வில்லனாக தனது பகுதியை முடித்துவிட்டார் சிபி. அடுத்து இரண்டு படங்களில் நடிக்கிறார்.

நியூட்டனின் 3ஆம் விதி படத்தை தயாரித்த மெட்ரா‌ஸ் என்டர்டெயின்மெண்ட் நந்தகோபால் தயாரிப்பில் தென்னவன் இயக்குனர் நந்தகுமார் இயக்கும் சாந்து பொட்டு படத்தில் சிபி நடிக்கிறார். படத்தில் அவர்தான் ஹீரோ.

இந்தப் படத்துக்கு முன்னால் கள்ளக் காதலன் என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் அவருக்கு அமைதிப்படை சத்யராஜ் மாதிரி அல்வா கொடுக்கும் கதாபாத்திரம். விஜயா சினி என்டர்பிரைசஸ் சார்பில் எம். ஸ்ரீதரன் தயாரிக்கிறார். விநியோகஸ்தராக இருக்கும் ஸ்ரீதரன் தயாரிக்கும் முதல் படம் இது.

சிபியுடன் இன்னொரு ஹீரோவாக விஷால் ஹெக்டே நடிக்கிறார். இவர் கன்னட நடிகர். சிபி ஜோடி பிரியங்கா. இவர் புதுமுகம். ஏற்கனவே வெயில் பிரியங்கா இருப்பதால் இவருக்கு வேறு பெயர் தேடுகிறார்கள். படத்துக்கு இசை வித்யாசாகர்.

அஜித்தின் ஆறு வில்லன்கள்


வில்லன் எவ்வளவு பவர்ஃபுல்லாக இருக்கிறாரோ, அந்தளவுக்கு பிரமாண்டமாக அமையும் ஹீரோவின் பராக்கிரமம். வில்லன் தண்ணீர் என்றால் ஹீரோ தாமரை தண்டு.

இந்த சூத்திரம் தெரிந்தவர் சரண். அஜித்தை வைத்து இயக்கும் அசலில் வில்லன்களை அஜித் அளவுக்கு பலமிக்கவர்களாக செதுக்கியிருக்கிறாராம். படத்தில் அஜித்துடன் மோத இருப்பது மொத்தம் 6 வில்லன்கள்.

இந்த அரை டஜன் வில்லன்களையும் நெதர்லாந்து, துருக்கி, இத்தாலி, ஹங்கேரி என்று பறந்து சென்று பழிவாங்குகிறார் அஜித். நடுவே சமீரா ரெட்டியுடனான சஹானா சாரலும் உண்டு. இசை பரத்வாஜ்.

படம் முழுக்க வெட்டருவா மீசையுடன் வருகிறார் அஜித். இந்த புதிய தோற்றம் படத்துக்கே புதிய லுக்கை தரும் என்றார் சரண். உண்மைதான், படத்தைப் பார்த்தாலே தெரிகிறதே!

தந்தை டிஆருக்காக பிரச்சாரத்தை துவங்கினார் சிம்பு!


'எங்கப்பா ஜெயிச்சா நிச்சயம் நல்லது பண்ணுவார். அவரது 'பட்டத்தை' (டிஆரின் சின்னம்) பறக்க விடுங்க. உஙஅக கஷ்டம் பறந்துடும்' என கூறி வாக்கு சேகரித்து வருகிறார் டி.ராஜேந்தரின் மகன் சிலம்பரசன்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக தேமுதிக சார்பில் எல்கே சுதீஷ் போட்டியிடுகிறார்.

நடிகரும் டி.ஆரின் மகனுமான சிலம்பரசன், தன் தந்தைக்காக 3 நாள் கால்ஷீட் ஒதுக்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.

கள்ளக்குறிச்சி நகரில் டி.ஆருக்காக வாக்கு சேகரித்த சிம்பு, அங்கிருந்த மக்களிடையே இவ்வாறு பேசினார்:

பிரச்சாரத்தின் போது சிலம்பரசன், "எனக்கு அரசியலை பற்றி ஒன்றும் தெரியாது. நான் நடிகர். எனது அப்பாவுக்காக உங்ககிட்ட ஓட்டு கேட்டு வந்திருக்கேன். ஏற்கெனவே அப்பாவுக்கா பூங்கா நகர் தொகுதி மக்கள்கிட்ட ஓட்டுக் கேட்டேன். அப்பாவை ஜெயிக்க வச்சாங்க.

அவரும் வெற்றி பெற்று பல நன்மைகளை பூங்கா நகர் மக்களுக்குச் செய்தார். இந்த முறை கள்ளக்குறிச்சிக்கு வந்து நிற்கிறார். நீங்க ஏமாத்தமாட்டீங்க என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. அப்பாவின் தேர்தல் சின்னம் பட்டம்.

இந்த பட்டத்தை உயரப் பறக்க வையுங்க. உங்களுக்கு நன்மைகள் தேடிவரும்", என்றார் சிம்பு.

அட, நல்லாத்தான் பேசறாரு!

அண்ணன்கள்' ராமதாஸ்-வைகோ: கலக்கும் விந்தியா


நாமக்கல்: அண்ணன் ராமதாஸும், புரட்சி அண்ணன் வைகோவும், கம்யூனிஸ்டுகளும் நம்மிடம் இருக்கும்போது அதிமுகதான் வெற்றிக் கூட்டணி என்று கூறியுள்ளார் நடிகை விந்தியா.

அதிமுக சார்பில் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பட்டி தொட்டியெங்கும் விந்தியா படு தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

தனது பிரசாரத்தில் விஜயகாந்த், சரத்குமார், நேற்று தலைவரான கார்த்திக் என சகலரையும் சரமாரியாக விமர்சித்துத் தள்ளுகிறார்.

நாமக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வைரம் தமிழரசியை நேற்று ஆதரித்துப் பிரசாரம் செய்தார் விந்தியா.

கொண்டிசெட்டிப்பட்டியில் திறந்த ஜீப்பில் நின்றபடி அவர் பிரசாரம் செய்ததைக் காண ஏகப்பட்ட ரசிகர்கள், அதிமுகவினர் திரண்டு வந்து பார்த்தனர்.

மோகனூர் என்ற இடத்தில் விந்தியா பேசினார். அப்போது பணத்தை பார்த்து மயங்காதீர்கள். அதிகாரத்தை கண்டு பயப்படாதீர்கள். உங்கள் ஓட்டை முதல் வேளையாக வருகிற 13ம் தேதி காலையிலேயே உங்கள் ஓட்டை நீங்கள் போட்டு விடுங்கள்.

எப்போது அண்ணன் ராமதாஸ் அதிமுக கூட்டணியில் சேர்ந்தாரோ அப்போதே அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதி ஆகிவிட்டது.

புரட்சி அண்ணன் வைகோவும், கம்யூனிஸ்டு கட்சிகளும் நம்முடன் இருக்கும் போது நமது கூட்டணி வெற்றி கூட்டணி தான்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதன்முதலில் ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்து கழக பொருளாளராக உயர்ந்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மீண்டும் தனியாக அ.தி.மு.கவை ஆரம்பித்து தேர்தலை சந்தித்து முதல்வரானார்.

அதேபோல் புரட்சி தலைவியும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த பின்னர் முதல்வரானார். ஆனால் இன்றோ 10, 15 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து விட்டு உடனே முதல்வர் ஆக வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

முதல்வர் பதவி என்பதை கோவிலில் பிரசாதம் கேட்பதை போல் கேட்கின்றனர். திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. திமுக குடும்ப கட்சி என்றும், காங்கிரஸ் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறது என்று பேசிக் கொண்டே போனார் விந்தியா.

அபிஷேக்பச்சனின் மகன் அமிதாப்


தலைப்பை படித்து விட்டு, 'யோவ்... தப்பா எழுதிருக்கீங்கய்யா' என சவுண்ட் விடாமல் முழு செய்தியையும் படிங்க ப்ளீஸ்...

தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்கு சென்று பாலிவுட்டில் கலக்குபவர்கள் லிஸ்டில் பால்கியும் ஒருவர். இந்தியில் 'சீனிகம்' படத்தை இயக்கியவர். இப்போது 'பா' படத்தை இயக்கிவருகிறார்.. அப்பா-மகன் உறவு பற்றி விவரிக்கும் கதையில் அபிஷேக்பச்சனும், அமிதாப்பும் நடிக்கின்றனர். ஆனால் அப்பா கேரக்டரில் அமிதாப்போ, மகன் கேரக்டரில் அபிஷேக்பச்சனும் நடிக்கவில்லை.

அப்புறம்...? என ஆர்வமுடன் கேட்பவர்களுக்கு இயக்குனர் பால்கி சொன்ன கேசட்டையே திருப்பி போடுகிறோம்...

"திரைக்கதையில் ஏதாவது வித்தியாசம் காட்டவேண்டும் என்று நினைத்தேன். அதனால் அமிதாப்பின் தந்தையாக நடிக்கும் கேரக்டரை அபிஷேக் பச்சனுக்கு கொடுத்துள்ளேன். இதற்காக அமிதாப்புக்கு மேக்கப் எல்லாம் போட்டு அவரை இளைஞனாக மாற்றவில்லை. அதற்கு பதிலாக ஒரு விஷயத்தை கையாண்டிருக்கிறேன். அது சஸ்பென்ஸ்.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்தது. அடுத்து லண்டனில் படப்பிடிப்பு நடத்தப்போகிறோம். 'சீனி கம்' படத்தைத்தொடர்ந்து இந்த படத்திற்கும் இளையராஜாதான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்".

அந்த சஸ்பென்ஸ் என்ன சாமி? என்றால், டிசம்பர்வரை காத்திருக்கச்சொல்லி கழன்று கொள்கிறார் இயக்குனர்.

’சிங்கம்புலி’யாக மாரும் ஜீவா


தமிழ் இயக்குனர்கள், நடிகர்கள் இராம நாராயணனாக மாறி வருகிறார்கள். திடீரென விலங்குகள் பெயர் மீது ப்ரியப்பட ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே ‘காளை’ படத்தில் நடித்தார் சிம்பு. இப்போது சூர்யா நடித்துவரும் படத்திற்கு ‘சிங்கம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் ரமணா ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ‘குதிரை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீவாவின் புதிய படமொன்றும் சேர்ந்துள்ளது.

‘சிவா மனசுல ஷக்தி’ படத்தைத்தொடர்ந்து ஜீவா நடிக்கும் படத்தை சில்வர் லைன் புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‘சிங்கம்புலி’ என பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகியாக திவ்யா நடிக்கிரார். மற்ற நடிகர்,நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்துவருகிறது.

இப்படத்தில் முதல்முறையாக இரட்டைவேடத்தில் நடிக்கிறார் ஜீவா. அப்ப இன்னொரு ஜோடி யாரு?

'பிரச்சார பீரங்கி' குண்டு கல்யாணம் மீது கல்வீச்சு!

புதுக்கோட்டை: அதிமுக சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ராஜ. கண்ணப்பனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரசாரம் செய்து கொண்டிருந்த நடிகர் குண்டு கல்யாணம் மீது கல்வீசிய குடிகார வாலிபரை அதிமுகவினர் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு தெற்கு முக்கம் என்ற இடத்தில் தெரு முனைப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் நடிகர் குண்டு கல்யாணம்.

தனது பாணியில் உடல் குலுங்க குலுங்க மத்திய அரசையும், திமுக அரசையும் பிடித்து உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தார் கல்யாணம்.

அப்போது திடீரென ஒரு கல் கல்யாணம் அருகே வந்து விழுந்தது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது. யார் கல் வீசியது என அதிமுகவினர் அங்கும் இங்கும் பார்த்தனர். அப்போது இன்னொரு கல்லும் வந்து விழந்ததால் டென்ஷன் ஆனது.

அப்போது ஒரு வாலிபர் கல்லும், கையுமாக காணப்பட்டார். அவரைப் பிடித்து மடக்கி போலீஸாரிடம் கொடுத்தனர். விசாரணையில் கல்வீசியவர் பெயர் சக்திவேல். 26 வயதாகிறது, மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். கோவில் விழாவுக்குப் போனவர் வழியில் மது அருந்தியுள்ளார். அந்த மப்பில் வந்தவர், வழியில் குண்டு கல்யாணம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து போதையில் இரண்டு கற்களை எடுத்து வீசியது தெரிய வந்தது.

இனிமேல் இப்படியெல்லாம் செய்யப்படாது என போலீஸார் சக்திவேலை எச்சரித்து அனுப்பி விட்டனர்.

பாரதிராஜா ஒட்டுமொத்த திரையுலக தலைவரா?-முக்தா


ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்தின் தலைவர் பாரதிராஜாவா?. அவருக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் பழம் பெரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான முக்தா சீனிவாசன்.

மூத்த காங்கிரஸ் தலைவருமான அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

சினிமா டைரக்டர் பாரதிராஜா திடீரென முன்பு இல்லாத அளவுக்கு காங்கிரஸ் விரோத மனோபாவத்தில் உள்ளார். திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற ஒரு அமைப்பை தொடங்கி அதன் அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இந்தப் பெயர், முழு திரையுலகத்தையும் குறிக்கும் வகையில் உள்ளது. 62 ஆண்டுகள் சினிமா துறையில் உள்ளவன் என்ற வகையில், இந்த பெயரில் இயக்கம் தொடங்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

திரையுலகத்தின் ஒரே உரிமையாளர் பாரதிராஜாவா?. அவருக்கு யார் இந்த அதிகாரம் தந்தது?. எனவே, முதலில் பாரதிராஜா தனது அமைப்பின் பெயரை உடனடியாக மாற்ற வேண்டும். பெயரை மாற்றாவிட்டால், பெயரை மாற்றச் சொல்லி எந்தெந்த வழியில் எல்லாம் முடியுமோ அந்த வழியில் எல்லாம் நிர்பந்தம் செய்வோம். சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுப்போம்.

காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்று பிரசாரம் செய்யும் பாரதிராஜா, 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்கப் போவதாக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.

பாரதிராஜா எந்த கட்சியையும் சார்ந்தவராகவும் இருக்கலாம். யாருக்காகவும் பிரசாரம் செய்யலாம். பிடித்தவர்களுக்கு ஓட்டுப் போடலாம். ஜனநாயக நாட்டில் அது அவரது உரிமை. ஆனால், ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்தின் தலைவரைப் போல அவர் பேசுவதை ஏற்க முடியாது.

ஈழத் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே அக்கறை உண்டு. இலங்கை தமிழர்களைப் பாதுகாக்க அனைத்து வழிகளிலும் காங்கிரஸ் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

காமராஜர் கட்டி காத்த காங்கிரஸ் பேரியக்கத்தை பாரதிராஜாவால் மட்டுமல்ல அவரது அப்பா, தாத்தாவாலும் ஒன்றும் செய்ய முடியாது.

தமிழ்நாட்டிற்கு சோனியா காந்தி வரக்கூடாது என்று உத்தரவு போடுவதற்கு பாரதிராஜாவிற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றார்.

Tuesday, May 5, 2009

கதை, கேரக்டர் முக்கியம் - பிரியாமணி


கண்களால் கைது செய் படம் மூலம் தமிழில் அறிமுகமான பிரியாமணி “பருத்திவீரன்” படத்துக்கு பின் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், படங்களில் தற்போது பிசியாக நடிக்கிறார்.

மணிரத்னம் இயக்கும் “ராவணன்” படத்திலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்கனவு அது இப்போது நிறைவேறி இருக்கிறது என்றார். குறிப்பாக ஐஸ்வர்யாராயுடன் இணைந்து இதில் நடிப்பது சந்தோஷமான அனுபவம் என்றார்.

இப்படத்துக்கு பின் பிரியாமணி மவுசு உயர்ந்துள்ளது. தென்னிந்திய முக்கிய நடிகைகள் பட்டியலில் இணைந்துள்ளார்.

இதையடுத்து கதை, கேரக்டர், இயக்குனர்களின் முக்கியத்துவம் அறிந்து புதுப்படங்களில் ஒப்பந்தம் ஆகிறார். இதுபற்றி அவர் சொல்கிறார்:-

எனக்கு கதையும், கேரக்டரும் முக்கியம். இரு கதாநாயகிகள் படங்களில் நடிக்க பிடிக்காது. இது போன்ற கதைகளுடன் வந்து நிறைய பேர் என்னை நடிக்க அழைத்தனர். நான் மறுத்து விட்டேன். பருத்திவீரன் போல் வலுவான கேரக்டர் வந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன்.

தற்போது தமிழில் நினைத்தாலே இனிக்கும் படத்தில் நடிக்கிறேன். நல்ல கேரக்டர்கள் இந்திப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் ஏற்றுக்கொள்வேன்.

தி ரோடு ஹோம் - காதலின் நினைவோடை

எளிமையான, எதிர்பார்ப்பில்லாத அன்பே காதல் எனில் அதற்கு அழிவு கிடையாது. ஒவ்வொரு ‌ஜீவராசிக்குள்ளும் அந்த காதல் ஒரு தீபத்தைப்போல சுடர்ந்து கொண்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அதன் பிரகாசத்தை கண்டுகொள்ளவும், அதன் ஆத்ம சுத்தியில் கரைந்து போகவும் நம்மால் முடிவதில்லை. சுயநலமும், பேராசையும் கொடுங்காற்றாக தீபத்தை நடுங்கச் செய்கிறது. அதன் தூய்மையை பேண இயலாதவண்ணம் நம் மனங்களோ தன்னலத்தின் சாம்பல் பூத்து கிடக்கின்றன.

காதலின் தூய்மையை ஒருமுறையேனும் நீங்கள் தொட்டு உணர்ந்ததுண்டா? அதன் பிரகாசத்துக்கு கண்கள் கூச தலை குனிந்த சம்பவம்? இல்லையெனில் ஷாங் யுமுவின், தி ரோடு ஹோம் திரைப்படம் உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.

சீனாவின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வசித்த இளம் பெண்ணின் காதலைச் சொல்கிறது ஷாங் யுமுவின் இந்த திரைப்படம். சீன எழுத்தாளர் பாவோ எழு‌திய Remembrance நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சீனாவில் அறிமுகமான சினிமா அதன் முழு வீச்சை எட்ட ஏறக்குறைய எண்பது வருடங்கள் எடுத்தது. இடையில் ஏற்பட்ட கலாசார புரட்சியும், அதற்குப் பிந்தைய அரசும் கலைகளை முதலாளித்துவத்துக்கான கேளிக்கையாக கருதி அதன் எல்லைகளை பிரசாரம் எனும் வட்டத்திற்குள் சுருக்கியது. சினிமா உள்பட அனைத்து கலைகளும் எவற்றை பிரதிபலிக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டன. சோசலிஸ ஏதார்த்தவாதம் என்ற பெய‌ரில் பிரசாரத்தன்மை கொண்ட படங்கள் மட்டுமே சீன அரசால் அங்கீக‌ரிக்கப்பட்டது.

இந்த மூச்சுத் திணறலிலிருந்து சீன சினிமாவை மீட்ட ஐந்தாம் தலைமுறை இயக்குனர்களில் முக்கியமானவர் ஷாங் யுமு. இவர் பீகிங் திரைப்படக் கல்லூ‌ரியில் ஒளிப்பதிவுத் துறையில் பயின்றவர். அதுவரை சீன சினிமாவில் இருந்துவந்த கட்டுப்பெட்டியான சோசலிஸ ஏதார்த்தவாதத்துக்கு எதிரான தனித்துவமானதொரு கதைகூறு முறையை தனது படங்களில் கையாண்டார் ஷாங் யுமு. இவரது முதல் படம் Red Sorghum. இதுவரை சுமார் 18 திரைப்படங்கள் இயக்கியிருக்கும் இவரது பெரும்பாலான படங்கள் சீனாவின் விளிம்புநிலை மனிதர்களைப் பற்றியது. சீன மக்களுக்கு கல்வியின் மீதிருந்த ஆர்வமும் ஒவ்வொருவருக்கும் கல்வி எட்டப்பட வேண்டும் என்ற சீன கம்யூனிஸ்டுகளின் குரலும் இவரது படங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரசாரம் விலக்கிய காட்சியமைப்புடன் என்பது குறிப்பிடத்தக்கது.

தி ரோடு ஹோம் படத்தின் கதை நகரத்து இளைஞனொருவனின் பார்வையில் சொல்லப்படுகிறது. கிராமத்தில் ஆசி‌ரியராக வாழ்ந்து மறைந்த தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நகரத்திலிருந்து கிராமத்துக்கு வருகிறான் இளைஞன். கிராமத்தில் புதிய பள்ளிக்கூடம் கட்ட நிதி திரட்டும் பணியில் இருந்த அவனது தந்தை அதற்காக வேறு கிராமத்துக்கு சென்றபோது அங்கேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறார். அவரது உடலை வாகனத்தில் வைத்து எடுத்து வருவதை கிராமத்தில் இருக்கும் அவனது தாய் தடுத்து விடுகிறாள். சீனாவின் பழைய நம்பிக்கையின்படி, இறந்தவர்களின் உடலை சுமந்தபடி ‘பயப்படாதீர்கள், இது நீங்கள் நடந்த சாலை... உங்கள் வீட்டிற்கு செல்லும் சாலைதான்’ என்று சொல்லிக் கொண்டே வருவார்கள். இதனால் இறந்தவர்களின் ஆன்மா அவர்கள் வாழ்ந்த வீட்டை நினைவு வைத்துக் கொள்ளும் என்பது அவர்கள் நம்பிக்கை.

தாயின் விருப்பத்துக்கு மகன் ஒத்துக் கொள்கிறான். ஊர் மேய‌ரின் உதவியுடன் தந்தையின் உடலை எடுத்துவர ஏற்பாடு செய்கிறான். ஆனால், அதற்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. கிராமத்தில் உள்ள இளைஞர்கள் அதிக பணம் தரும் வேலைதேடி நகரங்களுக்கு சென்றுவிட்டார்கள். அதனால் வாடகைக்கு ஆட்கள் அமர்த்தி இறந்தவர் உடலை கிராமத்துக்கு கொண்டு வருகிறார்கள். வரும் வழியில் அவன் தந்தையின் அருமையை தெ‌ரிந்து கொள்பவர்கள் அவர் உடலை சுமந்து வந்ததற்கான பணத்தை வாங்க மறுத்து விடுகிறார்கள்.

தாயின் விருப்பப்படி இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. மகன் நகரத்துக்கு கிளம்பும் மு‌ன், ஒரேயொரு முறை தந்தை பாடம் நடத்திய பள்ளிக் கூடத்தில் பாடம் நடத்தும்படி மகனிடம் தாய் கேட்கிறாள். மகனும் அவள் விருப்பத்தை பூர்த்தி செய்கிறான். அதுவரை கணவனின் கம்பீரக் குரலில் ஈர்க்கப்பட்டு பள்ளிக்கு வந்தவள் அன்று மகனின் குரல் கேட்டு வருகிறாள். தாயும் மகனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். படம் நிறைவடைகிறது.

கல்யாண சேதி எப்படி லீக் ஆச்சு.. டென்ஷனில் மீனா


இரண்டு மாதங்கள் கழித்து ஜூன் கடைசியில் வெளியிடலாம் என நினைத்திருந்த தனது கல்யாணச் செய்தி அதற்குள் கசிந்து விட்டதில் கடுப்பாகி விட்டனராம். நடிகை மீனா மற்றும் அவர் குடும்பத்தினர்.

ஜூலை 12-ம் தேதி பெங்களூர் கம்ப்யூட்டர் எஞ்ஜினீயரை மணக்கிறார் மீனா. திருமணத்துக்குப் பிறகு நடித்தாலும், சென்னையில் இருக்கப் போவதில்லையாம். பெங்களூர்தானாம்.

இந்த விவரங்களையெல்லாம் ஆரம்பத்தில் பத்திரிகையாளர்களுக்குச் சொல்லும் ஐடியாவே இல்லையாம். நிச்சயதார்த்தத்தை சைதாப்பேட்டையில் ரகசியமாக நடத்தி முடித்த கையோடு, வந்திருந்தவர்களிடம், தயவு செய்து இப்போதைக்கு சொல்லிவிடாதீர்கள். இன்னும் சில படங்கள் வர வேண்டியுள்ளது எனக் கேட்டுக் கொண்டாராம் மீனாவும், அவரது அம்மா ராஜ் மல்லிகாவும்.

ஆனால், அவர்களில் சிலர் பத்திரிகையாளர்களுக்குச் சொல்லிவிட, உடனடியாக பாய்ந்து போய் செய்தியைப் பிடித்துப் போட்டு பரபரப்பாக்கி விட்டார்கள்.

இதனால் ஏகக் கடுப்பாகிவிட்ட மீனா, நாம் இவ்வளவு சொல்லியும் விஷயத்தை லீக் பண்ணியது யார் என தனது நட்பு வட்டத்தை விசாரித்து வருகிறாராம். இந்த நிச்சயதார்த்தத்துக்கு மீனாவின் தோழிகள் சங்கவி, ஸ்ரீதேவி ஆகியோர்தான் வந்திருந்தனர். அவர்கள்தான் வேண்டுமென்றே விஷயத்தை உடைத்திருக்க வேண்டும் என்று கடுப்புடன் கூறிவருகிறாராம் மீனா.

கல்யாண மேட்டர் வெளிவந்துவிட்டதால், மீனா நடிக்கும் தொடர்களுக்கு பார்வையாளர்களிடம் மவுசு குறைந்துவிடும், புதிய பட வாய்ப்புகளும் குறைந்துவிடும் என அஞ்சுகிறாராம் மீனா.

பார்ட்டிகளை நமீதா புறக்கணிக்கும் ரகசியம்!


முன்பு சில்க் ஸ்மிதா கடித்துப் போட்ட ஆப்பிளை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டது ரசிகர் கூட்டம். இப்போது, சில்க்கையும் மிஞ்சும் கிக், புகழ் எல்லாமே ஆறடி உயர ஆல்கஹாலான நமீதாவுக்குதான

அவர் நேரம், நடிக்கிற படமும், அறிமுகப்படுத்தற பொருள் எல்லாமே பிச்சிக்கிட்டு போகுதாம்!

நமீதாவுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது அவரது எடைதானாம். சில தினங்களுக்கு முன் அவர் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார் என்றெல்லாம் கூட வதந்திகள் புகைந்தது நினைவிருக்கலாம். ஆனால் உண்மை அது இல்லையாம். அவரது எடை குறை முக்கிய காரணம் 'சப்வே'தானாம்.

சப்வே?

சென்னையில் உள்ள சுரங்கப்பாதையில் குறுக்கும் மறுக்கும் ஓடி உடம்பைக் குறைத்தாரோ என நினைக்க வேண்டாம்... இந்த சப்வே, ஒரு உணவகம்.

இங்கிருந்துதான் நமீதாவுக்கு மூன்று வேளையும் உணவுகள் போகின்றன. உடல் எடை குறையும் அளவுக்கு அப்படி என்னதான் சாப்பிடுகிறார் அம்மணி?

ஒரு கோதுமை பர்கர், தேவைப்பட்டா ஒரு டயட் கோக்!

இந்த உணவை முதலில் ருசி பார்த்து பின்னர் பலன் பார்த்து பரவசப்பட்ட நமீதா, தொடர்ந்து பர்கர் ரசிகையாகி விட்டாராம்.

அவரும் அவரது காதலர் பரத் கபூரும் சென்னையில் உள்ள நாட்களில் தவறாமல் ஆஜராகிவிடும் இடம் இந்த சப்வேதானாம். மாலை நேர பார்ட்டிகளைக் கூட புறக்கணித்து விடுகிறாராம் இதற்காக. "தேவையில்லாத பார்ட்டிகளுக்குப் போய் உடம்பையும், பெயரையும் கெடுத்துக் கொள்வதற்கு பதில், இங்கு வந்து நிம்மதியாக பிடிச்ச உணவை ருசிப்பது சுகமாக உள்ளது", என்கிறார் நமீதா.

சென்னையில் மட்டும் 10 இடங்களில் கிளைபரப்பியுள்ள அமெரிக்க செயின் ரெஸ்டாரெண்ட் இந்த சப்வே. இங்கு தரப்படும் உணவில் கொழுப்பின் அளவு குறைவு என்பதால், நமீதாவைப் பின்பற்றி பெரும் நட்சத்திரக் கூட்டமே குவியத் துவங்கியிருக்கிறது சப்வேயில்.

'அந்த லிஸ்ட் பெரியது சார்... மணிரத்னம், கமல் ஹாஸன், சரத் குமார், ஜோதிகா, சூர்யா, விக்ரம், அஜீத், ஷாலினி, சூப்பர் ஸ்டாரின் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் தனுஷ்.... பட்டியல் இன்னும்கூட நீள்கிறது.

இவர்கள் இங்கே வருவதால் இப்போது அவர்களது ரசிகர்களும் குவியத் துவங்கிவிட்டார்கள். நட்சத்திரங்கள் எடை குறைந்து ஸ்லிம் ஆகிறார்கள். எங்களுக்கு கிளைகள் பெருகுது... தென் இந்தியர்கள்தான் உடல் வடிவில் பெரும் அக்கறை காட்டுகிறார்கள்...", என்கிறார் இந்த உணவகத்தின் இந்தியப் பங்குதாரர் விபின் சச்தேவ்.

'சினிமா வியாபாரமல்ல...': அழகர் மலை நாயகன் ஆர்கே!


தமிழ் நாயகர்களின் நிஜமாகவே வித்தியாசமான சிந்தனைக்குச் சொந்தக்காரராக இருக்கிறார் ஆர்.கே. சினிமாவை பணம் காய்க்கும் மரமாகத்தான் பலரும் பார்க்கிறார்கள். அதன் விளைவு, வந்த வேகத்திலேயே இருப்பதைத் தொலைத்து விட்டும் போகிறார்கள். ஆனால் ஆர்.கேவின் சிந்தனை வேறுவிதமாக உள்ளது.

'சினிமாவை லாப நஷ்டம் பார்க்கும் தொழிலாக மட்டுமே பார்த்தால் நிச்சயம் பைசா தேறாது. அது தொழில் என்பதையும் தாண்டி, படைப்பு சம்பந்தப்பட்டது. புதிது புதிதாக கண்டுபிடிப்பதைப் போன்றது... நல்ல சினிமா எடுக்கும் முன் மோசமான சினிமா எடுக்காமல் இருப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் ஆர்கே.

கருமாரி கந்தசாமி தயாரிப்பில், எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில், ஆர்கே, பானு நடிக்கும் அழகர் மலை படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

படத்தின் நாயகன் ஆர்கே ஏற்கெனவே 'எல்லாம் அவன் செயல்' என்ற படத்தைக் கொடுத்தவர். அவர் நாயகனாக நடிக்கும் இரண்டாவது பெரிய படம் இது.

இந்தப் படத்தில் தனது அனுபவங்கள் குறித்து அவர் பேசியதாவது:

இந்தப் படம் ஒரு எளிமையான அதே நேரம் அழகான கதை. பார்க்கும் யாரும் மீண்டும் வந்து படம் பார்க்கணும் என ஆசைப்படும் அளவுக்கு சிறப்பா வந்திருக்கு இந்தப்படம்.

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு பாணுவை இந்தப் படத்துக்காக அழைத்து வந்திருக்கோம். இரண்டு பாடலுக்கு அவர் ஆடியுள்ள விதம், அவரை மீண்டும் தமிழில் பரபரப்பான் நடிகையாக்கிவிடும்.

அழகர் மலையின் சிறப்பு அதன் பாடல்கள். இசைஞானியின் இசைக்கு நற்சாட்சி பத்திரம் தேவையில்லை. அழகர் மலையின் சிறப்பைச் சொல்லும் ஒரு பாட்டுக்கு அவரே நடிச்சிக் கொடுத்திருக்கார். நாங்க அவர்கிட்ட ரொம்ப தயங்கித் தயங்கிதான் கேட்டோம். அவர் சின்ன யோசனைக்குப் பிறகு அந்தப் பாட்டு முழுக்க வர சம்மதிச்சார். எத்தனையோ ஜாம்பவான்கள் கேட்டும் முடியாதுன்னு சொன்னவர், எங்க ஆசையை நிறைவேத்தினார். மொத்தம் 6 நாட்கள் நடித்தார். அது ஒரு மறக்க முடியாத அனுபவம். அந்தப் பெருமை சங்கிலி முருகன் சாருக்கே சேரும், எனும் ஆர்கே, இந்தப் படத்தில் முரட்டு, குடிகார வாலிபனாக நடித்துள்ளாராம்.

எந்தப் படத்துக்கும் 5 நாட்களுக்கு மேல் நடிக்க ஒப்புக் கொள்ளாத வடிவேலு, இந்தப்படத்துக்கு மட்டும் 16 நாட்கள் கால்ஷீட் கொடுத்தாராம். படம் முழுக்க இருவரும் செய்யும் ரகளையில் தியேட்டர் அதிரும் என்கிறார் ஆர்கே.

வெறும் பாட்டு பைட்டுன்னு வந்து போறதில எனக்கு உடன்பாடில்லை. நல்ல சினிமா அதன் நிஜமான இலக்கை போய்ச் சேரும் வகையில் ஏதாவது செய்யணும், செய்வேன், என்கிறார் ஆர்கே கனவுகள் பொங்க.

அந்த உற்சாகம்தான் சினிமாவுக்கு முக்கியம்!

its correct

நாளை சென்னை வரும் சோனியாவுக்கு கருப்புக் கொடி! பாரதிராஜா முடிவு...


மே 6-ந் தேதி சென்னையில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வரவிருக்கும் காங்கிரஸ் தலைவி சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. பழ.நெடுமாறன், மற்றும் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொள்ளும் இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

திட்டமிட்டபடியே திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தலைமையில் புறப்பட்ட இயக்குனர்கள் சங்கம், ஈரோட்டில் மாபெரும் கூட்டத்தை நடத்தி காட்டியிருக்கிறது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் இமயம் பாரதிராஜா, காங்கிரசுக்கு ஆதரவாக யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அவர் மேலும் பேசியதிலிருந்து-

தனி ஈழம் என்று யார் குரல் கொடுத்தாலும் அவர்களை வாழ்த்துகிறோம். துரோகிகளை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம். நல்லவர்களை தேடிக் கொள்ளுங்கள். 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இப்போது புரட்சியை தொடங்கி இருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் அது பிரளயமாக மாற வேண்டும். ஓட்டுக் கேட்க சோனியா வரக்கூடாது. அப்படி அவர் 6-ந் தேதி வந்தால் மிக பலத்த எதிர்ப்பு காட்ட வேண்டும். தாய்மார்களே, பொதுமக்களே, நீங்கள் உங்கள் வீடுகளில் கருப்பு துணியை அணிந்து கொள்ளுங்கள். யாராவது கேட்டால் சோனியா வரும் நாள் எங்கள் துக்க நாள் என்று கூறுங்கள்.

பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனியாவுக்கு நமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தமிழகமெங்கும் சகல ஊர்களிலும் கருப்பு கொடிகள் பறக்க வேண்டும். தமிழர்கள் கருப்பு சின்னம் குத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களின் கொதிப்புணர்வை வெளிப்படுத்த இருக்கும் இந்த போராட்டத்தில் கட்டுப்பாடகவும், அமைதிக்கு பங்கம் நேராத வகையிலும் கலந்து கொள்ளும்படி தமிழர்களை அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில், பாரதிராஜா தலைமையிலான அணி காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை கண்டித்துள்ளது காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு ஒன்று. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சட்டப்பிரிவு பொதுச் செயலாளர் டி.குருசாமி கூறியிருப்பதாவது-

ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்ய பாரதிராஜாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. இது தேர்தல் விதிமுறை மீறலும் ஆகும். ஆனால் தேர்தல் கமிஷன் மவுனம் சாதிக்கிறது. எனவே டைரக்டர் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் மீது தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட கோர்ட்டுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்டுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப் போகிறோம். அதன் நகலை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு கேட்போம். பாரதிராஜா பிரச்சாரம் செய்கிற மேடைக்கு எதிராக நாங்கள் ஆதரவு பிரச்சாரம் மேற்கொள்வோம். இதற்கு அனுமதி கொடுக்காவிட்டாலும் சரி என்று கூறியிருக்கிறார் டி.குருசாமி.

ஜெயம் ரவி ஆடிய பனிச்சறுக்கு விளையாட்டு!


ஜெயம் ரவிக்கு கல்யாண 'களை' வந்தேவிட்டது. ஹனிமூன் நினைப்பும் கூடவே இருக்கும் போல! அபிராமி திரையரங்க வளாகத்தில் பனி உலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் ரிப்பன் கட் பண்ணியவர் மிஸ்டர் ஹேண்ட்சம் ஜெயம் ரவிதான்! தான் லேட்டஸ்ட்டாக வாங்கியிருக்கும் ஒன்றரை கோடி பெருமானமுள்ள படகு காரில் (படகா அது, கப்பல்!) வந்திறங்கினார் ரவி.

அடுத்த மாசம் கல்யாணமாக போற பிள்ளை என்ற உணர்வே இல்லாமல் திரண்டிருந்த டீன் ஏஜ் நங்கைகள் 'லிப் கிஸ்' கொடுக்க, லேசான வெட்கத்தோடு பனி உலகத்தை திறந்து வைத்தார் ஜெயம் ரவி. உள்ளே போறதுக்கு முன்னாடி 'இதை போட்டுக்கோங்க' என்று அவருக்கு கொடுக்கப்பட்டது கோட். 'அட, குலுமணாலி பனியிலே கோட்டு போட்டுகிட்டா டூயட் ஆடுறோம்? இந்த குளிரெல்லாம் ச்சும்மா' என்றபடியே உள்ளே போனார் ஜெயம் ரவி. அடுத்த சில நிமிடங்களில் அவரை வெட வெடன்னு ஆட வச்சுது குளிர்.

'அந்த கோட்டை எடுத்திட்டு வாங்கப்பா'ன்னு அவரே கேட்கிற அளவுக்கு ஜில்! 'இது குழந்தைகளுக்கு மட்டுமா, இல்லே நாமும் ஆடலாமா' என்று கேட்டபடியே பனிச்சறுக்கு விளையாட்டை ஒரு கை பார்த்தார். 'இருபது நிமிஷத்துக்கு மேலே உள்ளே நிற்க முடியாது போலிருக்கே' என்றவரிடம், 'ஒரு நபருக்கு அவ்வளவு நேரம்தான் நாங்களும் ஒதுக்கியிருக்கோம்' என்றார்கள் பனி உலக ஊழியர்கள்.

'காஷ்மீரை செட் போட முடியாதவங்க, ஒரு முறை இங்கே ஷ¨ட் பண்ணலாம்' என்று அடிஷனல் ஐடியா கொடுத்துவிட்டு பறந்தது பார்ட்டி!

'பானு ஆட்டத்திற்கு தமிழ்நாடே சுத்தப்போவுது...' ஹீரோ நம்பிக்கை!


லேட்டா வந்தாலும், எங்க படத்திலே ஹாட்டா இருப்பாரு பானு' என்றார் ஆர்.கே! எல்லாம் அவன் செயல் படத்தில் ஹீரோவாக நடித்தாரே, அவரேதான்! இந்தியாவிலே பிறந்த ஒவ்வொருத்தரையும் தொழிலதிபர் ஆக்கனும் என்பதுதான் இவரது லட்சியமாம். அந்த அதிர்ஷ்டம் பானுவுக்குதான் போலிருக்கிறது. 'தமிழில் மார்க்கெட் இல்லாமல் இருந்த பானுவை அழகர் மலை ரிலீசுக்கு பிறகு பார்க்கதானே போறீங்க' என்றார் ஆர்.கே. இரண்டு குத்து பாடலுக்கு ஆடியிருக்கார். தமிழ்நாடே சுத்த போவுது பாருங்க' என்றார் நம்பிக்கையோடு.

அழகர் மலையில் கிராமத்து இளைஞராக நடித்திருக்கிறார் ஆர்.கே. 'நல்லா குடிச்சுட்டு கிராமத்திலே அலம்பல் பண்ணுற கேரக்டர் எனக்கு. வடிவேலு படம் முழுக்க வருவார். பொதுவா எல்லா படத்திற்கும் ஐந்து நாளுக்கு மேலே கால்ஷீட் கொடுக்காதவர், என் படத்திற்கு 15 நாட்கள் கொடுத்திருந்தார். நாங்க இரண்டு பேரும் அவ்வளவு ரகளை அடிச்சிருக்கோம்! அதே மாதிரி ஆறு நாட்கள் இளையராஜாவை நடிக்க வச்சிருக்கோம். அழகர் மலை என்ற கிராமத்தை பற்றி அவரு பாடுற மாதிரி ஒரு பாடலில் அவரே நடிச்சிருக்கறது பெரிய சிறப்பு. சங்கிலி முருகன் சார் கேட்டுக் கொண்டதால் அவரு நடிக்க சம்மதிச்சார் என்றார் ஆர்.கே.

சமீபத்தில் ஜெர்மனி போயிருந்தாராம். இவரை அடையாளம் கண்டு கொண்ட ஒரு தமிழ் குடும்பம் இவருடன் போட்டோ எடுத்துக் கொண்டதாம். 'இன்னும் பெரிய இடத்தை பிடிக்கணும் சார்' என்றார் கண்களில் கனவுகள் மின்ன. வடிவேலுவை விடாம புடிச்சுக்கோங்க, எல்லாம் தானா வரும்!

Monday, May 4, 2009

'மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை எங்களால் தரமுடியும்' :தே.மு.தி.க., பாண்டியராஜன் பேட்டி


விருதுநகர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் பாண்டியராஜன் கட்சிக்கு வரும் முன்பே இளைஞர்கள், பெண்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர். தீவிர பிரசாரத்திற்கு இடையே அவர் அளித்த சிறப்பு பேட்டி:சிவகாசி அருகே விளாம்பட்டியில் சாதாரண தீப்பெட்டி தொழிலாளியின் மகனாக பிறந்த எனக்கு 50 வயது.

கஷ்டப்பட்டு படித்து கோவையில் இன்ஜினியரிங் முடித்தேன். ஜாம்ஷெட்பூரில் எம்.பி.ஏ., படித்தேன். 1992ல் 'மாபா மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்ஸ்' நிறுவனத்தை துவங்கி இளைஞர்களுக்கு பல நாடுகளிலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்தேன். ஏழை துயரத்தை உணர்ந்த அனுபவத்தால் சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவினேன். அவர்களுக்கு கல்வி, மருத்துவ உதவிகள் செய்கிறேன். சிவகாசி, விருதுநகர், மதுரை, சென்னையில் கோயில் திருப்பணிகள், பொதுமக்கள் சேவை என செயல்பட்டு வருகிறேன். கல்லூரியில் மாணவர் பேரவை செயலாளராக இருந்ததால் இயக்க செயல்பாடுகளில் ஆர்வம் உண்டு. படித்து நிறுவனங்களை துவங்கிய பின் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் இளைஞர்கள், பெண்களுக்கு உதவி வருகிறோம். அரசியலில் ஈடுபட்டு இன்னும் பன்மடங்கு சேவை செய்ய முடியும் என்பதாலேயே தே.மு.தி.க., வில் சேர்ந்தேன்.



கட்சியின் கொள்கை உருவாக்கக் கமிட்டி, நிதிக்குழுவில் செயல்பட்டதால் விஜயகாந்த் ஆசியுடன் இந்த வாய்ப்பு கிடைத்தது.மக்கள் சேவை: வைகோ, நடிகர் கார்த்திக் என பிரபலங்கள் இங்கு போட்டியிட்டாலும் கவலையில்லை. எங்களை பொறுத்தவரை மக்களுடனும், கடவுளுடனும்தான் கூட்டணி என விஜயகாந்த் செயல்படுகிறார். மற்ற கட்சிகளால் அவ்வாறு செயல்பட முடியவில்லை. மற்ற கட்சியினர் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதிலேயே நேரத்தை செலவிடுவதால் மக்கள் சேவை பற்றி சிந்திப்பதில்லை. உலக அரசியல் பேசுகின்றனரே தவிர உள்ளூர் பிரச்னையை யாரும் கவனிப்பதில்லை. இதனை மக்களே கேட்கின்றனர். மக்கள் பிரச்னையை அறிந்து நாங்களே தேர்தல் அறிக்கை தயார் செய்துள்ளோம். பொதுமக்கள் மாற்றத்தை எதிர் பார்க்கின்றனர். அதனை எங்களால்தான் தரமுடியும் என கருதுகின்றனர். அந்த மாற்றம் வரும். நாங்கள் வெற்றி பெறுவோம்.



தேர்தல் பிரசாரத்தின் போது ஏழை, நடுத்தர குடும்பத்தினர், பெண்கள், இளைஞர்கள் விஜயகாந்த் வென்றால் தங்கள் வாழ்வில் ஒளிபிறக்கும் என்று கூறுகின்றனர். எங்களின் எளிமையான பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. வயல்வெளியில் பணியாற்றுவோர் எங்களை கண்டதும் ஓடிவந்து வரவேற்கின்றனர். எம்.ஜி.ஆருக்கு பின்பு விஜயகாந்த், முரசு சின்னத்தை கண்டதும் கிராம மக்களிடம் ஆர்வம் பிறக்கிறது.



பிரசார யுக்தி: கட்சியின் முரசு சின்னத்தை பலருக்கும் தெரிந்துள்ளது. இருந்தாலும் குக்கிராமங்களிலும் சென்று சேர்க்கும் வகையில் சைக்கிள், கலைக்குழுக்கள் மூலம் பிரசாரம் செய்கிறோம். ஊனமுற்றோருக்கு உதவியதால் அவர்களில் பலர் குழுவாக வந்து பிரசாரம் செய்கின்றனர். பெண்களும் பல குழுக்களாக செயல்படுகின்றனர்.



மக்களுக்கான செயல்திட்டம்: தேர்தலில் வெற்றி பெற்றால் இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பு தருவது முக்கிய குறிக்கோளாகும். நெசவுத் தொழிலுக்கென 'நெசவுப் பூங்கா' அமைக்கப்படும். ஒரு தொகுதிக்கு ஒரு மருத்துவ கல்லூரி. ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் அதில் 52 குழந்தைகள் இறக்கின்றன. இதை தடுப்பதுடன், விதைவைகளின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புக்கும் வழிசெய்வோம். மத்திய அரசின் பல திட்டங்களுக்கான பணம் செலவழிக்காமலேயே திருப்பி அனுப்பப்படுகிறது. அதனை தடுத்து பொதுமக்களுக்கு முழுமையாக பயன்படச் செய்வோம். விருதுநகரிலேயே நல்ல ரோடு வசதி, குடிநீர் வசதி கிடையாது. சாலைவசதி, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் என மக்களின் அடிப்படை தேவையை நிறைவேற்ற முயற்சிப்போம்.



இதுபோல விருதுநகர் தொகுதியின் தேவையை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அறிந்து தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளோம். அவற்றை நிறைவேற்றுவோம். விருதுநகரில் பொதுமக்களை சந்திப்பதற்காகவே இங்கேயே வீடு வாங்கியுள்ளோம். 24 மணி நேரமும் என்னை மக்கள் சந்திக்கலாம்.கட்சித் தலைமை வெளியிட்டது போல நாங்களும் தொகுதி முழுவதும் சுற்றி வந்து, விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், வர்த்தகர்கள் என பலதரப்பினரிடமும் பிரச்னைகளை எழுதிக் கேட்டோம். அதனடிப்படையில் முன்னுரிமையுள்ள பிரச்னைகளை எடுத்துக் கொண்டோம். அதனடிப்படையில் வெளியிடப்பட்ட 'மக்களின், மக்களால், மக்களுக்கான' தேர்தல் அறிக்கையில் பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.



காலம் காலமாக வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 30 சதவீதத்தினரின் முன்னேற்றத்திற்கு இதுவரை எதுவும் செய்யப்படவில்லை. அவற்றை தீர்ப்பதற்கான உறுதிமொழிப் பத்திரம்தான் என்னுடைய தேர்தல் அறிக்கை. இது மக்களிடம் தே.மு.தி.க.,வின் சேவை யை 'முரசாக' பறைசாற்றும். இவ்வாறு அவர் கூறினார்.

வருமான வரி செலுத்திய விவரத்தை வெளியிடாத கோடீஸ்வர வேட்பாளர்கள்

டில்லி :முதல் கட்ட தேர்தலில், மனு தாக்கல் செய்த கோடீஸ்வர வேட்பாளர்களில், 68 சதவீதம் பேர் வருமானவரி செலுத்தியதற்கான விவரத்தை வெளியிடவில்லை.கடந்த தேர்தலில், போட்டியிட்ட கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 9 சதவீதமாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 14 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முதல் கட்ட தேர்தலில், 193 கோடீஸ்வரர்களும், இரண்டாவது கட்ட தேர்தலில், 288 கோடீஸ்வரர்களும் போட்டியிட்டனர். இதில் 65 பேர் காங்கிரஸ் வேட்பாளர்கள். மூன்றாவது கட்ட தேர்தலில், 196 கோடீஸ்வரர்கள் களத்தில் இருந்தனர்.டில்லியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் தனக்கு 600 கோடிக் கும் அதிகமாக சொத்து உள்ளதாக கணக்கு காட்டியுள்ளார். மனு தாக்கலின் போது கோடிக்கணக்கில் சொத்து கணக்கை காட்டியுள்ள வேட்பாளர்கள் பலர் வருமானவரி கட்டுவதற்கான நிரந்தர கணக்கு அட்டை( பான்கார்டு) வைத்திருக்கவில்லை. இந்த கோடீஸ்வர வேட்பாளர்கள் முறையாக வருமான வரி கட்டியுள்ளனரா, என வருமான வரித்துறை ஆராய்ந்து வருகிறது.பான் கார்டு வைத்திருக்கவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாயும், வருமான வரி ஏய்ப்பு செய்தால், வரி ஏய்ப்பு செய்த தொகையை போல100 முதல் 300 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.முதல் மூன்று கட்ட தேர்தலில், மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களில், 70 சதவீதம் பேர் பான் கார்டு குறித்த தகவலை குறிப்பிடவில்லை. இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்து வருமான வரித்துறை ஆராய்ந்து வருகிறது.

நியூட்டனின் மூன்றாம் விதி திரை விமர்சனம்


முதல் இருபது நிமிடங்கள் 'விதியே' என்று நகர்கிறது! அதன்பின் திரைக்கதை என்ற முரட்டுப்பிடிக்குள் மொத்த தியேட்டரையும் வளைத்துப் பிடிக்கிறார் இயக்குனர் தாய் முத்துச் செல்வன்.
'ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை இருக்கும்' என்ற நியூட்டனின் தத்துவத்தை ஒரு கதைக்குள் திணித்து அவர் காட்டியிருக்கும் வித்தையில் ஓராயிரம் விறுவிறுப்பு. பீட்சா கார்னரில் வேலை பார்க்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கும், ஷயாலிக்கும் லவ். அது எப்படி உருவாச்சு என்பதை விடவும், அது ஏன் நிறைவேறாமல் போச்சு என்பதை இதயம் நொறுங்க சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

காதலியை இழந்து தவிக்கும் சூர்யா, அதற்கு காரணமான விவிஐபி யின் கதையை எண்ணி இரண்டே மணி நேரத்தில் முடிக்கிறார். அதுவும் டெலிபோனில் அழைத்து 'உன் உயிர் இன்னும் இரண்டு மணி நேரம்தான்' என்று அறிவித்துவிட்டு!
எப்படியும் இறுதி வெற்றி ஹீரோவுக்குதான் என்று மனசு சொன்னாலும், என்னாகுமோ என்ற தவிப்பை அனுபவிக்கிறது உடம்பின் அத்தனை செல்களும்! அதுதான் இந்த படத்தின் வெற்றியாகவும் இருக்கக் கூடும். ஒரு விஞ்ஞானி போல கொலைக்கான திட்டம் வகுக்கிற சூர்யாவின் முகத்தில், வெறுப்பும் வேதனையும், பழி வாங்கும் உணர்ச்சியும் அசால்டாக உட்கார்ந்து கொள்கிறது. பழிவாங்குகிற ஸ்டைலும் அலாதி சுவாரஸ்யம்.

வில்லன் ராஜீவ் கிருஷ்ணாவின் கள்ளத் தொடர்பை அம்பலப்படுத்துவது, பார்க்கிங் செய்யப்பட்ட காரில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை இன்கம்டாக்சை விட்டு அள்ள வைப்பது, சப்போர்ட்டுக்கு வரும் மினிஸ்டரை ஆஃப் பண்ணுவது என்று ரகளையடிக்கிறார். பருந்து என்று நினைத்து பரவசப்படுகிற நேரம் பார்த்து, கோழிக்குஞ்சை போல வில்லனின் கைகளில் சிக்கிக் கொள்கிறார். இறுதி நிமிடங்கள் எலாஸ்டிக்காக நீள்கிறது. முடிவு...? நாம் எதிர்பார்த்ததுதான்!

கோடம்பாக்கத்து குதிரை சந்தையில் மற்றுமொரு குதிரையாக ஷாயாலி. நல்லவேளை, நடிக்க தெரிந்த குதிரை. முடிவு? பரிதாபம்! அலர வைக்கிறார் ராஜீவ் கிருஷ்ணா. ஆஹா படத்தில் வந்த அப்பாவியா இது? உயிரை எடுப்பதை Viduppu.comமல்லாக்கொட்டை உடைப்பது மாதிரி சுலபமாக கையாளும் இவர், தமிழ் சினிமாவின் 'கோர' மென்ட்டல் எக்ஸ்பிரஸ்!

அழுத்தமான பிளாஷ்பேக். ஆனால், விறுவிறுப்பான கதையின் வேகத்தை குறைக்கிறதே?

பின்னணி இசையில் காட்டிய அக்கறையை பாடல்களில் காட்டவில்லையோ? ஆனாலும் இசையமைப்பாளர் வினய்க்கு ஒரு க்ரீன் சிக்னல் போடலாம். சரவணனின் ஒளிப்பதிவு நம்மையும் கை பிடித்து அழைத்துச் செல்கிறது.

ரசிகர்களின் மதியை விதியால் வென்றிருக்கிறார்கள்!

பசங்க திரை விமர்சனம்


கடலை போடுகிற விடலை பசங்க வரைக்கும் 'Down' லோடு ஆன தமிழ் சினிமா, அட... அதுக்கும் 'கீழே' ஒரு கதை இருக்குய்யான்னு உள்ளார பூந்து வூடு கட்டி அடிச்சிருக்கு!
பசங்களை மட்டுமல்ல, பச்ச புள்ளங்களையும் நடிக்க வச்ச பாண்டிராஜுக்கு போடுய்யா ஒரு "கண்ணுபட போகுதய்யா சின்ன கவுண்டரே...." அதிக பட்சம் போனா அஞ்சாம்ப்பூ படிக்குங்களா, அதுங்க? என்னா வில்லத்தனம்...? அசலு£ரில் இருந்து படிக்க வரும் அன்புக்கரசுக்கும், உள்ளூரில் படிக்கும் வாத்தியாரு மகன் ஜீவா நித்தியானந்தத்துக்கும் 'உன்ன புடி... என்ன புடி... சண்ட' படம் முழுக்க! விட்டா பெரியவங்க ரேஞ்சுக்கு ரோப் கட்டி பாய்வாங்க போலிருக்கு.

இந்த வாண்டுங்க போட்ட போடுலே, எதிரெதிர் வீட்டு பெரியவங்க வேட்டிய மடிச்சுக் கட்டிகிட்டு நிற்கிற அளவுக்கு போர் உச்சக்கட்டம். கடைசியா அவங்களே ஒன்னு சேர்ந்த பிறகும், விலகி நிக்கிற இந்த பொடியன்களை விதி சேர்த்து வைக்குது. எப்படி? க்ளைமாக்ஸ். ஈர வெறக அடுப்பிலே போட்டுட்டு, மாரு வலிக்க ஊதுன கதையா இல்லாம, சும்மா ஜிவ்வுன்னு பத்த வச்சு, சர்ர்ர்ருன்னு சமையலை முடிக்கிறாரு இயக்குனர் பாண்டிராஜ். படம் முழுக்க வந்து விழும் நகைச்சுவையும் நையாண்டியும் இருக்கே, கைய குடுங்க மக்கா!

பிடிக்காதவங்க படத்தை சுவத்திலே வரைஞ்சு அதிலே ஒண்ணுக்கு அடிக்கும் 'பார்பேரியன் படவாஸ்கள்' ஒரு பக்கம். பரீட்சை பேப்பர் வாங்குற நேரத்திலும், "கைதட்டி என்கரேஜ் பண்ணி குடுங்க சார். அப்போதான் அடுத்த பரிட்சையிலே இன்னும் மார்க் வாங்க முடியும்"னு வாத்தியாருக்கே பாடம் எடுக்கிற வெஜிட்டேரியன் வெள்ளக்காரன் அன்புக்கரசு மறுபக்கம்னு ஒரே டஃப் கேம். ஸ்கூல் லீடர் யார் என்பதில் போட்டி பெரிசாகி, கோவிலில் அன்புக்கரசுக்கு எதிராக காசு வெட்டி போடுகிற அளவுக்கு கொடுமை கடுமையாகிறது. (காசு வெட்டி போட்ருவோமான்னு அடிக்கடி கண்ணை உருட்டுகிற அந்த படவா ராஸ்கோல் பயங்கரம்) ஸ்கூலில் இவங்க ரவுசு என்றால், வீட்டில் அப்பா அம்மா சண்டை. அது குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்குது என்பதையும் பொட்டில் அறைஞ்ச மாதரி நச்சுன்னு சொல்லியிருக்காரு பாண்டிராஜ்.

இதற்கு இடையில் எல்.ஐ.சி விமலுக்கும் பாலர் ஸ்கூல் வேகாவுக்கும் நடுவே லவ். (அடடா, இவங்க லவ்வுல என்னா ஒரு சுவாரஸ்யம்?) வெந்தும் வேகாம நடிக்கிற நடிகைகளுக்கு மத்தியில் வேகாவின் நடிப்புக்கு நெசமாகவே ஒரு ஆஹா! பஸ்சிலே ஒரு செருப்பை தவற விடும் விமலுடைய செருப்பை அப்படியே ரோட்டோரமாகவே உதைத்துக் கொண்டு வந்து சேர்க்கும் வேகா, "ஒத்த செருப்ப போட்டு நடந்தா ஒத்த புள்ள பொறக்குமாம்"னு விளக்கம் சொல்ல, அடுத்தடுத்த சந்திப்புகளிலேயே லவ். வேகாவோட வெள்ளந்தி மனசுக்கு தோதாக விமல் அடிக்கும் செல்போன் ராவடிகளில் தியேட்டரே கலகல. ஃபிரண்டுக்கு 2000 ரூபா கடன் கொடுத்த அடுத்த வினாடியே ஏகப்பட்ட போன் கால்ஸ். "உங்க இளகிய மனசுக்கு ரோட்டரி கிளப் விருது கொடுக்க போவுதாம்"னு எடுத்துவிட, அதையும் நம்பும் வேகாவுக்கு, "யாரோ உன்னை ஓட்டுறாங்கடி"ன்னு ஃபிரண்ட் போட்டுக் கொடுக்கிற வரைக்கும் தெரியலே. நம்மையே நம்ப வைக்கிற மாதிரி முகம்தான் வேகாவுக்கும்.

"இங்க மீனாட்சி. அங்கே யாரு"ன்னு அசால்டாக மொக்கை போடும் விமலுக்கு சினிமா கதவை அகல திறந்து வைங்கய்யா. "போற போக்க பார்த்தா நம்மளை சேர்த்து வைக்க மாட்டாய்ங்க போலருக்கு. பழகின பழக்கத்துக்கு ஒரு எல்ஐசியாவது போடேன்"னு இவரு கேட்கிற போது தியேட்டரே 'சிரிப்பொலி' ஆகிறது.
தமிழ் சினிமாவின் இன்னொரு பிரகாஷ்ராஜ்னு பாராட்டலாம் வாத்தியாரு ஜெயப்பிரகாஷை. வீட்டு சண்டை வீட்டோடு என்ற பெருந்தன்மையோடு மாணவனிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் அருமை. சிறு புருவத்திலும் நடிப்பை தேக்கி காட்டும் லாவகத்திலும் அசத்துராரு வாத்தியாரு. யாருய்யா அந்த போதும் பொண்ணு? குணச்சித்திர வேடத்துக்கு பொருத்தமாக கிடைச்சிருக்கும் குணசுந்தரி! நடிக்க வந்த எல்லா பொடிசுகளுக்கும் ஒரு உற்சாக உம்மா!

நடுரோட்டிலே முன்னேறி வந்து இரண்டு குடும்பமும் சண்டை போட்டுக் கொண்டிருக்க, நடுவிலே புகுந்து போகும் 'அறிவிப்பு ஆட்டோ' ஒன்று "ஓரமாக நின்று சண்டை போடும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்" என்று ஒலிபெருக்குகிறது. இது மாதிரி படம் நெடுகிலும் ஏராளமான நகைச்சுவை பொட்டலங்கள்! ஆனால் இடைவேளைக்கு பிறகு 'திடீர் விக்ரமன்' ஆகி சென்ட்டிமென்ட்டை போட்டு தாக்கும்போதுதான் "என்ன வாத்தியாரே, என்னாச்சு?" என்று கேட்க வைக்கிறார் பாண்டி!
குழந்தைகளின் உலகமும், கலகமும் சிலேட்டு மாதிரி. எழுதிய அடுத்த வினாடிகளில் அழிக்கப்பட்டு விடலாம். ஆனால், ஜீவா நித்தியானந்தத்தின் கேரக்டரை ஒரு மினியேச்சர் நம்பியாராக தொடர்வதுதான் கொஞ்சம் நெருடல்!

ஜேம்ஸ் வசந்தனின் இசையும், பிரேம்குமாரின் ஒளிப்பதிவும் கச்சிதம். யோக பாஸ்கர் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். தியேட்டருக்குள்ளே வந்த எல்லாரையும் அவரவர் கால்சட்டை உலகத்திற்கு திரும்பி போக வைக்கிறார் இயக்குனர். அதுதான் படத்தின் வெற்றியும் கூட!

மரியாதை திரை விமர்சனம்


அன்பு செலுத்தும் குழந்தைகள் உயர்வார்கள். தொழிற்சாலைகளை விட விவசாயமே சிறந்தது என்ற கருவை உள்ளடக்கிய கதை...
விஜயகாந்த் தந்தை மகன் என இரு வேடங்கள் செய்துள்ளார். கிராமத்தினரின் மரியாதைக்குரிய மனிதர் தந்தை விஜயகாந்த். பெரிய நிலக்கிழார். மகன் விஜயகாந்தை சிறுவதில் இருந்தே சிறு சிறு தவறு செய்தால் கூட கண்டிக்காமல் பாசமாக வளர்க்கிறார்.
விஜயகாந்த் நிலத்தில் கெமிக்கல் கம்பெனி துவங்க சண்முகராஜன், சம்பத் கோஷ்டி விலை பேசுகின்றனர். அவர் மறுத்து விடுகிறார். இதனால் நிலத்தை அபகரிக்க சதி செய்கின்றனர்.

சம்பத் காதலி மீனாவை மகன் விஜய்காந்துடன் பழக விடுகின்றனர். அவரை நிஜமென நம்பி மகன் காதல் வயப்படுகிறார். இருவருக்கும் திருமணம் நிச்சயமாகிறது. அப்போது மகனை ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கி கெமிக்கல் கம்பெனிகாரரிடம் ஒப்படைத்து வி