Saturday, April 25, 2009

பறந்து பறந்து சண்டை-முடி சிக்கி விழுந்த பிரிட்னி ஸ்பியர்ஸ்


27 வயதாகும் இங்கிலாந்து பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர், விட்ட பெருமையைப் பிடிக்க கடுமையாக போராடி வருகிறார்.

தற்போது வட அமெரிக்காவில் அவர் தி சர்க்கஸ் - பிரிட்னி ஸ்பியர்ஸ் என்ற டான்ஸ் மற்றும் பாப் ஷோவை நடத்தி வருகிறார்.

ஆனால் இந்த டான்ஸ் ஷோவில் அவர் பழைய மாதிரி ரப்பராக வளைந்து நெளிந்து ஆட முடியாமல் பரிதவித்து வருகிறார்.

சில முறை மேடையிலேயே வாந்தி எடுத்துள்ளார். சில முறை ரிதம் தவறி ஆடி வருகிறார்.

இந்த நிலையில், கீழிருந்து மேலே தூக்குவது போன்ற ஒரு காட்சியில் பங்கேற்றபோது, தலை முடி, கம்பியில் சிக்கி விழுந்து விட்டார் பிரிட்னி.

இந்த ஷோவின் ஒரு பகுதியாக வரும் ஒரு காட்சியில் அந்தரத்தில் தொங்கியபடி சண்டை போடும் சீன் வருகிறது. அதில் நடித்தபோது, இருவர், பிரிட்னியை கீழிலிருந்து தொங்கும் கம்பி வழியாக மேலே ஏற்ற வேண்டும். அப்போது எதிர்பாராதவிதமாக கம்பியில், பிரிட்னியின் தலை முடி சிக்கிக் கொண்டது. இதனால் அவர் பொத்தென்று விழுந்து விட்டார்.

அதன் பின்னர் அங்கிருந்து பிரிட்னி வெளியேறினார். சில நிமிடங்களில் அவருக்கு தலை சுற்றலும், வாந்தியும் ஏற்பட்டதாம்.

முட்டாள்தனமான டான்ஸ் வடிவமைப்பு இது என டெய்லி மிர்ரர் வர்ணித்துள்ளது.

தற்போது இந்தக் காட்சிகளை மாற்ற முடியுமா என ஷோ வடிவமைப்பாளர்களை கேட்டுள்ளாராம் பிரிட்னி.

மறுபடியும் அப்படிப் போடு..!


விஜய், திரிஷா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கில்லி படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான அப்படிப் போடு மறுபடியும் அதே ட்யூனில் ஆனால் வேறு வரிகளில் புதிய படம் ஒன்றில் இடம் பெறுகிறது.

அங்கிருந்து இங்கு இங்கிருந்து அங்கு என்று சகட்டுமேனிக்கு லாவுவதில் தமிழ் சினிமாக்காரர்களும் சரி, தெலுங்கு சினிமாக்காரர்களும் சரி செம கில்லாடிகள்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவை ரீமிக்ஸ் கலாச்சாரம் ஆட்டோ ஆட்டென்று ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு வந்த சூப்பர் ஹிட் பாடலான அப்படிப் போடு, மறுபடியும் அதே ட்யூனில் வேறு வரிகளில் புதிய படம் ஒன்றில் இடம் பெறுகிறது.

கில்லியில் இடம் பெற்ற இந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆகவே, தெலுங்கில் வெளியான கிருஷ்ணா என்ற படத்தில் அதே ட்யூனில் இடம் பெற்றது. இப்படத்திலும் திரிஷாதான் நாயகி. ஜோடி போட்டவர் ரவி தேஜா.

இப்போது கிருஷ்ணா படத்தை தமிழில் டப் செய்கிறார்கள். அப்படியே அப்படிப் போடு பாடலையும் தமிழில் கொண்டு வருகிறார்கள். ஆனால் வரிகளை மட்டும் வேறாக்கி விட்டார்கள்.

பொட்டக் கோழி என்ற பெயரில் இந்தப் பாடலை எழுதியிருப்பவர் பாலபாரதி.

எப்படிப் போட்டாலும் நம்மாளுங்க ரசிப்பாங்க..!

ஜூலையில் வரும் சுல்தான்!


ரஜினியின் சுல்தான் - தி வாரியர் அனிமேஷன் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. முதல் கட்டமாக படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் நடத்தத் தயாராகி வருகிறார் சௌந்தர்யா ரஜினி.

சுல்தான் படப்பிடிப்பு கடந்த ஓராண்டு காலமாக நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஹைராபாத்தில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில் ரஜினி - விஜயலட்சுமி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்தக் காட்சிகள் அனிமேஷனுக்கு மாற்றப்பட்டுவிட்டன. ரஜினியும் வில்லன் ராகுல்தேவும் மோதும் பிரமாண்ட சண்டைக் காட்சிகள் வியட்நாமில் எடுக்கப்பட்டுள்ளன. ரஜினியின் வழக்கமான அறிமுக பாடல் காட்சியொன்றும் இந்தப் படத்தில் உண்டு.

இன்னும் ரஜினி நடிக்க வேண்டிய ஒரு பாடல் மட்டும்தான் பாக்கி உள்ளது.

அடுத்த மாதத்துக்குள் படப்பிடிப்பை முடித்துவிட திட்டமிட்டுள்ளனர். ஜூலை மாதம் “சுல்தான்” ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது பற்றி படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சௌந்தர்யா நம்மிடம் கூறியதாவது:

அனிமேஷன் படத்தை அனைத்து தத்ரூபமான காட்சி அமைப்புகளுடன் உருவாக்குவது அத்தனை சாதாரண விஷயமல்ல. அப்பாவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் முழு திருப்தி தரும் விதத்தில் இந்தப் படத்தை உருவாக்க வேண்டியுள்ளது. அதனால்தான் இந்தத் தாமதம், என்றார் சௌந்தர்யா.

ஆக்கர் ஸ்டுடியோ படங்களிலிருந்து வார்னர் பிரதர்ஸ் விலகிக்கொண்டதாகக் கூறப்படுவது குறித்து கேட்டோம். அவர் கூறுகையில், கோவா படத்தை மட்டுமே ஆக்கர் ஸ்டுடியோ தயாரிக்கிறது. மற்ற தமிழ், தெலுங்கு படங்களை வார்னர் பிரதர்ஸுடன் இணைந்தே தயாரிக்கிறோம், என்றார் சௌந்தர்யா.

Friday, April 24, 2009

'அவரு போயி அரை மணி ஆச்சு...' வடிவேலுவும் எஸ்கேப்பும்!


திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தினர் நடத்திய போராட்டத்திற்கு திரைப்பட நடிகர் நடிகைகள் யாரும் வரவில்லை. திரும்பிய இடமெல்லாம் இயக்குனர் சங்கத்தை சார்ந்தவர்களே இருந்தார்கள். ஆனால், கஞ்சா கருப்பும் வடிவேலுவும் வந்திருந்தார்கள். அதிலும் வடிவேலு வந்த வேகத்தில் எஸ்கேப்.

காரணம், மேடையில் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. மிகவும் புரட்சிகரமான அந்த நாடகம், ஆளும் கட்சிக்கு எதிராக இருந்ததால் சைலண்டாக இடத்தை காலி செய்தார் வடிவேலு. நாடகம் முடிந்து காமெடி புயலை பேச அழைக்கலாம் என்று தேடியவர்களுக்கு, 'அவரு போயி அரை மணி நேரம் ஆச்சே' என்ற பதில்தான் கிடைத்தது.

தனது உரையில் இதை குறிப்பிட்டார் அமீர். 'திரையுலகம் நடத்துற போராட்டம்னு சொல்றோம். ஆனால், தளபதி புயல்னு பட்டம் போட்டுக்கிற ஒருத்தரையும் காணோம். அதிலும் வந்திருந்த ஒரு புயலும் இங்கே போட்ட நாடகத்தை பார்த்திட்டு சொல்லாம கொள்ளாம ஓடிப் போச்சு' என்றார்! இவங்களை பற்றியெல்லாம் புரிஞ்சுக்குங்க. அவங்களை நட்சத்திரம்னு சொல்றது சரியதான் இருக்கு. டப்புன்னு வந்து சம்பளத்தை வாங்கிட்டு டப்புன்னு ஓடிப் போயிருவாங்க என்றபோது பலத்த கைத்தட்டல் பார்வையாளர்களிடமிருந்து.

கொடுத்தால்தான் ஷ§ட்டிங் வருவேன்... எஸ்.ஜே.சூர்யா கிடுக்கிப்பிடி!



சூர்யாங்கிற பேருக்கெல்லாம் கிளி நல்ல சீட்டாவே எடுக்கிற நேரம் போலிருக்கு. அயன் சூப்பர் ஹிட்டாகி ஓடிக் கொண்டு இருப்பதால், தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய பந்தயக் குதிரை ஆகிவிட்டார் சூர்யா. அப்படியே எஸ்.ஜே.சூர்யாவுக்கும் நல்ல திசையிலேர்ந்து காற்று வீச ஆரம்பித்திருக்கிறது.

மே. 1 ந்தேதி நியூட்டனின் மூன்றாம் விதி ரிலீஸ். இரண்டு மணி நேரத்தில் நடைபெறும் பழிவாங்கல் கதை. 'இனிமேல் நான் இயக்குகிற படங்களில் நானே நடிப்பேன். வேறு ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள். நானும் நடிக்க சொல்லி கேட்க மாட்டேன்' என்கிற பெரும் புரட்சிகரமான முடிவோடு பிரஸ்சை சந்தித்தார் எஸ்.ஜே.சூர்யா. ஏனுய்யா இப்பிடி ஒரு முடிவுக்கு வந்தீங்க?ன்னு ஒட்டுமொத்தமா எல்லாரும் கேட்க, 'சில முடிவுகள் அதிர்ச்சியாக இருக்கும். ஆனா, அதுதான் சரியாக இருக்கும்கிறது என்னோட நம்பிக்கை. இப்போ தெலுங்குல பவன் கல்யாணை வச்சு நான் இயக்குகிற புலி கூட முன்னாலே கமிட் பண்ணிய படம். அதை தமிழ்லே நானே நடிச்சு நானே இயக்குவேன். இப்போ நியூட்டனின் மூன்றாம் விதி பற்றி மட்டும் பேசுவோமே' என்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், பாடல் காட்சிக்காக வெளிநாடு கிளம்பினாங்களாம். அப்போ டைரக்டரையும் தயாரிப்பாளரையும் அழைத்த சூர்யா, எனக்கு ஒரு ஃபேவர் பண்ணி தரணும். அப்படி தந்தால்தான் நான் படப்பிடிப்புக்கு வர முடியும்னு சொல்லிட்டாராம். சம்பளத்தை அதிகமாக கேட்பாரோ என்று அவர்கள் அஞ்ச, சூர்யா கேட்டது அவர்களுக்கே அதிர்ச்சி. இந்த படத்திலே படம் முழுக்க இவருக்கு ஒரே ஒரு காஸ்ட்யூம்தான். (பாடல் காட்சிகளுக்கு இது பொருந்தாது) அந்த காஸ்ட்யூமையும், கழுத்திலே மாட்டிக் கொண்டிருக்கிற காந்தி கடிகாரத்தையும் என்கிட்ட கொடுத்திரணும். அப்போதான் வருவேன்னாராம்.

'அந்தளவுக்கு இந்த கேரக்டரை நான் நேசிக்கிறேன். எழுதி வச்சுக்கோங்க, இது சூப்பர் ஹிட்' ஆகும் என்றார் சூர்யா. எழுதி வச்சிட்டோம்ல...!

ஈழ ஆதரவு போராட்டம்! பாடலாசிரியர் தாமரை கோபம்...


திரையுல தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் திரைப்பட பாடலாசிரியர் தாமரை. அவர் பேசியபோது பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

மதியம் இரண்டு மணி இருக்கும். தாமரை பேசுவார்னு மேடையிலே அறிவித்தார்கள். "இன்றைக்கு நான் நிறைய பேசப் போறேன்" என்றபடியே மைக்கை பிடித்தார் தாமரை. பேச்சில் அனல் தெறித்தது. "ஏற்கனவே ஃபெப்சி மீட்டிங்கிலே நான் பேச வந்தேன். அப்போ என்னை பேசக் கூடாதுன்னு தடுத்திட்டாங்க. ஆனா, இப்போ என்னை தடுக்காதீங்க" என்று ஆரம்பித்தவர், பிடி பிடியென்று தமிழக தலைவர்களை பிடித்தார். இடையிலே "அப்படி பேச வேண்டாம்" என்று பாரதிராஜா இருக்கையை விட்டு எழுந்து வந்து தடுக்க, பார்வையாளர்கள் "தடுக்காதே, பேசட்டும்" என்று கூச்சலிட்டார்கள்.

"மத்தியிலே ஆளுற காங்கிரஸ் அரசு முதலாளியாகவும், தமிழகத்தை ஆளுற திமுக அரசு கூலி வாங்குகிற வேலைக்காரனாகவும் இருக்கு. உலக தமிழர்களோட தலைவர்னு சொல்லிகிறீங்க. உங்களால இந்த இனப்படுகொலையை தடுக்கும்படி மத்திய அரசை வற்புறுத்த முடியலேன்னா எதுக்கு பதவியிலே இருக்கீங்க? ராஜினாமா பண்ணிட்டு போக வேண்டியதுதானே? ஜெயலலிதா அரசு இருந்தா இப்படி நீங்க பேச முடியாதுன்னு சொல்றீங்க. ஜெ ஆட்சியிலேயும் பேசினா கைது பண்ணி உள்ளே போடுறாங்க. உங்க ஆட்சியிலேயும் கைது பண்ணி உள்ளே போடுறீங்க. திமுக வும், அதிமுகவும் இல்லேன்னா தனிஈழம் என்னைக்கோ அமைஞ்சிருக்கும்"

"தமிழன்ங்கிறது ஒரு இனம். மலையாளிங்கிறது ஒரு இனம். ஆனால், இந்தியன்ங்கிறது ஒரு இனம் இல்லையே? இதை சொன்னா இறையாண்மைக்கு எதிரா பேசியதா சொல்றீங்க? தேசிய பாதுகாப்பு சட்டத்திலே எங்க டைரக்டரை உள்ளே போட்டீங்க. ஆனா உயர்நீதிமன்றம் என்ன சொல்லுச்சு? உங்களால என்ன பண்ண முடிஞ்சுது?" இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் கேட்ட தாமரையை "பேசியது போதும்"னு மறுபடியும் இடை மறித்தார் பாரதிராஜா.

மீண்டும் பார்வையாளர்கள், "அவங்களை பேச விடுங்க" என்று கோஷம் போட்டார்கள். தொடர்ந்தார் தாமரை. "கலைஞர் சொல்றாரு... ஈழத்தந்தை செல்வா தந்தை பெரியாரை பார்த்து ஈழத்திலே நடக்கிற பிரச்சனை பற்றி சொன்னாராம். அப்போ பெரியார், 'ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?'னாராம். 'பெரியாரே அப்படி சொன்னார்'னு ஒரு பதிலை சொல்றீங்களே, நாற்பது வருஷமா தமிழனோட நிலைமை அப்படியே இருக்குன்னு சொல்றதுக்கு நீங்க எதுக்கு தமிழின தலைவர்னு சொல்லிக்கணும்?" என்றார் ஆக்ரோஷமாக!

இந்த முறை வலுக்கட்டாயமாக அவரை அமர வைத்தார்கள் பாரதிராஜாவும், வீ.சேகரும். ஆற்றாமையும், சோகமும் தாக்க கவலையோடு அமர்ந்தார் தாமரை.

பத்மஸ்ரீ ஒரு சொறி சிரங்கு... பாரதிராஜா ஆவேசம்!


இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பாரதிராஜா தலைமையில் நடந்த போராட்ட கூட்டம் ஒரே உணர்ச்சி மயமாக நடந்தது. சேரன், அமீர், சத்யராஜ், பாடலாசிரியர் தாமரை உள்ளிட்ட திரையுலகை சார்ந்தவர்களும், பழ.நெடுமாறன், திருச்சி வேலுச்சாமி, உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், அருட் தந்தை ஜெகத் கஸ்பார், தமிழருவி மணியன் உள்ளிட்ட இலக்கியவாதிகளும் கலந்து கொண்டார்கள். ஒவ்வொருவர் பேச்சிலும் உணர்ச்சி வெள்ளம் பிரவாகம் எடுத்து ஓடியது.

அமீர் பேச்சில் அனலோ அனல்! 'அண்ணன் பிரபாகரன்னு நான் சொன்னா அது தப்புங்கிறீங்க? மூவாயிரம் கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் இருக்கிற சோனியாவை அன்னை என்று சொன்னா ஒத்துகிறீங்க, முப்பது கிலோ மீட்டர் பக்கத்திலே இருக்கிற என் சொந்தங்களை அண்ணன்னு சொன்னா தப்புங்கிறீங்க. ஒன்றுமே புரிய மாட்டேங்குதே உங்க லாஜிக்! முத்துக்குமார் மரணத்தை பற்றி பத்திரிகையாளர்கள் ஈவிகேஸ் இளங்கோவனிடம் கேள்வி கேட்டால், யார் முத்துக்குமார்? தெரியாதேங்கிறாரு. இவரு போட்டுக்கிற இனிஷியல் வேற யாரோடதுன்னு தெரியலே. அநேகமா வேட்புமனு தாக்கல் பண்ண போகும்போது இனிஷியல் தப்பா இருக்குன்னு இவரு வேட்புமனுவை நிராகரிச்சாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை' என்றார்.

இறுதியாக பேச வந்தார் பாரதிராஜா. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வீரனாக போற்றப்பட வேண்டியவன் பிரபாகரன். இதை சொல்வதில் எனக்கு ஒன்றும் பயம் இல்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவிரவாதி என்றால், பிரபாகரனும் தீவிரவாதிதான். பகத்சிங் தீவிரவாதி என்றால் பிரபாகரனும் தீவிரவாதிதான். அவர்கள் எப்படி தனது சொந்த மண்ணிற்காக போராடினார்களோ, அப்படிதான் பிரபாகரனும் போராடி வருகிறார். நான் ஒரு வாரம் கிளிநொச்சியில் தங்கியிருந்தேன். அங்கே பிச்சைக்காரர்கள் இல்லை. திருட்டு இல்லை. அப்படி ஒரு நகரம் இன்று அழிந்துவிட்டது.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய முன்வராத மத்திய அரசை எதிர்க்கும் விதமாக நான் வாங்கிய பத்மஸ்ரீ விருதை உங்கள் முன்னே தூக்கி எறிந்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதை நான் வீட்டில் மாட்டியிருக்கும் போது பெருமையாக இருந்தது. இப்போது ஒரு சிரங்கை பார்ப்பது போல இருக்கிறது. இதை தூக்கி எறியவா? அல்லது உடைக்கவா? என்றார் பார்வையாளர்களை பார்த்து. உடையுங்கள்... உடையுங்கள் என்று ஒரே ஆரவாரம்! நல்லவேளையாக அவர்களை அமைதிப்படுத்திய அமீர், இதை உடைப்பது தவறு. நாம் இந்த விருதை மத்திய அரசுக்கு முறையாக திருப்பி அனுப்புவோம் என்றார்.

தலைவர் தந்த திருமண உதவி! ரசிகர்கள் கொண்டாட்டம்...


கருகரு மீசையோடு மன்றத்திற்குள் நுழைந்தவர்கள், இப்போது வெளுப்பு மீசையோடும், வேகாத ஆசையோடும் உலா வருகிறார்கள். தலைவரு முதல்வராயிருவாரு. நாமெல்லாம் எம்எல்ஏ என்ற கனவிலும், அது கிடைக்காவிட்டாலும், வட்டம், மாவட்டமாவது கிடைக்கும் என்ற கனவிலும் இருந்தவர்களுக்கு புள்ளைகளை கரையேற்றுகிற கடமையும் சேர்ந்து கொண்டது.

இத்தனை வருஷமா உங்களுக்காக உழைச்சுட்டோம். எங்களுக்காக ஏதாவது பண்ணுங்க என்று ஒருமுறை நேரடியாகவே தலைவரை கேட்டும் விட்டார்கள். மணியடிச்ச சத்தம் மகமாயி காதிலேயும், மகராசன் காதிலேயும் விழுந்திருச்சு! இதோ, அதற்குண்டான வேலைகளை செஞ்சுட்டு ஷ§ட்டிங் போயிட்டாராம்.

சத்தம் போடாம பலரை மண்டபத்துக்கு அழைத்த தலைவர், அவங்க பிள்ளைகளுக்கு தேவையான கல்யாண செலவை கொடுத்ததோடு, ஜாம் ஜாம்னு நடத்துங்க. எதுக்கும் கவலைப்படாதீங்க என்று ஆறுதல் சொன்னாராம். ஆனாலும், ஊரை கூட்டி கொண்டாட வேண்டிய இந்த சங்கதியை கப்சிப் என்று தலைவர் முடித்ததற்கு என்ன காரணம்? வேறொன்றுமில்லை. இதை வெளியே சொன்னால் இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் மண்டபத்தில் திரண்டு விடுவார்கள் என்ற அச்சம்தான்!

ஆனாலும் தலைவரோட நல்ல மனசுக்கு ஒரு சூப்பர் சல்யூட்!

'கிக்' ஆட்டம்! சின்னத்திரை தொகுப்பாளினி ஜிலுஜிலு...


அட, நீதானா அந்த குயில்னு ஆச்சர்யப்பட்டோம் அவரை பார்த்து! குயில் படத்தின் ஆடியோ வெளியீட்Maheswariடு விழாவில் திரையிடப்பட்ட அந்த பாடலில் சின்னத்திரை தொகுப்பாளினி மகேஸ்வரியை பார்த்துதான் இந்த ஆச்சர்யம்! அவர் ஆடிய குத்தாட்டத்திற்கு தியேட்டரே கலகல...

குயில் என்ற டைட்டிலுக்கு கீழே 'கோட்டான்களை அடக்கும்' என்ற சப் டைட்டில். ஒரு பொண்ணு ஆம்பளை பசங்களை வெளுத்து வாங்குகிற கதையோ? டைரக்டர் ஜெயபாண்டியனிடம் கேட்டால், சுருக்கமாக நறுக்கு தெறித்தார். கல்லூரியில் படிக்கும் இரண்டு காதல் ஜோடிகளை ஒரு கும்பல் மிரட்டுகிறது. இதற்கு பயந்து திருநெல்வேலியில் உள்ள குக்கிராமத்தில் ஒளிகிறது ஜோடிகள். போன இடத்திலும் ஒரு பயங்கரம். ஜோடிகள் எஸ்கேப் ஆனார்களா என்பது க்ளைமாக்ஸ்? இதுதாங்க கதை என்றார் ஜெயபாண்டியன்.

ஆடியோவை வெளியிட்டு பேசியவர்களில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதனின் பேச்சு கணீர்! இங்கே விளம்பரத்திற்கு கீழே இந்திய தமிழனாக இருப்போம். இலங்கை தமிழனை காப்போம்னு எழுதியிருக்காங்க. ஆனால் அதுக்கு முன் புறமாக நாற்காலியை போட்டு நாமளே அந்த எழுத்தை மறைச்சிட்டோம். நாற்காலிதான் இலங்கை தமிழர்களை மறைக்குது. அதுவும் நம்மளோட நாற்காலியே! என்றார். 'நான் அரசியல் பேசவில்லை' என்று அவர் கூடவே ஒரு வார்த்தையையும் சேர்க்க, தியேட்டரில் பயங்கர அப்ளாஸ்.

படத்தை தயாரித்திருப்பது பெங்களூரு ரமேஷ்ரெட்டி. கன்னடத்திலிருந்து தமிழ் படம் எடுக்க வந்திருக்கும் இவரை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஐபிகள்.

நடுரோட்டில் விஜயகாந்த் `திடீர்' போராட்டம்-பணிந்த போலீஸ்


பெண்ணாகரம்: தனது கட்சியின் தொண்டர்கள் வந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ததால் பெண்ணாகரத்தில் விஜயகாந்த் திடீரென தனது வேனை நடுரோட்டில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தேமுதிக தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பெண்ணாகரம் வந்தார் விஜய்காந்த்.

அவரது கூட்டத்துக்கு பல அருகாமை கிராமங்களைச் சேர்ந்த தொண்டர்கள் கட்சிக் கொடி கட்டப்பட்ட சரக்கு வேன்களில் அங்கு வந்தனர்.

இது விதிகளுக்கு மாறானது என கூறிய போலீசார் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து விஜயகாந்த்திடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மிகக் கோபமாகப் பேசிய விஜயகாந்த்,

ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வாகனங்களில் வந்தால் அவர்களின் வாகனங்களை செல்ல அனுமதிக்கிறீர்கள். ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் என்னைக் காண எனது தொண்டர்கள் வாகனங்களில் வருகிறார்கள். அவர்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள்?.

தேமுதிக அமைதியை விரும்புகிறது. நான் எனது கட்சியில் உள்ள இளைஞர்களை நல்ல பாதைக்கு அழைத்து செல்கிறேன். அவர்களை அராஜாக பாதைக்கு கொண்டு சென்று விடாதீர்கள்.

தேமுதிகவினர் எங்கு சென்றாலும் கொடியை பிடுங்குவது, வாகனங்களை செல்ல விடாமல் தடுப்பது என தொடர்ந்து அராஜக செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக செயல் வீரர்கள் கூட்டம் என்றால் கூட பஸ்களில் அழைத்துச் செல்கிறார்கள். அவர்களின் வாகனங்களை எல்லாம் ஏன் பறிமுதல் செய்வதில்லை?. இது சம்பந்தமாக நான் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்வேன்.

போலீஸ் அதிகாரிகள் எனது தொண்டர்களின் வாகனங்களை மீண்டும் ஒப்படைக்கும் வரை நான் இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறிவிட்டு வேனுக்குள்ளேயே அமர்ந்துகொண்டார்.

சாலை மறியலில் தொண்டர்கள்...

இதையடுத்து ஆவேசமான ஆயிரக்கணக்கான தொண்டர்களும் நடுரோட்டில் வேனை சுற்றி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். லீசுக்கும் திமுகவுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

சுமார் 1 மணி நேரம் கடந்தபோதும் விஜயகாந்த் நகரவில்லை. இதையடுத்து டிஎஸ்பி பஞ்சவர்ணம், உதவி தேர்தல் அலுவலர் சண்முகம், தாசில்தார் மல்லிகா ஆகியோர் அங்கு வந்து விஜயகாந்துடன் பேச்சு நடத்தினர்.

ஆனால், வாகனங்களைத் தந்தால் மட்டுமே போவேன் என்று விஜய்காந்த் கூறிவிட்டார். இதையடுத்து பறிமுதல் செய்த வாகனங்களை ஒப்படைத்து விடுவதாகவும், வழக்கு ஏதும் போட மாட்டோம் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதைத் தொடர்ந்து தனது 'வேன் உள்ளிருப்புப் போராட்டத்தை' கைவிட்ட மீண்டும் சிறிது நேரம் தொண்டர்களிடையே உரையாற்றிவிட்டு வெற்றிகரமாக அங்கிருந்து கிளம்பினார்.

காங்கிரஸ் கட்சியில் கூப்பிடறாங்கோ!- நமீதா


எக்குத் தப்பாக கவர்ச்சி காட்டி, சிறுசுகளையும் பெருசுகளையும் தப்புத்தப்பாக கற்பனை பண்ண வைக்கும் கோடம்பாக்கம் ஹாட் நமீதாவை எப்படியாவது தேர்தல் களத்தில் இழுத்துப் போட முயன்று வருகின்றனவாம் தமிழக கட்சிகள் சில.

நமீதா நின்றால், நடந்தால், உட்கார்ந்தால்... என எல்லாமே செய்தியாகிவிடுவதாலும், இவர் ஜவுளிக்கடை திறக்கப் போனாலும் மாநாடு கணக்காக கூட்டம் கூடி விடுவதாலும், அவரது கவர்ச்சி இளைஞர்களின் ஓட்டுக்களை லபக்கென்று பறித்துவிடும் என்று திட்டம் தீட்டிய காங்கிரஸ், நமீதாவிடம் நேரடியாகவே டீலிங்கில் இறங்கியுள்ளது.

ஆனால் டைம் இல்லை என்று நிர்வாகிகளையும் சூட்கேஸ்களையும் திருப்பி அனுப்பிவிட்டாராம்!

இதுகுறித்து நமீதா கூறுகையில், பிரச்சாரத்துக்கு என்னை காங்கிரஸ் கட்சி அழைத்தது உண்மைதான். ஆனால் நிறைய படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திட்டேன். அதனால நேரமில்லேன்னு சொல்லிட்டேன். பணத்தைவிட கமிட்மெண்ட்தான் எனக்கு முக்கியம், என்றாராம் பக்கா டிப்ளமாட்டிக்காக.

நமீதா இப்போது தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளத்திலும் 'செம ஹாட் மச்சி' என்று கலக்கி வருவதால், அவரை பிரச்சாரத்துக்கு கட்சி தலைமை அழைத்திருக்கும். அவர் வந்திருந்தால் மக்களை கூடுதலாக கவர்ந்திழுத்திருக்க முடியும், என்கிறார் காங்கிரஸ் நிர்வாகி.

இந்தி கஜினி..சந்திரசேகர்..ரூ.5 கோடி!


இந்தி கஜினி தயாரிப்பாளர் கீதா ஆர்ட்ஸ் நீதிமன்றத்தில் செலுத்திய காப்புத் தொகை ரூ.5 கோடியை அந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பின் உரிமையாளர் சேலம் சந்திரசேகரனே எடுத்துக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் தயாரான படம் கஜினி. இந்தப் படத்தைத் தயாரித்தவர் சேலம் சந்திரசேகரன். இவர் தயாரித்த ஒரே வெற்றிப் படம் இதுதான்.

இந்தப் படத்தை இந்தியில் கீதா ஆர்ட்ஸ் தயாரித்தது. இது சிரஞ்சீவியின் மைத்துனருக்குச் சொந்தமானது. தமிழில் இயக்கிய முருகதாசே இந்தப் படத்தையும் இயக்கினார்.

சரியாக படத்தை வெளியிடும் நேரமாகப் பார்த்து, தன் அனுமதியின்றி படம் தயாரித்து விட்டதாக வழக்கு தொடர்ந்தார் சேலம் சந்திரசேகர். உடனே இடைக்காலத் தடை கோரினார்.

ஆனால் பெரும் தொகை முதலீடு செய்யப்பட்ட அந்தப் படத்தை வெளியிட்டால்தான் சிக்கலிலிருந்து தப்பிக்க முடியும் என கீதா ஆர்ட்ஸ் கூறியதால், ரூ.5 கோடியை நீதிமன்றத்தில் டெபாஸிட் செய்துவிட்டு ரிலீஸ் பண்ணுங்கள் என்று கூறிவிட்டது நீதிமன்றம்.

பின்னர் படம் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது. இந் நிலையில் இந்திப்பட வசூலில் சரிபாதி உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நடந்து வருகிறது.

இந் நிலையில், கீதா ஆர்ட்ஸ் டெபாஸிட் செய்த ரூ.5 கோடி தனக்கே சொந்தம் என்று சொந்தம் கொண்டாடி இன்னொரு மனுப் போட்டார். இந்தப் பணத்தை வாபஸ் பெறும் உரிமையை தனக்குத் தர வேண்டும் என கீதா ஆர்ட்ஸும் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதி டி. முருகேசன், நீதிபதி சி.எஸ். கர்ணன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ரூ. 5 கோடியை தயாரிப்பாளர் சந்திரசேகர் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த வழக்கு முடியும் வரை ரூ. 5 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தை அவர் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

சேலம் சந்திரசேகர் தொடர் தோல்விப் படங்கள் தந்ததால், தொடர்ந்து படமெடுக்க முடியாமல் சேலத்துக்கே போய்விட்டார். இப்போது கஜினி வழக்கு மூலம் பெரும் தொகையைப் பெற்றுள்ளார்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா?

கஜினியே ஒரிஜினல் கதை கிடையாது. மொமண்டோ படத்தின் அப்பட்டமான தழுவல். நியாயமாக அந்தப் பட உரிமையாளர் வழக்குத் தொடர்ந்தால் சேலம் சந்திரசேகர் என்ன ஆவார்?

பெண் ரசிகைகள் ரொம்ப முக்கியம்-சூர்யா


வாரணம் ஆயிரம் என்ற சின்ன சறுக்கலுக்குப் பின் வெளிவந்த அயன் படம் சூப்பர் டூப்பராகிவிட்டதில் ஏக சந்தோஷத்திலிருக்கிறார் சூர்யா.

இந்தப் படம் வீடொக்கடே என்ற தலைப்பில் தெலுங்கிலும் வெளியாகிறது. சூர்யாவுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் படத்தை தாங்களே நேரடியாக வெளியிடுகிறார்கள் ஏவிஎம் நிறுவனத்தினர்.

அதுமட்டுமல்ல, தான் நல்ல படங்கள் என்று நம்புவதை இனி தெலுங்கிலும் சேர்த்தே ரிலீஸ் செய்யப் போகிறாராம் சூர்யா.

"படத்துக்குப் படம் வித்தியாசமான வேடங்களில் நடிப்பதைத்தான் நான் விரும்புகிறேன். திரும்பத் திரும்ப ஒரே மாதிரி கதைகளில் நடிப்பதை விரும்பவில்லை..." எனும் சூர்யாவுக்கு, இப்போது முன்பை விட அதிகமாக ரசிகர்கள் பெருகியிருக்கிறார்களாம்.

"ரசிகர்கள் என்னை உற்சாகப்படுத்துகிறார்கள். பதிலுக்கு அவர்களுக்கு நல்ல படங்கள் தர விரும்புகிறேன். எனக்கும் ரசிகர்களுக்கும் உள்ள தொடர்பு இவ்வளவுதான். வேறு எந்த நோக்கமும் எனக்கில்லை. எனக்குப் பெண் ரசிகைகள் முக்கியம். என்னை அவர்கள் வீட்டில் ஒருவனாக நினைக்கத் துவங்கியதால்தான் இத்தனை ஆதரவு கிடைத்துள்ளது. பெண்கள் ஆதரவு இல்லாவிட்டால் நிலைப்பது கஷ்டம்" என்கிறார் சூர்யா

'கிளிக்'குக்காக காத்திருக்கும் சதா!


படு கவர்ச்சியாக தான் நடித்திருக்கும் இந்திப் படமான கிளிக் எப்போது வெளியாகும் என காத்திருக்கிறார் சதா.

தமிழிலும், பிற தென்னிந்திய மொழிகளிலும் சதாவுக்கு சுத்தமாக வாய்ப்புகள் இல்லை. இதனால் இந்திக்குள் புகுந்துள்ளார்.

ஷ்ரேயாஸ் தல்படேவுடன் ஜோடியாக கிளிக் என்ற படத்தில் நடித்துள்ளார். இது இந்தியில் முதல் படம் என்பதால் இதுவரை காட்டியிராத கவர்ச்சியைக் காட்டியுள்ளாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கவர்ச்சிகரமான மாடல் வேடத்தில் நான் நடித்துள்ளேன். எனவேதான் நிறைய கவர்ச்சி காட்ட வேண்டியதாயிற்று. இந்தப் படம் எனக்கு பாலிவுட்டில் தனி இடத்தைப் பிடித்துக் கொடுக்கும் என நம்புகிறேன். படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறேன்.

நடிகர், நடிகைகளுக்கு மொழி ஒரு தடையே இல்லை. எந்த மொழிப் படமாக இருந்தாலும் நான் நடிக்கத் தயார் என்கிறார்.

அடுத்து தெலுங்கில் அ ஆ இ ஈ என்ற படத்தில் நடிக்கப் போகிறாராம். இது எனக்கு தெலுங்கில் மறுபடியும் மார்க்கெட்டைப் பிடித்துக் கொடுக்கும் என்கிறார் சந்தோஷமாக.

நன்றாக இருந்தால் சரிதான்..

செல்வராகவனுடன் மோதலா? - ரீமா சென்


என்னுடைய ஒரு வருட கால்ஷீட்டை வீணடித்துவிட்டதாக செல்வராகவனுடன் சண்டை போட்டேன் என்று வரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என நடிகை ரீமா சென் கூறியுள்ளார்.

செல்வராகவன் இயக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்' பட வெளியீடு, சிந்துபாத் கதை மாதிரி இழுத்துக் கொண்டே போகிறது.

கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடிக்கும் இதன் படப்பிடிப்பு 2 வருடங்களுக்கு முன் துவங்கியது. ஆனால் படப்பிடிப்பு நாட்கள் நீண்டதால் அதில் நடித்தவர்கள் வேறு படங்களுக்கு செல்ல முடியவில்லை.

குறிப்பாக ரீமாசென் அந்த ஒரு படத்திலேயே முடங்கினார். வேறு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் அவரால் போக முடியவில்லை. நடிகைகளின் கேரியருக்கு தமிழில் ஆயுசு வெகு குறைவு என்பதால், கைநழுவிப்போன வாய்ப்புகளை நினைத்து ரீமா கலங்குவதாக தகவல் பரவியது. இதனால் செல்வராகவனுக்கும் ரீமா சென்னுக்கும் கடும் மோதல் எழுந்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து ரீமா சென் கூறுகையில்,

"ஆயிரத்தில் ஒருவன் படம் மெகா பட்ஜெட்டில் தயாராகிறது. இதில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமையான விஷயம். இந்தியா முழுக்க படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் திட்டமிட்டப்படி படப்பிடிப்பை நடத்தவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்கு செல்வராகவன் மடடுமே காரணமல்ல. இதற்காக நான் செல்வராகவனுடன் சண்டை போட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை.

இன்னும் சில வாரங்களில் ஆயிரத்தில் ஒருவன் படம் வந்துவிடும் என நம்புகிறேன்", என்ற ரீமா சென், விஷாலுடன் நடிக்கவிருந்த தீராத விளையாட்டுப் பிள்ளை வாய்ப்பையும் உதறிவிட்டாராம்.

"குறிப்பாகக் காரணம் என எதையும் சொல்ல விரும்பவில்லை. இந்தப்படம் வேண்டாம் என்று முடிவெடுத்தேன். அதனால் விலகிவிட்டேன்", என்றார் ரீமா.

உலகின் டாப் 10 செக்ஸி பெண்கள் பட்டியலில் பரீதா பின்டோ


இங்கிலாந்தைச் சேர்ந்த எப்.எச்.எம். இதழ் நடத்திய உலகின் டாப் 10 செக்ஸி பெண்கள் போட்டியில், ஸ்லம்டாக் மில்லியனர் பட நாயகி பரீதா பின்டோவும் இடம் பெற்றுள்ளார்.

பத்தாவது இடம் அவருக்குக் கிடைத்துள்ளது. பாடகி செர்லி கோல் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த மாதம்தான் டாப் 5 ஹாலிவுட் செக்ஸி பெண்கள் பட்டியலில் பரீதா பின்டோ இடம் பெற்றார். இந்த நிலையில் உலகின் டாப் 10 செக்ஸி பெண்கள் வரிசைக்கு அவர் முன்னேறியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தவர் மேகான் பாக்ஸ். ஆனால் இந்த ஆண்டு அவர் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அவரது இடத்தை பாடகி செர்லி கோல் பெற்றுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு அழகி முதலிடத்தைப் பிடிப்பது கடந்த 3 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் மனைவி கார்லா ப்ரூனிக்கு இந்தப் பட்டியலில் 40வது இடம் கிடைத்துள்ளது.

உலகளவில் நடந்த கருத்துக் கணிப்பில் கிட்டத்தட்ட 1 கோடி பேர் வாக்களித்து இந்த அழகிகளைத் தேர்வு செய்துள்ளனராம்.

Thursday, April 23, 2009

பத்மஸ்ரீ விருதை உதறினார் பாரதிராஜா - திருப்பி அனுப்புகிறார்


சென்னை: மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்பப் போவதாக இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,

பாரதிராஜா எதையும் எதிர்பாராதவன். எனக்கு நாற்காலி கனவு கிடையாது. `தமிழன்' என்பதற்கு இணையான நாற்காலி எதுவும் கிடையாது. இந்த நூற்றாண்டில் பிரபாகரனுடன் யாரையும் ஒப்பிட்டு சொல்ல முடியாது.

பிரபாகரனை சாதாரணமாக நினைக்காதீர்கள்..

நான் பிரபாகரனை சந்தித்தபோது, எனக்கு ரோல் மாடல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் என்றார். அவருடைய சுயசரிதையை அடிக்கடி படிப்பதாக கூறினார். அவரை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.

28 வருடங்களாக உறுதியாக இருக்கும் உரமுள்ள தமிழன். அவருக்கு மைக் பிடித்து பேச தெரியாது. செயலில்தான் காட்ட தெரியும்.

அவரை ஜெயிக்க முடியாத காரணத்தால், ராஜபக்சேவுக்கு இந்திய அரசு கொல்லைப்புற வழியாக ஆயுதங்களை அனுப்பி ஜெயிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. முழு முதல் குற்றவாளி மத்திய அரசுதான்.

உள்ளே போட்டாலும் கவலை இல்லை..

சோனியாவை விமர்சித்தால் தேச விரோத குற்றம் என்கிறார்கள். எங்களை உள்ளே தூக்கி போட்டாலும் கவலை இல்லை. நாங்கள் அரசியல்வாதிகளிடம் யாசகம் கேட்கவில்லை. எங்கள் சொந்த ரத்தங்களை, குழந்தைகளை, சகோதரிகளை காப்பாற்ற வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

இதை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் விதமாக, எனக்கு மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புகிறேன் என்றார்.

தமிழர்களின் ஓட்டுக்களை கேட்க சோனியாவுக்கு தகுதியே இல்லை - திரையுலகம் தீர்மானம்


சென்னை: சோனியா காந்தி தமிழகத்திற்கு வரக் கூடாது. தமிழர்களின் ஓட்டுக்களைக் கேட்க அவருக்கு தகுதியே கிடையாது. மீறி அவர் தமிழகம் வந்தால் எங்களின் முழு எதிர்ப்பையும் காட்டுவோம் என்று பாரதிராஜா தலைமையிலான திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் தீர்மானம் போட்டுள்ளது.

திரையுலகினர் பலரும் திரண்டு, புதிதாக திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற புதிய அமைப்பினைத் தொடங்கியுள்ளனர். ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி தொடர் போராட்டம் நடத்த இந்த அமைப்பு தீர்மானித்துள்ளது.

முதல் கட்டமாக நேற்று பிரமாண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திடீரென அறிவிக்கப்பட்ட போராட்டமாக இருந்தாலும் பெரும் திரளான திரையுலகினர் இதில் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உள்ளிட்டோரும் வந்து ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

கூட்டத்தின் இறுதியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை பாரதிராஜா படித்தார். தீர்மானங்கள் விவரம்:

வரலாறு மன்னிக்க இயலாத துரோகம்..

இலங்கையில் யுத்தத்தை நிறுத்துவதற்கு இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்காமல், அழித்தொழிக்கும் இந்த இனப்போருக்கு ஆயுதம் தந்து உதவுகிறது என்பது எந்த வரலாறும் மன்னிக்க இயலாத துரோகம்.

இப்போதும் ஒரு வாய்ப்பிருக்கிறது. இந்த நொடி போர் நிறுத்தம் வேண்டுமென்று இந்திய அரசு, சிங்கள அரசுக்கு ஆணையிட முடியும். இன்று இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் ஆளும்கட்சி அதை செய்துவிட்டு, தமிழகத்துக்கு வந்து தமிழக மக்களிடம் வாக்குகளை கேட்பதுதான் நியாயமானது. நேர்மையானது.

அடிவயிற்றில் பசியோடு எரியும் உலைக்கு அரிசி போடாமல், செத்தபிறகு வாய்க்கரிசி போட வரும் கேவலத்தை உலகின் எந்த இனமும் ஏற்காது. தமிழர்கள் வாழ்வை, உயிரை காப்பாற்ற தவறிய உங்களுக்கு தமிழர்களின் வாக்குகளை கேட்கும் தார்மீக தகுதி இல்லை என்று நாங்கள் ஒருமனதாக சொல்கிறோம்.

மன்மோகன், சோனியா, பிரணாப் வரக் கூடாது..


போர் நிறுத்தம் செய்து இனப்படுகொலையை தடுத்து நிறுத்தாமல் இந்திய அரசின் பிரதமர் மன்மோகன்சிங்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜியும், ஆட்சியில் இருக்கும் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியும் தாங்களாகவே தமிழகத்துக்கு வந்து வாக்கு கேட்கும் முயற்சியை மனசாட்சியின் பேரால் நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஒருமித்த குரலில் முன்மொழிகிறோம்.

இந்த எங்களது உணர்வுப்பூர்வமான கோரிக்கையை நிராகரித்துவிட்டு நீங்கள் தமிழகம் வந்தால், எங்கள் முழு எதிர்ப்பை காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறோம்.

எங்கள் தீர்மானத்தில் ததும்பும் உணர்வுகளை அறிந்துகொண்டு, உணர்ந்துகொண்டு, புரிந்துகொண்டு உடனடி போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட வேண்டுமென வற்புறுத்துகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆந்திராவிலிருந்து தமிழுக்கு


பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் சினிமாவுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. அதிலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்கள் சினிமாவுக்கு வருவது அதிகரித்துள்ளது.

அப்படி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ஜே.கே. ரித்தீஷ் நடிகரானதோடு, இன்று அரசியலிலும் இறங்கிவிட்டார். அதேபோல, ஆசிரியர் பணியோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவரும் எம்.டி. முத்து 'புதிய பயணம்' என்ற படத்தை இயக்குவதோடு, நாயகனாகவும் நடிக்கிறார்.

இப்படி ஆந்திராவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் ஆதித்யராம், தெலுங்கில் பல முன்னணி இயக்குனர்களை வைத்து பல படங்களைத் தயாரித்தார். பல வெற்றிப் படங்களாகவும் அமைந்தன.

அவர் தற்போது ஆதித்யராம் மூவிஸ் என்ற கம்பெனியை ஆரம்பித்து தமிழில் ஒரே நேரத்தில் பத்து படங்களை தயாரிக்க திட்டமிட்டு களத்தில் இறங்கியுள்ளார். அதற்காக இங்குள்ள முன்னணி ஹீரோக்கள், இயக்குனர்களிடம் பேசி வருகிறார்.

முன்னணி இயக்குனர்களோடு, திறமையுள்ள புதுமுக இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால் இன்னும் நல்ல விஷயமாக அமையும்.

ரஜினி படமென்றால் ஓடு‌ம் தயாரிப்பாளர்


இன்சைட் மீடியா பிரபலமான சினிமா நிறுவனம். இதன் உரிமையாளர் நாக்ரவி. ஒரே மேடையில் 'பிஞ்சு மனசு', 'திருமண அழைப்பிதழ்', உன்னை கண் தேடுதே', 'கலாசாரம்' என நான்கு படங்களின் பாடல் வெளியீட்டு விழாவை நடத்தி அசத்தியது.

இதுவரை மொத்தம் 128 படங்களின் பாடல்களை வாங்கி விநியோகம் செய்துள்ளது. இதுபோன்ற சின்னச் சின்ன படங்களின் ஆடியோ உரிமை வாங்கி வெளியிடுவதோடு, சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரிக்கவும் முடிவு செய்து வைத்திருந்தார் நாக்ரவி. ஆனால் சிலரின் பேச்சைக் கேட்டு ரஜினி நடி‌த்த 'குசேலன்' படத்‌‌தி‌ன் வெ‌ளிநா‌ட்டு உ‌ரிமை பெ‌ற்று பல கோடிகளை இழந்துள்ளார்.

மீண்டும் அந்த இழப்பில் இருந்து மீண்டு வந்தவர், புது தெம்போடு மீண்டும் பட்ஜெட் படங்களை இயக்கவும் முடிவு செய்துள்ளார். மேலும், சூப்பர் ஸ்டாரின் படங்களை எடுப்பதோ, ஆடியோ உரிமை வாங்குவதோ, விநியோகம் செய்வது என எதிலும் இறங்கமாட்டேன். ஒரு தடவை வாங்கிய அடி போதும் என்று தெளிவுடன் பேசுகிறார் நாக்ரவி. சூடு கண்ட பூனை என்பது இவர்தானோ.

உயிருக்கு பயப்படாத நடிகர்


துடிப்புமிக்க இளம் கதாநாயகர்களில் காதலில் விழுந்தேன் பட நாயகன் நகுலும் ஒருவர். பெரும்பாலும் டூப் போடாமல் நடிப்பதில் ஆர்வம் காட்டக் கூடியவர். அந்தப் படத்திலேயே காடுகளில் ஓடும் காட்சிகளில் கீழே விழுந்து அடிபட்ட அனுபவங்கள் நிறைய உண்டு.

அதேபோல், தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் 'கந்த கோட்டை'. இப்படத்துக்காக மாதவரம் பால் பண்ணை அருகே பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டது. அக்காட்சிக்காக ப‌‌த்துக்கும் மேற்பட்ட லாரிகள் கொண்டு வரப்பட்டன. ஒரு லாரியிலிருந்து இன்னொரு லாரியில் தாவிக் குதித்து வில்லனிடம் மோதவேண்டும்.

அப்படி மோதுவதற்காக இடுப்பில் கயிறு கட்டி ஒத்திகை காட்சிகள் எடுக்கப்பட்டன. அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் நகுலின் இடுப்பில் கட்டியிருந்த கயிர் அறுந்துபோக, லாரியில் கண்ணாடியின் மீது விழுந்து தலை, கால்களில் அடிபட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரிஸ்க் எடு‌க்க வேண்டியதுதான் ஆனால் அதைவிட உயிரும் முக்கியமல்லவா.

சொன்னார் செய்தார் சசிகுமார்


பல ஆண்டுகளாய் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ஜேம்ஸ் வசந்தன், முதல் முறையாக இசையமைத்த படம் சுப்ரமணியபுரம்.

அந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் பிரமாதமாக இருக்க, குறிப்பாக 'கண்கள் இரண்டால்' சூப்பர் ஹிட்டாக அடுத்தடுத்து தொடர்ந்து வாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

சுப்ரமணியபுரம் படத்தை இயக்கிய சசிகுமார் படித்த கல்லூரியில் அவருக்கு ஆசிரியராக இருந்தவர் ஜேம்ஸ் வசந்தன். படித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் சசிகுமார், ஜேம்ஸ் வசந்தனிடம் நான் இயக்குனர் ஆகும் முதல் படத்துக்கு நீங்கள்தான் இசையமைப்பாளர் என்று விளையாட்டாக சொல்லி இருக்கிறார்.

உண்மையில் அதுதான் நடந்துள்ளது. சசிகுமாரின் முதல் படமான சுப்ரமணியபுரம் படத்துக்கு வாய்ப்பளித்தார்.

மேலும் சுப்ரமணியபுரம் படத்தில் தொடங்கப்பட்ட முதல் பயணம் தொடர்ந்து தற்போது சசிகுமார் தயாரிக்கும் 'பசங்க', 'யாதுமாகி', 'காவலர் குடியிருப்பு' பெயர் சூட்டப்படாத இரண்டு படங்கள் என கைவசம் ஐந்து படங்கள் வைத்துள்ளார் ஜேம்ஸ்.

எலக்ட்ரானிக் நாயகி ‌ந‌மிதா


சமீபத்தில் வைகை படத்தின் பாடல் இசை வெளியீட்டு விழாவின் போது 'ஆறடி ஆல்கஹால்' என்ற பட்டத்தை பெற்றார் கனவு நாயகி நமிதா.

கைவசம் ஏராளமான படங்களை வைத்துக் கொண்டிருக்கும் இவர், படம் பற்றிய கதைகள் கேட்க, ஒப்பந்தம் செய்ய எந்த இயக்குனர் அல்லது தயாரிப்பாளர்களை வீட்டுக்கு அழைப்பதில்லை. தனக்கு ராசியாக கருதப்படும் தாஜ் ஹோட்டலின் ஒரு குறிப்பிட்ட அறையில்தான் சந்திப்பாராம்.

மேலும், படத்தில் நடித்து சம்பாதித்தாலும், இது எத்தனை நாளைக்கு நிலைக்கும் என்று தெரியாது. இந்த அழகும் கவர்ச்சியும் உள்ளவரைதானே என்பதை தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார் நமிதா.

இன்று கொண்டாடும் ரசிகர்கள் நாளை என்னைவிட இன்னொரு அழகி வந்தால் அவர்கள் பின்னால் சென்று விடுவார்கள் என்ற உண்மையை புரிந்துகொண்டவர், தற்போது குஜராத்தில் எலக்ட்ரானிக்ஸ் பாகங்களை விற்கும் கடை ஒன்றை ஆரம்பித்து சம்பாதித்து வருகிறார்.

நமிதா என்றால் நடிக்கவும் தெரியும், பிஸினஸ் ஆரம்பித்து நிர்வகிக்கவும் தெரியும் என்று காட்டி வருகிறார்.

ஐம்பது லட்சத்தில் சினிமா


ஐம்பது அல்லது அறுபது லட்சங்கள் இருந்தால் போதும் ஒரு படத்தை எடுத்துவிடலாம் என்பது இன்று சாத்தியப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது ஃபிலிம் இல்லாமல் டிஜிட்டல் கேமரா மூலம். அதனால் பல லட்சங்கள் தயாரிப்பாளர்களுக்கு மிச்சமாகிறது. அப்படி எடுக்கப்பட்ட படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

உதாரணமாக அஃகு, சிலந்தி போன்ற படங்கள். அதேபோல், சமீபத்தில் வெளிவரவிருக்கும் 'உச்சகட்டம்', 'எதுவும் நடக்கும்' போன்ற படங்களும் டிஜிட்டில் முறையில் படமாக்கப்பட்டதுதான்.

புதிய இயக்குனர்கள் அதிக ஃபிலிம் ரோல்களை செலவு செய்கிறார்கள். அதற்காக வீணாகும் செலவை வேறு விதமான விஷயங்களுக்கு பயன்படுத்தலாமே என்கிறார்கள் டிஜிட்டல் பட தயாரிப்பாளர்கள்.

ஆனால், அது அவ்வளவு சாத்தியமில்லை. படத்தின் தரம் குறைவதோடு, படத்தில் பணிபுரியும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் டிஜிட்டல் கேமராவின் நுணுக்கம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல முறையில் எடுக்க முடியும்.

யாரேனும் தவறு செய்தால் அதை அப்பட்டமாக காட்டிக் கொடுத்துவிடும் என்கிறார் 'தனம்' படத்தை இயக்கிய ஷிவா. இவர் தற்போது 'குலசேகரனும் கூலிப்படையும்' என்ற படத்தை இயக்க உள்ளார். அது ஃபிலிம் படம்தானாம்.

தமிழர்களைக் கொல்லும் ராஜபக்சே நிம்மதியாக வாழ முடியாது - சத்யராஜ் ஆவேசம்


தமிழர்களை படுகொலை செய்து வரும் ராஜபக்சே இனி நிம்மதியாக வாழ முடியாது. ஈழத் தமிழர் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று ஆவேசமாக கூறியுள்ளார் நடிகர் சத்யராஜ்.

திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற புதிய குடையின் கீழ் தமிழ்த் திரையுலகினர் இன்று சென்னையில் பிரமாண்ட உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தினர்.

இதில் பாரதிராஜா, பாலுமகேந்திரா, புலமைப்பித்தன், நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் சீமான், அமீர் உள்ளிட்ட பலர் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்துடன் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. போராட்டம் நடந்த இடத்தைச் சுற்றிலும் இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் அவலங்கள், பிணக் குவியல் உள்ளிட்டவற்றின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

போராட்டத்தின் தொடக்கத்தில் ஈழத்தில் உயிர் நீத்தவர்களுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது இயக்குநர் சேரன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, ஈழத் தியாகிகளுக்கு வீர வணக்கம் என்று உரத்துக் குரல் எழுப்பினார்.

ராஜபக்சேவுக்கு எச்சரிக்கை..

நிகழ்ச்சியில் சத்யராஜ் மிகவும் ஆவேசமாக பேசினார்.

அவர் பேசுகையில், ஈழம் வெளிநாடு அல்ல, நம்நாடு. அங்கு போக ஆசைப்படுகிறேன். தமிழ் ஈழம் அமையுமானால் உலகின் முன் மாதிரி நாடாக அது இருக்கும்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கனடா, லண்டன் போன்ற வெளிநாடுகளில் எல்லாம் தமிழர்கள் போராட்டம் நடத்துகின்றனர். குழந்தைகளோடு பெண்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.

இத்தனைக்கும் இந்த போராட்டங்களை வழி நடத்துவது 20 வயது கொண்ட இளைஞர்கள்தான். அவர்களுக்கு பழைய வரலாறை சொல்லிக்கொடுக்க அவசியம் இல்லை.

விடுதலைப் போராட்டம் இலங்கையில் ஓயாது. தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும். அங்கு படுகொலை செய்யும் ராஜபக்சே இனி நிம்மதியாக வாழவே முடியாது என்றார்.

அகத்தில் கறுத்த சோனியா..

புலவர் புலமைப்பித்தன் மிகவும் வேதனையோடு பேசினார். அவர் கூறுகையில், ராஜீவ் காந்தி படுகொலை வருத்தமான விஷயம். எவருமே அதை ஏற்கவில்லை.

ஆனால் இதற்காக லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது. இன்னும் எத்தனை உயிர் பலியாக வேண்டும் என்கிற கணக்கை அகத்தில் கறுத்தும் புறத்தில் வெளுத்தும் இருக்கும் சோனியா காந்தியே சொல்லி விடுங்கள் என்றார்.

புலிகளை நேசியுங்கள்..

மணிவண்ணன் பேசுகையில், அய்யா, புலிகளை நான் நேசிக்கிறேன். தொடர்ந்து நேசிப்பேன். காரணம் இந்தியாவின் தேசிய விலங்கு புலி. எனவே எல்லோரும் புலிக்கு ஆதரவு கொடுங்கள் என்றார்.

உண்ணாவிரதப் போராட்டம் முடிந்தவுடன் இன்று மாலை கூடி அடுத்தடுத்த போராட்டங்கள் என்ன என்பதை திரையுலகினர் முடிவு செய்யவுள்ளனர்.

கமல் நடத்தும் திரைக்கதை பயிலரங்கம்!


திரைக்கதை தொடர்பான பயிலரங்கம் ஒன்றை மே 29-ம் தேதி முதல் 6 நாட்களுக்கு நடத்துகிறார் கலைஞானி கமல்ஹாசன்.

இந்திய தொழில்நுட்ப கழகத்துடன் சேர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் நடத்தும் இந்த பயிலரங்கம், சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற உள்ளது. கமல்ஹாசன் ஒரு விரிவுரையாளராக, திரைக்கதை குறித்த பல்வேறு பாடங்களை மாணவர்களுக்கு நடத்த உள்ளார்.

இதில் பிரான்ஸ் திரைப்பட திரைக்கதை ஆசிரியர் ஜான் க்லாட், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாணவர்களிடம் பேசுவார்.

இயக்குனர் ஹரிஹரன், இந்தி திரைப்பட எழுத்தாளர் அன்ஜும் ரஜ்ஜப் அலி, திரைக்கதை ஆசிரியர் அதுல் திவாரி உள்ளிட்டோரும் இந்த பயிலரங்கில் பங்கேற்க உள்ளனர்.

சொற்களை எப்படி காட்சிகளாக மாற்றுவது, தினசரி நிகழ்வுகளை எப்படி திரையில் கொண்டு வருவது போன்ற பல்வேறு வகுப்புகளை இந்தப் பயிலரங்கில் நடத்த உள்ளதாக இயக்குனர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்த வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள்,கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம், என கமலின் மீடியா மேனேஜர் நிகில் முருகன் அறிவித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு பணம்-சிரஞ்சீவியை தாக்க முயன்ற காங்கிரஸார்


ஹைதராபாத்: வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக கூறி திருப்பதியில் பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் நடிகர் சிரஞ்சீவியைத் தாக்க காங்கிரஸார் முயன்றனர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

ஆந்திராவில் சட்டசபைக்கும், லோக்சபா தொகுதிகளுக்கும் இன்று 2வது கட்ட தேர்தல்நடந்து வருகிறது.

சிரஞ்சீவி போட்டியிடும் திருப்பதி சட்டசபைத் தொகுதியிலும் இன்று வாக்குப் பதிவு நடக்கிறது. இதையொட்டி அவர் திருப்பதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பிருந்தே முகாமிட்டுள்ளார்.

திருப்பதியில் உள்ள ஹோட்டலில் அவர் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று அங்கு 200க்கும் மேற்பட்ட காங்கிரஸார் வந்தனர்.

சிரஞ்சீவி கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக கூறி கோஷமிட்டனர். எனவே சிரஞ்சீவி அறையை சோதனையிட வேண்டும் என்று கூறி போராட்டத்தில் குதித்தனர்.

இதைத் தொடர்ந்து போலீஸார் அங்கு வந்தனர். காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கையைத் தொடர்ந்து பிரஜா ராஜ்ஜியம் கட்சியினரின் வாகனங்களை சோதனையிட்டனர். ஆனால் பணம் கிடைக்கவில்லை.

இதையடுத்து பிரஜா ராஜ்ஜியம் கட்சியினருக்கும், காங்கிரஸாருக்கும் இடையே மோதல் மூண்டது. அடிதடியில் இரு தரப்பினரும் குதித்தனர்.

அவர்களை சமாதானப்படுத்த சிரஞ்சீவி முயன்றார். அப்போது காங்கிரஸார் சிலர் சிரஞ்சீவியைத் தாக்க முயன்றனர்.

நிலைமை மோசமானதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டியடித்தனர். பின்னர் சிரஞ்சீவியின் பாதுகாப்பை முன்னிட்டு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சிரஞ்சீவி கூறுகையில், வேண்டும் என்றே தவறான வீண் புகார்களை கூறி வருகிறார்கள். வெளிமாவட்டங்களில் இருந்து சமூக விரோதிகளையும் ரவுடிகளையும் கொண்டு வந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

என்னை தாக்கவும் முயற்சி நடந்தது. திருப்பதி தொகுதியில் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கமலுடன் மீண்டும் ஆசின்


19 ஸ்டெப்ஸ் படத்தில் கமல்ஹாசனுடன் பசுபதி மற்றும் பிருத்வி ராஜ் இணைந்து நடிக்கின்றனர்.

பரத் பாலாவும், வால்ட் டிஸ்னியும் இணைந்து உருவாக்கும் புதிய படம் 19 ஸ்டெப்ஸ். பரத் பாலா இயக்குகிறார். இப்படத்தில் கமல்ஹாசன், ஆசின் மற்றும் ஜப்பானிய ஹீரோ டடோனபு அசனோ ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இதில் கராத்தே மாஸ்டராக கமல்ஹாசன் வருகிறார். எம்.டி.வாசுதேவன் நாயரின் கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் இப்படம் உருவாகிறது.

படத்தின் பெரும் பகுதி கேரளாவில் படமாக்கப்படுகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் கேரளாவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. பின்னர் சீனாவுக்கு செல்கிறார்கள்.

இப்படத்தில் தற்போது பசுபதியும், பிருத்விராஜும் இணைந்துள்ளனர். பசுபதி கமலுடன் இணைவது இது 3வது முறையாகும். கமல்ஹாசனின் விருமாண்டி பசுபதிக்கு பெரிய பிரேக்காக அமைந்தது. இதையடுத்து மும்பை எக்ஸ்பிரஸ் படத்திலும் நடித்தார். தற்போது 3வது முறையாக கமலுடன் இணைகிறார்.

திறமையாளர்களை தட்டிக் கொடுத்து தூக்கி விடும் திறமைசாலியான கமல்ஹாசன், நாசருக்கு அடுத்து பசுபதியை தனது படங்களில் அடிக்கடி பயன்படுத்த ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல கமல்ஹாசனுடன் முதல் முறையாக இணைகிறார் பிருத்விராஜ்.

ஏகப்பட்ட திறமைசாலிகள் இணைந்து கலக்கப் போவதால் 19 ஸ்டெப்ஸ் படம் குறித்த எதிர்பார்ப்பு ஏகமாகியுள்ளது.

நெல்லையை முற்றுகையிடும் நடிகர், நடிகைகள்


நெல்லை அதிமுக வேட்பாளரை ஆதிரித்து ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் அங்கு பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர்.

இந்தியாவில் அரசியலுக்கும், சினிமாவுக்கும் பிரிக்க முடியாத பந்தம் உருவாகியுள்ளது. அது தமிழகத்தில் இன்னும் கொஞ்சம் கெட்டியாக இருக்கிறது.

இந்நிலையில் அதிமுகவின் செல்வாக்கு பெற்ற தொகுதிகளில் ஒன்றான நெல்லைக்கு சினிமா நட்சத்திரங்கள் அக்கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்ய படையெடுக்க துவங்கியுள்ளனர்.

அதிமுக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பாளையில் இன்று மதிமுக பொது செயலாளர் வைகோ பேசுகிறார். நாளை முன்னாள் அமைச்சர் முத்துசாமியும், 28ம் தேதி முன்னாள் அமைச்சர் பா,கிருஷ்ணனும், அதிமுக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர்.

வரும் 30ம் தேதி நடிகை விந்தியாவும், மே 2ம் தேதி லியகத் அலிகான், நடிகர் குண்டு கல்யாணம், நடிகர்கள் ஜெயகோவிந்தன், ஜெயசூர்யகாந்த் ஆகியோர் பேசுகின்றனர்.

மே 5ல் ராமராஜன் பிரசாரம்...

வரும் 3ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, 4ம் தேதி நடிகர் எஸ்எஸ் சந்திரன், 5ம் தேதி நடிகர் ராமராஜன், 6ம் தேதி நடிகை டிஆர் சரஸ்வதி, நடிகர் ராஜேந்திரன், 7ம் தேதி பழ.கருப்பையா ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர்.

வேட்பாளர் அண்ணாமலை ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 2 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

ஈழப் பிரச்சினை: திரையுலகினர் உண்ணாவிரதம்!


இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், உடனடி போர் நிறுத்தம் கோரியும் தமிழ் திரைப்பட துறையினர் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

பிலிம்சேம்பர் வளாகத்தில் காலை 9 மணிக்குத் துவங்கிய இந்த உண்ணாவிரதம் மாலை 6 மணி வரை நடக்கிறது.

இதில் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பாலு மகேந்திரா, இயக்குநர்கள் அமீர், நடிகர்கள் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

திரையுலகினர் அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் சீமான் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார். அவர் வந்த போது பெரும் ஆரவாரம் எழுந்தது.

இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சரவண சுப்பையா, சேரன், மணிவண்ணன், வெற்றி மாறன், ஹரி, பிரவீன்காந்த், சுசிகணேசன், சசி, சமுத்திரகனி உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். நடிகர்கள் கஞ்சா கருப்பு, பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

பார்வையாளர்களாக வரும் பொது மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களும் வருவார்கள் என போராட்டக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

உண்ணாவிரத முடிவுக்குப் பின்னர் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என பாரதி ராஜா அறிவித்துள்ளார்.

மிகக் குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டாலும், திரையுலகினர் திரளாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அமெரிக்க விசா பெறுவது கு‌றி‌த்த கரு‌த்தர‌ங்க‌ம்


அமெ‌ரி‌க்கா‌வி‌ல் செ‌ன்று படி‌க்க ‌விசா பெறுவது எ‌ப்படி எ‌ன்பது கு‌றி‌த்த கரு‌த்தர‌ங்கு செ‌ன்னை‌யி‌ல் நடைபெ‌ற்றது.

தமிழக மாணவ-மாணவிகள் அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் உயர்கல்வி பயிலவும், விசா பெறுவது தொடர்பாகவும் அமெரிக்க-இந்திய கல்வி அறக்கட்டளையானது (யுசுபி) வழிகாட்டி கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு அமெரிக்கா சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் மாணவர் விசா பெறுவது பற்றிய ஒருநாள் வழிகாட்டி கருத்தரங்கம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மிïசிக் அகாடெமியில் நேற்று நடந்தது.

இந்த கருத்தரங்கில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக உயர் அதிகாரி டேவிட் பிரான்சிஸ் கலந்து கொண்டு பேசினார். அமெரிக்க கல்லூரிகள், கல்வி கட்டணம், சேர்க்கை முறை, மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் விதம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு அவர் விளக்கிக் கூறினார். அமெரிக்க கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக விசா விண்ணப்பத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பிக்கக்கூடாது என்று அவர் எச்சரிக்கையும் விடுத்தார். விசா தொடர்பான மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ச‌ந்தேக‌ங்களு‌க்கு‌ம் அவ‌ர் ப‌திலு‌ம் விளக்கமும் அளித்தார்.

குழந்தைகள் உங்களது அடிமைகள் அல்ல


எல்லோருக்கும் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய செல்வம் அவர்களது குழந்தைகள்தான். ஆனால் பலரும் அந்த செல்வத்தை வைத்துக் கொண்டு வாழத் தெரியாமல் இருக்கின்றனர்.

குழந்தைகளின் விருப்பப்படி அவர்கள் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களை தங்களது கண்காணிப்பிலேயே வைத்துக் கொள்வது ஒரு வகைப் பெற்றோர். இதில் குழந்தையின் விருப்பமும் நிறைவேறிவிடுகிறது. பெற்றவர்களும் நிம்மதியாக இருக்கின்றனர்.

ஆனால் ஒரு சில பெற்றவர்கள், எல்லாமே தங்கள் இஷ்டப்படித்தான் நடக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். தங்களது விருப்பத்தை குழந்தையின் மீது திணிக்கின்றனர். தங்களது கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

ஆடை, அலங்காரம், பள்ளிக் கல்வி முறை, கூடுதல் வகுப்புகள் என அனைத்துமே பெற்றவர்களது விருப்பத்தின்படி இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

தாங்கள் செய்ய முடியாததை, படிக்காததை எல்லாம் பிள்ளைகள் படித்துவிட வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். இதையெல்லாம் விட, இந்த வசதி எல்லாம் எங்களுக்கு கிடைக்கல, நீயாவது இதை பயன்படுத்தி படி என்று அறிவுரை வழங்குவார்கள்.

இதில் என்ன குற்றம் என்று கேட்காதீர்கள், உங்களைப் போன்றே உங்களது குழந்தைகளுக்கும் ஆசைகள், விருப்பங்கள் இருக்கும். அவர்களுக்குள் ஒரு தனித் திறமை இருக்கும். அதனை வெளிப்படுத்தும் வகையிலான படிப்புகளைத்தான் அவர்கள் நாடுவார்கள்.

அதைவிடுத்து அவர்களுக்கு விருப்பமில்லாத வகுப்பில் சேர்த்துவிட்டு, அவர்களைப் படி படி என்றால் எப்படி அவர்கள் படிப்பார்கள்.

செலவு செய்யவும், சேமித்து வைக்கவும் கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு என்று செலவு செய்ய காசு கொடுங்கள். அதனை தேவையான பொருட்களை வாங்கவும், மீதமுள்ள பணத்தை சேமித்து வைக்கவும் பழக்கப்படுத்துங்கள்.

சின்னப்பசங்க அவங்களுக்குத் தேவையான அனைத்தையும் நாமே வாங்கிக் கொடுக்கும்போது அவர்களுக்கு எதற்கு காசு என்று கேட்காதீர்கள். அப்படி செய்யும்போதுதான் அவர்கள் வீட்டிலேயே காசை திருடும் பழக்கம் ஏற்படுகிறது.

நமது குழந்தை செல்வங்களை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்க வேண்டிய கடமை பெற்றோருக்குத்தான் உள்ளது. ஆனால் அதனை சரியாக செய்ய வேண்டும்.

குழந்தை என்பது கையில் இருக்கும் பறவை போன்றது, அழுத்திப் பிடித்தால் இறந்து போகும், பிடிக்காமல் விட்டுவிட்டால் பறந்து போகும், எனவே இதமாக தடவிக் கொடுத்து பதமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

Wednesday, April 22, 2009

தேமுதிக வேட்பாளர்: சொத்து ரூ25 கோடி-கடன் ரூ11 கோடி


நெல்லை: நெல்லை தேமுதிக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் தனக்கு ரூ. 25.26 கோடிக்கு சொத்து இருப்பதாகவும், அதே சமயத்தில் வங்கிகளில் ரூ. 11.36 கோடிக்கு கடன் இருப்பதாகவும் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த அபிடவிட்டில் தெரிவித்துள்ளார்.

நெல்லை தொகுதி தேமுதிக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டிருந்த சொத்து மதிப்பு விபரம்,

என்னிடம் ரொக்கமாக ரூ. 10.14 லட்சமும், வங்கிகளில் வைப்பு தொகையாக ரூ. 30.88 லட்சமும் இருக்கிறது. பங்கு சந்தையில் ரூ. 1 கோடியோ 11 லட்சத்து 90 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளேன்.

என்னிடம் 10 கார்கள், 2 இரு சக்கர வாகனங்கள், எல்ஐசியில் ரூ.18.21 லட்சம், 2064 கிராம் எடை கொண்ட தங்க நகைகள், ரூ. 23.64 லட்சம் மதிப்பிலான விவசாய நிலங்கள், பல ஊர்களில் ரூ. 81.56 லட்சத்துக்கு நிலங்கள் உள்ளது. பல மாநிலங்களில் ரூ. 22.23 கோடி மதிப்பிலான வணிக வளாகங்கள், கட்டிடங்கள் உள்ளது.

இதன் மொத்த மதிப்பு ரூ. 25.26 கோடி. இதில் 11.36 கோடி ரூபாய்க்கு பல்வேறு வங்கிகளில் கடன் உள்ளது என மைக்கேல் ராயப்பன் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

தென்காசி: வனத்துறை உதவியுடன் மான் வேட்டை


தென்காசி: தென்காசியில் வனத்துறையினரின் உதவியுடன் மான் உள்ளிட்ட வனவிலங்குகளை சில முக்கிய பிரமுகர்கள் வேட்டையாடியதாக கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் கைதான ஒருவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நேற்று தென்காசி அருகே அச்சன்புதூரில் போலீசார் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக மீராகனி என்பவார் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.

அவர்கள் யாரிடம் துப்பாக்கி வாங்கினார்....எதற்காக துப்பாக்கியை பயன்படுத்தினார்...என்பது குறித்து போலீசார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

விசாரணையின் போது மீராகனி கொடுத்த வாக்குமூலம்,

உள்ளூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்களான முன்னாள் எம்எல்ஏ ரசாக்கின் சகோதரர்கள் அலி, அச்சன்புதூரை சேர்ந்த அதிமுக மாவட்ட மருத்துவ அணி துணை தலைவர் டாக்டர் சசீகரனின் தந்தை தங்கம், மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த முக்கிய பிரமுகர் வைரம், மற்றும் அதே பகுதியில் பணியாற்றி வனத்துறை காவலர்கள், அதிகாரிகள், நெல்லை மாவட்டத்தில் பல்வேறு துறைகளிலும் உள்ள உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கர் உள்ளிட்டோருடன் இணைந்து வேட்டைக்கு சென்றோம்.

அப்போது மான், மிளா போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகளை கள்ள துப்பாக்கி மூலம் வேட்டையாடி, பின்னர் அவற்றை பங்கீட்டு கொண்டோம் என்றார்.

வன விலங்குகளை வேட்டையாடுவது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். மான் வேட்டையாடியதாக நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பாலயோகி, நடிகர் சல்மான்கான் உள்ளிட்ட பிரபலங்களே சர்சையில் சிக்கி சிறை செல்ல நேர்ந்தது.
இந்நிலையில் கள்ள துப்பாக்கி வைத்திருந்தவருடன் விலங்குகளை காப்பாற்ற வேண்டிய வனத்துறையினரே முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து வனவிலங்குளை வேட்டையாடியதாக வெளியான தகவல் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அர்ஜுன் படபெயரில் மாற்றம்


தெளிவே இல்லாமல் ஒரு முடிவை எடுத்துவிட்டு திடீரென அதில் மாற்றம் செய்வது அர்ஜுன் படத்தில் சர்வசாதாரணம்.
பத்துபடங்கள் நடித்தால் அதில் ஒன்று தேறுவதே அர்ஜுனை பொறுத்தவரை சாதனைதான். அந்தவகையில் ரசிகர்களுக்கு பெரும்பாலும் சோதனையைத்தான் தந்துகொண்டிருக்கிறது ஆக்‌ஷன் கிங்கின் படங்கள். படத்திற்கு பூஜைபோட்டு பிரஸ்மீட் வைக்கும் போதெல்லாம் “இந்த படத்துல புதுசா ஒரு விஷயத்தை ட்ரை பண்ணியிருக்கோம். படம் வெளிவரும்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறும்” என படத்துக்கு படம் அர்ஜுன் தனது தன்னம்பிக்கையை பிழிந்தெடுப்பார். ஆனால் படம்வெளியாகி பத்துநாட்கள் ஓடுவதே குதிரை கொம்புதான். விநியோகஸ்தர் மத்தியிலும், அர்ஜுன் படத்திற்கு அடிமாட்டு விலை கேட்பதுதான் இன்றைய நிலை.

இப்படி நிறைய மைனஸ்கள் இருந்தாலும் அர்ஜுனுக்கு அடுத்தடுத்த படங்கள் கிடைப்பதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். அக்‌ஷன் கிங்கின் படப்பட்டியலில் இன்னொரு நம்பரை கூட்டியுள்ளார் மேஜர் ரவி. ஜீவா நடித்த ‘அரண்’ படத்தை இயக்கிய இவர் அர்ஜின் நடிக்கும் ‘மெய் காண்’ படத்தை இயக்கவுள்ளார். இந்தபடத்திற்கு ஆரம்பத்தில் ‘அதே விழிகள்’ என பெயரிட்டிருந்தனர் அர்ஜுனின் ஆலோசனைப்படி ‘மெய் காண்’ என மாற்றியுள்ளாராம்.

இதில் அர்ஜுன் ஜோடியாக காவேரிஜா நடிக்க, இரண்டாவது நாயகியாக ஹித்தி ஸ்ரீ நடிக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவுசெய்ய, சுந்தர்.சி பாபு இசையமைக்கிறாராம்.

தலைவனை பார்க்கணும்... தொண்டர் முழக்கமும், சிம்பு பழக்கமும்!


ஒருவழியாக கள்ளக்குறிச்சியில் போட்டியிடுவதாக முடிவெடுத்திருக்கிறார் விஜய.டி.ராஜேந்தர். இந்த முடிவை அவர் அறிவித்த அடுத்த கணமே, தன்மான சிங்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எண்ணத்துடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரது வீட்டின் முன் கூடினார்களாம்.

ஆனால் இவர்களின் ஆர்வம் 'சொய்ய்ய்ங்...' என்று வடிந்து போகிற அளவுக்கு தடைகள்! வேறொன்றுமில்லை, வந்த வேகத்தில் அவரை பார்க்க முடியவில்லை இவர்களால். 'தலைவரு வீட்டிலே இல்லை. அப்புறமா வாங்க' என்று பதில் அளிக்கப்பட்டதாம். 'தலைவரை பார்க்காம நாங்க இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம்' என்று ரசிகர்கள் கொந்தளிக்க, வெளியே வந்த சிம்பு, 'நிஜமாகவே அவரு வீட்டிலே இல்லப்பா, போயிட்டு அப்புறம் வாங்க' என்று சமாதானப்படுத்தினாராம்.

உடல் மண்ணுக்கு, உயிர் தலைவனுக்கு என்று வந்தவர்கள் வீர முழக்கம் செய்ய, அதிர்ந்து போனார் சிம்பு. (ரொம்ப பில்டப் பண்ணுறாங்களே...) வேறு வழியில்லாமல் வீட்டுக்குள் போனவர், டி.ஆரின் ஆளுயர போட்டோவை எடுத்து வந்து, 'இந்தாப்பா... நல்லா பாத்துக்கோங்க' என்று காட்டினாராம் தொண்டர்களிடம். பிறகு, 'பார்த்திட்டீங்கதானே? எடத்தை காலி பண்ணுங்க' என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டாராம்.

இப்போது அதிர்ச்சி சிம்புவுக்கு இல்லை. தொண்டர்களுக்கு! அட, ராமா என்றபடியே இடத்தை காலி செய்தார்களாம்!

கவுதமும், சமீராரெட்டியும்! மீண்டும் ஒரு ஸ்வீட் இணைப்பு...


கடனை தாண்டி வருவாரான்னு கவலைப்பட்டுகிட்டு இருந்த சினிமாவுலகத்துக்கு கவுதம் மேனனின் அசுர வேகம், ஆச்சர்யத்தை கொடுத்திருக்கு. 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தை 70 சதவீதம் முடிச்சுட்டாராம். சிம்புவை வைத்துக் கொண்டு இவ்வளவு ஃபாஸ்டா ஒரு படத்தை எடுத்து முடிப்பதே பெரிய விஷயம்னு முணுமுணுக்குது கோலிவுட்.

இன்னொரு ஆச்சர்யத்தையும் கொடுத்திருக்கார் கவுதம். தனது அசோசியேட் வீராங்கிற இளைஞரை ஹீரோவாக நடிக்க வச்சு, இன்னொரு படத்தையும் இதே வேகத்திலே எடுத்திட்டு வர்றாரு. வீராவுக்கு ஜோடி சமீரா ரெட்டியாம். (பார்றா, புதுமுகத்துக்கு வந்த லக்கியை!) இந்த கதை த்ரில்லர். இரண்டு படங்களுக்குமே இசை ஏ.ஆர்.ரஹ்மானாம். பொதுவா ரஹ்மானிடம் ட்யூன் வாங்குவதற்கு பகீரத பிரயத்தனப்படணும். ஆனால், அதிலேயும் சிக்ஸர் அடிச்சிருக்கார் கவுதம் என்கிறார்கள்.

இந்த கோடையை சமாளிக்க 'ஆடி' என்கிற கார் வாங்கியிருக்கிறாராம். நடிகர் சூர்யாவும் இதே காரைதான் வைத்திருக்கிறார். (டெமோ சூர்யாவோ?) கொதிக்கிற வெயிலாக இருந்தாலும் கூலிங்கில் இன்னொரு குலுமணாலியாக இருக்கிறதாம் காரின் உட்புறம்! அப்படியே டென்ஷனை குறைக்கவும் உதவும்!

'துட்டு' லட்சுமியான விஜயலட்சுமி! கற்றது களவு சென்ட்டிமென்ட்...


'வாம்மா, லெட்சுமி...'ன்னு கூப்பிடாத குறைதான். மற்றபடி தாமரை நடுவே வீற்றிருந்து உள்ளங்கை வழியாக பொற்காசுகளை வீசுகிற சாட்சாத் 'துட்டு' லட்சுமியாகவே விஜயலட்சுமியை பார்க்க ஆரம்பித்திருக்கிறது தமிழ்சினிமா. எல்லாம் தொடர் ஹிட்டுகள் செய்கிற மாயம்!

ஜெய்யை தொடர்ந்து இப்போது கிருஷ்ணாவுடன் ஜோடியாகியிருக்கிறார் விஜயலட்சுமி. படம் கற்றது களவு. மகனுக்காக மட்டுமல்ல, கதைக்காகவும் மற்றுமொரு படத்தை தயாரிக்கிறார் பட்டியல் சேகர். டைரக்ஷனில் முழு கவனமும் இருக்கணும் என்பதற்காகவே திரைக்கதையை ஒருவரிடமும், வசனத்தை வேறொருவரிடமும் கொடுத்துவிட்டு ஒதுங்கியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி. அபியும் நானும் படத்தில் ஒரே ஒரு ஊரிலேன்னு பாடுவாரே... குமரவேல். அவர்தான் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதுகிறாராம். வசனம் ரூபன் ஜே. (இது சரியான குசும்பு பார்ட்டி)

ஒரு பேங்க் மேனஜராக ஆசைப்படுகிற கிருஷ்ணாவுக்கும், ஏர் ஹோஸ்டஸ் ஆக நினைக்கும் விஜயலட்சுமிக்கும் வாழ்க்கை என்ன கத்துக் கொடுக்குது என்பதுதான் கற்றது களவு படமாம். 'ரொம்ப ஜாலியா, அதே நேரத்திலே அழுத்தமா சொல்லப் போறோம்' என்றார் பாலாஜி. மனசை 'திருடுற' மாதிரி எடுப்பாங்க போலிருக்கு!

குதிரையிலிருந்து விழுந்த மடோனா


பாப் அரசி மடோனா, குதிரை சவாரி செய்தபோது தவறி கீழே விழுந்து காயமடைந்தார்.

ஹாம்ப்டன்ஸ் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. வார இறுதி நாளில் அவர் அங்கு குதிரையற்றத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் கூட்டமாக வந்து குதிரையில் இருந்த மடோனாவை புகைப்படம் எடுக்க முயற்சித்த்னர்.

கேமராக்களின் பிளாஷ் ஒளியைப் பார்த்து மிரண்ட குதிரை அங்குமிங்கும் ஓடவே மேலே அமர்ந்திருந்த மடோனா தடுமாறி விழுந்து விட்டார்.

இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டு விட்டது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த பின்னர் வீடு திரும்பினார் மடோனா.

நம்ம ஊரைப் போல இல்லாமல், வெளிநாடுகளில் இந்த பாப்பராஸி புகைப்படக்காரர்களின் தொல்லை சற்று அதிகம். பிரபலங்களை எங்கு பார்த்தாலும் கேமராவால் சுட்டு விடுவார்கள்.

இவர்களின் விரட்டலால்தான் இளவரசி டயானா கார் விபத்தில் சிக்கி மாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

'பெண் குழந்தை என்பதால் என்னை தொடாத என் பாட்டி..'-ஸ்னேகா


நான் பெண் குழந்தையாக பிறந்து விட்டேன் என்பதால் என்னை ஒரு மாதம் வரை தொடக் கூட இல்லை என் பாட்டி என்று உருக்கமாக கூறியுள்ளார் நடிகை ஸ்னேகா.

சென்னை ரோட்டரி கிளப் நான்கு பெண் சாதனையாளர்களுக்கு, சாதனையாளர் விருதினை வழங்கி கெளரவித்தது. அவர்களில் ஒருவர் ஸ்னேகா. இந்துஸ்தான் குழுமக் கல்லூரிகளின் தலைவர் டாக்டர் எலிசபெத் வர்கீஸ், ஸ்பார்டன் பள்ளிக் குழுமத் தலைவர் அன்னா ஜேக்கப், ஹைஸ்டைல் கிரியேஷன் குழுமத் தலைவர் விஜய் ஸ்ரீகிரன் ஆகியோர் மற்ற மூவர்.

சென்னை அக்கார்ட் மெட்ரோபாலிடன் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்னேகா பெண்கள் குறித்து உருக்கமாக பேசினார்.

அவர் கூறுகையில்,

ஒரு பெண்ணின் வளர்ச்சி என்பது மிகவும் சாதாரணமானதல்ல. நான் பிறந்தபோது, எனது பாட்டி, என்னை ஒரு மாதத்திற்கு தொடக் கூட இல்லையாம். காரணம், நான் பெண்ணாக பிறந்து விட்டேன் என்பதற்காக.

பிறகு நான் நடிக்க வந்தபோது எனது முதல் படமே மிகப் பெரிய தோல்விப்படமாக அமைந்தது. நான் பத்தாவது படத்தில் நடித்தபோதுதான் எனது 2வது படமே வெளியானது.

எனவே பெண்கள் சமூகத்தில் வளருவது என்பது சாதாரணமதல்ல, மிகக் கடினமானது. போட்டிகள், பொறாமைகள் அதிகம்.

இருப்பினும் இதுபோன்ற விருதுகள் பெண்களின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக உள்ளன என்றார் ஸ்னேகா.

கோலிவுட்டின் 'ஏஞ்செலீனா ஜூலி'!


தனிஷ்கா படு குஷியாக இருக்கிறார். பேராண்மை படத்தின் நாயகிகளில் ஒருவரான இவரது குஷிக்குக் காரணம், உன்னைப் பார்த்தால் ஏஞ்செலீனா ஜூலி மாதிரியே இருக்கு என்று இயக்குநர் ஜனநாதன் கூறியதுதானாம்.

ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட படம்தான் பேராண்மை. இதில் தனிஷ்காவும் ஒரு நாயகி. இவர் தவிர சரண்யா, வர்ஷா, வசுந்தரா, லியாஸ்ரீ என்று ஒரு ஹீரோயின் பட்டாளமே உண்டு.

பார்க்க மாடல் அழகி போல படு க்யூட்டாக இருக்கும் தனிஷ்கா, இப்படத்தில் நிறைய சண்டைக் காட்சிகளிலும் அசத்தியுள்ளாராம்.

என்.சி.சி. வீராங்கனையாக படத்தில் வரும் தனிஷ்கா, பேராண்மை அனுபவம் குறித்துக் கூறுகையில்,

ஒரு கண்காட்சியில் வைத்து என்னைப் பார்த்தார் இயக்குநர் ஜனநாதன். பேராண்மை படத்தில் நடிக்கிறாயா என்று கேட்டார். எனக்கோ சினிமா என்றால் கொள்ளை ஆசை. கிடைத்த வாய்ப்பை விடாமல் பற்றிக் கொண்டேன்.

படத்தில் எனக்கு நிறைய சண்டைக் காட்சிகள் வைத்துள்ளனர். இதற்காக பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம், ஷிஹான் ஹூசேனியிடம் வில்வித்தை, மைக்கேல் மாஸ்டரிடம் சண்டைப் பயிற்சிகள் குறித்த நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன்.

பேராண்மை படத்தில் ஐந்து நாயகியர்களில் ஒருவராக நான் வருகிறேன்.

அடர்த்தியான காடுகளில்தான் படப்பிடிப்பு நடந்தது. அட்டைத் தொல்லை, கொசுத் தொல்லை உள்பட பல தொல்லைகள். ஒரு முறை காட்டெருமை கூட குறுக்கிட்டது. அத்தனையையும் சமாளித்துக் கொண்டு நடித்தோம்.

இத்தனை கஷ்டத்துக்கு மத்தியிலும் எனக்கு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் என்னைப் பார்த்தால் ஏஞ்செலீனா ஜூலி போலவே இருக்கிறது என்று இயக்குநர் பாராட்டியதுதான்.

எனது மேனரிசங்களைப் பார்த்தால் டாம்ப் ரைடர் படத்தில் வரும் ஜூலி மாதிரியே இருக்கிறது என்றும் பாராட்டினார் இயக்குநர். இதை மறக்கவே மாட்டேன்.

இயல்பிலேயே நான் ஜூலியின் ரசிகை. அவரது ஒரு படத்தையும் நான் விட்டு வைத்ததில்லை. இப்போது என்னைப் போய் ஜூலியுடன் ஒப்பிட்டுக் கூறி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டார் இயக்குநர் ஜனநாதன் என்று அடுக்கிக் கொண்டே போகிறார் ஜூலி..

நவ்யாவின் இரட்டை வேடம்!


முதல்முறையாக இரட்டை வேடம் ஏற்று நடிக்கிறார் நவ்யா நாயர். ஆனால் இந்தப் படம் தமிழில் அல்ல, மலையாளத்தில் உருவாகிறது.

அழகிய தீயே படம் மூலம் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் நவ்யா நாயர். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, மாயக்கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் பெரிதாக ஒரு இடம் கிடைத்தபாடில்லை, தமிழில்.

இதனால் மீண்டும் கேரளா சென்று மலையாளத்தில் பிசியாகி விட்டார்.

தற்போது மோகன் லாலுக்கு ஜோடியாக 'யுக புருஷன்' என்ற படத்தில் நடிக்கிறார். மலையாள சரித்திர படமான இதில் அவர் இரட்டை வேடங்களில் திறமை காட்டவிருக்கிறார்.

கதைப்படி அவர் நடுத்தர வயது பெண்ணாகவும், அந்த பெண்ணின் 15 வயது மகளாகவும் நடிக்கவிருக்கிறராம். இரண்டு பாத்திரங்களுக்கும் வித்தியாசம் காட்ட அவர் மிகவும் மெனக்கட்டு உடம்பை குறைத்து வருகிறாராம். இதில் அம்மா நவ்யா வரும் காட்சிகளை முதலில் எடுத்துவிட்டார்கள். மகள் வேடத்துக்காக 15 வயதுப் பெண்ணாகவே நவ்யா மாறிவிட்டாராம்.

படத்தில் அம்மா, மகள் என இரண்டு பாத்திரங்களும் வரும் பாடல் காட்சி ஒன்று இருப்பதாகவும், அதில் தோன்றும் இரண்டு நவ்யாயும் ஒருவரே என படத்தை பார்ப்பவர்களால் நம்ப முடியாது என பட யூனிட் கோவிலில் சூடம் ஏற்றி சத்தியம் பண்ணாத குறையாகச் சொல்கிறார்கள்.

இது நவ்யா இரட்டை வேடத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் இரண்டாவது படம். இதற்கு முன் 'கண்கள் மறப்பதில்லை' என்ற தமிழ் படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.

பேன்டா' அம்பாசடர் ஜெனீலியா!


கோககோலா குளிர்பான நிறுவனத்தின் ஆரஞ்சு பானமான பேன்டாவின் பிராண்ட் அம்பாசடர் ஆகியுள்ளார் ஜெனீலியா.

பேன்டா போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களை வரவழைத்து சென்னையில் சமீபத்தில் நடத்தபப்ட்ட மீட் அன்ட் க்ரீட் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.

இந்த கோடை காலத்தில் பேன்டாவின் புதுச் சுவை பானத்தை அறிமுகப்படுத்துகிறது கோககோலா நிறுவனம். அதன் பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார் ஜெனீலியா.

வெற்றி பெற்றவர்களுடன் உரையாடிய ஜெனீலியா, அவர்களுக்குப் பரிசுகளையும் தனது கையாலேயே வழங்கினார்.

பேன்டாவுடன் இணைந்தது குறித்து ஜெனீ கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீண்ட காலமாகவே நான் பேன்டாவின் ரசிகை. தற்போது அறிமுகமாகியுள்ள பேன்டா ஆப்பிள் பானத்தை தொடங்கி வைப்பது திரில்லாக உள்ளது.

இதன் சுவை அருமையாக உள்ளது. நிச்சயம் எனது ரசிகர்கள் இதை வாங்கி பருகி மகிழ்வார்கள் என நம்புகிறேன் என்றார்.

ஜெனீலியா கையில் இப்போது இரண்டு இந்திப் படங்களும், இரண்டு தமிழ்ப் படங்களும் இருக்கிறதாம். 'பேன்டா'ஸ்டிக்!

மருத்துவமனையில் கே.பாலாஜி


பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் கே.பாலாஜி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் திலகம் சிவாஜியுடன் நிறைய படங்களில் நடித்து, பின்னாளில் முன்னணி பட அதிபராக உயர்ந்தவர் கே.பாலாஜி.

சுஜாதா சினி ஆர்ட்ஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் ராஜா, நீதி, பில்லா, தீ, விதி போன்ற சூப்பர் ஹிட் படங்களைத் தந்தவர். சில கசப்பான அனுபவங்களால் படத்தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த அவர், தன் மகன் மூலம் கிரீடம் படத்தைத் தயாரித்தார்.

சிறுநீரகக் கோளாறில் அவதிப்பட்டு வந்த பாலாஜிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது.

இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் பாலாஜி. இவரது மருமகன் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆவார்.

ஸ்லம்டாக் புகழ் ரூபினாவை விற்க முயற்சி - தந்தை கைது


ஸ்லம்டாக் மில்லியனர் படப் புகழ் சிறுமி ரூபினா அலியை விற்க முயற்சித்ததாக பெரும் சர்ச்சையில் சிக்கிய அவரது தந்தை ரபீக் அலி குரேஷி கைது செய்யப்பட்டார்.

ரபீக்கின் முதல் மனைவி (இவர்தான் ரூபினாவின் தாயார்) கொடுத்த புகாரின் பேரில் ரபீக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரபு ஷேக் ஒருவருக்கு தனது மகளை ரூ. 1.78 கோடிக்கு விற்க பேரம் பேசியதாக கையும் களவுமாக பிடிபட்டார் ரபீக் அலி குரேஷி. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.

இதையடுத்து மும்பை போலீஸார் ரபீக்கிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்த நிலையில் ரபீக்கை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வரும் அவரது முதல் மனைவி குர்ஷிதாவும் போலீஸில் புகார் கொடுத்தார். அதில் தனது கணவரிடமிருந்து மகளை பத்திரமாக மீட்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதுகுறித்து குர்ஷிதா கூறுகையில், துபாயைச் சேர்ந்த பணக்கார ஷேக் ஒருவரிடம் எனது மகளை விற்க ரபீக் குரேஷி முயற்சிப்பது குறித்து எனக்கு 2 வாரங்களுக்கு முன்பு தெரிய வந்தது.

எனது மூத்த மகள் இதை என்னிடம் கூறினாள். ஆனால் அதை நான் நம்பவில்லை. இதுபோன்ற செயலில் ரபீக் ஈடுபட மாட்டார் என நம்பினேன்.

எனது முன்னாள் கணவரும், அவரது தற்போதைய மனைவியுமான மினா ஆகியோருக்கு பணம்தான் குறி. 9 வயதே ஆகும் எனது மகளுக்குக் கிடைத்த புகழைப் பயன்படுத்தி காசு சம்பாதிக்க வெறியாக உள்ளனர் என்றார்.

குர்ஷிதா கொடுத்த புகாரைப் பதிவு செய்த போலீஸார் குரேஷியை அழைத்து விசாரித்தனர். விசாரணையின் இறுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது குரேஷி, துபாய் ஷேக்கிடம், ரூபினாவை விற்க பேரம் பேசியது தொடர்பான வீடியோ ஆதாரத்தை திரட்டி வருகின்றனர்.

அதேசமயம், தான் யாருடனும் போக விரும்பவில்லை. எனது தந்தையுடன்தான் வசிக்க விரும்புகிறேன் என ரூபினா போலீஸாரிடம் தெரிவித்துள்ளாளாம்.

திமுக வேட்பாளர் நடிகர் ரித்தீஷுக்கு பிடிவாரண்ட்!


ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடந்த தேவர் குரு பூஜை விழாவின்போது மோதலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ரித்தீஷுக்கு கமுதி கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதையடுத்து ரித்தீஷ் முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.

பசும்பொன்னில் கடந்த ஆண்டு நடந்த தேவர் குருபூஜை நிகழ்ச்சியின்போது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் மகனும், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியச் செயலாளருமான ஆனந்த் மற்றும் அவரது குழுவினருக்கும், ரித்தீஷ் குரூப்புக்கும் இடையே அபிராமம் அருகே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ரித்தீஷ் தரப்பைச் சேர்ந்த 37 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவர்களில் 36 பேர் முன்ஜாமீன் பெற்று விட்டனர்.

ரித்தீஷ் மட்டும் ராமநாதபுரம் செஷன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் உத்தரவை வாங்கி பிணை கொடுக்காமல் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார்.

இதையடுத்து ரித்தீஷை தலைமறைவு கைதியாக கருதி அவருக்கு கமுதி கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி ரித்தீஷ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

ரித்தீஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அதிமுகவுக்காக விந்தியா பிரச்சாரம்


கடந்த சட்டசபைத் தேர்தலைப் போலவே இந்த முறையும் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ளார் நடிகை விந்தியா.

கடந்த சட்டசபைத் தேர்தலில் விந்தியா, சிம்ரன் உள்ளிட்ட பல நடிகைகள் அதிமுகவுக்காகப் பிரசாரம் செய்தனர். ஆனால் அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து வருகிற லோக்சபா தேர்தலில் இவர்களில் பலர் பிரசாரத்திற்கு வர விரும்பாமல் எஸ்கேப் ஆகி விட்டனர்.

விந்தியாவும் நடிகை பானுப்பிரியாவின் தம்பி கோபியை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் இருந்தும் ஒதுங்கியிருந்து வந்தார். இந் நிலையில் மீண்டும் அதிமுகவுக்காக தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ளார்.

திருப்பூரில் அதிமுக வேட்பாளர் சிவசாமியை ஆதரித்து திருப்பூர் நகரை வலம் வந்து தீவிரப் பிரசாரம் செய்தார் விந்தியா.

தனது பிரசாரம் குறித்து விந்தியா செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலத்தில் எனது பிரசாரத்தைத் தொடங்கினேன். 22 நாட்கள் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கவுள்ளேன்.

எனது ஸ்டார் வேல்யூவை வைத்து நான் பிரசாரத்திற்கு வரவில்லை. அதிமுக சிறந்த கட்சி. அதன் முக்கியத்துவம், அவசியத்தை உணர்ந்தே பிரசாரம் செய்கிறேன்.

விஜயகாந்த் சினிமாவில்தான் கேப்டன். நன்றாக சண்டை போடுவார். ஆனால் அரசியலில் அவர் கேப்டன் இல்லை. இன்னும் பல வருடம் அரசியலில் இருந்து, மக்கள் பிரச்னைகளை உணர்ந்து முதல்வர் பதவிக்கு முயற்சிக்க வேண்டும். உடனே முதல்வராக வேண்டும் என்றால் ஏற்க முடியாது.

திருப்பூரில் அதிமுகவுக்கு சாதகமான நிலை உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் கார்வேந்தன் போட்டியிட விரும்பவில்லை என கூறியதாக கூட செய்தி வந்திருக்கிறது.

தமிழகம் மற்றும் இந்தியாவில் நடந்த ஊழல்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய உள்ளேன். காங்கிரஸ், பாஜவுக்கு மாற்றாக 3வது அணி ஆட்சி அமைப்பது அவசியம் என்றார் விந்தியா.

மீண்டும் அதிமுகவுக்காக விந்தியா பிரச்சாரம்


கடந்த சட்டசபைத் தேர்தலைப் போலவே இந்த முறையும் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ளார் நடிகை விந்தியா.

கடந்த சட்டசபைத் தேர்தலில் விந்தியா, சிம்ரன் உள்ளிட்ட பல நடிகைகள் அதிமுகவுக்காகப் பிரசாரம் செய்தனர். ஆனால் அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து வருகிற லோக்சபா தேர்தலில் இவர்களில் பலர் பிரசாரத்திற்கு வர விரும்பாமல் எஸ்கேப் ஆகி விட்டனர்.

விந்தியாவும் நடிகை பானுப்பிரியாவின் தம்பி கோபியை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் இருந்தும் ஒதுங்கியிருந்து வந்தார். இந் நிலையில் மீண்டும் அதிமுகவுக்காக தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ளார்.

திருப்பூரில் அதிமுக வேட்பாளர் சிவசாமியை ஆதரித்து திருப்பூர் நகரை வலம் வந்து தீவிரப் பிரசாரம் செய்தார் விந்தியா.

தனது பிரசாரம் குறித்து விந்தியா செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலத்தில் எனது பிரசாரத்தைத் தொடங்கினேன். 22 நாட்கள் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கவுள்ளேன்.

எனது ஸ்டார் வேல்யூவை வைத்து நான் பிரசாரத்திற்கு வரவில்லை. அதிமுக சிறந்த கட்சி. அதன் முக்கியத்துவம், அவசியத்தை உணர்ந்தே பிரசாரம் செய்கிறேன்.

விஜயகாந்த் சினிமாவில்தான் கேப்டன். நன்றாக சண்டை போடுவார். ஆனால் அரசியலில் அவர் கேப்டன் இல்லை. இன்னும் பல வருடம் அரசியலில் இருந்து, மக்கள் பிரச்னைகளை உணர்ந்து முதல்வர் பதவிக்கு முயற்சிக்க வேண்டும். உடனே முதல்வராக வேண்டும் என்றால் ஏற்க முடியாது.

திருப்பூரில் அதிமுகவுக்கு சாதகமான நிலை உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் கார்வேந்தன் போட்டியிட விரும்பவில்லை என கூறியதாக கூட செய்தி வந்திருக்கிறது.

தமிழகம் மற்றும் இந்தியாவில் நடந்த ஊழல்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய உள்ளேன். காங்கிரஸ், பாஜவுக்கு மாற்றாக 3வது அணி ஆட்சி அமைப்பது அவசியம் என்றார் விந்தியா.

Tuesday, April 21, 2009

தாய்மார்களை பட்டினியாகப் பார்க்கும் கொடுமை!'-விவேக் நெகிழ்ச்சி விஜயகாந்த் வேண்டுகோள்:


இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் கோரி சென்னை தாயகத்தில் 10வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் பெண்களை நடிகர் விவேக் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

அவர்களின் நிலையைப் பார்த்து, 'உயிர் கொடுத்த தாயையும் சகோதரிகளையும் இப்படி பட்டினியாய் பார்ப்பதைவிட வேறு கொடுமை ஏதுமில்லை. ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் இது அவமானம்' என்று கண் கலங்கினார்.

அவர் மேலும் கூறியதாவது:

தமிழர்கள் ஈழ மண்ணில் படும் கஷ்டத்துக்காக நீங்கள் நடத்தும் போராட்டம் ஈடு இணை இல்லாதது. இந்தியாவில் மட்டுமல்ல... உலிகிலேயே இப்படிப்பட்ட உயர்வான பெண்களைப் பார்க்க முடியாது. பொதுவாக பெண்மை வணங்கத்தக்கது. குழந்தைகள் பட்டினி கிடந்தால் கூட பெண்கள் தாங்கிக் கொள்ளமாட்டார்கள். தங்கள் குழந்தைகளையும் நினைக்காமல் இலங்கை தமிழர்களுக்காக பட்டினி போராட்டம் நடத்துவது என்னை ஒரு நிலையில் இருக்க விடவில்லை. இந்த தாய்களுக்கு தமிழ்ச் சமூகமே நன்றிக்கடன் பட்டுள்ளது.

நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய தியாகம். ஒவ்வொரு தமிழர்களின் உணர்வையும் செயலாக்கி இருக்கிறீர்கள். எதையும் எதிர்பார்க்காமல் தியாக உணர்வோடு போராட்டம் நடத்துகிறீர்கள்.

எந்த கட்சி சார்பும் இல்லாமல் தமிழர் என்ற முறையில் நான் முழுமையாக ஆதரிக்கிறேன், என்றார்.

பின்னர் உண்ணாவிரதம் இருந்த பெண்களுக்கு ஒரு அட்டைப்பெட்டி நிறைய தண்ணீர் பாட்டில்கள் வாங்கி கொடுத்தார்.

விஜயகாந்த் வேண்டுகோள்:

இந் நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு அந்தப் பெண்களிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் விஜயகாந்த் செல்போனில் பெண்களிடம் பேசுகையில், போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் அந்தப் பெண்கள், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக சோனியா காந்தி உத்தரவாதம் அளித்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்வோம் என்று கூறிவிட்டனர்.

அதே போல தமிழ்நாடு வக்கீல்கள் சங்கம், சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் ஆகியவை இந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

கருணாலயா உள்ளிட்ட மகளிர் சமூக சேவை அமைப்புகளை சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த மாணவர்கள் மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்பினர் திடீரென கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பாந்தியன் சாலையில் ஊர்வலமாக சென்றனர். பாந்தியன் சாலை சந்திப்பில் அவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். பின்னர், எழும்பூர் ரயில் நிலையம் வழியாக ஊர்வலகமாக சென்றுவிட்டு மீண்டும் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கே வந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

த்‌‌ரிஷாவின் மதுர திமிரு

தெலுங்குப் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுவது அதிக‌ரித்திருக்கிறது. அருந்ததீ வெற்றிக்குப் பிறகு மொழிமாற்றப் படங்களுக்கான மவுசு மேலும் அதிக‌ரித்திருக்கிறது.
த்‌‌ரிஷா மகேஷ்பாபுவுடன் நடித்த சில படங்கள் தமிழில் வெளியாயின. குமரன், நந்து என்ற அந்தப் படங்களில் நந்து மட்டும் சில நாட்கள் ஓடியது. ஆனாலும், த்‌‌ரிஷா மீதான நம்பிக்கையில் மொழிமாற்றம் செய்வது தொடர்கிறது.

ரவிதேஜாவுடன் த்‌‌ரிஷா நடித்த கிருஷ்ணா படம் விரைவில் தமிழில் வெளியாகிறது. தமிழில் இதற்கு வை‌த்திருக்கும் பெயர் மதுர திமிரு. பாடகர் மனோ இந்தப் படத்தை தமிழில் வெளியிடுகிறார். கில்லி படத்தில் இடம்பெற்ற அப்படிப்போடு பாடலை கிருஷ்ணாவில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதே ட்யூன், வேறு வ‌‌ரிகள்.

தமிழ் வசனத்தை ராஜராஜா எழுதுகிறார். அப்படிப்போடு ட்யூனுக்கு பாடல் எழுதியிருப்பவர் பாலபாரதி. பொட்ட கோழி பொட்ட கோழி என வார்த்தைகளில் கொத்தியிருக்கிறார். கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருகிறது.

இயக்குநர் சசிகுமாருக்கு துபாயில் பாராட்டு!


சுப்பிரமணியபுரம் படத்தை முடித்துவிட்டு, பசங்க, நாடோடிகள் என அடுத்தடுத்த படங்களுக்கு இயக்குநர் சசிகுமார் போய்விட்டாலும், அவரது முதல் படத்துக்கான பாராட்டுக்கள் இன்னும் குவிந்த வண்ணம் உள்ளன.

அண்டை மாநில திரைக் கலைஞர்களாலும் பாராட்டப்பட்ட சுப்பிரமணியபுரம் படம் இப்போது, எல்லைகளைக் கடந்து துபாய் வரை போயிருக்கிறது.

துபாய் இலக்கிய மன்றம் சார்பில் நடந்த அமீரக கலை இலக்கியத் திருவிழாவில் இயக்குநர் சசிகுமாருக்கு ஞாயிற்றுக் கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

படத்தின் நாயகர்களில் ஒருவரான ஜெய்யும், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றார்.

'சுப்பிரமணியபுரம் படத்துக்கு கடல் கடந்தும் இத்தனை சிறப்புகள் கிடைத்திருப்பது, அடுத்து வரும் படங்களின் தரத்தை இன்னும் மேம்படுத்தும் முனைப்பை தனக்கு ஏற்படுத்தி'யிருப்பதாக சசிகுமார் தெரிவித்தார்.

ஏற்கெனவே கேரள திரையுலகம் சார்பில் சசிகுமாருக்கு பாராட்டு விழா நடந்தது நினைவிருக்கலாம்.

ராதிகா மல்ஹோத்ரா.. நமீதா ஜூனியர்!!


ஹாட் நமீதா இன்னும் ஒரு 'ஹாட்'டை அறிமுகப்படுத்துகிறார் தமிழ் கூறும் நல்லுலகுக்கு. இந்த வடக்கத்திய கிளியின் பெயர் ராதிகா மல்ஹோத்ரா. நமீதாவின் நெருங்கிய உறவினர்தானாம் இவர். தங்கச்சி முறையாம்.

நமீதாவே தனிப்பட்ட முறையில் சிபாரிசு செய்திருக்கும் கவர்ச்சிக் கிளி இவர்.

அங்கிதா புரொடக்ஷன்ஸ் சார்பில் செல்வராஜ் தயாரிக்கும் 'ராகவன்' என்ற படத்தில் அறிமுகமாகும் இந்த ராதிகா மல்ஹோத்ரா, கட்டிப்பிடி வைத்தியம், லிப்பாலஜி என சகலத்திலும் வெளுத்து வாங்கியிருக்கிறாராம்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிப்பவரும் புதுசுதான்... பெயர் விஜித். சாப்ட்வேர் எஞ்சினியர்.

செல்வராகவனிடம் உதவி இயக்குநராக இருந்த பரந்தாமன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம், கங்கை அமரன்.

நீ...ண்ட நாட்களுக்குப் பிறகு ஆர்மோனித்துடன் வருகிறார் இசையமைப்பாளராக.

கதை... வெற்றி பெறாத காதலுக்கே காதல் சரித்திரத்தில் அமரத்துவம் கிடைக்கும் என்ற உலகப் பொதுமொழியை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாம் இது.

படத்துக்கான ஷூட்டிங்கில் ஒருமுறை கதாநாயகனை நாயகி அடிக்கிற மாதிரி காட்சியாம். நான்கைந்து முறை நாயகி அடித்தும், திருப்தியாக வரவில்லையாம் காட்சி. உடனே இயக்குநர், 'நல்லா ஓங்கி நிஜமாவே அடிம்மா...' என்று கூறிவிட, கடந்த கால, நிகழ்கால கோபங்களையெல்லாம் கையில் கொண்டுவந்த ராதிகா ஓங்கி விட்டாராம் ஒரு அறை. விஜித்துக்கு பொறி கலங்கிவிட்டதாம்.

அதே போல முத்தமோ, நெருக்கமோ எந்த மாதிரியான காட்சிகளிலும் கொஞ்சமும் அச்சமின்றி தனது அக்கா நமீதா போலவே கலக்குகிறாராம் ராதிகா.

குஷ்பூவுக்கு சாதனைப் பெண்கள் விருது!!


நடிகை குஷ்பூ உள்பட 5 பேருக்கு சாதனைப் பெண்கள் விருது வழங்கினார் முன்னாள் நீதிபதி எஸ்.மோகன்.

கிராமப் பகுதிகளில் வசிக்கும் கைவினைக் கலைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களின் படைப்புகளை உரிய முறையில் சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது விக்டோரியா தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம்.

உலக மகளிர் தினத்தையொட்டி இந்த நிறுவனம் சார்பில் பெண் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருள் கண்காட்சி மற்றும் உலக பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது. கண்காட்சியை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியும், விக்டோரியா நிறுவனத்தின் தலைவருமான மோகன் தொடங்கி வைத்தார். 'இந்து' நிர்வாக இயக்குனர் என்.முரளி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 5 பெண்களுக்கு இந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.

திரைத் துறையில் சாதனை படைத்ததற்காக நடிகை குஷ்பூவுக்கும், கல்வித்துறையில் சாதனை படைத்ததற்காக டாக்டர் மீனா முத்தையாவுக்கும், கர்நாடக இசையில் சாதனை படைத்ததற்காக வசுந்தரா ராஜகோபாலுக்கும், சமூக சேவை பணியில் ஈடுபட்டதற்காக ரஷியாவை சேர்ந்த அனாஸ்டிசியா ஸ்மித்துக்கும், கிர்யோமிடனகாவுக்கும் (ஜப்பான்) இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய நடிகை குஷ்பு, பெண்கள் தங்கள் திறமைகளைப் புரிந்து கொண்டு செயலாற்றினால் சாதனைகள் படைக்கலாம் என்றார்.

வதந்தியால் இறுகிய காதல்! விரைவில் டும்டும்டும்...


கிணத்து தவளைய, ஆத்து முதலையா லவ் போவுதுன்னு அலட்சியமா இருக்காதே.அவசரமா கட்டுய்யா தாலி. அதுதான் அடுத்தவங்க கண்ணுக்கு வேலின்னு சொல்லாமல் சொல்லியிருக்கு ஒரு கிசுகிசு. இது பரவிய நொடியிலே இருந்தே பரிதவிச்சு போயிருக்காராம் மாண்டலின்!

மலையூர் மம்பட்டியான் படத்திலே பிரசாந்துக்கு ஜோடியா நடிச்சிட்டு இருக்காரு மீராஜாஸ்மின். இவருக்கும் பிரசாந்துக்கும் திடீர் லவ்வாயிடுச்சு. மாண்டலினை கழற்றிவிட்டுட்டு பிரசாந்துக்கு கழுத்தை நீட்டப் போறார் மீரான்னு முன்னணி பத்திரிகையில் முக்கிய செய்தியா வந்திருச்சு. அவ்வளவுதான், கொதித்து போய்விட்டாராம் மாண்டலின்.

வீட்டில் இனிய இசைக்கு பதில் டமால் டுமீல் சவுண்ட்! ரிலீஸ் நேரத்திலே படம் ஓடணும்ங்கிறதுக்காக கிசுகிசுவை கிளப்பிவிடுவாங்க. எப்படின்னா, படத்தோட ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் லவ் என்று. ஆனால், இங்கே அப்படியில்லே. மீரா நடிச்ச படம் வரப்போற நேரத்திலே அவரை வேறொரு ஹீரோவோட சேர்த்து பேசுறது எந்த விதத்திலே பப்ளிசிடி? ஆனாலும், இந்த செய்திக்கு பின்னணியில் இருப்பது பப்ளிசிடி நோக்கம்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

நடிச்சிட்டு இருக்கிற படங்களை உடனே முடிச்சுட்டு டும்டும்டும்முக்கு ரெடியாகிட்டாராம் மீரா. இசையோடுதான் இந்த ஜாஸ்மினின் கலவை. அதனால வதந்திக்கு இடம் கொடேல்!

கல்யாணம் எப்போ? ஆக்ஷன் சினேகாவின் ரீயாக்ஷன்...


குத்து விளக்காக இருந்தாலும் அடிக்கடி தேய்ச்சாதானே பளபளக்கும்? கொஞ்சம் டல்லடிக்கும் போது, தாராள கவர்ச்சியில் இறங்குவதுதான் ஒரு நடிகைக்கு நல்லது. யார் சொல்லிக் கொடுத்தார்களோ, சினேகாவும் இப்போது கவர்ச்சிக்கு மாறிட்டார். சுந்தர் சி யுடன் முரட்டுக்காளை ரீமேக்கில் நடிக்கும் இவருக்கு, ரதி நடித்த கேரக்டராம். ஒரிஜனல் முரட்டுக்காளையில் ரதியின் கிளாமர் பார்ப்பவர்கள் நாக்கில் 'ஸ்ஸ்ஸ்...ஆ' என்று வழிய வைக்கும்! "அதே அளவு இல்லைன்னாலும், ட்ரை பண்ணியிருக்கேன்" என்றார் சினேகா.

சினேகா மாதிரி நடிகைகளை பார்த்திட்டு கல்யாணம் எப்போன்னு கேட்காம வந்தா, அந்த மன்மதன் கண்ணை குத்த மாட்டானோ? அதனால் யோசிக்காமல் கேள்வியை கேட்க, இந்த கேள்வி எதுக்கு இப்போங்கிற மாதிரியே பார்த்தார் சினேகா. ஆனாலும், "ஒரு மூணு வருஷம் ஆகும்"னு அவரு சொன்னது ஆறுதல். எந்த புண்ணியவான் ஆர்டர் ஃபார்மில் கையெழுத்து போட்டிருக்கிறாரோ?

"காதல் கல்யாணமா, இல்லை அரேஞ்சுடு மேரேஜாங்கிறதையெல்லாம் இப்போ முடிவு பண்ண முடியாது. ஆனால், யாருக்கும் தெரியாம மட்டும் என் கல்யாணம் நடக்காது. நிச்சயம் உங்களுக்கு சொல்லுவேன்" என்றார் சினேக். கல்யாண பேச்சை வீட்டிலே எடுக்காததும் இந்த டிலேவுக்கு ஒரு காரணமாம். (கேட்குதுங்களா சார்?)

பவானியில் ஆக்ஷன் கேரக்டரில் நடிச்சதாலே அதே மாதிரி நிறைய படங்கள் வருதாம். ஆனால் "ஒரு நடிகைங்கிறவ வெவ்வேறு ரோலில் நடிக்கணும். அப்போதுதான் அவ நடிகை. மறுபடியும் ஒரு ஆக்ஷன் படத்திற்கு, நீங்க ஒரு ஆறு மாசமாவது பொறுத்திருக்கணும்" என்றார். அது அடிவாங்குறவங்க கவலை. நமக்கெதுக்குங்க?

படிக்க செல்லும் ஹாரிபாட்டர் நாயகி


விரைவில் அமெரிக்காவுக்கு செல்லவிருக்கிறார் எம்மா வாட்சன். ஹாரிபாட்டர் நாயகியின் இந்த வருகைக்கு காரணம் சினிமா அல்ல, படிப்பு.

சினிமாவில் வாய்ப்பு வந்தாலும் தனது படிப்பை தொடர நினைக்கிறார் எம்மா. அதற்காக பல யூனிவர்சிட்டிகளை பரிசீலித்து இறுதியில் அமெரிக்காவின் ப்ரவுன் யுனிவர்சிட்டியை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

யூனிவர்சிட்டியில் என்ன படிக்கப் போகிறார் என்பதை இன்னும் எம்மா தெரிவிக்கவில்லை. ஆனால், படித்தால் ப்ரவுன் யூனிவர்சிட்டி என்பதை மட்டும் உறுதிபடுத்தியிருக்கிறார்.

ஹாரிபாட்டர் ஆறாவது பாகத்தில் நடித்திருக்கும் எம்மா, பெர்னார்டோ பெர்ட்லூசியின் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கும் செய்தி இது.

ஆச்சரியத்துக்கு காரணம், ஆனானப்பட்ட மார்லன் பிராண்டோவையே உடல் உறவு காட்சியில் அம்மணமாக நடிக்க வைத்து பரபரப்பை கிளப்பியவர் இவர். லாஸ்ட் எம்பரர் போன்ற அற்புதமான படங்களை தந்த இவர் ஆஸ்கர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ர‌ஜினி வழியில் அ‌ஜித்


தலைவர் எவ்வழியோ தல-யும் அவ்வழி. சொந்தப் படத்தின் விழாக்களில் கலந்து கொள்கிறாரோ இல்லையோ, அ‌ஜித் பட விழாவென்றால் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் சூப்பர் ஸ்டார். விஜய் எம்.‌ஜி.ஆர். ரசிகராகிவிட்ட நிலையில் ர‌ஜினியின் போட்டியில்லா ஒரே கலையுலக வா‌ரிசாகியிருக்கிறார் அ‌ஜித்.

பிறந்த நாளின்போது ஏதாவது வெளிநாடுகளுக்கு பறந்து விடுவது சூப்பர் ஸ்டா‌ரின் வழக்கம். இந்தமுறை மே ஒன்றில் வரும் தனது பிறந்தநாளுக்கு சென்னையில் இருக்கப் போவதில்லை அ‌ஜித். ர‌ஜினியைப் போல வெளிநாடு போகிறார்.

மேலும், இலங்கை தமிழர் கஷ்டத்தில் இருக்கும் போது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.

மே மாதம் அசல் படப்பிடிப்பு தொடங்குகிறது. துருக்கி, டோக்கியோ போன்ற நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக இம்மாத இறுதியில் வெளிநாடு செல்கிறார் அ‌ஜித்.

சூர்யா போட்ட பிரெஞ்சு சண்டை


வெளிநாட்டுப் படங்களை காப்பியடித்து கதை செய்தது போய், சண்டைக் காட்சிகளை காப்பியடிக்கும் புதுக் கலாச்சாரம் ஏற்பட்டிருக்கிறது.

பீமா படத்தில் டோனி ஜா நடித்த படத்தின் சண்டைக் காட்சியை அப்படியே விக்ரமை வைத்து எடுத்திருந்தார்கள். பொல்லாதவனில் வரும் இறுதிச் சண்டை ஹய் ‌ரிச்சியின் ஸ்னாச் படத்திலிருந்து எடுக்கப்பட்டது. அயனிலும் வெளிநாட்டு சண்டைக் காட்சியை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சூர்யா காங்கோவில் போடும் சண்டை பிரெஞ்சு தற்காப்புக்கலையான யமஹசி பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அயனின் தெலுங்கு பதிப்பு வெளியானதையொட்டி நடத்தப்பட்ட விழாவில் அவர் ஒப்புக் கொண்டார். யமஹசி என்ற பெய‌ரிலேயே பிரெஞ்சில் ஒரு படம் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்தது.

மாடியிலிருந்து சூர்யா இன்னொரு குடியிருப்பின் ஜன்னலை உடைத்துக் கொண்டு தாவும் காட்சி ஹாலிவுட்டின் பார்ன் அல்டிமேட்டம் படத்தில் அப்படியே உள்ளது.

தமிழில் ஒரு படம் வெளியாகும்போது, படத்தில் எந்தெந்த வெளிநாட்டு படங்களின் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பதை கண்டுபிடிக்க ஒரு போட்டியே நடத்தலாம். சுவாரஸியமாக இருக்கும்.

ஜவுளிக்கடை விளம்பரத்தில் சத்யராஜ்!


'நினைக்கிறது கிடைக்கலேன்னா, கிடைக்கிறது புடிச்சிக்கணும்' என்ற வழக்குச் சொல்லை வாழ்க்கையிலும் பலமாகப் பிடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சத்யராஜ்.

நடிக்க வந்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நடிகர் சத்யராஜ் விளம்பரப் படம் ஒன்றில் நடிக்கிறார்.

இந்த விளம்பரத்தில் சத்யராஜ் மன்னராகவும், நடிகை சீதா அவரது 'மகாராணி'யாகவும், எம்எஸ் பாஸ்கர் அமைச்சராகவும் நடிக்கிறார்கள்.

சத்யராஜ் ஆரம்பத்தில் சின்னச்சின்ன வேடங்களில்தான் தோன்றி வந்தார். மிஸ்டர் பாரத் படத்தில் அவருக்கு குணச்சித்திர வேடம். பிறகு வில்லனாக ப்ரமோஷன். சாவி படம் மூலம் ஹீரோவானார்.

அதன்பிறகு தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வந்தார்.

இப்போது தனது வயது மற்றும் திரையுலக ட்ரெண்டை மனதில் கொண்டு தனது போக்கையும் மாற்றிக் கொண்டுள்ளார்.

இனி தொடர்ந்து நல்ல குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ள சத்யராஜ் 3 படங்களில் அத்தகைய வேடங்களில் நடிக்கிறார். தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள் திரைப்படம் அதில் ஒன்று.

தெலுங்கில் மீண்டும் வில்லனாக ஒரு படத்திலும், மலையாளத்தில் ஒரு படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடிக்கிறார் (ஆனால் சிவாஜியில் வில்லன் வேடம் கிடைத்த போது நடிக்க மறுத்துவிட்டார்).

ஆனால் இதுவரை அவர் ஒரு மலையாளப்படத்தில் கூட நடிக்காமல் இருந்துவந்தார். பல நிறுவனங்கள் அழைத்தும் மறுத்து வந்த சத்யராஜ், இப்போது அதற்கும் ஓகே சொல்லிவிட்டார்.

முதல்முறையாக, அவர் ஒரு ஜவுளிக்கடை விளம்பரப் படத்தில் நடிக்கிறார். சும்மா இல்லை... ஒரு திரைப்படத்துக்கு நிகரான சம்பளத்துடன்தான் இந்த வாய்ப்பு அவருக்கு வந்துள்ளது.

'அட, இது கூட நல்ல ரூட்டாயிருக்கே', என்று சந்தோஷப்பட்ட சத்யராஜ், இனி தொடர்ந்து விளம்பரப் படங்களில் நடிக்கப் போகிறாராம்.

Monday, April 20, 2009

பிஸியாகும் கார்த்திக்

தொப்பியில்லாமல் மேடை ஏறமாட்டேன் என்று அடம்பிடித்த நவரச நாயகன் கார்த்திக்கல்ல இவர். வானம் வசப்படும், பொய் சொல்ல போறோம் ஹீரோ கார்த்திக்.

அமெ‌ரிக்க ‌ரிட்டர்ன் மாப்பிள்ளையாக அறிமுகமாகி, பல ஹீரோக்களில் ஒருவராக நடித்து இப்போது சோலோ ஹீரோவாக முன்னேறியிருக்கிறார் இவர். இதே நேரத்தில் இரு படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. இரண்டிலும் சோலோ ஹீரோ என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

முதல் படம், எதுவும் நடக்கும். கேசவ் புரொட‌க்சன் ‌ஜி.கேசவன், கே.மகேஸ்வரன் இந்தப் படத்தை தயா‌ரிக்கின்றனர். கே.மகேஸ்வரனே கதை, திரைக்கதை, வசனமும் எழுதியிருக்கிறார். படத்தை இயக்குகிறவர் ரா.ரொஸா‌ரியோ.

இதில் கார்த்திக்குக்கு ஜோடி அபர்ணா. மலையாளி. ஏற்கனவே புதுக்கோட்டையிலிருந்து சரவணன் அபர்ணா இருப்பதால் இவரது பெயர் மாற்றப்படலாம்.

இதையடுத்து கொல கொலயா முந்தி‌ரிக்காய். வல்லமை தாராயோ மதுமிதா இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் கார்த்திக் ஜோடியாக அறிமுகமாகிறவர் பாவனா. இவர் மலையாள பாவனா அல்ல, கன்னட பாவனா. ஏற்கனவே ஒரு பாவனா இருப்பதால் வேறு நல்ல பெயராக தேடி வருகிறார்கள்.

இந்த இரு படங்களில் ஹீரோவாக நடிப்பதால் முதல் முறையாக பிஸியாகியிருக்கிறார் கார்த்திக்.

மாக்கான் ஸெல்வன்


இயக்குனர்கள் நடிகர்களாகும் காலமிது. அதிலும் முரட்டு வேடம் ஏற்பதில்தான் அனைத்து இயக்குனர்களும் போட்டி போடுகிறார்கள்.

அமீர் நடிக்கும் யோகியில் அவருக்கு முரட்டுத்தனமான சென்னை குப்பத்து தாதா வேடம். தருண்கோபியின் காட்டுப்பய பெரைக் கேட்டலே அவரது கேரக்டர் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது தெ‌ரிந்துவிடும். யோகியை இயக்கும் சுப்பிரமணிய சிவா ஹீரோவாக நடிக்கும் நித்யாவில் அவருக்கும் கரடுமுரடான வேடம்தான்.

இந்த வ‌ரிசையில் இயக்குனர் ஸெல்வன் ஹீரோவாக அறிமுகமாகும் படம், மாக்கான். முட்டாள் முரடனுக்கு ஊர் பக்கம் சொல்லும் செல்லப் பெயர் மாக்கான். ஸெல்வனிடம் உதவியாளராக இருந்த முரளிசாமி மாக்கானை இயக்குகிறார். ஸ்டார் சினி வொர்க்ஸ் தியாகராஜன் படத்தை தயா‌ரிக்கிறார். இசை ஸ்ரீகாந்த் தேவா.

படத்தின் சப் டைட்டிலில் ஷாருக்கான், சல்மான் கா‌ன், அமீர்கான் வ‌ரிசையில் மாக்கான் என்று போடுகிறார்கள். மேலே உள்ள கான்களுக்கு தமிழ் தெ‌ரியாது என்ற தை‌ரியமா?

மே 1 முதல் நியூட்டனின் 3ஆம் விதி


தொலைக்காட்சி மாடல் ஷாயாலி. அவரது காதலன் எஸ்.ஜே.சூர்யா. இவர்கள் காதலுக்கு ஒரு வில்லன். அந்த வில்லனை தனது புத்திசாலித்தனத்தை வைத்து ஒரே நாளில் பழி வாங்குகிறார் சூர்யா.

வித்தியாசமான கதை, வித்தியாசமான திரைக்கதை என சூர்யாவால் பாராட்டப்பட்ட இந்தப் படம் மே 1ஆம் தேதி திரைக்கு வருகிறது. மெட்ராஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் நந்தகோபால் நியூட்டனின் 3 ஆம் விதியை தயா‌ரித்திருக்கிறார்.

தன்னுடைய ப்ளேபாய் இமேஜை இந்தப் படம் மாற்றும் என்று சூர்யா சொல்லியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிக‌ரித்துள்ளது. தாய் முத்துச்செல்வன் படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு சரவணன்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து இயக்கிவரும் புலி படத்தை தமிழில் இயக்கி நடிக்கிறார் சூர்யா. புலிக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்பது இனிப்பான செய்தி.

மிஷ்கின் இயக்கத்தில் சேரன்


பாலுமகேந்திரா, மிஷ்கின், பாலா‌ஜி சக்திவேல், அமீர், கே.எஸ்.ரவிக்குமார், சமுத்திரக்கனி, சசி, சாமி... முன்னணி இயக்குநர்கள் வாழ்த்த தனது பொக்கிஷம் படத்தின் பாடல்களை வெளியிட்டார் சேரன்.

விழாவில் படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் ஒளிபரப்பப்பட்டன. பாடல்களைப் பார்த்தவர்களால் இசையமைப்பாளர்கள் சபேஷ் முரளியையும், ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அத்தனை அழகு, அத்தனை கச்சிதம்.

பாராட்டு மழைக்கு நடுவே இன்ப அதிர்ச்சி ஒன்றை அளித்தார் இயக்குனர் மிஷ்கின். விரைவில் சேரனை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறாராம்.

நந்தலாலாவுக்குப் பிறகு சூர்யாவை வைத்து எடுப்பதாக இருந்த முகமூடி படம் தள்ளிப் போவதால் வேறு படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே தெ‌ரிவித்திருந்தார் மிஷ்கின். அந்தப் படம் சேரன் நடிக்கும் படமாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.

நந்தலாலா வெளியாகும்போது இந்த சந்தேகத்துக்கு விடை கிடைக்கக்கூடும்.

சிறந்த நடிகை - ஆசினுக்கு சிங்கப்பூர் விருது


தசாவதாரம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஆசினுக்கு சிங்கப்பூரில் விருது கிடைத்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த சர்வதேச தமிழ் திரைப்பட விருது அமைப்பு இந்த விருதினை வழங்கியுள்ளது.

தசாவதாரம் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் ஆசின். இரண்டு வேடங்களிலும் சிறப்பாக நடித்தமைக்காக ஆசினுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது.

மே 16ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் விழாவில் ஆசினுக்கு விருது வழங்கப்படும்.

தசாவதாரம் தற்போது இந்தியிலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியில் பிசியாகி விட்ட ஆசின், சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ், 19 ஸ்டெப்ஸ் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 19 ஸ்டெப்ஸ் படத்தில் ஆசினுக்கு கராத்தே கற்றுக் கொடுப்பவராக கமல்ஹாசன் நடிக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.

ஈழப் படுகொலை பேனர் - மன்சூர் அலிகான் மீது வழக்கு


திருச்சி: திருச்சி தொகுதியில் போட்டியிடும் லட்சிய திமுக வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான், ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய பேனர்களை வைத்து பிரசாரம் செய்ததாக கூறி அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

லட்சிய திமுக சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் திருச்சியில் போட்டியிடுகிறார். தனது பிரசார வேனில், ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய பேனர்களை அவர் கட்டியுள்ளார்.

இது தேர்தல் நடத்தை விதிகளுக்குப் புறம்பானது. எனவே அகற்ற வேண்டும் என அவருக்கு போலீஸார் அறிவுறுத்தினர். இருப்பினும் அவர் கண்டுகொள்ளவில்லை. மேலும் அந்த பேனர்களில் தனது படத்தையும் அவர் இடம் பெற வைத்தார்.

இதையடுத்து மன்சூர் அலிகான் நடத்தை விதிகளை மீறியதாக கூறி போலீஸார் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மாரடைப்பையும் மீறி இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த பிரிட்டன் பெண்மணி!

லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த 38 வயது பெண்மணியான நீனா வேர் என்பவர் கடும் மாரடைப்பு ஏற்பட்ட சில நிமிடங்களுக்கு பிறகு இரண்டு ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இந்த மருத்துவ அதிசயம் கேம்பிரிட்ஜில் உள்ள பாப்வொர்த் மருத்துவமனையில் நடந்துள்ளது.

நீனாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் பிழைக்க வாய்ப்பேயில்லை என்று தெரிவித்ததோடு, அவர் இருந்த அறைக்கு இறுதி ஆசீர்வாதம் அளிக்க பாதிரியார் ஒருவரையும் அனுப்பியது.

இவரது கணவர், மனைவிக்கு தனது கடைசி ஆறுதல்களை கூறி பிரியாவிடை கொடுத்தார்.

ஆனால், அடுத்த சில நிமிடங்களில் இவற்றையெல்லாம் முறியடித்து, மருத்துவ அதிசயம் நிகழ்ந்தது.

சிசேரியன் அறுவை சிகிச்சையில் எவி, ஆல்ஃபி என்ற இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த நீனா வேர், அதன் பிறகு நடைபெற்ற இருதய அறுவை சிகிச்சையையும் தாங்கி உயிர் பிழைத்து விட்டார்.

அறுவை சிகிச்சை முடிந்து கண் விழித்துப் பார்த்த நீனா வேர் தான் உயிருடன் இருப்பதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். இது எப்படி நடந்தது என்று அவர் செய்கை மூலம் மருத்துவமனை பணிப்பெண்ணிடம் வினவியதாகவும், ஆனால் பணிப்பெண்ணிற்கு அது புரியவில்லை என்றும் பிரிட்டன் பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.

அதன் பிறகு பேச முடிந்தவுடன் அவர், தனக்கு நிகழ்ந்த இந்த அதிசயத்தைப் பற்றி குறிப்பிடுகையில் "அறுவை சிகிச்சைக்கு முன் என் கணவர் ஆன்டியை என் அறைக்கு அனுப்பினர். நாங்கள் இருவரும் தனித்து விடப்பட்டோம், நான் இறக்கப் போகிறேன் என்பதை அறிந்திருந்த நான் அதனை அமைதியாக எதிர்கொள்ள விரும்பினேன்" என்று கூறியதாக பிரிட்டன் பத்திரிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இப்போது கூட தான் உயிருடன் இருக்கிறேன் என்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என்று கூறும் நீனா, நார்ஃபோல்க் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையில் பணி புரிந்து வந்தார்.

இரட்டைக் குழந்தை பிறந்த அதே தினத்தில் இவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபடியும் ஒரு ஆட்டோகிராப்... சேரனின் 'பொக்கிஷ' படம்!


நாகூர் கதீராவுக்கும், கொல்கத்தா லெனினுக்கும் காதல். அதுவும் 1970 களில்...! இன்டர்நெட், ஈமெயில் இல்லாத காலத்தில் கடிதத்தை நம்பியே காதலை வளர்த்த 'அந்தகால' நினைவுகளை அப்படியே காவியமும், ஓவியமுமாக தர முயற்சித்திருக்கிறார் சேரன். அதுதான் பொக்கிஷம்!

'முழு ஷ§ட்டிங்கும் முடிஞ்சிருச்சு. இன்னும் பத்து நாள்தான் பாக்கி. அதையும் முடிச்சிட்டா எலக்ஷன் முடிஞ்சு நல்ல நாள் பார்த்து ரிலீஸ் பண்ணிற வேண்டியதுதான்' என்றார் சேரன். (நீங்க எப்போ படத்தை ரிலீஸ் செய்தாலும், அது தமிழ் சினிமாவுக்கு நல்ல நாள்தான்!) டைரிய புரட்டி, சம்பவங்களை நினைச்சு பார்க்கிற மாதிரி கதை சொல்றது ரொம்ப வசதியா இருக்குங்கிறதாலதான் ஆட்டோகிராஃப் மாதிரி தொடர்ந்து ரிப்பீட் பண்றீங்களோ? சேரனிடம் கேட்டால், 'ஆட்டோகிராஃப் மாதிரி இருந்தா நல்லதுதானே' என்றார். 'அப்படியில்லே, உண்மையிலேயே இதுபோன்ற படங்களை எடுக்கிறதுதான் ரொம்ப சிரமம். 70 களில் கொல்கத்தா எப்படியிருந்திருக்கும்னு பழைய போட்டோக்களை தேடி எடுத்து அதே மாதிரி வீதிகளை ரெடி பண்ணுவது எவ்வளவு சிரமம் தெரியுமா? படத்தோட 40 சதவீத கதை அங்கேதான் நடக்குது. ஆர்ட் டிபார்ட்மென்ட் உதவியோட அதை உருவாக்கியதே எங்களுக்கு பெரிய சவாலா இருந்திச்சு' என்றார் சேரன்.

நாகூர்லே ஒரு முஸ்லீம் பெரியவர் வீட்டில்தான் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். பத்ம ப்ரியாவின் சினிமா குடும்பத்தை பார்த்திட்டு, 'இவங்கள்ளாம் நிஜமாகவே ஒரே குடும்பம்தானா'னு கேட்டாங்களாம் அந்த ஊரில். 'அந்தளவுக்கு கதையோடவே வாழ்ந்திட்டாங்க எல்லாரும்'னாரு சேரன். வாழ்க்கையிலிருந்து கதையை எடுக்கிற சேரன் போன்ற டைரக்டர்களுக்கு இந்த புகழுரைகள் எல்லாம் ரொம்பவே சாதாரணம்!

அருவா அடிக்க ஆர்டர் கொடுக்கலே! மதுரை கதையும் மகிழும் இயக்குனரும்...


ரசிகர்கள் இப்போ செய்ய வேண்டியது டபுள் விசில் அடித்து 'ரைட்...ரைட்..'னு சிக்னல் கொடுக்க வேண்டியதுதான்! மதுரை டூ தேனி-வழி ஆண்டிப்பட்டி என்ற தலைப்பில் ஒரு படம். ஒரே நாளில் பஸ்சிற்குள் நடக்கிற கதை இது!

சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடிக