Saturday, April 11, 2009

நானூறு உதைகள் (400 Blows)!


தாய் தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் இந்த நவீன யுகத்தில், சிறுவர்களின் உலகில் பெற்றோர்களின் இடம் காலியாகவே உள்ளது. பரிசுகள் கொண்டோ, தண்டனைகளாலோ அந்த இடத்தை நிறைத்துவிட பெற்றோர்கள் முயல்கின்றனர். புறக்கணிப்பின் ஒரு பகுதியான பரிசுகளும், தண்டனைகளும் அந்த வெற்றிடத்தை மேலும் அதிகமாக்குவதை பெற்றோர்கள் உணர்வதில்லை.


இந்த எளிய உண்மையை அதைவிட எளிய வடிவில் திரையில் கொண்டுவந்தவர், பிரெஞ்ச் புதிய அலை சினிமா இயக்குனர்களில் ஒருவரான பிரான்கோ‌ஸ் த்ரூபோ (Francois Truffaut). படத்தின் பெயர் '400 Blows'.

1959ல் வெளியான இத்திரைப்படம் த்ரூபோவின் வாழ்க்கையை பிரதிபலித்தது எனலாம். 1932 ஆம் வருடம் பாரீசில் பிறந்தவர் த்ரூபோ. இவரது அம்மாவின் இரண்டாவது கணவர் இவரை ஏற்றுக்கொண்டாலும், பாட்டி வீட்டிலேயே வளர்ந்தார்.

நானூறு உதைகள் திரைப்படத்தில் வரும் சிறுவன் அந்த்யோனுக்கும் தகப்பன் இல்லை. தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவருடன் வாழ்கிறான். அந்த்யோனின் தாய் நேரம் கழித்து வரும்போது அவனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு, தாயின் இரண்டாவது கணவன் மீது விழுகிறது. இதனை முன்னிட்டு தனது மனைவியுடன் சண்டையிடுகிறான் அந்த கணவன்.

அந்த்யோவின் வீடு இப்படியென்றால், பள்ளிக்கூடமோ, தண்டனைகள் மட்டும் அளிக்கும் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான அமைப்பு. இந்த இரு பெரும் துயரங்களுக்கு நடுவில் திசைமாறுகறிது அந்த்யோனின் வாழ்க்கை.

உலகம் ஒரு அலுவலகமாக சுருங்கிவிட்டது என்றார் காஃப்கா. குழந்தைகளின் உலகம் இன்னும் மோசம். பெற்றோர்களின் ஆதிக்கமும் பள்ளிக் கூடங்களின் அதிகாரமும் அதனை சிறைக் கூடமாக மாற்றிவிட்டன. பிரச்சாரமோ, கண்ணீர் துளிகளோ எதுவுமின்றி த்ரூபோ இதனை துல்லியமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.

அத்துடன், தண்டனைகள் குற்றவாளிகளை திருத்துவதைவிட, குற்றங்களையும் குற்றவாளிகளையும் அதிகரிக்கவே துணைபோகின்றன என்பதையும் த்ரூபோவின் திரைப்படம் வெளிச்சமிட்டு காட்டுகிறது.

ஒரு நாள் காலை நேரத்தில் அவசர அவசரமாக பள்ளிக்குச் செல்கிறான் அந்த்யோன். வழியில் எதிர்படும் நண்பன் ரெனே, பள்ளிக்கு நேரமாகிவிட்டது. இனி சென்றால் வாத்தியார் உள்ளேயா விடப்போகிறார் என்று, அந்த்யோனை திரையரங்குக்கு அழைத்துச் செல்கிறான்.

இன்னொரு சமயம், ஆசிரியரின் தண்டனைக்குப் பயந்து அம்மா இறந்துவிட்டதாக கூறுகிறான். அது சிறிது நேரத்திலேயே பொய் என்று தெரிந்துவிடுகிறது. அவனது வளர்ப்பு தந்தை கன்னத்தில் அறைந்து சாயந்திரம் வா பார்த்துக் கொள்கிறேன் என்கிறான். அன்று முதல் முதலாக வீட்டிற்குச் செல்லாமல் தெருவில் தூங்குகிறான் அந்த்யோன்.

தண்டனையும் அது தரும் பயமும் சிறுவர்களை யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாதவர்களாக்கி, குறுக்கு வழியை திறந்துவிடுகின்றன. அந்த்யோன் புரியும் அனைத்து தவறுகளின் ஊற்றுக்கண்ணாக இருப்பதும் பெற்றோர்களின் புறக்கணிப்பும், தண்டனை குறித்த பயமும்தான்.

webdunia photo FILE
சிறுவர்களின் உலகம் இறுக்கமான அதிகாரங்களாலும், புரிந்துகொள்ளப்படாத புறக்கணிப்பாலும் எவ்வாறு சிதைவுறுகிறது என்பதை நேர்மையாக காட்சிப்படுத்திய திரைப்படம் என்று த்ரூபோவின் நானூறு உதைகளை கூறலாம்.

பிரான்சில் 1951ல் வெளிவரத் துவங்கிய காகியேது சினிமா என்ற பத்திரிக்கையில் சினிமா விமர்சனங்கள் எழுதிவந்த த்ரூபோ தனது கட்டுரைகள் மூலம் எப்படியொரு தாக்கத்தை உருவாக்கினாரோ, அதேபோல் திரைப்படங்கள் வாயிலாகவும் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

நானூறு உதைகளில் அவர் சிம்பதியை உருவாக்கவில்லை. யார் மீது தவறு என்று ஒருவரையும் சுட்டிக்காட்டவில்லை. இயல்பான நிகழ்வுகளின் மூலம் சொல்ல வேண்டியதை ரசிகர்களிடம் உணர வைத்துவிடுகிறார்.

பள்ளி அறையில் மாணவர்களின் குறும்புகளை அவர் படமாக்கியிருக்கும் விதம் அலாதியானது. செயற்கையின் நிழலே படராத காட்சிகள் அவை. ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி பாயாமல், செயற்கையாக உணர்ச்சிகளை தட்டியெழுப்பாமல் இயல்பான தன்னெழுச்சியை உருவாக்கும் நவீன சினிமாக்களில் நானூறு உதைகளுக்கு என்றும் இடம் உண்டு.

படத்தில் ஆந்த்யோன் தனது வளர்ப்பு தந்தையின் அலுவலகத்திலிருந்து டைப்ரைட்டர் ஒன்றை திருடுகிறான். திருடும் போது மாட்டிக் கொள்ளாதவன், அதனை திருப்பி வைக்கும்போது மாட்டிக் கொள்கிறான். சந்தர்ப்பங்களே ஒருவனை திருடாக்குகின்றன. ஆனால், திருப்பி வைக்கும் குணம் தனிப்பட்ட ஒருவரின் இயல்பு. அந்த திருப்பி வைக்கும் குணத்தை தவறவிடாதவர்கள் தவறவிடக்கூடாத படம் இது. ஒவ்வொரு பெற்றோரும், பள்ளிக் கூடங்களும் அந்த்யோனின் உலகை புரிந்துகொண்டால் தண்டனைகளுக்கான தேவையே இருக்காது.

காரணம், கடுமையான தண்டனைகள் திறமையான குற்றவாளிகளையே உருவாக்குகின்றன!

Friday, April 10, 2009

சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள்


சந்தேகம் என்பது வந்துவிட்டால் சந்தோஷம் என்பது போய்விடும் என்று ஒரு பழமொழி உள்ளது.

இது எந்த விஷயத்திற்கும் பொருந்தும். காதலர்களாக இருந்தாலும் சரி, தம்பதிகளாக இருந்தாலும் சரி ஒருவரை ஒருவர் முழுமையாக நம்பிக்கை வையுங்கள்.

பொதுவாக திருமணத்திற்குப் பின்னர் பெரும்பாலான பெண்கள் (கணவன் அழகாகவோ உயர்ந்த பதவியில் இருந்தாலோ இது அதிகரிக்கும்) கணவன் மீது அல்லது கணவன் மனைவி மீது சந்தேகப்படுவது வழக்கமாக நடக்கும் விஷயம்தான்.

தனது துணைக்கு எதிர்பாலரிடம் இருந்து செல்பேசி அழைப்போ அல்லது மின்னஞ்சல் வந்தாலோ இவர்களுக்கு வியர்த்துவிடும். அதாவது சந்தேகப் பொறி எழுந்துவிடும்.

உடனடியாக அதனை அலசி, தனது மூளைக்கு எட்டியவரை அவரைப் பற்றியும், போன் செய்தவரைப் பற்றியும் தொடர்பு படுத்தி பல்வேறு எதிர்மறை விஷயங்களை எண்ணி எண்ணி அதனை பெரிதாக்கி விடுவார்கள்.

நேரடியாக துணையிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம், அதில்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் துப்பறிந்து பல்வேறு தவறான தகவல்களை சேகரித்து சண்டை போடுபவர்கள் இரண்டாவது ரகம்.

இதில் ரெண்டுமே தவறுதான். தொடர்ந்து சந்தேகக் கேள்விகள் கேட்பதும் சரி, நம்மை துப்பறிகிறார் என்ற எண்ணமும் சரி துணையின் மீது ஒரு வித அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்திவிடும்.

இவர்களுடன் பேசி, தங்களது அன்பையும், ஒழுக்கத்தையும் விளக்கி புரிய வைக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால், இவர்களும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடுவார்கள்.

அல்லது, இவர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபரைக் கொண்டு அறிவுரை வழங்கச் சொல்வதும் நல்ல பலனை அளிக்கும்.

இதற்காகத்தான், திருமணத்திற்கு முன்பு நடந்த சில சம்பவங்களை உண்மையாக நடந்துகொள்வதாகக் கூறி துணையிடம்ட கூற வேண்டாம் என்று பல மனநல நிபுணர்களும் உணர்த்துகின்றனர்.

ஏனெனில் நமக்கு வாய்த்தது இந்த சந்தேகப்பிராணிகளில் ஒன்றாக இருந்துவிட்டால், நாம் கூறியதை எல்லாம் வைத்து ஒரு ரோடு போட்டு அதில் பேருந்தே விட்டுவிடுவார்கள். அதனால்தான்.. நடந்து முடிந்த விஷயங்களை துணையிடம் கூற வேண்டிய அவசியமில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

சந்தேகப் பிராணியை வளர்க்காதீர்கள். அது நம் சந்தோஷத்தை உணவாக விழுங்கிவிடும்.

இதுவே காதலர்களாக இருந்தால்... அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

வித்திருங்க, இல்லேன்னா உருவிருவாய்ங்க... விவேக் அதிரடி!


'இதே வேலையா இருந்திருப்பாரு போலருக்கு' என்றார் நடிகர் அலெக்ஸ். இவர் ஆச்சர்யப்பட்ட இளைஞர் சுரேஷ் ஜோகிம் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கின்னஸ் சாதனை செய்திருக்கிறார். இப்போது 12 நாட்களில் ஒரு படத்தை எடுக்கும் முயற்சிக்காக சென்னை வந்திருக்கிறார். இவர் வெளிநாட்டில் வாழும் ஒரு புலம் பெயர்ந்த தமிழர்.

ஏப்ரல் 13 ந் தேதி மாலை பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு துவங்குகிறது. ஏப்ரல் 25 ந் தேதி மாலை சத்யம் தியேட்டரில் படம் ரிலீஸ்! 'டைட்டில் என்னன்னு கூட சொல்ல மாட்டேங்கிறாய்ங்க' என்றார் விவேக். படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் இவர். 'சாதாரமாகவே ஹீரோவோ, ஹீரோயினோ வர லேட்டாயிருச்சுன்னா, சும்மாதானே இருக்கீங்க, ஏதாவது செய்யுங்கன்னு கேமிராவை ஆன் பண்ணிவிட்டுருவாய்ங்க. பிலிம் கொஞ்சமா மீந்துருச்சு, வெயில் இன்னும் பத்து நிமிஷத்திலே போயிரும்ங்கிற நேரத்திலே எல்லாம் எங்களை மாதிரி காமெடியன்களை போட்டு உருட்டுவாய்ங்க. இந்த படத்தை 12 நாளில் முடிக்கணுமாம். அதுவும் பாதி படத்திலே நீங்கதான் இருக்கீங்கன்னு சொல்றாய்ங்க. என்னாவப் போவுதோ?' என்றார் விவேக்.

வைரமுத்து எழுதிய 'தமிழா, தமிழா நீ சாதிக்க பிறந்தவண்டா' என்ற பாடலுக்கு தேவா இசையமைத்திருக்கிறார். படத்தில் இடம் பெறாவிட்டாலும், பிரமோஷனுக்காக உருவாக்கப்பட்ட பாடலாம் இது. 'பாட்டு ரொம்ப நல்லாயிருக்கு. படத்திலே யூஸ் பண்ணலேன்னா சீக்கிரம் யாருட்டேயாவது வித்துருங்க. இல்லேன்னா அப்படியே உருவிருவாய்ங்க' என்று விவேக் சொல்ல, பலத்த கைதட்டல் அரங்கத்தில்!

படத்தில் பிரவீணா என்ற பார்வைற்ற பெண்ணுக்கு பாட வாய்பளித்திருக்கிறார் ஜோகிம். 'அவங்க வாய்ஸ் டெஸ்டுக்காக வந்திருந்தாங்க. சும்மா சொல்லக்கூடாது. அந்த சுசீலாம்மாவே நேரடியா வந்து பாடுற மாதிரி இருந்திச்சு' என்றார் தேவா.

'படத்தை எடுக்கறது பெரிசில்லே, அதை ரிலீஸ் பண்றதுதான் பெரிய கின்னஸ் சாதனை' என்றார் விவேக். இந்த படத்தை 75 நாடுகளில் ரிலீஸ் செய்யப் போகிறார்களாம். ஆச்சர்யமாக இருந்தது!

தயாரிப்பாளர் ஆன கவர்ச்சி நடிகை! ஜெர்மனியில் படப்பிடிப்பு


'கேள்விக்குறி' என்ற படத்தை எடுத்து தமிழக போலீஸ் வட்டாரத்தில் 'நோட்டட்' Sonaஆனவர் ஜெய்லானி. தனது மனைவியின் 'லாக்கப்' கொலைக்காக போலீஸ் அதிகாரிகளை கடத்திச் சென்று நியாயம் கேட்கும் இளைஞனின் கதை அது. ரிலீஸ் ஆன முதல் வாரத்திலேயே கோர்ட்டுக்கு போய் தடையுத்தரவு வாங்கியது காவல் துறை. அதன்பின் அந்த படம் திரையிடப்படவேயில்லை.

இப்போது மீண்டும் வந்திருக்கிறார் ஜெய்லானி. இந்த முறை அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டார் என்று நம்பலாம். ஏனென்றால் படத்தின் தயாரிப்பாளர் சோனா! அநேக படங்களில் துண்டு துக்கடா துணியோடு வந்து ஆட்டம் போடும் கவர்ச்சி நடிகை இவர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நடிகை ஷில்பா ஷெட்டியை சென்னைக்கு வரவழைத்து தனது துணிக்கடையை ஓப்பன் செய்தார் சோனா. (கவர்ச்சி நடிகைகளுக்கெல்லாம் துணிக்கடை மேல் ஒரு மோகம் இருக்கிறதே...)

யுனிக் புரடக்ஷன் என்ற புதிய படநிறுவனத்தை தொடங்கியிருக்கும் சோனாவுக்காக Odu Machi Oduஇந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடிக்கிறார் ஜெய்லானி. படத்தின் பெயர் ஓடு மச்சி ஓடு. உள்ளூரில் மட்டுமல்ல, 30 நாட்கள் ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப் போகிறார்களாம். ஜெர்மன் அழகி கிளாடியா, மும்பை அழகி சுவேதா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய செய்தி, இப்படத்தில் சோனாவின் கவர்ச்சி ஆட்டம் இல்லையாம். பெட்டியை திறந்து பணத்தை கொடுப்பதோடு சரி போலிருக்கிறது.

ஜெய்யின் பிசினசையும் தாண்டி செலவு செய்தோம்... வாமனன் இயக்குனர் அஹமது!


'ஜெய் ஹோ'ன்னு பாராட்டுற அளவுக்கு படத்திலே நடிச்சாலும், நிஜத்தில பார்ட்டி பம்மிக்கிட்டுதான் இருக்காரு! வாமனன் பாடல் வெளியீட்டு விழாவில் தலையை காட்டிவிட்டு மனிதர் அப்படியே 'எஸ்கேப்'! பத்திரிகையாளர் சந்திப்பில் 'எங்கே ஜெய்?' என்று தேடினார்கள் நிருபர்கள். எல்லார் கண்ணிலும் மிளகாய் பொடி! 'அவரு கோவா ஷ¨ட்டிகிற்கு போயிட்டாரு. உங்களையெல்லாம் பிறகு சந்திக்கிறாராம்' என்றார் டைரக்டர் அஹமது. பேச்சு வாமனன் பக்கம் திரும்பியது.

'இந்த படத்திற்கு பெரிய பலம் யுவன்சங்கர்ராஜாதான். அவரு மட்டுமில்லைன்னா இந்த படம் 'வா' என்பதோட நின்றிருக்கும். நிறைய புதுசு புதுசா இதிலே ட்ரை பண்ணியிருக்கோம். வசனங்களே இல்லாத பல காட்சிகளை யுவன் தன்னோட இசையால் நிரப்பியிருக்காரு' என்றார் அஹமது. வாமனன் என்ற தலைப்புக்கும் அப்படியே விளக்கம் சொன்னார். 'சதாரணமான ஆள்தானேன்னு அலட்சியப்படுத்துகிற ஒருவனிடம், தான் எவ்வளவு பெரிய ஆள் என்று நிருபிக்கிறார் ஹீரோ. இதுதான் படத்தின் ஒன் லைன்! ஆரம்பத்தில் நாங்கள் போட்ட பட்ஜெட் போக போக விரிந்து கொண்டே போனது. இப்போது ஜெய்யின் பிசினசையும் தாண்டி பல மடங்கு செலவாகிவிட்டது. ஆனாலும், கதைக்கு தேவை என்பதால் செலவு செய்தோம்' என்றார்.

ஐஸ்கிரீமாக குழைந்தார் லட்சுமிராய். 'ஷ¨ட்டிங் ஸ்பாட்டிலே எல்லாருமே ரொம்ப பிரண்ட்லியா இருந்தாங்க. தாம் தூம் படத்திற்கு பிறகு எனக்கு நடிக்கவும் ஹோப் உள்ள படம் இது' என்றார்.

நடிப்பை யாருங்க எதிர்பார்த்தது, உங்ககிட்டே...?

Thursday, April 9, 2009

தலைவன் இருக்கின்றான் பெயர் மாற்றம்


தலைவன் இருக்கின்றான் படத்தின் பெயரை மாற்றியிருக்கிறார் கமல்.

இந்தியில் வெளியான தி வெட்னெஸ்டே படத்தை தமிழில் தலைவன் இருக்கின்றான் என்ற பெய‌‌ரில் எடுக்கயிருப்பதாக அறிவித்திருந்தார் கமல்.

இதில் நஸ்ருதீன் ஷா நடித்த வேடத்தில் கமலும், அனுபம்கெர் நடித்த போலீஸ் கமிஷனர் வேடத்தில் மோகன்லாலும் நடிப்பதாக கூறப்பட்டது. படத்தின் தெலுங்கு பதிப்பில் மோகன்லால் வேடத்தை வெங்கடேஷ் செய்கிறார்.

கமலின் ரா‌ஜ் கமல் இன்டர்நேஷனலும் யு டிவி-யும் இணைந்து தமிழ், தெலுங்கில் இந்தப் படத்தை தயா‌ரிக்கின்றன. சக்‌ரி படத்தை இயக்குகிறார். படத்தில் பாடல்கள் இல்லை.

இன்று ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் பெயரை தற்போது உன்னைப்போல் ஒருவன் என மாற்றியிருக்கிறார் கமல். அவர் வெளியிட்டுள்ள படத்தின் ட்ரெய்ல‌ரிலும் தலைவன் இருக்கின்றான் பெயருக்கு பதில் உன்னைப்போல் ஒருவன் என்ற பெயரே இடம்பெற்றுள்ளது.

படத்தின் பின்னணி இசை மற்றும் விளம்பர பாடலுக்கு கமலின் மகள் ஸ்ருதி ஹாசன் இசையமைக்கிறார். இது அவரது முதல் திரையிசை என்பது குறிப்பிடத்தக்கது.

காமெடி செய்யும் முத்திரை இயக்குனர்

ஏஎஸ்ஏ புரொடக்­சனின் முத்திரை படத்தை ஜீவாவின் முன்னாள் அசிஸ்டெண்ட் ஸ்ரீநாத் இயக்குகிறார். அவரை நீங்கள் ஜீவாவின் படங்களில் பார்த்திருக்கலாம். ஜீவா படங்களில் இவரது காமெடி பிரபலம்.

முத்திரை படத்தை இயக்கினாலும், தனது பேவரைட் காமெடியை இவர் விடுவதாயில்லை. காமெடி ரோல் என்று யார் வந்தாலும் அரிதாரம் பூசி ஆஜராகிவிடுகிறார். இந்த தொழில் ஈடுபாட்டுக்கு இதுவரை கிடைத்திருப்பது 3 படங்கள். மாசிலாமணி, குட்டி மற்றும் விஜய்யின் வேட்டைக்காரன்.

இந்த 3 படங்களிலும் காமெடியனாக நடிப்பவர், படம் இயக்கினாலும், நடிப்பை கைவிட மாட்டேன் என்றார் உறுதியாக. யீத்திரை வெளிவரும் முன்பே அடுத்தப் படத்துக்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்திருப்பது ஆச்சரியம்.

அப்படி முத்திரையில் என்ன இருக்கிறது?

நிதின் சத்யாவும், டேனியல் பாலாஜியும் திருடர்கள். இருவரும் காதலில் விழும் போது எதிர்பாராத பிரச்சனை ஒன்று வருகிறது. அதிலிருந்து இருவரும்... ஸாரி, இவர்கள் காதலிகளையும் சேர்த்து நால்வரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை சுவாரஸியமாக கூறியிருக்கிறார். படத்தை கலர்ஃபுல்லக்க மஞ்சரி, லட்சுமிராயுடன் ஒரு குத்தாட்டத்தில் ராக்கி சாவந்தும் தலை காட்டுகிறார்.

இசைக்கு யுவன், கலைக்கு தோட்டா தரணி என பக்கா டீம் என்தால் உற்சாகமாக இருக்கிறது முத்திரை யூனிட்.

சமாதான புறாக்களாக மாறிய ஷாருக்-அமீர்


பஞ்சும் நெருப்பும் பக்கத்திலிருந்தால் பற்றிக்கொள்ளும், இந்தியாவும் பாகிஸ்தானும் அவ்வப்போது மோதிக்கொள்ளும். ஷாரூக்-அமீர் கானும் இப்படித்தான் இருந்தனர்.
ஆனால் திடீரென சமாதான புறாக்களாக போஸ் தர ஆரம்பித்து பாலிவுட்டை ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார் என்பதில் அமீர், ஷாரூக் இடையே மோதல் ஏற்பட்டது. 'நான்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்' என ஷாரூக் கூறியிருந்தார். 'கடந்த பல ஆண்டுகளாக ஷாரூக் இதையே கூறி வருகிறார். அவரது வேலையே இதுதான்' என அமீர் பதிலளித்து இருந்தார். இதைத் தொடர்ந்து ஒருவரை தாக்கி ஒருவர் அவ்வப்போது பேட்டி தந்தனர். இப்போது இவர்களின் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தி படங்களை மும்பை மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் திரையிடுவதில் தயாரிப்பாளர்-தியேட்டர் அதிபர்கள் இடையே பிரச்சனை எழுந்தது. பட வசூல் தொகையில் 50 சதவீதத்துக்கு மேல் தங்களுக்கு வேண்டும் என மல்டிபிளக்ஸ் தியேட்டர் அதிபர்கள் கேட்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து எந்த புதிய இந்தி படங்களும் இந்த வாரம் திரைக்கு வரவில்லை.

இது தொடர்பாக விவாதிக்க தயாரிப்பாளர்கள் கூட்டம் மும்பையில் நேற்று முன்தினம் நடந்தது. நடிப்பதுடன் படங்களையும் தயாரிப்பதால் ஷாரூக், அமீருக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு தரப்பட்டது. கூட்டத்துக்கு வந்த இருவரும் கைகுலுக்கி அருகருகே அமர்ந்தனர். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர், நானும் அமீரும் சேர்ந்துதான் இருக்கிறோம். தயாரிப்பாளர்-தியேட்டர் அதிபர்கள் பிரச்சனையை பேசித்தான் தீர்க்க முடியும் என்றார் ஷாரூக்.

காங்கிரஸ் சார்பில் சுரேஷ் கோபி போட்டியா?


'காங்கிரஸ் சார்பில் இந்தத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை' என்றார் நடிகர் சுரேஷ் கோபி.

மலையாளம் மர்றும் தமிழ்ப் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் சுரேஷ்கோபி நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

காரின் மீது சிவப்பு விளக்கு சுற்றி வர, ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக என்னைப் பார்க்க வேண்டும் என்று என் தந்தை விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை.

ஆனால் அதுபோன்ற வேடங்கள் பலவற்றில் நடித்து என் தந்தை கண்குளிரப் பார்க்கச் செய்துவிட்டேன்.

நான் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. எந்த ஒரு தனிக் கட்சிக்கும் அடிமையாவதை விரும்பவில்லை நான். எனக்கு பிடித்த தொழில் சினிமாதான். அது போதும்.

தேர்தலில் ஓட்டுப் போடக்கூட நான் இங்கு இருக்கமாட்டேன். நான் எங்கே தேர்தலில் நிற்பது...

காங்கிரஸில் சிதம்பரம், மன்மோகன் சிங் இருவரையும் எனக்குப் பிடிக்கும். இந்த இருவரும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும்.

அதே போல தலைவர்களில் இப்போதைய முதல்வர் அச்சுதானந்தனை எனக்குப் பிடிக்கும், என்றார் சுரேஷ் கோபி.

கந்தசாமி குழுவுடன் திருப்போரூர் மக்கள் மோதல்!


திருப்போரூர் அருகே கந்தசாமி படப்பிடிப்பு நடைபெற்றபோது, உள்ளூர் மக்களுக்கும், கந்தசாமி குழுவுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

கலைப்புலி தாணு தயாரிப்பில், சுசி கணேசன் இயங்கும் பிரமாண்ட படம் கந்தசாமி. விக்ரம் ஸ்ரேயா நடிக்கும் இந்தப் படத்தின் அசத்தல் ட்ரைலர்கள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இதனால் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கோடையின் மிகப் பெரிய விருந்தாக வரவிருக்கும் கந்தசாமியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆனால் சில காமெடி காட்சிகளை மட்டும் எடுக்க வேண்டி இருந்ததால், சென்னையை அடுத்த திருப்போரூரில் கடந்த 3 நாட்களாக அந்தக் காட்சிகளை எடுத்து வருகிறார்கள்.

நேற்று மாலை இந்தப் படத்தின் சில காட்சிகள், அந்த ஊரின் முக்கியப் பிரமுகர் வீட்டின் வாசலில் நடைபெற்றுக் கண்டிருந்தது.

அப்போது வீட்டு உரிமையாளர் வெளியூர் போயிருந்தாராம். உடன் தனது குழந்தைகளையும் கூட்டிப் போயிருக்கிறார். வீடு திரும்பும்போது, முதலில் குழந்தைகளை மட்டும் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அவர்களை அந்தப் பக்கம் விடமறுத்து இழுத்துத் தள்ளியுள்ளனர் படப்பிடிப்புக்கு காவலாக நிறுத்தப்பட்ட செக்யூரிட்டி ஆட்கள். அப்போது ஒரு காமெடி காட்சி படமாகிக் கொண்டிருந்ததாம்.

தகவல் தெரிந்ததும் கடுப்பான வீட்டு உரிமையாளர் அந்த செக்யூரிட்டிகளுடன் கடுமையான வாய்த் தகராறில் இறங்க, அவருக்கு ஆதரவாக ஊர் பொதுமக்களும் சேர்ந்து கொள்ள பெரும் பிரச்சினையாகிவிட்டது. படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.

பின்னர் இயக்குநர் சுசிகணேசனும் மன்சூர் அலிகானும் வடிவேலுவும் அந்த வீட்டு உரிமையாளர் மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். அதன் பிறகுதான் மீண்டும் படம் பிடிக்கவே அனுமதித்தார்களாம்.

'அப்பா வருவார் அரசியலுக்கு!'-சௌந்தர்யா


'மக்களுக்கு நல்லது பண்ண அப்பா நிச்சயம் வருவார்' என சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினி கூறியுள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவும் சூழலில், நேற்று ரஜினியிடம் அவரது அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டார். ஆனால் அவரது மகள் சௌந்தர்யாவோ, ரஜிநி அரசியலுக்கு வரவேண்டும் என்பதே அவரது குடும்பத்தினரின் விருப்பமும் என்று கூறியுள்ளார்.

குமுதம் பேட்டியில் சௌந்ததர்யாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:

வெங்கட் பிரபுவோட இணைஞ்சிருக்கீங்க... எப்படி ஃபீல் பண்றீங்க, கோவா டு தேனி பற்றி?

வெங்கட் வெரி குட் ஃப்ரெண்ட். அவர் டீமோட ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். இது பிரபுவோட ஹாட்ரிக் வெற்றிப் படமா இருக்கும். இந்தப் படத்தோட தயாரிப்பாளராக இருப்பதில் ரொம்ப சந்தோஷம்.

நீங்க தயாரிக்கும் ரஜினியோட சுல்தான் அனிமேஷன் படம் எப்ப திரைக்கு வரும்?

நல்லபடியா போயிட்டிருக்கு. அனிமேஷன் படம்னா ரொம்ப லேட் ஆகும். லாவ் ஆக்ஷன் படம்ன்றது ஈஸியா முடிச்சிடலாம். ஆக்டர்ஸ் நடிச்சா கட் சொல்லலாம், ஆக்ஷன் சொல்லலாம், ரீடேக் போகலாம். ஆனா அனிமேஷன்ல ஸ்டார்ட் டு எண்ட் வரைக்கும் டெக்னாலஜி. அப்பாவை வச்சுப் பண்றதால, பக்காவா வரணும்னு எக்ஸ்ட்ரா டயம் எடுத்துப் பண்றோம். கண்டிப்பா இந்த வருஷம் முடியறதுக்குள்ளே வந்திடும்!

கலர்புல் சிட்டியிலிருந்து கரிசல்காட்டுக்கு வந்திருக்கீங்க. எப்படி இருக்கு?

எல்லாமே நம்ம ஊருதானே (பொழச்சிக்கிருவீங்க!). தேனிக்கு இப்பதான் முதல்முறையா வர்றேன். ஆனா சினிமாவில தேனிக்கு நிறைய ஹிஸ்டரி இருக்கு. அப்பா ரொம்பப் படம் இங்கே நடிச்சிருக்கார். வெங்கட்டோட ஃபேமிலிக்கு இந்த ஊருதான். கங்கை அமரன் சார் ரொம்பப் படம் பண்ணியிருக்கார். ரொம்ப இம்பார்ட்டன்ட் சினிமா சிட்டி இது... பட்டி இல்லை!

தமிழகத்தில் சினிமா துறை சார்ந்த குடும்பங்கள் அரசியலுக்கும் வந்தாச்சு. சினிமாவுல முழுமையா வந்துட்ட நீங்க அரசியலுக்கு வர்றது எப்போ?

நான் அரசியல்ல என்ன நடக்குதுன்னு தினமும் ஃபாலோ பண்ணுவேன். எல்லா நியூஸும் தெரியும். அப்பாவோட நிறைய அரசியல் பேசியிருக்கேன். இரண்டு பேருக்கும் அரசியல்ல நிறைய ஐடியாஸ் உண்டு. கிராஃபிக்ஸ்ல இருந்து சினிமா வரைக்கும் வந்தாச்சு, கண்டிப்பா அரசியலுக்கும் வருவோம். 'அப்பா அரசியலுக்கு வரணும்னு' நாங்க சொல்றோம். அப்பா எப்பவுமே 'மக்களுக்கு நல்லது பண்ணனும், மக்கள் விரும்பறதைச் செய்யணும்'னு சொல்வார். சீக்கிரம் கிருஷ்ண பகவான் ஆசியோட நல்லது பண்ண அப்பா வருவார்!

சூப்பர் ஸ்டார் மாதிரி பொண்ணுக்கும் பஞ்ச் டயலாக் இருக்கா?

ரஜினியைப் போலவே முடியை ஸ்டைலாகக் கோதிவிட்டு பளிச்சென்று சிரிக்கிறார். "பஞ்ச் அப்பாதான் சொல்லணும்! அவரு மாதிரி வருமா? நான் வெரி சிம்பிள், இருந்தாலும் சொல்றேன்... 'பெத்தவங்க குழந்தைக்கு என்ன பண்ணனும்னு கேக்கக்கூடாது. குழந்தைங்க பெத்தவங்களுக்கு என்ன பண்றாங்கன்னு கேக்கணும்!' - இது என்னோட, எனக்குப் பிடித்த பஞ்ச் டயலாக்!

சரி... அரசியல்ல உங்களுக்குப் பிடிச்ச தலைவர் யார்?

ஓபாமா...! (ஆத்தீ... ரொம்ப கஷ்டம்பா சாமீ போட்டு வாங்குறது!)

'நாங்க புதுசா!' ஸ்ரேயாவும், விஷாலும்...


சேராத ஜோடி ஒன்று சேர்ந்தா ஒரே ஜிலு ஜிலுதான். ஸ்ரேயாவும் விஷாலும் முன்பே பழகியவர்கள் என்றாலும், 'தோரணை'யில்தான் கட்டிப்பிடிக்க முடிந்தது. (அட, பாட்டு சீன்லேப்பா...) 'அவங்க பிரமாதமாக ஆடுவாங்க. அவங்க வேகத்துக்கு ஈடு கொடுக்கணும்னா, நானும் கடுமையா பயிற்சி செய்யணும். வேற வழியில்லே. பாடல் காட்சிக்கு கிளம்பறதுக்கு முன்னாடியே மூணு நாள் ரிகர்சல் எடுத்துகிட்டேன்' என்றார் விஷால்.

சமீபத்தில் வந்த பல படங்களில் கத்தி கபடான்னு தூக்கிட்டதால, அழகான லவ் ஸ்டோரி பண்ணுற மூடுக்கு வந்திருக்காரு விஷால். ஆனாலும் தோரணையில் சண்டையில்லாம இருக்குமா? விஷால் போடுற சண்டை தவிர, ஸ்ரேயாவுக்கும் ஒரு சண்டை இருக்கிறதாம். அப்பிடி போடு அருவாளைன்னு நீங்க தாராளமாக சொல்லலாம். ஏன்னா, இந்த சண்டையில் ஸ்ரேயா தூக்குவது அரிவாளைதான்!

'ஒரு சின்ன சறுக்கல் எப்படியெல்லாம் பேச வைக்குது மத்தவங்களை' என்று ஆச்சர்யப்படும் விஷால், 'அதையெல்லாம் மீறி ஜெயிச்சாதான் பேரு. நான் போராடுகிற ஆள்' என்றார். அடுத்த ஹிட் வந்துகிட்டேயிருக்கு வாத்யாரே...

அப்பா படத்திற்கு நான் இசையமைக்கலே... ஸ்ருதி கமலின் தெளிவான விளக்கம்!


பாட்டு கேட்கலாம்னு டேப்பை ஆன் பண்ணினா ஒரே கடா முடான்னு 'இடி சத்தமா' இருக்கேய்யா... 'தலைவன் இருக்கின்றான்' படம் பற்றி இன்னும் தெளிவான ஒரு அறிவிப்பும் வராத நிலையில், அதுபற்றி என்னென்னவோ செய்திகள். அதில் ஒன்று, அப்படத்திற்கு இசை, ஸ்ருதி கமல்! படத்தில் பாடல்களே இல்லை. பின்னணி இசை மட்டும் ஸ்ருதி என்பவர்களும் உண்டு. ஆனால், முன்னணி வார இதழ் ஒன்றில் இதற்கு தெளிவான பதில் அளித்திருக்கிறார் ஸ்ருதி கமல். (நல்லவேளை இப்பவாவது சொன்னீங்களே தாயீ...)

அப்பா படத்திற்கு இசையமைப்பது மிகப்பெரிய வாய்ப்பு. அதுக்கு நிறைய திறமையும் அனுபவமும் இருக்கணும். நான் இப்போதுதான் சினிமா கத்துகிட்டு இருக்கேன். எக்ஸ்ட்ரா மென்ட்டல்ஸ்னு ஒரு மியூசிக் பாண்ட் வச்சிருக்கேன். நானே இங்கிலீஷ்லே நோட்ஸ் எழுதி, பாடி மியூசிக் பண்ணி ஒவ்வொரு விஷயமா கத்துகிட்டு இருக்கேன்.

எல்லாத்தையும் ஒன்னா, சரியா சேர்க்கணும். இதையெல்லாம் இப்போதான் தெரிஞ்சுகிட்டு வர்றேன். எதிர்காலத்திலே இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி எனக்குன்னு தனி அடையாளத்தை உருவாக்கணும் என்று கூறியிருக்கிறார். இன்றைய நிலவரப்படி அப்பா தமிழ் பண்டிட் ஆக இருந்தாலும், ஸ்ருதியை பொருத்தவரை தமிழ் எப்பவுமே தகராறுதானாம். 'பேசுற அளவுக்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது' என்கிறார். மியூசிக்கோட சேர்த்து அதையும் கத்துக்கோங்க மேடம்!

தங்கர்பச்சான் இப்படி செய்யலாமா? கொதிக்கும் ஜு.ஆ யூனியன்!



'யம்மாடி... சரியான டைட்டிலாதான் வச்சுருக்காரு தங்கர்பச்சான்' என்று கொதித்து போயிருக்கிறார்கள் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் யூனியனை சேர்ந்தவர்கள். படத்தின் பெயர் 'களவாடிய பொழுதுகள்' !

இப்படத்தின் ஷ§ட்டிங் சென்னையில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. பிரமாண்ட செட் ஒன்றை போட்டு அதில் 3000 தொண்டர்களை கொண்டு வந்து இறக்கியிருந்தார்கள். அவ்வளவு பேரும் கம்யூனிஸ்ட் காம்ரேடுகள். எலக்ஷன் நேரத்தில் ஓட்டு வேட்டைக்கு போக சொன்னால் கூட இத்தனை கட்டுக் கோப்பாக போய் இறங்குவார்களா தெரியாது. ஆனால், சினிமாவில் நடிப்பதற்காக என்றதும், சிவப்பு துண்டுகளோடு திரண்டுவிட்டார்கள்! இந்த ஆர்வம்தான் தங்கர் பச்சானுக்கும் வசதியாக இருந்தது.

இதே காட்சிக்கு ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளை பயன்படுத்த வேண்டும் என்றால் பெரும் தொகை செலவாகியிருக்கும். அது மிச்சமல்லவா? தங்கரின் இந்த கால்குலேஷன் ஜூ.ஆ யூனியனுக்கு பெரும் எரிச்சலை கிளப்பியிருக்கிறதாக தகவல். விரைவில் வெடிக்கும் என்கிறார்கள். பதில் சொல்ல வேண்டியது தங்கரா? தயாரிப்பு நிறுவனமா?

பின் குறிப்பு- இப்படத்தை தயாரிக்கும் ஐங்கரன் நிறுவனம் பெரும் பொருளாதார சிக்கலில் இருப்பதாக கூறப்படுவதால், அவர்களுக்கு தெரிந்தேதான் இந்த Ôசிக்கனம்Õ பின்பற்ற பட்டதாக பேசப்படுகிறது.

லட்சுமிராயின் குட்டை பாவாடை! வாமனன் விழாவில் குளுகுளு...


வாமனன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ஏராளமான விவிஐபி களும்,கொழு கொழு குதிரைகள் இரண்டும் வந்திருந்தன! ஒன்று லட்சுமிராய். இன்னொன்று படத்தின் நாயகி ப்ரியா!

அவசரத்தில் எல்கேஜி பாப்பாவின் ஸ்கர்ட்டை போட்டுக் கொண்டு வந்த மாதிரியே இருந்தது இவர்களின் டிரஸ். அதிலும், லட்சுமிராய், ஐயோ, ஐயய்யய்யோ...! நிற்கிற வரைக்கும் பிரச்சனையில்லை. அவர் உட்கார்ந்ததுதான் தாமதம். அத்தனை போட்டோகிராபர்களும் (ஒன்னு கூடிட்டாய்ங்கய்யா, ஒன்னு கூடிட்டாய்ங்க!) ஒரே இடத்தில் 'பிளாஷ்' அடிக்க, அப்படியாப்பட்ட லட்சுமிராய்கே அநியாயத்துக்கு வெட்கம். நல்லவேளையாக கேஷ¨வல் சிட்டிங்கை மாற்றி, கால்களை நெருக்கமாக வைத்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் வழக்கம்போல கலக்கியது பார்த்திபன்தான். 'இந்த தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் நான்தான் ஜெயிப்பேன்னு அதிமுக சொல்லுது. நாற்பதும் எங்களுக்கேங்குது திமுக. இவங்களை தவிர்த்த இன்னொரு கூட்டணி நாற்பதும் நாங்கதான்னு சொல்லுது. மூணுத்தையும் கூட்டினா என்னாகும்? தேர்தல் கமிஷனுக்குதான் ஒரே குழப்பம்' என்றார். (அண்ணாச்சிக்கு கொஞ்ச நாளா அரசியலிலேயே கண் இருக்கு, அந்த விபத்து எப்போ நடக்குமோ?)

ஷூட்டிங்குன்னு நினைச்சிட்டார் போலும். விழாவுக்கும் லேட்டாகதான் வந்தார் படத்தின் நாயகன் ஜெய்!

Wednesday, April 8, 2009

த்ரிஷா, நயன்தாரா, ஸ்ரேயாவுக்கு புடவை தரும் போராட்டம்!


'பப்பு'களில் புகுந்து மப்படித்துவிட்டு ஆட்டம் போடும் பெண்களையும் இளஞ்ஜோடிகளையும், துரத்தி துரத்தி அடித்தது ஸ்ரீராம்சேனா என்ற அமைப்பு. இந்த அமைப்பின் தலைவர் முத்தலிக் சில தினங்களுக்கு முன் சென்னை வந்தார். இந்து மக்கள் கட்சியும் இவரது அமைப்பும் இணைந்து தமிழகத்திலும் அப்படி ஒரு பஞ்ச் கொடுக்க முயற்சித்திருப்பதாக தகவல்.

ஏற்கனேவே இந்து மக்கள் கட்சி, திரையுலகில் நடக்கும் அச்சு பிச்சு சமாச்சாரங்களுக்காக குரல் கொடுத்து வருகிறது. இந்தநிலையில் முத்தலிக்கின் வருகை, மேலும் சில விளைவுகளை ஏற்படுத்தும் போல தெரிகிறது.

முதல் கட்டமாக ஸ்ரேயா, த்ரிஷா, நயன்தாரா, ப்ரியாமணி ஆகிய 'பிட்டு துணி' நடிகைகளுக்கு பிரச்சனையை தரப்போகிறார்களாம். மேற்படி நடிகைகளுக்கு சேலை வழங்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். அதற்கு பிறகும் இவர்கள் அரைகுறை ஆடையோடு நடித்தால் எங்கள் போராட்டம் வேறு விதமாக இருக்கும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.

கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் கடல் கன்னிகள்...!

அரசியல் கேள்வியே வேணாம்பா-ரஜினி


அரசியல் பற்றி இப்போது ஏதுவும் பேசமாட்டேன் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அஜீத் நடிக்கும் அசல் பட பூஜையில் கலந்து கொள்ள வந்த ரஜினியை விடாமல் கேள்வி மழை பொழிந்த நிருபர்களைக் கையமர்த்திய ரஜினி, அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொண்டார்.

அவர் அளித்த பேட்டி:


அஜீத் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா?

அது பற்றி நான் என்ன சொல்றது... என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க...

ஆனா ஒரு ஸ்டார் என்பதையும் தாண்டி, அஜீத் நல்ல நடிகர். ஆனால் இன்று வரை அவரது முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் விதத்தில், அவரைச் சிறப்பாக யாரும் பயன்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். வாய்ப்பு வந்தால் தூள் கிளப்புவார். மிகச் சிறந்த நடிகர் அஜீத்.. நோ டவுட்.

மக்களை மகிழ்விக்கும் ஒரு நல்ல கலைஞர். நிச்சயம் அவரது ஒவ்வொரு படத்திலும் ஒரு மெஸேஜ் இருக்கும்.

சார் ஒரேயொரு அரசியல் கேள்வி கேட்கலாமா?

அதான் வேணாம்னு சொல்லிட்டேனே கண்ணா...

இந்தத் தேர்தலில் யாருக்கு உங்கள் ஓட்டு என்றாவது சொல்ல முடியுமா?

ஹய்யோ..ஹய்யோ... சாரி (அவருக்கே உரிய சிரிப்புடன்)... நான் எதையும் சொல்ல மாட்டேன்னு சொன்னேனே... நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்..

சிரஞ்சீவி மாதிரி கட்சி ஆரம்பிக்கும் திட்டமிருக்கா?

நோ நோ நோ... இல்லை... அரசியல் கேள்விகள் வேண்டாம் ப்ளீஸ். நான்தான் முதல்லேயே சொன்னேனே... தாங்க் யூ என்றபடி எழுந்துவிட்டார்.

சிறுத்தை எழுதிய பாடல்.... -சிலாகித்த திரையுலம்!


'மின்சாரம்' படத்தில் முதலமைச்சராக நடிக்கிறார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ராணி சீதை மன்றத்தில் நடந்தது. எலக்ஷன் நேரம் என்பதால் சிறுத்தை கொஞ்சம் தாமதமாகவே வந்தது. அதற்கு முன்பாக திரையிடப்பட்ட பாடல் ஒன்றில் 'விழித்தெழு.. விழித்தெழு...' என்ற பாடல் லேசாக நரம்புகளை சுண்ட, 'யார் எழுதியது?' என்று ஒருவரையருவர் விசாரித்துக் கொண்டார்கள். திருமா மேடைக்கு வந்ததும்தான் தெரிந்தது. இதை எழுதியதே அவர்தான்!

பாடல் உருவான விதத்தை திருமாவே விவரித்தார். 'இந்த படத்தின் தயாரிப்பாளர் தமிழரசன் என்னை நடிக்க சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அதுவும் முதலமைச்சர் வேடத்தில். எனக்கு கூச்சமாக இருந்தது. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, எனக்கு நடிக்க தெரியாது. அதனால்தான் எங்களுக்கான உரிமையை பெறுவதில் கூட இன்னும் முழுமையான இடத்தை எங்களால் அடைய முடியவில்லை. நான் அவரிடம் நடிக்க மறுத்தபோது, ஒரு பாடலாவது எழுதி தாருங்கள் என்றார். அதுதான் இந்த விழித்தெழு... பாடல்'

'என்னால் எழுதவே முடியாதவாறு தொடர்ந்து இயக்கப்பணிகள். என்னை சுற்றி எப்போதும் நூற்றுக்கணக்கானவர்கள் இருந்து கொண்டே இருந்தார்கள். வேறு வழியில்லாமல் வாசலில் ஒரு காரை கொண்டு வந்து நிறுத்திய தமிழரசன், 'காரில் ஏறுங்கள். பயணம் செய்து கொண்டே பாடலை முடித்துவிடலாம்' என்றார். அசோக் நகரிலிருந்து வேளச்சேரிக்கு இரண்டு முறை சென்று வந்த நேரத்தில் எழுதப்பட்ட பாடல் அது. அதில் ஏதாவது வரிகளை மாற்ற வேண்டும் என்றால், என்னிடமே கொடுங்கள். மாற்றித்தருகிறேன். நீங்களே மாற்றிவிடாதீர்கள் என்ற உத்தரவோடு பாடலை கொடுத்தேன். அதில் ஒரு வார்த்தையை கூட மாற்றாமல் அப்படியே இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் டி.தேவன். அவருக்கு என் வாழ்த்துக்கள்' என்றார்.

முன்னதாக பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இராம.நாராயணன், 'நான் இயக்குவதை நிறுத்தி அதிக நாள் ஆகிறது. அண்ணன் திருமா என் படத்திற்கு பாடல் எழுதுகிறார் என்றால் நானும் ஒரு படத்தை இயக்கலாம் என்ற ஆசை வருகிறது' என்றார். திருமா எழுதிய பாடலை தேர்தல் பிரச்சாரத்துக்காக அப்படியே பயன்படுத்தலாம். அதை ஆயிரக்கணக்கில் பிரதியெடுத்து தமிழகம் எங்கும் அனுப்புங்கள் என்று கூடவே ஒரு யோசனையும் சொல்லிவிட்டு அமர்ந்தார்.

'அசல் நாயகன்' அஜீத்...! துவக்க விழாவில் ரஜினி பாராட்டு!


அன்னை இல்லத்தின் வாசலை கடக்கவே முடியாதபடி ரசிகர்களின் நெரிசல்! திக்கி திணறிதான் உள்ளே வந்தார்கள் விவிஐபிகள் கூட! அஜீத்தின் புகழ் பாடும் பேனர்களும், கோஷங்களும் ஐம்புலன்களையும் தாக்கியது. இது 'அசல்' படத்துவக்கவிழா.

நடிகர் திலகம் அமரர் சிவாஜிகணேசன், கமலாம்பாள் ஆசியோடு அன்னை இல்லத்தில் நடந்த விழாவில், ரஜினி, வைரமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். 'இங்கிருந்துதான் வீரபாண்டிய கட்டபொம்மன், பாலும் பழமும், பாசமலர் போன்ற அற்புதமான படங்களின் ஷ§ட்டிங்கிற்கு கிளம்பியிருப்பார் சிவாஜி. அதனால்தான் இது அன்னை இல்லம். இங்கே இந்த படத்தின் துவக்க விழா நடைபெறுவது மிகவும் பொறுத்தமானது' என்றார் கவிப்பேரரசு வைரமுத்து.

'நான் எந்த விழாவுக்கும் எனது மகள் சௌந்தர்யாவுடன் போனதில்லை. நேற்றே சௌந்தர்யாவிடம், 'நாம் அன்னை இல்லத்துக்கு போக வேண்டும். தயாராக இரு' என்றேன். சந்திரமுகி படத்தின் துவக்க விழாவை இங்கேதான் நடத்தினோம். பாபாவின் தோல்விக்கு பிறகு ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருந்தேன். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு வெற்றியை தர வேண்டும் என்ற நிலையில் இருந்தார் தயாரிப்பாளர் ராம்குமார். அமரர் சிவாஜியின் ஆசிர்வாதம் அந்த படத்தை வெற்றியடைய வைத்தது'.

'அன்று நான் இருந்த மனநிலையில்தான் இருக்கிறார் அஜீத். இங்கே நடக்கும் இந்த துவக்க விழா அவருக்கு நிச்சயம் வெற்றியை தரும்' என்றவர், ஒருகட்டத்தில் 'அசல் நாயகன்' என்று அஜீத்தை பாராட்ட, சந்தோஷத்தில் பூரித்தார் தல!

'உங்கள் அன்புக்கு நான் சரண்' என்று டைமிங்காக நன்றியுரை ஆற்றினார் டைரக்டர் சரண்!

'கல்யாணமா... அப்படியொரு ஐடியாவே இல்லை!'


கல்யாணம் என்றதும் தீயை மிதித்துவிட்டதைப் போல பதைக்கிறார் த்ரிஷா. அவ்வளவு கசப்பான சமாச்சாரமா...

"அதுக்கில்ல... மாசத்துல 28 நாள் ஓயாம நடிச்சிக்கிட்டே இருக்கேன். மீதி ரெண்டு நாள்தான் ரெஸ்ட். அவற்றை ஒரு நொடி கூட வீணாக்காமல் என்ஜாய் பண்றேன். வேலை செய்யறது கஷ்டமில்லை. அதையும் அனுபவித்து செய்கிறேன்.

ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த அற்புதமான சந்தோஷங்களையெல்லாம் இழக்க விரும்பலே. அதனால கல்யாணம் என்கிற ஐடியாவே இப்போதைக்கு இல்லை.. இல்லை... இல்லை..." எனும் த்ரிஷா, இனி ஆண்டுக்கு ஒரு முறை ஒரு மாதம் கட்டாய விடுப்பு எடுக்கப் போகிறாராம்.

எதற்கு?

"சமீபத்தில் 20 நாட்கள் தோழிகளுடன் மீண்டும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விட்டுத் திரும்பினேன். அது மறக்க முடியாத அனுபவம். ஆண்டுக்கு ஒரு தடவை இதுபோல வெளிநாடு சுற்றுப்பயணம் போனா மனசும் உடம்பும் பிரஷ்ஷாயிடுது. உலகம் முழுவதும் இப்படியே சுற்றி பார்த்து விடவேண்டும் என்ற ஆசை உள்ளது..." என்கிறார்.

அனுபவிங்க அனுபவிங்க!

காங்.கின் 'ரம்யா மிரட்டல்'-பணிந்த அம்பரீஷ்!


மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட முன் வந்துவிட்டார் ரஜினியின் மிக நெருங்கிய நண்பரான நடிகர் அம்பரீஷ். நடிகை ரம்யாவுக்கு சீட் தரப் போவதாக மிரட்டி அவரை போட்டியிட வைத்துள்ளது காங்கிரஸ்.

ஒக்கலிகா (கெளடா) சமூகத்தைச் சேர்ந்தவரான அம்பரீஷ் மண்டியா தொகுதி காங்கிரஸ் எம்பியாக உள்ளார். ஆனால், இம்முறை பாஜகவுக்குத் தாவ நினைத்தார். ஆனால், அவர் போட்ட சில நிபந்தனைகள் ஏற்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து காங்கிரஸ் சீட் கொடுத்தும் கூட போட்டியிடுவது குறித்து ஏதும் பேசாமல் அமைதி காத்து வந்தார். பாஜகவுடனும் ரகசியமாக பேசி வந்தார். இதனால் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டு மண்டியாவுக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் காத்திருந்தது காங்கிரஸ்.

இந் நிலையில் நடிகை ரம்யாவை களமிறக்கப் போவதாக காங்கிரஸ் தரப்பு தகவல் பரப்பியது. இவரும் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவரே.

அம்பரீசின் பலமே ஜாதியும் சினிமாவும் தான் என்ற நிலையில் ரம்யா மூலம் அவரது ஜாதி, சினிமா பலத்தை சிதறடிக்கத் தயாரானது காங்கிரஸ். காங்கிரஸ் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் ரம்யாவுக்கு சீட் தரலாம் என காங்கிரஸ் மேலிடத்திடம் கூறிவிட்டார்.

மேலும் மண்டியா மாவட்டத்தில் பலமாக உள்ள தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளமும் ரம்யாவை ஆதரித்து அம்பரீசுக்கு பாடம் புகட்ட முன் வந்ததாக தகவல்கள் பரவின.

பாஜக இந்தப் பகுதியில் அவ்வளவாக பலமில்லாத நிலையில் காங்கிரசும் கெளடாவும் இணைந்து தனது கோட்டைக்கே வேட்டு வைக்க தயாராவதை உணர்ந்த அம்பரீஷ் காங்கிரஸ் சார்பில் மண்டியாவில் போட்டியிட ஒப்புக் கொண்டுவிட்டார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

கேரளத்தைச் சேர்ந்த நடிகை சுமலதா தான் அம்பரீசின் மனைவி ஆவார்.

Tuesday, April 7, 2009

40 லட்ச ரூபாய் செட்டில் வேட்டைக்காரன்


வேட்டைக்காரன் விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம். ஏற்கனவே வெளியான குருவி, வில்லு இரண்டும் சுமார் ரகம் என்றாகிவிட, வேட்டைக்காரன் படத்தை விஜய்யே மிகவும் எதிர்பார்க்கிறார்.
தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பாடல் காட்சிக்கும், சண்டைக் காட்சிக்கும் சுமார் 40 லட்ச ரூபாய் செட் போடப்பட்டிருக்கிறது. மொத்தம் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். மேலும், பாடல் காட்சிக்கும், சண்டைக் காட்சிக்கும் ஏராளமான ஜுனியர் நடிகர்கள் தேவைப்படுவதால் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து வைத்துள்ளனர்.

அதேபோல், சண்டைக் காட்சியில் இதுவரை இல்லாத பல புது யுக்திகளை பயன்படுத்தப் போகிறார்களாம். அது என்ன என்று கேட்டால் சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர்.

ஹை வோல்டேஜ் ஆக்ஷன்... -புது வரவும், சில நம்பிக்கைகளும்


'போர்க்களம் ஒரு ஹைவோல்டேஜ் ஆக்ஷன் படம்' என்றார் பண்டி சரோஜ்குமார். முதல்லே ட்ரெய்லரை பார்த்திட்டு அப்புறம் கேள்வி கேளுங்க' என்றார். ச்சும்மா சொல்லக் கூடாது, மிரட்டல்! வெறும் ஆக்ஷன் சமாச்சாரங்கள் மட்டுமில்லை, கூடவே கேமிராவும் சேர்ந்து கொண்டது. 'இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கே?' என்று ஆச்சர்யப்பட்ட நம்மிடம், 'ஒவ்வொரு ஷாட்டும் என்னோட மேற்பார்வையில் வைக்கப்பட்டது' என்றார் பண்டி.

ஷாட் வைக்கிற விஷயத்திலேதான் கேமிராமேனுக்கும், டைரக்டருக்கும் முட்டிக்கும். இந்த படத்திலும் அப்படிதானாம். இதுவரைக்கும் ஐந்து கேமிராமேன்களை மாத்திட்டாராம் பண்டி. கடைசியா 'நான் சொல்றதை கேட்டு ஷாட் வைக்கணும்' என்ற கண்டிஷனுக்கு உட்பட்டு வந்தவர் மகேந்திரன். இவர் திரைப்பட கல்லூரி மாணவர். பண்டி சரோஜ்குமாரும் பாங்காக்கில் உள்ள திரைப்பட பயிற்சி கல்லூரியில் படித்தவர். 'இங்கேயுள்ள கோச்சிங்கிற்கும், அங்கேயுள்ள முறைக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு' என்றார்.

'பொல்லாதவன், வெண்ணிலா கபடி குழு, ஜெயம் கொண்டான், படங்களில் நடித்து பாராட்டுகளை அள்ளிக் கொண்ட கிஷோர் ஹீரோவாக பிரமோஷன் ஆகிற படம் இது. அவருக்கு பேசிக்கலா கன்னடம் என்றாலும், அம்மா தமிழ்தான். அதனாலே அவரால தமிழை எளிதா பேச முடியுது. இந்த படத்திலே மிக அற்புதமாக நடிச்சிருக்கார். இனி அவர் தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்கலாம். அந்தளவுக்கு அவரை இந்த படம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்திலே சேர்க்கும்' என்றார்.

படத்திலே காதல் இருக்கா? 'ம்... இருக்கு. ஆனால் கொஞ்ஞ்சம்' என்றார் பண்டி. இசை யுவன் சங்கர் ராஜாவாம்! அடிச்சு பின்னுங்க....

நாளைக்கு 'அசல்' பட பூஜை சிவாஜி புரடக்ஷன் அலுவலகம் பரபர...


பாபிலோனாவிலிருந்து நாளைக்கு வரப்போற 'டிக்கிலோனா' வரைக்கும் அரசியல் ஆசை பிடித்தாட்டுகிறது. இந்த நிலையில் செய்து வந்த நல்ல காரியத்தையும் அரசியலுக்காக விட்டுத் தொலைத்திருக்கிறார் தல!

என்ன சார் மரமெல்லாம் நடுறீங்க... அரசியலுக்கு வரப்போறீங்களா? இப்படி அஜீத்தை பார்க்கும்போதெல்லாம் கேள்வி கேட்டதால், 'மரமாவது, உரமாவது ஆளை விடுங்கப்பா' என்று ஒதுங்கிக் கொண்டாராம். பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படனும்ங்கிறதுக்காக எக்ஸ்னோரா அமைப்போடு சேர்ந்து மரம் நடு விழாக்களை நடத்தினேன். ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை கடற்கரையோரத்தில் நட்டேன். ஆனால் ஏதோ அரசியலில் நான் நுழைவதற்காக அப்படி செய்யுறேன்னு ஒரு பேச்சு வந்தது. அதனால் சைலண்ட்டா ஒதுங்கிட்டேன்' என்றார்.

அஜீத் நடிக்கும் 'அசல்' படத்தின் துவக்கவிழாவை அசத்தலா கொண்டாட முடிவு பண்ணியிருக்காங்க. இன்விடேஷன் அச்சடிக்கவில்லை என்றாலும், திரையுலகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு நேரில் அழைப்பு விடுத்திருக்கிறார் பிரபு. சிவாஜி புரக்டக்ஷன்ஸ் அலுவலகத்தில் நாளை காலை 9 மணிக்கு தடபுடலான பூஜை.

தலயும், திருமதி தலயும் வர்றாங்களாம்!

குடும்பத்தோடு வாங்க... நடிகர் முரளி அழைப்பு


காலேஜ் பையனுக்கு இப்போதான் லீவ் முடிஞ்சுது போலிருக்கு. மறுபடியும் முரளி...!இந்த முறை கொஞ்சம் பெரிய மீசையோடு. படம் நீ உன்னை அறிந்தால். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்தவர், இத்தனை வருஷமா பேசாததையும் சேர்த்து வச்சு பேசினார்.

'நான் எப்படி வேணும்னாலும் நடிக்கிற நடிகன். கடைசி ரீல்லதான் காதலை சொல்லணுமா, சரிம்பேன். காலமெல்லாம் காதல் வாழ்க பார்த்திருப்பீங்க. ஆக்ஷன்ல அடிச்சு பின்னணுமா? வாட்டாக்குடி இரணியன் இருக்கு. தங்கச்சி பாசத்துக்கு பொற்காலம். இப்படி வெரைட்டியா நடிச்சு வெற்றிப்படங்களா கொடுத்த காலமும் உண்டு. ஒரு படமும் கையில் இல்லாம வீட்ல இருந்த காலமும் உண்டு. வாழ்த்த வேண்டிய நேரத்திலே வாழ்த்தி, குட்ட வேண்டிய நேரத்திலே குட்டி எப்பவும் என் கூடவே இருந்திருக்கீங்க' (இது பத்திரிகையாளர்களுக்கு)

'குடும்பத்தோட என் படத்துக்கு தைரியமா வரலாம். கதாநாயகி மேல பாய்ஞ்சு விழ மாட்டேன். அருவறுக்கிற மாதிரி நடிக்க மாட்டேன். முரளி படத்துக்கு போனா பாட்டு நல்லாயிருக்கும்னு சொல்லுவாங்க. இந்த படத்திலேயும் அதே மாதிரி பாடல்கள் அமைஞ்சிருக்கு. படத்தை பார்த்திட்டு இந்த படம் ஓடிடும்ங்கிற நம்பிக்கை எனக்கு ஐம்பது சதவீதம் இப்பவே வந்தாச்சு. ரிலீஸ் அன்னிக்கு நீங்க பார்த்திட்டு சொன்னா மிச்ச ஐம்பது சதவீதமும் வந்திரும்' என்றார். 'சிவக்குமார் சாருக்கு பிறகு எல்லாருக்கும் பிடிச்ச நடிகர் முரளிதான்' என்றார் டைரக்டர் தரணி.

படத்தில் இன்னொரு ஹீரோவாக ரிஷிராஜ் நடிச்சிருக்காரு. இந்தியன் பாஸ்கரும், ரிஷிராஜும் சேர்ந்து டைரக்ட் பண்ணியிருக்காங்க.

ரித்தீஷுக்கு ஆதரவாக களமிறங்கும் ஸ்டார்கள்!


"தன் படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கே நூறு ரூபாயும் பிரியாணிப் பொட்டலமும் தரும் 'ரொம்ப நல்லவர்' ஜே.கே. ரித்தீஷ். தனக்காக வாக்களிக்கும் வாக்காளர்களை விட்டுவிடுவாரா?"

-இதுதான் ராமநாதபுரம் மட்டுமல்ல கோலிவுட்டிலும் பேச்சாக இருக்கிறது.

மிகக் கச்சிதமாகக் காய் நகர்த்தி இப்போது திமுக எம்பி சீட்டையும் வாங்கிவிட்டார். அடுத்து எப்படியும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தே தீருவது என்ற அவரது சபதத்தை நிறைவேற்ற, அவரது ஆதரவு நடிகர்கள் பலர் இப்போதே ராமநாதபுரத்தில் கேம்ப் போட்டுவிட்டனர்.

காமெடி நடிகர்கள் வையாபுரி, சிசர் மனோகர், கிரேன் மனோகர், சின்னி ஜெயந்த் போன்றோர் ஜே.கே. ரித்தீஷால் எக்கச்சக்க பலன் கண்டவர்கள். தங்களது நன்றியைக் காட்ட கிடைத்துள்ள வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து தேர்தல் களத்தில் தெருத்தெருவாக இறங்கி பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளனராம்.

தேர்தல் நெருங்க நெருங்க நடிகைகள் சிலரும் களமிறங்கக் கூடும் என்கிறார்கள்.

முன்பு முகவை குமார் என்ற பெயரில் தனக்கு தானே போஸ்டர் அடித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மரம், சுவர், மின்சார கம்பம் ஒட்டி வந்தவர் தான் இந்த ரித்தீஷ். கொஞ்ச நேரம் அசையாமல் நின்றால் மக்கள் மீதே போஸ்டர் ஒட்டி விடுவார்கள் என்ற அளவுக்கு போஸ்டர்களாலேயே புகழ் பெற்றவர்.

சினிமாவுக்கு வந்தவுடன் ரித்தீஷ் என மாடர்னாக பெயரை மாற்றிக் கொண்டார்.

சுபலட்சுமியா, அறுசுவை லட்சுமியா? ஸ்ரேயாவின் கவர்ச்சி மேளா!


படத்தில் சுபலட்சுமி. ஆனால் 'அறுசுவை' லட்சுமியாக வருவார் போலிருக்கிறது ஸ்ரேயா. 'கவர்ச்சியா நடிக்கிறேன்னு சிலருக்கு சந்தோஷம். சிலருக்கு கோவம். (யாருய்யா அது...) நான் இதுவரைக்கும் நடிச்சதெல்லாம் கவர்ச்சியில்லே, இப்போ கந்தசாமியிலே நடிச்சிருக்கேன் பாருங்க, அதுதான் கவர்ச்சி' என்றார் ஸ்ரேயா.

தெரியும், நீங்களும் விக்ரமும் ஒரே குளியல் தொட்டியிலே... நாம் முடிக்கும் முன்பாகவே பிலு பிலுவென்று பிடித்துக் கொண்டார் ஸ்ரே. 'இப்படி நீங்களா யூகிச்சு சீன் சொல்லாதீங்க. நானும் விக்ரமும் உருண்டு புரள்ற சீனெல்லாம் இருக்கு. குளியல் சீனும் இருக்கு. அதுக்கு மேல நான் பேசணும்னா சுசி சார்ட்டே இருந்து ஒரு ரெகமண்டேஷன் லெட்டர் வாங்கிட்டு வாங்க' என்றார் அடங்காத சிரிப்புடன்.

கைக்கு பக்கத்திலே காந்தமலை இருந்தும், கவலை பிடித்தாட்டுகிறதாம் விக்ரமுக்கு. ஒரு முறை நேரடியாகவே ஸ்ரேயாவிடம் கேட்டாராம். நீயும் மெட்கேப்பும் (தி அதர் என்ட் ஆஃப் லைன் பட ஹீரோ) லவ் பண்றீங்களாமே? 'அடக்கடவுளே... நீங்கள்ளாம் எழுதறதை அவரும் நிஜம்னு நினைக்கிறார் போலிருக்கு' என்றவர், 'அப்படியெல்லாம் இல்லை'ன்னு சொன்னாராம் விக்ரமிடம்.

போனா போவுதுன்னு ஒரு சலுகை கொடுத்திருக்கு ஸ்ரே பொண்ணு! 'இனிமே எங்காவது பங்ஷனுக்கு வந்தால் ஃபுல்லா மூடிகிட்டுதான் வருவேன். கவர்ச்சியெல்லாம் ஸ்கீரின்லதான்!' அப்பாடி, தப்பிச்சுது தமிழ்நாடு...

Monday, April 6, 2009

என் வழி சிம்பு வழி... சொடக்கு போடுகிறார் சந்தியா


ஸ்ஸ்ஸ்.... அப்பாடா என்று பெருமூச்சு விட்டபடியே ஜிவி பிலிம்ஸ் ஆபிசுக்குள் நுழைந்தோம். முகத்தில் அடித்த ஏசியும், நம் முன்னே உட்கார்ந்திருந்த சந்தியாவும், அத்தனை நேரம் நாம் அனுபவித்த வெப்பம் மீது ஐஸ்கட்டியை போட்டு ஆற வைத்தார்கள்.

"இதெல்லாம் என்னங்க வெயிலு? மஞ்சள் வெயில் படத்துக்காக பாங்காக்கில் நாங்க பட்ட அவஸ்தையை விடவா என்றார் சந்தியா. (பாங்காக் பற்றி வேற மாதிரி சொல்றாங்களே?) டைரக்டர் மொட்ட வெயிலில் டூயட் ஆட வச்சிட்டார். மற்றவங்களுக்கு பரவாயில்லை. மேலே குடை பிடிச்சுக்கலாம். அட, குடையே இல்லன்னாலும், கோவமா முகத்தை வச்சுக்கலாம். ஆனால், நாங்க அத்தனை டிகிரி வெயிலையும் பொறுத்திகிட்டு சிரிச்சுகிட்டே ஆட வேண்டிய கட்டாயம். பாட்டை ஸ்கிரீன்ல பார்த்தபிறகு அத்தனை கஷ்டமும் போயே போச்" என்றார் ஸ்வீட் சிக்ஸ்டீன் சிரிப்போடு.

இந்த படத்திலே ஒரு பாடலும் பாடியிருக்கிறார் சந்தியா. "ஷ§ட்டிங்கிலே சும்மாவாச்சும் பாடிட்டே இருப்பேன். அதை கேட்டுட்டு நீங்கதான் இந்த பாட்டை பாடனும்னு சொல்லிட்டார் டைரக்டர். பரத்வாஜ் சார் வாய்ஸ் டெஸ்ட் பண்ணிட்டு ஓகே சொன்னார். என்னவோ தெரியலே, பாட்டை கேட்ட பிரஸ் பீப்புள் எல்லாம் பாராட்டுறாங்க. என் முகத்திற்கு நேரா அப்படி சொல்றாங்களோ என்னவோ? நான் இல்லாதப்போ கொஞ்சம் கேட்டு சொல்லுங்க" என்றார்.

சிம்பு மாதிரி மற்றவங்களுக்கும் பாடுவீங்களான்னு கேட்டதுக்கு பதறினார் சந்தியா. "அவரை எதுக்கு இங்கே இழுக்கிறீங்க. கூப்பிட்டா பாடிட்டு போறேன். அதுக்காக 'என் வழி சிம்பு வழி'ன்னு டைட்டில் போட்டு தாளிச்சிராதீங்கப்பா..." என்றார் சந்தியா.

பேசாம நம்ப ஏரியாவுக்கு (பிரஸ்) வந்திருங்களேன் சந்தியா....

ஹீரோ ஏற்படுத்தும் சிக்கல்... சலித்துக்கொள்ளும் பட நிறுவனம்?


இவரு ஒரு பக்கம் இழுக்க, அவங்க ஒரு பக்கம் இழுக்க, கயிறு எப்போ 'கட்' ஆகும்னு தெரியலேங்கிறாங்க கலைஞானி படத்தை பற்றி. தலைவரு இருக்காருப்பாங்கிற மாதிரி ஒரு டைட்டில் வச்சிட்டு, படப்பிடிப்பும் ஸ்டார்ட்டுங்கிற கண்டிஷன்லே இருந்தார் ஞானி.

ஆனா இப்போ அதில திடீர் சிக்கல்ங்கிறாங்க. என்னவாம்? ஹிந்தியில் வெற்றிகரமாக ஒடிய படத்தை ரீமேக் பண்ணுறதா முடிவு பண்ணி அதுக்கான ரைட்சையும் வாங்கிட்டாங்க. இந்த நேரத்திலே கதையிலே புகுந்த ஞானி, தமிழுக்கு ஏற்ற மாதிரி மாத்துறேன்னு ஸ்கிரீன் பிளேவை பிரிச்சு மேயுறாராம். முந்தைய படம் பல கோடிகள் பட்ஜெட்ல பண்ணிட்டேன். இந்த படத்துக்கும் அப்படி செலவு பண்ணினாதான் என்னோட ரசிகர்கள் ஒப்புக்குவாங்கன்னு சொல்றாராம். அதனால் படத்திலே தேவையில்லாத டூயட்டெல்லாம் வருதாம். அதுவும் வெளிநாடுகளில் எடுக்கணும்னு சொல்றாராம்.

படத்திலே காமெடியே இல்லையேன்னு அதையும் உள்ளே நுழைக்கிறாராம். இதுக்கு பேசாம வேற படமே பண்ணிட்டு போகலாமே? நல்ல படத்தை எதுக்கு கெடுக்கனும்ங்கிற முடிவுக்கு வந்திருக்குதாம் கம்பெனி. நாம சொல்றதை கேட்காத கம்பெனிக்கு இந்த படத்தை பண்ணுறதை விட, வேற கதையை ரெடி பண்ணி, வேற தயாரிப்பாளரிடம் போகலாமாங்கிற முடிவுல இருக்காராம் ஞானி. இப்போதைய கண்டிஷன் இது. நிலைமை மாறலாம். யாரு இறங்கி வரப்போறாங்கங்கறதுதான் பெரிய்ய்ய்ய கேள்வி?

பூர்ணா..முண்டியடித்த ரசிகர்கள்!


என்னதான் விஞ்ஞானம், பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனை என்றெல்லாம் பிரச்சாரம் செய்தாலும், சினிமா கவர்ச்சிக்கு முன் அந்தப் பிரச்சாரமெல்லாம் மழையில் கரைந்த மண் சுவராகத்தான் மாறிவிடுகின்றன.

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் நடித்த பூர்ணா, படப்பிடிப்புக்காக வந்தபோது, அவரைத் தொட்டுப் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் மேலே விழுந்து பிறாண்டி விட்டார்களாம்!

பூர்ணாவும் காதலில் விழுந்தேன் நாயகன் நகுலும் நடிக்கும் புதிய படம் கந்தக்கோட்டை. இதன் படப்பிடிப்பு குமரி மாவட்டம் பத்மநாபபுரம், நேசமணி நகர் உள்பட பல இடங்களில் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.

பூர்ணா பஸ்ஸிலிருந்து இறங்கி காரில் ஏறுவது போன்ற ஒரு காட்சி நேற்று வடசேரி பஸ்நிலையத்தில் அதிகாலை நேரத்தில் படமாக்கப்பட்டது.

'இவ்வளவு காலை நேரத்தில் கூட்டம் எங்கே கூடப் போகிறது!' என்ற நினைப்பில் சற்று அலட்சியமாக இருந்துவிட்டனர் படப்பிடிப்புக் குழுவினர். ஆனால் பூர்ணா பஸ்ஸை விட்டு இறங்கியதும், அவரை நோக்கி ஓடிவந்தது ரசிகர் பட்டாளம்.

நேரம் செல்ல, செல்ல அங்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. பூர்ணாவை முற்றுகையிட்டு அவரைத் தொட்டுத் தரிசிக்கும் ஆவலில் மேலே விழ ஆரம்பிக்க, அவர் பயந்துபோய் படப்பிடிப்புக் குழுவிடம் தஞ்சமடைந்தார்.

இருந்தாலும் நமது ரசிக சிகாமணிகளின் ஆர்வமும், கைகளும் கட்டுக்கடங்காமல் போகவே, பாதுகாப்பாக திரும்ப வேண்டிய கட்டாயத்தில் பூர்ணாவும் அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். கஷ்டப்பட்டு சிரித்தபடி கைகுலுக்கவும் செய்தாராம்!

அசின் ரொம்ப லக்கி : நயன்தாரா


பலமுனை பிரச்சனைகளின் தாக்குதலுக்கு பிறகு நங்கூரம் போட்ட கப்பல்மாதிரி அமைதியாகிவிட்டார் நயன்தாரா.
ஆதவன் படப்பிடிப்பிலிருந்த நயன்தாராவிடம் பேட்டி என்றதும் யோசனைக்கு பிறகே ஓகேயானார்.

உங்களுக்கு கோபம் அதிகம் வருமாமே?

"நான் ஷார்ட் டெம்பர் என்பது உண்மைதான். ஆனா தேவையில்லாம யாரிடமும் கோபப்படமாட்டேன். நியாயமான காரணத்திற்காக மட்டுமே கோபப்படுவேன். என்னைப் பற்றி புரிந்துகொண்டவர்கள் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள். என்னிடம் பழகாதவர்கள்தான் தவறாக நினைத்துக்கொள்வார்கள். நான் கோபப்பட்டு பேசினாலும் அடுத்த நொடியே மறந்துவிடுவேன் மனசுக்குள் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் ஒன்றை பேசமாட்டேன்".

இப்போதுவரும் படங்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கிறதா?

"கதாநாயகிகளுக்கு கதை எழுதுவது என்பது இன்றைய நிலையில் அரிதாகிவிட்டது. சினிமாவில் ஹீரோயின்களை சீரியஸாக காட்டினால் டி.வி.சீரியலைப் போலாகிவிடும் என்று விநியோகஸ்தர்கள் பலர் சொல்வதால்தான் யாரும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை எடுக்க முன்வருவதில்லை.
கடந்த சில வருடங்களில் 'கஜினி' படத்தில் மட்டும்தான் ஹீரோயின் நடிப்பதற்கு வாய்ப்பு இருந்தது. அந்த வகையில் அசின் ரொம்ப கொடுத்துவைத்தவர்தான்.

அப்படியொரு கேரக்டர் எனக்கோ, த்ரிஷாவிற்கோ, ஸ்ரேயாவிற்கோ அமையவே இல்லை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை இயக்குனர்கள்தான் உருவாக்கவேண்டும். இதற்கு ஹீரோக்களின் ஈகோ இல்லாத மனசும் முக்கியம்".

சரிங்க மேடம்!

'சிகப்பு ரோஜாக்கள்' ரீ-மேக்கில் சிம்பு


சிம்புவின் மன்மத கேரக்டருக்கு தீனிபோட 'சிகப்பு ரோஜாக்கள்' ரீ-மேக்கில் நடிக்கவுள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் கமல்-ஸ்ரீதேவி நடித்த படம் 'சிகப்பு ரோஜாக்கள்' லவ் with த்ரில்லர் மூவியான இப்படம் இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய இளைஞர்களை சுண்டி இழுத்த படம். அதில் இடம்பெற்ற 'நினைவோ ஒரு பறவை...' பாடலை இப்போது கேட்டாலும் இதம். கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களால் பாதிக்கும் ஒரு இளைஞனை மையமாக கொண்ட கதை இது. அட... சிம்புவுக்கு இந்த கேரக்டர் பொருத்தமாக இருக்கும்? என ஏதோ புதுசா கண்டுபிடித்தவர்களைப் போல சந்தோஷப்படாதீர்கள். ஏற்கனவே சிம்பு இந்த படத்தை ரீ-மேக் செய்வதென்று முடிவு செய்துவிட்டாராம்.

கதையில் சில சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளாராம். சிம்புவுக்கு ஜோடியாக நான்கு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனராம். அதில் ஒருவர் நமிதா. மன்மதன் படத்தில் நடித்த மந்த்ரா பேடியையும் ஒரு கேரக்டரில் நடிக்க வைக்கும் திட்டமும் சிம்புவின் கைவசம் இருக்கிறதாம். சிம்புவின் புதிய நண்பி சனாகான், தனக்கும் ஒரு கேரக்டர் கேட்டு சிம்புவை இப்போதே நச்சரிக்க தொடங்கிவிட்டதாகவும் தகவல் இருக்கிறது.

ஒரிஜினல் 'சிகப்பு ரோஜாக்களை' இயக்கிய பாரதிராஜாவை சந்தித்து ஆலோசனையும் அறிவுரையும் பெற நினைக்கிறாராம் சிம்பு. ஆனால் இயக்குனர் இமயத்தின் எண்ணம் என்னவாக இருக்கும் என்பது இப்போதைக்கு சொல்லமுடியாது.

பெட்டியை கட்டிய நடிகை! பொறுத்துக் கொண்டார் ஹீரோ


எந்த நேரத்தில் கத்தியை தூக்கினாரோ, படப்பிடிப்பிலும் கூட உர்ரென்றுதான் இருக்கிறாராம் அனுஷ்கா. வேட்டைக்காரன் படத்திற்காக ஏழே நாட்கள் மட்டும்தான் கால்ஷீட் கொடுத்திருந்தாராம். அதாவது முதல்கட்டமாக எடுக்கப்படவிருந்த பாடல் காட்சிக்கு!

சொன்னபடி ஏழு நாட்களில் ஆடி முடித்துவிட்டு பெட்டியை கட்ட ஆரம்பித்துவிட்டாராம். ஆனால், இன்னும் ஒருநாள் அவர் இருந்தால் முழு பாடலையும் முடித்துவிடலாம் என்ற நிலை. "நாளைக்கு கிளம்புங்களேன்" என்றாராம் இயக்குனர். "ஏழு நாள் கால்ஷீட் கொடுத்தா அதுக்குள்ளே முடிக்க பார்க்கணும். இப்போ கடைசி நேரத்திலே வந்து இருங்கன்னா என்னாலே முடியாது. நான் போகணும்" என்றாராம் முடிவாக. யார் சொல்லியும் கேட்காத அருந்ததியிடம், ஹீரோ பேசினாலாவது கேட்பார் என்ற நம்பிக்கையில் "நீங்க கொஞ்சம் பேசுங்களேன்" என்றார்களாம்.

நல்லவேளையாக விஜய் பேசியதால் கொதிநிலையை அடக்கிக் கொண்டார் அனுஷ்கா. "இல்லே சார், தெலுங்கில ஏழு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கேன். நான் ஒரு நாள் போகலைன்னாலும் தப்பாயிடும். கால்ஷீட் விஷயத்தில் அங்கே என் பெயரை கெடுத்துக்காம வச்சுருக்கேன். இங்கே ஒருநாள் இருந்திட்டா அந்த பேரு கெட்டு போயிடும். ஸாரி, புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே பெட்டியை கட்டியது கிளி.

அதுவும் நியாயம்தானேப்பா என்று ஒதுங்கிக் கொண்டாராம் விஜய்.

கோடம்பாக்கத்து எம்.பி க்கள்? கொண்டாடுகிறது தமிழ்சினிமா


கணக்கு போட்டுதான் காய் நகர்த்தினார் ஜே.கே.ரித்தீஷ்! நினைத்த மாதிரியே ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் எம்பி சீட் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும்போது, 'டங்குவார் அறுந்திச்சுப்பா' என்ற கோணத்திலேயே விமர்சனம் செய்யப்பட்டார் ரித்தீஷ். ஆனால், சினிமா கவர்ச்சி, அரசியலுக்கு எத்தனை முக்கியம் என்பதை அவர் அறிந்து வைத்திருந்தார். அதனால்தான் டிக்கெட்டும் இலவசம். கூடவே பிரியாணி பொட்டலமும் என்பது அவரது படங்களுக்கு பரிசாக இருந்தது. ரசிகர்களும் குவிந்தனர்.

எப்படியோ, வெற்றிப்பட 'நாயகன்' ஆகியிருந்தார் மனுஷன்! ரஜினி- கமல், அஜீத்- விஜய், விக்ரம்- சூர்யா, தனுஷ்- சிம்பு காலங்களில் தைரியமாக உள்ளே நுழைந்தவர், ஸ்பெஷல் அட்ராக்ஷன் பர்சனாலிடியாக எப்படி தன்னை முன்னிறுத்திக் கொண்டாரோ, அந்த சாமர்த்தியம் அரசியலிலும் அவருக்கு கை கூடலாம்!

இப்போதே வையாபுரி, சிசர் மற்றும் கிரேன் மனோகர்கள் உள்ளிட்ட சுள்ளான்கள் குழு ராமநாதபுரத்தை முற்றுகையிட தயாராகிவிட்டார்களாம். ஆனால் ஒன்று.... அண்ணன் தயவில் ஆறு வேளை பிரயாணியும், அசந்து சாயுறதுக்கு ஆஃப்பும் அனுபவித்த சிஷ்யகோடிகள்தான் டர்ர்ர்ராகியிருக்கிறார்களாம். அண்ணன் டெல்லிக்கு போய்விட்டால், நாமும் கூட போக முடியாதே என்பதுதான் அவர்களின் ஏக்கம்!

இன்னொரு சந்தோஷம். பெரம்பலூர் தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறார் நெப்போலியன். அவரை பொறுத்தவரை இது பிரமோஷன். எம்எல்ஏ வாக இருந்தபோது தொகுதி மக்களின் நன் நம்பிக்கை முனையாக கருதப்பட்டவர். இப்போது தொகுதி மாறியிருக்கிறார். ஜனங்கள் வாரிக் கொடுப்பார்கள் என்று நம்பலாம். எது எப்படியோ, திரையுலகத்திலிருந்து எத்தனை பேர் அரசியலுக்கு வந்தாலும், எந்த கட்சியில் பதவி பெற்றாலும், வாயார வாழ்த்துவதுதான் நமது சந்தோஷம்!

அறிவுநிதியும் அழகு குரலும்... நேரில் வாழ்த்திய இசை மேதைகள்!


திரையுலகத்தின் திடீர் பிரமுகராகியிருக்கிறார் மு.க.அறிவுநிதி. பின்னணி பாடகராக அறிமுகம் ஆகியிருந்தாலும், இவரது லட்சியம் பெரிது என்பதாகவே இருக்கிறது அவரது செயல்பாடுகள். தனது பிறந்தநாளான ஏப்ரல் 5 ஐ முப்பெரும் விழாவாக நடத்தினார். அதில் முக்கியமானது முதல்வர் கலைஞரின் முதல் மனைவியும், அறிவுநிதியின் பாட்டியுமான பார்வதி அம்மையார் பெயரில் அறக்கட்டளை துவங்கியது!

சாந்தோம் கலையரங்கத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டம், 'அறிவுநிதி வாழ்க' என்று கோஷமிட, ஆளுயர பிறந்தநாள் கேக்கை வெட்டினார். கையோடு கையாக ஏழை பாழைகளுக்கும் கைகொடுத்தார். ஊனமுற்றவர்களுக்காக சக்கர வண்டி, மாணவ மாணவிகளுக்கு சைக்கிள், விதவைகளுக்கு தையல் மிஷின் என்று ஆரம்பமே அமர்க்களம்!

நிகழ்ச்சி 'நாளை நமதே' என்ற புரட்சித்தலைவரின் பாடலோடு துவங்கியது (சென்ட்டிமென்ட்?) நீங்க எல்லாரும் எதிர்பார்த்த அந்த பாடலை இப்போது அறிவுநிதி பாடுவார் என்று அறிவித்தார்கள். இவர் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் பாடிய 'காதல் வைபோகமே' பாடலைதான் பாடப் போகிறார் என்று எதிர்பார்த்தால், அப்பா மு.க.முத்து பாடிய 'நல்ல மனசில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா...' வை பாடினார். பலத்த கரகோஷம்.

'முரசொலி அச்சகத்திற்கு பணம் கொடுக்க முடியாத சூழலில், தனது தாலியில் இருந்த தங்கத்தை கழற்றிக் கொடுத்து முரசொலியை நிற்காமல் ஒலிக்க செய்தவர் எங்கள் பாட்டி பத்மாவதியம்மாள்' என்று குரல் நெகிழ சொன்னார் அறிவுநிதி. பின்னாலேயே பேச வந்த கவிப்பேரரசு வைரமுத்து, இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, 'தமிழ்நாட்டின் வரலாறோடு சம்பந்தப்பட்டிருக்கிறார் பத்மாவதி அம்மையார்' என்றார். 'அறிவு நிதிக்காக வேறு வாய்ப்புகள் காத்திருந்தபோதும், கலைத்துறையே பெரிது என்று நினைத்து இந்த துறைக்கு வந்திருக்கிறார். எதிர்காலத்தில் மிகப்பெரிய பின்னணி பாடகராக திகழ்வார்' என்றும் வாழ்த்தினார்.

முன்னதாக மெல்லிசை மன்னர்கள் எம்எஸ்விஸ்வநாதன்-ராமமூர்த்தி, டி.எம்.எஸ். பாலமுரளி கிருஷ்ணா போன்ற இசை மேதைகளுக்கு சிறப்பு செய்தார் அறிவுநிதி.

Sunday, April 5, 2009

எதுவும் வேணாம்; தனிமைதான் வேண்டும்!-ரஹ்மான்


ஆஸ்கர் வென்றதற்கு பாராட்டுவிழா, புதுப்படங்களுக்கு தேதி என்று யாராவது தேடி வந்தால் இப்போது ரஹ்மான் கூறுவது கிட்டத்தட்ட இந்த வார்த்தைகளைத்தான்!

கூட்டம், விழாக்கள், நெருக்கடி... ஆரம்பத்திலிருந்தே இவையெல்லாம் ரஹ்மானுக்கு ஏக அலர்ஜி. ஏதாவது விழாவில் அவரைப் பேசச் சொன்னாலும்கூட, எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறிவிட்டு வந்துவிடும் கூச்சசுபாவி!

ஏகப்பட்ட விருதுகளை அள்ளிக் குவித்தாலும், ரஹ்மான் எப்போதும் தனிமை விரும்பியாகவே இருந்தார். தனது இசையமைப்பைக் கூட தனிமையில் இரவில் வைத்துக் கொள்வதுதான் அவரது ஸ்டைல்.

ஆனால் கிடைத்தற்கரிய ஆஸ்கர் விருதுகள் அதுவும் ஒன்றுக்கு இரண்டாக கிடைத்ததும், தன் மீது விழுந்த புகழ் வெளிச்சம் அவரைத் திக்குமுக்காட வைத்துவிட்டது.

திரும்பிய பக்கமெல்லாம் கொண்டாட்டங்கள்... விழாக்கள்... விருதுகள்.

இவையெல்லாம் அவரது இசைப் பணியை வெகுவாகவே பாதித்துவிட்டன. கூடவே அவரைப் பற்றி வருகிற விமர்சனங்கள், கமெண்ட் என்ற பெயரில் அவரை விமர்சித்து வரும் கருத்துக்களை போன்றவை அமைதி நாயகனான அவரையும் கோபம் கொள்ள வைத்துள்ளன.

இப்போது, இந்தியா முழுக்க சுற்றிவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்ட ரஹ்மான், தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் சுருக்கமாக ஒரு 'ஹலோ' சொல்லிவிட்டு வேலையை கவனிக்கப் போய்விடுகிறார். அதையும் மீறி விழா, பாராட்டு என யாராவது வற்புறுத்தினால்... 'அய்யோ... ஆளைவிடுங்க. நான் கொஞ்ச நாள் தனியா இருக்க விரும்புகிறேன்!', என்று ஒரு கும்பிடு போட்டு அனுப்பி வைக்கிறாராம்!

ஜெனீலியாவுக்கு வந்த நேரம்!


ஜெனீலியா கிட்டே யாரும் போக முடியவில்லையாம். வேறு காரணம் எதுவும் இல்லை. அவர் கேட்கும் சம்பளம் அவ்வளவு பெரிதாக இருக்கிறதாம்.

பாய்ஸ் படம் மூலம் ஹரிணியாகி அறிமுகமாகி இப்போது ஜெனீலியாவாக வலம் வந்து கொண்டிருக்கும் அவருக்கு தமிழில் பெரிய அளவில் முன்பு மார்க்கெட் இல்லாமல் இருந்தது.

பாய்ஸ், சச்சின், பரத்துடன் சென்னை காதல் என தொடர்ந்து நடித்தும் கூட ஜெனீலியா எடுபடவில்லை. இந்த நிலையில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் சூப்பர் ஹிட் ஆகவே ஜெனீலியாவுக்கும் பெயர் கிடைத்தது.

தற்போது இந்தியில் அவர் கிளிக் ஆகி ஜானா து யா ஜானானா-2, லைப் பார்ட்னர் என நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

இதனால் அவருக்கு சற்று கிராக்கி கூடி விட்டது. தமிழ், தெலுங்குக் காரர்கள் அவரைக் கூப்பிட்டால் நான் ரொம்ப பிசி என்கிறாராம். அப்படியும் வலியுறுத்திக் கூப்பிட்டால் பெரிய சம்பளமாக கேட்கிறாராம்.

இதனால் தமிழ் சினிமாக்காரர்கள் ஜெனீலியாவை தவிர்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் தெலுங்குக் காரர்கள் விடாப்பிடியாக அவரை அனத்திக் கொண்டிருக்கிறார்களாம்.

இந்த நிலையில் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்த் தயாரிக்கும் புதிய தெலுங்குப் படத்தில் மிகப் பெரிய சம்பளத்திற்கு ஜெனீலியா ஒப்பந்தமாகியுள்ளாராம்.

தமிழுக்கு இப்போதைக்கு வரும் ஐடியாவில் ஜெனீலியா இல்லை என்று கூறுகிறார்கள்.

வேட்பு மனு..குலதெய்வ கோயிலில் ரோஜா!


ஆந்திராவின் சந்திரகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நடிகை ரோஜா, தனது வேட்பு மனுவை குலதெய்வ கோயில்களில் வைத்துப் பூஜை செய்தார்.

தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியான ரோஜா, இந்தத் தேர்தலில் வென்றால் மிக முக்கிய பதவி காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இதில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் குதித்துள்ளார் ரோஜா.

எனவே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யும் முன், குலதெய்வம் கோயில்களில் வைத்து பூஜை செய்தார் ரோஜா.

சந்திரகிரியில் உள்ள நாகம்மா கோவில், மூலஸ்தானி எல்லம்மா கோவில், ராயலபுரத்தில் உள்ள மாத்தம்மா கோவில்களுக்குச் சென்றார். பின்னர் வேட்பு மனுவை அக்கோவில்களின் கருவறையில் வைத்து பூஜை செய்தார்.

தொண்டர்கள் புடைசூழ வந்த ரோஜாவுக்கு கோவில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

பின்னர் அவர் சந்திரகிரியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை நல்ல நேரத்தில் தாக்கல் செய்தார். அவருடன் சந்திரபாபு நாயுடுவின் சகோதரர் ராமமூர்த்தி நாயுடுவும் சென்றிருந்தார்.

வேட்புமனு தாக்கல் முடிந்து வெளியில் வந்த ரோஜா, "இந்தத் தொகுதியில் எனக்கு எதிரான எதிரான பிரச்சாரத்தை முறியடிப்பேன். நிச்சயம் வெற்றி பெறுவேன். தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும்..." என்றார் நிருபர்களிடம்.

வில்லிகளாகும் ஹீரோயின்கள்


தமிழ் சினிமாவில் டிரென்டுகள் மாறி வருகின்றன. ஹீரோக்கள் வில்லன்களாக நடிப்பது ஒரு பக்கம் இருந்தால், இப்போது ஹீரோயின்களும் வில்லத்தனத்தில் வெளுத்துக் கட்டத் தொடங்கியுள்ளனர்.

படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் வில்லத்தனமாக நடித்து பெரும் புகழ் பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு ஹீரோயின்களுக்கும் படையப்பா நீலாம்பரி கேரக்டர் போல கிடைத்தால் நடிக்கத் தயார் என அவ்வப்போது பேஷனாகி விட்டது.

ஆனால் சிலர்தான் அப்படி வில்லத்தனமாக வந்த கேரக்டர்களை ஏற்று நடித்தனர்.

உயிர் படத்தில் சங்கீதா நெகட்டிவ் ரோலில் கலக்கினார். இந்த நிலையில் சினேகா இப்போது வில்லத்தனம் செய்ய களம் இறங்கி விட்டார்.

தெலுங்கில் அவர் நடித்த தொலிவளப்பு என்ற படத்தில் கிட்டத்தட்ட வில்லத்தனம் கலந்த ஹீரோயின் கேரக்டரில்தான் அவர் நடித்துள்ளார்.

அந்தப் படத்தை தற்போது தமிழில் ஹரி என்ற பெயரில் டப் செய்கின்றனர்.

இதேபோல கோவா படத்திலும் வில்லத்தனம் செய்கிறார் சினேகா. வில்லத்தனமாக இருந்தாலும் இந்த கேரக்டர் வெகுவாக பேசப்படும் என்பதால் கதையைக் கேட்ட மாத்திரத்திலேயே நான்தான் நடிப்பேன் என்று கூறி விட்டாராம் சினேகா.

இந்த வரிசையில், தற்போது முரட்டுக்காளை ரீமேக்கில், சிந்து துலானி வில்லத்தனம் நிறைந்த கேரக்டரில் வருகிறார்.

நம்ம சந்தியாவும் கூட நூற்றுக்கு நூறு ரீமேக் படத்தில் வில்லத்தனமாகத்தான் வருகிறாராம்.

பரவாயில்லை, ஹீரோயின் வாய்ப்பு குறைந்து போனால் வில்லியாகியும் கலக்கலாம்.

30 கிராமங்களைத் தத்தெடுத்த 'கந்தசாமி'!


விக்ரம்-ஸ்ரேயா ஜோடியாக நடிக்கும் கந்தசாமி படக்குழுவினர் 30 கிராமங்களை தத்தெடுத்து உள்ளனர். படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது மேலும் பல புதிய கிராமங்களைத் தத்தெடுக்கும் வித்தியாசமான திட்டத்தை அறிவிக்கின்றனர்.

கலைப்புலி தாணு தயாரிப்பில், சுசி கணேசன் இயக்கத்தில் பிரமாண்டமாய் உருவாகியுள்ள கந்தசாமி படத்தின் அசத்தல் முன்னோட்டப் படங்கள் சமீபத்தில வெளியாகின.

இதற்கென நடைபெற்ற விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் சுசி கணேசன், விரைவில் புதிய கிராமத் தத்தெடுப்பு திட்டம் ஒன்றை அறிவிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

கந்தசாமி படம் ஆரம்பிக்கும் போதே, இரு கிராமங்களைத் தத்தெடுத்து, அந்த கிராமங்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை செய்து தந்ததனர் கந்தசாமி படத் தயாரிப்பாளர் தாணுவும், இயக்குநர் சுசி கணேசனும்.

இதன் தாக்கத்தில் விழாவுக்கு வந்த விருந்தினர்கள் சிலரும் சில கிராமங்களைத் தத்தெடுப்பதாக அறிவித்தனர்.

இந்த நிகழ்ச்சிகள் நடந்து முடிந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது, 30 கிராமங்களைத் தத்தெடுத்துள்ளது கந்தசாமி படக்குழு. இந்தக் கிராமங்களில் இதுவரை செய்யப்பட்ட சாதனைகள் குறித்து இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார் இயக்குநர் சுசி கணேசன்.

அதே நாளில் புதிய கிராமங்கள் பலவற்றைத் தத்தெடுக்கும் விதத்தில் புதிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார்களாம்.

வேலைநீக்கம்-சல்மா ஹயேக் கணவர் சிறைபிடிப்பு


பாரீஸ்: ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் பாடகி சல்மா ஹயேக்கின் கணவர் பிரான்காய்ஸ் ஹென்றி பினால்ட்டை, அவரது நிறுவனத்தில் வேலை பார்த்து பின்னர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 1,200 ஊழியர்கள் காருக்குள் வைத்துப் பூட்டி சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பினால்ட் பிரான்ஸின் முன்னணி தொழிலதிபர் ஆவார். சமீபத்தில் தனது இரு நிறுவனங்களைச் சேர்ந்த 1200 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கினார். பொருளாதார நெருக்கடி நிலையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அவர் எடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர்களில் 50 பேர் கடந்த வாரம் பாரீஸில் நடந்த நிறுவன கூட்டத்தில் பங்கேற்க வந்த பினால்ட்டை அவரது காருக்குள் வைத்து சிறை பிடித்தனர்.

இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கலவரத் தடுப்புப் போலீஸார் விரைந்து வந்து பினால்ட்டை மீட்டனர்.

46 வயதாகும் கோடீஸ்வரரான பினால்ட்டுக்கு, கிறிஸ்டி ஏல நிலையம், குச்சி, கன்வர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபல நிறுவனங்களில் பங்கு உள்ளது.

சல்மா ஹயேக்கை கடந்த மாதம்தான் கல்யாணம் செய்து கொண்டார் பினால்ட். அவரது முதல் மனைவியின் பெயர் பிரீதா ஸ்டார். இவர் மூலம் பினால்ட்டுக்கு வாலன்டினா என்ற மகள் உள்ளார்.

என் பெயர் என் மகளுக்கு ஒரு சுமை!-கமல்


'கமல்ஹாஸன் மகள் என்பதால் என் மகளுக்கு எந்தச் சலுகையும் கிடைத்துவிடவில்லை. சொல்லப் போனால் அவருக்கு என் பெயர் ஒரு சுமைதான்' என்கிறார் கலைஞானி கமல்ஹாஸன்.

தன் மகளைப் பற்றி சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், "ஸ்ருதியைப் போன்ற திறமையான இளம் பெண்களைப் பார்ப்பது அரிது. அவரது தந்தை என்ற பெருமிதத்தில் இப்படிச் சொல்லவில்லை. அது நடுநிலையாளர்களுக்கே புரியும். ஒரு வெளி நபராக இருந்து என் மகளை கவனித்து வந்துள்ளேன். எந்த உதவியும் வேண்டி என்னிடம் அவர் நின்றதில்லை. தனக்கான பாதையைத் தானே அமைத்துக் கொள்ளும் அளவு தன்னம்பிக்கையும் திறமையும் மிக்கவர் ஸ்ருதி", என்று கூறியுள்ளார்.

'லக்' எனும் இந்திப் படத்தில் ஸ்ருதி நடிப்பதை உறுதி செய்த கமல், தற்போது இந்துஸ்தானி இசையை முழுமையாகக் கற்பதில் ஸ்ருதி தீவிரமாக உள்ளதாகக் கூறினார்.

தனது அடுத்த படமான 'தலைவன் இருக்கின்றான்' இசையமைப்பாளர் யார் என்பதை இதுவரை வெளியிடாமல் இருந்து வந்த கமல், முதல் முறையாக இந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

"இனியும் அதை ரகசியமாக வைத்திருப்பதில் அர்த்தமில்லை. ஆம்... என் மகள் ஸ்ருதிதான் எனது அடுத்த படமான 'தலைவன் இருக்கின்றானு'க்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே அவரது இசையில் ஒரு பாடல் கூட கம்போஸ் செய்துவிட்டோம். அற்புதமாக வந்துள்ளது அந்தப் பாடல்" என்றார் கமல்.

கமல்ஹாஸன் மகள் என்பது ஸ்ருதிக்கு எந்த அளவு உதவியிருக்கிறது?

"இங்கே திறமை இருந்தாதான் ஜெயிக்க முடியும். என் மகள் என்பதற்காக எந்த வாய்ப்பும் வந்துவிடாது. இன்னும் சொல்லப்போனால், கமல்ஹாஸன் மகள் என்ற 'பட்டம்' ஸ்ருதிக்கு ஒரு சுமை என்றுகூடச் சொல்வேன்!"

கமலுடன் இணையும் அஜீத்


கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அஜீத்தும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தசாவதாரத்தைத் தொடர்ந்து மர்மயோகி படத்தில் கமல் நடிப்பார் என முதலில் கூறப்பட்டது. அந்தப் படத்துக்காக திரிஷா உள்ளி்ட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு குதிரையேற்றம் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில் திடீரென மர்மயோகி தள்ளி வைக்கப்படுவதாகவும், தலைவன் இருக்கின்றான் என்ற படத்தில் கமல் நடிப்பார் எனவும் அறிவிப்பு வெளியானது.

தற்போது தலைவன் இருக்கின்றான் பட வேலைகளில் கமல்ஹாசன் பிசியாக இருக்கிறார். இப்படத்தில் கமலுடன் முதல் முறையாக மோகன்லாலும் இணைகிறார்.

இதுதவிர இன்னொரு விசேஷமும் படத்தி்ல இடம் பெறுகிறது. அது அஜீத்தும் படத்தில் நடிக்கப் போகிறார் என்பதுதான்.

முக்கிய வேடம் ஒன்றில் அஜீத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கமல், மோகன்லாலுக்கு இணையான கேரக்டராக இது இருக்குமாம்.

இந்த செய்தி உண்மையாக இருக்குமானால், இன்றைய இளம் தலைமுறை முன்னணி ஹீரோ ஒருவர் கமல்ஹாசனுடன் இணைவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

ஒரு புதுமுகத்தைப் போலவே போராடுகிறேன்! - ஸ்ருதி


'என் அப்பா கமல்ஹாஸன், அம்மா சரிகா... எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று நான் ஒருவரிடமும் கேட்டதில்லை. கேட்கவும் மாட்டேன். ஒரு புதுமுகத்தைப் போலப் போராடித்தான் இந்த திரைத்துறையில் எனக்கான வாய்ப்புகளைப் பெறுகிறேன்' என்கிறார் ஸ்ருதிஹாஸன்.

கமல்ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி. இசைத் துறையில் நிறைய கற்றுள்ள ஸ்ருதி அவற்றை செயல்வடிவில் கொண்டுவரும் ஆவலில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்தியில் லக் என்ற படத்திலும் நடித்து வருகிறார். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்த மாதிரி தன் தந்தை நடிக்கும் தலைவன் இருக்கின்றான் திரைப்படத்தின் இசையமைப்பாளராகவும் அவதாரமெடுத்துள்ளார்.

ஒரு புதுமுகமாக, தனது திரை அனுபவங்கள் குறித்து ஸ்ருதி சமீபத்தில் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி:

என் தாய் மற்றும் தந்தையின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு ஒருபோதும் நான் வாய்ப்புக் கேட்டதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு இல்லாமலே போனாலும் கவலையில்லை.

அதேபோல நடிப்பு பற்றி என் தந்தையிடமோ, தாயிடமோ நான் ஒருபோதும் பேசுவதில்லை. எனக்கு என்ன வருமோ அதை பர்ஃபார்ம் செய்தால் போதும்.

தலைவன் இருக்கின்றான் இசையமைப்பாளராக நான் பணியாற்றத் துவங்கியிருப்பது குறித்து பின்னொரு வாய்ப்பு வரும்போது சொல்கிறேன். இப்போதைக்கு ஒரு சிறந்த இசை ஆல்பத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளேன்.

தமிழ்ப் படங்களில் நடிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. பார்க்கலாம், என்றார் ஸ்ருதி.

இரு தினங்களுக்கு முன் கமல் அளித்த ஒரு பேட்டியில், என் மகள் ஸ்ருதிக்கு என் பெயரே ஒரு சுமைதான் என்று கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.

Followers