Friday, March 27, 2009

பரோலில் வருகிறார் சீமான்!


சிறைக்குப் போகுமுன், தன்னால் தயாரிப்பாளர் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மாயாண்டிக் குடும்பத்தார் படத்தின் தன் பகுதிகள் முழுவதையும் நடித்துக் கொடுத்துவிட்ட இயக்குநர் சீமான், இப்போது படத்திற்கு, டப்பிங் பேசுவதற்காக பரோலில் வருகிறார்.

ராசு மதுரவன் இயக்கும் இந்தப் படத்தின் மணிவண்ணனின் மகனாக நடிக்கிறார் சீமான். உண்மையில் மணிவண்ணனிடம் பல ஆண்டுகள் உதவியாளராக இருந்தவர்தான் சீமான்.

போலீஸார் தன்மீது வழக்குப் பதிந்துள்ளது தெரிந்ததும், இந்தப் படத்தில் தனது பகுதிகளை மட்டும், சரணடைவதற்கு முன்பே நடித்துக் கொடுத்து உதவியிருக்கிறார் சீமான். இதைச் செய்ததற்குத்தான் அவருக்கு ஓடி ஒளிந்தார் என்ற பட்டப் பெயர் கிடைத்தது. பின்னர் தேசிய பாதுகாப்புத் தடுப்புச் சட்டத்தில் புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இருப்பதால் படத்துக்கு இன்னும் சீமான் டப்பிங் பேசவில்லை. இதையடுத்து அவரை பரோலில் அழைத்து வந்து டப்பிங் பேச வைக்க முயற்சி செய்து வருகின்றனர். சீமானும் பரோலில் வர ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கான விண்ணப்பங்களையும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சிறைத்துறையினரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் ராசு மதுரவனிடம் கேட்டபோது, 'படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இது குடும்பம், காதல் சென்டிமென்ட் கொண்ட கதை. சீமான் டப்பிங் பேச வேண்டியிருக்கிறது. அதற்காக அவரை பரோலில் எடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அவர் டப்பிங் பேசியதும் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் படம் ரிலீஸ் ஆகும்' என்றார்.

இந்தப் படத்தில் தருண்கோபி, சீமான், பொன்வண்ணன், நந்தா பெரியசாமி, ஜெகநாத், மணிவண்ணன் உட்பட 10 இயக்குனர்கள் நடிக்கின்றனர். தமிழரசி, பூங்கொடி ஹீரோயின்களாக அறிமுகமாகின்றனர். சபேஷ்முரளி இசை அமைக்கிறார்.

பிரச்சாரம்-விபத்தில் ஜூனியர் என்டிஆர் படுகாயம்!


ஹைதராபாத்: நல்கொண்டா அருகே தேர்தல் பிரச்சாரத்தின்போது இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் படுகாயமடைந்தார்.அவரது கை, கால்களில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருடன் காரில் வந்த நடிகர்கள் ராஜீவ் கனகலா, சீனிவாஸ் ரெட்டி ஆகியோரும் பலத்த காயமடைந்தனர்.

கம்மம் மாவட்டத்தில் தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நல்கொண்டாவின் சூர்யாபேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.காயமடைந்த அனைவரையும், சூர்யாபேட் லைப்லைன் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதித்தனர். தேவையான அவசர அறுவைச் சிகிச்சைகளையும் செய்துள்ளனர்.

ஜூனியர் என்டிஆருக்கு மார்பு, வலது கண், நெற்றி, தலைப்பகுதி, தோள்பட்டை, கைகள் மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இன்னும் மூன்று மாதங்களுக்கு அவர் முழுமையான சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்தாக வேண்டும் என்று நிருபர்களிடம் தெரிவித்தனர் மருத்துவர்கள்.

தகவலறிந்ததும், ஜூனியர் என்டிஆரின் தந்தையும் என்டிஆரின் மகனுமான ஹரிகிருஷ்ணா, சித்தப்பாக்கள் பாலகிருஷ்ணா, ராமகிருஷ்ணா, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் கட்சிப் பிரமுகர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து பார்த்தனர்.ஆயிரக்கணக்காக ரசிகர்கள் மற்றும் தொண்டர்களும் மருத்துவமனை முன் குவிந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கலை ஆதரித்து சாலையோர பிரச்சார கூட்டங்களை நடத்தி வருகிறார் ஜூனியர் என்டிஆர். அவலர் போகுமிடமெல்லாம் பெரும் மக்கள் வெள்ளம் கூடியது.இன்று தெலுங்கு புதுவருடப் பிறப்பு என்பதால், பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருந்தார் ஜூனியர் என்டிஆர்.

தீவிர பிரச்சாரத்தால் அவர் மிகவும் களைத்துப் போய் காணப்பட்டதால், வண்டியை ஓட்ட வேண்டாம் என கம்மம் தொகுதி வேட்பாளர் கேட்டுக் கொண்டாராம். ஆனால் அதையும் மீறி, தானே ஓட்டிக் கொண்டு போவதாகக் கூறிவிட்டாராம் என்டிஆர்.மேலும் தனது நெருங்கிய நண்பரும், இயக்குநருமான வம்சி மோகனுக்கு கட்சியில் எம்பி டிக்கெட் மறுக்கப்பட்டதால் மனச் சோர்வு அடைந்திருந்தாராம்.

இடம் மாறிய ஐபிஎல் ஏமாந்து போன நடிகைகள்


வலையிலே புலி மாட்டும்னு நினைச்சிருந்தா வலையே புலியிடம் மாட்டிய கதையாகிவிட்டது! ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடக்கும். அதில் எப்படியாவது பிராண்ட் அம்பாசிடராக நுழைந்து ஒட்டு மொத்த மீடியா வெளிச்சத்திலும் விழுந்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த இரண்டு நடிகைகள், இரண்டு நாட்களாக ஒரே அப்செட்!

இந்த போட்டிகள் எதுவும் இங்கே நடக்கப் போவதில்லை. நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் சிக்கல்களால்தான் இந்த மாற்றம். போட்டிகள் வெளிநாட்டில் நடைபெற இருப்பதால், இந்த பிராண்ட் அம்பாசிடர் பதவிக்கு ஆள் பிடிக்கிற வேலையை நிறுத்தி வைத்துவிட்டது கிரிக்கெட் வாரியம்.

கடந்த முறை நடந்த போட்டிக்கு அம்பாசிடராக நியமிக்கப்பட்ட நயன்தாரா, ஒரே நாள் Lakshmi Raiமட்டும் ஆடிட்டோரியத்திற்கு வந்து ரசிகர்களை அதிர வைத்துவிட்டு போனார். அதன்பின்புதான் பிரச்சனை. அம்பாசிடர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டார் நயன். நயன்தாராவின் இடத்தை பிடிக்க கடும் போட்டியிட்டார் த்ரிஷா. இந்த வருடம் எப்டியாவது விட்ட இடத்தை பிடித்துவிடலாம் என்று நினைத்திருந்தார். அந்தோ பரிதாபம்... இதுவும் கைகூடவில்லை. இத்தனை துன்பத்திலும் ஒரு இன்பம். தன்னுடன் போட்டியிட தகுதியில்லாத லட்சுமிராயும் ஏமாந்து போனாரே என்பதுதான் அது!

விபத்தில் பலியான ஆசிரியருக்கு சேரன் நடத்திய அஞ்சலி!


விபத்தில் பலியான் தன் முன்னாள் ஆசிரியருக்கு இயக்குநர் சேரன் அஞ்சலிக் கூட்டம் நடத்தினார்.

சேரனுக்கு சிறு வயதில் ஆசிரியராக இருந்தவர் கே. சுவாமிநாதன் (வயது 58). சேரன் படித்த மதுரை அருகே உள்ள மேலூரை அடுத்த ஒக்குப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் மீது சேரனுக்கு அதிக அன்பும் மரியாதையும் உண்டு. காரணம் சேரனுக்கு பல நிலைகளிலும் பக்க பலமாக இருந்தவர் சுவாமிநாதன்.

சமீபத்தில் ஆசிரியர் சுவாமிநாதன் வாகன விபத்தில் பலியானார். அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்தனர். கண்கள், சிறுநீரகம், கல்லீரல், இருதய வால்வு போன்றவை 6 பேருக்கு பொருத்தப்பட்டன.

இதையடுத்து சுவாமிநாதனுக்கு அஞ்சலி மற்றும் பாராட்டு கூட்டத்தை சேரன் ஏற்பாடு செய்து நடத்தினார். சென்னையில் இருந்து நடிகர்களை அழைத்துச் சென்று இந்த நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த விழாவில் சேரன் பேசியது:

என்னை போல் பல பிரபலங்களை உருவாக்கியவர் ஆசிரியர் சுவாமிநாதன். பொதுவாக பிரபலங்கள்தான் வெளியில் தெரிவார்கள். ஆனால் அவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள் கடைசிவரை வெளியே தெரிவதில்லை. எனக்கு சோதனை வந்த போதெல்லாம் அறிவுரை கூறி பக்கபலமாக இருந்தவர் என் ஆசிரியர்தான்.

வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனம், எச்சரிக்கை அவசியம். நம்மை நம்பி நமது குடும்பத்தினர் உள்ளனர் என்பதை நினைத்து அனைவரும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்ந்து உறுதி எடுக்கவேண்டும் என்றார் சேரன் கண்ணீருடன்.

நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில், குழந்தைகளை நல்ல மனிதர்களாகவும், நல்ல தலைவர்களாகவும் உருவாக்குவது ஆசிரியர்கள்தான். ஆசிரியர் பணி தூய்மையானது. ஒரு மனிதனை பெயர் சொல்லி அழைத்தவர்கள் அவர் இறந்து விட்டால் பாடியை எப்போது எடுப்பார்கள் என்று கேட்கிறார்கள்.

இப்படி வீணாக போகும் உடலை தானம் செய்வதால் பலரது வாழ்வில் ஒளியேற்றலாம். ஆசிரியர் சுவாமிநாதன் உடல் தானம் செய்ததன் மூலம் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அவரது பெயரில் அறக்கட்டளை அமைத்து அவரது குடும்பத்தினரும், டைரக்டர் சேரனும் தமிழ்நாடு முழுவதும் உடல்தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

படப்பிடிப்பில் புது ஹீரோ கூடவே வரும் மனைவி


கலைஞர் கட்டளையிட்டால் பாராளுமன்ற தேர்தலில் திமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்று கூறியிருக்கிறார் பா.விஜய். (நிஜமான அக்கறையிருந்தால் கட்டளைக்காக காத்திருப்பானேன்?) தற்போது ஞாபகங்கள் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார். படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வருகிறது.

கலைஞரின் கை வண்ணத்தில் உருவான தாய் காவியம் படத்தில் நாயகனாக நடிக்க முடிவெடுத்து படப்பிடிப்புக்கும் போனார்கள். என்ன பிரச்சனையோ? படம் நகரவில்லை. அப்படியே அந்த திட்டத்தை கைவிட்டு விட்டு ஞாபகங்கள் படத்தில் நடிக்க வந்துவிட்டார் பா.விஜய்.

இப்படத்தில் ஸ்ரீதேவிகா பா.விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். சினிமா பின்னணியில்லாத மனைவி இதை எப்படி எடுத்துக் கொள்வார்? சினிமா என்றால் கட்டிப்பிடித்து ஆட வேண்டியிருக்குமே? போன்ற கேள்விகளுக்கு, கவிஞர் சொன்ன ஒரே பதில், 'என் மனைவி என்னை புரிந்தவர்!' இந்த நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், வேறு சந்தேகங்களுக்கு இடம் தராத வகையில் படப்பிடிப்புக்கு மனைவியையும் அழைத்து வந்துவிடுகிறாராம்.

பிற நடிகர்களின் மனைவிகளும் கவனிக்க வேண்டிய செய்தி!

'வைகை'யை சூடாக்கிய நமீதா!


வைகை பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்த அத்தனை பேரையும் படு சூடாக்கி விட்டார் நமீதா - தனது கவர்ச்சிகரமான ஆடையால்.பிபிஜி என்டர்பிரைசஸ் தயாரித்துள்ள படம் வைகை. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நேற்று இரவு நடந்தது.

ஏகப்பட் நட்சத்திரங்கள் விழாவில் கலந்து கொண்டனர். நமீதாவும் பங்கேற்றார். நமீதா வரும் வரை எல்லாம் நல்லாதான் போய்க் கொண்டிருந்தது.ஆனால் உடலை இறுக்க ஒட்டிய டைட்டான டாப்ஸ் மற்றும் துப்பட்டாவில் நமீதா அரங்குக்குள் என்டர் ஆனவுடன், அந்த ஏரியாவே சூடாகிப் போனது.

கவர்ச்சிகரமாக வந்த நமீதா, ரத்தினச் சுருக்கமாக நிகழ்ச்சியில் பேசினார். ஆடியோவையும் வெளியிட்டார்.ராமநாராயணன், சிவசக்தி பாண்டியன், அழகன் தமிழ்மணி, விஜயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தின் நாயகன் பாலா. இவர் கலைஞர் டிவியில் இடம் பெற்ற மானாட மயிலாட நிகழ்ச்சியின் 2வது சீசனின் வெற்றியாளர் ஆவர். அவருக்கு ஜோடி போட்டுள்ளார் கேரளாவைச் சேர்ந்த விசாகா.சுந்தரபாண்டி இயக்கியுள்ளார் - இவருக்கு இது முதல் படம். சபேஷ் முரளி இசையமைத்துள்ளனர்.

மதுரையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாம் வைகை படத்தின் கதை. சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு இப்படத்தில் கஞ்சா கருப்பு முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம்.

என்னது, செடி வளர்ந்திருச்சா....? -வெடி சிரிப்பு சிரித்த அஜீத்


விஜய், "யேய்ய்ய்ய்..."னு பிரஸ் மீட்ல அதட்டுன க்ளிப்பிங்ஸ் ஒன்னு வேல்டு முழுக்க 'ப்ளே' ஆகிட்டு இருக்கு. (இந்த படம் வில்லுவை விட நல்லா ஓடுதாம்) நாலு நாளைக்கு முன்னே இதை பார்த்த அரசியல் பத்திரிகை ஆசிரியர் ஒருத்தர் எனக்கு போன் பண்ணி, அப்படி என்னதான் கேட்டீங்க அந்த நிருபர்கள் கூட்டத்திலேன்னாரு. கேட்டீங்கன்னு அவரு கேட்டது என்னையில்லே, என்னை மாதிரி நிருபர்களை!

"அது இங்கே நடந்த பிரஸ்மீட் இல்லே. சென்னை நிருபர்கள் விஜயிடம் அப்படி கோவப்படுறா மாதிரி கேட்க மாட்டாங்க. இது திருச்சியில் நடந்த பிரஸ்மீட். அவங்களுக்கு தெரியாதில்லையா, விஜய் இப்படி கேட்டா கோவப்படுவாருன்னு. அதனாலே கேட்டுட்டாங்க" என்றேன் அப்பாவியாக! இப்படி பதில் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை? அவரு கோவப்பட்டா நீங்க(ள்ளாம்) விட்ருவீங்களா? என்னய்யா பத்திரிகைகாரங்கன்னு பொறிஞ்சாரு. கேட்க மாட்டோம்னு சொல்றதுக்கே கோவப்படுறாரே, எப்படி கேட்போம்னு தெரிஞ்சா எப்படியெல்லாம் கோவப்படுவாரோ?

நான் பல வருஷமா பார்த்திட்டு இருக்கிற மூத்த பத்திரிகையாளர் அவரு. கேள்வி கேட்க ஆரம்பிக்கும்போதே ஏதோ எதிராளியை மடக்கி மல்லாக்கொட்டை திங்க வைச்சுருவாரோங்கிற மாதிரியே இருக்கும். ஒரு முறை விஜயகாந்திடம் இப்படி கேட்டார். "கேப்டன், நான் உங்களை பல வருசமா வாட்ச் பண்ணிகிட்டே இருக்கேன். அப்பப்போ உங்க வீட்டு முன்னாடி கூடுற ரசிகர்களையும் வாட்ச் பண்றேன்"னுட்டு கொஞ்சம் பிரேக் விட்டார். (ஐயய்யோ பெரிய குண்டை போட்டுறப் போறாருன்னு காதை கூர்மையாக்கிட்டு கேட்டால், மீதி கேள்வியை முடிச்சாரே பார்க்கலாம்) "நீங்க அவங்ககிட்டே பழகிற விதமும், அவங்க உங்களை வாழ்த்துறதையும் பார்த்தா உங்களை கருப்பு எம்ஜிஆர்னு சொல்றதிலே தப்பில்லேன்னு தோணுது. இது பற்றி என்ன சொல்றீங்க"ன்னாரு. இதுக்கு விஜயகாந்த் சொன்ன பதில்தான் இன்னும் சிறப்பு. அட போங்கண்ணே... ரசிகர்கள் விரும்புறாங்க. அவங்க ஆசையை ஏன் வேணாம்னு சொல்லணும்?

இது நீண்டகாலமாக ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பார்க்கறதால வர்ற தயக்கம், அல்லது பிரச்சனைன்னு கூட சொல்லலாம்.

அஜீத்தை பார்க்க போயிருந்தார் இன்னொரு நிருபர். ஒரு பேச்சுக்கு "என்னண்ணே, நம்ப ஆபிஸ் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு"ன்னாரு அஜீத். அதுக்கு இவரு வேற ஏதாவது பதில் சொல்லியிருக்கலாம். இவர் ஒரு பதிலை சொல்லப்போக அப்போதைக்கு (பல்லை கடிச்சிகிட்டு) அமைதியா இருந்த அஜீத், அவரு போன பிறகு விழுந்து விழுந்து சிரிச்சாராம். ஏன்?

"ஆமா ஆமாம். போன தடவை நான் வந்திருக்கும்போது இந்த செடி சின்னதா இருந்திச்சு. இப்போ பாருங்க வளர்ந்து என் தோளுக்கு நிக்குது" என்றார் நிருபர். வேடிக்கை என்னவென்றால், அந்த செடி அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் செடி. பல மாதங்களாக அதே உயரத்துடன் அங்கேதான் நிக்குது. இதைதான் நினைத்து விழுந்து விழுந்து சிரித்தார் அஜீத்.

அதே நேரத்தில் கடுமையான கேள்விகளோடு நேருக்கு நேர் மோதுற நிருபர்களும் உண்டு. இதே விஜயிடம் பேட்டியெடுக்க போயிருந்தார் நண்பர் இரா.த.சக்திவேல். முன்பே அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டுதான்....

எல்லா கேள்விகளுக்கும் வேண்டா வெறுப்பாக ம்... ம்ஹ§ம்... இல்லை... என்று ஒற்றை வரியிலேயே பதில் சொல்லிக் கொண்டிருந்தார் விஜய். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த சக்தி, "சார் உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லுங்க. நான் பாட்டுக்கு எந்திருச்சு போயிடுறேன். அதை விட்டுட்டு இப்படி பதில் சொன்னா எப்படி எழுதறது?" என்று கேட்டுவிட்டு விருட்டென்று சீட்டில் இருந்து எழுந்து கொண்டார். அவ்வளவுதான்.... பதறிப்போன விஜய், "ங்ணா ஏன்னா கோவிச்சிக்கிறீங்க? கொஞ்சம் வேற விஷயத்திலே அப்செட்டா இருந்தேன். எப்படி வேணும்னு கேளுங்க, சொல்றேன்" என்றார். அதற்கு பின் அந்த பேட்டி பல மணி நேரம் நீடித்தது.

யுகாதி திருநாளில் விருது சென்னையில் தெலுங்கு நட்சத்திரங்கள்


தெலுங்கு வருட பிறப்பான யுகாதியை முன்னிட்டு சென்னையில் பிரமாண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது ஸ்ரீகலா சுதா தெலுங்கு அசோசியேஷன். மியூசிக் அகடமியில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழா மேடையை செட் போட்டு மிரட்டியிருப்பவர் கலை இயக்குனர் தோட்டாதரணி.

ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு ஐதராபாத்திலிருந்து தவறாமல் கலந்து கொள்வார்களாம் சினிமா நட்சத்திரங்கள். ஏன்? இங்கே அவர்களை பாராட்டிக் கொடுக்கப்படும் விருதுகளுக்காகதான். இந்த முறை சிறந்த பட விருதை அருந்ததிக்கு வழங்குகிறார்கள்.

சிறந்த நடிகர் தருண், சிறந்த நடிகை பூமிகா, சிறந்த பின்னணி பாடகி சுனிதா, சிறந்த இயக்குனர் ஜகரல்லாமுடி ராதாகிருஷ்ணா என்று பட்டியல் நீள்கிறது. புது வருட கொண்டாட்டத்தை விட்டுவிட்டு சென்னைக்கு வருவார்களா என்றால், "இந்த விருது பெருமைக்குரிய விருது என்பதால் கட்டாயம் வருவாங்க. ஒவ்வொரு வருடமும் தவறாம வந்துகொண்டே இருக்காங்க" என்றார் இந்த அமைப்பின் செயலாளர் பிரசாத்.

திமுகவுக்கு பா.விஜய் பிரச்சாரம்


முதல்வர் கருணாநிதி கட்டளையிட்டால் வரும் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வேன் என்று கவிஞராக இருந்து நடிகராக அவதாரமெடுத்துள்ள பா விஜய் தெரிவித்துள்ளார்.

ஊட்டியில் கவிஞர் பா. விஜய் கதாநாயகனாக நடிக்கும் ஞாபகங்கள் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட கவிஞர் பா. விஜய் நிருபர்களிடம் கூறியதாவது:

பாக்கியராஜ் நடித்த ஞானப்பழம் என்ற படத்தின் மூலம் சினிமா பாடல் எழுத ஆரம்பித்தேன். இப்போது இரு படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது நான் கதாநாயகனாக நடிக்கும் ஞாபகங்கள் படத்தில் ஒரு கிராமத்தில் கவிஞனாக உள்ள வாலிபன் சென்னைக்கு வந்து தனது வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறான் என்பது பற்றி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

நான் அரசியலில் நுழைவது குறித்து இப்போது எதுவும் கூறுவதற்கில்லை. எனினும் முதல்வர் கருணாநிதி கட்டளையிட்டால் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளேன்

நடிப்பதற்கு நான் வந்தாலும் தொடர்ந்து பாடல்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். அதுதான் எனக்கு மிக முகத்கியம். தற்போது வள்ளுவனுடன் பேசுகிறேன் என்ற கவிதை தொகுப்பை எழுதி உள்ளேன். இதில் வள்ளுவரின் 80 குறள்களுக்கு புதுக்கவிதை மூலம் விளக்கம் அளித்துள்ளேன். ஞாபகங்கள் படம் மே மாதம் வெளியிடப்படும் போது இந்த கவிதை தொகுப்பும் வெளியிடப்படும்.

ஏ.ஆர். ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது பற்றி நிறைய பேசிவிட்டேன். எழுதியும் உள்ளேன். என்னைப் பொறுத்தவரை தமிழனுக்குள் முளைத்த இசைக்கு உலகம் சூட்டிய மகுடம் ஆஸ்கார் என்று கூறுவேன்.

ஞாபகங்கள் படத்தில் 6 பாடல்கள் உள்ளன. இந்த 6 பாடல்களும் தமிழின் முதல் எழுத்தான அ-வில் தொடங்குவது போல் எழுதியுள்ளேன் என்றார் விஜய்.

ஆசின்...இப்படியெல்லாம் வதந்தி!


ஆசினுக்கு மும்பையில் நண்பர்கள் இன்னும் சரியாக செட் ஆகவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக திரையுலகில் ஆசினுக்கு வேண்டப்பட்டவர்கள் ரொம்பக் குறைச்சல் என்று எண்ணத் தோன்றுகிறது அவரைப் பற்றி அங்கு ஊர்ந்து கொண்டிருக்கும் ஒரு 'வாசனை'யான வதந்தியைப் பார்த்தால்.

முன்னணிக்கு வரும் ஹீரோயின் குறித்து திரையுலகில் வதந்திகள் கிளப்பப்படுவது சகஜமானதுதான். அது தமிழ் சினிமா என்று மட்டுமல்ல இந்திய சினிமா உலகம் முழுவதும் அது இருக்கத்தான் செய்கிறது.

அந்த வகையில் ஆசின் குறித்து மும்பையில் ஒரு வதந்தியை கிளப்பி விட்டுள்ளனராம். அது, ஆசின் ஷூட்டிங் முடித்து விட்டு கழற்றிக் கொடுக்கும் உடைகளை காஸ்ட்யூம் டிசைனரிடம் கொடுக்க முடியவில்லையாம்.

காரணம், அதில் வியர்வை நாற்றம் மூக்கைத் துளைக்கிறதாம். இதனால் ஆசினுக்கான காஸ்ட்யூம்களை திரும்பி வாங்குவதற்கு காஸ்ட்யூம் டிசைனர்கள் பெரும் அவஸ்தைப்படுகிறார்களாம்.

ஆனால் இது சுத்தமான வதந்தி என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர். எந்தக் காலத்தில் இருந்து கொண்டு ஆசினைப் பற்றி இப்படிப் பேசுகிறார்கள் இவர்கள் என்கிறார்கள் இந்த நடுநிலையாளர்கள்.

ஆசின் முன்னணிக்கு வருவதைப் பிடிக்காதவர்களே இப்படி வதந்தியை கிளப்பி விடுவதாக ஆசின் தரப்பு புலம்புகிறதாம்.

முன்னணிக்கு வருவதற்குள் எத்தனையை சமாளிக்க வேண்டியிருக்கிறது, சகிக்க வேண்டியிருக்கு...

Thursday, March 26, 2009

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வாழ்நாள் சாதனை விருது


பாடகர், நடிகர், இசையமைப்பாளர், தயா‌ரிப்பாளர் என எஸ்.பி.பி.க்கு பல முகங்கள். ஆனாலும், பாடகராக அவர் சென்ற தொலைவு பிரமிக்கத்தக்கது.
இன்றுவரை பாடிக் கொண்டிருக்கும் இவர் இதுவரை ஏறக்குறைய நாற்பதாயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார். இதுவொரு கின்னஸ் சாதனை. 2001 ல் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ, சில தேசிய விருதுகள் தவிர்த்து அவரது பெருமை பெ‌ரிதாக கொண்டாடப்பட்டதில்லை. இந்நிலையில் தெலுங்கு அசோஸியேஷன் ஆஃப் நார்த் அமெ‌ரிக்கா வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு எஸ்.பி.பி.யை தேர்வு செய்துள்ளது. பி.சுசிலா, ராமநாயுடு, புரபஸர் சி.ஆர். ரா‌வ் ஆகியோர் இதற்குமுன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்களில் சிலர்.

விருது பெறப் போகும் கின்னஸ் சாதனையாளருக்கு நமது வாழ்த்துகள்.

ஐஸ்வர்யா ராய் வடிவில் பார்பி பொம்மைகள்


லண்டன்: விரைவில் ஹாலிவுட் நடிகைகளுக்குக் கிடைத்த பெருமை வரிசையில் நம்ம ஊர் ஐஸ்வர்யா ராயும் சேரவுள்ளார். ஐஸ்வர்யா ராயின் உருவத்தில் பாலிவுட் பார்பி என்ற பெயரில் உலகப் புகழ் பெற்ற பார்பி பொம்மைகள் தயாரிக்கப்படவுள்ளனவாம்.

உலகப் புகழ் பெற்ற பார்பி பொம்மைகளை, உலகப் புகழ் பெற்ற நடிகைகளின் முகங்களை வைத்து இதற்கு முன்பு உருவாக்கியுள்ளனர். பியான்ஸ் நோல்ஸ், எலிசபெத் டெய்லர், டயானா ராஸ் ஆகியோருக்கு அந்த பெருமை கிடைத்தது. இந்த வரிசையில் தற்போது ஐஸ்வர்யா ராயும் இணையவுள்ளார்.

ஐஸ்வர்யாவின் முகத்தை வைத்து உருவாக்கப்படவுள்ள பார்பி பொம்மைகளுக்கு பாலிவுட் பார்பி என பெயர் சூட்டவுள்ளனர். இதுதொடர்பாக பார்பி பொம்மை தயாரிப்பாளர்களான மேட்டல் நிறுவனத்துடன், ஐஸ்வர்யா ராயின் ஏஜென்டுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.

இந்த பாலிவுட் பார்பி பொம்மைகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு விடப்படும்.

சமீபத்தில்தான் பார்பி பொம்மைக்கு 50 வயதானது. இதை மேட்டல் நிறுவனம் சிறப்பாக கொண்டாடியது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் வடிவில் உருவாக்கப்படும் பார்பி பொம்மைகளுக்கு இந்தியாவில் நல்ல மார்க்கெட் கிடைக்கும் என அது கருதுகிறது.

இந்த பாலிவுட் பார்பி பொம்மையின் கண்கள், ஐஸ்வர்யா ராயின் கண்களைக் கொண்டிருக்கும். மேலும், இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்கள் டிசைன் செய்துள்ள உடைகளை இந்த பொம்மை அணிந்திருக்கும்.

ஏற்கனவே லண்டனில் உள்ள மேடம் டுஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் ஐஸ்வர்யா ராயின் முழு உருவ மெழுகு பொம்மை இடம் பெற்றுள்ளது. அவரது மாமனார் அமிதாப் பச்சனின் பொம்மையும் அங்கு இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், தற்போது பார்பி வடிவில் ஐஸ்வர்யாவுக்கு புதுப் பெருமை கிடைக்கவுள்ளது.

'ஏக்' நம்பிக்கையில் ஷ்ரியா!


இந்திக்குப் போயுள்ள ஷ்ரியா அங்கு தொடர் தோல்விகளைக் கொடுத்ததால் ராசியில்லாத நாயகிகள் வரிசையில் சேர்ந்து விட்டார. இப்போது அவரிடம் உள்ள ஒரே நம்பிக்கை கையில் இருக்கும் ஏக் என்ற படம்தானாம்.

தமிழிலும், தெலுங்கிலும் இதுவரை கிட்டத்தட்ட 35 படங்களை முடித்து விட்ட ஷ்ரியா, இந்தி ஆசை வந்து அங்கு போனார். ஆனால் போன நேரமோ என்னவோ அவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியைத் தழுவின.

வந்த புதிதில் இவர் இந்தி நாயகிகளை ஓரம் கட்டி விடுவாரோ என்ற அச்சம் அங்கு கிளம்பியது. ஆனால் அத்தனை நாயகிகளின் வயிற்றிலும் இப்போது பாதாம்கீர் ஊற்றியது போலாகி விட்டதாம் ஷ்ரியாவின் தொடர் தோல்விகள்.

அதிலும் அவர் கடைசியாக நடித்து வெளிவந்த மிஷன் இஸ்தான்புல் பெரும் தோல்விப் படமாகியுள்ளது.

இப்போது ஷ்ரியா கைவசம் உள்ள ஒரே நம்பிக்கை ஏக்- தி பவர் ஆப் ஒன் என்ற படம்தானாம். இதுவும் கைவிட்டு விட்டால் ஷ்ரியாவை இந்தியில் தேட வேண்டியிருக்கும் என்கிறார்கள் - காரணம், 'அடுத்தாத்தில்' ஆசின் அட்டகாசம் செய்து கொண்டிருப்பதால்.

தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து வெளியான அத்தடு படத்தின் ரீமேக்தான் இந்த ஏக். நானா படேகர், பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவனின் தம்பி சங்கீத் சிவன்தான் இயக்கி வருகிறார்.

இந்தியில்தான் இப்படி திகட்டலாக இருக்கிறது ஷ்ரியாவுக்கு. ஆனால் தமிழில் படு தைரியமாகத்தான் இருக்கிறார். கந்தசாமி, ஜக்குபாய், குட்டி, தோரணை, சிக்குபுக்கு என ஏகப்பட்ட படங்கள் கைவசம் உள்ளதாம்.

அப்புறம் எதுக்கு அங்க போகனும், இங்கேயே விளையாட வேண்டியதுதானே..!

ஆட்டம் காணும் அசின் இமேஜ்! பிரச்சனையின் பின்னணியில் நடிகை?


வில்லில் இருந்து விருட்டுன்னு பாய்ஞ்ச அம்பு, போன வேகத்திலே திரும்பி வந்த மாதிரி, புகார் கொடுத்தவங்களுக்கே பிரச்சனையாயிருச்சாம். அசின் விவகாரத்திலே போலீசில் புகார் கொடுத்த சுடலை வடிவிடம், 'உன் பையன் இருக்கிற இடம் உனக்கு தெரியும். சொல்லு' ன்னு மிரட்டுறாங்களாம்.

பையன் மும்பையில் இல்லை, சென்னையிலோ, தூத்துக்குடியிலோ இருக்கலாம்னு போலீஸ் தேட ஆரம்பிச்சிருக்கு. இந்த நேரத்திலேதான் இன்னொரு புரளியும் போர்வை போர்த்திக்கிட்டு நடமாடுது. அசினுக்கு களங்கம் ஏற்படுத்துற திட்டத்தோடு, அவர் கூடவே இருந்த அந்த பையனுக்கு இப்படி ஒரு அசைன்மென்டை கொடுத்ததே இன்னொரு கேரள நடிகைதானாம். நினைச்சது நடந்திருச்சுன்னு நடிகை ஆனந்த கூத்தாடுகிறாராம்.

பையன் பிடிபட்டா இந்த சதியை பின்னணியில் இருந்து தூண்டிவிட்டது யாருன்னு மறக்காம விசாரிங்கன்னு சொல்லியிருக்காராம் அசின். பிடிபட்டா அவரே உளறிக் கொட்டிட மாட்டாரா என்ன? இதற்கிடையில், அடிக்கடி போலீஸ் வந்து விசாரிக்கறதாலே வாடகைக்கு வீடு கொடுத்தவங்க காலி பண்ண சொல்றாங்க. எங்கே போறதுன்னு தெரியலேங்கிறார் சுடலை வடிவு.

ஏழை சொல்லு அம்பலம் ஏறுமா?

பசங்களை தேடிய கதை... -படம் போல் விவரித்த டைரக்டர்!


பசங்க படத்திற்காக பசங்களை பிடிச்ச கதையையே ஒரு திரைப்படம் போல அழகாக விவரித்தார் பாண்டியராஜன். சேரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவராம். இந்த கதையை எடுத்துகிட்டு கோடம்பாக்கம் முழுக்க சுற்றி வந்தேன். கதை கேட்ட எல்லாரும், வேற கதை இருக்கான்னுதான் கேட்டாங்க. ஆனா, துணிச்சலா படமாக்க வந்தது சசிகுமார்தான் என்றார் பா.ரா!

படத்திற்கு சில வாண்டு பசங்க தேவைப்பட்டுச்சு. ஸ்கூல் ஸ்கூலா அலைஞ்சு இவங்களை பிடிச்சேன். 90 நாள் ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்டு இந்த படத்தை முடிச்சு கொடுத்தாங்க. எல்லாருக்கும் நன்றி என்றவர், எங்க படத்திலே க்யூட்டான குட்டி பிசாசு இதுதான் என்று ஒரு பெண் குழந்தையை காட்டினார்.

இந்த கேரக்டருக்கு ஒரு வாண்டு கிடைக்கலியேன்னு யோசிச்சிட்டு ஒரு வாய்க்கால் கரையிலே உட்காந்திருக்கும்போதுதான் இவ பிரண்சோடு போயிட்டு இருந்தா. வளவளன்னு ஒரே பேச்சு. உன் பேரு என்னன்னு கேட்டேன். எதுக்கு கேட்கிறே, யாரு நீ என்று ஒரே கேள்வி. ஒரு போட்டோவும் எடுத்தோம். எதுக்கு போட்டோ எடுக்கிறே? வீட்டிலே சொல்லி ஆளுங்களை கூட்டிட்டு வரேன்னு ஓட ஆரம்பிச்சிட்டா. பின்னாடியே போய் அவங்க வீட்டிலே பேசி சம்மதம் வாங்குனோம் என்றார் பாண்டியராஜன்.

பட்ஜெட்தான் கொஞ்சம் பெரிசாகும்னு பா.ரா சொன்னப்போ, கதைக்கு எவ்வளவு தேவைப்படுதோ, செய்யுங்க. எந்த இடத்திலேயும் காம்ப்ரமைஸ் ஆக வேணாம்னு சொன்னாராம் சசி. ராம் படத்திலே புரடக்ஷன் வேலையும் பார்த்ததாலே எனக்கு இதிலே கொஞ்சம் ஈசியா இருந்திச்சு என்றார். மறுபடியும் ஒரு சுப்ரமணியபுரம் தயாராகிட்டு இருக்குங்கறது மட்டும் இப்போதைக்கு தெளிவா புரியுது!

பாலிவுட் ஆசையில் அசோக்!


முருகா, பிடிச்சிருக்கு என இரு படங்களில் (மட்டுமே) நடித்துள்ள அசோக் தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வராததால் விரக்தியாகி விட்டார். பேசாமல் இந்திக்குப் போகப் போகிறேன் என்கிறார்.

தமிழில் இனிமேல் புதிய வாய்ப்புகள் வரும் வழியையும் காணோம், அசோக்கும் தேடுவதாக இல்லையாம். இந்தியில் தனது அதிர்ஷ்டத்தைப் பரிட்சீத்துப் பார்க்கப் போகிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தென்னகத் திரையுலகில் எல்லோருக்கும் நான் தெரிந்த பெயர். ஆனால் மும்பைதான் எனது வீடு. எனக்கு எல்லாமே அங்குதான் கிடைத்தது. ஒரு நடிகராக தேவையான அனைத்துத் தகுதிகளையும் நான் அங்குதான் வளர்த்துக் கொண்டேன்.

தமிழ்ப் படங்கள் எனக்கு நல்ல வாய்ப்புகளைத் தந்தன. அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஆனால் எனது இதயமெல்லாம் மும்பையில்தான் உள்ளது என்கிறார் அசோக்.

விட்டலாச்சாரியா படம் போல இதயத்தை பாம்பேயில் வைத்து இவர் மட்டும் சென்னையில் உலா வருகிறார் போலும்.. பேசாம இரண்டையும் சேர்த்து ஒரே இடத்தில் வைங்க அசோக், புண்ணியமாகப் போகும்.

அதிராம் பள்ளியில் 'கவர்ச்சி' மலை! ஜம்மென்று ஒரு ஜலதோஷ குளியல்


பிரமாண்டங்களை பார்த்தால் கண்ணு அகலமாகும்! காதுமா?

மும்பையில் பிளாட் வாங்கிட்டாராம் என்ற வார்த்தை, ஃபிளைட் வாங்கிட்டாராம் என்று காதில் விழ, நமீதாவுக்கே போன் அடித்துவிட்டார்கள் நம்ம புலனாய்வு புலிகள். விஷயத்தை கேட்டு 'கெக்கே பிக்கே' என்று சிரித்த நமீதா, 'ஃபிளைட் வாங்கினா யாருக்கும் காட்டாம ஒளிச்சா வைக்க முடியும்? ஒங்களுக்கும் ஒரு ரவுண்டு உண்டு' என்றாராம். இந்த ஒரு பதில் போதாதா? கிர்ர்ர்ர்ர்டித்து போயிருக்கிறார்கள் நம்ம பங்காளிகள்!

எங்கேயிருக்கீங்க என்று அன்பொழுக விசாரித்தால், கவர்ச்சி மலை இப்போது கேரளாவில் எழுந்தருளியிருக்கிறதாம். பிளாக் ஸ்டாலின் என்ற படப்பிடிப்புக்காக அதிராம்பள்ளியில் இருக்கிறாராம். இவர் நடிக்கும் நேரடி மலையாளப்படம் இது. நமீயின் வருகையை அறிந்து கொண்ட கேரள ரசிகர்கள் ச்சும்மா ரவுண்டு கட்டி மொய்த்திருக்கிறார்கள். ஹாய் மச்சான்ஸ் என்று மலையாளத்தில் அழைத்திருப்பார் போலும். விடாமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தார்களாம் ரசிகர்கள். இவர்களை விரட்டியடித்துவிட்டு படத்தை எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம் பிளாக் ஸ்டாலின் குழுவினருக்கு.

நமீதாவை அழைச்சிட்டு அருவி பக்கம் போனாங்கன்னா என்ன சீன் எடுத்திருப்பாங்க? அமிர்தாஞ்சன் டப்பாவை அப்படியே வழிச்சு தடவுற அளவுக்கு குளிக்க விட்டுருக்காங்க! நமக்காக எப்படியெல்லாம் கஷ்டப்படுது இந்த பெரிய்ய ஜீவன்?!

வில்லி வேடத்தில் சினேகா சொல்லி அடிக்குமா கோவா?


இம்மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவித்திருக்கிறார்களாம் சௌந்தர்யா தரப்பில். கடந்த சில வாரங்களுக்கு முன்பே துவங்க வேண்டிய கோவா படம், ஜெய் 'கட்டையை' போட்டதால் நொண்டியடித்துக் கொண்டிருந்தது. இப்போது கொஞ்சம் முன்னேற்றம்! ஜெய் இல்லாத மற்ற காட்சிகளை ஷ§ட் பண்ண வேண்டியதுதானே என்றாலும், அதற்கும் வாய்ப்பில்லையாம். படம் முழுக்க எல்லா காட்சிகளிலும் வருகிறாராம் ஜெய். இப்போது கதையில் மாற்றமா? அல்லது தண்டனையில் இருந்து விலக்கா? தெளிவாக தெரியவில்லை. அவுட்டோருக்கு மூட்டை முடிச்சை கட்ட தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் கோவாவில் வில்லியாக நடிக்கப் போகிறார் சினேகா என்ற தகவலும் வருகிறது. நெகட்டிவ் ரோல்களில் நடித்தால்தான் மார்க்கெட்டில் நிற்க முடியும் என்று சில முக்கிய ஹீரோக்கள் எக்குதப்பான கதைகளுக்கு வலை வீசிக் கொண்டிருக்க, ஹீரோயின்களும் இப்படி இறங்கியிருப்பதுதான் ஆச்சர்யம். உயிர் படத்தில் நடித்ததால்தான் சங்கீதாவுக்கு மார்க்கெட். இப்போதும் படையப்பா என்றால் ரஜினிக்கு முன்னாடி நிற்பவர் ரம்யாகிருஷ்ணன்தான்.

இனிமேல் 'கோவா' என்றால் சினேகா நினைவுக்கு வருவாரோ?

Wednesday, March 25, 2009

தேமுதிக முதல் பட்டியல் - விஜயகாந்த் இன்று சென்னையில் வெளியிட்டார்.

சென்னை, மார்ச் 25 தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று சென்னையில் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், ஒன்பது பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை இன்று அவர் வெளியிட்டார்.

வேட்பாளர் பட்டியல் விவரம் வருமாறூ:

திண்டுக்கல் - முத்துவேல்தாஜ்
கன்னியாகுமரி - ஆஸ்டின்
திருநெல்வேலி - மைக்கேல் ராயப்பன்
விருதுநகர் - ம பா பாண்டியராஜன்
சேலம் - மோகன்ராஜன்
திருச்சி - விஜயகுமார்
மதுரை - முத்துலட்சுமி
தேனி - சந்தனம்
நாமக்கல் - மல்லேஸ்வரன்

இந்த ஒன்பது பேர் கொண்ட பட்டியலை இன்று வெளியிட்ட விஜயகாந்த், சென்னையிலிருந்து விமானம் மூலம் கன்னியாகுமரி புறப்பட்டுச் சென்றார்.

கன்னியாகுமரியில் இன்று தமது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் அவர், 42 நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தொடர் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று கன்னியாகுமரி புறப்படும்முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏற்கனவே தாம் அறிவித்தபடி, தம்முடைய தொடர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்காக கன்னியாகுமரி செல்வதாகக் குறிப்பிட்டார்.

இன்று காலை தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தில்லி சென்றிருக்கிறாரே அது காங்கிரஸ் கூட்டணிக்கான கடைசி முயற்சியா என்று கேட்டதற்கு, மறுப்பு தெரிவித்த அவர் தேர்தல் சின்னம் தொடர்பாகவே அவர் தில்லி சென்றிருப்பதாக கூறினார்.

இலங்கை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்கட்சியினர் கள்ளத் தோணி மூலம் இலங்கை செல்லுமாறு முதலமைச்சர் கூறியிருக்கிறாரே! என்று கேட்டதற்கு பதிலளித்த விஜயகாந்த், முதலமைச்சரே அவ்வாறு சென்று போராடலாமே என்று கூறினார். (டிஎன்எஸ்)

அமெ‌ரிக்காவில் டெல்லி 6

6ஆம் தேதி இந்திப் படவுலகுக்கு ஆகாத நாள். அன்று வெளியான இரண்டு படங்களும் சோபிக்கவில்லை.

மாதவன், நீது சந்திரா நடிப்பில் வெளியான 13பி விமர்சன ‌ரீதியாக ஓகே என்றாலும் பாக்ஸ் ஆஃபிஸில் படத்துக்கு பின்னடைவுதான். இங்கு மட்டுமல்ல, வெளிநாட்டிலும்.

அமெ‌ரிக்காவில் வார இறுதியில் மூன்றரை லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது விக்ரம் குமா‌ரின் படம். இது பரவாயில்லை. 13பி-யுடன் வெளியான DHOONDTE REH JAOGE உள்ளூர், வெளிநாடு இரண்டிலும் அட்டர் பிளாப். அமெ‌ரிக்காவில் 2.65 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.

அதேநேரம், மூன்றாவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கும் டெல்லி 6 தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது. இதுவரை இப்படம் அமெ‌ரிக்காவில் நான்கரை கோடி வசூலித்துள்ளது. ஷாருக்கானின் பில்லு 3.90 கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

சென்ற வாரம் மேலும் சில படங்கள் வெளியாகியுள்ளதால் அமெ‌ரிக்க பாக்ஸ் ஆஃபிஸில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

மகளுக்கு கதை கேட்கும் கோவிந்தா


மகளுக்காக கதை கேட்டு வருகிறார் நடிகர் கோவிந்தா. நல்ல கதை, புரொட‌க்சன் கம்பெனி அமைந்தால் மகளின் விருப்பப்படி அவரை நடிகையாக்க தயாராகிவிட்டார் இந்த அன்பு‌த் தந்தை.

கோவிந்தாவின் மகள் நர்மதா சில வருடங்கள் முன் சல்மான் கானுடன் திரைப்பட விழா ஒன்றில் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டார். அன்றிலிருந்து நர்மதாவின் திரைப்பிரவேசம் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளிவரும். என்றாலும் இப்போதுதான் சினிமாவில் நுழைய அவர் சின்சியராக முயற்சி செய்து வருகிறார்.

மகளுக்கு உதவும் பொருட்டு நல்ல கதை மற்றும் கம்பெனியாக தேடி வருகிறார் கோவிந்தா. இந்த இரண்டும் அமைந்தால் மகளை நடிகையாக்க அவர் தயார். எந்த வேடத்தில் நர்மதா நடிக்க வேண்டும் என்பது முதல் எப்படி நடிக்க வேண்டும் என்பது வரை எதிலும் தலையிடுவதாக இல்லை என்றும் தெ‌ரிவித்துள்ளார் கோவிந்தா.

நல்ல கம்பெனி, கதை அமையாதபட்சத்தில் சொந்தமாக படம் தயா‌ரிக்கவும் கோவிந்தா தயாராக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெ‌ரிவித்துள்ளனர்.

எப்படியும் விரைவில் நர்மதா நடிகையாகிவிடுவார் என்பது மட்டும் உறுதி.

த்‌ரிஷாவை மு‌ந்‌திய அனுஷ்கா


தெலுங்கிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் அருந்ததீ பல சாதனைகளை‌ப் படைத்து வருகிறது. ஆவியை பற்றிய இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது.

த்‌ரிஷா தெலுங்கில் நடித்த பல படங்கள் அவரது ஸ்டார் வேல்யூ காரணமாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. நந்து, குமரன் படங்கள் அதில் முக்கியமானவை. மகேஷ்பாபு இவற்றில் ஹீரோவாக நடித்திருந்தார்.

தெலுங்கில் மிகப் பெ‌ரிய வெற்றியை ஈட்டிய இந்தப் படங்கள் தமிழில் ஓடவில்லை. மேலும், த்‌ரிஷாவின் மொழிமாற்றுப் படங்களின் மொத்த வசூல் சொற்ப லட்சங்களுக்கு மேல் தாண்டவில்லை. இதே நிலைதான் நயன்தாரா மற்றும் ஸ்ரேயா நடித்த படங்களுக்கும் ஏற்பட்டது.

இவற்றிற்கு மாறாக அனுஷ்காவின் நடிப்பில் வெளிவந்த அருந்ததீ நேரடி தமிழ்ப் படங்களை பின்னுக்குத் தள்ளி பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சரத்குமா‌ரின் 1977 படத்தின் இரண்டு வார வசூலை இந்தப் படம் மூன்றே நாளில் எட்டிப் பிடித்திருக்கிறது. அருந்ததீக்குப் பிறகே மாதவனின் யாவரும் நலம் படம் வருகிறது என்பது வியப்பான உண்மை.

அனுஷ்கா தற்போது விஜய்யின் வேட்டைக்காரனில் நடித்து வருகிறார். அருந்ததீயின் வெற்றியும், விஜய் படத்தில் கிடைத்திருக்கும் வாய்ப்பும் முன்னணி நடிகைகளில் ஒருவராக அவரை உயர்த்தியிருக்கிறது.

தமிழில் பழஸிராஜா


எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதையில் ஹ‌ரிகரன் இயக்கிவரும் படம், பழஸிராஜா. மலையாளப் படமான இதில் மம்முட்டி பழஸிராஜாவாக நடிக்கிறார்.

அவருடன் சரத்குமாரும் முக்கியமான கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழஸி மகாராஜா ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர். இந்திய விடுதலைப் போ‌ரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முதல் இந்தியர் என மலையாளிகளால் கருதப்படுகிறவர். இவரது கதையே எம்.டி.வி.யின் திரைக்கதையில் படமாக்கப்பட்டு வருகிறது.
webdunia photo WD

எம்.டி.வி. திரைக்கதையில் தயாரான ச‌ரித்திரப் படங்கள் வைசாலியும், ஒரு வடக்கன் வீர கதாவும். இரண்டும் பெரும் வெற்றியை ஈட்டின. மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத பெருமைகளாக இவையிரண்டும் கருதப்படுகின்றன. ஒரு வடக்கன் வீர கதாவில் நடித்ததற்காக மம்முட்டிக்கு தேசிய விருது கிடைத்தது.

பழஸிராஜாவில் பத்மப்‌ரியா, கனிகா நடிக்கின்றனர். வில்லனாக சுமன். இவர்களுடன் திலகன், ஜெகதி ஸ்ரீகுமார், மனோ‌ஜ் கே ஜெயன் ஆகியோரும் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். இதுவரை எந்த மலையாளப் படத்துக்கும் இல்லாத வகையில் இருபது கோடி வரை பழஸிராஜாவுக்காக செலவிட்டிருக்கிறார் தயா‌ரிப்பாளர் கோகுலம் கோபாலன்.

கேரளாவில் மட்டும் படத்தை வெளியிட்டால் இருபதில் ஐந்து மட்டுமே திரும்பக் கிடைக்கும். இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.

இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மொழிக்காரர்களும் தங்கள் இனத்தைச் சார்ந்தவர்தான் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் யுத்தத்தை துவக்கினார் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க மலையாள பழஸிராஜாதான் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்லும் இந்தப் படத்தை ஏற்பார்களா என்பது விமர்சகர்களின் கேள்வி.

விருதால் நெருக்கடி..பிரியா மணி


தேசிய விருது கிடைத்து விட்டது என்பதற்காக நடிப்புக்கு மட்டுமே நான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்த வட்டத்திலிருந்து மீண்டு வரவே விரும்புகிறேன் என்கிறார் பிரியாமணி.

பருத்தி வீரன் படத்தில் நடித்ததால்தான் பெரும் பிரேக் கிடைத்தது பிரியா மணிக்கு. ஆனால் ஏண்டா அந்தப் படத்தில் நடித்தோமோ என்று புலம்பாத குறையாக அவரது நிலைமை ஆகி விட்டது.

கூடவே தேசிய விருதும் கிடைத்து விட்டதால், ஆர்ட் பட நாயகி ரேஞ்சுக்கு பிரியா மணியை அத்தனை பேரும் பார்க்க ஆரம்பித்து விட்டனர். இதனால் அப்செட் ஆகியுள்ளார் பிரியா மணி.

இந்த வளையத்திலிருந்து வெளியே வரும் நோக்கிலேயே பாவாடை தாவணியை மறந்து விட்டு கவர்ச்சியின் பக்கம் படு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார் பிரியாமணி.

தற்போது மணிரத்தினத்தின் ராவணா படத்தில் நடித்து வரும் பிரியா மணி, அடுத்து கன்னடத்தில் முதல் முறையாக நடிக்கப் போகும் (புனீத் ராஜ்குமார்தான் ஜோடி) ராம் படத்திற்கு தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் ஏன் கவர்ச்சிகரமாக நடிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்ற கேள்விக்கு வித்தியாசமான பதிலைத் தருகிறார் பிரியா மணி. தெலுங்கில் நடித்த துரோணா படத்தில் கிட்டத்தட்ட அரை நிர்வாண கோலத்தில் வந்திருந்தார் பிரியாமணி.

இதுகுறித்து அவர் கூறுகையில், துரோணா படத்தில் எனது காஸ்ட்யூமை ரசிகர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். பிகினி அணிவதில் என்ன தவறு இருக்கிறது.. ரோலுக்குத் தேவைப்பட்டது அணிந்தேன். அது தவறா..

எப்போதாவதுதான் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்கள் கிடைக்கும். கமர்ஷியல் சினிமாதான் முக்கியமானது. எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நான் இழக்க விரும்பவில்லை. அதனால்தான் தேசிய விருது பெற்ற நடிகை என்ற இமேஜிலிருந்து வெளியே வர துடிக்கிறேன்.

நடிப்புடன் கூடிய படங்களுடன் கமர்ஷியல் படங்களையும் சம அளவில் செய்ய விரும்புகிறேன் என்கிறார் பிரியாமணி.

கிரிக்கெட்-தென் ஆப்பிரிக்காவில் லஷ்மி ராய்!


கிரிக்கெட் பைத்தியமாகி (டோணி பைத்தியம் இல்லையாம்) விட்ட லஷ்மி ராய், ஐபிஎல் 2வது சீசன் போட்டிகளைப் பார்க்க தென் ஆப்பிரிக்காவுக்குப் போகப் போறாராம்.

சென்னையில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வமற்ற சியர் லீடராக கலக்கினார் லஷ்மி ராய்.

அவருக்கும், டோணிக்கும் இடையே டீல் ஏற்பட்டு விட்டதாக கூட செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் ஐபிஎல் 2வது சீசன் போட்டிகளை தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றி விட்டதால் சோகமாகியுள்ளார் லஷ்மி ராய். இருந்தாலும் சில போட்டிகளைப் பார்க்க தென் ஆப்பிரிக்காவுக்குப் போகப் போகிறாராம் லஷ்மி.

நான் அவனில்லை படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கவிருக்கும் லஷ்மி ராய், அதற்கான போட்டோ ஷூட்டுக்காக சென்னை வந்திருந்தார்.

அப்போது அவரிடம், டோணியிடமிருந்து ஏதாவது சிறப்பு அழைப்பு வந்ததா மேடம் என்று கேட்டபோது, அய்யா, அப்படியெல்லாம் பேசாதீங்கள். நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். வேறு எதுவும் இல்லை. இருவருமே எல்லையைத் தாண்டியதில்லை.

இந்த மீடியாக்கள் ரொம்ப மோசம். அவர்கள்தான் என்னையும், டோணியையும் இணைத்து வைத்துப் பேசி வருகின்றனர். அதை பலமுறை நான் தெளிவாக்கி விட்டேன். எனக்கு விளையாட்டு மீது ஆரவம் உண்டு. அதிலும் ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு கிரிக்கெட் பைத்தியமாகி விட்டேன்.

ஐபிஎல் வரும் வரை நான் எந்த ஸ்டேடியத்திற்கும் போய் போட்டிகளைப் பார்த்ததே இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளைப் பார்க்க வர வேண்டும் என போட்டி அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டதால்தான் வந்தேன். ஆனால் அதை தேவையில்லாமல் மீடியாக்கள் பெரிதாக்கி விட்டன என்று அலுத்துக் கொண்டார் லஷ்மி ராய்.

சரி உங்களது ஜோடியை முடிவு செய்து விட்டீர்களா என்று கேட்டபோது, நான் விதியை நம்புபவள். எனது லைப் பார்ட்னர் யார் என்பது எனக்குத் தெரியாது என்றார் விச்ராந்தியாக.

தற்போது தமிழில் நான்கு படங்கள் இருக்கிறதாம் லஷ்மி ராய்க்கு. அதில் சிம்புதேவனின் எரும்புக் கோட்டையில் முரட்டு சிங்கம் படமும் ஒன்று. இதில் கெளபாய் டைப் வேடத்தில் வருகிறாராம். இரண்டு மலையாளப் படங்களும் இருக்கிறதாம்.

நமீதாவை நசுக்கிய ரசிகர்கள்!


மலையாளப் படமான பிளாக் ஸ்டாலியனுக்காக கேரளாவுக்கு ஷூட்டிங் போயிருந்த நமீதாவை ரசிகர்கள் மொய்த்து எடுத்து விட்டனராம். படாதபாடு பட்டு நமீதாவை மீட்டனராம்.

நமீதா நடித்த கவர்ச்சிகரமான தமிழ்ப் படங்கள் மூலம் கேரளாவிலும் நமீதாவுக்கு எக்கச்சக்க ரசிகர்கள். இந்த நிலையில் பிளாக் ஸ்டாலியன் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார் நமீதா. இது நமீதாவின் முதல் மலையாளப் படம்.

பிரமோத் பப்பன் இயக்குகிறார். கலாபவன் மணிதான் நாயகன். இப்படத்தில் நமீதா லாரா சிங் என்ற பார் டான்ஸர் கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்திற்காக பெரும் தொகையை அவருக்கு சம்பளமாக கொடுத்துள்ளனராம். மலையாள சினிமாவில் எந்த நாயகியும் இதுவரை வாங்கியிராத சம்பளமாம் இது.

சமீபத்தில் அதிராம்பள்ளி பகுதியில் ஷூட்டிங் நடந்துள்ளது. அப்போது நமீதா வந்திருப்பதைக் கேள்விப்பட்டு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டோடி வந்துள்ளனர். நமீதாவை கிட்டக்கப் போய் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால், அவருக்கு படப்பிடிப்பு முடியும் வரையில் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளனர்.

ஆனால் அதையும் தாண்டி பொங்கிப் பெருகி விட்டனர் ரசிகர்கள். நமீதாவை முற்றுகையிட்ட ரசிகர்களிடமிருந்து அவரை அரும்பாடுபட்டு மீட்டனராம்.

இருந்தாலும் இதனால் நமீதா அப்செட் ஆகவில்லையாம். மாறாக தன் மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பைப் பார்த்து நெகிழ்ந்து போய் விட்டாராம்.

இதுகுறித்து நமீதா கூறுகையில், எனது ரசிகர்களை நான் நேசிக்கிறேன். அவர்களது அன்பையும், அதனால் ஷூட்டிங் ஸ்பாட்களில் ஏற்படும் இடையூறுகளையும் நான் பெரிதுபடுத்துவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த வழிகளில் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

நிறைய மலையாளப் படங்களில் நடிக்க நான் தயார். கிளாமர் கேரக்டர்கள் கொடுத்தால் கூட நான் ரெடிதான்.

பிளாக் ஸ்டாலினியனில் எனக்கு கிளாமர் ரோல்தான். ஆனால் நடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

அதிராம்பள்ளி நீர்வீழ்ச்சியில்தான் ஒரு பாடல் காட்சியை படமாக்கினர். அந்த லொகேஷன் எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. எங்கு பார்த்தாலும் பசுமைதான். அருமையான கிளைமேட். இந்தியாவிலேயே படப்பிடிப்புக்கு உகந்த அருமையான லொகேஷன் இதுதான் என நினைக்கிறேன்.

இங்கு இந்த அருவியின் பின்னணியில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையும் எனக்கு வந்து விட்டது என்றார் நமீதா.

ஆம்பிவேலியில் வீடு வாங்கியாகி விட்டது, அடுத்து அதிராம்பள்ளியா...?

சிம்பு மாறிட்டாரு...


தனது திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக இயக்குநர் சொல்வதை மட்டும் கேட்டு, அவருடைய பணிகளில் தலையிடாமல், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சமர்த்தாக நடித்து வருகிறாராம் சிம்பு.

சிம்பு என்றால் வம்பு என்று கூறும் அளவுக்கு அவரைப் பற்றி நிறைய செய்திகள் வந்து விட்டன. அப்படி ஆகி விட்டது நிலைமை. ஆனால் முதல் முறையாக சமர்த்தாக நடிக்கிறார் சிம்பு என விண்ணைத் தாண்டி வருவாயா யூனிட்டார் நற்சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இயக்குநர் சொல்வதை மட்டும் கேட்டு நடிக்கிறார். அவருடைய எந்தப் பணியிலும் தலையிடுவதில்லை. சமர்த்தாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் யூனிட் வட்டாரத்தினர்.

இப்படத்தில் திரிஷாவுடன் ஜோடி சேருகிறார் சிம்பு. அலை படத்திற்குப் பின்னர் இருவரும் இணையும் படம். தற்போது கேரள மாநிலம் ஆலப்புழையில் ஷூட்டிங் நடந்து வருகிறது.

பத்து நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கிறதாம். கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்திற்காக இங்கு வந்திருந்தார் கெளதம். அதன் பின்னர் இந்த இடம் அவருக்கு மிகவும் பிடித்துப் போகவே தொடர்ந்து ஆலப்புழையில் சில காட்சிகளை வைக்க ஆரம்பித்துள்ளார் கெளதம்.

வேட்டையாடு விளையாடு மற்றும் வாரணம் ஆயிரம் படத்தின் சில காட்சிகளை இங்கு எடுத்துள்ளார் கெளதம் மேனன்.

தற்போது இதுவரை இந்திய சினிமா எதிலும் வராத சில அழகிய லொகேஷன்களில் பாடல் காட்சி ஒன்றையும், சில படக் காட்சிகளையும் இங்கு படமாக்கி வருகிறாராம் கெளதம்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஜூலை மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.

காங்கிரஸில் சுதாகர்-பானுச்சந்தர்!


ஹைதராபாத்: நடிகர்கள் சுதாகர், பானு சந்தர் ஆகியோர், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி முன்னிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

தமிழகத்தைப் போலவே ஆந்திர அரசியலும் சினிமாவைச் சார்ந்தே இயங்குகிறது. தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் அரங்கேறும் கூத்துகளுக்கு சற்றும் சளைக்காத பல வேடிக்கைகளை தெலுங்கு அரசியல் - சினிமா நடிகர்களும் நடத்திக் காட்டி மக்களை 'மகிழ்விப்பது' வழக்கம்.

தமிழில் கிழக்கே போகும் ரெயில், நிறம் மாறாத பூக்கள், சுவர் இல்லா சித்திரங்கள், எங்க ஊர் ராசாத்தி என பல வெற்றிப்படங்களில் நாயகனாக நடித்து, பின்னர் தெலுங்குப் படங்களில் காமெடியனாக செட்டிலானவர் நடிகர் சுதாகர்.

இதே போல 'நீங்கள் கேட்டவை' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து, இப்போது காமெடியனாக மாறியவர் பானு சந்தர். இருவருமே நடிக்க ஆரம்பித்த தொடக்க காலத்தில், சென்னையில் வசி்த்தவர்கள்.
நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார்கள்.

இப்போது தேர்தல் திருவிழா என்பதால், அரசியல் ஜோதியில் இந்த இரு நடிகர்களும் ஐக்கியமாகியுள்ளனர்.

ஹைதராபாதில் நேற்று நடந்த நிகழ்ச்சியொன்றில், முதல்வர் ராஜசேகர ரெட்டி முன்னிலையில், சுதாகர், பானுசந்தர் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

வருகிற தேர்தலில், இந்த இருவரும் காங்கிரசுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.

நதியாவ வரச்சொல்லுங்க... நச்சரித்த தொலைக்காட்சிகள்!


எவர்கிரீன் அழகி நதியாவோட ரசிகர்கள், வர்ற வெள்ளிக் கிழமை ஏர்போர்ட் பக்கம் போனால், நேராகவே தரிசிக்கலாம் தேவதையை! இந்த விசிட், பட்டாளம் பிரமோஷனுக்காகவாம். எல்லா சேனல்களும், 'நதியாவ வரச்சொல்லுங்க' என்று லிங்குசாமியை நச்சரிக்க, யூனிட் சார்பில்தான் இந்த அழைப்பு.

முதலில் நதியா கேரக்டரில் ஜெயராம்தான் நடிப்பதாக இருந்ததாம். அவருக்கு பாதிரியார் வேடமும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நேரத்தில் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ஜெயராம். வேறு யார் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்று விவாதித்தபோது 'பளிச்' என்று நினைவுக்கு வந்தவர் நதியாதானாம். ஆண் கேரக்டரை பெண்ணாக்கி விட்டார்கள்.

படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் ஷீபா ரோஹன். இவர் இயக்குனர் ரோஹனின் மனைவி. நதியாவின் காஸ்ட்யூம் படங்களை மெயிலில் அனுப்பி வைப்பாராம். மும்பையில் இருந்து ஒப்புதல் தருவார் நதியா. ஒருமுறை கூட அவருக்கு பிடிக்காத காஸ்ட்யூம் படங்கள் இங்கிருந்து போனதேயில்லை என்கிற அளவுக்கு நதியா மனசை அறிந்திருந்தாராம் ஷீபா.

அட, இதையெல்லாம் நதியாவே டிவியிலே சொல்லுவாங்க. ரசிக்க ரசிக்க கேளுங்க ஜனங்களே...

நல்லா கிளப்புறாங்கய்யா பீதிகளை.... பரத், பேரரசு குய்யோ முறையோ!


'கண்ணை மூடி படுத்திருந்தாலும் காலாட்டுறதை நிறுத்தக் கூடாது போலிருக்கு' என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் பரத்தும், பேரரசும்! வேறொன்றுமில்லை, இருவரும் இணைந்து உருவாக்குவதாக இருந்த திருத்தணி டிராப் என்று யாரோ கொளுத்திப் போட, அப்பிடியா... என்று கேட்டு இருவரையும் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் நிருபர்கள்.

'அதெல்லாம் ரூமருங்கண்ணே, நிச்சயமா திருத்தணி வரும். அதுவும் சும்மாயில்லே, பேரரசுக்கேயுரிய அதிரடி சமாச்சாரங்களுடன்' என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பரத். ஆறுமுகம், கண்டேன் காதலை ஆகிய படங்களை முடித்துவிட்டு அடுத்து திருத்தணிதானாம். 'இந்த படத்தில் எனக்கு ஜோடியா நடிக்க சுகாஷிங்கிற புதுமுகத்தை செலக்ட் பண்ணி அதுக்கு தமிழ் கத்துக் கொடுக்கிற வேலையை கூட ஆரம்பிச்சாச்சு, நல்லா கௌப்புறாங்கய்யா பீதிகளை' என்ற பரத், பேரரசு தனக்காக எழுதிக்கொண்டிருக்கும் பஞ்ச் டயலாக்குகளை அவ்வப்போது கேட்டு கேட்டு ரசிக்கிறாராம்.

'திருத்தணிக்கு நான்தான் மியூசிக். இதுவரைக்கும் பஞ்ச் டயலாக் கேட்டிருப்பீங்க. பஞ்ச் பாடல்கள் கேட்டிருக்கீங்களா? வந்துகிட்டேயிருக்கு' என்று நிஜமாகவே பீதியை கிளப்புகிறார் பேரரசு! திருத்தணின்னு பேரு வச்சுட்டு திருகாணிய ஏத்துறீங்களேய்யா....

காமெடி கூட்டணியில் அழுகாச்சி! -படபடக்கிறார் சிங்கமுத்து


"வடிவேலுவோட பதினைஞ்சு வருஷமா கூடவே இருந்ததுக்கு அவரு கொடுத்த பரிசு இதுதானா? நியாயத்தை நீங்களே சொல்லுங்க தம்பி" என்று அழாத குறையாக பேச ஆரம்பித்தார் சிங்கமுத்து. வேறொன்றுமில்லை, சென்னையில் வாங்கிப் போட்ட நிலங்கள் தொடர்பான பிரச்சனையில், சிங்கமுத்துவின் கை 'விளையாடி' விட்டதாக சந்தேகப்படுகிறாராம் வடிவேலு. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக இந்த நகைச்சுவை கூட்டணிக்குள் ஒரே அழுகாச்சி சப்தம்! என்ன நடந்தது? நம்மிடம் விலாவாரியாக பேச ஆரம்பித்தார் சிங்கமுத்து.

"வடிவேலுவோட மேனேஜரா இருந்த முருகேசனும் வேலுச்சாமியும் இறந்திட்டாங்க. வேலுச்சாமி இறந்ததும் சந்தேகப்பட்ட வடிவேலு தன்கிட்ட இருந்த நில பத்திரங்களையெல்லாம் செக் பண்ண ஆரம்பிச்சாரு. இவருக்கு நிலம் வாங்கி கொடுத்ததெல்லாம் தாம்பரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்திங்கிறவருதான். நான் கூட மாட போவேன். நிலத்துக்கு வில்லங்கம் இருக்கான்னு பார்ப்பேன். ஒரு சதவீதம் கமிஷன் கொடுப்பாங்க. அதை பத்து பேரு பிரிச்சிப்போம்"

"இவரு வாங்கின நிலத்தை பற்றி சந்தேகப்பட்டாருன்னு தெரிஞ்சதும், நானே நிலம் வாங்குன அத்தனை பேரையும் கொண்டாந்து அவருக்கு முன்னாடி நிறுத்திட்டேன். மூணு கோடிக்கு அவரு வாங்கின நிலம் இன்னிக்கு பல கோடி போவுது. நிலத்து பேருல வடிவேலுவுக்கு சந்தேகம் இருந்தா திருப்பி கொடுத்திரச் சொல்லுங்க. நாங்களே எடுத்துக்கிறோம்னும் அவங்க சொல்றாங்க. அப்படியிருந்தும், இந்த நில விவகாரத்திலே நான் கையாடல் பண்ணிட்டதா அவரு ஊரு முழுக்க சொல்லிட்டு திரியுறாரு என்றார் ஆவேசமாக! என் மேல தப்பு இருந்தா கோர்ட்ல வழக்கு தொடர வேண்டியதுதானே, எதுக்கு இப்படி சொல்லிட்டு திரியணும்?" என்று ஆவேசப்பட்டவரிடம், "நெருப்பில்லாம புகையுமா?" என்று கேட்டதற்கு இன்னும் ஆவேசமானார்.

"அவருக்கு இந்த நில விவகாரத்திலே உண்மை என்னன்னு தெரியும்ங்க. என்னை அவரு சந்தேகப்படவே மாட்டாரு. அவரு கோவமெல்லாம் நான் என் புள்ளைய ஹீரோவாக நடிக்க வைக்கிறதுதான். கடைசி வரைக்கும் இவரு கூடவே குப்பை கொட்டிகிட்டு இருக்கணும்னு நினைக்கிறாரு. என் புள்ளை வளர்ந்தா நானும் வளர்ந்திருவேனோங்கிற பயத்திலே இப்படி புரளியை கிளப்புறாரு. அதுமட்டுமில்லே, அவரு பையன் சுப்ரமணிய ஹீரோவாக்கணும்னு ஆசைப்படுறாரு. அது சரியா அமைய மாட்டேங்குது. இன்னொரு விஷயம், ஆரம்பத்திலிருந்தே அவருக்கு முக்குலத்தோர்களை பிடிக்காது. (பார்றா...) நான் தெரியாத்தனமா அந்த சாதியிலே பொறந்துட்டேன். என்ன செய்யுறது என்றார்!

"பதினைந்து வருசமா அவரு என்னென்ன குற்றங்கள் செஞ்சாருன்னு எனக்கு தெரியும். பழகிட்டு சொல்ல வேணாம்னு பார்க்கிறேன். நான் பேச ஆரம்பிச்சா நிறைய விஷயங்கள் வெளியிலே வரும். அவரு நாறிப்போயிடுவாரு" என்றவர், "மகாத்மா காந்தியே இவரு ஆபிசுக்குள்ளே போயிட்டு வந்தாலும், காந்தியோட கைத்தடி எங்க ஆபிஸ்லே திருடுனதுதான்னு சொல்லுவாரு. இது வடிவேலு கூடவே பிறந்த சந்தேக குணம்" என்றார் சகட்டுமேனிக்கு.

"விஜயகாந்தோட தகராறு, ஜெயமணியோட தகராறு, போண்டாமணியோட தகராறு, நம்பிராஜனோட தகராறு, சிவநாராயணனோட தகராறு, கடைசியா கேள்விப்பட்டேன், ஜே.கே.ரித்திஷோடவும் தகராறாம்"

"அவரு நல்லவரா இருந்தா, இத்தனை காலம் அவருக்கு காமெடி டிராக் எழுதிக் கொடுத்திட்டு இருந்த கருப்பையா, எஸ்பி.ராஜகுமார், கிருஷ்ணன், கடைசியா நான் எல்லாரும் இப்போதும் இருந்திருப்போமே? ஒருத்தருமே அவரோட இருக்க முடியாது. செத்துப்போன வேலுச்சாமிக்கும் அவருக்கும் கடந்த ஒரு வருஷமாகவே கடுமையான சண்டை நடந்திட்டு இருந்திச்சு. ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட, வேலுச்சாமியோட மனைவி வடிவேலு மேல போலீஸ்லே கம்ப்ளைண்ட் கொடுக்க போறதா சொல்லிச்சு. நான்தான், வேணாம்மா... பொறுமையா இருங்கன்னு சொல்லியிருக்கேன் என்று பெரிய குண்டை போட்டு விட்டு ஓய்ந்தார்.

செக்ஸ் மற்றும் குடும்ப படங்கள்? -கமலின் வேதனையும், யோசனையும்!


'பசங்க' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் வளாகத்தில் நடந்தது. ஆடியோவை வெளியிட்டு பேசினார் கமல்ஹாசன். இவர் மைக் முன் வரும்போது, தெய்வமே.... என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல்!

'எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கையில்லை' என்று அங்கிருந்தே பேச்சை தொடர்ந்தார் கமல்! பேச்சின் இடையில் கமல் சொன்ன ஒரு ஐடியா, 'நல்லாயிருக்கே' என்று யோசிக்க வைத்தது. படங்களில் செக்ஸ் அதிகமாக இருக்கிற படங்களை தனியா மார்க்கெட் பண்ணுங்க. அதை குடும்ப படங்களோடு 'மிக்ஸ்' பண்ண வேண்டாம். இங்கே எல்லா படங்களையும் எல்லாருடனும் பார்க்க வேண்டியிருக்கு.

'அபூர்வ சகோதரர்கள்' படத்திற்கு நான் என் குழந்தையோட போயிருந்தேன். வாழ வைக்கும் காதலுக்கு ஜே ன்னு நான் அதிலே பாடுறேன். அது அந்த குழந்தைக்கு அவசியம் இல்லாதது. ஆனால், அதையும் கூட்டிட்டு வந்துதான் படத்தை பார்க்க வேண்டியிருக்கு. குழந்தைகளுக்கு தனியாக, குடும்ப படங்கள் தனியாக, செக்ஸ் பேஸ்டு படங்கள் தனியாக என்று தனித்தனியாக ரிலீஸ் செய்தால்தான் சரியாக இருக்கும் என்றார் கமல்

Tuesday, March 24, 2009

ஹைடெக் கந்தசாமி



விக்ரமின் பிளாஷ்பேக் காட்சிகள், விக்ரம், வடிவேலு நகைச்சுவை காட்சிகள்... இந்த இரண்டும் தயாரானால் கந்தசாமி படப்பிடிப்பு முடிவுக்கு வந்துவிடும்.
தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்பதால் பணத்தை தண்ணீராக இறைத்திருக்கிறார், தயா‌ரிப்பாளர் தாணு. பழசு என தோன்றும் அனைத்து அம்சங்களும் மாற்றப்பட்டு ஹைடெக் கல‌ரில் கந்தசாமி தயாராகி வருகிறது. உதாரணத்துக்கு கந்தசாமி டிசைன்ஸ். ஏற்கனவே எழுதப்பட்ட கந்தசாமி டைட்டில் அட்ரா‌க்சனாக இல்லை என்று தோன்றியதால் அந்த டிசைனரை மாற்றி புதிதாக ஒருவ‌ரிடம் டிசைன் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். படத்தின் டைட்டிலும் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல் படத்தின் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தி செதுக்கி வருகிறார் இயக்குனர் சுசி.கணேசன். தற்போது கந்தசாமி யூனிட் சென்னையில் முகாமிட்டுள்ளது. விக்ரமின் பிளாஷ்பேக் காட்சியில் வரும் கூழு, சுண்டலு, வேர்க்கடலை என்ற பாடலை இரண்டு நாட்களாக படமாக்கி வருகிறார் சுசி.கணேசன். தொடர்ந்து வடிவேலு நடிக்கும் காட்சிகள் படமாகின்றன.

போஸ்ட் புரொட‌க்சன் வேலைகள் நடந்து கொண்டிருந்தாலும், கோடை விடுமுறைக்கு படம் வெளியாவது சந்தேகம். தரமே தாரக மந்திரம் என்று செயல்படும்போது தாமதம் இயற்கைதானே.

ச‌ரித்திரம் - சாமி வைத்திருக்கும் பாலியல்தான் சர்ப்ரைஸ்


தமிழில் பீ‌ரியட் படங்களுக்கு திடீர் மவுசு. தயாராகிக் கொண்டிருக்கும் படங்களில் அரை டஜனாவது இந்த வகை என்பது ஆச்ச‌ரியமான உண்மை.

சேரனின் பொக்கிஷம் எழுபதுகளில் நடக்கும் காதல் கதை. கி‌‌ரீடம் விஜய் ஆர்யாவை வைத்து இயக்கிவரும் மதராசப்பட்டினம் சுதந்திரப் போராட்ட காலத்தை ஒட்டியது. எழுபது, எண்பதுகளில் வந்த கௌபாய் படங்களை தனது இருட்டு குகையில் முரட்டு சிங்கம் படத்தில் மறுஉருவாக்கம் செய்கிறார் சிம்புதேவன். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனும் பீ‌ரியட் படமே.

சாமி இயக்கிவரும் ச‌ரித்திரம் படம்; அறுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை உள்ள காலகட்டத்தை பிரதிபலிக்கிறது. படத்தின் கதையை இந்த காலகட்டத்தில் நடப்பதுபோல உருவாக்கியிருக்கிறார் சாமி.

முதலிரண்டு படங்களில் பாலியல் பிரச்சனையை கையிலெடுத்து சர்ச்சையில் சிக்கிக் கொண்ட இவர், ச‌ரித்திரத்தில் சிலம்பக் கலையை சிறப்பிப்பது அவரது நலம் விரும்பிகளுக்கு பேரானந்தத்தை அளித்துள்ளது. ஆனால், அந்த ஆனந்தத்துக்கு ஆயுள் சொற்பம்.

ஆமாம், ச‌ரித்திரத்திலும் பாலியல் பிரச்சனை ஒன்றை வைத்திருக்கிறாராம் சாமி. சிலம்பம் அளவுக்கு இந்த பாலியல் பிரச்சனையும் பேசப்படும் என்பது அவருடன் இருப்பவர்களின் கருத்து. சிலம்பப் படத்தில் இந்த சிக்கல் தேவைதானா?

மனித வாழ்க்கையின் அடிப்படை பாலியல்தான் என்று இந்த கேள்விக்கு பதிலளிக்கிறார் சாமி. சாமி சொன்னால் ச‌ரியாகதான் இருக்கும்.

டைரக்ஷன்- விஜயலட்சுமி! ஒரு நடிகையின் லட்சியம்...


கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சி காட்டுவேன் என்று சொல்கிற நடிகைகள் கொஞ்சம் திரும்பி விஜயலட்சுமி சொல்வதை கேட்கலாம். கேட்டால், இனிமேல் அப்படியெல்லாம் அச்சு பிச்சென்று பேசவே மாட்டார்கள். "கதையிலே கவர்ச்சி என்பதே இல்லை. தினசரி வாழ்க்கையில் கல்லு£ரிக்கு போகும் பெண், தொப்புளை காட்டிக் கொண்டா போகிறாள்? வேணும்னா, பாடல் காட்சிகளில் கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்கலாம்" என்றார் விஜயலட்சுமி.

நாளொரு படமும் பொழுதொரு கால்ஷீட்டுமாக அசத்தி வருகிறது பொண்ணு. என்ன காரணம்? சென்ட்டிமென்ட்! விஜயலட்சுமி நடிச்சா அந்த படம் வெற்றிப்படம்னு ஏரியாவில் பேசிக்கிறாங்க. அதனால்தான் பட வாய்ப்புகள் குவிகிறது. ஆனால் இந்த சென்ட்டிமென்ட்டிலும் நம்பிக்கையில்லையாம் விஜிக்கு.

"அப்பா மாதிரி நானும் டைரக்டர் ஆகணும் என்பதுதான் லட்சியம். அதுக்கான வேலைகளில் இப்பவே இறங்க மாட்டேன். நிறைய கத்துக்கணும். நிச்சயமா ஒரு நாள் டைரக்ஷன் விஜயலட்சுமிங்கிறதை படிக்கதான் போறீங்க" என்றார். சின்ன கரெக்ஷன்... பார்க்கவும் போறோம்.

தேளுக்கு வாலு, ஜெய்யுக்கு நாக்கு! -தொடரும் இன்னொரு பேட்டி


அப்பாடா.... ஆயிரம் வாலா பட்டாசு வெடிச்சு முடிச்சிடுச்சுன்னு நிம்மதியா நடக்க ஆரம்பிக்கும்போது காலடியில் டமால்னு கேட்குமே ஒரு சத்தம், அந்த மிச்ச வெடியின் மிரட்டல் மாதிரிதான் ஜெய்யுக்கும் சோதனை தொடர்கிறது. தான் நடித்து வரும் படங்களை பற்றி ஏடாகூடமாக விமர்சித்து, தயாரிப்பாளர் சங்கத்தின் கடும் எச்சரிக்கையில் சிக்கிக்கொண்ட ஜெய், அதிலிருந்தே மீள முடியாமல் இன்னும் அவஸ்தைபட்டு வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் ஒரு பிரபல சினிமா பத்திரிகையில் அவரது பேட்டி வந்திருக்கிறது. இது ஆங்கில நாளிதழுக்கு அவர் கொடுத்த விவகாரமான பேட்டியின் சாயலிலேயே அமைந்திருப்பதுதான் பகீர்.

கொஞ்சம் காலம் கடந்து வரும் மறுபடியும் சூட்டை கிளப்பியிருக்கும் அந்த பேட்டியில் என்னதான் கூறியிருக்கிறார் ஜெய்? "நான் இப்போ பண்ணிட்டு இருக்கிற நான்கு படங்களுமே கதை பிடிச்சதாலே பண்ணுற படங்கள் இல்லை. சென்னை 28 ரிலீஸ் ஆன நாளில் இருந்து எனக்காக வெயிட் பண்றாங்க. அதுக்காக ஒப்புக் கொண்டேன். அவங்க என்ன சொல்றாங்களோ, அதை அப்படியே நடிச்சுக் கொடுக்கிறேன்"

எங்கே மறுபடியும் பிரச்சனை கிளம்புமோ என்று நினைத்தாரோ என்னவோ, சம்பந்தப்பட்ட இயக்குனர்களுக்கு போன் அடித்து, "இது முன்னாடி கொடுத்த பேட்டிதான் இது. இப்போதான் வருது. ஸாரி" என்றாராம். தேளுக்கு வாலிலேயும், ஜெய்யுக்கு நாக்குலேயும் கொடுக்கு போலிருக்கு!

அசல்-ஹாரிஸ் விலகல்


அஜீத்தின் அசல் படத்திலிருந்து விலகி விட்டார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

அசல் படத்தை முதலில் கெளதம் இயக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் படத்தின் கதையை இறுதி செய்யவே நெடு நாட்களாகும் போல இருந்ததால் தயாரிப்பாளர்கள் கெளதமை கழற்றி விட்டு விட்டனர்.

இதையடுத்து சரண் இப்படத்தின் இயக்குநராக புக் ஆனார். அஜீத்துக்கும், சரணுக்கும் சினிமா கெமிஸ்ட் சூப்பராக ஒர்க் அவுட் ஆகும் என்பதால் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகி விட்டார்.

டைமுக்கு ட்யூன்களை கொடுக்க முடியாமல் போனதால் படத்திலிருந்து அவர் விலகி விட்டாராம்.

இதுகுறித்து ஹாரிஸிடம் கேட்டபோது, ஆமாம், நான் அசல் படத்தில் இல்லை. இது எனது முடிவுதான். யாரும் என்னை நீக்கவில்லை.

படத்தின் கதையை இறுதி செய்ய தயாரிப்பாளர்கள் நீண்ட காலம் எடுத்துக் கொண்டனர். ஆனால் இப்போது நான் கே.எஸ்.ரவிக்குமாரின் ஆதவன், பாஸ்கரின் தெலுங்குப் படம் ஆகியவற்றில் பிசியாகி விட்டேன்.

இதனால் இப்போது இந்தப் படத்திற்கு என்னால் வர முடியவில்லை. அடுத்த படங்களில் சேரலாம் என அசல் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஹாரிஸ் விலகியதைத் தொடர்ந்து தற்போது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளாராம். தீனா, பில்லா, ஏகன் ஆகிய படங்களுக்கு ஏற்கனவே அஜீத்துக்காக சூப்பர் ட்யூன்களைப் போட்டுக் கொடுத்தவர் யுவன் என்பதால் இசை சிறப்பாகவே அமையும் என்ற நம்பிக்கையில் உள்ளது அசல் டீம்.

'பத்தியத்தை' விட்டார் ரஜினி!


எந்திரன் படத்துக்காக இது நாள் வரை கடைப்பிடித்து வந்த பத்திய சாப்பாட்டைக் கைவிட்டு விட்டார் ரஜினிகாந்த்.

உடல் எடையைக் கூட்டுவதற்காக நிறைய சாப்பிட ஆரம்பித்துள்ளாராம்.

ரஜினிகாந்த்தின் இடுப்பளவு கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அப்படியேதான் இருக்கிறது. காரணம், அவர் கடைப்பிடித்து வரும் ஸ்டிரிக்ட்டான டயட் முறை. அது மட்டும் இல்லாவிட்டால் எப்போதோ சூப்பர் ஸ்டாரின் இடுப்பு பல 'டயர்'களை வாங்கியிருக்கும்.

ஆனால் ஒரு ஹீரோவுக்கு முக்கியமானது அவரது உடல் அழகும், வனப்பும், எடுப்பும்தான் என்பதை உணர்ந்து வைத்துள்ள சூப்பர் ஸ்டார், பத்திய சாப்பாட்டுக்கு மாறி பல காலமாயிற்று.

இந்த நிலையில் எந்திரன் படத்துக்காக இந்த பத்திய சாப்பாட்டுக்கு பிரேக் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.

படத்தில் வரும் ரஜினியின் கேரக்டருக்கு சற்று எடை கூடுதலாக இருக்க வேண்டும் என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார். குறைந்தது 20 கிலோ எடையாவது அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பத்தியத்தை கைவிட்ட ரஜினி தற்போது கூடுதலாகவும், எடையைக் கூட்ட உதவும் பதார்த்தங்களையும் சாப்பிட ஆரம்பித்துள்ளாராம்.

பெரு மற்றும் ஒரு மாத கால சென்னை ஷூட்டிங்கை முடித்து விட்ட எந்திரன் யூனிட் வேலூருக்கு ஷிப்ட் ஆகியுள்ளது. அங்கு உடல் எடை கூடிய ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கவுள்ளனராம்.

வேலூர் என்றால் முதலி்ல் நினைவுக்கு வருவது கோட்டை. கூடவே நினைக்கு வருவது மணமணக்கும் பிரியாணிதான். அதிலும் ஆம்பூர் பிரியாணி என்றால் வாயில்லாதவர்களுக்கும் எச்சில் ஊறும்.

தற்போது அந்த ஆம்பூர் பிரியாணியைத்தான் ரஜினி பிடி பிடித்துக் கொண்டிருக்கிறாராம். அவர் மட்டுமல்லாமல் யூனிட்டாருக்கும் ஆம்பூர் பிரியாணியை வாங்கி பிடிக்கச் சொல்லியுள்ளார்.

இப்போது தினசரி ஆம்பூர் பிரியாணிதான் ரஜினியின் சாப்பாடாக மாறியுள்ளதாம். இப்படி தினசரி பிரியாணி சாப்பிட்டதால் 6 கிலோ எடையை கூட்டி விட்டாராம் ரஜினி.

வழக்கமாக அரிசி சாதத்தையே தொடுவதில்லை ரஜினி. உடல் எடையை சிக் என்று வைத்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என்று முன்பு ஒரு முறை சென்னையில் நடந்த விழாவில் அவர் விளக்கியது இளம் ஹீரோக்களுக்கு பாடம் எடுத்தது போல இருந்தது.

ஆனால் இப்போது எந்திரன் படத்துக்காக அவர் எதையெல்லாம் விட வேண்டும் என்று சொன்னாரோ அதையெல்லாம் சாப்பிட முன்வந்துள்ளார். இதுதான் தொழில் பக்தி.

தனுஷ்-ஷ்ரியா-குட்டி!


யாரடி நீ மோகினி புகழ் இயக்குநர் ஜவஹர் தனது அடுத்த படத்தில் பிசியாக ஈடுபட்டிருக்கிறார். தனுஷ், ஷ்ரியா இணையில் உருவாகும் இந்தப் படத்தின் பெயர் குட்டி.

ஒரிசா- ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள கடலோர, ரயில்வே டிராக் பகுதியில் வைத்து படு வேகமாக படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.

இங்கு படம் எடுக்க சிறப்பு அனுமதி பெறபப்ட்டுள்ளதாம். படத்திற்கு இந்த லொகேஷன் படு கலர்புல்லாக அமையும் என்கிறார் ஜவஹர்.

குட்டி படத்தின் 85 சதவீத ஷூட்டிங் முடிந்து விட்டதாம். அடுத்து பாடல் காட்சிகளை எடுக்கவுள்ளாராம் ஜவஹர். இதை வெளிநாடுகளில் வைத்து விதம் விதமாக ஷூட் செய்யும் திட்டம் உள்ளதாம்.

இப்படத்தில் பணக்கார வாலிபனாக வருகிறார் தனுஷ். வழக்கமாக பொறுக்கிப் பையனாக, ஊதாரிப் பையனாக, வீட்டுக்கு அடங்காத பையனாகத்தான் வருவார் தனுஷ். முதல் முறையாக கோடீஸ்வர வீட்டுப் பிள்ளையாக வருகிறாராம்.

இந்தப் படத்தை முடித்து விட்டு வெற்றி மாறனின் ஆடுகளம் படத்திற்கு வருகிறார் தனுஷ். அப்படத்தின் ஷூட்டிங் ஆறு மாதங்களுக்கு இடைவெளியில்லாமல் நடைபெறவுள்ளதாம்.

இப்படத்தை முழுக்க முழுக்க மதுரையில் வைத்து ஷூட் செய்யவுள்ளனர். இதனால் மதுரை பாஷையைப் பேச டிரெய்னிங்கும் எடுத்து வருகிறாராம் தனுஷ்.

பின்னு மாப்ள..!

நம்பர், ராசி, வாஸ்து... இளைய தளபதிக்கு தோஸ்து!


வேட்டைக்காரன் என்று தலைப்பு வைத்துவிட்டு குறி தவறாமல் அம்பு விடுவதுதானே அழகு? அதற்கு தயாராகிவிட்டார் விஜய். 'எத்தை கற்றால் வித்தை தெளியும்' கதையாக மெல்ல மெல்ல ஜோதிடத்தை நம்ப ஆரம்பித்திருக்கிறாராம்.

முதலில் வாஸ்துபடி வீட்டில் சில மாற்றங்களை செய்ய சொல்லியிருக்கிறார்களாம். செஞ்சாச்சு...! அடுத்து தேதி, கூட்டுத்தொகை என்று பல்வேறு உட்டாலக்கடி சமாச்சாரங்கள். அதில் ஒன்று, ஒன்பதாம் எண்தான் உங்களுக்கு ராசி. அதனால் அதுக்கேற்ற மாதிரி நடந்துக்கோங்கன்னு அட்வைஸ்!

முதன்முறையாக அதையும் நிறைவேற்றிவிட்டார் இளைய தளபதி. வேட்டைக்காரன் படப்பிடிப்பை 9-ந் தேதி துவங்க சொன்னாராம். முதலில் பாடல் காட்சிதான் எடுத்தார்கள். அதிலும் முதல் பாடல் என்பதால் பத்து நாட்கள் ஷெட்யூல். ஒன்பதே நாட்களில் இந்த பாடலை முடித்துவிடலாம் என்று வேக வேகமாக ஆட ஆரம்பித்தவர், சொன்னபடி ஒன்பதாவது நாளில் முடித்தாராம். சொன்னதுதான் சொன்னாங்க. நாலாம் நம்பர் ராசின்னு சொல்லியிருந்தா, பாட்டை நாலே நாளில் முடிச்சிருப்பாரே!

அதிருக்கட்டும்... 'கோவ'க்கார வீடியோ கிளிப்பிங்ஸ் இன்டர்நெட்லே பரவியதில் பயங்கர அப்செட்டாம் இளைய தளபதி.

அசின் உதவியாளர் தூத்துக்குடியில் பதுங்கல்


தூத்துக்குடி: கடத்தப்பட்டதாக கூறப்படும் பிரபல நடிகை அசினின் உதவியாளர் நல்லமுத்துக்குமாரை தூத்துக்குடியில் மறைந்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளன. இதையடுத்து போலீசார் அங்கு அவரை தேடி வருகின்றனர்.

தமிழில் கஜினி, போக்கிரி உள்ளிட்ட படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு இருப்பவர் அசின். சமீபத்தில் இவர் அமீர் கானுடன் நடித்த கஜினி படத்தின் இந்தி ரீமேக் வசூலில் சக்கைபோடு போட்டது. இதையடுத்து தற்போது அவர் பாலிவுட்டில் பிசியாக இருக்கிறார். இவரது உதவியாளராக இருந்தவர் நல்லமுத்துக்குமார் (30).

கடந்த சில தினங்களுக்கு முன்பு நல்லமுத்துக்குமாரின் தாயார் சுடலை வடிவு என்பவர் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம், தனது மகன் நல்லமுத்துக்குமார் மும்பையில் நடிகை அசின் உதவியாளராக பணியாற்ற சென்றார். பின்னர் அவர் திடீரென காணாமல் போய்விட்டார் என புகார் கொடுத்தார்.

இது குறித்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய புற நகர் கமிஷனர் ஜாங்கிட் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, பொன்னேரி டிஎஸ்பி ரங்கராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் சென்று நல்லமுத்துக்குமார் நண்பர்களான மாதவன் மற்றும் கேசவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், நல்லமுத்துக்குமார் அடிக்கடி அவர்களிடம் மொபைலில் இருந்து அடிக்கடி பேசியது தெரியவந்தது. மேலும் அவர் சென்னையில் இருந்து பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் நல்லமுத்துக்குமார் தனது தாயார் சுடலைவடிவிடம் ரூ 2000 பணம் பெற்றுள்ளதும் தெரியவந்தது. சென்னையில் இருந்து நல்லமுத்துக்குமார் திருப்பதி சென்று வந்ததும் உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து அவர் கடத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மேலும் ஒரு திருப்பமாக நல்ல முத்துக்குமார் தூத்துக்குடியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் அவரை சல்லடை போட்டு தேடி வருகின்றனர். ஒரிரு நாட்களில் போலீசாரின் வலையில் நல்லமுத்துக்குமார் அகப்பட்டுவிடுவார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈழத் தமிழர்களை காப்போருக்கே ஓட்டு-ரஜினி ரசிகர்கள்


அரக்கோணம்: இலங்கை தமிழர்களை பாதுகாக்க உறுதிமொழி அளிக்கும் கட்சிக்கே வாக்களிக்கப் போவதாக ரஜினி ரசிகர் மன்றம் முடிவு செய்துள்ளது.

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள வாலாஜா, காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை பகுதி ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

அப்போது, இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்கவும் அங்கு அமைதி ஏற்படவும் நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கும் தேசிய கட்சிக்கும் அதோடு கூட்டணி அமைக்கும் மாநில கட்சிக்கும் ஆதரவு அளிப்பது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரஜினி மன்றத்தினரின் முடிவைத் தொடர்ந்து திமுகவினரும், காங்கிரஸாரும் அவர்களை சமாதானப்படுத்தி ஓட்டுக்களைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளனராம்.

இந்தத் தேர்தலில் ரஜினி எந்தப் பக்கமும் சாயாமல நடுநிலை வகிக்கும் நிலையில் ரசிகர்கள் கோதாவில் குதித்துவிட்டனர்

அடடா என்ன அழகு விமர்சனம்


அடடா என்ன செலவு என்று வைத்திருக்கலாம்! காட்சிக்கு காட்சி கலர்ஃபுல்! கதையும் அப்படியிருந்தால் சந்தோஷம் கிட்டியிருக்கும். 'கும் கும்' என்று படம் முழுக்க கும்மாங்குத்து விட்டுக் கொண்டேயிருக்கிறார் இயக்குனர் ஜெயமுருகன். அதையும் மீறி அவ்வப்போது வந்து ஒத்தடம் கொடுக்கிறது நிக்கோலின் கவர்ச்சி!

மருத்துவக் கல்லூரிக்குள் நடக்கும் கெமிஸ்ட்ரிதான் கதை. ஜெய் ஆகாஷ¨க்கு நிக்கோல் மீது முதல் பார்வையிலேயே காதல். இசை பிரியர்களான இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த, மத்திய அமைச்சரான ஆசிஷ், இந்த காதலுக்கு ஆசிட் ஊற்றுகிறார். இவர்தான் நிக்கோலின் அப்பா. இத்தனைக்கும் விபத்துக்குள்ளான நிக்கோலை ஆகாஷின் அப்பா சரத்பாபுதான் காப்பாற்றுகிறார். 'என்ன வேணும்னாலும் கேளுங்க. தர்றேன்' என்கிற ஆசிஷ், பெண் கேட்டு வரும் சரத்பாபு குடும்பத்தை வாசலிலேயே விரட்டி அடிக்கிறார். அந்தஸ்தும், அதிகாரமும் காதலுக்கு குறுக்கே நிற்க, ஜோடிகள் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.

ஒரு டிரெம்பட்டை வைத்துக் கொண்டு படம் முழுக்க ஊதிக் கொண்டே இருக்கிறார் ஆகாஷ் ஜெய். காலேஜ் கேம்பசுக்குள் அமர்ந்து நாலு கி.மீட்டருக்கு கேட்கிற மாதிரி விசில் அடித்துக் கொண்டே இருக்கிறார். காதலியை பார்க்கும் போதெல்லாம் கும் கும் என்கிறார். அதோடு சரி, வேணாம்னு ஒதுக்கிய மாமனாரை காலில் விழ வைக்கிற மாதிரி ஏதாவது செய்ய வேண்டாமோ?

ஒரு சீனில் கோல்டு மெடல் வாங்குகிறார் நிக்கோல். படிப்புக்காவாம்... அப்படியே கவர்ச்சிக்காக ஒரு மெடல் கொடுக்கலாம்! நின்றால் கவர்ச்சி. நிமிர்ந்தால் மிரட்சி. தெளிவாதான் போட்றாங்க ரூட்டை!

படத்தில் கருணாசும் இருக்கிறார். மத்திய அமைச்சருக்கு மெய்காப்பாளர்களாக வருகிற இருவரில் ஒருவர் சிட்டிபாபு. ஏனோ சீரியஸ் பாபுவாகிவிட்டார்.

அடடா என்ன அழகு என்ற ஒரே வரியை கொண்டு ஒரு பாடல் அமைத்திருக்கிறார்கள். அழகு! பாராட்ட வேண்டிய நபர் கிச்சாஸ். கண்களில் ஒத்திக் கொள்ள வைக்கும் ஒளிப்பதிவு. இன்னொருவர் தயாரிப்பாளர். கடலில் இறங்கிட்டோம். திமிங்கலமாக இருந்தாலும், தீனி போட்டுதானே ஆகணும் என்ற பாலிசிக்காரர் போலிருக்கிறது. அள்ளி அள்ளி இறைத்திருக்கிறார் பணத்தை.

திரைப்பட கல்லூரியில் பாடமாக இருக்க வேண்டிய படம். திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை இதை பார்த்தாவது தெரிந்து கொள்வார்கள் அல்லவா?

தனுஷா, ஜீவாவா? பாலாவின் புதுக் கணக்கு!


பாலாவின் நாலாவது சூலாயுதயுதமும் பலி போட்டுவிட்டது அவரது கடைசி பட Director தயாரிப்பாளரை. (முதல் மூன்று சூலாயுதங்கள், சேது, நந்தா, பிதாமகன். அந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் இப்போது எங்கே?) பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று அவர் தடுமாறிக் கொண்டிருக்கிற நேரத்தில், கவலையே படாமல் 'பள பள' ஆபிசுக்கு ஷிப்ட் ஆகியிருக்கிறார் பாலா. தி.நகரில் அமைந்திருக்கிறது இந்த புது ஆபிஸ்.

ரஜினியின் மகள் சௌந்தர்யாவிடம் அட்வான்ஸ் வாங்கியிருக்கும் பாலா, அடுத்த கதையை வேக வேகமாக தயாரித்துக் கொண்டிருக்கிறாராம். இதில் யாரை ஹீரோவாக்குவது என்ற பெரும் டிஸ்கஷன் ஓடிக் கொண்டிருக்கிறது. தனுஷ், அல்லது ஜீவா என்று இப்போதைக்கு முடிவு செய்திருக்கிறார்களாம். ஆனால், தனுஷோடு ஒப்பிட்டால் ஜீவாவின் கால்ஷீட் உடனே கிடைக்கும் என்பதால் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறார் ஜீவா. (தனுஷ் உடனே கிடைத்தாலும், ஆரம்பிச்சுடுவாரா பாலா? என்னவொரு நம்பிக்கை!)

ஒருகாலத்தில் பாலா அழைக்க மாட்டாரா என்று ஏக்கத்தோடு காத்திருந்த ஹீரோக்கள், ஆர்யாவின் 'ஐயோ பாவ' அனுபவங்களை நேரில் கேட்டிருப்பதால், அழைத்தாலும் போக அஞ்சுகிறார்களாம். ஒரு வருடத்திற்குள் படத்தை எடுத்து முடிச்சிருவாருன்னா, நான் தயார் என்கிறாராம் ஜீவா. உத்தரவாதம் கொடுக்கதான் ஒருவருக்கும் சக்தியில்லை!

Monday, March 23, 2009

என்.எஸ்.கிருஷ்ணன் - சி‌ரிக்க வைத்த சிந்தனையாளர்

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) பிறந்தது கன்னியாகும‌ரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசே‌ரி. அப்பா சுடலையாண்டி பிள்ளை, தாய் இசக்கியம்மாள். பிறந்த வருடம் 1908 நவ. 29 ஆம் நாள். ஏழு பே‌ரில் இவர் மூன்றாவது பிள்ளை. வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் படிப்பு தடைபடுகிறது.

என்.எஸ்.கே.-யின் ஆரம்ப நாட்கள் கடுமையானவை. காலையில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கிப் போடும் வேலை. பிறகு மளிகைக் கடைக்கு பொட்டலம் மடிக்க‌ச் செல்வார். மாலையில் நாடகக் கொட்டாயில் தின்பண்டங்கள் விற்பார். நாடகம் அவரை மிகவும் ஈர்த்தது. மகனின் விருப்பம் அறிந்த தந்தை ஒழுகினசே‌ரியில் நாடகம் போட வந்த ஒ‌ரி‌ஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிடுகிறார். சிறுவனின் நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது.

பாய்ஸ் நாடக கம்பெனியிலிருந்து டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபையில் சேர்கிறார் கிருஷ்ணன். அங்கிருந்து பால மீனரஞ்சனி சங்கீத சபை. பல நாடக கம்பெனிகள் மாறினாலும் அவருக்கு டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபையே மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.

ஒப்பந்தத்தை மீறி பால மீனரஞ்சனி சங்கீத சபையிலிருந்து வெளியேறி மீண்டும் ஸ்ரீ பால சண்முகனாந்தா நாடக சபையில் சேர்கிறார். இதனால் கோபமுற்ற பால மீனரஞ்சனி சங்கீதா சபை ஜெகன்னாத அய்யா, கிருஷ்ணன் மீது பணம் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் பொய்யாக புகார் தருகிறார். ஆலப்புழையில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கைது செய்யப்படுகிறார்.

இந்த முதல் கைதுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டார் கிருஷ்ணன். அந்த கைது தமிழ்நாட்டையே உலுக்கியது.

நாடகத்தில் பல ப‌ரீட்சார்த்த முயற்சிகளை கலைவாணர் மேற்கொண்டார். வில்லு‌ப் பாட்டை நாடகத்தில் முதன் முதலாக புகுத்தியவர் இவரே. தேசபக்தி நாடகத்தில் காந்தி மகான் கதை என்ற பெய‌ரில் வில்லு‌ப் பாட்டை சேர்த்து காந்தியின் மது அரு‌ந்தாமை கொள்கையை‌ப் பரப்பினார். இந்த நாடகத்தில் கலைவாணர் ராட்டையுடன் வரும் காட்சிக்காக நாடகம் தடைசெய்யப்பட்டது.

கிந்தனார் நாடகத்தில் பாகவதர் வேடத்தில் கலைவாணர் செய்யும் காலட்சேபம் பிரசித்திப் பெற்றது. அன்பே கடவுள் என்ற முகவுரையுடனே காலட்சேபம் தொடங்கும். இதில் கலைவாணர் எழுதிய ரயில் பாடல் குறித்து திராவிட நாடு பத்தி‌ரிகையில் கட்டுரை ஒன்று எழுதினா‌ர் அண்ணர். சாதி, மத ஏற்றத்தாழ்வை ரயில் இல்லாமல் செய்ததை அந்த பாடலில் குறிப்பிட்டிருந்தார் கலைவாணர்.

கரகரவென சக்கரம் சுழல
கரும்புகையோடு வருகிற ரயிலே
கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே
ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே
மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே.

நாடகத்தில் கலைவாணர் செய்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகம் போட்டிருக்கிறார். நாடக கம்பெனி ஏதேனும் நொடித்துப் போனால் கலைவாணருக்கு சேதி வரும். அவர் சென்று ஒரு நாள் நடித்துவிட்டு வருவார். அந்த நாடகம் கலைவாணர் நடித்தார் எனபதற்காகவே மக்களிடம் வரவேற்பை பெறும்.

கலைவாண‌ரின் திரை வாழ்க்கையை தொடங்கி வைத்த படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதி. எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமில்லாது பல ஜாம்பவான்களுக்கு அறிமுகப் படமாக அமைந்தது. எம்.‌ஜி.ஆர்., எம்.‌ஜி.சக்கரபாணி, டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா, எம்.வி.மணி, கே.வி.தங்கவேலு ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.

தனது முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை கலைவாணரே எழுதிக் கொண்டார். தமிழ் திரையில் நகைச்சுவைக்கென தனி ட்ராக் எழுதியவரும் அவரே. முதல் படம் சதிலீலாவதி என்றாலும் திரைக்கு முதலில் வந்த படம் மேனகா. இது கலைவாணர் நடித்து வந்த நாடகம். திரைப்படமாக எடுத்த போது நாடகத்தில் கலைவாணர் நடித்து வந்த சாமா அய்யர் வேடத்தை அவருக்கே அளித்தனர்.

சாமா அய்யர் கதைப்படி வில்லன். நாயகியை கடத்தி வந்து ஐயாயிரம் ரூபாய்க்கு விற்று விடுவார். அவருக்கு உடந்தையாக இருக்கும் தாசி கமலம், அவ‌ரிடமிருந்து பணத்தை அபேஸ் செய்ய சாமா அய்யரை மயக்கி பாட்டுப் பாடும் காட்சியும் படத்தில் உண்டு.

1935ல் எடுக்கப்பட்ட மேனகாவில் வில்லனாக காட்டப்பட்டவர் ஒரு அய்யர். ஆனால் இன்று...? அய்யர் என்றாலே அப்பாவிகள், அநீதியை கண்டு குமுறுகிறவர்கள். (அய்யர் என்றால் அக்மார்க் அம்மாஞ்சிகள் என்ற இன்றைய தமிழ் சினிமா கண்டுபிடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது தனியே ஆராயப்பட வேண்டிய ஒன்று).

பாரதியார் பாடல்கள் முதலில் திரையில் ஒலித்தது ஏவி.எம். தயா‌ரித்த படத்தில் என்று இன்றளவும் கூறப்படுகிறது. அந்த கருத்து தவறானது. திருப்பூர் சண்முகானந்தா டாக்கீஸ் தயா‌ரித்து ராஜா சாண்டோ இயக்கத்தில் கலைவாணர் நடித்த மேனகா திரைப்படத்தில்தான் முதல்முதலாக பாரதியார் எழுதிய வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி, வாழிய வாழியவே பாடல் ஒலித்தது.

திரைத்துறைக்கு வரும் முன்பே நாகம்மை என்பவருக்கும் கலைவாணருக்கும் திருமணம் நடந்தது. நாகம்மை அவரது உறவுக்காரர். நடிக்க வந்த பிறகு உடன் நடித்த டி.ஆர்.ஏ.மதுரத்தை காதலித்து இரண்டாவதாக மணம்பு‌ரிந்து கொண்டார். (மதுரத்துக்குப் பிறந்த குழந்தை இறந்த பிறகு மதுரத்தின் சம்மதத்துடன் அவரது தங்கை வேம்புவை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்). கிருஷ்ணன், மதுரம் ஜோடி திரையில் புகழ்பெறத் தொடங்கியது.

தனது முதல் திருமணத்தை மறைத்தே மதுரத்தை திருமணம் செய்து கொண்டார் கிருஷ்ணன். இது தெ‌ரிய வந்த பிறகு கிருஷ்ணனுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தார் மதுரம். தியாகராஜ பாகவத‌ரின் அம்பிகாபதி படத்தில் இருவரும் நடித்திருந்தாலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் இந்த‌ப் பி‌ரிவு அதிகநாள் நீடிக்கவில்லை. இருவரும் தனித்தனியாக நடித்தப் படங்கள் அவ்வளவாக வரவேற்பு பெறாததை உணர்ந்தவர்கள் மீண்டும் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர்.

கலைவாண‌ரின் திரை ஆளுமையை வடிவமைத்ததில் பெ‌ரியாருக்கும், பா.‌‌ஜீவானந்தத்துக்கும் பெரும் பங்குண்டு. ‌ஜீவானந்தம் கலைவாண‌ரின் நெருங்கிய நண்பர். பெ‌ரியா‌ரின் பிராமணருக்கு எதிரான கட்டுரைகள் கலைவாண‌ரிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. தான் நடிக்கும் படங்களில் பகுத்தறிவு சிந்தனைகளை இயல்பாக சேர்த்துக் கொண்டார் கலைவாணர். பாகவத‌ரின் பக்திப் படமான திருநீலகண்டர் படத்திலும் கடவுளை கிண்டல் செய்யும் பாடலை இடம்பெறச் செய்தார்.

இந்த இடத்தில் முக்கியமாக ஒன்றை குறிப்பிட வேண்டும். சிலரது நகைச்சுவையை‌ப் போல் என்.எஸ்.கே.யின் நகைச்சுவை பிறரை காயப்படுத்துவதில்லை. ஹாஸ்யம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி எழுதிய அறிஞர் வ.ரா. “கிருஷ்ணன் பிறரைக் கேலி செய்யும் விதமே வினோதமாக இருக்கிறது. யாரை அவர் கேலி செய்து கிண்டல் பண்ணுகிறாரோ அவரும் சேர்ந்து சி‌ரிக்கும்படியான விதத்தில் கிருஷ்ணன் கேலி செய்கிறார். பிறருடைய உள்ளத்தை குத்திப் பிளப்பதில்லை. அவர் பிறருடைய உள்ளத்தை வி‌ரிய‌ச் செய்கிறார்.” என்று எழுதுகிறார்.

1944 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மோசமான வருடம். 1944 நவ. 27 கலைவாண‌ரின் இரண்டாவது கைது நடந்தது. இந்துநேசன் பத்தி‌ரிகையாசி‌ரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தொடர்பாக கலைவாணரும், தியாகராஜ பாகவதரும் வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர். லட்சுமிகாந்தனின் இந்துநேசன் ஒரு மஞ்சள் பத்தி‌ரிகை.

பிரபல நட்சத்திரங்களை பற்றி கற்பனையான கிசுகிசுக்களை எழுதி பத்தி‌ரிகையை நடத்தி வந்தார் லட்சுமிகாந்தன். அவரது பேனா கொடுக்குக்கு இரையாகாமல் இருக்க பலரும் அவருக்கு பணம் கொடுத்து வந்தனர். கலைவாணர் பணம் கொடுக்க மறுத்தார். கலைவாணர் பற்றியும் பாகவதர் குறித்தும் தனது பத்தி‌ரிகைகளில் கற்பனையான பல கதைகளை எழுதி வந்தார் லட்சுமிகாந்தன்.

தங்களது நிரபராதித்துவத்தை நிரூபிக்க கலைவாணருக்கும், பாகவதருக்கும் பல வருடங்கள் பிடித்தது. சிறை மீண்டபின் பழைய உற்சாகத்துடன் திரை வாழ்க்கையை‌த் தொடங்கினார் கலைவாணர். கே‌ரி கூப்பர் நடிப்பில் வெளிவந்த டெட்ஸ் கோஸ் டூ டவுன் படத்தை நல்லதம்பி என்ற பெய‌ரில் மதுரம், எஸ்.வி.சகஸ்ரநாமம், பானுமதி ஆகியோருடன் இணைந்து தயா‌ரித்தார். அண்ணா படத்தின் திரைக்கதையை எழுதி‌க் கொடுத்தார்.

இந்தப் படத்துக்குப் பிறகு கலைவாணருடன் அண்ணாவுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. கலைவாணர் வாங்கிக் கொடுத்த காரை அவர் திருப்பி அனுப்பினார். கலைவாணர் இயக்கிய முதல் படம் மணமகள். இன்றைய முதல்வர் கருணாநிதி படத்துக்கு வசனம் எழுதினார். நாட்டிய‌ப் பேரொளி பத்மினி அறிமுகமானதும் இந்தப் படத்தில்தான். கலைவாணர் இயக்கிய இன்னொரு படம் பணம்.

சொந்தமாக படம் தயா‌ரிக்கத் தொடங்கிய பிறகு கலைவாணருக்கு வாய்ப்புகள் குறைந்தன. செலவு இருமடங்கானது. ஆனாலும், கலைவாணரைத் தேடி உதவி பெற்று செல்கிறவர்கள் குறையவில்லை. தன்னிடம் இல்லாதபோது பிற‌ரிடம் கடன் வாங்கி உதவிகளை‌த் தொடர்ந்தார். இறுதிவரை அவரது உதவி செய்யும் குணத்தை தோல்விகளால் தடுக்க முடியவில்லை.

ஐம்பது வயதிற்குள் இதே புகழுடன் இறந்துவிட வேண்டும் என்று மதுரத்திடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் கலைவாணர். அதே போல் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி தனது 49வது வயதில் மரணத்தை தழுவினார் கலைவாணர்.


ஒரு கலைஞனை எங்ஙனம் நினைவுகூர்வது என்பது இன்னும் நமக்கு கைவரப் பெறவில்லை. அவனது ஆளுமையின் சாராம்சத்தை புதிய தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் நமக்கு எப்போதும் தோல்வியே ப‌ரிசாகியுள்ளது. கலைஞனை, அவனது ஆளுமையை ஒரு பொருட்டாக மதிக்காததின் விளைவுகள் இவை என்ற பு‌ரிதலும் நமக்கில்லை.

பிறந்தநாள் அன்று நினைவுக்கூட்டம், ஒரு நினைவுச்சின்னம், அதிகபட்சம் தபால்தலை என நமது சடங்குகள் ஒரு வட்டத்தைவிட்டு வெளியேறியதில்லை. கலைவாணரும் இந்த வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளார்.

கலைவாணர் என்றதும் அவரது சிந்திக்க வைக்கும் சி‌ரிப்புக்கு முன்னால் நினைவுக்கு வருவது அவரது வள்ளல் குணம். பெரும்பாலான கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பிறருக்கு உதாரணமாக இருப்பதில்லை. கலைவாணர் விதிவிலக்கு.

“என்னிடம் வந்து சேரும் பணத்துக்கும், பணக்காரர்களிடம் வந்து சேரும் பணத்துக்கும் வித்தியாசம் உண்டு. என் பணம் ஏழைகளுக்கு உதவும், பணக்காரர்களின் பணம் ஏழைகளை உறிஞ்ச‌த்தான் உதவும்.” சொன்னது போலவே வாழ்ந்து காட்டினார். அதுதான் கலைவாணர்.

இந்த உதாரண குணத்தை இளைய தலைமுறை அறிய செய்திருக்கிறோமா என்றால் இல்லை. பா‌ரியையும், கோ‌ரியையும் பள்ளியில் சொல்லிக் கொடுப்பது நல்லதுதான். அத்துடன் திருட வந்தவனை திருடன் என்று மனைவியிடம்கூட சொல்லாமல் தன்னுடைய நாடகத்தில் வேலை பார்ப்பவன் என்று கூறி அவன் தேவைக்கு பணம் கொடுத்து உதவிய கலைவாணரையும் சொல்லிக் கொடுப்பதுதானே நியாயம்.

மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும்போதும், கட்டுகட்டாக பணம் வைத்துச் சென்ற எம்.‌ஜி.ஆ‌ரிடம், சில்லரையாக வைத்தால் இங்கிருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பேனே என்று சொன்னவ‌ரின் கதை சிறார்களிடம் பதிய வைக்க வேண்டிய ஒன்றல்லவா.

சிறைக்கு சென்றுவந்த பிறகுதான் பம்மல் சம்பந்த முதலியார் அவருக்கு கலைவாணர் என்ற பட்டத்தை அளித்தார். ஏன்? அவரது வள்ளல் குணத்துக்கு முன்னால் சிறையும் ச‌ரி, தண்டனையும் ச‌ரி மாசு கற்பிக்க முடியவில்லை. உங்களுடைய கொள்கை என்ன என்று ஒருமுறை கேட்டதற்கு சுயம‌ரியாதை என்று பதிலளித்தார் கலைவாணர். அவரது கொள்ளை சுயம‌ரியாதை என்றால் அவரது குணம் அன்பு செய்வது.

இந்த இரண்டின் பிரதிபலிப்புதான் அவரது நாடகங்களும், சினிமாவும். இதுதான் அந்த கலைஞனின் சாராம்சம்... நினைவுச்சின்னம், நினைவுத் தபால்தலை போன்ற மரபான சடங்குகளால் கௌரவிக்க முடியாத கலைவாணர் என்ற மாமனிதனின் சாராம்சம்.

களரி கற்கும் ஆசின்!


19 ஸ்டெப்ஸ் படத்துக்காக களரி சண்டையைக் கற்றுக் கொள்ளப் போகிறாராம் ஆசின்.

இந்தியில் பிசியாகி விட்ட ஆசின் தற்போது சல்மான்கானுடன் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அஜய் தேவ்கனுடனும் நடிக்கப் போகிறார்.

இதைத் தொடர்ந்து பரத் பாலா இயக்கத்தில் புதிய 19 ஸ்டெப்ஸ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஒரே நேரத்தில் ஆங்கிலம், தமிழ், ஜப்பான் ஆகிய மொழிகளில் உருவாக்குகின்றனர்.

இப்படத்தில் கமல்ஹாசன் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ஜப்பான் நாயகன் ஒருவரும் படத்தில் வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் ஆசின்.

கதைப்படி களரி தெரிந்த நாயகியாக வருகிறார் ஆசின். ஆனால் உண்மையில் களரி என்று எழுதிக் காட்டினால் படிக்க மட்டுமே தெரியுமாம் ஆசினுக்கு.

இதனால் படத்தில் கேரக்டர் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக களரி கற்கப் போகிறார் ஆசின். கேரளாவில் வந்து பயிற்சி மேற்கொள்ள விரும்பிய அவர் கோழிக்கோடு வந்து பிரத்யேக பயிற்சியில் ஈடுபடப் போகிறாராம்.

ஏ வெட்னஸ்டே படத்தின் தமிழ், தெலுங்குப் பதில் நீங்கள் கமலுடன் இணைந்து நடிக்கிறீர்களாமே என்று கேட்டால், அதெல்லாம் இல்லை, அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வரவில்லை என்கிறார் ஆசின்.

வேலைக்கார ரீமாசென் விழுந்து விழுந்து ஹோம் ஒர்க்!


ஆயிரத்தில் ஒருவனை முடித்துவிட்டு மும்பையில் ஓய்வெடுக்கிறார் என்றுதானே ரீமாசென்னை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? கொழந்தை இப்போ பண்ணிகிட்டு இருக்கிறது ரெஸ்ட் இல்லே, ஹோம் ஒர்க்! அட, மெய்யாலுமே ஹோம் ஒர்க்தான்! அடுத்ததாக இவர் விஷாலுடன் நடிக்கவிருக்கும் படத்தில் வேலைக்காரியாக நடிக்கிறாராம். இதற்காக நீங்கள் கொஞ்சம் இளைப்பதோடு, சற்றே களைப்பாகவும் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டாராம் இயக்குனர் திரு.

இதனால் வீட்டு வேலையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறாராம் ரீமாசென். படத்தில் இன்னொரு ஆச்சர்யமாக பிபாஷா பாசுவை நடிக்க கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே சச்சின் என்ற படத்தில் விஜயுடன் நடித்தவர் பிபாஷா. தமிழுக்கு சரிவராத முகம். ஆனாலும், பாலிவுட்டில் பிரபலமாக இருப்பதால், அவரோடு ஜோடி சேர வேண்டும் என்ற ஆசைப்படுகிறாராம் விஷால். இதற்காகவே வம்படியாக அவரை விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். சச்சினுக்கே 80 லட்சம் சம்பளம் கேட்டவர் இவர். அதுமட்டுமல்ல, படம் முடிகிற நேரத்தில் இன்னும் 20 லட்சம் கொடுங்க என்று அடம் பண்ணி வாங்கிக் கொண்டு போனார். அவரையா கேட்கிறீங்க என்று அதிர்ந்து போயிருக்கிறாராம் தயாரிப்பாளர்.

ஆனாலும், புள்ள ஆசப்படுது. போடலைன்னா கோவிச்சுக்கும் என்று விஷாலுக்காக வரிந்து கட்டிக் கொண்டு சம்பளம் பேசி வருகிறார்கள். பேரம் படியுமா? பிபாஷா மடியுமா?

எந்திரன், அரசியல், அப்புறம்....? ரஜினியின் இன்னொரு வேலை!


ஒரு பக்கம் எந்திரன். மறுபக்கம் அரசியல் பார்வை என்று பிசியாகவே இருக்கும் ரஜினிக்கு இன்னொரு வேலையும் முக்கியமாகவே இருக்கிறது. அது? தனது மகள் சௌந்தர்யாவின் கம்பெனிக்கு நல்ல இயக்குனர்களை தேடுவது. பிரச்சனையில்லாமல் அந்த படங்களை வெளிக் கொண்டு வருவது!

சமீபத்தில் வெண்ணிலா கபடிக்குழு படத்தை பார்த்து அந்த யூனிட்டை அழைத்து பாராட்டிய ரஜினி, அடுத்தடுத்த வாரத்தில் அப்படத்தின் இயக்குனர் சுசீந்திரனையும் அழைத்து தனியாக பாராட்டினார்.

இந்த அன்புக்கும் அக்கறைக்கும் கிடைத்த பரிசு என்ன? சுசீந்தரன் இயக்கத்தில் சௌந்தர்யா ரஜினி ஒரு படம் தயாரிக்கிறாராம். ரேணிகுண்டா என்ற படத்தை எடுத்துவரும் கம்பெனியிடம் இருந்து அடுத்த படத்திற்கான அட்வான்சை வாங்கியிருக்கும் சுசீந்திரன், ரஜினியின் அன்பு கட்டளைக்கும் தலை வணங்கியிருக்கிறார். ஆக்கர் ஸ்டுடியோவுக்கு ஒரு படத்தை இயக்குவதாக ஒப்புக் கொண்டிருக்கும் அவர், அதற்காக சௌந்தர்யாவிடம் இருந்து பெற்றுக் கொண்ட அட்வான்ஸ் பத்து லட்சம்! இந்த படம் சுசீந்திரனின் மூன்றாவது படமா? அல்லது சூப்பர் ஸ்டாரே கேட்டுக் கொண்டார் என்பதற்காக இதற்கு முன்பு அட்வான்ஸ் கொடுத்த கம்பெனியை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைப்பாரா? இதுதான் கோடம்பாக்கத்தை சுற்றி வரும் இப்போதைய கேள்வி

நயன்தாரா – அடுத்த அருந்ததி?


அருந்ததி படத்தின் வெற்றியைப் பார்த்து தெலுங்கு ஹீரோக்கள் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்கள். தமிழிலும் படத்தின் ஓபனிங் விநியோகஸ்தர்களுக்கு திருப்தியை அளித்திருக்கிறது.

அருந்ததியில் நடித்த பிறகு அனுஷ்காவின் மார்க்கெட் ஆந்திராவில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. கோடியை தொட்டிருக்கிறது அவரது சம்பளம். அது மட்டுமா...? வேட்டைக்காரனில் ஒப்பந்தமாகியிருக்கும் அவரை தங்களது படத்தில் நடிக்க வைக்க கரன்ஸியை கொட்ட தயா‌ரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்த ராக்கெட் வேக உயர்வைப் பார்த்து மற்ற ஹீரோயின்களும் அருந்ததி போன்ற ஹீரோயின் ஓ‌ரியண்ட் சப்ஜெக்டில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் கோடி ராமகிருஷ்ணாவின் அடுத்தப் படத்தில் நடிக்க நடிகைகளுக்குள் போட்டா போட்டி. அருந்ததியை இயக்கியவரல்லவா?

கோடி ராமகிருஷ்ணாவின் அடுத்தப் படத்தை எம்.எஸ்.ராஜு தயா‌ரிக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய முந்தையப் படமான தேவி உலக ஓட்டம் ஓடியது. போட்டிக்கு கேட்கவா வேண்டும்?

இந்த ரேஸில் மற்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளி நயன்தாரா முதலிடத்தை பிடித்திருப்பதாக ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் தெ‌ரி‌விக்கின்றன. நயன்தாரா தமிழ்நாட்டுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதால் தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் படத்தை ஒரே நேரத்தில் எடுக்கலாம். நயன்தாரா மற்ற நடிகைகளை முந்திக் கொண்டதற்கு இதுவும் ஒரு காரணமாம்.

டூ பீஸில் நடித்த நயன் அம்மன் போஸில்... ம், இந்த மாற்றமும் நல்லா‌த்தான் இருக்கு.

தெலுங்கில் வில்லனான ஆர்யா!


தமிழில் இப்போதுதான் பெரிய நடிகர்களின் பட்டியலில் சேர ஆரம்பித்திருக்கும் ஆர்யா, தெலுங்கிலும் இப்போது தனது இன்னிங்கஸைத் துவக்குகிறார். ஆனால் நாயகனாக அல்ல, பக்கா வில்லனாக.

தமிழில் அவர் நடித்த நான் கடவுள் தெலுங்கில் நேனு தேவுட்னி என்ற பெயரில் வெளியானது. இந்தப் படத்தில் ஆர்யாவின் தோற்றம், சண்டைக்காட்சிகளில் அவர் காட்டிய அசத்தல் வேகம் போன்றவை தெலுங்குப் படத் தயாரிப்பாளர்களின் பார்வையை இவர் பக்கம் திருப்பியுள்ளது.

விளைவு, நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புக்கள் குவிகிறதாம் ஆர்யாவுக்கு. ஆனால் ஹீரோவாக அல்ல, வில்லனாக.

இவற்றில் ஒன்று அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க, குணசேகர் இயக்கும் புதிய படம். இதில் பிரதான வில்லன் ஆர்யாதான்.

'நான் கடவுள் படத்தில் ஆர்யா நடிப்பு அருமை. அதைப்பார்த்துதான் அவரை ஒப்பந்தம் செய்தேன். இதில் ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு சமமாக, வில்லன் வேடமும் இருக்கும். இருவருக்கும் நடிப்பில் போட்டி நிலவும். படத்தின் முன்னேற்பாடு பணிகள் 8 மாதமாக நடந்தது. நேற்றுதான் ஷூட்டிங் தொடங்கினேன். ஆகஸ்டில் முடிகிறது. ஆர்யாவும் இன்னும் சில தினங்களில் ஷூட்டிங்குக்கு வந்துவிடுவார், என்றார் குணசேகர்.

ஆர்யாவுக்கும் இதில் ஏக குஷி. எந்த மொழி, ஹீரோவா வில்லனான்னு நான் பார்க்க மாட்டேன். நல்ல கேரக்டர் இருந்தா போதும். அப்படி ஒரு நடிகனா வரவே ஆசைப்படறேன் என்கிறார் ஆர்யா.

குட்... இப்படித்தான் சமர்த்தா இருக்கணும்!

'பன்ச்' மும்தாஜ்!


பன்ச் டயலாக் 'வியாதி' இப்போது மும்தாஜையும் தொற்றி விட்டது. ராஜாதி ராஜா படத்தில் அவரை பன்ச் டயலாக் பேச விட்டு அதகளம் செய்திருக்கிறார்களாம்.

வசனத்தை வாய் வலிக்கப் பேசுவது அந்தக் காலத்து ஸ்டைல். ஆனால் எதுகை மோனையோடு, காற்றில் கையையும், காலையும் விஸ்க் விஸ்க் என்று வீசி, பேக்ரவுண்ட் சவுண்ட் எபக்டுடன் பன்ச் வைத்துப் பேசுவது இந்தக் காலத்து ஸ்டைல்.

பன்ச் டயலாக்கை கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை. ஆனால் இன்று காதுகள் 'பங்சர்' ஆகும் அளவுக்கு பன்ச் டயலாக்குகளின் அட்டகாசம் அதிகரித்து விட்டது.

வழக்கமாக ஹீரோக்கள்தான் பன்ச் டயலாக் பேசுவார்கள். தெலுங்கில் ஹீரோயின்களும் கூட பேசுகிறார்கள். முதல் முறையாக தமிழில் மும்தாஜ் பன்ச் டயலாக் பேசியுள்ளாராம்.

ராஜாதிராஜா படத்தில் சைதை சைலஜா என்ற கேரக்டரில் வருகிறார் மும்தாஜ். இது வி்ல்லி கேரக்டர். பிறகு வசனத்தில் பன்ச் வைக்காவிட்டால் எப்படி..

தமிழ்ல்ல சொன்னா குத்து, இங்கிலீஷ்ல சொன்னா டெத்து என்பது உள்பட ஏகப்பட்ட பன்ச் டயலாக்குகளை படு கேஷுவலாக பேசி அசத்தியுள்ளாராம் மும்தாஜ்.

படத்தில் இவரது தங்கை வேடத்தில் வருகிறார் மீனாட்சி. நாயகன் ராகவா லாரன்ஸ்.

சுனேனா பிசியோ பிசி!


கை நிறையப் படங்களுடன் ரெஸ்ட் எடுக்கவே நேரம் இல்லாத அளவுக்குப் பிசியாகி விட்டாராம் சுனேனா.

காதலில் விழுந்தேனுக்காக தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தவர் சுனேனா. இப்போது மீண்டும் தெலுங்குக்குத் திரும்பிப் போக முடியாத அளவுக்கு தமிழில் பிசியாகி விட்டார்.

சுனேனா கையில் தற்போது கதிர்வேல், யாதுமாகி, மாசிலாமணி என நிறையப் படங்கள். இதனால் மாறி மாறி நடிக்க வேண்டியுள்ளதாம். ஓய்வு கிடைப்பது குதிரைக் கொம்பாக போய் விட்டதாம்.

சமீபத்தி்ல ஒரு வாரம் திடீர் ஓய்வு கிடைத்தது. உடனே ஹைதராபாத் பறந்து போய் அம்மா, அப்பாவுடன் படு ஜாலியாக விடுமுறையை செலபரேட் செய்தாராம்.

தற்போது புதிதாக சில படங்கள வந்துள்ளதாம். கதை கேட்டு வைத்துள்ளாராம். முடிவு செய்யவில்லையாம். மாசிலாமணி படத்தை கிட்டத்தட்ட முடிக்கப் போகிறாராம். அதன் பின்னர்தான் புதுப் படங்களை ஒப்புக் கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.

குப்பிக்கு பிறகு குவாட்டர்ஸ்! அதிரடி இயக்குனரின் அடுத்தப்படம்...

ஒரே நேரத்தில் சோனியா காந்தியின் பாராட்டையும், பிரபாகரனின் பாராட்டையும் பெற்றவர் ஏஎம்ஆர் ரமேஷ்! ராஜீவ்காந்தி கொலைக்கு பிறகு தப்பியோடிய சிவராசன்-சுபா ஓட்டத்தையும் என்கவுன்டரையும் 'சைனைடு' என்ற தலைப்பில் படமாக்கியிருந்தார் ரமேஷ். தமிழில் 'குப்பி' என்ற பெயரிலும் இந்த படம் வெளிவந்தது. இதுபோன்ற உண்மை சம்பவங்களை படமாக்குவது ரமேஷ¨க்கு அல்வா சாப்பிடுவது மாதிரி சுவையானது போலும்! அடுத்து இவர் இயக்கவிருக்கும் படம் போலீஸ் குவாட்டர்ஸ்.

1992 ம் வருடம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நாடெங்கும் எழுந்த கலவரத்தையும், அப்போது பெங்களுரு போலீஸ் குவாட்டர்சில் தங்கியிருந்த ஒரு காதல் ஜோடிக்கு ஏற்பட்ட பிரச்சனையையும் சொல்லப் போகிறதாம் இந்த படம். பெங்களுருவில் நடைபெறவிருக்கும் இப்பட துவக்கவிழாவில் கர்நாடகாவை சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகள் அத்தனை பேரும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

குப்பிக்கு பிறகு இவர் இயக்குவதாக இருந்த சந்தன வீரப்பனின் கதை என்னவாயிற்று என்றோம் ரமேஷிடம். அந்த எண்ணம் இன்னும் அப்படியேதான் இருக்கு. ஆனால், அதற்கு நிறைய பணம் செலவாகும் போல் தெரிகிறது. இடையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் இந்த படத்தை எடுக்கக் கூடாது என்று இரண்டு வழக்குகள் போட்டுவிட்டார். அதனால் இப்போதைக்கு போலீஸ் குவாட்டர்ஸ் படத்தை முடித்துவிட்டு பிறகு யோசிக்கலாம் என்றார் ரமேஷ்!

தமிழில் 'காவலர் குடியிருப்பு' என்ற பெயரில் வரும், அப்படிதானே ரமேஷ்?

மேடையேறிய வைரமுத்துவின் வாரிசு தமிங்கிலீஷில் தாஸ் பூஸ்...!


புலிக்கு பிறந்தது புலியாகவே இருக்கட்டும், அதற்காக சபை நாகரிகம் வேண்டாமா? என்று கொந்தளிக்கிறார்கள் ஒரு கவி வாரிசை பார்த்து! பிரபல பத்திரிகையாளர் பிரகாஷ் எம் ஸ்வாமி அமெரிக்காவின் 'எம்மி' விருது கமிட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த கமிட்டிக்கு தேர்வு செய்யப்படும் முதல் இந்தியர் இவரே!

தலைகால் புரியாத சந்தோஷத்தோடு ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். நடிகர் சங்கம் சார்பாக சரத்குமார், ராதாரவி, மற்றும் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.வி.சேகர் சுதா ரகுநாதன், மாதேஷ் போன்ற விவிஐபி களும் வந்திருந்தார்கள். முக்கிய விருந்தினராக இந்தியாவின் அமெரிக்க தூதர் அலெக்சாண்டர் சிம்கினும் வந்திருந்தார்.

நிகழ்ச்சியை பாஸ்கி தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். சற்று தாமதமாக சில துணையாட்களுடன் வந்திருந்த கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் கபிலன், நேராக மேடைக்கு சென்று பிரகாஷ் எம் ஸ்வாமிக்கு கதராடை போட்டுவிட்டு அமர்ந்தார். அவரை பேச அழைத்த போதுதான் ஏன்தான் அழைத்தார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டது பார்வையாளர்களுக்கு! நிகழ்ச்சித் தொகுப்பாளர் பாஸ்கியிடம், 'வாட் இஸ் யுவர் நேம்?' என்றார். அவரும் தனது பெயரை சொல்ல, 'நான் கல்லூரியில் படிக்கும்போது நீங்க வந்திருந்தீங்க. அப்போதிலிருந்து இப்படிதான் பேசிட்டு இருக்கீங்க. நிறைய மாறணும்' என்று அட்வைஸ் பண்ண, 'பேஸ்த்' அடித்தது பாஸ்கியின் முகத்தில்!

அப்படியே தூதர் பக்கம் திரும்பியவர், 'தேர்தல் என்றால் என்ன?' என்றார். அவரும் ஏதோ விளக்கம் சொல்ல, நானும் சிட்னியில்தான் படிச்சேன். நான் படிச்ச மீடியா ஸ்டடியில் இப்படி சொல்லவே இல்லையே என்றார். (நல்லவேளையாக அவருக்கு அட்வைஸ் ஒன்றும் இல்லை) சரக்கென்று சரத்குமார் பக்கம் திரும்பி, உங்களுக்கு அரசியல் எதிர்காலம் உங்க மனைவியால்தான் அமையும் என்றார். வரவர பத்திரிகைகளின் தரம் தாழ்ந்துவிட்டது என்று அடிஷனல் குண்டையும் தூக்கி போட்டுவிட்டு கீழே இறங்கினார். இவர் பேசியதை கூட மன்னித்துவிடலாம். ஆனால், அவ்வளவு பெரிய கவிஞரின் பிள்ளை தமிங்கிலீஷில் பேசியதுதான் தாங்கலே சாமி என்றார்கள் பார்வையாளர்கள்.

கபிலன், அப்பா சொல்லிக் கொடுத்ததை கடைபிடிங்க. நல்ல விஷயம். அப்படியே அய்யன் சொன்னதையும் கேளுங்க, 'அடக்கம் அமரருள் உய்க்கும்...'

சாதனா சம்மான் வைரமுத்து! கவிப்பேரரசுக்கு மேலும் ஒரு மரியாதை!


கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு விருதுகள் புதிதல்ல, இப்போது மேலும் ஒரு விருதாக சாதனா சம்மான் விருதினை பெற்றிருக்கிறார் அவர். கொல்கத்தாவில் உள்ள இந்திய மொழிக்கழகத்தின் சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. பாரதிய பாஷா பரிஷித் என்ற பெயரில் இயங்கி வரும் இந்த கழகம் ஆண்டுதோறும் 14 மொழிகளில் சிறந்து விளங்குவோரை தேர்வு செய்து விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தமிழுக்கான விருது வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது.

51 ஆயிரம் ரூபாய்க்கு பொற்கிழி, பாராட்டு பத்திரத்தோடு, இவரது படைப்புகளை பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுகிற நல்ல விஷயத்தையும் இந்த அமைப்பே செய்யும் என்பதுதான் மகிழ்ச்சியான செய்தி. கொல்கத்தாவில் ஏப்ரல் 18 ந் தேதி நடைபெறும் விழாவில் நேரடியாக இந்த விருதினை பெறுகிறார் கவிஞர். இந்திரா பார்த்தசாரதி, சிவசங்கரி, ஜெயகாந்தன் ஆகிய எழுத்தாளர்கள் ஏற்கனவே இந்த விருதினை பெற்றிருக்கிறார்களாம்.

தமிழுக்கு செம்மொழி பெருமையை முதல்வர் கருணாநிதி பெற்று தந்திருக்கும் காலப்பொழுதில், இந்த விருதை தமிழ் படைப்பாளிகளுக்கு வங்காள மண் வழங்கியிருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். மகாகவி தாகூர் பிறந்த இலக்கிய மண்ணில் இந்த விருதை பெறுவதில் பெருமைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

Sunday, March 22, 2009

ஆரவார அருந்ததீ


டப்பிங் படங்கள் - அதிலும் தெலுங்கிலிருந்து டப் செய்யப்படும் படங்கள் வரவேற்பை பெறுவதில்லை என்ற வருத்தத்தை துடைத்திருக்கிறது அருந்ததீ.
கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா நடித்த இந்தப் படம் தெலுங்கில் ஐம்பது கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது (அங்கு இதன் பெயர் அருந்ததி. தமிழில் தீ ஆகியிருக்கிறது). அருந்ததீயை ராம. நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

நேற்று வெளியான இந்தப் படம் தமிழகம் முழுவதும் பெ‌ரிய படங்களுக்கு நிகரான வசூலை‌ப் பெற்று ஆச்ச‌ரியப்படுத்தியிருக்கிறது. படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் மிரட்டலாக அமைந்துள்ளதும், ஆவியின் அமானுஷ்ய அட்டகாசங்களும் ரசிகர்களை பெ‌ரிதும் கவர்ந்திருக்கிறது.

தற்சமயம் ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் ஆவிகளைப் பற்றிய யாவரும் நலம் படமே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்போது அருந்ததீ யாவரும் நலத்துடன் இணைந்திருக்கிறது.

இவ்விரு படங்களும் அமானுஷ்ய படங்களுக்கான மார்க்கெட்டை மீண்டும் தூசு தட்டியிருக்கின்றன.

ஜாமீனில் விடுதலையாக மறுத்த சீமான் - மேலும் 15 நாள் காவல்



புதுச்சேரி: ஜாமீனில் விடுதலையா இயக்குநர் சீமான் மறுத்து விட்டார். இதையடுத்து அவரது சிறைக் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இயக்குனர் சீமான் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி கொளஞ்சியப்பன் முன்பு அவர் ஆர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதி, அவரிடம் ஜாமீன் கேட்டுள்ளீர்களா என்று கேட்டார். அதற்கு சீமான் அது பற்றி விவாதிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து சீமானுக்கு வருகிற 2-ந் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

பாளையங்கோட்டை போலீசார் தொடர்ந்த வழக்கிலும் சீமானுக்கு நேற்றுடன் காவல் முடிந்தது. இதையடுத்து சீமானை கடலூர் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் பாளையங்கோட்டை 1-வது மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு)ஹேமா விசாரணை நடத்தி அவரது காவலை மேலும் 15 நாட்களுக்கு (ஏப்ரல் 3-ந்தேதி வரை) நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்த விசாரணை 40 நிமிடம் நடந்தது. பின்னர் அவர் மீண்டும் புதுச்சேரி ஜெயிலுக்கு கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டார்.

எனக்கும் இடம் கிடைக்கும் ..நிக்கோல்


தமிழ் சினிமாவில் எனக்கும் தனி இடம் கிடைக்கும் என்று அபார நம்பிக்கையுடன் கூறுகிறார் நிக்கோல்.

அடடா என்ன அழகு மூலம் தமிழுக்கு வந்துள்ளார் நிக்கோல். ஆனால் சினிமாவுக்கு இவர் புதிதல்ல. ஏற்கனவே கன்னடத்தில் 3 படங்களிலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்துள்ளார்.

அடடா என்ன அழகு படத்தில் ஜெய் ஆகாஷுடன் இணைந்து திறமை காட்டியுள்ளார். படத்தில் நிக்கோலின் கவர்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பாம்.

இதுகுறித்து நிக்கோல் கூறுகையில், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. படத்தை ரசிக்கும் ரசிகர்கள் என்னையும் வரவேற்று ரசிப்பது சந்தோஷமாக உள்ளது.

நடிப்பு என்றாலே அதில் கிளாமரும் அடக்கம். எனவே கிளாமராக நடிப்பீர்களா என்ற கேள்வியே தவறு. கிளாமாரகவும் நடிப்பேன். அப்படி நடிக்க நான் தயங்கவே மாட்டேன்.

தமிழ் சினிமாவில் எனக்கென்று ஒரு இடம் கிடைக்கும். அதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அடடா என்ன அழகு படத்தில் நடிக்க நான் மிகவும் சிரமப்பட்டேன். காரணம், அப்படிப்பட்ட காட்சிகள் என்கிறார் நிக்கோல்.

இப்படத்தில் இரண்டு பிகினி காட்சிகள், ஒரு செக்ஸி ரொமான்டிக் காட்சி என கவர்ச்சியில் பின்னியுள்ளார் நிக்கோல்.

கவர்ச்சி காட்சிகளில் நடிக்க தனி உடல் அமைப்பும், அழகும் வேண்டும். அது என்னிடம் உள்ளது. எனவே நடிக்கிறேன் என்கிறார் படு கூலாக.

இருப்பினும் உதட்டு முத்தம் கொடுத்து மட்டும் நடிக்க மாட்டாராம். அது அவரது அப்பாவுக்குப் பிடிக்காதாம். எனவே அதுபோன்ற காட்சிகளுக்கு மட்டும் நிக்கோலிடம் அனுமதி கிடைக்காதாம்.

அடுத்து தான் நடித்துள்ள ஆறு மனமே என்ற படத்தை எதிர்பார்த்திருக்கிறார் நிக்கோல். இப்படம் ஏப்ரலில் திரைக்கு வருகிறதாம். இப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக கலக்கியுள்ளாராம் நிக்கோல்.

நடிகர் சங்க தேர்தலில் போட்டி இல்லை: சரத்


வேறு பாதையில் போய்க் கொண்டிருக்கிறேன் - நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியில்லை: சரத்

வேறு பாதையில் போகத் தொடங்கி விட்டேன். இரட்டைக் குதிரையில் சவாரி செய்ய முடியாது. எனவே நடிகர் சங்கத் தேர்தலில் இனி போட்டியிட மாட்டேன் என நடிகர் சங்கத் தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.

நாமக்கல்லில் சனிக்கிழமை நடந்த நாடக, நடிகர் சங்க 64-வது ஆண்டு விழா நடந்தது. இதற்கு சரத்குமார் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.

நான் தற்போது வேறு பாதைக்கு சென்று கொண்டிருக்கிறேன். நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை, பளு அதிகமாகி விட்டது.

ஒரே நேரத்தில் 2 குதிரைகளில் பயணம் செய்ய முடியாது. எனவே, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் நான் நிற்க வேண்டும் என யாரும் என்னை வற்புறுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் சரத்.

விக்னேஷின் சில்மிஷம் : நாயகியை காப்பாற்றிய வில்லன்


ஒரு படம்கூட உருப்படியா ஓடியதில்லை ஆனா விக்னேஷ் செய்யும் அலும்பு தாங்கமுடியலப்பா...." என சலித்துக்கொள்கின்றனர் 'ஈசா' படத்தில் பணிபுரியும் சிலர்.
என்னதான் எண்ணெய்ய தேய்ச்சுட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும் என்பது விக்னேஷூக்கு ரொம்பவே பொருந்தும். வெற்றிப்பட நாயகனாகிவிடலாம் என்ற ஆசையில் அவ்வப்போது சில படங்களில் நடித்துவரும் அவருக்கு ஒரு படமும் கைக்கொடுப்பதில்லை. அவரது நம்பிக்கையின் லிஸ்டில் அடுத்து வரவுள்ள படம் 'ஈசா'. இதில்அவருக்கு ஜோடியாக லக்ஷனா நடிக்கிறார்.

பூஜை போட்ட நாளிலிருந்தே நாயகி மீது நாயகனுக்கு ஒரு கண். சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் லக்ஷனாவிடம் வழிந்திருக்கிறார் விக்னேஷ். ம் ஹூம் லக்ஷனா கண்டுகொள்ளவே இல்லையாம். இந்நிலையில்தான் 'ஈசா' லொகேஷன் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டது. அவுட்டோர் ஷூட்டிங் தனது திட்டத்திற்கு பொருத்தமாக இருக்கும் என கணக்கு போட்டார் நாயகன்.

ஒரு நாள் நாயகியின் கன்னத்தை நாயகன் கடிப்பதுபோன்ற காட்சி படமானது. அப்போது நிஜமாகவே லக்ஷ்னாவின் கன்னத்தை பதம் பார்த்துவிட்டாராம் விக்னேஷ். டென்ஷனான நாயகி 'இவரோட இனி நடிக்க மாட்டேன்' என மூட்டையை கட்டியுள்ளார். அப்புறம் சமாதானப்படுத்தியபிறகு படப்படிப்புக்கு ஒத்துழைத்திருக்கிறார்.
அப்போதும் தீராத மோகத்தில் இருந்த விக்னேஷ், சமீபத்தில் லக்ஷனா தங்கியிருந்த ஹோட்டல் அறையில் நள்ளிரவு நுழைந்து பலாத்காரம் செய்வதுபோல நடந்துகொள்ள அரண்டு போய்விட்டார் லக்ஷ்னா.

நாயகியின் கூச்சல்கேட்டு ஓடிவந்த வில்லன் நடிகர் ராஜேந்திரன் விக்னேஷின் பிடியிலிருந்த லக்ஷனாவை மீட்டுள்ளார். மறுநாள் லக்ஷ்னா அங்கிருந்து கிளம்பினார். அப்போதும் அவர் தங்கியிருந்த அறை வாடகையை தர மறுத்துள்ளார் விக்னேஷ். (தயாரிப்பாளர் சார்பாக புரொடக்ஷ்ன் வேலையும் பார்த்து வந்துள்ளார்) ஹோட்டல் நிர்வாகமோ, கம்பெனி பெயரில்தான் அறை புக் செய்யப்பட்டுள்ளதாக கூறி பணத்தை கேட்டுள்ளனர்.

அவர்களிடம் விக்னேஷ் மறுக்கவே ஹோட்டல் ஊழியர்கள் விக்னேஷை தூக்கிச்சென்று சிறைவைத்து போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டனர். சிபாரிசுகளின் பேரில் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார் விக்னேஷ்.

ஏதாவது பேசி உள்ளே போய்டாதே..! கணவரை எச்சரித்த ரோஜா!!


இப்போதெல்லாம் என்ன பேசினாலும் உடனே உள்ளே தூக்கிப் போடுகிறார்கள். இருந்தாலும் சொல்கிறேன், பிரபாகரன் என்ற பெயரை தமிழர் இதயங்களிலிருந்து யாராலும் அழிக்க முடியாது என்றார் இயக்குநர் ஆர்கே செல்வமணி.

விஜய்காந்த் நடித்த மரியாதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது:

இந்த விழாவுக்கு வரும்போது, என் மனைவி சொல்லி அனுப்பினாள், 'நீ ஏதாவது பேசி, உள்ளே போய்டாதே. தேர்தல் வேலை இருக்கிறது...' என்று.

இப்போதெல்லாம் எது பேசினாலும் உள்ளே போடுகிற நிலை உள்ளது. என்றாலும் சொல்கிறேன். தமிழர்களின் இதயங்களில் இருந்து 'கேப்டன், பிரபாகரன்' என்ற இரண்டு வார்த்தைகளை நீக்கவே முடியாது.

கேப்டன் பிரபாகரன் என்ற பெயரில் நான் படம் எடுத்தேன். அந்த படத்தின் டைட்டிலில் உள்ள 'கேப்டன்’ என்ற வார்த்தையும் ‘பிரபாகரன்’ என்ற வார்த்தையும் இன்று உலகையே கலக்குகின்றன. உலகத் தமிழர்களால் பெருமையாக நினைக்கப்படும் பெயர் பிரபாகரன்.

ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். எந்த எட்டப்பன் வந்தாலும் எங்க பிரபாகரனை அழிக்க முடியாது, என்றார் செல்வமணி.