Friday, March 20, 2009

தமன்னா... ரொம்ப ரொம்ப 'காஸ்ட்லிங்னா'!!


பிசினஸ் கிளாஸ் டிக்கெட், தினசரி சம்பளம் ரூ.10500... கதிகலங்கும் தயாரிப்பாளர்கள்!

கோடம்பாக்கத்தில் காஸ்ட்லி நடிகை என்ற 'நல்ல பெயரை'ப் பெற்றுவிட்டார் தமன்னா.

தமன்னாவுக்கு சம்பளம் பேசும் முன்பே அவரது மூன்று உதவியாளர்களுக்கும் சம்பளம் பேசிவிட வேண்டுமாம். இந்த மூன்று பேருக்கும் தினசரி சம்பளமாக ரூ.10,500 ஐ தயாரிப்பாளரிடம் இருந்து வசூல் செய்து விடுகிறாராம், தமன்னா.

கேடி படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமான தமன்னா, பாலாஜி சக்திவேலின் கல்லூரி படத்தின் மூலம் பிரபலமானார். அடுத்து தனுஷ் ஜோடியாக படிக்காதவன் படத்தில் நடித்தார். இப்போது நட்சத்திர அந்தஸ்து வந்துவிட்டது அம்மணிக்கு.

வரிசையாக 4 புதுப்படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. படத்துக்கு படம் தமன்னாவின் அந்தஸ்து, உயர்ந்து கொண்டே வருவது போல் அவருடைய சம்பளமும் உயர்ந்து வருகிறது.

லிங்குசாமி இயக்கும் பையா படத்தில் இருந்து நயன்தாரா விலகிக்கொண்டதும், தமன்னாவுக்கு ஒரு பெரிய தொகையை சம்பளமாக பேசி, ஒப்பந்தம் செய்தார்கள். தனது சம்பளத்துக்கு ஏற்ப, தனது உதவியாளர்கள் சம்பளத்தையும் உயர்த்தி விட்டார் தமன்னா.

தமன்னா தன்னுடன் 3 உதவியாளர்களை படப்பிடிப்புக்கு அழைத்து வருகிறார். அவர்களில் ஒருவர், ஒப்பனையாளர், இன்னொருவர், ஹேர் டிரெஸ்ஸர் (சிகை அலங்கார நிபுணர்), மற்றொருவர் டச் அப் உதவியாளர்.

இந்த மூன்று பேருக்கும் சேர்த்து தினசரி சம்பளமாக ரூ.10,500 ஐ தயாரிப்பாளரிடம் இருந்து வசூல் செய்து விடுகிறார், தமன்னா.

இதுபோக, மும்பையில் இருந்து தமன்னா விமானத்தில் வந்து போக, பிசினஸ் கிளாசில் 2 டிக்கெட்டுகள் கேட்கிறார். (அவருக்கும், அவருடைய தாயாருக்கும் சேர்த்து) இந்த செலவும் தயாரிப்பாளர் தலையில்தான் விழுகிறது. உணவு, தங்குமிடம் என சகலத்திலும் தமன்னாவுக்கு செய்வது போலவே அவர் தாயாருக்கும் செய்ய வேண்டுமாம்.

ஆனால் தொழிலில் தமன்னா தன்னை முழுமையாக ஒப்படைத்து விடுகிறாராம். நேரம் பார்க்காமல் இரவு-பகலாக நடித்தாவது வேலையை முடித்துக் கொடுத்துவிடுகிறாராம்.

அதனால்தான் அவர் கேட்கிற தொகையையும், வைக்கிற செலவையும் பல்லைக் கடித்துக்கொண்டு செய்துவிடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

தேர்தலில் போட்டியில்லை-ஹேமமாலினி


வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் திட்டம் ஏதுமில்லை என அக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரான நடிகை ஹேமமாலினி அறிவித்துள்ளார்.

டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

வரும் மக்களைத் தேர்தலில் பாஜக சார்பில் டெல்லி தொகுதியில் போட்டியிடுமாறு கட்சி நிர்வாகிகள் கூறினர். ஆனால் உண்மையில் எனக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணமோ விருப்பமோ கிடையாது.

ஆனால் பாஜக தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்வேன். இந்த தேர்தலில் பாஜக தான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். அத்வானி பிரதமராவார்.

பாஜக தொலை நோக்குத் திட்டங்களுடன் மக்களிடம் வாக்குக் கேட்டு வருகிறது. எனவே அந்தக் கட்சியை ஆதரியுங்கள் என்றார் ஹேமமாலினி.

சிறைக்குள்ளே சீமான்... ட்ரெய்லரை வெளியிடுவாராம், எப்படி?


என்ன ஒரு நம்பிக்கை? தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருக்கிறார் சீமான். இவரை விடுவிக்க கோரி போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கமும், அதனுள் அடங்கிய மதிமுகவும்! இந்நிலையில் 'சுப்ரமணியபுரம்' படத்தின் இயக்குனர் சசிகுமார் தயாரிக்கும் 'பசங்க' படத்தின் ஆடியோ ட்ரெய்லரை கமல்ஹாசன் வெளியிட, சீமான் பெற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தனது முதல் படமான 'மௌனம் பேசியதே' ஆடியோவை விழாவில் முக்கியமான இரண்டு கலைஞர்கள் கலந்து கொண்டால், அதுவே என் பாக்கியம் என்றார் அமீர். அப்போது இவர் புதுமுக இயக்குனர் என்பதால், அமீர் விரும்பிய கமல்ஹாசனையும், மணிரத்னத்தையும் அந்த விழாவில் கலந்து கொள்ள வைத்தார் தயாரிப்பாளர் ரகு!

குருநாதர் எப்படி கமல்ஹாசனை விரும்பினாரோ, அதே மாதிரி தனது சொந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியிருக்கிறார் சசிகுமார். சத்யம் திரையரங்க வளாகத்தில் வரும் 25 ந் தேதி இந்த விழா நடைபெற இருக்கிறது.

சேரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாண்டியராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். நிச்சயம், பசங்க ரசிக்கும்படி இருக்கும் இந்த பசங்க!

திருமணத்தைத் தள்ளிப் போட்டுவிட்டோம்! -கரீனா


இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கல்யாணம் என்ற பேச்சே இல்லை என்கிறார் கரீனா கபூர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூரும் நடிகர் சாயிஃப் அலிகானும் காதலித்து வருகிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் பலமான பேச்சு அடிபட்டது. இருவரும் சாயிஃப் தந்தை பட்டோடி முன்பாக மோதிரமும் மாற்றிக் கொண்டார்கள்.ஆனால், திடீரென்று திருமணத்தைத் தள்ளிப் போட்டுவிட்டதாக அறிவித்துள்ளார் கரீனா கபூர்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

நானும் சாயிஃபும் இப்போது திருமணத்துக்கு அவசரப்படவில்லை. திருமணம் செய்து கொண்டு நடிப்பு வாழ்க்கையின் அற்புதமான தருணங்களை இழக்க நாங்கள் விரும்பவில்லை. இப்போதைக்கு எனக்கு தூங்கக் கூட நேரமில்லை. அவ்வளவு பிஸி. திருமணம் கிட்டகிறது. கேரியர்தான் முக்கியம். இப்போது விட்டால் இந்த கணங்கள் திரும்ப வராது.

குறைந்தபட்சம் இன்னும் இரு ஆண்டுகளாவது நாங்கள் திருமணம் பற்றிச் சிந்திக்கும் மனநிலையில் இல்லை. திருணம் நடக்காவிட்டாலும், சாயிஃபின் தொழில் முன்னேற்றத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பேன் என்கிறார் கரீனா.

தெலுங்கு தேசத்துக்கு பிரச்சாரமா?-பூமிகா


தெலுங்கு தேசம் கட்சியில் நான் சேர்ந்து விட்டேன் என்று கூறுவது அப்பட்டமான வதந்தி. அக்கட்சிக்கு தேர்தலில் பிரச்சாரம் செய்யும் எண்ணம் ஏதுமில்லை என்று நடிகை பூமிகா சாவ்லா தெரிவித்துள்ளார்.

தமிழ்-தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பூமிகா. சமீபத்தில் இவர் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடந்த ரத்த வங்கி ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரை சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் வரவேற்றார். பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

இதையடுத்து பூமிகா தெலுங்கு தேசத்தில் சேர்ந்து விட்டதாகவும் அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்றும் செய்தி பரவியது. இந்நிலையில் ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பூமிகா கூறியதாவது:

எனக்கு சமூக சேவையில் ஆர்வம் அதிகம். அதனால்தான் நான் தெலுங்குதேசம் கட்சி நடத்திய ரத்த வங்கி விழாவில் கலந்து கொண்டேன்.

இதை வைத்து நான் தெலுங்குதேசத்தில் சேர்ந்து பிரசாரம் செய்யப் போவதாக வதந்தியை பரப்பி விட்டார்கள். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது.

எனக்கு சமூக சேவையில்தான் ஆர்வமே தவிர அரசியலில் இல்லை. இப்போதைக்கு என் லட்சியம் எல்லாம் சினிமாவில் நன்றாக நடித்து பெயர் எடுப்பதுதான். தெலுஙஅகு தேசத்தில் நான் இணைந்து விட்டதாக எனக்கு வேண்டாத சிலர்தான் வதந்தியை பரப்பி வருகிறார்கள், என்றார் பூமிகா.

தேர்தலில் 'ஜெய் ஹோ' தவறில்லை-ரஹ்மான்


ஆஸ்கர் விருது பெற்ற பாடலான ஜெய் ஹோவை மக்களவைத் தேர்தலில் பயன்படுத்துவதில எந்தத் தவறும் இல்லை. எனக்கு அது சந்தோஷமான விஷயம்தான் என ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருதை பெற்று தந்த 'ஜெய் ஹோ' பாடலை தங்கள் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது காங்கிரஸ் கட்சி. இதற்கென பெரும் விலை கொடுத்து இந்த பாடலின் உரிமையை டி சீரிஸ் நிறுவனத்திடமிருந்து காங்கிரஸ் கட்சி வாங்கி உள்ளது. நாடெங்கும் காங்கிரஸ் தலைவர்கள் பேசும் கூட்டங்களில் இப்பாடலை போடுகின்றனர்.

இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

'ஸ்லட்டாக் மில்லினர்' படம் இந்திய ஏழ்மையை அம்பலப்படுத்தும் படம். அதில் உள்ள விஷயங்கள் அனைத்தும் உண்மையே. நாட்டை அந்த நிலைக்குக் கொண்டு போய்விட்டது காங்கிரஸ். அந்த கட்சிதான் சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இந்திய மக்களை குடிசைகளிலேயே வைத்துள்ளது. ஆக இப் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைப்பதற்கு காரணமே காங்கிரஸ்தான். ஆனால் ரஹ்மானின் பாடல் இந்திய மக்களின் பொதுச் சொத்து. அதை காங்கிரஸ் மட்டும் உரிமை கொண்டாடுவது தவறு என விமர்சனம் செய்துள்ளது பாஜக.

இந் நிலையில் 'ஜெய் ஹோ...' பாடலை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவது பற்றி ரஹ்மானிடம் கருத்து கேட்டபோது,

ஜெய்ஹோ... பாடல் தனிப்பட்டவருக்கு சொந்தமானதல்ல எல்லோருக்கும் பொதுவானது. எல்லா இடங்களிலும் இப்பாடல் பயன்படுத்தப்படுகிறது. பேஷன் ஷோக்களில் போடுகின்றனர். சிங்கப்பூரில் நடந்த சில நிகழ்ச்சிகளிலும் இந்த பாட்டை பயன்படுத்தியுள்ளனர்.

தேர்தல் பிரசாரத்துக்கும் இந்த பாடலை கொண்டு போய் இருப்பது சந்தோஷமான விஷயம்தான். எந்தக் கட்சி பயன்படுத்தினாலும் சந்தோஷமே...

நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. யாருக்கும் தேர்தலில் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. வாக்காளர்கள் திறமையான வேட்பாளர்களை தேர்வு செய்து ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் ரஹ்மான்!.

சிரஞ்சீவிக்கு வாய்ஸ்... ரஜினியின் புதிய முடிவு?


'வாய்ஸ்' கொடுக்கிற விஷயத்தில் கட்டுசெட்டாக இருந்து வருகிறார் ரஜினி. எலக்ஷன் டைம் என்பதால், ஆளாளுக்கு 'பிரச்சாரத்துக்கு வா' என்று அழைக்கிறார்களாம். ஆந்திரா பக்கம் போய் சிரஞ்சீவிக்காக 'வாய்ஸ்' கொடுக்கலாமா என்று யோசித்து வருவதாக கொளுத்திப் போடுகிறது கோடம்பாக்கம்!

வாய்ஸ் மேட்டரில் எச்சரிக்கையாக இருந்தாலும், வாய்க்கு ருசியாக மெல்லுகிற விஷயத்தில் இப்போதெல்லாம் சிக்கனம் பிடிப்பதில்லையாம் சூப்பர் ஸ்டார். கடந்த மாதம் வேலூரில் எந்திரன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, 'ஆம்பூர் பிரியாணி நல்லாயிருக்குமே, ஏற்பாடு பண்ணுங்க' என்றாராம். அவ்வளவுதான்... நாலாபுறமும் ஓடி வாய்க்கு ருசியாக வாங்கி வந்து குவித்துவிட்டார்களாம்.

கதைப்படியே கொஞ்சம் சதை போட வேண்டியிருந்ததால், இறைச்சி விஷயத்தில் குறைச்சி சாப்பிட வேண்டாம் என்று முன்பே கூறிவிட்டாராம் ஷங்கரும்! இன்னொரு செய்தி, எந்திரனில் தலைவர் மூழ்கிவிட்டதால் சுல்தானை கண்டு கொள்வதில்லையாம். படத்தை சீக்கிரம் முடிக்க சொல்லி வார்னர் பிரஷர் கொடுக்கிறது. கால்ஷீட் கொடுக்க வேண்டிய ரஜினியோ, எந்திரனில்! கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் சௌந்தர்யா!

மகள் தயாரிக்கும் படமா இருந்தாலும், தலைவர் மனசு வச்சாதான் போலிருக்கு!

இனி கவர்ச்சி ரூட்டுதான்... மலையாள நடிகையின் மறுமலர்ச்சி!


நயன்தாரா போலிருக்கிறார் என்றெல்லாம் பாராட்டப்பட்ட பானு, தாமிரபரணி Banuபடத்திற்கு பிறகு தமிழ்நாட்டையே குளிர வைப்பார் என்று நினைத்தார்கள். அவரோ, அடுத்ததாக என்ன செய்யப் போகிறோம் என்றே தெரியாமல் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி, 'ரிச் கேர்ள்கள்' என்று கூறப்படும் மூன்றாம்தர நடிகை ஆகிவிட்டார்.

தமிழ் பட வாய்ப்புகள் முற்றிலும் மறுக்கப்பட்ட நிலையில், மலையாளத்தில் கவர்ச்சி காட்டவும் துணிந்துவிட்டாராம். (ஷகீலா ரேஞ்சுக்கு இருக்காது என்று நம்புவோமாக!) அச்சன் உறங்காத வீடு என்ற படத்தில் நடித்து வரும் இவருக்கு அந்த படத்தில் ஏராளமான குளியல் காட்சிகள் இருக்கிறதாம்! (பத்திரிகைகளுக்கு அட்டைப்பட பஞ்சம் குறையும்)

இதற்கிடையில், தன்னை அடித்து உதைத்ததாக போலீஸ் வரைக்கும் கம்ளைண்ட் கொடுத்தாரே ஒருவர் மீது. அது இவரது அப்பாவே இல்லையாம். 'அப்பா மாதிரி' என்கிறார்கள் கோலிவுட்டில்! இந்த பிரச்சனைக்கு பிறகு சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து தொல்லைகள் இல்லாததால் நிம்மதியாக இருக்கிறார்களாம் அம்மாவும் பொண்ணும்!

அமெரிக்காவில் ஒரு 'தமிழ் காதல்' பிளான் போடும் விளம்பரப்பட இயக்குனர்!


நாம் போயிருந்தபோது அமெரிக்காவுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் லேகா ரத்னகுமார். (ஆங்... லேகா சொனாட்டோன் ரத்னகுமாரேதான்!) இவர் புதிதாக தயாரித்து இயக்கவிருக்கும் படத்திற்காக லொக்கேஷன் பார்க்கதான் இந்த பயணம். படத்தின் 75 சதவீத போர்ஷன் அமெரிக்காவில்தான்! மீதியை குற்றாலத்தில் எடுக்க பிளான் பண்ணியிருக்கோம்.

சென்னையிலே நான் எடுக்கிற விளம்பர பட ஷ§ட்டிங்கிற்கெல்லாம், விருதுநகரிலிருந்துதான் ஆடு கோழியெல்லாம் வரும். சமையலும் அந்த ஊர் டேஸ்ட்லே இருக்கும். நல்லா சப்பு கொட்டி சாப்பிடுவோம், அலுப்பில்லாம வேலை பார்ப்போம். இப்போ படப்பிடிப்பை அமெரிக்காவிலே பிளான் பண்ணிட்டோம். ஆடு, கோழியெல்லாம் விருதுநகரிலிருந்து கொண்டு போக முடியாதே?

சாப்பாட்டிலேர்ந்து, 'ஷாட் கட்' சொல்ற வரைக்கும் ஷார்ப்பா பிளான் பண்ணணும் இல்லையா? அதுக்காகதான் இந்த 'ட்ரிப்' என்றார். கதையும் விருதுநகர் டேஸ்ட்லே இருக்குமா? என்றால், என்ன அப்படி கேட்டுட்டீங்க, வேணும்னா ஸ்கிரிப்டை படிங்கன்னு ஒரு புக்கை தூக்கி போட்டார். கதை வசனம் ரெடி! 'உன்னாலே உன்னாலே' மாதிரி அருமையான லவ் ஸ்டோரி! பேட்சுலர் பசங்களை எல்லாம், லேடீஸ் காலேஜ் வாசலில் நிக்க வைக்கிற மாதிரியான கதை என்றார்.

ஹீரோ, ஹீரோயின் யாரு? 'இவ்வளவு சொல்லிட்டேன், அதை சொல்ல மாட்டேனா? அமெரிக்கா போயிட்டு வந்திடறேன், வெயிட் ப்ளீஸ்' என்றார். காத்திருக்கோம்...

Thursday, March 19, 2009

15 லட்சம் கேட்டு மிரட்டுகிறார்கள்.. அசின்


என்னிடம் பணம் பிடுங்குவதற்கு முத்துக்குமாரும் அவனது தாயாரும் நாடகம் ஆடுகிறார்கள் என்று நடிகை அசின் கூறியுள்ளார்.

நடிகை அசினிடம் உதவியாளராக இருந்தவர், நல்ல முத்துக்குமார் (வயது 23). சில தினங்களுக்கு முன் இவர் மர்மமான முறையில் காணாமல் போய்விட்டார் என்றும், அசின் ரகசியங்கள் அவனுக்குத் தெரியும் என்பதால் அவனை எங்கோ மறைத்து வைத்துள்ளார்கள், எனவே உடனடியாக மீட்டுத் தரவேண்டும் என்றும் அவரது தாயார் சுடலை வடிவு, சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் ஒரு புகார் கொடுத்தார்.

இந்த புகார் மீது விசாரணை நடத்தும்படி, செங்குன்றம் போலீசாருக்கு புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார். அதன்படி அசினிடமும், அவருடைய தந்தை ஜோசப்பிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விவகாரம் பற்றி நடிகை அசின் கூறியுள்ளதாவது:


நடிகர் விஜய்யிடம் முத்துக்குமார் வேலை செய்து வந்தான். அவன், என்னுடைய தீவிர ரசிகர் என்றும், என்னிடம் வேலை செய்ய விரும்புவதாகவும் போக்கிரி படப்பிடிப்பின்போது கூறினான். என் அப்பாவும் அவனை வீட்டு வேலைக்கு சேர்த்துக் கொண்டார்.

என்னுடன் அடிக்கடி படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கு வருவான். எனக்கு மதிய சாப்பாடு அவன்தான் கொண்டு வருவான். என் தந்தை, அவனை சொந்த மகன் மாதிரி பார்த்துக் கொண்டார்.

எனக்கு இந்தி பட வாய்ப்புகள் வந்ததும், மும்பைக்கு வீட்டை மாற்றினோம். அப்போது, எனக்கு வேறு வேலை கிடைக்காது. நானும் உங்களுடன் வந்து விடுகிறேன் என்று முத்துக்குமார் கெஞ்சி கேட்டான். அய்யோ பாவம் என்று அவனையும் மும்பைக்கு அழைத்து வந்தோம்.

ரூ.3 லட்சம் செலவில் சிகிச்சை..:

அவனுக்கு தனியாக தங்கும் இடம் எடுத்துக்கொடுத்து, செல்போனும் வாங்கிக் கொடுத்தோம். சம்பளத்துடன், தங்கும் இடத்துக்கான வாடகை, செல்போன் செலவுகளையும் அப்பாவே ஏற்றுக் கொண்டார். என்னுடன் படப்பிடிப்புக்கு வருவதால், அவனுக்கு தினசரி பேட்டா கிடைத்தது. முத்துக்குமாருக்கு சம்பளத்தையும் சேர்த்து மாதம் ரூ.25,000 கிடைக்குமளவு செய்தோம்.

நான் சென்னையில் இருந்தபோதே, அவனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்திருந்தேன். அவன் மும்பைக்கு வரும்போது, மோட்டார் சைக்கிளையும் கொண்டுவந்து விட்டான்.

அந்த மோட்டார் சைக்கிளில் அவன் வெளியில் சென்றபோது, விபத்தில் சிக்கிக் கொண்டான். இரவு 10 மணிக்கு எங்களுக்கு தகவல் வந்தது. அந்த இரவோடு இரவாக போய் அப்பா அவனை மருத்துவமனையில் சேர்த்தார். அவனுக்கு கால் எலும்பு முறிந்துவிட்டதாகவும், மூன்று ஆபரேஷன்கள் செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறினார்கள். எல்லா செலவுகளையும் அப்பாவே ஏற்றுக் கொண்டார். ரூ.3 லட்சம் செலவானது.

முத்துக்குமாரின் அம்மாவை மும்பைக்கு வரவழைத்து, அவருக்கான செலவையும் நாங்களே ஏற்றுக்கொண்டோம்.

இந் நிலையில் நான், 'லண்டன் ட்ரீம்' படப்பிடிப்புக்காக வெளிநாடு போய்விட்டேன். மீண்டும் நான் மும்பை திரும்பியபோது, முத்துக்குமாருக்கு கால் சரியாகி விட்டது. கொஞ்ச நாட்கள் அவனை ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி டாக்டர்கள் கூறியிருந்தார்கள். ஓய்வுக்குப்பின் அவன் மீண்டும் எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்தபோது, பரிதாபப்பட்டு சம்பள உயர்வு கூடக் கொடுத்தோம்.

வியாபார திட்டம்!..:

சில நாட்கள் கழித்து, சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் கேண்டீன் நடத்தும் வாய்ப்பு வந்திருப்பதாக, எனது அப்பாவிடம் முத்துக்குமார் கூறினான். அவன் ஆசைக்கு குறுக்கே நிற்க வேண்டாம் என்று அப்பாவும், அவனுடைய சம்பளத்தை செட்டில் செய்து அனுப்பி வைத்தார். எங்கள் வீட்டில் இருந்து சந்தோஷமாக புறப்பட்டு போனான்.

மும்பையில் ஒரு சட்டம் இருக்கிறது. யாரையாவது வேலைக்கு சேர்த்தாலோ, அல்லது வேலையை விட்டு அனுப்பினாலோ, அதுபற்றி பக்கத்தில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். அதன்படி, முத்துக்குமார் வேலையை விட்டு போனபோது, போலீஸ் நிலையத்துக்கு தெரிவித்தோம்.

ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டினான்!..:

பின்னர் நான் படப்பிடிப்புக்காக காஷ்மீர் போய்விட்டேன். அந்த சமயத்தில், முத்துக்குமாரின் அம்மா, மும்பையில் உள்ள எங்க வீட்டுக்கு வந்திருக்கிறார். அவரிடம்,'உன் மகன் வேலையை விட்டு போய்விட்டான் என்று அப்பா சொல்லியிருக்கிறார். உடனே அந்த அம்மா சென்னைக்கு திரும்பி விட்டார்.

இந்த நிலையில், முத்துக்குமார் எனக்கு போன் செய்து, உடனடியாக ரூ.15 லட்சம் வேண்டும். கொடுக்காவிட்டால், நடப்பதே வேறு என்று மிரட்டினான். 'நீ எங்கே இருந்து பேசுகிறாய்?' என்று கேட்டதற்கு, சிவசேனா அலுவலகத்தில் இருந்து பேசுவதாகச் சொன்னான்.

நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. சின்னப் பையன் என்று விட்டு விட்டோம். முத்துக்குமார், ஒரு செலவாளி. அவன் மாதம் ரூ.25,000 சம்பாதித்தாலும், பத்து பைசா கூட சேமித்து வைக்கவில்லை. நண்பர்களிடம் கடன் வாங்குவதாகவும் எங்களுக்கு தகவல் வந்தது. ஊரிலும் அவனுக்கு கடன் இருப்பதாக கேள்விப்பட்டோம்.

அந்த கடன்களை அடைப்பதற்காகத்தான், எங்களை மிரட்டி இருக்கிறான். அவன் இருக்கும் இடம், அவனுடைய அம்மாவுக்கும் தெரியும். இரண்டு பேரும் சேர்ந்து, பணத்துக்காக நாடகம் நடத்துகிறார்கள் என்று கூறியுள்ளார் அசின்.

அலைகழிக்கும் காவல் துறை..:


இதற்கிடையே தனது மகன் நல்லமுத்துகுமார் மாயமானது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் புகார் தருவேன் சுடலை வடிவு கூறியுள்ளார்.

இவர் சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் கொடுத்த புகார் மனுவை அவர் செங்குன்றம் போலீசாரிடம் விசாரிக்கக் கொடுத்துள்ளார்.

இதை விசாரித்த செங்குன்றம் போலீசார் சுடலைவடிவின் வீடு சோழவரம் காவல் நிலைய எல்லைக்கு உள்ளே வருவதை 'கண்டுபிடித்து' சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி அனுப்பி வைத்துவிட்டனர்.

இதையடுத்து சோழவரம் காவல் நிலையத்தில் சுடலை வடிவு புகார் கொடுக்க சென்றபோது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் நசீர், இது சென்னை புறநகர் கமிஷனர் எடுக்க வேண்டிய நடவடிக்கை. என்னிடம் கொடுத்து என்ன பலன் என்று திருப்பி அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து சுடலை வடிவு, காவல் நிலைய எல்லை காரணமாக போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். என் மகனை கொலை செய்துவிட்டார்களா, அல்லது உயிருடன்தான் இருக்கிறானா என்று தெரியவில்லை. எனவே நான் தமிழக முதல்வரிடம் புகார் தரப் போகிறேன் என்றார்.

இல்லாத கதைக்கு எத்தனை சண்டை!!


சற்றே சுமாரான யாவரும் நலம் படத்தை, சூப்பர் ஹிட் படமாக்க வதந்திகளை உருவாக்கும் வேலைகளில் அதன் தயாரிப்பாளரும் நாயகனும் தீவிரமாக இறங்கிவிட்டார்கள் போலிருக்கிறது.

இந்தப் படத்தின் கதை (அப்படி ஒன்று இருக்கிறதா?!) கொண்டாடிக் கொண்டு இருவர் பலமாக மோதத் தொடங்கியுள்ளனர்.

இந்தியில் 13 பி என்ற பெயரில ரிலீசாகியுள்ள இந்தப் படத்தின் கதையை விக்ரம் குமார் எழுதியதாகக் கூறப்படுகிறது. ஆனால் சத்யப்பிரகாஷ் மாங்கதனி என்பவர், இந்தக் கதை தன்னுடையது என்றும், தனக்குத் தெரியாமல் காப்பியடித்து இந்தப் படத்தை எடுத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மாதவன், நீத்து சந்திரா நடித்துள்ள இந்தப் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக்குவதாக ஒரு செய்தியைக் கசிய விட்டார்கள். அதற்குப் பெரிதாக ரியாக்ஷன் இல்லை. உடனே கதை காப்பி, பேடன்ட் ரைட்ஸ் என அடுத்த கட்ட பரபரப்பைக் கிளப்பிப் பார்க்கின்றனர்.

இதுகுறித்து படத்தின் நாயகன் மாதவன் கூறுகையில், படத்தின் கதை இப்போது எழுதப்பட்டதல்ல என்றும் 5 ஆண்டுகளுக்கு முன்பே விக்ரம் குமார் எழுதிவிட்டார் என்றும், படம் பெரும் வெற்றி பெற்றுவிட்டதால் இப்போது சொந்தம் கொண்டாடி வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஹாலிவுட்டுக்குப் போகும் படம் என்பதால் மிரட்டி காசு பார்க்க இப்படிச் சொல்வதாக விக்ரம் குமார் கூறியுள்ளார்.

நல்லா சொல்றாங்கய்யா டீட்டெய்லு...!

பாலுமகேந்திராவின் சினிமா பட்டறை

காமிரா கவிஞர் இயக்குனர் பாலுமகேந்திராவின் நீண்ட நாள் கனவு வரும் ஏப்ரல் மாதம் நிறைவேற இருக்கிறது.

புனே திரைப்படக் கல்லூரியில் படித்த பாலுமகேந்திராவுக்கு படிப்பையும் சேர்த்து நாற்பது வருட சினிமா அனுபவம் உள்ளது. இந்த அனுபவம் இளைய தலைமுறைக்கு கிடைக்கும் விதமாக சினிமா பள்ளி ஒன்றை தொடங்க வேண்டும் என்பது அவரது ஆசை. அதற்காக சென்னை தசரதபுரத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் அனைத்து வசதிகளும் நிறைந்த பள்ளி ஒன்றை கட்டியிருக்கிறார்.

இந்த வளாகத்தில் சென்னை நகரத்திலேயே பிரமாண்டமான புளூமேட் ஸ்டுடியோவும் உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் பாலுமகேந்திரா சினிமா பட்டறை என்ற அந்த பள்ளி தனது பயணத்தை தொடங்குகிறது.

ஆக்டிங் கோர்ஸ், பிலிமிங் கோர்ஸ் என இரு பி‌ரிவுகளில் மாணவர்கள் இங்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஆக்டிங் கோர்ஸில் நடிப்பு சொல்லிக் கொடுக்கப்படும். பதினைந்து பேர் மட்டுமே இந்த கோர்ஸில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சி காலம் ஆறு மாதங்கள். பயிற்சி கட்டணம் அறுபதாயிரம் ரூபாய்.

திரைக்கதை, கேமரா, எடிட்டிங் என்று தனித்தனியாக‌‌த்தான் இதுவரை திரைப்பட கலை சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்தது. முதல் முறையாக இவை அனைத்தையும் பிலிமிங் கோர்ஸ் என்ற பெய‌ரில் கற்றுக் கொடுக்கயிருக்கிறார் பாலுமகேந்திரா. இதற்கான எடிட்டிங் கருவிகள், நவீன கேமராக்கள் என அனைத்து தொழில்நுட்பக் கருவிகளும் சினிமா பட்டறையில் உள்ளன. பதினெட்டு மாத கோர்ஸான இதற்கு கட்டணம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய்.

இரண்டு தளங்கள் கொண்ட இந்த பள்ளியில் பாடம் நடத்தப்படும் இடத்திலேயே படங்களை பார்ப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தனது சினிமா பட்டறை குறித்து உற்சாகமாக பேசினார் பாலுமகேந்திரா.

தமிழில் மிகச் சிறந்த படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக‌த்தான் இந்த சினிமா பட்டறையை தொடங்கியிருக்கிறேன். இங்கு சினிமா குறித்த அனைத்தும் சொல்லிக் கொடுக்கப்படும். இலக்கிய ப‌ரிட்சயம் உள்ளவர்களுக்குதான் முன்னு‌ரிமை கொடுப்பதென்று தீர்மானித்திருக்கிறேன்.

இந்த சினிமா பட்டறையில் நவீன இலக்கிய புத்தகங்கள் மட்டும் ஐந்தாயிரம் உள்ளது. உலகின் தலைசிறந்த திரைப்படங்களின் டிவிடிக்களின் எண்ணிக்கை மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வரும்.

இந்த சினிமா பட்டறையுடன் தமிழின் தனித்துவத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் பாடல்கள், சண்டைகள் போன்ற கமர்ஷியல் விஷயங்கள் இல்லாத படங்களை தயா‌ரித்து இயக்கும் திட்டமும் பாலுமகேந்திராவிடம் உள்ளது.

அவரது கனவுகள் நிறைவேறத் தொடங்கும் போது தமிழுக்கு நல்ல கலைஞர்களும், திரைப்படங்களும் நிச்சயம் சித்திக்கும்.

தமிழில் அஞ்சா நெஞ்சன்


பெயர் வைப்பதிலும் அரசியல் இருக்கிறது. சமீபத்தில் தமிழ்ப் படம் ஒன்றுக்கு அழகி‌ரி என்று பெயர் வைத்தனர். வீணாக பிரச்சனை எதற்கு என்று படத்தயா‌ரிப்பாளர் தயா‌ரிப்பாளர்கள் சங்கத்தால் அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து அழகி‌ரி பெயர் மாற்றப்பட்டது.

இந்நிலையில் முதல்வ‌ரின் மகன் அழகி‌ரியை தொண்டர்கள் அழைக்கும் அஞ்சா நெஞ்சன் அடைமொழியில் தமிழில் ஒரு படம் வெளியாகிறது. இதற்கு யாரும் தடை சொல்லவில்லை. காரணம் இது தாய்லாந்து நடிகர் டோனிஜா நடித்திருக்கும் படம்.

டோனிஜாவின் படங்கள் ஏற்கனவே தமிழில் டப் செய்யப்பட்டு சண்டைப் பி‌ரியர்களால் விரும்பிப் பா‌ர்க்கப்பட்டது. தாங்கள் புனிதமாக கருதும் யானையை சிலர் கடத்திவிட, அந்த யானையை மீட்க டோனிஜா போராடும் ஓங் பேக் உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பை பெற்றது. யானையின் எலும்புகளை வைத்து அவர் போடும் சண்டைக் காட்சிக்காகவே படம் பார்த்தவர்கள் அதிகம்.

பீமா உள்பட பல படங்களில் ஓங் பேக் படத்தில் வரும் டோனிஜாவின் சண்டைக் காட்சி பயன்படுத்தப்பட்டது. ஓங் பேக் கின் இரண்டாம் பாகத்தை டோனிஜாவே இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தை விஸ்வாஸ் பிலிம்ஸ் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வெளியிடுகிறது. தமிழில் படத்துக்கு அஞ்சா நெஞ்சன் என பெய‌ரிட்டுள்ளனர்.

ஏப்ரல் மூன்றாம் தேதி அஞ்சா நெஞ்சன் திரைக்கு வருகிறது.

ஜூலியட் பால்கனி வாடகை‌க்கு ‌கிடை‌க்கு‌ம் ரோ‌மியோ - ஜூ‌லிய‌ட்

காத‌ல் வரலா‌ற்‌றி‌ல் ‌நீ‌ங்கா இட‌ம் ‌பிடி‌த்த ரோ‌மியோ - ஜூ‌லிய‌ட் ஜோடிக‌ள் காதலை ப‌ரிமா‌றி‌க் கொ‌ண்ட பா‌ல்க‌னி த‌ற்போது ‌திருமண‌த்‌தி‌ற்காகவு‌ம், காத‌ல் ஜோடிகளு‌க்கு‌ம் வாடகை‌க்கு ‌விட‌ப்படு‌கிறது.

வெரோனாவில் உள்ள அந்த பால்கனியில்தான் உலகப் புகழ் காதல் ஜோடியான ரோமியோ - ஜூலியட் தங்கள் முதல் காதலை வெளிப்படுத்தினராம். அதன்மூலம் இன்று வரை சரித்திரத்தில் காதலுக்கு அர்த்தமாகிப் போன அவர்கள் பயன்படுத்திய பால்கனியை இப்போது திருமணங்கள் நடத்த வாடகைக்கு அளிக்க ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளன‌ர்.

ஆனா‌ல் வாடகை‌த் தொகையை‌க் கே‌ட்கவே மலை‌ப்பாக உ‌ள்ளது.

உள்ளூர்காரர்களுக்கு வாடகையில் சலுகை உண்டு. அவர்கள் ஒரு நாளுக்கு ரூ.39,800 கொடு‌த்தா‌ல் போதும். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஜோடிகளுக்கு வாடகை ரூ.52,800. உலகின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த காதல் ஜோடிகளுக்கு வாடகை ரூ.66,000 (கொஞ்சம் அதிகம்தான்...)

சு‌‌ற்றுலா‌ப் பய‌ணிகளை கவ‌ர்வத‌ற்காக இ‌ந்த ‌தி‌ட்ட‌த்தை வகு‌த்து‌ள்ளா‌ர்களா‌ம். இதன்மூலம் இத்தாலியின் சுற்றுலா அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்கிறார் நகர சுற்றுலாத் துறை தலைவ‌ர் டேனியல் படாலோ.

எங்கள் ஆசான்


நட்புக்கு விஜயகாந்த் அளித்த ம‌ரியாதைதான் எங்கள் ஆசான். தயா‌ரிப்பாளர் தங்கராஜுக்கு இதற்கு முன்பு தயா‌ரித்தப் படங்களால் பெருத்த நஷ்டம். அவருக்கு உதவும் வகையில் இருபது நாட்கள் கால்ஷீட் கொடுக்க முன்வந்தார் விஜயகாந்த். அப்படி தயாரானதுதான் எங்கள் ஆசான்.

படத்தை கலைமணி இயக்கியிருக்கிறார். நடிக்க ஆரம்பித்த பிறகு கலைமணியின் கதையில் இம்ப்ரஸான விஜயகாந்த் தனது இருபது நாள் கால்ஷீட்டை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டித்துக் கொண்டார்.

இதில் விஜயகாந்துக்கு வங்கி அதிகா‌ரி வேடம். வங்கியில் மக்களுக்காக ஒதுக்கப்படும் பணம் கையாடல் செய்யப்படுவதை கண்டுபிடிக்கிறார் விஜயகாந்த். வில்லனுக்கு எதிரான அத்தனை ஆவணங்களையும் சேக‌ரிக்கிறார்.

ஒருகட்டத்தில் வில்லனால் ஆவணங்கள் அழிக்கப்படுவதுடன், விஜயகாந்த் மீதே பழி போடப்படுகிறது. அதிலிருந்து விஜயகாந்த் எப்படி தப்பித்து, வில்லனுக்கு தண்டனை அளிக்கிறார் என்பதை சுவாரஸியமாக சொல்லியிருக்கிறார்களாம்.

விஜயகாந்துக்கு ஜோடியாக அவரது அரசாங்கம் படத்தில் அறிமுகமான ஜெ‌‌ரில் பி‌ரிண்டோ நடித்துள்ளார். படத்தில் இவருக்கு அரசியல்வாதி வேடம்.

படத்தில் விக்ராந்த், அ‌க்சயா ஜோடியும் உண்டு. இவர்களைத் தவிர சுஜாவும் நடித்துள்ளார். சபேஷ் முரளி இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு ஏ.வெங்கடேஷ்.

பாடல்களும், சண்டைக் காட்சிகளும் ஹைலைட்டாக இருக்கும் என தெ‌ரிவித்துள்ளார் இயக்குனர் கலைமணி. விஜயகாந்த் ஸ்பெஷல் அரசியல் வசனங்களும் படத்தில் தாராளமாக இடம்பெற்றுள்ளது.

இம்மாதம் 13 ஆம் தேதி வெளிவருதாக சொல்லப்பட்ட இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. கோடை விடுமுறைக்குமுன் படத்தை எதிர்பார்க்கலாம்.

மாணவனாக மாறிய ஆர்யா


தமிழில் மட்டுமே நடித்து வந்த ஆர்யா பிற மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். தற்சமயம் தமிழுடன் தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் குணசேகர் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் படத்தில் நெகடிவ் கேரக்ட‌‌ரில் நடிக்க ஆர்யா தனது சம்மதத்தை தெ‌ரிவித்துள்ளார். (இது குறித்து அதிகார‌ப்பூர்வமாக அவர் இன்னும் அறிவிக்கவில்லை). மலையாளத்தில் ரோஷன் ஆண்டரூஸ் இயக்கும் காஸனோவா படத்தில் ஆர்யா நடித்து வருகிறார்.

தமிழில் மதராசப்பட்டினம் படத்தில் நடித்துக் கொண்டே காஸனோவாவிலும் அவ்வப்போது நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு பல்கலைக்கழக மாணவர் வேடம்.

தமிழ் நடிகைகள் மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும் நடிகர்கள் மலையாளப் படங்களில் நடிப்பது குறைவாகவே இருந்து வந்துள்ளது. தமிழில் அதுவும் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஆர்யா எப்படி நடந்து கொள்வார் என்ற பதற்றம் ரோஷன் ஆண்ட்ரூஸ் உள்பட மொத்த காஸனோவா டீமுக்கும் இருந்தது.

அவர்கள் பயந்ததற்கு மாறாக பந்தா இல்லாமல் அனைவ‌ரிடமும் கலகலப்பாக பழகி ஆச்ச‌ரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ஆர்யா. பந்தா இல்லாத பழக எளிமையானவர் என மலையாளப் படவுலகம் ஆர்யாவை கொண்டாடுகிறது.

யாவரும் நலம் - தொடர்ந்து முதலிடம்

சென்னை திரையரங்கு வார இறதி வசூலில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது விக்ரம் கே.குமா‌ரின் யாவரும் நலம். சென்றவாரம் வெளியான இன்னொருவன் பத்தாவது இடத்தையே பிடித்துள்ளது. ப்‌ரியதாஷனின் காஞ்சிவரம், சரத்குமா‌ரின் 1977 ஆகியவை டாப் 5 லிஸ்டில் இடம்பிடித்துள்ளன.

5. காஞ்சிவரம்
சுதந்திர போராட்ட காலத்து காஞ்சிவரம் பட்டு நெசவாளர்களின் வறுமையை சொல்லும் இந்தப் படத்துக்கு விமர்சன ‌ரீ‌தியாக பாராட்டு கிடைத்து வருகிறது. படம் குறித்து முறையாக விளம்பரம் செய்யாததால் படம் வெளியானதே பலருக்கு தெ‌ரியாமல் இருப்பது மிகப்பெ‌ரிய மைனஸ். முதல் மூன்று நாளில் ஐந்து லட்சத்து அறுபத்தைந்தாயிரம் வசூலித்துள்ளது.

4. 1977

வில்லன், வழக்கமான பழிவாங்கல் என பழகிய பார்முலாவுக்குள் படம் இருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சண்டைக் காட்சிகள் மட்டுமே படத்தின் நிறைவான அம்சம். விவேக்கின் காமெடிக்கும் வரவேற்பில்லை. ஒரு வாரத்தில் முப்பத்து மூன்று லட்சங்களை மட்டுமே வசூலித்திருக்கும் இதன் வார இறுதி மூன்று நாள் வசூல், எட்டே முக்கால் லட்சங்கள்.

3. தீ
காக்கி சட்டையின் மகத்துவத்தை கூறும் மற்றுமொரு படம். நமிதாவின் கவர்ச்சி, சுந்தர் சி-யின் அடிதடி, ஆக்ரோஷமான அரசியல் வசனம் என தட்டுத்தடுமாறி ஓடுகிறது படம். சன் பிக்சர்ஸ் படத்தை வெளியிட்டது ஒன்றே தீ-யின் ப்ளஸ். வார இறுதி வசூல் ஒன்பது லட்சங்கள்.

2. சிவா மனசுல சக்தி
விகடன் டாக்கீஸ் தயா‌ரித்திருக்கும் இந்தப் படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. போனால் சி‌ரித்துவிட்டு வரலாம் என்று திரையரங்குக்கு செல்கிறவர்களே அதிகம். சந்தானத்தின் காமெடிக்கு - அது இரட்டை அர்த்தமாக இருந்தாலும் மொத்த திரையரங்கும் சி‌ரிக்கிறது. ஒரு கோடியை தாண்டிவிட்ட இதன் வார இறுதி வசூல் பதினொன்றரை லட்சங்கள்.

யாவரும் நலம்
சமீபத்தில் எந்த ஒரு த்‌ரில்லரும் மக்களை இந்தளவு கவர்ந்ததில்லை. கோர முகம், கல்லறை தோட்டம், இரவில்வரும் வெள்ளைச் சேலை ஆவி என எதுவும் இல்லாமலே பார்க்கிறவர்களை பயமுறுத்துகிறார்கள் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும். ஹாலிவுட் நிறுவனம் படத்தின் ‌ரீமேக் உ‌ரிமையை வாங்கிய பிறகு யாவரும் நலத்தின் ஸ்டார் வேல்யூ அதிக‌ரித்திருக்கிறது. ஒரு வார வசூல் அறுபது லட்சங்கள். வார இறுதி வசூல் இருபத்தைந்து லட்சங்கள்.

இப்பவே நயன்தாரா வேணும்... அடம்பிடித்த மக்கள்!


பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இதே ஏ.வி.எம் ஸ்டுடியோவில் என்னை உள்ளேயே விடாம துரத்தினாரு வாட்ச்மேன். இன்னைக்கு என் பையனோட 'திருனா' படத்துவக்க விழாவை அங்கே வைக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கேன் என்று, கண்ணீர் மல்க சொன்னார் தயாரிப்பாளர் ஈகை.கே.கருணாகரன். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்திருக்கிறார் படத்தின் நாயகன் சுபாஷ்.

'எனக்கு அப்பா மாதிரி பிசினஸ்லே முன்னேறனும்னு ஆசை. ஆனால், அப்பாவுக்கு சினிமா கனவு மனசை விட்டு போகவே இல்லை. என்னை நடிடான்னு சொல்லிட்டார். அவரு ஆசைக்காக சினிமாவுக்கு வந்தாலும், நடிப்பு, ஃபைட்டுன்னு எல்லாத்தையும் முறையா கத்துகிட்டுதான் இறங்கியிருக்கேன்' என்றார் சுபாஷ்.

படத்தின் இயக்குனர் ரவி.எம்.எஸ் என்பவரும் தயாரிப்பாளரின் நீண்டகால நண்பராம். 'நான் பணக்காரன் ஆயிட்டா நீதான் என் படத்தின் டைரக்டர்' என்று சொல்லிக் கொண்டே இருப்பாராம் கருணாகரன். சொன்ன மாதிரியே இவரை தனது படத்திற்கு டைரக்டர் ஆக்கிவிட்டார்!

படத்தில் நயன்தாரா ரசிகராக வருகிறார் சுபாஷ். அவருக்கு ரசிகர் மன்றம் திறப்பதாக Thirunaஒரு காட்சி. சென்னைக்கு வெளியே இதற்கான படப்பிடிப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். நயன்தாரா கட் அவுட்டுகளையும் கொண்டு வந்து இறக்கினார்களாம். சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்தவர்கள், படப்பிடிப்புக்கு நயன்தாரா வருவதாக நினைத்துக் கொண்டு கூடிவிட, பெரும் குழப்பமாம். நயன்தாரா வந்தால்தான் நாங்கள் இங்கிருந்து போவோம் என்று அவர்கள் அடம் பிடிக்க, விஷயத்தை பக்குவமாக சொல்லி ஜனங்களை அனுப்பி வைத்தார்களாம்!

படத்திலே மொத்தம் 15 ஃபைட் என்று அறிவித்தார் பைட் மாஸ்டர் குபேரன். அம்மாடியோவ்...

அபாரதம் செலுத்திய நடிகை... அச்சச்சோ, இது மத வி(வ)காரம்!


ஒட்டுமொத்த ரசிகர்களையும் சுத்தவச்சு கிறங்கடிச்சாலும், ஏராளமான கேரள நடிகைகள் பக்தி பழங்களாகவே இருக்கிறார்கள். படிப்பிடிப்புக்கு போகிற இடங்களில் எல்லாம், அங்கே உள்ள கோவில்களை பற்றி அறிந்து கொள்வதும், கட் என்று சொல்வதற்குள் ஒரு எட்டு கோவிலை பார்த்துவிட்டு வருவதுமாக அளவு கடந்த பக்தி இவர்களுக்கு!

நெல்லையப்பர் கோவிலின் நிரந்தர பக்தை நயன்தாரா! தனது ஒவ்வொரு பட ரிலீசின் போதும் தவறாமல் ஆஜர் ஆகிவிடுவாராம் இங்கே. அசின், பாவனா, பத்மப்ரியா, என்று நீள்கிற வரிசையில் மீராஜாஸ்மினுக்கு கொஞ்சம் கூடுதல் இன்ட்ரஸ்ட்! ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாக்குமரி வரை இவர் பார்க்காத தமிழ்நாட்டு கோவில்களே இல்லை.

இங்கே சுதந்திரமாக வந்து போனாலும், சொந்த ஊர் கேரளாவில் சும்மாயிருப்பதில்லை சேட்டன்கள். ஒரு கிறிஸ்துவப் பெண் எப்படி இந்து கோவில்களுக்குள் நுழையலாம் என்று பிரச்சனைக்கு பத்தி கொளுத்தி வைக்கிறார்கள். விளைவு...? ஆ...ஊ... என்ற அச்சுறுத்தல்கள்!

சமீபத்தில் தலிபரம்மா ராஜேஸ்வரி கோவிலுக்கு போய் சாமி கும்பிவிட்டு திரும்பிய மீராவை வசமாக பிடித்துக் கொண்டார்கள் சேட்டன்கள். பெரும் கேள்விகளுக்கு பிறகு, அந்த கோவிலுக்கு பத்தாயிரம் ரூபாய் அபாரதம் செலுத்திவிட்டு வந்தாராம்

சொத்துக்களை அபகரிக்க சதி: ரஜினி மேனேஜர் போலீசில் புகார்!


தனது சொத்துக்களை அபகரிக்க உறவினர்களே சதி செய்வதாக ரஜினியின் முன்னாள் மேனேஜர் புகார் கூறியுள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருவர் கிருஷ்ணாராவ். வயது 70. ரஜியிடம் மேனேஜராக சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இப்போது ஓய்வு பெற்று அக்பராபாத் முதல் தெருவில் வசித்து வருகிறார்.

தியாகராய நகர் போலீசாரிடம் நேற்று அவர் அளித்துள்ள புகார் மனு:

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் 1978 முதல் 2001 வரை மானேஜராக பணி செய்தேன். ரஜினிகாந்த் கடந்த 25 ஆண்டுகளாக எனது குடும்பத்துக்கு எவ்வளவோ நன்மைகள் செய்துள்ளார். 'படையப்பா' படத்தில் தயாரிப்பாளராக ஆக்கி என்னை அவர் கவுரவபடுத்தினார். எனக்கு ரூ.6 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் சொத்துக்கள் உள்ளன.

எனது சொத்துக்களை அபகரிக்க என் குடும்பத்தினரே எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். எனக்கு மனைவி மற்றும் 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். எனது சொத்துக்களை அபகரிக்க கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனது சொந்த வீட்டில் வாழ முடியாமல், விடுதி ஒன்றில் தங்கியுள்ளேன். எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அதற்கு என் குடும்பத்தினர் தான் பொறுப்பு.

என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு அளித்து, என்னை கொலை செய்ய துடிக்கும் எனது குடும்பத்தினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன், என்று குறிப்பிட்டுளளார் கிருஷ்ணாராவ்.

போலீசார் இப்போது கிருஷ்ணாராவின் உறவினர்களிடம் விசாரணைய மேற்கொண்டுள்ளனர்.

Wednesday, March 18, 2009

ஆர்யா – கோடியில் இன்னொருவர்


சம்பளம் என்ற பெய‌ரில் தயா‌ரிப்பாளர்களின் பாக்கெட்டில் பொத்தல் போடாதவர் ஆர்யா. இந்த நல்ல பெயரை நான் கடவுளோடு காற்றில் பறக்கவிட்டுள்ளார் என்பதுதான் ஆர்யா பற்றிய லேட்டஸ்ட் கவலை.
நான் கடவுளுக்கு முன்புவரை ஆர்யாவின் சம்பளம் சிம்புவைவிட குறைவுதான். நான் கடவுள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, இந்தப் படம் வெளியானால் ஆர்யாவின் சம்பளம் உயரும் என விமர்சகர்கள் தொலைநோக்குடன் கூறியிருந்தனர். அதே போல தனது சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார் ஆர்யா.

மதராசப்பட்டினம் படத்துக்கு இரண்டு கோடி ரூபாய் ஆர்யாவுக்கு சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சர்வத்துக்கு குறைவு. விஷ்ணுவர்தன் ஆர்யாவின் நண்பர் என்பதால் இந்த சலுகை.

திடீர் சம்பள உயர்வால் தமிழ் தயா‌ரிப்பாளர்கள் திகிலாகியிருப்பது உண்மைதான் என்றாலும் தெலுங்கு தேசத்தில் நோ ‌ரியா‌க்சன். குணசேகர் அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் படத்தில் நடிக்க ஆர்யாவிடம் கேட்டிருக்கிறார்கள். இங்கு போலவே இரண்டு விரலை காட்டியிருக்கிறார் ஆர்யா. திகிலுக்குப் பதில் திருப்தி பதிலாக கிடைத்திருக்கிறது.

மதராசப்பட்டினம் கால்ஷீட் ஒத்துழைத்தால் குணசேக‌ரின் படத்தில் நடிப்பதாக வாக்களித்துள்ளார் ஆர்யா. துட்டு கிடைத்தால் தெலுங்கென்ன தமிழென்ன எல்லாம் ஒன்றே.

‘ஆம்பி வேலி’யில் வீடு, அசத்தும் நமீதா!


சஹாரா நிறுவனத்தின் மகா காஸ்ட்லி நகரம் ஆம்பி வேலி. மும்பை லோனாவாலாவுக்கு அருகில் உள்ள இனிய மலை வாசஸ்தலம். முழுக்க முழுக்க தனியாருக்குச் சொந்தமான நகரம் இது.

மும்பையிலிருந்து 122 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. சையாத்ரி மலை உச்சியில் 10000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது இந்த செயற்கை நகரம். இந்த ரம்யமான பிரதேசத்தில் தனி பங்களாக்கள் கட்டி விற்பனை செய்து வருகிறது சஹாரா நிறுவனம்.

இங்கு பாலிவுட் கனவுக் கன்னிகள் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, ப்ரீத்தி ஜிந்தா ஆகியோருக்கு தலா ஒரு ஏக்கரில் அரண்மனை மாதிரி வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளது சஹாரா சிட்டி. இங்கு வீடு வாங்கியுள்ள அனைவருமே டாப் விஐபிக்கள்தான்.

இங்குதான் வீடு வாங்க வேண்டுமென்பது தமிழ் கவர்ச்சிப் புயல் நமீதாவின் நீண்டகாலக் கனவாம். அந்தக் கனவும் இப்போது நனவாகி விட்டதாம் அம்மணிக்கு. அரை ஏக்கர் பரப்பளவில் அட்டகாசமான வில்லா ஒன்றை வாங்கி, தனது ரசனைக்கேற்ப அமைத்துக் கொண்டுள்ள நமீதா, இப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆம்பி வேலிக்குப் பறந்துவிடுகிறாராம்.

தாய் சொல்லை தட்டாதே... விஜயின் திடீர் முடிவு?


இணையதளங்களில் காட்டுத்தனமாக உலவிக் கொண்டிருக்கும் க்ளிப்பிங்ஸ், விஜயின் யேய்ய்ய்ய்ய்ய்... சைலன்ஸ்" மேட்டர்தான்! சென்னை நிருபர்கள் நீக்கு போக்கு தெரிந்தவர்கள். கடுமையான கேள்வியாக இருந்தால் கூட, அதில் ஜால்ரா சத்தம் ஒலிக்கும்படி கேட்பதில் வல்லவர்கள். ஆனால், வெளியூர் நிருபர்கள் அப்படியில்லையே! வில்லு படத்தை பற்றி அவர்கள் எழுப்பிய கேள்வியின் வெப்பம் தாங்க முடியாமல் வெடித்துவிட்டாராம் விஜய். அது போகட்டும்...

இப்போதெல்லாம் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் விஜய் போடும் முதல் கண்டிஷன், கதையிலே நான் செத்துப் போவது போல சீன் வரக்கூடாது என்பதுதானாம். காரணம், பெரிய ஹீரோக்கள் யாரும் செத்துப் போவது போல நடிப்பதை விரும்புவதே இல்லை என்பது ஒன்று. அப்படி எடுத்தாலும், ரசிகர்கள் அதை விரும்பாமல் புறக்கணிப்பார்கள் என்பது காலம் உணர்த்திய உண்மை.

இப்படி ஒரு கண்டிஷன் போடுவதற்கு இது மட்டும் காரணமில்லையாம். விஜயின் அம்மா திருமதி.ஷோபா விஜய் இறந்து போவது போல் நடிப்பதை விரும்பவில்லையாம். அம்மா கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த கண்டிஷனை வைக்கிறார் விஜய். தாய் சொல்லை தட்டாதே!

மீண்டும் பாலைவனச்சோலை! சுஹாசினி வேடத்தில் கார்த்திகா


இருபத்தியேழு வருடங்களுக்கு முன்னால் வந்த படம் பாலைவனச்சோலை. நாலைந்து இளைஞர்களும் ஒரு பெண்ணும் டீசன்டாக பழக முடியும் என்பதை அற்புதமாக வெளிப்படுத்திய படம். பெரும் வெற்றி பெற்ற பாலைவனச்சோலைக்கு மீண்டும் கொஞ்சம் தண்ணீர் தெளிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இந்த படத்தை அப்படியே மறுபடியும் தமிழில் ரீமேக்க போகிறார்களாம். (கவனமா செய்யுங்க, கெடுத்திராதீங்கப்பு....)

ராதாகிருஷ்ணன் தயாரிக்க, திரைக்கதை வசனம் எழுதி எஸ்.தயாளன் இயக்குகிறார். சுஹாசினி நடித்த வேடத்தில் கார்த்திகா நடிக்க, முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நிதின் சத்யா.

முந்தைய பாலைவனச்சோலையில் அத்தனை பாடல்களையும் வைரமுத்துவே எழுதியிருந்தார். இப்போதும் அவரேதான் எழுதுகிறாராம். இரண்டு பாடல்களை அப்படியே எடுத்து பயன்படுத்தப் போகிறார்கள். மேகமே மேகமே என்ற பாடலும், ஆளானாலும் ஆளு என்ற பாடலும்தான் அவை. இகே பாபி என்பவர் இந்த காலத்திற்கு ஏற்ப சில பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறாராம்.

பழைய பாலைவனச்சோலை வந்த பின் நாடெங்கும் சுஹாசினி அலை வீசியது. இந்த பாலைவனச்சோலை கார்த்திகாவுக்கும் அப்படி ஒரு பெயரை பெற்றுத்தருமா? பார்க்கலாம்!

ஜேட் கூடியை சந்திக்க ஷில்பாவை அனுமதிக்காத கணவர்


லண்டன்: புற்று நோய் தாக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஜேட் கூடியை சந்திக்க, நடிகை ஷில்பா ஷெட்டி லண்டன் சென்றார். ஆனால் அவரது உடல் நிலை மிக மிக மோசமாக இருப்பதால் சந்திக்க அனுமதிக்க முடியாது என்று கூடியின் தாயாரும், கணவரும் கூறி விட்டதால் ஷில்பாவால் கூடியை சந்திக்க முடியவில்லை.

எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்ற இறுதிக் கட்ட நிலைக்கு வந்து விட்டார் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜேட் கூடி. அவரது நிலை மிக மிக மோசமாக உள்ளது. மருந்துகள் கொடுத்து அவரை தூக்க நிலையிலேயே வைத்துள்ளனர்.

அவரது மூச்சு எந்த நேரமும் பிரியலாம் என்பதால் டாக்டர்களும், கணவர், தாயார் மற்றும் குடும்பத்தினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக் பிரதர் நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கு கொண்ட கூடியின் நிலை குறித்து வருத்தமும், வேதனையும் தெரிவித்திருந்த ஷில்பா ஷெட்டி கூடியை சந்திக்கப் போவதாக கூறியிருந்தார்.

இதற்காக அவர் லண்டன் புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் சந்திக்க அனுமதிக்க முடியாது என்று கூடியின் தாயார் மற்றும் கணவர் மறுத்து விட்டனராம். இதனால் ஷில்பாவால் கூடியைப் பார்க்க முடியவில்லை.

இதுகுறித்து ஷில்பா கூறுகையில், லண்டனுக்கு நான் ஞாயிற்றுக்கிழமை வந்தேன். எப்படியும் கூடியை சந்தித்து விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவரது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவருக்கு மருந்துகள் கொடுத்து தூங்க வைத்து வருகின்றனர். மிக மிக அரிதாகத்தான் அவர் விழித்துப் பார்க்கிறார்.

அவரை சந்திக்க நான் ஆர்வமாக இருந்தேன். ஆனால் கூடியின் அருகில் அவரது தாயாரும், கணவரும் மட்டுமே இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதை மீறி செல்ல முடியாது என்பதால் அதை மதித்து நான் சந்திக்க முயற்சிக்கவில்லை.

இருப்பினும் எப்படியும் அவரைப் பார்த்து விட வேண்டும் என்று ஆர்வமாக உள்ளேன். அவருக்காக நான் தீவிரமாக பிரார்த்தனை செய்து வருகிறேன் என்றார் ஷில்பா.

கிளாமருக்குப் பயந்த அனுயா


எஸ்.எம்.எஸ் (அதாங்க சிவா மனசுல சக்தி) நாயகி அனுயாவுக்கு கிளாமர் என்றால் பயமாம். அதனால்தான் ஆரம்பத்தில் வந்த கிளாமர் வாய்ப்புகளைப் பார்த்து சினிமாவே வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்தாராம். இப்போ பயம் போய் விட்டதாம்.

மும்பையிலிருந்து வந்துள்ள புதிய தென்றல் அனுயா. சிவா மனசுல சக்தி படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார் அனுயா.

மும்பையில் பிறந்து, புனேயில் படித்த அனுயாவுக்கு சின்ன வயதிலேயே சினிமா ஆசை இருந்ததாம். அப்பா, அம்மாவும் கூட ஓகே. பண்ணி விட்டனர்.

அவரது ஆசைப்படியே அவரைத் தேடி பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் எல்லாமே கிளாமராக இருந்ததால் வேண்டாம்ப்பா சினிமாவே என்ற எண்ணத்திற்கு வந்தாராம்.

அந்த சமயத்தில்தான் வந்தது எஸ்.எம்.எஸ். கதையைக் கேட்டதுமே சட்டென மண்டையை ஆட்டி விட்டாராம். காரணம், படத்தில் தனது நிஜ கேரக்டரைப் பிரதிபலிப்பது போலவே கதையின் கேரக்டரும் இருந்ததால்தானாம்.

படு ஜாலியான அனுவபமாக அந்தப் படம் அமைந்தது என்கிறார் அனுயா. எல்லோரையும் போலவே அனுயாவுக்கும் சிம்ரனைத்தான் ரொம்பப் பிடிக்குமாம். அவர்தான் எனது மாடல் என்கிறார் அனுயா.

ஏன்யா அப்படி என்றால், அவர் கிளாமரிலும் அசத்தினார். நடிப்பிலும் கலக்கினார். இப்போதும் நடிக்கிறார். அதனால்தான் என்கிறார்.

தற்போது ஹரிக்குமாருடன் மதுரை சம்பவம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அனுயா. நல்ல கதைதான் முக்கியம். அதற்காக கிளாமரே கூடாது என்றில்லை. தேவைப்பட்டால் (அதானே..) கிளாமராகவும் நடிப்பேன் என்கிறார் தமிழ் சினிமாவின் நாடியை அதற்குள் சரியாக கணித்து விட்ட அனுயா.

வெவரமாத்தாய்யா இருக்கு அனுயா..

ஜெயம் ரவிக்கு கல்யாணம் ஜுன் 7 ந் தேதி நடக்கிறது


ஜூன் 7 ந் தேதி 'டும்டும்டும்' என்று அறிவித்துவிட்டார் ஜெயம் ரவி. சில வருடங்களாக காதலித்து வந்த ஆர்த்திதான் மனைவி. காதலாக இருந்தாலும், இருவீட்டார் சம்மதத்தோடும் இந்த திருமணம் நிகழ்வதால் புதுமாப்பிள்ளைக்கு டபுள் குஷி!

சென்னையின் கடலோரத்தில் கடல்போல விஸ்தாரமாக அமைந்திருக்கும் மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில்தான் திருமணத்தை வைத்திருக்கிறார்கள். மணமகள் ஆர்த்தி பிசிஏ முடித்துவிட்டு மாஸ்டர்ஸ் ஆஃப் இன்டர்நேஷனல் மேனேஜ்மென்ட் படித்திருக்கிறாராம். இதுவரை விளையாட்டு பையனா இருந்திட்டேன். இனி பொறுப்பை அதிகரிச்சுக்கணும் என்றார் ரவி.

காட்டுலே இருந்து இப்போதுதான் வீட்டுக்கு வந்திருக்கிறார். பேராண்மை படத்தில் வனத்துறை அதிகாரி கேரக்டர் என்பதால், அடர்ந்த காடுகளில் தங்க வைத்து ட்ரில் வாங்கிவிட்டாராம் டைரக்டர் ஜனநாதன். அங்கேயே டென்ட் அடித்து தங்கியிருந்தாராம் பல மாதங்களாக! எல்லா படத்திலேயும் காடு லொக்கேஷனாதான் இருக்கும். இந்த படத்திலேதான் அதுவும் ஒரு கேரக்டராகவே வருது என்றார் தோள்களை குலுக்கிக் கொண்டு.

தேனிலவுக்கு நிச்சயம் மரம் மட்டை இல்லாத இடமாகதான் போவார் போலிருக்கிறது!

உதவியாளர் சிக்கலில் ஆசின்!


ஆசினுக்கு புது சிக்கல்-மகனை மீட்டுத் தரக் கோரி உதவியாளரின் தாய் புகார்

ஆசினிடம் உதவியாளாக வேலை பார்த்த தனது மகனை அவரிடமிருந்து மீட்டுத் தர வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.ஆசினுக்கு சமீபத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண் ஆசின் வீட்டில் வேலை பார்த்து வரும் தனது மகளை ஆசின் விட மாட்டேன் என்கிறார், அங்கு அவரது நிலை என்ன என்றும் தெரியவில்லை. எனவே மகளை மீட்டுத் தர வேண்டும் என்று கோரி போலீஸீல் அவர் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அந்தப் பெண்ணை மும்பையிலிருந்து வரவழைத்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது ஆசின் மற்றும் அவரது தந்தை ஜோசப் மீது புதிய புகார் கிளம்பியுள்ளது.

செங்குன்றத்தைச் சேர்ந்த சுடலை வடிவு என்ற பெண் சென்னை புறநகர் போலீஸ் ஆணையர் ஜாங்கிட்டிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில்,என் கணவர் முத்துக்கருப்பன் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் வேலை பார்த்தவர். அவர் இறந்து விட்டார். எங்கள் மகன் நல்லமுத்துக்குமார் (23). சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய்யிடம் உதவியாளராக வேலை பார்த்தார்.

போக்கிரி படப்பிடிப்பின் போது அசினுடன் எனது மகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அதிக சம்பளம் கொடுப்பதாக சொல்லி எனது மகனை உதவியாளர் வேலைக்கு அழைத்து தன்னோடு வைத்துக்கொண்டார். நான்கு ஆண்டுகளாக அசினிடம் என் மகன் வேலை பார்த்தான்.
கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு படப்பிடிப்புக்கு சென்றபோது சாலை விபத்தில் என் மகன் சிக்கினான். அவனது இடது கால் முறிந்தது. மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்து நான் மும்பைக்கு ஓடினேன். அங்கு ஒன்றரை மாதம் மகனோடு தங்கி இருந்தேன்.

குணமானதும் அவனை சென்னைக்கு அழைத்து வந்தேன். அதன் பிறகு எனது மகனிடம் அசின் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வேலைக்கு வரும்படி அழைத்தார். என் மகனும் அதை தட்ட முடியாமல் மும்பை சென்றான்.அங்கிருந்து தினமும் போனில் தொடர்பு கொண்டு என்னுடன் பேசினான். திடீரென்று ஒருநாள் இங்கு எனக்கு வேலை பிடிக்க வில்லை. அசின் கடுமையாக நடந்து கொள்கிறார். நொண்டி என்றெல்லாம் திட்டுகிறார் என்று புலம்பி வேதனைப்பட்டான்.

நான் அவனுக்கு ஆறுதல் சொன்னேன். வேலை பிடிக்காவிட்டால் சென்னைக்கு புறப்பட்டு வந்து விடு என்று கூறினேன். அதன் பிறகு அவனிடமிருந்து போன் வரவில்லை. அவனை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றேன். முடியவில்லை.பிறகு எனது சகோதரியை அழைத்துக் கொண்டு மும்பை சென்றேன். மகன் தங்கி இருந்த இடத்துக்கு போய் விசாரித்தேன். அங்கு அறையில் இருந்தவர்கள் நல்லமுத்துவை பார்த்து 10 நாட்களுக்கு மேலாகி விட்டது என்றனர்.

அதிர்ச்சி அடைந்த நான், அசின் கார் டிரைவர் முருகனை தொடர்பு கொண்டேன். அவர் மூலம் அசின் வீட்டுக்கு சென்றேன். படப்பிடிப்புக்கு சென்றதால் பல நாட்கள் அவரை பார்க்க முடியவில்லை.மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது அசின் தந்தை ஜோசப் பேசினார். உன் மகன் வேலையில் இருந்து நின்று விட்டான். அவனுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பி விட்டோம் என்றார்.இதையடுத்து நான் மும்பையில் தங்கி இருந்து என் மகனை தேடினேன். இந் நிலையில், நான் தங்கி இருந்த இடத்துக்கு ஜோசப் வந்தார். என் மகன் தாதா கும்பலில் சேர்ந்து விட்டதாக கூறினார்.

ஆனால் அதை நான் நம்பவில்லை. மும்பை போலீசில் புகார் அளிக்கப் போவதாக சொன்னேன். அவர் தடுத்தார். நீ சென்னைக்கு போ உன் மகனை தேடி பிடித்து அனுப்பி வைக்கிறேன் என்றார். அதை நம்பி நானும் வந்து விட்டேன்.ஆனால் ஜோசப் சொன்னப்படி இதுவரை என் மகனை அனுப்பி வைக்கவில்லை. அவனைப்பற்றி எந்த தகவலும் இல்லை. அசினையும் ஜோசப்பையும் நிறைய தடவை தொடர்பு கொண்டேன். அவர்கள் மொபைலை எடுப்பது இல்லை.

எனவே அசின் மீதும் அவர் தந்தை ஜோசப் மீதும் நடவடிக்கை எடுத்து எனது மகனை மீட்டு தர வேண்டும் என்று கூறியுள்ளார் சுடலை வடிவு.இது குறித்து விசாரிக்க செங்குன்றம் போலீசாருக்கு ஜாங்கிட் உத்தரவிட்டுள்ளார்.

Tuesday, March 17, 2009

நக்மாவா...யாரது? - திணற வைத்த கார்கே!!


இப்படியொரு கேள்வியைக் கேட்டவர் வேறு யாருமல்ல... காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும் தேர்தல் பணிக்குழுத் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே. அதுவும் அந்தக் கட்சிக்காக அல்லும் பகலும் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கும் நக்மாவை நேருக்கு நேர் பார்த்தபடி இப்படியொரு கேள்வியைக் கேட்டுவிட்டாராம். மயக்கம் வராத குறை நக்மாவுக்கு. எல்லோர் முன்னிலையிலும் வேறு கேட்டு விட்டதால், தன்னைப் பற்றி தானே ஒரு அறிமுகம் தரவேண்டியதாகிவிட்டதாம் அம்மணிக்கு.

எங்கே நடந்தது இது?

தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களை நேர்காணல் செய்யும் பொறுப்பு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு. காங்கிரஸ் சார்பில் வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து நடிகை நக்மா விண்ணப்பம் கொடுத்திருந்தார்.

நேற்று நடந்த நேர்காணலிலும் அவர் கலந்து கொண்டார். அப்போது அவரைப் பார்த்த கார்கே, நக்மான்னா யார்? அவரோட சாதனை என்ன? என்று கேட்டாராம்.

ஒரு கணம் ஆடிப் போன நக்மா... 'என்னைத் தெரியவி்ல்லையா... நான்தான் நக்மா!' என்று கூறியுள்ளார். உடனே, 'எந்த அடிப்படையில் நீங்கள் சீட் கேட்கிறீகள்... உங்களுக்கு யாரையெல்லாம் தெரியும்?' என்றாராம் கருமமே கண்ணாக.

உடன் வந்தவர்கள் சங்கடத்தில் நெளிய, வேறு வழியின்றி தன்னைப் பற்றி சொல்லத் தொடங்கினாராம் நக்மா. உடனே நக்மாவின் உதவிக்கு வந்துள்ளார் மற்றொரு மூத்த தலைவரான பி.சி.கொண்டையா. அவர் நக்மாவின் அருமை பெருமைகளை கார்கேவுக்கு எடுத்துக் கூற, அப்போதும் விளங்கிக்கொள்ளாத கார்கே இப்படிக் கூறினாராம்:

உங்கள் விண்ணப்பத்தை பரிசீலிப்போம்... போய் வாருங்கள்!

தேர்தலில் நிற்கும் ஆசையே போய்விட்டதாம் நக்மாவுக்கு!!

’கந்தசாமி’ விழாவில் இத்தாலி அழகிகள் ஆட்டம்


பாடல் வெளியீட்டு விழாவை ஒரே மாதிரி பார்த்து போரடித்து போனவர்களின் கண்களில், ஆச்சர்யம் அள்ளிக்கொட்டப்போகிறது கந்தசாமி விழா.
கலைப்புலி தாணு தயாரிப்பில் சுசிகணேசன் இயக்கிவரும் படம் ‘கந்தசாமி’. இப்படத்தில் விக்ரம், பலவித தோற்றங்களில் நடிக்கிறார். இதில் பெண் வேடமும் அடக்கம். விக்ரம் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் விக்ரம் சொந்தக்குரலில் பாடியுள்ள பாடலும் இடம்பெற்றுள்ளது. பூஜையில் ஆரம்பித்து, பாடல் வெளியீட்டு விழா வரை தண்ணீராய் செலவழித்து பிரம்மாண்டப்படுத்துவது தாணுவின் வழக்கம். கந்தசாமி ஆடியோ வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் தாணு. அடுத்த மாதம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கந்தசாமி பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது.

இவ்விழாவில், இத்தாலி அழகிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக 50 நடனக்கலைஞர்கள் பிரத்யேகமாக வரவழைக்கப்படுகின்றனர். இந்த நடனக்குழு, கந்தசாமியில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றிலும் நடனமாடியுள்ளனராம். இந்நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் ஹீரோ ஒருவரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

என்னோட பெஸ்ட் பிரண்ட்:ஸ்ருதி கமல் சொல்லும் நபர்


ஒரு ஹாய், ஒரு ஹலோ சொல்லி கைக்குலுக்கினாலே போதும் கிசு கிசுவ பத்தவச்சுடுறாங்கப்பா. லேட்டஸ்ட் காசிப்பில் சிக்கியிருப்பவர், ஸ்ருதி கமல்ஹாசன்.
ஸ்ருதிகமல் நடத்திவரும் இசைக்குழுவில் டிரம்மராக இருப்பவர் ஜெர்ரி. சமீப காலமாக நடத்தப்பட்ட கச்சேரிகளில் ஸ்ருதியும்-ஜெர்ரியும் ரொம்பவே நெருக்கம் காட்டியுள்ளனர். கச்சேரி பார்க்கவந்தவர்களின் கண்களில் இது சுண்ணாம்பு தடவ,செய்தி வேறுமாதிரி சிவக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே, இர்பான்கானுடன் ஸ்ருதி நடிக்கும் ‘லக்’ இந்தி படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடந்தபோது ஜெர்ரியும் கூடவே போக, அவர்களுக்குள் காதல் முளைத்துள்ளதாக, ஊர் சுற்ற ஆரம்பித்துவிட்டது கிசுகிசு.

விஷயம் முற்றுவதற்குள், ஜெர்ரியுடனான நெருக்கம் பற்றி விளக்கமளித்துள்ளார் ஸ்ருதி. “என்னோட பெஸ்ட் பிரண்டுகளில் ஜெர்ரியும் ஒருவர். இருவருக்குமே ஒரே மாதிரியான ரசனைதான். அலைவரிசை ஒத்துப்போறதால நாங்க ரெண்டு பேரும் அடிக்கடி டிஸ்கஸ் செய்துகொள்வோம். மற்றடி யாரும் புரளி கிளப்பிவிடும் அளவிற்கு தவறான எண்ணத்துடன் நாங்கள் பழகவில்லை. பார்ப்பவர்களில் கண்ணோட்டம்தான் தவறாக உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடந்த படப்பிடிப்பிற்கு ஜெர்ரி வந்ததும் உண்மைதான்.ஆனா இசைக்கச்சேரி சம்பந்தமாக பேசுவதற்காகவே அவர் வந்தார். நான் சினிமாவுக்கு வந்துட்டாலும் இசையை விட்டுவிடமாட்டேன். நான் நடத்திவரும் இசைக்குழுவிற்கு என்னோட பங்கு அதிகம் தேவைப்படுது. அதனாலதான் ஜெர்ரி என்னுடன் பேச வந்தார். மீடியாக்கள்தான் இதனை பெரிதுபடுத்திவிட்டது.” பேச்சில்கூட ஸ்ருதி பிசகவில்லை.

’தீர்க்கதரிசி’ ஆகும் விஷால்


விஷால் நடிக்கும் படம் ஓடும் ஓடாதென யாராலும் தீர்க்கதரிசனம் சொல்லமுடியாவிட்டாலென்ன ?அடுத்த படத்திற்கு தீர்க்கதரிசனம் என்றே பெயர் வைத்துவிட்டார் விஷால்.
“படம் பிரமாதமாக வந்திருக்கு பாஸ். ஆல் செண்டர் ஆடியன்சுக்கும் பிடிக்கிறமாதிரியான கதையதான் நாங்க படம் பிடிச்சிருக்கோம். நாட்டுக்கு தேவையான நல்ல மெசேஜோட பக்கா கமர்ஷியல் படமா சத்தியம் இருக்கும்” என சத்தியம் செய்யாத குறையாக சத்தியம் வெற்றிக்கு பத்திரிகை பேட்டிகளில் ஆருடம் கூறியிருந்தார் விஷால். படம் வந்தபிறகு தியேட்டரை விட்டு ஓடியதுதான் மீதம்.

அதையெல்லாம் மனசுக்குள்ள போட்டு மாவாட்டிக்கொண்டிருக்காம தெம்பா அடுத்த படத்திற்கு ஆயத்தமான விஷால் ‘தோரணை’யில் ரொம்ப பிஸி. சத்தியம் ஊத்திக்கொண்ட பயத்தில் ஒவ்வொரு பிரமையும் கண்ணும் கருத்துமாக செதுக்கி வருகிறார் நாயகன். அப்படின்னா டைரக்டர் என்ன பண்றாரு? கேள்வி கேட்பவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம். எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்துகொண்டிருப்பது விஷால்தான்.
தோரணையை தொடர்ந்து செல்வராகவன் படத்தில் நடிப்பதாக இருந்த விஷால், இப்போ அந்த படத்துல நடிக்கல.

அந்த கால்ஷீட்டை வேறொரு இயக்குனருக்கு கொடுத்துட்டாரு. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த ஜெயராஜ்தான் விஷாலின் அடுத்த படத்தை இயக்குகிறார்.விக்ரம்கிருஷ்ணா தயாரிக்கும் இப்படத்திற்குதான் ‘தீர்க்கதரிசி’ என பெயரிடப்பட்டுள்ளது.

மீண்டும் வாய்ப்பு கேட்கும் கோபிகா!


கோபிகாவை நினைவிருக்கிறதா...?

என்ன கொடுமை இது? என்கிறீர்களா... கோடம்பாக்கத்தைப் பொறுத்தவரை கல்யாணமாகி வெளிநாடு போகும் நடிகைகள் பெயர் கோலிவுட் பட்டியலிலிருந்து உடனடியாக நீக்கப்படும் என்பது எழுதப்படாத விதி.

கல்யாணம் நிச்சயமான கையோடு, 'இனி நான் எந்தப் படத்திலும் நடிப்பதாக இல்லை. சினிமாவுக்கு பை...' என்று அறிவித்தார் கோபிகா. அதன் விளைவு, கல்யாணத்துக்கு முன்பே பட்டியலிலிருந்து தூக்கப்பட்டுவிட்டது அவரது பெயர்.

இப்போதோ... அயர்லாந்தில் இல்லற வாழ்க்கை போரடிக்கிறதாம் அம்மணிக்கு. சரி... பொழுதை பயனுள்ள வகையில் கழிப்போம் என அஞ்சல் வழியில் சோஷியாலஜி படிக்க முயற்சி செய்தாராம். ஆனால், ஸ்டார்ட்-கேமரா-ஆக்ஷன் என்ற பாஷைக்குப் பழகிவிட்டதால், வேறு எதிலும் மனம் செல்லவில்லையாம்.

இப்போது புதிய போட்டோ ஆல்பத்தை வேண்டப்பட்டவர்களுக்கு அனுப்பி... 'நல்ல வாய்ப்பு, அருமையான கேரக்டர் இருந்தா சொல்லுங்க ப்ளீஸ்... அடுத்த ஃபிளைட் பிடிச்சு வந்திடறேன்!' என செல்லமாகச் சிணுங்கினாராம்.

இத்தனைக்கும் அவரது தங்கை க்ளினியும் சினிமாவில் நுழைவது குறிப்பிடத்தக்கது.

ரகசியாவின் 100 அடி தூரம்! படப்பிடிப்பில் திக் திக் திக்...


கடந்த சில நாட்களாக சென்னையில்தான் இருக்கிறார் ரகசியா. இவரது வரவால், அதிரி புதிரியாகிக் கிடக்கிறது ஏவிஎம் ஏரியா! வைகை என்ற படத்தில் சிம்பு பாடிய பாடலுக்கு குத்தாட்டம் போட வந்திருக்கும் இவரது கவர்ச்சியால் நாணி கோணி நடக்கிறார்கள் ஸ்டுடியோவுக்கு வருகிற டெக்னீஷியன்கள்.

வேறொன்றுமில்லை, படப்பிடிப்பு தளத்திலிருந்து இவர் தங்கியிருக்கும் அறைக்கு போக குறைந்தது 100 அடி தூரமாவது நடக்க வேண்டும். டூ பீஸ் உடையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ரகசியா மேலே ஒரு துண்டை கூட போர்த்தாமல் அப்படியே கடந்து போகிறார் இந்த 100 அடி தூரத்தையும்! அவ்வப்போது இவர் டிரஸ் சேஞ்ச் (இருக்கிற இரண்டு கர்சீப்பை மாத்துறதையெல்லாம் டிரஸ் சேஞ்சுன்னு சொல்ல வச்சீட்டாய்ங்களே...) செய்து கொள்ள ரூமிற்கு போகும்பொதெல்லாம் சிதறி ஓடினார்கள் மேற்படி டெக்னீஷியன்கள்!

பொதுவாகவே கவர்ச்சி நடிகைகள் யாரும் இப்படி 'சுதந்திரமாக' திரிவதில்லை. ஷாட்டுக்கு முன்பு வரை பெரிய டவலை மேலே போர்த்தியிருப்பார்கள். லைட்ஸ் ஆன் என்றதும்தான் தனது டவலையே மேலிருந்து விலக்குவார்கள். போடுறது குரங்கு வேஷம். சொறிய மாட்டேன்னு சொல்லக் கூடாது என்ற உயரிய கொள்கை உடைய ரகசியா, இந்த டவல் சமாச்சாரங்களை கண்டு கொள்வாரா என்ன?

கமல் படத்துக்கு ஸ்ருதி மியூசிக்!


கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்திற்கு அவரது மகள் ஸ்ருதிதான் இசையமைக்கப் போவதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து படத்துக்கு நெருங்கிய தரப்பு கூறுகையில், ஸ்ருதி ஹாசன்தான் தலைவன் இருக்கின்றான் படத்திற்கு பின்னணி இசையை வடிவமைக்கப் போகிறார் என்று கூறுகிறது.

நன்றாக பாடக் கூடியவரான ஸ்ருதி நடிக்கப் போவதாக இடையில் செய்திகள் வந்தன. இந்த நிலையில் தனது தந்தையின் படத்துக்கு இசையமைக்கப் போவதாக புதிய செய்தி வந்துள்ளது.

இதுதவிர படத்துக்கான புரமோஷனல் வீடியோவையும் ஸ்ருதியே தயாரிக்கவுள்ளார்.

ராஜ்கமல் நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தலைவன் இருக்கின்றான் படத்தைத் தயாரிக்கவுள்ளன. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

முன்னதாக மார்ச் 9ம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் தற்போது படப்பிடிப்புதள்ளிப் போயுள்ளது.

தேவா-பூமிகா நடிக்கும் தங்கரின் 'களவாடிய பொழுதுகள்'!


படத்துக்கு இப்படியெல்லாம் கவிதைத் தலைப்பு வைக்க யார் இருக்கிறார்கள், நம்ம தங்கர் பச்சானை விட்டால்! தனது அடுத்த படத்துக்குத்தான் இப்படி அழகான தலைப்பைச் சூட்டியுள்ளார் தங்கர்.

இந்தப் படத்தின் நாயகனாக பிரபு தேவா நடிப்பது உறுதியாகிவிட்டது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு நாயகனாக நடிக்கிறார் பிரபு தேவா. அவர் கடைசியாக முழுமையான வேடத்தில் நடித்த படம் எங்கள் அண்ணா. அதன் பிறகு தான் இயக்கிய படங்களில் ஓரிரு காட்சிகளில் வந்துபோனதோடு சரி.

இந்தப் படத்தைத் தயாரிப்பவர்கள் அய்ங்கரன் இன்டர்நேஷனல். ஏகன், சேவல், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, வில்லு என வரிசையாக தோல்விப் படங்களைக் கொடுத்திருந்தாலும், ஒரு நம்பிக்கையுடன் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்கள். காரணம் தங்கர் சொன்ன கதை மற்றும் பட்ஜெட். சொன்ன பட்ஜெட்டுக்கு மேல் ஒரு பைசா செலவு வைக்காமல் முடித்துத் தருவேன் என்ற அவரது வார்த்தை அய்ங்கரனுக்கு பெரிய பூஸ்ட்.

இந்தப் படம் பிரபு தேவாவுக்கு மட்டுமல்ல... இன்னொருவருக்கும் மறு ஜென்மம் தருகிறது. அவர் படத்தின் நாயகி பூமிகா சாவ்லா. சில்லுன்னு ஒரு காதலுக்குப் பின் தமிழில் இந்தப் படத்தில்தான் நடிக்கிறார் பூமிகா. திருமணத்துக்குப் பின் அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படமும் இதுவே.

கதாநாயகனுக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

களவாடிய பொழுதுகள் படத்தின் துவக்க விழா, சமீபத்தில் எளிமையாக நடந்தது. சத்தமில்லாமல் படப்பிடிப்பையும் துவங்கிவிட்டார் தங்கர்.

இந்தப் படம் எனது கனவுப் படைப்புகளில் ஒன்று என தாராளமாகச் சொல்லலாம். இதுவரை நான் சொல்லாத கதை, புதிய களம். ஒவ்வொரு காதல் ஜோடியும், களவுபோன தங்கள் பொழுதுகளை நினைத்து உறங்க முடியாமல் தவிக்கப் போகிற படம் இது. மசாலா மோகத்தில் தன்னைத் தொலைத்துக் கொள்ளும் தமிழ் ரசிகர்களை மீண்டும் நம்பி களமிறங்குகிறேன். பார்க்கலாம் என்கிறார் தங்கர்.

வாங்க தங்கர்... நல்ல படைப்புக்காக தூக்கத்தைத் தொலைத்துக் கொள்ள ரசிகர்களும் தயார்தான்!.

சா...பூ...த்ரி.. காதலின் புதிய டிக்ஷனரி!


சா...பூ...த்ரி என்ற சிறுவயது விளையாட்டை கடந்துதான் எல்லாரும் வந்திருப்போம். இதையே ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள். சா என்றால் சாதுர்யமான காதல், பூ என்றால் பூரணத்துவமான காதல், த்ரி என்றால் த்ரில்லான காதல் என்று விளக்கம் சொன்னார் படத்தின் இயக்குனர் அர்ஷத்கான்.

'மூன்று இளைஞர்களின் காதல்தான் படம். தன்னை விட பனிரெண்டு வயது மூத்த பெண்ணை காதலிக்கிற ஒருவனின் காதலும் இதில் அடக்கம்' என்றார் அர்ஷத்கான். அந்த கேரக்டரில் இவரேதான் நடித்திருக்கிறார். கதாநாயகர்கள் மூவர்தான் என்றாலும், பஞ்சமே இல்லாமல் ஐந்து ஹீரோயின்கள். அதில் இருவர் நேரிலும் வந்திருந்தார்கள்.

நுனி நாக்கு ஆங்கிலத்தில் வள வளத்தவர்கள், ஆக்சுவலி எங்களுக்கு தமிழ் வராது. கொஞ்சம் பொறுத்துக்கணும் என்றார்கள் சொல்லி வைத்த மாதிரி!

'சண்டைக்காட்சிகளே இல்லாமல், முழுக்க முழுக்க காதலை மட்டுமே சொல்லப் போகிறோம். அதுவும் இந்த கால இளசுகளுக்கு பிடிக்கிற மாதிரி. மே மாதம் ரிலீஸ் செய்யப் போகிறோம். அப்போது பாருங்க, தமிழ்நாட்டுல இருக்கிற டீன் ஏஜ்கள் மத்தியில் பெரிய அலை அடிக்க போவுது' என்றார் தயாரிப்பாளர் ராஜேஷ்கண்ணா.

கோக்கு மாக்கா எடுத்திருப்பாங்க போலிருக்கு!

முழு சம்பளம் கிடையாது.... பெருமூச்சு விடும் பேராசை ஹீரோக்கள்!


ஒரு படம் ஓடினால் போதும், இருக்கிற அத்தனை விரல்களையும் நீட்டி சம்பளத்தை குறிக்கிறார்கள் ஹீரோக்கள். அதிலும் இவர்கள் கேட்கும் சம்பளம் லட்சங்களில் இருப்பதில்லை என்பதுதான் அதிர்ச்சி. உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்கிற மாதிரிதான் இருக்கிறது பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நிலை! இந்த வேதனையை ஒரு ஆடியோ விழாவில் வெளிப்படுத்தினார் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி சேகரன்.

கடந்த சில வாரங்களுக்கு முன் வந்த ஒரு படத்திற்கு ஆஹா ஓஹோ என்று விளம்பரம் கொடுக்கிறார்கள். பத்திரிகைகளிலும் அந்த படத்தை பற்றி நன்றாக எழுதி வருகிறார்கள். ஆனால், படத்தின் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஹீரோ மட்டும் தனது சம்பளத்தை மூன்று கோடிக்கு ஏற்றி விட்டார். ('யார்யா' அதுன்னு கேட்காதீங்க, புரிஞ்சுக்கோங்க) படத்தை உருவாக்கியவர்கள் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்க, ஹீரோக்கள் மட்டும் கோடி கோடியாக அனுபவிப்பது என்ன நியாயம்?

ஹீரோக்கள் இனிமேல் சிறிய அளவில் அட்வான்சை வாங்கிக் கொள்ள வேண்டும். மீதியை படம் வெளியாகி ஓடியபின் அந்த லாபத்தில் பெற்றுக் கொள்வது போன்ற முறையை தயாரிப்பாளர் சங்கம் கொண்டு வர வேண்டும். ஒருவேளை நஷ்டம் வந்தால், அந்த நஷ்டத்திலும் அவர்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் ஓரளவுக்காவது தப்பிக்க முடியும் என்று கூறினார்.

பேஸ்த் அடித்துப் போயிருக்கிறார்கள் பேராசை ஹீரோக்கள்!

Monday, March 16, 2009

'கட்' ஆன பாவனா கற்பழிப்பு!


பாவனா தெலுங்கில் நடித்த ஒன்டரி (தனிமை) தமிழுக்கு டப் ஆகி வருகிறது. அப்படத்தில் இடம் பெற்ற கற்பழிப்புக் காட்சியை மட்டும் பாவனாவின் கோரிக்கையை ஏற்று வெட்டி விட்டார்களாம்.

தெலுங்கு இயக்குநர் ரமணா இயக்கத்தில் உருவான படம்தான் ஒன்டரி. கடந்த ஆண்டு வெளியானது. ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த்தான் இப்படத்தின் நாயகன். அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் பாவனா.

படத்தில் புஜ்ஜி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் பாவனா. ஒரு கற்பழிப்புக் காட்சியும் படத்தில் இருக்கிறது. இந்தக் காட்சியில் நிஜமாகவே கற்பழிப்பு முயற்சிக்கு ஆளான பெண் எப்படி துடிப்பாரோ, அதேபோல தத்ரூபமாக நடித்திருந்தார் பாவனா என்று தெலுங்குத் திரையுலகினரால் பாராட்டப்பட்டார்.

படம் முழுக்க ஒரே அடிதடிதான். இந்தப் படத்தை தற்போது தமிழுக்கு டப் செய்து கொண்டு வருகிறார்கள். இதைக் கேள்விப்பட்ட பாவனா, இயக்குநர் ரமணாவையும், தயாரிப்பாளரையும் தொடர்பு கொண்டு, எனக்கு தமிழில் ஹோம்லி பெண் இமேஜ் உள்ளது. எனவே கற்பழிப்புக் காட்சியை மட்டும் வெட்டி விடுங்களேன் என்று கேட்டுக் கொண்டாராம்.

முதலில் தயக்கம் காட்டிய தயாரிப்பாளர் தரப்பு பின்னர் பாவனாவின் வேண்டுகோளுக்கு இணங்கி அந்தக் காட்சியை வெட்டி விட்டு சைவமாக படத்தைத் தமிழிக்குத் தருகிறதாம்.

கார்த்திக் அனிதாவின் முதல் வெற்றி


அடிதடி, விரசம், இரட்டை அர்த்த வசனம் எதுவுமில்லாமல் ஒரு காதல் படத்தை எடுக்க முடியுமா? முடியும் என்பதுடன் அதை நஷ்டம் இல்லாமல் விற்கவும் முடியும் என்கிறார் ஸ்ரீஹ‌ரி. கார்த்திக் அனிதா படத்தின் இயக்குனர்.

கார்த்திக் அனிதாவில் பிரபல முகங்கள் இல்லை. இயக்குனரும் புதுமுகம். கமர்ஷியல் அம்சங்கள் என்படும் வெட்டு குத்து, குத்துப் பாடல்கள் என்று எதுவும் இல்லை. ஆனாலும் படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள், சொன்ன விலைக்கு படத்தை வாங்கியிருக்கிறார்கள்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், பெ‌ரிய நடிகர்களின் படங்களே வியாபாரமாகாமல் நொண்டியடிக்கும் போது இந்த மினிமம் பட்ஜெட் படத்தின் ஏறக்குறைய அனைத்து ஏ‌ரியாக்களும் விற்றுத் தீர்ந்துவிட்டனவாம்.

படம் வியாபாரமானது முதல் வெற்றி என்றால் ரசிகர்களின் மனங்களை கவரப் போவது இரண்டாவது வெற்றி என குஷியில் இருக்கிறார்கள் இயக்குனரும், தயா‌ரிப்பாளர்களும்.

இந்தப் படத்தில் ரத்தன் - மஞ்சு நடித்துள்ளனர்.

‌‌‌ஜீவனின் ஐந்தாவது ஜோடி

நான் அவன் இல்லை இரண்டாம் பாக வேலைகள் து‌ரிதகதியில் நடந்து வருகிறது. முதல் பாகத்தை தயா‌ரித்த இத்தேஷ் ஜெபக் இரண்டாம் பாகத்தையும் தயா‌ரிக்கிறார்.

ஹீரோ ‌‌ஜீவன், இயக்குனர் செல்வா என அதே பழைய டீம். இசையமைப்பாளர் மற்றும் ஹீரோயின்கள் மட்டும் மாறுகிறார்கள். முதல் பாகத்துக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி, விஜய் படத்துக்கு இசையமைக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டதால் சம்பளமாக ஐந்து விரலை காட்டியிருக்கிறார். விரலுக்கு பத்து லட்சம்.

அந்தப் பணத்தில் மூன்றாவது பாகத்தை எடுத்திடுவேன் என்று தயா‌ரிப்பாளர் முறுக்கிக் கொண்டதால் டி. இமானுக்கு அடித்திருக்கிறது அதிர்ஷ்டம். பழைய ஹீரோயின்களை போட்டால் படம் பார்க்க யார் வருவார்கள். அதனால் ஐந்து புதியவர்கள்.

சங்கீதா, ஸ்வேதா மேனன், ஹேமமாலினி, லட்சுமி ராய் ஐந்தாவதாக மும்பை வரவு ரட்சனா மௌ‌ரியா. பெயர் ப‌ரிட்சயம் இல்லாவிட்டாலும் ஆளை உங்களுக்கு தெ‌ரியும். யாவரும் நலம் விளம்பரப் பாடலில் கருப்பு மினி டவுச‌ரில் மாதவனுடன் ஆடுமே ஒரு தென்றல்...? அந்த தென்றல்தான் இந்த மௌ‌ரியா.

ஆளை மாத்திவிட்டு இடத்தை மாற்றாமல் இருந்தால் எப்படி? படத்தின் ஏறக்குறைய அனைத்துக் காட்சிகளையும் வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். தாய்லாந்து, துபாய், தென்னாப்பி‌ரிக்கா என மே‌ப்பில் இருப்பதில் பாதியை டிக் செய்திருக்கிறார்கள். வெளியாள் பணத்தில் வேர்ல்டு டூர். ஜமாய்ங்க.

அலட்டுகிறார் ஷாம்லி... அலறும் தெலுங்கு படவுலகம்!


தங்க தாம்பாளத்தோடு தமிழ் பட இயக்குனர்கள் காத்திருக்க, ம்ஹ§ம் என்று தெலுங்கு படங்களில் நடிக்க ஆந்திராவுக்கு போனார் ஷாம்லி. 'ஓய்...' என்ற படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை ஆனந்த் என்பவர் இயக்குகிறார்.

ஆசை ஆசையாக அழைத்த தெலுங்கு படவுலகம், இப்போது "அம்மாடியோவ்..." என்ற அதிர்ந்து போயிருக்கிறதாம். என்னாச்சு? எல்லாம் ஷாம்லியின் அப்பா கொடுக்கும் ஆர்டிஎக்ஸ் அதிரடிகள்தான் என்கிறார்கள்! காலையில் இருந்து மாலை வரைக்கும்தான் கால்ஷீட். அதற்கு மேல் கேட்டாலும் கிடையாது என்று பிடிவாதம் பிடிக்கிறாராம். படத்தில் இடம்பெறும் இரவு நேர காட்சிகளிலும் நடிக்க முடியாது என்று டார்ச்சர் கொடுப்பதுதான் தாங்க முடியவில்லை என்கிறார்கள்.

இத்தனைக்கும் ஒரே பேமென்ட்டாக இருபது லட்சத்தை முன் கூட்டியே வாங்கிவிட்டாராம் ஃபாதர் ஆஃப் ஷாம்லி. அப்படியிருந்தும் கால்ஷீட் சொதப்புவதும், ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த பின்பும், இது சரியில்லே, அது சரியில்லே என்று அலட்டுவதும் தாங்கலே என்கிறது ஆந்திரா வட்டாரம்.

அண்டை மாநிலமல்லவா? ஆந்திராவில் சாரல் அடித்தால் தமிழ்நாட்டில் தும்மல் சத்தம் கேட்குமே! ஷாம்லியா? வேணாம்ப்பா என்று தலை தெறிக்க ஓடுகிறார்கள் தமிழ்ப்பட இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும்!

அசினோடு டூயட்? -அலறும் மும்பை ஹீரோக்கள்!


சலவைக் கல் மேனி, எங்கள் சக்சஸ் ராணி அசினை பற்றி இப்படியரு புகாரா? அதிர்ச்சியில் இருக்கிறார்கள் அசின் ரசிகர்கள்! மும்பை பத்திரிகைகளில் லேசாக முணுமுணுக்கப்பட்டிருக்கும் ஒரு சேதி, அசத்தல் ராணி அசினுக்கு அழகு சேர்ப்பதாக இல்லை. என்னவாம்?

லண்டன் ட்ரீம்ஸ் படத்திற்காக லண்டனுக்கு போனார் அசின். கூடவே போயிருந்தார்கள் அஜய் தேவ்கானும், சல்மான்கானும். அங்கே படமாக்கப்பட்ட டூயட் காட்சிகளில் இரண்டே நாட்கள் தலை காட்டிவிட்டு தலைதெறிக்க மும்பைக்கு ஓடி வந்திருக்கிறார்கள் இருவரும். காரணம்? அசினின் வியர்வைதானாம்!

பொதுவாகவே வேர்த்துக் கொட்டும் உடல்வாகு கொண்டவர் அசின். இதனால் பக்கத்தில் போகவே அஞ்சுகிறார்களாம் ஹீரோக்கள். எத்தனையோ வாசனை திரவியங்கள் வந்தாலும், அவற்றை பயன்படுத்தினால் தலைவலி வருகிறது என்பதற்காக தொடுவதே இல்லை Ajay அசின். தமிழ் ஹீரோக்கள் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டாலும், சல்மானுக்கும், தேவ்கானுக்கும் தேவையா இது? 'பர்ஃயூம்' யூஸ் பண்ணினால் படப்பிடிப்பு. இல்லையென்றால் போங்கய்யா, நீங்களும் உங்க ஹீரோயினும்' என்கிறார்களாம்.

இந்த செய்தி அசினின் வளர்ச்சி பிடிக்காத மற்ற ஹீரோயின்களின் உள் குத்தாக இருக்குமோ என்றும் அச்சப்படுகிறது அசின் தரப்பு.

மானேஜரை ஹீரோவாக்கிய கெளதம்மேனன்


என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறார் கெளதம்மேனன். ஒரு புராஜக்டிலிருந்து இன்னொரு புராஜக்டிற்கு தாவிக்கொண்டிருக்கும் கெளதம், தனது மானேஜரை திடீர் ஹீரோவாக்கியுள்ளார்

’வாரணம் ஆயிரம்’ படம் முடிந்த கையோடு, கெளதமின் மண்டைக்குள் உதித்த கதையும் ஆயிரம் இருக்கும் போல.’சென்னையில் ஒரு மழைக்காலம்’ படத்திற்கு ஆயத்தமானவர், திடீரென அந்த புராஜக்டை தள்ளிவைத்தார். இனி அந்த படம் அவ்வளவுதான் என செய்தி போட்ட பத்திரிகையாளர்கள் மீதும் பாய்ந்தார்.’சென்னையில் ஒரு மழைக்காலம்’கைவிடப்படவில்லை என உறுதி அளித்தார்.

இதனைத்தொடர்ந்து வேறு படத்திற்கான கதை விவாதத்தில் தீவிரம் காட்டினார். அந்த படம்தான் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. சிம்பு-த்ரிஷா நடிக்கும் இப்படம் சினிமாவை பின்னணியாக கொண்ட கதை என்கிறது கோலிவுட். இதில் சிம்பு உதவி இயக்குனர் வேடத்தில் நடிக்கிறாராம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இன்னொரு புதிய படத்தையும் இயக்கிவருகிறாராம் கெளதம். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது கார்த்திக். இது சூர்யாவின் தம்பியோ,பழைய கார்த்திக்கோ இல்லை. கெளதமின் மானேஜராக இருக்கும் கார்த்திக்காம். நாயகியாக ஷமீராரெட்டி நடிக்கிறார். கடந்த இரு தினங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்படம் தவிர அடுத்தமாதம் இன்னொரு புதிய படத்தை இயக்கவும் அட்வான்ஸ் வாங்கியுள்ளாராம்.

ஆம்பிளை சில்க்....! ஹீரோவை பாராட்டிய இயக்குனர்


டாக்டர் ராம் நடிக்கும் 'பிரம்மதேவா' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா! 'இங்கே பெரிய பெரிய சர்ஜன்களெல்லாம் வந்திருக்காங்க. அவங்களை அன்போடு வரவேற்கிறேன்' என்றார் டாக்டர். மேடைக்கு கீழேயே நிறைய அறுவை(சிகிச்சை) நிபுணர்கள் இருந்ததால், பேசிய யாரும் அறுவை போடாதது ஆறுதல்! ஆச்சர்யம் என்னவென்றால், இதில் ராமுடன் சேர்ந்து மேலும் ஐந்து டாக்டர்கள் நடித்திருக்கிறார்களாம்.

முன்னதாக திரையிடப்பட்ட மூன்று பாடல்கள் நவரசம் என்றால் அதில் ஒரு ரசம் உச்சம்! ஆடியோவை வெளியிட வந்திருந்த டைரக்டர் வசந்த், 'ஆம்பிளை சில்க் ஸ்மிதா மாதிரி இருக்கிறார் கதாநாயகன் ராம்' என்று சொல்ல, அவரது ரசிகர்கள் பலமாக கைத்தட்டினார்கள். டாக்டர் ராம், தனது சிக்ஸ்பேக்ஸ் வயிற்றை முமைத்கான் வயிறோடு இணைத்து இணைத்து ஆடியதை பார்த்தால் பேஷண்டுகளே கூட 'பேஸ்த்' அடித்துப் போவார்கள். அந்தளவுக்கு கிளுகிளு...

இரட்டை வேடத்தில் நடிக்கிறார் போலும். வில்லேஜ் பேக் ட்ராப்பில் ஒரு காலை தாங்கி தாங்கி நடந்து கொண்டே பாடும் டூயட் ஒன்று இந்த ஆண்டின் சூப்பர் ஹிட்டாக விளங்கக் கூடும். (புதிய இசையமைப்பாளர் முத்துராஜுக்கு ஒரு ஓ....)

'நல்ல நேரத்திலே படம் எடுக்க வந்திருக்கிறார் டாக்டர் ராம். சின்ன படங்களுக்கு கட்டாயமாக தியேட்டர் கொடுக்கணும் என்ற முடிவை எடுத்து, அதை ஏப்ரல் 1 ந் தேதியில் இருந்து அமல் படுத்தப்போறோம். இந்த நேரத்தில் டாக்டர் ராம் நடித்த இந்த பிரம்மதேவா படத்திற்கு இரண்டு வாரம் தியேட்டர் உத்தரவாதம் உண்டு' என்று ஆறுதல் வார்த்தைகள் கூறினார் தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன்.

திருச்சியில் பெரிய மருத்துவமனை வைத்திருக்கும் டாக்டர் ராமின் பொழுதுபோக்கு கடலுக்குள் மூழ்கி கடல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதுதானாம். இப்போ சினிமாங்கிற கடலில் குதித்திருக்கிறார். கிடைப்பது முத்தாகவே இருக்கட்டும்...

'சரக்கு' அடிக்கிற ஹீரோ.... சந்தோஷப்பட்ட இயக்குனர்!


இரண்டரை மணி நேர படத்தின் இரண்டரை வரி கதையை நிருபர்களிடம் சொல்வதற்கு ஒரேயடியாக அஞ்சுகிற இயக்குனர்களுக்கு மத்தியில், 'அலையோடு விளையாடு' ராகவனின் துணிச்சலுக்கு ஒரு சபாஷ் போடலாம். டைட்டிலில் துவங்கி, வணக்கம் போடுகிற வரைக்கும் சீன் பை சீனாக சொல்லிக் கொண்டிருந்தார். அதுவும் ஏராளமான நிருபர்கள் திரண்டிருந்த பிரஸ்மீட்டில்!

நீங்கள்ளாம் பத்திரிகையில் எழுதுற விஷயத்தைதான் எனது கதையில் மிக முக்கியமான கருத்தாக எடுத்துக் கொண்டிருக்கிறேன். இலங்கை கடற்படை சுட்டுத்தள்ளும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சுடப்பட்டு இறந்தபின் அந்த மீனவனின் குடும்பம் என்னாகிறது? அவனுக்குள்ளும் ஒரு காதல் இருந்திருக்குமல்லவா, அந்த காதல் என்னவாகிறது? இதையெல்லாம்தான் 'அலையோடு விளையாடு' சொல்லப் போகிறது என்றார்.

செவளை, 28 மணி நேர குடிகாரன், கேர் ஆஃப் டாஸ்மாக், என்ற பெயர் பலகையோடு அறிமுகப்படுத்துகிறாராம் ஹீரோவை! இந்த படத்திற்கு ஹீரோ தேடிக் கொண்டிருந்தபோதுதான் தியாகுவை பார்த்தேன். அவரும் பதினைந்து வருசமா ஹீரோவாகனும்னு ட்ரை பண்ணிகிட்டு இருக்காரு. ஒருநாளு இவருகிட்டே பேசிட்டு இருக்கும்போது, சைக்கிளில் கிராஸ் பண்ணின ஒருத்தர், 'என்னா தியாகு, காலையிலே சரக்கு வுட்டுட்டியா' என்று கேட்டுட்டு போனார். அப்பவே முடிவு பண்ணிட்டேன். இவருதான் என் படத்திற்கு ஹீரோன்னு.

நிஜத்திலே என்ன பண்ணினோமோ, அதைதான் படத்திலேயும் பண்ணியிருக்கோம் என்றார் ராகவன்.

டைரக்டர் காமெடியா பேசினாலும், படம் சீரியஸ் ஆக இருக்கும்னு காட்சிகள் சொல்லுது...!

Sunday, March 15, 2009

முதலை'யிடம் சிக்கியதில்லை - சுஹாசினி


நான் நடிக்க வந்த புதிதில், திரையுலகில் நிறைய முதலைகள் இருக்கின்றன, பார்த்து பத்திரமா இரு என்று சொன்னார்கள். ஆனால் அப்படி யாரிடமும் நான் சிக்கியதில்லை. என் அனுபவத்தில் அப்படி யாரையும் நான் பார்த்ததில்லை என்றார் நடிகை சுஹாசினி்.

பிரபல ஒளிப்பதிவாளர் கே.ராஜ்ப்ரீத் முதல்முறையாக தயாரித்துள்ள அலையோடு விளையாடு என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிலிம்சேம்பர் தியேட்டரில் நடந்தது. பாடல்களை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குநர் ஆர். பார்த்திபன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், ராஜ்ப்ரீத் வெகுளியான, நல்ல மனுசன். என்னோட டார்லிங் டார்லிங் டார்லிங் ஷூட்டிங்கின் போது, பனை மரத்தில் ஆட்கள் ஏறுவது போல ஒரு காட்சி எடுத்தோம். ஆட்கள் ஏறின பிறகுதான் தெரிஞ்சது, எல்லாமே மொட்டை மரங்கள்னு. உடனே ஏறுவதை நிறுத்தச் சொல்லிட்டேன். உடனே ராஜ்ப்ரீத் சொன்னாரு, சார் வேணும்னா இப்படி எடுத்திடலாம்... மேல ஒண்ணும் இல்லாததால எல்லாரும் கீழே இறங்கிட்டாங்கன்னு எடுத்திடுவோமேன்னாரு, என்றார் சிரித்தபடி.

குருவை மிஞ்சிய சிஷ்யரான பார்த்திபன் இப்படிச் சொன்னார்:

'தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத, அவ்வளவு சுலபத்தில் ஒதுக்க முடியாத பெயர் ராஜ்ப்ரீத். நல்ல மனிதர் என்பதற்கு இவர் ஒரு அளவுகோல். எத்தனையோ பேருக்கு வாழ்க்கை கொடுத்த மனிதர். புதிய பாதை பைனான்ஸ் பிரச்சனையால் நின்றுவிட்டது.

அப்போதெல்லாம் ராஜ்பரீத்தின் ஸ்கூட்டரில் ஏறிக் கொண்டு ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கியது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கு. நாங்க ரெண்டுபேரும் அடிச்ச காமெடி இதுவரை எந்த சினிமாவிலும் வாராதது.

எந்த ஜோக் அடிச்சாலும் உடனே சிரிச்சுடுவாரு, மறுநாள் வந்து அந்த ஜோக் என்னன்னு விளக்கமா கேட்பாரு!', என்றார்.

நடிகை சுஹாசினி:

26 வருடங்களுக்கு முன்பு நான் சினிமாவுக்கு வந்தபோது, 'சினிமா உலகில் நிறைய முதலைகள் இருக்கின்றன' என்று என்னை பயமுறுத்தினார்கள். ஆனால் என் அனுபவத்தில் அப்படி எல்லாம் இல்லை. எந்த முதலையும் என்னை பயமுறுத்தவில்லை. நானும் அப்படி ஒரு அனுபவத்தில் சிக்கவில்லை. சாதாரணமானவர்களை விட, சினிமா உலகில் எல்லோரும் நல்லவர்கள்.

சினிமாவில், நான் கெட்டவர்களை சந்திக்கவே இல்லை. என் முதல் படத்திலேயே நல்ல குடும்பத்தை சேர்ந்த ஒளிப்பதிவாளர் ராஜ்ப்ரீத், ஸ்டில்ஸ் ரவி போன்றவர்கள் அறிமுகமானார்கள். நான் இன்னும் வெற்றிகரமாக இயங்குவதற்கு இவர்களைப் போன்றவர்கள்தான் காரணம்.

சினிமாவில் மட்டுமே இன, மொழி வேறுபாடு கிடையாது. இதற்கு உதாரணம், ராஜ்ப்ரீத். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அவர், தமிழ்நாட்டில் அனைவருக்கும் உறவினர் போல் ஆகி விட்டார் என்றார்.

விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், செயலாளர் சிவசக்தி பாண்டியன், சுசீந்திரன், படத்தின் கதாநாயகன் விஜயன், கதாநாயகி கார்த்திகா, இசையமைப்பாளர்கள் சபேஷ்-முரளி, டைரக்டர் ராகவன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், கவிஞர் சினேகன் ஆகியோரும் பேசினார்கள்.

பத்திரிகையாளர் அமலன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

அடுத்த பான்ட் நாயகி ப்ரீதா?


ஸ்லம்டாக் மில்லியனர் நாயகி ப்ரீதா பின்டோ, அடுத்த ஜேம்ஸ் பாண்ட் பட நாயகி என்று பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.அடுத்த ஜேம்ஸ்பாண்ட் பட நாயகிக்கான ஸ்கிரீன் டெஸ்ட்டுக்கு ப்ரீதா அழைக்கப்பட்டுள்ளாராம். இதன் மூலம் பாண்ட் படத்தின் நாயகியாக ப்ரீதா தேர்வு செய்யப்படுவார் என்று பலமாக பேசப்படுகிறது.

ஏற்கனவே குவாண்டம் ஆப் சொலஸ் படத்தின் ஆள் தேர்வின்போதே ப்ரீதாவை பாண்ட் படத் தயாரிப்பாளர்கள் பார்த்துள்ளனர். இருப்பினும் ஏதோ யோசனையில் அவரை விட்டு விட்டனர். ஆனால் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் வெற்றி தற்போது ப்ரீதாவின் மீது பாண்ட் பட தயாரிப்பாளர்கள் மீண்டும் பார்வையைத் திருப்ப உதவியுள்ளது.

ஸ்லம்டாக்கில் நடித்துப் பெயர் பெற்று விட்ட ப்ரீதா இப்போது ஹாலிவுட்டின் பிரபல நாயகிகள் வரிசையை நோக்கி வேகமாக நடை போட ஆரம்பித்துள்ளார். சமீபத்தில்தான் உடி ஆலன், ப்ரீதாவை தனது அடுத்த படத்திற்கு புக் செய்தார் என்பது நினைவிருக்கலாம்.

இப்போது பாண்ட் பட வாய்ப்பு ப்ரீதாவின் கதவை தட்டியுள்ளது.

ஜோ'வின் வாரிசு காஜல்!


ஜோதிகாவின் அடுத்த வாரிசு காஜல் அகர்வால்தான் என்று கோலிவுட்டில் ஏகோபித்த குரலில் கூறத் தொடங்கியுள்ளனர்.முக பாவனைகளை விதம் விதமாக காட்டுவதில் ஜோதிகாவுக்கு நிகர் அவர்தான். டான்ஸிலும் கூட முடியாத ஸ்டெப்ஸ்களில் தனது சின்னச் சின்ன முக பாவனைகளால் அதை நேர்த்தியாக்கி விடுவார் ஜோதிகா.

அந்த இடத்தை இப்போது காஜல் அகர்வால் பிடித்து விட்டதாக கூறுகிறது மோதி விளையாடு பட யூனிட்.சரண் இயக்கியுள்ள மோதி விளையாடு படத்தில் காஜல்தான் நாயகி. இயக்குநர் சரண் ஏதாவது ஒரு காட்சியைச் சொன்னால் சட்டென்று அதை தனது முகத்திற்குக் கொண்டு வந்து விடுகிறாராம் காஜல்.

பாடி லாங்குவேஜை விட காஜலின் முக பாவனைகள் படு பவர்ஃபுல் என்கிறது பட யூனிட். அதேபோல டான்ஸிலும் கூட சின்னச் சின்ன சேஷ்டைகளை சேர்த்து புது வடிவம் கொடுத்து விடுகிறாராம் காஜல்.

பாரதிராஜா கையால் குட்டுப்பட்டவராயிற்றே, சாமானியமானவராகவா இருப்பார்..!

வீல்சேர் நடிக்கும் 'தலை எழுத்து'!


தலை எழுத்து எனும் புதிய திரைப்படத்தில் ஒரு வீல்சேரை முக்கிய பாத்திரமாகவே தோன்ற வைத்துள்ளார்களாம்.

ஜா‌க்‌ பி‌லி‌ம்‌ பு‌ரொ‌டக்‌ஷன்‌ஸ்‌ சா‌ர்‌பி‌ல்‌ ரி‌‌ச்‌சர்‌ட்‌ரா‌ஜ்‌ தயா‌ரி‌த்‌து நடி‌த்‌துள்‌ள படம்‌ தலை‌ எழுத்‌து. இப்‌படத்‌தி‌ல்‌ அவருக்‌கு ஜோ‌டி‌யா‌க கொ‌க்‌கி‌, தி‌ருவண்‌ணா‌மலை‌ போ‌ன்‌ற படங்‌களி‌ல்‌ நடி‌த்‌த பூ‌ஜா‌ கா‌ந்‌தி‌ நடி‌த்‌துள்‌ளா‌ர்‌. இவர்‌களுடன்‌ பா‌லா‌சி‌ங்‌, டே‌னி‌யல்‌ பா‌ஸ்‌கர்‌, டி‌ஸ்‌யூ‌ம்‌ பக்‌ரூ‌, கண்‌ணன்‌, சி‌வா‌, ஜெ‌யபி‌ரகா‌ஷ்‌, ஆர்‌.ஆர்‌.ரெ‌ட்‌டி‌, எத்‌தி‌ரா‌ஜ்‌, மீ‌ரா‌கி‌ருஷ்‌ணன்‌, லட்‌சுமி‌ ஆகியோர்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌.

இப்‌படத்‌தி‌ன்‌ கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ இயக்‌கி‌யு‌ள்‌ளா‌ர்‌ எத்‌தி‌ரா‌ஜ்‌. டோ‌ம்‌னி‌க்‌ சே‌‌வி‌யோ ஒளி‌ப்‌பதி‌வு‌‌ செ‌ய்‌ய‌‌, கா‌ட்‌வி‌ன்‌ இசை‌ அமை‌த்‌துள்‌ளா‌ர்‌. பா‌டல்‌களை‌ பி‌ரி‌யன்‌, ஜெ‌கன்‌ எழுதி‌யு‌ள்‌ளனர்‌. நடனம்‌ - கா‌தல்‌ கந்‌தா‌ஸ்‌, வி‌ஜய்‌ ‌சி‌வசங்‌கர்‌, கலை‌ - ரவீ‌ந்‌தி‌ரன்‌, படத்‌தொ‌குப்‌பு‌ - ஜே‌. என்‌. ஹர்‌ஷா.

இப்‌படம்‌ பற்‌றி‌ கதா‌நா‌யகன்‌ ரி‌ச்‌சர்‌ட்‌ரா‌ஜ் கூறுகை‌யி‌ல் “‌பே‌சமுடி‌யா‌ம, கா‌து கே‌க்‌கா‌ம, நடக்‌க முடி‌யா‌ம ரொ‌ம்‌ப கஷ்‌டபடுற சூ‌ழ்‌நி‌லை‌யி‌ல நி‌றை‌ய பே‌ர்‌ இருக்‌கா‌ங்க. அவு‌ங்‌களோ‌ட மை‌ண்‌ட்‌ல என்‌ன இருக்‌குன்‌னு நமக்‌கு தெ‌ரி‌யா‌து.

அவு‌ங்‌க என்‌ன பே‌ச நி‌னை‌க்‌கி‌றா‌ங்‌கன்‌றதை‌ சா‌ப்‌ட்‌வே‌ர்‌ மூ‌லமா‌ கொ‌ண்‌டு வந்‌‌து வெ‌ளி‌ப்‌படுத்‌துற புதிய கருத்தை மையமாக வைத்து தலை எழுத்து கதையை உருவாக்கியுள்ளோம்.

நா‌ன்‌ நி‌யூ‌சுலா‌ந்‌துல இருக்‌கும்‌ போ‌து ஒரு ஹோ‌ட்‌டல்‌ வச்‌சி‌ருந்‌தே‌ன்‌. அப்‌போ‌ என்‌ கடை‌க்‌கு தி‌னமும்‌ ஒருத்‌தர்‌ வீ‌ல்‌ சே‌ர்‌ல வருவா‌ர்‌. அவரா‌ல பே‌ச முடி‌யா‌து, கை‌கா‌ல்‌ அசை‌க்‌க முடி‌யா‌து. அதனா‌ல அவர்‌ கூடவே‌ ஒருத்‌தர்‌ இருப்‌பா‌ர்‌. அவர்‌ தா‌ன்‌ அவருக்‌கு சா‌ப்‌பா‌டு ஊட்‌டி‌ வி‌டுவா‌ர்‌. அவரை‌ பா‌ர்‌த்‌து தா‌ன்‌ என்‌ மை‌ண்‌ட்‌ல இந்‌த கதை‌ உருவா‌ச்‌சு.

இந்‌த கதை‌ பண்‌றப்போ‌ அந்‌த கே‌ரக்‌டரா‌ நா‌ன்‌ இருக்‌கனும்‌ன்‌னா,‌ அது சுலபமா‌ன வி‌ஷயமி‌ல்‌ல. அதனா‌ல அவர்‌ என்‌ கடை‌க்‌கு வருபோ‌தெ‌ல்‌லா‌ம்‌ எல்‌லா‌ வே‌லை‌யை‌யு‌ம்‌ வி‌ட்‌டுட்‌டு அவரை‌யே‌ கவனி‌ப்‌பே‌ன்‌. இப்‌படி‌யே‌ ரெ‌ண்‌டு வருஷமா‌ அவர்‌ என்‌ன என்‌ன செ‌ய்‌யு‌றா‌ருன்‌னு அவருடை‌ய அசை‌வு‌களை‌ வா‌ட்‌ச்‌ பண்‌ணி‌ பி‌ரா‌க்‌டி‌ஸ்‌ பண்‌ணி‌க்‌கி‌ட்‌டே‌ன்‌.

வீ‌ல்‌ சே‌ர்‌ல உட்‌கா‌ர்‌ந்தி‌ருப்‌பவர்‌ கா‌லுக்‌கு கீ‌ழே‌ ஒரு கீ‌ போ‌ர்‌ட்‌ இருக்‌கும்.‌ அது வழி‌யே‌ டை‌ப்‌ பண்‌ணி‌ அதோ‌ட நி‌யூ‌ஸ்‌ எல்‌லா‌ம்‌ பி‌ரை‌னுக்‌கு அனுப்‌பி‌ அது கா‌துல பே‌சுற மா‌தி‌ரி‌ ஒரு மி‌ஷி‌ன்‌ செ‌ட்‌ பண்‌ணி‌யி‌ருக்‌கோ‌ம்.‌ அதான் தலை எழுத்து.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, கதாநாயகன், மற்ற கேரக்டர் மாதிரியே வீல் சேருக்கும் முக்கியத்துவம் இருக்கு.

சா‌ப்ட்‌‌வே‌ர்‌ டெ‌க்‌கனா‌லஜி‌, பி‌‌ரை‌ன்‌ டே‌ட்‌டா‌ டெ‌க்‌னா‌லஜி விஷயத்தை நி‌யூ‌சுலா‌ந்தில் ஒருத்‌தர்‌ கண்‌டுபி‌டி‌ச்‌சார். அதை வச்சிதான் இந்‌த "தலை‌ எழுத்‌து" உருவாக்கியிருக்கோம்.

இந்‌த படத்‌தை‌ தயா‌ரி‌ப்‌பது ரொ‌ம்‌ப ரி‌ஸ்‌க்‌குன்‌னு சொ‌ன்‌னா‌ங்‌க. ஏன்‌ பண்‌றீ‌ங்‌கன்‌னு கூட கே‌ட்‌டா‌ங்‌க. ஆனா‌ எனக்‌கு இந்‌த படம்‌ பண்‌ணனும்‌னு ரொ‌ம்‌ப ஆசை‌யா‌யி‌ருந்‌தது. இதுல ஒரு நல்‌ல கருத்து இருக்‌கு. இது மக்‌களுக்‌கு தெ‌ரி‌யு‌னும்‌னு நி‌னை‌ச்‌சே‌ன்‌.

இந்‌த மா‌தி‌ரி‌ இருப்‌பவு‌ங்‌களுக்‌கு இந்‌த படம்‌ பயன்‌படனும்‌னு நி‌னை‌ச்‌சி‌தா‌ன்‌ இதை‌ பண்‌ணி‌னே‌ன்‌. படத்‌தை‌ பா‌ர்‌த்‌துவி‌ட்‌டு மக்‌கள்‌ தா‌ன்‌ முடி‌வு‌ சொ‌ல்‌லனும்‌. ஏப்‌ரல்‌ 14 ஆம்‌ தே‌தி‌ படம் ரி‌லீ‌ஸ்‌, என்கிறார் ரிச்சர்ட் ராஜ்.

இந்த ரிச்சர்ட் ராஜ் ஏற்கெனவே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான். வல்லரசு, ஜெயம் படங்களில் வில்லனாக (அதாவது வில்லன்களில் ஒருவராக) நடித்துள்ளார்.

படத்தின் இயக்குநர் எத்திராஜ் வேறு யாருமல்ல, ரிச்சர்ட்ராஜின் சொந்த தந்தை.

'ஹீரோவா... வேணாம்பா'!!


'என்னைப் பார்க்கிற பத்திரிகைக்காரங்களும் சரி, நண்பர்களும் சரி... அடுத்து ஹீரோவா எப்ப நடிக்கப் போறேன்னுதான் கேக்கறாங்க. அவங்களுக்கு என்னோட ஒரே பதில்... வேணவே வேணாம்பா, என்பதுதான்.என்னோட களம்... நான் விளையாட வசதியான மைதானம் படம் இயக்குதல்தான். இதில் நான் ரொம்ப வசதியாக உணர்கிறேன்', என்கிறார் இயக்குநர் வி்ஷ்ணுவர்தன்.

சர்வம் படத்தை முழுமையாக முடித்துவிட்டு, இம்மாத இறுதியில் ரிலீஸ் செய்யக் காத்திருக்கும் விஷ்ணு, செய்தியாளர்களைச் சந்தித்தார் அவரது அலுவலகத்தில்.பில்லா என்ற பெரிய படம் கொடுத்துவிட்டு, மீண்டும் நட்சத்திர அந்தஸ்து இல்லாத மாதிரி ஒரு படம் தரக் காரணம் என்ன...

நட்சத்திரங்களை மட்டும் நம்பும் ஆள் நானல்ல. எனக்கு கதை முக்கியம். அது யாரைக் கேட்கிறதோ அவர்களைத் தேடி நான் போவேன். அவ்வளவுதான். அடுத்த கதைக்கு என் தம்பி கிரு்ணா பொருத்தமாக இருந்தால் கிருஷ்ணாவிடம் காலஷீட் கேட்பேன். ரஜினி சார் மாதிரி பெரிய நடிகர்கள்தான் அதற்கு தேவை என்றால் அவர்களைத் தேடியும் போவேன்.

சர்வம் என்ன மாதிரி படம்?

நிறைய பேர் பில்லா மாதிரி ஸ்டைலிஷ் படமா... அறிந்தும் அறியாமலும் மாதிரி படமா என்றெல்லாம் கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. இது ஒரு புதிய படம். புதிய வண்ணத்தில், புதிய உணர்வுகளைத் தரும் பிரெஷ்ஷான படம்.

ஆர்யா-த்ரிஷாவுக்கு மிக நெருக்கமான காட்சிகள் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கர்ளே...?

ஒரு பையனும் பொண்ணும் புதுசா காதலிச்சா எப்படி இருக்கும்... அவங்களுக்குள்ள எப்படியெல்லாம் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்... அதை ஆன்ஸ்கிரீன்ல ஆர்யா-த்ரிஷா ஜோடிகிட்ட பார்க்கலாம்.

அடுத்த படம்...?

இன்னும் திட்டமிடவில்லை என்பதே உண்மை. சர்வம் ரிலீஸ் ஆகட்டும். ஒரு நான்கு மாதம் கழித்து சொல்கிறேன். ஹீரோ என் தம்பி கிருஷ்ணாவாகவும் இருக்கலாம்... வேறு பெரிய நடிகராகவும் இருக்கலாம்.

நீங்களே ஹீரோவாக நடிக்கலாமே...?

இந்தக் கேள்விக்கான பதில்தான் முதல் பாராவில் நீங்கள் படித்தது!!

'கோல்டு கோட்டட் பூ' சந்தியா!


அழகிய நடிகை சந்தியா, பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார். பிரசன்னாவுடன் இணைந்து நடிக்கும் மஞ்சள் வெயில் படத்தில் இரு பாடல்களை பாடியுள்ளாராம் சந்தியா.
பாகவதர் காலத்தில்தான் நடிகர்களும், நடிகைகளும் தாங்களே பாடுவார்கள். இப்போது அப்படியெல்லாம் இல்லை. எந்த மொழியாக இருந்தாலும் டப்பிங் கொடுத்து படத்தை முடித்து விடுகிறார்கள்.

இருப்பினும் அவ்வப்போது ஹீரோக்களும், ஹீரோயின்களும் சொந்தக் குரலில் பாடும் அரிதான நிகழ்வுகளும் இடம் பெறத்தான் செய்கின்றன.முன்பு ஷாலினி, அமர்க்களம் படத்தில் சொந்தக் குரலில் ஒரு பாடலைப் பாடினார். அருமையாகவே இருந்தது ஷாலினியின் குரல்.இப்போது அந்த வரிசையில் சேருகிறார் காதல் புகழ் சந்தியா. மஞ்சள் வெயில் படத்தில் இரு பாடல்களைப் பாடியுள்ளாராம் சந்தியா.

எப்படி நடந்தது இது.. இயக்குநர் வசீகரன் இதுகுறித்துக் கூறுகையில், சந்தியா ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாகவே இருக்க மாட்டார். ஏதாவது பாடலை முனுமுனுத்தபடி இருப்பார். சில நேரங்களில் சத்தமாகவும் பாடுவார்.அவரது குரல் வசீகரமாக இருப்பதை உணர்ந்த நான் படத்தில் வரும் ஒரு பாடலை பாடக் கூறினேன். அவரும் முழுமையாக பாடிக் காட்டினார். இதையடுத்து அதை அப்படியே இசையமைப்பாளர் பரத்வாஜிடம் போட்டுக் காட்டினேன்.

அவருக்குக் குரல் பிடித்துப் போகவே, கோல்டு கோட்டட் பூ நீயா? ஐஸ் போட்ட தீ நீயா? என்ற பாடலையும், ஷைலாலோ ஷைலாலோ என்ற பாடலையும் பாடினார் சந்தியா...

இதுதான் நடந்தது என்று கூறி முடித்தார் வசீகரன்.

நயன்தாரா துலாபாரம்!


கேரளாவில் உள்ள புகழ்பெற்ற கோயிலான செட்டிகுளக்கரை தேவி கோயிலுக்கு நடிகை நயன்தாரா தனது எடைக்கு எடை நேந்திரம் பழம் தந்து சாமி கும்பிட்டார்.

ஆலப்புழை மாவட்டம் மாவோலிக்கரை அருகில் உள்ளது இந்த புகழ்பெற்ற கோயில். இங்கு நேர்த்திக் கடனாக எடைக்கு எடை பொருள் காணிக்கை செலுத்துவது மிகப் பிரபலமான ஒன்று. வெல்லம், சர்க்கரை, உணவு தானியங்கள் போன்றவை காணிக்கையாகத் தரப்படுவது வழக்கம்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 11 மணிக்கு இந்தக் கோயிலுக்கு வந்த நயன்தாரா, அங்குள்ள துலாபாரத்தில் ஏறி அமர்ந்தார். ஒரு பக்கம் அவர் உட்கார, அரது எடைக்கு எடை நேந்திரம் பழம் தட்டில் வைக்கப்பட்டது. இது இங்கு மிக உயர்ந்த காணிக்கையாகக் கருதப்படுகிறது.

பின்னர் அங்கேயே பிற்பகல் வரை தங்கியிருந்தார். அவருக்கு கஞ்சி பிரசாதம் மதிய உணவாக வழங்கப்பட்டது. பின்னர் பிற்பகல் தரிசனம் முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்.

ஆதவன் படப்பிடிப்பிலிருந்து இரு தினங்கள் விடுப்பில் சொந்த ஊர் சென்ற நயன், தனது நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பகவதி அம்மனுக்கு என்னுடைய நன்றிக் கடனைச் செலுத்த வந்தேன். ஏற்கெனவே ஒருமுறை இப்படி துலாபாரம் தந்துள்ளேன். இப்போதுதான் மனதுக்கு நிறைவாக இருக்கிறது எனறார்.

கோடிகளை கேட்கும் ஹீரோக்கள் - மனோரமா பாய்ச்சல்


அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜியெல்லாம் லட்சத்தில்தான் சம்பளம் வாங்கினார். ஆனால் இன்றைய ஹீரோக்கள் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கின்றனர். இதைத் தவிர்க்க புதுமுகங்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஆச்சி மனோரமா பாய்ந்துள்ளார்.

சென்னையில் நாள் நட்சத்திரம் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இதில் மனோரமா கலந்து கொண்டார். முதல் கேசட்டை அவர் வெளியிட இயக்குநர் பேரரசு பெற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில் மனோரமா படு சூடாகப் பேசினார். அவர் பேசுகையில், கோடி கோடியாக வாரி இறைத்து படங்கள் எடுக்கும் இந்நாளில் சிறிய பட்ஜெட்டில் இப்படத்தை முடித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மக்கள் தொகை 6 கோடிதான். ஆனால் ஹீரோக்கள் ரூ.7 கோடி, 8 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்கிறார்கள். அதை எப்படி கொடுக்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள்.இதனால்தான் புதுமுகங்களை ஊக்குவிக்க வேண்டும் என்கிறேன். பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். அப்போதுதான் சிறுபட்ஜெட் படங்கள் வரும்.

ஒருமுறை சரோஜாதேவி என்னிடம் பேசும்போது, சினிமாவில் கோடி கோடியாய் சம்பளம் கேட்கிறாங்க. கேட்கவே பயமா இருக்கே என்றார்.அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் கடைசியாக வாங்கிய அதிகபட்ச சம்பளம் ரூ.11 லட்சம்தான். அண்ணன் சிவாஜி ரூ.6 லட்சம் தான் வாங்கினார்.நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். இப்படி நான் கூறுவதற்காக என்னை யாரும் மிரட்ட முடியாது. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்றார் மனோரமா.

மனோரமாவின் பேச்சு விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹாலிவுட்டில் 'யாவரும் நலம்'!


தமிழ், இந்தியில் வெளியாகியுள்ள யாவரும் நலம் படம் தற்போது ஹாலிவுட்டுக்கும் போகிறது.இந்தியப் படம் ஒன்றை ஹாலிவுட்டில் ரீமேக் செய்வது இதுவே முதல் முறையாம்.

மாதவன், நீத்து சந்திரா உள்ளிட்டோர் நடித்து விக்ரம் குமார் இயக்கிய படம்தான் யாவரும் நலம். இந்தியில் 13பி என்ற பெயரில் இப்படம் வெளியானது.வித்தியாசமான கதையமைப்பு கொண்ட இப்படம் இப்போது ஹாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளது.

ராம்போ, அவுட்லேண்டர் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த வெயின்ஸ்டீன் என்ற நிறுவனம் இந்தப் படத்தை பெர்லின் திரைப்பட விழாவில் பார்த்து அசந்து விட்டதாம்.

இதையடுத்து இப்படத்தின் கதையை வாங்கியுள்ள அந்த நிறுவனத்தால் ஹாலிவுட்டில் அதைத் தயாரிக்கவுள்ளனர்.

இந்தியப் படம் ஒன்று ஹாலிவுட்டில் ரீமேக் ஆவது இதுவே முதல் முறை என்று பெருமையுடன் கூறுகிறார் விக்ரம் குமார்.வழக்கமாக நம்மவர்கள்தான் ஹாலிவுட் படங்களை இங்கு தமிழில் கொடுப்பார்கள். ஆனால் இப்போது முதல் முறையாக தமிழ், இந்தியில் வெளியான ஒரு படம் ஆங்கிலத்திற்குப் போவது பெருமையான

'அலையோடு விளையாடு' விழா! கரை புரண்டோடிய ஜோக்குகள்...


ராஜ்பரீத்! எண்பதுகளில் தமிழ்சினிமாவை நேசித்தவர்களுக்கு பரிச்சயமான பெயர் இது. இன்று முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் ரஜினி, கமல் போன்றவர்களே இவரது ஸ்கூட்டரில் தொற்றிக் கொண்டு பயணம் செய்தவர்கள்தானாம்! ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மறுபடியும் ஒளிப்பதிவு செய்ய வந்திருக்கிறார். சந்தோஷம் என்னவென்றால், இப்படத்தை தயாரிப்பதும் இவரேதான்!

அலையோடு விளையாடு... கார்த்திகா, புதுமுகம் விஜயன் நடித்திருக்கும் இப்படத்தை ராகவன் என்ற புதியவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு, கே.பாக்யராஜ், பார்த்திபன், சுஹாசினி, உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வந்திருந்தார்கள். 'புதிய பாதை பைனான்ஸ் பிரச்சனையால் நின்றுவிட்டது. அப்போதெல்லாம் ராஜ்பரீத்தின் ஸ்கூட்டரில் ஏறிக் கொண்டு ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கியது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கு' என்று கூறிய பார்த்திபன், இருவரும் சேர்ந்து அடித்த ரகளைகளை மேடையில் விவரிக்க, மொத்த கூட்டமும் கைதட்டி ஆர்ப்பரித்தது. 'எந்த ஜோக் அடிச்சாலும் உடனே சிரிச்சுடுவாரு, மறுநாள் வந்து அந்த ஜோக் என்னன்னு விளக்கமா கேட்பாரு' என்று பார்த்திபன் சொல்ல, மறுபடியும் சிரிப்பலை!

முக்கியமான இடங்களுக்கு போகும்போது மணி தேவைப்படும். ஆனால் அந்த மணிக்கே இவர் தேவைப்படுவார் என்று டைமிங்காக ஜோக்'கடித்து' சுஹாசினியை பேச அழைத்தார் தொகுப்பாளர் அமலன்!

'நான் சினிமாவில் நடிக்க வந்தப்போ, என்னை நிறைய பேரு பயமுறுத்தினாங்க. ஆனால், நான் இங்கே நல்லவங்களை மட்டுமே பார்தேன். என் கண்ணில் இன்னும் கெட்டவங்க தென்படலே. நான் சுதந்திரமா சினிமாவை தெரிஞ்சுக்க முடிஞ்சுதுன்னா அதுக்கு என் முதல் படத்தில் கூடவே இருந்த ராஜ்பரீத் போன்ற நல்லவங்கதான் காரணம்' என்றார் சுஹாசினி.

டார்லிங் டார்லிங் படத்தை ஷ§ட் பண்ணும்போது முன்னேறுபவர்களை பற்றி ஒரு டயலாக் வரும். அப்போது சில தொழிலாளர்கள் பனை மரத்தில் ஏறுவது போல ஷாட் வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். சிலரை மரத்திலே ஏற வச்சோம். ராஜ்பரித் ஷ¨ட் பண்ணிட்டு இருந்தாரு. அப்போதான் கவனிச்சேன். அவங்க ஏறிட்டு இருந்தது எல்லாமே மொட்டை மரங்கள். இந்த மரத்திலே ஏறி என்ன செய்யப் போறாங்கன்னு தோணுமில்லையா? அதனால, கேமிராவை நிறுத்த சொல்லிட்டேன். மேலே ஒன்றுமே இல்லாம எதுக்கு ஏறணும். அதனால அந்த ஷாட் வேணாம்னு சொன்னேன் ராஜ்பரீத்திடம்.

வேணும்னா ஒன்ணு செய்யலாம் சார். மரத்திலே எதுவுமே இல்லை. அதனாலே இறங்கிட்டாங்கன்னு, எல்லாரும் இறங்குறா மாதிரி ஒரு ஷாட் எடுக்கலாமா என்றார்! இப்படி பாக்யராஜ் சொன்னபோது திரண்டிருந்த மொத்த கூட்டமும் அடங்க மாட்டாமல் சிரிக்க, விழுந்து விழுந்து சிரித்தார் ராஜ்பரீத்தும்!

எத்தனை நாளாச்சு இப்படி ஒரு கலகலப்பான விழாவை பார்த்து!

மேக்கப் இல்லாத த்ரிஷா... மிரண்டு போகும் ரசிகர்கள்


மேக்கப் இல்லாத நடிகையையும் லாக்கப் இல்லாத போலீஸ் ஸ்டேஷனையும் பார்ப்பதே அபூர்வம். அப்படி அபூர்வத்தை தனது இரண்டு படங்களில் தொடர்ந்து செய்து வருகிறார் த்ரிஷா! விண்ணை தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷ§க்கு மேக்கப் இல்லை என்று கூறிவிட்டாராம் கௌதம் மேனன்.

டிசம்பர் பூக்களாகவே பார்த்து பழகிய த்ரிஷாவின் முகத்தை இப்போது பார்த்தால் அதிர்ச்சியாக கூட இருக்கும். மார்ச் மாதத்தின் மதிய வெயில் போலிருக்கிறாராம். இதில் பல காட்சிகளில் புடவையை உடுத்த சொல்லியிருப்பதால், த்ரிஷாவின் கவர்ச்சியே போச் என்கிறார் என்கிறார்கள்.

ஆனால் ஆடுகளம் படத்தின் பாணியே வேறு என்பதால், மேக்கப் இல்லையென்றாலும் கவர்ச்சியாக இருக்கிறாராம்! வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ§ம் த்ரிஷாவும் ஜோடியாக நடிக்கிறார்கள் இப்படத்தில். இதில் ஆங்கில இந்திய பெண்ணாக நடிக்கும் இவருக்கு தலைமுடியை கர்லிங் ஹேர் ஆக்கியிருக்கிறார்கள். எல்லா காட்சிகளிலும் மாடர்ன் டிரஸ் என்பதால், இந்த மேக்கப் வித்தியாசம் உறுத்தலாக தெரியாது என்கிறார்கள்.

ஒரு மாறுதலுக்கு என்றாலும், மேக்கப் இல்லாமல் ஏன் வதைபடுத்த வேண்டும் த்ரிஷாவையும், அவர்தம் ரசிகர்களையும்?!

பூ படத்திற்கு பிறகு...? - இசை தந்த ஒப்புதல்!


இதுதான் ட்டிரெண்ட் என்று சப்பை காரணம் சொல்லி, சாவு மேளம் அடிப்பவர்களுக்கு மத்தியில் 'வர்றேன் இருடி....வச்சுக்கோ மெலடி' என்று மொத்த இசை ரசிகர்களையும் தன் பக்கம் திரும்ப வைத்தவர் எஸ்.எஸ்.குமரன். பூ படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர், சசியை சந்தித்ததும், இசையமைப்பாளர் ஆனதும் பலமுறை கேட்ட சமாச்சாரம் என்பதால் வேறு விஷயத்திற்கு தாவலாம்.

பூ படத்திற்கு பிறகு இவரை தேடி ஏராளமான வாய்ப்புகள். ஆனால், நல்ல கதையோடு வந்தால்தான் எனது இசை என்பதில் பிடிவாதமாக இருந்துவிட்டாராம் குமரன். இவர் நினைத்த மாதிரியே பிரபல இயக்குனர் தரணியிடம் பணியாற்றிய வி.எஸ்.குமரன் (அட இவருக்கும் உங்க பேர்தானா?) ஒரு கதையை சொல்லியிருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கும் இந்த கதையின் களம் திருநெல்வேலி. பூ படத்தில் பார்வதியின் கணவராக நடித்திருக்கும் அந்த கருப்பு இளைஞர்தான் (இனிகோ) இந்த படத்தின் ஹீரோ!

நின்று நிதானமாக ஆடினாலும், செஞ்சுரி அடிக்காமல் விடமாட்டார் போலிருக்கிறது இந்த இசைக்குமரன்!

கேரளாவில் நமீதா... கிறுக்கு பிடித்த சேட்டன்கள்!


மலையை புரட்டி மல்லாக்க தள்ளிய மாதிரி, ஷகிலாவால் சிதறுண்டு போன தங்கள் மார்க்கெட்டை நிலை நிறுத்த, அவரை அப்படியே 'பேக்கப்' பண்ணி கேரள எல்லையை விட்டே வெளியே துரத்தியது மாலிவுட். அதனால் என்ன? பொண்ணு வச்ச இடத்திலே பன்னு வச்ச கதையாக ஷகிலாவின் சந்தோஷத்தை நமீதா வழியாக அனுபவித்தார்கள் சேட்டன்கள்.

படத்தின் ஹீரோ எவராக இருந்தாலும், அவர்களின் படத்தை ஸ்டாம்ப் சைசில் அச்சிட்டவர்கள், நமீதாவின் படத்தை மட்டும் பெரிசு பெரிசாக அச்சிட்டு கல்லாவை நிரப்பினார்கள். இப்படி அஞ்சல் வழி கல்வி கொடுத்து அசத்துவதை விட, நேரடி ட்யூஷன் எடுத்தால் நன்றாக இருக்குமே என்ற முடிவுக்கு வந்துவிட்டார் நமீதா. முதன் முதலாக மலையாள படம் ஒன்றில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருக்கிறாராம்.

'பிளாக் ஸ்டாலின்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் வேக வேகமாக ஷ§ட் பண்ணப்பட்டு வெகு விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதற்காக நமீ வாங்கியிருக்கும் சம்பளம்? வேணாம்... சொன்னால், மம்முட்டியும், மோகன்லாலும் கல்லை எடுத்து அடிக்கவே வருவார்கள்!

பின் குறிப்பு- ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகிறார் ஷகிலா. அதுவும், சாப்ஃட்வேர் புலி சந்திரபாபு கட்சிக்கு ஆதரவாக! ஓங்கி குத்துறேன்னு ஓட்டு சீட்டை கிழிச்சிரப் போறாய்ங்க...

Followers