Friday, March 13, 2009

விஷால் ஜோடி பிபாசா பாசு


தோரணைக்குப் பிறகு விஷால் நடிக்கும் தீராத விளையாட்டு பிள்ளையில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள். திரு படத்தை இயக்குகிறார்.விஷாலின் முதல் பட ஹீரோயின் ‌‌ரீமாசென் மூன்று பே‌ரில் ஒருவராக ஒப்பந்தமாகியுள்ளார். இரண்டாவது ஹீரோயின் பிபாசா பாசு. கதையை கேட்டதும் ஓகே சொல்லியிருக்கிறார் இந்த பாலிவுட் ரசகுல்லா.

சச்சினுக்குப் பிறகு பிபாசா பாசுவை தமிழில் நடிக்க வைக்க பலர் முயன்றனர். அவர்களுக்கெல்லாம் நோ சொன்னவர் விஷாலுக்கு எஸ் சொன்னது பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.

‌ரீமாசென், பிபாசா பாசு இருவருக்கும் ஈடுகொடுக்கும் இன்னொரு ஹீரோயினை தேடி வருகிறார்கள். அனேகமாக அவர் பிரபல மாடலாக இருக்கலாம் என்கின்றன தகவல்கள்.

இந்தப் படத்துக்குப் பிறகு ஜெயரா‌ஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஷால். படத்துக்கு தீர்க்கத‌ரிசி என பெயர் வைத்துள்ளனர்.

கமல் படத்தில் ஸ்ருதி பாட்டு


கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தின் தீம் பாடலை அவரது மகள் ஸ்ருதி கமல் பாடவுள்ளாராம்.தந்தையின் படத்தில் ஸ்ருதி பாடுவது புதிதல்ல. ஏற்கனவே ஹேராம் படத்தில் அவர் குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் வாரணம் ஆயிரம் படத்திலும் தனது குரல் முத்திரையைப் பதித்தார் ஸ்ருதி.

இந்த நிலையில், தலைவன் இருக்கின்றான் படத்தின் தீம் பாடலை ஸ்ருதி பாடவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தலைவன் இருக்கின்றான் படத்தில் வரும் டிவி ரிப்போர்டர் கேரக்டரில் நடிக்குமாறு ஸ்ருதியை அவரது வட்டாரம் நெருக்கி வருகிறதாம். இந்த ரோலுக்கு இதுவரை எந்த நடிகையையும் போடவில்லை கமல். எனவே ஸ்ருதிக்கு நடிக்கும் வாய்ப்பும் இருக்கவே செய்கிறது.

ராஜேந்தரின் 'ஒரு தலைக்காதல்'!


விஜய டி.ராஜேந்தர் பெரிய பிரேக்குக்குப் பின்னர் அதிரடியாக இரு படங்களை இயக்க வருகிறார்.

ராஜேந்தர் கடைசியாக இயக்கிய படம் வீராசாமி. இதில் அவர் அதிரடி வேடத்தில் அட்டகாசம் செய்திருந்தார். அவருக்கு ஜோடி போட்டிருந்தவர் மும்தாஜ்.

இந்தப் படத்திற்குப் பிறகு அரசியலில் பிசியாகி விட்ட ராஜேந்தர் இப்போது இரு படங்களை தயாரித்து இயக்கப் போகிறார்.

மேலும் இதுவரை தஞ்சை சினி ஆர்ட்ஸ் மற்றும் சிம்பு சினி ஆர்ட்ஸ் என்ற பேனர்களி்ல் படம் தயாரித்து வந்த ராஜேந்தர் முதல் முறையாக தனது இளைய மகன் குறள் பெயரில் உருவாக்கியுள்ள குறள் டிவி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் இந்த இரு படங்களையும் தயாரிக்கப் போகிறார்.

இரண்டில் ஒரு படத்திற்கு ஒரு தலைக்காதல் என பெயர் சூட்டியுள்ளார். 29 வருடங்களுக்கு முன்பு ஒரு தலை ராகம் மூலம் முதன் முதலில் சினிமாவில் புகுந்தவர் ராஜேந்தர். இந்த நிலையில் அதை டைப்பிலான பெயருடன் மறுபடியும் களம் காண்கிறார்.

படத்தின் தலைப்பிலேயே காதல் இருப்பதால், இதுவும் ராஜேந்தர் பாணி காதல் கதைதான் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலும் வழக்கம் போல இதிலும் புதுமுகங்களே நடிக்கவுள்ளனர்.

அதேபோல இன்னொரு படத்தை கிராமத்துப் பின்னணியில் இயக்கப் போகிறாராம் ராஜேந்தர். இதன் பெயர் இன்னும் முடிவாகவில்லை.

சினேகா – ரொமாண்டிக் வில்லி


தனது ட்ரேட்மார்க் சி‌ரிப்பை கழற்றி வைத்து துப்பாக்கியும் கையுமாக சீறிக் கொண்டிருந்தார் சினேகா. படம் பவானி. வைஜெயந்தி ஐபிஎஸ்-சின் ‌ரீமேக்.
விரும்புகிறேனில் அறிமுகமானதிலிருந்து ரொமாண்டிக் ஹீரோயினாக மரத்தை சுற்றி‌ப் பாட்டுப் பாடும் வேடம்தான் சினேகாவுக்கு கிடைத்து வந்தது. புதுப்பேட்டை விதிவிலக்கு. வித்தியாசமான வேடம் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தவருக்கு அடுத்தடுத்து அற்புதமான கேரக்டர்கள் கிடைத்திருக்கின்றன.

பவானியில் காக்கி போட்ட ஐபிஎஸ்ஸாக வருகிறவர் வெங்கட்பிரபுவின் கோவாவில் வில்லியாக அவதாரம் எடுக்கிறார். சினேகா வில்லியா என்று முகம் சு‌ளிக்க வேண்டாம். இது அனைவரும் விரும்பும் ரொமாண்டிக் வில்லி வேடம். ஏறக்குறைய கதாநாயகி மாதி‌ரி. ஹீரோக்கள் ஆ‌ண்ட்டி ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிப்பார்களே அது மாதி‌ரி.

ஹீரோயினாக அமெ‌ரிக்க டிவி நடிகை அறிமுகமாகிறார்.

வாங்கிய இடமெல்லாம் போச்சே... -கலங்கியழும் காமெடி நடிகர்


கொஞ்சம் அசந்தா உச்சந் தலையிலே தண்ணி தெளிச்சு கோலம் போட்ருவாய்ங்க போலிருக்கே என்று கொந்தளித்துக் கொண்டிருக்கிறார் வடிவேலு. உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ என்று படத்திற்கு படம் சந்தேகப்படும் வடிவேலுவுக்கு, இவர் வீட்டு திண்ணையிலேயே உட்கார்ந்து பாடம் கற்பித்துவிட்டார் ஒருவர்.

இவருடன் பல படங்களில் நடித்தவர்தான் இவரும். அண்ணே, ஓவரா வர்ற பணத்தை நிலத்திலே முதலீடு பண்ணுங்கண்ணே என்று ஐடியா கொடுத்தாராம். வாங்குகிற இடத்தையெல்லாம் நேரடியாக போய் பார்க்கவா முடியும்? பத்திரத்தை நம்பி இடத்தை வாங்கிப் போட்ட வைகைப்புயல், தனது தொண்டரடிப் பொடிகளை அனுப்பி இடத்தை செக் பண்ண சொன்னாராம் இப்போது. போன பிறகுதான் தெரிகிறதாம், எல்லாம் புறம்போக்கு லேண்ட். அதற்கெல்லாம் போலி பத்திரம் தயார் செய்து காண்பித்திருக்கிறார் காமெடி. இவர்கள் வைத்திருக்கும் பத்திரத்திற்கும், நிலத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறதாம். அட, புறம்போக்கே என்று சத்தம் போட்டு திட்டகூட முடியாதபடி அதிர்ந்து போயிருக்கிறார் வடிவேலு.

இது போதாது என்று இன்னொரு வேலையும் செய்திருக்கிறார் அந்த பலே காமெடி! அவ்வப்போது 'நீங்கள் வாங்கியிருக்கும் நிலம் அரசுக்கு சொந்தமானது. நிலத்தை ஒப்படையுங்கள்' என்று அரசு முத்திரையுடன் ஓலை வருமாம். என்னய்யா இது என்று வடிவேலு அதிர்கிற நேரத்தில், இவனுங்க எப்பவுமே இப்படிதான். வாங்கும்போது விட்டுருவானுங்க. பின்னாடி வந்து நொய் நொய்ம்பாய்ங்க. விடுங்க பாஸ், வர்ற விலைக்கு வித்துட்டு எஸ்கேப் ஆயிடலாம் என்று ஐடியா கொடுப்பாராம். இப்படி தான் வாங்கிய நிலத்தையெல்லாம் வந்த விலைக்கு விற்றதாக நினைத்த வடிவேலுவுக்கு இப்போதுதான் தெரிகிறதாம். அரசாங்கத்திடமிருந்து வந்ததாக சொல்லப்படும் ஓலையே அண்ணாத்தையின் செட்டப் என்பது.

சிங்கம்னு நினைச்சா இப்படி அசிங்கமாக இருந்திருக்காரே இந்தாளுன்னு புலம்புறாராம். அவ்வ்வ்வ்வ்வ்வ்....

முக்கியமான ஜோடி எது? சர்வம் இயக்குனர் அறிவிப்பு


'மச்சான், தொடர்ந்து உன் முகத்தையே பார்க்க வேண்டியிருக்கேடா' என்று நானே சொல்லியிருக்கிறேன் ஆர்யாவிடம். அந்தளவுக்கு எங்க பிரண்ட்ஷிப் ரொம்ப கலகலப்பா இருக்கும். ஆனால், அவனை மாதிரி துறுதுறுன்னு இருக்கிற ஆளை பார்க்கவே முடியாது. அறிந்தும் அறியாமலும், பட்டியல், படங்களுக்கு பிறகு நாங்க இணையுற மூணாவது படம் சர்வம். இதிலே டோட்டலா நீங்க வேற ஆர்யாவை பார்ப்பீங்க என்றார் விஷ்ணுவர்த்தன்.

ஆர்யாவும், த்ரிஷாவும் முதன்முதலா ஜோடி சேருகிற படம் இது. புதுசா ரெண்டு பேரு எப்படி காதலிக்கிறாங்களோ, அவங்களை பார்க்கிற ஃபீலிங்தான் இவங்களை பார்க்கும் போதும் நமக்கு வரும். அது மட்டுமல்ல, த்ரிஷாவோட சிரிப்பிலே ஒரு அப்பாவித்தனம் இருக்கும். இந்த கதைக்கு அது ரொம்ப தேவைப்பட்டுச்சு. வேணா பாருங்க, இந்த ஜோடி, தமிழ்சினிமாவின் முக்கிமான ஜோடிகளில் ஒன்னா இருக்கும் என்றார்.

பில்லா ரொம்ப ஸ்டைலிஷான படம். அதிலே ஒரு டோன் மெயின்டெயின் பண்ணியிருப்பார் கேமிராமேன் நீரவ்ஷா. இதுவும் அதே மாதிரி ஸ்டைலிஷான படம்தான். ஆனால் ரொம்ப கலர்புல்லா இருக்கும். படத்திலே வரும் இரண்டு பாடல்களை நானும் யுவனும் சேர்ந்து இரண்டு வருஷத்துக்கு முன்னாடி கம்போஸ் பண்ணினோம். அப்போ, கதை என்ன? யாரு புரடியூசர்? யாரு நடிக்கப் போறாங்கன்னு எதுவுமே தெரியாது. பாட்டை மட்டும் கம்போஸ் பண்ணி வச்சிருந்தோம். இப்போ இதிலே யூஸ் பண்ணியிருக்கோம். அதை படமாக்கியிருக்கிற இடத்தையும், பாட்டையும் ஒரு முறை பார்த்தீங்கன்னா ஆச்சர்யப்படுவீங்க என்றவர், ஒரு கேள்விக்கு மட்டும் கொஞ்சம் யோசித்து பதில் சொன்னார்.

வழக்கமாக எல்லாரும் சின்ன நடிகர்களில் ஆரம்பித்து அடுத்தடுத்து பெரிய நடிகர்களை நடிக்க வச்சு படம் எடுப்பாங்க. ஆனா, பில்லாவுக்கு அடுத்து விஜய், ரஜினின்னு போகாமல் மறுபடியும் ஆர்யாவிடமே வந்திட்டீங்களே?

ஒரு படத்தின் ஹீரோவை தீர்மானிக்கிறது கதைதான். சொல்ல முடியாது, என் தம்பி கிருஷ்ணாவை வச்சு இயக்குகிற மாதிரி ஒரு கதை அமைஞ்சா அவரை வச்சு அடுத்த படத்தை ஆரம்பிச்சிடுவேன். இந்த படத்திற்கு பிறகு அஜீத் சாரோடு சேர்ந்து மறுபடியும் ஒரு படம் பண்ணவும் வாய்ப்பிருக்கு. சர்வம் ரிலீசுக்கு பிறகு நல்ல செய்தியோடு சந்திப்போம் என்று கை கூப்பினார் விஷ்ணுவர்த்தன்.

கிளம்பும்போது அவர் சொன்ன முக்கியமான விஷயம், 'ஹீரோவா நடிப்பீங்களா என்று தொடர்ந்து கேட்கிறாங்க. எனக்கு அப்படி ஒரு ஆசையே இல்லை, வரவும் வராது' என்றார் திட்டவட்டமாக!

பவானின்னா பவர்ஃபுல்... டைரக்டரின் பெருமிதம்!


ஆக்ஷன் பட ரசிகர்களை அதிர வைத்த படம் தீ. கலெக்ஷனிலும் குறைவில்லை என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். அடுத்து பவானி, பிறகு கள்ளன் என்று வரிசையாக போலீஸ் கதைகளாக எடுக்க ஆரம்பித்துவிட்டார் தீ பட இயக்குனர் ஜி.கிச்சா.

வரிசையாக மூன்று போலீஸ் படங்கள்! ஆனால் இது தற்செயலாக அமைந்ததுதான். ஒரு சந்தோஷம் என்னவென்றால், தினமும் நூற்றுக்கணக்கான போன்கள் வருகின்றன. எங்களை பற்றி எத்தனையோ நல்ல படங்கள் வந்தாலும், முழுக்க முழுக்க எங்களின் சேவையை நாட்டுக்கு சொன்ன ஒரே படம் தீ தான் என்கிறார்கள் காவலர்கள். போலீஸ் அதிகாரிகள் பேமிலியோடு தியேட்டருக்கு போய் இப்படத்தை பார்த்து வருகிறார்கள் என்று சந்தோஷப்படுகிறார் கிச்சா.

என்னதான் இருந்தாலும், ஒரு விதத்தில் உர்ர்ரென்கிறார்கள் ரசிகர்கள். ஏனாம்? Snehaபுன்னகை அரசி சினேகாவுக்கு காக்கி உடை போட்டு, கர்புர்ரென்று உறும வைத்துவிட்டாரே என்ற கோபம்தான். வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தை பவானி என்ற பெயரில் ரீமேக்கி வருகிறார் கிச்சா. இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் சினேகா. 'சிரிக்கிற சினேகாவை எப்படி ரசிச்சீங்களோ, அதே மாதிரி இந்த சீரியஸ் சினேகாவையும் ரசிப்பீங்க. ஏன்னா பவானின்னா பவர்ஃபுல்' என்றார் கிச்சா.


சின்ன வயசிலே போலீசாகணும்னு ஆசைப்பட்டிருப்பாரோ?

நிக்கோலும் நமீதாவும்...! அசரடித்த ஆடியோ விழா


புதுமுகங்கள் நடிக்கும் 'கிள்ளாதே' என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிலிம் சேம்பரில் நடந்தது. ஆடியோவை தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் வெளியிட, நடிகை நிக்கோல் பெற்றுக் கொண்டார்.

குட்டி நமீதா போல் வந்திருந்தார் நிக்கோல். பளபள ஆடை! ஆனால் பாதி வரைக்கும் போதும் என்ற தாராளம் போலிருக்கிறது. முழங்காலுக்கு மேலேயே நின்றுவிட்டது ஸ்கர்ட்! இடியோசை போன்ற கைதட்டல்களுக்கு நடுவில் மைக்கை பிடித்த நிக்கோல், இந்த பாடல்கள் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணுச்சு. குறிப்பா அம்மாவை பற்றி வருகிற ஒரு பாடல் என்னை ரொம்ப கண்கலங்க வச்சுது. இசையமைப்பாளருக்கு என்னோட வாழ்த்துக்கள் என்றார். பேசிக் கொண்டிருக்கும்போதே படத்தின் தயாரிப்பாளர் பெரிய பொன்னாடையை கொண்டு வந்து நிக்கோலுக்கு போர்த்த, 'அப்பாடா' என்றிருந்தது ஆடியன்ஸ் வரிசையில் இருந்த பெண்களுக்கு!

சின்ன படங்கள்தான் தயாரிப்பாளர்களை வாழ வைக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் வெற்றி பெற வேண்டும் என்றார் தயாரிப்பாளர் சங்க தலைவர் இரா.நாராயணன். பிரபல தயாரிப்பாளர் வி.சி.குகநாதன் பேசும்போது, இந்த படத்தை இருபது நாட்களில் எடுத்து முடித்துவிட்டதாக கேள்விப்பட்டேன். குறுகிய காலத்தில் எடுப்பது முக்கியமல்ல, அது வெள்ளி விழா படமாகவும் இருக்கணும் என்றார். கிள்ளாதே என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். முன்பு வெளிவந்து வெள்ளி விழா கண்ட, நெஞ்சத்தை கிள்ளாதே படத்தை போல வெற்றி பெற வேண்டும் என்றார் உள்ளன்போடு!

தேர்தலை குறிவைக்கும் படங்கள்

வருகிற பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து படங்களை எடுத்து வருகிறார்கள் அரசியலில் இருக்கும் நடிகர்கள்.சமீபமாக விஜயகாந்த் நடித்த எந்தப் படமும் ச‌ரியாகப் போகவில்லை. விக்ரமன் இயக்கத்தில் தயாராகி வரும் ம‌ரியாதை படத்தைதான் இவர் மலைபோல் நம்பிக் கொண்டிருக்கிறார்.

மக்களவை தேர்தலுக்கு முன் ம‌ரியாதை படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக சட்டமன்ற கூட்டத் தொடரையே புறக்கணித்தார் கேப்டன். அடுத்த மாதம் படத்தை வெளியிடுவதற்கான அனைத்து வேலைகளும் நடந்து வருகின்றன.

அதிமுக-வில் கெட்டியாக ஒட்டிக் கொண்டிருக்கும் ராமராஜன் இந்தமுறை அம்மா தனக்கு எம்பி சீட் தருவார் என நம்பிக் கொண்டிருக்கிறார். தற்போது நடித்துவரும் ஒரே படமான மேதையை விரைவில் வெளியிடவும் முயற்சி எடுத்து வருகிறார். இந்த அவசரத்துக்கு இரண்டு காரணங்கள்.படம் வெளிவந்து நன்றாக ஓடினால் அம்மாவின் கருணைப் பார்வை சிபா‌ரிசு இல்லாமலே கிடைத்துவிடும். இதற்காக அம்மா புகழ் சொல்லும் ஒரு பாடலை படத்தில் வைக்கவும் திட்டமிருக்கிறதாம். இரண்டாவது, மறந்துபோன மக்களிடம் தன்னை ஞாபகப்படுத்தியதாகவும் இருக்கும்.

திட்டமிட்டு மேதையை எடுக்கிறார். படம் கைவிடாது என்பது அவரது நம்பிக்கை.

கேப்டன் VS கி‌ரிக்கெட்


மே 13ஆம் தேதி தேர்தல். அதற்குமுன் ம‌ரியாதையை திரைக்கு கொண்டு வருவதில் குறியாக இருக்கிறார் விஜயகாந்த்.

நமக்கு கிடைத்த தகவல் ச‌ரியாக இருந்தால் ம‌ரியாதை அடுத்த மாதம் பத்தாம் தேதி திரைக்கு வரும். படத்தை தயா‌ரித்திருக்கும் அம்மா கி‌ரியேஷன்ஸ் சிவாவும் ‌ரிஸ்க் எடுக்க தயாராகிவிட்டதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

அப்படி என்ன ‌ரிஸ்க்?

தேர்தலை முன்னிட்டு ஐபிஎல் கி‌ரிக்கெட் போட்டிகள் தள்ளி வைக்கப்படும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெற உள்ளன. தேதிகளில் மட்டும் சிறிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ம‌ரியாதை வெளியாகும் அதே ஏப்ரல் 10 ஆம் தேதிதான் ஐபிஎல் போட்டிகளும் ஆரம்பமாகின்றன. பெ‌ரிய நடிகர்களே கி‌ரிக்கெட்டுடன் போட்டி போட தயங்கும் வேளையில் விஜயகாந்த் மட்டும் தைரியமாக இருக்கிறார்.

சிட்டியில் அவரது படம் சுமாராகவே ஓடும். அவரது பலம் பி அண்ட் சி. அங்கு இன்னும் கி‌ரிக்கெட் சிட்டி அளவுக்கு தீரா மோகமாக மாறவில்லை. படத்தை ‌ரிலீஸ் பண்ணுங்க பணத்தை அள்ளலாம் என கேப்டன் கொடுத்த தைரியத்தில் ‌ரிஸ்க் எடுக்க சிவாவும் துணிந்து விட்டார்

தேர்தலுக்குமுன் விஜயகாந்துக்கு இன்னொரு ப‌ரிட்சை. விக்ரமன் துணையுடன் ஜெயிக்கலாம் என்பது அவரது நம்பிக்கை.

ர‌ஜினி, விஜய் ஏற்படுத்திய பஞ்சம்


ர‌ஜினியின் எந்திரன், விஜயின் வேட்டைக்காரன் இரண்டும் சேர்ந்து டான்சர்கள் பஞ்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஹைதராபாத் ராமோ‌ஜிராவ் பிலிம் சிட்டியில் ர‌ஜினியின் எந்திரன் படத்தின் பாடல் காட்சி படமாகி வருகிறது. சாபுசி‌ரில் அமைத்திருக்கும் பிரமாண்ட அரங்கில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் ஷங்கர். படத்தில் ர‌ஜினியின் ஓபனிங் பாடலாக இது இருக்கும் என்கின்றன தகவல்கள்.

இந்தப் பாடல் காட்சியில் ர‌ஜினி, ஐஸ்வர்யா ராயுடன் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களும் பங்கு பெறுகிறார்கள். அனைவரும் தற்போது ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளனர்.

அதே ஆந்திராவில் படப்பிடிப்புக்கு பெயர்போன ராஜமுந்தி‌ரியில் விஜயின் வேட்டைக்காரன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய் ஆண்டினியின் இசையில் தயாரான பாடலை இங்கு படமாக்கி வருகிறார் வேட்டைக்காரன் இயக்குனர் பி.பாபு சிவன். ஷோபி நடனம் அமைக்கும் இந்தப் பாடலில் நூறு நடனக் கலைஞர்கள் விஜயுடன் ஆடுகிறார்கள். நூறு பேரும் முகாமிட்டிருப்பது ராஜமுந்தி‌ரியில்.

இருக்கிற சில நூறு நடனக் கலைஞர்களை எந்திரனுக்கும், வேட்டைக்காரனுக்கும் அள்ளிக் கொண்டு போயிருப்பதால் மற்ற படங்களுக்கு டான்சர்கள் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

Thursday, March 12, 2009

அர்ஜூனின் அடுத்தபடம் 'கள்ளன்'

எங்கிருநந்துதான் டைட்டில் பிடிப்பாரோ, அர்ஜூனின் பெரும்பாலான படங்களின் தலைப்பு மூன்றெழுத்து நான்கெழுத்துகளிலேயே வருகிறது.
'வேதம்', 'சேவகன்', 'ஒற்றன்' படங்களைப்போல அவரது புதிய படத்திற்கு 'கள்ளன்' என பெயரிடப்பட்டுள்ளது. அர்ஜூனின் கைவசம் தற்போது 'அறுவடை' படம் மட்டுமே உள்ளது. விரைவில் அது ரிலீஸாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து கிச்சா இயக்கும் 'கள்ளன்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சத்யராஜ், சுந்தர் சி., காம்பினேஷனில் படங்களை இயக்கிக்கொண்டிருந்த கிச்சா, இப்படம் மூலம் அர்ஜூனுடன் கைகோர்க்கிறார்.

அன்புலட்சுமி பிலிம்ஸ் சார்பில் கோவை மணி தயாரிக்கிறார். அர்ஜூன் படம் என்றாலே ஆக்ஷ்ன் இல்லாமலா இருக்கும். இதுவும் அந்த வகையறா படம்தான். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வேடத்தில் அர்ஜூன் நடிக்க, அவரது ஜோடியாக புதுமுகம் ஒருவர் நடிப்பாரென தெரிகிறது. தீ படத்தையடுத்து சினேகா நடித்துவரும் பவானி படத்தை இயக்கிவரும் ஜி.கிச்சா இடையிடையே கள்ளனையும் கண்டுகொள்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத், ஹாங்ஹாங், பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது. எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையில், பிறைசூடன், யுகபாரதி, முருகன் பாடல்களை எழுதுகின்றனர்.

ஹீரோவாகும் சிம்பு தம்பி


ஒரு சிம்புவுக்கு வர்ற கிசுகிசுவே தாங்கமுடியல. இதுல இன்னொரு சிம்பு வரப்போறாருங்கோ.
பத்து வருடங்களுக்கு முன்பு டி.ஆர்.எடுக்கும் படங்களை குடும்பப்படம் என்றுகூட கலாய்ப்பது உண்டு. காரணம் அவருடைய மூத்த மகன் சிம்பு, இளையமகன் குறளரசன், மகள் இலக்கியா என டி.ஆரின் ரேஷன்கார்டு லிஸ்டில் உள்ளவர்களெல்லாம் படத்திலும் தலைக்காட்டுவார்கள். சிம்பு கதாநாயகனான பிறகு ரசிகர்களுக்கு டி.ஆரின் குடும்ப படத்திலிருந்து ரிலீப் கிடைத்தது. டி.ராஜேந்தர் இயக்கிய 'வீராச்சாமி' படத்தில் மட்டும் குறளரசன் தலைகாட்டிப்போனார். இந்நிலையில் குறளரசனையும் நாயகனாக்கப் போகிறார் டி.ஆர்.

தற்போது டி.ஆர் மூன்று புராஜக்ட்டுகளை திட்டமிட்டுள்ளார். அதில் ஒன்றுதான் அவரே தயாரித்து இயக்கி நடிக்கும் 'ஒரு தலைக்காதல்'. இன்னொன்று கிராமிய பின்னணி்யில் உருவாகும் படம். மூன்றாவது படம்தான் குறளரசன் ஹீரோவாக அறிமுகமாகும் படம். ஆக்ஷ்னும் காதலும் கலந்த கதையாக உருவாக்கப்போகிறாராம் டி.ஆர்.

குறளரசனுக்கு ஜோடியாக புதுமுகம் ஒருவர் நடிக்கிறார். சரி, அண்ணனுக்கு ஒரு நயன்தாரான்னா தம்பிக்கு 7 தாராவோ 8 தாராவோ கிடைக்காமலா போகும்!

பேரு வச்சது எம்.ஜி.ஆர் -பெருமை தந்தது கோடம்பாக்கம்!


'நான் பிறந்த போதே என்னை தூக்கி கொஞ்சியவர் எம்.ஜி.ஆர்! எனக்கு பேரு வச்சதும் அவரேதான். அதனால்தான் நான் ஹீரோவாகிட்டேன் போலிருக்கு' என்று முகம் கொள்ளாத சிரிப்போடு சொன்னார் ஆதித்யா. சமீபத்தில் வெளிவந்த இன்னொருவன் படத்தின் ஹீரோ! பிறக்கும்போதே செல்வ செழிப்பானவர். ஆனால் முதல் படத்தில் இவருக்கு கிடைத்த வேடமோ குப்பை பொறுக்குகிற பையன்!

இன்னொருவன் படத்திற்கு ஹீரோ தேடுகிறார்கள் என்றதும், போய் நின்றாராம். 'சரி வா' என்று இவருக்கு மேக்கப் போட்டு அழைத்துப்போன டைரக்டர், கோயம்பேடு அருகில் ஓரிடத்தில் இவரை நிறுத்தி 'குப்பை பொறுக்கு' என்று கூறிவிட்டாராம். வெட்கம் பார்க்காமல் இவர் பொறுக்க ஆரம்பிக்க, அதை படம் பிடித்துக் கொண்டிருந்தார்களாம். ஏதோ சேனல் காரர்கள் படம் எடுக்கிறார்கள் என்று நினைத்த லோக்கல் கவுன்சிலர் விரட்டவே வந்துவிட்டாராம். அந்தளவுக்கு தத்ருபமாக இருந்ததாம் ஆதித்யாவின் நடிப்பு!

'பாடல் காட்சிகளில் நான் ரஜினி மாதிரி நடிச்சிருக்கறதா சொல்றாங்க. அது திட்டமிட்டே நடந்ததுதான். எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும். நாமளும் ரஜினி மாதிரி ஆகணும்னு. எனக்கும் அப்படி ஒரு ஆசை இருந்தது. இது தப்பா' என்றார் அப்பாவியாக! 'படத்திற்கு எக்ஸ்ட்ரா பதினைந்து பிரிண்ட் போட்டிருக்கோம். எல்லா ஏரியாவிலே இருந்தும் நல்ல ரிப்போர்ட். இப்பவே நிறைய பேரு அட்வான்சோடு வர்றாங்க. இதுக்கெல்லாம் காரணம் இன்னொருவன் தயாரிப்பாளரும், டைரக்டரும்தான். அவங்களுக்கு நன்றியோடு இருப்பேன்' என்றார் ஆதித்யா. இருந்தால் சரி!

கோவா படமும், ஒரு குடும்ப பாடலும்!


இந்த வாரம் தேனியில் 'கோவா' படப்பிடிப்பை துவங்குவதாக இருந்தார் வெங்கட் பிரபு. நாலு லோக்கல் பசங்க, வெள்ளைக்காரிக்கு ஆசைப்படுகிற கதை இது. இதுவரை நான் இயக்கிய படங்கள் எல்லாம் சிட்டியை பேஸ் பண்ணிதான் அமைஞ்சிருக்கு. அதனால், முதலில் வில்லேஜ்ல ஷ§ட்டிங்கை ஆரம்பிச்சு, பிறகு கோவாவுக்கு போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன் என்றார் வெங்கட்பிரபு.

இதற்கிடையில் இந்த படத்திற்காக ஒரு குடும்ப பாடலை உருவாக்கி இருக்கிறார்களாம். அதாவது குடும்பத்தினர் எல்லாரும் பங்குபெறும் பாடல் இது! வெங்கட்பிரபு, யுவன்சங்கர்ராஜா, பிரேம்ஜி, கார்த்திக்ராஜா நால்வரும் பாடவிருக்கிறார்களாம். இதை எழுதியிருப்பவர் கங்கை அமரன். (பல்லவி, 'ரேஷன் கார்டே...'னு ஆரம்பிக்குதுங்களா?)

அப்பா இளையராஜா மாதிரி, இந்த பாடலுக்கான இசையை லைவ் ரெக்கார்டிங் செய்யப் போகிறாராம் யுவன். 80 களில் அப்பாவின் ஸ்டைல் இதுதான். அதற்கு பிறகு எல்லாவற்றும் ரிதம் பாக்சை நம்ப ஆரம்பித்திருந்தார்கள் பலரும். மீண்டும் 80 ம் வருடங்களை நினைவு படுத்துவது போல லைவ் ரெக்கார்டிங் முறையை கொண்டு வருகிறார் யுவன்.

வேறு தயாரிப்பாளர்கள் என்றால், இந்த பாட்டுக்கு ரொம்ப செலவாகுதே என்று 'பஞ்ச பாட்டு' பாடியிருப்பாங்க...!

வேட்டைக்காரன் விஜயும், மீசையும்! மாறு வேடமா? மயக்கும் கெட் அப்பா?


மூக்குக்கு கீழே இரண்டு கோடுகள் போல இருக்கும் மீசையை க்ளைமாக்சில் Vijayஎம்ஜிஆர் பிய்த்து எடுப்பார். 'ஆ... இன்ஸ்பெக்டர் ராமு!' என்று அதிர்வார் வில்லன். (அதுவரைக்கும் இவர்தான் எம்ஜிஆர் என்று அவருக்கு தெரியாதாம்) கால காலமாக பார்த்த காட்சிதான் என்றாலும், இந்த மாறுவேச மயக்கத்தை விடுவதாக இல்லை ஒரு ஹீரோவும்.

இப்போது வேட்டைக்காரன் படத்தில் விஜய் போடவிருக்கும் ஒரு கெட்டப் கொஞ்சம் பட்டையான மீசை. இது ஒரு கேரக்டரின் தோற்றமா? அல்லது மாறுவேஷமா என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ். இருக்கட்டும், படத்திற்கு ஹீரோயின் தேடி பெரும் வேட்டை துப்பாக்கியோடு திரிகிறார்கள். சிக்கப்போவது எந்த சிங்காரியோ?

விஜயின் மனசில் பிரியங்கா சோப்ராவும், எஸ்.ஏ.சி மனசில் ஐஸ்வர்யாராயும் இருக்கிறார்களாம். யாருக்கு யாருன்னு முடிவாகியிருக்கோ? இதற்கிடையில் 100 நடனக் கலைஞர்களுடன் விஜய் ஆடும் ஒரு ஆட்டத்தை படம் பிடித்து முடித்துவிட்டார்கள். எலக்ஷன்ல யாருக்கு வாய்ஸ் கொடுப்பார்னு இளைய தளபதியோட ரசிகர்கள் இப்பவே குடையுறாங்களாம்!

இது வேறயா....!

பாடும் மாடல் அம்ருதா!


மிஸ் இந்தியா, மிஸ் எர்த் ஏர் என ஏகப்பட்ட அழகிப் பட்டங்கள், கை நிறைய விளம்பரப் படங்கள். இத்தனையையும் தாண்டி ஒரு பாடகியாகவும் படு பிசியாக இருக்கிறார் அம்ருதா பட்கி.

ஒல்லிக் குச்சி உடம்புக்காரியான பட்கி, 2006ம் ஆண்டு மிஸ் எர்த் ஏர் பட்டத்தை வென்றார். அதே ஆண்டில் மிஸ் இந்தியா எர்த் பட்டத்தையும் பெற்றார்.

நல்லி சில்க்ஸ், குமரன் சில்க்ஸ், பான்டலூன், ஜாய் அலுக்காஸ் உள்ளிட்ட பல பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களை இவரைப் பார்த்திருப்பீர்கள்.

இப்போது பட்கி பாடகியாகி விட்டார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்ட படம்தான் அவன், அவள், அது. இப்படத்தின் இரு பதிப்புகளிலும் பட்கி பாடியுள்ளார்.

பாடல் வெளியீட்டு விழாவுக்காக சென்னைக்கு வந்திருந்தார் பட்கி. மாடல் அழகியான நீங்கள் பாடல் அழகியானது எப்படி என்று கேட்டபோது, இசையைப்பாளர் தரண் எனது நண்பர். வித்தியாசமான குரலை அவர் தேடிக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்போதுதான் எனது குரல் அவருக்குப் பொருத்தமானதாக தோன்றியிருக்கிறது. தெலுங்குப் பதிப்பில் பாடச் சொன்னார். தமிழிலும் பாட வைத்து விட்டார். எனது பாடல்கள் ஹிட் ஆகும் என நம்புகிறேன் என்கிறார்.

ஏன் இவ்ளோ உயரமாக இருக்கிறீர்கள் என்று கேட்டால், நான் எப்போதுமே இப்படித்தான். மற்றவர்களை விட நல்ல உயரம். ஆனால் உடம்பு முன்பு ரொம்ப குண்டாக இருந்தது. கஷ்டப்பட்டு எடையைக் குறைத்து இடையழகி ஆனேன்.

எனக்கு முதலில் பாடகியாக வேண்டும் என்ற கனவுதான் இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக மாடலிங்கில் புகுந்து விட்டேன். எனது குழந்தைப் பிராயத்து கனவு பாடகியாவது. இப்போதுதான் அது நிறைவேறியுள்ளது என்கிறார் சிரித்தபடி.

இவ்ளோ க்யூட்டாக இருக்கும் பட்கியைத் தேடி பட வாய்ப்புகள் வராமல் இருக்குமா.. வந்ததாம். சில படங்கள் வந்துள்ளன -பாலிவுட் மற்றும் கோலிவுட்டில். யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு மணி ரத்ணம் படத்தில் நடிக்க கொள்ளை ஆசை, பார்க்கலாம் நிறைவேறுகிறதா என்று என்கிறார் ஏக்கத்துடன்.

பட்கி ஏக்கத்தை மணி நிறைவேற்றுவாரா?

மிஸ். சென்னை வைதேகி...


திரிஷா போன்ற பெரும் தலைகள் வாகை சூடிய மிஸ் சென்னை பட்டத்தை சென்னைப் பெண் வைதேகி இந்த ஆண்டு வென்றுள்ளார்.நடிக்க வந்த பின்னர் ரசிகர்கள் மனதை வென்ற திரிஷா, நடிக்க வருவதற்கு முன்பு மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர். அந்தப் பட்டம்தான் அவருக்கு மாடலிங் வாய்ப்புகளை வாரிக் கொண்டு வந்தது.

மாடலிங் செய்து கொண்டே சினிமாவில் சிறு சிறு வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருந்த திரிஷா, சாமி படம் மூலம் உச்சாணிக்குப் போய் விட்டார். அவரது இடம் இன்னும் கூட ஸ்டிராங்காகவே உள்ளது.நிற்க. இந்த ஆண்டுக்கான மிஸ் சென்னை மற்றும் மிஸ்டர் சென்னை போட்டி சென்னையில் நடந்தது. நடிகர் மாதவன், பாடகி சின்மயி ஆகியோர் நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த 20 கல்லூரிளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இந்தப் போட்டியில் முட்டி மோதினர். எத்திராஜ் கல்லூரியில் போட்டி நடந்தது.

வழக்கமாக எத்திராஜ் கல்லூரிக்குள் வாட்ச்மேனைத் தவிர வேறு ஆண்களைப் பார்க்க முடியாது. ஆனால் வாட்டசாட்டமான, ஹேன்ட்சம் வாலிபர்கள், இந்தப் போட்டிக்காக குறுக்கும் நெடுக்குமாக நடை போட்டுக் கொண்டிருந்த காட்சி படு ஜோர்.

கடும் போட்டிக்கு மத்தியில் சச்சின் மிஸ்டர் சென்னையாகவும், வைதேகி மிஸ் சென்னையாகவும் வாகை சூடினர்.

நயன்தாராவுடன் மோதலா?-தமன்னா


கோடம்பாக்கத்தின் இன்றைய ஹாட் 'ஒல்லிக்குச்சு உடம்புக்காரி' தமன்னாதான். கேடி படத்தில் அறிமுகமாகி, அந்தத் தோல்வியில் காணாமல் போய், சின்ன இடைவெளிக்குப் பின் கல்லூரி மூலம் புதிய வாழ்க்கை பெற்றார்.

தனுஷ் ஜோடியாக அவர் நடித்த படிக்காதவன் சுமாரான படமாக இருந்தாலும், கமர்ஷியலாக ஓடிவிட்டதில் தமன்னா மீது ராசி முத்திரை விழுந்துவிட, அடுத்தடுத்து வெயிட்டான படங்களில் நடிக்கிறார் அம்மணி.

அடுத்தடுத்து அவர் நடித்துள்ள அயன், ஆனந்தத் தாண்டவம் என இரு பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன.

சமீபத்தில் இரு புதிய படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளார் தமன்னா.

அதில் ஒன்று லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் பையா. பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தில் முதலில் நயன்தாரா நடிக்கவிருந்தததும், பின்னர் சம்பள விவகாரத்தில் ஒத்து வராமல் அவர் விலகியதால் அந்த ரோலில் தமன்னா ஒப்பந்தமானதும் ரசிக மகா ஜனங்களுக்குத் தெரிந்ததே.

நயன்தாராவுக்குப் பதில் ஒப்பந்தமானதெல்லாம சரிதான். நயன்தாராவுக்கு இணையான கவர்ச்சி (!) காட்டி நடிப்பாரா தமன்னா என்ற ஒரு சந்தேகம்.

நேற்று ஒரு படத்தின் பூஜைக்கு வந்திருந்த தமன்னாவிடம் நயனதாராவுக்கு போட்டியாக கவர்ச்சியி்ல் குதிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்க, அதற்கு தமன்னா சொன்ன பதில்:

பையா படத்தில் நயன்தாராவுக்கு பதில் நான் ஒப்பந்தமானது ஒரு சின்ன விஷயம். நயன்தாரா சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதில் வேறு யாராவது ஒரு நடிகை அந்த படத்தில் நடித்தே ஆகவேண்டும். அதற்காக என்னை தேர்வு செய்தார்கள்.

மேலும் பையா படத்தின் கதையும் எனக்குப் பிடித்து இருந்தது. நான் கேட்ட சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுத்தார். அதனால் அந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு படத்தில் நடிக்க இதைவிட வேறென்ன வேண்டும்? .

இதனால் எனக்கும் நயன்தாராவுக்கும் பிரச்சனை என்பது அர்த்தமில்லாதது. மேலும் நான் அதிக சம்பளம் கேட்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இதில் ஆதாரம் ஏதுமில்லை. என் வேலைக்கு ஏற்ற சம்பளம் கேட்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? .

தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி என என்னைக் குறிப்பிடுவதில் சந்தோஷம்தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் ஒரு சாதாரணப் பெண். நான் ஜோடி சேரும் புதிய கதாநாயகன் இப்போது பரத்-தான். அவருடைய உடற்கட்டு எனக்குப் பிடித்துள்ளது. அவருக்குப் பொருத்தமான ஜோடியாக இருப்பேன் என நம்புகிறேன்.

குண்டு, ஓல்லி என்ற அளவைத் தாண்டி நான் ரசிகர்கள் மனதில் நிலைப் பெற்றுவிட்டது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சூர்யா, கார்த்தி ஆகிய இருவருடனும் ஜோடியாக நடிக்கிறேன். சூர்யா, ஜென்டில்மேன். ரொம்ப எளிமையானவர். கார்த்தி, ஜாலியானவர் என்றார் தமன்னா.

நடிகர் ஜெய்க்கு தடை?- தயாரிப்பாளர்கள் 'கடுகடு'!


வாய் துடுக்காகப் பேட்டி கொடுத்துவிட்டு இப்போது எக்கச்சக்கமான சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார் சுப்பிரமணியபுரம் ஜெய்.

விஜய் நடித்த பகவதி படத்தில், அவருக்கு தம்பியாக அறிமுகமானவர், ஜெய். இவர், இசையமைப்பாளர் தேவாவின் தம்பி சம்பத்தின் மகன். சென்னை-28, சுப்பிரமணியபுரம் ஆகிய 2 படங்களின் மூலம், ஜெய் பிரபலமானார்.

இப்போது, அர்ஜீனன் காதலி, அதே நேரம் அதே இடம், அவள் பெயர் தமிழரசி, வாமணன் ஆகிய 4 படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 'நான் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களில், வாமணன் மட்டுமே வெற்றி பெறும். மற்ற படங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு படம் ஒரே ஒரு வாரம்தான் ஓடும். இன்னொரு படம் பதினைந்து நாட்களுக்கு மேல் தாங்காது' என்று கூறியிருந்தார்.

இந்த பேட்டி, பட அதிபர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜெய்யை வைத்து படம் தயாரிக்கும் பட அதிபர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார்கள். அந்த புகாரின் மீது நேற்று விசாரணை நடந்தது.

அப்போது, ஜெய் தொடர்ந்து நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் வற்புறுத்தினார்கள். அர்ஜுனன் காதலி, அதே நேரம் அதே இடம், அவள் பெயர் தமிழரசி ஆகிய மூன்று படங்களையும் ஜெய் உடனடியாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும், அதன்பிறகு அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது? என்பதை முடிவு செய்யலாம் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் அவர் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள சௌந்தர்யா ரஜினி தயாரிக்கும், கோவா படத்தில் நடிக்க இப்போதைக்கு தற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வருகிற 15ம் தேதி துவங்குவதாக இருந்தது.

Wednesday, March 11, 2009

நடிகர் ஒமக்குச்சி நரசிம்மன் காலமானார்

சென்னை, மார்ச் 12 தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர்களுள் ஒருவரான ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக அவர் காலமானார். தனது ஒல்லியான தேகம் காரணமாக, ஓமக்குச்சி என்ற அடைமொழியை பெற்றதுடன் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் உள்ளே தரண் வெளியே


சிம்பு நடிப்பதாக இருந்த போடா போடி கைவிடப்பட்டதாக சில வாரங்கள் முன்பு கூறப்பட்டது. அந்த செய்தியில் உண்மையில்லை.

ஜெமினி பிலிம்ஸ் தயா‌ரிக்கும் போடா போடியின் பெரும் பகுதி கனடாவில் எடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஹீரோயினுக்கு நடனம் தெ‌ரிந்திருக்க வேண்டும் என்தால் நடனத்தில் நிபுணத்துவம் உள்ள சரத்குமா‌ரின் மகள் வரலட்சுமியை நாயகியாக ஒப்பந்தம் செய்தனர்.

வளர்ந்துவரும் இசையமைப்பாளர் தரண் இசையமைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. பிறகு என்ன நடந்ததோ, படம் பற்றி எந்த தகவலும் இல்லை. சிம்புவும் கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இந்நிலையில்தான் படம் கைவிடப்பட்டதாக செய்தி வெளியானது.

ஆனால், படம் விரைவில் தொடங்கயிருக்கிறதாம். கனடாவில் தற்போது கடும் பனி பெய்து வருவதால் படப்பிடிப்பை தள்ளி வைத்திருக்கிறார்களாம். இதனை உறுதியாகச் சொல்ல காரணம் இருக்கிறது.

படத்திலிருந்து தரணை நீக்கிவிட்டு யுவனை ஒப்பந்தம் செய்திருக்கிறார் சிம்பு. கைவிடப்பட்ட படத்துக்கு இசையமைப்பாளரை மாற்றமாட்டார்கள் அல்லவா?

சிலம்பாட்டம் படத்துக்கு முதலில் ஒப்பந்தமானவர் தினா. பாடல்கள் கம்போஸாகி ஒலிப்பதிவும் முடிந்த பிறகு அவரை மாற்றி யுவனை ஒப்பந்தம் செய்தார் சிம்பு. யுவனுக்காக வெளியேற்றப்பட்ட இரண்டாவது இசையமைப்பாளர் தரண்.

சிம்புன்னாலே வம்புதானா?

சிம்புவின் மாவடு


சிம்புவின் மன்மதன், வல்லவன் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றன.
இந்தப் படங்கள் அவருக்கு கணிசமான ஆந்திர ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. தமிழில் வெற்றி பெற்ற அவரது சிலம்பாட்டம் படமும் விரைவில் தெலுங்கில் வெளியாகிறது. நேற்று தெலுங்கு ஆடியோ சென்னையில் வெளியிடப்பட்டது. தயா‌ரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம. நாராயணன் படத்தின் முதல் ஆடியோவை வெளியிட தயா‌ரிப்பாளர் ஆர்.பி.சௌத்‌ரி பெற்றுக் கொண்டார்.

தெலுங்கு படத்துக்கு மாவடு என பெயர் வைத்துள்ளனர். படத்தின் பாடல்களும், ஆ‌க்சன் காட்சிகளும் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்பிக்கை தெ‌ரிவித்துள்ளார் படத்தின் தயா‌ரிப்பாளர்.

மேலும், சிம்பு ஜோடியாக நடித்திருக்கும் சினேகா ஆந்திரா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் என்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிக‌ரித்திருக்கிறது

கன்னடத்தில் பிரியா மணி


தமிழ், தெலுங்கில் தலை காட்டிக் கொண்டிருக்கும் பிரியா மணி, தனது திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக கன்னடத்தில் நடிக்கப் போகிறார்.

பாலக்காட்டில் பிறந்து, பெங்களூரில் வளர்ந்து, கண்களால் கைது செய் மூலம் தமிழுக்கு வந்தவரான பிரியா மணி, பருத்தி வீரன் மூலம் ஏற்றம் பெற்றார். அப்படம் அவருக்கு தேசிய விருதையும் வாங்கித் தந்தது. ஆனால் அதன் பின்னர் கவர்ச்சி அல்லது படு கவர்ச்சி என்ற பாலிசிக்கு தாவினார் பிரியா மணி.

இது அவருக்கு எதிர்மறையான விளைவையே கொடுத்தது. கிடைத்த பிரேக்கை நழுவ விட்டு விட்ட பிரியா மணி தற்போது தெலுங்கில் படு கிளாமராக நடிக்கவும் துணிந்து விட்டார்.

இந்த நிலையில் முதல் முறையாக கன்னடத்திலும் அவர் நடிக்கப் போகிறார். பெங்களூரில் வளர்ந்த பெண்ணான பிரியா மணி, இப்போதுதான் கன்னடத்தில் நடிக்கப் போகிறார் என்பது விசேஷமானது.

தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் படமான ரெடி என்ற படத்தை கன்னடத்தில் ராம் என்ற பெயரில் தயாரிக்கின்றனர். இதில், புனீத் ராஜ்குமாருடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் பிரியா மணி.

ஏற்கனவே சில முறை கன்னட வாய்ப்புகள் பிரியாவைத் தேடி வந்தன. ஆனால் சம்பளம் போதாது என்பதால் அவற்றை நிராகரித்து விட்டார் பிரியா மணி. ஆனால் ராம் படத்தி்ல் அவருக்கு திருப்திகரமான சம்பளம் பேசியுள்ளனராம்.

இப்படத்தை ஆதித்யா பாபு தயாரிக்கிறார்.

தற்போது பிரியா மணி கையில் மணிரத்தினத்தின் அசோக வனம், தெலுங்கில் மித்ருடு மற்றும் வெங்கடேஷுடன் இன்னொரு தெலுங்குப் படம் ஆகியவை உள்ளன.

சிவகுமாரின் இலக்கிய பேருரை! அசந்து போனது கூட்டம்...


'கம்பன் என் காதலன்' என்ற தலைப்பில் திருப்பூரில் நடிகர் சிவகுமார் ஆற்றிய இலக்கிய பேருரையை திரையிட்டிருந்தார்கள். அவரது நீண்ட கால திரையுலக பயணத்திற்கு இடையே புதிதாக அவர் தேர்வு செய்திருக்கும் இன்னொரு ராஜபாட்டை இது. அற்புதம்! எந்தவொரு இலக்கிய சொற்பொழிவாளருக்கும் இளைத்தவர் இல்லை என்பதை வெளிப்படுத்தியது அந்த இரண்டு மணி நேரமும்! அப்படியே கம்ப ராமாயணத்தை கரைத்து குடித்திருந்தார். தனது உணர்ச்சிமிகு உரையை முடித்துவிட்டு தன்னடக்கத்தோடு அந்த மாபெரும் கூட்டத்திற்கு நடுவே கைகளை உயரே தூக்கி அவர் வணங்கிய போது, மொத்த கூட்டமும் உணர்ச்சி பிழம்பானது.

இது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. திரையுலக மார்கண்டேயன் என்று மற்றவர்களால் புகழப்பட்டாலும், சிவகுமாரின் வயது 67. இந்த வயதில் ஒரு இலக்கிய பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்ததும், அதற்காக தன்னை தயார் படுத்திக் கொண்டதும், இளைஞர்களுக்கு கூட சாத்தியமான விஷயம் அல்ல. பிரபல தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் இப்படி கூறினாராம். 'நான் இருபது வயதிற்குள்ளேயே கம்பராமாயணத்தை படித்து முடித்துவிட்டேன். ஆனால் அறுபத்தியேழு வயதில் இந்த செய்யுள்களை மனப்பாடம் செய்து, அதை மேடைபோட்டு இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக பேசுகிற ஆற்றல் வேறு எவராலும் முடியாதது' என்றாராம்.

சிவகுமார் பேசிய அந்த இரண்டு மணி நேரத்தில் ராமாயணம் மண்டைக்கு ஏறியதோ, இல்லையோ, ஆர்வத்திற்கு வயது ஒரு தடையல்ல என்பது மட்டும் மண்டையில் ஏறியிருந்தது... அதுவும், ரொம்ப தெளிவாக!

தலைக்கு மேலே சாபம்? மாமியார் வீட்டில் 'மாமா'


எனது சம்பளத்தை எனக்கே தெரியாமல் அமுக்கிக் கொண்டார் என்று மூக்கை சிந்தி அதை முனுசாமி மேலேயே துடைத்துவிட்டு போனார் மாளவிகா. இந்த முனுசாமி, மாளவிகாவின் முன்னாள் மேனேஜர். சாபம் தலைக்கு மேலேயே சுற்றும் போலிருக்கிறது. சில தினங்களுக்கு முன் விபச்சார கேசில் சிக்கிக் கொண்டார் இதே முனுசாமி.

சிம்ரன், சிந்துதுலானி என்று பிரபல நடிகைகளுக்கெல்லாம் மேனேஜராக இருந்து பிற்பாடு 'முன்னாள்' நிலைமைக்கு வந்தவர் இவர். தி.நகரில் இருக்கும் ஓட்டல் ஒன்றில் சின்னத்திரை நடிகை ஒருவரை வைத்துக் கொண்டு விபச்சாரத்திற்கு அழைத்ததாக கைது செய்தது போலீஸ்.

கோகிலா, மனைவி, காமெடி பஜார், அரசி ஆகிய டி.வி தொடர்களில் நடித்த ஜுலி என்ற 26 வயது பெண் இவரது கஸ்டடியில். இவருக்காக ஆள் பிடிக்கும் போதுதான், ஆள் தெரியாமல் போலீசையே பிடித்துக் கொண்டு வந்துவிட்டார் முனு. வந்தவர்கள் 25 ஆயிரத்தை இவர் கையில் திணிக்க, மகிழ்ச்சியோடு இவர் அதை பிரிக்க, லபக்கிக் கொண்டு போய்விட்டது போலீஸ். அவரது காரையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

உடனடியாக ஹோமுக்கு அனுப்பப்பட்டார் ஜூலி. முனுசாமி...? வேறெங்கே போவார், மாமியார் வீட்டுக்குதான்!

பார்வதியின் புலம்பல்!


உலக அழகிப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற என்னை வரவேற்காதது மட்டுமல்ல, போனில் வாழ்த்தக் கூட ஆளில்லையே, என்ற அழாத குறையாக குமுறுகிறார் பார்வதி ஓமணக்குட்டன்.

மிஸ் இந்தியா அழகியும், உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு 2-வது இடத்தை பிடித்தவருமான பார்வதி ஓமனகுட்டனின் சொந்த ஊர் கேரளா. ஆனால் அவர் படித்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான்.

இந்த நிலையில் கேரள, மாரட்டிய அரசுகள் தன்னை அங்கீகரிக்கவில்லை என பார்வதி ஓமனகுட்டன் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

உலக அழகிப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றும் கேரள அரசு என்னை அங்கீகரிக்கவில்லை. வேறு யாராவது உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பினால் அதை முக்கிய சம்பவமாக கருதி திருவிழா போல கொண்டாடியிருப்பார்கள்.

ஆனால் நான் ஊர் திரும்பிய பின்னரும் கூட கேரள அரசு சார்பில் யாரும் என்னிடம் போனில் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. அது போலத்தான் நான் வளர்ந்த மாநிலமான மராட்டிய அரசும் என்னை புறக்கணித்துவிட்டது.

ஒருவேளை நான் மும்பையில் பிறந்திருந்தால் என்னை அங்கீகரித்திருப்பார்களோ என்னவோ... பொதுவாக அரசுகள் கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. எங்களைப் போன்ற சாதனையாளர்களைக் கண்டு கொள்வதில்லை, என்றார் பார்வதி.

அழகிகளை இப்படி அழவைப்பது அழகா...?

ஆளுக்கொரு ஸ்கிரிப்ட் புக்... -பரத் தமன்னா நெகிழ்ச்சி


பரத், தமன்னா நடிக்கும் 'கண்டேன் காதலை' படத் துவக்கவிழா ஏவிஎம் ஸ்டுயோவில் நடந்தது. இப்படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணனை வாழ்த்துவதற்காக அவரது குருநாதர் மணிரத்னம் வந்திருந்தார். சில நிமிடங்கள் கூட இருந்திருக்க மாட்டார். வந்த வேலையை முடித்துக் கொண்டு 'பொசுக்' என்று கிளம்பினார். இயக்குனர்கள் சசி, ப்ரியா வி, ஷக்தி சிதம்பரம், எஸ்.பி.ஹோசிமின் மற்றும் தயாரிப்பாளர்கள் தாணு, தேனப்பன், ஆகியோர் நேரில் வந்திருந்து வாழ்த்தினர்.

கண்ணனையும், படக்குழுவினரையும் வாழ்த்தி பேசிய இயக்குனர் ப்ரியா வி, 'நானும் கண்ணனும் மணிரத்னம் சார்ட்ட வொர்க் பண்ணினோம். இந்த படத்தை கண்ணன் இயக்குறது சந்தோஷமா இருக்கு. அதே நேரத்திலே பொறாமையாகவும் இருக்கு. இந்தியில் வந்த ஜப் வீ மெட் அற்புதமான லவ் ஸ்டோரி. பரத்தும் தமன்னாவும் ரொம்ப அழகான ஜோடி. இந்த படத்தோட ரீமேக்கில் இவங்க நடிக்கறது இரண்டு பேருக்கும் கிடைச்ச அதிர்ஷ்டம்னுதான் சொல்லுவேன்' என்றார்.

வசனத்தை எழுதிய பட்டுக்கோட்டை பிரபாகர், 'மோசர் பேர் நிறுவனம் எவ்வளவு தெளிவாக இருக்காங்க என்பதற்கு ஒரு உதாரணம், என்னிடம் முழு படத்திற்கான ஸ்கிரிப்டையும் முன்னாலேயே வாங்கியதுதான். அதை புத்தகமாக பைண்ட் செய்து படத்தில் நடிக்கிற எல்லாருக்கும் கொடுத்திருக்காங்க. இந்தியில் இருந்து எத்தனையோ ஆக்ஷன் படங்கள்தான் தமிழுக்கு வந்திருக்கு. ஆனால், முதன் முதலாக ஒரு அழகான லவ் ஸ்டோரியை ரீமேக் பண்ணுகிறோம்' என்றார்.

'பரத் சாரை சந்தித்து பத்து நாளுக்கு முன்னாடியே முழு ஸ்கிரிப்டையும் கொடுத்திட்டேன். ரொம்ப ஆச்சர்யப்பட்டார்' என்றார் மோசர்பேர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தனஞ்செயன்.

'இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டாலும், என்னால ஜப் வீ மெட்டில் வருகிற என்னுடைய கேரக்டரை அப்படியே கொடுக்க முடியுமாங்கிற பயம் இருந்துகிட்டே இருக்கு' என்றார் பரத். பின்னாலேயே பேச வந்த படத்தின் இயக்குனர் கண்ணன், 'நீங்க வந்து நின்னுட்டு போனா போதும். மற்றதை இந்த கதையும், நானும் பார்த்துக்கிறோம்' என்று நம்பிக்கையூட்டினார். 'தினமும் பத்து தடவை இந்த படத்தை தமன்னா போட்டு போட்டு பார்க்கிறாங்க' என்று கண்ணன் சொன்னபோது தமன்னாவின் முகத்தில் அழகான புன்னகை.

அது வெற்றிப் புன்னகை!

Tuesday, March 10, 2009

சு‌ஜிபாலா படத்தின் பெயர் குழப்பம்

கதைக்கு பஞ்சம் என்பதை பு‌ரிந்து கொள்ள முடிகிறது. படத்தின் பெயருக்குமா?

ஏற்கனவே வெளிவந்த படங்களின் பெய‌ரில் ஒரு டஜன் படங்கள் தமிழில் தயாராகி வருகின்றன. இந்த புதிய கலாச்சாரத்தால் பெயர் குழப்பம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

பழைய படங்களின் பெயரை பயன்படுத்துவதென்றால் அந்தப் படத்தை தயா‌ரித்தவர்களிடம்... அவர்கள் உயிருடன் இல்லாதபட்சத்தில் அவர்களது வா‌ரிசுகளிடம் முறைப்படி அனுமதி வாங்க வேண்டும். இந்த புதிய விதியை அமல்படுத்தி தயா‌ரிப்பாளர்கள் சங்கம் கடிவாளத்தை இறுக்கிய பிறகும் பழைய பெயர் மோகம் தொடர்கிறது.

தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய நூறாவது நாள் படத்தின் பெய‌ரில் ஸ்ரீகண்ணன் என்பவர் ஒரு படத்தை இயக்கி வருகிறார். சு‌ஜிபாலா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தின் தயா‌ரிப்பாளர் நூறாவது நாள் படத்தின் தயா‌ரிப்பாள‌ரிடமிருந்து பெயரை பயன்படுத்த முறைப்படி அனுமதி வாங்கவில்லை. இதனால் பெயரை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நூறாவது நாள் பெயருக்குப் பதிலாக அவர்கள் தேர்வு செய்திருக்கும் பெயர், 'நூறாவது நாள் வெற்றிவிழா.' இதில்வரும் நூறாவது நாளை பெ‌ரிதாக போட்டு வெற்றிவிழாவை கடுகு சைஸில் பிரசு‌ரித்தால் எதுவும் கேட்க முடியாது.

மேலும், வெற்றிவிழா கமல், பிரபு நடிப்பில் சிவா‌ஜி பிலிம்ஸ் தயா‌ரித்த படத்தின் பெயர். இந்த பெயர் விளையாட்டுக்கு யாராவது உடனடியாக மணி கட்டக் கூடாதா?

மீசை இழந்த ப்ருத்விரா‌ஜ்


மணிரத்னத்தின் அசோகவனம் தமிழ், இந்தி இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது.

இந்தியில் விக்ரம் வில்லனாக நடிக்கிறார். குளோஸ் கட் தலைமுடி, அடர்த்தியான மீசை என்று ஆளே மாறியிருக்கிறார். இந்தியை பொறுத்தவரை மீசை அபூர்வம். இந்த வித்தியாசத்துக்காகவே விக்ரமுக்கு இப்படியொரு தோற்றம்.

கொல்கத்தாவில் படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சில வசனக் காட்சிகளையும் இங்கு படமாக்கினார் மணிரத்னம்.

இந்தியில் விக்ரம் நடிக்கும் வேடத்தை தமிழில் ப்ருத்விரா‌ஜ் செய்கிறார். ஆனால், தோற்றம் அப்படியே உல்டா. விக்ரம் மீசையுடன் நடித்தால் ப்ருத்விரா‌ஜ் மீசையில்லாமல். தமிழில் அபிஷேக்பச்சன் நடித்த வேடத்தில் விக்ரம். அங்கே வில்லன், இங்கே ஹீரோ. நாயகி அதே ஐஸ்வர்யாராய்.

கொல்கத்தா படப்பிடிப்பை முடித்தபின் தமிழ்நாட்டில் சில காட்சிகளை எடுக்கிறார் மணிரத்னம்.

அசின் குரு கமல்


தசாவதாரத்துக்குப் பிறகு அசினும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கிறார்கள். இன்டோ - ஜப்பான் தயா‌ரிப்பான இந்தப் படம் ஜப்பான், இந்தி உள்பட பல மொழிகளில் தயாராகிறது.
19 ஸ்டெப்ஸ் என்று பெய‌ரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தை பரத்பாலா இயக்குகிறார். ரஹ்மானின் வந்தே மாதரம் வீடியோ ஆல்பத்தை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவின் குறுநில மன்னனின் மகளாக நடிக்கிறார் அசின். அவருக்கு கள‌ரி கற்றுக் கொடுக்கும் ஆசானாக கமல் நடிக்கிறார். இதில் கமலுக்கு ஜோடி அசின் அல்ல. கள‌ரி கற்க ஜப்பானிலிருந்து வரும் இளைஞனை அசின் காதலிப்பதாக கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவாகும் இந்தப் படத்துக்காக ஸ்பெஷலாக கள‌ரி பயிற்சி எடுத்து வருகிறார் அசின்.

கலர் மாறும் த்‌ரிஷா


பொல்லாதவன் வெற்றிப் படத்தை தந்த வெற்றிமாறனின் அடுத்தப் படைப்பு ஆடுகளம். ஹீரோயின் நீங்கலாக பொல்லாதவனில் பணிபு‌ரிந்த அதே டீம் ஆடுகளத்திலும் பணியாற்றுகிறது.
குரூப் கம்பெனி கதிரேசன் படத்தை தயா‌ரிக்கிறார். பொல்லாதவனை தயா‌ரித்தவரும் இவரே. படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் ஸ்ரேயா. குறித்த நேரத்தில் படப்பிடிப்பை தொடங்காததால் அவர் படத்திலிருந்து விலகிக் கொள்ள த்‌ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். மதுரையை மையமாகக் கொண்டு படம் தயாராகிறது. த்‌ரிஷா ஆங்கிலோ இந்தியனாக நடிக்கிறார். கதாபாத்திரத்துக்காக ப்ரவுன் நிறத்தில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடிக்கிறார். த்‌ரிஷா தனது கண்ணின் நிறத்தை மாற்றிக் கொள்வது இதுவே முதல்முறையாம்.

ஆடுகளத்துக்காக த்‌ரிஷாவுக்கு ஸ்பெஷல் காஸ்ட்யூம்கள் தயாராகிறது. மேலும், அவரது கூந்தல் ஸ்டைலும் மாற்றப்பட உள்ளது. இந்தப் படத்தில் தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசவுள்ளார் த்‌ரிஷா.

பாலாவுக்கு ஊனமுற்றோர் நல வாரியம் கண்டனம்!


நான் கடவுள் படத்தில் கண் பார்வையற்ற ஒரு பெண்ணை குருடி என விளிப்பது போல காட்சிகள் அமைத்தது, ஊனமுற்றவர்களை கொடூர சித்திரவதைகளுக்கு உட்படுத்துவது போல காட்டியுள்ளதை தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்த விஷயத்தில் இயக்குநர் பாலா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என வாரியம் அறிவித்துள்ளது.

வாரி்யத்தின் உறுப்பினர் என்ஜினீயர் கோபிநாத், ஊனமுற்றோர் சமூக சேவை நிர்வாகிகள் ரமேஷ், வைரமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படத்தில் உடல் ஊனமுற்றோரை பிச்சைக்காரர்களாகவும் கண்பார்வையற்ற பெண்ணை குருடி என விளிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர், வாய் பேச இயலாதோரை வில்லன் நடிகர் துன்புறுத்தி அடித்து, உதைத்து பிச்சை எடுக்க வைப்பது போல காட்சிகள் அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

பார்வையற்ற பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பூஜாவிற்கு இழைக்கப்படும் கொடுமைகளை தாங்க முடியாமல் அவரே தன் உயிரை எடுப்பதென்பது ஊனமுற்ற சமுதாயத்தினருக்கு தவறான தகவலாகவும், ஒத்து கொள்ள முடியாத ஒன்றாகவும் உள்ளது.

உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர் தன்னம்பிக்கையுடன் உழைத்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் காலத்தில், ஊனமுற்றோரை இழிவுப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நான் கடவுள் படத்தின் காட்சிகளையும், வசனங்களையும் நீக்க வேண்டும். இயக்குனர் பாலா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கெனவே இயக்குநர் பாலா விளக்கமளித்துள்ளார். ஊணமுற்றோர் மற்றும் பிச்சைக்காரர்கள் குறித்து, தான் வாழ்க்கையில் நேரில் பார்த்தவற்றை மட்டுமே படமாக்கி்யுள்ளதாகவும், திரையில் காட்சிகளாகக் காட்டியுளளவை 100 சதவிகிதம் மிகைப்படுத்தல் இல்லாத உண்மை என்றும் தனது சமீபத்திய பேட்டியில் பாலா கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

இன்னொருவன் விமர்சனம்


குப்பை பொறுக்குகிறவன் கோடீஸ்வரன் ஆகிற கதை. துணைக்கு விவேகானந்தரையும் அழைத்துக் கொள்வதால் லாஜிக்கை உரசி காயப்படுத்தாமல் கதை நகர்கிறது. ஆச்சர்யம் என்னவென்றால், சீரான வேகத்திலிந்து சற்றும் சண்டித்தனம் செய்யாமல் நகர்கிற திரைக்கதை!

புதுமுகம் ஆதித்யாவுக்கு தனது அப்பா விபத்தில் இறந்து போன பேப்பர் மில்லை விலைக்கு வாங்கிவிட வேண்டும் என்பது லட்சியம். ஆனால் பேப்பர் பொறுக்குகிறவனின் பேச்சை கிரேட் ஜோக்காக நினைத்து வாய் விட்டு சிரிக்கிறார்கள் நண்பர்கள். அவர்களின் சிரிப்பையே நம்பிக்கை 'சிரப' ஆக நினைக்கும் ஹீரோ, லட்சியத்தை எப்படி அடைகிறான் என்பதை சொல்கிறது இரண்டு மணி நேரப்படம். இடையிடையே காதல், கடத்தல், கரன்ஸி என்று மொக்கை போட்டாலும், சில காட்சிகள் தூக்கல்!

புதுமுகம் ஆதித்யாவுக்கு நடிப்பு கை வந்த கலையாக இருக்கிறது. வரவேற்கலாம். பாடல் காட்சிகளில் ரஜினியை காப்பியடிப்பதும் தன்னம்பிக்கை என்றால், ஸாரி தம்பி! பனகல் பார்க்குக்கு போய் ஆன்ட்டிகளை கரெக்ட் பண்ணி பணக்காரனாக துடிக்கும் இவர், திடீரென்று 'ஆன்ட்டி' ஹீரோவாக ட்விஸ்ட் அடிப்பது தித்திக்கும் திருப்பம். இவரது ஒரே சொற்பொழிவில் ஆன்ட்டியின் ஆசைகள் போண்டியாவது கடைந்தெடுத்த சினிமாத்தனம்!

புதுமுகம் மனோஹாவுக்கு குழந்தை முகம், கொய்யாப்பழ சிரிப்பு. பாடல் காட்சிகளில் தாராளம். போதாதா...? இவரை கடத்திக் கொண்டுபோய் சித்திரவதை செய்யும்போது அச்சச்சோ என்கிறார்கள் தாய்மார்கள்.

மொத்த படத்தையும் தூக்கி சுமக்கும் 'கிரேன்' ஆகியிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அநாயசமாக நாக்கில் புரளும் சென்னை பாஷையும், அதற்கேற்றார் போல இவரது பேப்பர் கடையில் வேலை பார்க்கும் துணை சாத்தான்களும் தியேட்டரையே துவம்சம் பண்ணுகிறார்கள். போதும் போதாதற்கு ஆஞ்சநேய பக்தரான இவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார் ஒரு டீன் ஏஜ் பொண்ணு. முடிவு... தியேட்டரே கொல்லென சிரிக்கிறது.

1000 கோடி ரூபாயை லவட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகும் மணிவண்ணன் கதைக்கு எந்த விதத்திலும் விறுவிறுப்பு சேர்க்கவில்லை. இதே ரகம்தான் வில்லன் தண்டபாணியும்.

எங்கோ சர்ச்சில் மணியடித்துக் கொண்டிருந்தவரை இசையமைப்பாளர் ஆக்கிவிட்டார்கள் போலும். குத்துப்பாடல் கூட ஜெபக் கூட்டப் பாடல் போலவே இருக்கிறது. ஆனால், காய்கறிகளை வரிசைப்படுத்தும் அந்த பாடலை எழுதிய கைகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கலாம்.

இன்னொருவனை கொடுத்த இயக்குனரை நம்பி இன்னொரு படத்தை கொடுக்கலாம்!

ஜெயிச்சா ஹீரோ, இல்லைன்னா வில்லன்! -புதிய ஹீரோவின் பலே பதில்...


அரைத்த மாவையே அரைக்காமல் வித்தியாசமாக யோசிக்கிற எவருக்கும் ஒரு வெல்கம் சொல்வது நமது கடமையல்லவா? நியூசிலாந்திலிருந்து தமிழ்ப்படம் எடுக்க வந்திருக்கும் ரிச்சர்டு ராஜ், அப்படி ஒரு வித்தியாசத்தோடு வந்திருப்பதால், வெல்கம்ணே...!

இவர் எடுக்கப் போகும் தலை எழுத்து படத்தின் கான்செப்ட்டை கேட்டால், 'அடடே'என்பீர்கள். நியூசிலாந்தில் இவர் ஒரு ஹோட்டல் வைத்திருந்தாராம். அங்கே ரெகுலராக வரும் ஒரு ஊனமுற்றவர்தான் இந்த கதை உருவாக காரணமாக இருந்தவர். கை கால்கள் செயலிழந்து, வாய் பேச முடியாதவர்களின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும்? அவர்கள் எப்படி தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவார்கள்? அவர்களுக்கென்று ஒரு சாஃப்ட்வேர் இருந்தால் சுலபமாக இருக்குமல்லவா? இப்படியெல்லாம் தனக்குள் கேள்விகளை எழுப்பி 'தலை எழுத்து' என்ற இந்த படத்தின் கதையை உருவாகியிருக்கிறார் ரிச்சர்டு ராஜ்.

இந்த படத்தை எடுக்கும்போதே ஏன் இந்த ரிஸ்க்? என்று நண்பர்கள் கேட்டார்களாம். "சாதாரண மனுஷனுக்கு ஊனமுற்றவர்களோட பெயின் தெரியாது. ஆனால், ஒரு ஊனமுற்றவர் இந்த படத்தை பார்த்தால் சந்தோஷப்படுவார் என்றார் எத்திராஜ். இவர்தான் இப்படத்தின் இயக்குனர்.

படத்தை தயாரிப்பதோடு ஹீரோவாகவும் நடிக்கிறார் ரிச்சர்டுராஜ். இவருக்கு தமிழ் சினிமா புதியதல்ல, ஏற்கனவே வல்லரசு, ஜெயம் என்ற இரண்டு படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக பிரமோஷன் ஆகியிருக்கேன். மக்கள் ஏத்துகிட்டா ஹீரோ. இல்லைன்னா இருக்கவே இருக்கு வில்லன் ரோல் என்கிறார் ஸ்போர்டிவாக!

வாஸ்து நிபுணர் மாதவன்? -அலறும் கோடம்பாக்கம்!


நல்லவேளை, வீட்டோடு நிற்கிறது வாஸ்து. இதையெல்லாம் மனுஷ உடம்பில் அப்ளை பண்ண ஆரம்பித்தால் என்னாவது? வாஸ்துபடி வாய் சரியில்லே, அதை எடுத்து முதுகு பக்கம் வச்சிட்டா சரியாயிடும் என்று ஆபரேஷன் செய்து அலங்கோலமாக்கியிருப்பார்கள். சரி, விஷயத்திற்கு வருவோம்.

இன்றைய தேதியில் தமிழ்சினிமாவில் வாஸ்து வல்லுனர் யாரென்றால் மாதவன்தானாம். அநியாயத்துக்கு பார்க்க ஆரம்பிச்சுட்டார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். புதிய படங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்தாலும், அண்ணாச்சி ஆபிஸ் பக்கம் வந்திரக் கூடாதுன்னு வேண்டிக்கிற அளவுக்கு வாஸ்து விஷயத்தில் வறுத்தெடுக்கிறாராம்! ஆபிஸ் வாசல் இந்த பக்கம் இருக்கணும். பேசாம ஆபிசையே மாத்திடுங்களேன் என்கிற அளவுக்கு அட்வைஸ் மழை பொழிய ஆரம்பித்துவிடுகிறாராம்.

எப்படி ஆரம்பித்தது இந்த பழக்கம்? வேறொன்றுமில்லை. நடிக்க வந்த புதிதில் கீழ்ப்பாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் இருந்தாராம். அங்கே கிழக்கு பக்கத்தில் ஒரு வாசல் இருந்தது. அந்த கதவை எந்நேரமும் மூடியே வைத்திருப்பாராம் மாதவன். ஒருமுறை வீட்டுக்கு வந்திருந்த ஹவுஸ் ஓனர், தம்பி இது வாஸ்துபடி கட்டின வீடு. அந்த கிழக்கு பக்கத்து கதவை திறந்து வைங்க. பிறகு பாருங்க, உங்களுக்கு புகழும், செல்வமும் வந்து கொட்டப் போவதை என்று சொல்ல, அரை மனதோடு கதவை திறந்து வைத்தாராம் மாதவன். அவ்வளவுதான்... அன்று ஆரம்பித்த வெற்றி வரிசையாக தொடர பல கோடிகள் சம்பளம் வாங்குகிற பெரிய ஹீரோவாகிவிட்டார்.

லேட்டஸ்ட் நிலவரப்படி மாதவனின் யாவரும் நலத்திற்கு, அவ்வளவு கலெக்ஷன் இல்லையாமே? வாஸ்துவின் தோஸ்த் மாதவன், எதையாவது மாற்றி வைத்து படத்தை ஹிட் ஆக்குறதுதானே?

மீண்டும் விஷால்-ரீமாசென் -இறக்கை கட்டி பறக்கும் காதல்!


ஏற்கனவே எசப்பாட்டு, இதிலே இன்னுமொரு தொண தொணப்பு...! விஷாலும் Vishal-ரீமாசென்னும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று நாலு வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நெருப்ப நெருப்பால மூடுற மாதிரி, வேறு வேறு கிசுகிசுக்களுக்கு வழி வகுத்த விஷால் மெல்ல மெல்ல ரீமாசென் கிசுகிசுவிலிருந்து வெளியே வந்தார். இப்போது மறுபடியும் ஒன்றிணையப் போகிறார்களாம் இருவரும்.

விஷால் நடிக்கும் புதிய படம் ஒன்றில் ரீமாசென்னை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. இந்த பேச்சு வார்த்தை முக்கால் கிணறு தாண்டிவிட்டதாம். ஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு புதிய படங்களை ஒப்புக் கொள்ளலாம் என்று காத்திருந்த ரீமா, இந்த வாய்ப்பை தானே வலியப் போய் கேட்டராம் விஷாலிடம்!

இது ஒருபுறம் இருக்க, கடந்த வாரம் சென்னையில் நடந்த செல்வராகவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டாராம் ரீமா. அன்றிரவே பிரமாண்டமான பார்ட்டி ஒன்றும் நடந்ததாம். மற்ற விபரங்களை நீங்களே யூகித்துக் கொள்ள மாட்டீர்களா என்ன?

ஜெய்யின் 'திமிர்' பேட்டி திரையுலகம் அவசர கூட்டம் நாளைக்கு திக் திக் முடிவுகள்!


தமிழ் சினிமாவில் எந்த ஹீரோவும் செய்யாத துரோகத்தை செய்திருக்கிறார் ஜெய். முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றில் இவர் அளித்திருக்கும் பேட்டி, பல தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் அந்த பேட்டியில்?

"நான் நடித்துக் கொண்டிருக்கும் வாமனன் படம் பெரிய ஹிட் ஆகும். ஆனால், அதற்கு பிறகு வரப்போகும் என்னுடைய இரண்டு படங்கள் பெரிய ஃபிளாப் ஆகும்" இதுதான் ஜெய்யின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள். பல கோடிகள் முதலீடு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், படத்தை பற்றி ஏதாவது நான்கு வரி செய்தி தவறாக வந்தால் கூட, அதிர்ந்து போய்விடுவார்கள். ஏனென்றால், விநியோகஸ்தர்கள் படத்தை வாங்காமல் போய்விட்டால் என்னாவது? ரசிகர்கள் தியேட்டருக்குள் வராமல் போய்விடுவார்களோ? இப்படியெல்லாம் நாலு வரி கிசுகிசுவுக்கே அஞ்சும் தயாரிப்பாளர்கள், படத்தின் ஹீரோவே இப்படி ஒரு அபாண்டத்தை சுமத்தினால் எப்படி தாங்கிக் கொள்வார்கள்?

வாமனன் படத்திற்கு பிறகு ஜெய் நடித்து வெளிவரவேண்டிய படங்கள் அதே இடம் அதே நேரம், அவள் பெயர் தமிழரசி, அர்ஜுனன் காதலி. இதில் எந்த படத்தை ஃபிளாப் ஆகும் என்கிறார் ஜெய்? படத்தின் ஹீரோவே தனது படத்தை பற்றி இப்படி சொல்லிவிட்ட பிறகு எந்த விநியோகஸ்தராவது மேற்படி படங்களை வாங்க முன்வருவார்களா?

இவர் கொடுத்த பேட்டி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக இதுபற்றி விவாதித்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், ஜெய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் கோவா படப்பிடிப்பை உடனே நிறுத்த சொல்லிவிட்டதாம். குறைந்தது ஆறு மாதங்களாவது ஜெய்யுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்ற திக் திக் நிமிடங்களோடு நகர்கிறது நேரம்.

தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு நாளை அவசரமாக கூட்டப்படுகிறது. ஜெய்யின் தலை எழுத்தை நாளை முடிவு செய்வார்கள் போல் தெரிகிறது.

Monday, March 9, 2009

அனுஷ்காதான் இப்போ டாப்!


கோடம்பாக்கத்தின் இன்றைய ஹாட் அனுஷ்காதான். ஆந்திராவிலிருந்து வந்தாலும் அம்மணி இயல்பில் மிளகாய் அல்ல... ஜிலுஜிலு ஐஸ்க்ரீம்.கவர்ச்சி என்று சொல்லி வாய்மூடும் முன்பே கையில் பிகினியோடு நிற்கும் புரட்சி நடிகையான அனுஷ்காவைதான் விஜய் தொடங்கி ஜேகே ரித்தீஷ் வரை கேட்கிறார்கள், ஜோடியாக.

அதிலும் வேட்டாக்காரன் படத்தில் ஒப்பந்தமான பிறகு, தனுஷ், சிம்பு, விஷாலே என இவரது கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கும் ஹீரோக்கள் பெயர்களை எழுதினால் ஒரு தனி பட்டியலே தேறும்.கோடம்பாக்கத்தில் ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் அவரது இலக்கு என்ன?

வேற என்ன.. கைநிறைய நல்ல படம், பை நிறைய பணம்... இதுக்கு வஞ்சனையில்லாம நடிச்சுக் கொடுப்பேன். நிச்சயம் யாரும் குறை சொல்லாத அளவுக்கு நல்ல நடிகையா நிலைப்பேன். அந்த நம்பிக்கை வந்த பிறகுதான் பல தெலுங்குப் பட வாய்ப்புக்களைக் கூட உதறிவிட்டு கோடம்பாக்கத்துக்கு குடி வந்திருக்கிறேன், என்கிறார் அனுஷ்கா.

கவலைப்படாதீங்க... அக்கட தேசத்தில விட்டதை வட்டியும் முதலுமா இங்க பிடிச்சிடலாம்...!!

மீனாட்சியின் டைரக்ட் டீலிங்!


வர வர மீனாட்சி, படு அட்டகாசமாக, பட வாய்ப்புகள் தொடர்பான டீலிங்குகளை கையாள ஆரம்பித்துள்ளார்.கருப்பசாமி குத்தகைதாரரில் அடக்கம் ஒடுக்கமாக வந்து போன மீனாட்சிக்கும், லேட்டஸ்ட் மீனாட்சிக்கும் இடையே, மதுரைக்கும், பாரீஸுக்கும் இடையிலான வித்தியாசம். அப்படி ஒரேயடியாக மாறிப் போய் விட்டார் மீனாட்சி.

அதை விட விசேஷமாக, எப்படிப்பட்ட கிளாமராக இருந்தாலும் தயாராக இருக்கும் மீனாட்சி தனது பட வாய்ப்புகளை நேரடியாக தானே பேசி டீல் செய்கிறாராம்.

இதற்காக மேனேஜர் என யாரையும் வைத்துக் கொள்ளாமல், எதுவாக இருந்தாலும் என்னிடமே நேரடியாக வரலாம். பேசலாம் என்று படு தெளிவாகப் பேசுகிறாராம்.

இதனால் இடைச் செருகல், இடை பொறுமல் எதுவும் இல்லாமல் நேரடியாக மீனாட்சியிடம் விலாவாரியாக பேசி அவரை தங்களது படங்களுக்கு புக் செய்து வருகின்றனராம் தயாரிப்பாளர்கள்.தோரணை படத்தில் மீனாட்சி செமத்தியான குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளாராம். நாயகன் விஷாலே விரும்பிக் கேட்டுக் கொண்டதால் இந்த குத்துப் பாட்டுக்கு ஸ்பெஷல் ஆட்டம் போட்டு விட்டு வந்தாராம் மீனாட்சி.

மப்பில் தி‌ரியும் மம்மி பின்வாங்கிய புத்தர் கிசு கிசு

மப்பில் தி‌ரியும் மம்மி
லவ் நடிகையின் மம்மி பார்ட்டிகளில் எப்போதாவது ஆல்கஹாலை மோந்து பார்ப்பார். இது இரண்டு வருடங்களுக்கு முன்பு. இப்போதெல்லாம் மூக்குவரை குடித்தால்தான் மம்மிக்கு கிக்கே ஏறுகிறதாம்.

மகள் நடிக்கும்போது போதையை போட்டு ஓரமாக சாய்ந்து விடுகிறார் என்பது இவரைப் பற்றிய லேட்டஸ்ட் கம்ப்ளைண்ட்.

உச்சத்தின் கூச்சம்

காதல் காட்சியில் வழக்கமான ரொமான்ஸ் இல்லாமல் எந்திரத்தனமாக நடித்திருக்கிறார் உச்சம்.அட, சும்மா நடிங்க என்று பிஃப்டி கே‌ஜி தா‌ஜ்மஹால் உற்சாகப்படுத்தி‌யிருக்கிறார்.
வயசாகிவிட்டதால் உண்டான சுணக்கம் என்கிறார்கள். சிங்கத்துக்கும் சிகை நரைக்குமா என்ன


பின்வாங்கிய புத்தர்

புத்த இயக்குனர் தனது ஹெவன் படத்துக்கும் சிக்ஸ் பேக் ஹீரோவிடம்தான் கால்ஷீட் கேட்டிருக்கிறார்.யானை படத்துக்கு வர வேண்டிய சம்பளமே இன்னும் கிடைக்கவில்லை. மறுபடியும் ஒரு படமா என்று கௌரவமாக கழன்று கொள்ள, வேறு வழியில்லாமல் அவர் பிடித்ததுதான் விரல் நடிகராம்.

கிடுகிடு ஹேமமாலினி



முன்னாள் கனவுக் கன்னி ஹேமமாலினிக்கு இன்றும் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். பாட்னா சாலைகள் ஹேமமாலினியின் கன்னங்களைப் போல் பளபளப்பாக இருப்பதாக லாலு பிரசாத் சொன்ன ஒப்பீடு தேசிய அளவில் ஹாஸ்யமானது நமக்கு‌த் தெ‌ரியும்.

நாம் சொல்ல வந்தது இந்த பழம்பெரும் ஹேமமாலினியை அல்ல. அவரது பெய‌ரில் அறிமுகமாகியிருக்கும் புத்தம்புது ஹேமமாலினியை.

ராஜேஷ்வ‌ரின் இந்திரவிழாவில் தா‌ஜ்மஹால் பளீருடன் அறிமுகமாகியிருக்கிறார் புதிய ஹேமமாலினி. படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் ஹோம்லி வேடங்களைவிட கிளாம‌ரில் இவருக்கு அதிக நம்பிக்கை என்பது தெ‌ரிகிறது. கண்டாலே கதி மோட்சம் எனும் அளவுக்கு காஸ்ட்யூமில் தாராளம்.

படத்தின் ஸ்டில்கள் மற்றும் ட்ரெய்லரைப் பார்த்தே ஹேமமாலினிக்கு வாய்ப்புகள் வ‌ரிசை கட்டுகின்றன. அதில் முந்திக் கொண்டவர் மச்சக்காரன் ‌ஜீவன்.

இவரது நான் அவன் இல்லை இரண்டாம் பாகத்தில் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக ஹேமமாலினி நடிக்கிறார். உடன் நடிக்கும் மற்றவர்கள் சங்கீதா க்‌ரிஷ், ஸ்வேதா மேனன், லட்சுமிராய். ஐந்தாவது ஹீரோயின் இன்னும் அகப்படவில்லை.

நமிதாவுக்கு தலைவலியாகவும், இளைஞர்களின் புதிய தலைவியாகவும் உருவெடுப்பார் என ஹேமமாலினி பற்றி சொல்கிறார்கள். ஆடை குறைப்பைப் பார்த்தால் இந்த ஜோஸ்யம் பலிக்கும் என்றே தோன்றுகிறது.

ர‌ஜினிக்கு ரஹ்மான் வாய்ஸ்


எந்திரன் படத்தில் நடிக்கும் ர‌ஜினிக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் குரல் கொடுக்கிறார். ஆச்ச‌ரியமாக இருக்கிறாதா? ஆனால், முற்றிலும் உண்மை.

சன் பிக்சர்ஸ் பெரும் பொருட் செலவில் எந்திரன் படத்தை தயா‌ரித்து வருகிறது. ஷங்கர் படத்தை இயக்குகிறார். ர‌ஜினியுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். படத்துக்கு இசை ஏ.ஆர். ரஹ்மான்.

இதன் ஓபனிங் பாடல் காட்சியை ஹைதராபாத் ராமோ‌ஜிராவ் பிலிம் சிட்டியில் அரங்கு அமைத்து எடுத்து வருகிறார் ஷங்கர். ர‌ஜினி, ஐஸ்வர்யா ராயுடன் ஆயிரம் துணை நடிகர்கள் இந்தப் பாடல் காட்சியில் பங்கு பெறுகின்றனர்.

சிவா‌ஜி படத்தில் இடம்பெற்ற பூம்பாவாய்... பாடல் இங்குதான் அரங்கு அமைத்து எடுக்கப்பட்டது. அதைவிட பிரமாண்டமான அரங்கை எந்திரனுக்காக உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குனர் சாபு சி‌ரில்.

இந்தப் பாடல் காட்சிக்கு மட்டும் மூன்று கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. (தமிழில் சூப்பர் ஹிட்டான சுப்பிரமணியபுரம், வெண்ணிலா கபடிகுழு படங்களின் பட்ஜெட் இதைவிட குறைவு).

இந்த ஓபனிங் பாடலை ஏ.ஆர். ரஹ்மானும், மதுஸ்ரீயும் இணைந்து பாடியுள்ளனர். ர‌ஜினிக்கு ரஹ்மான் குரல், ஐஸ்வர்யாராய்க்கு மதுஸ்ரீயின் குரல். இரண்டு வாரங்கள் இங்கு படப்பிடிப்பு நடத்த திட்மிட்டுள்ளார் ஷங்கர்.

ஒருவரும் வாழ்த்தவில்லையே... கவலைப்படுகிறார் ஒரு இயக்குனர்!


கடன் தீர்ந்த பிறகும் கவலை விட்டபாடில்லை என்பார்கள். அது போல, படத்தின் பெரும் வெற்றியை பாலிவுட் உலகமே கொண்டாடியதோடு, பார்ட்டிகளில் தீர்த்தவாரி திருவிழாவையும் நடத்தி முடித்துவிட்டது. இன்னும் தன்னை பிடித்த கவலை தீராமல் இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

தமிழிலிருந்து இந்திக்கு போன இயக்குனர்களில் பெரும் ஹிட் அடித்தவர் முருகதாஸ் மட்டுமே! ஆணானப்பட்ட ஷங்கரே, தயாரிப்பாளரை கடனாளியாக்கிவிட்டு திரும்பினாரே ஒழிய, 'ஹிட்' என்ற வார்த்தையை எழுதி கூட பார்க்க முடியவில்லை இந்தியில்! 'ஆஸ்கர் என்பது ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிற விருது. இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது' என்று பேட்டி கொடுக்கிற தமிழ் பித்தர்கள் கூட, தங்கள் படங்களை ஆங்கிலத்தில் சப் டைட்டில் போட்டு ஆஸ்கர் கமிட்டிக்கு அனுப்பியவர்கள்தான். இதுபோன்ற கோடம்பாக்கத்து புள்ளிகளின் பெருந்தன்மை தெரிந்தும், தன்னை ஒருவரும் பாராட்டவில்லையே என்று முருகதாஸ் வருந்திக் கொண்டிருப்பதே வருத்தத்திற்குரியதுதான்.

இவ்வளவு சோகத்திற்கு நடுவிலும், தன்னை நேரில் வந்து வாழ்த்திய ஒரே நடிகர் என்று முருகதாஸ் குறிப்பிடுவது, அவரது குருநாதர் எஸ்.ஜே.சூர்யாவைதான்!

பிசியான நேரத்திலே அரசியலா? -அதிர்கிறார் த்ரிஷா...


தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தாலும், விடாமல் விரட்டுதே விதி! என்னதான் செய்வார் த்ரிஷா? வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக இவர் பிரச்சாரம் செய்யப் போகிறார் என்று யாரோ கொளுத்திப்போட பரபரப்பு தொற்றிக் கொண்டது கோடம்பாக்கத்தில். குளியல் மேட்டராவது பரவாயில்லை. இளசுகள் ராஜ்ஜியத்தில் புது குறுகுறுப்பை உருவாக்கியது. இவர்கள் பற்ற வைத்த அரசியல் வெடி, தனக்கே வினையாக முடியுமோ என்பதுதான் த்ரிஷாவின் கவலை.

பிரச்சாரத்துக்கு எப்போ கிளம்புவீங்க? அதுக்கு முன்னாடி நீங்க நடிக்கிற படத்தின் ஷ¨ட்டிங் முடிஞ்சுருமா? என்றெல்லாம் த்ரிஷாவுக்கு போன் அடித்து கேள்வி மேல் கேள்வியாக கேட்ட நிருபர்களிடம், 'இது யாரு செஞ்ச வேலைன்னே தெரியலேயே, எனக்கு அரசியல் ஆசையெல்லாம் கிடையாது' என்று புலம்பும்படி ஆனது அவரது நிலைமை.

ஏரியாவில் விசாரித்தால், சில டெல்லி பிரமுகர்கள் த்ரிஷாவை அணுகி பேரம் பேசியதெல்லாம் உண்மைதானாம். 'அரசியலுக்கு நடிகைகள் வரணும்னா அவங்களுக்கு மார்க்கெட் போயிருக்கனும். ஆனால், நான்தான் பிசியா இருக்கிறேனே, எனக்கு எதுக்கு அரசியல்?' என்றாராம் த்ரிஷ்.

ஜெயப்ரதா, நக்மா மாதிரி கொஞ்சம் மெச்சூரிடி வரட்டும்ணே... கொழந்த பயப்படுதில்லே!

இயக்குனருக்கு அடி உதை? ஷூட்டிங்கில் விஷால் கோபம்!


விஷால், ஸ்ரேயா இணைந்து நடிக்கும் 'தோரணை' படத்தை அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவே தயாரிக்கிறார். சிக்கனம் என்ற பெயரில் இவர்கள் நடத்தும் கெடுபிடிதான் உதவி இயக்குனர்கள் மத்தியில் இப்போதைய ஹாட் டாபிக்! தினந்தோறும் வழங்கப்படுகிற பேட்டாவை சுருக்கி 50 ரூபாய் ஆக்கிவிட்டார்களாம். தினமும் 150 ரூபாய் வாங்குகிற உதவி இயக்குனர்கள் கூட இந்த சம்பளக் குறைப்பினால் அதிர்ச்சியடைந்திருக்கிறார்களாம். சாப்பாட்டு விஷயத்திலும், மொத்த யூனிட்டையும் 'திடீர் சைவர்கள்' ஆக்கியிருப்பது பலருக்கும் ஷாக்!

இது ஒருபுறமிருக்க, விஷாலின் தலையீடு தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம் இயக்குனர் சபா ஐயப்பன். ஒருநாள் அத்தனைபேர் முன்னிலையிலும், இவரை 'பளார்' என்று அறைந்துவிட்டாராம் விஷால். ஏன்? படம் துவங்கிய நாளில் இருந்து ஒருநாள் கூட விடாமல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறதாம். 'இரண்டு நாட்களாவது பிரேக் விட்டால் கொஞ்சம் ரிலாஸ் பண்ணிக் கொள்ளலாமே' என்றாராம் விஷாலிடம். 'சார், சினிமாவை மிஷின் மாதிரி எடுத்தா கிரியேடிவிடி கெட்டுப்போகுமே' என்று கூடுதலாக இவர் பேசிய வார்த்தைகள்தான் விஷாலின் கோபத்துக்கு காரணம் என்கிறார்கள்.

கதையிலிருந்து, காட்சிகளை ஷூட் பண்ணுகிற வரைக்கும் தலையிடும் விஷால், இனி பேசவும் கூடாது என்றால் என்ன செய்வது என்பதுதான் இந்த வருங்கால இயக்குனரின் நிகழ்கால சோகம்!

தெலுங்கிலும் வெட்னஸ் டே! கமலுடன் இணைகிறார் வெங்கடேஷ்!


சின்ன சின்ன சிக்கல்களையும் தீர்த்துவிட்டு ஜம்மென்று இறங்கிவிட்டார் கமல். வெட்னஸ்டே படத்தின் ரீமேக்கான 'தலைவன் இருக்கின்றான்' படப்பிடிப்பு வெகு விரைவில் துவங்கப்பட இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகும் படம் இது. நஸ்ருதீன் ஷா வேடத்தில் கமலும், அனுபம்கெர் வேடத்தில் மோகன்லாலும் நடிக்கிறார்கள். தமிழ், மற்றும் மலையாளத்தில் இந்த காம்பினேஷன். ஆனால் தெலுங்கில் அனுபம் கெர் வேடத்தில் நடிக்கவிருப்பவர் வெங்கடேஷ்தானாம்! கமலுடன் மல்லுக்கு நிற்கிற இன்ஸ்பெக்டர் வேடத்தில் எல்லா மொழிகளிலும் தலைகாட்டப் போகிறவர் ரியாஸ்கான்!

வெட்னஸ் டே படத்தின் ரீமேக்காக இருந்தாலும், காட்சிக்கு காட்சி காப்பியடிக்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறாராம் கமல். தமிழுக்கு ஏற்றார்போல் சில திருத்தங்களையும் மேற்கொண்டிருக்கிறார்.

முஸ்லீம் வேடத்தில் இவர் நடித்தாலும், ஒரு காட்சியில் கூட தனது பெயரை உச்சரிக்க மாட்டாராம். அதுமட்டுமல்ல, தாடியை வைத்துதான் கமல் ஒரு முஸ்லீம் என்பதையே அடையாளம் கண்டு கொள்கிற அளவுக்கு ஜாக்ரதையாக இருக்கப் போகிறாராம். கமல் என்ன செய்தாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற ஒரு கோஷ்டி, இந்த படத்திற்கு என்னென்ன குடைச்சல்கள் கொடுக்கப் போகிறதோ?

நட்டு ஜோடி விஜயலட்சுமி!


பிசியான ஹீரோயினாக மாறியிருக்கும் விஜயலட்சுமி அடுத்து நட்டு என்கிற நடராஜுன் ஜோடி போட்டு மிளகா என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.சென்னை 600028 படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார் விஜயலட்சுமி. தற்போது தனி நாயகியாக கலக்க ஆரம்பித்துள்ளார்.

ஜெய்க்கு ஜோடியாக அதே நேரம் அதே இடம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஜயலட்சுமி அடுத்து நட்டு என்கிற நடராஜுடன் இணைகிறார்.இந்த நட்டு வேறு யாருமல்ல, நாளை படத்தின் மூலம் 2வது நாயகனானவர். தொடர்ந்து சக்கரவியூகம் என்ற படத்தில் தனி நாயகனாக நடித்தார்.தற்போது முழுநிலவு என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் விஜயலட்சுமியுடன் ஜோடி சேருகிறார் நட்டு. ரவிமரியா இப்படத்தை இயக்குகிறார். இவர் ஜீவாவை வைத்து ஆசை ஆசையாய் படத்தை இயக்கியவர்.

படத்திற்கு வித்தியாசமாக மிளகா என பெயரிட்டுள்ளார் மரியா. சுந்தர்.சி.பாபு இசையமைக்கிறார். வித்தியாசமான காதல் கதையாக இருக்குமாம் இது. அடுத்த மாதம் ஷூட்டிங்கைத் தொடங்கவுள்ளனர்.

சனா..தனக்குத் தானே!


சனா கான் ஏகத்துக்கும் நல்ல பிள்ளையாக இருக்கிறாராம். தயாரிப்பாளர்கள் சொல்லிச் சொல்லி சிலாகிக்கிறார்கள்.மும்பையிலிருந்து சிலம்பாட்டம் வழியாக வந்தவர் சனா கான். வந்தது முதல் தமிழ் தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையாகி விட்டார்.

சனா கானை புக் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இத்தனை ஆர்வத்துக்கு முக்கிய காரணம், சனாகானின் பழக்க வழக்கம்தான்.அதாவது யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் படு சமத்தாக இருக்கிறாராம் சனா கான். தேவையி்ல்லாமல் செலவு வைப்பதில்லை.

தனக்கென தனியாக ஒரு மேக்கப்மேனைக் கூட சனா வைத்துக் கொள்ளவில்லையாம். தனக்குத் தானே மேக்கப் போட்டுக் கொள்கிறாராம். இப்படி தேவையில்லாத செலவுகளை முடிந்த வரை குறைத்துக் கொள்கிறாராம் சனா.ஷூட்டிங்குக்குப் போகிற இடங்களில் கிடைக்கும் வசதிக்குள் இருந்து கொள்ள பழகிக் கொள்கிறாராம்.சனாகான் இப்படியே தொடர்ந்து இருப்பாரா அல்லது முன்னணிக்கு வந்த பின்னர் மாறிப் போய் விடுவாரா என்ற பேச்சும் கோலிவுட்டில் ரவுண்டு வந்து கொண்டிருக்கிறது.

Sunday, March 8, 2009

முரட்டுக்காளை ஷூட்டிங்கில் சுந்தர்.சி. படுகாயம்


தென்காசி அருகே நடந்த முரட்டுகாளை பட ஷூட்டிங்கில் சுந்தர் சி காயமடைந்தார்.
ரஜினி நடித்து 28 ஆண்டுகளுக்கு முன் வெளியான மெகா ஹிட் படமான ‘முரட்டுக்காளை’ படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் சுந்தர்.சி.

அவருக்கு ஜோடியாக சினேகா, சிந்து துலானி நடிக்கின்றனர். இந்தப்படத்தை செல்வபாரதி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தென்காசி பகுதியில் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் இப்படத்தி்ன் ஷூட்டிங் கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. ரேக்ளர் ரேஸ் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டன.

நேற்று சுந்தரபாண்டியபுரத்தில் மாட்டு வண்டிகள் வேகமாக செல்லும் காட்சிகள் படமாக்கப்பட்டபோது எதிர்பாரவிதமாக நடிகர் சுந்தர் சி சென்ற மாட்டுவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. கைகளிலும் சிராய்ப்பு ஏற்பட்டது.

உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுந்தர் சி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் குற்றாலத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருக்கும் சுந்தர்.சி. அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முரட்டுக்காளை குறித்து அவர் கூறுகையில்,

முரட்டுகாளை ஷூட்டிங் சுந்தரபாண்டியபுரத்தில் நடந்தது. கடந்த இரண்டு நாட்களாக நான் ஒட்டிச் சென்ற மாட்டுவண்டியில் பூட்டப்பட்ட மாடுகள் நேற்று ஓட்டி சென்ற வண்டியில் இல்லை. வேறு மாடுகள் பூட்டப்பட்டிருந்தன.வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றபோது மாடுகள் வேகமாக வண்டியை இழுத்து சென்றன. தெருவி்ல் திரும்பும்போது மாடுகள் முரண்டு பிடித்து ஓடியதால் எதிர்பாரவிதமாக நான் சென்ற வண்டி கவிழ்ந்தது. இதில் எனக்கு கை, கால்களில் அடிபட்டது.இதுகுறித்த தகவலை எனது மனைவி குஷ்புவுக்கு தெரிய படுத்தினேன். அவர் குற்றாலத்திற்கு வருகிறார். இன்று ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன்.

சினிமா ஷூட்டிற்கு ஏற்ற இயற்கை எழில் சூழ்ந்த இடமாக நெல்லை மாவட்டம் திகழ்கிறது. இதனால் நான் பல படங்களை இம்மாவட்டத்தில் ஷூட் செய்துள்ளேன்.இங்குள்ள மக்கள் எங்களுக்கு மிகவும் ஓத்துழைப்பு அளிக்கின்றனர். பொள்ளாச்சியை விட நெல்லை மாவட்டத்தில் லொக்கேசன் சிறப்பாக இருக்கிறது.எனது சொந்த தயாரிப்பான ஐந்தாம்படை படம் இம்மாதம் ரிலீஸ் ஆகிறது என்றார் சுந்தர்.சி.

கலைஞர் தொலைக்காட்சி தயாரிக்கும் முரட்டுக்காளை படப்பிடிப்பு விரைவில் முடிவடையவிருக்கிறது.

மாஸ் ஹீரோவாக்கியது ஜோதிகாதான் : சூர்யா


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பதாக சொல்வார்கள்.சூர்யாவின் வெற்றிக்கு பின் இருந்துவரும் பெண் அவரது மனைவி ஜோதிகாதானாம்.

சமீபத்தில் வேலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் சூர்யா. நடிகர் என்பதற்காக அவர் இந்த விழாவுக்கு அழைக்கப்படவில்லையாம். தனது அறக்கட்டளை மூலமாக ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கிவரும் மனிதாபிமானத்தை கருத்தில்கொண்டு அழைக்கப்பட்டிருந்தாராம்.


மாணவ பெருமக்களின் பலத்த கரகோஷத்துக்கிடையே மைக்கைப்பிடித்த சூர்யா, “படிப்பில நான் சூரப்புலியாக இருக்கவேண்டுமென்பதுதான் எனது அப்பாவின் ஆசையாக இருந்தது.ஆனா எனக்கு சுமாராகத்தான் படிப்பு வந்தது. உங்களை பார்க்கும்போது நடிப்பதை விட்டுட்டு படிக்க வந்துடலாமோ என தோன்றுகிறது” என நெகிழ, அடுத்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க ஆரம்பித்தார் சூர்யா.

உங்கள் வெற்றிக்கு யார் காரணம்? பல மாணவர்கள் ஒரே நேரத்தில் கோரஸாக கேட்ட கேள்வி இதுதான்.”என் அம்மா,அப்பா,இயக்குனர்கள் வசந்த், பாலா'என மாதா பிதா குருக்களை பட்டியல்போட்ட சூர்யா, ஜோதிகாவையும் இந்த பட்டியலில் சேர்க்க தவறவில்லை.

“நான் இன்னிக்கு மாஸ் ஹீரோவாக இருப்பதற்கு காரணம் என் மனைவி ஜோதிகாதான். 'காக்க காக்க' படத்திற்காக ஹீரோ தேர்வு நடந்தபோது அதில் என்னை கதாநாயகனாக்குமாறு சிபாரிசு செய்ததே ஜோதிகாதான். அந்த படத்திற்கு பிறகுதான் நான் மாஸ் ஹீரோவாக உயர்ந்தேன்” என பரவசமானார்.

50 வருடத்திற்கு மு்நதைய இளைஞனாக ஆர்யா


வரிந்து கட்டிய வேட்டி, வாகாக கட்டிய தலப்பா என புது வடிவம் காட்டி புருவம் உயர வைக்கிறார் ஆர்யா.
விஜய் இயக்கத்தில் நடிக்கும் 'மதராசப்பட்டினம்' படத்திற்காகதான் இவ்வளவு தோற்ற கிளை. "இது ஒரு பீரியட் ஃபிலிம். 1945-ல் சுதந்திரம் வரக்கூடிய ஒரு சூழலின் நிகழ்வுகளும் ஒரு காதலும்தான் கதை. ரொம்பப் பழைய மதராஸ். இப்போ கூவமா இருக்கிற பக்கிங்காம் கால்வாயில் படகுகள் போகிற அழகு. மவுன்ட் ரோட்டில் டிராம் வண்டிகளில் போற பயணிகள்னு இந்தத் தலைமுறை பார்க்காத ஓர் அழகான சென்னையைக் காட்டப் போறோம். ஒரு பிரமிப்பான அனுபவம் உங்களுக்கு நிச்சயம்" என உறுதியளிக்கும் இயக்குனர் விஜய் தொடர்கிறார்...

"ஒரு பீரியட் ஃபிலம் பண்ணணும்கிறது நிச்சயம் ஒவ்வொரு இயக்குனரின் கனவா இருக்கும். நான் பார்க்காத கடந்து போன ஒரு காலத்தைக் கண் முன்னாள் தத்ரூபமாக கொண்டுவர்றது சவால். சாதனை அப்படி ஒரு சாவால்ல சாதிச்சா அந்த சந்தோஷத்துக்கு ஈடானது வேறு எதுவும் இல்லை. ஏதோ ஓர் ஆசீர்வாதம், நான் பண்ற மூணாவது படமே (கிரீடம், பொய் சொல்லப் போறோம் இரண்டும் விஜய்யின் இயக்கம்தான்) பீரியட் படமா அமைஞ்சிருக்கு.

கேமிராமேன் நீரவ் ஷா, ஆர்ட் டைரக்டர் செல்வகுமார், நான்னு இந்தப் படத்துக்கு வேலை பார்க்கிற எல்லாருக்கும் பீரியட் படம் பண்றது புது அனுபவம். அதனாலேயே ஒவ்வொரு அடியையும் அளந்து வைக்கிறோம். பணத்தைப் பத்தி கவலைப்படாதீங்க, படத்தைப் பத்தி மட்டும் கவலைப்படுங்கன்னு தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் எங்களுக்குச் சுதந்திரம் கொடுத்துட்டார். அந்த நம்பிக்கையைக் காப்பாத்தணுமே

இந்தக் காலத்தை விட சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில்தான் இளமை திமிறிக்கொண்டு இருந்தது. அதுக்கு இப்போ பக்காவா செட் ஆவார் ஆர்யா. நான் கடவுள்னு அபூர்வமா ஒரு படம் நடிச்சுட்டு, தன் எல்லைகளை விரிவுபடுத்திட்டு வந்து நின்னார். கதையைச் சொன்னதுமே, பாஸ் ஷூட்டிங் கிளம்பிரலாம்னு ரெடி ஆகிட்டார்.

படத்துக்கு இன்னும் பெருசா கலர் கொடுக்கப் போகிற லண்டன் பொண்ணு ஏமி ஜாக்சன். மிஸ் டீன் வேர்ல்டு 2009 போட்டியில் ஜெயிச்ச அழகி லண்டனுக்கே நேரில் போய்ப் பார்த்து பிடிச்சுப் போய் ஸ்கிரிப்ட்டும் அட்வான்ஸூம் கொடுத்துட்டு வந்தோம். நிச்சயம் தமிழ் சினிமா தேடுற ஒரு பெண்ணா ஏமி இருப்பாங்க" மீண்டுமொரு உறுதியளிப்புடன் உரையை முடிக்கிறார் விஜய்.

மீண்டும் நடிக்க வந்த சங்கீதா -ஜீவனுக்கு ஜோடியானார்


நான் அவனில்லை படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து தனது செகன்ட் இன்னிங்சை துவங்கிவிட்டார் சங்கீதா. இதில் நடிக்கப்போகும் ஐந்து நாயகிகளில் சங்கீதாவும் ஒருவர்! நேமிசந்த் ஜபக் தயாரித்த நான் அவனில்லை படம் கன்னா பின்னவென்று கலெக்ஷனை கொட்டியது. அதுவரைக்கும் சாதா ஹீரோவாக இருந்த ஜீவன், இப்படத்தின் வெற்றிக்கு பின், முன்னணி ஹீரோக்களில் ஒருவரானார். இப்போது மீண்டும் அதே காம்பினேஷனுடன் நான் அவனில்லை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முன்வந்திருக்கிறார் நேமிசந்த் ஜபக்.

முதலில் ஜீவனுக்கு ஜோடியாக புதுமுகங்களை நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்தார்களாம். பிறகு யார் தலையீடோ, லட்சுமிராய், இந்திரவிழா ஹேமமாலினி, புனேவை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் என்று வரிசையாக அழைத்து அட்வான்ஸ் கொடுத்தார்கள். லேட்டஸ்டாக சங்கீதாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். இன்னும் ஒரு ஹீரோயின், அநேகமாக வெளிநாட்டு அழகியாக இருக்கலாம் என்கிறது கோலிவுட் குருவி.

முன்பெல்லாம் இஷ்டத்திற்கு கவர்ச்சி காட்டி வந்த சங்கீதா இந்த படத்திலும் கவர்ச்சி காட்டுவாரா? நான் அவளில்லைப்பா என்று இழுத்து மூடிக்கொள்வாரா என்பது படம் துவங்கி சிறிது நாட்களிலேயே தெரிந்து கொள்ளலாம்.

நீ வாழ பிறரை கெடுக்காதே... ரீமாசென்னின் அடடா பாலிசி


நீ வாழ பிறரை கெடுக்காதே! இதுதான் ரீமாசென்னின் கொள்கை, கோட்பாடு, இத்யாதி எல்லாமும்! ஒரு படத்தில் நடிக்க தன்னை அழைப்பவர்களிடம், இதற்கு முன்பு இந்த கேரக்டரில் நடிக்க வேறு யாரையாவது ஒப்பந்தம் செய்தீர்களா என்று முதலில் கேள்வி கேட்கிறாராம். காரணம், இப்போது நடந்து வரும் தொழில் போட்டிகள்தான்.

ஒரு நடிகை அட்வான்ஸ் வாங்கியிருந்தாலும் அந்த இடத்திற்கு இன்னொருவர் போட்டியிட்டு, அட்வான்சை திருப்பி கொடுக்க வைக்கிற அவலங்கள் நிறைய நடக்கிறதல்லவா? அதனால்தான் இப்படி ஒரு கேள்வியை கேட்டு முன்ஜாக்கிரதை முத்தழகியாகி இருக்கிறார் ரீமா.

ஆயிரத்தில் ஒருவன் ரிலீஸ் ஆவதற்குள் ரீமாவை கமிட் பண்ணிவிடலாம் என்று செக் புக்கோடு அலையும் இயக்குனர்களிடமும் 'கொஞ்சம் பொறுங்க' என்கிறார். ஒரு படத்தை முடிச்சிட்டுதான் இன்னொரு படம் என்கிற தனது பாலிசியை ஒருபோதும் மாற்றிக் கொள்வதில்லையாம் ரீமா.

தாமதமாகிக் கொண்டே போகும் ஆயிரத்தில் ஒருவன் பற்றி இவரிடம் பேசும்போது, படத்தையும் இயக்குனர் செல்வராகவனையும் கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார். காரணம், நல்ல படங்கள் வரவேண்டும் என்றால் இதுபோன்ற தாமதங்களை பொறுத்துக் கொள்ளதான் வேண்டும் என்பது ரீமாவின் நம்பிக்கை!

இப்படி ஒரு ஹீரோயின் கிடைச்சா, இன்னும் கூட இரண்டு வருஷம் படத்தை ஜவ்வாக இழுக்கலாம்!

முரளியின் மகன் நடிக்கும் பாணா சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது


எவர் கிரீன் ஸ்டுடண்ட் முரளியின் மகன் அதர்வாவும் ஹீரோவாகிவிட்டார். 'போங்கப்பா, இந்த செய்தி வந்து எவ்வளவு நாளாச்சு? ஏதோ புது செய்தி சொன்ன மாதிரி பம்மாத்துறியே' என்று அலுத்துக் கொள்கிறவர்கள், பழைய செய்தியை 'எரேஸ்' பண்ணும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிரமிட் சாய்மீரா நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்த ஆனந்தம் ஆரம்பம் படத்தில் முரளியின் மகன் அதர்வாவை அறிமுகப்படுத்தியதும், பிரமாண்ட துவக்க விழா நடத்தியதும் நினைவிருக்கிறது. ஏதோ சில காரணங்களால் அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போக, வேறொரு பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்தின் கதவை தட்டி காரியத்தை முடித்துக் கொண்டார் அதர்வா.

பிரபல நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் 'பாணா' என்ற படத்தில் ஹீரேவாக நடிக்கிறார் அதர்வா. பாணா என்றால் சென்னை பாஷையில் காத்தாடியாம். இவருக்கு ஜோடியாக சமந்த்தா என்ற புதுமுகம் நடிக்கிறார். 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' என்று அப்செட் ஆகாமல், 'தடங்கலையும் விரும்புகிறோம்' என்று சாதாரணமாக எடுத்துக் கொண்ட அதர்வாவுக்கு ஒரு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...!

Followers