Saturday, February 14, 2009

ஹீரோயினாகும் ஷாலினி சிஸ்டர்


குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியானவர்களின் பட்டியலில் புதிய வராகியிருப்பவர் ஷாம்லி.
விரல் நுனியை பற்றிக்கொண்டு பாதம் ஊன்றி நடந்த அழகு, காற்றில் ஆடிய கலைந்த முடிகள், ப்பே...ப்பே... என்ற மழலை பேருரை என அஞ்சலியில் பார்தது ரசித்த குட்டி ஷாம்லி இப்போது குமாரி ஷாம்லி. மூன்று வருடங்களாக எப்போது கிடைக்கும் இவரது கால்ஷீட் என ஷாமிலியை நாயகியாக்க முட்டிமோதிக் கொண்டிருக்கும் தமிழ் இயக்குனர்கள் நிறைய.

ஷாமிலியின் ஹீரோயின் அவதாரமோ தெலுங்கு பக்கம் தொடங்கியுள்ளது. தமிழில் சரியான கதை கிடைக்காததாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாம். இதுதவிர முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமேஅறிமுகமாக வேண்டும் என அக்கா ஷாலினியும், மாமா அஜித்தும் ஐடியா கொடுத்துள்ளனராம். எனவே புதுமுக நாயகனுக்கு ஜோடியாக நடிக்க கேட்டு வந்த வாய்ப்புகளை உதறி தள்ளிவிட்டார் ஷாம்லி.

ஆனால் தெலுங்கிலும், மலையாளத்திலும் தலா ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மலையாளத்தில் சிகரி என்ற படத்தில் மோகன்லாலுவின் மகளாக நடிக்கிறார். இப்படத்தை பத்மகுமார் இயக்குகிறார். இந்த படம் முடிந்த கையோடு தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தின் நாயகன் சித்தார்த்.

இதற்கிடையே தமிழில் நல்ல கதையும், முன்னணி இளம் நடிகருக்கு ஜோடியாகவும் நடிக்கும் வாய்ப்பு வந்தால் மட்டுமே தமிழில் கதாநாயகியாக நடிப்பது என்ற முடிவில் இப்போதும் உறுதியாக இருக்கிறார் ஷாமிலி.

நானும் ஒரு மாணவன்-கமல்


சினிமாத் துறையில் இன்னும் நான் உங்களைப் போலவே புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் மாணவனாகவே இருந்து வருகிறேன் என்று நடிகர் கமலஹாசன் கூறினார்.
சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய கலை விழா நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார் கமல அவர் பேசியதாவது: இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து கல்வி பயில வந்து இருக்கும் உங்களை சந்திக்க வாய்ப்பளித்த எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்திற்கு எனது நன்றி.

என் தந்தை என்னை உங்களைப் போல ஒரு பட்டதாரியாக்கத்தான் விரும்பினார். ஆனால் உயர்நிலைப் பள்ளியுடன் என் கல்வி நின்றுவிட்டது. அதற்காக படிப்பதை விட்டுவிடவில்லை நான். ஒரு மாணவனாக நிறைய படிக்கிறேன்... சினிமாவில் இன்னும் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.

உங்களைப் போன்ற படித்த மாணவர்கள் கலைத் துறைக்கு வர வேண்டும். உங்களில் சிலர் வெறும் ரசிகர்களாக மட்டும் இருந்து விடப் போவதில்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த கலைத் திருவிழா. இந்த மேடையில் வெற்றி பெறப் போகும் கலைஞர்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. அவர்களுக்கு எனது வாழ்த்துகள் என்றார் கமலஹாசன்.

நிகழ்ச்சியில் வேந்தர் டி.ஆர். பச்சமுத்து, இணைவேந்தர் பி.ரவி, துணைவேந்தர் பி. சத்திய நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆங்கிலோ இந்திய த்ரிஷா! -அசத்தப் போகும் ஆடுகளம்...


பொல்லாதவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் படம் ஆடுகளம். தனுஷ்-த்ரிஷாவின் கலக்கல் காம்பினேஷனோடு படத்தை துவங்கியிருக்கிறார்கள். மொத்த கதையும் மதுரையில்தான் நடக்கிறதாம். (சென்ட்டிமென்ட்?)

சொந்த ஊர் மதுரையாக இருந்தாலும் பதினாலு வயசிலேயே ஊரைவிட்டு வந்துவிட்டார் வெற்றி. அதன்பின் பாலுமகேந்திரா படங்களில் பணியாற்றியும், பட வாய்ப்புகளுக்காக அலைந்தும் திரிந்ததில் மதுரை மண்ணே மறந்து போச்சாம். அசத்தலாக ஒரு கதையை உருவாக்க வேண்டும். அதுவும் மதுரையிலேயே என்று முடிவெடுத்ததும் ஆறு மாதம் ஊரிலேயே தங்கிவிட்டாராம் வெற்றி.

இவருக்கு துணையாக இருந்து மதுரையை சுற்றிக்காட்டி, சிறுகுறிப்பு வரைந்தவர் பேராசிரியர் திருஞானசம்பந்தன். இவரது துணையுடன் மதுரை மணம் கமழ டயலாக்குகளை எழுதிய பிறகு முழு திருப்தியோடு படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார் வெற்றிமாறன். படத்தில் த்ரிஷாவுக்கு அசத்தல் ரோல். மதுரையிலேயே வசிக்கும் ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கிறாராம். குட்டை கிராப், கொஞ்சும் தமிழ் என்று த்ரிஷாவின் ஒவ்வொரு அசைவும் கவிதையாக இருக்குமாம்!

முக்கிய குறிப்பு- படத்தில் வருகிற டூயட்டுகள் மதுரையை சுற்றிதான் படமாக்கப் படுகிறதாம். கண்ணை மூடினால் வெளிநாட்டில் ஆடுவார்களே, அந்த பம்மாத்தெல்லாம் இல்லவே இல்லை என்கிறார்கள் 'ஆடுகளம்' யூனிட்டில்!

அகோரிகளை பார்த்தாரா ரஜினி? அதிர வைக்கும் மர்ம போன்கள்.


மயான பூமியை, ஏதோ ஃபாஸ்ட் புட் கடை போல நினைக்கும் அகோரி சாமியார்களை பற்றி படம் எடுத்தாலும் எடுத்தார்கள், நாலு நாள் ஷேவ் பண்ண மறந்தாலும், "மச்சி அகோரியாயிட்டாண்டா" என்று கிண்டலடிக்கிறார்களாம் யூத் ஏரியாவில்!

வெந்த பணியாரத்தில் வெல்லத்தை காய்ச்சி ஊற்றிய மாதிரி, இந்த அகோரிகளுக்கு தனி மரியாதையை கொடுத்து ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார் சூப்பர் ஸ்டார். நரி ஊளையிட்டாலே நாலு நாளைக்கு பேசும் ஊரில், சிங்கம் பிளிறினால் என்னாகும்? திரும்பிய இடமெல்லாம் ரஜினியின் கடிதம் பற்றிதான் பேச்சு.

"ஆன்மீகத்திலிருக்கும் அகோரி பாபாக்களின் வாழ்க்கையை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இமயமலையில் நான் பல அகோரிகளை சந்தித்தவன் என்ற முறையில் ஆரியா அவர்களின் யதார்த்த அகோரி நடிப்பு என்னை பிரமிக்க வைத்தது" என்று அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார் ரஜினி. பிரச்சனையே இதுதான் இப்போது.

"இமயமலைக்கு ரஜினி போவதெல்லாம் ஓ.கேதான். ஆனால் ஒரு முறை கூட அவர் மலை மேல் ஏறிப் போனதில்லை. அப்படி போனால் பிராணவாயு பிரச்சனை ஏற்படும். மூச்சு திணறும். இதன் காரணமாக அடி வாரத்திலிருந்தே தியானம் செய்துவிட்டு திரும்பிவிடுவார். அதுமட்டுமல்ல, அவர் சந்திக்கும் சாமியார்கள் எல்லாருமே அடிவாரத்தில் இருப்பவர்கள்தான். இவர் குறிப்பிடும் அகோரிகள் எல்லாம் மலை மீதுதான் இருக்கிறார்கள். மயானத்தின் அருகிலேயே திரியும் இவர்களை, இவர் எங்கே போய் பார்த்தாராம்?" என்கிறார்கள் காட்டமாக! முன்னணி நாளிதழ்களுக்கும், பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன் செய்து இதுபற்றி அங்கலாய்க்கும் இவர்களிடம் "நீங்க யாருய்யா?" என்றால், "ஜெய் போலே நாத்" என்கிறார்கள் ஆர்யாவை விடவும் ஆக்ரோஷமாக!

வரவர இந்த 'போலி' சாமியார்கள் தொந்தரவு தாங்கலைப்பா...!

ஜெய்யின் 'ருத்ர' தாண்டவம்... -உஷ்ணத்தை தந்த குளிர்பானம்!


ஆடாத ஆட்டம் போட்ட நடிகர்கள் எல்லாம் கூட, ஒரு கால கட்டத்தில் பாஸ்போர்ட் சைஸ் படம் கூட எடுக்க ஆளில்லாமல் தவிக்கிற கதை ஜெய்யுக்கு தெரியுமோ தெரியாதோ? 'அட, என் படத்திலே இவ்வளவு ஆட்டம் இல்லே, கொஞ்சம் கம்மிதான்' என்று தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் டிஸ்கஸ் செய்து கொள்கிற அளவுக்கு பெரும் ஆட்டக்காரராக இருக்கிறாராம்.

இது கடந்த வார கசமுசா! 'அதே நேரம், அதே இடம்' படத்திற்காக கேரளா சென்றிருந்தார்களாம். திடீரென்று எனர்ஜி ட்ரிங்க் எனப்படுகிற 'ரெட்புல்' வேண்டும் என்றாராம் ஜெய். அந்த கேரள கிராமத்தில் ரெட்புல்லுக்கு எங்கே போவார்கள்? ஆனாலும் காரை எடுத்துக் கொண்டு பக்கத்து டவுனுக்கு போயிருக்கிறார்கள். போகும்போதே 20 பாட்டில்கள் வேண்டும் என்றாராம் ஜெய்.

விதி வலியதாச்சே? பதினைந்து கொடுத்தால் போதும் என்று முடிவு செய்து ஐந்து பாட்டில்கள் குறைவாகவே வாங்கி வந்தாராம் தயாரிப்பு நிர்வாகி. அவ்வளவுதான், ஆர்யா தாண்டவம் (வேறொன்றுமில்லை, 'ருத்ர' தாண்டவம்) ஆட ஆரம்பித்துவிட்டாராம் ஜெய். 'கடையிலேயே அவ்வளவுதான் இருந்தது' என்ற சமாதானத்தை ஒப்புக் கொள்ளாமல் தனது மேனேஜரை கடைக்கே அனுப்பினாராம் 'செக்' பண்ணுவதற்காக.

கடையில் நூற்றுக்கணக்கான பாட்டில்கள் இருப்பதை மேனேஜர் உறுதி செய்ய, அவ்வளவுதான், கோபித்துக் கொண்டு ரூமிற்கு போய்விட்டாராம் ஜெய். அரை நாளோடு படப்பிடிப்பு பேக்கப்! டைரக்டர் சொதப்பினா நடிகர்கள் 'அம்போ' என்பது ஆணானப்பட்ட ரஜினிக்கே தெரியுது. ஜெய்யுக்கு தெரியலையே? என்று பரிதாபப்படுகிறார்கள் கோடம்பாக்கத்தில்!

Friday, February 13, 2009

ஷாருக்கான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - பரபரப்பு


மும்பை: சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் வீட்டில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு போன்ற ஒரு பாட்டிலை வீசி சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மும்பை பந்த்ரா பகுதியில் ஷாருக்கானின் வீடு உள்ளது. இங்கு இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் ஒரு பாட்டிலை வீசினர். அதில் பாட்டில் சிதறி வெடித்தது.

அதில் பெட்ரோல் நிரப்பி வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாட்டில் விழுந்து வெடித்த சத்தம் கேட்டு ஓடி வந்த காவலாளி, பாட்டிலை வீசிய நபர்களைத் தேடியுள்ளார். ஆனால் யாரும் அகப்படவில்லை.

இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

3 மர்ம நபர்கள் வந்து பாட்டிலை வீசியதாக கூறப்படுகிறது. பாட்டிலை வீசிய விஷமிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

முத்துக்குமாரின் இறுதி அறிக்கை! விநியோகிக்கிறார் இயக்குனர் சேரன்...


'பொக்கிஷம்' படப்பிடிப்புக்காக காரைக்கால் கிளம்பிக் கொண்டிருந்தார் சேரன். மறக்காம இதையெடுத்து காரில் வச்சிருங்க...' உதவியாளர்களிடம் அவர் காட்டிய மெகா சைஸ் பேக்கிங் வெறும் பேப்பர் மூட்டையல்ல, ஒரு தமிழனின் கடைசி நேரக் கனல்!

இலங்கை தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துகுமாரின் இறுதி அறிக்கையை அச்சிட்டு, அதை போகிற இடமெல்லாம் விநியோகிப்பதற்காக எடுத்துச் செல்கிறாராம். இந்த அறிக்கைதான் அந்த பேப்பர் மூட்டைக்குள்! 'தன் உயிரையே கொடுத்திருக்கிறான் ஒருத்தன். அவன் எண்ணத்தை மக்களிடம் சேர்க்கக் கூட முடியலைன்னா நாமெல்லாம் உணர்வுள்ள மனுஷங்களே இல்லை' உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு பேசுகிற சேரன், சிறிது நேரம் கழித்து 'பொக்கிஷம்' நினைவுகளுக்கு வந்தார்.

'ஆட்டோகிராஃப் மாதிரி வெவ்வேறு பருவங்களில் நடக்கிற கதையல்ல இது. நிகழ்காலத்தில் தொடங்கி சற்று பின்னோக்கி நகர்கிற கதை. எனது ஒல்லி மீசையை பார்த்துவிட்டு படம் முழுக்க இப்படியே வருகிறீர்களா என்று கேட்கிறார்கள். இல்லை, சேரனின் வழக்கமான மீசையும் இருக்கிறது' என்றார் சிரித்துக் கொண்டே!

பொக்கிஷம் பட ஸ்டில்கள் ஸ்டாம்ப் வடிவ டிசைனோடு வெளியிடப்பட்டிருக்கிறது. ஏதாவது விசேஷ காரணம்? 'பொதுவாகவே ஸ்டாம்புகளுக்கும், பொக்கிஷமான நினைவுகளுக்கும் நிறைய தொடர்புண்டு. அதனால்தான் இப்படி ஒரு டிசைன் செய்ய சொன்னேன். பொற்காலம் படத்தின் டிசைன்களை கூட நான் இப்படிதான் வடிவமைத்திருந்தேன்' என்றார் சேரன்.

பொக்கிஷத்தின் மூலம், பொற்காலம் திரும்பி வரட்டும் சேரனுக்கு!

தொடர்பு எல்லைக்கு வெளியே? நடிகையின் செல்போனும், பிஸியும்...


கேமிராவுக்கு வெட்கம் தெரிந்திருந்தால், 'கிளிக்' பண்ணகூட மறந்திருக்கும். அப்படியொரு 'கவர்ச்சி மேளா' நடத்தியிருக்கிறார் மீனாட்சி. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வந்த அடக்கமான பெண்ணா இது? அவ்வவ்வா... என்று வாயை பொத்திக் கொள்கிறார்கள் இவரது லேட்டஸ்ட்டை ஸ்டில்களை பார்த்தவர்கள்.

ஆண்டவன் கொடுத்த கவர்ச்சிதானே... அள்ளிக்கோ என்கிற மீனாட்சிக்கு கிராமத்து வேடம் என்றால் வேப்பங்காயாக கசக்கிறதாம். ப்ரியாமணி மாதிரியே இவருக்கும் வில்லேஜ் கேரக்டர் என்றால் உவ்வே...! தாவணி கேரக்டரில் நடித்து பெயர் வாங்கிய நடிகைகள் எல்லாம், இப்படி மாடர்ன் டிரஸ் கட்சிக்கு மாறியதால், வில்லேஜ் இயக்குனர்கள் ரொம்பவே தவிக்கிறார்கள். 'நானே மாடர்ன் பொண்ணு. எனக்கு போயி தாவணியை கொடுத்தால், கட்டவும் தெரியலே, அவிழ்க்கவும் முடியலே' என்கிறாராம் இவர், அப்பாவியாக!

கையிலே மூன்று செல்போன்கள். ஒரு மினி டெலிபோன் பூத் போலவே திரிகிறார் மீனாட்சி. ஆனாலும் எப்போது யார் போன் பண்ணினாலும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகவே குறைபட்டுக் கொள்கிறார்கள் கோலிவுட்டில். (எதுக்காக போன் பண்ணினாங்களோ?) 'மேனேஜர் தேவையில்லை, நானே பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறிவிட்ட மீன்ஸ், இல்லாத மேனேஜர் பதவிக்கு தனது அம்மாவை நியமித்திருக்கிறாராம்.

தப்பித்தவறி போனை எடுத்தாலும், அம்மாவே பேசுவதால் 'சும்மாதான் ஹி...ஹி...' என்று போனை 'டொக்' செய்துவிடுகிறார்கள் கோலிவுட்டில்!

Thursday, February 12, 2009

குட்டி ராதிகா..சாக்குப் பை..பணம்!


கன்னட நடிகையான குட்டி ராதிகாவிடன் வீட்டில் கடந்த 2007ம் ஆண்டு கிட்டத்தட்ட மூனே முக்கால் கோடி பணத்தை வருமான வரித்துறையினர் பிடித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு திரைத் துறையினர் பெருமளவில் வரி ஏய்ப்பு வேலைகளில் ஈடுபட்டு வருவதைத் தொடர்ந்து அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை தனது அனைத்து வட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டது.

மேலும், மத்திய நேரடி வரி வாரியத்தின் உத்தரவுப்படியும் வருமான வரித்துறையினர் இதுபோன்ற அதிரடி ரெய்டு நடத்தி பணத்தைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்த நிலையில், பெங்களூர் டாலர்ஸ் காலனியில் நடிகை குட்டி ராதிகா ரூ. 12 கோடிக்கு பங்களா ஒன்றை வாங்கவிருக்கும் தகவல் வருமான வரித்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

மேலும், ரூ. 3 கோடி செலவில் ஒரு கன்னடப் படத்தை அவர் தயாரிக்கப் போவதாகவும் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இவை அனைத்தும் வருமானத்திற்கு மீறிய தொகைகள் என்றும் வருமான வரித்துறையினருக்கு ஆதாரப்பூர்வமாக தெரிய வந்தது. அப்போது குட்டி ராதிகா, ஒரு படத்திற்கு ரூ. 3 முதல் 5 லட்சம்தான் சம்பளமாக வாங்கி வந்தார்.

இந்த நிலையில், 2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதியன்று பிற்பகல் 12 மணியளவில் ராதிகாவின் வீட்டுக்கு பெருமளவில் பணம் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து ராதிகாவின் வீட்டுக்கு அருகே மாறு வேடத்தில் வருமானவரித்துறையினர் நிறுத்தப்பட்டனர்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் ஒரு டயோட்டா இன்னோவா கார் வந்தது.

ராதிகாவின் வீட்டுக்குள் கார் போய் நின்றது. பின்னர் அதிலிருந்து நான்கு சாக்கு மூட்டைகள் இறக்கப்பட்டன. அதில் பணம் இருந்தது.

அந்த மூட்டைகள் உள்ளே போன பின்னர் வருமான வரித்துறையினர் உள்ளே நுழைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

கட்டுக்கட்டாக இருந்த பணத்தையும் அவர்கள் மீட்டனர். மொத்தம் ரூ. 3.73 கோடி பணம் அதில் இருந்தது. மேலும், ஏராளமான சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

2007-08ம் ஆண்டில் குட்டி ராதிகாவின் வருமானம் ரூ. 9.96 கோடியாகும். அதற்கு முன்பு வரை குறைத்தே வருமான வரிக் கணக்கை சமர்ப்பித்து வந்தார் ராதிகா. ஆனால் அதிரடி ரெய்டு காரணமாக வருமான வரித்துறைக்கு அவர் ரூ. 3.24 கோடி வரியைக் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய நேரடி வரி ஆணையம் இந்தத் தகவலை தற்போது வெளியிட்டுள்ளது.

மிகக் குறைவான ஊதியம் பெற்று வந்த ஒரு நடிகையிடம் இவ்வளவு பணம் எப்படி வந்ததோ?

சைஸ் ஜீரோ .. கரீனா மறுப்பு


எனது உடல் எடை சைஸ் ஜீரோ அளவுக்கு (அதாவது பயங்கர ஒல்லிப்பிச்சான்) போகவில்லை. அதை விட பெட்டரான உடல் வாகுடன் உள்ளேன் என்கிறார் கரீனா கபூர்.
கரீனா கபூர் வர வர படு வேகமாக உள்ளே போய்க் கொண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். படு தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை கிட்டத்தட்ட சைஸ் ஜீரோ அளவுக்கு கரீனா கொண்டு போய் விட்டதாகவும் கூறப்பட்டது.

இதனால் பார்க்க படு ஒல்லியாக தோன்றுகிறார் கரீனா. ஆனால் தான் ரொம்பவும் ஒல்லியாக இல்லை, சைஸ் ஜீரோ அளவை விட சற்று பெட்டராகவே இருப்பதாக கூறுகிறார் கரீனா.உண்மையில், தஷான் படத்தில் நடிப்பதற்காகத்தான் சைஸ் ஜீரோவுக்கு மாறினார் கரீனா. பாலிவுட்டில் சைஸ் ஜீரோவுக்கு மாறிய முதல் ஹீரோயின் கரீனாதான். இவரைப் பார்த்து பலரும் ஒல்லிப்பிச்சான் உடல் வாகுக்கு மாறத் தொடங்கினர்.

ஆனால் தற்போது தான் மிகவம் ஒல்லியாக இல்லை, சற்று பெட்டராகவே இருப்பதாக கூறுகிறார் கரீனா. முன்பை விட நான் பெட்டராகவே இருக்கிறேன்.

நான் தீவிரமாக யோகா செய்கிறேன். அதன் சக்தி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அதை நான் ரசிக்கிறேன், மதிக்கிறேன், வணங்குகிறேன்.

எனது உடல் பொலிவுக்கு குறிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. நிறைய காய்கறிகளை சாப்பிடுகிறேன். நிறைய தண்ணீர் குடிக்கிறேன்.

இந்த நாட்டின் இளம் பெண்களில் நானும் ஒருத்தி. எனவே இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் எடுத்துக் காட்டாக விளங்க வேண்டுமானால், நாம் முதலில் இளமையாக இருக்க வேண்டும். அதனால்தான் எனது உடலை இளமையாக வைத்திருக்க முயலுகிறேன் என்கிறார் கரீனா.

சொன்னதை மறந்த சுரா‌ஜ்

தொடர்ந்து மூன்று ஹிட்கள் கொடுத்த சுரா‌ஜ் பற்றி இன்டஸ்ட்‌‌ரியில் முணுமுணுப்பு. சொன்ன சொல் தவறிவிட்டார் என வெளிப்படையாகவே விமர்சிக்கிறார்கள்.

தலைநகரம் படத்துக்குப் பிறகு அர்ஜுனை வைத்து மருதமலை படத்தை இயக்கினார் சுரா‌ஜ். படம் ஷூட்டிங்கில் இருந்தபோது, அடுத்தப் படத்தையும் அர்ஜுனை வைத்து இயக்குவதாகக் கூறி தயா‌‌ரிப்பாளர் ஒருவ‌ரிடமிருந்து அட்வான்ஸும் வாங்கியிருக்கிறார். இடையில் படிக்காதவன் வர அர்ஜுன் படம் தள்ளிப் போனது.

ச‌ரி, படிக்காதவன் படத்திற்குப் பிறகாவது அர்ஜுனை வைத்து படம் இயக்குவார் என்று பார்த்தால் வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்திருக்கிறார். காரணம் இரண்டு.

படிக்காதவன் வெற்றிக்குப் பிறகு அ‌ஜித்திடம் கதை கூறியிருக்கிறார் சுரா‌ஜ். விஜய், சூர்யா போன்றவர்களும் சுரா‌ஜ் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இரண்டாவது சம்பளம். அர்ஜுன் படத்துக்கு பேசியதைவிட அதிக சம்பளம் தர தயா‌‌ரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர்.

வலுவான காரணம் என்றாலும் சொல் வழுவலாமா கலைஞன்?

நான் கடவுள்: பட்டையைக் கிளப்பும் வசூல்!


விதவிதமான விமர்சனங்கள் வந்தாலும், முதல் வார வசூல் நிலவரப்படி பாலாவின் நான் கடவுள்தான் பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தில் நிற்கிறது.

சென்னையில் 11 திரையரங்குகளில் வெளியாகியுள்ள நான் கடவுள் வார இறுதி நாட்களில் மட்டுமின்றி, வேலை நாட்களிலும் கூட ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதில் ஆச்சர்யம், புற நகர் பகுதி திரையரங்குகளிலும் இந்தப் படத்துக்கு குவியும் கூட்டம்தான். பரீட்சை நேரத்தையும் தாண்டி இந்தப் படம் பெரும் தொகையை இந்த ஒரே வாரத்தில் வசூலித்துக் கொடுத்துள்ளது தயாரிப்பாளரை சந்தோஷப்பட வைத்துள்ளது.

ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படத்துக்குச் சமமாக மொத்தம் 436 பிரிண்டுகள் போடப்பட்ட நான் கடவுள், வெளிநாடுகளில் நல்ல கூட்டத்துடன் ஓடுவதாகவும், அமெரிக்காவில் சூப்பர் ஹிட் தமிழ் படப் பட்டியலில் இடம் பெற்றுவிட்டதாகவும் தெரிவிக்கிறார் படத்தின் ஹீரோ ஆர்யா.

விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பிலிருந்து வந்துள்ள ரிப்போர்ட்டுகள் மிகவும் சாதகமாகவே உள்ளதால், படத்தின் விளம்பரங்களில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

நல்ல படம், வணிக ரீதியாகவும் வெல்வதுதானே, கோலிவுட்டுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்!

வாய்ப்பைக் கோட்டைவிட்ட த்ரிஷா!


தமிழ், தெலுங்கில் வெற்றிக் கொடி நாட்டி வந்த த்ரிஷாவுக்கு இப்போது போதாத காலம். நடித்த படங்கள் சொல்லிக் கொள்கிறமாதிரி போகவில்லை.
ஒப்பந்தமான பட வாய்ப்புகளும் கைநழுவுகின்றன. கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என தொடர்ந்து விஜய் ஜோடியாக வந்தவர் வில்லு படத்தை இழந்தார். நயன்தாரா கைக்கு அப்படம் மாறியது. கிரீடம் படத்தில் அஜீத் ஜோடியாக ஆனார். அதன் பிறகு தயாரான அஜீத்தின் ஏகனிலும் இவரே ஜோடி எனக் கூறப்பட்டது. ஆனால் அந்தப் படமும் நயன்தாரா கைக்கு மாறியது.

ரஜினி, கமலுடன் ஜோடி சேருவது நடிகைகளின் கனவு. ரஜினியுடன் ஜோடி சேரும் வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைக்க வாய்ப்பில்லாத நிலை. ஆனால் அந்தக் குறை மர்மயோகியில் கமலுக்கு ஜோடியாவதன் மூலம் தீர்ந்துவிட்டதாகவே நினைத்தார் த்ரிஷா.

மர்மயோகிக்காக பல மாதங்கள் கால்ஷீட் ஒதுக்கி நடிக்கத் தயாரானார். ஆனால் அந்த படம் திடீரென்று நின்று போனது.

இப்போது, தலைவன் இருக்கிறான் என்ற படத்தில் நடிக்க கமல் தயாராகிக் கொண்டிருக்கிறார். இப்படம் இந்தியில் பெரும் வெற்றி பெற்ற 'எ வெட்னஸ்டே'யின் ரீமேக்கான இந்தப் படம் விரைவில் படப்பிடிப்புடன் துவங்குகிறது. ஆனால் இந்தப் படத்தில் த்ரிஷா இடம் பெறவில்லை.

மர்மயோகிக்கு தான் கொடுத்த கால்ஷீட்டை இந்தப் படத்துக்கு கமல் பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்த்தார் த்ரிஷா.

ஆனால் அவரோ, ஸ்ரேயா, பத்மப்ரியா என தனது தேடுதலை இன்னும் நிறுத்தியதாகத் தெரியவில்லை. இதனால் கமல் படத்தில் நடிக்கும் நடிகைகள் பட்டியலில் த்ரிஷா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இப்போது கெளதம் மேனன் இயக்கிக் கொண்டிருக்கும் சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. வாரணம் ஆயிரம் படத்துக்கு முன்பே ரிலீசாகி இருக்க வேண்டிய படம் இது. ஆனால் இன்னமும் இழுபறியாக உள்ளது.

இந்த வேதனையிலும் த்ரிஷாவுக்கு இரு மகிழ்ச்சி செய்திகள்...

தனுஷ் மற்றும் சிலம்பரசனின் அடுத்த படங்களில் ஜோடி த்ரிஷாதானாம்.

வாய்ப்பை கெட்டியா பிடிச்சிக்குங்க...!

பிரச்சனையில் போடா போடி


சிம்பு, சரத்குமா‌‌ரின் மகள் வரலட்சுமி நடிப்பதாக இருந்த படம் போடா போடி. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் கனடாவில் எடுக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி படம் எடுக்கப்படுமா என்பதே கேள்விக்குறி. சிம்பு படத்தைப் பற்றி வாயே திறக்காமல் கவுதம் இயக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க சென்றுவிட்டார். போடா போடியை தயா‌‌ரிப்பதாக இருந்த மும்பையைச் சேர்ந்த சனாயா டெலி பிலிமுக்கும், சென்னை நிறுவனத்துக்கும் லடாய்.

இந்த கூத்துக்கு நடுவே 40 தொழில்நுட்பக் கலைஞர்களின் பாஸ்போர்ட் சனாயா டெலிபிலிமிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது. நீ படமே எடுக்க வேண்டாம் பாஸ்போர்ட்டை குடு என்று கேட்டால் அதற்கு முறையான பதிலில்லை.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று முமபையிலிருந்து நீட்டி முழக்குகிறார்கள். கையை பிசைந்து கொண்டிருந்தவர்கள் தயா‌‌ரிப்பாளர்கள் சங்கத்தின் கதவை தட்டியிருக்கிறார்கள். சொந்த பாஸ்போர்ட் போனால் போகட்டும் போடா என்று இருக்க முடியாதே.

பிரகாஷ்ரா‌ஜின் நட்புக்கு ம‌ரியாதை


பிரகாஷ்ரா‌ஜ் இந்தளவு பிரகாசமடையும் முன்பு நடித்த படம், ராசி. அ‌ஜித், ரம்பா நடித்த இந்தப் படத்தில் பிரகாஷ்ரா‌ஜ்தான் வில்லன்.
படத்தை முரளி அப்பாஸ் இயக்கியிருந்தார். அ‌ஜித்துக்கு வெற்றிப் படமாகவும், பிரகாஷ்ராஜுக்கு பெயர் சொல்லும் படமாகவும் அமைந்தது ராசி. ஆனால், முரளி அப்பாஸ் அதற்குப் பிறகு படம் இயக்கவில்லை. சொந்தப் பிரச்சனைகள். நீண்ட பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்திருக்கிறார்.

பத்து நாள் பார்க்காமலிருந்தாலே யாருப்பா நீ என்று கேட்கும் தமிழ் சினிமாவில் முரளி அப்பாஸைப் பார்த்ததும் பாசத்துடன் கட்டிப் பிடித்ததுடன், அவர் இயக்கும் படத்துக்கு உடனடியாக கால்ஷீட்டும் கொடுத்திருக்கிறார் பிரகாஷ்ரா‌ஜ்.

முரளி அப்பாஸ் இயக்கிவரும் படம் சொல்ல சொல்ல இனிக்கும். ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் பிரகாஷ்ராஜுக்கு.

திரையில்தான் வில்லன். நிஜத்தில் ஹீரோ.

அம்மா நடிகைகளின், அல்டிமேட் கனவு...!


நடிகை மேகா நாயர், ரிட்டையர்டு நடிகைகளையோ அல்லது லேட்டஸ்டாக திருமணம் ஆன நடிகைகளையோ பார்த்தால், 'ஆன்ட்டி எப்போ டைவர்ஸ் வாங்கப் போறீங்க?' என்று கேட்பதாக புகார்! பாம்பின் கால் பாம்பறியும் என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம்.

டைவர்சுக்கு அவசியப்படாமலே 'மீண்டும் சினிமா' என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் சில நடிகைகள். நேற்றைய செய்தியில் நடிகை கோபிகாவின் மறு பிரவேசம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். திருமணம் ஆகி இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், 'நல்ல கதையா இருந்தா நடிக்கலாம், ஆட்சேபணை இல்லை!' என்று சங்கீதா கூறியதாக ஒரு தகவல் உலவுகிறது கோடம்பாக்கத்தில்.

சிம்ரனின் கனவு வேறு மாதிரி. இழந்த மார்க்கெட்டை பிடிக்க வேண்டுமாம்! (பங்கு Deமார்கெட்டுன்னு நினைச்சிருப்பார் போலிருக்கிறது) சொந்தப்படம் துவங்கி, இந்த தாகத்தை தணித்துக் கொள்வார் என்கிறார்கள். இதற்கான பூர்வாங்க வேலைகளை துவங்கியிருப்பதாகவும் கிசுகிசுக்கிறார்கள். நிச்சயமாக இவரது கணவர்தான் ஹீரோ!

இவர்களை விட ஒரு படி மேலாக இருக்கிறார் தேவயானி. வீட்டிலிருக்கும் கணவர் ராஜகுமாரனுக்காக தனது டிவி சம்பாத்தியத்தில் வந்த பணத்தை முதலீடு செய்திருக்கிறார். இந்த புதிய படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கப் போவதும் ராஜகுமாரனேதான்! தேவயானியின் தோழிகளும், திரையுலக நண்பர்களும் எச்சரித்தும் கூட, இந்த முடிவை துணிச்சலாக ஆதரித்திருக்கிறார் தேவயானி. 'எங்களுக்கு பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம் அல்ல. அதனால் வெற்றி தோல்வியை பற்றி கவலையும் இல்லை' என்கிறார் தேவ்ஸ்! மங்கையே மணாளனின் பாக்கியம்

விளம்பரங்களில் பாரபட்சம்... இயக்குனரிடம் ஒரு முக்கோண மோதல்

முக்கோண காதல் பார்த்திருப்போம். முக்கோண மோதல் கூட சகஜம்தான். இது முக்கோண வேதனை! இந்திரவிழா பட விளம்பரங்களில் நமீதா ஸ்டில்களை பெரிதாக வரும்படி பார்த்துக் கொண்டார் இயக்குனர் ராஜேஷ்வர். படத்தின் ஹீரோவுக்கு இதனால் வருத்தம். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லையாம் அவர். படத்தின் ஹீரோவையும் நமீதாவையும் மட்டுமே விளம்பரங்களில் பயன்படுத்துகிறாரே, படத்தில் நான் இல்லையா என்று வருந்தினார் இன்னொரு நாயகியான ஹேமமாலினி.

இந்த வருத்தம் இப்போது சந்தோஷமாக மாறியிருக்கிறது ஹேமாவுக்கு. பட விளம்பரங்களில் நமீதாவை சின்னதாக்கிவிட்டார் இயக்குனர். தனியாக... அதுவும் சற்று பெரிதாக, ஹேமமாலினி படங்கள் மட்டுமே வருகின்றன விளம்பரங்களில்.

இதனால் மீண்டும் வருந்த ஆரம்பித்திருக்கிறார் நமீதா. படத்தில் இவரது போர்ஷனை அதிகப்படுத்தி மற்றவர்கள் காட்சியை சற்றே குறைத்திருந்த ராஜேஷ்வர், இப்போது அதற்கும் கத்தரி போட்டு விட்டாராம். இதை நினைத்து நினைத்தே இளைத்துப் போய்விடுவார் போலிருக்கிறது கவர்ச்சி 'மா மலை' நமீதா! 'விளம்பரத்தில் படம் காட்டியது போதும். தியேட்டருக்கு வாங்க சார் சீக்கிரம்!

கால்ஷீட் கேட்ட தோழி... - கப் சிப் ஆன நடிகை!


கண்ணு கதவோரத்திலே, நாக்கு அடுப்போரத்திலேங்கிற மாதிரி, நட்பாக பழகினாலும், த்ரிஷா - ரம்யா கிருஷ்ணன்கால்ஷீட் விஷயத்தில் உஷாராகிவிட்டார் த்ரிஷா. ரம்யா கிருஷ்ணனுக்கும் த்ரிஷாவுக்கும் அப்படியொரு நட்பு. 'வீக் எண்ட்' பிரண்ட் ரெண்டு பேரும்! கொஞ்சம் கேப் கிடைத்தாலும், பிளைட் பிடித்து ஆந்திராவுக்கு போகும் த்ரிஷ், ரம்யா கிருஷ்ணன் வீட்டில்தான் பொழுதை கழிப்பாராம். அப்படிப்பட்ட தோழி, கணவர் இயக்கும் படத்திற்கு கால்ஷீட் கேட்டபோது, "ம்ஹூம்" என்று மறுத்துவிட்டாராம் ரம்யா கிருஷ்ணனிடம்!

ஆந்திராவில் அவ்வப்போது நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் இயக்குனர்களில் கிருஷ்ணவம்சிக்கு தனி இடம் உண்டு. இவர் இயக்கும் மகாத்மா என்ற படத்தில் சிவரஞ்சனியின் கணவர் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்கதான் த்ரிஷாவிடம் கால்ஷீட் கேட்டாராம் ரம்யா கிருஷ்ணன். ஆனால், அங்கு நாகார்ஜுன், வெங்கடேஷ், சித்தார்த் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் இவர், ஸ்ரீகாந்த் என்றதும் முகம் சுளித்தாராம். பதிலே சொல்லாமல் நாட்களை கடத்த, தானாக புரிந்து கொண்டாராம் ரம்யா.

ஆனாலும், பிப்ரவரி 14 ந் தேதி காதலர் தின கொண்டாட்டத்துக்கு அழைப்பு வந்திருக்கிறது த்ரிஷுக்கு, இதே உற்ற தோழி ரம்யா கிருஷ்ணனிடமிருந்து!

Wednesday, February 11, 2009

படேலை 'விரட்டிய' ஷரோன்!


ஹாலிவுட் ஹாட் ஸ்டார்களில் ஒருவரான ஷரோன் ஸ்டோன், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் நாயகனான தேவ் படேலை பாஃப்டா திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது விரட்டி விரட்டிப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் சர்வதேச அளவில் விருதுகளை அள்ளி வருகிறது. சமீபத்தில் பாஃப்டா விருதுகளை அள்ளியது.

பாஃப்டா விருது வழங்கும் விழாவின்போது தேவ் படேலுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அவர் விருந்து நிகழ்ச்சியில் கூச்சத்துடன் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அவரை பார்த்து விட்டார் ஷரோன். தன்னுடன் பேசிக் கொண்டிருந்த ஹாலிவுட் நடிகர் மிக்கி ரூர்க்கை விட்டு விட்டு நேராக படேலிடம் வந்தார் ஷரோன்.

ஹாய் என்று கூறியபடி, ஸ்லம்டாக் படத்தில் மிக அழகாக தோன்றினாய் என்று கூறி வாழ்த்தியுள்ளார். ஷரோன் தன்னிடம் வந்து பேசுவார் என்பதை எதிர்பார்க்காத படேல் ஆச்சரியமடைந்து போய் தேங்க்ஸ் என்று ஒற்றை வார்த்தையுடன் நிறுத்திக் கொண்டார்.

ஆனால் ஷரோன் விடவில்லையாம். தொடர்ரந்து படேலிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அத்தோடு விருந்து நிகழ்ச்சி முடியும் வரை அதாவது விடிய விடிய படேலையே வலம் வந்தாராம் ஷரோன்.

இதுகுறித்து படேல் கூறுகையில், ஷரோன் கிரேட். இரவு முழுவதும் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். என்னையே சுற்றிச் சுற்றி வந்தார். என்னிடம் அன்பாக பேசினார், செல்லமாக அடித்தார் என்கிறார் படேல்.

ஷரோன், படேலை விரட்டி விரட்டிப் பேசியதைப் பார்த்த விழாவுக்கு வந்திருந்த ஒருவர், படேல், ஷரோனின் மகன் வயதில் இருக்கலாம். ஏன் பேரன் வயதாகக் கூட இருக்கும். ஆனால் ஷரோன் கண்ணில் அது படவில்லை. படேலிடம் அவர் வழிந்து வழிந்து பேசினார் என்றார்.

ஷரோனிடம், 'சிக்கி' படேல் தவித்துக் கொண்டிருந்ததை தூரத்தில் இருந்தபடி மிக்கி ரூர்க் ரசித்துக் கொண்டிருந்தாராம்.

விஜய் ரசிகர்களின் இணையதளம் 'ஷட் டவுன்'!!


அடுத்த சூப்பர் ஸ்டார் என பிரகடனப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் பேராதரவுடன் தொடங்கப்பட்ட விஜய்நெட்.காம் இணையதளத்தை, விஜய் ரசிகர்களே இழுத்து மூடுவதாக அறிவித்துள்ளனர்.

இது விஜய்க்கு பெரும் அதிர்ச்சி தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோடம்பாக்கம் இளம் ஹீரோக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் சமாச்சாரமாகவும் இது மாறியுள்ளது.

நடிகர்களில் கிட்டத்தட்ட அனைவருமே சொந்தமாக இணையதளம் நடத்துகிறார்கள், சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கலைஞானி கமல் தவிர!.

நடிகர் விக்ரம் பெரும் செலவு செய்து தனது தளத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அஜீத் உள்பட பல ரசிகர்களும் வளர்ந்து வரும் விஞ்ஞான வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இணையதளம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கமலுக்கென்று சில ரசிகர்கள் இணைய தளம் நடத்த முயன்று, பின்னர் அவரது பெரும் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டது தெரிந்திருக்கும். இப்போது அவரே மய்யம் என்ற தனது பத்திரிகையைத் தொடங்கப் போவதாகவும், அதை இணையதள வடிவிலும் தரப் போவதாகவும் கூறியிருந்தார். எதையும் தானே நேரடியாக ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்ற 'பர்ஃபெக்ஷன் உணர்வு' காரணமாக அவரது அந்த முயற்சி தள்ளிப் போவதாகக் கூறப்படுகிறது.

ரஜினியின் நிலையே வேறு. அவர் இதுபோன்ற முயற்சிகளை ஊக்கப்படுத்தாவிட்டாலும், அவருக்கென்று ஏகப்பட்ட இணையத் தளங்கள், வலைப்பூக்கள் நடத்தப்படுகின்றன.

விஜய்யின் அதிகாரப்பூர்வ இணையதளம்:

இந்த சூழ்நிலையில்தான் விஜய்க்கென்று அவரது ரசிகர்களைக் கொண்டு ஒரு அதிகாரப்பூர்வ இணைய தளம் அணைக்கும் முயற்சியில் இறங்கினார்கள் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் அவருக்கு நெருக்கமான சிலர். விஜய்நெட்.காம் (http://www.vijaynet.com/) எனும் பெயரில் சில இளைஞர்களால் நடத்தப்பட்ட இந்த தளம், இப்போது உள்ளடி வேலைகள் சிலவற்றால் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எந்த உதவியும் செய்யாததாலும் விஜய்யின் ஸ்டில்கள், செய்திகளைக் கூட தர மறுப்பதாலுமே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக அந்த அறிவிப்பில் விஜய்நெட்.காம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விஜய் தரப்பில் கருத்தறிய முயன்றபோது, 'அப்புறமா பேசுங்க' என்று கூறிவிட்டனர் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

விஜய்நெட்.காமில் அவரது ரசிகர்கள் வெளியிட்டுள்ள மூடல் அறிவிப்பு விவரம்:

அன்பு ரசிகர்களே,

விஜய் பேன்ஸ் நெட்வொர்க் எனும் இந்த தளத்தை மிகுந்த வருத்தத்துடன் இன்றோடு மூடுகிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை. தளத்துக்குத் தேவையான சிறப்புச் செய்திகள் மற்றும் படங்கள் தருவதில் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரனிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காததாலும், இனியும் நஷ்டத்தைத் தாங்க முடியாது என்பதாலுமே இதை மூடுகிறோம்.

ஆரம்பத்தில் இந்தத் தளத்தைத் துவங்க விஜய் மற்றும் அவரது தந்தை உள்ளிட்டோர் பெரும் ஆதரவு அளித்து வந்தனர். ஆனால் திடீரென்று இப்போது முற்றிலுமாக நிறுத்திக் கொண்டனர். அதுமட்டுமல்ல, இந்த தளத்துக்காக நாங்கள் செய்யும் கடின உழைப்புக்கான பலனை வேறு யாரோ தட்டிச் செல்கிறார்கள்.

எந்தவித நிதி வசதியுமின்றி சக மாணவர்களை ஒன்றிணைத்து மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் சொந்த முயற்சியில் நடத்திய இணைய தளம் இது. இப்போதும் கூட பணத்தை எதிர்பார்க்காமல் நடத்தத் தயாராகவே உள்ளோம். ஆனால் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் வேறு யாருக்கோ போய்ச் சேர விடமாட்டோம். விஜய்யை வளரவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு ஒரு கூட்டம் அவரைச் சுற்றிலும் உள்ளது. அவர்களோடு மோதிக் கொண்டிருப்பதை நாங்கள் விரும்பவில்லை.

இவற்றையெல்லாம் முடிந்தவரை சமாளிக்கவே நாங்கள் முயன்றோம். ஆனால் நிலைமை இப்போது கைமீறிப் போய்விட்டது.

எங்களுக்கென்று ஒரு வாழ்க்கை, வீடு மற்றும் கடமைகள் உள்ளன. இனி அவற்றுக்குத்தான் முதலிடம். விஜய் படங்களை ரசிக்கும் சாதாரண ரசிகர்களாகத் தொடர்வோம். ஆனால் அதற்காக அவர் படங்களைக் கொண்டாட மாட்டோம். உலக அளவில் அவரது படங்களைத் தூக்கிவிடும் ப்ரமோஷனல் வேலைகளில் இனி ஈடுபட மாட்டோம். இதுவரை எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.

இப்படிக்கு

விஜய்பேன்ஸ் நெட்வொர்க் நி்ர்வாகம்.

Tuesday, February 10, 2009

அளவோடு வந்த ஆர்யா! ஆனந்தப்பட்ட அஜீத்?


இன்ப தேன் வந்து பாயுது அஜீத்தின் காதுகளில்! கடந்த சில தினங்களுக்கு முன் Ajithதனது அண்ணனையும், தனது நண்பர்களையும் அனுப்பி 'நான் கடவுள்'பார்க்க சொல்லியிருந்தாராம் அஜீத். அவர்கள் வந்து சொன்ன ரிசல்ட்தான் அஜீத்தின் காதுகளில் தேனாக பாய்ந்திருக்கிறது.

முதலில் நான் கடவுளை தேனப்பன் தயாரிப்பதாகவும், ஹீரோவாக அஜீத் நடிப்பதாகவும் இருந்தது. இடையில் என்ன கசமுசாவோ? அஜீத் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சுமார் ஒரு வருட காலம் தலைமுடியை வெட்டாமல் நான் கடவுளுக்காக காத்திருந்த அஜீத், இந்த பிரச்சனைக்கு பிறகு வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுத்துவிட்டு, மனசில்லாமல் முடியை நறுக்கினார். தனது இடத்தில் ஆர்யா! எப்படி நடித்திருக்கிறார் என்பதை பார்க்க ஆசையாக இருந்திருக்குமல்லவா? அதனால்தான் தனது அண்ணனை அனுப்பி வைத்தாராம் தியேட்டருக்கு.

படத்தில் மொத்தமே நாற்பது நிமிடங்களுக்கும் குறைவாகதான் ஆர்யா வருகிறார் என்பதை எடுத்துச் சொன்னாராம் அண்ணன். இதையடுத்துதான் 'ஜெய் போலேநாத்' என்று சந்தோஷப்பட்டிருக்கிறார் தல!

தமிழ்சினிமா வழக்கப்படி பார்ட்டி வச்சு கொண்டாடமல் இருந்தாரே!

குடும்ப வாழ்க்கைக்கு டாடா... கோலிவுட்டுக்கு வந்த நடிகை!


குடும்ப வாழ்க்கை அலுத்துப் போச்சு போலிருக்கிறது. மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் hகோபிகா! டாக்டர் அஜிலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகியிருந்த கோபி, ஆறே மாதத்தில் ஊரை நோக்கி ஓடி வந்திருக்கிறார்.

திருமணத்திற்கு முன்பு இவர் நடித்த படம் ஒன்றிற்கு விருது கிடைத்திருக்கிறது. இதை வாங்குவதற்காக கேரளா வந்தவருக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகளை காட்டி தூண்டில் போட்டிருக்கிறது மாலிவுட். சரி என்று ஒப்புக் கொண்ட கோபி, இங்கிருந்தபடியே கணவருக்கு 'டாடா' சொல்லிவிட்டாராம்.

'அவருக்கு என் சந்தோஷம்தான் முக்கியம். அதனால்தான் எனது நடிப்பு ஆசைக்கு குறுக்கே நிற்காமல் மீண்டும் நடிக்க சம்மதித்துவிட்டார்' என்கிறாராம் கணவரை பற்றி கேட்டால்! மாலிவுட் வரைக்கும் திரும்பி வந்தவரை, சும்மா விடுமா கோலிவுட்? வலை போட்டு இழுத்துவிட்டார்கள். ஏவிஎம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம் கோபிகா!

கோழிக்கு வயித்து வலியா இருந்தாலும், கொழம்புல மாத்திரையை கரைச்சு சாப்பிடுற பரம்பரையாச்சே நாம! விடுவோமா?

பாலாவின் புதிய படம்... ரஜினியோடு டிஸ்கஷன்...?!


நாம் முன்பே கூறியிருந்தபடி, அடுத்த பட வேலைகளை கவனிக்க துவங்கிவிட்டார் பாலா. நான் கடவுள் ரிலீசுக்கு முன்பே சௌந்தர்யா ரஜினியின் ஆக்கர்-வார்னர் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டு பெரும் தொகை ஒன்றையும் (சுமார் 3 கோடி என்கிறது கோடம்பாக்கம் பட்சி) அட்வான்சாக வாங்கியிருக்கிறாராம்.

பாலாவின் டேஸ்ட்டும், படமெடுக்கிற வேகமும் சௌந்தர்யா Balaஅறியாதது அல்ல. எனவேதான் சில நிபந்தனைகளை படப்பிடிப்புக்கு போவதற்கு முன்பே அக்ரிமென்ட்டில் குறிப்பிட்டிருக்கிறாராம். குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தை முடிக்க வேண்டும். படத்தின் மொத்த பட்ஜெட் 7 கோடி மட்டும்தான். அதை எக்காரணத்தை கொண்டும் தாண்டக் கூடாது என்பது அந்த நிபந்தனைகளில் முக்கியமான இரண்டு அம்சங்கள்! ஒருவேளை இதை பாலா கடைபிடிக்காமல் போனால், அவர் மீது வழக்கே தொடரலாம் என்றும் அந்த ஷரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்!

இந்த முறை எந்த ஹீரோவிடமும் போய் நிற்கப் போவதில்லை பாலா. படத்தில் இடம் பெறும் எல்லோருமே புதுமுகங்கள்தானாம். இவரே எழுதிய கதையையும் படமாக்கப் போவதில்லை. புகழ் பெற்ற நாவல் ஒன்றைதான் தேர்வு செய்திருக்கிறாராம். சில தினங்களுக்கு முன் ரஜினியை சந்தித்தவர், அந்த நாவலை ரஜினியிடம் படிக்க கொடுக்க, 'நான் முன்பே படிச்சிருக்கேன். அருமையான சாய்ஸ்' என்று பாராட்டினாராம் சூப்பர் ஸ்டார். 'உங்களை மாதிரி பெரிய இயக்குனர்கள் நிறைய புதுமுகங்களை உருவாக்கணும்' என்று ரஜினி கேட்டுக் கொண்டாராம். இதையடுத்துதான் பாலாவின் 'புதுமுக தேடல்' என்கிறார்கள்.

இனி துவக்க விழாவை கோலாகலமாக நடத்த வேண்டியதுதான் பாக்கி!

டைட்டானிக் ஜோடியின் புதிய பட‌ம்

டைட்டானிக்கில் நடித்த லியோனார்டோ டிகாப்‌ரியோ, கேட் வின்ஸ்லெட் ஜோடி இணைந்து நடிக்கும் படம் ரெவ்லூஷன‌ரி ரோடு. படத்தை இயக்குகிறவர், சேம் மென்டஸ்.

சேம் மென்டஸ் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர். கேட் வின்ஸ்லெட்டின் கணவர் என்று சொன்னால் சட்டென்று தெ‌ரிந்துவிடும். பிரபல டைட்டானிக் ஜோடியை இயக்கும் சேம் என்ன சொல்கிறார்?

டிகாப்‌ரியோ மிகச் சிறந்த நடிகர், அவரது நடிப்பைப் பார்த்து மெய்மறந்துப் போனதாக‌க் கூறியுள்ளார். வின்ஸ்லெட்டுக்கும், டிகாப்‌ரியோவுக்கும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருப்பதால் அவர்களை இயக்குவது எளிதாக இருப்பதாகவும் தெ‌ரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டானாலும் கணவன் கணவன்தானே. இதைச் சொன்னதுடன், கேட் வின்ஸ்லெட்டும், டிகாப்‌ரியோவும் சகோதரார்களைப் போல் என்று தற்காப்பு ஸ்டேட்மெண்ட் ஒன்றும் விடுத்துள்ளார் சேம்.

டைட்டானிக் ஜோடி சேமுக்கு சகோதரர்களாக தெ‌ரியாலாம். உலகுக்கு? இப்போதும் அவர்கள் காதலர்கள்தான்.

தெலுங்கில் நயன்தாரா


தமிழ் சினிமா தன்னை மதிக்காததால் மீண்டும் தெலுங்கில் தீவிர கவனம் செலுத்துவது என முடிவு செய்துள்ளார், நயன்தாரா.

மலையாளத்தில் அறிமுகமான நயன்தாராவை புகழின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது தமிழ் சினிமாவாக இருந்தாலும் அவரை கோடியில் ஒருவராக உயர்த்தியது தெலுங்கு சினிமா. நம்பர் ஒன் என்ற அசைக்க முடியாத இடத்தில் இருந்த த்‌ரிஷாவை அதிர வைக்க நயன்தாராவுக்கு உதவியதும் தெலுங்கு சினிமாதான்.

மீண்டும் தெலுங்கில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் நயன். தமிழில் தடை விதித்ததால் ஏற்பட்ட காயமும் இந்த முடிவுக்கு ஒரு காரணம்.

சமீபத்தில் தெலுங்கு படமொன்றுக்கு கால்ஷீட் கொடுத்தார் நயன்தாரா. ரவிதேஜா ஹீரோவாக நடிக்கும் படம் அது. நயன்தாராவும், ரவிதேஜாவும் இணைந்து நடித்த துபாய் சீனு தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது. வெற்றிக் கூட்டணி என்பதால் விரும்பி கால்ஷீட் கொடுத்திருக்கிறார் நயன்.

ஆதவனுக்குப் பிறகு தமிழில் நயன்தாரவைப் பா‌ர்ப்பது கஷ்டம்தான் என்கிறார்கள் அவரது மனம் அறிந்தவர்கள்.

ரமேஷ் கண்ணா – மீண்டும் இயக்கத்துக்கு

நகைச்சுவை நடிகராக அறியப்பட்டாலும் ரமேஷ் கண்ணாவின் ஆசை படம் இயக்குவது. அதற்காகதான் சினிமாவுக்கே வந்தார். வந்த வழியில் பாதை மாறி கமெடியனானது தனி ட்ராக்.

அ‌ஜித், தேவயானி, ஹீரா நடித்த தொடரும் படம் இவர் இயக்கியதுதான். துரதிர்ஷ்டமாக மலையாளத்தில் வெற்றிபெற்ற இப்படம் தமிழில் ச‌ரியாகப் போகவில்லை. தொடரும் தோல்விக்குப் பிறகு மீண்டும் காமெடியனாக கண்டினியூ செய்தார். இப்போது படம் இயக்கும் வாய்ப்பு மீண்டும் கதவை தட்டியிருக்கிறது.

யார் தயா‌ரிப்பாளர், ஹீரோ என்பது பற்றியெல்லாம் பேச இப்போதைக்கு ரமேஷ் கண்ணா தயா‌ரில்லை. வாய்ப்பு வாழைப்பழத் தோலாக வழுக்கினால் என்ன செய்வது? கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ஆதவன் படத்துக்கு இவர்தான் கதை. ஆதவன் உதயமான பிறகு தனது படம் குறித்து அறிவிக்க முடிவு செய்துள்ளாராம்.

இயக்குனராக ரமேஷ் கண்ணா வெற்றி பெற்றால் தமிழ் சினிமாவுக்கு இழப்பு ஒரு காமெடியன், வரவு ஒரு இயக்குனர். இறுதி தீர்ப்பு ரசிகர்கள் கையில்.

பெருமாள் ரிலீஸ் எப்போது?


பொதுவாக படங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால், ஆளும் தரப்பிடம் போய் முறையிடுவார்கள். ஆனால் அவர்கள் தயாரிப்பில் உள்ள படத்துக்கே சிக்கல் என்றால்...?!

சுந்தர் சி நடிப்பில் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள பெருமாள் திரைப்படம் சில சிக்கல்களால் இந்த வாரம் ரிலீசாகவில்லை. என்ன சிக்கல் என்பதை கலைஞர் தொலைக்காட்சி தரப்பில் யாரும் கூறாவிட்டாலும், இந்த வாரம் ரிலீசாவதாகக் கூறி தியேட்டர்களும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு படம் நிற்பது நிச்சயம் நல்ல காரணங்களுக்காக இருக்காதல்லவா!

இந்த ஆண்டு அதிகப் படங்களில் நடித்த ஹீரோ எனும் பெருமை சுந்தர் சிக்குதான். பெருமாள், தீ, ஐந்தாம் படை மற்றும் கலைஞர் தொலைக்காட்சியின் முரட்டுக்காளை என வரிசையில் நிற்கின்றன அவர் படங்கள்.

இவற்றில் பெருமாள் அல்லது தீ முதலில் ரிலீசாகும் எனக் கூறப்பட்டது. கவனிக்க: இதில் பெருமாளுக்கு ஸ்பான்ஸர் கலைஞர் டிவி. இந்தப் படத்தில்தான் மு.க முத்துவின் மகன் டாக்டர் அறிவுநிதி பாடல் பாடியிருக்கிறார்.

தீ படத்தை வாங்கித் திரையிடப் போகிறவர்கள் சன் பிக்சர்ஸ். அடுத்து வரும் ஐந்தாம் படையும் முரட்டுக் காளையும் கலைஞர் தொலைக்காட்சியின் படங்கள்.

இப்படி நான்கு படங்களுமே சன் அல்லது கலைஞர் குழுமத் தயாரிப்பில்தான் உள்ளன. இந்த நிலையில் பெருமாள் படம் இந்த வாரம் ரிலீஸாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் சில விநியோகக் காரணங்களால் படம் தள்ளிப் போய்விட்டதாகவும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தின சிறப்புத் திரைப்படமாக வெளியாகும் என கலைஞர் தொலைக்காட்சி தரப்பில் கூறப்படுகிறது.

தீயும் ஐந்தாம்படையும் முழுமையாக முடிந்து, பெருமாள் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன.

சிக்கல் தீர்ந்து பெருமாளின் தரிசனம் கிடைக்குமா?

ஸ்லம்டாக் மில்லியனரை விமர்சிப்பது தேவையற்றது - ஷாருக்


ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படம் ஏழை மக்களின் வாழ்க்கை அப்படியே வெளிகாட்டியுள்ளது.
இதை விமர்சிப்பது தேவையற்றது என்கிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான். இங்கிலாந்து இயக்குனர் டேனி பாயில் இயக்கி வெளி வந்து சர்வதேச விருதுகளை அள்ளி குவித்து வரும் படம் ஸ்லம்டாக் மில்லியனர். இப்படத்துக்கு இசையமைத்த ஏஆர் ரகுமான் கோல்டன் குளோப், பாஃப்டா என பல விருதுகளை பெற்றார். இவருக்கு ஆஸ்கார் விருதும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் துவக்கத்திலிருந்தே விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் படத்தின் பெயரில் டாக் என்ற வார்த்தை இருக்கிறது. இது சேரியில் வசிக்கும் இந்தியர்களை அவமதிப்பதாக கூறப்பட்டது. பின்னர் இப்படம் இந்தியாவின் நிலைமையை சர்வதேச அளவில் குறைக்கும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது,

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் இப்படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இன்னொரு சூப்பர் ஸ்டாரான ஷாருக் கான் ஸ்லம்டாக் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

இப்படம் அருமையாக இருக்கிறது. இப்படம் ஏழை மக்களின் வாழ்க்கை அப்படியே வெளிகாட்டியுள்ளது. இதை விமர்சிப்பது தேவையற்றது. சிலர் இது இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில் அமைத்திருப்பதாக கூறுகின்றனர்.

அப்படியென்றால் வெளியில் இருந்து ஒருவர் வந்து காந்தி, ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற படங்களை ஏன் எடுக்க வேண்டும். அது ஏன் உலக அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வெற்றிகரமாக ஓட வேண்டும். நாம் மட்டும் தான் இப்படம் இந்தியாவை இழிவாக சித்திரிப்பதாக கூறி வருகிறோம் என்கிறார் ஷாருக்.

பேரை மாற்றிய ஹீரோ சக்சஸ் ஃபார்முலாவாம்!


ஒரு தலைகீழ் மாற்றம்! ஜெய் ஆகாஷ், தனது பெயரை 'ஆகாஷ் ஜெய்' என்று மாற்றிவிட்டார். 'இனிமேல் வெற்றி நிச்சயம்' என்று ஆகாஷ் சொல்வதற்கு முன்பே, இவரை வைத்து படம் எடுக்கும் டி.ஜெயமுருகன் சொன்னார். பெயரை மாற்ற ஐடியா கொடுத்ததும் இவர்தானாம்.

'அடடா என்ன அழகு' படத்திற்கு பிறகு, தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் ஆகாஷ் ஜெய்க்கு முக்கிய இடம் இருக்கு என்று நம்புவதால், பணத்தை தண்ணீராக செலவு செய்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் திருப்பூர் கருணாம்பிகா கௌரி ராமசாமி. நான் கதையை நம்புறவன் சார். ஆகாஷின் படங்களுக்கு என்ன பிசினசோ, அதைவிட பல மடங்கு செலவு பண்ணியிருக்கோம். படத்தை முழுசா பார்த்திட்டு இன்னும் நம்பிக்கையா 'டிஐ' பண்ணிக் கொண்டிருக்கோம்.

'எல்லா விநியோகஸ்தர்களையும் அழைத்து படத்தை போட்டுக் காட்டுவேன். எங்க விலைக்கு கட்டுப்படி ஆச்சுன்னா அவங்க ரிலீஸ் பண்ணட்டும், இல்லைன்னா நானே சொந்தமா ரிலீஸ் பண்ணுவேன்' என்றார் கௌரி ராமசாமி. இவ்வளவு பேசிட்டு நாயகி நிக்கோல் பற்றி சொல்லலைன்னா நல்லாயிருக்குமா? அவரே சிலாகித்து பேசினார்.

'ரொம்ப இன்வால்வ் ஆகி நடிச்சிருக்காங்க. இளைஞர்கள் தேசத்திலே அவங்களுக்கு தனி இடம் காத்திட்டு இருக்கு. அதை எங்க படம் உருவாக்கி கொடுக்கும். காதலர் தினத்தில் வரவேண்டிய படம். இன்னும் கொஞ்சம் மெருகேத்திட்டு இருக்கிறதால, இந்த மாத கடைசியிலே கொண்டு வரலாம்னு இருக்கோம்' என்றார்.

சாமியாரின் சம்மதம் ரஜினி ஆச்சர்யம்!


தனது குடும்பத்தினரோடு நான் கடவுள் பார்த்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. சில தினங்களுக்கு முன்புதான் வெண்ணிலா கபடிக்குழு படத்தை பார்த்து சிலாகித்திருந்தார். இந்த முறை இவர் பார்த்த நான் கடவுள் ரொம்பவே பிரமிக்க வைத்ததாம் ரஜினியை!

'நானும் 35 வருடங்களாக காசிக்கு போயிட்டு இருக்கேன். படத்திலே வரும் அகோரி சாமியாரை அங்கே தவறாமல் பார்ப்பேன். அவரை படத்திலே நடிக்க வைத்ததே பெரிய சாதனை. அவரும் பிரமாதமாக நடிச்சிருக்காரு. அதோடு அந்த சாமியாரையே டப்பிங்கும் பேச வச்சிருக்கீங்க. ஆச்சர்யம், பிரமாதம், அவர் சென்னைக்கு வந்திருக்கார் என்று தெரிஞ்சிருந்தா நான் வந்து அவரை பார்த்திருப்பேனே' என்று வருந்தியவர், பாலாவை எக்கச்சக்கமாக பாராட்டினாராம். 75 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு படம் வந்ததே இல்லை. ஆஹா... என்று பாராட்டியதோடு, ஆர்யாவையும் புகழ்ந்திருக்கிறார். இருவரையும் தனது வீட்டிற்கே வரவழைத்து அன்பு மழை பொழிந்தாராம் சூப்பர் ஸ்டார்!

இவரோடு வந்திருந்த தனுஷ், 'படத்திலே நான் நடிச்சிருந்தா கூட இந்தளவுக்கு நடிச்சிருப்பேனா தெரியாது. ஒரு ஷாட்ல வந்திட்டு போற பிச்சைக்கார குழந்தைங்க கூட அற்புதமாக நடிச்சிருக்காங்க. இந்த பிரமிப்பு மாற சில நாட்கள் ஆகும்' என்றாராம்.

நான் கடவுள் தொடர்பாக ஒரு அரை மணி நேர நிகழ்ச்சி ஒன்று கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. இதில், தோன்றி தனது கருத்துக்களை கூறவும் சம்மதித்திருக்கிறாராம் ரஜினி. (பாலாவுக்கு கால்ஷீட் கொடுப்பீங்களா....? )

2 சி குறைத்தார் அஜீத்! இன்டஸ்ட்ரி கலகலப்பு...


மார்ச்சிலேதான் படப்பிடிப்பு. ஆனால் இப்போதிலிருந்தே விருமாண்டி மீசையோடு திரிகிறார் அஜீத். அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த மீசையை 'அசல்' படப்பிடிப்பு முடியும் வரை தொடர்வாராம் தல!

இதற்கிடையில் சம்பளத்தை குறைக்க நடந்த பேச்சு வார்த்தையில் பெரும் வெற்றி. சுமார் இரண்டு கோடி வரை தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள சம்மதித்திருக்கிறார் அஜீத். காக்காய் உட்கார கள்ளு பானை உடைஞ்சு விழுந்த மாதிரி, இந்த சம்பளக் குறைப்புக்கு பிறகு ஒட்டு மொத்த தமிழ் சினிமா ஹீரோக்களும் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறார்களாம்.

சில இயக்குனர்களும் கூட இந்த சம்பள குறைப்பு மசோதாவுக்கு தலை வணங்கியிருப்பதாக கேள்வி. தற்போது 'கோவா' படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் வெங்கட் பிரபுவுக்கும் சௌந்தர்யா ரஜினிக்கும் நடந்த சம்பள குறைப்பு பேச்சு வார்த்தையிலும் சாதகமான முடிவு சௌந்தர்யாவுக்கு. கணிசமாக சம்பளத்தை குறைக்க முன் வந்திருக்கிறாராம் வெங்கட் பிரபு.

காதலில் விழுந்த தம்பி கண்டு கொள்ளாத அண்ணன்


ஆர்யா இன்னும் கொஞ்சம் அழகாக இருந்தால் எப்படியிருப்பார்? அப்படிதான் Aryaஇருக்கிறார் ஷாகீர். ஆர்யாவின் தம்பி! வாரிசுகளுக்கும் வாழ்வளிக்கும் கோலிவுட், இந்த முறை ஆர்யாவின் தம்பிக்கும் தனது சேவையை ஆரம்பித்திருக்கிறது. தம்பிக்காக சொந்த படமே எடுக்க தயாராக இருந்த போதிலும், அந்த சிரமத்தை ஆர்யாவுக்கு கொடுக்காமல், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று அக்கறையோடு ஷாகீருக்கு வாய்ப்பளித்திருக்கிறது மிர்ச்சி மூவிஸ்.

இவர்கள் தயாரிக்கும் காதல் டூ கல்யாணம் என்ற படத்தில் தம்பிதான் ஹீரோ. (நமக்குமா?) இவருக்கு ஜோடியாக நடிப்பவர் திவ்யா பந்தனாஸ். ஆர்யாவுக்காவது ஒரு சில படங்கள் வெளி வந்த பிறகுதான் கிசுகிசு வந்தது. ஆனால், தம்பி 32 அடி பாய்கிறார்.

மனசை மயக்கும் மாலை வேளைகளில் அடிக்கடி திவ்யா பந்தனாசும், ஷாகீரும் முக்கிய பப்புகளில் ஜோடியாக அமர்கிறார்கள். வலிக்க வலிக்க பேசுகிறார்கள். ஜோடியின் போக்கை அரசல் புரசலாக கேள்விப்பட்டாலும், 'சினிமான்னா அப்பிடி இப்பிடிதான் இருக்கும். விடுங்க' என்கிறாராம் ஆர்யா!

பெங்களூர் பக்கம் போயிராதீங்க. கலவரமெல்லாம் அங்குள்ள பப்புகளில்தான்!

Monday, February 9, 2009

களத்தில் கருணாஸ் மகன்

களம் என்றதும் ஏதோ போர்முனை என்று பதறாதீர்கள். இது திரைக்களம்.

கருணாஸ் மேடைப் பாடகராக இருந்து நடிகரானவர். அவரது மனைவி மேடைப் பாடகியாக இருந்து பின்னணி பாடகியானவர். ராஜாதிராஜாவில் இசையமைப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் கருணாஸ். குடும்பமே திரைத்துறையில் இருக்கும் போது குழந்தைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்.

புஷ்பா கார்டனில் ராஜாதிராஜா படப்பிடிப்பு நடந்தபோது துறுதுறுவென ஒரு சிறுவன் ஓடியாடிக் கொண்டிருந்தான். உ‌ரிமையாக அவன் லாரன்ஸின் மடியில் அமர்ந்ததைப் பார்த்தவர்களுக்கு ஆச்ச‌ரியம். யார்யா இந்தப் பொடியன்?

விசா‌ரித்தால், அது கருணாஸின் மகன். ராஜாதிராஜாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறானாம். வளர்ந்தால் எப்படியும் இங்கதான் வரப்போகிறான் என்று இப்போதே சினிமாவில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள்.

டேனியல் பாலா‌ஜியின் தாய்

பசுபதிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு அவரைப் போல கிடைத்திருக்கும் திறமையான நடிகர், டேனியல் பாலா‌ஜி. வில்லன் வேடங்களிலிருந்து கதாநாயகனாக பிரமோஷனாகியிருக்கும் இவர் தற்போது முத்திரைப் படத்தில் லட்சுமி ராயுடன் நடித்து வருகிறார்.

மலையாளத்திலிருந்தும் இவருக்கு அழைப்புகள் வருகின்றன. தொடர்ந்து மலையாளத்தில் நடிப்பாரா என்பது கேள்விக்குறி. காரணம் தமிழில் வந்து கொண்டிருக்கும் வாய்ப்புகள்.

முத்திரைக்குப் பிறகு தாய் என்ற படத்தில் நடிக்கிறார் டேனியல். மாதவதாஸ் இயக்கும் இந்தப் படத்தில் இவர்தான் நாயகன். நாயகி மலையாள வரவான சாரா. படத்தின் பெயருக்கேற்ப தாயை மையமாக வைத்து படம் தயாராகிறது.

முக்கியமான அம்மா பாத்திரத்தில் சுமலதாவை நடிக்க வைப்பதா இல்லை முன்னாள் நாயகி ரூபிணியை நடிக்க வைப்பதா என சர்ச்சை நடந்து வருகிறது. டேனியலுடன் தாயில் கஞ்சா கருப்பும் நடிக்கிறார்.

"விண்ணைத் தாண்டும்" சிம்பு!


சிம்பு நடிக்கப் போகும் அடுத்த படத்திற்கு கெட்டவன், நல்லவன், மோசமானவன் என்ற ரேஞ்சுக்குப் பெயர் வைக்காமல் விண்ணைத் தாண்டி வருவாயா என்று 'மிதவாத' பெயரை சூட்டியுள்ளனர்.
இது இன்னும் ஒரு காதல் கதை. இருப்பினும் வில்லங்கம் இல்லாத வித்தியாசமான காதலைக் காட்டவுள்ளனர். இப்படத்தின் விளம்பர டிசைன்கள் வெளியாகியுள்ளன. விளம்பரமே வித்தியாசமாகஇருக்கிறது. இருப்பினும் படத்தின் கலைஞர்கள் குறித்த விவரம் எதுவுமே அதில் இல்லை.

இப்படத்தில் சிம்புவுடன், திரிஷா இணைந்து நடிக்கிறார். இது மட்டும் விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளது.

இப்படத்தை அனேகமாக கெளதம் இயக்கலாம் என கருதப்படுகிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆர்.எஸ். இன்போடெய்ன்மென்ட் பிரைவேட் லிமிட்டெட் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

பாஃப்டாவையும் வென்றார் இசைப்புயல் ரஹ்மான்!


லண்டன்: பிரிட்டனின் மிக உயர்ந்த திரைப்பட விருதான பாஃப்டா (BAFTA) விருதையும் வென்றார் தமிழகத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்.

விருது மேல் விருது குவித்துவரும் டேனி பாய்லின் ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் சிறந்த இசைக்காக இந்த விருது ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

9 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 'ஸ்லம்டாக்...' இந்தியக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் படம் என்பதால் நிச்சயம் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தம் 11 பிரிவுகளில் இந்தப் படத்தை பரிந்துரைத்திருந்தார்கள்.

அவற்றில் சிறந்த இசை உள்பட 7 பிரிவுகளில் பாஃப்டா விருது கிடைத்துள்ளது.

அவற்றில் சிறந்த இயக்குநர் (டேனி பாய்லே), சிறந்த இசை (ஏஆர் ரஹ்மான்), சிறந்த திரைக்கதை (சைமன் பியூஃபோய்), சிறந்த ஒளிப்பதிவு (ஆண்டனி டாட் மாண்டில்), சிறந்த சவுண்ட் எடிட்டிங் (ரசூல் பூக்குட்டி, க்ளென் ப்ரீமாண்டில், ரிச்சர்டு ப்ரைக், டாம் சாயர்ஸ் மற்றும் இயான் டாப்) ஆகிய பிரிவுகளில் விருது கிடைத்தது. இவர்களில் ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் மட்டுமே இந்தியர்கள்.

நேற்று லண்டனில் நடந்த வண்ணமிகு விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

பாஃப்டா விருதை வெல்லும் முதல் இந்தியர் ஏஆர் ரஹ்மான்தான். ஏற்கெனவே கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இன்னும் சில தினங்களில் ஆஸ்கர் விருது பெறும் முதல் தமிழர் எனும் பெருமையையும் பெறப்போகிறார்.

வாழ்த்துக்கள் ரஹ்மான்

சச்சின், ஆமீருக்கு ரேஷன் கார்டு 'கட்'

மும்பை: புதிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தராததை அடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகர் அமீர் கான் ஆகியோரின் குடும்ப அட்டையை மகாராஷ்டிர மாநில அரசு ரத்து செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநில அரசு கடந்த 2005ல் மாநிலத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் கம்ப்யூட்டர் மயமாக்க முடிவு செய்தது. இதன்படி குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி செய்து தருமாறு கேட்டது.

பல முறை அரசு இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட போதும் பலர் இதை நிரப்பி கொடுப்பதில் அதிக சிரத்தை கொள்ளவில்லை.

இதையடுத்து சமீபத்தில் கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுப்பதாகவும் அதை பயன்படுத்தி கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் இதற்கும் மக்களிடம் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

இதனால் மகாராஷ்டிர அரசு 7,000 குடும்ப அட்டைகளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின், பாலிவுட் நடிகர் அமீர் கான், முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் நாராயண் ரானே உள்ளிட்ட பிரபலங்களின் குடும்ப அட்டைகளும் அடங்கும்.

நயன்தாரா பணிந்தது எப்படி? பின்னணி தகவல்கள்...


நயன்தாராவுக்கு போடப்பட்ட தடை ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. தமிழில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் ஆதவன் படத்தை தவிர வேறு படங்கள் இல்லை நயன்தாராவுக்கு. ஆனால், தெலுங்கில் ஒன்றும், மலையாளத்தில் ஒன்றுமாக பிஸியாகவே இருக்கிறார்! இந்த படங்கள் எல்லாம் இந்த தடைக்கு முன்பே ஒப்புக் கொள்ளப்பட்டதால் பிரச்சனையை சற்று தைரியமாகவே எதிர்கொண்ட நயனுக்கு பலரும் 'அட்வைஸ்' செய்தார்களாம்.

அதன்பிறகே நாவடக்கத்தை மேற்கொண்டிருக்கிறார் நயன். இதற்கிடையில் 'ஆதவன்' படத் தயாரிப்பு நிறுவனமும், 'பிரச்சனையை சுமூகமாக தீர்த்துவிட்டு வருவதுதான் முறை' என்று நயனுக்கு அறிவுறுத்தியதாம். பெரியவங்க சொன்னா பெருமாளே சொன்ன மாதிரியல்லவா? தனது முரட்டு பிடிவாதத்தையும், வறட்டு கூச்சலையும் குறைத்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை சாத்வீகமாக தீர்த்துக் கொண்டார் நயன்.

வாங்கிய அட்வான்சை திருப்பி கொடுத்துவிட்டதாக அறிவித்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். தடையும் விலக்கப்பட்டுவிட்டது!

'பிரமாதமான படம், அற்புதம்...' ரஜினி பாராட்டிய தமிழ்ப்படம்!


சமீபத்தில் வந்த படங்களில் ரசிகர்களை அசர வைத்த படம் வெண்ணிலா கபடிக்குழு. திரையிடப்பட்ட ஏரியாக்களில் எல்லாம் கைதட்டல்களை அள்ளிக் கொண்டு போகும் இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி பார்த்துவிட்டு 'பிரமாதமான படம், அற்புதமான... சரியான க்ளைமாக்ஸ்!' என்று பாராட்டியிருக்கிறார். படத்தை உருவாக்கிய அத்தனை பேருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

நேற்று ரஜினிக்கு பிரத்யேகமாக இந்த படத்தை திரையிட்டிருந்தார்கள். ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கத்தில் திரையிடப்பட்ட இப்படத்தை Ôவெண்ணிலாÕ குழுவினருடன் அமர்ந்திருந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார். படத்தின் இயக்குனர் சுசீந்தரன் பிரார்த்தனைக்காக வேளாங்கண்ணி போயிருந்ததால், இந்த சந்தோஷத்தை நேரடியாக அனுபவிக்க இயலவில்லையாம்.

எந்திரன் படத்தின் பரபரப்பான படப்பிடிப்புக்கு இடையிலேயும், வெண்ணிலா கபடிக்குழுவுக்காக அவர் நேரம் ஒதுக்கியது எப்படி? படத்தின் நாயகன் விஷ்ணுவின் அப்பா பெரிய போலீஸ் அதிகாரி என்பதாலும், படம் குறித்த விமர்சனங்கள் ரஜினிக்கே ஆர்வத்தை தூண்டியதாலும்தான் என்கிறார்கள் கோலிவுட்டில்!

-ஆர்.எஸ்

'நானும் ஸ்ரேயாவும்....' ஹீரோவின் 'சில்மிஷ' எஸ்எம்எஸ்!


குட்டைப் பாவாடை ஸ்ரேயாவுக்கும், கோழிமுட்டைக் கண் நிதின் சத்யாவுக்கும் 'ஒரே இது' தெரியுமா? போகிற போக்கில் பொறி கிளப்பிவிட்டு போனார் ஒரு சினிமா பெரும்புள்ளி. ஏசியை ஆன் பண்ணி, கூடவே விறகு கட்டையையும் கொளுத்தி வைச்ச கதையா, இதென்ன கோக்கு மாக்கான கூட்டணியா இருக்கே என்று சந்தேகத்தோடு விசாரித்தால், அந்த கொடுமையை ஏன் கேட்கிறீங்க? செய்தி நிஜம்தானாம்!

ரஜினி, விஜய், விக்ரம்னு மலையுச்சியில் நிக்கிற ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரேயா, அடி வாரத்திலே நின்று அல்லாடிக் கொண்டிருக்கும் ஒரு 'அப் கமிங்' ஹீரோவோடு எப்படி கனெக்ஷன் ஆனார்? 'எல்லாம் விதிய்யா விதி' என்றார்கள் இந்த கூட்டணியை ஜீரணிக்க முடியாத சிலர். அதுவும் வயிற்றில் வென்னீரை ஊற்றிக் கொண்டு!

எப்போதோ ஒருமுறை கலைநிகழ்ச்சிக்காக வெளிநாடு போயிருந்தாராம் ஸ்ரேயா. அங்கேதான் நிதினை சந்தித்தாராம். 'ஹலோ, ஹாய்' என்று ஆரம்பித்த நட்பு, கெட்டியாகி இறுக்கமாக ஒட்டிக் கொள்கிற அளவுக்கு ஆகிவிட்டதாம் இப்போது. சமீபத்தில் பார்ட்டிக்கு பேர் போன அந்த நட்சத்திர ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறது இந்த ஜோடி!

நண்பர்கள் அனைவருக்கும் 'சேதி தெரியுமா? நானும், ஸ்ரேயாவும்...' என்று நிதின் அனுப்பிய எஸ்எம்எஸ் பரவலாக காற்றில் பறந்து, கோடம்பாக்கம் முழுவதையும் அடைந்துவிட்டது. இப்போதெல்லாம் இவரை பார்க்கும் சக ஹீரோக்கள் பார்க்கும் உஷ்ணப் பார்வையில் ஒரு காடே அழிந்து போகிற அளவுக்கு வெப்பம்!

ரஜினி-ஐஸ் நெருக்கம்! கவனித்துக் கொண்டிருந்த 6 பேர்?


கடந்த வாரம் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடந்தது எந்திரன் படப்பிடிப்பு. ஐஸ்-ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று யூனிட்டிலிருந்த சிலரை தவிர மற்றவர்களை வெளியேற்றினார்கள். இயக்குனர், ஒளிப்பதிவாளர், ரஜினி, ஐஸ் உள்ளிட்ட ஆறே பேர்தான் உள்ளே இருந்தார்கள்!

தாங்கள் ஏன் வெளியேற்றப்பட்டோம் என்பதை அறிந்து கொண்ட தொழிலாளர்கள் அங்கே இங்கே என்று கண்களை நுழைத்தாலும், ஒரு காட்சியும் தென்படவில்லை. உள்ளே எடுக்கப்பட்டது என்ன?
வேறொன்றுமில்லை, ரஜினி ஐஸ் தொடர்பான படுக்கையறை காட்சிகள்தான்! இது பாடலில் வருகிற காட்சி என்பதால், வெவ்வேறு கோணங்களில் எடுத்துக் கொண்டிருந்தார்களாம். அரைகுறை ஆடையுடன் ஐஸ்... அடங்காத ஆசையுடன் ரஜினி...! தனது பல நாள் கனவு அன்று நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்றவுடன், சற்றே நெர்வசாக இருந்த ரஜினி, ஏகப்பட்ட டேக்குகள் வாங்கினாராம்.

இது தற்செயலாக நடந்ததா, அல்லது தலைவரோட திட்டமிட்ட தடுமாற்றமா? அவரு மனசுக்கு மட்டுமே தெரிஞ்ச விடை!

Sunday, February 8, 2009

சாமி சொன்ன 'சரித்திரம்' கதை


இயக்குனர் சாமி 'சரித்திரம்' படத்தில் செம பிஸி. மூன்று கட்ட படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு பொள்ளாச்சி சென்றுள்ளார்.

சரித்திரம் என்றால் என்ன? சின்னப்புள்ளைத்தனமாக ஒரு கேள்வியை கேட்டபோது, 'சரித்திரத்தின்' வரலாறு கூற ஆரம்பித்தார்.

அழிந்து வரும் தமிழனின் தற்காப்பு கலையான சிலம்பம் விளையாட்டின் சரித்திரத்தை பற்றி சொல்லும் கதை. படிக்காத பாமரனிடம் மட்டுமே உள்ள இந்த வித்தையை படித்த கணி பொறியாளர்களிடமும் எடுத்துச் செல்லும் ஒரு முயற்சி இது. அழிந்து வரும் இந்த தமிழனின் கலையை மேலை நாட்டினருக்கும் கொண்டு செல்லும் ஒரு செல்லுலாய்டு பதிவு இது. இனி வரும் தலைமுறையினருக்கு சிலம்பம் பற்றிய சிறு குறிப்பு தேவைப்பட்டாலும் இந்த சரித்திரமே சிறந்த ஆவனமாய் இருக்கும்.

சிறுவயதில் எனது அப்பா சிலம்ப வாத்தியார்களுடன் சண்டையிட்டதை முள் வேலி வழியே மட்டும் பார்த்த அனுபவம், என் மனதில் இருந்த இக்கலை தற்போதைய காலகட்டத்தில் அறவே இல்லாமல் போய்விட்டது. மனிதனின் உடலையும் மனதையும் ஒழுங்குபடுத்தும் இச்சிலம்ப விளையாட்டு கண்முன்னே அழிந்து வருவதை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக இந்த 'சரித்திரம்' இருக்கும்.

சிலம்பம் பற்றி படமெடுப்போம் என்று முடிவு செய்த பிறகு இக்கலையை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள, தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, நாகர்கோவில், ராஜபாளையம், விருதுநகர், தென்காசி போன்ற மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள அனுபவம் வாய்ந்த சிலம்ப ஆசான்களையும் அவர்களின் சிஷ்யர்களையும் பார்த்து பழகி அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்து வீடியோவில் பதிவு செய்து, இக்கலையை ஒரு படமாக பார்க்காமல், பாடமாகவே பாவித்து அதன் நுணுக்கங்களையும் தொழில் ஈடுபாட்டையும் மிகச் சரியாக இப்படத்தில் இணைத்துள்ளோம்.

தமிழனின் பரம்பரை விளையாட்டு பற்றிய படமாக இது இருப்பதால் கிராமத்து முகம், கதையை விட்டு விலக முடியாத முகமாக வேண்டும் என்று நினைத்த மாத்திரத்தில் வந்த முகம் ராஜ்கிரண் சார். அவரிடம் கதையை சொல்லி முடித்தவுடன் 'இது மாதிரியான ஒரு படமே எனது வாழ்வின் பொக்கிஷம்' என்று ஆரத்தழுவி, இச்சிலம்ப கலையை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள ஒரு சிலம்ப ஆசானையும் வரவழைத்து பயிற்சி பெற்ற பின்னரே இத்திரைப்படத்தில் ஆழகர்சாமி ஆசானாக வாழ்ந்துள்ளார்.

இன்னொரு ஆசான் பேய்த்தேவனாக கலாபவன் மணி நடித்துள்ளார். குருவுக்கு கட்டை விரலை இழந்த ஏகலைவனாகவும், தற்காலத்து மாடர்ன் பையனாகவும் ஆஜானுபாகுவான உடற்கட்டும் தேவைப்பட்டதால் இக்கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்த ஆதியை நாயகனாக தேர்வு செய்தோம். சிலம்பம் பற்றி அறவே தெரியாத அவருக்கு களரி செல்வராஜ் என்ற சிலம்ப ஆசானை வரவழைத்து மூன்று மாதங்களுக்கு மேல் பயிற்சி அளி்த்தாராம்.

நாயகியாக ஸ்ரீதேவிகாவும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா வேலுநாச்சியாராகவும் நடித்துள்ளார்.

நடுவழியில் மாட்டிய நமிதா : ரசிகர்களுக்கு ஜாக்பாட்


நடுவழியில் மாட்டிக் கொள்வதென்பது நமிதாவின் ராசிபோலும். சில மாதங்களுக்கு முன் ஜெகன்மோகினி படப்பிடிப்பின்போது நடுக்கடலில் சிக்கித் தவித்தவர், இப்போது வேலூர் சாலையில் மாட்டிக்கொண்டார்.

நமிதா சென்ற கார், திடீரென பஞ்சரானதால் நடுரோட்டில் ஒன்றரை மணிநேரம் தவித்தார். அவருக்கு லிப்ட் கொடுக்க ரசிகர்கள் போட்டிப் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூரில் உள்ள தனியார் கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்க ஒப்புக்கொண்டிருந்தார் நமிதா. இதற்காக சென்னையிலிருந்து நேற்று முன்தினம் மாலை தனது தோழி ராஜியுடன் வேலூர் புற்ப்பட்டார். காட்பாடி சாலையில் கார் சென்றபோது முன் டயர் திடீரென பஞ்சரானது, இதையடுத்து நடுரோட்டில் கார் நிறுத்தப்பட்டது. பஞ்சரான டயரை மாற்றுவதற்கான வேலையில் டிரைவர் ஈடுபட்டார். இதற்கிடையில் காரிலிருந்து இறங்கி சாலையில் நின்றார் நமிதா.

அந்த வழியாக சென்றவர்கள் நமிதாவை கண்டதும் அவரை வேடிக்கை பார்ப்பதற்காக சூழ்ந்தனர். காரில் சென்ற சிலர் காரை நிறுத்திவிட்டு, 'எங்கள் காரில் வாங்க, இறக்கிவிடுகிறோம்' என்று லிப்ட் தருவதற்கு போட்டி போட்டனர். அவர்களிடம் "நோ தேங்க்ஸ் என்று புன்னகைத்தபடி சொல்லி சமாளித்தார்" நமிதா. சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் ரோட்டிலேயே நின்றிருந்ததால், அப்பகுதியில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. ஏராளமான ரசிகர்கள் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினர். வேறு டயர் மாற்றிய பிறகு, அதே காரில் கல்லூரி விழாவுக்குச் சென்றார்.

ரோஜா பேச்சு: தெலுங்கு தேசம் அலுவலகத்துள் சிரஞ்சீவி கட்சியினர் ரகளை!


நகரி: தெலுங்குதேசம் மகளிர் அணி தலைவியும் நடிகையுமான ரோஜாக் கண்டித்து சிரஞ்சீவி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சமீபத்தில் ஐதராபாத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போது, சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் பற்றி மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் நடிகை ரோஜா. அப்போது அவர் பவன் கல்யாணை, 'கள் குடித்த குரங்கு மாதிரி இருக்கிறார்' என்று வர்ணித்தார். மேலும் முதல் மனைவியை ஏமாற்றிவிட்டு பல பெண்களுடன் சுற்றுவதாகவும் கூறியிருந்தார்.

அவரது இந்த பேச்சுக்கு சிரஞ்சீவி கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பவன் கல்யாணை விமர்சனம் செய்ததற்கு ரோஜா மன்னிப்பு கேட்க வேண்டும், என்று கோரி வருகிறார்கள்.

ஆனால் ரோஜா மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இதை வெளிப்படையாக பத்திரிகையாளர்களிடம் கூறிய அவர், நான் தவறாக எதுவும் பேசவில்லை. எனவே மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்றார் ரோஜா.

இதனால் ஆவேசம் அடைந்த சிரஞ்சீவி கட்சி தொண்டர்கள் ஐதராபாத்தில் உள்ள தெலுங்குதேசம் தலைமை அலுவலகமான என்.டி.ஆர்.டிரஸ்ட் பவனுக்கு எதிரே திரண்டனர். பின்னர் அவர்கள் ரோஜாவுக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பினார்கள்.

திடீரென பிரஜா ராஜ்யம் தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்தனர். உடனே அங்கிருந்த தெலுங்குதேசம் தொண்டர்கள் சிரஞ்சீவி கட்சி தொண்டர்களை வெளியேறும்படி எச்சரித்தனர். அவர்கள் வெளியேற மறுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

சிரஞ்சீவி கட்சியினர் உருட்டுக் கட்டைகளால் தாக்க, பல தெலுங்கு தேசம் தொண்டர்கள் காயமடைந்தனர். பதிலுக்கு அவர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இருதரப்பையும் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

ஆர்யாவின் மதராசபட்டிணம்


நான் கடவுளுக்காக மூன்று வருடங்களை செலவிட்ட ஆர்யா வரவு கணக்கை தொடங்க ஆரம்பித்துவிட்டார்.
சர்வம் படப்பிடி்பபு முடிந்த கையோடு மதராசபட்டிணம் படத்திற்காக தயாராகிவிட்டார். சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன் நடித்த 'திருட்டுப்பயலே', ஜெயம் ராஜா இயக்கத்தில் ரவி நடித்த 'சந்தோஷ் சுப்ரமணியம்' படங்களை ஏ.ஜி.எஸ் எண்டெரடெயிண்மெண்ட் சார்பில் தயாரித்த கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் படம் 'மதராசபட்டிணம்'.

இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, அஜித்.த்ரிஷா நடித்த 'கிரீடம்', காரத்திக் பியா நடித்த 'பொய் சொல்லப்போறோம்' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய விஜய் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். 1945 ஆம் ஆண்டு நடக்கும் காதலின் கதையினை, பார்ப்பவர்களை 1945-க்கே கொண்டு செல்லும் வகையில் பிரம்மாண்டமாக, ஜனரஞ்சகமாக, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் கதாநாயகியாக வெளிநாட்டு அழகியை நடிக்க வைக்க தேர்வு நடைபெற்று வருகிறது. இவர்களுடன் முக்கிய வேடங்களில் நாசர், வி.எம்.சி.ஹனிஃபா, பாலாசிங் மற்றும் பலர் நடிக்கின்றனர். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஹிரித்திக் ரோஷன் நடித்த 'தூம்-2', 'தூம்', 'பில்லா', 'பட்டியல்', 'அறிந்தும் அறியாமலும்' உள்ளிட்ட ஏராளமான படங்களை ஒளிப்பதிவு செய்த நீரவ்ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஷங்கர் படத்தில் ராணுவ காட்சிகள்


ஷங்க‌ரின் தயா‌ரிப்பில் உருவாகிவரும் ரெட்டச்சுழியில் ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறுகிறது.
ரெட்டச்சுழியின் முதல் ஷெட்யூல்டை நெல்லையில் முடித்த இயக்குனர் தாமிரா இரண்டாவது ஷெட்யூல்டுக்காக அதே நெல்லையில் முகாமிட்டுள்ளார். படத்தின் பிரதான நடிகர்கள் பாரதிராஜா, பால‌ச்சந்தர் இன்னும் சில நாட்களில் ஷுட்டிங்கில் கலந்து கொள்கிறார்கள்.

ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது. இதற்காக கலை இயக்குனர் ஆரோக்கியரா‌ஜ் ராணுவ முகாம் போன்ற அரங்குகளை நெல்லையில் அமைத்து வருகிறார்.

தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிதாக இருக்கும் இந்த காட்சிகள் என்கிறார்கள் படத்தில் பணியாற்றுகிறவர்கள்.

ஜோடியை மாற்றிய சுனைனா! -அஜ்மலுடன் ஆட்டம்...


'அஞ்சாதே' ஹீரோ அஜ்மலும், 'காதலில் விழுந்தேன்' சுனைனாவும் 'கதிர்வேல்' படத்திற்காக கை கோர்த்திருக்கிறார்கள். பயணத்தின்போது எத்தனையோ பேர் பக்கத்தில் அமர்கிறார்கள். போகிறார்கள். அவர்கள் கோவிலுக்கு போகிறார்களா? குண்டு வைக்க போகிறார்களா? யாருக்கு தெரியும்? சொல்ல முடியாது. அவர்களே நமது வாழ்வில் குறுக்கிடுகிற சந்தர்ப்பங்களும் வரலாம். இப்படி கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் ஹீரோவுக்கு கிடைக்கிற அனுபவங்கள்தான் கதிர்வேல் படத்தின் கதை.

படத்தின் ஹீரோ யார் என்று டைரக்டர்கள் யாரிடம் கேட்டாலும், தனது படத்தில் நடிக்கும் ஹீரோவைதானே சொல்வார்? இந்த படத்தின் டைரக்டர் வெங்கட்டிடம் கேட்டால், படம் பார்க்க வரும் ரசிகன்தான் என்கிறார். (மடக்கிட்டீங்கப்பா...)

நாயகனும் வில்லனும் க்ளைமாக்சில்தான் சந்திக்கிறார்கள். நான் எடுக்கப் போகும் புதுமையான திரைக்கதைக்கு இது ஒரு சின்ன சாம்பிள் என்கிறார் வெங்கட்! மலையாள, தெலுங்கு படங்களுக்கு இசையமைத்திருக்கும் சாஜன் மாதவ் என்பவரை தமிழில் அறிமுகப்படுத்துகிறார்களாம்.

ஐயராத்து பெண்ணாக நடிக்கிறாராம் சுனைனா. வீட்டிலே ஐயராத்து... வெளியிலே அராத்து... அப்படிதானே டைரக்டர் சார்?

செல்வராகவன்-விஷால்... 'புட்டுக்கொண்ட' புராஜக்ட்


'செக்'கை பில்லப் பண்ணும்போதே தெரியும், இது பவுண்ட்ஸ் ஆகப் போகுதுன்னு. எதிர்பார்த்த மாதிரியே, செல்வராகவன் படத்திலிருந்து விலகிக் கொண்டார் விஷால்! சத்யம் படத்திற்கு 'தோரணை' படத்தை அறிவித்த விஷால், அதில் எல்லா வேலைகளையும் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்து வருகிறார்! (மூக்கை நுழைக்கிறார் என்பதை இதைவிட டீசண்டாக எப்படி சொல்வது?)

இதற்கு அடுத்ததாக செல்வராகவனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க விரும்பினார் விஷால். இவரது வீட்டுக்கே வந்த செல்வாவும், குடும்பத்தையே உட்கார வைத்து கதை சொன்னார். படத்தை ஒரே வருடத்தில் முடித்து ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்ற கண்டிஷனுடன், செல்வா படத்தில் நடிப்பதென தீர்மானித்தார் விஷாலும்!

அந்தோ பரிதாபம், பேச்சு பேச்சா இருக்கும்போதே பிரிந்துவிட்டார்கள் இரண்டு பேரும். 'டிஸ்கஷனிலிருந்து, அந்த படம் ரிலீஸ் ஆகிற வரைக்கும் இன்வால்வ் ஆவது என் இயல்பு. இந்த படத்திலே என்னாலே அப்படி இன்வால்வ் ஆக முடியலே. அதனால் செல்வா படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன்' என்று அறிவித்திருக்கிறார் விஷால்.

வழக்கம்போல் செல்வா, 'பேசிட்டு போகட்டும்' என்று அமைதியாகிவிட்டார். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய, செல்வாதான் திருவாய் மலரனும்!

படமா எடுக்கிறே, விடமாட்டேன்... -பாலாவுக்கு 'செக்' !


'பிதாமகன்' படத்தை எடுத்த வி.ஏ.துரை 'வச்ச கண்ணு வாங்காமல்' பாலா போகும் திசையையே பார்த்துக் கொண்டிருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் வைக்காமலே இரண்டு பேரும் போட்டுக் கொண்ட ஃபைட், கோலிவுட்டின் சந்து பொந்துகளில் கூட பிரபலம்!

பிதாமகனால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பாலா ஈடுகட்ட வேண்டும் என்று கோர்ட் வரைக்கும் போனவர் வி.ஏ.துரை. அதுமட்டுமல்ல... தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலமாக பாலா எடுத்த 'மாயாவி' படத்தின் வசூலில் இருந்து குறிப்பிட்ட தொகையை தனக்கு தர வேண்டும் என்றும் வாதிட்டார். இதையடுத்து 'தனக்கும் மாயாவி படத்திற்கும் எந்த சம்பந்தம் இல்லை. இதில் புரடக்ஷன் மேனேஜர் வேலை மட்டுமே செய்தேன்' என்று ஒதுங்கிக் கொண்டார் பாலா.

எல்லாம் மறந்து போயிருக்கும் என்று நினைத்தாரோ, என்னவோ, இப்போது மறுபடியும் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்தை தூசு தட்டியிருக்கிறார் பாலா. இந்த பேனரில் இரண்டு படங்களை தயாரிக்கப் போகிறாராம். சூர்யா, ஜெயம் ரவி ஆகியோரிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது. படத்தை பாலாவின் உதவி இயக்குனர்களான சிங்கம்புலியும், ரவியும் இயக்கப் போகிறார்களாம். 'வாங்க, இந்த முறை விடமாட்டேன்' என்று காத்திருக்கிறார் வி.ஏ.துரை.

ஆனால், 'பிரச்சனையை பேசி தீர்த்துவிட்டோம். குறிப்பிட்ட தொகையை வி.ஏ.துரைக்கு அப்போதே கொடுத்தாகிவிட்டது' என்றும் கூறுகிறார்கள் பாலா தரப்பில்.

Followers