Saturday, February 7, 2009

மீண்டும் டிவியில் நமிதா


கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்ட நமீதா, பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜட்ஜ் ஆகிறார்.கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் நடுவர்களில் ஒருவராக இடம் பெற்றவர் நமீதா. அவருடன் இடம் பெற்ற மற்ற இரு நடுவர்கள் டான்ஸ் மாஸ்டர் கலா மற்றும் அவரது தங்கையான டான்ஸ் மாஸ்டர் பிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் நமீதா படு கவர்ச்சிகரமாக வந்தது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. சட்டசபையிலும் இது விவாதப் பொருளானது.நிகழ்ச்சியின் வெற்றி காரணங்களில் ஒன்றாக ஜொலித்த நமீதா, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலே அதிகபட்ச சம்பளத்தைப் பெற்றாராம்.

ஆனால் தனது டிரஸ் குறித்த சர்ச்சை மற்றும் சம்பளத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக நிகழ்ச்சியிலிருந்து விலகினார் நமீதா. அவரைத் தொடர்ந்து சிம்ரன் இடம் பெற்றார். ஆனால் தற்போது அவரும் இல்லை. பதிலாக, குஷ்புவும், ரம்பாவும் ஜட்ஜ்களாக உள்ளனர்.

இந்த நிலையில், கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இதே நிகழ்ச்சியில் நடுவராக வருகிறார் நமீதா. அவருடன் நடிகர் ஸ்ரீகாந்த் இன்னொரு நடுவராக இருப்பார் என தெரிகிறது.

காத்திருக்கும் ரைமா சென்


எனக்கே எனக்கான கனவுக் காதலன் இன்னும் கிடைக்கவில்லை. அதற்காக காத்திருக்கிறேன் என்கிறார் ரைமா சென்.பழம்பெரும் நடிகை மூன் மூன் சென்னின் மகள்தான் ரைமா சென். இவரது சகோதரி ரியா சென்னும் நடிகைதான். தமிழில் தாஜ்மஹால், குட்லக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரைமா சென் பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது மேரே கவாபான் மெய்ன் ஜோ ஆயே என்ற படத்தில் நடித்துள்ள ரைமா சென், இதுவரை தனக்கே தனக்கான காதலன் கிடைக்கவில்லை என்கிறார்.

மேரே கவாபான் மெய்ன் ஜோ ஆயே படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், எனக்கே எனக்கான கனவு மனிதனை இன்னும் நான் காணவில்லை. அவருக்காக நான் காத்திருக்கிறேன்.

இப்படத்தில் நான் பாடகியாகும் கனவுடன் உள்ள இல்லத்தரசி வேடத்தில் நடித்துள்ளேன். எனது கேரக்டரின் பெயர் மாயா. அனைத்துப் பெண்களையும் இந்த கேரக்டர் கவரும்.

இல்லத்தரசிகள் என்றில்லை. அத்தனைப் பெண்களுக்குமே மனதுக்குள் ஒரு லட்சியம் இருக்கும். ஆனால் அதை நிறைவேற்ற முடியாமல் உள்ளே போட்டுப் புதைத்துக் கொள்பவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் என்றார் ரைமா.

ரியா சென் என்ன ஆனார் என்று கேட்டால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இப்போது இருவருமே இணைந்து ரிதுபர்னோ கோஷ் படத்தில் நடிக்கவுள்ளோம். அப்படம் ரியாவுக்கு நல்ல பிளாட்பார்ம் ஆக அமையும் என நம்புகிறேன் என்கிறார் ரைமா.

'படம் எடுத்தா இப்படி படம் எடுக்கணுங்க... நான் கடவுள் பார்த்துவிட்டு வெளியில் வந்த இளைஞர்கள்


'படம் எடுத்தா இப்படி படம் எடுக்கணுங்க...இல்லேன்னா பேசாம சும்மா இருக்கணும்...' - நான் கடவுள் பார்த்துவிட்டு வெளியில் வந்த இளைஞர்கள் சிலர் நமது நிருபரிடம் தெரிவித்த உணர்ச்சிப்பூர்வமான கமெண்ட்தான் தலைப்பில் நீங்கள் படித்தது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஒரு தவம் மாதிரி பாலா எடுத்த படம் நான் கடவுள். இன்று நான் கடவுள் படம் உலகெங்கும் ரிலீஸாகியுள்ளது.

தமிழறிந்த உலகமே, தங்கள் பெரும் வேதனைக்கிடையிலும் பாலாவின் இந்த உணர்வுப்பூர்வமான ஆக்கத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.

இதை ஒரு திரைப்படம் என்று கூறி சின்ன வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது. அதையும் தாண்டி, இந்திய சினிமாவுக்குள்ளேயே உலக சினிமா அடங்கியிருக்கிறது என்ற உண்மையைச் சொல்லும் படம் இது என சிலிர்க்கிறார்கள் தமிழ் திரையுலகில் பாலாவுக்கு எதிர் முகாமிலிருப்பவர்களும்.

இன்று உலகம் ஸ்லம்டாக் மில்லியனேர் பற்றிப் பேசுகிறது. அது ஒரு தற்காலிக புகழ்தான். பாலாவின் நான் கடவுள் இனி உலகைப் பேச வைக்கும். இந்தப் படத்தைப் பாருங்கள்... இசையின் அர்த்தம், ஒரு படத்துக்கு இசையின் பங்களிப்பு என்னவென்பது புரியும், என்கிறார் சத்யம் திரையரங்கில் நான் கடவுள் பார்த்துவிட்டு கலங்கிய விழிகளுடன் வெளியில் வந்த திரைப்படக் கல்லூரி மாணவர் கணேஷ்.

'இனி நான் ஒரு சினிமா இயக்குநராவேன் என்ற தைரியம் வந்துவிட்டது சார், இந்தப் படத்தைப் பார்த்த பிறகு. நான் நினைக்கிற சினிமாவை எடுக்க முடியாதோ என தயங்கிக் கொண்டிருந்தேன்.

அண்ணன் பாலா...ஆம்... இனி என்னைப் போன்றவர்களுக்கு அவர் உடன்பிறவாத அண்ணன்தான்...எடுத்துள்ள இந்த ஒரு படம் போதும். அவர் வழியில் நாங்களும் பயணிப்போம், என்கிறார் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல்.

சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் பலர் கும்பலாக படம் பார்க்க வந்திருந்தனர். இவர்கள் இன்று முதல் பாலாவின் ரசிகர்களாகி விட்டதாய்த் தெரிவித்தனர்.

எங்களைப் பொறுத்தவரை நடிகர்களில் ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால், இயக்குநர்களில் சூப்பர் ஸ்டார் பாலா சார்தான். இருவரும் வெவ்வேறு துருவங்கள்தான் என்றாலும் எங்களால் இருவரையுமே ரசிக்க முடிகிறது..., என்றனர்.

பொதுவாக ஆட்டம் பாட்டம் குத்தாட்டம் என்பதுதான் இளைஞர்களுக்குப் பிடிக்கும் என்ற வட்டத்தை தகர்த்தெறிந்துள்ளது பாலாவின் நான் கடவுள்.

இன்று இந்தப் படம் பார்த்தவர்களின் 90 சதவிகிதம் இளைஞர்கள், இளம் பெண்கள். திரையரங்கில் அப்படியொரு நிசப்தம். ஒரு சிறந்த பேராசிரியரின் உரையைக் கேட்க வந்திருக்கும் மாணவர்களைப் போல அத்தனை சிரத்தையாக ரசிகர்கள் பார்த்த படம் நமக்குத் தெரிந்து நான் கடவுளாகத்தான் இருக்கும்.

இது ட்ரெய்லர்தான். நாளை விரிவான விமர்சனம்!

Friday, February 6, 2009

பாலா, அமீர் - புதிய கூட்டணி?

மாயாவி படத்தை தனது சிஷ்யன் சிங்கம்புலிக்காக தயா‌ரித்த பாலா மீண்டும் படம் தயா‌ரிக்கிறார். இதுவும் சிஷ்யர்களுக்காக‌த்தான்.

இயக்குனராக சோபிக்காத சிங்கம்புலி, நான் கடவுள் படத்தில் பாலாவுடன் பணிபு‌ரிந்தார். இவரைப் போல ஆச்சார்யா படத்தை இயக்கிய ரவியும் நான் கடவுளில் அசிஸ்டெண்டாக வேலை பார்த்தார்.

திறமையான இந்த உதவியாளர்களுக்காக தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் இரு படங்களை தயா‌ரிக்க பாலா திட்டமிட்டுள்ளார். சிறிய மனஸ்தாபத்துக்குப் பிறகு ஒன்றிணைந்திருக்கும் அ‌மீர், பாலா இருவரும் இணைந்து படங்களை தயா‌ரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பேட்டியொன்றில் பாலாவுடன் இணைந்து படங்கள் தயா‌ரிக்க தனது விருப்பத்தை தெ‌ரிவித்திருந்தார் அமீர். அதற்கான காலம் கனிந்து வந்திருப்பதாக அவரைச் சார்ந்தவர்கள் நம்பிக்கை தெ‌ரிவிக்கிறார்கள்.

பி ஸ்டுடியோஸ் தயா‌ரிக்கும் இரு படங்கள் இருவரும் இணைவதற்கான பிள்ளையார் சுழியாகவும் இருக்கலாம்.

சண்டியர் அ‌ஜித்

தனது எக்ஸி‌க்யூட்டிவ் லுக்கை எக்ஸ்ட்ரா மீசை வளர்த்து தேனி இளந்தா‌ரி லெவலுக்கு மாற்றியிருக்கிறார், அ‌ஜித்.

பில்லா, ஏகன் படங்களில் கதையைவிட அ‌‌ஜித்தின் லுக்கும், காஸ்ட்யூமும் பேசப்பட்டது. தல இந்த ஸ்டைலில் வந்தால் போதும் என்று அவரது ரசிகர்களே விரும்பும் அளவுக்கு இருந்தது அவரது தோற்றமும், உடையும்.

ஆனால், அடுத்து நடிக்கும் சரணின் அசலுக்காக விருமாண்டியில் கமல் போட்ட சண்டியர் வேஷத்துக்கு மாறியிருக்கிறார் அ‌ஜித். மீசையை வளர்த்து கிருதாவுடன் இணைக்கும் இந்த வேஷத்தில் அசல் சண்டியராகவே மாறியிருக்கிறார்.

வெட்டருவா மீசை அசல் மீதான ஆர்வத்தை தூண்டிவிட்டிருக்கிறது.

அயன் (முன்னோட்டம்)


ஏவி.எம். தயா‌ரிப்பில் சூர்யா நடித்திருக்கும் இரண்டாவது படம். கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் வெளிவரும் இரண்டாவது படமும்கூட.
சூர்யா ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இருபத்தைந்து வயது இளைஞராக இதில் நடித்துள்ளார் சூர்யா. சென்னை திருவல்லிக்கேணியில் தொடங்கிய படப்பிடிப்பு நமீபியா, தான்சானியா என வெளிநாடுகளில் தொடர்ந்தது.

நமீபியாவில் பாடல் காட்சி ஒன்றும், தான்சானியாவில் சண்டைக் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டன. தான்சானியா சண்டைக் காட்சியில் கனல் கண்ணனுடன் ஆப்பி‌ரிக்க சண்டைக் கலைஞர்களும் பணியாற்றினர்.

படத்தில் வில்லனாக இந்தி நடிகர் ஆகாஷ்தீப் சைகல் அறிமுகமாகிறார். இவரைத் தவிர விவேக், பிரபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

எழுத்தாளர்கள் சுபா கதை, வசனம் எழுதியுள்ளனர். ஹாரிஸ் ஜெயரா‌ஜ் இசை. பாடல்கள் வைரமுத்து, நா. முத்துக்குமார், பா. விஜய். ஒளிப்பதிவு எம்.எஸ். பிரபு. சண்டைப் பயிற்சி கனல் கண்ணன். எடிட்டிங் ஆண்டனி.

சன் பிக்சர்ஸ் படத்தை வெளியிடுகிறது.

'தாவணியா...? தள்ளிப்போங்க!' -தலை தெறிக்கும் நடிகைகள்!


பாவாடை தாவணி என்றால், மாடர்ன் பொண்ணுங்க சுத்தியலை எடுத்து நெத்தியிலே அடிச்ச மாதிரி தெறிச்சு ஓடுறாங்க! இப்போ சினிமா நடிகைகளையும் இந்த ஜுரம் பிடித்து ஆட்டுவதுதான் கொடுமை. ப்ரியாமணி, பருத்தி வீரன் படத்திற்கு பிறகு சுமார் 50 பாவாடை தாவணி கதைகளையாவது மறுத்திருப்பார். இவரது பாணியிலேயே இன்னொரு ஹீரோயின் வந்திருக்கிறார். பெயர் ஷம்மு.

மோசர்பேர் நிறுவனம் தயாரித்த மயிலு படத்தில் நடித்தவர். இந்த படத்தில் பார்க்கவே படு லட்சணமாக பாவாடை தாவணியில் வலம் வந்தவர், அடுத்தடுத்த படங்களில் மாடர்ன் டிரஸ் போட்டு நடிக்கவே பிரியப்படுகிறாராம். காரணம், மயிலுவை தொடர்ந்து இவர் நடித்த காஞ்சிவரம், மலையன் ஆகிய இரண்டு படங்களிலும் தாவணிதான் ஷம்முவின் காஸ்ட்யூம்!

இனிமேலாவது தான் நடிக்கிற படங்களில் மாடர்ன் டிரஸ்சில் வரவேண்டும் என்று விரும்பியவர், மாத்தி யோசி படத்தில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். கதை கேட்பதற்கு முன்பே, 'இதுல பாவாடை தாவணி அணிய சொல்ல மாட்டீங்களே?' என்று கேட்டுவிட்டுதான் ஒப்புக் கொண்டாராம்.

மயிலுக்கு 'எடுப்பாக' டிரஸ் தயாராகி கொண்டிருக்கிறது. ஷம்மு தொடர்பான காட்சிகளை அடுத்த மாதம் ஷ§ட் பண்ணப் போகிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி

கந்தசாமியில் நாலு பாட்டு... விக்ரமின் பாடகர் அவதாரம்!


மீண்டும் 'தியாகராஜ பாகவதர்' காலம் திரும்பியிருக்கிறது. 'கந்தசாமி' படத்தில் தனது பாடல்களை தானே சொந்தக் குரலில் பாடியிருக்கிறார் விக்ரம்! அவருடைய திறமைக்கு தனது படத்தை கூட அவரே டைரக்ட் பண்ணிக்கலாம். அந்தளவுக்கு சினிமாவில் உள்ள எல்லா விஷயங்களும் விக்ரமுக்கு அத்துப்படி என்றார் சுசி கணேசன்.

கந்தசாமி படத் துவக்கவிழாவிலேயே 'எக்ஸ்யூஸ் மீ கந்தசாமி' என்ற விக்ரம் பாடிய பாடலை ஒலிபரப்பினார்கள். அதற்கு கிடைத்த வரவேற்பும், விசில் சத்தமும், மற்ற பாடல்களையும் விக்ரமையே பாட வைக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு. 'அவர் சம்மதிக்க வேண்டுமே என்று முதலில் பயந்தேன். ஆனால், அவரது ஆர்வமும், திறமையும் விக்ரமை ஒரு புரபஷனல் சிங்கராகவே உருவாக்கிவிட்டது' என்றார் தேவி ஸ்ரீ பிரசாத்!

மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் பாட அழைத்தால் போவீர்களா என்று விக்ரமிடம் கேட்டால், இடையே குறுக்கிடுகிறார் தேவி ஸ்ரீ பிரசாத். 'அந்த படங்களுக்கு நான் இசையமைப்பாளரா இருந்தா கண்டிப்பா வருவார்!' தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படத்தை டப்பிங் செய்யவிருக்கிறார்கள். அந்த மொழிகளிலும் விக்ரம்தான் பாடுகிறாராம்.

படத்தில் பெண் வேடத்திலும் நடித்திருக்கிறார் விக்ரம். அதுக்கும் நீங்கதான் பாடியிருக்கீங்களா? என்றால், 'அந்த குரல் என்னுடையதில்லைப்பா' என்றார் விக்ரம் பலத்த சிரிப்பொலிக்கிடையில்!

நீட்டின இடத்திலே கையெழுத்து புது ஹீரோவின் விசுவாசம்


ஆனந்த தாண்டவம் ஆட வேண்டிய ஹீரோ, ஆனந்தத்திற்கும் பேரானந்தத்திற்கும் இடையே சிக்கிக் கொண்டு கிடக்கிறார். 'ஆஸ்கார் பிலிம்ஸ் எவ்வளவு பெரிய பேனர். இதிலே நடிக்க நான் கொடுத்து வச்சிருக்கனும்' என்கிறார்! 'இப்படிதான் படம் ரீலீஸ் ஆகற வரைக்கும் பீலா விடுறீங்க. பிறகு யாரு அட்வான்ஸ் கொடுத்தாலும் ஒரு மரியாதைக்கு கூட, வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளரை திரும்பி பார்க்க மாட்டீங்க!'

இப்படி எரிச்சலும், புகைச்சலுமாக கேள்வி கேட்கிறார் ஆஸ்கார் பிலிம்ஸ் வாட்ச்மேன். லேட்டஸ்டாக வினய் கூட இப்படிதான் 'உன்னாலே உன்னாலே'வுக்கு முன்னாடி சொன்னார். அப்புறம் என்னாச்சு? என்பது இந்த வாட்ச்மேனின் கேள்வி.

நாக்கு மேல் பல்லு போட்டு யாரும் பேசிட கூடாதுன்னுதான் நீட்டின இடத்திலே எல்லாம் கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறாராம் ஆ.தா ஹீரோ சித்தார்த்! 'இப்போ டூ வீலர்லே சென்னையை சுத்துறேன். ஆனந்த தாண்டவம் ரிலீசுக்கு பிறகு அப்படி சுற்ற முடியுமா? ஒரே நாளில் மாறப்போற ராஜ வாழ்க்கைக்கு காரணமான தயாரிப்பாளருக்கு நன்றி கடன் பட்டிருக்கேன்' என்கிறார் உண்மையாக!

சுட சுட இதே பையனை வைத்து அடுத்த படத்தையும் எடுக்க திட்டமிட்டிருக்கிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். லகானை இழுத்து பிடிச்சாதான் உண்டு. இல்லைன்னா எந்த குதிரை சொன்ன இடத்திலே நிக்குது?

ஆறே மாசத்தில் புதுப்பட அறிவிப்பு! பாலாவின் திடீர் சுறுசுறுப்பு?


நம்பினா நம்புங்க. பாலாவும் ஃபாஸ்ட்புட் இயக்குனராக போகிறார்! பொதுவாக ஒரு படத்திற்கும், அடுத்த படத்திற்கும், குறைந்தது இரண்டு வருடங்களாவது இடைவெளி விடும் பாலா, இந்த முறை தனது ஸ்டைலை மாற்றிக் கொள்ளப் போகிறாராம். 'நான் கடவுள் படத்திற்கு பிறகு, ஆறே மாசத்திலே புதுப்பட அறிவிப்பை கொடுப்பேன். அடுத்த ஆறு மாசத்திலே படம் திரைக்கு வந்திரும்' (ஒரு தடவை கிள்ளி பார்த்துக்கோங்க....) நல்ல மன நிலையில் இருந்த போது பாலாவே சொன்ன வார்த்தைகள்தான் இது!

நான் கடவுள் பார்த்துவிட்டு வெளியே வருகிற ரசிகர்கள், உணர்ச்சிவசப்பட்டு பாலாவின் கால்களில் விழுகிற காட்சிகளையும் பார்க்க முடிகிறது. இந்த வசனங்களை எப்படி சென்சார் அனுமதிச்சுது? என்றால், 'சில வசனங்களுக்கு ஆட்சேபம் இருந்தது நிஜம்தான். ஆனால், நான் அதுக்கான விளக்கத்தை கொடுத்ததும் ஏத்துகிட்டாங்க' என்றார் பாலா.

காதில் விழுந்த செய்தி ஒன்று. ரஜினி மகள் சௌந்தர்யா, தனது பேனரில் படம் இயக்க பாலாவுக்கு அட்வான்ஸ் கொடுத்திருப்பதாக கேள்வி. இந்த படத்திற்காக பாலாவுக்கு பேசியிருக்கும் சம்பளம் ஐந்து கோடி என்கிறார்கள். படத்திற்கு 'நான் ரிசர்வ்பேங்க்' னு டைட்டில் வைக்கலாமே!

Thursday, February 5, 2009

சூர்யா நடிக்கும் படம் : பாலா தயாரிக்கிறார் சூர்யா, ஜெயம்ரவி நடிக்கும் படங்களை பாலா தயாரிக்கவுள்ளார்.


நான்கே படங்கள்தான். எனினும் பாலாவின் படங்கள் பேசப்பட்ட படங்களின் வரிசையில் சேர்ந்துவிட்டன. இவரது படங்களில் நடிப்பவர்களுக்கு நிச்சயம் தேசியவிருது கிடைக்கும் அளவிற்கு பாலாவின் படங்கள் இந்திய அளவில் அறியப்பட்டுவிட்டன. இன்றைய தினம் வெளியாகியுள்ள ‘நான் கடவுள்' படமும் இத்தகைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஒரு படத்தை இயக்கி முடித்தபிறகு ஓய்வெடுப்பதென்பது பாலாவின் வழக்கம். இம்முறை பாலா ஓய்வுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் பிஸியாகப்போகிறாராம். அதாவது படத்தயாரிப்பில் தீவிரம் காட்டவுள்ளாராம். தொடர்ந்து ஐந்து படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

முதல் கட்டமாக இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளார். ஒரு படத்தை ராம்சத்யாவும். இன்னொரு படத்தை ‘ஆச்சார்யா' படத்தை இயக்கிய ரவியும் இயக்கவுள்ளனராம். இதற்காக சூர்யா, ஜெயம்ரவியிடம் கால்ஷீட் கேட்டுள்ளாராம் பாலா. சூர்யா நடிக்கும் படத்தை ராம்சத்யாவும்,ஜெயம்ரவி நடிக்கும் படத்தை ரவியும் இயக்குவார்கள் என கூறப்படுகிறது.

Surya

ராம்சத்யா ஏற்கனவே சிங்கம்புலி என்ற பெயரில் அஜித் நடித்த 'ரெட்' படத்தையும் ராம்சத்யா பெயரில் சூர்யா-ஜோதிகா நடித்த ‘மாயாவி' படத்தையும் இயக்கியுள்ளார். 'நான் கடவுள்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சிங்கம்புலி, மாயாண்டி குடும்பத்தார் படத்திலும் நடித்துவருகிறார். கன்னடத்தில் ‘செல்வராய சாமி' படத்தையும் இயக்கிவருகிறார். ஜெயம்ரவி படத்தை இயக்கவுள்ள ‘ஆச்சார்யா' ரவி, பாலாவின் உதவியாளர் மட்டுமின்றி அவருடைய உறவுக்காரரும் கூடவாம்.

ஏற்கனவே பாலா பி ஸ்டுடியோ பெயரில் ‘மாயாவி' படத்தை தயாரித்துள்ளார். அதன்பிறகு இப்போதுதான் மீண்டும் தயாரிப்பில் கவனம் செலுத்துகிறார்.

ரஜினிக்காக உருவாக்கப்பட்டு சரத்குமார் நடிக்க ஆரம்பித்த ஜக்குபாய் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது 'ஜக்குபாய்' கதை : கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி - 06.02.


சென்னை ஈ.சி.ஆர். ரோட்டில் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காயும் உடைக்கப்பட்டுவிட்டது. படம் பற்றி இதுவரை மூச்சுவிடாமல் இருந்த ரவிக்குமார், முதல்முறையாக ஜக்குபாய் பற்றி பகிர்ந்துகொண்டார்.

” அப்பா-மகள் உறவுதான் கதை. ஜெகன்நாதன்கிற கேரக்டர் ஆஸ்திரேலியா போய் ஜக்குபாயா மாறுகிறார். அவருக்கும் அவர் மகளுக்குமான சந்தோஷம், துக்கம், பிரச்சனையை திரைக்கதையா சொல்லியிருக்கேன். அப்பாவா சரத்குமாரும், மகளாக ஸ்ரேயாவும், பிளாஷ்பேக்ல சரத் ஜோடியா ஸ்ரீஷாவும் நடிச்சிருக்காங்க.

ஆஸ்திரேலியாவில்தான் தொண்ணூறு சதவீத படப்பிடிப்பும். சில காட்சிகளை மட்டும் சென்னையில எடுத்திருக்கோம். ஆர்.டி.ராஜசேகர் பிரமாதமா ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமா இருக்கும். கதை முழுவதும் வெளிநாட்டுல நடக்குறதால சிங்கப்பூர், நியூயார்க், மலேசியா,ஆஸ்திரேலியாவில் இருக்கிறவங்களையே, அவரவர்கள் கேரக்டராகவே நடிக்க வச்சிருக்கேன்.

Sarahkumar

ரஜினிக்காக நான் எழுதிய மூணு கதைகளில் ஒண்ணுதான் ஜக்குபாய். இந்த கதையை சரத்குமாருக்காக பண்ணப்போறேன்னு ரஜினிக்கிட்ட சொன்னப்ப ஓ.கேன்னு சொன்னார். சரத்திற்காக கதையில் சில மாற்றங்களை செய்திருக்கேன். ரொம்ப புதுமையாவும் ஸ்டைலாவும் இருக்கும். காஸ்ட்லி புரொடக்‌ஷன்தான். இதுவரை இருபது கோடி செலவாகிடுச்சு.

ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணிபுரிந்த சிங்கப்பூரை சேர்ந்த ரஃபி என்பவரை இசையமைப்பாளரா அறிமுகப்படுத்தியுள்ளேன். தசாவதாரம் க்ளைமாக்ஸை தண்ணியில பண்ணியதுபோல, ஜக்குபாய் க்ளைமாக்ஸை காத்துல பண்ணியிருக்கோம்.” என மூச்சுவிடாமல் சொல்லிமுடிக்க ஜக்குபாயை சுவாசிக்க ஆர்வம் தொற்றியது.

கஞ்சாகருப்புக்கு கல்யாணம் கல்யாண மாப்பிள்ளையாகப்போகிறார் கஞ்சாகருப்பு.


தமிழ்சினிமா காமெடியன்கள் லிஸ்டில் கஞ்சாகருப்புவுக்கும் ஒரு இடம் கிடைத்துவிட்டது. 'பிதாமகன்' படம் மூலம் கஞ்சாகருப்புவுக்கு பிள்ளையார் சுழி போட்டுக்கொடுத்தவர் பாலா. ஆரம்பத்தில் பாலாவின் அலுவலகத்தில் ஆபிஸ்பாயாக வேலை செய்த கருப்பு, கஞ்சா குடிப்பவராக பிதாமகனில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து அமீர் இயக்கிய ‘ராம்' படத்தில் தனி காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு. இந்தப்படம்தான் கஞ்சாகருப்புவுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படம். அதன் பிறகு கருப்புவின் காட்டில் பட மழைதான். இப்படி வாழ்வின் அடிமட்டத்திலிருந்து வளர்ந்துவந்த கருப்பு, இல்லற வாழ்க்கையிலும் அடியெடுத்துவைக்கவுள்ளார்.

கஞ்சா கருப்புவுக்கு அவரது வீட்டில் பெண் பார்த்துவிட்டார்களாம். தேனி பக்கத்தில் உறவுக்கார பெண் என்று கூறப்படுகிறது. அடுத்தமாதம் திருமணமாம். திருமணமாவதையொட்டி புதிய பங்களா ஒன்றை வாங்கியுள்ளாராம் கருப்பு. சென்னை ஆலப்பாக்கத்தில் நான்கு மாடிகொண்ட அந்த வீட்டிற்கு, தனது முன்னேற்றத்திற்கு காரணமான பாலா, அமீர் பெயரை இணைத்து ‘பாலா-அமீர் இல்லம்' என பெயரிட்டுள்ளாராம்.

முதலில் கிரஹபிரவேசம் நடத்திவிட்டு அதன்பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கும் கருப்பு, விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து கல்யாண அறிவிப்பை வெளியிட காத்திருக்கிறாராம். தற்போது கருப்பின் கைவசம் பதினைந்து படங்கள் இருக்கிறதாம். முதல்முறையாக ‘ஆறுமனமே' படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துவருகிறார்.

ரஜினி வீட்டு கல்யாணத்திற்கு பிரம்மாண்ட செலவு


ரஜினி வீட்டு கல்யாணம் என்றதும் சௌந்தர்யா திருமணம் என்று நினைத்து ஏமாறவேண்டாம். இது எந்திரன் தொடர்பான செய்தி.ஆரம்பகட்ட படப்பிடிப்பில் சில தடைகளை சந்தித்த ஏந்திரன் சன் பிக்சர்ஸூக்கு கைமாறிய பிறகு பரபரப்பாக தொடங்கிவிட்டது படப்பிடிப்புகள். கடந்த சில நாட்களாக எந்திரன் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடததப்பட்டு வருகிறது. சென்னை புறநகர்களில் சில காட்சிகளை படமாக்கிய ஷங்கர் தற்போது ஸ்டூடியோவுக்குள் படமாக்கி வருகிறார்.

சென்னை ஸ்டுடியோ ஒன்றில் பிரம்மாணடமான திருமண மண்டப செட் போடப்பட்டுள்ளது. இந்த செட்டில் சமீபத்தில் ரஜினிக்கும்-ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடப்பதுபோன்ற காட்சி படமாகியுள்ளது. இந்த திருமணத்தில் பல கோடீஸ்வரர்கள் கலந்து கொள்வது போன்ற காட்சிக்காக மட்டும் இரண்டு கோடி ரூபாய்க்கும்மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக எந்திரன் வட்டாரங்கள் செய்தி தெரிவி்க்கிறது.

பணக்காரர்கள் பயன்படுத்தும் கார்களுக்காக சென்னை முழுவதிலுமிருந்து பலவித சொகுசு கார்கள் வரவழைக்கப்பட்டதாம். இதனால் ஷூட்டிங் நடந்த இடமே, நிஜமான திருமணம் நடப்பதுபோன்று தத்ரூபமாக காட்சியளித்ததாம். படப்பிடிப்பிற்காக கார்களை இலவசமாக வழங்கிய சில தொழிலதிபர்கள், 'ரஜினி படத்தில் எங்களது கார் நடிப்பது நாங்களே நடிப்பதுபோன்ற மகிழ்ச்சியை கொடுக்கிறது' என ஆர்வமுடன் கூறியுள்ளனர். ரூ.20 லட்சத்துக்கும் மேற்பட்ட காஸ்ட்லி கார்கள் மட்டுமே படத்தில் பயன்படுத்தியுள்ளதாக புரொடக்ஷ்ன் அசிஸ்டெண்ட் ஒருவர் தெரிவித்தார்.

சிறுவனைக் காப்பாற்றிய நடிகை அசினுக்கு காயம்!


கார் விபத்தில் இருந்து ஒரு சிறுவனைக் காப்பாற்றிய போது, நிலை தடுமாறி கீழே விழுந்த அசின் காயம் அடைந்தார்.நடிகை அசின் இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவர். இத்தனைக்கும் அவர் நடித்து வெளி வந்துள்ள படம் கஜினி மட்டும்தான். ஆனால் வசூலில் அந்தப் படம் போட்ட போடில் அரண்டு போயிருக்கிறது மொத்த பாலிவுட்டும்.

இப்போது முன்னணி நடிகர்கள் பலரும் அசினையே நாடுவதால் அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் இன்னொரு ஸ்ரீதேவி என மும்பை பத்திரிகைகள் புகழாரம் சூட்டிவரும் நிலையில், மும்பையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார் அசின்.

நேற்று வியாழக்கிழமை மும்பை அந்தேரியில் 'இன்பினிட்டி மால்' அருகே காரில் சென்று கொண்டிருந்தார் அசின். அப்போது சாலையில் அதிவேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அதை அறியாமல் ஒரு சிறுவன் சாலையைக் கடக்க முயல, கார் அவன் மீது மோதிவிடும் நிலை ஏற்பட்டது.

இதைப் பார்த்த அசின், உடனே தனது காரை நிறுத்தி இறங்கி நடுரோட்டுக்கு ஓடினார். அந்தச் சிறுவனை தூக்கி பாதுகாப்பாக ஓரத்தில் கொண்டுவிட்டார்.

ஆனால் அந்தச் சிறுவனை தூக்கி வந்தபோது நிலை தடுமாறி சாலையில் விழுந்துவிட்டார் அசின். இதில் அவரது கைகளில் காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அசினின் மனிதாபிமானத்தைக் கண்டு வியந்துபோய் அவரைப் பாராட்டினர்.

நிஜமாகவே பாராட்டுக்குரிய செயல்தான்!

'ஜாக்கி' வேதிகா!


அருண் விஜய்யுடன் இணைந்து வரும் மலை மலை படத்தில் ரேடியோ ஜாக்கி வேடத்தில் கலக்கியுள்ளாராம் வேதிகா.காளை, தொடர்ந்து முனி ஆகிய படங்களில் நடித்தவர் வேதிகா. இதுதவிர தெலுங்கில் விஜயதசமி என்ற படத்தில் நடித்துள்ளார் வேதிகா. விசேஷம் என்னவென்றால் மூன்றுமே தோல்விப் படங்கள்.

இதனால் ராசியில்லாத ராணிகள் வரிசையில் வேதிகாவையும் சேர்த்து விட்டனர்.

இருப்பினும் அவரது திறமை மீது மதிப்பு வைத்து தனது மலை மலை படத்தில் நடிக்க வைத்தார் இயக்குநர் வெங்கடேஷ்.

கமர்ஷியல் கிங் ஆன வெங்கடேஷ் இயக்கி வரும் மலை மலை படத்தில் நாயகனாக நடிப்பவர் அருண் விஜய். அவரது மாமனார்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தில் வேதிகாவுக்கு அட்டகாசமான கேரக்டர். படத்தில் அவரது கேரக்டரை ரகசியமாக வைத்துள்ளனராம். ஆனால் ரேடியோ ஜாக்கியாக வருகிறாராம் வேதிகா.

தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்தவள் என்ற பெயர் எனக்கு இருந்தாலும், இந்தப் படம் அதை மாற்றும் என்கிறார் நம்பிக்கையுடன் வேதிகா.

படத்தில் அருண் விஜய், பிரகாஷ் ராஜ் கேரக்டர்கள் செமத்தயாக இருப்பதாகவும், இருப்பினும் அதையும் தாண்டி தனது கேரக்டரும் ரசிகர்கள் மனதில் நிற்கும் என்றும் சந்தோஷத்துடன் கூறுகிறார்.

லாரன்ஸ் ஜோடி சதா?


ராகவ லாரன்ஸுடன் இணைந்து நடிக்க சதாவை அணுகியுள்ளனர். அதேபோல இந்தி நடிகை அஞ்சலி அலக்கையும் அணுகியுள்ளனராம்.
வடிவேலுவை ஹீரோ ஆக்கிய சிம்புதேவன் அடுத்து இயக்கப் போகும் படத்தில் லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காமெடிப் படமாக இருக்காது. மாறாக காமெடியும் கதையில் முக்கியப் பாத்திரத்தில் இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளாராம் சிம்புதேவன்.

கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்தில் ஹீரோயினாக நடிக்க சதாவை அணுகியுள்ளனர். சதா தற்போதைக்கு கைவசம் படம் எதுவும் இல்லாமல் இருக்கிறார். இருப்பினும், லாரன்ஸுடன் ஜோடியாக நடிக்க அவருக்கு தயக்கமாக இருக்கிறாராம். யோசித்து சொல்வதாக கூறி வைத்துள்ளார்.

அவர் கால்ஷீட் கிடைப்பது சந்தேகம் என்பதால் இந்தி நடிகை அஞ்சலி அலக்கையும் கேட்டு வைத்துள்ளனர். இவர்கள் தவிர வேறு சில நடிகைகளையும் அணுகியுள்ளனராம்.

இவர்களில் யார் கிடைத்தாலும், அவரை லாரன்ஸுக்கு ஜோடியாக்கி விட தீர்மானித்துள்ளனராம்.

லிங்குச்சாமி யார் என் சம்பளத்தைக் குறைக்க? - நயன் பாய்ச்சல்!


எனது சம்பளத்தைக் குறைக்க லிங்குச்சாமி யார் என கேட்டுள்ளார் தடை விதிக்கப்பட்டுள்ள நயனதாரா.
லிங்குசாமி படத்தை ஆரம்பிப்பார் என்பதற்காக பொறுமையோடு காத்திருந்தேன். ஆனால் நான் கொடுத்த தேதிகள்தான் வீணாகின. கடைசியில் அவர்களாகத்தான் என்னை படத்திலிருந்து விலக்கினார்கள். இப்போது என் தேதிகளை வீணாக்கியதற்காக அட்வான்ஸில் ரூ.5 லட்சத்தை வேண்டுமானால் குறைப்பதாகக் கூறியுள்ளார். என் ரேட்டை நிர்ணயம் செய்ய லிங்குசாமி யார்? வீணான என் கால்ஷீட்டின் மதிப்பு தெரியுமா லிங்குசாமிக்கு? என கொதிக்கிறார் நயன்தாரா.

பையா படத்துக்காக லிங்குசாமி கொடுத்த அட்வான்ஸ் தொகையைத் தர மறுத்து, படத்திலும் நடிக்காமல் போனதற்காக நயன்தாராவுக்கு தமிழில் நடிக்கத் தடை விதித்துள்ளது தயாரிப்பாளர் கவுன்சில் மற்றும் நடிகர் சங்கம்.

பொதுவாக நயன்தாராவிடம் வேண்டி வேண்டிக் கேட்டாலும் பேட்டி கிடைக்காது. அந்தப் பேட்டியைப் பெறும் முன்பு ஏகப்பட்ட நந்திகளைத் தாண்டியாக வேண்டும். அப்படியே கொடுத்தாலும் அவருக்கென்று உள்ள சில 'ரசிகர் இணையதள'ங்களுக்கு மட்டும்தான் தருவார்.

இன்றோ கேட்கும் முன்பே பேட்டி கொடுக்கிறார் நயன். அப்படி அவர் கொடுத்த பேட்டி இது:

தயாரிப்பாளர் கவுன்சிலும், நடிகர் சங்கமும் எடுத்துள்ள முடிவு ஒரு தலைப்பட்சமானது... அநீதியானது. லிங்குசாமியிடம் நான் 20 லட்சம் ரூபாய் முன்பணமாகப் பெற்றது உண்மையே. ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட உடனே நான் எனது கால்ஷீட்டை அவர்களுக்குக் கொடுத்தேன்.அதுகுறி்த்த ஒப்பந்தம் கூட இருக்கிறது.

ஆனால் படத்தை ஆரம்பிக்காமல் அவர்கள்தான் தாமதம் செய்தனர். அவர்கள் கேட்டுக் கொண்டபடி செப்டம்பர் மாதமே தேதிகள் ஒதுக்கிக் கொடுத்தேன். ஆனால் அதை வீணடித்தது அவர்கள் தவறு. நானா நடிக்கமாட்டேன் என்று சொன்னேன்.

நானும் 3 மாதங்கள் பொறுமையாகக் காத்திருந்தேன். கடந்த டிசம்பர் மாதம் ஒருவழியாக போட்டோ ஷூட்டுக்கு அழைத்தார்கள். ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பாக என் சம்பளகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். அப்புறம் எதற்கு ஒப்பந்தம் போடுகிறார்கள்? எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் போட்ட பிறகு அந்தத் தொகையைக் குறைக்கச் சொன்னது நியாயமா?

நியாயமாக நான்தான் இந்த புகாரைக் கொடுத்திருக்க வேண்டும். பெருமந்தன்மையோடு நான் விட்டுவிட்டதற்கு தண்டனை இது.

என் கால்ஷீட்டை வீணாக்கியதற்காக கொடுத்த அட்வான்ஸில் 5 லட்சம் ரூபாயைக் குறைத்துக் கொள்வதாகவும் மீதியை நான் தந்துவிட வேண்டும் என்றும் லிங்குசாமி கூறியுள்ளார். என் கால்ஷீட்டின் மதிப்பை நிர்ணயிக்க லிங்குசாமி யார்? அந்த கால்ஷீட்டின் மதிப்பு தெரியுமா அவருக்கு?

என் நிலை இதுதான். படத்திலிருந்து நானாக விலகவில்லை. அவர்களாகத்தான் விலக்குவதாக அறிவித்தார்கள். எனவே அட்வான்ஸைத் திருப்பித் தரமுடியாது.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்கச் சொல்லி நடிகர் சங்கத்தில் முறையிட்டிருந்தேன். ஆனால் அவர்கள் எனக்கே எதிராகத் திரும்பியுள்ளனர். இந்த 15 லட்சம் ஒரு பொருட்டல்ல... ஆனால் இவர்கள் நடந்து கொண்ட விதம் உண்மையிலேயே என்னைக் கோபப்பட வைத்துள்ளது. அடுத்த நடவடிக்கை குறித்து யோசித்து வருகிறேன், என்றார்.

365 காதல் கடிதங்கள்

காலதாமதத்துக்கும் கார்த்திகாவுக்கும் அப்படி என்ன பொருத்தமோ? பூசணிக்காய் உடைக்கப்பட்ட கார்த்திகாவின் பல படங்கள் இன்னும் பெட்டியைவிட்டு வெளிவரவில்லை.

முதலில் எந்தப் படம் வெளிவரும் என்ற தகவலுமில்லை. க‌ரிய விழியில் சோகம் தேக்கி நிற்கும் அவருக்கு சந்தோஷ செய்தியை கொண்டு வந்திருக்கிறது, 365 காதல் கடிதங்கள்.

யுவ கார்த்திக், கார்த்திகா நடித்திருந்த இந்தப் படம் கார்த்திகாவின் பிற படங்கள்போல ‌ரிலீஸுக்கு தடுமாறிக் கொண்டிருந்தது. சாலை மகாதேவனின் விஷன் 21 கி‌ரியேட்டிவ் டீம் ஒர்க் தயா‌ரித்த இந்தப் படம் நடைமுறை சிக்கல்களைக் கடந்து விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறது.

பாண்டியன் படத்தை இயக்கியிருக்கிறார். பால்ஜே இசையமைத்துள்ளார். படத்தின் வெற்றிக்கு கருணாஸின் காமெடியை பெ‌ரிதும் நம்பியிருக்கிறார்கள்.

அச்சு அசலாக இளவயது விஜயகாந்த் நகல் விஜயகாந்த்

அச்சு அசலாக இளவயது விஜயகாந்த் போலவே இருக்கிறார் ராஜசிம்மன். கொஞ்சம் சதை போட்டால் விஜயகாந்துக்கு டூப் போடலாம். எப்படி இந்த உருவ ஒற்றுமை?

ராஜசிம்மன் விஜயகாந்தின் சகோதரர் மகனாம். கேப்டனை பின்பற்றி கலைச் சேவைக்கு வந்திருக்கிறார். உனக்கே உயிரானேன் படத்தில் கணேஷுடன் இன்னொரு ஹீரோவாக அறிமுகமாகிறார்.

கணேஷுக்கு ஜோடி கீர்த்தி சாவ்லா. படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. படத்தைப் பற்றி கொசுறு தகவல். 1999 என்ற பெய‌ரில் ஆரம்பிக்கப்பட்ட படம்தான் உனக்கே உயிரானேன் என்று பெயர் மாறியிருக்கிறது.

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு பிரான்ஸில் நடைபெற்றது.

சத்யரா‌ஜின் மறுப்பு

ர‌ஜினி, கமல் படங்களில் வில்லனாக நடிக்க மறுத்தவர், சத்யரா‌ஜ். அவர் தெலுங்கில் அதுவும் நேற்று வரை வில்லனாக நடித்த கோபிசந்தின் படத்தில் வில்லனாக நடிக்க எப்படி ஒப்புக் கொண்டார்?

கோடம்பாக்கம் மண்டையை குழப்பிக் கொண்ட இந்த கேள்விக்கு தனக்கேயு‌ரிய ஸ்டைலில் பதிலளித்தார் சத்யரா‌ஜ்.

அதாவது, எல்லோரும் சொல்வதுபோல் சத்யரா‌ஜ் நடிக்க இருப்பது வில்லன் வேஷமில்லையாம். கோபிசந்தின் அப்பாவாக நடிக்கிறாராம். எந்த மாதி‌ரி அப்பா என்றால் ம்.. தேவர்மகனில் சிவா‌ஜி வருவாரே அந்த மாதி‌ரி பவர்ஃபுல் அப்பாவாம். அப்போ, வில்லன் என்று சொன்னது? அதெல்லாம் வேலைவெட்டி இல்லாதவங்க கிளப்பி விடுறது என்றார் கூலாக.

நல்லா கிளப்புறாய்ங்கய்யா வதந்தியை.

நான் கடவுள் மு‌ன்னோ‌ட்ட‌ம்



பாலாவின் நான்காவது படம். பாலா படத்துக்கேயு‌ரிய நுணுக்கம், ஆளுமை அனைத்தும் கூடி வந்திருக்கும் படம்.

காசி சாமியார்களின் வாழ்க்கையும், பிச்சையெடுப்பவர்களின் அவலத்தையும் பிரதிபலிக்கிறது நான் கடவுள். ருத்ரன் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் ஆர்யா. கண் தெ‌ரியாத பிச்சைக்காரர் வேடம் பூஜாவுக்கு. இவர்களைத் தவிர ஏராளமான அங்ககீனர்கள், மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் நடித்துள்ளனர்.
அகோ‌ரி என்ற நரமாமிசம் சாப்பிடும் சாமியாராக ஆர்யாவுக்கு வித்தியாசமான வேடம். இதற்காக மூன்று வருடங்கள் தாடி, மீசை வளர்த்து அந்த கேரக்டராகவே மாறியிருக்கிறார். காசி மற்றும் தேனிப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். மலைக்கோயில் ஒன்றை தத்ரூபமாக அமைத்துள்ளார், கலை இயக்குனர் பி. கிருஷ்ணமூர்த்தி.

படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை பல நாட்கள் எடுத்திருக்கிறார்கள். இரண்டு மாதங்கள் என்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ. வில்சன். சண்டைப் பயிற்சி சூப்பர் சுப்பராயன். கவிஞர் விக்ரமாதித்யன் முதல் முறையாக இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

படத்தின் முக்கியமான அம்சம் இசை. இந்தப் படத்துக்கு இசையமைக்க பிரத்யேக மனநிலை தேவைப்பட்டதாக தெ‌ரிவித்துள்ளார் இளையராஜா. பாடல்கள் அனைத்தும் வெளியான அன்றே ஹிட்டாகியிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிக‌ரித்துள்ளது.

சுரேஷ் அர்ஸ் எடிட்டிங், வாசன்ஸ் விஷுவல் வென்சர்ஸ் சார்பில் படத்தை கே.எஸ். சீனிவாசன் தயா‌ரித்துள்ளார். இந்திய திரையுலகில் ஒரு மைல் கல்லாக நான் கடவுள் இருக்கும் என்பது அனைவ‌ரின் எதிர்பார்ப்பு

நாடி வரும் ரஹ்மான்! விலகி நிற்கும் இசைஞானி?


'ராஜா சார் மியூசிக்லே நாங்கள்ளாம் பாடப் போகும்போது, அங்கே கீ போர்டு வாசிச்சிட்டிருந்த குட்டிப் பையன்தான் இப்போ 'கோல்டன் குளோப்' வரைக்கும் போயிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு! அவரு ஆஸ்கார் விருதையும் வாங்கனும்' என்று வாயார வாழ்த்துகிறார்கள் அந்த கால பாடகிகள்!

தன் இசையோடு வளர்ந்த மாணவனுக்கு கிடைத்த விருதுகளை எண்ணி இதழோரம் புன்சிரிப்பையும், பெருமையையும் வெளிப்படுத்தும் இசைஞானி, அதே மாணவனை நேரடியாக சந்தித்து ஆசி தருவதற்கு மட்டும் யோசிக்கிறாராம். எத்தனையோ பாராட்டுகள் வந்தாலும், இசைஞானி வீட்டிலிருந்து வந்த பொக்கேவைதான் பெருமையாக நினைக்கிறார் ரஹ்மான்.

ஒருமுறை நேரில் சந்தித்து ஆசி பெறலாம் என்றும் விரும்பினாராம். ஆனால், இசைஞானியின் அனுமதி இசைப் புயலுக்கு கிடைப்பதில் தொடர் தாமதம் ஏற்பட்டு வருகிறதாம்.

இசையில் அபஸ்வரம் ஒலிக்கலாமா?

ரஜினி விரும்பினால் ஒரு நடமாடும் வீட்டையே கொண்டு வந்து வைக்க தயாராக இருக்கிறது தமிழ்சினிமா


ரஜினி விரும்பினால் ஒரு நடமாடும் வீட்டையே கொண்டு வந்து வைக்க தயாராக இருக்கிறது தமிழ்சினிமா. ஆனாலும் கேரவேனுக்கு பதிலாக, சுமாராக இருந்தாலும் தனது பழைய காரே போதும் என்கிறாராம் ரஜினி. எந்திரன் படப்பிடிப்பில் இந்த பழைய காரிலேயே அமர்ந்து மேக்கப் போட்டுக் கொள்வதும், ஓய்வெடுப்பதுமாக இருக்கும் ரஜினியை, 'மெய்யாலுமே அவரு ஞானிப்பா' என்கிறார்கள் யூனிட்டில்!

சென்னையை சுற்றி படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், வீட்டிலிருந்துதான் சாப்பாடு வருகிறது சூப்பர் ஸ்டாருக்கு. தன்னுடன் ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் தனது வீட்டு சாப்பாட்டையே வழங்குகிறாராம்!

அதுமட்டுமல்ல, தான் படிக்கும் ஆன்மீக புத்தகங்களையும் ஐஸ்வர்யாராய்க்கு கொடுத்து படிக்க சொல்கிறாராம். போகிற போக்கில் உலக அழகி, யுனிவர்சல் சாமியாரிணி ஆனாலும் ஆகிவிடுவார் போலிருக்கிறது. இன்னொரு சுவாரஸ்யம், ஐஸ்வர்யா நடிக்கும் தனி காட்சிகளையும் வேடிக்கை பார்ப்பதற்காக மற்றவர்கள் மாதிரியே ஆர்வத்தோடு நிற்கிறாராம் ரஜினி.

Wednesday, February 4, 2009

டபுள் மீனிங், குத்து டான்ஸ், சண்டை இல்லாத சிம்பு படம்!?


மீண்டும் சரவணன் இயக்கத்தில் எம்.கோவிந்தராஜன் என்ற படத்திற்கு ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருந்த சிம்பு, திடீரென்று டைவ் அடித்து, கவுதமை பிடித்துக் கொண்டார். படப்பிடிப்புக்கு போகிற வரைக்கும் இதுவும் நிரந்தரமில்லை என்றாலும், அப் டு டேட் தகவலை சொல்வது நம் கடமை என்பதால்... 'மேலே படிங்க'

கடந்த சில தினங்களாக சென்னையில் நடந்து வருகிறது போட்டோ ஷ§ட்! த்ரிஷாவையும் சிம்புவுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் கவுதம். (சென்னையில் ஒரு மழைக்காலம் என்னாச்சு) இருவரையும் ஒன்றாக வைத்து இந்த ஸ்டில் ஷ§ட்டிங்கை எடுக்கலாம் என்று நினைத்திருந்தவர், என்னாச்சோ தெரியவில்லை. சிம்புவை ஸோலோவாக எடுத்து வருகிறார்.

கதையை சிம்புவுக்கு சொல்வதற்கு முன்பே, இந்த படத்தில் டபுள் மீனிங் வசனங்கள் கிடையாது, குத்தாட்டம் இருக்காது, முக்கியமாக சண்டைக்காட்சிகளே இல்லை என்று தெளிவாக கூறிவிட்டாராம். ஒரு அழகான காதல் கதையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தையும் கொடுத்தாராம். ஆனாலும் முதல் நாளே சிம்பு, தனக்கு பிடித்த மாதிரி காஸ்ட்யூம்களோடு வந்து விட்டாராம். அதிர்ந்து போன கவுதம், 'காஸ்ட்யூம் விஷயத்தில் உங்களுக்கு சுதந்திரம் தர்றேன். ஆனால், அது உங்கள் உள்ளாடை வரைக்கும்தான்' என்றாராம்!

நல்லாதான் இருக்கு பிள்ளையார் சுழி!

நாடு திரும்பும் புரட்சி? ஈழம் குறித்த குறும்படம்!


ழகரம் திரைப்படக் கழகம் சார்பில் 'புலம் ஈழம்' என்ற குறும்படத்தை Sweஇயக்கியிருக்கிறார் வி.கலைவேந்தன். 'குட்டி' திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற ஸ்வேதா இப்படத்தில் புலம் பெயர்ந்த தமிழச்சியாக நடித்திருக்கிறார்.

உலகம் முழுவதும் பரவலாக வாழ்ந்து வரும் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் மீண்டும் தங்கள் நாடு திரும்பும் புரட்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதே படத்தின் முடிவாக இருக்கிறது. அதாவது, அத்தனை பேரும் ஒரே நேரத்தில் நாடு திரும்பினால், எதிர்ப்பவர்கள் என்ன செய்துவிட முடியும் என்பதே படம் எழுப்பும் கேள்வி.

4000 ஆண்டு கால இலங்கை வரலாற்றை படம் துவங்கும்போதே விளக்கமாக சொல்லிவிடுகிறார் இயக்குனர். மரபு வழி குடியுரிமை பற்றி எல்லாருக்கும் புரியும்படியாக வலியுறுத்தியிருப்பது கலைவேந்தனின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. அதே நேரத்தில் இந்த படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் எழுப்பிய சில ஆட்சேபங்களையும் கருத்தில் கொண்டு உடனடியாக சில காட்சிகளை நீக்குவதற்கு ஒப்புக் கொண்டார் கலைவேந்தன்.

ஆச்சர்யம் என்னவென்றால், படத்தில் நடித்த அத்தனை நடிகர் நடிகைகளும் பணம் வாங்காமல் நடித்திருக்கிறார்கள். 'ஏதோ எங்களால் ஆன உதவி. நாங்கள் வேறு என்ன செய்ய முடியும்?' என்றார் ஸ்வேதா!

இலங்கைக்கு வெளியே நின்று தவித்துக் கொண்டிருக்கும் ஏராளமான தமிழர்களின் குரலும் இதுதானே ஸ்வேதா!

கத்தியின்றி ரத்தமின்றி உருவான காதல் படம்


ஊசி போடுற காட்சிகூட இல்லாமல் கத்தி ரத்தம் இல்லாத அழகான காதல் படத்தை எடுத்துருக்கேன் சார்... 'கார்த்திக் அனிதா' படத்தின் இயக்குனர் விவரிக்கும் அழகே படம் பார்கக தூண்டுகிறது.

"பெருசா வித்தியாசமான கதையெல்லாம் எதையும் சொல்ல வரலை சார். ஆனா படம் பார்ககுற ஜனங்க, ஏதோ வித்தியாசமா பண்ணியிருக்காம்ப்பான்னு பேசும்படியான ஒரு படமா இது இருக்கும்" என்னும் இயக்குனரின் நம்பிக்கை 'கார்த்திக் அனிதா' வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக இருக்கிறது. கிங்மேஜிக் பட நிறுவனம் சார்பில் ஷங்கர் வி.ராஜன் தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்கும் ஸ்ரீஹரி சுந்தர்.சியின் மாணவராம்.

அன்றைய, இன்றைய நடிகர்கள் பலருக்கு மேக்கப்மேனாக பணிபுரிந்துள்ள பாபுவின் மகன் ரத்தன் என்பவர்தான் படத்தின் நாயகன். விளம்பர படங்களில் நடித்துள்ள மஞ்சு நாயகியாக அறிமுகமாகிறார். நாயகனின் தந்தையாக கோட்டாசீனிவாசராவ் நடித்துள்ளார். இயக்குனரின் கதையில் நம்பிக்கைவைத்து தாராள செலவு செய்துள்ளாராம் தயாரிப்பாளர்.

"காதல் எல்லோருக்கும் பொதுவான உணர்வு. இந்தப்படத்தைப் பார்ககும் ஒவ்வொருவரும் படத்தில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வார்கள். அந்தளவுக்கு கதையும் காட்சிகளும் யதார்ததமாக நம்மைச்சுற்றி நிகழும் விஷயங்களாக இருக்கும். மென்மையான ஒரு காதலை கலர்ஃபுல்லாக சொல்லி இருக்கிறோம். எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம்... காதலைப்பற்றி பேசும் இந்தப் படத்தில் குத்துப்பாட்டு டபுள்மீனிங், சண்டைக்காட்சி, முத்தக்காட்சி போன்ற வழக்கமான விஷயங்கள் எதுவுமே இல்லை. அது மட்டுமல்ல, முகம் சுழிக்கும் விஷயங்களும் இல்லை. குடும்பத்தினரோடு அனைத்து வயதினரும் பார்ககும் வகையில் ஆரோக்கியமான படமாக எடுத்திருக்கிறோம்" என்றார்.

'கார்த்திக் அனிதா' படத்தின் மிகப்பெரிய பலமாக இசையும், ஒளிப்பதிவும் அமைந்திருக்கும் என்னும் இயக்குனர், படத்தின் இருவேறு பகுதிகளை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக, இரண்டு ஒளிப்பதிவாளர்களை பயன்படுத்தி இருக்கிறாராம். இந்த வித்தியாசத்தை பார்வையாளர்கள் நிச்சயம் உணர்வது மட்டுமல்ல, ரசிக்கவும் செய்வார்கள் என்பது இயக்குனரின் நம்பிக்கை.

ஹைதராபாத் செட்டில் நயனதாரா மயங்கி விழுந்துவிட்டாரம்


தெலுங்கு பட ஷூட்டிங்கில் நயனதாரா மயங்கி விழுந்தார் என்றும், இதனால் ஷூட்டிங்கில் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்தத் தகவலை மறுத்துள்ளார் நயனதாரா.

ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஒரு பெயரிடப்படாத தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் நயனதாரா. இதன் படப்பிடிப்பை கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் செட் போட்டு எடுத்து வருகிறார்கள்.

நயனதாரா பங்கேற்ற ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று மயங்கி விழுந்துவிட்டாரம். இதனால் அதிர்ந்துபோன படப்பிடிப்புக் குழுவினர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்பட்டது.

ஆனால் இந்த செய்தி நேற்று தெலுங்கு பத்திரிகைகளில் கொஞ்சம் 'விவகாரமான' அர்த்தத்துடன் வெளியாகி விட்டது. காரணம் அவர் மயங்கி விழுவது இது முதல் முறையல்ல. குசேலன் படத்தின்போதும் இப்படி நடந்தது.

செய்தி அறிந்ததும் உடனே அலறியடித்துக் கொண்டு தனக்கு வேண்டப்பட்ட சில பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களுக்கு தானே போன் செய்து இதுகுறித்து விளக்கத்தை அளித்துள்ளார் நயனதாரா.

"யாரோ சிலர் வேண்டுமென்றே இப்படியெல்லாம் தவறான தகவல் பரப்புகிறார்கள். இப்படி பொய்யான செய்தியைக் கிளப்பி விடுபவர்கள் யார் என்றும் தெரியவில்லை.

கடந்த சில நாட்களாக 'பாடிகாட்' மலையாள படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு ஞாயிற்றுகிழமைதான் ஐதராபாத் வந்தேன். ஜூனியர் என்.டி.ஆருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். அன்று நான் மயங்கி விழவில்லை. லேசான தலைவலி என்பதால் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அதைக் கூட நான் யாரிடமும் சொல்வில்லை, என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் நயனதாரா வசமிருந்த ஒரே தமிழ்ப் பட வாய்ப்பும் பறிபோனதாக தகவல். இதற்கும் கூட ஒருவேளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் விளக்கமளிப்பாரோ என்னமோ!

கோடை விடுமுறையில் ர‌ஜினி படம்

கோடை விடுமுறையில் ர‌ஜினியின் சுல்தான் தி வா‌ரியர் அனிமேஷன் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ர‌ஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ர‌ஜினி தனது ஆக்கர் ஸ்டுடியோ சார்பில் தயா‌ரித்து இயக்கிவரும் படம், சுல்தான் தி வா‌ரியர். ஏறக்குறைய அறுபது கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தில் ஆட்லேப்ஸ் இணை தயா‌ரிப்பாளராக உள்ளது.

இந்திய நடிகர் ஒருவரை வைத்து தயாராகும் முதல் அனிமேஷன் படம் எனற பெருமையும் இந்தப் படத்துக்கு உண்டு. விஜயலட்சுமி ர‌ஜினியின் ஜோடியாக நடித்துள்ளார்.

ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் வேலைகள் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டன. படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

படத்தில் பாடல்களும் உண்டு. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். கலை இயக்கம் தோட்டாதரணி.

பேராண்மை - களைகட்டிய காடு

பேராண்மையில் ஜெயம் ரவிக்கு டூயட் இல்லை என்ற குறை தீர்ந்தது. கன்ஷிகா, வர்ஷா, வசுந்தரா ஆகியோருடன் ஒரு பாடலில் நடித்திருக்கிறார். அடித்திருக்கிறார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

ஜனநாதனின் இயற்கைப் படத்துக்குப் பிறகு வித்யாசாகரும், வைரமுத்துவும் பேராண்மையில் இணைந்துள்ளனர். காதல் வந்தால் சொல்லி அனுப்பு ஹிட் பாடலை தந்த ஜோடி அல்லவா...? பேராண்மையில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். குறிப்பாக, காடு களைகட்ட என்ற பாடல்.

தலக்கோணத்தில் இந்தப் பாடலின் படப்பிடிப்பு நடந்தது. வசுந்தரா, கன்ஷிகா, வர்ஷா மூவரும் பாடலுக்கு ஆட, பின்னணியில் வில்லன்களுடன் ஜெயம் ரவி ஆக்ரோஷமாக சண்டையிடுவதுபோல் வித்தியாசமாக பாடலை படமாக்கினார் ஜனநாதன்.

பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இந்தப் பாடல் வித்தியாசமான அனுபவமாக இருக்குமாம். வெற்றிக் கூட்டணி அல்லவா, வித்தியாசமாக‌த்தான் இருக்கும்.

ஏப்ரலில் பட்டாளம்

பிப்ரவ‌ரி மாதத்தைவிட்டால் பள்ளிகளுக்கு ப‌ரிட்சை தொடங்கிவிடும். யாரும் திரையரங்கு பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள். எனவே பிப்ரவ‌ரியில் படத்தை வெளியிட முட்டி மோதுகிறார்கள் தயா‌ரிப்பாளர்கள்.

சுமார் இருபது படங்கள் ‌ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. சென்ற மாதம் எட்டுப் படங்கள் மட்டுமே திரைக்கு வந்தன. அதனால் இந்த மாதமும் பத்துப் படங்களுக்குள்தான் வெள்ளித்திரையை த‌ரிசிக்கும் என்பது திரையரங்கு உ‌ரிமையாளர்களின் கருத்து.

இந்த பத்திலிருந்து தானாகவே விலகியிருக்கிறது பட்டாளம். லிங்குசாமியன் திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரித்திருக்கும் இந்தப் படம் மாணவர்களைப் பற்றியது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட்டால் அனைவரையும் கவரலாம் என்பதால் படம் முடிந்த பிறகும் பட வெளியீட்டை ஏப்ரலுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

6ம் தேதி நான் கடவுள் வெளியாவதால் பலரும் தங்களது படத்தை வெளியிட தயக்கம் காட்டி வருகிறன்றனர். ஆக, இம்மாதமும் படங்களின் எண்ணிக்கை எட்டை தாண்டாது என்பது கோடம்பாக்க கணிப்பு.

பொது இடத்தில் தம்பதிகள் முத்தமிடலாம் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொது இடத்தில் தம்பதிகள் முத்தமிடுவது ஆபாசமில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு தம்பதியினர் முத்தமிட்டபோது அவர்களை கையும் களவுமாகப் பிடித்த காவலர் அவர்கள் மீது ஆபாச தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்.

இதை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தம்பதிகள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி எஸ். முரளிதர் விசாரித்து முதல் தகவல் அறிக்கைக்கு தடை விதித்தார்.

நீதிபதி அளித்த தீர்ப்பில், ஆபாசத் தடை சட்டம் 294வது பிரிவை இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 34வது பிரிவுடன் சேர்த்து படித்தால், இந்த தம்பதிகள் மீதான முதல் தகவல் அறிக்கை ஏற்கக் கூடியதாக இல்லை. இந்த தம்பதிகள் முத்தம் கொடுத்துக் கொண்டது எங்களுக்கு இடையூறாக இருந்தது என்று அங்கிருந்தவர்கள் யாரும் புகார் அளித்ததற்கான ஆதாரம் முதல் தகவல் அறிக்கையுடன் இணைக்கப்படவில்லை.

புதிதாக திருமணமான தம்பதிகள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பொது இடத்தில் முத்தமிட்டதை ஏன் ஆபாசமாக எடுத்துக் கொள்ள வேண்டும்? இதற்காக குற்றவியல் வழக்கு தொடருவது வியப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.

காதல‌ர் ‌தின‌ம் கொ‌ண்டாட‌ப்பட உ‌ள்ள ‌பி‌ப்ரவ‌ரி மாத‌த்‌தி‌ல் இதுபோ‌ன்றதொரு ‌தீ‌ர்‌ப்பை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்து‌ள்ளது காதல‌ர்களு‌க்கு ம‌ன்‌னி‌க்கவு‌ம் காத‌லி‌க்கு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு ‌சிற‌ப்புதானே..

எ‌ன்ன காதல‌ர்க‌ள் பெரு மூ‌ச்சு ‌விடு‌ம் ச‌ப்த‌ம் கே‌ட்‌கிறது... கா‌த்‌திரு‌ங்க‌ள் த‌ம்ப‌திகளாகு‌ங்க‌ள்.

வடிவேலுவின் மேனேஜர் தற்கொலை -காரணத்தை அறிய போலீசார் தீவிரம்


வடிவேலுவின் மேனேஜராக இருந்தவர் வேலுச்சாமி. சென்னை வடபழனியில் தனியாக வசித்து வந்த இவர், இன்று காலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

குடும்பத்தினர் மதுரையில் வசிக்க இவர் மட்டும் தனியாகதான் இருந்தாராம் சென்னையில். வடிவேலுவின் சிறுவயது நண்பரான இவர், பல ஆண்டுகளாக அவரது அலுவலக நிர்வாகத்தை கவனித்து வந்தார். மேனேஜர் முருகேசன் இறந்தபின், அவரது இடத்திற்கு பிரமோஷன் ஆனார் வேலுச்சாமி. இவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதிர்ச்சியடைந்த வடிவேலு தற்போது பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்பு அவரது உடலை பெற்றுக் கொள்வதற்காக மருத்துவ மனையில் காத்திருக்கிறார்.
உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

வேறொருவரிடம் அசோகவனம் கேட்டு வாங்கும் முயற்சியில் மணி!


சார்... பிரஸ்மீட் வச்சிருக்கீங்க? படத்தோட கதை என்னன்னு ரெண்டு வரியிலே சொல்லுங்களேன்?

அது வந்து.... கதையை கேட்கிறீங்களே, அதை சொல்லிட்டா சுவாரஸ்யம் போயிடும்!

சரி வேண்டாம், ஹீரோ என்ன கேரக்டர் பண்றாரு? அதையாவது சொல்லுங்களேன்..

என்னங்க சார் நீங்க? அதை சொல்லிட்டா 'பெப்' இருக்காதே? அவரு கேரக்டரை சுற்றிதான் கதையே இருக்கு? எப்டி சொல்றது?

சரி அதுவும் வேணாம், ஹீரோ, ஹீரோயினுக்குள்ளே எப்படி லவ் வருது? அதையாவது சொல்லுங்க. எதையாவது எழுதனும் இல்லையா?

அதுவா...வந்து... அது வேணாம். வேற ஏதாவது கேளுங்களேன்!

படத்தின் டைட்டிலையாவது சொல்லுங்க...

தலைப்பை சொல்லிட்டா நீங்க கதையா ஈசியா கண்டுபிடிச்சிடுவீங்களே?

ஏதோ வேடிக்கைக்காக சொல்லவில்லை. பெரும்பாலான கேள்விகளுக்கு டைரக்டர்கள் இப்படிதான் பதில் சொல்கிறார்கள். இவ்வளவு பில்டப் கொடுக்கிறார்களே, படம் ரிலீஸ் ஆனால் மிரட்டிவிடுவார்கள் என்று எதிர்பார்த்து போனால், சுத்தம்!

இந்த கொடுமை நாளுக்கு நாள் ஓவராகி வருவதுதான் சொல்ல முடியாத சோகம். ஒரு படத்தின் டைட்டிலை தெரிந்து கொள்வதற்கே துப்பறியும் சாம்புவாக மாற வேண்டியிருக்கிறது. மணிரத்னம் இயக்கி வரும் படத்தின் டைட்டில் என்னவென்பதை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை அவர். ஆனால், எல்லாரும் சொல்லி வருவதால் இப்போதைக்கு அசோகவனம்!

பொதுவாக ஒரு படத்தை துவங்கும் முன்பு, தயாரிப்பாளர் சங்கத்திலோ கில்டு என்ற அமைப்பிலோ படத்தின் பெயரை பதிவு செய்துவிட்டுதான் படப்பிடிப்புக்கே போவார்கள். ஆனால், அதிலும் புரட்சி படைத்திருக்கிறார் மணிரத்னம். டைட்டில் பதிவு பண்ணாமலே படப்பிடிப்பு நடந்து வருகிறது. டைட்டிலை பதிவு செய்தால் பத்திரிகைகளில் எழுதி விடுவார்களாம். (நல்லாயிருக்கு வேடிக்கை)

'அசோகவனம்- ஒரு கிலோ மீட்டர்' என்ற டைட்டிலை டைரக்டரும், தனுஷின் அப்பாவுமான கஸ்தூரிராஜா பதிவு செய்து வைத்திருக்கிறாராம். இதை கேட்டு வாங்கும் முயற்சியில் இருக்கிறார் மணி என்கிறது லேட்டஸ்ட் தகவல்.

Tuesday, February 3, 2009

ரஜினி-மோகன்பாபு கருத்து வேறுபாடு? ரஜினி-மோகன்பாபு கருத்து வேறுபாடு? ரஜினி-மோகன்பாபு கருத்து வேறுபாடு? ரஜினி-மோகன்பாபு கருத்து வேறுபாடு?


நீண்ட காலமாக நட்போடு இருந்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்பாபுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம். இருவரும் பிரிந்து விட்டதாக சூடான செய்தி பரவியுள்ளது.

திரையுலகில் நீண்ட கால நட்பு என்பது ரொம்பவும் அரிதான விஷயம். அந்த வகையில் ரஜினி, மோகன்பாபு நட்பை தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகம் படு அதிசயமாக பார்த்து வந்தது. காரணம், இருவருக்கும் இடையே நிலவிய நெருக்கமான தோழமைதான்.

ஆனால் சமீப காலமாக ரஜினிக்கும், மோகன்பாபுவுக்கும் இடையே பல விஷயங்களில் அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டு விட்டதாம். இது சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த குசேலடு பட பூஜையின் போது வெளிப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி, மோகன்பாபு குறித்து தெரிவித்த கருத்துக்கள், இருவருக்கும் இடையே ஏற்பட்ட விரிசலை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

இந்த நிலையில், கடந்த 18ம் தேதி சென்னையில் நடந்த பூரி ஜெகன்னாத்தின் புஜ்ஜிகாடு பட ஆடியோ வெளியீட்டின்போது இந்த விரிசல் மேலும் விரிவடைந்திருந்தது தெரிய வந்தது. இப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் மோகன்பாபு. ஆனால் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அவர் வரவில்லை. அந்த சமயத்தில் அவர் ஹைதராபாத்தில்தான் இருந்தார்.

அவர் வராதது குறித்து இயக்குநர் பூரி ஜெகன்னாத் கூறுகையில், மோகன்பாபுவால் சில காரணங்களினால் இந்த விழாவுக்கு வர முடியவில்லை. ரஜினியும், மோகன்பாபுவும் நல்ல நண்பர்கள். இருவரையும் சேர்த்து மேடையில் பார்த்திருந்தால் சந்தோஷமாகத்தான் இருந்திருக்கும்.

உண்மையில் ரஜினியை இந்த விழாவுக்கு கூப்பிட வேண்டும் என்று கூறியதே மோகன்பாபுதான். எனவே இருவருக்கும் இடையே பிளவு என்பது வெறும் வதந்திதான் என்றார்.

வதந்தியோ, கிசுகிசுவோ, நட்பு பிரிவது என்பது நிச்சயம் சந்தோஷமான விஷயமில்லை. எனவே ரஜினி - மோகன்பாபு கருத்து வேறுபாடு என்ற செய்தி கிசுகிசுவாகவே முடியட்டும் என்பதே இருவருக்கும் நெருங்கியவர்களின் ஆசை.

மறுபடியும் லஷ்மி ராய்


பாலிவுட் பக்கம் போகப் போவதாக கூறி வந்த லஷ்மி ராய் அதை கைவிட்டு விட்டு மறுபடியும் தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளாராம்.

பெல்காம் அழகியான லஷ்மி ராய் சமீபத்தில்தான் பாலிவுட் பக்கம் தனது கண்களைப் பாய விட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். அதற்கேற்ப தமிழிலும் அவரை அதிகம் காண முடியவில்லை.

ஆனால் பாலிவுட் பக்கம் அவர் போகவே இல்லை. தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மலையாளத்தில் ஹீரோயின்களுக்குப் பெரும் பஞ்சம் நிலவுகிறது. பல நடிகைகள் திருமணமாகிப் போய் விட்டனர். சிலர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். நயனதாரா, ஆசின் ஆகியோர் அந்தப் பக்கம் கூட திரும்பிப் பார்ப்பதில்லை.

இதை பயன்படுத்திக் கொண்டு மலையாளத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம் லஷ்மி ராய்.

இந்த நிலையில் நான் அவனில்லை படத்தின் 2ம் பாகத்தில் லஷ்மி ராய், ஜீவனுடன் இணைந்து நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே அவர் முத்திரை, வாமணன் ஆகிய படங்களில் நடித்து வந்தார். அவை முடியப் போகிறதாம்.

இந்தப் படங்களை முடித்து விட்டு தமிழிலும், மலையாளத்திலும் தீவிர கவனம் செலுத்தப் போகிறாராம் லஷ்மி ராய்.

சந்தோஷம்.

நம்பியார்-நாகேஷுக்கு மலரஞ்சலி!


தமிழ் திரையுலகின் மறைந்த ஜாம்பவான் நடிகர்கள் நம்பியார் மற்றும் நாகேஷுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. சங்க தலைவர் ராம நாராயணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மறைந்த நடிகர்கள் நம்பியார், நாகேஷ் ஆகியோருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் அடுத்த வாரம் மலரஞ்சலி செலுத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் வரும் 22-ம் தேதி நடக்கும் பொதுக் குழுவில் திரையுலக வளர்ச்சிக்காக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன், நடிகர் நாகேஷ், பட அதிபர் ஆர்.மகாலட்சுமி, இலங்கை பிரச்னைக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமார் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடிக்க வருகிறார் கோபிகா


ஆடிய காலும், பாடிய வாயும் பழமொழியை‌த்தான் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.
திருமணம் முடிந்து கணவருடன் அயர்லாந்தில் செட்டிலான கோபிகா மீண்டும் நடிக்க வருகிறார். இந்த அ‌ரிய தகவலை அவர் வெளியிட்ட இடம் ஏசியாநெட் விருது வழங்கும் விழா. ஜெயராமுடன் கோபிகா நடித்த, 'வெறுதே ஒரு பா‌ரியா' படம் 125 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்ததற்காக 2008-ன் சிறந்த நடிகையாக கோபிகா தேர்வு செய்யப்பட்டிருந்தார். விருது வாங்குவதற்காக திருவனந்தபுரம் வந்தவர், நல்ல கதையம்சம் உள்ள படம் அமைந்தால் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக தெ‌ரிவித்தார்.

திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று கோபிகா சொல்லி முழுதாக ஒருவருடம் ஆகவில்லை. அதற்குள் இப்படியொரு பல்டி. சந்தேகமில்லாமல் கோபிகா தேர்ந்த நடிகைதான்.

அரசியலில் விஜய்


அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு என தொடர்ந்து மூன்று சுமார் படங்கள். அடுத்தப் படமாவது ஹிட்டாகுமா என்ற நிச்சயமில்லை.
தன்னை காப்பாற்றவே வழியில்லாதபோது, அரசியலுக்கு வந்து தாய் நாட்டை காப்பாற்றுவார் விஜய் என ஊர் ஊராக சொல்லி வருகிறார் விஜயின் தந்தை, எஸ்.ஏ. சந்திரசேகரன். விஜயின் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை இவர்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். விஜய் படம் வெளியாகும் அன்று திரையரங்குகளில் வைக்கப்படும் பேன‌ரில் தொடங்கி, படப்பெட்டியை சாரட் வண்டியில் ஊர்வலமாக எடுத்துவரும் சடங்கு வரை அனைத்தின் பின்புலமும் இவர்தான்.

தனக்கு அரசியல் தெ‌ரியாது, அரசியலுக்கு வரமாட்டேன் என்று தனயன் ஒருபுறம் சொல்லிக் கொண்டிருக்க, விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார், சுயநலமில்லாத அவரைப் போன்ற இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என உசுப்பேற்றி வருகிறார், தந்தை.

தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.ஏ.சி. தனது இந்த கருத்தை மீண்டும் தெ‌ளிவாக எடுத்துரைத்தார். அதாவது, விஜய் அரசியல் பற்றி படித்து, அரசியலில் நுழைந்து, ஊழல் அரசியல்வாதிகளுக்கு மாற்றாக நல்லாட்சி தருவார். உபயம், அவரது ரசிகர்கள்.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் கீறி வைகுண்டம் போவார்களாம். தமிழா, உன் நிலைமை ரொம்ப கேவலமாக இருக்கேப்பா.

மீண்டும் செல்போனில் கரீனாவின் 'கசமுசா' வீடியோ இந்தி நடிகை கரீனா கபூர் சூட்டிங்

இந்தி நடிகை கரீனா கபூர் சூட்டிங் ஸ்பாட்டில் ஓய்வறையில் உடை மாற்றுவதை ரகசிய கேமரா மூலம் படம் பிடித்துசெல்போன்களில் வீடியோ பைலாக வெளியிட்டுள்ளது ஒரு கும்பல்.

இந்த எம்எம்எஸ் வீடியோ பைல் மிக வேகமாக செல்போன்களில் பரவி வருகிறது. இதனால் பாலிவுட்டில் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.

முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கரீனா கபூர் கடந்த சில மாதங்களுக்கு முன் சக நடிகர் ஷாகிதுடன் மெளத் கிஸ் அடித்தகாட்சியை யாரோ படம் பிடித்து டிவிக்கும், மும்பையில் இருந்து வெளியாகும் மிட்-டே இதழுக்கும் வழங்கினர். இதையடுத்துஅந்தப் பத்திரிக்கை மீது வழக்கு போட்டார் கரீனா.

இந் நிலையில் மீண்டும் கரீனாவின் கசமுசா படங்கள் செல்போனில் வெளி வரத் தொடங்கியுள்ளது.

Kareena Kapoor

சூட்டிங் ஸ்பாட்டில் உள்ள ஓய்வு அறையில் நுழையும் கரீனா தனது உடைகளைக் களைகிறார். அப்படியே திரும்பிப் பார்க்கும்அவரது முக பாவம் வேகமாக மாறுகிறது. யாரோ தன்னை சாவித் துவாரம் வழியாக படம் பிடிப்பை உணரும் கரீனா உடைகளைஅள்ளி மேலே போடுகிறார்.

இவ்வாறாக 30 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ பைல் இப்போது செல்போனில் படு வேகமாக பரவி வருகிறது.

இதனால் மும்பை பட உலகம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

எந்த சூட்டிங் ஸ்பாட்டில் இந்தச் சம்பவம் நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சூட்டிங் ஸ்பாட்டில் உடைமாற்றும் போது தங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று நடிகைகள் கேள்வி எழுப்பியுள்ளனர்

பாக். கேப்டன் ஷோயிப்பை லவ்வும் ஷாயாலி!

நியூட்டனின் மூன்றாம் விதி படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஜோடியாக நடிக்கும் ஷாயாலி பகத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷோயப் மாலிக்கும் தீவிரமாகக் காதலிக்கிறார்களாம்.

தமிழில் நடிக்க வரும் முன்பே, இந்தியில் தி ட்ரெயின் படத்தில் நடித்தவர் ஷாயாலி பகத். பாகிஸ்தானிலும் இவர் புகழ் பரவியிருக்கிறது. காரணம் இந்திப் படங்கள் அங்கே அதிக அளவு வெளியாவதுதான்.

சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாட இந்தியா வந்திருந்தார் ஷோயிப் மாலிக். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கமே, இப்போது தீவிர காதலாக மாறியுள்ளது.

இந்தக் காதல் படுத்தும் பாட்டால், அடிக்கடி பாகிஸ்தானிலிருந்து கிளம்பி மும்பைக்கு வந்துவிடுகிறாராம் ஷோயிப்.

இந்தப் பக்கம் ஷாயாலியும் மணிக்கணக்கில் ஷோயிப்புடன் போனில் பேசிக்கொண்டே இருக்கிறாராம் ஷாயாலி. நியூட்டனின் மூன்றாம் விதி ஷூட்டிங்கிலும் கூட இதே நிலைதானாம்.

இதுகுறித்து பாகிஸ்தான் பத்திரிகைகளும் ஷோயிப்-ஷாயாலி ரொமான்ஸ் என்ற தலைப்பில் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

இது பற்றி ஷோயிப் கூறும்போது, ரிபோக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளேன். அதன் விளம்பர படங்களில் நடிக்க அடிக்கடி மும்பை வருகிறேன். இதற்கும் ஷாயாலியுடனான நட்புக்கும் சம்பந்தம் இல்லை. ஷாயாலி எனக்கு மிகவும் நெருக்கமானவர், அன்புத் தோழி என்று கூறியுள்ளார்.

காதலில் விழுந்த பிரபலங்கள் சொல்லும் முதல் பொய்!

ஷாஹித்-வித்யா பாலன் 'ஸ்டிராங்'! கிசு கிசு கார்னர்


ஷாஹித் கபூருக்கும், வித்யா பாலனுக்கும் இடையிலான நட்பு, இப்போது மேலும் இறுகி, உறுதியாகி உள்ளதாம்.
கரீனா கபூருடன் முன்பு படு நெருக்கமாக இருந்தார் ஷாஹித். ஒரு அருமையான நாளில் அந்த உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கரீனா. அடுத்த டேக்கிலேயே சைப் அலிகானுடன் டூயட் பாடப் போய் விட்டார்.இதனால் தனித்து விடப்பட்ட ஷாஹித் கபூர் சற்றும் கவலைப்படாமல் தனது பாதையில் நடை போட ஆரம்பித்தார்.

கரீனாவைப் பிரிந்த பின்னர், அவரை அம்ரிதா ராவுடன் இணைத்துப் பேசினர். பின்னர் வித்யா பாலனுடன் இணைத்தனர். அதுவும் முறிந்து விட்டதாக பின்னர் செய்தி வந்தது.

பிறகு சானியா மிர்ஸா, பிரியங்கா சோப்ரா ஆகியோருடனும் இணைத்துப் பேசப்பட்டார் ஷாஹித்.
ஆனால் வித்யாபாலனுக்கும், ஷாஹித் கபூருக்கும் இடையே இன்னும் நெருக்கமான நட்பு இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது, வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

சமீபத்தில் ஜூஹு பகுதியில் உள்ள ஒரு பார் ரெஸ்டாரன்ட்டுக்கு வித்யாவும், கபூரும் வந்திருந்தனர். தனித் தனியாக வந்தாலும் கூட பாரில் இருவரும் சேர்ந்தே அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்துள்ளனர்.வழக்கமாக அவர்கள் வரும் பார்தான் இது. இருந்தாலும் முன்பு நண்பர்கள் சகிதம் வருவார்களாம். ஆனால் தற்போதுதான் முதல் முறையாக இருவரும் கொடுக்குகள் இல்லாமல் தனித்து வந்ததாம்.

இருவரும் சுவாரஸ்யமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார் ரெஸ்டாரென்ட் ஊழியர்களும் சைடு கண்களால் பார்த்தபடி வேலை செய்தனராம்.

அவர்களுக்கு அருகில் இருந்த டேபிளில் ஒரு முக்கியமான புள்ளியும் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். ஆனால் அவரை கபூர் - வித்யா ஜோடி கவனிக்கவில்லையாம். அந்த புள்ளி வேறு யாருமல்ல - தபு.தபு தப்பாக நினைத்திருக்க மாட்டார்!

'பாஃப்டா' விருதையும் வெல்வாரா ஏ.ஆர்.ரஹ்மான்?


லண்டன்: கோல்டன் குளோப் விருதை வென்ற ஸ்லம்டாக் மில்லினர் தற்போது பாஃப்டா விருதுக்கும் ஏராளமான பிரிவில் பரி்ந்துரைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

நான்கு கோல்டன் குளோப் விருதுகளை அள்ளியது ஸ்லம்டாக். ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த ஒரிஜினல் இசைக்கான விருதைப் பெற்று இந்தியர்களைப் பெருமைப்படுத்தினார்.

இந்த நிலையில், பிரிட்டிஷ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலைக் கழகம் (British Academy of Film and TV Arts) வழங்கும் விருதுகளுக்கும் ஸ்லம்டாக் பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 8ம் தேதி லண்டனில் நடைபெறும் கண் கவர் நிகழ்ச்சியில் பாஃப்டா விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன.


சிறந்த திரைப்படம், அடாப்டட் திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, தயாரிப்பு வடிவமைப்பு, ஒலிப்பதிவு மற்றும் சிறந்த பிரிட்டிஷ் படம் ஆகிய பிரிவுகளில் ஸ்லம்டாக் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோல்டன் குளோப் விருதுகளில் நிகழ்த்திய சாதனையை பாஃப்டா விருதுகளிலும் ஸ்லம்டாக் காட்டுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

கிளாமரை கேட்டு வாங்கும் அஞ்சலி


கற்றது தமிழ் பட நாயகி அஞ்சலி தான் புக் ஆகும் படங்களில் கூடுதல் கிளாமராக காட்சிகளை வையுங்கள் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறாராம் இயக்குநர்களை.

கற்றது தமிழ் மூலம் சினிமாவுக்கு வந்தவர் அஞ்சலி. முதல் படத்தில் நடிப்பில் நச்சென்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அஞ்சலி.

ஆனால் அதன் பின்னர் அவர் சரிவர காணப்படவில்லை. இந்த நிலையில் தற்போது அங்காடித் தெரு படத்தில் நடித்துள்ளார். இப்படம் தன்னைத் தூக்கி விடும் என்ற மகா நம்பிக்கையில் உள்ளார். படம் ரிலீஸான பின்னர் சம்பளத்தையும் ஏற்றத் திட்டமிட்டுள்ளாராம்.

இந்த நிலையில் தன்னைத் தேடி வரும் படங்களில் புக் ஆகிக் கொண்டிருக்கும் அஞ்சலி, தனக்கு படத்தில் கூடுதலாக கிளாமர் காட்சிகளை வையுங்கள் என்று இயக்குநர்களிடம் கோரிக்கை வைக்கிறாராம்.

அஞ்சலியின் தாயாரும் இதை ஊக்குவிக்கிறாராம். இப்போதுள்ள ஹீரோயின்களுக்கு எனது மகள் எந்த வகையிலும் குறைந்தவள் இல்லை. எனவே தாராளமாக, கிளாமராக யூஸ் பண்ணிக்குங்க என்கிறாராம் தாயார்.

அஞ்சலியும் கவர்ச்சிக குளத்தில் குதித்திருப்பதால் கிளாமரை மட்டுமே நம்பியுள்ள சில கதாநாயகிகள் சற்றே பீதியடைந்துள்ளனராம்.

கெட்டிமேளத்துக்கு ரவி ரெடி!


ஜெயம் ரவி வீட்டில் அவருக்கு பெண் பார்க்கும் வேலையை தீவிரமாக மேற்கொண்டுள்ளனராம்.
நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. இன்றைய கோலிவுட்டின் எலிஜிபிள் பேச்சலர்களில் ஒருவர் ஜெயம் ரவி. அவரது செட் நடிகர்கள் பலருக்கும் கல்யாணமாகி விட்டது. ஆனால் ரவி மட்டும் இன்னும் சிங்கிளாக இருக்கிறார். இதைச் சுட்டிக் காட்டி அவரது வீட்டினர் பெண் பார்க்க ஆரம்பித்துள்ளனராம்.

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கிசுகிசுவில் அடிபடாத நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். இதனால் அவருக்குப் பெண் கொடுக்க ஏகப்பட்ட பேர் அலை மோதுகிறார்களாம். இந்தநிலையில் அவருக்கு பெண் பார்த்து நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.

இதுகுறித்து ரவியிடம் கேட்டால், சிரித்தபடி, வீட்டில் பார்க்கும் பெண்ணைத்தான் மணந்து கொள்வேன். பெண் பார்ப்பது உண்மைதான். அதை மறைக்க விரும்பவில்லை. ஆனால் நிச்சயதார்த்தம் எல்லாம் இன்னும் ஆகவில்லை.

அப்பா, அம்மாவுக்குப் பிடித்த பெண்ணை மணப்பேன். இந்த வருடத்திலேயே கூட கல்யாணம் இருக்கலாம் என்கிறார்.

தற்போது பேராண்மை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. இதில் காட்டிலாக அதிகாரியாக வருகிறாராம். அடுத்து, அமீரின் கண்ணபிரான் படத்தில் நடிக்கவுள்ளார்.

பக்குவம் வந்திருக்கிறது – எஸ்.ஜே. சூர்யா


வாலி படத்தில் தமிழ் ரசிகர்களிடையே நம்பிக்கைகளை விதைத்தவர் எஸ்.ஜே. சூர்யா. குஷி அந்த நம்பிக்கையை வலுப்படுத்தியது.
நியூ புதிய ப‌ரிமாணத்தை தமிழ் சினிமாவுக்கு தருவார் என்று உறுதியாக எண்ண வைத்தது. ஆனால்...? ப்ளேபாய் இமேஜுடன் அவர் நடிப்பில் காட்டிய தீவிரம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம். அந்த ஏமாற்றம் மீண்டும் நம்பிக்கையாக மாறும், அதற்கு தொடக்கப் புள்ளி நியூட்டனின் 3ம் விதி என்கிறார் சூர்யா. அவரது நம்பிக்கைத்தரும் பேட்டியிலிருந்து...

இனி படம் இயக்குவதில்லை என்று குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறீர்களே?

ஒரு திருத்தம். நான் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்குவேன். வேறு நடிகர்களை வைத்து நான் இயக்கும் கடைசிப் படமாக தெலுங்கு புலி இருக்கும்.

ஏனிந்த திடீர் முடிவு?

நான் சினிமாவுக்கு வந்தது நடிகனாவதற்குதான். இயக்குனராக வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. எல்லோரும் விரும்பும் ஹீரோவாக வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். இனி என்னுடைய பயணம் அதை நோக்கியதாக இருக்கும். அதனால் எந்த ஹீரோவையும் வைத்து படம் இயக்க மாட்டேன். என்னை நானே இயக்குவேன் அல்லது வேறு இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பேன்.

புலி எப்போது வெளியாகிறது?

ஏப்ரல் மாதம் திரைக்கு வரும். தெலுங்கில் வெளிவரும் படத்தை அதே பெய‌ரில் தமிழில் இயக்கி நடிக்கிறேன்.

புலி போலீஸ் கதை, அதில் நடிக்க எனக்கு பக்குவம் போதாது என்று சொல்லியிருந்தீர்கள்...?

அது இரண்டு வருடங்கள் முன்பு. இப்போது பக்குவம் வந்திருக்கிறது, நடிக்கிறேன். ஒவ்வொருவரும் தங்கள் கடமையை ச‌ரியாச் செய்தால் உலகில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்பது புலி படத்தின் ஒன்லைன்.

நியூட்டனின் 3ம் விதி பற்றி கூறுங்கள்...

வித்தியாசமான திரைக்கதையில் இந்தப் படம் தயாராகியிருக்கிறது. விறுவிறுப்பான படம். என்னைப் பற்றிய எல்லா விமர்சனங்களையும் துடைத்தெறியும் படமாக இது இருக்கும். ஷாயாலி என்னுடைய ஜோடியாக நடித்திருக்கிறார். படம் நிச்சயம் வெற்றி பெறும்.

உங்களுடைய கனவுப் படம் இசை என்னவாயிற்று?

இசை கண்டிப்பாக வெளிவரும். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகயிருக்கும் பெ‌ரிய படம் இசை. படத்தை இயக்கி நானே நடிக்கிறேன். புலிக்குப் பிறகு நான் நடிக்கும் படம் இசையாகவும் இருக்கலாம்.

கால்ஷீட் சொதப்பிய நடிகை கூடுகிறது பஞ்சாயத்து


'வரும்போது கெட்டி மேளமா இருக்கலாம், ஆனா வளர்ந்த பிறகு வண்டவாளமா இருக்கே' என்று புலம்புகிறார்கள் மேக்னா என்ற புதுமுக நடிகை குறித்து! ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ஸெல்வன். விக்னேஷ் நடித்த சூரி என்ற படத்தை இயக்கியவர். அந்த படம் நன்றாக இருந்தும் ஓடாத காரணத்தால், அடுத்த படத்திற்காக அல்லாடிக் கொண்டிருந்தார் ஸெல்வன். இந்த நிலையில் இவரிடம் கதை கேட்ட கவிதாலயா நிறுவனம், கிருஷ்ணலீலை என்ற படத்தை இயக்க வாய்ப்பளித்தது. இதில் ஜீவாவுடன் ஜோடியாக நடிக்கிறார் மேக்னா.

படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்திருக்கிறது. இந்த நிலையில்தான் திடீரென்று பரத் நடிக்கும் எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடிக்கப் போய் விட்டார் மேக்னா. ஒரு ஷெட்யூலை முடித்துவிட்டு தங்கள் படத்திற்கு வந்துவிடுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், முதலில் எங்க வீட்டு பிள்ளை. அப்புறம்தான் கிருஷ்ணலீலை என்கிறாராம்.

மயிலே மயிலேன்னா இறகு போடுமா? தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். பஞ்சாயத்து கூடப்போகிறது.

'தம்பி'யின் பாராட்டு... தலை வணங்கும் வடிவேலு


'பத்மஸ்ரீ விருது' கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் விவேக். ஆனால், அதைவிடபெரிய சந்தோஷத்திலிருக்கிறார் வடிவேலு. 'யாருக்கும் கிடைக்காத பெரும் பேறுய்யா இது, பெரும் பேறுய்யா...' என்று வாய்விட்டு சந்தோஷப்படுகிறாராம். ஆனாலும் இந்த மகிழ்ச்சி, கொள்ளையடிக்க போன இடத்திலே கோஹினூர் வைரம் கிடைச்ச மாதிரிதான்! ஊருக்கெல்லாம் கேட்கிற மாதிரி ஆர்ப்பாட்டமாகவா கொண்டாட முடியும்?

தமிழகத்தை சேர்ந்த இளம் இயக்குனரும், இனப்போராளியுமான ஒருவர், புலிகளின் தலைவரான 'தம்பியுடன்' பேசிக் கொண்டிருந்தாராம். (ஃபோனிலா? நேரிலா?) அப்போது தமிழ் வளர்ச்சி குறித்து பேச்சு வந்ததாம். எனக்கு தமிழ் அழிந்துவிடும் என்ற கவலையில்லை என்று கூறிய தம்பி, அந்த நம்பிக்கையை தந்திருப்பது இரண்டு பேர் என்றாராம்.

'தமிழை காப்பாற்றுகிற வேலையை மக்கள் டிவி செய்து வருகிறது. அதே மாதிரி தனது சர்க்கரை தமிழால், தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் குடியிருக்கிறார் வடிவேலு. அவரது காமெடிக்கு எப்படி அழிவில்லையோ, அதைபோல அவர் பேசுகிற தமிழுக்கும் அழிவில்லை' என்றாராம். எப்படியோ தட்டுத்தடுமாறி இந்த விஷயம் வைகைப் புயலின் காதுக்கும் போயிருக்கிறது. அந்த நிமிடத்திலிருந்தே புயல், ஆனந்த கூத்தாடுகிறதாம்!

குத்தாட்டம் போட வரும் ரிட்டையர்டு நடிகைகள்!


பிள்ளையில்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம்! இந்த கிராமத்து பழமொழியை சிட்டிக்கு ஷிப்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் இரண்டு நடிகைகள்.

ரகசியா, முமைத்கான், லிண்டா என்று அரைகோவண ஆட்டம் போட்ட நடிகைகள் எல்லாம் மும்பைக்கே போய்விட்டார்கள். அழைத்தாலும் அவர்கள் கேட்கிற சம்பளம் எக்குதப்பாக இருக்கிறது. கொடுக்கிற கூலியை கொடுங்க என்று அட்ஜஸ்ட் பண்ணிய ஒரே காரணத்திற்காகவே சுஜா, லக்ஷா போன்ற நடிகைகளை எல்லா படத்திலும் குத்தாட்டம் போட வைத்தார்கள் தமிழ்சினிமாவில்.

இவர்களுக்கும் இப்போது ஏக கிராக்கி. முழுநேர கதாநாயகி ஆகிவிட்டாராம் சுஜா. தனது அம்மா பபிதாவை நச்சரித்து சொந்தப்படம் எடுக்க வைத்திருக்கிறார் லக்ஷா. அதில் இவர்தான் கதாநாயகி. இதன் காரணமாக ஒற்றை பாடலுக்கு ஆடுவதற்கு கவர்ச்சி நடிகைகள் பஞ்சம் ஏற்பட்டுள்ளது கோலிவுட்டில். வேறு வழியில்லாமல் தமிழ் திரையுலகம் தவிப்பதை பார்த்து கண்ணீர் வடித்த கஸ்தூரியும், புவனேஸ்வரியும் ஒற்றை பாடலுக்கு ஆடுவதற்காக களம் இறங்கியிருக்கிறார்கள்.

எள்ளில்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை! மேக்கப் செலவு அதிகமானாலும் இவர்களின் டேக் ஆஃப்பை ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் (வேறு வழியில்லாத) இயக்குனர்கள்!

Monday, February 2, 2009

நம்ம வீட்டு திருமணம்... நடிகர் பிரபு மகிழ்ச்சி


நடிகர் பிரபுவின் மகளும், நடிகர் திலகத்தின் பேத்தியுமான ஐஸ்வர்யாவின் திருமணம் இம்மாதம் 8 ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து சில சுவையான தகவல்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் பிரபு.

'என்னுடைய தங்கை தேன்மொழியின் மகன் குணால் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றுகிறார். சின்ன வயசிலே இருந்து என் கண்ணெதிரே வளர்ந்த பையன். என் மகள் ஐஸ்வர்யாவை குணாலுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தது நாங்கள் மட்டுமல்ல, எங்க அப்பா அம்மாவின் விருப்பமும் அதுவாகதான் இருந்தது.

அழைப்பிதழில் அப்பாவும், அம்மாவும் இருக்கிற படத்தை பிரிண்ட் பண்ணனும்னு நினைச்சோம். 1956 ல் எடுத்த அந்த படம் எங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. அதைதான் பிரிண்ட் பண்ணியிருக்கோம். அதுமட்டுமல்ல, அவங்க இரண்டு பேரும் இந்த குழந்தைகளை ஆசிர்வாதம் செய்கிற மாதிரி ஒரு கவிதையை அண்ணன் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

அப்பா அம்மாவே எழுதற மாதிரி இருக்கனும்னு நினைச்சு எழுதினேன் என்று Gunal-Aishwaryaசொன்னார். கவிதையை படிச்சா அவங்களே வந்த மாதிரி இருக்கு' என்றார் பிரபு.

முதல்வர் கலைஞர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவிக்க இருக்கிறார்கள்.

லிங்குசாமியின் மறுப்பு

மாதக்கணக்கில் காத்திருந்து பையாவை தொடங்கியிருக்கிறார் லிங்குசாமி. பெங்களூருவில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லிங்குசாமிக்கும் படத்தின் நாயகன் கார்த்திக்கும் கதை விஷயத்தில் லடாய் என்று பரபரப்பு வதந்தி. உண்மை என்ன?

அப்படி எதுவும் இல்லையாம். படப்பிடிப்பு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. யார் இப்படி கிளப்பிவிடுகிறார்கள் தெ‌ரியவில்லையே என நொந்து கொண்டார் லிங்குசாமி.

படத்தில் தமன்னாவின் பர்ஃபாமென்ஸில் திருப்தியில்லாததால் அவரை படத்திலிருந்து தூக்குகிறார்கள் என்று மேலுமொரு வதந்தி. கேட்டா‌ல் நடிப்பில் பொண்ணு பொளந்து கட்டுது என்றார்கள் யூனிட்டில்.

லிங்குசாமியிடம் விளக்கம் கேட்காமலே பு‌ரிந்தது, இது வில்லங்கமானவர்களின் வேலை என்று. பையா ஃபைனலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

குறையுமா திரையரங்கு கட்டணம்?

தமிழ் திரையுலகில் நிலவும் தேக்க நிலைக்கு திரையரங்கு கட்டணம் உயர்ந்ததும் ஒரு காரணம். திரையரங்கு கட்டணத்தை 10, 20, 30 ரூபாயாக குறைப்பது தொடர்பாக விநியோகஸ்தர்கள் மற்றும் தயா‌ரிப்பாளர்கள் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திரையரங்கு உ‌ரிமையாளர்களின் அவசர கூட்டம் நடத்தப்பட்டது. இதில், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்கம் மற்றும் தயா‌ரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து ஆலோசித்து, இந்த மூன்று சங்கங்களும் ஒப்புக் கொள்ளும் கட்டணத்தை வசூலிக்க‌த் தயார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திரையரங்கு கட்டணம் உயர்வுக்கு படத்தயா‌ரிப்பு செலவு உயர்ந்ததே காரணம், தயா‌ரிப்பு செலவை குறைத்து, சதவீத அடிப்படையில் படத்தை திரையிடும்போது கட்டணத்தை குறைப்பதில் சிரமம் இல்லை என தெ‌ரிவித்தார், சங்கத்தின் தலைவர் அண்ணாமலை.

தயா‌ரிப்பு செலவை குறைக்க வேண்டுமானால் நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும். ஆக, நடிகர் சங்கமும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய பிரச்சனை இது.

கெட்டவனில் சினேகா உல்லால்

கெட்டவனை அப்படியேவிட சிம்புவுக்கு மனசில்லை. எடுத்தவரை தயா‌ரிப்பாள‌ரிடமிருந்து வாங்கி மீண்டும் படப்பிடிப்பை தொடர இருக்கிறார்.

இப்போதைய தேவை ஹீரோயின். லேகா வாஷிங்டன்னுக்கு நடிப்பு வரலை என துரத்தியதால் ஹீரோயின் இடம் இப்போதும் வெற்றிடம்.

என்னை தெ‌ரியுமா சினேகா உல்லால் சிம்புவின் சாய்ஸ். அறுபது எழுபது என பஸ் நம்பர் ரேஞ்சுக்கு உல்லால் சம்பளம் கேட்பதால் உல்லால் என்றாலே சொல்லிக் கொள்ளாமல் ஒடுகிறார்கள் தயா‌ரிப்பாளர்கள். சிம்புவுக்கு சம்பளம் பிரச்சனையில்லை. மந்த்ரா பேடியையே நடிக்க வைத்தவராயிற்றே.

கெட்டவனுக்கு முன் கௌதம் இயக்கும் படத்தில் சிம்பு நடித்தால் சினேகா உல்லாலின் அறிமுகம் தள்ளிப் போகலாம்.

ஏஞ்செலீனா ஜூலியுடன் இணைந்து நடிக்க மாஜி கணவர் விருப்பம்


ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் பில்லி பாப் தார்ன்டன், தனது முன்னாள் மனைவியும், சூப்பர் ஸ்டார் பிராட் பிட்டின் இன்னாள் மனைவியுமான ஏஞ்செலீனா ஜூலியுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

தார்ன்டனும், ஜூலியும் 2000மாவது ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் சேர்ந்து மகன் மடாக்ஸை தத்தெடுத்தனர். 2003ம் ஆண்டு திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டனர்.

அதன் பின்னர் ஜூலி, பிராட் பிட் மீது காதல் கொண்டார். இருவரும் தம்பதிகளாயினர். இந்தத் தம்பதிக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர்.

மனைவியை விட்டுப் பிரிந்து விட்டாலும் கூட ஜூலியுடன் தனக்கு நல்ல உறவு உள்ளதாக தார்ன்டன் கூறியுள்ளார். மீண்டும் இணைந்து நடிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தார்ன்டன் கூறுகையில், ஜூலியுன் இணைந்து எதிர்காலத்தில் நடிப்பேன் என நம்புகிறேன். முன்பு போலவே இருவரும் சகஜமாக பேசிக் கொள்கிறோம்.

இருவரும் இணைந்து செயல்படும் நாளை எதிர்நோக்கியுள்ளேன். சரியான நேரத்தில் அது நடைபெறும் என்கிறார் தார்ன்டன்.

தார்ன்டன், ஜூலிக்கு முதல் கணவர் அல்ல. அவரது முதல் கணவரது பெயர் ஜானி லீ மில்லர். அவர் இங்கிலாந்து நடிகர். இருவரும் 1999ம் ஆண்டு மணந்து கொண்டனர். ஆனால் ஒரே ஆண்டில் பிரிந்து விட்டனர். பின்னர் வந்து சேர்ந்தவர்தான் பில்லி பாப் தார்ன்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமப்பா...

முத்த வைத்தியம்

வெண்ணிலவு ஜன்னல் பார்க்க
பின்னிரவில் மெல்லிசை கேட்க
கண்களிரண்டில் காமம் பூக்க
உன்னை நானும் அணைத்தேனே...

கிக்கான இந்தப் பாடல் ஜெய், விஜயலட்சுமி நடித்திருக்கும் அதே நேரம் அதே இடம் படத்தில் இடம்பெறுகிறது. பிரேம்‌ஜி இசையமைத்திருக்கிறார். பாடல் வ‌ரிகள் மட்டுமில்லை பாடலுக்கான காரணமும் செமசூடு என்றார் படத்தின் இயக்குனர் எம். பிரபு. அதை கேட்பதைவிட நமக்கு வேற என்ன வேலை.

விக்கல் வந்தால் அதிர்ச்சியான தகவலை சொன்னால் போதும், விக்கல் நின்றுவிடும். இந்தப் படத்தில் காதலின் வாசலில் நிற்கும் விஜயலட்சுமிக்கு விக்கல் வருகிறது. அருகில் வாசலை திறந்துவைத்த ஜெய்.

பழமைகளை தூக்கியெறிவதுதானே காதல். விக்கல் நிற்க அதிர்ச்சியான தகவலை சொல்வதற்குப் பதில் விஜயலட்சுமியின் உதட்டில் அழுத்தமாக முத்தம் ப‌தித்து விடுகிறார், ஜெய். இந்த ஆயிரம் வாட்ஸ் அதிர்ச்சியில் விக்கல் நின்று விடுகிறது. விக்கித்து நிற்கிறார் விஜயலட்சுமி. அவர் என்ன சொல்வாரோ என்ற பயத்தில் ஜெய்.

இந்த விரும்பத்தகாத மௌனத்தில் வெட்கம்கெட்ட விக்கல் மீண்டும் வருகிறது. விஜயலட்சுமி வெட்கத்தில் பார்க்க, ஜெய் சொர்க்கத்தில் மிதக்க... வருகிறது வெண்ணிலவு டூயட்.

பாட்டைவிட சிச்சுவேஷன் பிரமாதம்.

ஒரு கதை இரு படங்கள்

மணிரத்னம் இந்தி, தமிழ் இரு மொழிகளில் இயக்கிவரும் ராவணன் - தமிழ்ப் பெயர் இன்னும் முடிவாகவில்லை - ராமாயணத்தை தழுவி எடுக்கப்படுவது தெ‌‌ரிந்ததே.

இதே ராமாணயத்தை தழுவி எடுக்கப்பட்டு வரும் இன்னொரு படம், ஆரண்ய காண்டம். எஸ்.பி.பி. சரணின் கேப்பிடல் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது. ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா நடிக்கின்றனர். படத்தை இயக்குகிறவர் அறிமுக இயக்குனர், குமாரராஜன்.

அபிஷேக் பச்சன், விக்ரம் ராவணனில் நடிக்கும் அதே கதாபாத்‌திரத்தை ஜாக்கி ஷெராஃபும், ரவி கிருஷ்ணாவும் ஆரண்ய காண்டத்தில் பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஆயிரக்கணக்கான ராமாயணக் கதைகள் உலா வருவதால், இந்த இரு படங்களின் ராமாயண பாதிப்பும் வேறு வேறாக இருக்கும் என்று நம்பலாம்.

"தாரே ஜமீன் பர்"... ஆஸ்கர் கனவைக் கலைத்தது பாடல்களே!


அமீர்கானின் 'தாரே ஜமீன் பர்' படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாமல் போனதற்கு, அப்படத்தில் அளவுக்கு அதிகமான பாடல்கள் இருந்ததே காரணம்.
டிஸ்லெக்சியா குறைபாடுள்ள 8 வயது சிறுவனைப் பற்றிய இந்த அற்புதப் படைப்பு, வெளிநாட்டு மொழி படப் பிரிவின் ஆஸ்கர் நாமினேஷனுக்குத் தேர்வு செய்யப்படவில்லை. இதனால், 81-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தாரே ஜமீன் பர் நிச்சயம் விருதைத் தட்டி வரும் என்ற கனவு கலைந்து போனது.
இது, அமீர்கானையும் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாக்கியது!

இந்த நிலையில், "தாரே ஜமீன் பர் படம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறாமல் போனதற்கு, அந்தப் படம் மிக நீளமாக இருந்தது. அத்துடன், மிக அதிக எண்ணிக்கையில் பாடல்கள் இருந்தன. இதுபற்றி அமீரிடமும் சொல்லியிருந்தேன்," என்று ஆஸ்கர் நடுவர்களில் ஒருவரும், இயக்குனருமான கிருஷ்ணா ஷா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கான ஆஸ்கர் வாய்ப்பு குறித்து கேட்டதற்கு, "அதுபற்றி தகவல்களைத் தெரிவிக்க எனக்கு அனுமதியில்லை," என்றார் ஷா.
மேலும், "ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற படங்களை வெளிநாட்டு படைப்பாளிகளால் மட்டுமே எடுக்க முடியும். ஏனெனில், நாமெல்லாம் ரியாலிட்டியில் இருந்து விலகியிருக்கவே விரும்புகிறோம்," என்றார் கிருஷ்ணா ஷா.

வெண்ணிலா கபடி குழு


ஒரு கிராமத்தில் இருக்கும் ஜெயிக்கவே தெரியாத 7 பேர் கொண்ட கபடி குழு, தட்டு தடுமாறி மதுரையில் நடக்கும் ஸ்டேட் லெவல் கபடி போட்டியில் கலந்து வெற்றி பெறுகிறார்களா என்பதை காதல், மோதல் கோர்த்து தொடுக்கப்பட்டுள்ள இளமைத் திருவிழா.
புதுமுகம் விஷ்ணு படத்தின் கதாநாயகன். பழனி அருகில் இருக்கும் ஒரு கிராமத்தின் படிக்காமல் ஆடு மேய்க்கும் ஒரு இளைஞனை கண்முன் நிறுத்துகிறார். சைக்கிளில் பஸ்ஸை துரத்தி ஓவர்டேக் பண்ணும் முதல் காட்சியிலேயே மனதில் ஒட்டிக் கொள்கிறார்.

சரண்யா மோகன், படத்தில் இவருக்கு இரண்டு நிமிடம் பேசுவதற்கு டையலாக் இருந்தாலே பெரிய விஷயம். ஆனால் விஷ்ணுவை பார்த்து வெட்கம் கலந்து பரவசப்படும் இடங்களில், கண்கள் ஆயிரம் கவிதைகள் பேசுகிறது. கபடி கோச் ஆக வருகிறார் 'பொல்லாதவன்' கிஷோர். இவர் கொஞ்சம் ட்ரை பண்ணினால் அடுத்த பிரகாஷ்ராஜாக வரலாம். 'ஏய், ஏய்' என்று அடித் தொண்டயில் இருந்து கத்தி வில்லத்தனம் பண்ணாமல் இந்த மாதிரி நடித்துவிட்டு போகலாம்.

இவர்கள் தவிர படத்தில் அனைவரும் புதுமுகங்கள். ஒவ்வொருவரை பற்றியும் பிண்ணனியில் பின்னப்பட்ட குடும்ப உறவுகள் காட்சிகள் அருமை. புது பொண்டாட்டியை வீட்டில் விட்டுவிட்டு கபடி மேட்சுக்கு செல்லும் அவர் தான் இந்த க்ரூப்பின் காமெடி பட்டாசு. 50 புரோட்டாவை அசால்ட்டாக உள்ளே தள்ளி விட்டு அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகும் இடங்களில் தியேட்டரே அதிர்கிறது. இருந்தாலும் மனிதர் கிளைமேக்சில் அரற்றும் இடங்களில் நெஞ்சில் நிற்கிறார். அப்புறம் டீக்கடை அப்புக்குட்டியாக வரும் குள்ள மனிதர் நடிப்பில் அப்ளாஸ் வாங்குகிறார். டீ ஷர்ட்டை பார்த்து ஏங்குவது, மாமியார் தலையில் உறியடிக்கும் குச்சியால் போடுவது என கலக்குகிறார்.

சரண்யா கொலுசின் சத்தத்தை வைத்தே ஹீரோ உறியடிக்கும் காட்சிகள், அறிமுக டைரக்டர் சுசீந்தரனின் திறமைக்கு விசிட்டிங் கார்டு. இரண்டாவது பாதியில் மேட்ச்சில் வீரர்களுக்கு உதவி பண்ணும் உள்ளூர் பெரியவர், கிராமத்து சந்தில் கண்ணாமூச்சி ஆடும் ஜோடிகளுக்கு உதவி பண்ணும் குச்சி தாத்தா, சதா புலம்பும் பெண், தாவணியை மிகச்சரியாக கட்டும்(இடுப்பை கரெக்ட்டாக மறைத்து) கிராமத்து இளம்பெண்கள் என கிராமத்து அழகான ஆட்களை படம் நெடுகிலும் உலவ விட்டுள்ளனர்.

படத்தின் பாடல்கள் பெரும்பலம். 'கபடி கபடி' என ஷங்கர் மகாதேவன் பாடும் பாடல், கபடி குழு ஆக்ரோஷமாக ஆடும்போதெல்லாம் BGM ஆக ஒலிக்கிறது. கார்த்திக், சின்மயி குரலில் வரும் 'லேசா பறக்குது' பாடல் அருமையான காதல் டூயட். கிராமத்து திருவிழாவில் அரைகுறை ஆடையில் குத்துப்பாட்டு இல்லாமலா? இங்கேயும் உண்டு, 'வந்தனம், வந்தனம்' பாடல்.

செமிஃபைனலில் தோற்றுவிட்டு ஃபைனலில் விளையாடும் அபத்தம் இதில் இல்லை. முதல் பாதி, "என்னடா, திருவிழா, காதல் என இழுக்கிறார்களே" என்று நினைக்காமல், இரண்டாம் பாதியை பொறுமையாக பார்க்க வேண்டும். கபடி திருவிழாவே நடத்தி இருக்கிறார்கள்.

படம் எவ்வளவு நல்லாக இருந்தாலும், க்ளைமேக்ஸ் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. படத்தில் இருந்து தனியாக தெரிகிறது. அவர்கள் ஜெயித்து கோப்பையை வாங்கியவுடன், அடுத்த திருவிழாவில் ஹீரோயினை பார்ப்பதுடன் முடித்து இருக்கலாம். (ஸாரி, முழுக்கதையை சொன்னதற்கு! பட் க்ளைமேக்ஸை நான் சொல்லலை!!!!!)

வெண்ணிலா கபடி குழு - ‍அழகான, அழுத்தமான, ஆர்ப்பாட்டமில்லாத செல்லுலாயிட் கவிதை.

அருந்ததி இந்தி ரீமேக்கில் ஆசின்?


அனுஷ்கா நடித்து தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றுள்ள 'அருந்ததி' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முயற்சி நடந்து வருகிறது.
சின்ன பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தெலுங்குப் படம் யாரும் எதிர்பாராத வகையில் பல கோடிகளைக் குவித்துவருகிறது, உலகம் முழுக்க. இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்படுகிறது. இந்நிலையில், கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்த கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் ராம்கோபால் வர்மாவின் உறவினர் மதுவும் இதை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளனர்.

இதில் அனுஷ்கா கேரக்டரில் நடிக்க ஆசினிடம் பேசியுள்ளனர். 'இந்த கேரக்டரில் ஆசின் சிறப்பாக பொருந்துவார். அதனால் அவரிடம் பேசியுள்ளோம். இன்னும் சில நாட்களில் மற்ற விவரங்களை அறிவிக்கிறோம்' என்று கீதா ஆர்ட்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசினிடம் கேட்டபோது, அருந்ததி படம் மிக அருமையான படைப்பு. இதன் இந்திப் பதிப்பில் என்னை நடிக்கக் கேட்டிருப்பது உண்மைதான். எனது மற்ற படங்களின் ஷெட்யூலைப் பார்த்துவிட்டு முடிவு சொல்வதாகக் கூறியுள்ளேன். எனக்கு தேதிகள் இருந்தால் நிச்சயம் இந்தப் படத்தைச் செய்வேன், என்கிறார் ஆசின்.

இந்தப் படத்துக்காக ரூ.2 கோடிக்கும் மேல் ஆசினுக்கு சம்பளம் தர முன் வந்துள்ளாராம் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த்.

கஜினியில் அள்ளியதை மறக்க முடியுமா அல்லுவால்!

அனிமேஷன் படத்தில் நிஜ ரஜினி சௌந்தர்யாவின் புது டெக்னிக்!


லேசாக எடை கூடி, பெங்களூர் தக்காளி போல பளபளவென்று இருக்கிறார் விஜயலட்சுமி. அதே இடம், அதே நேரம் படத்திற்காகதான் இந்த எடை கூட்டல்! இப்படியே இருங்கள், இதுதான் நன்றாக இருக்கிறது என்று தோழிகள் சொன்னதால் வெட்கத்தின் எடையும் சேர்ந்து கொண்டது விஜயலட்சுமியிடம்.

சுல்தான் தி வாரியர் படத்தை மே மாதம் ரிலீஸ் பண்ணப் போறாங்க. எனது போர்ஷன் இன்னும் பத்து நாட்கள் இருக்கு. அதை முடிச்சிட்டா எல்லார் மாதிரியும் நானும் சுல்தானுக்காக வெயிட் பண்ண ஆரம்பிச்சிடுவேன் என்கிற விஜயலட்சுமிக்கு பெருத்த சந்தோஷம், ரஜினி பாராட்டினார் என்பதுதானாம்.

ஷ§ட்டிங் ஸ்பாட்டுலே என்னை லக்கி கேர்ள் என்றுதான் கூப்பிடுவார் ரஜினி சார். காரணம், நான் நடிச்ச சென்னை 28, அஞ்சாதே ஆகிய இரண்டு படமும் ஹிட். இதனால்தான் அப்படி ஒரு செல்லப் பேரு வச்சு என்னை கூப்பிட ஆரம்பிச்சார். சுல்தான் படத்திலும் எனது சென்ட்டிமென்ட் வொர்க் அவுட் ஆகும்னு சொல்ல வேண்டியதில்லை. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்கிறார் டாடர் ஆஃப் அகத்தியன்!

சுல்தான் தி வாரியர் 60 கோடியில் தயாரான படமாம். 18 மொழியில் வெளியிடப் போகிறார்கள். அனிமேஷன் படம் என்றாலும், சில காட்சிகளில் நிஜ ரஜினியாகவே தோன்றுவாராம் ரஜினி. இது ரசிகர்களுக்கு இன்னும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார் சௌந்தர்யா

Sunday, February 1, 2009

பிரபல நடிகை சங்கீதா திருமணம் திருவண்ணாமலை, பிப்1

திருவண்ணாமலை, பிப்1 பிரபல சினிமா நடிகை சங்கீதாவுக்கும், பின்னணி பாடகர் கிரீஷ்க்கும் பிப்-1 அன்று திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

உயிர், பிதாமகன், தனம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் நடிகை சங்கீதா. அவருக்கும் சினிமா பின்னணி பாடகர் கிரீஷ்க்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததை அடுத்து, நடிகை சங்கீதா கிரீஷ் திருமணம், திருவண்ணா மலை அண்ணாமலையார் கோயிலில் வெகு விமர்சியாக பிப்-1 அன்று நடைபெற்றது. இத் திருமணத்திற்காக ஜன-31 அன்று மாலையிலேயே இருவீட்டாரும் திருவண்ணாமலை சென்று ஓட்டலில் தங்கியிருந்தனர்.

பிப்-1 அன்று காலை 7.45 மணியளவில் நடிகை சங்கீதா கிரீஷ் அண்ணா மலையார் கோயிலுக்கு வருகை தந்தனர். மணபெண் சங்கீதா ரோஸ் கலரில் பட்டுப்புடவை அணிந்திருந் தார். மணமகன் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்திருந்தார். அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் திருமாங்கல்யம் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமலை அம்பாளை மணமக்கள் தரிசனம் செய்தனர்.

தாலி கட்டினார்

தொடர்ந்து ஆலய வளாகத்தில் உள்ள கோபுரத்து இளையனார் சன்னதி மண்டபத்தில் முகூர்த்தம் நடந்தது. காலை 8.35 மணிக்கு நடிகை சங்கீதா கழுத்தில் கிரீஷ் தாலி கட்டினார். அதனை தொடர்ந்து இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

பின்னர், அண்ணாமலையார் கோயில் அலுவலகத்தில் சங்கீதா கிரீஷ் கையெழுத்திட்டு திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். கிரீஷ் தரப்பில் அவரது அக்காள் கணவர் சீமோர் கையெழுத்திட்டார்.

நடிகர் நடிகைகள் வாழ்த்து

திருமணத்தில் நடிகர்கள் பாண்டிய ராஜன், ஜீவா, சின்னிஜெயந்த், பிரிதிவிராஜ், யோகி தேவராஜ், பிரேம்ஜி, டைரக்டர்கள் கங்கை அமரன், பாலா, தரணி, எஸ்.பி. சரண், நடிகைகள் ஸ்ரீபிரியா, ரீமாசென், மும்தாஜ், லட்சுமிராய், விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி, மகேஷ்வரி உள்ளிட்டோ ர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் ரசிகர்கள் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

த்ரிஷாவுடன் சேரும் சிம்பு - கெளதம் டைரக்ஷன்!


சிம்புவுக்கு ஒருவழியாக பாப்புலர் இயக்குநர் கிடைத்துவிட்டார். கவுதம் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கப்போகிறார் சிம்பு.
இப்படத்தில் சிம்புவுடன் மீண்டும் திரிஷா ஜோடி சேருகிறார். சிம்பு ஹீரோ என்றதும் எதுக்கு வம்பு என்று பெரும்பாலும் விலகிக் கொள்வார்கள் பிரபல இயக்குநர்கள். காரணம் சிம்புவின் சகிக்க முடியாத தலையீடு (இதற்கு அவரே இயக்குநராக இருந்துவிடலாம்..!). இதுவரை அவர் நடித்த படங்களில் அடங்கி நடித்தது இரண்டுதானாம். ஒன்று ஹரி இயக்கிய கோயில், அடுத்தது கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய சரவணா.

மற்ற படங்களில் பெரும்பாலும் இயக்குநர் என்று ஒருவர் இருப்பார். அவரது வேலைகளை சிம்புவே பார்த்துக் கொள்வார் என்கிறார்கள்.

மன்மதன் படத்தின் இயக்குநர் என்று முருகன் என்பவரை அறிமுகப்படுத்தினார்கள். அவரோ இந்தப் படத்தில் எனக்கு என்ன வேலை என்றே தெரியவில்லை எனப் புலம்பினார். மன்மதன் ஹிட் ஆனாலும், அதை இயக்கிய முருகன் ஹிட் ஆகவில்லை. இப்போது மீண்டும் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார் என்கிறார்கள். இது ஒரு சாம்பிள்தான்!

இப்போது திரைக்கு வந்த சிலம்பாட்டமும் சிலுப்பாத காரணத்தால், யாராவது ஒரு பெரிய இயக்குநரின் படத்தில் நடிக்க காத்திருந்தார் சிம்பு. இப்போது கவுதம் மேனன் கிடைத்துள்ளார் அவருக்கு.

சிம்பு அடுத்ததாக போடா போடி என்ற படத்தில் நடிக்கவிருந்தார். கனடாவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடப்பதாக இருந்தது. ஆனால் அங்கு கடும் குளிரும் உறைபனியுமாக கடுமையான க்ளைமேட் என்பதால் படப்பிடிப்பைத் தள்ளிப் போட்டுள்ளார்களாம்.

எனவே இந்த இடைப்பட்ட காலத்தில் கவுதம் படத்தில் நடிக்கப் போகிறாராம். இந்தத் தகவலை கவுதம் மேனனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

முழுக்க முழுக்க இளமைத் துள்ளல் நிறைந்த காதல் படமாம் இது. சிம்புவின் ஆரம்பநாள் தோழி த்ரிஷா நாயகியாக நடிக்கக் கூடும் என்கிறார்கள்.

ஏற்கனவே திரிஷா சிம்புவுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சிம்புவுடன் இணைகிறார் திரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இயக்குன‌ரின் (குதிரை) பயணம்

சன்னுக்குப் போட்டியாக படத்தயா‌ரிப்பில் இறங்க கலைஞர் தொலைக்காட்சியே யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் தை‌ரியமாக அந்த வேலையில் காலடி வைத்திருக்கிறது, ரா‌ஜ் டிவி.

முதல் தயா‌ரிப்பான காதல்னா சும்மா இல்ல முதலுக்கு மோசமில்லாமல் ஓடுவதில் ராஜுக்கு பரம திருப்தி. அடுத்தடுத்து ஐந்து படங்களை தயா‌ரிக்க திட்மிட்டுள்ளவர்கள், பிறருடன் கைகோர்த்து படங்களை தயா‌ரிப்பதிலும் முனைப்பு காட்டுகின்றனர். அப்படி கூட்டுத் தயா‌ரிப்பில் உருவாகிவரும் படம், குதிரை.

ரா‌ஜ் டிவி, நாச‌ரின் மனைவி கமலா நாசருடன் இணைந்து குதிரையை தயா‌ரிக்கிறது. இந்தப் ப‌ரிசோதனை ஓட்டத்தில் இன்னொரு பரிசோதனையாக இயக்குனர் ரமணாவை நாயகனாக்கியிருக்கிறார்கள். சுள்ளானில் ஒரு நிமிடம் இடுப்பை அசைத்ததுக்கே பெண்டு கழன்று போச்சு, நடிப்பு நமக்கு ச‌ரிப்பட்டு வராது என்று அந்த திசைக்கு கும்பிடு போட்டுச் சென்ற ரமணா எப்படி இதற்கு ஒத்துக்கொண்டார்?

காரணம், கதை. ரா. ராஜசேகர் சொன்ன கதை தனக்கு ஒத்துப் போகும் என்று கருதியதால் நாயகனாக நடிக்க சம்மதித்தேன் என்று கூறனார் ரமணா. தாழ்வு மனப்பானமை கொண்டவராக இதில் வழக்கமான ஹீரோயிஸம் எதுவுமில்லாத வேடமாம் இவருக்கு. ஜோடியாக மலையாள வரவான தர்ஷினி நடிக்கிறார்.

படத்தில் முக்கியமான வேடம் ஏற்றிருப்பது, பிரகாஷ்ரா‌ஜ்.

காத்திருக்கும் பிரமிட் சாய்மீரா

பத்து தயா‌ரிப்பாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நிதியுதவி செய்து, படங்கள் தயா‌ரிக்கப் போவதாக பிரமிட் சாய்மீரா அறிவித்ததை சுலபத்தில் மறக்க முடியாது. பிரமாண்ட விழா எடுத்து சொன்னதை ஆர்ப்பாட்டமுடன் தொடங்கவும் செய்தார்கள்.

அந்த பத்தில் இரண்டோ மூன்றோ படங்களுக்கு‌தான் பைனான்ஸ் போய்ச் சேர்ந்திருப்பதாக‌க் கூறுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, கொடுத்த காசில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார், தெய்வானை மூவிஸ் அமுதா துரைரா‌ஜ். வானம் பார்த்த பூமியிலே என்ற அந்தப் படத்தை ஜேப்பி. அழகர் இயக்கியிருக்கிறார்.

அடிப்பது வீரமில்லை, மற்றவர்கள் மதிக்க நடப்பதுதான் வீரம் என வீரத்துக்கு புது இலக்கணம் எழுதியிருக்கும் இந்தப் படம் முடிந்த பிறகும் படத்தை வெளியிடாமல் இருக்கிறது பிரமிட் சாய்மீரா. அவர்கள் எதற்காக காத்திருக்கிறார்கள் என்பது பு‌ரியாமல் வானம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் படத்தில் பணிபு‌ரிந்தவர்கள்.

கள‌ரி பத்மப்‌ரியா

நடிகைகளில் கேரக்டருக்காக தன்னை வருத்திக் கொள்கிறவர் பத்மப்‌ரியா. மிருகம் படத்துக்காக மரம் ஏற கற்றுக் கொண்டவர், தற்போது கற்றிருப்பது, மலையாளிகளின் வீர விளையாட்டான கள‌ரி.

மிருகம் படப்பிடிப்பின்போது தனது கன்னத்தில் அப்படத்தின் இயக்குனர் சாமி அறைந்ததால், அவரது அடுத்தப் படமான ச‌ரித்திரத்தில் நடிக்க பத்மப்‌ரியா மறுத்தது அனைவரும் அறிந்ததே. ச‌ரித்திரம் கதைப்படி அதன் நாயகிக்கு சிலம்பம் சுற்ற தெ‌ரிந்திருக்க வேண்டும். அதற்கு ச‌ரியான ஆள் பத்மப்‌ரியா என்றுதான் அவருக்கு அழைப்பு அனுப்பினார், சாமி.

சிலம்பம் ஆட மறுத்த பத்மப்‌ரியா, மலையாளத்தில் தயாராகும் பழஸிராஜா படத்துக்காக கள‌ரி கற்று வருகிறார். ச‌ரித்திரக் கதையான இதில் மம்முட்டி, சரத்குமார், கனிகா ஆகியோரும் நடிக்கின்றனர்.

சமீபத்தில் கூர்க்கில் நடந்த படப்பிடிப்பில் பத்மப்‌ரியா கள‌ரி சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்டது. பத்மப்‌ரியா நன்றாக சண்டைப் போடுகிறார் என்பது அவருக்கு பயிற்சி அளித்தவ‌ரின் கமெண்ட்.

நாகேஷ் - புறக்கணிப்பின் நாயகன்


நாகேஷ் இறந்துவிட்டார். மீள கட்டியெழுப்ப முடியாத ஒரு சகாப்தம் அவருடன் முற்று‌ப் பெறுகிறது. தமிழ்‌த் திரையுலகின் வற்றாத நகைச்சுவையின் பேரூற்று அவர். மக்கள் திலகம், நடிகர் திலகம் என்ற இரு பிரமாண்டங்களை‌க் கடந்து தனது பிரகாசத்தை தக்கவைத்துக் கொண்ட மகா கலைஞன்.

நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். அப்பா கிருஷ்ணராவ், அம்மா ருக்மணி. சமூகத்தில் பெயர் தெ‌ரியும் அளவுக்கு முன்னேறிய பிறகே வீட்டிற்கு வருவேன் என்று கூறிவிட்டு நாகேஷ் வந்து இறங்கிய இடம், சென்னை. ரயில்வேயில் முதலில் சிறிய வேலை. நமது இடம் இதுவல்ல என்பது அவருக்கு‌த் தெ‌ரிந்தே இருந்தது.

தனக்கான இலக்கை நிர்ணயித்துக் கொள்ளாத அந்த நேரத்தில் கம்ப ராமாயணம் நாடகத்தை நாகேஷ் பார்க்க நேர்கிறது. நாடகத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள அவரது மனம் விழைகிறது. முதல் வேஷம் வயிற்று வலிக்காரன். அவரது நடிப்பை மேடையில் புகழ்ந்து பேசுகிறார் நாடகத்துக்கு தலைமை வகித்த எம்.‌ஜி.ஆர். இலக்கு தெ‌ரிய வந்தபிறகு அவர் தேங்கி நின்றதேயில்லை, குடிப் பழக்கத்துக்கு ஆளாகும் வரை.

எம்.‌ஜி.ஆர்., சிவா‌ஜி இருவருடனும் ஒரே நேரத்தில் பல படங்கள் நடித்திருக்கிறார் நாகேஷ். இது அன்று அதிசயம். இருவேறு திசைகளில் பயணித்த அவர்களின் படங்களில் நாகேஷ் தொடர்ந்து இடம்பெற்றதற்கு அவரது திறமையும், மக்களை வசீக‌ரிக்கும் தன்மையுமே காரணம். இதற்கு சிறந்த உதாரணம், பாலசந்தர்.

நடிகர்களின் ஆதிக்கம் திரையுலகில் கோலோச்சியிருந்த நேரத்தில் அதனை மறுத்து, பிரபல நடிகர்கள் இல்லாமலே திரைப்படங்களை உருவாக்கியவர் பாலசந்தர். அவ‌ரின் இந்த மறுதலிப்புக்கு ஆயுதமாக பயன்பட்டவர் நாகேஷ். நாகேஷின் குணச்சித்திர நடிப்பை வெளிக்கொண்டு வந்ததில் பாலசந்தருக்கு பெரும் பங்குண்டு.

அவருக்குப் பிறகு கமல் ஹாசனின் சில படங்கள் அவரது தனித்தன்மையை வெளிப்படுத்தின. அபூர்வ சகோதரர்கள், நம்மவர், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

நாகேஷின் தனிப்பட்ட வாழ்க்கை அத்தனை எளிதாக இல்லை. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரை காதலித்து மணந்ததால் வீட்டை பகைத்துக் கொள்ள நேர்ந்தது. மூன்று மகன்கள் இருந்தும் அவர் தனிமையில் வசிப்பதையே விரும்பினார். மூவ‌ரில் ஒருவரான ஆனந்தபாபுவின் போதைப் பழக்கம் அவரை பெருமளவு பாதித்தது. பெருளாதார நெருக்கடியால் தனது திரையரங்கை விலைபேசும் நிலைக்கு நாகேஷ் தள்ளப்பட்டார்.

webdunia photo FILE
சோதனைகளை எல்லாம் நடிப்பின் வாயிலாகவே அவர் கடந்திருக்கிறார். நடிப்பு அவருக்கு தொழிலாக மட்டும் இருக்கவில்லை. அது வாழ்க்கை. உடல் ஒத்துழைக்கும்வரை அவர் நடிப்பை விடவில்லை. அவரது நடிப்பில் வெளியான கடைசிப் படம் சென்ற ஆண்டு வெளியான தசாவதாரம்.

படங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை அவர் ஆயிரத்தில் ஒருவன். அடுத்தவரை புண்படுத்தாத நகைச்சுவையில் கலைவாணருக்கு அடுத்தபடி நினைவில் வருகிறவர் நாகேஷ். ஆனால், கலைவாண‌‌ரின் பிரதிபலிப்பல்ல நாகேஷ். அவரது நகைச்சுவை தனித்துவமானது. யாரையும் புண்படுத்தாதது. நகைச்சுவையின் வடிவில் போதனைகள் எதையும் அவர் செய்வதில்லை. சினிமாவில் துடுக்குத்தனமான வெள்ளந்தி இளைஞர் அவர். உடல்மொழியும், மானுட அபத்தங்களுமே அவரது நகைச்சுவையின் ஆதாரங்கள். காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையாவுக்கு தனது திரைப்படத்தின் கதையை விளக்கும் அந்த ஒரு காட்சியே போதும்.

நாகேஷின் நடிப்பை, அவரது நகைச்சுவையின் வீச்சை, நீர்க்குமிழி, எதிர்நீச்சல், யாருக்காக அழுதான் படங்களில் அவர் வெளிப்படுத்திய குணச்சித்திர நடிப்பின் ப‌ரிமாணத்தை தொகுத்து அளிப்பது, தமிழர்களைப் பொறுத்தவரை வீண் வேலை. நாகேஷ் என்ற கலைஞனை யாருடைய அறிமுகமும் இல்லாமல் இருண்ட திரையரங்குகளில் கண்டு பரவசப்பட்டவர்கள் அவர்கள்.

நகைச்சுவை திலகம் என்பதைவிட புறக்கணிப்பின் நாயகன் என்ற பட்டம் அவருக்கு பொருத்தமாக இருக்கும். உலகின் எந்த நகைச்சுவை நடிகருடனும் ஒப்பிடக் கூடிய தகுதியும், திறமையும் கொண்ட அவருக்கு இதுவரை ஒரு தேசிய விருதுகூட வழங்கப்பட்டதில்லை. மாநில அளவில்..? யோசித்தால் கலைமாமணி போன்ற கூட்டத்தோடு கும்மியடிக்கும் ஏதாவது விருது தேறலாம். மற்றபடி...?

இந்திய அளவில் புறக்கணிக்கப்பட்ட கலைஞர்களின் பட்டியலை தயா‌ரித்தால் முதலிடத்தில் இருப்பார், நாகேஷ். அரசின் தடித்த சுயநல தோலை கடந்து அங்கீகாரத்தை கைப்பற்றும் எந்த சூட்சுமங்களும் அறியாத அப்பாவி கலைஞன் அவர். அவரைப் போன்று புறக்கணிக்கப்படும் கலைஞர்களுக்கு நியாயமான அங்கீகாரம் கிடைக்க என்ன செய்யப் போகிறோம்? இந்த சிந்தனையே நாகேஷுக்கு நாம் செலுத்தும் நேர்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

Followers