Saturday, January 31, 2009

பேக் டூ கீ போர்டு இசையமைப்பாளரின் பின்னடைவு


தயாரிப்பாளர்களோடும், இயக்குனர்களோடும் அவ்வப்போது 'ஒத்துழையாமை இயக்கம்' நடத்தி வந்த இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர், அதற்கான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் 'கீ போர்டு' பிளேயராகவே ஆகிவிட்டாராம்.

இவர் இசையமைத்த ஒன்றிரண்டு படங்களுக்கு இறுதி நேரத்தில் கூட 'டிராக்' கொடுக்காமல் இழுத்தடித்தது, கம்போசிங்கில் உட்கார வருகிற இயக்குனர்களை 'கொஞ்சம் வெளியே இருங்க... ட்யூன் வந்ததும் கூப்பிடுறேன்' என்று கோக்கு மாக்காக குதறிப் போட்டது என்று ஜோஷ்வாவின் நடவடிக்கைகள் அவ்வப்போது 'லைவ் ரிலே' செய்யப்பட்டது கோடம்பாக்கத்தில். விளைவு? கம்பல்சரி ரிட்டையர்மென்ட் கொடுத்துவிட்டது கோடம்பாக்கம்.

ஏ.ஆர்.ரஹ்மானிடம் கீ போர்டு பிளேயராக இருந்தவர் (இதற்காகதான் வாய்ப்பே கொடுக்கப்பட்டது அவருக்கு) இப்போது மறுபடியும் அவரிடமே சேர்ந்து விட்டார். 'நேரம் வரும்போது மீண்டும் இசையமைப்பேன்' என்கிறார் ஆர்வமாக. நேரம் வரும்போது வரட்டும். அதற்கு முன் பொறுமையும், அர்ப்பணிப்பும் வர வேண்டும்! வருமா? என்கிறது கோடம்பாக்கம் ஏரியா!

நேசத்திற்குரியவரின் மரணம் -நிலைகுலைந்த இயக்குனர்!


மருமகனின் வெற்றியை மனதார ரசித்த நேரத்தில், அந்த மகிழ்ச்சியுடனேயே கண்ணை மூடிய மாமனாரின் அதிர்ச்சியான முடிவை என்னவென்பது?

சர்வம் படத்தை இயக்கி வருகிறார் விஷ்ணுவர்த்தன். த்ரிஷா இறந்து போவதுதான் படத்தின் க்ளைமாக்ஸ். இதை படமாக்கிய விஷ்ணு, அந்த காட்சியிலிருந்து விலக முடியாமல் முக வாட்டத்தோடு இருந்தாராம் சில நாட்கள். சினிமா இறப்பையே தாங்கிக் கொள்ள முடியாத இவரை, நிஜ மரணம் ஒன்று நிலை குலைய வைத்திருக்கிறது.

சர்வம் படத்தின் டிரெய்லரை தயாரித்த விஷ்ணு, பிரமாண்ட திரையரங்கம் ஒன்றில் 70 எம்எம் ஸ்கிரீனில் அதை பார்க்க ஆசைப்பட்டார். மருமகனின் திறமையை தானும் பார்க்க விரும்பினார் இவரது மாமனார். இருவரும் சென்னையில் உள்ள பிரமாண்ட திரையரங்கத்திற்கு சென்றிருந்தார்கள். டிரெய்லரை ரசித்து விட்டு திரும்பும்போது தியேட்டர் படிக்கட்டுகளில் தடுக்கி விழுந்துவிட்டாராம். ஏற்கனவே பிபியில் அவதிப்பட்டு வந்தவர் என்பதால் இரத்தப் போக்கு நிற்கவே இல்லையாம். அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனிக்காமல் காலமாகிவிட்டார்.

கலங்கிப் போயிருக்கிறார் விஷ்ணுவர்த்தன்.

லவ்வை விட கீழே, நட்பை விட மேலே! -கோலிவுட்டை குழப்பிய ஜோடி?


கர்சீப் அளவு மனசிருந்தால் போதும். அதில் கூடாரமே அடித்து குடியிருக்கலாம் என்று நிரூபித்திருக்கிறது லேட்டஸ்ட் ஜோடி ஒன்று. தோரணை படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வந்தார் மீனாட்சி. இந்த பாடல் காட்சி எடுக்கப்பட்ட நேரம் மொத்தம் நான்கே பகல்கள்தான்!

இந்த குறுகிற காலத்திற்குள் மீனாட்சியின் மனசுக்குள் கூடாரம் அடித்து குடி புகுந்துவிட்டார் விஷால். கோடம்பாக்கத்தையே அசரடிக்கிற குளுகுளு ஜோடி இதுதான் என்கிறார்கள் இப்போது! நட்சத்திர விடுதிகளில் சர்வ சாதாரணமாக உலவுகிறதாம் இந்த ஜோடி. இவர்களின் நடவடிக்கை லவ்வை விட கீழேயும், நட்பைவிட மேலேயும் இருப்பதால் குழம்பிப் போயிருக்கிறது கோலிவுட்!

இந்த நேரத்தில் இன்னொரு செய்தியும் கிசுகிசுக்கப்படுகிறது. தோரணை படத்தில் ஆடிய மாதிரியே மற்ற படங்களிலும் ஒரு ஒற்றை ஆட்டம் போட அழைக்கிறார்கள் மீனாட்சியை. ஆனால், கட்டுப்பாட்டு அறைக்கு போன் பண்ணி, அனுமதி கேட்கிறாராம் மீனாட்சி. அங்கேயிருந்து வேண்டாம் என்றே தகவல்கள் வருகிறதாம். இந்த கட்டுப்பாட்டு அறைக்குள் இருந்து அவ்வப்போது அறிவுரைகள் சொல்பவர் சாட்சாத் நம்ம விஷாலேதான் என்கிறார்கள்.

Friday, January 30, 2009

‌பிரபல நடிக‌ர் நாகே‌ஷ் காலமானா‌ர் அவரு‌க்கு வயது 76.

‌பிரபல த‌மிழ் திரைப்பட நகைச்சுவை நடிக‌ர் நாகே‌ஷ் இ‌ன்று காலை சென்னையில் காலமானா‌ர். அவரு‌க்கு வயது 76.

கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவரது உயிர் இன்று பிரிந்ததாக நாகேஷ் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

நாகேஷின் மகன் ஆனந்த் பாபுவும் சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரத்திற்கு வலு சேர்த்தவர் நாகேஷ். மறைந்த நடிகரும், முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உட்பட முன்னாள் முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாது, இளைய தலைமுறை நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த போதிலும், பின்னாளில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். சில படங்களில் வில்லன் பாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளார்.

'நீ‌ர்‌க்கு‌மி‌ழி' என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது.

நகைச்சுவை வேடம், வில்லன், குணச்சித்‌திர வேடம் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நாகேஷ் நடித்துள்ளார்.

சிறந்த மோசமான படத்திற்கும் விருது

ஆஸ்கார் உள்ளிட்ட பல விருதுகள் உலகின் சிறந்த திரைப்பட படைப்பாக்கங்களுக்கு விருது வழங்கி அழகு பார்க்கின்றன. ஆனால் சிறந்த மோசமான திரைப்படத்திற்கு விருது வழங்கி மகிழும் போக்கை நாம் இது வரை பார்த்திருக்க மாட்டோம்.ஆம்! ராஸ்ஸீ விருதுகள் என்ற ஒன்று சிறந்த மோசமான படங்கள், மோசமான இயக்குனர், மோசனான நடிகர், நடிகையர் என்று இதற்கும் தேர்வுகளை நடத்துகிறது.

அந்த வகையில் 29வது ராஸ்ஸி விருதுகளுக்கு மைக் மையர்சின் "தி லவ் குரு" என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை இந்த அறிவிப்பு வெளியானது.அதாவது ஆஸ்கார் அறிவிப்புகளுக்கு ஒரு நாள் முன்னால் இது வெளியாகியுள்ளது. ஆஸ்கார் விருதுகளை கடும் கிண்டல் செய்வது போல் உள்ளது இந்த நடவடிக்கை.

இந்த ஆண்டின் சிறந்த மோசமான திரைப்படத்திற்கும் போட்டா போட்டி இல்லாமல் இல்லை. "தி ஹேப்பெனிங்" "ஹாட்டி அன்ட் நாட்டி", "தி நேம் ஆஃப் தி கிங்" "மீட் தி ஸ்பார்டான்ஸ்" என்று போட்டிகள் இருந்தது.சிறந்த மோசமான நடிகை விருதிற்கு ஜெசிகா ஆல்பா, கேமரூன் டைஅஸ், கேட் ஹட்சன் என்று போட்டி இருந்தது.

இந்தியாவிலும் இதனை முயன்றால் நாம் பெருமை பேசும் படங்கள் அனைத்தும் இந்தப்பட்டியலில் வந்துவிடும்.

இறந்த பிறகும் ஆஸ்காருக்கு பரிந்துரை

"தி டார்க் நைட்" என்ற பேட்மென் திரைப்படத்தில் வில்லத்தனமான கோமாளி வேடமிட்ட மறைந்த நடிகர் ஹீத் லெட்ஜர் பெயர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உயிரோடு இருக்கும் நடிகர்கள், நடிகைகள் பலர் நல்ல நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தாலும் ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரை செய்யப்படுவதில்லை.இந்த நிலையில் இறந்த பிறகு ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார் இந்த ஆஸ்ட்ரேலிய நடிகர்.
28 வயதேயான ஹீத் லெட்ஜர் என்ற இந்த நடிகர் மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை தெரியாத்தனமாக அதிக அளவில் எடுத்துக் கொண்டு மரணமடைந்தார்.

இதுவரை இறந்த பிறகு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட கலைஞர்களின் எண்ணிக்கை ஆறு.

இதில் 1976ஆம் ஆண்டு "நெட்வொர்க்" என்ற திரைப்படத்தின் பீட்டர் ஃபின்ச் என்பவருக்கு மட்டுமே இறந்த பிறகு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.

ஹீத் லெட்ஜருக்கு ஆதரவு அதிகம் இருந்தாலும், விருது கிடைப்பது கடினம்தான் என்று கூறுகிறது ஹாலிவுட் வட்டாரங்கள்.

நிர்வாணமும் கலைதான் - கேட் ஹட்சன்

ஹாலிவுட்டின் எதற்கும் துணிந்தவர், கேட் ஹட்சன். விதவிதமாக போஸ் கொடுப்பது இவரது ஹாபி. இதில் என்ன தவறு இருக்கிறது?
ஹட்சன் கொடுப்பதெல்லாம் நிர்வாண போஸ்கள். ஷேம் ஷேம் பப்பி ஷேம் வகையறாக்கள். சமீபத்தில் பிரபல பத்தி‌ரிகைக்கு இதுபோல் போஸ் கொடுத்திருக்கிறார். இதுபற்றி கேட்டால், நிர்வாணமும் ஒரு கலைதான் என்கிறார் கூலாக.

நல்ல கதையுடன் கூடிய படம் கிடைத்தால் எப்படியும் நடிக்க தயார் எனவும் கோலிவுட் நடிகை ரேஞ்சுக்கு ஸ்டேட்மெண்ட் கொடுத்து கலங்கடித்துள்ளார்.

ஹாலிவுட்டில் நல்ல கதையுள்ள படம் கிடையாதா? சீக்கிரம் எடுங்கப்பா.

கேரளாவிலும் சங்கங்களின் சண்டைகள்


அவ்வப்போது தமிழ்சினிமா சங்களுக்கிடையே ஏற்படும் ஆக்ஷ்ன் எபிசோட், மலையாள திரையுலகிற்கும் பரவியுள்ளது.
மலையாள நடிகர்களுக்கான சங்கமாக இயங்கிவருகிறது 'அம்மா' சங்கம், அதேபோல தொழில்நுட்பக் கலைஞர்களுக்காக இருக்கும் சங்கம் 'மேக்டா' இதில் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் ஆகிய டெகனீசியன்களை உறுப்பினராக கொண்டது. இச்சங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேக்டாவை திட்டமிட்டு ஒழிக்க நடிகர் மம்முட்டி சதி செய்து வருவதாக மேக்டாவின் முன்னாள் செயலாளர் இயக்குனர் வினயன் குற்றம் சாட்டியுள்ளார்.

மம்முட்டியின் பெயரைச் சொன்னாலே கடுகாய் பொரிந்துதள்ளும் வினயன் மம்முட்டிமீது அடுக்கடுக்கான புகார்களை அள்ளிவீச மலையாளத் திரையுலகில் இப்போது அனல்வீச ஆரம்பித்துள்ளது.

"மேக்டா அமைப்பில் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெருமாபாலானவர்களுக்கு இப்போது வேலை இல்லை. சூப்பர் ஸ்டார்களும், அவர்களுக்கு பயந்து வாழ்கிற மற்ற நடிகர்களும் மேக்டாவுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. மேக்டாவை அழிக்க, சூப்பர் ஸ்டார் மம்முட்டி முன்வரிசையில் நிற்பது மலையாள சினிமா, சூப்பர் ஸ்டார்களின் ஆதிக்கத்தில் இருப்பதையே காட்டுகிறது.

ஒரு படத்தில் யார் நடிக்க வேண்டும், யார் இயக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார்களின் ஆதிக்கத்தால் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். இதுகுறித்து முதல்வர், தொழிலாளர் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளோம்.
மேக்டா தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் மேக்டா அமைப்பே புதுமுகங்களை வைத்து சொந்தமாக படம் தயாரிக்கும்" என குமுறினார்.

செ‌ன்னை பா‌க்‌ஸ் ஆஃ‌பீ‌ஸ் டாப் 5 மூவிஸ்

சென்னை பாக்ஸ் ஆபிஸில் டாப் 5 மூவிஸில் முதலிடத்தை படிக்காதவன் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ‌‌‌‌விஜயின் வில்லு உள்ளது.

5. என்னை தெ‌ரியுமா?

மோகன்பாபுவின் மகன் மனோ‌ஜ்குமார் நடித்திருக்கும் இப்படம் க‌ஜினியின் ஷார்ட்டேர்ம் மெம‌ரி பிரச்சனையை மையமாக‌க் கொண்டுள்ளது மிகப் பெ‌ரிய பல‌வீனம். பிரபலமில்லாதவர்கள் நடித்திருப்பது படத்தின் தோல்வியை உறுதி செய்துள்ளது. வெளியான முதல் 3 நாட்களில் சென்னையில் ஐந்து லட்சங்கள் மட்டுமே வசூலித்துள்ளது இப்படம்.

4. காதல்னா சும்மா இல்ல

மீடியா இருந்தும் ச‌ரியாக விளம்பரப்படுத்தப்படாதப் படம் காதல்னா சும்மா இல்ல. பிரபலங்கள் இல்லாததே இந்தப் படத்தின் குறை. விமர்சன‌ ‌ரீதியாக பேசப்பட்டாலும் வசூல்‌ ‌ரீதியாக சுமார் சர்ட்டிபிகேட்டே இப்படத்துக்கு கிடைத்துள்ளது. சென்ற வாரம் ஆறு லட்சங்கள் வசூலித்துள்ள இப்படம் இதுவரை 26 லட்சங்களை மட்டுமே ஈட்டியுள்ளது.

3. அபியும் நானும்

ஆபரேஷன் சக்சஸ், பட் பேஷண்ட் டெட். இதற்கு ச‌ரியான உதாரணம் அபியும் நானும். நல்ல படம், ஆனால் சுமாரான வசூல். வார இறுதியில் 14 லட்சங்கள் வசூலித்துள்ள இந்தப் படத்தின் மொத்த வசூல், சென்னையில் மட்டும், 1.24 கோடிகள்.

2. வில்லு

2009-ன் டிராஜடி வில்லு. கதை இல்லாமல் கட்ட வண்டிகூட ஓட்ட முடியாது என்பதை தமிழ்கூறும் நல்லுலகிற்கு எடுத்துச் சொன்ன படம். சென்ற வார வசூல், 28 லட்சங்கள். இரண்டு வாரத்திற்கும் சே‌ர்த்து 1.73 கோடிகள். விஜய் வாங்கும் சம்பளத்துக்கு இது ரொம்ப ரொம்ப கம்மி.

1. படிக்காதவன்

விளம்பரத்தால் வீணாப் போனவைகளையே விற்பனை செய்யலாம் என்பதற்கு படிக்காதன் சிறந்த உதாரணம். சன் தொலைக்காட்சியின் ஐந்து நிமிடத்திற்கொருமுறை வரும் விளம்பர வன்முறை படிக்காதவனை முதலிடத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது. இதன் சென்றவார வசூல், 42 லட்சங்கள். மொத்த வசூல், 1.68 கோடிகள்.

1977ஐ எதிர்பார்க்கும் சரத்


1977 திரைப்படம் சரத்துக்கு மிகப்பெரிய வெற்றிபடமாக அமையும் என்கிறார் அதன் இயக்குனர் தினேஷ் குமார்.தீபாவளிக்கு ரீலிசாக வேண்டிய படம் தற்போது பொங்கலும் முடிந்த நிலையில் விரைவில் வெளிவரும் என எதி்ர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மூலம் விளம்பர படங்கள் எடுத்து வந்த தினேஷ் குமார் திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இதில் சரத் குமார் தனது வெற்றி பார்மூலாவான அப்பா-மகன் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதை 1977ல் நடப்பதாக அமைந்திருப்பதால் அதையே பெயராக வைத்துள்ளனர்.இரண்டு ஹீரோயின்களாக நமீதாவும், பர்ஷானாவும் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் தினேஷ் குமார் கூறுகையில்,

ஹாலிவுட்டுக்கு இணையாக பேசப்படும் படம். தமிழ் நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுத்துள்ளோம். எனக்கு சரத் குமாரை பல ஆண்டுகளாக தெரியும்.

படத்தில் அவரது பாத்திரம் பிரமாதமாக இருக்கிறது. படம் பார்க்கும் போது உங்களுக்கே அது புரியும். நமீதா வக்கீலாக நடிக்கவிருக்கிறார். கதையில் அவரது கேரக்டர் அழுத்தமாக இருக்கும் என்றார்.

லிங்குசாமி இயக்கத்தில் விஜய்


விஜயின் 49வது படமான வேட்டைக்காரனை பாபுசிவன் இயக்குகிறார். ஐம்பதாவது படம் ஜெயம் ராஜாவுக்கு.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் தயா‌ரிப்பு. 49வது படமே இன்னும் தொடங்காத நிலையில் 51வது படத்துக்கு கதை கேட்டிருக்கிறார் இளைய தளபதி. கதை சொன்னவர், லிங்குசாமி. பீமா, பையா படங்கள் ஏற்படுத்திய மெகா இடைவெளியை வீணாக்காமல் புதிய ஸ்கி‌ரிப்ட்டுகள் பல உருவாக்கியிருக்கிறார் லிங்கு. அதில் ஒன்றை‌த்தான் விஜயிடம் கூறியிருக்கிறார். கதை விஜய்க்குப் பிடித்து‌ப் போனதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

வெங்கட்பிரபு இயக்கத்தில் கோவா படத்தை தயா‌ரித்துவரும் ஆக்கர் - வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்கள் லிங்குசாமியிடமும் கால்ஷீட் கேட்டுள்ளன. லிங்குசாமியும் தர‌த் தயார். அனேகமாக அது விஜய் நடிக்கும் படமாக இருக்கலாம்.

ஷக்தி சிதம்பரம் - தினா : கம்போஸ் ஆன டிஸ்யூம்


உன்பாட்ட நிப்பாட்டு என 'ராஜாதி ராஜா'விலிருந்து ஷக்தி சிதம்பரத்தால் கழற்றிவிடப்பட்ட தினா, இயக்குனரின் அவசரக்குடுக்கை தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
ஐந்து கதாநாயகிகள் என ஆரம்பித்த 'ராஜாதி ராஜா' படத்தில் திடீரென சமிக்ஷாவை நீக்கிவிட்டார் ஷக்தி சிதம்பரம். இதற்கான காரணம் ஷக்தி சிதம்பரத்துக்கே தெரியாமல் குழப்பி கொண்டிருக்க, தனது குழப்பத்திற்கு இசையமைப்பாளர் தினாவையும் பலிகிடா ஆக்கியுள்ளார். 4 பாடல்களை கம்போஸ் செய்துகொடுத்த நிலையில் திடீரென தினாவை தூக்கிவிட்டு கருணாஸை இசையமைப்பாளராக்கிவிட்டார் ஷக்தி சிதம்பரம்.

குற்றம் நடந்தது என்ன? என்னும் ரேஞ்சில் தினாவிடம் கேட்டால் குமுறத்தொடங்கினார். "ஞாயிற்றுக்கிழமைகளில் ரெக்கார்டிங்கோ, மிக்ஸிங்கோ செய்வதில்லை என்பதை நான் பாலிஸியாக வைத்துள்ளேன். 'ராஜாதி ராஜா' படத்துக்கு நான்கு பாடல்கள் போட்டுக்கொடுத்துவிட்டேன். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று இயக்குனர் எனக்கு போன் பண்ணி எனக்கு அவசரமா ஒரு பாட்டை ரெக்கார்டிங் செய்துதாங்க" என கேட்டார். நான் திங்கட்கிழமை வாங்கிக்கொள்ளுங்கள் என்றேன். ஆனால் அவர் அதெல்லாம் முடியாது எனக்கு உடனே பாட்டு வேண்டும் என அவசரப்படுத்தினார்.

ரெக்கார்டிங் என்பது மரத்தில் மாங்காய் பறிக்கிற வேலை இல்லை. தோசை சுடுவதுமாதிரி உடனே ரெக்கார்டிங் செய்தால் எனக்குதான் கெட்ட பெயர். மறுபடியும் எனக்கு போன் செய்த ஷக்தி சிதம்பரம், 'பாட்டு தரவில்லையென்றால் படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள். நீங்களே விலகிக் கொள்வதுபோல கடிதம் கொடுங்கள்' என்றார். அதை கேட்டுக்கொண்டு சும்மா இருக்க நானொன்றும் மானம் கெட்டவன் இல்லை. எது எப்படியிருந்தாலும் கருணாஸிற்கு என் வாழ்த்துக்கள்" என சொல்லி முடித்தார் தினா.

எம்.ஜி.ஆர் எனக்குதான்... விஜய்-சிம்பு திடீர் யுத்தம்!



அட்டைக் கத்தியாக இருந்தாலும் சுற்றுகிற வேகத்தில் சுணக்கம் காட்டக் கூடாது. அப்படி காட்டினால் என்னாகும் என்பதற்கு சமீபத்திய உதாரணம்தான் ரஜினி. குசேலன் வெளிவருவதற்கு முன்பு வரை அடுத்த சூப்பர் ஸ்டார் நாற்காலி யாருக்கு? என்று கருத்துக் கணிப்பு நடத்திய பத்திரிகைகள் கூட, 'அந்த நாற்காலியா? எங்காவது ஓரமா இருக்கும்' என்று ஒதுங்கிக் கொண்டன.

சட்டை பட்டனை போட்டால் கூட 'விஷ்ஷ்க்க் விஷ்ஷ்க்க்' என்று ரஜினி ஸ்டைலில் 'ஸ்பெஷல் எஃபெக்ட்' போட்டுக் கொண்ட ஹீரோக்கள், இப்போது ரஜினியை விட்டு விட்டு நேரடியாக எம்ஜிஆர் பக்கம் தாவியிருப்பதுதான் அதிர்ச்சியோ அதிர்ச்சி. சமீபத்தில் வெளிவந்த வில்லு படத்தில் 'அச்சம் என்பது மடமையடா' என்று பாடிக் கொண்டேதான் அறிமுகம் ஆகிறார் விஜய். அதுமட்டுமல்ல, படத்தில் இன்னொரு நாயகனாக எம்ஜிஆரும் நடித்திருக்கிறாரோ என்று ஐயப்படுகிற அளவுக்கு விஜயின் காதல் ஊற்றை திறந்தும் வைக்கிறார் புரட்சித்தலைவர். (ஒரு பக்கம் எம்ஜிஆரின் காதல் காட்சிகள் திரையில் ஓட, அதை பார்த்துக் கொண்டே நயன்தாராவை காதலிக்கிறார் விஜய்)

இளைய தளபதி விஜயின் ஸ்டைலிலேயே ஆக்ஷன் வேடத்தில் உதைத்து தள்ளும் சின்னத்தளபதி பரத், எம்ஜிஆர் நடித்து வெளிவந்து சக்கை போடு போட்ட 'எங்க வீட்டு பிள்ளை' படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். நாகிரெட்டியாரின் விஜயா புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் எம்ஜிஆர் ஃபார்முலாவைதான் பின்பற்றுகிறாராம் பரத்.

பிரபல வார இதழான ஆனந்த விகடன் குரூப் தயாரிக்கும் 'சிவா மனசுல சக்தி' படத்தில், 'எம்ஜிஆரும் இல்லே, நம்பியாரும் இல்லே...' என்ற பாடலில் புரட்சித்தலைவரின் படக்காட்சிகளை ஏராளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்படி அடுத்தகட்ட ஹீரோக்களும் ரஜினியை தவிர்த்துவிட்டு, இன்னமும் கட்டுக் கோப்பாக இருக்கும் எம்ஜிஆர் ரசிகர்களை கவர ஆரம்பித்துவிட்டார்கள்.

தான் நடித்த அநேக படங்களில் எம்ஜிஆரின் புகழ் பாடுபவராகவே வருகிற சத்யராஜ், சமீபத்தில் 'இதயக்கனி' பத்திரிகையின் சார்பாக நடத்தப்பட்ட எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். "இன்று எம்ஜிஆரின் பெயரை சொல்லி நிறைய பேர் கட்சி துவங்குகிறார்கள். அவரது பெயரை உச்சரிக்காவிட்டால் ஓட்டு கிடைக்காது. தலைவரின் பெயரை உச்சரிப்பவர்கள், அவரது நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிற காரியங்களை செய்யாதீர்கள்" என்று கூறியிருக்கிறார். சினிமாக்காரர்களுக்கும் சேர்த்துதான் சத்யராஜ் இப்படி அட்வைஸ் செய்திருப்பதாக நம்புகிறார்கள் கோடம்பாக்கத்தில். இத்தனை காலமாக தங்கள் படங்களில் ரஜினியை புகழ்ந்த இந்த ஹீரோக்களுக்கு திடீரென்று எம்ஜிஆர் பாசம் எங்கிருந்து வந்தது என்பதுதான் கோடம்பாக்க நிகழ்வுகளை உற்று கவனிப்பவர்களின் கேள்வியாக இருக்கிறது.

அதிலும் சினிமா ஹீரோக்கள் இரண்டு பேர் 'எம்ஜிஆர் எனக்குதான்' என்று முண்டா தட்டி வருவதுதான் பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. தான் நடித்த 'சிலம்பாட்டம்' பட ப்ரிவியூவிற்கு விஜயையும் அழைத்து மகிழ்ந்த அதே சிம்புதான் இப்போது விஜயோடு மல்லு கட்டுகிறார். கோடம்பாக்கத்தையே அதிர வைத்திருக்கும் இந்த விஷயம் பற்றி ஆரம்பத்திலிருந்து அலசுவோமா?

இயக்குனர் மாதேஷ், 'எம்ஜிஆர்' என்ற திரைப்பட டைட்டிலை பதிவு செய்து வைத்திருக்கிறார். விஜயகாந்த் நடித்த 'அரசாங்கம்' படத்தை இயக்கியவரும் இவர்தான். அந்த படத்திற்கே 'எம்ஜிஆர்' என்றுதான் பெயர் வைப்பதாக இருந்தார். ஆனால், அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் பலரும் இது குறித்து அலசுவார்கள். தேவையில்லாத எதிர்ப்பு கூட எழலாம் என்ற எண்ணத்தில், அந்த பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டாராம் விஜயகாந்த். வருடங்கள் ஓடினாலும் கவனமாக இந்த டைட்டிலை புதுப்பித்துக் கொண்டேயிருந்தார் மாதேஷ்.

வில்லு, வேட்டைக்காரனை அடுத்து விஜய் நடிக்கப் போகும் படம் விசேஷமானது. இது இவரது ஐம்பதாவது படம். இந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள், யார் தயாரிக்கப் போகிறார்கள், யார் ஜோடி என்பதெல்லாம் இன்னும் முடிவு செய்யாத விஜய், ஒன்றை மட்டும் முடிவு செய்திருந்தார். அது டைட்டில்! எம்ஜிஆர் என்ற மந்திர சக்தியையே தனது ஐம்பதாவது படத்திற்கு டைட்டிலாக வைக்க விரும்பினார். ஆனால் இந்த பெயரை மாதேஷ் பதிவு செய்திருப்பதை அறிந்ததும், முக்கியமான ஒருவர் மூலம் கேட்டனுப்பினாராம் விஜய். "எம்ஜிஆரை விட்டுக் கொடுப்பதை பற்றி ஆட்சேபணை இல்லை. ஆனால் என் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கணும்" என்றார் மாதேஷ். இப்படி ஒரு டிமாண்ட் வைப்பார் என்பதை எதிர்பார்க்காத விஜய் தரப்பு சைலண்டாக பின்வாங்கியது. ஆனாலும், எஸ்.ஏ.சி இயக்கிய 'பந்தயம்' படத்தில் பேரரசு இயக்குனராகவும், விஜய் ஹீரோவாகவும் வருவது மாதிரி ஒரு காட்சி அமைக்கப்பட்டது. படத்தில் வரும் அந்த படத்திற்கு 'எம்ஜிஆர்' என்று டைட்டில் வைத்து அழகு பார்த்தார் விஜயின் அப்பா எஸ்ஏசி.

இடையே நாட்கள் பரபரவென்று கழிந்தன. 'வில்லு' பட வேலைகளை முடித்துவிட்டு 'அக்கடா' என்று ஓய்வெடுக்கப் போன விஜயின் முன் மீண்டும் வந்து கண்ணாமூச்சு ஆடியது எம்ஜிஆர் படத் தலைப்பு. மாதேஷை அழைத்து நேரடியாகவே பேசினார்.

இதற்கிடையில், 'சிலம்பாட்டம்' படத்திற்கு பிறகு தான் நடிக்கப் போகும் 25 ஆவது படம் மிக பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் சிம்பு. காரணம் இந்த 25 வது படத்தின் போது இவருக்கு 25 வயது நிறைவடைகிறது. இடையில் போடா போடி, கெட்டவன் என்ற இரண்டு படங்களும் க்யூவில் நிற்க, அப்படியே அவற்றை ஓரம் கட்டிவிட்டு, தனக்கு மீண்டும் ஒரு சலசலப்பையும், பளபளப்பையும் ஏற்படுத்திக் கொடுத்த 'சிலம்பாட்டம்' இயக்குனர் சரவணன் இயக்கத்திலேயே ஒரு படத்தில் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாராம் சிம்பு. இருவரது மனசுக்குள்ளும் பளிச்சென்று மின்னிய டைட்டில் எம்ஜிஆர்.

இந்த டைட்டில் யாரிடம் இருக்கிறது என்று அலசிய சிம்பு, மாதேஷிடம் இருப்பதை அறிந்து அவரை நேரடியாகவே அணுகினாராம். இதனால் 'அலர்ட்' ஆனது விஜயின் ஏரியா. இந்த புதையல் வேட்டையில் இனியும் காலம் தாழ்த்தினால் சரிவராது என்ற முடிவெடுத்த விஜய், மாதேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார். விஜயின் ஐம்பத்தியோராவது படத்தை மாதேஷ்தான் இயக்குகிறாராம். ஏற்கனவே விஜய் நடிக்க 'மதுர' படத்தை இயக்கிய இனிப்பான அனுபவம் இருக்கிறது மாதேஷ§க்கு.

மாதேஷ்- விஜய் கூட்டு சேர்ந்ததையும், எம்ஜிஆர் டைட்டில் கைவிட்டு போனதையும் அறிந்த சிம்பு, விஜயின் மீது காட்டமாக இருக்கிறார் என்கிறார்கள் சிம்புவுக்கு நெருக்கமானவர்கள்.

தன்னம்பிக்கையில் அப்பாவுக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல சிம்பு. எப்படியென்றால், தனக்கு நெருக்கமானவர் நடத்திய பார்ட்டி ஒன்றில் இப்படி பேசிக் கொண்டிருந்தாராம். "எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், அஜீத் விஜய்னு சொல்றாங்க. ஆனா நியாயமா அஜீத் சிம்புன்னுதான் சொல்லனும். வேணும்னா தனுஷ் விஜய்னு சொல்லிட்டு போகட்டுமே" என்றாராம். இதை நேரடியாக காதில் வாங்கியவர்கள் அப்போது அதிர்ச்சியை காண்பித்தாலும், சிம்புவின் தன்னம்பிக்கையை ரசித்தார்களாம்.

ஏற்கனவே தனது படங்களில் தன்னை அஜீத் ரசிகனாக காட்டி வரும் சிம்பு, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பஞ்ச் டயலாக் பேசி விஜயையும் சீண்டி வருவது வழக்கம். இவரது சிலம்பாட்டம் படத்தில் "வேணும்னா மலை கூட மோதிக்கோ, எங்க தல கூட மோதினா தாங்க மாட்டே" என்றெல்லாம் பஞ்ச் டயலாக் வைத்திருப்பார்கள். இந்த டைட்டில் மேட்டரும் எரிகிற தீயில் பெட்ரோல் வார்க்க, டைட்டில் சேசிங்கை ஒரு யுத்தம் போலவே ஆக்கிவிட்டார் சிம்பு என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

'வேட்டைக்காரன்' படத்தை முடித்துவிட்டுதான் 'எம்ஜிஆர்' படத்திற்கு வருவார் விஜய். அதற்குள் இதே சாயலில் ஒரு டைட்டிலை முடிவு செய்வேன் என்று சபதமிட்டவர் சொன்னபடி செய்தும் காட்டியிருக்கிறார். 'எம்.கோவிந்தராஜன்' என்பதுதான் அந்த தலைப்பாம். சிபிராஜ் நடித்த 'லீ என்கிற லீலாதரன்' மாதிரி, 'எம்ஜிஆர் என்கிற எம்.கோவிந்தராஜனாக' பதிவாகுமாம் இந்த தலைப்பு. விளம்பரங்களில் 'எம்ஜிஆர்' மட்டுமே பிரதானமாக தெரிவார் என்பதை சொல்லவும் வேண்டுமா?

விஷயத்தை கேள்விப்பட்ட விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், இந்த டைட்டில் குறித்து விஜய டி.ராஜேந்தரிடமே நேரடியாக பேசினாராம்.

சிறு வயதில் பிடிவாதம் காட்டிய இவர்களுக்கு சந்திரனை காட்டி சமாதானப்படுத்திய இந்த அப்பாக்கள், இப்போது செய்வதறியாமல் நிற்கிறார்கள். ஏனென்றால் இந்த பிள்ளைகள் கேட்பது வானத்து சந்திரனை அல்ல. அழகே உருவான பூலோகத்து (ராமச்)சந்திரனை!

நண்பர்களை மறந்திடாதீங்க... புதுமுகத்திற்கு ஜெயம் ரவி அட்வைஸ்


கார்த்திக் அனிதா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, மற்றுமொரு ஆடியவெளியீட்டு விழாவாகவே முடிந்திருக்கும், தங்கர்பச்சான் மட்டும் வராமல் இருந்திருந்தால்! (என்ன பேசினார் என்பதை தனி செய்தியில் காண்க)

எடிட்டர் மோகன் தனது மகன்கள் ஜெயம் ராஜா, ரவி இருவருடனும் வந்திருந்து வாழ்த்தினார். அதற்கு காரணம் இருந்தது. இப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகும் ரத்தன், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மேக்கப்மேன். எடிட்டர் மோகன் தயாரித்த எல்லா படங்களிலும் இவர்தான் மேக்கப் பொறுப்பை ஏற்றுக் கொள்வாராம். எனது குடும்பத்தை சேர்ந்த பையன் ரத்தன். பெரிய ஆளா வரணும் என்று வாழ்த்தினார் மோகன்.

தனது நண்பர்கள் பட்டாளத்தையும் அழைத்து வந்திருந்தார் ரத்தன். இவரது பெயரை சொல்லும் போதெல்லாம் கைதட்டிக் கொண்டேயிருந்தார்கள் அவர்கள். தான் பேசும்போது இது பற்றி குறிப்பிட்ட ஜெயம் ரவி, 'பெரிய ஆளா ஆன பிறகு, இந்த நண்பர்களை மறந்திடாதீங்க. ஆரம்பத்திலே நம்மை கிண்டல் செய்தாலும், அவங்க சொல்ற அட்வைஸ் நமக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும' என்றார்.

'சித்திரம் பேசுதடி பெரிய ஹிட் ஆனாலும், என்னை நம்பி ஒன்றரை கோடி ரூபாய் போட்ட தயாரிப்பாளருக்கு ஒரு கோடி நஷ்டம். அவரது முகத்தை நான் இன்னும் பார்க்கலே. அஞ்சாதே படம் வெளியான பிறகு அவர் என்னை வாழ்த்தி எஸ்எம்எஸ் அனுப்பினார். எப்பவும் முதல் படம் கொடுக்கிற தயாரிப்பாளர்களை மறக்கவே கூடாது. நிச்சயம் அவருக்காக நான் ஒரு படம் இயக்குவேன். இந்த படத்தின் இயக்குனரும் தன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளரை மறக்கக் கூடாது' என்றார் மிஷ்கின்.

படத்தின் நாயகி மஞ்சு, கேரளாவில் இருந்து ஒரு வாழ்த்துக் கடிதம் மட்டும் அனுப்பியிருந்தார். கார்த்திக் அனிதா படத்தின் இயக்குனர் ஸ்ரீஹரி நன்றி கூறினார்.

இனிமே எவனும் புரட்சி, தளபதின்னு பட்டப் பெயர் போட்டுக்க கூடாது! -தங்கர் பச்சான் ஆவேசம்


கார்த்திக் அனிதா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வழக்கம்போல சூடாகவே வந்திருந்தார் தங்கர்பச்சான். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தனது உயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குமரன் பற்றி மிகவும் உருக்கமாக பேசியவர் ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டார். "நானெல்லாம் நிஜமான கலைஞன் இல்லை. 36 வருடங்களாக என் தமிழ் மக்கள் அங்கே கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க. அவங்களை பற்றி ஒரு படத்தை எடுக்க முடிஞ்சுதா? அவங்களோட வாழ்க்கையை எடுக்கணும் என்பதற்காக பல வருடங்கள் போராடி ஒரு கதையை உருவாக்கினேன். இதுக்காக 17 ஆயிரம் இலங்கை அகதிகளை சந்திச்சிருக்கேன். ஆனால் அதில் நடிக்க ஒரு நடிகனும் முன்வரவில்லை"

"யார் யார் அந்த கதையிலே நடிக்க மாட்டேன்னு சொன்னானோ, அத்தனை பேரும் நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரத மேடையிலே உட்கார்ந்திருந்தான். தனது பெயருக்கு முன்னாலே புரட்சின்னு போட்டுக்கிறான். தளபதின்னு போட்டுக்கிறான். எவனுக்கும் அதுக்கு தகுதி கிடையாது. இனிமே எவனும் புரட்சின்னோ, தளபதின்னோ பட்டப் பெயர் போட்டுக்கக் கூடாது. நிஜமான புரட்சின்னா அது முத்துக்குமரன் செஞ்சதுதான். அவனோட தியாகத்திற்கு முன்னால நானெல்லாம் வெட்கி தலை குனிகிறேன்" என்றார்.

பட விளம்பரங்களில் தலைப்பை தவிர, டென்னீஷியன்கள் பெயரை ஆங்கிலத்தில் போடும் இயக்குனர்களையும் ஒரு பிடி பிடித்துவிட்டு இறங்கினார் தங்கர். அவரது வார்த்தைகளில் நிஜமான கோபமும், வேதனையும்!

ஏ.ஆர்.முருகதாஸ்-அஜீத் இணையும் 50 வது படம்!


'யாரு நாற்காலியை யாரு பிடுங்குவாங்களோ' என்ற அதிகபட்ச அலர்ஜியோடுதான் ஒவ்வொரு நாளையும் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் இயக்குனர்கள். இதில் லேட்டஸ்டாக சிக்கிக் கொண்டிருக்கிறார் வெங்கட் பிரபு.

அஜீத்தின் 50 வது படத்தை இயக்க இவர் அட்வான்சே வாங்கிவிட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், 'காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் தள்ளிட்டு போன' கதையாக, அஜீத்தின் 50 வது படத்தை இயக்க முருகதாஸ் வந்துவிட்டார்! காத்திருந்த வெங்கட் பிரபு கலகலத்து போயிருக்கிறாராம்.

இந்தி கஜினியும் பெரும் ஹிட் ஆன சந்தோஷத்திலிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதையடுத்து அவருக்கு பாலிவுட்டிலிருந்தே பலமான அழைப்புகள். ஷாருக்கானிலிருந்து, சல்மான்கான் வரை ரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவருக்குமே உடனே முருகதாஸ் படத்தில் நடிக்க இயலாதபடி முந்தைய கமிட்மென்டுகள்!

இந்த இடைவெளியில் ஒரு தமிழ் படத்தை இயக்கிவிடலாம் என்று யோசித்த முருகதாஸ், அஜீத்திடம் கதை சொல்லியிருக்கிறாராம். இதில் நடிக்க அஜீத் சம்மதித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைகிற படம் அஜீத்தின் 50 வது படமாக இருக்க வேண்டும் என்பதும் முருகதாசின் விருப்பம். தினா படத்தின் மூலம் அஜீத்திற்கு 'தல' என்கிற அந்தஸ்த்தை வழங்கிய முருகதாஸ் கேட்டால் முடியாதென்றா சொல்லப் போகிறார் 'தல'?

Thursday, January 29, 2009

எதிர்கட்சிகள் விமர்சனம்; சிரஞ்சீவி தம்பிக்கு அவசர கல்யாணம்


ஹைதராபாத்: தெலுங்கு நடிகரும், சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாணுக்கும், அவர் கடந்த ஏழு வருடங்களாக கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வரும் காதலியும், முன்னாள் நடிகையுமான ரேணு தேசாய்க்கும் நேற்று அவசரம் அவசரமாக கல்யாணம் நடந்தது.

பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண். அண்ணை போல் இவரும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தற்போது பிரஜா ராஜ்யம் கட்சியின் இளைஞர் அணி தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இவரும் முதல் மனைவி நந்தினியும் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். சமீபத்தில்தான் இருவருக்கும் விவாகரத்து ஆனது.

நந்தினியைப் பிரிந்து வாழத் தொடங்கிய பவன் கல்யாண், 8 ஆண்டுகளுக்கு தன்னுடன் பத்ரி மற்றும் ஜானி ஆகிய தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்த ரேணு தேசாயுடன் காதல் கொண்டார்.இந்நிலையில் முதல் மனைவி நந்தினி, தனக்கு விவகாரத்து கொடுக்காமல் பவன் கல்யாண் அடுத்த கல்யாணம் செய்து கொள்ள கூடாது என கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

இதையடுத்து இருவரும் கல்யாணம் செய்யாமலேயே ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு அகிரா நந்தன் என்ற மகனும் பிறந்தான்.

பவன் கல்யாணுக்கு பிரஜா ராஜ்யம் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டதை அடுத்து இவரது சொந்த பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்தன.கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவது சரியா என்று சராமரியாக கேள்வி கணைகள் தொடுத்தன.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டில் பவன் கல்யாணுக்கு அவருடைய முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து கிடைத்தது. அவருக்கு ஜீவனாம்சமாக 5 கோடி ரூபாய் கொடுப்பதாக அவர் ஒப்புக் கொண்டார்.இந்நிலையில் நேற்று பவன் கல்யாண் ரேணுவை அவசர கல்யாணம் செய்து கொண்டார். இதில் சிரஞ்சீவி, அவரது மூத்த சகோதரர் நாகேந்திர பாபு மற்றும் குடும்பத்தினர் மற்றும் முக்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

கல்யாணத்தின் போது அவர்களது மகன் அகிரா நந்தனும் உடனிருந்தான்.

சுமித்ராவின் 2வது மகள் தீப்தி கதாநாயகியானார்!


நடிகை சுமித்ரா அடுத்து தன் இரண்டாவது மகளையும் களமிறக்குகிறார்.

புவனா ஒரு கேள்விக்குறி, பணக்காரன், தம்பி உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் சுமித்ரா.கன்னட இயக்குனர் ராஜேந்திர பாபுவை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டிலாகிவிட்டார். இப்போதும் ஏராளமான படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

இவரது மூத்த மகள் உமா தமிழில் நிறைய படங்களில் நடித்தார். வீரநடை, தென்றல், சொக்கத் தங்கம், இலக்கணம் உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர் கல்யாணமாகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.இவருக்கு ஒரு தங்கை உள்ளார். பெயர் தீப்தி. கன்னடத்தில் பிரஜ்வால் ஹீரோவாக நடிக்கும் 'சரிகம' என்ற படம் மூலம் ஹீரோயினாகிறார். சினிமாவுக்காக தன் பெயரை நக்ஷத்ரா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

தமிழிலும் நிறைய வாய்ப்புகள் வருவதாகவும், இந்தக் கன்னடப் படத்துக்குப் பிறகே எதையும் ஏறுறுக் கொள்வது என்ற முடிவிலிருப்பதாகவும் கூறியுள்ளார்.அக்கா உமா போல குடும்பப் பாங்கான கேரக்டர்களில் மட்டுமே நடிப்பீர்களா என்று கேட்டால், நிச்சயமாக அப்படி நடிக்க மாட்டேன் என்கிறார் தீப்தி.

பார்த்தாலே புரியுதுங்க!

ஐஸ்வர்யாவை இழுக்கிறது சமாஜ்வாடி - மாதேபுராவில் போட்டி?


முன்னாள் உலக அழகியும், அமிதாப் பச்சன் மருமகளுமான நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனை பீகார் மாநிலத்தின் மாதேபுரா தொகுதியில் வேட்பாளராக நிறுத்த சமாஜ்வாடி கட்சி முயற்சித்து வருகிறது.

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 8 முதல் மே 15ம் தேதிக்குள் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து தேர்தல் ஜூரம் அனைத்து கட்சிகளையும் தொற்றி கொண்டுள்ளது. சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்க துவங்கியுள்ளன.இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி, தனது ஸ்டார் பவரை காட்ட படு மும்முரமாக காய் நகர்த்தி வருகிறது. லக்னோ தொகுதியில் சஞ்சய் தத் அல்லது அவரது மனைவி மான்யதாவை நிறுத்த அது முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் மாதேபுரா தொகுதியில் ஐஸ்வர்யா ராயை, போட்டியிட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

தற்போது பீகார் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஐஸ்வர்யாவை வைத்து ஓட்டை அள்ள அது திட்டமிட்டுள்ளது.ஐஸ்வர்யா போட்டியிட வேண்டும் என்று அங்குள்ள அடிமட்டத் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றனராம்.

இதுகுறித்து அக்கட்சியின் பீகார் மாநில பாராளுமன்ற தேர்தல் குழு தலைவர் துள்சி சிங் கூறுகையில்,
ஐஸ்வர்யா மிகவும் பிரபலமான நடிகை. அவரை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவர் சமாஜ்வாடி கட்சிக்கு நெருக்கமான குடும்பத்தை சேர்ந்தவர்.மாதேபுரா தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என அங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்றார்.சர்ச்சைக்குரிய ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி பப்பு யாதவின் தொகுதியான இதில் ஐஸ்வர்யா போட்டியிட்டால் 2.5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என அம்மாவட்ட சமாஜ்வாடி கட்சி தலைவர் அங்கத் யாதவ், கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஐஸ்வர்யா பச்சனை வேட்பாளராக்கினால் லாலு பிரசாத் மற்றும் சரத் யாதவ் கட்சிகளை எளிதாக தோற்கடிக்கலாம் என எழுதியுள்ளார்.

ஜே.கே.ரித்தீஷ் தயா‌ரிப்பில் மீனா

வீரத் தளபதி, வாழும் வள்ளல் அடைமொழியுடன் உலாவரும் ஜே.கே. ‌ரித்தீஷை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அவரது நாயகன் நூற்றைம்பது நாட்களை‌க் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவரது எதி‌ரிகள் கிளப்பிவிடும் வதந்தி.

வெள்ளிவிழா படம் கொடுத்தவர் ஏன் அடுத்தப் படத்தை தொடங்காமல் இருக்கிறார் என்பது அனைவ‌ரின் மண்டையையும் குடையும் கேள்வி. அடுத்தப் படத்தில் நடிக்கும்முன் தயா‌ரிப்பாளராக புது அவதாரம் எடுக்கிறார் ‌ரித்தீஷ்.

கலைஞர் தொலைக்காட்சிக்காக ஆண்டாள் என்ற மெகா தொடர் தயாராகிறது. மீனா தொட‌ரின் நாயகி. தொடரை ‌ரித்தீஷ் தயா‌ரிக்கிறார்.

வெள்ளித்திரையில் ‌ரித்தீஷின் அடுத்த அவதாரம், வேட்டைப்புலி. ஆமாம், இதுதான் அவர் நடிக்கப் போகும் படத்தின் பெயர். புலிக்கு போட்டீங்களாண்ணா?

மீண்டும் தேசிய விருது கிடைக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறி வருகிறார் நடிகை ப்ரியாமணி.


திரைக்கதா என்ற மலையாளப் படத்தில் நடித்ததற்காக தனக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறி வருகிறார் நடிகை ப்ரியாமணி.
மலையாளத்தில் சமீபத்தில் வெளியான படம் திரைக்கதா. மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் படத்தில் ஸ்ரீவித்யா வேடத்தில் நடிகை ப்ரியாமணி நடித்திருந்தார். 80களில் ஸ்ரீவித்யாவின் தோற்றம், நடிப்பு, நடை, உடை, பாவனை போன்றவைகளை அடிப்படையாக கொண்டு அவர் நடித்திருந்தார். இதனால் இம்முறையும் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூப்படுகிறது.

இதுகுறித்து ப்ரியாமணி கூறியதாவது:

ஸ்ரீவித்யா கெட்டப்பில் நடித்ததற்காக மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என பலரும் நம்பிக்கை தெரிவித்து என்னை வாழ்த்தி வருகின்றனர். மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஏற்கெனவே பருத்திவீரன் படத்துக்கு தேசிய விருது பெற்ற சந்தோஷத்தில் இருக்கிறேன். இந்த தகவல் இன்னும் என்னை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மணிரத்னம் இயக்கும் அசோகவனம் படத்தின் மூலம் இந்தியில் நுழைகிறேன். தொடர்ந்து அங்கும் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன்.

தமிழில் நான் நடித்துள்ள ஆறுமுகம் இப்போது திரைக்கு வரவுள்ளது. தெலுங்கில் துரோனா மற்றும் என்.டி.பாலகிருஷ்ணா படங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது என்றார் ப்ரியாமணி.

தனுஷிற்கு ஹிட் படமாக அமைந்த ‘திருடா திருடி' படத்தை இயக்கியவர் சுப்ரமணியசிவா


தனுஷிற்கு ஹிட் படமாக அமைந்த ‘திருடா திருடி' படத்தை இயக்கியவர் சுப்ரமணியசிவா.
ஒரு படம் ஹிட்டாகிவிட்டால், அதே இயக்குனரும் -நாயகனும் உடனே மீண்டும் ஒரு படத்தில் இணைவதென்பது தமிழ் சினிமா வழக்கங்களில் ஒன்று. ஆனால் சுப்ரமணிய சிவாவுக்கு மட்டும் இது உடனே நடக்கவில்லை. திருடா திருடிக்கு பிறகு ஜீவா நடித்த ‘பொறி' படத்தை இயக்கிய சிவா, தற்போது அமீர் நடிக்கும் 'யோகி' படத்தை இயக்கிவருகிறார்.

இதற்கிடையே மீண்டும் சுப்ரமணியசிவாவும் தனுஷும் ஒரு படத்தில் இணைகின்றனர். படத்திற்கு ‘உன் முகம் பார்த்தேனே' என பெயரிடப்பட்டுள்ளது. மலையாளத்தில் பெரும் வெற்றியையடைந்த ‘நந்தனம்' படத்தின் ரீமேக் இது. மலையாளத்தில் பிருத்விராஜும் நவ்யாநாயரும் நடித்திருந்தனர். தமிழ் ரீமேக்கை மித் புரொடக்‌ஷன் தயாரிக்கிறது.

தகவல் உண்மைதானா என சுப்ரமணியசிவாவிடம் கேட்டபோது,” அடுத்து தனுஷ் படத்தை இயக்கப்போவது உண்மைதான். 'யோகி' படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவடையும் கட்டத்தில் உள்ளது. யோகி முடிந்ததும் மார்ச் மாதம் தனுஷ் படத்தை தொடங்குகிறேன். தலைப்பு மட்டும் மாறும் வாய்ப்புள்ளது. நாயகி மற்றும் டெக்னீசியன்கள் இன்னும் முடிவாகவில்லை” என்றார்.

ஆல்பாவுக்கு 'அல்வா'-சினேகாவுக்கு கோவா!


கோவா படத்தில் ஹாலிவுட் நடிகை ஜெசிகா ஆல்பாவை நடிக்க வைக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹீரோயின்களில் ஒருவராக சினேகா திறமை காட்டவிருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் படம் கோவா. சவுந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தே வார்னர் பிரதர்சுடன் இணைந்து தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவிருக்கும் இப்படத்தில் ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இதில் ஹாலிவுட் நடிகை ஜெசிகா ஆல்பாவை நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து அம்மணியிடம் பேசிய போது அவர் கேட்ட சம்பளம் இயக்குனரை மயக்கம் போட வைத்துள்ளது.

அவர் கேட்ட தொகை கொஞ்சமல்ல 14 கோடி ரூபாய். இது படத்தின் பட்ஜெட்டான 6 கோடியை ரூபாயை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதால் பட குழுவினர் முழி பிதுங்கி வேறு வழியில்லாமல் அவரை நீக்கிவிட்டனார். தற்போது மலிவு விலையில் எதாவது வெள்ளைக்கார நடிகை சிக்குவாரா என தேடி வருகின்றனர்.

இப்படத்தில் உள்ள பல கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க சினேகா ஒப்பந்தமாகியுள்ளார்.

கந்தசாமி... 'கிரேட்' சாமி - வாங்கிய 'அபிராமி'!

மீண்டும் ஒருமுறை கோலிவுட்டை மிரள வைத்திருக்கிறார் பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான அபிராமி ராமநாதன்.
கலைப்புலி தாணு தயாரித்து, விக்ரம் - ஸ்ரேயா நடிப்பில் உருவாகியுள்ள கந்தசாமி படத்துக்கு ரூ.4.01 கோடி கொடுத்து சென்னை நகர விநியோக உரிமையைப் பெற்றுள்ளார் ராமநாதன். லட்சங்களில் போய்க் கொண்டிருந்த சென்னை நகர விநியோக உரிமையை பல கோடி கொடுத்து எடுத்ததுடன், அதை வெளியில் பகிரங்கமாகச் சொல்லி மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தவர் அபிராமி ராமநாதன்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி திரைப்படத்துக்கு ரூ.6 கோடிக்கும் மேல் கொடுத்து அனைத்து விநியோகஸ்தர்களையும் அதிர வைத்தவர், திட்டமிட்டபடி அந்தத் தொகையை சிவாஜி ரிலீசான 50 நாட்களுக்குள் எடுத்து ஆச்சரியப்படவும் வைத்தார்.

கோலிவுட் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு படத்தை சென்னை மாநகரில் மட்டும் 18 திரையரங்குகளில் ரிலீஸ் செய்த துணிச்சல்காரர் ராமநாதன்தான். அவர் கொடுத்த தைரியம்தான் தசாவதாரத்தை 16 திரையரங்குகளில் வெளியிட வைத்தது. குருவியைக்கூட 14 தியேட்டர்களில் வெளியிட்டுப் பார்க்கச் செய்தது.

சிவாஜியாவது பரவாயில்லை, ரஜினி, ஷங்கர், ரஹ்மான் என பெருந்தலைகள் பின்னிய படம்... இப்போது கந்தசாமிக்கும் கிட்டத்தட்ட சிவாஜிக்கு இணையான முக்கியத்துவம் தந்து விநியோக உரிமை பெற்றுள்ளார் அபிராமி ராமநாதன்.

இதுகுறித்து அவர் நம்மிடம் கூறுகையில், 'கந்தசாமி மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் சரியான சம்மர் ட்ரீட்டாக இருக்கும். எனக்கும் சரி, கலைப்புலி தாணுவுக்கும் சரி இது ஒரு நல்ல டீல் என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயம் படம் நன்றாகப் போகும்', என்றார்.

இந்தப் படம் சென்னையில் மட்டும் 18 திரையரங்குகளில் வெளியாகிறதாம்.

ஏப்ரல் இறுதி வாரத்தில் அசத்த வருகிறது கந்தசாமி.

'படிக்காதவன்' சுராஜ் இயக்கத்தில் அஜித்


'தல' ரசிகர்களுக்கு அடுத்த தீனி தயாராகவிருக்கிறது. பொங்கல் வெற்றிப்படமான படிக்காதவன் இயக்குனர் சுராஜுடன் அடுத்த படம் குறித்து அஜித் விவாதித்து வருவதாக தெரிகிறது.
பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் தனுஷ், தமன்னா நடித்து சுராஜ் இயக்கிய படிக்காதவன் படம் வசூலில் கலக்கி வருகிறது. மருதமலை படத்தை தொடர்ந்து படிக்காதவனும் நன்றாக ஓடுவதை அடுத்து கோடம்பாக்கம் கவனிக்கும் முக்கிய இயக்குனராகிவிட்டார் சுராஜ். அவருக்கு பல நடிகர்களிடம் இருந்து அழைப்பு வருகிறது. அவரை முதலில் அழைத்தவர் நம்ம 'தல'. தற்போது சரணின் இயக்கத்தில் சமீரா ரெட்டியுடன் அசல் படத்துக்காக டூயட் பாடி வரும் அஜித், அடுத்து சுராஜ் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இது தொடர்பாக இருவரும் தீவிர டிஸ்கசனில் இருப்பதாகவும், விரைவில் கதை முடிவாகும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோரும் சுராஜூக்கு அழைப்பு விடுத்துள்ளனர்

கோடம்பாக்க டிஸ்கஷனில் ஒபாமா கதை


சாதாரண குடும்பத்தில் பிறந்து சரித்திர நாயகனாகி கடந்த ஆறு மாதங்களாக உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர்தான் அமெரிக்க அதிபர் ஒபாமா.
தேர்தலில் போட்டி என்று முடிவான அடுத்த நொடியிலிருந்து ஒபாமா உதிர்த்து வந்த ஒவ்வொரு வார்த்தையிலும் நம்பிக்கையின் நயாகராதான். அவரது நம்பிக்கை சிரசை அலங்கரிக்கும் கீரிடம்தான் அதிபர் பதவி. எப்படி இது சாத்தியம்! என யோசிப்பவர்களுக்கு பதிலாக கிடைப்பதும் ஒபாமாவின் நம்பிக்கையும், சரியான திட்டமிடலுமே. ஒபாமாவின் இந்த வெற்றி வரலாற்றில் ஒன்றாகியுள்ள இத்தருணத்தில் அவரது கதைக்கு திரைக்கதை தீட்டும் வேலை கோடம்பாக்கத்தில் ஜரூராக நடந்தேறிவருகிறது. ஒபாமாவின் கல்லூரி பருவத்தில் ஆரம்பித்து அதிபராக அவர் சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெறுவதுவரை கதையை உருவாக்கிவருகிறார்களாம். நமக்கு தெரிந்த சில சினிமா உதவி இயக்குனர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள்தான் இது.

எனினும் ஒபாமா கதையை படமாக எடுப்பதென்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. ஒரு குப்புசாமியோ ராமசாமியோ இதனை தயாரிக்கவோ இயக்கிவிடவோ முடியாது. இதற்காக பெரும் பட்ஜெட் தேவைப்படுவதுடன், மணிரத்னம், ஷங்கர் போன்ற கைத்தேர்ந்த ஹைடெக் இயக்குனர்களுக்கு மட்டும் சாத்தியப்படும் ஒன்று. எனவே உப்புமா பார்ட்டிகளெல்லாம் தண்ணியடிப்பதற்காக மட்டும் இதனை யோசிக்கலாமே தவிர, வெளியே சொல்லி பெருமை பேசினால், பார்ட்டி பைத்தியம்போல.... என்ற சந்தேக பார்வைக்கு உள்ளாக நேரிடும்.

எது எப்படியோ ஒருவேளை ஒபாமா கதை படமாக நேர்ந்தால், அப்போதுகூட ‘இது என்னோட சொந்த கதை' என வழக்குபோடும் விநோத வியாதியஸ்தர்களும் இந்த கோடம்பாக்கத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

விவேக்கிற்கு விருது....! கோடம்பாக்கம் கர்ர்ர்ர்புர்ர்ர்ர்


நடிகர் விவேக்கிற்கு பத்ம ஸ்ரீ விருது கிடைத்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கோடம்பாக்கத்தில் கர்ர்ர்புர்ர்ர்ரென்று பரவலான உறுமல் சத்தம். இரட்டை அர்த்த வசனங்களை சகட்டுமேனிக்கு பேசிவரும் விவேக்கிற்கு இந்த விருதை கொடுத்திருக்கிறார்களே, இவருக்கு கொடுத்ததற்கு பதிலாக வடிவேலுவுக்கே கொடுத்திருக்கலாம் என்று கருத்து தெரிவிப்பவர்களும் உண்டு.

மணி மணியாக காமெடி செய்யும் அந்த நகைச்சுவை நடிகர், 'இந்த வருசம் ஆயிரம் பேருக்கு விருது கொடுத்தாங்கல்ல, அதிலே ஒன்னு சும்மாதான் இருக்கு. எடுத்திட்டு போ என்று இதுகிட்டேயும் சொல்லிட்டாங்க போலிருக்கு' என்று காமெண்ட் அடித்தாராம். இப்படி சிலிர்க்க வைக்கும் கோடம்பாக்க குமுறல்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்...

பிளாக்குகளிலும் கிழிகிழியென்று கிழிக்கிறார்கள் (இந்த வார்த்தையை நினைவுபடுத்திய டான்ஸ் மாஸ்டர் கலாவுக்கு நன்றி) வாசகர்களை ஏராளமாக கொண்டிருக்கும் இட்லிவடை பிளாக்ஸ்பாட்.காம் இப்படி வறுத்தெடுத்திருக்கிறது.

நமது மீடியாவிற்கு சினிமா, அரசியல் தவிர வேறு ஒன்றும் தெரியாது( நானும் இதில் அடக்கம்). நடிகர் விவேக், எழுத்தாளர் ஜெயகாந்தன்(சில நேரங்களில் சில மனிதர்கள், மற்றும் அவரது அரசியல் விமர்சனம் ஆகிவற்றால் பிரபலம் ஆனவர்) ஆகியோருக்கு பத்ம விருதுகள் கிடைத்த பத்தாவது நிமிஷம் இவர்கள் வீட்டு கதவு தட்டப்பட்டு, தூக்கத்திலிரிந்து எழுப்பி “உங்களுக்கு விருது கிடைத்திருக்கு, அதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க” என்ற பேட்டியை ஒளிபரப்பினார்கள். கே.டிவியில் சிரிப்பு வெடிகளில் வாத்துன்னு நினைத்து பின்பக்கம் சுட்டதாக வழக்கு, விவேக்: ஏண்டா வாத்துக்கும் -த்துக்கும் வித்தியாசம் தெரியாதா?

குரங்குக் கவிதைக்குப் பரிசு கிடைத்திருக்கிறது...

வரலாறு-னு ஒரு துறை இருக்காம், தெரியுமா? அதையும் ஒரு துறை-னு மதிச்சு, பணத்தைக் கொட்டி, குடும்பத்தைப் பார்க்காம, தள்ளாத வயசுலையும் கல்வெட்டு, குகைக் கோயில், கட்டுமானம், சிற்பம்-னு அலையற பிழைக்கத் தெரியாத கூட்டம் பல வருஷமா, மைனாரிட்டியா அலையுது (without reservation, of course). அவங்களையும் ஒரு ஆளா மதிச்சு ஜனாதிபதி விருது கொடுக்கறது....சுஜாதா சொல்லுவாரே...... குரங்கு தவறி டைப்ரேட்டர் மேல குதிச்சதுல, அது உடம்பு பட்ட கீ-யெல்லாம் பேப்பர்-ல தட்டச்சாகி, அது ஒரு கவிதையா இருந்து, அந்த கவிதையைப் போட்டிக்கு அனுப்பி, அந்தக் கவிதைக்கு முதல் பரிசும் கிடைக்கிற மாதிரி....எத்தனையோ வருடங்கள் முன்னால 'தொல்லியல் இமயம்' கே.ஆர்.சீனிவாஸனுக்கு பத்ம பூஷண் கொடுத்தாங்க, அதுக்கு அப்புறம், தவறாம இரண்டாவது ரவுண்டுல தோற்கும் சானியா (பேசாம சூனியா-னு பேரை வெச்சா சரியா இருக்கும்), ஸ்ருதியே சேராம பாடறவங்க, சிரிப்பே வராம நடிக்கும் காமெடி கிங்ஸ், சீரியசா செய்யறதையெல்லாம் பார்த்தா சிரிப்பா வர மாதிரி நடிக்கும் ஹீரோகள், டாக்டராக பல பேர் உயிரைக் கொல்லாம இருக்க வேண்டு திரையுலகம் தத்தெடுத்துக் கொண்ட கதாநாயகிகள்...இப்படி பல ரக மக்களைத் தாண்டி, இந்த வருஷம் குரங்குக் கவிதைக்கு பரிசு கிடடச்சாச்சு!

குமுதம் ஓ போடு பகுதியில் எழுத்தாளர் ஞானியும் விவேக்கின் பத்மஸ்ரீ பற்றி எழுதியிருக்கிறார். 'பத்மஸ்ரீ விருது இந்த வருடம் நடிகர் விவேக்கிற்கு தரப்பட்டது. இப்போது சுமார் 75 வயதை எட்டிவிட்ட நாகேஷ¨க்கு பத்மஸ்ரீ விருது 40 வருடங்களுக்கு முன்பே தரப்பட்டிருக்க வேண்டும். இன்று வரை இல்லை. இனிமேல் நாகேஷுக்கெல்லாம் பத்மவிபூஷணே கொடுத்தால் கூட அது அவமரியாதைதான். அவர் பெயரில் ஒரு விருதை ஏற்படுத்துவதுதான் நியாயம்'.

இந்த விருது அறிவிக்கப்பட்டவுடன் விவேக் சொன்னது இதுதான். 'இனிமே இன்னும் பொறுப்போட செயல்படனும்!' அவரே சொன்ன மாதிரி இனிமேலாவது இரட்டை அர்த்த வசனங்களை குறைத்துக் கொண்டால் கை நீட்டி வாங்கிய விருதுக்கு மரியாதை!

20 கோடி, 30 கோடி தெருக்கோடி! -குமுறுது கோடம்பாக்கம்...


அதிரடியாக ஒரு முடிவெடுத்தால்தான் உண்டு. இல்லையென்றால் 'இன்று கடை விடுமுறை' போர்டை நிரந்தரமாக மாட்ட வேண்டியிருக்கும் என்று முடிவெடுத்தார்களோ என்னவோ, விநியோகஸ்தர்கள் அத்தனை பேரும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போயிருக்கிறார்கள். இவர்களின் கோஷம், 'நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்!'

'சிவா மனசுல சக்தி' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இராம.நாராயணன் பேசியது நூற்றுக்கு நூறு யதார்த்தம்! 'சமீபத்தில் இரண்டு கோடி மூணு கோடியில் எடுக்கப்பட்ட படங்கள் பல கோடிகள் லாபம் சம்பாதித்தன. இருபது கோடி, முப்பது கோடியில் எடுக்கப்பட்ட படங்கள் தெருக்கோடியில் நின்றன' என்றார் காட்டமாக. இருபது கோடிக்கு படம் எடுத்தாலும், அதில் முக்கால்வாசி சம்பளத்தை முழுங்கிக் கொள்வது ஹீரோக்கள்தான். படமே ஓடாவிட்டாலும் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள தயாராக இல்லை இவர்கள். நீர் உயர, நெல் உயரும் கதையாக பட்ஜெட் உயர உயர படத்தின் ரேட்டும் உயர்கிறது. பணத்தை போடும் விநியோகஸ்தர்கள், அதை திருப்பி எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறார்கள்.

இதையடுத்து இன்று தயாரிப்பாளர் சங்கத்தில் விநியோகஸ்தர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெறுகிறது. முடிவு என்னாகுமோ என்று மூச்சை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த 'நிரந்தர' கோடீஸ்வரர்கள்!

பேக்கேஜ் இசைக்கான பில்! 'பேஸ்த்' அடித்து ஓடிய தயாரிப்பாளர்


'நான் அவனில்லை' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போகிறது. தயாரிப்பாளர், ஹீரோ, இயக்குனர் உள்ளிட்ட அத்தனை பேரும் இந்த முறையும் 'ரிப்பீட்' அடிக்கிறார்கள். ஆனால் இசையமைப்பாளர் தவிர.

ஜீவன் நடித்து, செல்வா இயக்கிய 'நான் அவனில்லை' சூப்பர் ஹிட் ஆனதை யாவரும் அறிவர். இதில் வரும் 'ஏன்னெனக்கு மயக்கம், ஏன்னெனக்கு நடுக்கம்' என்ற பாடல் இப்போதும் சேனல்களில் வருடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த படத்திற்கு இசையமைக்க வாங்கிய ரேட்டை இப்போது பல மடங்கு ஏற்றிவிட்டாராம் விஜய் ஆன்ட்டனி. அதனால்தான் என்ஜினிலிருந்து இந்த கேரேஜை மட்டும் கழற்றிவிட்டு விட்டு பயணத்தை தொடர முடிவு செய்துவிட்டார்கள். இவர்கள் என்ஜினில் புதிதாக சேர்ந்திருக்கும் இசைப்பெட்டி டி.இமான்.

'பேக்கேஜ்' என்ற வார்த்தையை சரளமாக உபயோகிக்கும் இவ்வித இசையமைப்பாளர்கள், மணிகொரு தடவை குடிக்கிற டீ காசை கூட முன்பே வாங்கிவிடுகிறார்கள்! ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு கோடியே 40 லட்சமும், ரஹ்மான் ஒரு கோடியே 20 லட்சமும், யுவன் 80 லட்சமும் பில் போடுகிறார்களாம். இந்த வரிசையில்தான் தன்னையும் சேர்த்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறார் விஜய் ஆன்டனி. 'நான் அவனில்லை' இரண்டாம் பாகத்திற்கு இவர் கேட்ட சம்பளம் 50 லட்சம்!

இவரது பில்லை பார்த்த தயாரிப்பாளர் 'நான் அவனில்லைங்கோ' என்றபடியே ஓடி வந்துவிட்டாராம்!

மரியாதைக்கு மரியாதை! விஜயகாந்த் புதுமுடிவு


சரோஜா படத் தயாரிப்பாளர் டி.சிவா தயாரிக்கும் 'மரியாதை' படத்தில் நடித்து வந்தார் விஜயகாந்த். 'வானத்தை போல' வெற்றிக்கு பிறகு இயக்குனர் விக்ரமனும், விஜயகாந்தும் இணைகிற படம் என்பதால், பழைய வெற்றியை இந்த கூட்டணி மீண்டும் பிடிக்கும் என்ற நம்பிக்கை விநியோகஸ்தர்கள் மத்தியிலும் நிலவுகிறது. முதல் ஷெட்யூல் படப்பிடிப்புக்கு இடையே திடீரென்று திருமங்கலம் இடைத்தேர்தல் வந்தது. அனல் பறக்கும் பிரச்சாரம், வோட்டு வேட்டை இவற்றின் காரணமாக படப்பிடிப்பை தள்ளி போட்டிருந்த கேப்டன், மீண்டும் மரியாதையில் கவனம் செலுத்த முடிவு செய்துவிட்டார்.

பின்னாலேயே பாராளுமன்ற தேர்தலும் வரவிருக்கிறது. அப்போது பிரச்சாரத்திற்கு சென்றால், மரியாதை ஷெட்யூல் மேலும் தள்ளிப் போகும் என்பதால், உடனடியாக படத்தை முடித்துவிட வேண்டும் என்று கருதினாராம். அதுமட்டுமல்ல, அரசியல் வேகத்தில், தன்னை வளர்த்துவிட்ட சினிமாவை கண்டு கொள்ளாமல் இருந்துவிடக் கூடாது என்றும் நினைக்கிறாராம். அதனால் மரியாதை படத்தை முடித்துவிட்டு சூடோடு சூடாக வேறு படங்களை ஒப்புக் கொள்ளும் முடிவிலும் இருக்கிறாராம்.

தேர்தல் ஒருபக்கம். நடிப்பு மறுபக்கம் என்று இரட்டை குதிரை சவாரி செய்ய தன்னை பழக்கிக் கொண்டிருக்கும் கேப்டன், பிப்ரவரி 1 ந்தேதி மரியாதை படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். பொள்ளாச்சியில் நடைபெறவிருக்கிறது ஷ§ட்டிங். முழு படத்தையும் முடித்துவிட்டுதான் அரசியல் வேலைகளில் ஈடுபடுவாராம்.

முற்பகல் செய்யின் பிற்பகல்? வேதனையில் தவிக்கும் நடிகை!


'மருந்தில்லாத தீக்குச்சியா இருந்தாலும், எறும்பு நசுக்க உதவுமே' என்ற எண்ணம் இல்லாமல் போனதால், இப்போது வருந்திக் கொண்டிருக்கிறார் நயன்தாரா! (அட, நயன்தாரா இல்லாம நியூஸ் எழுத முடியாதா என்று வாசகர்கள் ஆத்திரப்பட வேண்டாம்! காய்க்கிற மரம்தானே, கல்லடி படட்டும்)

'திருவிளையாடல்' கதையை வைத்துக் கொண்டு கோடம்பாக்கம் முழுவதும் சுற்றித்திரிந்தார் பூபதி பாண்டியன். அப்போதெல்லாம் இவரை சரியாக அங்கீகரிக்கவில்லை பல ஹீரோக்களும், சில ஹீரோயின்களும். அதில் ஒருவர் நம்ம நயன்தாரா! எப்படியோ தனுஷ் கதை கேட்டார். கேட்டதும் பிடித்துப் போக உடனே உருவானது திருவிளையாடல். சூப்பர் ஹிட்! அதன்பின் பூபதி பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலாதான். முன்பு தன்னை புறக்கணித்தவர்களை தவிர்த்துவிட நினைத்தார். திருவிளையாடல் ஹிட்டுக்கு பிறகு, 'சிலர் நான் ஃபிரீயாத்தான் இருக்கேன். கால்ஷீட் வேணுமா' என்று கேட்காத குறைதான்!

தற்போது ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் பூபதி பாண்டியன். இவருக்கு ஜோடியாக யாரை போடுவது என்று லிஸ்ட் போடப்பட்டது. அதில் நயன்தாராவின் பெயரும் இருக்க, அதை மட்டும் தனது சிவப்பு இங்க்கினால் அடித்தாராம் பூபதி பாண்டியன். விஷயத்தை கேள்விப்பட்டு வேதனைப்படுகிறார் நயன்.

Wednesday, January 28, 2009

ஆஸ்கார் விழாவில் கேட்டு ரசிக்க ரஹ்மான் இசை


இந்த மாதம் ஏ.ஆர்.ரஹ்மான் மாதம் போலும். 'கோல்டன் குளோப்', ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை என அடுத்தடுத்த சர்"பிரைஸ"கள் ரஹ்மானை தேடி வந்தது. இந்நிலையில் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு இசை அமைத்ததற்காக 'கோல்டன் குளோப்' விருது பெற்ற ரஹ்மானின் பெயர் ஆஸ்காருக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 21-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் விருது விழாவில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட இருக்கிறது. இதில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் இடம்பெற்ற "ஜெய் ஹோ..." என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தி பின்னணி பாடகர் சுக்விந்தர் சிங் பாடுகிறார்.

ரஹ்மான், சுக்விந்தரிடம் இத்தகவலை சொன்னார். அதற்காக தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். மேடையில் பாடுவது புதிதில்லை என்றாலும் ஆஸ்கார் விழாவில் பாடுவது பெரிய விஷயம்தான் என்று சுக்விந்தர் தரப்பில் கூறப்பட்டது. இந்தப்பாடலை எழுதிய இந்தி கவிஞர் குல்ஷாரும் இவ்விழாவில் பங்கேற்கிறார்.

ரஹ்மான் இசையில் குல்ஷார் எழுதி சுக்விந்தர் பாடிய 'சைய்ய சைய்ய...' பாடல் பட்டையை கிளப்பியது. இந்தப் பாடல் 'இன்சைட் மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

ேசிய விருது நம்பிக்கையில் பூஜா, ப்ரியா மணி


பூஜா, ப்ரியாமணி மனசுக்குள் இப்போதே தொடங்கிவிட்டது தேசியவிருது கவுண்டவுன்.

பருத்திவீரனின் முத்தழகு பாத்திரம் ப்ரியாமணியின் கையில் தேசிய விருதை விழவைத்தது. ப்ரியாவின் ரேகையில் ஒன்றாக பதிவாகிப்போன தருணம் அது. இன்னொருமுறை ப்ரியாமணி தேசிய விருது வாங்குவதற்கான வாய்ப்பிருக்கும் படம் 'திரைக்கதா'. மலையாளத்தில் வெளிவந்த இப்படம் 1982-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரையிலான ஒரு நடிகையின் வாழ்க்கைதான் இப்படத்தின் கதை.ஸ்ரீவித்யாவின் நடை, உடை, பாவனைகளை அடிப்படையாக கொண்டு இப்படத்தில் நடித்திருக்கிறார் ப்ரியாமணி.

இப்படத்திற்காக ப்ரியாமணிக்கு தேசியவிருது கிடைக்கும் என மலையாள திரையுலகில் பேசப்பட்டு வருகிறது, ஒரே நடிகை தொடர்ந்து இருமுறை தேசிய விருது இதுவரை வாங்கியதில்லை. ஒருவேளை ப்ரியாமணி அந்த சாதனையை செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரியாமணிக்கும் அந்த நம்பிக்கை அதிகம் இருப்பதாக கூறியுள்ளார்.

தேசிய விருதை நம்பியிருக்கும் இன்னொருவர் பூஜா. 'நான் கடவுள்' படத்தில் பூஜா பார்வையற்றவராக நடித்துள்ளார். அவரது நடிப்பிற்காக தேசிய விருது கிடைக்கும் என நான் கடவுள் யூனிட் முழுவதும் ஆரம்பத்திலிருந்தே பெருகி வருகிறது பாராட்டுரைகள். தேசிய விருதுக்கு பரிந்துரைக்கும் நடிகர், நடிகைகள் நடித்துள்ள படத்தில் சொந்தக்குரலில் பேசியிருக்க வேண்டும் என்பது விருது கமிட்டியின் விதி. எனவே இதுவரை சொந்தக்குரலில் பேசாத பூஜா நான் கடவுள் படத்தில் சொந்தக்குரலில் பேசியிருக்கிறார்.

பூஜா, ப்ரியா யாருக்கு தேசிய விருது கிடைத்தாலும் அது தென்னிந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்பதால் இருவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

'நான் அவனில்லை' இரண்டாம் பாகம்


பந்தயத்தில் ஒரு முறை ஜெயித்துவிட்டால் அடுத்த ஆட்டத்திலும் அதே குதிரையை நம்பி பணம் கட்டலாம். இந்த சூட்சமத்தை புரிந்துகொண்டு 'நான் அவனில்லை' டீம் மீண்டும் இணைந்து இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகிவிட்டது.

கே.பாலசந்தர் இயக்கத்தில் 1974-ம் ஆண்டு வெளிவந்து வெற்றியான படம்தான் 'நான் அவனில்லை'. இதற்கு இக்கால கலர்பூசி ரீ-மேக் செய்த இயக்குனர் செல்வா, அதனை வெற்றிப்படமாக்கிக் காட்டினார். வெற்றியின் ருசி, செல்வாவிற்கும், தயாரிப்பாளர் நேமி சந்த் ஜபக்கிற்கும் உள்நாக்குவரை இனித்துக் கொண்டிருக்க இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

நான் அவனில்லை இரண்டாம் பாகத்தில் ஜீவன்தான் ஹீரோ. நாயகிகள் யாரென்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை. சினேகாவும், நமீதாவும் மட்டும் நடிப்பது உறுதி எனத் தெரிகிறது. இசை, ஒளிப்பதிவு என மற்ற டெக்னீசியன்கள் பழைய டீம்தான். படத்திற்கான கதை விவாதத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார் இயக்குனர் செல்வா.

திரைக்கதை மட்டுமின்றி லொகேஷன்களும் முதல் பாகத்திலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டு இருக்குமாம். 80 சதவீத படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த தி்ட்டமிட்டுள்ளனர். மார்ச் மாதம் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் நேமி சந்த் ஜபக் தெரிவித்தார்.

'கல்யாண ராமன்' படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை 'ஜப்பானில் கல்யாண ராமன்' என்ற பெயரில் ஜப்பான் நகரங்களில் படமாக்கினார்கள். இதே பாணியில்தான் 'நான் அவனில்லை' இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளனர். 'ஜப்பானில் நான் அவனில்லை' என பெயர் வைக்காமல் இருந்தால் சரிதான்.

அடுத்தடுத்து சன் பிக்சர்ஸ் படம்: நான் ரொம்ப லக்கி! -தமன்னா


அடுத்தடுத்து சன் பிக்சர்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. நான் உண்மையிலேயே ரொம்ப லக்கி, என உற்சாகத்தில் துள்ளுகிறார் 'சின்னப் பொண்ணு' தமன்னா!
தமிழ் சினிமாவில் மிக இளம்வயது நாயகி என்றால் அது தமன்னாதான். கேடியில் அறிமுகமான இவருக்கு, கல்லூரியில் ஒரு பிரேக் கிடைத்தது. அடுத்து வந்த படிக்காதவன் மூலம் பக்கா கமர்ஷியல் நாயகியாக கலக்க ஆரம்பித்து விட்டார். இந்த ஆண்டு தமன்னாவுடையது எனும் அளவுக்கு வரிசையாக மெகா படங்கள் காத்திருக்கின்றன.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

படிக்காதவன் படம் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. அடுத்து அதே சன் நிறுவனத்தின் அயன் படத்திலும் நான்தான் நாயகி.

அடுத்தடுத்து சன் பிக்சர்ஸின் இரண்டு படங்களில் நான் நடித்த பெருமை அநேகமாக எனக்கு மட்டும்தான் கிடைத்துள்ளது. ரொம்ப லக்கி நான்.

அயன் படத்தில் கல்லூரி மாணவி வேடம். எதுவாக இருந்தாலும் மற்றவர் முகம் பார்த்து தைரியமாக பேசிவிடும் வேடம். இந்த வேடம் செய்வது எனக்குப் புதிதாக இருந்தது. காரணம், நிஜத்தில் நான் அந்த மாதிரி கிடையாது.

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக பையா படத்தில் நடித்து வருகிறேன். தெலுங்கில் 'கொஞ்சம் இஷ்டங்கா கொஞ்சம் கஷ்டங்கா' படத்தில் நடித்துள்ளேன்.

ஜப் வீ மெட் ரீமேக்கில் பரத் ஜோடியாக நடிக்க உள்ளேன். இதன் ஷூட்டிங் மார்ச்சில் தொடங்குகிறது. ஜப் வீ மெட் இந்திப் படத்தையும் பார்த்திருக்கிறேன். இதில் நடித்ததற்காக கரீனா கபூருக்கு சிறந்த நடிகைக்கான பல விருதுகள் கிடைத்தன. எனவே இந்த வேடம் எனக்கு சவாலானது. அதே நேரம் அவரது நடிப்பை காப்பி அடிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன், என்றார்.

ரொம்ப தெளிவு!

'தம்' வதந்தி .. ரீமா டென்ஷன்!


தனக்கு மது அருந்தும் பழக்கமும், புகை விடும் பழக்கமும் நிறைய இருப்பதாக வெளியாகியுள்ள வதந்தியால் ரீமா சென் படு கோபமடைந்துள்ளார்.
சமீபத்தில் ரீமா சென் மது பிரியை, அடிக்கடி காக்டெய்ல் பார்ட்டிகளுக்குப் போகிறார். புகை பிடிக்கும் பழக்கமும் அவருககு உண்டு. தம் கையில் இல்லாவிட்டால் அவரால் நிம்மதியாக இருக்க முடியாது என கிசுகிசுக்கள் கிளம்பின.

இதைக் கேள்விப்பட்ட ரீமா சென் கடுப்பாகியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், எனக்கு மும்பையில் நிறைய நண்பர்கள் உண்டு. எனவே அடிக்கடி அங்கு போவது வழக்கம். இதில் வேறு விசேஷம் எதுவும் இல்லை.

நான் மதுவுக்கு அடிமை என்ற ரீதியில் செய்திகளை வெளியிடுகிறார்கள். ஆனால் நான் மென்மையான ஆல்கஹால் கலந்துள்ள பானங்களைத்தான் அருந்துவது வழக்கம். அவர்கள் எழுதியுள்ளது போல ஹாட் டிரிங்க்ஸ் பக்கம் நான் போவதே இல்லை என்று கூறியுள்ளார் ரீமா.

படப்பிடிப்புக்காக சென்னையில் முகாமிட்டுள்ள ரீமா சென், என்னைப் பற்றி ஏன்தான் இப்படி வதந்தி பரப்புகிறார்களோ, தெரியவில்லை. யார் இதைச் செய்தது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன் என்றார்.

விக்ரம் படத்தில் நடிக்கிறார் நதியா


நதியா நடிக்கும் படத்தை பார்க்கவே ஆசை இருக்கும்போது நதியாவுடன் நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது.
விக்ரமின் இந்த ஆசை விரைவில் நிறைவேறப்போகிறது. எண்பதுகளின் இறுதியில் பேன்சி பொருட்களில் ஆரம்பி்த்து ஆடை ஆபரணங்கள்வரை அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்தது நதியாவின் பெயர்தான். திருமணமானபிறகு வெளிநாட்டிற்குபோன நதியா, கணவர், குழந்தைகள் என தமிழ்நாட்டு வாடையே இல்லாமல் இருந்தார். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாவா இருக்கும். நதியாவை மீண்டும் கோடம்பாக்கத்திற்கு கொண்டுவந்துவிட்டது அவரது கலை ஆர்வம்.

இப்போதும் ஒண்ணும் கெட்டுப்போகல. ஹீரோயினா நடிங்கன்னு கதைசொல்ல காத்திருக்கும் இயக்குனர்கள் நிறைய. அந்த அளவிற்கு நதியாவின் இளமை, போன்சாய் மரமாய் மாற்றமில்லாமல் இருக்கிறது. 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி' யில் ஜெயம்ரவிக்கு அம்மாவாக நடிக்க அழைத்துவந்த ராஜா, நதியா ரசிகர்களின் புண்ணியத்தை கட்டிக்கொண்டார்

தமிழ் சினிமாவில் இப்போது மீண்டும் நதியாவின் அலை. அண்ணி, அக்கா, அம்மா வேடமென்று கலக்கிக் கொண்டிருக்கிறார். நாம் முதல் பாராவில் சொன்னதுபோலவே நதியா நடிக்கும் படத்தை பார்க்கவே ஆசை இருக்கும்போது அவருடன் நடிக்க நம் நடிகர்களுக்கு ஆசையில்லாமலா போகும்! விக்ரமிற்குள்ளும் இந்த ஆசை இருந்திருக்கிறது.

சமீபத்தில் நதியாவின் வீட்டிற்கே போன விக்ரம், "உங்களுடன் ஒரு படம் நடிக்கணும் என தனது ஆசையை தெரிவிக்க" நதியாவிற்கு இன்ப அதிர்ச்சியாகிவிட்டாதம். "வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துவரும் உங்க படத்துல நடிக்கிறது எனக்கும் பெருமைதான்" என நதியா சொல்ல, உருகிவிட்டாராம் சீயான்.
அநேகமாக அமீர் இயக்கப்போகும் படத்தில் விக்ரமின் அக்காவாகவோ, அண்ணியாகவோ நதியா நடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பி அனுப்பும் ரோஜா!


லோக்சபா தேர்தலுக்கு நடிகை ரோஜா தயாராகி வருகிறார். தேர்தல் நடந்து முடியும் வரை சினிமாவில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறாராம்.

தமிழ், தெலுங்குத் திரையுலகை ஒரே நேரத்தில் கலக்கியவர் ரோஜா. 100 படங்களில் நாயகியாக நடித்து சாதனை படைத்தவர். இதனால் விழாவும் கண்டவர்.

காலப் போக்கில் ரோஜா நடிப்பிலிருந்து மெல்ல விலகி அரசியலில் புகுந்தார். ஆந்திர மாநில தெலுங்கு தேச மகளிர் அணித் தலைவியாக இப்போது ஆந்திர அரசியலைக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சமீப காலமாக சினிமாவில் அதிக ஆர்வம் காட்டாமல் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் ரோஜா. சமீபத்தில் தயாரிப்பாளர் ஆர்.கே. வேண்டிக் கேட்டுக் கொண்டார் என்பதற்காக (இவர் ரோஜாவின் கணவர் ஆர்.கே.செல்வமணியின் நண்பர் என்பதால்) அவரது எல்லாம் அவன் செயல் படத்தில் மட்டும் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது லோக்சபா தேர்தலில் ஆந்திர தேர்தல் களத்தை ரோஜாவின் பிரசாரம் சூடாக்க உள்ளதாம்.

சிரஞ்சீவியின் வருகையால் தெலுங்கு தேசம் சற்றே ஆடிப் போயுள்ளதால், ரோஜாவின் பிரசாரத்தை சந்திரபாபு நாயுடு அதிகம் நம்பியுள்ளாராம்.

இதனால் இப்போதே மக்கள் மத்தியில் பிரசாரத்தைத் தொடங்குமாறு அவருக்கு உத்தரவு போயுள்ளதாம். ஏற்கனவே தனது அதிரடி நடவடிக்கைகளால் மக்களிடையே பாப்புலராகியுள்ள ரோஜாவும், தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொள்ளத் தயாராகி வருகிறார்.

இதனால் தேர்தல் முடியும் எந்தப் படத்திலும் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறாராம்.

சமீபத்தில் ரோஜாவை அணுகிய சில தயாரிப்பாளர்களிடம், தேர்தலுக்குப் பிறகு பார்க்கலாம் என்று கூறி அனுப்பி வைத்து விட்டாராம்.

படமாகும் நாராயண குரு வாழ்க்கை


கேரளாவைச் சேர்ந்த சமுதாய சீர்திருத்த சிற்பியான ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இதில் தலைவாசல் விஜய், நாராயண குரு வேடத்தில் நடிக்கிறார்.

தமிழகத்துக்கு எப்படி பெரியாரோ அதேபோல கேரளாவில் நாராயண குரு சமுதாய சீர்திருத்த சிற்பியாக மலர்ந்தார்.

தலித் மக்களின் உரிமைக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர் நாராயண குரு. அவரது வாழ்க்கையை மலையாளத்தில் திரைப்படமாக்குகின்றனர்.

நம்ம ஊர் தலைவாசல் விஜய் நாராயண குரு வேடத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. நவ்யா நாயர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
பாலக்காடு அருகே உள்ள ஒத்தப்பாலத்தில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

சத்யராஜ், பிரபுவைத் தொடர்ந்து 'அப்பா' ஆகிறார் கார்த்திக்!


தமிழ் சினிமாவில் இது முன்னாள் முன்னணி ஹீரோக்கள், தந்தை கேரக்டர்களுக்கு மாறும் காலம் போலும். சத்யராஜ், பிரபுவைத் தொடர்ந்து இப்போது கார்த்திக்கும் அப்பா வேடம் பூணுகிறார்.

ரொம்ப காலமாக ஹீரோக்களாக கலக்கி வந்த பல நாயகர்கள் அடுத்தடுத்து அப்பா கேரக்டர்களுக்கு தாவி வருகிறார்கள். சத்யராஜ், தனது மகன் சிபி ராஜின் தந்தையாக நடித்தார். சமீபத்தில் பிரபுவும் அப்பா வேடத்தில் அஆஇஈ படத்தில் அசத்தினார்.

இந்த நிலையில், அடுத்து முன்னாள் கனவுக் கண்ணன் கார்த்திக்கும் அப்பா வேடத்துக்கு வருகிறார்.

ஜெயம் ரவி புதிதாக நடிக்கவுள்ள படத்தில் அவருடைய அப்பாவாக நடிக்கவுள்ளாராம் கார்த்திக். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. தந்தை கேரக்டராக இருந்தாலும் கூட, கார்த்திக்கின் நடிப்புத் திறமை, ஸ்டைலுக்கேற்ற கேரக்டராக இது இருக்குமாம்.

இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்கவுள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து, முக்கியத்துவம் இருந்தால் அப்பா கேரக்டர்களில் தொடர்ந்து நடிப்பாராம் கார்த்திக்.

ஏற்கனவே சிவலிங்கம் ஐபிஎஸ் என்ற படத்தில் சத்யராஜுக்கு வில்லனாக நடித்துள்ளார் கார்த்திக். ஆனால் இந்தப் படம் இன்னும் பெட்டியை விட்டு வெளிவராமல் சுருண்டு கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்ணாநிலை போராட்டம்... மாணவர்களை சந்தித்த வடிவேலு


செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து ஆறாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணவிரதம் இருந்து வரும் அவர்களில் பலர் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார்கள். இந்நிலையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி வலியுறுத்துவதற்காக வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் இயக்குனர் செல்வமணி, சுந்தர் சி, நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்ளிட்ட திரையுலக கலைஞர்களும் நேரில் சென்று மாணவர்களை சந்தித்தனர்.

இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை கண்டித்தும், அங்கு போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. மாணவர்களின் இந்த உறுதியான போராட்டம், தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இந்நிலையில், இவர்களை சந்தித்த கலையுலகினர் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர்.

தமிழினம் வாழ வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளும் இவர்கள் அநாதைகள் அல்ல என்பதை காட்டவே நாங்கள் இங்கு வந்தோம். இவர்களின் உறுதியை பாராட்டுகிறோம். ஆனால் திலீபனை இழந்தது போல இவர்களையும் இழந்துவிடக் கூடாது என்று தெரிவித்தார் இயக்குனர் சுந்தர்சி. நேற்றுதான் குடியரசு தினத்தை ஒரு இந்தியனாக பெருமையோடு கொண்டாடினேன். ஆனால், ஒரு தமிழனாக இப்போது வருந்துகிறேன் என்றார் நகைச்சுவை நடிகர் வடிவேலு.

சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் செல்வமணி, நடிகர் பார்த்திபன் ஆகியோரும் மாணவர்களை நேரில் சந்தித்து உண்ணாவிரதத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தார்கள்.

நான் கடவுள் தயார் பிப்ரவரி 6 ந் தேதி ரிலீஸ்!


துவக்கம்னு ஒன்னு இருந்தா, முடிவுன்னு ஒன்னு இருக்குமல்லவா? நான் கடவுள் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு பண்ணிட்டாங்களாம். பிப்ரவரி ஆறாம் தேதி மக்களை சந்திக்க வருகிறார் கடவுள்.

சென்சார் சர்டிபிகேட் வாங்கிய பிறகும் படத்தை செதுக்கிக் கொண்டேயிருக்கிறார்கள் இளையராஜாவும், பாலாவும். ஆடியோ வெளியான பிறகும் கூட 'இந்த இடத்திலே ஒரு பாடலை வச்சுக்கலாமே' என்று மேலும் ஒரு பாடலை போட்டு கொடுத்திருக்கிறார் இசைஞானி. அந்தளவுக்கு படத்தோடு ஒன்றிப் போயிருக்கிறார்கள் இருவரும்.

எந்த படத்திற்கும் இத்தனை நாட்கள் பின்னணி இசைக்காக எடுத்துக் கொண்டதில்லையாம் இளையராஜா. இந்த படத்திற்காக அதையும் செய்திருக்கிறார். இரண்டு க்ளைமாக்ஸ்கள் எடுக்கப்பட்டு அதில் எதை சேர்ப்பது? எதை விடுப்பது என்ற குழப்பத்திலிருந்த பாலா, அதிலும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். நாம் பார்க்கப் போவது வில்லனை அடித்து புரட்டி கடைசியில் அவனையே மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடும் 'அகோரி' என்கிற அசுரத் தனத்தைதான்! இரண்டு க்ளைமாக்சுகளுக்கும் சென்சார் சர்டிபிகேட் வாங்கி வைத்திருக்கிறாராம் பாலா.

ரிலீஸ் தேதியான ஆறு, தமிழ்சினிமாவுக்கே ஆறுதல் தரும்படி இருக்க வேண்டும்.

சொடக்கு போடும் சுண்டெலிகள் எரிச்சல் படும் இளைய தளபதி


'பிரச்சனை பின்னாலேயே வரும். வினை வேலி தாண்டியும் வரும்' என்பதற்குஇதைவிட ஒரு உதாரணத்தை காட்ட முடியாது. ஏற்கனவே வில்லு குறித்து வரும் கமெண்டுகள், விஜயை ஏகத்திற்கும் டென்ஷன் ஆக்கியிருக்கிறது. இந்த லட்சணத்தில், இந்து கடவுள்களை விஜய் அவமதிக்கிறார் என்று இன்னொரு குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறார்கள் இந்துத்வா அமைப்பினர்.

வில்லு பிரமோஷனுக்காக ஒவ்வொரு மாவட்டமாக சுற்றி தியேட்டர் தியேட்டராக ரவுண்ட் அடிக்கிறார் விஜய். இவரை வரவேற்பதற்காக அடிக்கும் போஸ்டர்களில், கண்ணே, கருணையே, கடவுளே...என்றெல்லாம் வாசகத்தை போட்டு அன்பை தெரிவிக்கிறார்கள் ரசிகர்கள். அதில் சில போஸ்டர்களில் நிஜமாகவே இவரை கடவுளாக டிசைன் பண்ணியிருப்பதுதான் பிரச்சனையை கிளப்பியிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஐயப்பன் உருவத்தில் இவரை டிசைன் பண்ணியிருந்தார்கள். அதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இப்போது, இன்னும் பல கடவுள்களின் உருவத்தோடு விஜயை மேட்ச் பண்ணிவிட்டார்களாம். ரசிகர்களின் இந்த அன்புத் தொல்லை தனக்கு பிரச்சனையை ஏற்படுத்தி வருவதால், இனி போஸ்டர்களையும் தலைமை மன்றத்திடம் காண்பித்து 'நோ அப்ஜெக்ஷன்' சர்டிபிகேட் வாங்க சொல்லலாமா என்று யோசிக்கிறாராம் இளைய தளபதி.

பிள்ளையாரு சும்மா இருந்தாலும் சுண்டெலி 'சொடக்கு' போட்டா என்ன செய்வது?

Tuesday, January 27, 2009

ரூ. 6 கோடி மதிப்புள்ள நகைகளை அணிந்து நடமாடும் நகைக் கடையாக ஆட்டம் போட்டுள்ளார் நடிகை ஸ்ரேயா.


ரூ. 6 கோடி மதிப்புள்ள நகைகளை அணிந்து நடமாடும் நகைக் கடையாக ஆட்டம் போட்டுள்ளார் நடிகை ஸ்ரேயா.கந்தசாமி படத்துக்காக சமீபத்தில் படமாக்கப்பட்ட ஒரு பாடல் காட்சியில்தான் இப்படித் தோன்றி அசத்தினார் ஸ்ரேயா.கலைப்புலி எஸ்.தாணு, எக்கச்சக்க பொருட்செலவில் இரண்டு ஆண்டுகளாகத் தயாரித்துவரும் படம் 'கந்தசாமி'.

விக்ரம், ஸ்ரேயா ஜோடியாக நடிக்கிறார்கள். சுசி கணேசன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.ஸ்ரேயா பங்குபெறும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி இருந்தது. இந்தப் பாடல் காட்சிக்காக கடந்த 13-ம் தேதி இயக்குனர் சுசி கணேசன், ஸ்ரேயா உட்பட படக்குழுவினர் இத்தாலி சென்றனர். அங்கு ஸ்ரேயா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் ஸ்ரேயா, ரூ.6 கோடி மதிப்பிலான வைர நகைகள் அணிந்து நடித்தார்.

இந்த நகைகளை பொருத்துவதற்காக ரூ. 26 லட்சத்தில் பிரத்யேகமாக பாரம்பரிய உடை தயாரிக்கப்பட்டது. நகைகளுக்கான வாடகை மட்டும் ஒரு நாளுக்கு ரூ.5 லட்சமாம்.
இத்தாலியின் புதிய லொக்கேஷன்களில் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் பாடல் காட்சி இருக்கும் என்கிறார்கள் (வந்தா தெரிஞ்சிடப் போகுது!).இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸாகிவிடும் என்றார்கள். சம்மர் ட்ரீட் என விளம்பரம் கூட செய்தார்கள். இதோ இப்போது அடுத்த சம்மர் வந்தேவிட்டது. தாணுவுக்கு மட்டும் ஏன்தான் இப்படியெல்லாம் ஆகிறதோ தெரியவில்லை.

இந்த வருஷமாவது ரிலீஸ் ஆகுமா? பார்க்கலாம்!!

கடைசி தமிழ் படத்திலிருந்தும் நீக்கப்பட்டார் நயன்தாரா!


சமீபகாலமாக நயன்தாரா நடித்த படங்கள் படுதோல்வியை சந்தித்துக் கொண்டிருக்க, கையிலிருந்த பையாவையும் சம்பள பிரச்சனையால் தவறவிட்டார். நயனத்தை நினைத்தே சயனத்தில் ஆழ்ந்த விடலைப் பையன்கள், ஆளை மாற்றி ஆட்டத்தையும் மாற்றிவிட்டார்கள்.

இந்த நேரத்தில் இன்னொரு ஷாக். உதயநிதி தயாரிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவிருக்கும் ஆதவன் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் நயன்தாரா. முதலில் இவருடன் ஜோடி சேர ஆசைப்பட்ட சூர்யா, இப்போது இந்த நீக்கத்திற்கு தடை ஏதும் சொல்லவில்லையாம்.

உதயநிதியின் ரெட் ஜயன்ட் மூவிஸ் முதன் முதலில் தயாரித்த குருவி படத்திற்கும் ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நயன்தாராதான். அதன்பின் த்ரிஷா நுழைந்து நயனின் வாய்ப்பை பறித்ததெல்லாம் நாடறிந்த செய்தி. இப்போது மீண்டும் அதே மாதிரி அமைந்திருக்கிறது இந்த சம்பவம். இந்த முறை நயனின் வாய்ப்பை ஒருவரும் பறிக்கவில்லை. சம்பள விவகாரம்தான் காரணம் என்கிறார்கள்.

சிறகு மேலே பாறாங்கல்லை போட்டது மாதிரி சிக்கிக்கொண்டு தவிக்கிறார் நயன்தாரா.

எஸ்எம்எஸ்-க்கு எவ்வளவு மார்க்? -அலசி காயப்போட்ட விஐபிகள்!



தமிழனையும் ஆனந்த விகடனையும் பிரித்தே பார்க்க முடியாதபடி வீட்டுக்கு வீடு கூட்டணி வைத்திருக்கிறது இந்த பொழுதுபோக்கு இதழ். தாத்தா எஸ்.எஸ்.வாசனும், அப்பா பாலசுப்ரமணியனும் திரைத்துறையில் செய்த சாதனையை மீண்டும் நிகழ்த்திக் காட்ட வந்திருக்கிறார் அவர்களின் வாரிசு ஸ்ரீநிவாசன்.

விகடன் டாக்கீஸ் தயாரிக்கும் படங்களில் முதலில் வெளிவர இருப்பது சிவா மனசில சக்தி. ஜீவா, அனுயா நடித்திருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பல சுவாரஸ்யங்கள். உள்ளே நுழையும் போதே இருபுறமும் நின்று கொண்டிருந்த டீன் ஏஜ் பட்டாளங்கள் ஈகோ சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். படத்தின் கதையே ஜீவனுக்கும், அனுயாவுக்கும் இடையிலான காதல் ஈகோதான். 'ஐ ஹேட் சிவா' என்று ஒரு பெண் குரல் எழுப்ப கேட்டுக் கொண்டே உள்ளே வந்த ஜீவா, 'அந்த பொண்ணு இங்கேதான் எங்கேயோ இருக்கணும்' என்றார் சிரித்துக் கொண்டே!

விழாவில் பேசிய சூர்யா, அமரர் எஸ்.எஸ்.வாசன் பற்றி ஏராளமான தகவல்களை அப்பா சிவகுமாரிடம் கேட்டு விட்டு வந்தாரோ என்னவோ, பிலிம் நியூஸ் ஆனந்தன் போல புட்டு புட்டு வைத்தார் தகவல்களை! 'சந்திரலேகா என்ற முதல் பிரமாண்ட படத்தை தயாரித்தது இவர்தான். அதுமட்டுமல்ல, சத்யஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி படத்தை பார்த்துவிட்டு நள்ளிரவு பனிரெண்டரை மணிக்கு 'ரே'வை அழைத்து 'இந்த படத்திற்காக உனக்கு தேசிய விருது கிடைக்கும்' என்று கூறியவர். கொல்கத்தாவில் உள்ள மின்விளக்கு கம்பங்களில் விளம்பர ஹோர்டிங்குகளை முதன் முதலில் வைத்தவர் என்றும், அந்த காலத்திலேயே கதாநாயகியின் முகத்திற்கு மட்டும் அறுபது அடியில் 'கட் அவுட்' வைத்தவர்' என்றும் அமரர் வாசன் பற்றி ஏராளமான தகவல்களை அள்ளிக் கொட்டினார்.

அந்த தாத்தாவுக்கு கொஞ்சமும் குறைந்தவரல்ல இந்த பேரன். 'தேவைப்பட்டால் படத்தின் பட்ஜெட்டை விட, அதிகமாக விளம்பரங்களுக்கு செலவு செய்வேன்' என்றார் விகடன் டாக்கீஸ் நிறுவனர் ஸ்ரீநிவாசன்.

விழாவில் பேசிய அத்தனை பேரும் சினிமா விமர்சனங்களுக்கு விகடன் போடுகிற மார்க் பற்றியே பேசினார்கள். அவர்கள் சொல்லாமல் சொன்ன ஒரே விஷயம், 'உங்க படத்திற்கு எத்தனை மார்க் போடுவீங்க? பார்க்கலாம்!' என்பதுதான்!

'படத்தை பற்றி உங்களுக்கு பல்வேறு அபிப்ராயங்கள் இருக்கும். ஆனால், இது பக்கா லோக்கலான படம்' என்றார் இயக்குனர் ராஜேஷ்எம். லோக்கலா இருந்தாலும் கலக்கலா இருக்கும்ங்கிறது ரசிகர்களோட நம்பிக்கை!

நடிகர் கொடுத்த 'பிளாங்க்' செக்! -ஓட்டமெடுத்த நடிகை?



கைநிறைய பணம் கொடுத்தாலும், புதுமுகமா, ஆளைவிடு என்று ஓட்டமெடுக்கிறார்கள் சில முன்னணி நடிகைகள்! முன்னணியும் இல்லை, எவ்வித பின்னணியும் இல்லை. அப்படிப்பட்ட இரண்டாம் கட்ட நடிகைகளும் ஒடுவதுதான் வியப்பு.

பிரம்மதேவா படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் டாக்டர் ராம். காது, மூக்கு, தொண்டை மருத்துவரான இவர், மிகப்பெரிய அறுவை சிகிச்சை நிபுணரும் கூட! இவரோடு நடிக்கதான் சில நடிகைகள் ஓட்டம் பிடித்தார்களாம். இத்தனைக்கும் பிளாங்க் செக் கொடுத்தாராம் ஒரு நடிகைக்கு. முதலில் வாங்கிக் கொண்டவர், மறுநாள் போன் அடித்து 'ஐயா ஒங்க செக்கை வாங்கிட்டு போயிடுங்க. என்னால நடிக்க முடியாது' என்று கூறிவிட்டாராம். (ஆபரேஷன் நேரத்திலேதாம்மா கத்தியை எடுப்பாரு...)

இறுதியாக வந்தாலும், உறுதியாக நின்றவர் தேஜாஸ்ரீதான். ஆக்ஷன், டூயட் என்று டாக்டருடன் பேயாட்டம் போட்டிருக்கிறாராம். 'இதுவரை கவர்ச்சி நடிகைன்னு பேரு வாங்கின தேஜாஸ்ரீ பிரம்மா தேவாவுக்கு பிறகு, நல்ல நடிகைன்னு பேரு வாங்குவாங்க' என்றார் டாக்டர் ராம்.

படத்தின் முதல் பிரதியை தனது பேஷண்டுகளுக்கு போட்டுக் காண்பித்தாராம். அத்தனை பேரும் சபாஷ் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த கட்டமாக 3000 பேருக்கு படத்தை காண்பித்திருக்கிறார். அங்கேயும் சபாஷ்தானாம்! 'இனிமே தைரியமாக திரைக்கு வருவேன். பாருங்க ஓடிப்போன நடிகைகள் எல்லாம் தேடி வருவாங்க' என்றார் தன்னம்பிக்கையோடு!

அடுத்த இலக்கு த்ரிஷாவா?

பாஷையை கத்துக்கோங்க... புதுமுகங்களை அலையவிட்ட இயக்குனர்


'மாத்தி யோசி'ன்னு டைட்டில் வச்சுட்டு மாத்தி யோசிக்காமல் இருக்க முடியுமா? படத்தில் அறிமுகமாகும் நாலு பசங்களையும் வாட்டி எடுத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் நந்தா பெரியசாமி. மதுரையை சுற்றியுள்ள ஏரியாக்களில் 60 நாட்கள் சுற்ற விட்டாராம் பசங்களை! மதுரை பாஷை கற்றுக் கொள்வதுதான் இவர்களின் முதல் ட்யூட்டி. காட்டையும் மேட்டையும் சுற்றி வந்து கருத்தே போனார்கள் இவர்கள். இந்த பயிற்சியில் வசனங்களை உச்சரிப்பதிலிருந்து, இயல்பாக நடிப்பது, யதார்த்தமாக சண்டை போடுவது போன்ற பல விஷயங்களை கற்றுக் கொடுத்தாராம் நந்தா பெரியசாமி.

அதன்பின் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. வீடியோ கேமிராவில் பதிவு செய்யும் இந்த முறையை 'ரெகி ஷ§ட்டிங்' என்பார்களாம். இந்த பயிற்சி காட்சிகளை படத்தின் டிரெய்லரில் இணைக்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறார் நந்தா பெரியசாமி.

பி.எஸ்.எஸ்.ஆர் பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.எஸ்.சேகர் தயாரிக்கும் இப்படத்தை வைட் ஆங்கிள் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே 'திருட்டுப்பயலே' படத்தை ஒளிப்பதிவு செய்தவரும் இவரே. குரு கல்யாண் என்ற புதுமுகம் இசையமைக்கிறார். ஹரீஷ், அலெக்ஸ், கோபால், விசாக் ஆகிய நான்கு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள்.

ஒரு கல்லூரியின் கதை படத்தை இயக்கிய நந்தா பெரியசாமி, தற்போது மாயாண்டி குடும்பத்தார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். பிப்ரவரி 5 ந்தேதி வத்தலகுண்டு பகுதியில் 'மாத்தி யோசி' படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது

Monday, January 26, 2009

அயன் - ஹாரிஸால் உண்டு பயன் (இசை விமர்சனம்)


ரஹ்மானின் இருப்பு தமிழ்நாட்டில் குறைந்ததால், இளைஞர்களுக்கு ஏற்பட்ட இசை தாகத்தை குறைத்து வைத்து கொண்டு இருப்பவர்கள் ஹாரிஸும், யுவனும்.
இதில் ஹாரிஸ் ரொம்ப செலக்டிவா இசையமைத்து வருகிறார். எட்டு வருஷங்களில் இருபத்தைந்து படங்களில் மட்டும் இசையமைத்து இருக்கிறார்.

முன்பு ஹாரிஸின் ஒவ்வொரு பாடலை கேட்கும் போதும், எனக்கு ஏதோவொரு ரஹ்மானின் பாடல் ஞாபகம் வரும். பின்னணி இசையிலும் ஒரே பிட், அவரது பெரும்பாலான படங்களில் வந்துள்ளது.

இருந்தாலும் நகர இளைஞர்களுக்கு பிடித்தமான படங்களிலும், பிடித்த இயக்குனர்களின் படங்களிலும் தொடர்ந்து இசையமைத்து வருவதால், இளைஞர்களை அதிகம் கவர்ந்தவராக இருக்கிறார். என்ன... வெரைட்டி காட்ட மாட்டேங்கிறார். கிராமத்து படம் எதுவும் இசையமைக்க வில்லை. இந்த விதத்தில் யுவன் பலமிக்கவராக தெரிகிறார். பருத்தி வீரன் போன்ற படங்களில் இசையமைத்து அதிக ரீச்சை பெற்றுள்ளார்.

படம் வெற்றியோ தோல்வியோ பாடல்களை வெற்றியடைய செய்து விடுவதால், இவர் பட பாடல்களுக்கு எந்த விளம்பரமும் தேவையில்லை. வாரணம் ஆயிரம் பாடல்கள் பெரும் வெற்றியை பெற்று படத்தின் ஒப்பனிங்குக்கும் உதவி புரிந்தது. அதை தொடர்ந்து இப்போது வெளி வந்து இருப்பது அயன் பாடல்கள்.

நெஞ்சே நெஞ்சே

கண்டிப்பாக உடனடியாக ஹிட் ஆகும் காதல் மெலடி பாடல். வைரமுத்துவின் வரிகளை ஹரிஷ் ராகவேந்திரா ஹையாகவும், மஹதி லோவாகவும் பாடிவுள்ளார்கள். நடுவே லேசா லேசா பாடல் ஏதோவொன்றை போல் இருந்தது.

"வெயில் காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்
பிரிவொன்று கொண்டால் தான் காதல் ருசி ஆகும்"

விழி மூடி

ஹாரிஸ் சோக பாடல் என்றால் கார்த்திக்கை கூப்பிட்டு விடுவார் போல. அஞ்சலையை தொடர்ந்து இது. வேறு டைப். சூப்பராக உள்ளது. கடைசியில் விசில் அருமை.

"விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே"

நெஞ்சுக்குள் நுழைந்து

ஓயாயியே என்று தொடங்கும் இப்பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். இளைஞர்களை கவரும் பாடல். "அடியே கொல்லுதே" மாதிரி உள்ளது. திரும்பவும் பாருங்க. ஏதோவொரு ஒரு ஹாரிஸ் பாடலை நினைவுப்படுத்துகிறது.

"நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என்கையில் வளைந்து என்மீது மிதந்து சாலையில் நடக்கின்ற நிலவு நீ"

பள பளக்கும் பகலா நீ?

நவீன இசையில் பழைய தாளம். எம்.ஜி.ஆரின் தத்துவ பாடல் டைப். இடையில் ஹரிஹரனின் மென்மையான உச்சரிப்பும் ஹம்மிங்கும் இதமாக உள்ளது. ஆனால் முதலில் கேட்கும் போது பிடிக்க வில்லை. வரிகள் : நா. முத்துக்குமார்.

"இதுவரை நெஞ்சில் இருக்கும் சிறு துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் தொலைத்து தொடு வானம் வரை போய் வருவோம்"

ஹனி ஹனி

மேற்கத்திய இசையில் கிளப் பாடல் போல் உள்ளது. மெதுவாக வேறு உள்ளது. தாம் தூமில் ஒரு கிளப் சாங் உண்டே? அதே போல். எனக்கு பிடிக்கவில்லை. பாதிக்கு பாதி ஆங்கிலம்.

ஏ.வி.எம். தயாரிப்பு, சூர்யா ஹீரோ, கே.வி.ஆனந்த் இயக்கம். இது போதாதென்று இப்போது பாடல்களை மூலை முடுக்கெல்லாம் 'பலவந்தமாக' கொண்டு சேர்க்க சன். தமிழக மக்கள் கண்டிப்பாக கேட்டாகவேண்டும்.

மூன்று முடிச்சு - சரியான வில்லன் மூஞ்சி


ரஜினி என்றாலே ஸ்டைல் என்றான பிறகு அவர் நடித்த படங்களில் ஏதாவது ஒரு வகை ஸ்டைல் ரசிகர்களுக்காக திணிக்கப்படுவதுண்டு.
ஆரம்ப கால படங்களில் ஸ்டைல் என்ற முத்திரை அவர் மீது விழுவதற்கு முன்பு வந்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை இந்த மூன்று முடிச்சு. இந்த படத்தில் ரஜினியினுடைய எல்லா மேனரிசமும் ஒரு வகை ஸ்டைல்தான். ஸ்டைல் என்று சொல்லத்தெரியாமல் மக்கள் அவரை ரசிக்கத் தொடங்கிய காலம். கமலும் ஸ்ரீதேவியும் ஒருவரை ஒருவர் காதலிக்க, ரஜினி ஸ்ரீதேவியை ஒருதலையாய் காதலிப்பார். சாதாரண முக்கோண காதல் கதை போல் ஆரம்பித்தாலும், ரஜினியின் கோரமுகம் வெளிப்படும் போது சற்றே வேகமெடுக்கிறது கதை. வில்லனான ரஜினியே படம் முழுவதும் பூரணமாக நிறைந்திருக்கிறார். வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அப்போது எடுக்கப்பட்டிருந்தாலும் இப்போது பார்க்கும்போது ஏதோ ஆன்டி-ஹீரோ சப்ஜெக்ட் போலத்தான் தெரிகிறது. ரஜினி மட்டும் ஹீரோவாக நடிக்காமல் வில்லனாகவே தொடர்ந்திருந்தால் சூப்பர்ஸ்டார் ஆகியிருக்கமாட்டார் ஆனால் நிச்சயம் சூப்பர் வில்லனாகியிருப்பார்.

தொடர்ந்து தப்பு செய்யும் வில்லன் போல் இல்லாமல், மூர்கமாக தவறு செய்துவிட்டு பின்னர் மனசாட்சிக்கு பயந்து ஓடி ஒளியும் வில்லன். கடந்த 15 வருடங்களாக ரஜினிக்காகவே எழுதிய வசனங்களை கேட்டு பழகிப்போன நமக்கு, சாதரண ரஜினிக்காக, பிரசாத் என்கின்ற கதாபாத்திரத்துக்காக எழுதிய வசனங்களை கேட்கும் போது ரொம்பவே இயல்பாய் இருக்கிறது. ஒரு காட்சியில், ரஜினியின் தந்தை பிரசாத்தை பத்தி என்ன நினைக்கிறன்னு கேட்பார், அதற்க்கு ஸ்ரீதேவி "சரியான வில்லன் மூஞ்சி" என்பார். ஸ்ரீதேவியை கல்யாணம் செய்யும் ஆசையில் ரஜினி சுற்றிவர, பாலச்சந்தரின் சேட்டையால் ரஜினியின் அப்பாவும் ஸ்ரீதேவியும் கல்யாணம் செய்துகொள்ள, ஸ்ரீதேவிக்கு தலைமகனாகிவிடுவார் ரஜினி. இந்த படத்தின் மொத்த கதையை நம் கவியரசர் வெறும் ஆறு வரியில் அழகாய் சொல்லியிருப்பார். இந்த ஆறு வரியை, இரண்டு இரண்டு வரிகளாக முக்கிய கதாபாத்திரங்களான கமல், ரஜினி, ஸ்ரீதேவி பாடும்படி படமாக்கியிருப்பார் கே.பி. படத்தில் வெவ்வேறு இடங்களில் இந்த வரிகள் வரும்.

கமல்: வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
ரஜினி: மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
விதிவகையை முடிவு செய்யும் வசந்த கால நிரலைகள்
ஸ்ரீதேவி: நிரலைகள் முடிந்ததெல்லாம் நெஞ்சில்வந்த நினைவலைகள்
நினைவலைகள் முடிந்தயிடம் தாய்மகனாம் சூழ்நிலைகள்

ஒரு காட்சியில் ரஜினியை பார்த்து ஸ்ரீதேவி "போடா கண்ணா.... போ" என்பார். இதுவே இன்னைக்கு ஒரு கதாநாயகி ரஜினியை பார்த்து சொல்லமுடியுமா? இப்படி அவ்வப்போது பல வசனங்கள் நம்மை நிகழ்கால சூப்பர்ஸ்டார் ரஜினியோடு ஒப்பிட்டு பார்க்க வைக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த பொய் படத்தில் விதிக்கு உருவம் கொடுத்திருப்பார் கே.பி. அதை சற்றே வித்தியாசமாக உணர்ந்தேன். 1976ல் வந்த இந்த படத்தை பார்த்த பிறகுதான் தெரிந்தது, இதெல்லாம் கே.பிக்கு ஜுஜுபி என்று. இந்த படத்தில் மனசாச்சிக்கு உருவம் கொடுத்திருக்கிறார். ரஜினி ஒவ்வொரு முறை தப்பு செய்த்தபிறகும், மனசாச்சி வந்து கேள்விகேட்கும், தவறை எல்லாம் வரவு வைத்துக்கொண்டே வரும். மனசாச்சிக்கு பைத்தியக்காரன் போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்திருப்பார். தவறு செய்த பிறகு ஒவ்வொரு முறையும் வந்து கேள்விகேட்கும் மனசாச்சி, ஏன் தப்பு செய்வதற்கு முன்பு வந்து எச்சரிக்காதா என்ற நம் நியாயமான கேள்விக்கு படத்தின் கடைசியில்
விதைக்கின்ற வேளையிலே விளங்காத மனசாட்சி...
விளைவுக்குப் பின்னாலே விரைந்துவரும் மனசாட்சி....
தனக்காகத் தன்னுடனே போராடும் மனசாட்சி....
தவறுபவன் கண்களுக்குப் பைத்தியந்தான் மனசாட்சி.

இந்த நாலு வரியில் பதில் சொல்லுகிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் அக்மார்க் கே.பி ரகம். ஸ்ரீதேவியின் அக்காவாக வரும் Y.விஜயா ஒரு துணை நடிகை, கமலுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, இயக்குனர் தூக்குப் போடும் காட்சியில் நடிக்க அழைப்பார், உடனே விஜயா கமலை பார்த்து "நா தூக்குல தொங்கிட்டு அப்புறமா வீட்டுக்கு வரேன். நீங்க போங்க." என்பார். கல்யாணத்துக்கு வயது ஒரு தடை இல்லை என்று ஸ்ரீதேவி சொல்லும்போது அங்கு வரும் ஒரு வயதானவர் "கீட்ஸ் சொல்லல, ஷெல்லி சொல்லல, நம்மூர் செல்வி சொல்லிட்டா" என்பார். இது போன்ற வசனங்களை கேட்கும்போது நம்மையும் அறியாமல் ஒரு புன்முறுவல் உதடுகளில் வந்து மறையும். ரஜினியின் அப்பாவாக ஒருவர் நடித்திருக்கிறார், பல படங்களில் பார்த்திருந்தாலும் பெயர் தெரியவில்லை. அந்த கதாபாத்திரத்துக்கு கணக்கச்சிதமாய் பொருந்துகிறார். அப்படியொரு நிதானமான நடிப்பு.

இந்த படத்தில் ரஜினியினுடைய நடிப்பை பார்த்த நமக்கு, சூப்பர்ஸ்டார் என்ற வட்டத்துக்குள் வந்த பிறகு ரஜினி சிரத்தை எடுத்து நடிப்பத்தை தவிர்த்து விட்டாரா? அல்லது இயக்குனர்கள் அவருடைய நடிப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லையா? என்ற சந்தேகம் வருகிறது. காரணம் இந்த படத்தில் அப்படியொரு அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி

வேகாத ஹீரோயிசங்கள், வெளிச்சமாகும் படைப்புகள் !


அனைத்து வகையான திரைப்படங்களும் தமிழுக்கு தேவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. என் ரசிகர்களுக்கு இது தான் பிடிக்கும், அவர்கள் விரும்புகிற வகையில் நாங்கள் படம் நடிக்கிறோம் என்று முட்டாள் தனமான நம்பிக்கையோடு சில மாஸ் நடிகர்கள் (தற்போதைய தமிழ் சினிமாவின் கல்லாப்பெட்டிகள் என கருதப்படும் முன்னணி நாயகர்கள்) சொல்லி வருகிறார்கள்.
சமீபமாக வெளிவந்திருக்கும் முன்னணி நாயகர்களின் படங்கள் அத்தனையும் அட்டைக்கத்திகள் ஆகியிருப்பது அவர்களே எதிர்பார்க்காத ஒன்று. விஜய் நடித்த ‘வில்லு’, அஜீத்தின் சமீபத்திய வெளியீடான ‘ஏகன்’, சிம்பு ஆடிய ‘சிலம்பாட்டம்’, ‘படிக்காதவன்’ தனுஷ் என ஆடிய ஆட்டங்கள் அத்தனையும் அம்பேல் ஆகிவிட்ட நிலையில் அடுத்து என்ன? என்ற கேள்விக் குறியோடு அத்தனைபேரும் இருக்கிறார்கள். இவ்வளவு விஷயங்களையும் தாண்டி விஜய் ‘வேட்டைக்காரன்’, அஜீத் ‘அசல்’, சிம்பு ‘கெட்டவன்’ என அடுத்த ரகளைக்கு ரெடியாகி இருப்பது வேடிக்கை.

எம்.ஜி.ஆர் காலத்திலேயே இயக்குநர் ஸ்ரீதரின் படங்கள் வெற்றியடைந்துள்ளது என்று ஒரு விழாவில் பேசினார் ‘கமர்ஷியல் கிங்’ என்று பெயரெடுத்த இயக்குநர் பேரரசு. முதல் இரண்டு படங்களிலேயே ‘கமர்ஷியல் கிங்’ என்று பெயர் வாங்கிய பேரரசு, தன் அடுத்தடுத்த படங்களில் அவர் கண்ட சரிவை மறந்துவிட்டார் போல. இப்படி இன்னும் எம்.ஜி.ஆர் காலத்து ஹீரோயிசங்களையே நம்பி ரசிகர்களை ஏமாற்றுவதில் தான் சிக்கல்! ‘வில்லு’ படத்தில் சண்டைக்காட்சிகளிலும் சரி, நடன அசைவுகளிலும் சரி, விஜய் பின்னி இருக்கிறார். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதற்கான தேவை என்ன என்பதே இப்போதைய கேள்வி. அசத்தல் நடனங்களும், அழகான நயன்தாராவும் மட்டும் படத்திற்கு போதாது என்பதே ரசிகர்களின் தீர்ப்பாக உள்ளது. கலர் ஃபுல் காஸ்ட்யூம்களையும், கோடிக்கணக்கில் கண்ணாடி மாளிகை செட் போட்டு ஹீரோ, ஹீரோயினை டூயட் பாட விடுவது மட்டுமே கமர்ஷியல் என்ற மாயை தற்போதைய தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது.

தத்துவங்கள் சொல்வதும் தீய சக்தியை கண்டு ஹீரோ நெற்றிக்கண் திறப்பதும் திரையில் மட்டுமே என்பதை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். மற்ற மாஸ் ஹீரோக்களுக்கும் இதே நிலைதான். இப்படிப்பட்ட கோபங்களின் முடிவுதான் இந்த ஆண்டு பல வித்தியாச படைப்புகளை கொண்டு வர இருக்கிறது. சென்ற ஆண்டு வெளிவந்த அஞ்சாதே, சுப்பிரமணியபுரம் படங்களுக்கு கிடைத்த வெற்றி பெரிய ஹீரோக்களுக்கு கிடைக்கவில்லை என்பது தெரிந்தது.

நடிகர்களை மட்டும் சொல்லி ஒன்றுமில்லை. நல்ல படைப்புகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் நடிகர்களும் இல்லாமல் இல்லை. வித்தியாசமான கதைகளில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தயங்குவதில்லை என்பது ‘குசேலன்’ படத்தில் தெரிந்தது. நல்ல சினிமா உருவாக ‘குசேலன்’ படத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் ரஜினிகாந்த். அதிலும் கூட அளவுக்கு அதிகமான ஹீரோயிசங்களைக் காட்டி, ‘குசேலன்’ என்ற நல்ல கதையை குப்பையாக்கிவிட்டார் பி.வாசு. அதனால் அந்தப் படமும் மிகப் பெரிய சரிவை சந்தித்தது.

‘பூ’, ‘வாரணம் ஆயிரம்’ போன்ற படங்கள் லாபங்களை அள்ளிக் குவிக்கவில்லை என்றாலும் நல்ல படைப்புகளாக மக்கள் மனத்தில் பதிந்திருக்கிறது. இயக்குநர் பாலுமகேந்திரா ஒரு மேடைப் பேச்சில் இப்படி சொன்னார்… ரத்தமும் சதையுமாக சமூகத்திலிருந்து பிய்த்து எடுக்கப்படும் கதைகளே நல்ல சினிமாவை உருவாக்கும் என்றார். இந்த சிந்தனைக்கு ஏற்ப மாற்று சினிமாக்களை உருவாக்கும் இயக்குநர்கள் சிலர் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இனிவரும் சினிமாக்கள் அத்தனையும் இயக்குநர்கள் கையில் அடங்கி இருக்க, பட்டியலில் முதலில் நிற்பவர் பாலா. ‘நான் என்ன எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ அதை எடுக்காமல் விடமாட்டேன்’ என்று அதிகமான மெனக்கெடலில் ஈடுபட்டு ‘நான் கடவுள்’ படத்தை உருவாக்கி வருகிறார்.

படத்தின் பாடல்கள், புகைப்படங்கள் என அத்தனையிலும் ஏதோ ஒரு தேடல் இருக்கிறது. பாலாவின் படங்களிலும் ஹீரோயிசங்கள் இல்லாமல் இல்லை, ஆனால் அவை எந்த அளவிற்கு நாகரீகமாகவும், படத்தின் கதைக்கு எந்த அளவிற்கு நியாமாகவும் இருக்கிறது என்பதே இதில் முக்கியம். இரண்டு வருடங்கள் இந்த படத்திற்காக தன்னை தியாகம் செய்திருக்கிறார்ஆர்யா. அதற்கான பலன் நிச்சயம் அவருக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தப் படத்திற்காக பூஜாவிற்கு தேசிய விருது நிச்சயம் என்று ஆர்யா தன் நேர்காணலில் சொல்லி இருந்தார். படத்தின் பின்னணி இசையில் ஈடுபட்டு வரும் இளையராஜாவுக்கு இன்னொரு பாடலை படத்தில் சேர்க்க வேண்டும் என்று தோன்றியுள்ளதாம். இப்படி எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘நான் கடவுள்’ விரைவில் வெளிவர இருக்கிறது.

மாற்று சினிமாவுக்கான பட்டியலில் அடுத்து இடம் பெறுபவர் இயக்குநர் சேரன்.இந்தப் பட்டியலைப் பொருத்த வரை இவர் கொஞ்சம் சீனியர் இயக்குநர்.இங்கே பட்டியலிடும் இயக்குநர்கள் அனைவருக்கும் முன்பாகவே இயக்குநரானவர். ஏற்கெனவே ‘ஆட்டோகிராப்’, ‘தவமாய் தவமிருந்து’ என்ற அழியாத படைப்புகளைக் கொடுத்தவர். இடையில் வந்த ‘மாயக்கண்ணாடி’யால் தன் பிம்பத்தை தொலைத்த சேரன். தமிழ் சினிமாவின் பொக்கிஷத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். பாலா, அமீர், செல்வராகவன், மிஷ்கின் என இவர்கள் அனைவரின் படங்களிலும் கூட ஏதாவது ஒருவகை மறை முகமான ஹீரோயிசங்கள் இருக்கும், ஆனால் சேரனின் படங்கள் மட்டுமே ஒவ்வொரு ரசிகனின் முகத்திற்கு முன்பும் கண்ணாடி வைத்து ‘இது தான் நீ’ என முகத்தில் அறையும் படைப்புகளாக அமையும். ஆனால் இப்படிப்பட்ட நல்ல படங்களை எடுக்கும்போது இளையராஜாவை சேரன் மறந்து விடுவது ஏனோ!?

‘பருத்திவீரன்’ கார்த்திக்கு இரண்டாவது படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படம் எப்போது வெளிவரும் என்ற கேள்விக்கு செல்வராகவனின் மௌனமான சிரிப்பே பதிலாக வருகிறது. ரீமாசென், ஆன்ட்ரியா என படத்தில் மூன்று முக்கிய நடிகர்கள். இப்படத்தைப் பற்றி எந்தவித செய்திகளும் வெளிவராத நிலையில், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகமாகி வருகிறது. இந்த வகையில் அடுத்த படம் நந்தலாலா, இப்போதுள்ள இயக்குநர்களில் யாரும் தொடாத ஒரு பாணியை மிஷ்கின் தொட்டிருக்கிறார். இதில் அவரே நாயகனாக நடிக்கிறார் என்பது கூடுதல் எதிர்பார்ப்பு. 35 வருடம் கொடுக்காத இசையை இந்தப் படத்தில் செய்திருக்கிறார் இளையராஜா என்பது மிஷ்கின் சொன்ன செய்தி. ‘கத்தாழ கண்ணால குத்தாத’ பாடலுக்கு குதித்து, பார்ப்பவர்களை குதிக்க வைத்த ஸ்நிகிதா இதில் நாயகியாக நடித்திருக்கிறார். அஸ்வத்ராம் என்ற சிறுவனை அறிமுகம் செய்திருக்கும் மிஷ்கின் அவனை வரும்கால கமல் என்று சொல்லி பெருமிதம் கொள்கிறார்.

இது மட்டும் இல்லது, ‘யோகி’ படத்திற்கு திரைக்கதை எழுதி நாயகனாக நடிக்கும் இயக்குநர் அமீர், ‘அழகி’ என்ற அழியாத படைப்பை உருவாக்கிய தங்கர்பச்சான். ‘காதல்’ கல்வெட்டைக் கொடுத்த பாலாஜி சக்திவேல், சுப்ரமணியபுரம் சசிகுமார், பாலுமகேந்திராவின் சிஷ்யர்களான ‘கற்றது தமிழ்’ ராம், வெற்றிமாறன், ஜெய் நடிக்கும் ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தை இயக்கும் மீரா கதிரவன் கதிரவன், என பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் அடிக்கல் நாட்டிய மாற்று சினிமா இப்போது இந்த வகையான இளைய இயக்குநர்களால் இன்னும் அதிகமான வீச்சோடு உயர்கிறது என்றே சொல்லலாம்.

வெகு விரைவில் தமிழ் படத்திற்காக உலக விருதை பெறுவோம்!
முன்செல்ல

தனுஷுக்கு புது ஜோடி த்ரிஷா - ஷ்ரேயாவுக்கு கல்தா!


தனுஷ் அடுத்து நடிக்கும் படத்தில் ஸ்ரேயாவுக்கு பதில் த்ரிஷா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பொல்லாதவன் தயாரிப்பாளர் குரூப் கம்பெனி கதிரேசன் தயாரிக்கும் அடுத்தப் படத்திலும் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். பொல்லாதவன் படத்தை இயக்கிய வெற்றிமாறனே இந்தப் படத்தையும் இயக்குகிறார். இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால். ஆனால் அவர் கால்ஷீட் கொடுத்திருந்த நேரத்தில் இயக்குநர் படத்தைத் தொடங்கவில்லை.

எனவே தனது மற்ற படங்கள் பாதிக்கும் என்பதால் ஸ்ரேயா இந்தப்படத்திலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்திருந்தார். அட்வான்ஸையும் திருப்பித் தர முன்வந்தார்.

ஆனால் இதை தயாரிப்பாளரும், இயக்குநரும் ஏற்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் ஸ்ரேயா மீது புகார் செய்தனர். ஸ்ரேயாவும் தன் பங்குக்கு நடிகர் சங்கத்தில் புகார் செய்தார்.

ஆனால் அப்படியும் இந்தப் படத்தை துவங்கியபாடில்லை, இயக்குநர். எனவே இந்தப் படத்தில் இனி நடிக்க முடியாது என ஸ்ரேயா உறுதியாகத் தெரிவித்துவிட, இப்போது அந்தப் பாத்திரத்தில் த்ரிஷா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விவேக்,ஐஸ்வர்யா ராய், அக்‌ஷே குமாருக்கு பத்மஸ்ரீ!


புதுடெல்லி : பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய், மலையாள நடிகர் திலகன், இந்தி நடிகர் அக்‌ஷே குமார் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான (2009) பத்ம விருதுகளை பெறுபவர்களின் பட்டியல், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஒப்புதலுக்குப் பிறகு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கலைத் துறையினருக்கான பிரிவில் பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்க்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், நடிப்புத் துறையிலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 'இருவர்', 'ஹம் தில் கே சுக்கே சனம்', 'தேவ்தாஸ்', 'குரு' உள்ளிட்ட படங்கள் அவரது திறமைக்கு சான்றாகும். ஜனரஞ்சமான திரைப்படங்களில் நடித்து, தனது திறமையால் சிறந்த பொழுதுபோக்கு திரைக்கலைஞர்களாக உருவெடுத்துள்ள அக்‌ஷே குமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த 'சிங் இஸ் கிங்' திரைப்படம் மகத்தான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தமிழ்த் திரையுலகில் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக் இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெறுபவர்களில் குறிப்பிடத்தக்கவர்.
மலையாள திரையுலகில் உன்னத திரைப் படைப்புகள் பலவற்றிலும் மிகச் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய நடிகர் திலகனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

Followers