Friday, January 23, 2009

தொடுதலும் இனிமை ... Romantic touching


கணவன், மனைவியோ, காதலர்களோ அவர்களது உறவு வலுவாக இருப்பதற்கு காதலுடன் கூடிய தொடுதல் முக்கியமானது. ஆனால் நிறையப் பேர் இதில் அதிக அக்கறை காட்டுவதில்லை.

ஒவ்வொரு வெற்றி பெற்ற ஜோடியிடமும் இந்த ரொமான்டிக் தொடுதல்கள் கண்டிப்பாக இருக்கும். சின்னதாக ஒரு அணைப்பு, கன்னத்தில் செல்லமாக ஒரு முத்தம், கைகளைப் பாசத்துடன் பிடித்துக் கொள்வது என சின்ன சின்ன இந்த தொடுதல்கள், காதலர்களுக்குள்ளும், கணவன், மனைவிக்குள்ளும் அன்பை வலுப்படுத்தும், காதல் பெருகச் செய்யும். நெருக்கத்தை அதிகரிக்கும்.

அதிலும் கைகளைப் பிடித்துக் கொள்வது இருக்கிறதே, அதை விட சிறந்த அன்பை வெளிப்படுத்தும் விஷயம் இருக்க முடியாது என்கிறார்கள். காதலனோ, காதலியோ அல்லது கணவனோ, மனைவியோ, ஒருவர் கையை இன்னொருவர் பாசத்துடன் பற்றிக் கொள்ளும்போது, மனதில் பாதுகாப்பான உணர்வு ஏற்படுமாம்.

உனக்கு நான், எனக்கு நீ என்பதை வார்த்தைகளே இல்லாமல் வெளிப்படுத்தும் உணர்வுதான் இந்த கைப்பிடித்தல்.


இதை இங்குதான் செய்ய வேண்டும் என்பதில்லை. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் செய்ய முடியும் என்பது இதில் உள்ள விசேஷம்.

பார்க்கிலோ, பீ்ச்சிலோ, வயதான தம்பதியினர் அன்னியோன்யமாக, கைகளை பரிவுடன் பற்றிக் கொண்டு நடப்பதைப் பார்க்கும் பல இளம் ஜோடிகள், நாமும் ஒருநாள் இப்படித்தான் நடப்போம் என்று நினைக்கலாம். ஆனால் அந்த நினைப்பு வயதானவர்களுக்குத்தான் வர வேண்டும் என்பதில்லை. இளம் வயதிலேயே அந்த பாச உணர்வை நாம் கைக் கொள்ளலாம்.

ஆனால் இன்றைய மெஷின் உலகில் கைகளைப் பரிவுடன் பற்றிக் கொள்வது என்பதே நிறைய பேருக்கு மறந்து போய் விட்டது. கைகளை ஆதரவுடன் பற்றிக் கொள்ளும்போது ஏற்படும் உணர்வுகளை அனுபவித்தால்தான் தெரியும். கிட்டத்தட்ட 'கட்டிப்புடி' வைத்தியம் போலத்தான் இதுவும்.

நாம் உறுதியாக இருக்கிறோம், ஒருவருக்கொருவர் அன்பாக, அனுசரணையாக, காதலுடன் இருக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லும் மொழிதான் இந்த கைப்பிடித்தல்.

எப்போதெல்லாம் மனக் கிலேசம், மனச் சோர்வு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் உங்களுக்குப் பிரியமானவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு சில விநாடிகள் இருங்கள். எல்லாமே உங்களிடம் வந்து விட்டதைப் போன்ற உணர்வு ஏற்படுவதை உணர்வீர்கள்.

ஏ.ஆர். ரஹ்மான் - மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்


ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது பற்றி கருத்து தெ‌ரிவித்த இயக்குனர் ஒருவர், அவருக்கு விருது கிடைத்ததில் எனக்கு எந்த ஆச்ச‌ரியமும் இல்லை, கிடைக்காவிட்டால்தான் ஆச்ச‌ரியப்பட்டிருப்பேன் என்றார்.

1992ல் வெளியான ரஹ்மானின் முதல் படம் ரோஜாவிலிருந்து இன்று வரை அவரது இசைக்கு செவிமடுத்துவரும் ரசிகர்களுக்கும் இந்த விருது எவ்வித ஆச்ச‌ரியத்தையும் அளிக்கவில்லை. அவரது திறமைக்கு, இசை பங்களிப்புக்கு கோல்டன் குளோப் விருது ஒரு தொடக்கம் மட்டுமே என்ற மனப்பதிவே அனைவ‌ரிடமும் மேலோங்கியிருந்தது.

ரஹ்மானின் இசையார்வம் அவரது குழந்தை பருவத்திலிருந்தே தொடங்குகிறது. அவரது தந்தை ஆர்.கே. சேகர் பிரபல இசையமைப்பாளர். மலையாளப் படங்கள் பலவற்றில் பணிபு‌ரிந்திருக்கிறார். ரஹ்மானுக்கு அவரது தந்தையே முதல் குருவாகவும் இருந்துள்ளார். சிறுவனாக இருந்தபோது தன்ரா‌‌ஜ் மாஸ்ட‌ரிடம் முறைப்படி இசை பயின்றார் ரஹ்மான்.

ரஹ்மானின் முதல் திரைப்பிரவேசம், மணிரத்னத்தின் ரோஜா. விளம்பரப் படங்களுக்கு அவர் இசையமைத்திருந்ததை கேட்டே இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ரோஜாவுக்கு இசையமைக்கும் முன் (1991ல்) தனது வீட்டின் பின்புறம் சொந்தமாக ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பித்தார் ரஹ்மான். அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்டிருந்த அந்த ஸ்டுடியோ இன்று இந்திய அளவில் அதிநவீன வசதிகள் கொண்ட ஸ்டுடியோவாக திகழ்கிறது.

இசையமைப்பாளர் ஒருவருக்கு இசையறிவுடன் நவீன தொழில் நுட்பம் குறித்த பு‌ரிதலும் இருக்க வேண்டும் என்பது ரஹ்மானின் நிலைப்பாடு. தொழில்நுட்ப விஷயத்தில் காலத்தோடு ஒழுகினால் மட்டுமே சர்வதேச இசையுலகில் நிலைத்து நிற்க இயலும். இதனை ச‌ரியாக பு‌ரிந்து கொண்டவர் ரஹ்மான். அவர் தொடங்க இருக்கும் இசைப்பள்ளியில் இசையையுடன், நவீன தொழில்நுட்பம் குறித்தும் கற்பிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

திரையிசையில் மரபான நடைமுறையை ரஹ்மான் நிராக‌ரித்த போதெல்லாம் கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டி வந்தது. இசையில் அளவுக்கதிகமாக தொழில்நுட்பத்தை கலக்கிறார் என்பது முக்கியமான குற்றச்சாட்டு. அவர் இசையமைப்பாளர் அல்ல, வெறும் கம்போஸர் மட்டுமே என இசைத்துறையில் உள்ளவர்களாலேயே விமர்சிக்கப்பட்டார். இன்று அந்த குற்றச்சாட்டுகள் நிறமிழந்து விட்டன. மேலும், அவரது உலகளாவிய புகழுக்கு அவரது தொழில்நுட்ப அறிவும் ஒரு காரணமாக இருப்பதை அவரை விமர்சித்தவர்களே ஒப்புக் கொள்வர்.

ரஹ்மானால் வெஸ்டர்ன் ஸ்டைலில் மட்டுமே இசையமைக்க முடியும், தமிழ் கிராமிய இசை அவருக்கு வெகு தூரம் என்பது பொதுவான கருத்து. இது ஒரு குறையாக முன்வைக்கப்பட்டபோது அவர் இசையமைத்த படங்கள் கிழக்கு சீமையிலே மற்றும் கருத்தம்மா. இந்தப் படங்களின் இசையும், பாடல்களும் ரஹ்மானுக்கு கிராமிய இசையில் அறிமுகமில்லை என்ற விமர்சனத்துக்கு பதிலாக அமைந்தன. என்றாலும், தமிழ் கிராமிய இசை முழுமையாக அவருக்கு இன்னும் கைவரப் பெறவில்லை என்பதே உண்மை.

இந்திப் பாடல்களுக்கு செவிமடுத்து வந்த தமிழர்களை தமிழ் திரையிசையின் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்திப் பாடல்களை மட்டும் கேட்டு வந்த வட இந்தியர்களை தமிழ் திரையிசையின்பால் ஈர்த்தவர் ரஹ்மான். நேரடி இந்திப் படங்களுக்கு அவர் இசையமைக்கும் முன்பே ரோஜா, ஜென்டில்மேன், காதலன், பம்பாய் ஆகிய படங்களின் வாயிலாக அவர் இந்தியா முழுவதும் ரசிக்கப்படும் இசையமைப்பாளராகியிருந்தார்.
ரஹ்மான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், ஜப்பான், சீனா ஆகிய மொழிகளில் தயாரான படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது முதல் இந்திப்படம் ராம்கோபால் வர்மாவின் ரங்கீலா. ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் ரசிகர்கள் எழுந்து நின்று ஆடிய அதிசயத்தை பாலிவுட்காரர்கள் அனுபவப்பட்டது இந்தப் படத்தில்தான்.

webdunia photo WD
இன்று பாலிவுட்டில் நல்ல திரைப்படம் ஒன்று தயாரானால் இசை ஏ.ஆர். ரஹ்மான் என்பது எழுதப்படாத விதி. ஃபயர், லகான், ரங் தே பசந்தி, ஸ்லம் டாக் மில்லியனர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ரஹ்மானின் இசைப் பயணத்தில் 2002ம் ஆண்டு முக்கியமானது. இந்த ஆண்டில்தான் அவரது பாம்பே ட்‌ரிம்ஸ் பி‌ரிட்டனில் அரங்கேறியது. ஆண்ட்ரூ லாயிட் வெப்ப‌ரின் பாம்பே ட்‌ரிம்ஸ் நாடகம் சர்வதேச அளவில் அவருக்கு ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது.

1997ல் வெளியான ரஹ்மானின் வந்தே மாதரம் இசை ஆல்பம் குறிப்பிடத்தகுந்த முயற்சி. இதையடுத்து அவர் வெளியிட்ட ஜன கன மண ஆல்பமும் ரசிகர்களின் பெருத்த ஆதரவை பெற்றது. திரையிசையில் பாடல்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பின்னணி இசைக்கும் கொடுப்பவர் ரஹ்மான். 2005 ஆம் ஆண்டு டைம்ஸ் பத்தி‌ரிகை வெளியிட்ட ‘டாப் டென் மூவிஸ் சவுண்ட் ட்ராக்ஸ் ஆஃப் ஆல் டைம்’ பட்டியலில் ரஹ்மானின் ரோஜாவும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருதை கைப்பற்றியவர் என்ற பெருமை ரஹ்மானுக்கு உண்டு. ரோஜா (1992), மின்சாரக் கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003) என நான்கு தேசிய விருதுகள், ஆறு தமிழக அரசு விருதுகள், இருபத்தியிரண்டு ஃபிலிம்பேர் விருதுகள், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, இப்போது கோல்டன் குளோப் விருது என ரஹ்மானின் விருது பட்டியல் மிக நீண்டது.

இந்த கௌரவம் அத்தனை எளிதில் அவருக்கு கிடைத்துவிடவில்லை. 1966 ஆம் ஆண்டு ஜனவ‌ரி ஆறாம் நாள் சென்னையில் பிறந்த திலீப் குமார், ஏ.ஆர்.ரஹ்மானாக புகழின் உச்சியை வந்தடைந்ததற்குப் பின்னால் கடின உழைப்பு, விமர்சனத்துக்கு துவளாத மனம், பெருமைகள் அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் மனப்பக்குவம் என இளைய தலைமுறை கற்றுக் கொள்ளும் பல விஷயங்கள் இருக்கின்றன.

ரஹ்மானின் ஒன்பதாவது வயதில் அவரது தந்தை மரணமடைகிறார். இளையராஜாவிடம் கீ போர்ட் ப்ளேயராக அவர் சேரும்போது வயது பதினொன்று. இருபத்தியிரண்டாவது வயதில் இஸ்லாம் மதத்தை தழுவி திலீப் குமார் என்ற தனது பெயரை ஏ.ஆர். ரஹ்மான் (Aடடயா சுயமமாய சுயாஅயn) என மாற்றிக் கொள்கிறார். இருபத்தி ஆறாவது வயதில் முதல் திரைப்பிரவேசம்.

இன்று ரஹ்மான் என்பது அகிலம் முழுவதும் தெ‌ரிந்த பெயர். ஹாலிவுட் சினிமா அவரை விரும்பி அழைக்கிறது. இன்சைட் மேன், லார்ட் ஆஃப் த ‌ரி‌ங்‌ஸ், தி ஆக்சிடெண்டல் ஹஸ்பண்ட் உள்ளிட்ட படங்களில் ரஹ்மானின் இசை கோவைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். புகழ்பெற்ற டைம் பத்தி‌ரிகை அவருக்கு தந்திருக்கும் பட்டம், மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்.

ரஹ்மானின் திரையிசை சாதனை என்பது, எம்.எஸ்.வி., இளையராஜா என்ற இருபெரும் மேதைகள் உருவாக்கி வைத்திருந்த இசைப்பாதையிலிருந்து விலகி திரையிசைக்கு முற்றிலும் புதிதான ஒரு திறப்பை ஏற்படுத்தியதே ஆகும். இந்த சாதனையின் வெளிச்சத்தில் சர்வதேச ரசிகர்களை தன்வயப்படுத்தி வருகிறார் ரஹ்மான். இசை என்பது சாகரம். அதை உணர்ந்தவராக ஒரு மாணவனுக்கு‌ரிய ஆர்வத்துடன் அவரது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நெடிய பயணத்தில் கோல்டன் குளோப், ஆஸ்கர் என்பதெல்லாம் மைல் கற்கள் மட்டுமே, எல்லைக் கோடுகள் அல்ல.

அரசியலுக்கு வருகிற எண்ணம்? -வெளிப்படுத்தினார் சத்யராஜ்


புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் புகழ்பாடும் 'இதயக்கனி' மாத இதழ் சார்பாக எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவையில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர் சத்யராஜ், இயக்குனர் வி.சி.குகநாதன், புலவர் புலமைப்பித்தன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

புலமைப்பித்தன் எழுதிய 'ஒரு பூகோளமே பலி பீடமாய்' என்ற நூலை சத்யராஜ் அறிமுகம் செய்து பேசியதாவது-

இன்று எம்ஜிஆர் பெயரை சொல்லி நிறைய பேர் கட்சி துவங்குகிறார்கள். அவரது பெயரை உச்சரித்தால்தான் ஓட்டு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவரது பெயரை உச்சரிக்காவிட்டால் ஓட்டு கிடைக்காது. எம்ஜிஆர் பெயரை சொல்லி நல்ல விஷயங்களை செய்ய முன் வாருங்கள். அவரது பெயரை கெடுக்கும் செயல்களில் ஈடுபடாதீர்கள். நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று பலர் என்னை இழுக்கிறார்கள். நான் அரசியலுக்கு வரும் கால சூழ்நிலை இப்போது இல்லை. நான் அரசியலுக்கு வருவதை விட எம்ஜிஆரின் ரசிகனாக இருந்தே உதவி செய்ய விரும்புகிறேன்.

என்னிடம் பெரிய தகுதி எதுவும் இல்லை. கல்லூரி படிப்பை கூட முடிக்கவில்லை. சென்னைக்கு சென்று கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறினேன். என்னை ஆளாக்கியது எம்ஜிஆர் படங்கள்தான். எம்ஜிஆர் கையினால் பரிசு வாங்க வேண்டும் என்ற துடித்தேன். ஒரு கட்டத்தில் பரிசும் வாங்கினேன். அந்த கர்லா கட்டையை என் வீட்டில் இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன்.

இலங்கை தமிழர் நிலையை பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது. இலங்கையில் தமிழர்கள் வாழ்வு மலரும். அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த வெற்றி விழாவை நாம் கொண்டாடதான் போகிறோம்.

இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

கருப்பு-கருணாஸ் அடிதடி கலவரத்தில் கோலிவுட்


பாலாவிடம் சொல்லி நான்தான் 'பிதாமகன்' படத்திலே வாய்ப்பு வாங்கி கொடுத்தேன்னு கருணாஸ் பேட்டிக் கொடுக்கப் போக, பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார் கஞ்சா கருப்பு.

வார்த்தைகளில் அமிலம் தெறிக்க கருப்பு பேசுவது, கருணாசுக்கு கேட்கிறதோ இல்லையோ, ஊருக்கே கேட்கிறது! "இவரை நடிக்க வைங்க, அவரை நடிக்க வைங்கன்னு படத்தோட ஹீரோக்களே சிபாரிசு செய்ய முடியாது. அப்படி யாராவது கருத்தை திணிச்சா ஏத்துக்கிற ஆளா பாலா அண்ணன்?"

"மண்டை கனத்துக்கு மறு பெயர்தான் கருணாஸ். இப்படியொரு ஆள் வந்துதான் நமக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு இருந்தா, நான் தூக்கு போட்டு செத்துருவேன். கருணாஸ் கூட காம்பினேஷன்னு நிறைய படங்களில் கூப்பிட்டாங்க. வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டேன். அந்த கடுப்பைதான் இப்படி காட்டுறாரு. நான் அறை எண் 305 ல் கடவுள் படத்திலே ஏற்கனவே ஹீரோவா நடிச்சிட்டேன். அவருக்கு இப்பதான் இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. அந்த சந்தோஷம் தாங்க முடியாம புலம்புறாரு"

இப்படி பந்தாடுகிறார் கஞ்சா கருப்பு. கருணாஸ் இப்போ கப்சிப்!

ஆஸ்கர் விருது.... ரஹ்மானுக்கு எதிராக சதி?


"யாரோ ஒருத்தரு ஜெயிச்சாங்கல்ல, ஸ்வீட் எடுத்துக்கோங்க..." என்கிற மாதிரியான விஷயம் அல்ல இது. ஒவ்வொரு இந்தியனும் ஆனந்த கும்மி அடித்திருக்க வேண்டிய விஷயம்! அடித்தார்களா?

கலிபோர்னியாவில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் 'கோல்டன் குளோப்' விருதை பெறுவதறகாக மேடைக்கு வந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு அழுத்தமான 'உம்மா' கொடுத்தார் அறிவிப்பாளராக இருந்த அழகி! இந்த 'உம்மா'

இந்தியாவின் சந்தோஷம்!
இந்தியாவின் ஆனந்தம்!!
இந்தியாவின் பேருணர்ச்சி!!!

ஏனென்றால் இந்த விருதை பெறும் முதல் இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மான்தான்.

அந்த வினாடியிலிருந்தே உலக தமிழர்களுக்கு கொண்டாட்டம் தலைக்கேறியது.எல்லா முக்கிய இணைய தளங்களிலும் பிளாஷ் நியூஸ் இதுதான். டைம்ஸ் நவ், சிஎன்என் போன்ற சேனல்கள் முக்கிய அறிவிப்பாக இந்த செய்தியை வெளியிட்டன.

1944 ல் நிறுவப்பட்ட கோல்டன் குளோப் 66 ஆண்டுகளாக உலகில் உள்ள பல்வேறு சிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருது பற்றி சொல்பவர்கள் 'ஆஸ்கர் விருதுக்கு முந்தைய அடையாளம் இது' என்றே பெருமை பேசுகிறார்கள். இந்த முறை பிரிட்டிஷ் இயக்குனர் டேனி போயல் இயக்கிய 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தில் இசையமைத்தற்காக பெற்றிருக்கிறார் ரஹ்மான்.

ஆனால் இவ்வளவு சந்தோஷமும், திருமங்கலம் வேட்டு சத்தத்தில் அமுங்கிப் போனதுதான் துரதிருஷ்டம். தமிழ் சேனல்களில் பலவற்றை ஆக்ரமித்துக் கொண்டது இடைத்தேர்தல் முடிவும், அது குறித்த அலசல்களும்தான். அட, இதுவாவது போகட்டும். விருதை வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்திறங்கிய ரஹ்மானை வரவேற்க தமிழ் திரையுலகத்தை சேர்ந்த வி.ஐ.பிகள் ஒருவருமே போகவில்லை. நல்லவேளையாக ரஹ்மான் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தார்கள். நாதஸ்வரம், மேளதாளத்தோடு விருது ராஜாவை அவரது வீடு வரைக்கும் கொண்டு போய் சேர்த்தார்கள். அன்று நள்ளிரவு வரை அந்த தெருவே திருவிழா கோலம் பூண்டிருந்தது. ஒரு தெருவோடு முடிந்து போகிற கொண்டாட்டமா இது?

இருந்தாலும் சற்று தாமதமாகதான் திரையுலகத்தை சேர்ந்தவர்களும், அரசியல் Golden Globe Awardதலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ தலைவர் அத்வானி, அபிஷேக் பச்சன், ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்தினார்கள். கை நிறைய மலர் கொத்துகளோடு நேரில் வந்து வாழ்த்தினார்கள் நடிகர் பார்த்திபனும், இயக்குனர் கதிரும். தமிழக முதல்வர் கலைஞரும், அதிமுக தலைவி ஜெயலலிதாவும் தங்கள் வாழ்த்துகளை அறிக்கையாகவே வெளியிட்டார்கள்.

தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம், ரஹ்மானுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தது. (மற்ற இசையமைப்பாளர்கள் யாருக்கும் மனசே வரவில்லை போலிருக்கிறது)

இவ்வளவு களேபரங்களுக்கு நடுவிலும், தன்னை சூழ்ந்து கொண்ட ஆங்கில Golden Globe Awardபத்திரிகையாளர்களிடம் ரஹ்மான் கேட்ட ஒரே கேள்வி "தமிழ் பத்திரிகைகளிலிருந்து யாரும் வரலையா?" என்பதுதான். என்றாலும், மறுநாள் தமிழ் பத்திரிகைகள் சார்பாக சில நிருபர்களை சந்தித்தார் இசைப்புயல்! ஏராளமான கேள்விகள். எல்லாவற்றுக்கும் தனது இசையைப் போலவே இனிக்க இனிக்க பதில் சொன்னார் தனக்கு பின்னால் நடக்கும் கசப்பான ஒரு விஷயத்தை ஜீரணித்துக் கொண்டே! மறந்தும் கூட இவர்களிடம் அதுபற்றி வாய் திறக்காத ரஹ்மான் தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரிடம் வேதனையோடு குறிப்பிட்டாராம் இப்படி...

"நான் ஆஸ்கர் விருதை வென்று விடுவேனோ என்று அஞ்சுகிற சிலர் எனக்கு எதிராக புரளிகளை கிளப்பிவிடுகிறார்கள்"

தயங்கி தயங்கி இந்த வார்த்தையை அப்படியே நம் காதிலும் போட்டார் நண்பர். எந்த மாதிரியான புரளிகள் என்பது குறித்து மேலும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அதே நண்பர். "ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட கோல்டன் குளோப் விருது, ஒரிஜனல் இசைக்கான விருது. ஆனால், ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்கு ரஹ்மான் ஒரிஜனலாக இசையமைத்தது ஐந்தே டிராக்குகள்தான் என்றும், மற்ற டிராக்குகள் எல்லாம் ஏற்கனவே அவரால் பயன்படுத்தப்பட்டவை" என்றும் வதந்தி பரப்புகிறார்கள். ஆனால் எல்லா டிராக்குகளும் ஒரிஜனலாக இந்த படத்திற்கென்றே உருவாக்கப்பட்டது. அதுவும் லண்டனில் ரஹ்மானுக்கு சொந்தமான வீட்டிலிருக்கும் இசைக்கூடத்தில் இருபதே நாட்களில் உருவாக்கப்பட்டது" என்று கவலையோடு சொன்னார் அந்த நண்பர்.

ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக்கு இந்த படத்தை அனுப்பும்போது படத்திற்கு விருது கிடைத்தாலும், இசைக்கோ, இசையமைப்பாளருக்கோ விருது கிடைத்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு கிளப்பி விடப்பட்ட வதந்திதானாம் இது. ஏனென்றால் ஒரிஜனல் இசை டிராக்குகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே விருது கமிட்டியால் தேர்வு செய்யப்படுவார் ரஹ்மான். மீடியாக்களின் கருத்தும் இந்த கமிட்டியால் பரிசீலிக்கப்படும் என்பதால், இதை திட்டமிட்ட சதியாகவே கருதுகிறாராம் ரஹ்மான்!

கோல்டன் குளோப் விருதை ரஹ்மான் வென்றவுடன் முதலில் கொண்டாடிய இதே மும்பை மீடியாக்கள் மூலமாகதான் இப்படி ஒரு தகவலும் பரப்பப்படுகிறதாம். சிஎன்என் சேனலில் ராஜிவ் மசந்த் என்பவர் ரஹ்மானின் கோல்டன் குளோப் விருது குறித்து எழுப்பிய விமர்சனங்களில்தான் இப்படி ஒரு குற்றச்சாட்டு பகிரங்கமாக எழுப்பப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து பிற சேனல்களும் இதே கருத்தை வழி மொழிய துவங்கியிருக்கிறார்களாம்.

இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், யாரோ திட்டமிட்டு இந்த வதந்தியை பரப்புகிறார்கள் என்பதை மட்டும் உறுதியாக நம்புகிறாராம் ரஹ்மான்.

ஒரு நெகிழ்ச்சியான பிளாஷ்பேக்... காதல் கோட்டை படத்திற்காக முதன் முதலாக தேசிய விருதை பெற்றுக் கொண்டு சென்னை திரும்பிய இயக்குனர் அகத்தியனுக்கு தங்கத்தில் அடையாள அட்டை கொடுத்து கௌரவித்தது இயக்குனர்கள் சங்கம். அதுமட்டுமல்ல... பாலசந்தர், பாரதிராஜா போன்ற இரு ஜாம்பவான்களும் இருபுறமும் நின்று அவரை மலர் தூவி வரவேற்றார்கள்.

நாற்பத்தி மூன்றே வயதில், ரஹ்மான் சாதித்தது ஏராளம். இவரது ஆடியோ சிடிக்கள் இதுவரை 200 மில்லியனுக்கு மேல் விற்றிருக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விபரம். அகத்தியனுக்கு வழங்கியதை போல ரஹ்மானுக்கும் ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டால், அதுவே ஆயிரம் ஆஸ்கருக்கு சமம்!

செய்வீர்களா தோழர்களே!

டெயில் பீஸ்-

ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படம் குடிசைப் பகுதி மக்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்று பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் தபேஸ்வர் விஸ்வகர்மா என்ற வழக்கறிஞர். நடிகர் அனில் கபூர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை ரஹ்மானுக்கு எதிரான சதியோடு இணைத்து பார்க்கிறார்கள் கோடம்பாக்கம் வட்டாரத்தில்!

ஆஸ்கருக்கு அருகில் ஏ.ஆர்.ரஹ்மான்!


ஸ்லம் டாக் .. 10 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை - ரஹ்மானுக்கு 3
ஆஸ்கர்... சாதாரண கலைஞன் தொடங்கி கமல் ஹாசன் வரை (வெளியே மறைத்தாலும்!!) ஒவ்வொரு இந்தியக் கலைஞனின் கனவு விருது அது.

அந்த விருதை இன்னும் சில தினங்களில் எட்டிப் பிடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் 'மெட்ராஸ் மொஸார்ட்'என இசை ரசிகர்களால் கொணாடாடப்படும் 'நம்ம ரஹ்மான்'.

ஸ்லம்டாக் படம் 10 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரஹ்மானின் பெயர் 2 பிரிவுகளில் 3 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இதே படத்துக்காக கோல்டன் குளோப் விருது பெற்றுள்ள ரஹ்மானுக்கு இப்போது ஆஸ்கர் விருதும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பிரகாசமாகியுள்ளது.

சிறந்த ஒரிஜனல் ஸ்கோர் மற்றும் இரண்டு சிறந்த பாடல்களுக்கான பிரிவுகளில் ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இது தவிர, சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது இந்தப்படம்.

பரிந்துரை செய்யப்பட்ட பிரிவுகள் விவரம்:

பெஸ்ட் ஒரிஜனல் ஸ்கோர் - ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த ஒரிஜினல் பாடல் 'ஜெய் ஹோ..' - ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த ஒரிஜினல் பாடல் 'ஓ சாயா…' - ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த படம் - ஏ காலண்டர் பிலிம்ஸ் புரடக்ஷன், கிறிஸ்டியன் கோல்சன்
சிறந்த ஒளிப்பதிவு - ஆன்டனி டோட்மென்டில்
சிறந்த அடாப்டட் திரைக்கதை - சைமன் பியூஃபோய்
சிறந்த எடிட்டிங் - கிறிஸ் டிக்கென்ஸ்
சிறந்த திரைப்பட எடிட்டிங் - கிறிஸ் டிக்கென்ஸ்
சவுண்ட் எடிட்டிங் - டாம் சேயர்ஸ்
சிறந்த இயக்குனர் - டானி பாய்ல்

ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியன்று நடைபெறுகிறது.

ஒரு இந்திய திரைக் கலைஞர் ஒன்றுக்கு மேற்பட்ட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் புதிய சாதனை படைத்துள்ளார்.

தனது பெயரும், ஸ்லம்டாக் படமும் பெருமளவில் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறித்து ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில், எனது இசை இந்த அளவுக்கு பேசப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை. எனது முதல் நன்றி குல்ஸாருக்குத்தான்.

நான் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். விருது கிடைத்தால் சந்தோஷப்படுவேன். இல்லாவிட்டாலும் ஏமாற்றமடைய மாட்டேன் என்றார்.

யுவன் ஷங்கர் ராஜா வாழ்த்து!


கோல்டன் குளோப் விருது பெற்று இந்திய சினிமாவை உலகத் தரத்துக்கு உயர்த்திய ஏஆர் ரஹ்மான், ஆஸ்கர் விருதுகளையும் வெல்வது நிச்சயம் என பாராட்டு தெரிவித்துள்ளார் இசைஞானி இளையராஜாவின் மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதை அவர் தெரிவித்தார்.

நாமும் மெட்ராஸ் மொசார்ட்டுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களைச் சொல்வோம்!

அரசியல் ஒரு கடல், இறங்குவது சுலபமல்ல: விஜய்


மதுரை: அரசியல் என்பது கடல் போன்றது, அதில் யார் வேண்டும் என்றாலும் ஈடுபடலாம். ஆனால் இறங்குவது சுலபமல்ல என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.வில்லு படம் திரையிட்ட திரையரங்குகளுக்குச் சென்று, ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் நடிகர் விஜய்.

அதன் ஒரு பகுதியாக மதுரைக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் நடித்த திரைப்படங்களில், திரையிட்ட 10 நாட்களில் வில்லு படத்திற்குத் தான் அதிக வசூல் கிடைத்துள்ளது. இப் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படி உள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் எனது உணர்வை வெளிப்படுத்துவதற்காக, நான் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தேன். மக்களுக்கு நற்பணி செய்வதும், சமூக உண்ர்வுடன் உண்ணாவிரதம் இருப்பதும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல.நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று என்பது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் விருப்பம். சேவையுள்ளம் கொண்ட இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

அரசியல் என்பது கடல் போன்றது. அதில் எவர் வேண்டுமானாலும் ஈடுபடலாம். ஆனால் அதில் இறங்குவது அவ்வளவு சுலபமல்ல. எனக்கு இப்போது அரசியல் பிரவேச ஆசையெல்லாம் கிடையாது என்றார் விஜய்.

காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார் முகம்மது அஸாருதீன்: மொய்லி

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகம்மது அஸாருதீன் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பமாக உள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் அஸாருதீன் சமீபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, வீரப்ப மொய்லி மற்றும் சீனிவாஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் காங்கிரஸில் சேரவிருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.

இதுகுறித்து வீரப்ப மொய்லி கூறுகையில், அஸாருதீன் காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் எங்கு போட்டியிட்டால் சரியாக இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும் என்றார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவை அஸாருதீன் சந்தித்தபோது அந்தக் கட்சியில் அவர் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சேரவில்லை.இந்த நிலையில் காங்கிரஸில் சேர அஸாருதீன் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஒருவேளை காங்கிரஸில் அவர் சேர்ந்தால், ஹைதராபாத்தில் அவர் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.கங்குலிக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் அஸாருதீன். 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2000மாவது ஆண்டு சூதாட்டத்தில் சிக்கி நிரந்தரமாக கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

Thursday, January 22, 2009

முதலின்றி நிற்கும் முதல்வர் கலைஞரின் படங்கள்


முதலுக்கு வழியின்றி முதல்வர் கலைஞரின் படங்கள் பாதியிலேயே பஞ்சராகி நிற்கிறது.
கட்சி வேலைகள், ஆட்சி வேலைகள் என தலையில் ஏகப்பட்ட டென்ஷனை வைத்திருந்தாலும் பேப்பரும் கையுமாக கதை எழுதுவதுதென்பதும் கலைஞருக்கு பிடித்தமான ஒன்றுதான். ஐயா ஒரு கதை கொடுத்தீங்கன்னா படம் ஆரம்பிசுடலாம் என கலைஞரை அனுகும் அடுத்த நிமிடமே ஆர்வத்துடன் தயாராகிவிடுவார் தலைவர். இதெல்லாம் போன வருடம் வரைக்கும்தான். இனி அது நடக்காது. அவரது கதையை படமாக எடுக்கிறேன் என்று சொல்லி சென்றவர்களின் பேச்செல்லாம் ஏட்டு சுரைக்காய் ஆனதால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் கலைஞர்.

ஒருவருடத்திற்கு முன்பு பாட்டெழுதவே நேரமில்லாமல் இருந்த பா.விஜய்க்கு திடீரென மேக்கப் பூச ஆசைவர, கலைஞரின் 'தாய்க்காவியம்' படத்தில் கதாநாயகன் வேஷம் கட்டத் தொடங்கினார். வெளிநாடெல்லாம் போய் ஆட்டம்போட்டு வந்த சில நாட்களிலேயே பட்ஜெட் கரைந்து படம் பாதியிலேயே நிற்கிறது. அவ்வளவுதான் மறுபடியும் டியூனுக்கு வார்த்தை தேட ஆகாயம் பார்த்துவருகிறார் கவிஞர்

தாய்க்காவியத்தின் நிலை இப்படியென்றால் ‘பொன்னர் சங்கர்' படத்தின் நிலை அதைவிட மோசம். இப்படத்தில் இரட்டை வேடத்தில் பிரஷாந்த் நடிக்கப்போவதாகவும் தியாகராஜன் இயக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் அறிவிப்பு வெளியானதோடு சரி. பைனான்ஸ் பார்ட்டிகள் ஒருவரும் சிக்காததால் படப்பிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முதலின்றி முடங்கிக்கிடக்கும் இரண்டுமே முதல்வரின் படங்கள் என்பதுதான் இதில் சிறப்புத் தகவல். எனவே யாராவது தலைவரிடம் கதைக்கேட்டுப்போனால் கடித்துக் குதறாத குறையாக வெளியே விரட்டுகிறாராம்.

ஏ.ஆருக்கு யுவன் வாழ்த்து , ரஹ்மான் மீது வழக்கு

ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது இந்தியாவுக்கே பெருமையான விஷயம் என்று ஏ.ஆரை மனம் திறந்து பாராட்டினார், யுவன் ஷங்கர் ராஜா.முதன் முறையாக யுவன் மேடை நிகழ்ச்சி ஒன்றை கனடாவின் டொரண்டோ நக‌ரில் ஏப்ரல் 25 ஆம் நாள் நடத்துகிறார். பிளாட்டினம் என்ற நிறுவனம் இந்த இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறது.

50 இசைக் கலைஞர்களுடன் பாடகர்கள் ஹ‌ரிகரன், சங்கர் மகாதேவன், விஜய் யேசுதாஸ், பாடகிகள் சுவேதா, வசுந்தராதாஸ் ஆகியோரும் இதில் பங்கேற்கிறார்கள். நடிகர் நடிகைகளின் நடனங்களும் இந்த இசை நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது.

நிகழ்ச்சியின் முக்கியமான அட்ரா‌க்சன், இளையராஜா. பொதுவாக மேடை கச்சே‌ரிகளை தவிர்க்கும் இசைஞானி, யுவனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடுகிறார்.

இந்த மேடை நிகழ்ச்சி குறித்து பத்தி‌ரிகையாளர்களுக்கு பேட்டியளித்த யுவன், கோல்டன் குளோப் விருது கிடைத்ததற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு தனது பாராட்டுகளை தெ‌ரிவித்தார்.


ரஹ்மான் மீது வழக்கு
காய்த்த மரம் கல்லடிபடும். ஏ.ஆர். ரஹ்மான் கோல்டன் குளோப் எனும் தங்கமாக காய்த்து நிற்கிறார். கல்லடிக்கு சொல்லவா வேண்டும்.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் சே‌ரிவாழ் மக்களை இழிவுப்படுத்துவதாகவும், படத்தின் பெயர் அம்மக்களை கேவலப்படுத்துவதாகவும் கூறி, பாட்னா நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுபோன்று ஒரு சர்ச்சை கிளம்பினால் படத்தின் இயக்குனர் மீதும், தயா‌ரிப்பாளர் மீதும்தான் வழக்கு தொடரப்படும். படத்தின் பெயருக்கும், கதைக்கும் அவர்கள்தான் பொறுப்பு.

ஸ்லம்டாக் மில்லியனர் விஷயத்தில் படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் நடித்த அனில்கபூர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

படத்தை இயக்கியவர் இங்கிலாந்தை சேர்ந்தவர். அவர்மீது வழக்கு தொடாந்தால் எதுவும் ஆகப்போவதில்லை என்பதை உணர்ந்து, இந்த குற்றச்சாட்டுக்கு சம்பந்தமில்லாத இருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இசைப் புயல் இதனை எளிதாக கடந்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஷாருக் பார்த்த ரமணா இந்தியில் ‌ரீமேக்

க‌ஜினியின் வெற்றி பாலிவுட்டை கிடுகிடுக்க வைத்திருக்கிறது. முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க அனைவருக்கும் உள்ளுக்குள் ஆசை.இந்தியாவில் க‌ஜினி வசூ‌ல் எண்பது கோடியை தாண்டியிருக்கும் நிலையில், அதற்கு முன்பு வெளியான ஷாருக்கானின் படம் நாற்பது கோடியையே இன்னும் எட்டவில்லை.

முருகதாஸிடம் அப்படி என்ன மந்திரம் இருக்கிறது என்பதை தெ‌ரிந்து கொள்வதற்காக அவர் இயக்கிய அனைத்துப் படங்களையும் டிவிடி-யில் பார்த்திருக்கிறார் ஷாருக்.

அதில் ரமணா ஷாருக்கிற்கு ரொம்பவே பிடித்துப் போயிருக்கிறது. ரமணா கதையை வாங்கி இந்தியில் ‌ரீமேக் செய்யலாம் என கிங் கான் திட்டமிட்டுள்ளார்.

பில்லு பார்பர் வெளியான பிறகு படம் குறித்த அறிவிப்பை எதிர்பா‌ர்க்கலாம்.

செ‌ன்னை பாக்ஸ் ஆஃபி‌ஸ் டாப் 5 படங்கள்

பொங்கலுக்கு வெளியான மூன்று படங்களில் காதல்னா சும்மா இல்ல மட்டும் விமர்சகர்களால் பரவாயில்லை பாராட்டை பெற்றிருக்கிறது. வில்லு, படிக்காதவன் இரண்டும் எந்தவிதத்திலும் ஆச்ச‌ரியத்தை தூண்டாத வழக்கமான கமர்ஷியல் படங்கள். இதில் படிக்காதவனுக்கே ரசிகர்கள் கூட்டம் அதிகம். பிரபலமான நடிகர்கள் இல்லாததால் காதல்னா சும்மா இல்ல சுமாரான வசூலையே பெற்றுள்ளது.

1. படிக்காதவன்
சுரா‌ஜின் இந்தப் படம் கமர்ஷியலாக வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஐந்து தினங்களில் முக்கால் கோடியை சென்னையில் மட்டும் வசூலித்திருப்பது படிக்காதவனுக்கு முதலிடத்தை பெற்றுத் தந்திருக்கிறது.

2. வில்லு
வில்லுக்கு இரண்டாவது இடம். சென்னையில் இதுவரை ஒரு கோடி வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வாரம் நாற்பத்து மூன்று லட்சங்கள் வசூலித்தது. நாளுக்கு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வில்லுவின் பாக்ஸ் ஆஃபிஸ் தோல்வியை உறுதி செய்கிறது.

3. காதல்னா சும்மா இல்ல
பிரபலங்கள் இல்லாதது படத்தின் வசூலில் பிரதிபலிக்கிறது. இதுவரை பதிமூன்று லட்சங்கள் வசூலித்திருக்கிறது. விமர்சனங்கள் படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிக‌ரிக்க வாய்ப்பிருக்கிறது.

4. அபியும் நானும்
நான்கு வார இறுதியில் ராதாமோகனின் படம் ஒரு கோடியை தாண்டியிருக்கிறது. சென்றவார வசூல், ஏறக்குறைய ஆறரை லட்சம். படம் above average.. வசூல் average.

5. அஆஇஈ
குடும்பப் பின்னணியில் அமைந்த இந்த காதல் படம் சென்றவார இறுதியில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் நாலரை லட்சம் வசூலித்துள்ளது. இதுவரை இதன் மொத்த வசூல் இருபது லட்சங்கள். சாதாரண படம்.. மிகச் சாதாரண வசூல்.

இழுவையும் அருமையும்... புதுப்படம் பற்றி அஞ்சலி


வள்ளுவன் வாசுகி படத்தில் ஹீரோவாக நடித்த சத்யாவுடன் ஜோடி சேர்கிறார் அஞ்சலி. கதை விஷயத்தில் ‘சரக்கு’ இருந்தால் மட்டுமே அதில் நடிக்கிற வழக்கம் உள்ளவர் அஞ்சலி. வசந்த பாலனின் அங்காடி தெரு, தாமிராவின் ரெட்டச்சுழி, போன்ற படங்களில் நடித்து வரும் இவர், வளர்ந்து வரும் இளம் நடிகரான சத்யாவுடன் நடிப்பது கதைக்காக மட்டுமேதானாம்!

மகாராஜா என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இயக்குனர் டி.மனோகரன். இவர் ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். குருநாதர் போல துப்பாக்கியை தூக்காமல் வேறொரு கதையை சுவாரஸ்யமாக சொல்லப் போகிறாராம்.

‘கதை நன்றாக இருந்தாலும், அதை இழுவையாக சொல்லி இம்சிக்காமல் ஒவ்வொரு சீன்களும் வேக வேகமாக நகரும்படி கதையை அமைத்திருக்கிறார்’ என்று டைரக்டருக்கு சர்டிபிகேட் கொடுத்தார் அஞ்சலி. இவருக்காவது அனுபவம் கம்மி. படத்தில் இன்னொரு ஹீரோவாக (இப்படிதான் டைரக்டர் சொல்றாரு) நடிக்கவிருக்கும் நாசர், “நாளைக்கு ஷ§ட்டிங் கிளம்புறோம். ரொம்ப ஆர்வமா இருக்கேன். ஒரு படத்திலே நாலு சீன் புதுசா இருந்தாலே அந்த படம் ஹிட்டும்பாங்க. ஆனால், இதிலே புதுசுன்னு சொல்ற மாதிரி இருபது சீன்களுக்கும் மேல இருக்கு” என்றார்.

படத்திலே இன்னொரு பொண்ணும் இருக்கு. சாமுராய் படத்திலே விக்ரமுக்கு ஜோடியாக நடிச்ச அனிதாதான் அது. அப்போ கவர்ச்சிக்கு பஞ்சமில்லேன்னு சொல்லுங்க!

டபுள் கேம் ஆடிய இயக்குனர் அதிர்ச்சிக்குள்ளான ஹீரோக்கள்...


வழக்கமாக ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையே சில கிலோ மீட்டர்கள் வித்தியாசம் இருப்பது போல பார்த்துக் கொள்வார் சசி. ஆனால் பூ படத்திற்கு பிறகு உடனே ஒரு படத்தை துவங்கப் போகிறாராம். இந்த முறை பூ மாதிரி கதையல்ல, ஆக்ஷன்!

விஜய், விக்ரம், அஜீத், தனுஷ், சிம்பு ஏரியாக்களில் சிக்கி, சின்னாபின்னமாக முடியாது என்பதை துவக்கத்திலேயே உணர்ந்து கொண்டவர், ஆர்யாவிடம் கதை சொன்னாராம். அவரும் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் நான் கடவுள் வரட்டும். வந்தபின் முடிவை சொல்கிறேன் என்று கூறிவிட்டாராம். படத்தில் நடித்தாலும் சம்பளத்தை வாங்க, சரக்கு லாரியோடு வந்தால் என்ன செய்வது?

எதற்கும் இருக்கட்டுமே என்று ஜீவனிடமும் கதையை சொல்லியிருக்கிறாராம்.இவருக்கு தெரியாமல் அவர், அவருக்கு தெரியாமல் இவர் என்று கதையை சொன்னாலும், விஷயம் வெளியே கசிந்துவிட்டதே! இருவருக்கும் அதிர்ச்சி.

சரி, இந்த படத்தை தயாரிக்கப் போவது யார்? பூ படத்தை தயாரித்த மோசர்பேர் நிறுவனம். ம்ம்ம்ம்... விட்ட இடத்திலேதானே தேடணும்?

காத்திருக்கும் கரீஷ்மா


பாலிவுட்டில் மறு பிரவேசம் செய்வதற்குத் தோதான, நல்ல கதைக்காக காத்திருக்கிறாராம் கரீஷ்மா கபூர்.

பாலிவுட்டில் ஒரு காலத்தில் புயல் என கலக்கியவர் கரீஷ்மா கபூர். ஆனால் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகிய பின்னர் சினிமா பக்கம் திரும்பவில்லை கரீஷ்மா. ஆனால் அவரது தங்கை கரீனா கபூர், கரீஷ்மாவை விட இரண்டு மடங்கு அதிக அலையைப் பரப்பினார்.

இந்த நிலையில் மீண்டும் நடிக்க வர திட்டமிட்டுள்ளார் கரீஷ்மா. நல்ல கதைக்காக காத்திருக்கிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நல்ல கதை வேண்டும். அது என்னை திருப்திப்படுத்த வேண்டும். அப்போதுதான் மீண்டும் நடிக்க வருவேன்.

என்னை திருப்திப்படுத்தக் கூடிய அப்படிப்பட்ட நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்.

வயது முக்கியமல்ல. நடிப்புதான் முக்கியம். எனக்கு நடிக்க தெரியும். எனவே மீ்ண்டும் பாலிவுட்டில் பிரகாசிக்க முடியும் என நம்புகிறேன் என்றார் கரீஷ்மா.

கரீஷ்மா தற்போது நச் பாலியே என்ற நடன ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜ் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன. 26ம் தேதி பகுதி சூரிய கிரகணம்

சென்னை: வருகிற திங்கள்கிழமையன்று பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சென்னையில் பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 4.05 மணி வரை இதை பார்க்கலாம்.

இந்த சூரிய கிரகணம் திருவோணம் நட்சத்திரத்தில் நிகழ்வதால் திருவோணம், உத்திராடம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், திரிகோணத்தில் அமைந்த ரோகிணி மற்றும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் விநாயகருக்கும், கேதுவுக்கும் அர்ச்சனை செய்வது நல்லது என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரிய கிரகணம் காலை 10.26 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு முடிகிறது. சென்னையில் பிற்பகல் 2.30 மணியிலிருந்து மாலை 4.05 மணி வரை காண முடியும்.
.
தை அமாவாசை 25-ந் தேதி முற்பகல் 11.18 மணிக்கு தொடங்கி 26-ந் தேதி பிற்பகல் 1.34 மணிக்கு முடிகிறது. எனவே 25-ந் தேதி அமாவாசை தர்ப்பணமும், 26ந் தேதி கிரகண தர்ப்பணமும் செய்யலாம்.

இந்த சூரிய கிரகணம் தென்னிந்தியாவின் சில பகுதிகள், கிழக்கு கடற்கரைப் பகுதி, வட கிழக்கு, அந்தமான், நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத் தீவுகளில் தெரியும்.



உலக அளவில், தென் ஆப்பிரிக்கா, வட மேற்கு அன்டார்டிகா, ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் நன்கு தெரியும்.

நமீயா அருகே தெற்கு அட்லான்டிக் கடல் பகுதியில் சூரிய கிரகணம் தொடங்கி, கம்போடியாவின் தெற்குப் பகுதியில் முடிவடையும்.

அடுத்த சூரியகிரகணம் ஜூலை 22ம் தேதி நடைபெறுகிறது. அது முழுமையாக இருக்கும். இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சூரியகிரகணமாகவும் அது அமையும்.

இலங்கையில் போர்... கனடாவில் கலை நிகழ்ச்சி? இக்கட்டில் தவிக்கும் யுவன்!


கம்போசிங்கிற்காக பலமுறை கடல் தாண்டிய யுவன், முதன் முதலாக இசைக்கச்சேரி ஒன்றுக்காக கடல் தாண்டுகிறார். ஏப்ரல் 25 ந் தேதி கனடாவில் நடைபெறப் போகும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி யுவன்சங்கர்ராஜாவுடையது.

இந்த நிகழ்ச்சி குறித்து பேசுவதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் யுவன். "ஐம்பது பேர் கொண்ட என்னுடைய இசைக்குழுவுடன் கனடா செல்லப் போகிறேன். இந்த இசை நிகழ்ச்சியில் இடம் பெறப்போகும் எல்லா பாடல்களும் நான் இசையமைத்த படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவைதான். முக்கியமான விஷயம் என்னவென்றால், அப்பாவும் (இளையராஜா) ஒரு பாடலை பாடப்போகிறார்! அது என்ன என்பதை இப்போது சொல்ல முடியாது. அது சஸ்பென்ஸ் என்றார். யுவனின் தீம் மியூசிக்கும் இந்த இசைநிகழ்ச்சியில் இடம் பெறப்போகிறதாம்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் ஸ்ரீ, புலம் பெயர்ந்த தமிழர். நிகழ்ச்சியின் Sriசிறப்புகள் குறித்து நிறைய பேசினார் ஸ்ரீ. சனாகான், மீனாட்சி, தாரிணி போன்ற நடிகைகள் வருகிறார்களாம். மேடை நடனமும் உண்டு. இவர்களோடு முக்கியமான ஹீரோ ஒருவரையும் அழைத்துச் செல்ல பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்றார். யுவனுக்கும் சனாகானுக்கும் உற்ற நண்பர் சிம்புதான். ஒருவேளை இவர் சொல்லும் பெரிய ஹீரோ சிம்புவாக இருப்பாரோ?

கலகலப்பான பிரஸ்மீட்டுக்கு நடுவே சீரியசாக ஒரு கேள்வி பாய்ந்து வந்தது.
"இலங்கையில் இவ்வளவு உக்கிரமாக போர் நடந்து வரும் வேளையில், புலம் பெயர்ந்த தமிழர்களை நம்பி நடத்தப்படும் இந்த கொண்டாட்டங்கள் முறையானதுதானா?"

"நீங்கள் கேட்பது நியாயம்தான். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே இப்படி ஒரு நிகழ்ச்சிக்கான வேலைகளை துவங்கிவிட்டோம். கோடிக்கணக்கில் முதலீடு செய்துவிட்டோம். இப்போது நிகழ்ச்சியை நடத்தாமல் நிறுத்தினால் பல கோடி நஷ்டம் ஏற்படும். இந்த நிகழ்ச்சி நடைபெறும் போது இலங்கையில் அமைதி திரும்பிவிடும் என்று நம்புகிறோம். இறைவன் அதற்கு துணை நிற்பான் என்றார் ஸ்ரீ கவலையாக! அதே கவலையோடு "எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்" என்றார் யுவனும்

நேனு தேவுடு... தெலுங்கு பேசும் நான் கடவுள்


படமே சென்சார் ஆகிவிட்டது. இன்னும் கரெக்ஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறார் பாலா. தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகவிருக்கும் பாலாவின் முதல் படம் இதுதான். இதற்கு முன்பு வந்த இவரது படங்கள், தமிழில் ரிலீஸ் ஆன பிறகுதான் தெலுங்கில் வெளிவந்தன.

இன்று ஹைதராபாத்தில் நான் கடவுள் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது. நேனு தேவுடு என்ற பெயரில் அங்கே வெளியாகவிருக்கும் இப்படத்தின் பிரஸ்மீட்டில் ஆர்யா, பூஜா, தயாரிப்பாளர் சிவஸ்ரீ சீனிவாசன் ஆகியோர் மட்டுமே பேசுவார்களாம். வழக்கம் போல் மீடியாக்களிடம் வாயை திறக்க விரும்பாத பாலா, அடுத்த பிளைட் பிடித்து சென்னைக்கு வந்துவிடுவாராம்.

இதற்கிடையில் இன்னொரு சுவாரஸ்யமான செய்தி. டப்பிங் பேசுவதற்காக காசியில் இருந்து இப்படத்தில் நடித்த ஒரிஜனல் சாமியார் ஒருவரை சென்னைக்கு அழைத்து வந்திருந்தார்கள். (டிரெய்லரில் ஆர்யாவை தடியால் அடித்து எழுப்புவாரே, அதே சாமியார்தான்) 'காலை எழுந்தவுடன் கஞ்சா, பின்பு மாலை முழுவதும் நல்ல சரக்கு' என்று பொழுதை போக்கினாராம் சாமியார். கிட்டதட்ட பதினைந்து நாட்கள். சாமியாரை கட்டி மேய்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது என்கிறார்கள் பாலா அலுவலக ஊழியர்கள்.

Wednesday, January 21, 2009

போராட்டம் ஓயாது : விடுதலையான சீமான் பேட்டி


ஈழத்தில் அமைதி ஏற்படும்வரை போராட்டம் தொடரும் என சிறையிலிருந்து விடுதலையான சீமான் கூறியுள்ளார்.
தமிழ் தேச பொதுவுடமை கட்சி சார்பில் ஈரோட்டில் நடந்த பொதுகூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக இயக்குனர் சீமான், பெரியார் திராவிடக்கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் செயலாளர் மணியரசன் ஆகியோர் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீன் கோரி அவர்கள் விண்ணப்பித்த மூன்று மனுக்களையும் ஈரோடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனைத்தொடர்ந்து அவர்கள் மூவரின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சுந்தரம், மூவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று மாலை இயக்குனர் சீமான், கொளத்தூர்மணி, மணியரசன் ஆகியோர் விடுதலையாகினர்.

சிறையிலிருந்து வெளியே வந்த அவர்களுக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "ஈழ மண்ணில் இன்னுமும் பலர் மடிந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலை நீடிக்காமல் அமைதி ஏற்படவேண்டும் என்பதற்காகதான் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். இதில் எந்த தவறும் இல்லை. எனவே இலங்கையில் அமைதி ஏற்படும்வரை தொடர்ந்து குரல் கொடுப்போம். இந்த விஷயத்தில் மத்திய அரசு நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்”என்றார்.

நான் கடவுள் ‌ரிலீஸ் தேதி

காத்திருந்து கண் பூத்துவிட்டது. ஆடியோ வெளிவந்த பிறகும் கடவுளை கண்ணில் காட்ட மாட்டேன் என்கிறார் பாலா.படம் எப்போது ‌ரிலீஸ் என்று நேரடியாக அவ‌ரிடம் கேட்கலாம் என்றால் கடவுளைப் போலவே ஆள் எப்போதும் மாயம். போஸ்ட் புரொட‌க்சன் வேலையில் அண்ணன் பிஸி என்கிறார்கள் தம்பிகள்.

ச‌ரி, நாம்தான் ‌ரிலீஸ் தேதியை ஆராய்ந்து அறிந்தாக வேண்டும் என்ற முடிவில் முடுக்கி விட்டோம் நமது ஆராய்ச்சியை.பல நாட்கள்.. பல நபர்கள்.. கடைசியாக நமக்கு கிடைத்த தகவல், இம்மாதம் 29ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். 29 தாண்டினால் 30.

கடவுளின் விஷயம், கடைசி நிமிடத்தில் மாறினாலும் மாறக்கூடும்.

பசுபதி படம்: பத்து தகவல்கள்


ஜீவாவின் உதவியாளர் லஷ்மிகாந்தன் இயக்கிவரும் படம் 'த.நா.அல.4777'. ஜீ.வி.பிலிம்ஸ் தயாரித்துவரும் இப்படம் பற்றிய பத்து தகவல் கீழே...
இந்தியில் நானாபடேகர், ஜான் ஆபிரகாம் நடிப்பில் சூப்பர்ஹிட்டான டாக்ஸி படத்தின் ரீமேக்தான் இது. நானா கேரக்டரில் பசுபதியும், ஜான் கேரக்டரில் அஜ்மலும் நடிக்கின்றனர். சிம்ரன்,மீனாட்சியும் நடித்துள்ளனர். பணக்காரர்கள் மட்டும்தான் சிட்டியில இருக்கவேண்டும் என்று நினைக்கிற ஒருவனும், பணக்காரர்களால்தான் ஏழைகளாகவே இருக்கிறோம் என்று நினைக்கிற ஒருவனும் தற்செயலாக சந்திக்குபோது நிகழும் சம்பவங்களே கதை. ஒரே நாளில் நடந்துமுடியும் கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதைதான் உயிராக அமைந்துள்ளது.

* திரைப்படத்துறையில் 60 ஆண்டுகளில் யாருமே படப்பிடிப்பு எடுக்காத இடமான ஓட்டேரி சத்தியவாணி முத்து நகரில் ஆத்திச்சூடி...' படக்காட்சியும். சென்னை சௌகார்பேட்டையில் சேசிங் காட்சியும் தநா-07-அல-4777-ல் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

* ஒரு காட்சியில் இயக்குனரின் நண்பர் ஒருவர் நடிக்க, அவரை பசுபதி அறையும் காட்சியில் நிஜ அடி விழ அந்த நபர் காது கிழிந்து ஓட்டம் எடுத்தார்.

* ஜனவரி வெளியாகும் இத்திரைப்படம் எடிட்டிங், RR, டப்பிங் மற்றும் அனைய காட்சிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சென்சாருக்காக அனுப்பப்பட்டுள்ளது. இப்படம் மே-23ல் ஆரம்பிக்கப்பட்டு டிசம்பர்-23 முடிக்கப்பட்டது.

* பசுபதியும், சிம்ரனும் இணைந்து நடிக்கும் ஒரு காட்சியில் ஸ்டடி கேமிரா மூலம் 270 அடி நீளம் ஒரே ஷாட்டில் சூட் செய்யப்பட்டு 3.30 நிமிடத்தில் முடிக்கப்பட்டது.

Ajmal, Meenakshi

* பசுபதியும், அஜ்மல் மோதும் சேசிங்காட்சி காஞ்சிபுரத்தில் படப்பிடிப்பு நடத்த்பபட்டது. இதில் 4777 காரை ரயில் தண்டவாளத்தில் நிறுத்தி ரயிலை மோதவிட்டு அப்பளம் போல் நொறுங்கும் காட்சியில், பசுபதி காரை திறந்து ஓடும் காட்சியில் சிறிது தாமதமானதால் ரிஸ்கான ஷாட்டிலிருந்து தப்பி சிறப்பாக நடித்துக் கொடுத்தார்.

* அஜ்மல் காரை கன்டெய்னர் மோதும் காட்சியில் காரிலிருந்து குதித்து செல்லும் கா்சியில் ரோப் லாக் ஆனதால் அஜ்மல் ஆபத்தான ஷாட்டில் சிக்கி சிரமப்ப்டு டநித்து கொடுத்தார்.

* இப்படத்தின் 90 சதவீதம் சூப்பர்-35 Format-ல் எல்லா காட்சிகளும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

* 'சொர்க்கம் மதுவிலே...' என்ற பாடலுக்கு ஏவிஎம் ராஜேஸ்வரியில் கலை இயக்குனர் தோட்டாதரணி, கைவண்ணத்தில் பிரம்மாணடமான இரண்டு செட்டுகள் போடப்பட்டு அஜ்மல், மீனாட்சி நடனம் படமாக்கப்பட்டது.

சேரனின் பொக்கிஷம்!


தன் கனவு மாயக்கண்ணாடியில் நொறுங்கிப் போனாலும், சற்றும் மனம் தளராத படைப்பாளியான சேரன் பார்த்துப்பார்த்து உருவாக்கி வரும் படைப்பு பொக்கிஷம்.
இந்தப் படத்தின் விளம்பர ஸ்டில்களைப் பார்த்தாலே புரிந்துவிடும், இது ஆட்டோகிராப் படத்தின் இரண்டாம் பாகம் என்பது. ஒவ்வொரு ஸ்டில்லிலும் தெரியும் வித்தியாசமான லைட்டிங் மற்றும் டிசைன்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இன்டர்நெட் மற்றும் கைத் தொலைபேசி இல்லாத காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால், இந்தப் படத்தில் கடிதங்களுக்கு அதிக முக்கியத்துவமும், அந்த காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் வகையிலும் படமாக்கி வருகிறார் சேரன்.

இந்தப் படத்தில் மீண்டும் சேரனுடன் இணைகிறார் பத்மப்ரியா. இவருடன் பெங்காலி நடிகை ரூமி இன்னொரு நாயகியாக நடிக்கிறார். விஜயகுமார் முக்கிய பாத்திரத்தில் நடிகத்கிறார்.

நேமிச்சந்த் ஜெபக் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சபேஷ் முரளி இசையமைக்கிறார்கள். ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து செண்டிமெண்ட் போலிருக்கிறது.

மனதில் எப்போதும் பொக்கிஷமாய் தங்கிவிடும் சில இனிய நினைவுகளின் தொகுப்பே இந்த பொக்கிஷம் என்கிறார் சேரன்.

இனிய நினைவுகளாய் இந்தப் படம் ஒவ்வொரு ரசிகர் மனதிலும் தங்கட்டும்!

கமல் - சோதனை மேல் சோதனை


விலகிப் போனாலும் வேண்டாத விருந்தாளியாக கமலை பின்னாலேயே துரத்துகின்றன பிரச்சனைகள். உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு முதலில் பலியானது இவரது மர்மயோகி படம்.
அடுத்து அறிவித்த தலைவன் இருக்கின்றானை தொடங்குவதிலும் சிக்கல். இந்திப் படம் தி வெனெஸ்டேயை தமிழ், மலையாளத்தில் ‌‌ரீமேக் செய்யலாம் என்றால் அதற்கும் ஒரு ஆந்திரா வில்லன் முளைத்திருக்கிறார்.

மினிமம் பட்ஜெட், மேக்சிமம் கியாரண்டி. நீர‌ஜ் பாண்டேயின் தி வெனெஸ்டே மீது ஆளாளுக்கு காதல்கொள்ள இதுவே காரணம். தி வெனெஸ்டேயின் தமிழ் மற்றும் தெலுங்கு ‌‌ரீமேக் உ‌ரிமைக்காக யு டிவிக்கு அடவான்ஸ் கொடுத்திருக்கிறார் தெலுங்குப்பட தயா‌ரிப்பாளர் கிரண் கொனேரு. அதேநேரம் கமலும் ‌‌ரீமேக் உ‌ரிமை கேட்டிருக்கிறார். கமலா? கொனேருவா?

யு டிவியின் தட்டு கமல் பக்கமாக சாய, கோர்ட்டுக்கு போயிருக்கிறார் கொனேரு. தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும் என்று சில நாட்களில் தெ‌ரிந்துவிடும். யு டிவியிடம் கேட்டால் தி வெனெஸ்டேயின் ‌‌ரீமேக் உ‌ரிமையை இதுவரை யாருக்கும் அளிக்கவில்லை என்கிறார்கள் சுருதி மாற்றாமல்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது இதுதானா?

வாலி, உயிர் மாதிரி ‘பக்தன்’ -ஒரு ஹை வோல்டேஜ் கதை!


கிட்டதட்ட 34 ஆண்டுகள். கடும் போராட்டத்திற்கு பிறகு ஒரு படத்தை டைரக்ட் செய்ய வந்திருக்கிறார் மல்லிகை கண்ணன். படத்தின் பெயர் ‘பக்தன்’

மத்திய, மாநில அரசுகளில் வேலை கிடைத்த போதும் அவற்றையெல்லாம் வேணாம்னு ஒதுக்கி தள்ளியிருக்கிறார். நடுத்தர வயதை தாண்டிய மல்லிகை கண்ணன், டி.ஆர்.ராமண்ணா காலத்திலேயே அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை பார்த்தவராம். ஃபாசிலிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.

ஆள்தான் பழசே தவிர, கதை யூத்தாகவே இருக்கிறது! மணிவண்ணனின் எஸ்டேட்டில் வேலை பார்க்கும் ஹீரோ, அங்கேயிருக்கும் இளம் பெண் ஒருவரை காதலிக்கிறார். காதலை சொல்லப் போகும்போதுதான் தெரிகிறது அந்த பெண்தான் மணிவண்ணனின் மனைவி என்று. பிறகு என்னாச்சு? “அதுதான் சார் கதையே” என்கிறார் மல்லிகை கண்ணன். உயிர், வாலி மாதிரி எடக்கு மடக்கான காதல் கதை இது. அங்கங்கே கிளுகிளுப்பான காட்சிகளுக்கும் பஞ்சமில்லை என்கிறார் இவர்.

இப்படி கள்ளக் காதல் கதையை எடுத்திட்டு பக்தன்னு தலைப்பு வச்சிருக்கீங்களே என்றால், படத்தை பார்த்திட்டு கேளுங்க, நான் ஏன் அப்படி ஒரு டைட்டில் வச்சேன்னு புரியும் என்றார் மல்லிகை கண்ணன்.

ஓல்டேஜ் இயக்குனர்னு பார்த்தா. ஹை வோல்டேஜ் கரண்ட் மாதிரி ஒரு கதையை சொல்றாரே?

குத்தோ குத்து கும்மாங்குத்து தினாவையும் சேர்த்து குத்து...?


தலை நிறைய ஷாம்பூ போட்டுட்டு ஷவரை திறந்தா, தண்ணீர் கட்! இதுதான் இசையமைப்பாளர் தினாவோட நிலையா இருக்கு கோடம்பாக்கத்தில். சிலம்பாட்டம் படத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் தினாதான். இரண்டு பாடல்களை கம்போசும் செய்துவிட்டார். திடீர்னு சிம்புவுக்கும் இவருக்கும் செட் ஆகாம போனதால், “தினா, வேணா” என்று கூறிவிட்டார் சிம்பு. ஆர்மோனியப் பொட்டியா? அரிதாரமா? என்று யோசித்து பார்த்த இயக்குனர், “போயிட்டு வாங்க” என்று அனுப்பிவிட்டார் தினாவை.

இப்போது மறுபடியும் ஒரு “போயிட்டு வாங்க!” இந்த முறை புண்ணியத்தை கட்டிக் கொண்டவர் ஷக்தி சிதம்பரம். லாரன்ஸ், மீனாட்சி நடிக்க ராஜாதி ராஜா படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் ஷக்தி சிதம்பரம், ஒருநாள் ஷ¨ட்டிங்கில் கருணாஸ் பாடிக் கொண்டிருப்பதை கவனித்தாராம். அட... இவரையே நமது படத்திற்கு Dhinaமியூசிக் பண்ண வைக்கலாமே என்று தோன்ற, கருணாசும் சம்மதித்திருக்கிறார். அவ்வளவுதான் தினாவுக்கு பேக்கப்!

இதுவரை ஆயிரக்கணக்கான இசைக்கச்சேரிகளை நடத்தியிருக்கும் கருணாஸ், இந்த படத்தில் கொல குத்தா ஒரு குத்துப்பாடலை போட்டிருக்கிறார். படம் ரிலீஸ் ஆன பிறகு பாருங்க... குத்துன்னா இதுதான் என்கிறார் ஷக்தி.

இரண்டு பேரும் சேர்ந்து தினாவை குத்துனீங்களே, அதைவிட பெரிய குத்தா இது?

வில்லு படம் பார்த்தார் அஜீத் விஜயிடம் தொலைபேசியில் டிஸ்கஷன்!


பரபரப்பு ஓயட்டும் என்று காத்திருந்தாரோ என்னவோ? கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈசிஆர் சாலையில் அமைந்திருக்கும் பிரார்த்தனா தியேட்டரில் வில்லு படத்தை பார்த்து ரசித்தார் அஜீத். ரசிகர்கள் தன்னை பார்த்துவிட்டால் வீண் ஆர்ப்பாட்டங்களுக்கு வழி வகுக்கும் என்பதாலேயே காரை விட்டு இறங்கவில்லையாம். (இந்த தியேட்டரில் காரில் அமர்ந்தபடியே படம் பார்க்கிற வசதி உண்டு)

படத்தை பார்த்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் விஜய்க்கும் போன் செய்து பாராட்டினாராம். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் பற்றி அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தவர், ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டாராம்.

சிவாஜி புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'அசல்' படத்திற்காக விருமாண்டி ஸ்டைல் மீசை வைத்திருக்கிறார் அஜீத். அரிவாள் சைசுக்கு இருக்கும் இந்த கனத்த மீசையோடு தியேட்டருக்கு போனதால், ஒன்றிரண்டு ரசிகர்கள் உற்றுப்பார்த்தார்களே தவிர, அடையாளம் கண்டு கொள்ளவில்லையாம்.

ஒருபுறம் சம்பள பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்தாலும், அசலுக்காக தனது அசல் கெட்டப்பை மாற்றிக் கொள்வதில் எந்த குறையும் வைக்கவில்லை தல!

எம்ஜிஆர் புகழ்பாடிய கஞ்சா கருப்பு -பொங்கல் விழாவில் ருசிகரம்!


பொங்கல் தினத்தன்று தஞ்சையில் விழா எடுப்பது சசிகலா நடராஜனின் வழக்கம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வி.வி.ஐ.பிகளை அழைத்து செல்வார். இந்த முறை இந்த விழாவில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டது கஞ்சா கருப்பு.

இவரை மேடைக்கு அழைத்த கவிஞர் சினேகன், அஞ்சா நெஞ்சன் கஞ்சா கருப்பு அவர்களே வருக என்று அழைக்க, ஆடிப் போய்விட்டார் கருப்பு. தேரை இழுத்து தெருவிலே விட்றாதீங்கப்பு. தஞ்சாவூரிலே சாப்பாடு ருசியா இருக்கும்னாங்க. அதுக்காகதான் வந்தேன். இப்படியெல்லாம் சொல்லி ஏடாகூடமாக்கிடாதீங்க என்றவர், ஒரு சூப்பர் பிளாஷ்பேக்கையும் அவிழ்த்துவிட்டார்.

நான் வயிற்றிலே இருக்கும்போது எங்கம்மா நீரும் நெருப்பும் படம் பார்க்க போனாங்க. அங்கேயே நான் பிரசவமாயிட்டேன். இதை கேள்விப்பட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் எங்கம்மாவுக்கு 5000 ரூபாய் பரிசு கொடுத்தார். நான் பிறந்தப்பவே எம்ஜிஆர் முகம் பார்த்தவன் என்றார் கலகலப்புக்கும் கைத்தட்டல்களுக்கும் நடுவில்.

Tuesday, January 20, 2009

நிர்வாணமாக நடிக்கிறார் ஹா‌ரிபாட்டர் நாயகி

ஹா‌ரிபாட்ட‌ரில் நடித்த எம்மா வாட்சனுக்கு என்ன வயதிருக்கும்? நம்மூர் கணக்குப்படி ஓட்டு போடும் வயது. அதாவது பதினெட்டு. இந்த சின்ன வயதில் சீ‌ரியஸான முடிவெடுத்திருக்கிறார், வாட்சன். புதிய படமொன்றில் நிர்வாணமாக நடிக்கப் போகிறாராம்.

இத்தாலியின் புகழ்பெற்ற இயக்குனர் பெர்னார்டோ பெர்டோலுசி. கொஞ்சம் விவகாரமான இயக்குனர். தி லாஸ்ட் எம்பரர் போன்ற காவியங்களை படைத்தவர். அதனாலேயே இவரது இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் போட்டி போடுகின்றனர்.

மார்லன் பிராண்டோ, லாஸ்ட் டாங்கோ இன் பா‌ரிஸ் என்ற இவரது படத்தில் நடித்திருக்கிறார். எப்படி? முழு நிர்வாணமாக. அப்பட்டமான நிர்வாண காட்சிகள் நிறைந்த இந்தப் படம் பெரும் சர்ச்சையை இது வெளியான போது கிளப்பியது. இவரது புதிய படத்தில்தான் நிர்வாணமாக நடிக்கிறார், வாட்சன்.

இது தேவையா என்று கேட்டதற்கு, பெர்னாடோவின் படம் என்பதால் ஒத்துக் கொண்டதாக தெ‌ரிவித்துள்ளார், வா‌ட்சன். பெர்னாடோ பெர்டோலுசிக்கு இப்போது வயது அறுபத்தியெட்டு.

அமீ‌ரின் கண்ணபிரான் பருத்திவீரனுக்கு அடுத்து அமீர் இயக்குவதாக

பருத்திவீரனுக்கு அடுத்து அமீர் இயக்குவதாக இருந்த படம், கண்ணபிரான். ஹீரோவாக ஜெயம் ரவியையும் தேர்வு செய்திருந்தார். இடையில் யோகி வர கண்ணபிரான் தள்ளிப்போனது.

அமீர் நடித்துவரும் யோகி அதன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுப்ரமணிய சிவா படத்தை இயக்கி வருகிறார். மேக்கப் போட்ட இயக்குனர்கள் அவ்வளவு எளிதில் அ‌ரிதாரத்தை கலைப்பதில்லை என்பது வரலாறு. அமீர் என்ற திறமையான இயக்குனரும் இந்த வரலா‌ற்றில் இடம்பெற்று விடுவாரோ என்பது நல்ல சினிமாவை விரும்புகிறவர்களின் கவலை.

நல்லவேளையாக வரலா‌ற்றில் இடம்பெறும் எண்ணமெல்லாம் அமீருக்கு இல்லை. யோகி முடிந்த பிறகு தனது முந்தைய திட்டப்படி கண்ணபிரானை தொடங்குகிறார். ஹீரோ ஜெயம் ரவி.

யோகியில் நடித்ததால் கண்ணபிரானிலும் அமீர் நடிப்பாரா? சான்ஸே இல்லை. கண்ணபிரானில் அமீர் இயக்குனர் மட்டும்தான்.

பால் வார்த்திட்டீங்க சார்.

வில்லனுக்கு ஜோடியாகும் த்‌ரிஷா

மர்மயோகிக்கு கொடுத்த கால்ஷீட்டை என்ன செய்வதென்று த்‌ரிஷாவுக்கு குழப்பம். இந்த குழப்பத்தால் கோபிசந்துக்கு அடித்திருக்கிறது யோகம்.

யா‌ரிந்த கோபிசந்த்? ஜெயம் படத்தில் வில்லனாக நடித்திருந்தாரே.. அவர்தான். தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்துவந்த அவர் இப்போது ஹீரோவாக நடிக்க‌த் தொடங்கியிருக்கிறார். அவர் நடிக்கும் புதிய படத்தில் த்‌ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார், கோபிசந்தின் ஜோடியாக.

இந்தப் படத்தில் நடிக்கும் இன்னொரு பிரபலம் சத்யரா‌ஜ். ர‌‌ஜினி, கமல் படங்களில் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று முறுக்கிக் கொண்ட இவர், கோபிசந்தின் தந்தையாக வில்லத்தனம் செய்ய உள்ளார்.

சத்யரா‌ஜ் வயதான வில்லன், த்‌ரிஷா முன்னாள் வில்லனின் ஜோடி. அட, அந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

மலையாளத்தில் சுப்பிரமணியபுரம்

சென்ற ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களை வ‌ரிசைப்படுத்தினால் முதலிடம் சுப்பிரமணியபுரத்திற்கே கிடைக்கும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளாவிலும் இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது. கேரளாவின் பட்டிதொட்டியெங்கும் இந்தப் படத்தில் வரும் கண்கள் இரண்டால் பாடல் ஒலித்தது.

மலையாளிகளின் மனம் கவர்ந்த இந்தப் படத்தின் திரைக்கதை மலையாளத்தில் வெளியிடப்பட்டது. கோ‌ழிக்கோட்டில் நடந்த விழாவில் காழ்ச்சா, பளிங்கு படங்களின் இயக்குனர் பிளஸ்சி புத்தகத்தை வெளியிட, எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா பெற்றுக் கொண்டார்.

சில மாதங்கள் முன் கமலின் ஹேராம், மகாநதி படங்களின் திரைக்கதை மலையாளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மலையாள சினிமாவே உணர்ந்தது, தமிழ் சினிமா வெற்று கமர்ஷியல் மட்டுமே என்ற மலையாளிகளின் மனப்பதிவு மாறிவருகிறது என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

வெல்டன் சசிகுமார்.

விவேக் - மீண்டும் ஹீரோ

தனது ஹீரோ ஆசையை மீண்டும் தூசு தட்டுகிறார் விவேக். முடிஞ்சா பிடிச்சுக்கோ என்ற படத்தில் சார்தான் ஹீரோ.

விவேக் ஹீரோவாக நடித்த சொல்லி அடிப்பேன் இன்னும் பெட்டியை விட்டு வெளிவரவில்லை. அந்தப் படத்தை தயா‌ரித்த இந்தியன் தியேட்டர்ஸ் நிறுவனமும் தற்போது பீல்டில் இல்லை. விவேக்கின் ஹீரோ ராசி இப்படி பிசுபிசுத்துப் போனதால் அவரை ஹீரோவாக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லாமல் போனது. சொந்த காசில் யார்தான் சூன்யம் வைப்பார்கள்?

இந்நிலையில் கருணாஸின் திண்டுக்கல் சாரதி சுமாராகப் போனதால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. இதற்காக முடிஞ்சா பிடிச்சுக்கோ என்ற ஸ்கி‌ரிப்டை அவரே எழுதியிருக்கிறார். படத்தை இயக்கப் போவது சரவண சக்தி.

படத்தின் பெயரை விவேக் அறிவித்த மறுநிமிடமே கோடம்பாக்கத்தில் பரபர வதந்தி. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின், கேட்ச் மீ இஃப் யு கேன் படத்தின் காப்பிதான் முடிஞ்சா பிடிச்சுக்கோ கதையாம்.

அப்படிங்களா விவேக் சார்?

சூர்யாவின் இரட்டை சந்தோஷம் தனி பயிற்சி தேவையில்லையாம்


நான் போலீஸ் இல்லே, பொறுக்கி! நிஜ போலீசையே இப்படியெல்லாம் ஸ்டைலாக Suryaபேசி லட்டியை புரட்ட வைத்தவர் ஹரி. சாமி படத்தில் விக்ரமுக்கு வைத்த காட்சிகளையெல்லாம் தங்கள் ஸ்டேஷன் லிமிட்டிலும் காட்டி, தன்னையும் ஹீரோவாக வரித்துக் கொண்டார்கள் பல இன்ஸ்சுகள்! இப்படியெல்லாம் போலீஸ் கதையில் புரட்சி செய்துவிட்டு காக்கி சட்டையை கையில் எடுக்காமல் இருக்க முடியுமா?

சூர்யாவுக்கு அதை அணிவிக்க முடிவெடுத்திருக்கிறார் ஹரி. ஒவ்வொரு படத்திற்கும் உடம்பை ஏற்றுவது. அல்லது இறக்குவது என்று ஜிம்மும், வீடுமாக ட்ரிப் அடித்துக் கொண்டிருந்த சூர்யா, இந்த முறை அந்த அசௌகர்யங்கள் எதுவும் இல்லாமல் நேரடியாக படப்பிடிப்புக்கு போய் விடலாம்.

வாரணம் ஆயிரம் படத்திற்காக ஜிம்முக்கு போய் சிக்ஸ் பேக் செய்திருந்தவர், Hariஉடம்பை இரும்பாக்கியும் வைத்திருந்தார். ஹரி இயக்கவிருக்கும் சிங்கம் படத்திற்கு தனி எக்சர்சைஸ் தேவையில்லை என்பது சூர்யாவின் சந்தோஷம். இன்னொரு சந்தோஷம், அனுஷ்கா ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம் சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க!

நடிக்க வந்து கொண்டிருக்கும் டைரக்டர்கள் வரிசையில் ஹரியும் வரப்போகிறார் என்ற கிசுகிசு கோடம்பாக்கத்தில் உலவி வருகிறது. அதற்கும் சேர்த்து சிங்கத்தில் பதில் கொடுப்பாரா ஹரி?

ஆடிய காலும், பாடிய வாயும்... வேலை இழந்த நடிகை!


சில மாதங்களுக்கு முன் கோடம்பாக்கத்தை சுற்றி வந்த மேக்கப் ஸ்டில்களில் அனைவரையும் அதிர்ச்சியடைய (பீதியடைய என்றும் சொல்லலாம்) வைத்தது ஒரு நடிகையின் ஸ்டில்கள்! மீண்டும் கதாநாயகியாக நடிக்கலாம் என்ற கனவோடு அனுப்பி வைக்கப்பட்ட அந்த ஸ்டில்கள் பெரும் விளைவுகளை கிளப்பியதால், தனது நாயகி கனவை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு நாயகியின் தோழி, அல்லது அக்கா கேரக்டரில் நடிக்க சம்மதித்தார் அந்த மானின் பெயர் கொண்ட நடிகை.

ஸ்டில்கள் சுற்றியதே தவிர, இவரது வீட்டு காலிங் பெல்லை கொரியர் பையனை தவிர வேறு ஒருவரும் அழுத்தவில்லை. திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருந்த இந்த மான் நடிகை, கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், எனக்கு கேரக்டர் கொடுத்தால் உங்களுக்கு இங்கே வாய்ப்பு உறுதி என்றெல்லாம் கொக்கியை போட்டிருக்கிறார். அவ்வளவுதான்...

விஷயத்தை கேள்விப்பட்ட நிறுவனம், நடிகையை வீட்டுக்கே அனுப்பிவிட்டது. ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அதற்காக பின் பாட்டு பாடுகிற வயசில் கச்சேரிக்கு இடம் கேட்டால் கொடுக்கவா முடியும்?

மேலும் ஒரு நடிகை! ரஜினி ஜோடி கலக்கம்


தன்னை தனிக்காட்டு ராணி என்று நினைத்துக் கொண்டிருந்த விஜயலட்சுமிக்கு,தண்ணி காட்டும் ராணியாகிவிட்டார் சௌந்தர்யா. இவர் இயக்கிக் கொண்டிருக்கும் சுல்தான் தி வாரியர் படத்தில் முதலில் இலியானா, ஸ்ரேயா, த்ரிஷா என்று யார் யாரையோ கேட்டு சம்பளம் கட்டுப்படியாகாத காரணத்தால் விஜயலட்சுமியை நடிக்க வைத்தார்.

ரஜினியோடு ஜோடியாக நடிக்கப் போகிறோம். அதிலும் தனி ஹீரோயின் என்று சந்தோஷத்திலிருந்த விஜயலட்சுமிக்கு இந்த செய்தி பெரிய இடியாக இருக்கலாம். படத்தில் இன்னொரு நாயகியும் இருக்கிறார். இந்த கேரக்டரில் நடிக்க ஹாலிவுட் நடிகை ஜெசிகாவை அழைத்து வரப்போகிறார் சௌந்தர்யா. நேரடியாக ஹாலிவுட்டுக்கே போய் வந்திருக்கும் சௌந்தர்யா, சம்பள பேச்சுவார்தைகளை முடித்து அட்வான்சும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறாராம் ஜெசிகாவுக்கு.

ஹாலிவுட் ஹீரோயினை ஒப்பந்தம் செய்ததற்கு காரணம், அனிமேஷன் படங்களுக்கு தமிழகத்திலும், பிற மொழிகளிலும் இருக்கும் மரியாதையை இதற்கு முன்பு வெளிவந்த படங்களில் பார்த்து அதிர்ந்து போனதால்தானாம். ஜெசிகாவை நடிக்க வைத்தால் படத்தை ஹாலிவுட்டிலும் ரிலீஸ் செய்ய முடியுமல்லவா?

மேடம் எம்பிஏ படிச்சிருப்பாங்களோ?

சோனியாவின் தமிழ்? சொக்கிப் போகும் யூனிட்!


கேமிராவுக்கு பின்னால் நின்று கொண்டு ஒருவர் வசனங்களை படிக்க, அதை அப்படியே கிளிப்பிள்ளையாக ஒப்பித்து நடிப்பார் சோனியா அகர்வால். இவரை இயக்கிய இயக்குனர்கள் பலரும் தமிழ் கற்றுக் கொள்ள வற்புறுத்திய போதும், “நானாச்சு... பிராம்ட் ஆச்சு” என்று பிடிவாதமாக இருந்தார் சோனியா அகர்வால்.

அந்த காலம் இப்போ மலையேறிப் போச்சு. இவர் நடித்து வரும் நாணல் சீரியலில் தானே டயலாக் பேசி நடிக்கிறார் சோனியா. இதற்காக தனியாக தமிழ் கற்று வருகிறாராம். சீரியல் தயாரிப்பாளர்கள் சிக்கனம் கருதி, ஸ்பாட்டிலேயே லைவ்வாக குரலை பதிவு செய்துவிடுவதும் சோனியாவின் தமிழ் பற்றிற்கு ஒரு காரணம்.

தமிழ் கற்றுக் கொண்ட பிறகு சோனியாவின் நடிப்பில் முன்னை விடவும் பொலிவு. புரிந்து நடிப்பதுதான் காரணம். “அருமையான மொழி. இத்தனை நாள் நான்தான் மிஸ் பண்ணிவிட்டேன்” என்கிறார். சின்னத்திரையில் நடித்துக் கொண்டே மீண்டும் பெரிய திரைக்கு வரவும் முயற்சி செய்கிறாராம் சோனியா. (டைரக்ஷன் கத்துக்கிட்டீங்களே, என்னாச்சு?)

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் சசிகுமார் படம்


மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் 'சுப்ரமணியபுரம்' சசிகுமார் ஒரு படத்தை
முதல் படத்திலேயே படம், பாட்டு இரண்டையுமே ஹிட்டாகி காட்டிவிட்டார் 'சுப்ரமணியபுரம்' சசிகுமார். இவரை நம்பி காசை தண்ணீராக செலவழிக்க காத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் நிறைய. ஆனால் யாரையும் கண்டு கொள்ளாமல் நடிக்கப் போய்விட்டார் சசி. சமுத்திரக்கனி இயக்கிவரும் 'நாடோடி' படத்தில் சசிகுமார்தான் நாயகன்.

நடிப்பு, இயக்கம் தவிர தயாரிப்பாளராக மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கிறார்.பாண்டி ராஜ் இயக்கும் 'பசங்க' படத்தை சசிகுமார் தயாரி்த்து வருகிறார். தான் இயக்கும் படத்தை தானே தயாரிப்பதென முடிவெடுத்த சசிகுமாரின் முடிவில் இப்போது மாற்றம். மணிரத்னம் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் 'சுப்ரமணியபுரம்' படத்தை இயக்குனர் மணிரத்னம் தனியாக பார்த்துள்ளார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த மணி, சசிகுமாரை பாராட்டியதோடு தன்னை மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் வந்து பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி மணிரத்னத்தை சந்தித்த சசிக்கு அங்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. மெட்ராஸ் டாக்கீஸூக்கு ஒரு படத்தை இயக்குங்கள் என கேட்டுள்ளார் மணிரத்னம். தன்மேல் இவ்வளவு நம்பிக்கையை வைத்திருக்கும் மணிக்கு நன்றி சொன்ன சசிகுமார் விரைவில் கதை ஒன்றை தயார்செய்து சொல்வதாக கூறியுள்ளாராம்.

அதன்படி மணிரத்னம் படத்திற்காக ஸ்கிரிப்ட் வேலையில் மூழ்கியுள்ள சசிகுமார், விரைவில் படத்திற்காக பூஜை போடப்படவுள்ளதாம். இந்த படத்திற்காக பல புது முகங்களையும் தேர்வு செய்து வருகிறாராம் சசிகுமார்.

சாந்தனு நடிக்கும் ‘அதகளம்'


'புதியவார்ப்புகள்' படத்தைத் தொடர்ந்து இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாந்தனு.இந்திய திரையுலகின் திரைக்கதை மன்னன் என பெயரெடுத்த பாக்யராஜின் மகன் சாந்தனு கதாநாயகனான படம் ‘சக்கரக்கட்டி'. முதல் படம் பெயரளவில் மட்டுமே இனிப்பாக இருந்ததே தவிர வியாபார ரீதியாக கசப்பான அனுபவமே மிஞ்சியது. தயாரிப்பாளர் தானு என்பதால் தியேட்டரில் கூட்டமில்லையென்றாலும் போஸ்டர் விளம்பரங்களுக்கு தாராள செலவு செய்ததால் அப்படியொரு படம் வந்த ஞாபகம் இருந்துகொண்டே இருந்தது.

அடுத்து சாந்தனு நடித்துவரும் படம் ‘புதியவார்ப்புகள்'. அப்பா பாக்யராஜே இதனை இயக்குகிறார். இதில் சாந்தனு ஜோடியாக புதுமுகம் சாந்தினி நடிக்கிறார். படத்தின் தலைப்பு இப்போதைய தலைமுறையை கவர்ந்திழுக்காது என்பதால் தலைப்பை மாற்றும் யோசனையை அப்பாவின் காதுகளில் போட்டுள்ளாராம் சாந்தனு. அடுத்தமாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்

இதனிடையே இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாந்தனு. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும், லஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார். இதில் லஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தை உதயன் இயக்குகிறார். படத்திற்கு ‘அதகளம்' என பெயரிடப்பட்டுள்ளதாம்.

சர்வத்தில் பஞ்ச பாத்திரங்கள்: விஷ்ணு பேட்டி


‘சர்வம்' பற்றி விஷ்ணுவர்தன் சொல்ல சொல்ல எதிர்பார்ப்பின் டெம்பரேச்சர் எகிறுகிறது.
சூர்யாவுக்காக சொன்ன கதைதான் சர்வம். ஷூட்டிங் கிளம்பும் நேரத்தில் கருத்து வேறுபாடு வந்து கழன்றுகொண்டனர். அதன்பிறகு அஜித்துடன் கைக்கோர்த்து பில்லாவில் பிஸியான விஷ்ணு இப்போது ஆர்யாவை வைத்து சர்வத்தை இயக்கிவருகிறார். சப்தமில்லாமல் ஷூட்டிங் கிளம்பின விஷ்ணு முக்கால்வாசி வேலைகளை முடித்துவிட்டு படம் பற்றிய தகவல்களை தர ஆரம்பித்துள்ளார்.

‘என் படம் இப்படித்தான் இருக்கும் என்று யாரு யூகிக்கூடாது என்கிற சவாலை மனசில வச்சுட்டுதான் திரைக்கதை எழுதினேன். இப்போ ரஸ் போட்டு பார்க்கும்போது அது நிஜமாகிவிட்டது என்ற சந்தோஷம் வந்துவிட்டது. ஹீரோயிஷம் இல்லாத ஒரு கதைதான் இது. அதுக்கு ஆர்யா பொருத்தமா அமைந்ததில் எனக்கு கூடுதல் சந்தோஷம்தான்.

படத்துல ஆர்யா,த்ரிஷா, சக்ரவர்த்தி,இந்திரஜித் அப்புறம் ஒரு சின்ன நாய்க்குட்டின்னு மொத்தமே ஐந்து பாத்திரங்கள்தான். சந்தோஷமா ஊருக்கு கிளம்பி போய்கிட்டு இருக்கும்போது திடீர்னு விபத்து ஏற்பட்டா எப்படியிருக்கும்? அப்படியொரு அதிர்ச்சி இந்த படத்துல இருக்கும். சண்டையில ரொம்ப நாளா பிரிந்திருக்கும் நண்பர்கள் ஒருநாள் நேருக்கு நேர் சந்தித்து பேசிக்கொள்ளும் சூழ்நிலை வந்தா எப்படியிருக்கும்? அதுமாதிரியான இடங்களும் இதில இருக்கு.

முதல் பாதி படத்துல சென்னையின் இயந்திரத்தனமான அவசரங்களையும், விநோதமான சம்பவங்களையும் காமெடியுடன் சொல்லியிருக்கேன். இரண்டாம் பாதியில் அடர்ந்த காடு, அமானுஷ்ய மெளனம்னு த்ரில்லர் அனுபவங்கள் கிடைக்கும். ஆக எல்லா ரசிகனுக்கும் பிடிக்கிற மாதிரி சர்வத்தை இயக்கியுள்ளேன். முக்கியமா யுவனோட இசை படத்துல இன்னொரு கேரக்டர வரும்.” என சர்வ விஷயங்களையும் பட்டியல் போடுகிறார் விஷ்ணுவர்தன்.

ஜெனிலியா-ஜான் ஆபிரகாம் ஜோடி சேர்ந்த பின்னணி!


பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு ஜோடியாக ஜெனிலியா நடிக்கிறார்.ஜானின் காதலி பிபாஷாதான் ஜெனிலியாவுக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட்டைப் பொறுத்தவரை தனது காதலன்/காதலி யாருடன் நடிக்கலாம், நடிகக் கூடாது எனத் தீர்மானிப்பவர்கள் நடிகர்கள்தான்.சமீபத்தில் தீபிகா பதுகோனுடன் நடிக்கக் கூடாது என சாயிப் அலிக்கு அவரது காதலி கரீனா கபூர் உத்தரவு போட, அவரும் அப்படியே நடந்து கொண்டார்.

அதேபோல தனது காதலி கத்ரீனா கைப், எக்காரணம் கொண்டும் ஷாயித் கபூர் மற்றும் ஜான் ஆப்ரகாமுடன் நடிகக்க் கூடாது என சல்மான் கான் உத்தரவிட்டுள்ளார்.தன் மனைவி காஜோல் ஷாரூக்கானுடன் மட்டும் நடிக்கவே கூடாது என பகிரங்கமாக அஜய் தேவ்கன் சில ஆண்டுகளுக்கு முன் அறிக்கை விட்டது நினைவிருக்கும்.இப்போது ஜான் ஆப்ரஹாமுக்கும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. டேவிட் தவான் இயக்கத்தில் ஜான் ஆப்ரஹாம் நடிக்கும் படம் ஹூக் யா க்ரூக். இதில் அவரது ஜோடியாக நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தமானார்.

ஏற்கெனவே இருவரும் சேர்ந்து 'சலாமி இஷ்க்' படத்தில் நடித்தபோது நெருங்கிப் பழகி விட்டதாக செய்திகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் இம்முறை வித்யா பாலனுடன் நடிக்கக்கூடாது என ஜானிடம் அவரது காதலி பிபாஷா பாசு கண்டிஷன் போட்டுவிட்டார்.

இதையடுத்து இப்படத்திலிருந்து வித்யா பாலன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அந்த வேடத்தில் ஜெனிலியா நடிக்கிறார்.

அனில் அம்பானியின் 'பிக் ஓயே'


அனில் அம்பானி ரிலையன்ஸ் பிக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பிக் ஓயே என்ற சினிமா இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.ரிலையன்ஸ் பிக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் சினிமா தொடர்பான இணையதளத்தையும் அது தொடங்கியுள்ளது.

பிக்ஓயே என பெயரிடப்பட்டுள்ள அந்த தளத்தில் திரைப்படங்கள் குறித்த தகவல்கள், செய்திகள், விமர்சனங்கள், வீடியோ, கிசுகிசு தகவல்கள், டிரெய்லர்கள், திரைப்படங்களுக்கான டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்வது என ஏராளமானவை நிரம்பியுள்ளன.பிளாக்குகளும் இந்த தளத்தில் உள்ளன. ஸ்டார்களை அடிப்படையாகக் கொண்ட வீடியோ கேம்களுக்கும் தனிப் பகுதி உள்ளது.இந்த இணையதளத்தில் பாலிவுட், ஹாலிவுட் திரைத் துறை தவிர தமிழ் திரைத்துறை குறித்த தகவல்களும், வீடியோக்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக் ஓயே இணையதளத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் மும்பை நகரில் பிரமாண்ட விளம்பரப் பிரசாரத்தையும் ரிலையன்ஸ் பிக் என்டர்டெய்ன்மென்ட் செய்திருந்தது.

அயன் படத்தை சன்னுக்கு விற்ற ஏவிஎம்!


கோடம்பாக்கமே ஒரு கணம் ஆச்சரியத்தால் விழிவிரிக்கிறது சமீபத்திய ஒரு வர்த்தக உடன்பாட்டைக் கண்டு. அது... ஏவிஎம் தயாரித்து சூர்யா-தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள அயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதுதான்.தங்களது 70 ஆண்டு பாரம்பரியத்தில், தாங்கள் தயாரித்த ஒரு படத்தை இப்படி மொத்தமாக வேறொரு நிறுவனத்துக்கு ஏவிஎம் விற்றிருப்பது இதுவே முதல்முறை.

சுமாரான படமாக இருந்தாலும் அதை ஹிட்டாக்கும் விளம்பர உத்தி சன் நெட்வொர்க்குக்கு நன்றாகவே கைவந்திருப்பதால், தொடர்ந்து அவர்களை நோக்கி தயாரிப்பாளர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.காதலில் விழுந்தேன் தொடங்கி இப்போது ரிலீசாகியுள்ள படிக்காதவன் வரை, சன் பிக்சர்ஸ் வெளியிட்ட எந்தப் படமும் அதன் நேரடித் தயாரிப்பல்ல. இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள், படப்பிடிப்பு முடிவுறும் தருவாயில், செய்த செலவுக்கு மேல் குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு சன் பிக்சர்ஸுக்கு விற்று விட்டனர்.
இந்தப் படங்களில் பெரும்பாலானவற்றை அதன் தயாரிப்பாளர்கள் வழக்கமான முறையில் வெளியிட்டிருந்தால் அசல் கூட தேறியிருக்காது. ஆனால் சன் குழுமத்தின் அசத்தல் விளம்பரங்கள் வசூலை அள்ளிக் கொடுத்துள்ளது வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு.

அந்த வரிசையில் இப்போது அயன் படத்தையும் சன் பிக்சர்ஸுக்கு மொத்தமாகக் கொடுத்துவிட்டது ஏவிஎம் நிறுவனம்.இந்தப் படத்துக்கு மிகப்பெரிய தொகையை சன் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்த டீல் சுமூகமாக முடிய முக்கியக் காரணமாக இருந்தவர் சன் நிர்வாகத்தின் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா.

இத்தனை படங்களை சன் பிக்சர்ஸ் பேனரில் வெளியிட்டாலும், இதன் முதல் நேரடித் தயாரிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் வெளியான பிறகே வேறு படங்களை நேரடியாகத் தயாரிக்குமாம் சன் பிக்சர்ஸ்.

கவர்ச்சி தான் ருசிக்கும்!-விமலா


கவர்ச்சி காட்டினால்தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்கிறார் நடிகை விமலா ராமன்.பொய் படத்தில் பாலச்சந்தாரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் விமலா. அதன் பின்னர் சரியான வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், ராமன் தேடிய சீதையில் சேரனின் ஜோடியாக நடித்து முத்திரை பதித்தார். அப்படியும் வாய்ப்புகள் சரியாக அமைந்தபாடில்லை.

தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இரு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தனது படங்கள் குறித்து அவர் கூறுகையில்,மலையாளப் படங்களில் நடிப்பதால் தமிழில் இருந்து ஒதுங்கி விட்டதாக அர்த்தம் இல்லை. தமிழ் படத்தில் நடிக்கும் முன்பே மலையாள வாய்ப்புகள் வந்தன. இப்போது அவற்றில் நடிக்கிறேன்.

சுரேஷ் கோபியுடன் 'டைம்' படத்தில் பூக்காரி வேடத்தில் நடித்தேன். என் கேரக்டர் பேசப்பட்டது. இப்போது கேரளாவில் நான், எங்கு சென்றாலும் ரசிகர்கள் பறக்கும் முத்தம் தருகிறார்கள்.பிரயாணகாலம் என்ற படத்தில் நடித்து வருகிறேன். ஜூன் மாதம் இப்படம் ரிலீசாகிறது. மோகன்லால் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு படங்களில் இருந்தும் வாய்ப்புகள் வருகிறது.

தேவதாசி வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. கிளியோபட்ரா வேடத்திலும் நடிக்க விருப்பம்.சினிமாவில் எந்த நடிகையும் கவர்ச்சி காட்டாமல் நிலைக்க முடியாது. உணவு ருசியாக இருக்க உப்பு சேர்க்கிறோம். உப்பு இல்லாமல் உணவு சுவைக்காது. கிளாமரும் அப்படித்தான். அதுவும் இன்றைய சினிமாவின் முக்கிய அம்சமே கிளாமர்தான். அப்படி நடிக்க நான் மறுக்கவும் இல்லை. நல்ல வாய்ப்பு வரட்டும், அப்புறம் பாருங்கள் என் கிளாமர் நடிப்பை என்கிறார்.

திறமைகள் கொட்டிக் கிடக்கும் தமிழ் சினிமா-ஜாக்கி ஷெராப்


பல துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை தமிழகத்தில்தான் நான் பார்க்கிறேன். இனி தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்.

எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண் தயாரிக்கும் ஆரண்ய காண்டம் என்னும் புதிய படத்தில் ஒரு நாயகனாக நடிக்கிறார் ஜாக்கி ஷெராப். நிழல் உலக தாதாவாக நடிக்கும் அவருக்கு இது முதல் படம்.குமார் ராஜா இயக்கும் இந்தப் படத்தின் இன்னொரு நாயகனாக ரவி கிருஷ்ணா நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. ஏற்கனவே வங்கி என்ற தமிழ்-தெலுங்கு படத்தில் ஷெராப் நடித்தது நினைவகூறத்தக்கது.

தமிழில் நேரடியாக நடிப்பது இதுவே முதல் முறை. ஆரண்ய காண்டம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னை வந்த ஜாக்கி ஷெராப் நிருபர்களிடம் பேசுகையில்,
எனக்கு சென்னையுடன் 26 வருட தொடர்புண்டு. தமிழ்த் திரையுலகம் மீது நான் மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறேன். ஒழுக்கம், தொழில் மீது அக்கறை, நல்ல மனிதர்கள் ஆகிய மூன்றையும் இங்கேதான் பார்க்க முடிகிறது. திறமையான டைரக்டர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இங்கேதான் இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் திறமைகள் கொட்டிக் கிடக்கும் திரையுலம் இது.

தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். ரஜினிகாந்த், இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்ற பெரிய கலைஞர்கள் இங்கே இருக்கிறார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்தியில் எனக்காக நிறைய பாடல்களை பாடியிருக்கிறார்.இந்தியாவை உலக மேப்பில் உன்னத இடத்தில் வைத்த ஏஆர் ரஹ்மான் இந்த மண்ணைச் சேர்ந்தவர்தான்

உத்ரதக்ஷன் என்ற இந்தி படத்தில் நானும், நண்பர் ரஜினிகாந்தும் சேர்ந்து நடித்தோம். அந்த படத்தில் நான் ரஜினிக்கு தம்பியாக நடித்தேன். என் திருமணத்தின்போது தன்னுடைய பிஸியான ஷெட்யூலிலும் மும்பை வந்து என்னை வாழ்த்தியவர் ரஜினி. நண்பர்களை மதிப்பதில் அவருக்கு நிகராக ஒருவரை நான் பார்த்ததில்லை என்றார் ஜாக்கி.இந்தப் படத்தில் பெங்களூர் மாடல் யாஸ்மின் பொன்னப்பா பிள்ளை நாயகியாக அறிமுகமாகிறார்.

Monday, January 19, 2009

அஜீத்துடன் மோதலா?- கெளதம்


சிவாஜி பிலிம்ஸ் படத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து கௌதம் மேனன் திடீரெனக் கழட்டிவிடப்பட்டார் என்று சில தினங்களுக்கு முன் செயதிகள் வெளியானது நினைவிருக்கலாம்.
அப்போதைக்கு இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசாமல் மௌனம் சாதித்து வந்த கௌதம் மேனன், இப்போது அதுகுறித்து பதிலளித்துள்ளார்.

மேனன் அளித்துள்ள பதில்:

வாரணம் ஆயிரம் என்னைப் பொருத்தவரை வெற்றிப் படம்தான். இன்னமும் நன்றாக ஓடிக்கொண்டுள்ள படம். இப்போது 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படப்பிடிப்பில் இருக்கிறேன். இந்தப்படம் முடிந்ததும் 'ஜொஸ்சி' என்ற தெலுங்கு படத்தையும் இயக்குகிறேன்.

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜீத் நடிக்கவிருந்த படத்தை நானாகத்தான் இயக்க மறுத்தேன். தயாரிப்பாளர் என்னை நீக்கியதாகக் கூறுவது தவறு.

அஜீத் படத்தை இயக்க அழைப்பு வந்தபோது நான் வாரணம் ஆயிரம் படத்தின் இறுதி கட்ட வேலைகளில் இருந்தேன். பட வேலைகளை முடிக்க எனக்கு சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் அதை ஏற்கவில்லை. உடனே கதை கேட்டு நிர்ப்பந்தித்தார். அதற்கு என்னால் உடன்பட முடியவில்லை.

எனவே தான் அஜீத் படத்தை இயக்கவில்லை. மற்றபடி அஜீத்துடன் எனக்கு எந்த மோதலும் இல்லை.அஜீத்தும் நானும் இன்னொரு படம் மூலம் கண்டிப்பாக சேருவோம். அஜீத் சிறந்த நடிகர். பெரிய ரசிகர் பட்டாளமே அவருக்கு இருக்கிறது.வெளியில் நான் செல்லும்போது என்னை சந்திக்கும் பலரும், 'எப்ப எங்க தல படத்தை டைரக்டர் செய்யப் போறீங்க?' என்று கேட்கிறார்கள்.

ரசிகர்களுடன் அவர் மிகவும் நெருக்கமாக உள்ளார். அதனால்தான் அவர்கள் இத்தனை அன்பு செலுத்துகிறார்கள். வருடன் நான் பணியாற்றுவது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும் என்கிறார் கௌதம்.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு கல்யாணம்


எஸ்.ஜே.சூர்யாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. 'வாலி' படம் மூலம் இயக்குனரானவர் எஸ்.ஜே.சூர்யா.
முதல் படத்திலேயே தயாரிப்பாளர்களின் கவனத்தை தன் மீது திருப்பியவர். அடுத்து 'குஷி' யை வெற்றிப்படமாக்கியவர், அதன்பிறகு சில சறுக்கல்களை சந்திக்கலானார். நடிப்பு பக்கம் தாவியதால் இயக்குனராக கோட்டைவிட ஆரம்பித்தார். எஸ்.ஜே.சூர்யாவின் படங்களில் இரட்டை அர்த்த வசனங்களும் ஆபாசமும் இருப்பதாக விமர்சனங்கள் வர ஆரம்பித்தது.

இந்த விமர்சனங்களுக்கு எதிராக குதர்க்கம் பேசி வந்த சூர்யா சமீபகாலமாக ஞானோதயம் பெற்றவரைப்போல பேசிவருகிறார். இனி தன் படங்களில் இரட்டை அர்த்த வசனங்களோ, பெண்கள் முகம் சுழிக்கவைக்கும் ஆபாசமான காட்சிகளோ இருக்காது என சமீபத்தில் பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இனி பிற நடிகர்களின் படங்களை இயக்கப்போவதில்லையென்ற புதிய முடிவையும் அறிவித்தார்.

'நியூட்டனின் மூன்றாம் விதி' படத்தில் நடித்து முடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, 'புலி' படத்தை தெலுங்கில் இயக்கிவருகிறார். இந்த படத்தை தமிழிலும் இயக்கி நடிக்கவுள்ளாராம். இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். கல்யாணமே வேண்டாமென்று மறுத்துவந்த எஸ்.ஜே.சூர்யா இந்த விஷயத்திலும் மனம் திருந்தியுள்ளார். பெண் பார்க்கச் சொல்லி பெற்றோருக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாராம்.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு அவரது உறவினர் பெண்ணை தேடி வருகின்றனராம். பெண் முடிவானதும் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் கல்யாணம் நடைபெறவுள்ளதாம். வாழ்த்துக்கள்!

ராஜூ சுந்தரம் அடிக்கும் பல்டி


கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத குறையாக பேசி வருகிறார் ராஜூ சுந்தரம்.
தனுஷ்-மீரா ஜாஸ்மின் நடித்த 'பரட்டை என்கிற அழகு சுந்தரம்' படத்தை முதலில் இயக்குவதாக இருந்தது ராஜூசுந்தரம்தான். ஆனால் தயாரிப்பாளருக்கும் ராஜூவுக்கும் ஆரம்பத்திலேயே முரண்பாடு ஏற்பட்டதால் ராஜூ சுந்தரத்திற்குப் பதில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்ர். ராஜூ சுந்தரத்திற்கு டைரக்ஷ்ன் தெரியவில்லை என்பதால் அப்படத்திலிருந்து அவர் விலக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அஜித் நடித்த 'ஏகன்' மூலம் இயக்குனரானார் ராஜூ. ஆனால் தல ரசிகர்களுக்கு 'ஏகன்' தலைவலியை கொடு்ததே தவிர வெற்றியை பெற்றுத்தரவில்லை. இனி ராஜூ சுந்தரததிற்கு இயக்குனர் வாய்ப்பு கிடைப்பதும் குதிரை கொம்புதான். தயாரிப்பாளருக்காக காத்திருந்தால் வருமானம் கெட்டுவிடும் என்பதால் மறுபடியும் டான்ஸ் மாஸ்டர் தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இயக்குனர் வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும் அதனை சாமர்த்தியமாக சமாளிக்கிறார் ராஜூ. "நடனம்தான் எனக்கு உயிர், அதன் மூலம்தான் நான் பிரபலமானேன். என்னை இயக்குனராக்கியதும் நடனம்தான். எனவே இப்போதைக்கு நடனத்தில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறேன். படம் இயக்க நல்ல வாய்ப்பு வந்தால் மட்டுமே இயக்குவேன்" என்கிறார்.

'ஏகன்' தோல்வி படத்தை கொடுத்ததால் ராஜூ சுந்தரத்திற்கு வாய்பபு வரவில்லை என்பதுதான் உண்மை. இதை நேர்மையாக ஒத்துக் கொள்ள திராணியில்லாத ராஜூ சுந்தரம் எப்படியெல்லாம் சமாளிக்கிறார் என அஜித் ரசிக்ரகள் சிலர் ஆத்திரப்படுகின்றனர்.

ஆறாத வருத்தத்தில் அசின் விளம்பரங்களில் புறக்கணிப்பு?


“குளோபல் உலகம் இது. இனி எந்த மொழியில் நடிச்சாலும், எல்லா மொழிகளிலும் ஈசியா ரீச் ஆயிடுது. மற்றவர்களை விட எனக்குதான் இதிலே அதிக சந்தோஷம்” என்கிறார் அசின். நிரந்தரமாக இந்திக்கே போய் விட்டார் என்று ஏங்க ஆரம்பித்திருக்கும் தமிழ், மலையாள ரசிகர்களுக்கு புரிந்தும் புரியாமலும் சொன்ன அசின் சொன்ன பதில்தான் இது.

இவர்(ரும்) நடித்த இந்தி கஜினி படா படா ஹிட் ஆகிவிட்டது. முதல் வாரத்திலேயே 100 கோடி கலெக்ஷன்! ஆனாலும், அசினின் முகத்தில் ஆறாத சோகம். என்னவாம்? பட விளம்பரங்களில் அமிர்கான் இருக்கிறாரே தவிர, அசினையே காணோம். இந்த இருட்டடிப்புக்கு பலவித காரணங்கள் சொல்லப்படுகிறது.

கஜினியை தொடர்ந்து மற்றொரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் அசின். இதில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். பத்திரிகைகளில் செய்தி வெளி வருகிற வரைக்கும் இந்த விஷயத்தை அமீர்கானிடம் சொல்லவே இல்லையாம் அசின். இதனால் வருந்திய அமீர், விளம்பரங்களில் அசின் படங்களை தவிர்த்துவிட்டாராம்.

கான்களிடம் சிக்கியிருச்சு மான்!

Sunday, January 18, 2009

இந்தியாவில் மூட நம்பிக்கை... -ரிட்ஸ் விருது விழாவில் குஷ்பு!


பேஷன் உலக செய்திகள் அடங்கிய ரிட்ஸ் இதழ், சமுதாயத்தின் பல்வேறு Ritz Award 2009துறைகளில் முன்னணியில் இருக்கும் பிரபலகங்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது. சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ரஜினி மகள் சௌந்தர்யா, கமல் மகள் ஸ்ருதி, குஷ்பு, சினேகா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு விருதுகளை பெற்றனர். மேல் முதுகில் ‘ஸ்ருதி என்று பச்சை குத்தியிருக்க, அந்த பெயர் பளிச்சென்று தெரியும்படி உடையணிந்திருந்தார் ஸ்ருதி.

‘கண்ணா, பொம்பளைங்கன்னா அடக்கம் வேணும்’னு சூப்பர் ஸ்டார் ரஜினியே காதருகில் வந்து கிசுகிசுக்கிற மாதிரி இருந்தது சௌந்தர்யாவின் காஸ்ட்யூம். முகம் சுளிக்க வைக்காத சல்வார் கமிஸ்! குழந்தைகளுடன் வந்திருந்தார் குஷ்! சிவப்பு காஸ்ட்யூமில் கச்சிதமான பேக்கிங்கில் வந்திருந்தார் சினேகா. கூடவே வந்திருந்தார்கள் அம்மா, அப்பாவும், அக்கா குழந்தையும்!

குஷ்புவின் பேச்சில் எக்கச்சக்க மிளகாய் நெடி. “இந்தியாவே மூட நம்பிக்கையில் மூழ்கி கிடக்குது. அதிலிருந்து மக்களை மீட்க வேண்டிய கடமை நம்மை மாதிரி பெண்களுக்கு இருக்கணும்” (பின்னே என்னவாம்? செருப்பு போட்டா தப்புங்கிறாங்க, கால் மேல் கால் போட்டா தப்புங்கிறாங்க, அநியாயத்துக்கு மூட நம்பிக்கைப்பா!)

பொள பொளவென பொளந்த பீட்டர்களுக்கு மத்தியில், மக்கள் தொடர்பாளர் நிகில் Ritz Award 2009முருகன் தமிழில் பேசியது ஆறுதல். இராமாயணம், மஹாபாரதம் என்று அலசியவர், பேத்திகளுக்கும் முன்னுரிமை கொடுக்கிற காலம் இது என்று அரசியலையும் லேசாக டச் பண்ணினார். அனைவரையும் (இந்தியாவின் இளம் பத்திரிகை எடிட்டர்) அருணா வரவேற்றார். இவர் ரிட்ஸ் பத்திரிகையின் பப்ளிஷரும் கூட!

சுருளிராஜனாக மாறும் விவேக்


ஹீரோக்கள் மட்டும்தான் கெட்டப்மாற்றம் செய்ய வேண்டுமா? விவேக்கும் இப்போது களத்தில் குதித்துள்ளார்.
காமெடியில் பகுத்தறிவு பாடம் கலந்து சின்னக்கலைவானர் பட்டமும் வாங்கிவிட்டார் விவேக். கதாநாயகன் ப்ரமோஷன் கொடுத்த 'சொல்லியடிப்பேன்' படம் இன்னும் வெளிவர முடியாமல் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது. இதனிடையே கதாநாயகர்களுக்கு போட்டியாக கெட்டப் மாற்றம் செய்து நடிக்க ஆரம்பித்துவிட்டார் விவேக். 'குரு என் ஆளு' படத்தில் ஸ்ரேயாபோல வேஷம் போட்டவர், 'வாடா' படத்தில் சுருளிராஜனாக நடிக்கவுள்ளாராம்.

இதென்ன கலாட்டா விவேக் என்றால், கலாட்ட இல்ல சார் காமெடிதான் என்கிறார்...

" படிக்காதவன் படத்தை தொடர்ந்து நான் நடித்த 'குரு என் ஆளு', 'ஐந்தாம் படை', 'பெருமாள்' படங்கள் திரைக்கு வர உள்ளன. 'குரு என் ஆளு' படத்தில் ஆசன அழகப்பன் என்ற யோகா மாஸ்டர் வேடத்தில் நடிக்கிறேன். 'ஐந்தாம்படை' ஒரு குடும்பத்திலுள்ள நான்கு பேரை பற்றிய படம். அதில் முக்கிய வேடத்தில் வருகிறேன்.

Surulirajan

'வாடா' படத்தில் சுருளிராஜனை நினைவுபடுத்தும் வகையில் நடிக்க உள்ளேன். எனக்கு பிடித்த காமெடி நடிகர்களில் அவரும் ஒருவர்.அவரைப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு கூறும் விதத்தில் அந்த கேரக்டர் இருக்கும். அவரைப்போன்ற கெட்அப் மட்டுமல்ல, அவரது குரலிலும் பேசியிருக்கிறேன். இப்படி குரல் மாற்றி பேசி நடித்ததால், காது வலி வந்துவிட்டது. டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டேன். தொடர்ந்து இதுபோல வித்தியாசமான வேடங்களை ஏற்கனவே விரும்புகிறேன்" என பயமுறுத்துகிறார்.

நல்ல கதை இருந்தா வாங்க...-ஸ்வாதி போட்ட போடு!!


சுப்பிரமணியபுரம் என்ற ஒரு படம்தான் நடித்தார் ஆனால் அதற்குள் சுவாதி தமிழ் திரையுலகப் புள்ளிகள் தேடும் நாயகியாகிவிட்டார்.

ஆனாலும் அடுத்த படத்தில் உடனடியாக நடித்ததாகத் தெரியவில்லை.

ஏன்...?

சுவாதியின் பிடிவாதம்தானாம். நல்ல கதை, பிடித்தமான வேடமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன். இல்லாவிட்டால் கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் எனக்கு அந்தப் படமே வேண்டாம் என்று கட் அண்ட் ரைட்டாகக் கூறி வருகிறாராம்.

சமீபத்தில் அப்படி வந்த 4 தமிழ் படங்களின் வாய்ப்புகளை உதறிய ஸ்வாதி, இப்போது ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் மட்டும் நடித்து வருகிறாராம்.



காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதுதானே காலம்காலமாய் ஹீரோயின்களின் பாணி. இவருக்கு மட்டும் ஏன் இத்தனைப் பிடிவாதம்...?

ஸ்வாதியிடமே கேட்டோம்.

"பணம் சம்பாதிப்பது என் நோக்கமல்ல. மனசுக்குப் பிடித்தமான வேலையை கண்ணியமாக செய்ய வேண்டும். இதுதான் என் ஸ்டைல். என் அப்பா, இந்தியன் நேவிக்காக ரஷ்யாவில் வேலை பார்த்தவர். அங்கு விளாடிவோஸ்டோக் என்ற இடத்தில் பிறந்தேன். உலகின் கிழக்குக் கோடியில் உள்ள பனி நகரம் இது. மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமாக வளர்ந்த பெண் நான்.

என் இயல்புக்கேற்ற கதை, என் உடலமைப்புக்கேற்ற வேடம், கண்ணியமான குழுவுடன்தான் என்னால் நடிக்க முடியும். சுப்பிரமணியம் குழு அப்படிப்பட்ட ஒன்றுதான். அதுபோன்ற டீம் மீண்டும் அமைந்தால் நடிப்பேன். இல்லாவிட்டால் இப்படியே பை சொல்லவிட்டுப் போகவும் தயங்கமாட்டேன்", என்றார்.

அம்மாடியோவ்...!!

இனி குடும்பப்பாங்கினி வேடமே வேண்டாம்!: ஷீலா


இனி குடும்ப பாங்கான பெண் என்ற இமேஜ் எனக்கு வேண்டாம். அதிலிருந்து வெளிவந்து கிளாமர் ரோல்களில் கலக்க முடிவு செய்துவிட்டேன் என்கிறார் நடிகை ஷீலா.

குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்தவர் ஷீலா. பின்னர் இளவட்டம் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக மாறினார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துவருகிறார்.

ஆனால் தொடர்ந்து குடும்பப் பாங்கான வேடங்களிலேயே நடித்து வருவதால், நல்ல சம்பளம் கிடைக்கக் கூடிய கமர்ஷியல் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறதாம்.

இந்த குடும்பப்பாங்கினி வேடங்களைக் கட்டிக் கொண்டு அழுவதை விட, இனி ரெண்டு கச்சையைக் கட்டிக் கொண்டு கல்லா நிரப்பலாம் என முடிவு செய்துவிட்ட ஷீலா, அதை பத்திரிகைகள் மூலமும் பற்ற வைத்துள்ளார்.



புதிதாக தான் செய்யவிருக்கும் கிளாமர் சேவை குறித்து அவர் கூறியதாவது:

இதுவரை நான் பணியாற்றிய படங்களில் அதிக கிளாமராக நடித்ததில்லை. பாவாடை தாவணி, சேலை என்று சராசரி பெண்ணாகவே நடித்துவிட்டேன்.

தமிழ் ரசிகர்களும் நம்ம வீட்டுப் பெண்ணாகவே என்னை நினைப்பதால் கிளாமராக நடிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆனால் இது பல வகையிலும் எனக்கு நஷ்டம்தான். இப்படி ஹோம்லியாக நடிப்பதால் பெயர்தான் கிடைக்கிறது. பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது.

அதனால் இந்த இமேஜ் வட்டமே வேண்டாம் என்று கொஞ்சம் கிளாமராக நடிக்க முடிவு செய்தேன். முதலில் அந்த வாய்ப்பு 'மஸ்கா' என்ற தெலுங்குப் படத்தில் வந்தது. பயன்படுத்திக் கொண்டேன்.

கேரக்டருக்கு தேவையான அளவுக்கு, ஆனால் பார்ப்பவர்கள் ஷீலாவா இது என ஆச்சர்யப்படும் அளவுக்கு கிளாமராக நடித்திருக்கிறேன். தமிழிலும் வாய்ப்பு வந்தால் அப்படி நடிப்பேன் என்கிறார் ஷீலா.

காதல்னா சும்மா இல்ல திரை விமர்சனம்


எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துகிற காதலி. தனக்கென்று மட்டுமே வாழும் காதலன். ‘வேவ் லெங்க்த்’ வேற வேற மாதிரி இருக்கே என்று ஒதுங்கிப் போய்விடுகிறாள் காதலி.
அவள் இல்லாத வாழ்க்கை அரை பூஜ்யம் என்று நினைக்கிற ஹீரோ, காதலியை தேடி நடத்தும் நீண்ட பயணமும், அதில் கிடைக்கிற அனுபவங்களும்தான் படம். காதலி கிடைத்தாளா? காதல் கை கூடியதா? சுவாரஸ்யமான திரைக்கதை. சொக்க வைக்கும் வசனங்கள் என்று பொழுது போக்கை குழைத்து போகன்வில்லா வரைந்திருக்கிறார் இயக்குனர் இளங்கண்ணன். (வாங்கண்ணா....)

அரண்மனை புத்தருக்கு ஞானோதயம் வந்ததை மூலக்கருவாக கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது. பிறப்பும், இறப்பும் எத்தகைய உணர்வை தோற்றுவிக்கும் என்பதை அந்த பணக்கார வாலிபன் மூலம் உணர வைக்கிற காட்சிகள் அற்புதம். பணக்கார வாலிபனாக நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் சர்வானந்த். அழகான தோற்றம், அற்புதமான நடிப்பு என்று ‘நல்வரவு’ போட வைக்கிறார். கமலினி முகர்ஜியின் மேல் இவர் வைத்திருக்கும் காதலை முதல் சந்திப்பிலேயே போட்டு உடைப்பது ஷாக். அதன்பிறகு கமலியின் சோஷியல் சர்வீசுக்கு முட்டுக்கட்டை போடுவதே இவரது ட்யூட்டியாக இருக்கிறது. அதனாலேயே சர்வானந்த் மீது ரசிகர்களுக்கு வெறுப்ஸ்... ஆனால் இதை பேலன்ஸ் பண்ணுகிறது இவரது காதலி தேடும் படலம். எங்கெங்கோ குக்கிராமங்களில் அலைந்து காதலியை கண்டுபிடித்து கட்டிப்பிடிக்கிற போது நம்மையும் மீறி ஒரு அப்பாடா...!

சர்வானந்துக்கு ஹைவேஸ் தோழனாக மாட்டுகிற ரவிகிருஷ்ணா படம் முழுக்க சும்மா போட்டு தாக்குகிறார். வாயை திறந்தாலே ரவுசுதான்! கேரக்டரின் பெயர் ‘வெட்டி’ வேலு! எப்படியாவது அந்த காஸ்ட்லி பைக்கை ‘அடித்துவிட’ வேண்டும் என்று இவர் போடுகிற கணக்கும், அதையும் மீறி சர்வானந்த் மீது இவர் வைக்கிற பாசமும் ரகளையோ ரகளை! நெஞ்சில் ஈரம் உள்ள எவரையும் அச்சச்சோ போட வைக்கிறது இவரது முடிவு. அச்சச்சோ...!

வேட்டையாடு விளையாடு படத்தில் வெள்ளரிக்காய் பிஞ்சு மாதிரி வந்த கமலினி முகர்ஜியா இது? சில கோணங்களில் கமலினி அலர்ஜி. ஆனாலும், இவர் ஆடும் நாட்டியமும், அந்த நடன அமைப்பும் ஆஹா...!

தீவிர கம்யூனிஸ்டுகளையும், அவர்களது துப்பாக்கி தத்துவத்தையும் வசனங்களால் வளைத்து பிடித்திருக்கிறார் இயக்குனர். “காட்டை விட்டு வெளியே வாங்க. அழிக்க வேண்டிய சமாச்சாரங்கள் நிறைய இருக்கு” என்ற அவரது வார்த்தைகள் நிஜமோ நிஜம். ஆனால், கதைக்கு தேவையில்லாமல் திணிக்கப்பட்ட எபிசோடாகவே இந்த காட்சிகள் இருப்பது சப்!

நாசருக்கு அதிகம் வேலையில்லை. ஒரு சில காட்சிகளில் வந்தாலும், தியேட்டரை துவம்சம் பண்ணிவிட்டு போகிறார் எம்.எஸ்.பாஸ்கர். தேஜாஸ்ரீயின் அந்த தெருக்கூத்து பாடலில் ஓங்கு தாங்காக ஒலிக்கிறது ரெட்டை அர்த்தம்!

எஸ்.ஏ.வின்சென்ட்டின் ஒளிப்பதிவு தனியாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

பாடல்களில் ‘ஜெய் சம்போவும்’, ‘என்னமோ செய்தாய் நீ’ யும் ரிங் டோன்களை ஆக்ரமிக்கும்.

‘கம்மியம்’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்தான் இந்தப்படம். இது தொடரும் என்றால், தமிழ்நாடு, ஆந்திர எல்லையில் ஒரு ‘வெல்கம்’ போர்டே வைக்கலாம், நிரந்தரமாக!

இந்திய ஏழ்மையைப் படம் பிடித்தால்தான் பாராட்டா?-அமிதாப்


ஸ்லம்டாக் மில்லியனேர் படம் சர்வதேச அளவில் விருதுகளைக் குவித்து வரும் நிலையில் அந்தப் படத்தை விளாசித் தள்ளியிருக்கிறார் இந்தி(ய) சினிமாவின் அடையாளங்களுள் ஒருவரான அமிதாப் பச்சன்.

இது குறித்து தனது ப்ளாக்கில் அவர் எழுதியுள்ளதாவது:

டேனி பாய்லே இயக்கி ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம், இந்தியாவின் ஏழ்மையை, அழுக்கை, அதனால் ஏற்படும் வேதனைகளை வெளிச்சம் போட்டுக காட்டுகிறது. இந்தியாவில் இந்த நிலை என்றால், வளர்ந்த நாடுகளில் அதற்கேற்ற மோசமான எத்தனையோ விஷயங்கள் உள்ளன. ஆனால் அவற்றை யாரும் படம் பிடித்துக் காட்டி விருது வாங்க முயற்சிப்பதில்லை.

ஸ்லம்டாக் மில்லியனேர் படம் ஒரு இந்தியரால் எழுதப்பட்டு, மேற்கத்தியரால் படமாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இன்று உலகின் பார்வை அதன்மீது பதிந்துள்ளது.



இந்தியாவின் ஏழ்மையைப் படமாக்கினால் மட்டும் பாராட்டுகிற மேற்கத்திய உலகம், இந்தியாவின் மாஸ் எண்டர்டெயின்மெண்ட் என்று புகழப்பட்ட எத்தனையோ சிறந்த வணிகப் படங்களை கண்டுகொள்ளவே இல்லை. அவர்களுக்கு சத்யஜித்ரேயை மட்டுமே பாராட்டத் தெரிந்திருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளாக பலவித உத்திகளைப் பயன்படுத்தி மக்களைச் சந்தோஷப்படுத்தி வரும் இந்திய கமர்ஷியல் சினிமா அவர்களுக்குத் தெரிவதே இல்லை.

சத்யஜித்ரே இயல்பான விஷயங்களைத் திரையில் காட்டினார். அவருக்கு தரப்பட்ட பாராட்டு நியாயமானதே. ஆனால் மற்றவர்கள் எடுத்த வணிகத் திரைப்படங்களை கேன்ஸ், வெனிஸ் உள்ளிட்ட எத்தனையோ திரைவிழாக்களில் பங்கேற்கக் கூட அனுமதிக்கவில்லை.

இப்போதும் பாருங்கள்... பல சர்வதேச தொலைக்காட்சிகள் இந்தித் திரைப்படங்களைத்தான் முதன்மை நேரத்தில் காட்டி வருகின்றன. வசூலைக் குவிக்கின்றன. கொட்டும் பனியில் லீசெஸ்டர் ஸ்கொயரில் இந்திப் பட பிரியமிருக்கு காத்திருக்கிறார்கள் ஹாலிவுட் படங்களை மட்டுமே பாராட்டும் வெள்ளைக்காரர்களும்.

ஆனால் சர்வதேச அங்கீகாரம் தருவதற்கு மட்டும் யோசிக்கிறார்கள்..., என அமிதாப் குறிப்பிட்டுள்ளார்.

ரனவத்தின் காஸ்ட்யூம் ரூ.75 லட்சம்!!


ரூ.25 கோடி செலவில் தயாராகும் இந்திப்படம் ராஸ். இதில் கங்கனா ரனவத்தின் உடைக்காக மட்டும் ரூ.75 லட்சம் செலவு செய்திருக்கிறார்களாம்.

மகேஷ், முகேஷ் பட் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினின் சிகை அலங்காரம், உடை அலங்காரம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு 110 உடைகள் வாங்கப்பட்டுள்ளனவாம்.

இதுகுறித்து முகேஷ் பட் கூறும்போது, 'படத்தில் கங்கனாதான் பிரதான பாத்திரம் ஏற்றிருக்கிறார். அவரது தோற்றம் கவர்ச்சியாக இருப்பது அவசியம். சூப்பர் மாடலாக நடிப்பதால் விலை உயர்ந்த காஸ்டியூம்கள் பயன்படுத்தப்படுகிறது. காதல் காட்சிகளுக்கும் அதிகபட்ச காஸ்டியூம் பயன்படுத்தப்படுகிறது.

பெரும்பாலும் திகில் படங்கள் குறைந்த பட்ஜெட்டில்தான் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக இப்படத்தை பெரும் செலவில் தயாரிக்கிறோம்...என்கிறார்.



இந்தப் படத்தில்தான் கங்கனா நிர்வாணமாக நடித்திருப்பதாகவும், அந்தக் காட்சியை அனுமதிக்க மறுத்து சமீபத்தில் தணிக்கை குழுவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

உடைக்காக ரூ.75 லட்சம் செலவு செய்துள்ள படத்தில் நிர்வாணக் காட்சி...! அடடா என்னவொரு முரண்பாடு!!

மாதவனின் மாற்றம்


முதல் படத்திலேயே தமிழ்நாட்டு இளசுகளின் மனசை 'அலைபாய'வைத்தவர் மாதவன்.
'தம்பி' படத்திற்கு பிறகு மாதவன் மீண்டும் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சந்தித்தது தேக்க நிலைதான். மாதவனின் இப்போதைய கவனமெல்லாம் இந்தியில்தான். தமிழில் 'குரு என் ஆளு', 'யாவரும் நலம்' படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தும் சில காரணங்களால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்தப் படங்களை தவிர மாதவன் கைவசம் எந்த தமிழ் படங்களும் இல்லை. உங்கள் கேரியரில் தொய்வு ஏனென்று மாதவனிடம் கேட்டால், தனது மாற்றங்களை பற்றி பட்டியல் போட ஆரம்பித்தார்.

" 'த்ரீ இடியட்ஸ்' படத்தில் மாணவராக நடிக்கிறேன். ஐஐஎம்-பி கல்லூரியில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த இடத்திலிருந்து வீட்டுக்கு சென்று வரும் நேரத்தை சேமிப்பதற்காக மாணவர்களுடன் விடுதியில் தங்கலாம் என்று அமீர்கான் யோசனை கூறினார். அதை ஏற்று விடுதியில் தங்கி விட்டோம். அமீர்கான் சிறந்த விளையாட்டு வீரர். அவரும் நானும் மாணவர்களுடன் சேர்ந்து வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டில் பங்கேற்கிறோம். இதில் என் காலில் காயம் ஏற்பட்டது. இது இனிமையான அனுபவம். இப்படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்திருக்கிறேன். இந்த ஆண்டில் இப்படம் பெரிய வெற்றியை தரும் என நம்புகிறேன்.

இதுவரை அமிதாப் பச்சனின் ரசிகனாக இருந்தேன். 'தீன்பத்தி' படத்தில் அவருடன் நடிக்கத் தொடங்கியபிறகு அவரது பக்தன் ஆகிவிட்டேன். விளையாட்டு, சினிமா என எல்லாவற்றிலுமே அவர் சூப்பர் ஸ்டார். தமிழில் நடிக்கும் 'குரு என் ஆளு', படத்தில் டிப் டாப்பான வேடம். இந்தியில் வெளியான 'யெஸ் பாஸ்' ரீ-மேக்கான இதில் ஷாரூக்கான் நடித்த வேடத்தில் நடிக்கிறேன். தமிழ், இந்தியில் தயாராகும் 'யாவரும் நலம்' படத்திலும் நடித்து வருகிறேன். கன்னடத்தில் ஒரு படம் மட்டுமே நடித்தேன். தமிழில் பிஸியாகிவிட்டதால் தொடரமுடியவில்லை. என்னால் எந்த மொழியிலெல்லாம் டப்பிங் பேச முடிகிறதோ அதில் மட்டுமே நடிக்கிறேன். நடனம் ஆடவும் எனக்கு தெரியாது. இதனால் நிஜ கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்ட வேடங்களிலேயே நடிக்க விரும்புகிறேன்".

அசல் அ‌ஜித் ஓய்வாக இருக்கிறார்


ஏகனுக்குப் பிறகு வேறு படங்களில் நடிக்காமல் ஓய்வாக இருக்கிறார் அ‌ஜித். சரண் மோதி விளையாடு படத்தை முடித்து வந்த பிறகே இவருக்கு வேலை.
வினய் நடிக்கும் மோதி விளையாடு படத்தின் பாடல் காட்சிகளை எடுக்க விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறார் சரண். மொத்தம் நான்கு பாடல்கள். அது முடிந்தால் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள். சரணின் கணக்குபடி அனைத்து வேலைகளும் முடிந்து படம் ஏப்ரலில் திரைக்கு வந்துவிடும்.

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்ததும் படத்தின் ‌ரிலீஸுக்கு காத்திருக்காமல் அ‌ஜித்தை வைத்து இயக்கும் அசல் படத்தை தொடங்குகிறhர் சரண். ஏற்கனவே எழுதி வைத்த ஸ்கி‌ரிப்ட் என்பதால் மோதி விளையாடு முடிந்ததும் அசல் டேக் ஆஃப் ஆகிறது.

அசலில் அ‌ஜித்துக்கு இரண்டு வேடம் என்ற வதந்தி பற்றி சரணிடம் கேட்டதற்கு, அப்படி எதுவும் இல்லை. அ‌ஜித்துக்கு ஒரு வேடம்தான் என்று பதிலளித்தார்.

அசலைப் பற்றி இப்போதே நகல் செய்திகள் உலவுகிறது. ரசிகர்களே உஷார்.

Followers