Saturday, January 17, 2009

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டு விழா! -முதல்வர் கலைஞர் விருப்பம்


‘அடுத்ததாக ஆஸ்கார்தான்’ என்று தனது லட்சியத்தை தெரிவித்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்திற்காக கோல்டன் குளோப் விருதை வென்று சென்னை திரும்பியவருக்கு, திரும்பிய இடத்திலிருந்தெல்லாம் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இதில் அரசியல் தலைவர்களும் ஆர்வத்தோடு ரஹ்மானுக்கு போன் செய்து பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

முதல்வர் கலைஞரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தங்கள் வாழ்த்துக்களை ரஹ்மானுக்கு தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் அரசு சார்பில் ரஹ்மானுக்கு விழா எடுத்து கௌரவிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாராம் முதல்வர் கலைஞர்.

ரஹ்மானின் இசைக்கச்சேரி, அவரது பாடல்களுக்கு நடனம் என்று களை கட்டப் போகும் இந்த நிகழ்ச்சியை நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் ஏற்பாடாகி வருகிறதாம்.

இசைப்புயலே... எப்போது சென்னையிலே கரை கடப்பாய்?

இளைய தளபதி-புரட்சித் தளபதி ஒரு ‘ரொமான்ட்டிக்’ ரேஸ்!

‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் அனுஷ்கா. ரெண்டு’ படம் ரிலீஸ் ஆனபோதே ரெண்டுலே ஒண்ணு பார்ப்பாரு என்று எதிர்பார்க்கப்பட்டவர்தான் இவர். ஆனால், சம்பள விஷயத்திலே அலாவுதீன் பூதத்தையே அசர வைத்தார் என்பதால் பேக் டூ ஆந்திரா!

மறுபடியும் விஜய் புண்ணியத்தில் கோடம்பாக்கம் வந்தவருக்கு பூரண கும்ப மரியாதை. அடுத்த படத்திலாவது நம்மோடு ஜோடி போட வைச்சுடணும் என்ற அடங்காத ஆசையில் ஆந்திராவுக்கும் சென்னைக்குமாக ரகசிய விசிட் அடிக்கிறார்கள் முன்னணி ஹீரோக்கள். அதில் விஷாலுக்குதான் அடுத்த சான்ஸ் அடித்திருக்கிறது.

‘மலைக்கோட்டை’ படத்தை தயாரித்த லட்சுமி புரடக்ஷன்ஸ், ‘தோரணை’ படத்திற்கு பிறகு விஷால் நடிக்கும் மற்றுமொரு படத்தை தயாரிக்கப் போகிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறாராம். மனசெல்லாம், ஜுட் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சிவா இப்படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகம் ஆகிறார். அட்வான்ஸ் வாங்கிய கையோடு ஆந்திராவுக்கு பறந்த விஷால், அங்கேயே இருந்து அனுஷ்கா கால்ஷீட்டை வாங்கி வந்தாராம்.

இளைய தளபதி கோடு போட்டா, புரட்சி தளபதி ரோடு போடுறாரு! தமிழா... ஆட்றா ராஜா ஆடு!

படப்பிடிப்பா? படபடப்பா? ‘செக்’ வைக்கும் சினிமா நிறுவனம்


உருகி வழியும் பனிக்கட்டியாகி விட்டது உலக பொருளாதாரம். சம்பள குறைப்பு, Ajith-ஆட்கள் வேலை நீக்கம் என்று அதிரி புதிரியாக திகில் கிளப்புகிறது வியாபார நிறுவனங்கள். கட்டு கட்டாக முதலீடு செய்த பணத்தை எடுக்க, தட்டு தடுமாறி தடவிக் கொண்டிருக்கின்றன திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள். இந்த நிலையில் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டிய ஹீரோக்கள், “போங்கய்யா... நீங்களும் உங்க கஷ்டகாலமும்” என்று பிடிவாதம் பிடிக்கிறார்களாம்!

வில்லு படத்திற்கு பத்து கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் விஜய். தளபதி சம்பளத்தில் கொஞ்சமும் குறையாமல் கைகளை அகல விரிக்கிறார் அல்டிமேட் ஸ்டார் அஜீத். சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்று இவரிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடக்கிறதாம். எதற்கும் மசியாமல் முரட்டு பிடிவாதம் பிடிக்கிறார் அஜீத் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

அஜீத்திடம் கதை சொல்லி, சிவாஜி புரடக்ஷன்சிடம் அட்வான்சும் வாங்கிவிட்டாராம் சரண். படத்திற்கு ‘அசல்’ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மார்ச்சில் ஷ¨ட்டிங் என்கிறார் சரண். ஆனால், சம்பள பேச்சு வார்த்தையில் இரு தரப்புக்கும் உடன்பாடு எட்டினால்தான் படப்பிடிப்பு. இல்லையேல், அஜீத், சரணுக்கு படபடப்புதான்!

படத்தையே ‘டிராப்’ செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம்! கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் விலை குறையுது. கலெக்ஷன் குறைந்தாலும் சம்பளம் குறையாதா? நல்லாயிருக்கு நியாயம்!

நயன்தாரா வேணும்.... சொல்லியடித்த சூர்யா!


தாஜ்மஹாலுக்கு வெள்ளையடிக்க வேண்டிய கட்டாயம் வந்திருச்சு! ‘எப்படியிருந்த நயன்தாரா இப்படி ஆகிவிட்டாரே’ என்று ரசிகர்களே அலுத்துக் கொள்கிற அளவுக்கு இருக்கிறது அவரது கட்டுடலும், கனி முகமும்! கடைசியாக இவர் நம்பியிருந்த வில்லுவிலும், ரசிகர்களை ஏங்க வைக்கிற பர்சனாலிடியை பெற முடியாமல் போனது நயன்தாராவின் பேட் டைம்!

எப்படியிருந்தாலும் ரோஜா ரோஜாதானே? நயன்தாரா விஷயத்தில் முன்னணி நடிகர்களின் ஆர்வம் பங்கு மார்க்கெட் மாதிரி சரிந்திருந்தாலும், சூர்யாவுக்கு மட்டும் அவர் ஜிகிர்தண்டாதான் போலிருக்கிறது. தான் நடிக்கும் ‘சிங்கம்’ படத்திற்கே நயன்தாராவை பார்க்கலாமே என்றாராம் இப்படத்தின் இயக்குனர் ஹரியிடம். அதற்கு ஒப்புக் கொள்ளாத ஹரி, ஸ்ரேயாவை ஹீரோயின் ஆக்கிவிட்டார்.

மீண்டும் தன் முயற்சியை தொடர்ந்த சூர்யா, அடுத்து தான் நடிக்கவிருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஆழ்வார் படத்தை தயாரித்த பட நிறுவனம், அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் சூர்யாவோடு ஜோடி சேர்கிறார் நயன்தாரா.

‘பரமபத’ விளையாட்டில் பாம்பு கடி சகஜம். ஏணியை பிடித்ததுதான் நயன்தாராவின் சாமர்த்தியம்!

புரட்சித் தமிழனின் புதிய முடிவு அதிர்ச்சியில் கோடம்பாக்கம்


‘சிவாஜி’ படத்தின்போது சுமன் கேரக்டரில் நடிக்க வைக்க முதலில் அழைக்கப்பட்டவர் சத்யராஜ்தான். ஷங்கரே நேரடியாக அழைத்தும் ‘வில்லனாக நடிப்பதில் விருப்பம் இல்லை’ என்று ஒதுங்கிக் கொண்டார் புரட்சித் தமிழன்.

அதன்பின் ‘தசாவதாரம்’ படத்தில் வில்லனாக நடிக்க அழைக்கப்பட்டார் சத்யராஜ். அப்போது சற்று ஓவராகவே உணர்ச்சிவசப்பட்டவர், “என் படத்திலேயும் ஒரு வில்லன் ரோல் இருக்கு. அதில் கமல் நடித்தால், நான் தசாவதாரத்தில் வில்லனாக நடிக்க தயார்” என்றாராம்!

இன்னமும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் புரட்சித் தமிழனின் முதல் தெலுங்கு பிரவேசம், சற்று அதிர்ச்சியாகவே இருக்கிறது. கோபிசந்த் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகிறாராம் சத்யராஜ். இதற்காக இவருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் வெறும் முப்பதே லட்சம். இதே வேடத்தை சிவாஜியிலோ, தசாவதாரத்திலோ செய்திருந்தால் பெயருக்கு பெயருமாச்சு. பணத்திற்கு பணமுமாச்சு. இப்போது காலம் கடந்து இந்த முடிவை எடுத்திருக்கிறாரே என்று கலங்குகிறது கோடம்பாக்கம்.

தெலுங்கிலே வில்லனாகிறார் இவர். தமிழிலே வில்லனாகிறார் சிபிராஜ். என்னாச்சு புரட்சித் தமிழன் ஃபேமிலிக்கு?

Friday, January 16, 2009

சமாஜ்வாடி சார்பில்தான் தேர்தலில் போட்டியிடுவேன் - சஞ்சய் தத்

மும்பை: சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளராகவே நான் லக்னோ லோக்சபா தொகுதியில் போட்டியிடுவேன் என்று நடிகர் சஞ்சய் தத் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட தான் விரும்பவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நடிகர் சஞ்சய் தத், சமாஜ்வாடி கட்சி சார்பில் லக்னோ தொகுதியில் போட்டியிடுவார் என சில நாட்களுக்கு முன்பு சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் அறிவித்தார்.இதற்க சஞ்சய் தத்தின் தங்கையும், காங்கிரஸ் எம்.பியுமான பிரியா தத் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் வெளியிட்டார். சஞ்சய் தத் இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை. அவர் காங்கிரஸ் சார்பிலேயே போட்டியிடலாம் என்று கூறியிருந்தார் பிரியா.

இந்த நிலையில் தான் சமாஜ்வாடி வேட்பாளராகவே போட்டியிடப் போவதாக சஞ்சய் தத் விளக்கியுள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளராகத்தான் நான் தேர்தலில் போட்டியிடுவேன்.

பிரியா தத் என்னைப் பற்றி தவறாகப் பேசவில்லை என்று என்னிடம் தெரிவித்தார். ஒரு வேளை அவர் தவறாகப் பேசியிருந்தாலும் கூட நான் கோபித்துக் கொள்ள மாட்டேன். மன்னித்து விடுவேன். அவர் எனது செல்லத் தங்கைதானே.தடா சட்டத்தின் கீழ் நான் குற்றவாளியாக தண்டிக்கப்படவில்லை. எனவே நான் தடா குற்றவாளி அல்ல. ஆயுதச் சட்டத்தின் கீழ்தான் நான் தண்டிக்கப்பட்டேன். எனவே என்னைப் பற்றி செய்திகள் வெளியிடும்போது மீடியாக்கள் இதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கொலை வழக்கில் சிக்கி தண்டனை பெற்ற சித்து போட்டியிடும்போது, நான் போட்டியிடக் கூடாதா என்றார் சஞ்சய் தத்.பேட்டியின்போது உடன் இருந்த அமர்சிங், சஞ்சய் தத் காங்கிரஸ் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி விரும்பினால் அவரை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதேபோல கட்டாயம் போட்டியிட வேண்டும் எனவும் நாங்கள் அவரை வற்புறுத்த மாட்டோம் என்றார்.

பேட்டியின்போது அமர்சிங்கை தனது அண்ணன் என்று பாசத்துடன் அழைத்தார் சஞ்சய் தத்.

போஜ்பூரி போகும் மும்தாஜ்


தமிழில் சுத்தமாக வாய்ப்பிழந்து விட்ட மும்தாஜ், அடுத்து போஜ்பூரிக்கு குறி வைத்துள்ளார். புது ஆல்பத்தை ரெடி செய்து அங்கு அனுப்பி வைத்து விட்டு ரிப்ளைக்கு காத்திருக்கிறாராம்.
அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பார்கள். அதற்காக அரசியல்வாதிகள் எல்லோரும் அயோக்கியர்கள் என்று கூறக் கூடாது. அது ஒரு முதுமொழி. அதேபோல, தமிழ் சினிமா நாயகிகளின் கடைசிப் புகலிடமாக போஜ்பூரி திரையுலகம் திகழ்ந்து வருகிறது.

இங்கும், எங்கும் மார்க்கெட் பறி போனவர்கள், கடைசியில் போஜ்பூரியில் நுழைந்து கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.முதலில் நக்மா போனார். இன்று வரை அவர் அங்கு டாப் பேவரைட் நாயகியாக உள்ளார். அதேபோல ரம்பாவும் போஜ்பூரியில் சில படங்களில் நடித்தார்.

இந்த வரிசையில் விரைவில் இணையப் போகிறாராம் மும்தாஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எந்த மொழியிலும் மும்தாஜுக்கு இப்போது முகவரி இல்லாமல் போய் விட்டது.பல்கிப் பெருகி விட்ட அவரது உடல்வாகுதான் மார்க்கெட் குறைய முக்கிய காரணம் என பலரும் சொல்லவே, கஷ்டப்பட்டு தனது உடல் எடையைக் குறைத்து கன்ட்ரோல் ஆகியுள்ளார்.

இதையடுத்து மீண்டும் குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்ட விரும்பாத மும்தாஜ், போஜ்பூரி பக்கம் தனது கவர்ச்சிப் பார்வையை திருப்பியுள்ளார்.புதிதாக ஒரு கவர்ச்சிகரமான புகைப்பட ஆல்பத்தையும், வீடியோ ஆல்பத்தையும் ரெடி செய்து போஜ்பூரிக்காரர்களுக்கு அனுப்பி வைத்துள்ளாராம். விரைவில் ஓலை வரும் என்ற நம்பிக்கை உள்ளதாம்.

எனவே இனிமேல் மும்தாஜின் சேவை தமிழுக்கு இருக்காது என்று கூறப்படுகிறது.

பொருளாதார நெருக்கடிக் கவலையில் இது வேறு புதுக் கவலை!

பாட்டும் நடிப்பும் இரு கண்கள் : ஸ்ருதி கமல்


தமிழ்த்திரையுலகில் இப்போதும் 'சகலாகலா வல்லவராக' திகழ்பவர் கமல்.
அவரது வாரிசான ஸ்ருதி அப்பாவின் அடிச்சுவற்றில் வளர்ந்து கொண்டிருக்கிறார். கமலின் மூத்த மகளான ஸ்ருதி கமல்ஹாசன் ABCD பருவத்திலேயே இசை கற்க ஆரம்பித்தார். சில வருடங்களுக்கு முன் தனது அரங்கேற்றத்தால் பலரின் புருவத்தையும் உயரவைத்தார். பல வேளைகளில் இவரது இசைக்கு ஒன்ஸ்மோர் கேட்ட குரல்கள் ஏராளம். இப்போது நடிகையாகவும் அவதாரமெடுத்துள்ளார். 'லக்' இந்திப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இசை - நடிப்புன்னு இரண்டு ரூட்டுகளில் பயணம் செய்கிறீர்களே? நீங்கள் நேசிப்பது இசையா, நடிப்பா என்றால், "இரண்டும் என் இரண்டு கண்கள்" என கேள்வி கேட்பவர்களின் வாயை அடைக்கிறார்.

சமீபத்தில் அவர் அளித்த மினி பேட்டி...

"இம்ரான் கான ஜோடியாக 'லக்' இந்தி படம் மூலம் அறிமுகமாகிறேன். என் பெற்றோர் வழியில் செல்வீர்களா? என்கிறார்கள். நான் இசை கற்றேன். நடிப்புலக குடும்பத்தில் பிறந்ததால் அது என் பிறவியிலேயே ஊறி இருக்கிறது. நடிப்புதான் தொழில் என்ற குடும்பத்தில் பிறந்துவிட்டு நடிக்க முடியாது என்று மறுக்க முடியாது. இசைக்குத்தான் முக்கியத்துவம் தருவீர்களா? என்கின்றனர். இசையில் எனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறேன். இதையடுத்து நடிப்புத் துறைக்கு செல்ல தயாராகி விட்டேன். தமிழ், இந்தி படங்களில் பாடிக்கொண்டே நடித்தவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். நானும் பாடிக்கொண்டே நடிப்பேன். கமல்ஹாசன் என்ற சாதனை நடிகரின் மகளாக இருப்பதால் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். என்னால் என்ன முடியுமோ அதை நிறைவாகத் தருவேன். என் தந்தையிடம் நிறைய கற்றிருக்கிறேன்" என்றார்.

நிம்மதியடைந்தேன் : விருது பற்றி ரஹ்மான் பேட்டி


கோல்டன் குளோப் விருது பெற்று சென்னை திரும்பிய ஏ.ஆர்.ரஹ்மான் விருது பெறுவதற்கு முந்தைய தருணங்களை பகிர்ந்துகொண்டார்.
கோல்டன் குளோப் விருது பெற்று திரும்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 'ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற ஆங்கில படத்துக்கு இசை அமைத்தற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு "தங்க பூமி" (கோல்டன் குளோப்) விருது அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸ் நகரில் கடந்த 13-ம் தேதி வழங்கப்பட்டது. ஆஸ்கார் விருதுக்கு இணையானதாக கருதப்படும் இந்த விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றார்.

விருது பெறுவதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஏ.ஆர்.ரஹ்மான், விமானத்தில் ஜெர்மனி வழியாக நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை திரும்பினார். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதியில் ரஹ்மானை வரவேற்கும் வகையில் சென்னை சங்கமத்தை சேர்ந்த சுமார் 100 கலைஞர்கள் நள்ளிரவு 12 மணி முதல் பொய்க்கால் குதிரை, காவடி ஆட்டம் உள்ளிட்ட கிராமிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களும் ஏராளமான ரசிகர்களும் ரஹ்மானை உற்சாக்ததுடன் வரவேற்றனர்.

சென்னை சங்கம் நிகழ்ச்சியின் ஒருங்கினைப்பாளர் ஜெகத் கஸ்வர்ராஜ் மற்றும் ரசிகர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

விருது பெற்றது குறித்து ரஹ்மான் கூறியதாவது...

" 'ஸ்லம்டாக் மில்லியனர்' இசைக்கான படமல்ல. இருந்தாலும் இதில் இசை முக்கியத்துவம் பெற இயக்குனர் டேனியல் பெய்லே முக்கிய காரணம். அவர் என்னிடம் இசையை வாங்கிய விதம், படக்குழுவின் உழைப்பு, இது எல்லாம்தான் இந்த விருதுக்கு காரணம்.

இந்த விருது விழா நடைபெறுவதற்கு ஒரு நாள் முன் தூக்கம் கெட்டுவிட்டது. மறுநாள் விழாவில் எனது பெயரை அறிவித்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டேன்"

மிடில்கிளாஸ் லுக்...! ஹீரோவுக்கு இயக்குனர் அட்வைஸ்


த்தோ வந்திட்டேன்யாங்கிற மாதிரியே இருந்தது அருண் விஜயின் மலை மலை ஸ்டில்களை பார்க்கும்போது. ‘எப்படியாவது ஜெயிச்சுடுய்யா’ என்று இத்தனை காலமும் தாவாங்கட்டையை பிடித்து கெஞ்சாத குறையாக அவரை உற்சாகப்படுத்தி வந்த விஜயகுமார் பேமிலி முகத்தில், அழுத்தமான நம்பிக்கை!

உடல் இளைத்து, கன்னம் குறைந்து மிடில் கிளாஸ் லுக்கிற்கு வந்துவிட்டார் அருண் விஜய். இப்படி இருந்தால்தான் ஜனங்க ரசிக்கிறாங்களாம். படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேஷின் அட்வைஸ் இது. டான்ஸ், பைட், நடிப்பு, ஹைட், வெயிட் இப்படி லிஸ்ட் போட்டால், எதிலும் குறையில்லை நம்ம ஹீரோவுக்கு. பிறகெப்படி இந்தியன் டீம் கேட்ச் பிடிப்பது மாதிரியே முக்கியமான இடங்களில் கோட்டை விடுகிறார் அருண்?

இந்த சந்தேகம் அருணின் மாமனார் டாக்டர் மோகனுக்கும் வர, மேட்சை சொந்த செலவிலேயே நடத்தி விடுவதென்று முடிவு செய்துவிட்டார். டாக்டர் தொழிலில் இருந்து கொண்டே, குவாரி பிசினசுக்கு தாவினாராம். “எதுக்குய்யா வேண்டாத வேலை?” என்று சொன்னவர்களின் முகத்தில் கரியை பூசும் படி அங்கேயும் வெற்றி. இப்போது சினிமா. “எதுக்குய்யா இந்த வேலை?” என்றார்களாம். கரி பூச தார் குழைத்துக் கொண்டிருக்கிறார் மோகன்.

தை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டு என்பதால், மலை மலை சார்பாக ஒரு காலண்டரை வெளியிட்டார் மோகன். முதல் பக்கத்திலேயே பளிச்சென்று சிரித்துக் கொண்டிருந்தார் அருண் விஜய். தமிழகத்தில் முன்னணி நாளிதழ்கள் வெளியிடுகிற காலண்டர்களில் இத்தனை காலமும் டாப் டென் ஹீரோக்கள் மட்டுமே இடம் பெறுவார்கள். ஒரு முறை கூட அருண் விஜய்க்கு அந்த அதிர்ஷ்டம் வாய்த்ததில்லை. இப்போது அதையும் மருமகனுக்காக செய்திருக்கிறார் டாக்டர் மோகன். இவர் போட்ட பிள்ளையார் சுழி, அடுத்தடுத்த வருடங்களில் வழக்கமாக போடுவார்களே காலண்டர்? அதில் அருண் விஜயின் படத்தையும் இடம் பெற செய்யும் என்று நம்புவோமாக!

நடிக்கிற நாயி கடிக்காது... நம்பி கெட்டார் நடிகர்!


யதார்த்த இயக்குனர்களின் படங்களுக்கு இனி கால்ஷீட் இல்லை என்று Yogiஅறிவித்தாலும் ஆச்சர்யமில்லை. அந்தளவுக்கு புண்பட்டு போயிருக்கிறது நாய் ஒன்று! யோகி படத்தில் ஒரு காட்சி. பத்திரிகையாளர் தேவராஜ் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவரை வாசலில் நின்று யாரோ அழைப்பது போலவும், யார் என்று பார்க்க வாசலுக்கு போகும் போது இவர் வளர்க்கும் நாய் செல்லமாக மறிப்பது போலவும் காட்சி. கையிலிருக்கிற கட்டையால் நாயின் மண்டையில் தாக்கிவிட்டு வாசலுக்கு போக வேண்டும் தேவராஜ்.

ரிகர்சல் ஓ.கே! “நாயின் மண்டையில் நிஜமாவே அடிச்சிடுங்க. அது குலைக்கவே இல்லையே” என்றார் இயக்குனர் சுப்பிரமணிய சிவா. பிறகென்ன...? லைட்ஸ் ஆன். வாசல் பக்கம் குரல் கேட்க, எழுந்து நடந்தார் தேவராஜ். நாயும் மறித்தது. கையில் இருந்த கட்டையால் நாயின் மண்டையில் ஒரே போடு.

கோபம் தலைக்கேறியது நாயாருக்கு. சில அடி தூரம் கூட போயிருக்க மாட்டார் தேவராஜ். பாய்ந்து சென்று அவரது கை, கால்களை கடித்து குதற ஆரம்பித்தது. குரைக்கிற நாய் கடிக்காது என்பது மாதிரி, நடிக்கிற நாயும் கடிக்காது என்று நம்பிக் கொண்டிருந்த தேவராஜின் எண்ணத்தில், கோர பற்களால் கோலம் போட்டார் மிஸ்டர் வள்ள்ள்ள்ள்ள்!

அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள். தொப்புளில் ஊசி போடுவார்களோ என்ற அச்சம் வேறு (நடிகைகளின் தொப்புளை பற்றி எத்தனை முறை எழுதியிருப்பார்?) நல்லவேளை, கையில் ஊசிபோட்டு அனுப்பியிருக்கிறார்கள். மண்டையில் அடிவாங்கிய நாய்க்கும் மருத்துவ காப்பீடு வழங்கியிருக்கிறது யூனிட்!

நல்ல ரெஸ்ட்டில் இருக்கிறார்கள் நாயும், தேவராஜும்!

இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டேன் -நந்தலாலா இயக்குனர் மிஷ்கின்


நியாயமாக ‘நொந்தலாலா’ என்றுதான் டைட்டில் வைத்திருக்க வேண்டும் -போலிருக்கிறது. அப்படி ஒரு போராட்டத்திற்கு பிறகுதான் நந்தலாலாவை உருவாக்கியிருக்கிறார் மிஷ்கின். “சித்திரம் பேசுதடி படத்திற்கு பிறகு அடுத்த படமாக இதைதான் எடுக்கணும்னுதான் நினைச்சேன். ஆனால் கதையை கேட்ட ஹீரோக்களும் சரி, தயாரிப்பாளர்களும் சரி, வேறு ஏதாவது கதை இருந்தா சொல்லுங்கன்னு சொல்லிட்டாங்க. வேற வழியில்லாமதான் அஞ்சாதே படத்தை எடுத்தேன்”

“இந்த முறை சும்மா கேட்டு பார்ப்போமேன்னுதான் ஐங்கரன் ஆபிசுக்கு போனேன். நான் கதை சொல்ல முன்வந்த போதும், “வேணாம்... உங்க மேல் நம்பிக்கை இருக்கு” என்று சொல்லி இந்த படத்தை எடுக்க முன்வந்தாங்க கருணாமூர்த்தியும், அருண்பாண்டியனும்! இரண்டு பேரையும் என்னுடைய தாயாக நினைக்கிறேன்” என்றார் மிஷ்கின். இந்த படத்திற்கு பிறகு 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இன்னொரு படத்தையும் மிஷ்கினுக்கு வழங்கியிருக்கிறது ஐங்கரன்.

நந்தலாலாவுக்காக ஐந்து பாடல்களை போட்டுக் கொடுத்தாராம் இளையராஜா. இதில் இரண்டைதான் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் மிஷ்கின். “இதற்காக இசைஞானியிடம் மன்னிப்பு கேட்டேன். ஏன்னா படத்திலே இரண்டு இடத்திலேதான் பாடலை பயன்படுத்த வாய்ப்பு இருந்திச்சு. மற்ற பாடல்கள் ஆடியோ சிடி யில் இருக்கு” என்றார்.

தமிழ்சினிமா வரலாற்றில் இவ்வளவு சிம்பிளாக ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவும் நடந்ததில்லை. ஆர்ப்பாட்டமில்லாமல், உள்ளத்தை தொடும்படி அமைந்திருந்தது விழா, மிஷ்கினின் படங்களைப் போலவே!

இந்து மதத்திற்கு எதிரான படமா? நான் கடவுளும், சர்ச்சையும்


இளையராஜாவின் இசைக்கூடம். திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது நான் கடவுள். படத்தை ராஜா பார்க்க, ராஜாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார் பாலா. டென்ஷன்...டென்ஷன்... ஒவ்வொரு விரல் நகமாக கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார் பாலா! படம் முடிந்ததும் விருட்டென்று எழுந்து தனது அறைக்குள் போய்விடுகிறார் இசைஞானி. அவ்வளவுதான், பல மணி நேரங்கள் யாரையுமே அவர் சந்திக்கவில்லை பாலா உட்பட!

மீண்டும் இசைஞானியை சந்திக்கிற வரை ஒரு பதற்றம் இருந்ததே பாலாவிடம், அதே பதற்றத்தை ரிலீஸ் நேரத்திலும் இவருக்கு கொடுக்க திட்டமிட்டிருக்கின்றன சில இந்துத்வா அமைப்புகள். "முஸ்லீம் நடிகரான ஆர்யாவை வைத்து இந்து அமைப்புகளை இழிவு படுத்தி விட்டார் பாலா. சாந்த சொரூபிகளான சாமியார்களை கஞ்சா சாமியார்களாக உருவகப்படுத்தி, அவர்களை கொலைகாரர்களாகவும் சித்தரித்திருக்கிறார். இது இந்து மதத்தையே இழிவு படுத்துகிற செயல்" இதுதான் இந்துத்வா அமைப்பை சேர்ந்தவர்களின் குற்றச்சாட்டு.

நான் கடவுள் இந்து மத கருத்துக்களுக்கு எதிரான படமா? என்ற கேள்வியோடு பாலாவை சந்திக்க முயன்றோம். கலர் கரெக்ஷன், பின்னணி இசையை மெருகூட்டுதல் போன்ற வேலைகளில் அவர் பிசியாக இருப்பதால் படத்தில் முக்கிய பணியாற்றிய சிலர் நம்மிடம் பேச முன் வந்தார்கள்.

"எழுத்தாளர் ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை ஒரு ஆராய்ச்சி பார்வையோடு விளக்குகிற நாவல் அது. அதில் ருத்ரன் என்ற கேரக்டரை நுழைத்து ஒரு சிவ தாண்டவமே ஆடியிருக்கிறார் பாலா. ஆரம்ப காலங்களில் நாத்திகராக இருந்தாலும், சித்தர்களின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பாலா. இவருக்கு பிடித்த சித்தர் ஒருவர் எழுதிய நூலின் பெயர்தான் 'நான் கடவுள்'. அதைதான் தனது படத்திற்கும் தலைப்பாக வைத்திருக்கிறார்"

"கதையையும், திரைக்கதையையும் மட்டுமே பாலா எழுதியிருக்கிறார். வசனம் ஜெயமோகனுடையது. இந்துத்வா அமைப்பை சேர்ந்தவர்கள் முதலில் ஜெயமோகன் யார் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. எழுத்தாளர்களின் மத்தியில் ஜெயமோகன் ஆர்எஸ்எஸ் அனுதாபி என்ற கருத்து அழுத்தமாகவே இருக்கிறது. அப்படிப்பட்டவர் எப்படி இந்து மதத்திற்கு எதிரான வசனங்களை எழுதுவார்?" என்று எதிர் கேள்வி எழுப்பினார்கள்.

"ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைதான் நான் கடவுள். அது மட்டுமல்ல, ஒரு தமிழ் படத்திற்கு முதன் முதலில் சமஸ்கிருதத்தில் 'அஹம் பிரம்மாஸ்மி' என்று சப் டைட்டில் வைத்திருப்பதும் இந்த படத்தில்தான். ஒரு முழு பாடலையும் சமஸ்கிருத மந்திரத்தையே பாடலாக வைத்திருக்கிறார் இசைஞானி. அவரே பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்... என்ற ஒரு பக்தி பாடலையும் பாடியிருக்கிறார். இவ்வளவு விஷயங்களும் படத்தை பார்த்தால்தானே தெரியும்? அப்படி பார்ப்பதற்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்தால் எப்படி?" என்றார்கள் ஆவேசமாகவும், வருந்தம் தோய்ந்த குரலிலும்.

படத்தை பார்த்து பிரமித்து போயிருக்கும் சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவரிடம் பேசினோம். "எங்க ஆர் ஓ வுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்" என்ற அச்சத்தோடு பேச ஆரம்பித்தார் அவர். "நாங்க எல்லாருமே இந்த படத்தை பார்க்க ரொம்ப ஆர்வமாக இருந்தோம். இத்தனை நாட்கள் ஆன பிறகும், படம் பார்த்த பிரமிப்பு எங்களை விட்டு போகவே இல்லை. சண்டைக்காட்சிகள் மிகவும் அச்சமூட்டும் படியாக இருந்ததால் யு/ஏ சர்டிபிகேட் கொடுத்தோம். மற்றபடி எந்த காட்சிகளையும் வெட்டும்படி நிர்பந்திக்கவில்லை" என்றவர், படத்தின் கதையையும் சுருக்கமாக சொல்லி முடித்தார்.

"காஞ்சிபுரம் அருகில் குடியிருக்கும் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தை உங்களிடம் வளர்ந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று ஜோதிடர் சொல்ல, குழந்தையை காசியில் விட்டு விட்டு வருகிறார்கள். அவன் அங்குள்ள சாமியார்களிடம் வளர ஆரம்பிக்கிறான். பாஷையிலிருந்து அனைத்து பழக்க வழக்கங்களையும் சாமியார்களிடம் கற்றுக் கொள்கிறான் சிறுவன். அவனை வாலிப வயதில் மீண்டும் சந்திக்கிறார் அவனது அப்பா. பிள்ளை இப்படி இருக்கிறானே என்ற அதிர்ச்சியில் மறுபடியும் சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். இங்கு வருபவன், குழந்தைகளை கடத்தி முடமாக்கி பிச்சையெடுக்க வைக்கிற வில்லன்களுக்கு தானே கடவுளாகி தண்டனை கொடுக்கிறான். இதில் பூஜாவும் குழந்தை பருவத்தில் கடத்தி வரப்பட்டு வில்லன்களால் கண்கள் குருடாக்கப்பட்ட பெண். அவளையும் அந்த கூட்டத்திலிருந்து மீட்கிறான் என்று முடிகிறது கதை. இதில் வருகிற க்ளைமாக்சை நான் சொல்வது தர்மமில்லை" என்று முடித்துக் கொண்டார் அந்த சென்சார் போர்டு உறுப்பினர்.

மேலும் அவரது வாயை கிளறியபோது சில தகவல்கள் கிடைத்தன. நர மாமிசம் சாப்பிடுபவர்களை கொடூரி என்பார்களாம். இந்த கொடூரியாகவும் ஒரு காட்சியில் வருகிறாராம் ஆர்யா. பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் ஓரிடத்தில் கூடும் கும்பமேளா நிகழ்ச்சியில், எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யாமல் கேமிராவோடு ஊடுருவி பல காட்சிகளை எடுத்திருக்கிறார்களாம். "இந்திய சினிமா எதிலும் இடம் பெறாத அபூர்வ காட்சிகள் அவை" என்றார் அவர்.

கடந்த மூன்று வருடங்களாக நான் கடவுளை உருவாக்கி வருகிறார் பாலா. ஆனாலும், படப்பிடிப்பு நடந்தது மொத்தம் 369 நாட்கள்தானாம். ஆர்யா, பூஜா தவிர்த்து படத்தில் 50க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களில் பலர் நிஜமான மன நோயாளிகள். ஊடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள். இவர்களை நடிக்க வைப்பதற்கு பெரும் பிரயத்தனம் எடுத்துக் கொண்டாராம் பாலா. இதன் காரணமாகவும், பெரிய குளம் ஏரியாவில் எப்போதாவது தலை காட்டும் வெயிலாலும்தான் படப்பிடிப்பு தாமதமானது என்கிறார்கள் யூனிட்டில்.

ஒவ்வொரு நாளும் பாலாவிடம் அடி, உதை, வாங்கிக் கொண்டு ஒரு தவம் மாதிரி நான் கடவுளை முடித்துக் கொடுத்திருக்கிறார் ஆர்யா. தினமும் மூன்று வேளை தொழுகிற வழக்கம் உள்ள ஆர்யா, இவ்வளவு களேபரத்திற்கும் நடுவிலும் தனது தொழுகையை தொடர்ந்தாராம். இதற்காக அவருக்கு நேரத்தையும் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் பாலா.

"அடிப்படையில் ஒரு முஸ்லீமாக இருந்தாலும், மூன்று வருடங்களாக தாடியையும், மீசையையும் வளர்த்துக் கொண்டு, குளிரிலும், பனியிலும் நைந்து தேய்ந்துதான் ஒரு இந்து சாமியாராக வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஆர்யா. டீ, காபி குடிக்க வேண்டும் என்றாலும், அவர் தனது மீசை தாடியை ஒதுக்கிக் கொண்டு குடிக்கிற அவஸ்தையை பக்கத்தில் இருந்து பார்ப்பவர்களால் மட்டுமே உணர முடியும். இந்த படத்திற்காக ஆர்யா இழந்த படங்களும் ஏராளம். அப்படிப்பட்டவரை பாராட்டுவதை விட்டு விட்டு பழி சுமத்துவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?" என்கிறார்கள் பாலாவின் யூனிட்டில்.

படத்தின் தயாரிப்பாளரான சிவஸ்ரீ சீனிவாசனை சந்தித்தோம். "எந்த மதத்தையும் இழிவு படுத்துகிற படம் இல்லை நான் கடவுள். ஆர்யா முஸ்லீம். அவர் எப்படி இந்து சாமியாராக நடிக்கலாம்? என்று கேள்வி எழுப்புகிறவர்களுக்கு எனது பதில் இதுதான். பிரேம் நசீர் முஸ்லீம்தான். இந்து மதத்தை உயர்த்திப்பிடிக்கும் எத்தனையோ பாத்திரங்களில் அவர் நடிக்கவில்லையா? மதத்தால் முஸ்லீமான குஷ்பு, எத்தனையோ படங்களில் அம்மன் வேடத்தில் நடித்து இந்து மதத்திற்கு பெருமை சேர்க்கவில்லையா? கலைக்கு ஏது மதமும், ஜாதியும்?"

"சென்சார் அமைப்பினர் ஒரே ஒரு முறைதான் படத்தை பார்த்தார்கள். மறு தணிக்கைக்கு வரச் சொல்லவே இல்லை. மனமார எங்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், எவ்வித சிக்கலும் இல்லாமல் அனுமதி சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும். படத்தை தயாரித்த எனக்கும் மிகுந்த கடவுள் நம்பிக்கை உண்டு. யாரும் யாரையும் இழிவுபடுத்த அனுமதிக்க மாட்டேன் என்பதை ஸ்டிராங்காகவே சொல்லிக் கொள்கிறேன்" என்றார்.

சரி, முதல் பாரா சஸ்பென்சுக்கு வருவோம். இளையராஜா பாலாவிடம் என்னதான் சொன்னார்? ஒரு முழு நாள் அமைதிக்கு பிறகு அவர் சொன்னது இதுதான். "என்னாலே பேசவே முடியலே. இந்த படத்தை உலகமே கொண்டாட போவுது பாரு...!"

Thursday, January 15, 2009

புரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன்!


“You offended my family and offended the shaolin temple” என்று வில்லனை நோக்கி நிலைகுத்திய கூர்பார்வையுடன் கூறிவிட்டு, அவனோடு மோதுவதற்கு தயாராக, தனக்கே உரித்தான சண்டைத் துவக்க பாணியில் புரூஸ் லீ காலை விரித்துவைத்து, தனது கைகளை உயர்த்தியதும் திரையரங்குகிளில் விசில் சத்தம் காதைப் பிளந்தது.

எண்டர் த டிராகன் படத்தின் இறுதிக் காட்சியில் வில்லனைத் துரத்திக்கொண்டு புரூஸ் லீ துரத்திச் செல்ல, அவன் தனக்குப் பாதுகாப்பான கண்ணாடி அறைக்குள் புகுந்துவிட, மிக எச்சரிக்கையாக அவனை கண்டுபிடித்ததும், நேருக்கு நேர் பார்த்து இவ்வாறு கூறிவிட்டு அவர் செய்த சண்டைக் காட்சியை பார்த்த எந்த ரசிகனும் மறந்திருக்க முடியாது.

சென்னை ஆனந்த திரையரங்கில் எண்டர் த டிராகன் படம் வெளியிடப்பட்டபோது புரூஸ் லீ உயிரோடு இல்லை. 1976ஆம் ஆண்டில் இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்டது. ஆனால் புரூஸ் லீ 1973ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார் என்ற உண்மை அப்போது எந்த ரசிகருக்கும் தெரியாது.
ஓடு ஓடு என்று ஓடியது எண்டர் த டிராகன். முதல் தடவை திரையிடப்பட்டு 25 வாரங்கள் ஓடியதை விடுங்கள். மீண்டும் திரையிடப்பட்டபோது 100 நாட்கள் ஓடியது. இந்தியாவில் இந்தப்படம் வசூலைக் குவிக்காத நகரமே இல்லை என்றானது.

ஒரு சாதாரணக் கதைதான் (ஒரு விதத்தில் பழி வாங்கும் கதையும் கூட) எண்டர் த டிராகன். ஹாங்காங்கிற்கு அருகில் உள்ள ஹான்ஸ் தீவை சொந்தமாக வைத்துக்கொண்டு போதைப்பொருள் தயாரித்து அதனை உலகளாவிய அளவில் கடத்தி விற்றுவந்தவனை ஆதாரப்பூர்வமாக பிடிக்க முயன்ற ஹாங்காங் காவல்துறை பல உளவாளிகளை அனுப்புகிறது. அவர்களில் பலர் பெண்கள். ஓரளவிற்கு உண்மை தெரிகிறது. உண்மையை அறிந்து வெளியே செல்ல முயன்றவர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் - தற்காப்புக் கலையில் கைதேர்ந்த - அவனை முடிக்க தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கும் வீரனை தேர்ந்தெடுத்து அனுப்புகிறது ஹாங்காங் காவல் துறை. அவர்தான் புரூஸ் லீ.

ஹான்ஸ் தீவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தற்காப்பு கலைப் போட்டியில் பங்கேற்க புரூஸ் லீ அனுப்பப்படுகிறார். உலக அளவில் சிறந்த விளங்கிய கராத்தே, பாக்சிங் உள்ளிட்ட பல கலைகளில் சிறந்த வீரர்களும் கலந்துகொள்ள வருகின்றனர்.

போட்டியின் முதல் சுற்றிலேயே, தனது தங்கையை கற்பழித்துக் கொன்றவனும், வில்லனின் மெய்க்காப்பாளனுமாகிய கராத்தே வீரனை (பாப் வால்) தோற்கடிக்கிறார் (கண்ணிமைக்கும் நேரத்தில் குத்துகள் விழுகின்றன) புரூஸ் லீ. தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத அவன் புரூஸ் லீயைக் கொல்ல பாட்டில்களை உடைத்துக்கொண்டு குத்துவதற்குப் பாய, அவனுடைய கழுத்தில் வெட்டு உதை கொடுத்து கொன்றுவிடுகிறார் புரூஸ் லீ. அவனைக் கொன்ற நிலையில், குரூர முகத்துடன் வில்லனை ஒரு பார்வையும் பார்த்துவிட்டுச் செல்வார். இந்தக் காட்சி திரையில் ஓடும்போது திரையரங்கில் மயான அமைதி நிலவியது.

வில்லனின் போதை சாம்ராஜ்யத்தின் ரகசியங்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு இரவும் புரூஸ் லீ ரகசிய உளவில் ஈடுபடுவதும், ஒரு நாள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அங்கிருந்த வில்லனின் காவலாளிகளைப் பந்தாடுவதும், ஏராளமானவர்களை தன்னைச் சூழ்ந்துவிட்ட நிலையில், தான் மறைத்து வைத்திருந்த நன் சாக்கு ஆயுதத்தை எடுத்து கையிலெடுத்து கண்ணில் பிடிபடாத வேகத்தில் சுழற்றுவதும், பிறகு அவர்களை அடித்து வீழ்த்திவிட்டு வில்லனிடம் சிறைபடுவதும் அபாரமான காட்சிகள். அதுவரை திரைப்பட ரசிகர்கள் பார்த்திராதவை.

அவர் பாம்பு ஒன்றைப் பிடித்து பைக்குள் அடக்கிக்கொள்வதும், தனக்கு ஒத்தாசையாக அதனைப் பயன்படுத்துவதும் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தின.

இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த கராத்தே வீரர் (ஜிம் கெல்லி) அருமையாக சண்டையிட்டு வெற்றி பெற்ற பிறகு வில்லனால் அடித்துக் கொல்லப்படுவதும், அதனைக் கண்டு மற்றொரு போட்டியாளர் (ஜான் சாக்சன்) மிரள்வதும் ரசிகர்களை அச்சுறுத்திய காட்சிகள்.

பிறகுதான் உச்சக் கட்டம். புரூஸ் லீயும், ஹான்ஸ் (இவர் புரூஸ் லீயின் மாமன்தான்) மோதல் காட்சி. துண்டிக்கப்பட்ட கையில் எஃகு ஆயுதங்களைத் தரித்து ஹான்ஸ் சண்டையிட, அதில் சிக்காமல் லாவகமாக விலகி அவரை புரூஸ் லீ அடித்து வீழத்த ஒன்றரை மணி நேரத்தில் படம் முடிந்துவிடுகிறது. பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்தனர். 30 தடவைப் பார்த்தேன், 40 தடவைப் பார்த்தேன் என்று பெருமையாக செல்லிக்கொள்ளும் ரசிகர்கள் ஏராளம்.

இந்திய ரசிகர்கள் நெஞ்சில் புரூஸ் லீயின் வடிவமும், அவர் சண்டையிட்ட விதமும் மறையாமல் இன்றும் வாழ்கிறது.

இப்படத்தில் லேலோ ஸ்கீஃபனின் இசை மிக அற்புதமானது. குறிப்பாக, போட்டியாளர்கள் ஹாங்காங் துறைமுகத்தில் படகு பிடித்து தூரத்தில் நிற்கும் பாய்மரக் கப்பலிற்கு செல்லும் காட்சியில் அவருடைய இசையமைப்பு மிக அழகானது.

தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே இத்திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆக்ஷன் படங்களை விரும்பிப்பார்க்கும் எம்.ஜி.ஆர். ரசிகர்களை புரூஸ் லீயின் அதிரடி மிகவும் ஈர்த்தது.

தற்காப்புக் கலைஞன் ஒருவனின் திறமையில் நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பின்னாளில் ஏராளமான சண்டைப்படங்களை தயாரிக்க வைத்தது. ஒரு கால் நூற்றாண்டுக் காலத்திற்கு ஹாங்காங்கில் பல சண்டைத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் வித்திட்டது எண்டர் த டிராகன். புரூஸ் லீ!

பின் குறிப்பு:


காலத்தால் அழியாத அந்த கலைஞன் மரணமடைந்த 35வது நினைவு நாள் இன்று. தனது 32வது வயதில் 1973ஆம் ஆண்டில் இறந்த புரூஸ் லீ நடித்த வே ஆஃத டிராகன், பிக் பாஸ், பிஸ்ட் ஆஃப் ஃபியூரி, கேம் ஆஃப் டெத் ஆகியன குறிப்பிடத்தக்க படங்கள்.

குங் ஃபூ கலையில் தேர்ந்தவராக இருந்த புரூஸ் லீ, ஜீத் குனி டோ என்ற தற்காப்புக் கலையை வடிவமைத்து அதனை கற்றுக்கொடுத்து வந்தார். இக்கலையை அவரிடம் பயின்ற பலர் தற்காப்புப் கலைகளில் சிறந்த விளங்கியவர்களான பாப் வால், ஜிம் கெல்லி, சக் நாரிஸ் ஆகியோர்.

எண்டர் த டிராகன் திரைப்பட வருகைக்கு பின்னர்தான் இந்தியாவில் கராத்தே கலையும் பலமாக வேரூன்றத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஆஇஈ - விமர்சனம்


ஊ‌ரில் பெ‌ரிய அந்தஸ்தில் இருக்கும் பிரபு பட்டணத்தில் படித்த தனது மகள் மோனிகாவுக்கு சம அந்தஸ்தில் உள்ள ஹனிஃபாவின் மகன் அரவிந்தை திருமணம் செய்ய தீர்மானிக்கிறார். இரு குடும்பமும் தட்டு மாற்றிக் கொள்கிறது.

இந்நிலையில் அரவிந்தை சந்திக்கும் மோனிகா, பட்டணத்தில் சந்தீப்பிடம் தான் ஏமாந்த கதையை கூறி, களங்கப்பட்ட நான் உங்கள் மனைவியாக முடியாது என்கிறார்.

நிச்சயித்த பெண்ணின் காதலனைத் தேடி பட்டணம் செல்லும் அரவிந்த் கையோடு நவ்தீப்பையும் ஊருக்கு அழைத்து வருகிறார். ஒருபுறம் மோனிகா - அரவிந்த் கல்யாண ஏற்பாடுகள் நடக்க, ஊருக்கு வெளியே மோனிகா - நவ்தீப் ஜோடி காதல் செய்கிறது. கூடவே அரவிந்த் - சரண்யா மோகன் (பிரபுவின் தம்பி மகள்) ஜோடி.

இந்த காதல் குழப்பம் எப்படி சுபத்தில் முடிகிறது என்பது கதை.

பிரபுவுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதுதான் வேலை. பத்து பதினைந்து வெள்ளைக்காரர்கள் சுற்றி வருகிறார்களே தவிர சிகிச்சையை பற்றி அவர் சிந்திப்பதாகவே தெ‌ரியவில்லை. மகளை பற்றி அவர் பேசும் போதெல்லாம் வெள்ளையும் சொள்ளையுமாக பத்து பேர் பின்னால் நின்று ஆமாம் சாமி போடுகிறார்கள். வேலை வெட்டி இல்லாத அவுக யாரு சாமி?

பிரபுக்கு வெள்ளை சொள்ளை என்றால் ஹனிஃபாவை சுற்றி மொட்டையும் பட்டையுமாக பத்து பேர். நண்பர்களாம். இருவர் வீட்டு பெண்களும் தூங்கி எழும்போதும் கழுத்து நெக்லசும், காஞ்சிபுரம் பட்டுமாக காட்சியளிக்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த கிராமம் இப்படி இருக்கிறது?

களம் செயற்கையாக இருக்கையில் கதாபாத்திரம் மட்டும் எப்படி யதார்த்தமாக இருக்கும்? நான்கு இளசுகளும் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ஆறுதல். சரண்யா மோகன் தனது அப்பாவி நடிப்பை இதிலும் ‌ரிப்பீட் செய்திருக்கிறார். இப்படியே போனால் விரைவில் ‌ரிட்டையர்ட் ஆக வேண்டியதுதான்.

ஹனிஃபா தனது லொள்ளு நடிப்பால் ‌ஜில்லு ஏற்றுகிறார். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கும் இன்னொருவர் மனோரமா. நவ்தீப, அரவிந்த், மோனிகா நடிப்பில் முதிர்ச்சி தெ‌ரிகிறது.

விஜய் ஆண்டனியின் இசையில் அஆஇஈ சொல்லித் தருதே வானம் பாடல் மறுபடியும் கேட்கத் தூண்டும் ரகம். அருள்தாஸின் ஒளிப்பதிவு பரவாயில்லை.

இயக்குனர் சபாபதி தட்சணாமூர்த்தி ஒரே நேரத்தில் மூன்று படங்கள் இயக்குகிறாராம். அஆஇஈ பார்த்தால் அப்படி தெ‌ரியவில்லை. குறைந்தது முந்நூறு படங்களாவது இருக்கும்போல் தெ‌ரிகிறது.

கள்ளுக்கடையில் நயனதாரா ரகளை!


தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை நயனதாரா, தனது உத்தரவையும் மீறி தன்னை வளைத்து வளைத்துப் படம் பிடித்த கள்ளுக்கடை உரிமையாளரின் கேமராவை வாங்கி கீழே போட்டு உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோட்டயம் நகரில் நடந்த தனியார் நிகழ்ச்சிக்கு நயனதாரா அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக கோட்டயம் வந்த நயனதாரா அங்குள்ள ஹோட்டலில் தங்கினார்.

பின்னர் காலை உணவுக்காக ஹோட்டல் வளாகத்தில் உள்ள ரெஸ்டாரென்டுக்கு அவர் போனார். அப்போது நயனதாராவைப் பார்த்ததும் ஏராளமான பேர் அங்கு கூடி விட்டனர்.

அப்போது ஒருவர் (கள்ளுக்கடை நிர்வாகியாகம்) நயனதாராவை அருகில் பார்த்த உற்சாகத்தில், தனது கேமராவால் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார்.

இதைப் பார்த்த நயனதாரா, போட்டோ எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த கள்ளுக்கடை உரிமையாளரோ, வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தார்.

இதைப் பார்த்து ஆத்திரமடைந்த நயனதாரா, அவரிடம் சென்று கேமராவைப் பிடுங்கி கீழே போட்டு உடைத்தார். மேலும் நயனதாராவுடன் வந்திருந்த பாதுகாவலர்களும் அவரை அடிக்கப் பாய்ந்தனர்.

இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் குறுக்கே பாய்ந்து அனைவரையும் விலக்கி விட்டனர். பின்னர் நயனதாரா பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். இருப்பினும் நயனதாரா புகார் ஏதும் கொடுக்காததால், கள்ளுக்கடை உரிமையாளர் கைது செய்யப்படவில்லை.

Wednesday, January 14, 2009

வில்லு - விமர்சனம்



இந்தி சோல்ட்ஜ‌‌‌ரின் மேலோட்டமான தழுவலாக வெளிவந்திருக்கிறது, விஜய் - பிரபுதேவா கூட்டணியின் இரண்டாவது படமான வில்லு. தந்தைக்கு ஏற்பட்ட இழுக்கை தனயன் துடைத்தெறியும் எளிமையான கதை.

ஒருவ‌‌‌ரி கதைதானே என்று உள்ளே நுழைய முடியாது. படத்தின் சஸ்பென்ஸ் பல கிளைக்கதைகளாக படத்தை கூறுபோட்டிருக்கிறது. நேர்மையான ராணுவ மேஜர் சரவணன். அவர் தங்களது தேசத்துரோக செயலுக்கு இடையூறாக இருப்பதால் நான்கு ராணுவ அதிகா‌‌‌ரிகள் அவரை சுட்டுக் கொல்கிறார்கள்.
webdunia photo WD

அத்துடன் சரவணன் ஒரு தேசத் துரோகி என அனைவரையும் நம்ப வைக்கிறார்கள். இதன் காரணமாக சரவணனின் இறுதி சடங்கில் நியாயமாக கிடைக்க வேண்டிய ராணுவ ம‌‌‌ரியாதை கிடைக்காமல் போவதுடன், சரவணனின் மனைவி மற்றும் மகனை ஊரார் தள்ளிவைக்கிறார்கள்.

உணர்வு‌ப்பூர்வமாக தோன்றும் இந்தக் கதை படத்தில் பிளாஷ்பேக்காக சில நிமிடங்கள் மட்டுமே வருகிறது. அப்படியானால் மீதி படம்? இருபது வருடங்கள் கழித்து மகனின் (விஜய்) பழிவாங்கும் படலத்திலிருந்து தொடங்குகிறது.

வில்லன்கள் நால்வரும் இப்போது இன்டர்போலால் தேடப்படும் சர்வதேச குற்றவாளிகள். இந்தியா வரும் அவர்களில் ஒருவரை காவல் துறையிடமிருந்து காப்பாற்றுகிறார் விஜய். இன்னொரு வில்லனான பிரகாஷ்ரா‌‌ஜின் மகள் நயன்தாராவை காதலித்து அவரது மாப்பிள்ளை ஆகிறார். மூன்றாவது வில்லனின் மகன் என்று நாடகமாடுகிறார்.

இப்படி வில்லன்கள் தலையில் வெண்ணெய் வைத்து கண்ணாமூச்சி காட்டும் விஜய், அவர்களின் ரகசியங்களை தெ‌ரிந்து கொள்வதுட‌‌ன், உடன் இருந்தே அவர்களின் உயிர் பறிக்கிறார். இதனிடையில் உண்மை பிரகாஷ்ராஜுக்கு தெ‌ரிய வருகிறது. அவரை விஜய் பழி வாங்கினாரா? அவரது தந்தையின் தேசத் துரோகி களங்கம் துடைக்கப்பட்டதா? நீண்ட கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

மேஜர் சரவணன், அவரது மகன் புகழ் என விஜய்க்கு இரண்டு வேடங்கள். இளமையான அப்பா என்பதால் மீசையை மட்டும் முறுக்கிவிட்டு சமாளித்துக் கொள்கிறார். மகன் விஜயிடம் முந்தைய படங்களில் பார்த்த அதே துடிப்பும், விறைப்பும் அப்படியே மாறாமல் இருக்கிறது. அடுத்தப் படத்திலும் இதை எதிர்பார்க்கலாம்... மாறாமல் அப்படியே.

காவல்துறையின் கண்காணிப்பை மீறி விஜய் வில்லனை காப்பாற்றும் ஆரம்ப காட்சியில் எழு‌ம் யார் விஜய் என்ற கேள்வியை இறுதிவரை சஸ்பென்சாக கொண்டு சென்றிருப்பது படத்தின் டெம்போவை அதிக‌‌‌ரிக்கிறது. அறுபது சதவீத ஆடைத் தள்ளுபடியுடன் நயன்தாரா இளமை நயாகரா. திருமண வீட்டில் விஜயும், நயனும் போடும் செல்ல சண்டை ரசிகர்களுக்கு வெல்ல உருண்டை.

வடிவேலுவை சிம்பன்சி என நினைத்து வெளிநாட்டு போலீஸ் இம்சிப்பது வெடிச்சி‌‌‌ரிப்பு. தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் பலம். மம்மி டாடி, ராமாகிட்ட வில்லை கேட்டேன் பாடல்கள் இளமை பொங்கும் ரகம் என்றால், நீ கோபப்பட்டுப் பார்த்தால் மனதில் தங்கும் ரகம்.

ஆ‌க்சன் மற்றும் பாடல் காட்சிகளில் ஜாலம் செய்கிறது கேமரா. வில்லன்களின் வித்தியாசமான கெட்டப் மாறுவேட போட்டியை நினைவுப்படுத்துகிறது. குறிப்பாக ஆனந்த்ரா‌ஜ், ஸ்ரீமனின் தோற்றம். பிரகாஷ்ரா‌‌ஜின் பலமே வசனம்தான். வில்லுவில் அவரை அதிகம் பேச அனுமதிக்காதது பெரும் இழப்பு.

விஜயின் மனைவியாக வரும் ரஞ்சிதா ப‌‌‌ரிதாபப்பட வைக்கிறார். தேசத் துரோகியின் மனைவி என அவரது நெற்றியில் பிரகாஷ்ரா‌ஜ் பச்சை குத்துவது கொடுமை. கீதா, மனோ‌ஜ் கே. ஜெயன் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

பெரும்பகுதி கதை வெளிநாட்டில் நடப்பதால் மனதுக்கு ஒட்டாமல் போய்விடுவது படத்தின் குறை. சர்வதேச குற்றவாளிகளை விஜய் ஜஸ்ட் லைக் தட் அடித்து நொறுக்குவது படத்தின் சுவையை குறைத்து விடுகிறது. திரைக்கதையில் வரும் திடீர் ‘ஜம்ப்’கள் கதையின் ஓர்மையை சிதைத்து விடுகின்றன. படத்தின் முக்கியமான பலவீனம், நீ...ண்ட கிளைமாக்ஸ். கத்தி‌‌‌ரி போட்டிருக்கலாம்.

ஓபனிங் பைட், பாடல், காதல், வில்லன், இறுதியில் ஜெயம் என்ற வழக்கமான விஜய் ஃபார்முலாவில் வில்லுவும் ஏற்கனவே பார்த்த படம் போன்ற உணர்வையே தருகிறது. இயக்குனர் பிரபுதேவா பற்றி சொல்வதென்றால்,

நடன அமைப்பு சூப்பர்.

ரஜியினின் வில்லன் டேனி!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் வரும் வில்லன் பாத்திரத்துக்கு எப்போதுமே மிகுந்த முக்கியத்துவம் உண்டு.

முரட்டுக் காளையில் ஜெய்சங்கர், மிஸ்டர் பாரத்தில் சத்யராஜ், படையப்பாவில் ரம்யாகிருஷ்ணன் மாதிரி... இப்போது எந்திரனில் அந்தப் போக்கு தொடர்கிறது. பாலிவுட்டில் புகழ் பெற்ற ஒரு வில்லனை இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள் (எந்திரன் தமிழ்ப் படம் மட்டுமல்ல, என்பது வேறு விஷயம்!).

அவர்தான் டேனி டெங்ஸோங்பா.

குர்பானி, குதா கவா, அஜ்நபி போன்ற படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர் மூலம் மிகப் பிரபலமான நடிகர் இவர்.



அமிதாப் போன்ற ஜாம்பவான்களுக்கு நிகராக பேசப்பட்டவர். இவர்தான் இப்போது எந்திரன் பட வில்லன். இவருக்குமுன் தெலுங்கு நடிகர் ஜே.டி. சக்கரவர்த்தி நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அவர் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

டேனியின் சேர்க்கை படத்துக்கு நிச்சயம் பலம்தான். காரணம் இந்திப் படவுலகில் டேனியின் நடிப்புக்கென்று தனி ரசிகர் வட்டமுண்டு.

2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் பெற்ற டேனி, ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். செவன் இயர்ஸ் இன் திபெத் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுடன் நடித்துள்ளார்.

மாறியது மன்றம்... மாற்றியது விஜயேதான்!


ஒட்டுமொத்த சென்னைக்கும் நேற்று பிரசவ வலி! ச்சும்மா கொலம்பஸ் மாதிரி டிராவல் செய்த திருவாளர் பொதுஜனம் கண்டுபிடித்த சந்து பொந்துகள், கார்ப்பரேஷன் கூட அறியாதது. எல்லா களேபரத்திற்கும் காரணம், திருமங்கலத்தின் தி.மு.க வெற்றியும், வில்லு பட ரிலீசும்தான்.

மீனம்பாக்கத்திலிருந்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார் வெற்றி மைந்தன் அழகிரி. இதில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சென்னையின் முக்கியமான பகுதிகளை நசுக்கியது. இது போதாதென்று விஜய் ரசிகர்கள் படப்பெட்டியை சாரட் வண்டியில் ஏற்றி கமலா தியேட்டருக்கு கொண்டு வந்தார்கள். பிறகென்ன...? கோடம்பாக்கத்திற்கு இடுப்பு வலிதான். இது ஒருபுறம் என்றால் தேவி தியேட்டரில் லிட்டர் லிட்டராக பாலாபிஷேகம். இந்த காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு இளைய தளபதிக்கு போட்டு காண்பிக்கப்பட்டதாம்.

இப்படி ‘உடல் மண்ணுக்கு, உயிர் தளபதிக்கு’ என்று கோஷமிட்ட ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய தீர்மானித்துவிட்டார் விஜய். அதன் விளைவாக இத்தனை காலம் விஜய் ரசிகர் மன்றம் என்று இயங்கி வந்த தனது மன்றத்தை மக்கள் நற்பணி மன்றம் என்று மாற்றியிருக்கிறார். “எல்லாம் ஏதோ திட்டத்தோடுதான் நடக்குது. இருக்கிற இடத்தை விட்றாதே மாப்ளே” என்று முன்னிலும் உற்சாகமாக வேலை பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

நாளை நடப்பதை யாரறிவார்?

ஆஸ்திரேலியா வாங்களேன்... ஹீரோவுக்கு அழைப்பு விடும் நடிகை


விஷாலுக்கும் த்ரிஷாவுக்கும் ‘ஒரே இது’வாமே? என்கிறார்கள் கோடம்பாக்கத்தில் எங்கு திரும்பினாலும். இந்த லட்சணத்தில் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தால் என்னாகும்? “பெரிசா என்னாகிவிட போகிறது. கேரவேனுக்குள் கிஸ்முஸ் என்று எழுதுவார்கள். எனக்கொன்றும் அதைப் பற்றி கவலை இல்லை” என்கிறார் த்ரிஷா.

“யார் யாருடனோ சேர்ந்து நடிக்கிற த்ரிஷா, நான் கேட்டால் மட்டும் கால்ஷீட் இல்லை என்கிறார்” என்று பொத்தாம் பொதுவில் நின்று புலம்பி வைத்தார் விஷால். சொல்லி வைத்து கிள்ளிக் கொண்டார்களோ என்னவோ? “அதுக்கென்ன, கொடுத்திட்டா போச்சு” என்று த்ரிஷாவும் பெரிய மனசு பண்ணினார். செல்வராகவன் இயக்கவிருக்கும் படத்தில் விஷாலுடன் ஜோடி சேரப்போவது த்ரிஷாதானாம். தனது குடும்பத்தினர் எல்லாரையும் கூட்டி வைத்துதான் இந்த கதையின் லைனை கேட்டிருக்கிறார் விஷால். வருடக்கணக்கில் படத்தை இழுக்கக் கூடாது என்ற கண்டிஷன்களுக்கு உட்பட்டு இந்த படத்தில் சைன் பண்ணியிருக்கிறாராம் இவர்.

இதற்கிடையில் ஆஸ்திரேலியா போயிருக்கும் த்ரிஷ், அங்கிருந்து விஷாலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறாராம். இந்த மாதம் முழுவதும் அங்கேயே இருக்கப் போவதாகவும், முடிந்தால் வந்துவிட்டு போகும்படியும் கூறியிருக்கிறாராம். தற்போது தோரணை படத்தில் பிசியாக இருக்கும் விஷால், ஒரு பாடல் காட்சியை ஆஸ்திரேலியாவில் வைங்களேன் என்கிறாராம் தயாரிப்பாளரிடம். இவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணாதான் தோரணையின் தயாரிப்பாளர் என்பதால், சரி என்று கூறியிருக்கிறாராம் தம்பியிடம்.

காதலின் வலி தெரிந்தவர்தானே இந்த அண்ணனும்!

நாட்டு நடப்பை போட்டு உடைக்கும் கவிஞர்!


திருநாள்... நிச்சயம் வரும் ஒருநாள்!

இந்த நம்பிக்கையோடு கண்விழிக்கும் லட்சோப லட்சம் ஈழத்தமிழர்களில் வசீகரனும் ஒருவர்! கால் சட்டை வயதில் புலம் பெயர்ந்து நார்வேவுக்கு போன வசீகரனுக்கு பழக்க வழக்கங்கள்தான் அந்த நாட்டில்! பார்வைகள் என்னவோ ஈழத்தை சுற்றியேதான்! அன்றாட செய்திகளை படித்து அனல் கக்கும் வேதனையோடு கவிதை எழுதுவது வசீகரனின் வாடிக்கை. அவற்றை ஒரு தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கிறது காந்தளகம்.

தமிழர் திருநாள் என்ற தலைப்பில் வெளி வந்திருக்கும் இந்த கவிதை தொகுப்பில் இருபத்தி நான்கு கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் இதயத்தை ஈரப்படுத்துகின்றன.

பெரிய தலைகள் கவலை தெரிவிக்க,
சிறிய வால்கள் கண்டனம் தெரிவிக்க,
வாகையின் எல்லைகளில்
பதுங்கு குழியில் நாங்கள்

Vaseeharanஎன்ற நான்கே வரி கவிதையில், நாட்டு நடப்பை போட்டு உடைக்கிறார் வசீகரன். இன்னொரு சோகம் இது-

படகுத்தரை கிராமத்திலே அழுது முடித்தாள்
ஓர் தமிழ் அன்னை
பிள்ளையை சுமக்கும் எங்கள் வயிற்றிலே பிணங்களை சுமக்கின்றோம்
பிணங்களை சுமக்கும் எங்கள் மண்ணிலே
ரணங்களை சுமக்கிறோம்.

இவரது எழுத்துக்களுக்கு கைகள் முளைத்தால் அதுவும் யுத்த களத்திற்கு போயிருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன ஒவ்வொரு வார்த்தைகளும்!

ஈழக்கவிஞர் காசி ஆனந்தனும், கவிஞர் நா.முத்துக்குமாரும் இந்த புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியிருக்கிறார்கள். வசீகரன் குறித்து இவர்கள் கூறியிருக்கிற வார்த்தைகளில் பொய்யில்லை. வசீகரனின் கனவுகளும் பொய்ப்பதற்கில்லை!

Monday, January 12, 2009

கார்த்திகாவும் கவர்ச்சிக்கு ரெடி!


பாவாடை தாவணியில் தலைநிறைய மல்லிகைப்பூவுடன் தெத்துப்பல் தெரிய சிரிக்கும் 'தூத்துக்குடி' கார்த்திகா இப்போது அந்த இமேஜிலிருந்து வெளிவர வேண்டும் என ரொம்பவே ஆசைப்படுகிறார்.'365 காதல் கடிதங்கள்', 'அலையோடு விளையாடு', 'வைதேகி' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் கார்த்திகா. ஆனாலும் இவை இன்னும் வெளியாகவில்லை.

இந்தப் படங்களிலும் வழக்கம்போல அதே பாவாடை தாவணி காஸ்ட்யூமில்தான் வருகிறாராம்.

இதனால் இந்த தாவணி, பாவாடை இமேஜிலிருந்து ஜம்ப் ஆக முடிவு செய்து விட்டாராம் கார்த்திகா.ஏன் இப்படி என்று கேட்டால், பின்னே என்னங்க, எப்பப் பார்த்தாலும் இந்தப் பொண்ணு தாவணிலதான் வருதுன்னு நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறாங்க ரசிகர்கள். இதை மாற்றணும்னு நானும் முயற்சி பண்றேன். ஆனா சரியான படம்தான் அமையவில்லை, என்கிறார் கார்த்திகா.

அப்போ கவர்ச்சிக்கு ரெடியா...?


அட என்னங்க நீங்க... இதுக்குமேல எப்படி வெளிப்படையா சொல்றது இதையெல்லாம். அந்த மாதிரி வேடங்கள் வந்தால் நிச்சயம் நடிப்பேன்.. என்கிறார்.

கோலிவுட் படைப்பாளிகள் கவனத்துக்கு!

'தாம் தூம்' படத்தில் நடித்தவர் இந்தி நடிகை கங்கனா ரனவத் நிர்வாணத்துக்கு 'கட்'!

'ராஸ்' இந்திப் படத்தில் கங்கனா நிர்வாணமாக நடித்துள்ள காட்சிகளுக்கு சென்சார் போர்டு கத்தரி போட்டுள்ளது.

தமிழில் 'தாம் தூம்' படத்தில் நடித்தவர் இந்தி நடிகை கங்கனா ரனவத். இவர் இந்தியில் முகேஷ் பட் தயாரித்துள்ள ராஸ் படத்தில் 'ஜாம் ஜாம்' என நடித்துள்ளார்.

இதில் இவர் நிர்வாணமாக நடித்துள்ள காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அக்காட்சியை நீக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டனர்.

இதையடுத்து முகேஷ் பட்டுக்கும், தணிக்கை அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.



இக்காட்சி படத்துக்கு முக்கியம். இதில் கங்கனா நிர்வாணமாக நடிக்கவில்லை. மெல்லிய ஆடை அணிந்துதான் நடித்திருக்கிறார். எனவே அனுமதித்து யு சான்றிதழ் தர வேண்டும், என்று முகேஷ் கூறினார்.

ஆனால் அதை அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளனர். கங்கனா மெல்லிய ஆடை அணிந்து நடித்தார் என்று கூறப்பட்டாலும் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு அவர் நிர்வாணமாக நடித்ததுபோலத்தான் தெரியும். இதுவும் மோசடி வேலைதான். இதை அனுமதிக்க முடியாது, என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தணிக்கை அதிகாரி வினாயக் கூறும்போது, ராஸ் படத்தில் கங்கனா ரனவத் நடித்துள்ள நிர்வாண காட்சியை நீக்கும்படி உத்தரவிட்டிருக்கிறோம். அதை நீக்கினாலும்கூட படத்தில் நிறைய கொடூரமான காட்சிகள் இருப்பதால் ஏ சான்றிதழ்தான் வழங்க முடியும், என்றார்.

தனுஷ் நடிக்கும் "நந்தனம்"


சுப்ரமணிய சிவா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
திருவிழா குத்தாட்டளில் இன்னும் தவிர்க்க முடியாத பாடலாக பதிவான பாடல் "மன்மத ராசா...". தனுஷின் கேரியர் சற்று தொய்வான நேரத்தில் 'திருடா திருடி' மூலம் சூப்பர் ஹிட்டை ஏற்படுத்திக் கொடுத்தவர் சுப்ரமணிய சிவா. ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அதன் இயக்குனரும் நாயகனும் மீண்டும் கைக்கோர்ப்பது வழக்கம். ஆனால் சுப்ரமணிய சிவாவுக்கும் தனுஷிற்கும் அந்த வாய்ப்பு வாய்க்கவில்லை.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுப்ரமணிய சிவா - தனுஷ் காம்பினேஷன் மீண்டும் இணைகிறது. ஒரு ரீ-மேக் படத்தில் அந்த கூட்டணி கைக்கோர்க்கிறது. மலையாளத்தில் வெளிவந்து பெரும் வெற்றியை பெற்ற 'நந்தனம்' என்ற படத்தை தனுஷிற்காக ரீ-மேக் செய்கிறார் சுப்ரமணிய சிவா. குட்நைட் மோகன் தயாரி்த்த மலையாள நந்தனத்தை ரஞ்சித் இயக்கியிருந்தார்.

மலையாள நநதனத்தில் கதாநாயகனாக ப்ருத்விராஜ், அரவிந்த் ஆகாஷ் நடித்திருந்தனர். கதாநாயகியாக நவ்யா நாயர் நடித்திருந்தார். அரவிந்த் ஆகாஷ் நடித்த கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். ப்ருத்விராஜ் - நவ்யா நாயர் கேரக்டரில் நடிக்கும் நடிகர் - நடிகை யாரென்பது இன்னும் முடிவாகவில்லை. தற்போது 'யோகி' படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் சுப்ரமணிய சிவா அப்படம் முடிந்ததும் நந்தனத்தை ரீ-மேக் செய்கிறார். இதற்குமுன் தனுஷ் இரண்டு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்த படங்களை முடித்துவிட்டு சுப்ரமணிய சிவா படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

எப்படியும் இன்னும் 6 மாதங்கள் கழித்தே 'நந்தனம்' படப்பிடிப்பு தொடங்கும். தமிழில் வேறு தலைப்பை வைக்கவுள்ளார் இயக்குனர். தமிழுக்காகவும் தனுஷின் இமேஜிற்காகவும் மலையாள கதையிலிருந்து சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாம்.

சென்னையில் ஷில்பா ஷெட்டி பிளாக் கேட்ஸ் கெடுபிடி

மிஸ்டர் ரோமியோ, குஷி இரண்டே படங்கள்! ரசிகர்கள் மனசை வாரிக்கொண்டு போனவர்தான் ஷில்பா ஷெட்டி! நீண்டகாலம் கழித்து சென்னைக்கு விசிட் அடித்திருந்தார். கவர்ச்சி நடிகை சோனா புதிதாக உருவாக்கியிருக்கும் ‘யுனிக்’ என்ற துணிக்கடையை திறந்து வைக்கவே இந்த வருகை!

ஆயிரம் ஃபிளாஷ்கள் முற்றுகையிட, தனது சிரிப்பையே ஒரு ஃப்ளாஷ் போல தட்டினார் ஷில்பா! “இங்கே வந்ததும் பிரபுதேவாவிடம் பேசினேன். ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. மறுபடியும் தமிழ் படங்களில் நடிக்கணும் என்ற ஆசை இருக்கு. விக்ரமோடு ஜோடி சேர ஆசை. அதே மாதிரி ரஜினிஜி படங்கள்னா ரொம்ப பிடிக்கும். ஷங்கர், மணிரத்னம் என்னை இம்ப்ரஸ் பண்ணிய டைரக்டர்கள் என்று பேசிக் கொண்டே போனவர் ஒரு பிரேக் விட்டு, என்னை மறுபடியும் சென்னைக்கு அழைத்த சோனாவுக்கு நன்றி” என்றார் எக்ஸ்பிரஸ் வேக ஆங்கிலத்தில்!

இவரை சுற்றி ஏகப்பட்ட பிளாக் கேட்ஸ். இந்த பூனைகள் பிரைவேட் Uniq ShowRoom Launchபாதுகாப்பாளர்கள்தான் என்றாலும் கெடுபிடிகள் பலம்! மொத்தம் பத்தே நிமிடங்களில் விழா முடிந்து போக, ஒரு இளவரசியின் கம்பீரத்தோடு பல்லக்கில், ஸாரி... காரில் ஏறி பறந்தார் ஷில்பா ஷெட்டி! அதற்குள் 25 லட்சம் முடிஞ்சு போச்சே என்ற கவலையே இல்லாமல் தனது வழக்கமான சிரிப்போடு வழியனுப்பிக் கொண்டிருந்தார் சோனா!

டாஸ்மாக் பாரில் காதல்? ஏடாகூட எஸ்எம்எஸ்


எந்த ரூட்டில் போவது என்பதில் ஏகக்குழப்பம் ஜீவாவுக்கு. ராம், கற்றது தமிழ், ராமேஸ்வரம் மாதிரி ராவான ரூட்டில் போவதா? தெனாவட்டு மாதிரி அடிதடி ரூட்டில் போவதா? அல்லது லவ்வே சரணம் என்று மைக் மோகனின் காலி கிரவுண்டை நிரப்புவதா?

இந்த குழப்பத்திற்கு விடை தரும் போலிருக்கிறது சிவா மனசுல சக்தி. இதுவரைக்கும் காதலை வெளிப்படுத்த பீச், கிளாஸ் ரூம், பார்க், போன்ற இடங்களைதான் தேர்வு செய்தார்கள் காதலர்கள். ஆனால் காதல் வந்த அடுத்த வினாடியே அதை சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கிற ஹீரோயின் அவன் தண்ணியடித்துக் கொண்டிருக்கும் டாஸ்மாக் பாருக்கே போய் விடுவது தமிழ் சினிமா இதுவரை பார்க்காத காட்சி என்கிறார் இப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம்.

படம் எடுப்பதே தெரியாமல் படம் எடுக்கவே விரும்பியிருக்கிறார் இவர். இதற்காக ஸ்டடிகேம் கேமிராவை பயன்படுத்தி சென்னையை சுற்றி வந்திருக்கிறது எஸ்எம்எஸ் யூனிட். மேலே சொன்ன டாஸ்மாக் பார் சமாச்சாரமே அப்படி எடுக்கப்பட்டதுதானாம். குடிமகன்கள் அவரவர் வேலையில் பிசியாக இருக்க, இந்த காட்சியை லைவ்வாக படம் பிடித்திருக்கிறார் ராஜேஷ்எம்.

ஒரு கல் ஒரு கண்ணாடி, உடையாமல் மோதிக் கொண்டால் என்று தனது பேனாவில் இளமையையும் புதுமையையும் நிரப்பிக் கொண்டு பாடல் எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார். இசையமைத்த யுவனே இந்த பாடலையும் பாடியிருக்கிறாராம்.

பார்ப்போம், இந்த காதல் எந்த ரூட்டை பிடிக்குதுன்னு?

ரஹ்மான் வென்ற ஹாலிவுட் விருது இந்தியர்கள் பெருமிதம்!


மும்பையை சேர்ந்த ஏழை சிறுவன் ஒருவன் குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதிலளிக்கிறான். அங்கு கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் தன் வாழ்க்கையில் நடந்த துயரமான நிகழ்ச்சிகளை ஒப்பிட்டு பதில் சொல்கிறான். எல்லா பதில்களும் சரியாக இருக்கிற பட்சத்தில் கேள்விகள் முன்பே தரப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகமே எழுகிறது.

முடிவில் அவன் எப்படி வென்றான் என்பதை விவரிக்கும் படம்தான் ‘ஸ்லம் டாக் மில்லியனார்’ இங்கிலாந்து இயக்குனர் டேனி பாயல் இயக்கியுள்ளார். இந்த படத்திற்காக ஹாலிவுட்டின் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருதை வென்றிருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றிருக்கிறார் ரஹ்மான்.

சிறந்த படம், சிறந்த கதை, சிறந்த இசை ஆகிய பிரிவுகளில் போட்டிக்கு சென்ற இந்த படத்தில், சிறந்த இசைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது ஸ்லம்டாக். அடக்கமாக, ஆர்ப்பாட்டம் இல்லாமல் விருதுகளை குவித்து வரும் ரஹ்மான் நம்ம ஊரு பிரபலம் என்பதில் ஒட்டு மொத்த இந்தியாவே காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்!

வரப்போகும் குறள் டி.வி ஏ...டண்டனக்க...?! ‘எம்புள்ளைக்கு எதிரா சதி நடக்குது


‘எம்புள்ளைக்கு எதிரா சதி நடக்குது’ என்று பேட்டிகளில் ஆவேசப்பட்டு வந்த விஜய டி.ராஜேந்தர், தனக்கு சப்போர்ட்டா ஒரு சேனலும் இல்லையே என்றும் பொங்கினார். “சிம்புவை பற்றி வரும் செய்திகளுக்கு உடனுக்குடன் விளக்கம் கொடுக்க நானே ஒரு டி.வி சேனல் துவங்குவேன்” என்றும் சவால் விட்டார். மெகா சபதம் போட்டுவிட்டு ஜகா வாங்க முடியாதல்லவா? பொன் வைக்கிற இடத்தில் போர்ட்டபுள் டிவியை வைத்த மாதிரி, இப்போது வெப் டி.வி துவங்கப் போகிறாராம்.

தனது ஜகா சேனலை எட்டுக்கு எட்டளவு கொண்ட தனது அறையிலேயே துவங்கியிருக்கிறார் டிஆர். நிகழ்ச்சிகளை தயாரிப்பதில் படு ஆர்வமாக இருக்கும் இவர், “ஏய்... டண்டணக்கா ஏய்... டண்டணக்கா” என்று மேசையில் தட்டி, அதையே நிகழ்ச்சிகளுக்கு பின்னணி இசையாகவும் போட்டு வருகிறாராம்.

இந்த டி.விக்கு குறள் டி.வி என்று பெயரிடப்பட்டுள்ளது. பெண்களை கவரும் விதத்தில் கோலப் போட்டி, சப்பாத்தி சுடும் போட்டி, மாவு பிசையும் போட்டி என்று மகளிர் ஏரியாவிலும் மங்காத்தா ஆடும் விஜய டி.ஆர், பெண்கள் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளராக தனது மனைவி உஷாவையே நியமித்திருக்கிறாராம்.

இனி குடும்ப கொண்டாட்டங்களுக்கு குறைவே இருக்காது!

அஞ்சாத நரிக்குறவர்கள் அசர வைக்கும் மிஷ்கின்


திடீரென்று திருநங்கைகளுக்கும் மரியாதை ஏற்படுகிற மாதிரியான பாத்திரங்களை வடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ்சினிமாவில். தெனாவட்டு படத்தின் இயக்குனர் வி.வி.கதிர் துவங்கி வைத்த இந்த நல்ல காரியத்தை, தனது படமான அஞ்சாதேவிலும் செய்திருக்கிறார் மிஷ்கின். லக்ஷயா என்ற திருநங்கை நடித்திருக்கிறாராம் இந்த படத்தில். மிக சிறந்த பரதக்கலைஞராம் லக்ஷயா. இவர் மட்டுமல்ல, சமுதாயத்தில் எந்த அங்கீகாரமும் இல்லாத நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பலரையும் தனது படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் மிஷ்கின்.

நரிக்குறவரான சரோஜா அம்மாள் என்ற பெண்மணியை இளையராஜாவின் இசையில் Mishkinபாடவும் வைத்திருக்கிறார் மிஷ்கின். ‘எலிலே எலிலே’ என்ற பாடல் ‘வாளமீனுக்கும்’ பாடலை பீட் பண்ணும் என்கிறார்கள்.

எதிலும் வித்தியாசத்தை புகுத்த நினைக்கும் மிஷ்கின் அஞ்சாதேவில் மிக நீண்ட குளோஸ் அப் காட்சி ஒன்றை வைத்திருக்கிறாராம். மிக நீள க்ளைமாக்ஸ் காட்சி முழுவதும் ஸ்லோ மோஷனில் எடுக்கப்பட்டுள்ளதாம்.

ஏராளமான புதியவர்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும், அஸ்வத்ராம் என்ற சிறுவனை மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் மிஷ்கின். கதை விஷயங்களில் பாலிவுட்டில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி மிஷ்கின் போன்ற இயக்குனர்கள் மூலம் தமிழிலும் தொடர்கிறது. பாராட்டுகள்...!

பஞ்ச் டயலாக் இல்லை... ஆனால் டயலாக்கே பஞ்ச்! -வில்லு விறுவிறுப்பு


உம்’, ‘ஊஹூம்’ என்று ஒற்றை வரியில் பதில் அளிக்கும் விஜய் கூட, கலகலப்பூட்டினார் வில்லு பிரஸ்மீட்டில்! (அவ்வளவு உற்சாகம் ஏனோ?) நாலு வரியில் ஒரு கதையை சொல்லி, இதுதானே வில்லு கதை என்றார் நிருபர் ஒருவர். “அட, நாங்க சொல்ற கதையை விட, நீங்க சொன்னது நல்லாயிருக்கே” என்று போட்டு தாக்கினார் இளைய தளபதி. மேலும் சில விவரங்களை அவிழ்த்துவிட்ட நிருபரை பார்த்து, “இன்டர்நெட்டில் பாட்டு ரிலீஸ் பண்ணியது இவராயிருக்குமோ” என்று பிரபுதேவா சொல்ல, ஏரியாவே கலகலப்பானது.

“படத்திலே எந்த இடத்திலும் கேமிராவை பார்த்து ஹீரோ டயலாக் பேசலை. அந்த விஷயத்திலே விஜய் சார் உட்பட எல்லாரும் கவனமா இருந்தோம்” என்றார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.

“தண்ணியிலே சண்டை, ஆகாயத்திலே சண்டை, நெருப்புக்கு மத்தியிலே சண்டைன்னு Vijay-PrabuDevaபல இடங்களில் ஆக்ஷனில் பின்னி எடுத்திருக்கோம். விஜய் சார் இந்தியாவின் ஜேம்ஸ் பாண்டுன்னு சொல்ற அளவுக்கு படம் இருக்கும்” என்ற பிரபுதேவா, “இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒத்துழைத்த விஜய்க்குதான் நன்றி சொல்லணும்” என்றார் மீண்டும் மீண்டும்!

நயன்தாரா பற்றி ஒன்னுமே சொல்லலியே என்று மற்றொரு நிருபர் ஞாபகப்படுத்த, மீண்டும் மைக் பிடித்தார் பிரபுதேவா! “நடிக்க ஒப்பந்தம் ஆகும்போதே காலையில் ஒன்பது மணிக்கு முன்னே படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என்று கூறிவிட்டார் அவர். ஆனால் ஒன்பது மணிக்கு வந்தாரென்றால், ஷ§ட்டிங்கில் அவ்வளவு ஆர்வத்தோடு வேலை பார்ப்பார். ரொம்ப நைஸ் ஆர்ட்டிஸ்ட்” என்றார் பிரபுதேவா.

Vijay-PrabuDevaஇந்த படத்திலே பஞ்ச் டயலாக் இல்லே. ஆனால், டயலாக்கே பஞ்ச்சா இருக்கும் என்று பிரபுதேவா சொல்லும்போது விஜய் முகத்தில் சிரிப்பை பார்க்க வேண்டுமே! அதுதான் அபூர்வ க்ளிக்!

கமலை பின்பற்றும் தனுஷ் படிக்காதவனும் ‘குள்ள’ அப்புவும்!


கிட்டதட்ட பதினைந்து வருடமாவது ஆகியிருக்கும்? அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள அப்புவாக வந்து அப்பப்பா... என்று இன்டஸ்ரியையே அசர வைத்தார் கமல்! இந்த குள்ள அப்பு ரகசியத்தை இப்படத்தின் வெள்ளி விழாவில் உடைப்பார் என்றும், கேடயம் வாங்கவே குள்ள அப்புவாகதான் மேடைக்கு வருவார் என்றும் ஆளாளுக்கு பந்தயம் கட்டுமளவுக்கு ஒட்டு மொத்த தமிழகத்தையும் எதிர்பார்க்க வைத்தார் கமல்.

ஆனால் இந்த குள்ள அப்பு எப்படி வந்தார்? இதன் கெட்டப்பின் பின்னணி என்ன? என்பதை இத்தனை வருடங்கள் ஆன பிறகும் கூட மூச் காட்டாமல் ரகசியம் காத்து வருகிறார் கமல்.

தனது படிக்காதவன் படத்திலும் இப்படி ஒரு கெட்டப்பில் தோன்றுகிறார் தனுஷ். அபூர்வ சகோதரர்கள் யூனிட்டில் பணியாற்றிய ஒருவர் கொடுத்த யோசனைதானாம் இது. ஒரு பாடல் காட்சியில் சில நிமிடங்களே இப்படி ஒரு தோற்றம் கொடுக்கிறார் தனுஷ். ஆனால், இதற்கே மூச்சு திணறிப் போய்விட்டாராம் ரஜினியின் மருமகன். இவராவது சொல்வாரா இப்படி ஒரு கெட்டப்பில், வர முடிந்தது எப்படி என்று?

Followers