Friday, January 9, 2009

கால்ஷீட் குழப்பம் : 'முகமூடி' நாயகன் யார்?


உண்டா இல்லையா? முகமூடி கதாநாயகன் விஷயத்தில் இன்னும் முடிவு தெரியாமல் ஒத்தையா இரட்டையா போட்டுக்கொண்டிருக்கிறார் மிஷ்கின்.
நந்தலாலாவை இயக்கி நடித்துள்ள மிஷ்கின் இப்படம் வெளியானதும் சூர்யாவை வைத்து முகமூடி படத்தை இயக்குவதாக இருந்தது. இதில் இப்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஏவி.எம். தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் அயன் படத்தில் நடித்துவருகிறார் சூர்யா, இப்படத்தை தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ஆதவன் படத்திலும் ஹரி இயக்கவுள்ள சிங்கம் படத்திலும் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார்.

ஒரே நேரத்தில் ஆதவன், சிங்கம் படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இதற்காக கால்ஷீட்டை பாதிபாதியாக பிரித்துக் கொடுத்திருக்கிறார் சூர்யா. இப்படி தொடர்ந்து சூர்யா பிஸியாக இருப்பதால் தனது ப்ராஜெக்ட் பாதிக்கும் என்ற குழப்பம் மிஷ்கினுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சூர்யாவுக்கு பதில் தானே முகமூடி வேஷம் போடலாமா என யோசனையில் மூழ்கியுள்ளாராம் மிஷ்கின்.

எனினும் மிஷ்கினின் நட்பு வட்டாரங்களில் இருந்து கேட்டால் அவர்கள் சொல்லும் தகவல் வேறுமாதிரியாக இருக்கிறது. முகமூடியில் சூர்யாதான் நடிக்கப்போகிறார். ஆதவன், சிங்கம் படங்களில் சூர்யா நடித்துவிட்டு வருவதற்குள் இன்னொரு புதிய படத்தை இயக்கி நடிக்கதான் மிஷ்கின் யோசனை செய்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

எந்த நேரத்தில் முகமூடின்னு பெயர் வைத்தாரோ தெரியவில்லை எந்த தகவலுமே மறைமுகமாதான் இருக்கு.

நானொரு பொம்மை... ஆர்யா


தாடி, மீசையை சவரம் செய்த பிறகும் நான் கடவுள் பற்றி மூச்சுவிடாமல் இருந்த ஆர்யா ஆடியோ ரிலீசுக்கு பிறகு பேச ஆரம்பித்துள்ளார்.
அப்படி என்ன பேசினார் என்று ஆவலுடன் கேட்பவர்களுக்கு ஆர்யாவுடனான மினி பேட்டி...

"நான் கடவுள்ள எனக்கு ருத்ரன் கேரக்டர், தமிழ் சினிமாவுக்கு மட்டுமில்லாமல், இந்திய சினிமாவுக்கும் புதுசா இருக்கிற கேரக்டர். நான் எப்படி பண்ணணுங்கறது எனக்கு தெரியாது. முகம் நிறைய தாடிய வச்சுகிட்டு நான் ஒரு பொம்மை மாதிரிபோய் நிப்பேன். இந்த பொம்மையை ருத்ரனா மாத்துனது பாலதான். என்னோட சின்ன அசைவுக்கு பின்னாலயும் அவரோட உழைப்புதான் அதிகம் இருக்கு.

நான் கடவுள் படத்துக்கு நிறைய ஹீரோயின்களை பார்த்து கடைசியில் பூஜா செலக்ட் ஆனாங்க. பார்வையில்லாதவங்களா அவங்க பண்ணயிருக்காங்க. படத்துல அவங்க கேரக்டரை பார்த்தீங்கன்னா 'பூஜாவா இது'ன்னு கேட்பீங்க. அந்தளவுக்கு டெடிகேஷன், உழைப்பு தேவைப்பட்டதால்தான் சில ஹீரோயின்களை ரிஜகட் பண்ண வேண்டி வந்தது. பட ரிலீசுக்கு பிறகு பூஜா பேசபடுறவங்களா இருப்பாங்க.

Arya

க்ளைமாக்ஸ் சண்டை காட்சியை 31 நாள் எடுத்தார் பாலா. காசியில் ஷீட்டிங். தினமும் 20 பேரோட மோதணும், முதல்ல 20 பேரு வருவாங்க. மறுநாள் 10 பேர்தான் வருவாங்க. ஏன்னா எல்லாருக்கும் காயம் பட்டிருக்கும். எனக்கு, முதல் இரண்டு நாள் காயம்பட்ட மாதிரி மேக்கப். அடுத்த நாட்களிலிருந்து நிஜ காயங்களோடயே நடிச்சேன். பைட்டுனா இது நிஜ பைட். அடி எல்லாருக்கும் படும். அந்த ஒரு மாசமும் நிறைய காயங்கள். ஆனா, காட்சியா இப்ப பார்த்தா எல்லா வலிக்கும் அர்த்தம் புரியுது" என்றார்.

எங்களுக்கும் புரியுது ஆர்யா.

சந்திரமுகி' இரண்டாம் பாகத்தில் ரஜினி?


சந்திரமுகி இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் பி.வாசு.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன் கன்னடத்தில் பி.வாசு இயக்கிய படம் 'ஆப்தமி்த்ரா'. விஷ்ணுவர்தன் கதாநாயகனாக நடித்த இப்படம் கர்நாடக திரையரங்குகளில் முந்நூறு நாட்களை தாண்டிஓடி சாதனை படைத்தது. அதுவரை மற்ற கன்னட படங்கள் தராத வசூலை இப்படம் பெற்று தந்ததால் இயக்குனர் பி.வாசுவுக்கு கன்னட திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பட அதிபர்கள் பலர் வாசுவுக்கு அட்வான்ஸ் தர காத்திருந்தனர். ஆனால் வாசுவின் சாய்ஸ் தமிழ் படம்.

'ஆப்தமித்ரா'வையே தமிழில் 'சந்திரமுகி'யாக இயக்கினார். இங்கும் அது வெள்ளிவிழா படமானதை நாமறிவோம். இந்நிலையில் 'ஆப்தமித்ரா' இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார் வாசு. எனவே சந்திரமுகி இரண்டாம் பாக்ததையும் இவர் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை சந்திரமுகி இரண்டாம் பாகத்தை இயக்கினால் அதில் ரஜினிகாந்த் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆப்தமித்ரா பற்றி வாசு கூறியதாவது :-

"ஆப்தமித்ரா படத்தின் 2-ம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட்டை உருவாக்கி வந்தேன். அப்பணி முடிந்தது இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. விஷ்ணுவர்தனே மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் சந்திரமுகி 2-ம் பாகம் வருமா என்கிறார்கள் .முதலில் கன்னடத்தை முடிக்கிறேன். பிறகு தமிழில் இயக்குவது பற்றி் முடிவு செய்வேன்" என்றார்.

அமிதாப் படத்தை இயக்கும் ரேவதி


அமிதாப் பச்சன் நடிக்கும் ஒரு இந்திப் படத்தை இயக்கவுள்ளார் ரேவதி.
நீங்க எந்த மாதிரி நடிகையா வர விரும்புறீங்க? என்றொரு கேள்விக்கு பதில் சொல்லும் பல நடிகைகள் ரேவதி மாதிரி நதியா மாதிரி என்று சொல்வதை தவிர்க்கமுடியாது. அந்த அளவிற்கு மக்களின் மனசில் மட்டுமில்லாமல் சினிமாக்காரர்களின் இதயத்திலும் இடம்பிடித்தவர் ரேவதி. சில வருடங்களுக்கு முன் நடிகையாக மட்டும் அறிந்துவந்த ரேவதி திடீரென இயக்குனராகி சாபாஷ் போடவைத்தார்.

'மித்ர மை பிரெண்ட்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரேவதி, அந்த படத்திற்காக பாராட்டுக்களையும், பல விருதுகளையும் பெற்றார். வணிக ரீதியாக அந்த படம் ஓடவில்லையென்றாலும் திரைப்பட விழாக்களில் தவறாமல் கலந்துகொண்டு சினிமா ஜாம்பவான்களின் கைதட்டலை பெற்றது. இதனைத் தொடர்ந்து 'பிர் மிலேங்கே' என்ற படத்தை இயக்கினார்.

இப்போது அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த படம் இந்தியில் உருவாகவுள்ளது. கதையின் நாயகனாக அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளாராம். இதற்காக அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் ரேவதி. கதாநாயகியாக ரவீணா டான்டன் நடிக்கிறார். படத்திற்கு 'ஜஸ்ட் ஆப் கேலியே' என பெயரிடப்பட்டுள்ளது.

'ஆளவந்தான்', 'சாது' ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்துள்ள ரவீணா இந்தி பட விநியோகஸ்தர் அனில் தத்தானியை திருமணம் செய்துகொண்டு சினிமாவிற்கு முழுக்குப் போட்டார். இதனைத்தொடர்ந்து சின்னத் திரையில் நடித்துவரும் ரவீணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரேவதி இயக்கும் படம் மூலம் வெள்ளித்திரைக்கு ரீ-எண்ட்ரி ஆகிறார்.

இயக்குனராகமாட்டேன் : பத்மப்ரியா தரும் வாக்கு


பத்ம ப்ரியா கன்னத்தில் அடிவாங்கிய தழும்பு மறைந்து பல நாட்களானாலும் அந்த பரபரப்பின் ஈரம் இன்னும் போகவில்லை. இடையில் பத்மப்ரியா பற்றிய தகவலே இல்லாமல் இருந்த நிலையில், அவர் இயக்குனராகப்போகிறார் என்ற தகவல் கசிந்து வருகிறது.
சேரனின் 'தவமாய் தவமிருந்து' படத்தில் அறிமுகமான பத்மப்ரியா, முதல் படத்திலேயே அசிஸ்டெண்ட் இயக்குனர்போல செயல்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் நடித்த எல்லா படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். ஆக இயக்குனராக வேண்டும் என்ற ஒரு முடிவோடுதான் இருக்கிறார் எனப் பேசப்பட்டது.

தற்போது சேரனின் 'பொக்கிஷம்' படத்தில் நடித்துவரும் பத்மப்ரியா இயக்குனர் அவதாரம் எடுக்கப்போகிறார் என கேட்டபோது அந்த எண்ணமே இல்லை என தெளிவுபடுத்தினார்.

"நான் நடித்த 'ஸ்ட்ரைக்கர்' இந்திப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. அடுத்து மாதம் ரிலீசாகிறது. இந்தி மொழி நன்றாகத் தெரியும் என்பதால் இந்தி படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இந்திக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கமர்ஷியல் ஹீரோயினாக மாறி வருவதாகவும் சொல்கிறார்கள். நான் எப்போதுமே கமர்ஷியல் ஹீரோயின்தான். நான் நடித்த எந்த படமும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை தந்ததில்லை. டாப் ஹீரோக்களுடன் நடித்தால்தான் கமர்ஷியல் ஹீரோயின் என்று சொல்வது தவறு. தமிழ், இந்தி எந்த மொழியாக இருந்தாலும் நடிப்பேன்.

Padmapriya

நல்ல கலைப்படங்களில் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். வியாபார படங்களில் ஆட்டம் பாட்டு என்று கலர்புல்லாக நடிக்க வேண்டும். இரண்டுமே சினிமாவுக்கு அவசியம். இப்படித்தான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பது தவறு. ஒவ்வொரு படத்திலும் நான் அசோசியேட் இயக்குனராக பணியாற்றுகிறேன். இதை வைத்து படம் இயக்கப்போவதாக நினைக்கிறார்கள். எதையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமே அதற்கு காரணம். படம் இயக்கும் எண்ணம் இல்லை. அடுத்ததாக லாரன்சுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன்" என முடித்துக் கொண்டார்.

கார்த்திகா காட்டில் பட மழை


'திண்டுக்கல் சாரதி' ஹிட்டானதும் ஆச்சு கார்த்திகாவின் காட்டில் பட மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
தமிழில் கார்த்திகா அறிமுகமான படம் 'நம்நாடு'. சரத்குமார் ஜோடியாக நடித்தும் அந்தப் படத்தில் கார்ததிகாவின் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாததால் பெரிய அளவில் பெயர் கிடைக்கவில்லை. இந்நிலையில் 'திண்டுக்கல் சாரதி'யில் கருணாஸ் ஜோடியாக நடிக்க பலரும் மறுத்த நிலையில் கார்த்திகா ஒப்புக்கொண்டு நடித்தார். படம் இப்போது ஹி்ட்டானதால் கார்த்திகாவை தேடி நிறைய வாய்ப்புகள் வருகிறதாம்.

சந்தோஷத்தின் உச்சியில் இருக்கும் கார்ததிகா இதுபற்றி பகிர்ந்துகொண்டபோது...

" 'திண்டுக்கல் சாரதி'யில் நடித்தபோது படம் ஹிட்டாகும் என்று 70 சதவீதம் நம்பிக்கை இருந்தது. பட ரிலீஸூக்கு ஒரு வாரம் முன்பே 100 சதவீதம் வெற்றி உறுதியானது. காரணம் அதற்கு செய்யப்பட்ட விளம்பரங்கள்தான். இப்போது 'நூத்துக்கு நூறு'வில் முதலமைச்சரின் மகளாக கேரள பெண்ணாக நடிக்கிறேன். சமீபத்தில் கேரளாவில் படப்பிடிப்பு நடந்தது.

Karthika

'வடக்கு நோக்கி எந்திரம்'தான் 'திண்டுக்கல் சாரதி'யானது. அதேபோல் பழைய 'நூற்றுக்கு நூறு' படம்தான் 'நூத்துக்கு நூறு' என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. இரண்டு படத்தில் நடிக்கும்போதும் பழைய படங்களை பார்க்கவில்லை. அப்படி பார்த்தால் அதில் நடித்தவரின் நடிப்புதான் ஞாபகம் வரும். அவர்களின் நடி்பபு ரிபீட் ஆகிவிடக்கூடாது என்பதால் அப்படங்களை பார்க்கவில்லை. சுதீஷ் சங்கர் இயக்கும் 'ஆறுமனமே' படத்தில் தார் சாலை போடும் ஏழைப் பெண் வேடம். சுடச்சுட தார் சட்டியை சுமந்து நடிக்க வேண்டும் என்று டைரக்டர் கூறியதால் அப்படியே நடித்தேன். சூடுபட்டு கையில் காயம் ஏற்பட்டது. வினயன் இயக்கும் 'நாளை நமதே' படத்தில் கலெக்டராக நடிக்கிறேன். இதில் ஏழே சீன்களில்தான் வருவேன். ஆனாலும் பெயரை தட்டிச் செல்வேன் இதுதவிர பிரசாந்துடன் 'புலன்விசாரணை-II' படத்தில் நடித்துவருகிறேன்" என்றார்.

கேரவேன் கேட்ட ஹீரோ கேள்வி கேட்ட நிருபர்கள்


காதல், சுப்ரமணிபுரம் சென்ட்டிமென்ட் போலிருக்கிறது. மதுரையை சுற்றி சுமார் ஆறுபடங்களின் ஷ§ட்டிங் நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் வைகை. “எடுத்தவரைக்கும் போட்டு பார்த்திட்டேன். எழுதி வச்சுக்கோங்க, இது ஹிட்” என்றார் படத்தின் தயாரிப்பாளர் குமரன். படத்தின் இயக்குனர் எஸ்ஆர்.சுந்தரபாண்டி இவரிடம் கதை சொல்லப் போனாராம். வழக்கம் போல ‘போயிட்டு வாங்க பார்க்கலாம்’ என்ற பதிலையே எதிர்பார்த்து போனவரிடம், ‘பிடிங்க அட்வான்சை’ என்றாராம் குமரன். அந்த வினாடியில் இருந்தே ஓட ஆரம்பித்தது வைகை!

‘மானாட மயிலாட’ போட்டியில் வெற்றி பெற்ற பிரபாகர்தான் இப்படத்தின் ஹீரோ. முதல் நாள் படப்பிடிப்பிலேயே ஹீரோ அந்தஸ்தை காட்ட ஆரம்பித்துவிட்டார் பையன். “எனக்கு கேரவேன் வேணும். இல்லைன்னா படப்பிடிப்புக்கு வரமாட்டேன்” என்று இவர் டார்ச்சர் கொடுக்க, பிரச்சனை கவுன்சில் வரைக்கும் போனது. பிரஸ்மீட்டில் இந்த விஷயத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள் நிருபர்கள். “தம்பி, முதல் படத்திலேயே இப்படி அடம் பிடிக்கலாமா?” என்று ஆரம்பித்தார்கள்.

வாழ்க்கையில் இனி வேனில் பயணம் செய்வதற்கு கூட அஞ்சுகிற அளவுக்கு ஹீரோவை வறுத்தெடுத்தார்கள். இறுதியில், ‘தப்புதான்’ என்று சரணாகதியானார் பிரபாகர். படத்திற்கு இசை சபேஷ் முரளி. “இவரது பின்னணி இசை நன்றாக இருக்கும்” என்றார் சுந்தரபாண்டி. தனது முறை வரும்போது “எல்லாரும் பின்னணி இசை நன்றாக அமைப்பதாக சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் பாடல்களை கூட நன்றாக அமைப்போம்” என்றார் சபேஷ்!

படப்பிடிப்பில் பரிசு? ஜெய்-பூர்ணா போட்டா போட்டி


டீன்ஏஜ் பையனுக்குள் சித்தரே குடி கொண்டிருக்கிற மாதிரி பேசுகிறார் பார்த்தி பாஸ்கர். அர்ஜுனன் காதலி படத்தின் இயக்குனர்! “அர்ஜுனன் காதலின்னு டைட்டில் வெச்சாச்சு. அர்ஜுனனை வணங்காமல் ஆரம்பிக்க முடியுமா? தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் அர்ஜுனர் கோவில் இருக்கோ, அங்கெல்லாம் போய் அவருக்கு பூஜை பண்ணிட்டுதான் ஷ§ட்டிங்கிற்கே போனேன்” என்கிறார் பயபக்தியுடன். (அடிப்படையில் இவர் சித்தர்களை வணங்குகிறவராம்)

குற்றாலத்தில் படப்பிடிப்பு. படர்கிற பனியும், சிலிர்க்கிற சாரலும் நிறைந்த ஏரியா அல்லவா? படப்பிடிப்புக்கு வருவதற்கு சில மணி நேரம் தாமதம் காட்டினார்களாம் ஹீரோ ஜெய்யும், ஹீரோயின் பூர்ணாவும். ‘சீக்கிரம் வாங்க’ என்று கடிந்து கொள்வதை விட, சாதுர்யமாக பேசி வரவழைப்பதே முறை என்று நினைத்தவர், “யார் முதலில் படப்பிடிப்புக்கு வர்றாங்களோ, அவங்களுக்கு ஸ்பாட்டிலேயே 500 ரூபாய் பரிசு” என்றாராம். அவ்வளவுதான், யூனிட்டிற்கு முன்னால் பரிசும், கைதட்டலும் வாங்குவதற்கு இருவருக்கும் இடையே பலத்த போட்டி! பிறகென்ன, சரியான நேரத்தில் விறுவிறுவென்று படப்பிடிப்பை நடத்தினார் பார்த்தி.

கம்போசிங்கிற்காக பாண்டிச்சேரி போயிருந்தார்களாம். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுடன் கடற்கரைக்கு போய்விட்டார் பார்த்தி பாஸ்கர். இரவு பதினொரு மணிக்கு மேல் அங்கே உட்கார்ந்து கீபோர்டில் ட்யூன் போட, கூட்டம் கூடிவிட்டதாம். அந்த ராத்திரியிலும் ஆட்டோகிராப் கேட்டு அடம் பிடித்ததாம் ஜனம். நள்ளிரவில் பீச்சில் கூடிய கூட்டம் பற்றி போலீஸ் வரைக்கும் தகவல் போக, திமுதிமுவென்று வந்திறங்கினார்கள் காவலர்கள். ஸ்ரீகாந்த் தேவாவை பார்த்தவர்கள், “நீங்கதானா? ரூமிற்கு போயி வாசிக்க கூடாதா?” என்று அட்வைஸ் பண்ணிவிட்டு போனார்களாம். இப்படி ரகளையும் ஜாலியுமாக போய் கொண்டிருக்கிறது அர்ஜுனன் காதலி.

ஜெய், பூர்ணா தவிர படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகளை மதுரை ஏரியாவில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து கண்டு பிடித்திருக்கிறார் பார்த்தி பாஸ்கர். அவர்களுக்கு நடிப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது. காதல், சுப்ரமணியபுரம் வரிசையில் அர்ஜுனன் காதலியும் ஒரு யதார்த்தமான படமாகவும், வெற்றிப்படமாகவும் இருக்கும் என்கிறார் நம்பிக்கையோடு!

காதல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களை தயாரித்த சிவசக்தி பாண்டியனின் எஸ்.எஸ்.மூவிமேக்கர்ஸ் தயாரிக்கும் படம் இது. “நம்பினா நம்புங்க... என்னோட ஆர்வத்தை பார்த்து ஒரே ஒரு வரி கதையை மட்டும் கேட்டு இத்தனை கோடி ரூபாயை இறைச்சிருக்கார் எங்க தயாரிப்பாளர்” என்கிறார் பார்த்தி பாஸ்கர். மறுபடியும் ஒரு காதல் கோட்டையை கட்ட தனது நம்பிக்கையையே முதல் கல்லா எடுத்து வச்சிருக்காரு தயாரிப்பாளர்.

கலக்குங்க பார்த்தி...!

Thursday, January 8, 2009

ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன் படுதோல்வி-முதல்வர் பதவி 'போச்சு'


ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் டமர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் முதல்வர் சிபு சோரன் 9,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவரது முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி பதவியேற்றார் சிபு சோரன். இதையடுத்து ஆறு மாத காலத்திற்குள் அவர் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ. ரமேஷ் சிங் முண்டா, மாவோ தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காலியான டமர் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சிபு சோரன் போட்டியிட்டார்.

பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. இதில் 9,200 வாக்குகள் வித்தியாசத்தில், ஜார்க்கண்ட் கட்சி வேட்பாளர் கோபால் கிருஷ்ண பதரிடம் தோல்வியுற்றார் சிபு சோரன்.



சோரனின் இந்தத் தோல்வியால் அவரது முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒன்றரை மாதத்திற்குள் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவரால் முதல்வர் பதவியில் நீடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் யூனிட்டில் ‘லெக் தாதா’ பரிதாபத்தில் கோலிவுட்!


மணிரத்னம் இயக்கி வரும் ‘அசோகவனம்’ படம் ஊட்டியை தொடர்ந்து கேரளாவில் முகாமிட இருக்கிறது. இந்த யூனிட்டிற்கு பொறுப்பேற்றிருக்கிறாராம் எஸ்.எஸ்.ஸ்டான்லி. இவர் புதுக்கோட்டையிலிருந்து சரவணன், மெர்க்குரிப்பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை போன்ற படுதோல்வி படங்களை கொடுத்த இயக்குனர். சமீபகாலமாக வேலையில்லாமல் அவஸ்தைப்படும் இவர், கடைசியாக பூ படத்தில் சசிக்கு உதவியாக(?) இருந்தார்.

பலத்த ரெக்கமன்டேஷனில் மணிரத்னத்தை சந்தித்தவர், அங்கு கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது மாதிரி வேலை கொடுத்தாலும் சரி. செய்கிறேன் என்றாராம். என்ன இருந்தாலும் டைரக்டர் என்று டைட்டில் கார்டில் பெயர் வந்திருக்கிறதல்லவா? அவரும் மனமிரங்கி இவரை வேலைக்கு சேர்த்துக் கொண்டாராம். (என்ன வேலை கொடுப்பாரோ?)

இந்நிலையில் ‘இவரை பற்றி தெரியாமல் மாட்டிக் கொண்டாரே’ என்று கிசுகிசுவை கிளப்புகிறார்கள் கோடம்பாக்கத்தில். ரோஜாக்கூட்டம் படத்தில் இவர் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தார். அப்போது, குலுமணாலியில் எடுக்கப்பட்ட ‘ஆப்பிள் பெண்ணே நீ யாரோ...’ பாடல் காட்சிக்கு உதவியாக இருக்கும்படி ஸ்டான்லியை அனுப்பி வைத்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். நடன இயக்குனர் தினேஷ் தலைமையில் அங்கு போனது யூனிட். ஆனால் போன முதல் நாளே சாப்பாட்டு விஷயத்தில் கோபப்பட்ட ஸ்டான்லி மொத்த யூனிட்டையும் அப்படியே விட்டு விட்டு சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு ஓடி வந்துவிட்டார். கடும் கோபம் கொண்ட ரவிச்சந்திரன், இப்போதும் பலரிடம் இந்த விஷயத்தை சொல்லி சொல்லி ஆதங்கப்படுகிறார்.

இப்படிப் பட்டவரைதான் நம்பி சேர்த்திருக்கிறார் மணிரத்னம். எப்போது சொல்லாமல் ஓடிப்போவாரோ என்கிறார்கள் இவரைப்பற்றி அறிந்தவர்கள். ‘லெக் தாதா’வை பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாரே என்று மணிரத்னம் மீது பரிதாபப் படுகிறது கோலிவுட். விழித்துக் கொள்வாரா மணிரத்னம்?

பாலிவுட் வாங்களேன்... ராதாமோகனுக்கு அழைப்பு


மொழிக்கு பிறகு பிரகாஷ்ராஜை ஜாக்கி போட்டு தூக்கி நிறுத்தியிருக்கிறது அபியும் நானும். தமிழகத்தில் மட்டுமல்ல, அண்டை மாநிலங்களில் இருந்தும் அபியை தேடி வர ஆரம்பித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும். தெலுங்கு படத்தின் டப்பிங் உரிமை ஏறத்தாழ ஒன்றரை கோடி கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறதாம்.

காரசாரமான கதைகளையே விரும்பும் ஆந்திரவாலாக்கள், அபியை இத்தனை கோடி கொடுத்து வாங்கியிருப்பது பெரிய ஆச்சர்யம் என்கிறார்கள் கோலிவுட்டில்! இதற்கிடையில் தம்பதி சமேதராக படத்தை பார்த்தார்களாம் ஸ்ரீதேவியும், போனிக்கபூரும். பெரும் விலை கொடுத்து இந்தி ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார்கள் பிரகாஷ்ராஜிடமிருந்து.

இதன் இந்தி பதிப்பில் பிரகாஷ்ராஜ் கேரக்டரை அனில் கபூர் நடிக்க, ஐஸ்வர்யா கேரக்டரில் நடிக்கிறார் ஸ்ரீதேவி. த்ரிஷா கேரக்டரில் நடிக்க முன்னணி நாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. “பேசாம பாலிவுட்டுக்கு வந்திருங்களேன்” என்று ராதாமோகனுக்கு ரத்தின கம்பளம் விரித்திருக்கிறார் போனிக்கபூர்.

“ராதாமோகன் நண்பன் மட்டுமல்ல, என்னோட நம்பிக்கை” என்றார் பிரகாஷ்ராஜ். போனிக்கபூரின் நம்பிக்கையாகவும் ஆகியிருக்கிறார் ராதா! ஆஹா...!

உறுப்புகளை தானம் பண்ணுங்க... நமீதாவின் அட்வைஸ்!


உடல் உறுப்புகளை தானம் கொடுப்பது தொடர்பான விழிப்புணர்ச்சி கூட்டம் நடந்தது சேலத்தில். இதில் கலந்து கொள்ள நமீதாவை அழைத்திருந்தார்கள்.(மூன்று லட்சமாம் சார்ஜ்) ஐயாயிரம், மூவாயிரம் என்று தொடங்கி 250 வரை டிக்கெட் கட்டணம். ஆனாலும் மளமளவென்று விற்று தீர்ந்தன!

அதிகாலை ஆறு மணிக்கே வந்து இடம் பிடித்தவர்களும் உண்டு. திரளான கூட்டத்தை கண்டு சந்தோஷித்த நமீதாவும், “நான் கூட்டம் முடியும் வரைக்கும் இங்கேதான் இருப்பேன்” என்றார். அவர் சொல்லி வாய் மூடுவதற்குள் வந்தது சோதனை. நமீதாவுக்கு மேடைக்கு கீழே இடம் கொடுத்தார்களாம் விழாக்குழுவினர். மேடையில் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இடம் பிடித்திருந்ததால் இப்படி ஒரு பிரச்சனை.

பொசுக்கென்று எழுந்து தனது காருக்குள் ஏறிக் கொண்டாராம் நமீ. பின்னாலயே ஓடிய விழாக்குழுவினர் கெஞ்சி கூத்தாடினார்களாம். “இல்லையில்லை. எனக்கு மரியாதை கொடுக்காத இடத்தில் நான் எதற்கு இருக்கணும்?” என்றாராம் நமீ. அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தவர்கள் பிறகு மேடையில் பிரதான இடத்தை கொடுத்து அமர வைத்தார்களாம்.

அவ்வளவு கூட்டமும் நமீதாவுக்காக வந்ததுதானே? அவர்களை சந்தோஷப்படுத்த நமீதா பேசிய விஷயங்களில் அளவுகடந்த சமூக அக்கறை. “எல்லாரும் உடல் உறுப்புகளை தானம் பண்ணனும். நானும் என்னோட உடல் உறுப்புகளை தானம் பண்ணுவேன்” என்றார் நமீ.

நமீதாவை பொறுத்தவரை உடல் மண்ணுக்கு! உறுப்புகள் மற்றவர்களுக்கு!!

Wednesday, January 7, 2009

ஒரு பாடலுக்கு ஆடிய ஹிருத்திக் ரோஷன்

மாடல், வில்லன், ஹீரோ.. இப்போது தயா‌ரிப்பாளர். அர்ஜுன் ராம்பாலின் வளர்ச்சியை பற்றிதான் சொல்கிறோம். இந்த ராக் ஆன் ஹீரோ முத‌ன்முறையாக ஒரு படத்தை தயா‌ரிக்கிறார். படத்தின் பெயர், ஐ ஸீ யு.

படத்தின் விசேஷங்களுள் ஒன்று, நடிகரும், அர்ஜுனின் நெருங்கிய நண்பருமான ஹிருத்திக் ரோஷன் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.

ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகராம் அர்ஜுன் ராம்பால். அவரது படம் வெளியானால் நடனங்களுக்காகவே பலமுறை பார்ப்பாராம். அந்தளவு ஹிருத்திக்கின் நடனத்துக்கு இவர் ரசிகராம்.

தனது முதல் தயா‌ரிப்பான ஐ ஸீ யு-வில் ஹிருத்திக் ரோஷனை ஒரு பாடலுக்கு ஆட அழைத்தபோது மறுக்காமல் ஒப்புக்கொண்டு நடனமாடியதை பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அர்ஜுன்.

சொல்லாமல் இருக்க இது சாதாரண விஷயமில்லையே.

புகைபிடிக்கும் பலக்கத்தல் பிறக்கும் முரட்டுக் குழந்தை கர்ப்பிணிப் பெண்கள்

கர்ப்பிணிப் பெண்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பதற்கு மேலும் பல காரணங்கள் உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.

புகைபிடிக்கும் பழக்கத்தால் எடை குறைவான குழந்தைகள் பிறக்க நேரிடும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கர்ப்பிணிப் பெண்கள் புகை பிடிப்பதால் மிகவும் வன்முறையுடன் கூடிய குழந்தைகள் பிறக்கக்கூடும் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

டச்சு - கனடா நாட்டின் கூட்டு ஆராய்ச்சியில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.

மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனநல பேராசிரியர் ஜீன் செகுயின் மற்றும் நெதர்லாந்தின் லேடன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹ்யூஜ்ப்ரக்டஸ் இணைந்து நடத்திய ஆய்வில், கர்ப்பிணிகள் புகைபிடிப்பதால் அவர்களுக்கு முரட்டுத்தனமான குழந்தைகள் பிறப்பதாகத் தெரிய வந்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் புகைபிடிப்பதால், அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளின் மூளை நரம்புகளில் புகையிலையின் தாக்கம் இருப்பதுடன், அந்தக் குழந்தைகள் மிக மிக மூர்க்கத்தனமான குணங்களுடன் (violent behaviour) பிறப்பதாகத் தெரிய வந்துள்ளது.

சமூக எதிர்ப்பு குணம் கொண்ட பின்னணியுடன் கர்ப்பிணிகள் இருப்பதால், அவர்களின் குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் விடுதல், சட்ட விதிகளை மதிக்காமல் நடத்தல் போன்ற குணங்களுடன் பிறப்பதாகத் தெரிய வந்துள்ளது.

அதிலும் புகை பிடிக்கும் பெண்கள் 21 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பின் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகவும் வன்முறையை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அதிலும் கர்ப்பத்தின் போது, நாளொன்றுக்கு 10 சிகரெட்டிற்கு மேல் பிடிக்கும் வழக்கம் உள்ள பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் முரட்டுத்தன விழுக்காடு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது 18 மாதம் முதல் மூன்றரை வயதுடைய குழந்தைகள் வரை சுமார் 1,745 பேரிடம் நடத்தப்பட்டது.

தாயின் புகைப்பழக்கம் மட்டுமின்றி விவாகரத்து, மன அழுத்தம், மகப்பேறு கல்வி, கர்ப்பத்தின் போது தாயின் வயது போன்றவையும் குழந்தைகளின் வன்முறைக் குணங்களுக்கு காரணமாகிறது என்று அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

முதலிடத்தில் க‌ரீனா கபூர்


இன்றைய தேதியில் பாலிவுட்டின் டாப் ஹீரோயின் யார் என்று கேட்டால், தயங்காமல் க‌ரீனா கபூ‌ரின் பெயரை சொல்லலாம். அவர் நடிக்கும், நடிக்கப் போகும் படங்களின் லிஸ்டை பார்த்தாலே இது பு‌ரியும்.

கரண் ஜோஹா‌ரின் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார், க‌ரீனா. தற்போது இதன் படப்பிடிப்பு பிலடெல்பியாவில் நடந்து வருகிறது. முஸ்லிம் பெண்ணாக இதில் நடிக்கிறார் க‌ரீனா. இதுவரை நடித்த படங்களில் சவாலான வேடம் இது என்பது அவரது ஸ்டேட்மெண்ட்.

ரா‌ஜ்குமார் ஹிரானியின் த்‌ரி இடியட்ஸ் படத்தில் அமீர் கானின் ஜோடியாக நடிப்பதும் இவர்தான். சமிபத்தில் அமீர், க‌ரீனா சம்பந்தப்பட்ட காட்சிகளை லடாக்கில் படமாக்கினார், ஹிரானி. க‌ரீனா போல் அனாடமி கொண்ட நடிகை இன்டஸ்ட்‌ரியில் இல்லை என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார் அமீர்.

கத்‌ரினா கைஃபின் காதலர் சல்மான் சொந்தமாக தயா‌ரிக்கும் main aur mrs khanna படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதும் க‌ரீனா கபூர்தான். இதுதவிர ச‌ஜித் நாடடியட்வாலாவின் kambhakt ishq, காதலர் சைஃப் அலிகானின் ஏஜென்ட் வினோத் என முக்கியமான படங்கள் அனைத்திலும் இவரே ஹீரோயின்.

ஆக, யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார், க‌ரீனா.

நயன்தாரா – பேக் டூ பெவிலியன்

சூர்யா, விஷாலுக்கு மட்டுமின்றி நயன்தாராவுக்கும் சிக்ஸ் பேக் ராசியில்லை. சத்யம், ஏகன் என அடுத்தடுத்து தோல்விகள். பையா படத்திலிருந்து விலகியது சோகத்தின் உச்சம்.

சித்திக்கின் பாடிகாட் படத்தில் திலீப் ஜோடியாக நடித்துவரும் நயன்தாரா, மீண்டும் தனது கொழுகொழு உடம்புக்கு மாற தீர்மானித்துள்ளார். குஷ்பு தொடங்கி சோனா வரை தென்னிந்திய ரசிகர்களுக்கு மப்பும் மந்தாரமுமான நடிகைகள் மீதுதான் ஈர்ப்பு.

இதனை லேட்டாக பு‌ரிந்து கொண்டவர் டயட்டுக்கு விடை கொடுத்து, டைட்டாக கட்டி வருகிறார். சப்பாத்தியையும், சாலட்டையும் தள்ளி வைத்து சாதத்தை ஒரு கை பார்க்கிறார் என்கிறது மலையாள உலகிலிருந்து வரும் செய்திகள்.

உலகம் உருண்டை என்பதற்கு இதோ மேலுமொரு சாட்சி.

பா‌க்‌ஸ் ஆஃ‌பி‌ஸ் டாப் 5 படங்கள்

புதிய வருடத்தின் முதல் வாரம் சிம்புவின் சிலம்பாட்டம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. டாப் 5 படங்களின் பட்டியலில் சூர்யாவின் வாரணம் ஆயிரம் தொடர்ந்து இடம்பெற்றிருப்பதும் சாதனைதான்.

5. வாரணம் ஆயிரம்
சூர்யாவின் சின்சியர் நடிப்பில் உருவான இந்தப் படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தந்தை, மகன் பாசத்தை பின்னணியாகக் கொண்ட படம் என்பதால் குடும்பங்களின் ஆதரவும் இப்படத்துக்கு உள்ளது. சென்ற வார இறுதியில் சென்னையில் மட்டும் ரூ.3,92,187 வசூலித்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

4. பஞ்சாமிர்தம்
புராண கதாபாத்திரங்களை நிகழ்காலத்தில் உலவவிட்ட ராஜு ஈஸ்வரனின் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே சராச‌ரியான வரவேற்பே கிடைத்துள்ளது. குழந்தைகள்தான் இப்படத்தின் பெரும்பான்மை பார்வையாளர்கள். சென்ற வாரம் சென்னையில் இப்படம் வசூல் செய்தது, ஏறக்குறைய ஆறரை லட்சங்கள்.

3. திண்டுக்கல் சாரதி
கருணாஸை வெற்றிகரமான ஹீரோவாக்கியிருக்கும் படம். காமெடியும், சென்டிமெண்டும் ச‌ரிவிகிதத்தில் கலந்த இந்தப் படத்தின் பெரும் பலம் சன் பிக்சர்ஸின் விளம்பரம். இதுவரை சென்னையில் 48 லட்சங்கள் வசூலித்திருக்கும் இப்படத்தின் சென்ற வார வசூல், 9.84 லட்சங்கள்.

2. அபியும் நானும்
கதை, திரைக்கதை, நடிப்பு, வசனம், இயக்கம் என அனைத்திலும் மற்ற படங்களை பின்னுக்கு தள்ளும் ராதாமோகனின் இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகியிருந்தால் நமது ரசனையை மெச்சியிருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக சராச‌ரி வசூலே இந்தப் படத்துக்கு கிடைத்து வருகிறது. சென்ற வார இதன் சென்னை வசூல் 12.75 லட்சங்கள் மட்டுமே.

1. சிலம்பாட்டம்
சிலம்பாட்டத்தின் வேர் இஸ் தி பார்ட்டி டு நைட் பாடல் ஒலிக்காத இடங்களில்லை. ஆபாசமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மீறி தொடர்ந்து முதலிடத்தில் உள்ள இப்படத்தின் சென்றவார வசூல், 28 லட்சங்களுக்கும் மேல். சென்னையில் மட்டும் இரண்டு கோடியை தாண்டி வசூலித்திருப்பது ஆச்ச‌ரியமான நிகழ்வு.

'ஆவக்காய் பிரியாணி' பிந்து மாதவி!


நம்ம சென்னையில் படித்த ஒரு தெலுங்குச் சிட்டு, டோலிவுட்டில் அட்டகாசமாக கலக்க தொடங்கியுள்ளது.

மதனபள்ளியில் பிறந்த அந்த அழகிய நடிகையின் பெயர் பிந்து மாதவி. பயோடெக்னாலஜியில் டிகிரி வாங்கியுள்ள பி்நது மாதவி பிளஸ் ஒன் முதல் சென்னையில் தங்கிப் படித்தவராம்.

ஆவக்காய் பிரியாணி என்ற படம் மூலம் தாய் மொழியாம் தெலுங்கில் அறிமுகமாகிறார் பிந்து மாதவி. படத்தில் மாதவிக்கு சூப்பர் வேடம். அதாவது ஊறுகாய் விற்கும் பெண் வேடமாம். சேலையிலும் கவர்ச்சியை வாரி இறைத்துள்ளாராம் பிந்து மாதவி.

படிப்பில் சராசரி மாணவியான பிந்து மாதவி பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரியில் கல்ச்சுரல் நிகழ்ச்சிகளில் கலக்கியுள்ளாராம். கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் பரிசுகளை அள்ளாமல் வந்ததில்லையாம் பிந்து.

டைட்டனின் டனிஷ்க் விளம்பரத்தில் இவரது அழகைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன தெலுங்கு தயாரிப்பாளர்களான சேகர் கம்முலாவும், அனிஷ் குருவில்லாவும் சினிமாவுக்குக் கூட்டி வந்து விட்டனராம்.

ஆவக்காய் பிரியாணி படத்தில் நடிக்க தேர்வான பின்னர் ஒரு மாதம் பிந்து மாதவிக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார்களாம். ரிஹர்சலும் நடந்ததாம். ஒவ்வொரு சீனையும் ரிஹர்சல் பார்த்து விட்டுத்தான் ஷூட் செய்தார்களாம்.

நடிக்க வருவதற்கு முன்பு சென்னையில் நிறைய மாடலிங் வாய்ப்புகள் வந்ததாம். கிட்டத்தட்ட 20 பேஷன் ஷோக்களில் பூனை நடை போட்டுள்ளாராம். ஆவக்காய் பிரியாணி பட வாய்ப்பு வந்தபோது பிந்துவின் அப்பாதான் நடிக்க பச்சைக் கொடி காட்டினாராம்.

நடிக்க தேர்வானபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைக் கேளுங்கள் என்று ஆர்வத்தோடு பிந்து கூறியதாவது ... ஐஸ்வர்யா ராய் ஹம் தில் தேசுக்கே ஹெய்ன் சனம் படத்தில் நடித்தபோது, காட்சிக்காக நிஜமான பச்சை மிளகாயை கடித்துத் தின்றதாக கேள்விப்பட்டிருந்தேன்.

ஆவக்காய் பிரியாணி படத்திலும் அப்படி ஒரு காட்சியை வைத்தனர். ஐஸ்வர்யாவின் தீவிர ரசிகை நான். எனது குருவே தத்ரூபமாக நடித்தபோது, நான் மட்டும் சும்மாவா. நானும் நிஜ பச்சை மிளகாய்களை நறுக் நறுக்கென கடித்து சாப்பிட்டு நடித்தேன். அப்போது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அடுத்து ஒரு மணி நேரத்திற்கு என்னால் வாய் எரிச்சலைத் தாங்க முடியவில்லை .. என்று கண்களில் திரில் நிரம்ப கூறுகிறார் பி்ந்து மாதவி.

பிந்துவின் கண்களுக்குத்தான் காசே என அவரது நெருங்கிய நட்பு வட்டாரம் கூறுவது வழக்கமாம். அந்த அளவுக்கு அவை பேசும் கண்களாம். உணர்ச்சிகளை நான் நடிக்காமல் கண்களிலேயே காட்டி விடுவேன். அந்த அளவுக்கு அவை ஸ்பெஷலானவை என்கிறார் பெரிய கண்களை சின்னதாக சிமிட்டியபடி.

சரி பிந்து, தமிழ் விஜயம் எப்போது..?

'ஆவக்காய் பிரியாணி' பிந்து மாதவி!


நம்ம சென்னையில் படித்த ஒரு தெலுங்குச் சிட்டு, டோலிவுட்டில் அட்டகாசமாக கலக்க தொடங்கியுள்ளது.

மதனபள்ளியில் பிறந்த அந்த அழகிய நடிகையின் பெயர் பிந்து மாதவி. பயோடெக்னாலஜியில் டிகிரி வாங்கியுள்ள பி்நது மாதவி பிளஸ் ஒன் முதல் சென்னையில் தங்கிப் படித்தவராம்.

ஆவக்காய் பிரியாணி என்ற படம் மூலம் தாய் மொழியாம் தெலுங்கில் அறிமுகமாகிறார் பிந்து மாதவி. படத்தில் மாதவிக்கு சூப்பர் வேடம். அதாவது ஊறுகாய் விற்கும் பெண் வேடமாம். சேலையிலும் கவர்ச்சியை வாரி இறைத்துள்ளாராம் பிந்து மாதவி.

படிப்பில் சராசரி மாணவியான பிந்து மாதவி பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரியில் கல்ச்சுரல் நிகழ்ச்சிகளில் கலக்கியுள்ளாராம். கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் பரிசுகளை அள்ளாமல் வந்ததில்லையாம் பிந்து.

டைட்டனின் டனிஷ்க் விளம்பரத்தில் இவரது அழகைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன தெலுங்கு தயாரிப்பாளர்களான சேகர் கம்முலாவும், அனிஷ் குருவில்லாவும் சினிமாவுக்குக் கூட்டி வந்து விட்டனராம்.

ஆவக்காய் பிரியாணி படத்தில் நடிக்க தேர்வான பின்னர் ஒரு மாதம் பிந்து மாதவிக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார்களாம். ரிஹர்சலும் நடந்ததாம். ஒவ்வொரு சீனையும் ரிஹர்சல் பார்த்து விட்டுத்தான் ஷூட் செய்தார்களாம்.

நடிக்க வருவதற்கு முன்பு சென்னையில் நிறைய மாடலிங் வாய்ப்புகள் வந்ததாம். கிட்டத்தட்ட 20 பேஷன் ஷோக்களில் பூனை நடை போட்டுள்ளாராம். ஆவக்காய் பிரியாணி பட வாய்ப்பு வந்தபோது பிந்துவின் அப்பாதான் நடிக்க பச்சைக் கொடி காட்டினாராம்.

நடிக்க தேர்வானபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைக் கேளுங்கள் என்று ஆர்வத்தோடு பிந்து கூறியதாவது ... ஐஸ்வர்யா ராய் ஹம் தில் தேசுக்கே ஹெய்ன் சனம் படத்தில் நடித்தபோது, காட்சிக்காக நிஜமான பச்சை மிளகாயை கடித்துத் தின்றதாக கேள்விப்பட்டிருந்தேன்.

ஆவக்காய் பிரியாணி படத்திலும் அப்படி ஒரு காட்சியை வைத்தனர். ஐஸ்வர்யாவின் தீவிர ரசிகை நான். எனது குருவே தத்ரூபமாக நடித்தபோது, நான் மட்டும் சும்மாவா. நானும் நிஜ பச்சை மிளகாய்களை நறுக் நறுக்கென கடித்து சாப்பிட்டு நடித்தேன். அப்போது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அடுத்து ஒரு மணி நேரத்திற்கு என்னால் வாய் எரிச்சலைத் தாங்க முடியவில்லை .. என்று கண்களில் திரில் நிரம்ப கூறுகிறார் பி்ந்து மாதவி.

பிந்துவின் கண்களுக்குத்தான் காசே என அவரது நெருங்கிய நட்பு வட்டாரம் கூறுவது வழக்கமாம். அந்த அளவுக்கு அவை பேசும் கண்களாம். உணர்ச்சிகளை நான் நடிக்காமல் கண்களிலேயே காட்டி விடுவேன். அந்த அளவுக்கு அவை ஸ்பெஷலானவை என்கிறார் பெரிய கண்களை சின்னதாக சிமிட்டியபடி.

சரி பிந்து, தமிழ் விஜயம் எப்போது..?

கடுங்குளிரில் மணிரத்னம் படத்தின் பாடல் காட்சி


உ.பி.யில் கடுங்குளிருக்கு நடுவே மணிரத்னம் படத்தின் பாடல்காட்சி பரபரப்பாக படமாக்கப்பட்டுவருகிறது.

கேரளாவில் டெண்ட் போட்டிருந்த மணிரத்னம் பட யூனிட் இப்போது உத்திரபிரதேசத்துக்கு லொகேஷன் மாற்றியுள்ளது. உத்திரபிரதேசத்தில் உள்ள ராம்நகர் அருகே ஒரு கிராமத்தில் தற்போது படப்பிடிப்பு நடந்துவருகிறது. இங்கு விழா நடப்பதுபோன்ற பாடல் காட்சி எடுக்கப்படுகிறது.

இந்தக் காட்சியில் அபிஷேக்பச்சான், விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரபு, கார்ததிக் நடிக்கின்றனர்.ப்ரியாமணியும் இதில் ஒரு கதாபாத்திர்ததில் நடிக்கிறார். இந்த பாடல் காட்சிக்காக அவரும் அங்கு சென்றுள்ளார்.நேற்று நடந்த படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய், கார்த்திக் மட்டும் கலந்து கொள்ளவி்லலை. சென்னையில் நடைபெற்று வரும் 'எந்திரன்' பாடல் காட்சியில் ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார். எனவே இன்னும் இரண்டு நாட்கள் கழித்தே மணிரத்னம் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறாராம் ஐஸ்.

உ.பி.யில் மதியம் 1 மணிவரை பனிமூட்டம் இருப்பதால், தினமும் மதியத்திற்கு பிறகுதான் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. எனினும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்திவருகிறார் மணிரத்னம். நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், துணை நடிகர், நடிகைகள் என மொத்தம் 500 க்கும் மேற்பட்டோர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறார்களாம்.

ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் படமாக்கப்பட்டுவருகிறது. தமிழ் படத்திற்கான காட்சியை எடுத்து முடித்ததும், இந்தியில் எடுப்பதற்காக கிராமத்து வீடுகளுக்கு புதிய வர்ணம் பூசப்பட்டு படமாக்குகிறார்களாம்.

காவ்யா மாதவனுக்கு கர்நாடகாவில் டும் டும் டும்


காவ்யா மாதவனுக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி கர்நாடகாவில் திருமணம் நடைபெறவுள்ளது.
கல்யாணத்திற்கு பிறகு நடித்தால்கூட காவ்யாமாதனை ரசிப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கும். அந்த அளவிற்கு மலையாள திராயுலகில் தனக்கென்று தனி இடம் பிடித்வர். தமிழில் 'காசி', 'என் மனவானில்', 'சாது மிரண்டா' படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதிலும் கணிசமான இடத்தை பிடித்துள்ளார்.

இப்போதும் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டிருக்கும் காவ்யா மாதவன் விரைவில் மணமகளாகப்போகிறார். இவருக்கும் கேரள மாநிலம் காயாங்குளதைச் சேர்ந்த நிஷால் சந்திராவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. நிஷால் சந்திரா துபாயில் பணிபுரிந்து வருகிறார். நிஷாலின் புதிய தொழில் துபாயில் என்றாலும் பழைய தொழில் நடிப்புதான். யெஸ் பத்துக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் நிஷால்.
ஆக காவ்யாமாதவனின் வருங்கால கணவர் ஒரு நடிகர்தான். எனினும் கிசு கிசு கிளம்பும் அளவிற்கு இவர்கள் திருமணம் காதல் திருமணம் அல்ல. பல பேட்டிகளில் காவ்யா மாதவன் சொல்லியிருப்பதைப்போல இது பெற்றோர் பார்த்து முடித்த சம்பந்தம்தான்.

காவ்யா மாதவன் - நிஷால் சந்திரா திருமணம் அடுத்த மாதம் 5-ந் தேதி கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் நடைபெறவுள்ளது. திருமணத்திற்கு பிறகு உறவினர்களுக்காகவும் திரைப்பட நண்பர்களுக்காகவும் தனித்தனி வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மம்முட்டியுன் பட்டணத்தில் பூதம் படத்தில் நடித்து வரும் காவ்யா, திருமணத்திற்கு பிறகு நடிப்பாரா இல்லையா என்பது மணமகன் நிஷாலின் முடிவிலேயே உள்ளது.

ஜாக்கிசான் படம் : ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது


ஜாக்கிசான் நடித்து இயக்கவுள்ள ஹாலிவுட் படமொன்றை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.
உள்ளூர் முதல் உலகச்சந்தைவரை ஜாக்கிசான் படத்துக்கு இருக்கும் மார்க்கெட் பல விநியோகஸ்தர்களின் பாக்கெட்டை நிரப்பும். அவர்களில் ஒருவராக இருப்பவர்தான் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். ஜாக்கிசான் நடித்த பல படங்களை வாங்கி இந்தியாவில் விநியோகம் செய்தார் ரவிச்சந்திரன்.

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் ஜாக்கிசானுக்கான ரசிகர்களை உருவாக்கி தந்ததில் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு பெரும் பங்குண்டு. இந்த செயலே ஜாக்கிசானிடம் ஆஸ்கார் ரவிச்சந்திரனை அறிமுகம் செய்து வைத்தது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி தசாவதாரம் பாடல் வெளியீட்டு விழாவிற்காக அழைத்திருந்தார் ரவிச்சந்திரன். அவரது வேண்டுகோளை ஏற்று சென்னை வந்தபோதே அவரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கும் ஐடியாவை ஜாக்கியின் காதில் போட்டிருந்தார் ரவிச்சந்திரன்.

அந்த ஐடியா விரைவில் செயல்வடிவம் பெறவுள்ளது. ஆம். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கி நடிக்கவுள்ளார் ஜாக்கிசான். அவருடன் பிரபல இந்தி நடிகர் ஒருவரும் நடிக்கிறார். இதற்கான பேச்சு வார்த்தை நடந்துவருகிறது.

படத்தின் படப்பிடிப்பு முழுவதுமே ஹாலிவுட் ஸ்டுடியோவில் நடத்தப்படவுள்ளது. டெக்னீசியன் யாரென்பது இன்னும் முடிவு செய்யவில்லை. ஆக்ஷனும், செண்டிமென்டும் கலந்த கதையாக உருவாகவுள்ளதாம். இதற்கிடையே ஜாக்கிசானின் ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ வேஷமா... நோ ப்ளீஸ் கருணாஸ் முடிவு


ஹீரோ வேஷத்திற்கான கதையை தூக்கிக்கொண்டு கருணாஸை அணுகும் இயக்குனர்கள் ஏமாற்ற முகத்துடன் திரும்புகின்றனர்.
காமெடியன்கள் கதாநாயகர்களாக நடித்த படங்கள் பெரும்பாலும் தோல்வியையே சந்தித்துள்ளது. கதையின் நாயகர்களாக நடித்த நாகேஷ் (சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல்) வடிவேலு (இம்சை அரசன்) படங்கள் மட்டுமே வெற்றியை அடைந்துள்ளது. இவர்களின் வரிசையில் கதையின் நாயகனாக கருணாஸ் நடித்த 'திண்டுக்கல் சாரதி' படம் சூப்பர் வெற்றியை சுவைத்துள்ளது.

அப்படின்னா இனி கருணாஸின் ரூட்டு ஹீரோ ரோலாகதான் இருக்கும் என்று நினைத்தால் கருணாஸின் கணக்கு வேறுமாதிரியாக இருக்கிறது. திண்டுக்கல் சாரதி வெற்றிக்கு பிறகு கருணாஸை தேடி ஏகப்பட்ட ஹீரோ வாய்ப்பு வருகிறதாம் ஆனால் எதையும் ஒப்புக்கொள்ளாமல் நிதானமாக செயல்பட்டு வருகிறார்.

"திண்டுக்கல் சாரதி வெற்றிக்குப் பிறகு நிறைய ஹீரோ வாய்ப்புகள் வருகிறது. நான் முதலில் காமெடி நடிகன். அதன்பிறகுதான் எல்லாமே. படத்தின் கதைக்கு நான் பொருத்தமாக இருந்ததால் வெற்றிபெற்றது. அதற்காக தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் எனது கேரியரே தொலைந்து போய்விடும்.

எனக்கான கதைகள் அமைந்தால் மட்டுமே கதையின் நாயகனாக நடிப்பனே தவிர. தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கும் ஆசை என்னிடம் துளிகூட இல்லை. அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனசில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை" என தெளிவாக திட்டமிடுகிறார் கருணாஸ்.

Tuesday, January 6, 2009

விவகாரமாகும் கஜினி!


இனிமேல் கஜினி படத்தின் வசூல் குறித்து எந்த செய்தியும் போடாதீங்கப்பா என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள் அதன் தயாரிப்பாளர்கள்.

இந்தி கஜினியின் வசூல் விவரத்தை தாக்கல் செய்யுமாறு சென்னை கோர்ட் உத்தரவிட்டிருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

இந்தி கஜினி பட வசூல் விவரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அப்படத்தின் வினியோகஸ்தருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமீர்கான் நடித்து முருகதாஸ் இயக்கிய இந்தி கஜினி படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என கஜினி தமிழ் படத்தின் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ் வழக்கை நீதிபதி சிவக்குமார் விசாரித்து இடைக்கால தடை விதித்தார். இத்தடையை நீக்கக் கோரி கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் அப்பீல் செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் தனபாலன் மற்றும் சத்யநாராயணன் விசாரித்து சில நிபந்தனைகளுடன் படத்தை வெளியிட கடந்தவாரம் அனுமதி அளித்தனர்.

படம் வெளியிட ரூ. 5 கோடி முன்பணம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இவ் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கீதா ஆர்ட்ஸ் சார்பாக மூத்த வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு, வக்கீல்கள் அன்புமணி, சிவராமன் ஆகியோர் ஆஜராகி, 'நீதிமன்ற உத்தரவு படி ரூ. 5 கோடியை, உயர்நீதிமன்ற பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்துள்ளோம். திரைப்படத்தின் வசூல் விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தியா முழுவதும் இந்த திரைப்படம் திரையிடப்பட்டிருப்பதால் வசூல் விவரங்கள் இன்னும் வந்து சேரவில்லை. எனவே ஒருவார கால அவகாசம் வேண்டும்' என்றனர்.

சேலம் சந்திரசேகர் சார்பாக, மூத்த வக்கீல் டி.வி.ராமானுஜம், வக்கீல் என்.எஸ்.கே.சிவராஜ் ஆகியோர் ஆஜராகி, படம் வெளியாகி 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே ஒரு வார வசூல் கணக்கை உடனடியாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இதில் கால அவகாசம் கொடுக்கக் கூடாது என்றனர்.

இதைக்கேட்ட நீதிபதிகள், கஜினி படத்தின் வசூல் கணக்கை இதுவரை தாக்கல் செய்யாதது ஏன்? கணக்கு தாக்கல் செய்ய எத்தனை நாட்கள் அவகாசம் வேண்டும் என்பதை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யுங்கள். அதே போல் வசூல் கணக்கை தாக்கல் செய்யாததற்கான காரணத்தையும் எழுத்து பூர்வமாக தெரிவியுங்கள் என உத்தரவு பிறப்பித்தனர்.

இதையடுத்து எழுத்துப்பூர்வமான மனு ஒன்றை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தாக்கல் செய்தது. அதில் 'படத்தின் வசூல் கணக்கு வரவில்லை. அதனால் அவகாசம் வேண்டும்' என்று கூறியிருந்தனர். இதை கேட்ட நீதிபதிகள், வரும் 27ம் தேதி வசூல் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

'அட்டாக்': கோர்ட்டில் வடிவேலு சாட்சியம்!


சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் நடிகர் வடிவேலு, சென்னை கோர்ட்டில் சாட்சியம் அளித்தார்.

சென்னையை அடுத்த சாலிகிராமத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வீடு உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி, பிறந்த நாள் கொண்டாடிவிட்டு, வீட்டிற்கு நடிகர் வடிவேலு வந்தார். அப்போது வீட்டின் முன் பகுதியில் உள்ள அவரது அலுவலகம் முன் சில கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றை அகற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

இதனால் அவரது அலுவலகத்தை ஒரு கும்பல் சரமாரியாக அடித்து நொறுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக, நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மாரிமுத்து போலீசில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக, நடிகர் விஜயகாந்த்தின் உதவியாளர் சதீஷ்குமார் உள்பட 11 பேர் மீது, போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.



இதுதொடர்பான விசாரணை சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு, மாஜிஸ்திரேட்டு பெஞ்சமின் ஜோசப் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகர் வடிவேலு, அவரது உதவியாளர்கள் மாரிமுத்து, சுரேஷ் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

நடிகர் வடிவேலு தனது சாட்சியத்தில் கூறியதாவது:

2007-ம் ஆண்டு எனது பிறந்த நாளின் போது, இரவு சினிமா ஷூட்டிங் முடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு வந்தேன். அப்போது வாசல் முன் சில கார்கள் நிறுத்தி இருந்ததை கண்டு என்ன என்று விசாரித்தேன். அப்போது நடிகர் விஜயகாந்த் உறவினர் இறந்துவிட்டதால் வாகனங்கள் நிறுத்தி உள்ளதாக கூறினார்கள். உடனே அலுவலகம் முன் உள்ள கார்களை அகற்ற கூறினேன்.

இதைத்தொடர்ந்து, அரை மணி நேரம் கழித்து நடிகர் விஜயகாந்த் உதவியாளர் சதீஷ்குமார் தலைமையில் 30-க்கும் அதிகமானவர்கள் வந்து அலுவலப கண்ணாடிகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். இது பற்றி போலீசில் புகார் செய்தேன் என்றார்.

விசாரணையின்போது, நடிகர் விஜயகாந்த் உதவியாளர் சதீஷ் குமார் உள்பட 13 பேரும் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் அரசு தரப்பு வக்கீல் பன்னீர் செல்வம் விசாரணை நடத்தினார்.

சதீஷ்குமார் சார்பில் அவரது வக்கீல்கள் நமோநாராயணன், பெரியசாமி ஆகியோர் ஒரு மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

அதில், வழக்கில் உள்ள சாட்சிகள் அனைவரும் சாட்சியம் அளித்த பின்தான், குறுக்கு விசாரணை செய்வோம் என்று கூறி இருந்தனர். இதையடுத்து மாஜிஸ்திரேட்டு பெஞ்சமின் ஜோசப், வழக்கு விசாரணையை, வருகிற 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

திருமங்கலம்-110 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை

திருமங்கலம்: திருமங்கலம் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள், மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும் என மதுரை சரக டிஐஜி அம்ரேஷ் பூஜாரி அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 8 கம்பெனிகளைச் சேர்ந்த 800 துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் 1700 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொகுதியில் மொத்தம் 15 செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு மற்றும் சோதனை பணியை மேற்கொண்டுள்ளனர்.

செக் போஸ்ட்களில் போலீஸ் வீடியோகிராபர் மூலம் அங்கு நடக்கும் நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகிறது. பிரச்சனைகள் ஏதாவது ஏற்பட்டால் அதனை சமாளிப்பதற்காக அதிரடிப்படையினர் 25 வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இன்று மாலை 5 மணிக்குள் திருமங்கலம் தொகுதியில் உள்ள வாக்காளர் அல்லாதவர்கள் மற்றும் திருமங்கலம் தொகுதியை சேராத வெளியூர் ஆட்கள் உடனடியாக திருமங்கலம் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்.

அவ்வாறு வெளியேற தவறும் பட்சத்தில் அவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

பிரசாரம் ஓய்கிறது:

இதற்கிடையே நாளை மறுநாள் (9ம் தேதி) தேர்தல் நடைபெறுவதையடுத்து இன்று மாலையுடன் அங்கு பிரச்சாரம் ஓய்கிறது.

110 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை:

இங்குள்ள 1,55, 647 வாக்காளர்கள் ஓட்டளிக்க 190 வாக்குச் சாவடிகள் அமைக்ககப்பட்டுள்ளன.இங்கு மொத்தம் 380 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இவை நாளை அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தொகுதி முழுவதும் 33 கிராமங்களில் 110 வாக்குச் சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நொய்டாவில் எம்.பி.ஏ மாணவி கொடூர கற்பழிப்பு-5 பேர் கைது

நொய்டா: நித்தாரி படுகொலைகள் மற்றும் ஆருஷி படுகொலைக்குப் பெயர் போன நொய்டாவில், மீண்டு் ஒரு பயங்கர குற்றம் நிகழ்ந்துள்ளது. 24 வயது மாணவியை பத்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கற்பழித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பத்து பேரால் கற்பழிக்கப்பட்ட மாணவி எம்.பி.ஏ. படித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் காரில் போய்க் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் வழிமறித்தது. அவர்களை ஒரு புதர் பகுதிக்குள் இழுத்துச் சென்று பெண்ணை அந்தக் கும்பல் கற்பழித்தது.

இந்த அட்டூழியத்தில் ஈடுபட்ட அனைவருக்குமே வயது 20க்குள்தான் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்களில் ஐந்து பேரை போலீஸார் கைது செய்து விட்டனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், மாருதி வேகன் ஆர் காரில் அந்த மாணவியும், அவரது நண்பரும் ஒரு ஷாப்பிங் சென்டருக்குச் சென்றனர். வரும் வழியில் நான்கு பைக்குகளில் வந்த குற்றவாளிகள், காரை வழிமறித்து நிறுத்தினர்.



பின்னர் காருக்குள் ஏறினர். பிறகு காரை ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு ஓட்டிச் சென்றனர். அங்கு வைத்து அந்த மாணவியை கற்பழித்துள்ளனர்.

பின்னர் வேறு சிலரும் வந்து இந்த குற்றத்தில் கலந்து கொண்டுள்ளனர். பெண் ஒருவர் சிக்கியுள்ளதாக மொபைல் போன்களில் தகவல் கொடுத்து அவர்களை இந்த அரக்கர்கள் வரவழைத்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

கற்பழிப்பில் ஈடுபட்டவர்களில் புஷ்பேந்திரா, ஸ்ரீகாந்த், சஞ்சய், சுதிர், கவுதம் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் நொய்டா அருகில் உள்ள கார்கி சவுகாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களையும் தேடி வருகிறோம் என்றனர்.

கற்பழிக்கப்பட்ட மாணவியுடன் சென்ற நண்பர் அமீத் பன்வர் எனத் தெரிய வந்துள்ளது. இவரது தந்தை டெல்லியில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கிறார்.

சீமான் பாரதிராஜா சந்திப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி


விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசிய விவகாரத்தில் சிறை சென்றிருக்கும் சீமானை திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் சென்று சந்திக்கவில்லை என்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாரதிராஜா பார்க்க வரவில்லை என்று சீமான் வருந்தியதாகவும் தகவல்கள் உலவின. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், கோவை சிறையில் இருக்கும் சீமானை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் இயக்குனர்கள் பாரதிராஜாவும், செல்வமணியும்.

அங்கு நிருபர்களை சந்தித்த பாரதிராஜா பேசியதாவது- ஜனநாயக நாட்டில் கருத்து சொல்லும் உரிமை எல்லாருக்கும் உண்டு. விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசலாமா, கூடாதா என்று சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு வரும்போது தெளிவாகிவிடும். இலங்கை தமிழர்களுக்கு திரைத் துறையினர் மட்டுமில்லாமல் தமிழ் சமுதாயம் ஒன்று பட்டு குரல் கொடுக்க வேண்டும்.

விடுதலைப்புலிகளுடன் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை மத்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதையும் மீறி தமிழ் திரைப்பட துறையினருக்கு விடுதலைப்புலிகள் நிதி கொடுக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியிருப்பது மத்திய அரசை களங்கப்படுத்துவது போன்றது. இந்த குற்றச்சாட்டை அவர் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிராஜா கூறினார்.

நான் கடவுள் ஆடியோ புலம்பும் ரசிகர்கள்


பாலாவின் நான் கடவுள் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு Suryaஎழுந்துள்ளது. படத்தின் டிரெய்லர் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் ஆர்யாவின் தோற்றம் ரசிகர்களை மிரட்டி வருவதுடன், படத்தின் பாடல்களை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் மக்கள் மனதில் ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், கோலாகலமாக வெளியிடப்பட்ட ஆடியோ சிடிக்கள் கடைகளில் போதுமான அளவுக்கு அனுப்பப்படவில்லை போலும். சென்னையில் எந்த கடைகளிலும் ஆடியோ சிடிக்கள் கிடைப்பதில்லை என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

இதற்கிடையில் படத்திற்கு இரண்டு க்ளைமாக்ஸ்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதில் ஒன்று ஆர்யா நர மாமிசம் சாப்பிடுவது போல அமைந்திருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. (ஏதாவது ஒரு க்ளைமாக்சைதான் பயன்படுத்தப் போகிறார்கள்) இது குறித்த தகவல்களை அறிய பாலா தரப்பை தொடர்பு கொண்டால், மிக முக்கியமான நபர்கள் அனைவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்கள் கடந்த பல நாட்களாகவே!

கும்பமேளா கூட்டத்திற்குள் நுழைந்து, ரகசியமாக படமாக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சி, இதுவரை இந்திய சினிமா அறியாதது என்றும் பிரமிக்கிறார்கள் படக்குழுவினர்.

விஜய் சென்ட்டிமென்ட்... இடம் மாறிய வில்லு


பூனை பற்றி படம் எடுத்தால் கூட அது குறுக்கே போகாத மாதிரி பார்த்துக் கொள்வார்கள் தமிழ் சினிமாவில். அப்படி சென்ட்டிமென்ட் நிறைந்த உலகம் இது. இதற்கு விஜய் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆதி, அழகிய தமிழ் மகன், குருவி போன்ற படங்களை சத்யம் திரையரங்கில் வெளியிட்டிருந்தார் விஜய். (சிட்டி ரிலீசும் இவரே) ஆனால் அந்த படங்களின் வெற்றியின் சதவீதம், விஜயை பெரும் கவலைக்குள்ளாக்கியது. அதனால் இந்த முறை தனது வில்லு படத்தை தேவி திரையரங்கத்தில் வெளியிடப் போகிறாராம்.

இரண்டு திரையரங்குகளுக்கும் இடையே சில கிலோ மீட்டர்கள்தான் வித்தியாசம் என்பதால், தேவியில் போடும் படங்களுக்கு சத்யத்தில் இடம் இல்லை. சத்யத்தில் போடுகிற படங்களுக்கு தேவியில் இடம் இல்லை. இந்த நீண்ட கால வழக்கப்படி இந்த முறை விஜய் தனது வில்லுவை தேவியில் திரையிடுவதால், சத்யம் தானாகவே ஒதுங்கிக் கொண்டது.

ரஜினி படமாக இருந்தாலும் கூட, ரிலீசுக்கு ஒரு மாதங்கள் முன்போ, அல்லது அவ்வப்போதோ பத்திரிகைளுக்கு படத்தின் ஸ்டில்களை வழங்குவார்கள். இந்த முறை என்ன நினைத்தார்களோ, பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட பிறகும், எந்த பத்திரிகைகளுக்கும் வில்லு படத்தின் ஸ்டில்கள் வந்து சேரவில்லை. அதான் இன்டர்நெட்டில் வெளியாகுதே, எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே? என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

டெக் மஹிந்திராவுடன் இணைப்பா?-சத்யம் கடுகடு!

மும்பை: சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை டெக் மஹிந்திராவுடன் இணைப்பதாக வந்த மீடியா வதந்திகளை நம்ப வேண்டாம் என அந்நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து இன்று பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியமான செபிக்கும் முறையான விளக்கம் தந்துள்ளது சத்யம் நிறுவனம்.இந்த வதந்திகளால் இன்று சந்தையில் சத்யம் பங்குகளின் மதிப்பு 3.56 சதவிகிதமும், டெக் மகிந்திராவின் பங்குகள் 12 சதவிகிதம் வரையிலும் உயர்ந்தன.

இதுகுறித்து சத்யம் நிறுவனம் கூறியிருப்பதாவது:

ஒரு வர்த்தக நாளிதழின் இன்றைய பதிப்பில், டெக் மஹிந்திரா நிறுவனம் முழுமையாக சத்யம் நிறுவனத்துடன் இணையப் போகிறதென்று செய்தி வெளியாகியிருந்தது. மேலும் ஹெச்பி, ஐபிம், மைண்ட்ரீ நிறுவனங்களும் சத்யம் நிறுவனத்துடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்தச் செய்தியில் எந்த உண்மையும் இல்லை, என்று சத்யம் விளக்கம் கூறியுள்ளது.

செபியிலும் இந்த விளக்கத்தை இன்று அளித்துள்ளது சத்யம்.

பங்குகளை வாங்க விரும்பும் ஊழியர்கள்:


இந்நிலையில் சத்யம் நிறுவனப் பங்குகளை வாங்க அதன் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். நிறுவனம் தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கிப் போவதைத் தடுக்கும் விதத்தில், சத்யம் நிறுவனப் பங்குகளை வெளிசந்தையில் வாங்கிக் கொள்ளலாம் என பெரும்பாலான ஊழியர்கள் கூடி முடிவெடுத்துள்ளனர்.

ஆனால் மூன்றாவது காலாண்டுக்கான முடிவுகள் வெளியான பிறகு பங்குகள் வாங்குவதில் இறுதி முடிவு மேற்கொள்ள உத்தேசித்துள்ளனர்.

ஒருவேளை பெரும்பாலான பங்குகள் ஊழியர் கைகளுக்கு வந்துவிட்டாலும் கூட தலைவராக ராமலிங்க ராஜுவே நீடிக்கட்டும் என்று அவர்கள் விரும்பம் தெரிவித்துள்ளனர்.

தீபிகாவுக்கு வயசு 23


பாலிவுட்டின் புத்தம் புதுக் கனவுக் கன்னிகளில் ஒருவரான தீபிகா படுகோன் தனது 23வது பிறந்த நாளை சந்தடியில்லாமல் மும்பையில் கொண்டாடினார்.மாடல் அழகியாக இருந்து பாலிவுட்டுக்குள் பாய்ந்தவர் தீபிகா. முன்னாள் பேட்மின்டன் சாம்பியன் பிரகாஷ் படுகோனின் செல்லப் புத்திரி தீபிகா.

நேற்று தீபிகாவுக்கு 23வது பிறந்த நாள். இதையடுத்து மும்பையில் உள்ள சித்திவிநாயக் கோவிலுக்கு தனது பெற்றோருடன் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.தான் நடித்துள்ள சாந்தினி செளக் டூ சைனா என்ற படத்தின் ரிலீஸை ஆவலோடு எதிர்பார்த்துள்ளார் தீபிகா. அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்துள்ள இப்படம் 16ம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கான புரோமோ நிகழ்ச்சிகளில் தீபிகா பிசியாக இருக்கிறார்.

படத்தில் தீபிகா டபுள் ரோல் செய்திருக்கிறார். ஆக்ஷனும், நடிப்பும் கூடிய அட்டகாசமான ரோல் இது. இப்படத்துக்காக சண்டைக் காட்சிகளி்ல் நடித்த அனுபவத்தால் குஷியாகிப் போன தீபிகா, தன்னை பாலிவுட்டின பொம்பளை அக்ஷ்ய்குமார் என அழைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார் பெருமையாக.

தந்தை பிரகாஷ் படுகோன், தாயார் உஜ்வாலா ஆகியோருடன் கோவிலுக்கு வந்த தீபிகாவுடன், அவரது 'தோஸ்த்' ரன்பீர் கபூர் வரவில்லை.ரன்பீர் கபூர், காத்ரீனா கைபுடன், ராஜ்குமார் சந்தோஷியின் அஜப் பிரேம் கி கஜப் கஹானி படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாராம். இதனால்தான் அவர் வரவில்லையாம்.

வராவிட்டாலும் கண்டிப்பாக வாழ்த்தியிருப்பார் என நம்பலாம்.

பிராணாப்புக்கு விமானம் கிடைக்கவில்லையா?-டி.ஆர்


சென்னை: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதற்கு விமானம் கிடைக்கவில்லையா என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை ராணுவத்திடம் வந்து விட்டது கிளிநொச்சி என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மகிழ்ந்து பாராட்டிக் கொண்டி ருக்கிறார் சிங்கள ராணுவத்தை மெச்சி. இந்த வெற்றி என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இதர ஆறு வெளிநாடுகளின் துணையை வச்சி... அப்படித் தானே! இல்லையென்று இலங்கை அரசால் மறுக்க முடியுமா, இல்லை, தமிழரோடு நேருக்கு நேர் நின்றுதான் மோதி வென்று இருக்க முடியுமா?

சிங்கள அரசின் ஒத்தை துப்பாக்கி, அது சொத்தை துப்பாக்கி. இல்லையென்றால் அது இத்தனை நாடுகளின் துணையை தேடியிருக்குமா? இல்லை, ஆயுத உதவி கேட்டுத்தான் ஓடியிருக்குமா? இவர்களால் ஆறு நாடுகளின் ஆதரவோடுதான் ஆர்ப்பரிக்க முடியும். தமிழனால் தனித்து நின்று போராட முடியும்.



சிங்கள அரசு சொல்கிறது இது தமிழர்களுக்கு பின்னடைவு... இது பின்னடைவு அல்ல... பின்னோக்கி சென்ற வளைவு... பின்னால் தான் தெரியும் அவர்களுக்கு விளைவு...

தமிழன் பதுங்குவான், ஆனால் தன்னம்பிக்கையுடன் பாய்வான். அவனுக்கு பதுங்கவும் தெரியும். பாயவும் தெரியும். ஒரு நாளும் ஓயவும் மாட்டான். தேய்பிறையாய் தேயவும் மாட்டான்.

இதற்கு முன்பும் சிலமுறை கூட கிளிநொச்சியை இழந்திருக்கிறார்கள். பின்னாளில் களம் புகுந்திருக்கிறார்கள். கைப்பற்றியிருக்கிறார்கள். இது கடந்த கால வரலாறு.

வரலாறு மீண்டும் மறுமுறை வரும் என்று வரலாற்று நிபுணர்கள் சொல்வார்கள். அதனால்தான் நான் எம்.ஏ. வரலாறு படித்தவன் என்ற முறையில் கூறுகிறேன் இலங்கையிலும் வரலாறு திரும்பும். கிளிநொச்சியில் மீண்டும் தமிழர்களின் வெற்றி அரும்பும்.

இது என் போன்ற உணர்வுள்ள தமிழர்களின் நம்பிக்கை. இந்த தருணத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும். கடுமையாக கண்டிக்க வேண்டும்.

முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவோடு டெல்லிக்கு சென்றார்.

மன்மோகனின் வாக்கு-சாக்குப் போக்கு:


பிரதமர் மன்மோகன்சிங்கிடம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இங்கைக்கு அனுப்ப வேண்டும். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும். இலங்கையில் அவதிப்படும் அப்பாவி தமிழினத்தை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பிரதமர் மன்மோகன்சிங்கும் உடனடியாக ஆவன செய்வதாக கொடுத்தார் வாக்கு! ஆனால் இத்தனை நாளாக சொல்லிக் கொண்டி ருந்தார்கள் சாக்குப் போக்கு!

வாக்கு கொடுத்து ஒருமாதம் உருண்டோடி விட்டது அதற்குள் தமிழர்கள் தலை அங்கு உருண்டோடிவிட்டது. கிளிநொச்சியை நோக்கி சிங்களப்படை திரண்டோடி விட்டது. இதைத்தான் இந்திய அரசு எதிர்பார்த்ததா? அதற்காகத்தான் காலம் தாழ்த்தியதா?

வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி செல்வதற்கு விமானம் கிடைக்கவில்லையா?- இல்லை தமிழனுக்கு உதவ விசால மனம் இருக்கவில்லையா?

சிங்கள அரசுக்கு ஏன் கொடுத்தீர்கள் அவகாசம் தமிழன் அநியாயமாய் போய் விட்டானே மோசம்.. மாநில அரசிடமும் தமிழக மக்களிடமும் ஏன் ஆடினீர்கள் நாடகம்

சிங்கள அரசுக்கு செய்து வீட்டர்கள் சாதகம். இலங்கைத் தமிழர்களுக்கு செய்து விட்டீர்கள் பாதகம். ஒட்டு மொத்த தமிழர்களுக்கு செய்து வீட்டீர்கள் துரோகம். இந்தியாவில் இருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை ஆறரைக் கோடி... இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்காக உதவ முடியவில்லை எங்களால் ஓடி.

தமிழன் நிற்கிறான் அமங்கலத்தில் - தேர்தல் நிற்கிறது திருமங்கலத்தில்

எங்கள் தொப்புள் கொடி பந்தம் அங்கே துயரத்தில் நிற்கிறது. ஆனால் எங்கள் தமிழினம் இங்கே துப்புக் கெட்டல்லவா நிற்கிறது. கிளிநொச்சியை இழந்து இலங்கையில் தமிழன் நிற்கிறான் அமங்கலத்திலே... ஆனால் இங்கே அரசியல் கட்சிகள் போய் தேர்தல் என்று நிற்கிறது திருமங்கலத்திலே...

தேர்தலுக்காக வாழ பல தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழர் தேறுதலுக்காக வாழ யார் இருக்கிறார்கள்.

பதவிக் காலம் முடியப் போகிறது. பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு அவரவர் அணிமாற தயார் ஆகிறார்கள். இலங்கை தமிழனுக்காக அணிவகுத்து நிற்க யார் இருக்கிறார்கள் சிலர்தான் இருக்கிறார்கள்.. அவரது குரல்வளையையும் சிலர் நெறிக்கிறார்கள்.

தமிழனே உன் கஷ்டகாலம் எப்போது முடியும் உனக்கு பொழுது எப்போது விடியும் கண்ணீரோடு காத்திருக்கிறேன் காலம் வருமென்று பூத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் ராஜேந்தர்.

மலையாளத்தில் வலைப்பதிவு தொடங்கிய மம்முட்டி!


இந்தியில் நட்சத்திர நடிகர்கள் எல்லோருமே தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்ய வலைப்பதிவு தொடங்குவது வழக்கமாகிவிட்டது.குறிப்பாக ஆமீர்கான், அமிதாப் மற்றும் ராம்கோபால் வர்மாவின் வலைத் தளங்கள் மிகப் பிரபலம். தன்னுடைய வலைத் தளத்தில்தான் ஷாரூக்கை மறைமுகமாக 'நாய்' எனக் குறிப்பிட்டு ஆமீர் எழுதியது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.

இப்போது ப்ளாக் எழுதும் ஆர்வம் தென்னிந்திய நடிகர்களையும் பிடித்துக் கொண்டுள்ளது.

மலையாளத்தின் மெகா ஸ்டார் எனப்படும் மம்முட்டியும் இப்போது ப்ளாக் எனப்படும் வலைத்தளம் ஒன்றை துவங்கியுள்ளார்.ஐ அம் மம்மூட்டி.பிளாக்ஸ்பாட்.காம் (www.iammammootty.blogspot.com) என்ற மலையாள வலைப்பதிவை துவக்கி உள்ள அவர், இதில் அரசியல் சமூகம் குறித்த தனது கருத்துகளை எழுதுகிறார். ஜனவரி முதல் தேதி தொடங்கப்பட்ட இதில் முதலாவதாக 'அரசியலில் பணம்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.

அரசியலில் பணம் எப்படியெல்லாம் விளையாடுகிறது என்பதை தனது கட்டுரையில் விவரித்துள்ளார் மம்முட்டி. இனி வாராவாரம் இதுபோன்ற கட்டுரைகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.'பல நேரங்களில், பல சமூகக் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அப்போதெல்லாம் இந்த மாதிரி வலைத் தளத்தில் எழுதுவது சுலமானது, வசதியானது', என்கிறார் மம்முட்டி. விரைவில் இந்த ப்ளாக்கின் ஆங்கில வடிவத்தையும் துவங்கப் போகிறாராம்.

தமிழில், சொந்தமாக கட்டுரை எழுதும் அளவுக்கு நமது ஸ்டார்களுக்கு பொறுமை கிடையாது. மோகன்ராம் என்ற நடிகர் மட்டும் அவ்வப்போது சில ஆங்கிலக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

விக்ரம், விஜய் போன்ற மற்ற நடிகர்கள் தங்களுக்குக்கென்று தனி இணைய தளங்களை உருவாக்கி வைத்துள்ளனர நடிகர்களில் ரஜினிக்கு மட்டுமே அரை டஜன் இணைய தளங்கள் செயல்படுகின்றன. ஏராளமான ப்ளாக்குகளை அவரது ரசிகர்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் இவற்றில் ஒன்றைக் கூட ரஜினி ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!!.

அஜீத்துக்கு இரு தளங்கள் உள்ளன. மற்ற நடிகர்களுக்கு பிரபல வெப்சைட்டுகள் தளங்களை உருவாக்கித் தந்துள்ளன. இதில் அவர்களது பங்களிப்பு எதுவுமில்லை.

மீண்டும் கனிகா

திருமணமாகி சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த கனிகா மீண்டும் நடிக்க வருகிறார். ஜெயராம் ஜோடியாக அவர் நடிக்கும் மலையாளப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமான கனிகாவுக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே கூறலாம். அ‌ஜித் ஜோடியாக நடித்த வரலாறு இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

ஆனாலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்து சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். இவர் கடைசியாக நடித்தப் படம், மம்முட்டியின் பழஸிராஜா. இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இயக்குனர் சத்தியன் அந்திக்காடின் புதிய படத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார், கனிகா. கேரளாவின் குட்ட நாடு பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இளையராஜா படத்துக்கு இசையமைக்கிறார்.

நல்ல வேடங்கள் அமைந்தால் தமிழிலும் நடிக்க தயாராக உள்ளார், கனிகா.

எஸ்.ஜே. சூர்யாவின் இசை


இந்திப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை மீண்டும் தூசு தட்டியிருக்கிறார், எஸ்.ஜே. சூர்யா. பல காலமாக சொல்லிவரும் தனது இசை என்ற யூனிவர்சல் சப்ஜெக்டை விரைவில் இந்தியில் இயக்கி நடிக்கப் போகிறாராம்.

வெற்றிகரமான இயக்குனராக அறியப்பட்ட சூர்யா தனது நடிப்பு ஆசையால் தடம் மாறியது தெ‌ரிந்த விஷயம். ஆனால் அது தடம் மாறியது அல்ல, என்னுடைய விருப்பமே, லட்சியமே நம்பர் ஒன் ஹீரோவாவதுதான் என்று கூறி திகைக்க வைத்துள்ளார்.

தற்போது பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் புலி படத்தை இயக்கி வருகிறவர், அந்தப் படத்தை தமிழில் இயக்கி தானே நடிக்கவுள்ளார். புலிக்குப் பிறகு இசை என்ற படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இயக்கி நடிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்திப் படவுலகம் சூர்யாவுக்கு புதிதல்ல. தனது குஷி படத்தை க‌‌ரீனா கபூர் நடிப்பில் ஏற்கனவே இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கில் வெற்றி பெற்ற குஷி இந்தியில் ப்ளாப்பானது எதிர்பாராத சோகம்.

சூர்யாவின் சிஷ்யர் ஏ.ஆர். முருகதாஸ் இந்தியில் க‌‌ஜினி மூலம் பட்டையை கிளப்பியிருப்பதுதான் சூர்யா தனது பாலிவுட் கனவை து‌ரிதப்படுத்த காரணம் என்கிறார்கள்.

எப்படியோ, நல்லது நடந்தால் ச‌ரிதான்.

விஜய் ஆண்டனியின் அடுத்த ஹிட்

இப்போதைக்கு கோலிவுட்டின் ஹாட்டஸ்ட் இசையமைப்பாளர், விஜய் ஆண்டனிதான். காதலில் விழுந்தேன் ஹிட்டுக்குப் பிறகு அவரது பெயர் சொல்லும் விதமாக வெளிவந்திருக்கிறது, தநா 07 அல 4777 படத்தின் பாடல்கள்.

‌ஜி.வி. பிலிம்ஸ் சார்பில் மகாதேவன் கணேஷ், உஷா வெங்கட்ரமணி தயா‌ரித்திருக்கும் இந்தப் படத்தில் பசுபதி, அ‌ஜ்மல், சிம்ரன், மீனாட்சி ஆகியோர் நடித்துள்ளனர். லட்சுமிகாந்தன் படத்தை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இதன் பாடல்கள் வெளியிடப்பட்டன. விஜய் ஆண்டனியின் இசையில் உருவான இந்தப் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஒளவையா‌ரின் ஆத்தி‌ச்சூடியை தனக்கேயு‌ரிய துள்ளல் இசையில் ரசிக்கும்படி தந்திருக்கிறார் விஜய் ஆண்டனி. வ‌ரிகளை மாற்றி எழுதியிருப்பவர் நா. முத்துக்குமார். கண்ணீரைப் போல ஒரு நண்பன் இல்லை மெலடி ரொம்ப நாட்களுக்கு காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

ஐ போன் என்று தொடங்கும் தீம் ஸாங் இளசுகளை குறிவைத்து போடப்பட்டுள்ளது. படத்தில் இசையமைப்பாள‌ரின் பெயர் சொல்லும் இன்னொரு பாடல், சக்தி ஸ்ரீ பாடியிருக்கும், சொர்க்கம் மதுவிலே...

பாடல்களை தனது சொந்த ஆடியோ நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.

ஜன. 12 முதல் வில்லு

விஜய் ரசிகர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. ஆம், ஜனவ‌ரி 12‌ம் தேதியே திரைக்கு வருகிறது வில்லு.

அழகிய தமிழ் மகன், குருவி என இரு சுமார் படங்களுக்குப் பிறகு வெளிவரும் படம் என்பதால், வில்லுவின் ‌ரிசல்டுக்கு ஆவலாக காத்திருக்கிறார் விஜய். போக்கி‌ரி படம் மூலம் விஜய்க்கு மெகா ஹிட் கொடுத்த பிரபுதேவா வில்லுவை இயக்கியிருப்பது வில்லுவின் வெற்றி சதவீதத்தை அதிக‌ரித்துள்ளது.

இரண்டு நாள் முன்பு படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினர். படத்தின் சில காட்சிகளுக்கு அவர்கள் ஆட்சேபம் தெ‌ரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயுடன் நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேரும் படம் வில்லு என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயின் குருவி, அழகிய தமிழ்மகன் படங்கள் சென்னையில் மட்டும் பதினைந்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டன. இது படம் ஓடும் நாட்களை குறைக்கும் என்பதால் வில்லு வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

பத்துக்கும் குறைவான திரையரங்குகளில்தான் வில்லு வெளியாக இருப்பது, படத்தை முதல் நாளே பார்த்துவிடத் துடிக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமான செய்திதான்.

வரும்போதே தமிழ் பேச்சு! அறிமுக நடிகை தரும் ஆச்சர்யம்


நல்ல பாம்பாக இருந்தாலும் கடிக்குமல்லவா? அப்படி நல்ல படம் எடுத்தும் கையை கடித்துக் கொண்டவர் ரஞ்சித். இவரே இயக்கி தயாரித்த பீஷ்மர் என்ற படத்திற்கு ஏகப்பட்ட பாராட்டுகள். ஆனால் முதலீடு செய்த மொத்த பணமும் கோவிந்தா! ஆனாலும், விடாமல் பசுபதி மே/பா ராசக்காபாளையம் என்ற படத்தை தயாரித்து, முந்தைய படத்தின் நஷ்டத்தையும் சேர்த்து சரி செய்து கொண்டார் ரஞ்சித்.

இந்த முறை தயாரிப்பு வேலையை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒரு படத்தை இயக்கி, இவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். படத்தின் பெயர் ரயிலு. மலையாளத்தில் வெளிவந்த சல்லாபம் என்ற படம்தான் இது. தமிழில் ரீமேக் செய்கிறார் ரஞ்சித். லோகிததாஸ் இயக்கிய இந்த சல்லாபம், மலையாளத்தில் முன்னணி விருதுகளை வாரிக் குவித்திருக்கிறது.

படத்தின் நாயகியாக கரோலின் என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்கிறார்கள்.Carolin ஆங்கிலோ இந்திய பெண்ணான கரோலின் அழகிய தமிழில் பேசுகிறார். இப்படி நடிக்க வரும் புதுமுக நடிகைகள் ‘வாங்க பழகலாம்’ என்று மற்றவர்களை அழைத்து தமிழை கற்றுக் கொள்வதற்குள் மார்க்கெட்டே போய் விடும். ஆனால் வரும்போதே தமிழை திறம்பட கற்றுக் கொண்டு வந்திருக்கிறார் கரோலின்.

ரயிலு ஆங்கில வார்த்தையாச்சே? எப்படி வரிவிலக்கு கிடைக்கும்? என்றெல்லாம் ரஞ்சித்தை குழப்பி வருகிறார்கள் சிலர். கரோலினை தமிழ் பேச வைத்ததற்காகவே வரிவிலக்கு கொடுக்கலாம் ரயிலுக்கு!

வித்யாசாகரின் விஜயம்... லேகா-சொனாட்டோன் பெருமிதம்


வள்ளுவர் கோட்டத்திற்குள் வளர்ந்து நிற்கிற தேர், இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் இசைக்கேற்ப ஆட்டம் போட்டாலும் போடும். அருகாமையில் இருக்கிற லேகா சொனாட்டோன் நிறுவனத்திலிருந்து கசியும் இசைதான் காரணம் என்றால் “ஓவர் ஜால்ரா” என்பீர்கள். ஆனாலும் உண்மை நிலவரம் இதுதான்!

இசையுலகின் இளவரசனாக கருதப்படும் வித்யாசாகர், லேகா சொனாட்டோன் இசை நிறுவனம் பற்றி கேள்விப்பட்டு நேரடியாக ஸ்டுடியோவுக்கே வந்துவிட்டாராம். சுமார் நாலு மணி நேரம். பிழிய பிழிய இசை கேட்டுவிட்டு போயிருக்கிறார்.

பின்னணி இசைக்காக பல்வேறு சூழல்களுக்கேற்ப இசை டிராக்குகளை உருவாக்கி விற்று வரும் இந்த நிறுவனம், தற்போது ரீரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒன்றையும் பிரமாண்டமாக நிர்மாணித்திருக்கிறது. இங்கேதான் வித்யாசாகரின் விஜயம். லேகா சொனாட்டோன் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் லேகா ரத்னகுமார் வித்யாசாகரை வரவேற்று, இசை டிராக்குகளை டெமோ செய்து காண்பித்திருக்கிறார்.

வித்யாவை தொடர்ந்து வித்தைக்காரர்கள் பலரும் விசாரித்துக் கொண்டிருக்கிறார்களாம். வரட்டும்... இசை பீட்சாவை ருசிக்கட்டும்...

கோடம்பாக்கம் வந்த நார்வே பேராசிரியர்!


நார்வேயில் கல்லூரி பேராசிரியராக இருக்கிறார் ஹரிதாஸ். இவர் எடுத்த எட்டு குறும்படங்களுக்கும், சர்வதேச பட விழாக்களில் பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறது. 94 ம் வருடத்தில் ‘மூணுல ஒண்ணு’ என்ற மலையாள படத்தை இயக்கியிருக்கிறார் ஹரிதாஸ்.

இப்போது தமிழில் இவர் இயக்கிவரும் படம் ‘மீண்டும் மீண்டும்’ முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிற படம். 21 செஞ்சுரி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. தனது குறும்படங்களில் அழுத்தமான சம்பவங்களை மையப்படுத்தும் ஹரி, மீண்டும் மீண்டும் படத்தை சற்று விசாலமான பார்வையோடு இயக்கியிருக்கிறார். கொஞ்சம் கமர்ஷியல் விஷயங்களும் இருக்கிறதாம் இதில்.

கமர்ஷியல் என்றால் குத்துப்பாட்டு, ஃபைட் இப்படியா? என்றால், பொசுக்கென்று கவலை உட்கார்ந்து கொள்கிறது ஹரியின் முகத்தில். “ஐயய்யோ, அப்படியெல்லாம் எதுவும் இல்லை. குறும்படங்கள் மாதிரி இல்லாமல் விறுவிறுப்பா சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளோடு அமைந்திருக்கும். அதைதான் கமர்ஷியல்” என்றேன் என்கிறார் ஹரி.

முதல் கமர்ஷியல் படத்தை எதற்காக தமிழில் எடுக்கணும்? தாய் மொழியான மலையாளத்தில் எடுத்திருக்கலாமே? என்றால், தமிழ் பட பிளாட்பாரம்தான் விசாலமானது. கொஞ்சம் புதுசா யோசிக்கிறவங்களுக்கு இங்கே வரவேற்பு இருக்கு என்கிறார் ஹரிதாஸ். இவரது நம்பிக்கையை நிஜமாக்கிடுங்க ரசிக மகா ஜனங்களே

தமிழ்சினிமா அறியாத கிராமம் முத்திரை படத்தில் மிரட்டும் செட்!


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பதை, அந்த Anisஆணின் மறைவுக்கு பின்னால் நிரூபித்திருக்கிறார் அனீஸ். இவர் மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஜீவாவின் மனைவி. இவரது படங்களில் பின்னணியில் இருந்து செயல்பட்ட அனீஸ், தற்போது ‘முத்திரை’ படத்தின் மூலம் முன்னணிக்கு வந்திருக்கிறார்.

ஜீவானின் நினைவிலேயே விஷன் ஜீவா ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை துவங்கியிருக்கிறார் அனீஸ். இந்த நிறுவனம் தயாரிக்கும் முத்திரை படத்தில் நிதின் சத்யா, டேனியல் பாலாஜி, லட்சுமிராய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஜீவாவிடம் பணியாற்றிய ஸ்ரீநாத் இப்படத்தை இயக்குகிறார்.

தமிழ் சினிமா இதுவரை பார்க்காத கிராமம் ஒன்றை இந்த படத்தில் காண்பிக்க போகிறார்களாம். அதாவது வெளி உலக நாகரீகங்கள் எதுவும் வந்து சேராத கிராமம். இப்படி ஒரு கிராமத்தை திருப்பதி அருகே செட் போட்டு உருவாக்கியிருக்கிறார்கள். Muthirai(கொஞ்சம் தேடினால் ஒரிஜனல் கிராமத்தையே கண்டுபிடித்திருக்கலாமே) படத்தின் ஹீரோக்களான இருவரும் திருடர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் இரண்டு பெண்களும், அவர்களின் காதல் பற்றிய சம்பவங்களோடு, அரசியலையும் கலந்திருக்கிறாராம் ஸ்ரீநாத்.

ஜீவாவின் படங்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ், திருமதி அனீசுக்கு கை கொடுக்காவிட்டாலும், யுவன்சங்கர்ராஜா இசையமைத்து தந்திருக்கிறார்.

இந்த முயற்சியும் முத்திரையாகவே இருக்கட்டும்...

Monday, January 5, 2009

'பூ' விற்கு மக்கள் தொலைக்காட்சி விருது


2008-ம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருது 'பூ' படத்திற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை வீண் போகவில்லை. 'பூ'விற்கு முதல் ஆளாக விருது தர முந்திக்கொண்டுள்ளது மக்கள் தொலைக்காட்சி.
மறைந்து வரும் தமிழின் அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மக்கள் தொலைக்காட்சி, புதிய திட்டங்களுடன் 2009-ஆம் ஆண்டில் களமிறங்கியுள்ளது. அந்த வகையில் சாதனைத் தமிழர்களை அடையாளங்கண்டு பாராட்டும் விதமாக மக்கள் விருதுகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி 2008-ஆம் ஆண்டின் தமிழகத்தின் 32 துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மக்கள் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளது.

சிறந்த நாளிதழ், சிறந்த எழுத்தாளர், சிறந்த தமிழ்ப் பணி, சிறந்த குடிமகன், சிறந்த நாடகம், சிறந்த குறும்படம், சிறந்த விளையாட்டு வீரர் உள்ளிட்ட 31 துறைகளில் சிறந்தவர்களை தேர்வு செய்து இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

மக்கள் விருது 2008க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 32 பேருக்கு வருகிற 12 ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விருதுகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார். மக்கள் தொலைக்காட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மக்கள் விருது ஏன் என்ற விளக்க உரை நிகழ்த்த உள்ளார். இந்த விழாவில் பேரறிஞர்களும், பலதுறை வல்லுனர்களும் கலந்து கொள்கின்றனர்.

போகி தமிழ்பபுத்தாண்டு அன்று தொடங்கும் பொங்கல் கொண்டாட்டத்தில் நான்கு நாட்கள் வண்ணமயமான நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகளின் பெயரில் அரங்குகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. வண்ணமயமான உள் அரங்குகள், வெளிப்புற படப்பிடிப்புகள், மலேசியா நாட்டிற்குச் சென்று பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் என்று தொலைக்காட்சி வரலாற்றில், இதுவரை இல்லாத அளவிற்கு 96 மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்பாக உள்ளது.

மேற்கண்ட தகவல்களை இன்று வெளியிட்ட டாக்டர் ராமதாஸ் விருது பெறும் நபர்களை முன்கூட்டியே சொன்னால் விழாவின் சுவாரஸ்யம் போய்விடும் என சஸ்பென்ஸ் வைத்தார். எனினும் சிறந்த திரைப்படமாக 'பூ' தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் இயக்குனர் சசிக்கு விருது தரப்படவுள்ள செய்தியும் நம் செவிகளை வந்தடைந்தது.

இந்தி ரீ-மேக்கில் கமல்?

பாலிவுட்டில் சென்ற வருடம் மெகா பட்ஜெட் படங்கள் பல மண்ணை‌க் கவ்வியபோது, மினிமம் பட்ஜெட்டில் தயாரான படங்கள் லாபம் சம்பாதித்து‌க் கொடுத்தன.

ராக் ஆன், லாஸ்ட் லியர், கோஸ்லா கா கோஸ்லா, தி வெனெஸ்டே… என சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படங்களில் நீரஜ் பாண்டேயின் தி வெனெஸ்டே விமர்சகர்களின் பெருத்த வரவேற்பை பெற்றது.

மும்பை குண்டு வெடிப்பை பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை வாங்க கமல்ஹாசன் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நஸ்ருதீன் ஷா நடித்த வேடத்தில் கமலும், போலீஸ் கமி­னராக அனுபம் கெர் நடித்த வேடத்தில் மம்முட்டியும் நடிக்கயிருப்பதாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, தி வெனெஸ்டே திரைப்படத்தின் தமிழ் ரீ-மேக்கில் பசுபதி நடிப்பதாக சில வாரங்கள் முன் செய்திகள் வெளியாயின. இந்தியில் தி வெனெஸ்டே படத்தை தயாரித்த யு டிவி நிறுவனம் இதனை மறுத்தது.

இந்தியில் தயாரித்த படங்களை தமிழில் ரீ-மேக் செய்யும் எண்ணம் இருப்பதாகவும், ஆனால் தி வெனெஸ்டே படத்தின் தமிழ் ரீ-மேக்கில் பசுபதி நடிப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும் யு டிவி நிர்வாகி தெரிவித்தார்.

கமல் தி வெனெஸ்டே ரீ-மேக்கில் நடிப்பது குறித்து இதுவரை யு டிவி தரப்பில் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்பிரஸ் ரூபத்தில் எமன்; தப்பித்தார் நடிகர்

எக்ஸ்பிரஸ் ரெயில் ரூபத்தில் வந்த எமனிடமிருந்து உயிர் தப்பியுள்ளார் பசுபதி. இதனால் படப்பிடிப்பு குழுவே பதட்டத்தில் ஆழ்ந்தது.

ஜீ.வி.பிலிம்ஸ் தயாரிப்பில் லஷ்மிகாந்தன் இயக்கும் படம் ‘தநா-07அல4777'. இந்தியில் வெளிவந்து மெகா வெற்றியை பெற்ற டாக்ஸி படத்தின் ரீமேக்தான் இது. இந்தியில் நானாபடேகர் நடித்த வேடத்தில் பசுபதி நடிக்கிறார். மற்றொரு நாயகனாக அஜ்மல் நடிக்க கதாநாயகியாக மீனாட்சி நடிக்கிறார். பசுபதி ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.

இப்படத்திற்காக சமீபத்தில் காஞ்சிபுரத்தில் சேஸிங் காட்சி படமாக்கப்பட்டது. ரயில் தண்டவாளத்தில் காரை நிறுத்தி அதில் ரயில் போதுவதுபோன்ற காட்சிக்காக படப்பிடிப்புக்குழுவினர் தயாராகிக்கொண்டிருந்தனர். இந்த காட்சியில் பசுபதி நடித்தார்.

ரயில்வே கேட்டை கடந்து பசுபதியின் கார் செல்லும்போது வேகமாக வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் காரில் மோதுவதுதான் காட்சி. ரெயில் காரின் அருகில் வரும்போது காரிலிருந்து இறங்கி வேகமாக ஓடவேண்டுமென பசுபதிக்கு காட்சியை விளக்கினார் இயக்குனர். அதன்படி நடிக்க தயாரானார் பசுபதி.

தூரத்தில் ரெயில் வரும்போது டேக் சொன்னார் இயக்குனர். ரெயில் அருகே வந்ததும் காரிலிருந்து கீழே இறங்கி ஓடுவதுபோல நடிக்க ஆயத்தமான பசுபதி, திடீரென தண்டவாளத்தில் தடுக்கி விழுந்தார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் பசுபதி கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாரித்துக்கொண்டு தண்டவாளத்திலிருந்து வெளியே வருவதற்கும் ரயில் கடந்து செல்வதற்கும் சரியாக இருந்தது.

சில நொடிகள் தாமதம் செய்திருந்தாலும் பசுபதியின் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருக்கும் என்பதால் இயக்குனர், கேமிராமேன், ஸ்டண்ட் மாஸ்ட்டர் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் பதட்டமடைந்தனர்.

'அகம் புறம்' : ஷாமின் இன்னொரு முகம்


'அகம் புறம்' படத்தில் என் திறமையின் இன்னொரு முகத்தை பார்க்கலாம் என சேவல் ஸாரி சவால் விடுகிறார் ஷாம்.'12 பி' வந்த நேரம் அது. பத்திரிகைகள் ஒரு பக்கம் பாராட்டித் தள்ள, இளைஞிகளின் இதயத்திலும் ஷாமிற்கு நாற்காலி போடப்பட்டது. அதன்பிறகு ஷாமை தேடி வந்த கேரக்டர்களும் காதல் இளவரசனாகவே இருக்க ஷாமிற்கு திருப்புமுனை இல்லை. அவரை பாராட்டித்தள்ளிய பேனா முனைகளும் அதிகம் கண்டுகொள்ளவில்லை.

தன் தொய்வுகளை தூக்கி நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள ஷாமின் கையில் இப்போது 'அந்தோனியார்', 'அகம் புறம்' என சொற்ப படங்கள் உள்ளது. சாக்லெட் பையனாகவே பல படங்களில் வேஷம் கட்டியுள்ள ஷாம் சமீபகாலமாக ஆக்ஷ்ன் ரூட்டுக்கு மாறியுள்ளார். ஆக்ஷ்ன் படங்கள் என்னை இன்னொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்லும் என்னும் ஷாம், தனது நம்பிக்கையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"ஒரே மாதிரியான படங்களுக்கு மத்தியில் ஆக்ஷ்ன் படங்கள் ஒரு மாறுதல். அவ்வளவுதான், ஹீரோவாக நீடிப்பதற்கு ஆக்ஷ்ன் படங்கள் அவசியம். ஆனால், அதுவே ஹீரோவுக்கான அடையாளமில்லை. ஆக்ஷ்ன் படங்களில் நடித்தாலும் இடையிடையிலே '12 பி' ஷாம் மாதிரியான கேரக்டர்களிலும் நடிப்பேன்.

புதிய தோற்றங்களில் கோணங்களில் நடிக்கும்போது நமக்குள் இருக்கும் இன்னொரு திறமை வெளிவர நிறைய வாய்ப்பிருக்கிறது. 'அந்தோனி யார்' படத்தில் விவேக்குடன் சேர்ந்து காமெடி செய்திருக்கிறேன். 'அகம் புறம்' படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் இன்னொரு ஷாமை அடையாளம் காட்டும்" என்கிறார்.

என்னை பார்க்காதீங்க... திவ்யாவின் திடீர் வேண்டுகோள்


என்னதான் திவ்யா ஸ்பந்தனா என பெயரை மாற்றிக் கொண்டாலும் குத்து ரம்யா என கூப்பிடுவதில்தான் ரசிகர்களுக்கு அலாதி ப்ரியம்.

எப்படியாவது தனது நடிப்பு திறமையை கொட்டி விடவேண்டும் என ஒவ்வொரு படத்திலும் இவர் முய்சி எடுத்தாலும், இவர் காட்டும் கவர்ச்சியே ரசிக்கள் மனதில் பதிகின்றன. இரவுகளின் தூக்கத்தை கெடுக்கும் இந்த வேதனையை தீர்க்க திடீர் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார் ரம்யா ஸாரி திவ்யா.
அது என்னவென்பதை அவர் வாயாலேயே கேட்போம்...

"என் வாழ்வில் பல முறை கடுமையான கட்டங்களை கடந்திருக்கிறேன். விளம்பரங்களுக்கு போஸ் கொடுக்க கேட்டு நிறைய வாய்ப்புகள் வருகிறது. தேர்வு செய்துதான் ஒப்புக்கொள்கிறேன். என்னை கவனிப்பதைவிட, நான் நடிக்கும் படங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். எவ்வித எதிர்மறை கேள்விகளுக்கும் இனி பதில் அளிக்கப்போவதில்லை. ஏதாவது ஒரு கருத்தை சொன்னால் அதை ஊதி பெரிதாக்கி விடுகிறார்கள்.

கதையே கேட்காமல் நட்புக்காகவும், மரியாதைக்காகவும் ஒப்பு்கொண்ட சில படங்கள் தோல்வியாக அமைந்தது. அதைப்பற்றி பேசுகிறவர்கள், 2008ல் பெரிய ஹிட்டான எனது படங்களைப் பற்றி பேச தயங்குவது ஏன்? தமிழில் 'பொல்லாதவன்' வெற்றிக்குப் பிறகு 'வாரணம் ஆயிரம்' படத்துக்கு 2 வருடம் கடுமையாக உழைத்தேன். அதில் பலவேறு காட்சிகள் நீக்கப்பட்டிருப்பது கண்கூடாகவே தெரிந்தாலும் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்ததில் திருப்தி. கோடிகளில் சில நடிகைகள் சம்பளம் வாங்குவதுபோல் நீங்கள் சம்பளத்தை உயர்த்துவீர்களா? என்கிறார்கள். எனக்கு தேவையான சம்பளத்தை மட்டுமே வாங்குகிறேன். அதுவே போதும்" என்ற திவ்யாவிடம் நாமும் சொன்னோம் போதும்.

குட்டி கமல் கெட்டப்பில் தனுஷ்


வித்தியாசமான கெட்டப் ஆசை தனுஷையும் விட்டுவைக்கவில்லை. 'படிக்காதவன்' படத்தில் குட்டி கமலாக நடிக்கிறார்.
'துள்ளுவதோ இளமை' தொடங்கி 'யாரடி நீ மோகினி'வரை உடம்பை ஒரே மாதிரியாக மெயிண்டெயின் பண்ணி வருகிறார் தனுஷ். கொஞ்சம் சதை போட்டாலும் விடலை பருவ தோற்றம் தம்மை விட்டு காணாமல் போய்விடும் என்ற ஜாக்கிரதையே அதற்கு காரணம்.

படத்தில் ஐம்பது பேரை அடித்து நொறுக்கும் கேரக்டராக இருந்தாலும் பாடிபில்டர் போன்று உருவத்தை மாற்றாமல் தனது ஒரிஜினல் ஒல்லிபிச்சான் உடம்பை வைத்தே ஆக்ஷ்ன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.. பிரகாஷ்ராஜின் பேரன் வேஷமாக இருந்ததாலும் சரி, பிரகாஷ் ராஜை எதிர்ககும் ஹீரோ வேஷமாக இருந்தாலும் சரி தனுஷ் நடித்தால் நம்ப முடிகிறது.

தான் நடித்த எல்லா படங்களிலுமே வித்தியாசமான கெட்டப்பை போட்டதில்லை தனுஷ். அப்படியான விஷப்பரிட்சையில் இறங்குவது வெட்டிவேலை என்பதையும் நன்கறிந்தவர் தனுஷ். ஆனால் காலத்தின் போக்கில் மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது தனுஷிற்கு.

இப்போதைய ஹீரோக்கள் எல்லாம் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப்பில் மிரட்ட ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலைதான் தனுஷின் மாற்றத்திற்கும் காரணம். சுராஜ் இயக்கத்தில் 'படிக்காதவன்' படத்தில் நடித்துவரும் தனுஷ், ஒரு காட்சியில் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் கமல் நடித்துள்ள அப்பு கேரக்டரில் நடிக்கிறாராம். இதற்காக கால்களை கட்டிக்கொண்டு மிகவும் சிரமம் எடுத்து நடித்துள்ளாராம்.

'ஐஸை'க் கடித்த அட்டை!


கேரளாவில் ராவணா பட ஷூட்டிங்கின்போது அட்டைப் பூச்சி கடித்ததால், டென்ஷன் ஆனார் ஐஸ்வர்யா.

மணிரத்தினத்தின் ராவணா படப்பிடிப்பு கேரளாவின் கொச்சி வனப்பகுதியில் நடந்து வருகிறது. இதற்காக அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரும் அங்கு முகாமிட்டுள்ளனர்.

விஷ ஜந்துக்கள் நிறைந்த வனப்பகுதியாம் அது. பாம்புகளும், அட்டைப் பூச்சிகளும் அளவில்லாமல் சுற்றித் திரியும் பகுதி என்பதால் உள்ளூர்க்காரர்களின் உதவியுடன் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் மணிரத்தினம்.

இந்த நிலையில் படப்பிடிப்பின்போது ஐஸ்வர்யா ராயை அட்டைப் பூச்சி ஒன்று கடித்து விட்டதாம். இதையடுத்து அந்த இடத்திலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அட்டையைப் பிடுங்கி எறிந்து முதலுதவி கொடுத்து சரி செய்தனாரம்.

இப்படி அட்டையும், பாம்புகளும் தொல்லை தந்தாலும் கூட முக்கியமான காட்சியைப் படமாக்க வேண்டியிருப்பதால் ஐஸ்வர்யா ராய் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரே அப்படி என்றால் மற்றவர்களைக் கேட்க வேண்டுமா. அத்தனை பேரும் மணிக்காக, விஷ ஜந்துக்களைப் பற்றிக் கவலைப்படாமல் நடித்துக் கொண்டுள்ளனராம்.



இப்போது படப்பிடிப்பு இடத்தில், ஒரு பாம்பாட்டியும் உடன் இருக்கிறார். பாம்பு ஏதாவது வந்தால் உடனே அவர் பிடித்து விடுகிறாராம்.

மணிரத்தினம் படம் எடுப்பது புதிதல்ல. இப்படி பாம்பாட்டியுடன் அவர் படம் எடுப்பது இதுவே முதல் முறை என்று தெரிகிறது.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த சர்ச்சை - ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு

சென்னை: திருமங்கலம் தொகுதி வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணம் கொடுத்ததாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

திருமங்கலம் தொகுதி தேர்தல் பிரசாரம் முதல் நாளிலிருந்தே அனல் பறந்து வருகிறது. வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்ததாக அவர்களில் சிலரை திமுகவினர் கையும் களவுமாக பிடித்தனர்.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இரு தரப்பும் சரமாரியாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களிடம் புகார்களைக் கொடுத்து வருகின்றனர்.



இந்த நிலையில் தொகுதிப் பாதுகாப்புக்காக தற்போது துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் அதிமுக தரப்பில் புதிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது போல உள்ளது.

வாக்காளர்களுக்கு ஸ்டாலினும், அவருடன் வருபவர்களும் பணம் கொடுக்கின்றனர். இது அப்பட்டமான தேர்தல் விதி மீறலாகும் என அதிமுக கூறுகிறது.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுகையில், ஸ்டாலினும் மற்ற திமுக அமைச்சர்களும் பணம் கொடுப்பது போன்ற வீடியோ வெளியாகியிருப்பது எந்த ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை.

திமுக எப்படியெல்லாம் கீழ்த்தரமாக செயல்படுகிறது என்பதையே இது காட்டுகிறது. தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்கு அவர்கள் பணம் கொடுக்கின்றனர் என்றார்.

ஆனால் அதிமுகவின் புகாரை திமுக நிராகரித்துள்ளது. ஸ்டாலின் இருப்பது போன்ற காட்சிகள் சமீபத்திய காட்சிகள் அல்ல. அது தேர்தல் பிரசாரமும் அல்ல. திமுக கட்சி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படத்தை வெட்டி, ஒட்டி, எடிட் செய்து போலி வீடியோவை உருவாக்கியுள்ளனர் அதிமுகவினர்.

திருமங்கலத்திலும் ஸ்டாலின் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அது கட்சி விழா என்று திமுக தரப்பு விளக்கியுள்ளது.

இந்த நிலையில் ஸ்டாலின் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இன்று கருணாநிதி பொதுக் கூட்டம்:

இந் நிலையில் திருமங்கலம் தொகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி இன்று பேசுகிறார்.

தேவர் சிலை அருகே நடைபெறும் இந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தமிழக தலைவர் கே.வி.தங்கபாலுவும் கலந்து கொள்கிறார்.

அதிமுக வெற்றி பெறும்-சர்வே கூறுவதாக ஜெ. தகவல்


ிருமங்கலம்: திருமங்கலம் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என சர்வே கணித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.திருமங்கலம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் ஜெயலலிதா.

அவர் பேசுகையில், பாலார், பெரியாறு, ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் மக்கள் நலனை புறக்கணித்து விட்டது திமுக அரசு. கச்சத்தீவிலும் மக்களைக் கைவிட்டு விட்டது திமுக அரசு.திருமங்கலம் மக்கள் திமுகவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். ஜனநாயக கொள்கைகளை குழி தோண்டிப் புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது திமுக அரசு.


அனைத்து தேர்தல் கருத்துக் கணிப்புகளும் அதிமுகவே வெற்றி பெறும் என கணித்துள்ளன. இதை அறிந்து திமுக தலைவர் கருணாநிதி அதிர்ச்சி அடைந்துள்ளார். அவருக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது.மு.க.அழகிரியை தேர்தல் பணிக்குழுத் தலைவராக நியமித்ததற்கு முக்கிய காரணமே, வாக்காளர்கள், ஓட்டுப் போட வரக் கூடாது, அவர்கள் அச்சமடைய வேண்டும் என்ற உள்நோக்கம்தான். அப்போதுதான் முறைகேடுகளில் ஈடுபட முடியும் என்பதால் அழகிரியை தேர்தல் பணிக் குழுத் தலைவராக நியமித்துள்ளனர்.

தேர்தல் நாளன்று மு.க.அழகிரியின் மூலம் படைபலம், பணபலம், அதிகார பலத்தை பயன்படுத்தியும், குண்டர்கள் மூலமும் அவர்களே வாக்குகளை பதிவுசெய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.திமுக தோல்வி பயத்தில் அதிமுகவினரை தேர்தல் பணி செய்யவிடாமல் பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளது.

திருமங்கலம் தேர்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி என்ற நிலையில் இந்த தேர்தலை தள்ளிப் போட கருணாநிதி முயற்சி மேற்கொண்டார். இதற்காக மூத்த அமைச்சர்கள் மூலம் மத்திய அரசை கெஞ்சிப்பார்த்தார். தேர்தலை தள்ளிப் போடுவதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. சூது, சதி செய்து வெற்றியை பறிக்க நினைக்கிறார்.

இந்தத் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என சர்வே கணித்துள்ளது.

ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ். அதிகாரிகளின் துணையுடன் ..

வாக்குப்பதிவு நாளன்று மிகப்பெரிய சதித்திட்டத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி துணையுடன் சதித்திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

மொத்தமுள்ள 190 மின்னணு இயந்திரங்களில் 130 மின்னணு இயந்திரங்களை அவர்கள் விருப்பம் போல் தயாரித்து திமுகவுக்கு அதிக வாக்குகள் விழும்படி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுதானால் மாற்று ஏற்பாட்டிற்காக கூடுதலாக இயந்திரம் கொண்டுசெல்லப்படும். முதலில் வைக்கப்பட்ட இயந்திரம் பழுதான தாகக் கூறி மாற்று இயந்திரத்தை வைப்பார்கள். அதில் மேற்கண்ட ஏற்பாடுகள் இருக்கும்.

எனவே வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும் மின்னணு இயந்திரத்தின் எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சதித்திட்டம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம் என்றார் ஜெயலலிதா.

பின்னர் கரடிக்கல், கீழ உரப்பனூர், மேல உரப்பனூர், சித்தாலை, புங்கங்குளம், வாகைக்குளம், சின்ன வாகைக்குளம், காண்டை, பண்ணிக்குண்டு, சாத்தங்குடி ஆகிய இடங்களில் பேசினார்.

இன்று கூத்தியார் குண்டு, சிவரக்கோட்டை, அகத்தாப்பட்டி, வில்லூர், கள்ளிக்குடி, கே.வெள்ளாகுளம், மேலப்பட்டி, சென்னம்பட்டி, குராயூர், நொச்சிக்குளம், மருதக்குடி, வேப்பங்குளம் ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்து பேசவுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நேர்மையான அதிகாரி என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இது தேர்தல் கமிஷனுக்கும் தெரியும் என்றார்.

கூட்டணி கட்சியினருக்கு ஜெ நன்றி:

இதற்கிடையே அதிமுக வேட்பாளரின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அவரை திருமங்கலத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் எம்பி மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் ஆகியோரும்,

இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் எஸ்.ஜெ.இனாயத்துல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலர் எம்.ஜி.தாவூது மியா கான், மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, இந்திய உழவர் உழைப்பளார் கட்சி மாநில தலைவர் வேட்டவலம் மணிகண்டன் மற்றும் பல அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்தனர்.

அப்போது, அதிமுக வேட்பாளரின் வெற்றிக்காக அயராது தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜெயலலிதா கூறினார்.

அஜீத் மகளுக்கு ஒரு வயசு!


அஜீத் - ஷாலினி தம்பதியினர் தங்களது செல்ல மகள் அனுஷ்காவின் முதலாவது பிறந்த நாளை படு கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

அஜீத், ஷாலினிக்கு கடந்த ஆண்டு அழகிய மகள் பிறந்தாள். ஷாலினிக்குப் பிரசவம் நடந்தபோது பொறுப்பான கணவராக, அஜீத்தும் உடன் இருந்தார்.

அழகிய மகளைப் பெற்றெடுத்த ஷாலினியும், தந்தையான பூரிப்பில் அஜீத்தும் மகள் மீது பாசத்தைப் பொழிந்து வளர்த்து வருகின்றனர். அஜீத், ஷாலினி தம்பதியின் மகளுக்கு அனுஷ்கா என பெயரிடப்பட்டது.அனுஷ்காவின் முதலாவது பிறந்த நாளை அஜீத் தம்பதியினர் தங்களது குடும்பத்தினருடன் கொண்டாடினர்.இந்த கொண்டாட்டத்தில் அஜீத் குடும்பத்தினர், ஷாலினி குடும்பத்தினர், மிக மிக நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனராம்.

குட்டிப் பாப்பாவை நாமும் வாழ்த்துவோம்...

அனிமேஷன் படத்தில் லாலு!


மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவை வைத்து அனிமேஷன் படம் ஒன்று உருவாகிறது.இந்திய அரசியல்வாதிகளிலேயே படா குஷியான தலைவர் லாலுதான். அவரது முக பாவனையும், பேச்சு தோரணையும், நக்கல் நையாண்டியும், வட இந்தியாவில் ரொம்பப் பிரபலம்.

இந்தி பெல்ட்டில் படு பேமஸான லாலுவை வைத்து பொம்மைகள் வந்து விட்டன. பட்டாசுகளுக்கும் பெயர் வைத்தனர். டாபிகளும் கூட லாலு பெயரில் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் லாலுவை வைத்து அனிமேஷன் படம் ஒன்றை உருவாக்குகிறார் பீகாரைச் சேர்ந்த கார்ட்டூன் கலைஞர் பவன் கமார்.

யுனிசெப் அமைப்புக்காக சிறார் உரிமைகள் குறித்த ஏராளமான படங்களை உருவாக்கிக் கொடுத்தவர்தான் இந்த பவன் குமார். இவரது கார்ட்டூன் இடம் பெறாத தேசிய நாளிதழ்களே இல்லை எனலாம். கிட்டத்தட்ட 7000க்கும் மேற்பட்ட கார்ட்டூன்களை வரைந்து தள்ளியுள்ளார்.

இந்த நிலையில், தலா 2 நிமிடத்திற்கு ஓடக் கூடிய 16 அனிமேஷன் படங்களை லாலுவை கதாபாத்திரமாக வைத்து உருவாக்கவுள்ளார் பவன் குமார்.

குழந்தைப் பருவம் முதல் இப்போதைய காலகட்டம் வரையிலான லாலுவின் வாழ்க்கையை விளக்கும் வகையில் இது அமையுமாம்.லாலு பிரசாத் யாதவ் எருமை மாட்டின் மீது சவாரி செய்தது, பள்ளிக்கு கட் அடித்து விட்டு விளையாடப் போனது, அரசியலில் நுழைந்தது உள்ளிட்டவை சுவாரஸ்யமான முறையில் இதில் விளக்கப்படவுள்ளதாம்.

லாலுவைப் பற்றி எடுக்கவுள்ள இந்த அனிமேஷன் படங்கள் மிகப் பெரிய அளவில் புகழ் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பவன் குமார்.இந்த அனிமேஷன் படத்தில் லாலுவுக்காக குரல் கொடுத்திருப்பவர் சசி. இவர் பவன் குமாரின் ஆரம்ப காலத்து நண்பர்.

பின்னணி இசையை ரத்னேஷ் - கோபாலா அமைத்துள்ளனர்.


இந்த அனிமேஷன் படத்துக்கு லாலு பிரசாத் யாதவ் பச்சைக் கொடி காட்டி விட்டாராம். சில கிளிப்பிங்குகளை கொண்டு போய் லாலுவிடம் காட்டியுள்ளார் பவன் குமார். அதைப் பார்த்த அவர், சந்தோஷமடைந்து, உடனே அனிமேஷன் படத்தை முடித்து எடுத்து வந்து காட்டு என்று உத்தரவு போட்டு விட்டாராம் லாலு.

லாலுவின் அனுமதி கிடைத்து விட்டாலும் கூட, பணம் போதிய அளவில் இல்லாததால், அனிமேஷன் பட முயற்சிகள் படு மெதுவாக போய்க் கொண்டிருப்பதாக பவன் குமார் கூறுகிறார்.

முரட்டுக்காளை- சமிக்ஷா நீக்கம்!!


ராகவா லாரன்ஸ் நடிக்கும் ராஜாதிராஜா படத்திலிருந்து நீக்கப்பட்ட சமிக்ஷா, அதற்கடுத்து சுந்தர் சி நடிக்கும் படத்தில் ஒப்பந்தமானார். இப்போது அந்தப் படத்திலிருந்தும் சமிக்ஷா நீக்கப்பட்டுள்ளார்.

அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் கூறப்படவில்லை.

ராஜாதி ராஜா படத்தில் தனக்குரிய கேரக்டர் இல்லாததால், இயக்குநர் சொன்ன ஆலோசனையைக் கேட்டு விலகிக் கொண்டதாக சமிக்ஷா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முரட்டுக்காளை படப்பிடிப்பு துவங்கியது.



இந்தப் படத்தின் துவக்க விழாவுக்கு வந்திருந்த சமிக்ஷா, ஒரிஜினல் முரட்டுக் காளையில் சுமலதா நடித்த பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறினார்.

ஆனால் இப்போதோ அவர் படத்திலேயே இல்லை என்று கூறப்படுகிறது. இப்போதைக்கு ஸ்சினேகா மட்டுமே இந்தப் படத்தில் நாயகி. வேறு நாயகி பின்னர் ஒப்பந்தம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

கல்யாணமான நடிகைகள் பாவமும் பொல்லாததுதாங்க!

என் காட்சிகளை குறைத்தனர்-திவ்யா


வாரணம் ஆயிரம் படத்தில் நான் நிறைய காட்சிகளில் நடித்திருந்தேன். ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை வெட்டிவிட்டார்கள் என்கிறார் ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனாஸ்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

வாரணம் ஆயிரம் படத்தில் பல சவால்களைத் தாண்டித்தான் என் பெயர் இந்த அளவு பிரபலமடைந்துள்ளது.

உண்மையில் அந்தப் படத்தில் இப்போது நீங்கள் பார்ப்பதை விட அதிக காட்சிகளில் நடித்திருந்தேன். ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை வெட்டி விட்டார்கள். அதையும் தாண்டிதான் எனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.



இதுதொடர்பாக வேறு கேள்விகளுக்கு இனி பதில் அளிக்க மாட்டேன். நான் ஏதாவது ஒரு கருத்தைச் சொன்னால் அதை ஊதி பெரிதாக்கி விடுகிறார்கள்.

என் வாழ்வில் பல முறை கடுமையான கட்டங்களை கடந்திருக்கிறேன். விளம்பரங்களுக்கு போஸ் கொடுக்க கேட்டு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. தேர்வு செய்துதான் ஒப்புக்கொள்கிறேன். என்னை கவனிப்பதைவிட நான் நடிக்கும் படங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன்.

கதையே கேட்காமல் நட்புக்காகவும். மரியாதைக்காகவும் ஒப்புக்கொண்ட சில படங்கள் தோல்வியாக அமைந்தன. அதைப்பற்றித்தான் பலர் பேசுகிறார்கள். ஆனால் நான் நடித்த பெரிய ஹிட் படமான பொல்லாதவன் பற்றிப் பேச மறுக்கிறார்கள்.

மற்ற நடிகைகள் போல் நீங்களும் சம்பளத்தை உயர்த்துவீர்களா? என்று கேட்கிறார்கள். எனக்கு தேவையான சம்பளத்தை மட்டுமே வாங்குகிறேன். அதுவே போதும். இனி வரும் படங்களில், என்னை கவரும் வேடமாக மட்டுமில்லாமல் ரசிகர்களின் மனதை கவரும் வேடங்களாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்கிறார் ரம்யா.

இயக்குனராகும் படவா கோபி

சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் படவா கோபி பெரிய திரைக்கு வருகிறார். பொய் படத்தில் பாலசந்தரால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டவர் இந்தமுறை வருவது படம் இயக்க.

தனது நான் ஸ்டாப் பேச்சால் ரசிகர்களை கவர்ந்த படவா கோபி, சென்னை 600 028 படத்தில் கிரிக்கெட் வர்ணனையாளராக வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர். இவர் விரைவில் திரைப்படம் ஒன்றை இயக்குகிறார்.

நான்கு நண்பர்களை பற்றிய இந்தப் படத்தில் ஹீரோவாக மிர்ச்சி சிவா நடிக்கிறார். இவர் சென்னை 600 028, சரோஜா படங்களில் நடித்தவர். சபா இயக்கத்தில் 16 படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

1995 - 1997 ஆண்டுகளில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தனது படத்தை இயக்குவதாக தெரிவித்தார் கோபி. படத்தில் மொத்தம் இரண்டு ஹீரோயின்கள். ஏப்ரலில் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

இயக்குனரை அலையவிட்ட வடிவேலு

சி‌ரிக்க வைத்து வயிறை புண்ணாக்கும் வடிவேலு, இயக்குனர்களை அலையவிட்டு வயிற்றில் அமிலம் கரைப்பதாக மூலைக்கு மூலை முணுமுணுப்புகள். விசா‌ரித்ததில் வைகைப் புயல் மீது வண்டி வண்டியாக கொட்டுகிறார்கள் புகார்களை.

வடிவேலு தனது சம்பளத்தை தினக்கூலியாக்கி பல வருடங்களாகிறது. கூலி என்றால் தினம் எட்டு லட்சம். இந்த தினக் கூலிதான் இப்போது பிரச்சனை.

கண்ணும் கண்ணும் படத்தை இயக்கிய மா‌ரிமுத்து, வடிவேலுவிடம் கதை ஒன்றை கூறியிருக்கிறார். கதை நன்றாக இருப்பதாக கூறிய வடிவேலு, படத்தில் நானே நடிக்கிறேன், கதையை டெவலப் செய்யுங்கள் என்று வாக்களித்துள்ளார். மா‌ரிமுத்துவும் மாதக் கணக்கில் கதையை செதுக்கி சீர் செய்திருக்கிறார்.

அனைத்தும் கூடிவரும் நேரம், தினம் எட்டு லட்சம் வாங்கும் நான், இந்தப் படத்தில் நடிப்பதென்றால் ஐந்து கோடி சம்பளம் தந்தால்தான் கட்டுப்படியாகும் என்று திடீர் குண்டை போட்டிருக்கிறார் வடிவேலு.

அ‌ஜித், விஜய்‌‌க்கே ஐந்து கொடுக்க யோசிக்கும் வேளையில் வடிவேலுக்கு ஐந்து கோடியா? படத்தை தயா‌ரிக்க ஒப்புக் கொண்டவர் தலைதெறிக்க ஓட, வீதியில் மா‌ரிமுத்து.

இவரைப் போல் வடிவேலுவின் தினக்கூலி கணக்கினால் நொந்துபோன இன்னொருவர் சிம்புதேவன்.

இப்படியே போனால் விரைவில் புயல் கரை கடந்துவிடும்.

சீமானுக்கு பண உதவி

ஈழத் தமிழருக்கு குரல் கொடுத்ததற்காக இரண்டாவது முறையாக சிறைக் கம்பிகளுக்குப் பின்னே தள்ளப்பட்டுள்ளார், இயக்குனர் சீமான்.

முதல் முறை தமிழ் திரைப்படத் துறையினர் ராமேஸ்வரத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக சீமானும், அமீரும் கைது செய்யப்பட்ட போது திரையுலகமே திரண்டு சிறையிலிருந்த சீமானையும், அமீரையும் காணச் சென்றது. அவர்கள் கைதுக்காக குரல் கொடுத்தது.

ஆனால் இந்தமுறை யாரையும் காணோம். காற்றுக்கென்ன வேலி படத்தை இயக்கிய தங்கராஜ் மட்டுமே சீமானை சிறையில் சென்று பார்த்திருக்கிறார். தமிழ் உணர்வாளர்களும் பார்த்து வருகின்றனர். திரையுலகினர் சீமானை சந்திக்காதது மட்டுமல்ல, அவரைப் பற்றி பேசவே தயங்குகின்றனர்.

இந்நிலையில் சீமானின் வழக்கை நடத்துவதற்கான பணத்தை தனியாளாக வசூலித்து வருகிறார் தங்கராஜ். தனது காற்றுக்கென்ன வேலி படத்தை மீண்டும் திரையிட்டு அதில் கிடைக்கும் பணத்தை சீமானின் வழக்கு செலவுக்கு தரவும் திட்டமிட்டுள்ளார்.

தமிழனுக்காக குரல் கொடுப்பவரின் நிலை தமிழகத்தில் இன்று இப்படிதான் இருக்கிறது என்பது அனைவரும் வெட்கப்பட வேண்டிய வி­யம்.

வரப்போகும் வாரிசுகள் இளையவேளின் இளையவேள்!

நடிகவேள் எம்.ஆர்.ராதா குடும்பத்திலிருந்து ஒரு இளையவேள் வந்தார். அவர்தான் ராதாரவி. இப்போது இளையவேளுக்கும் இளையவர் வரப்போகிறாராம். தானே சொந்தமாக தயாரிக்கும் படத்தில் தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தப் போகிறார் ராதாரவி. ராதாரவியின் இன்னொரு மகன் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவராம். அவரும் தற்போது அமீர்கானை வைத்து ஒரு படத்தை இயக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

இது ஒருபுறம் இருக்க, வாரிசுகளின் வரவில் இன்னொரு புதுமுகமும் வரப்போகிறார். இவர் அந்த கால அழகு மயில் அம்பிகாவின் புதல்வர். அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் எண்ணத்தில் அழைத்து வந்திருக்கிறாராம் அம்பிகா.

பெரிய இயக்குனர்களின் படத்தில் நடித்தால், வெற்றியும் உறுதி. ஒரு கவன ஈர்ப்பும் இருக்கும் என்பதால், இப்போதெல்லாம் அம்பியின் கார் முன்னணி இயக்குனர்கள் வீட்டு வாசலில் நிற்கிறது. ரிசல்ட் பாசிட்டிவாக அமைந்தால் வாரிசு விரும்புவோர் கழகத்திலிருந்து ஒரு பொக்கே அனுப்பலாம்.

சசிக்குமாரின் 'பசங்க' புதுமுக வேட்டையில் இயக்குனர்


சுப்ரமணியபுரத்திற்கு பிறகு நாடோடிகள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சசிக்குமார். ரிங் மாஸ்டரையே கூண்டில் அடைத்து வேறொரு ரிங் மாஸ்டர் சாட்டையை சுழற்றுகிற கதையாக இருக்கிறது படப்பிடிப்பு. டைரக்டர் என்ன சொல்கிறாரோ, அதை மட்டும் செய்கிறார். கதை விஷயத்திலோ, டயலாக் விஷயத்திலோ மூக்கை நுழைப்பதில்லை சசி.

பார்க்கிற எல்லாருமே, இன்னொரு படத்தை எப்போ இயக்கப் போறீங்க என்கிறார்களாம். "முழு நேர நடிகன் ஆயிடுவேனோன்னும் பயப்படுறாங்க. யாருக்கும் அந்த பயம் வேண்டாம். ஒரு பக்கம் டைரக்ஷன், இன்னொரு பக்கம் படத் தயாரிப்பு என்று எனது முக்கிய வேலையை பார்க்கப் போகிறேன்" என்றார் சசி. நாடோடிகள் முடிந்ததும் சசிக்குமார் இயக்குகிற படத்தின் அறிவிப்பு சுட சுட வரலாம். ஹீரோயின் கூட ரெடியாம்!

இன்னொரு பக்கம் சேரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாண்டியராஜன் என்பவரை தான் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தப் போகிறார் சசிக்குமார். படத்தின் பெயர் பசங்க. இந்த படத்தில் நடிக்கப்போகிற புதுமுகங்களுக்கான வேட்டை ஒருபக்கம் நடந்து வருகிறதாம். அழகான 'பசங்க' இவரு ஆபிஸ் பக்கம் போனா அதிர்ஷ்டம் அடிக்கலாம்.

தட்டிப்பறிக்கிற ஆள் நான் இல்லே... நயன்தாராவின் நெடிய விளக்கம்


தட்டு ஓரத்திலே ரெண்டே ரெண்டு ஸ்பூன் வொயிட் ரைஸ். தொட்டுக் கொள்ள நிறைய காய் கறிகள்! கிளி போன்ற ஹீரோயின்களுக்கு கிளிக்கு கொடுக்கிற மாதிரியே சாப்பாடு கொடுக்கிற மம்மிகளின் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நயன்தாரா.

ஏராளமான பழ வகைகளையும், தாராளமான ரைஸ் ஐட்டத்தையும் கேட்டு வாங்கி சாப்பிடுகிறார் மம்மியிடம். ஏனாம்? எல்லாம் பாழாய் போன அந்த சிக்ஸ் பேக்கை ஒழிச்சுக்கட்டதான். மறுபடியும் மலையாள படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிற நயன், பாடிகாட் படத்தில் கொஞ்சம் பூரிப்பான சதையோடு காட்சி தர விரும்புகிறாராம். அதனால்தான் இந்த எக்கச்சக்க எக்ஸ்ட்ரா மீல்ஸ்.

தமிழில் நயன்தாரா படங்களை த்ரிஷா தட்டிப்பறிப்பது மாதிரி, தெலுங்கில் இலியானா படங்களை தட்டிப்பறிக்கிறாராம் நயன். இப்படி அடுத்தவங்க கால்ஷீட் மேலே பெட்ஷீட்டை போட்டு மூடுற வேலையை நீங்க செய்யலாமா என்றால், "நானே அந்த வேதனையை அனுபவிச்சவ. என்னை போயி இப்படி சொல்லலாமா? யாரு படங்களையும் தட்டிப் பறிக்கிற ஆள் நான் இல்லை. வேணும்னா இலியானாவிடமே கேளுங்க" என்கிறார்.

புலி சண்டையை விட, இந்த பூனைங்க சண்டையை பற்றிதான் ஜனங்க அதிகம் பேசுது. என்னத்தை செய்ய?

Sunday, January 4, 2009

ஷெர்லினுக்குப் பதில் சார்மி


ஜூனியர் என்.டி.ஆர். ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடுவதாக இருந்த ஷெர்லின் சோப்ரா திடீரென நீக்கப்பட்டு அவருக்குப் பதில் 'அதகள ராணி' சார்மியை புக் செய்துள்ளனராம்.

தெலுங்குத் திரையுலகை தனது திகட்டாத கவர்ச்சியால் திளைக்க வைத்து வருகிறார் சார்மி. படத்தின் ஹீரோயின் யாராக இருந்தாலும் சரி, சார்மி படத்தில் இருந்தால் கண்டிப்பாக அது ஹிட் என்ற ஹீட்டான டாக் டோலிவுட்டில் உள்ளது.

இந்த நிலையில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் ஒரு புதிய படத்தில் மும்பை ஹாட் கேர்ள் ஷெர்லின் சோப்ரா குத்தாட்டத்திற்கு புக் செய்யப்பட்டிருந்தார். ஆனால் திடீரென அவரை நீக்கி விட்டு சார்மியை புக் செய்து விட்டனர்.
ஷெர்லினை விட சார்மி படு செக்ஸியாக இருப்பதாலும், அவரிடம் செக்ஸி அப்பீல் இருப்பதாலும் ஷெர்லினை நிராகரித்து விட்டாராம் ஜூனியர் என்.டி.ஆர்.இதை விட குஷியான சமாச்சாராம், இந்தப் பாடல் காட்சியின்போது ஜூனியர் என்.டி.ஆரும், சார்மியும் உதட்டு முத்தம் வேறு கொடுக்கப் போகிறார்களாம். அதுவும் 10 விநாடிகளுக்கு.

படத்தை மறக்காம தமிழ்ல டப் செய்து வெளியிட்ருங்க...

மீண்டும் ஷாருக்-கஜோல்


பாலிவுட்டின் வெற்றிகரமான ஜோடிகளில் ஒன்றாக இன்றளவும் கருதப்படும் ஷாருக்கானும், கஜோலும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.மேட் பார் ஈச் அதர் என்ற வார்த்தைக்கு சரியான பொருத்தம் ஷாருக்கானும், கஜோலும். இருவரும் இணைந்து நடித்த படங்கள் அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட்.

குறிப்பாக தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே. இப்படத்தை பார்க்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிய பெருமை, கஜோலுக்கும், ஷாருக்குக்கும் உண்டு.
கஜோல் பின்னர் அஜய் தேவ்கனை திருமணம் முடித்துக் கொண்டு செட்டிலாகிவிட்டார். எப்போதாவது சில படங்களில் மட்டுமே தலையைக் காட்டி வந்தார்.


இந் நிலையில் மீண்டும் ஷாருக் ஜோடியாக நடிக்கப் போகிறார்.

இந்த ஜோடி இப்போது பெரும் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சேருகிறது. படத்தின் பெயர் 'மை நேம் இஸ் கான்'. கலிபோர்னியாவில் வைத்து இப்படத்தின் பெரும் பகுதியை ஷூட் செய்யவுள்ளனராம்.சமீபத்தில் வெளியான ஷாருக்கின் ரப்னே பனாயா ஜோடி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து வந்த அமீரின் கஜினி இந்த வெற்றியையையும் விஞ்சி வசூலில் சாகசம் படைத்து வருகிறது.இதையடுத்து தனது அடுத்த படத்தை இதைவிட பெரிய வெற்றியாக்க கஜோலை மீண்டும் இழுத்து வந்துள்ளார் ஷாருக் கான்.

சமூக சேவகர் 'டிராபிக்' ராமசாமி தாக்கப்பட்டார்

சென்னை: சென்னையைச் சேர்ந்த சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி தாக்கப்பட்டார்.
சென்னை ரங்கராஜபுரத்தில் உள்ள அவரது வீட்ட