
காலம் மனிதனை எப்படி கவிழ்க்கும் என்று சொல்ல முடியாது. ஆக்சன் படத்தையே கமெடியாக எடுக்கும் ஹியூமர்சென்ஸ் உள்ளவர் பாக்யராஜ். அவரையே படா வில்லனாக்கியிருக்கிறார் ஒருத்தர்.
ஐம்பது பிளஸ்ஸில் இருக்கும் பீல்ட் அவுட் ஹீரோக்கள் குணச்சித்திர வேடம், ஹீரோவுக்கு அப்பா என்று திசைமாறி விட்டார்கள். பாக்யராஜும் சில படங்களில் அப்படி நடித்தார். ஆனாலும், சென்னை மழை மாதிரி எப்போதாவதுதான் வருகின்றன வாய்ப்புகள்.
தனம் படத்தை இயக்கிய சிவா தனது அடுத்தப் படத்துக்கு வில்லனாக பாக்யராஜை கமிட் செய்திருக்கிறாராம். படத்தின் ஹீரோ, ஹீரோயின் முடிவாகாத நிலையில் வில்லனை மட்டும் ஃபிக்ஸ் செய்து அட்வான்சும் கொடுத்திருப்பதாக கேள்வி.
படத்துக்கு குலசேகரனும் கூலிப்படையும் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பாக்யராஜ் இதில் குலசேகரனா கூலிப்படையா என்பது சீக்ரெட்.

0 comments:
Post a Comment