Wednesday, July 15, 2009

பூனம் வரணும்... ஜீவா விருப்பம்!

விழியில் விழுந்து இதயம் நுழைஞ்சதெல்லாம் காரணமில்லை. என்னவோ ஒரு அலையடிச்சிருக்கணும்... மீண்டும் பூனம் பாஜ்வாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் ஜீவா. தெனாவட்டு படப்பிடிப்பு நடக்கும் போதே, “நீங்க வேணும்னா பாருங்க. தமிழ்சினிமாவிலே மிகப்பெரிய இடத்தை பிடிக்கப் போகிறார் பூனம் பாஜ்வா. ஏன்னா, அவரோட நடிப்பும், அழகும், திறமையும் சான்சே இல்லை” என்று புல்லரித்தார் ஜீவா. தெனாவட்டு ஹிட் என்றாலும், பூனம் பூரணமான இடத்தை அடைந்தாரில்லை!.

இப்படத்திற்கு பின்பு வந்த சேவல் எதிர்பார்த்த மாதிரி ஓடாததால் மீண்டும் மும்பைக்கே ஓட்டம் பிடித்தார் பூனம். இப்போது மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் ஜீவா. தற்போது இவர் நடித்து வரும் கச்சேரி ஆரம்பம் படத்தில் மனம் கவர்ந்த பூனம்தான் ஹீரோயின். பூபதி பாண்டியன், சீமான் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த திரைவண்ணன் இப்படத்தை இயக்குகிறார்.

முக்கிய செய்தி என்னவென்றால், புதுவசந்தம் தொடங்கி தமிழ்சினிமாவில் ஏராளமான வெற்றிகளை வாரிக்குவித்து, எக்கச்சக்க இயக்குனர்களுக்கும் புதுப்பாதை போட்டு கொடுத்த சூப்பர் குட் பிலிம்ஸ் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தை தயாரிக்கிறது. மகன் ஜீவாவை வைத்து தித்திக்குதே என்று முதல் ரிஸ்க்கை எடுத்த ஆர்.பி.சௌத்ரி, அதே ஜீவா மார்க்கெட்டில் சூடான ஹீரோக்களில் ஒருவராக இருக்கும்போது எடுக்கிற இரண்டாவது படம் இது.

கேரவேன் அது இதுன்னு பில்டப் கொடுத்திருப்பாரோ, பிள்ளை?

0 comments:

Post a Comment

Followers