ஒரு வழியாக மீண்டும் நடிக்க வந்துவிட்டார் கோபிகா. திருமணத்துக்குப் பிறகு அவர் முதல்முறையாக மலையாளப் படம் ஒன்றில் நடிக்கிறார்.இந்தப் படத்துக்கு ஸ்வா லே (ஸ்வாந்தம் லேகாகன்) என தலைப்பு வைத்துள்ளனர். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் திலீப்.
இந்தப் படத்தில் கோபிகா கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கிறார். திருமணத்துக்குப் பின் நடிக்க வந்துள்ள தனக்கு இது பொருத்தமான வேடம்தான் என்று மகிழ்ச்சியுடன் கூறும் கோபிகா, இந்தப் படத்தின் கதையைக் கேட்டு ஓகே சொல்லி நடிக்க அனுப்பியதே தன் கணவர்தான் என்று கற்பூரம் அடிக்காத குறையாக சொல்கிறார்.
தமிழ்ப் படம் எப்போது செய்வீர்கள் என்று கேட்டால், "இரண்டு படங்களுக்கு கேட்டுள்ளனர். கதையை என் கணவரிடம் அனுப்பியுள்ளேன். அவர் ஓகே சொன்னதும் நடிப்பது குறித்து பேசுவேன்" என்கிறார்.
சரி, சினிமாவில் கர்ப்பிணியாக நடிக்கும் நீங்கள், நிஜத்தில் எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள்? என நிருபர் ஒருவர் கேட்டதற்கு, "நான் சின்னப் பொண்ணுதானே... இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்" என்றார்.

0 comments:
Post a Comment