Sunday, July 12, 2009

நடிகை மீனா - வித்யாசாகர் கல்யாணம் முடிந்தது

நடிகை மீனாவுக்கும், சாப்ட்வேர் என்ஜீனியர் வித்யாசாகருக்கும் இன்று திருப்பதியில் கோலாகலமாக கல்யாணம் நடந்து முடிந்தது.

நடிகை மீனாவுக்கும், பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் வித்யாசாகருக்கும் திருமணம் நிச்சயமானது.

இவர்களது திருமணம் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோலாகலமாக நடந்தது.

இரு வீட்டார், உறவினர்கள், கலந்து கொண்டனர். திரையுலகம் சார்பில் நடிகை சங்கவி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருமணத்தின்போது புகைப்படக்காரர்கள் படம் பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. அதையும் மீறி சில பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் படம் பிடிக்க முயன்றபோது மீனாவின் குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த பாதுகாவலர்கள் புகுந்து அவர்களை தடுத்தனர். அதில் ஒரு புகைப்படக்காரர் தாக்கப்பட்டார்.

இதையடுத்து புகைப்படக்காரர்கள் திருப்பதி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து 3 புகைப்படக்காரர்களை போலீஸார் அழைத்து விசாரித்து வருகின்றனர். இதனால் லேசான சலசலப்பு ஏற்பட்டது.

திருப்பதியில் திருமணத்தை முடித்துக் கொண்ட மீனாவுக்கு, சென்னை மற்றும் பெங்களூரில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

0 comments:

Post a Comment

Followers