Saturday, January 3, 2009

தங்கர்பச்சானின் 'தொலைந்துபோனவர்கள்'


பிரபுதேவா நடிக்க மறுத்த கோபத்திலோ என்னவோ தான் இயக்கும் படத்திற்கு 'தொலைந்துபோனவர்கள்' என பெயரிட்டுள்ளார் தங்கர்பச்சான்.
தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பதாக இருந்தது. 'வில்லு' படப்பிடிப்பை முடித்துவிட்டு தங்கர்பச்சான் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்த பிரபுதேவா, திடீரென உங்கள் படத்தில் இப்போதைக்கு என்னால் நடிக்க முடியாது என சொல்ல, தங்கர்பச்சானின் நிலை ஹேங்கான கம்யூட்டர் போலாகிவிட்டது.

சரி பிரபுதேவா போனால் போகட்டும் அடுத்து யாரை பிடிக்கலாம் என யோசித்து மாதவனிடம் கதை சொன்னார் தங்கர். மாதவனுக்கு கதை பிடித்துப் போகவே பிடியுங்கள் கால்ஷீட்டை என 40 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட்டை கொடுத்துவிட்டாராம். இதில் மாதவனுடன் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது சத்யராஜ்.

படத்திற்கு 'தொலைந்து போனவர்கள்' என பெயரிட்டுள்ளார் தங்கர். மாதவன் ஜோடியாக பிரியாமணி நடிக்கிறார். தற்போது 'நினைத்தாலே இனிக்கும்', 'ஆறுமுகம்' படங்களைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்கிறார் ப்ரியாமணி.

அநேகமாக இந்தப்படம் தங்கர்பச்சானின் 'எமன்' நாவலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள தங்கர்பச்சான், இந்த படத்திலும் முந்திரி காட்டுக்குள் காமிராவை கொண்டு போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பட செலவுகளை குறைக்க புதிய திட்டம்


கடந்த வருடம் வெளியான படங்களின் எண்ணிக்கை நூறை தாண்டியும் வெற்றிபெற்ற படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
'பூ', 'பொம்மலாட்டம்' போன்ற நல்ல படங்கள் தோல்வியை தழுவியதும் மசாலா படங்கள் வெற்றி பெறுவது ஏன் என்பதற்கான காரணங்களுக்கு பல நேரங்களில் விடை கிடைப்பதில்லை. அந்த வகையில் வினியோகஸ்தர்கள் சங்க தலைவராக இருக்கும் கலைப்புலி சேகரன் தனக்கெட்டிய ஒரு ஆய்வை பகி்ர்ந்துகொண்டார்.

சென்னையில நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:-

"கடந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மோசமாக இருந்தது. பல படங்கள் தோல்வி அடைந்தன. 78 சதவீத தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். நன்றாக ஓடும் என எதிர்பார்க்கப்பட்ட படங்கள்கூட ஓடவில்லை. அதேநேரம் சிறு பட்ஜெட்டில் தயாரான 'சுப்ரமணியுரம்', 'திண்டுக்கல் சாரதி' உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றி பெற்றிருக்கின்றன. பட்ஜெட்டை குறைத்து கதையில் கவனம் செலுத்தினால் வெற்றி பெறலாம் என்பதைத்தான் இப்படங்கள் எடு்த்துக்காட்டியுள்ளன.

எனவே பட செலவுகளை குறைப்பது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துடன் ஆலோசனை நடத்த உள்ளோம். பொங்கலுக்கு பின் இக்கூட்டம் நடக்கும். வீணான செலவுகளை எப்படி தவிர்ப்பது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்க உள்ளோம். நடிகர்கள் பலரும் பல கோடிகளில் சம்பளம் பெறுகிறார்கள். அதை உயர்த்தியும் இருக்கிறார்கள். அவர்களது சம்பளத்தை குறைக்கலாமா என்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிப்போம்" என்றார்.

ஒருவேளை நடிகர்களின் சம்பளத்தை குறைக்க புதிய விதிமுறை எதையும் கொண்டுவர நேர்ந்தால் நடிகர் சங்கத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் தமிழ் சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது.

நான் பாலாவின் ரசிகன் : மணிரத்னம் பேச்சு


பாலாவின் வாயில் சர்க்கரை பொங்கல் ஊட்டியதுபோல இருந்தது 'நான் கடவுள்' பாடல் வெளியீட்டு விழாவில் மணிரத்னத்தின் பேச்சு.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை விரைவில் பூர்த்தி செய்யவுள்ள 'நான் கடவுள்' படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று நடந்தது. பாடல்களை இராம நாராயணன், பிரமிட் சாய்மீரா சுவாமிநாதன் வெளியிட விக்ரம் - சூர்யா பெற்றுக்கொண்டனர். முன்னதாக படததின் டிரைலரை பார்த்தபோது இத்தனை வருட உழைப்பிற்கான ரிசல்ட் தெரிந்தது. இளையராஜாவின் இசையில் பின்னணி ஓங்காரம் மிரட்டியெடுத்தது.

இதனைத்தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய சிறப்பு விருந்தினர்கள் பாலாவின் புகழ்பாட ஆரம்பி்த்தனர். " 'சேது' படத்தை பார்த்த பிறகுதான் நடித்தால் இதுபோன்ற வித்தியாசமான கேரக்டரில் நடிக்க வேண்டும் என நினைத்தேன். அதன்பிறகு 'நந்தா'வில் நடித்தபிறகுதான் நடிப்பு என்றால் என்ன என்பதே எனக்கு புரிந்தது. பாலா சார் எனக்கு அண்ணன் மாதிரிதான். அவர் மட்டும் எனக்கு 'நந்தா' வாய்ப்பு கொடுக்கவில்லையென்றால் எனது கேரியர் என்னவாகியிருக்கும் என்று தெரியாது. முன்பு விக்ரம்போல வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். இப்போது அந்த இடத்திற்கு ஆர்யாவும் வந்துவிட்டார். இனி அவரையும் தாண்டி ஓட தம்பிடிக்கவேண்டும்" என்றார் சூர்யா.

விக்ரம் பேசியபோது "நானும், சூர்யாவும் இந்த நிலைக்கு வர காரணமே பாலாதான். டிரைலரை பார்த்துவிட்டு எல்லோரும் வியந்தார்கள். எனக்கு அதில் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் பாலாவின் படமென்றால் அது வித்தியாசமாகத்தான் இருக்கும். அவர் அடுத்த படம் எடுப்பதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகிறது என்று தெரியவில்லை. ஆனால் இன்னொருமுறை பாலாவின் படத்தில் நடிக்க காத்திருக்கிறேன்" என்றார்.
"பாலா சாருடன் மூன்று வருடங்கள் இணைந்து பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். படத்திற்காக ரொம்ப நாள் தாடி மீசையுடன் இருந்தபோது என்ன இன்னுமா படம் முடியவில்லை என பலரும் கேட்பார்கள். படம் முடிந்து தாடி மீசையை எடுத்தபோது தாடி மீசையெல்லாம் எடுத்துட்டீங்க இன்னும் படம் வரலையே என்றும் கேட்டார்கள். இந்த கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் கிடைத்திருக்கும்" என்ற ஆர்யா, எதோ பாரத்தை இறக்கி வைத்ததுபோன்று பரம திருப்தி அடைந்தார்.

"நான் பாலாவின் ரசிகனாக இந்த விழாவிற்கு வந்திருக்கிறேன். தமிழ் சினிமா இயக்குனர்களில் பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன் வரிசையில் பாலாவும் ஒருவராக இருக்கிறார். இவர்களைப் பார்த்து புது புது இயக்குனர்கள் வந்து கொண்டிருப்பது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானது" என மணிரத்னம் பேச பாலாவின் முகத்தில் மகிழ்ச்சி தோரணம்.

விழாவில் பாலுமகேந்திரா, கலைப்புலி சேகரன், தயாரிப்பாளர்கள் சீனிவாசன், முரளிதரன், இசையமைப்பாளர் உத்தம்சிங், கவிஞர் வாலி, படத்தின் நாயகி பூஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவின் கடைசி நிமிடம்வரை மேடை ஏறாமல் கீழ அமர்ந்திருந்த பாலாவை விக்ரமும், சூர்யாவும் அன்பு பிடியில் மேடைக்கு அழைத்து வர சின்ன வெட்கத்துடன் நன்றி சொல்லி அமர்ந்து கொண்ட பாலாவை அவரது படத்தை போலவே ரசிக்க முடிந்தது.

எதற்கெடுத்தாலும் பயப்படுவேன் : சாயாசிங்


இன்னொரு ரவுண்ட் வருவேன் என கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கும் நடிகைகளுக்கு மத்தியில் பதட்டம் இல்லாமல் செயல்படுகிறார் சாயாசிங்.
'மன்மத ராசா...' பாட்டுக்கு சாயாசிங் போட்ட குத்தாட்டத்தை தமிழகமே கொண்டாடிய நேரத்தில் கோலிவுட்டின் அடுத்த கனவுகன்னி இவர்தான் என சாயாசிங் நோக்கி நீண்ட சுட்டுவிரல்கள் ஏராளம். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிடவாப்போகிறது. ஒன்றிரண்டு படங்களோடு சாயாசிங்கை காணாமல் போய்விடுபவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டியதாயிற்று.

'வல்லமை தாராயோ' மூலம் அடுத்த சுற்றுக்கு ஆரம்பமாகிவிட்டார் சாயாசிங், ஷங்கர் தயாரிக்கும் 'ஆனந்துபுரத்துவீடு' படத்தில் நடித்து வருகிறார். நாகா இயக்கிவரும் இப்படம் குழந்தைகளை மையமாக கொண்ட த்ரில்லர் கதையாக உருவாகிவருகிறது.

இதில் உங்களுக்கு என்ன கேரக்டர்? சாயாசிங்கிடம் கேட்டபோது எதற்கெடுத்தாலும் பயப்படும் ஒருத்தியா நடிக்கிறேன். இந்த கேரக்டர் எனக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தரும் என்பது மட்டும் உறுதி. என் கேரக்டர் மட்டுமின்றி படமே அருமையான படமாக இருக்கும் என்றார்.
மற்ற ஹீரோயின்கள் வருஷத்துக்கு ஐந்தாறு படங்கள் நடித்துக் கொண்டிருக்க உங்களுக்கு அந்தமாதிரி வாய்ப்பே வரலையே?

எனக்கு வாய்ப்பு வரலை என்பது உங்களுக்கு எப்படி தெரியும் எனக்கும் நிறைய வாய்ப்புகள் வருது நிறையபேர் கதை சொல்றாங்க ஆனா நடிச்சா நல்ல கதையில்தான் நடிப்பது என்பதில் தெளிவாக இருக்கிறேன். அதனால் செலக்டிவ்வாகத் தான் ஒத்துக்கொள்கிறேன்

'வல்லமை தாராயோ' அதுமாதிரியான கதையா இருந்தது. அதன்பிறகு, நான் கேட்டட நல்ல கதை 'ஆனந்தபுரத்து வீடு'தான்.நல்ல கதையம்சம் கொண்ட படத்திற்காக எத்தனை நாள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்.

2008-படங்கள்: ஒரு ப்ளாஷ்பேக்!

இங்கே நாம் போட்டிருக்கும் பட்டியல் கடந்த ஆண்டின் மறக்க முடியாத வெற்றி, தோல்வி மற்றும் ஏமாற்றங்களைத் தந்த 10 படங்கள்...

1.தசாவதாரம்

கே.எஸ். ரவிக்குமார்தான் இயக்குநர் என்றாலும், தசாவதாரம் ஒரு கமல் படம் என்பது படம் முழுக்கத் தெரிந்தது. திரைமுழுக்க கமல் ஆக்கிரமிப்புதான். அறிவுஜீவி கமல் காணாமல் போய், மாஸ் ஹீரோ கமல் வெளிப்பட்டிருந்ததில் அவரது ரசிகர்களுக்கே கூட ஏக சந்தோஷம்.

கமலும் வெற்றிக்கான பாராமுலாவை தெளிவாகத் தெரிந்து கொள்ள இந்தப் படம் உதவியது. பலவித விமர்சனங்கள் இருந்தாலும், 2008ம் ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படம் தசாவதாரம் என்பதில் சந்தேகமில்லை. வெளிநாடுகளில் கடந்த ஆண்டு அதிக வசூலைப் பெற்ற படங்களில் முதலிடமும் தசாவதாரத்துக்கே. தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தனது பேனரை இழந்தாலும், அவரது பேங்க் பேலன்ஸை இழக்காமல் காப்பாற்றிவிட்டார் கமல்.



2.குசேலன்

சென்ற ஆண்டு எல்லாருக்குமே அதிர்ச்சி தந்தது குசேலன் படத்தின் தோல்வி. இந்தப் படத்தின் நாயகன் ரஜினிகாந்த் இல்லை என்பதை மறைத்ததோடு, ரஜினி சொன்னதையும் மீறி படத்தை அநியாய விலைக்கு விற்றார்கள் தயாரிப்பாளர்களான கவிதாலயாவும் செவன் ஆர்ட்ஸூம்.

அத்தோடு ரஜினி கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக எழுந்த வதந்தி, பின்னர் அவர் 'மன்னிப்புக் கேட்கவில்லை, வருத்தம்தான் தெரிவித்தேன்' என்று சொன்னதைக் கூட எடுபடாமல் செய்துவிட்டது.

அதைவிட முக்கியம், இந்தப் படத்தை சென்னையில் மட்டும் 20 திரையரங்குகளில் திரையிட்டது. 'குறைந்த லாபம் வைத்து விற்றுக் கொள்ளுங்கள், சென்னையில் 5 தியேட்டர்களில் மட்டும் வெலியிடுங்கள்' என ரஜினி சொன்னதைக் கூட புறந்தள்ளிவிட்ட இவர்கள் பேராசைக்குக் கிடைத்த சவுக்கடியாக அமைந்தது குசேலன் தோல்வி.

3.சுப்பிரமணியபுரம்

சின்ன பட்ஜெட், எளிய கதை மாந்தர்கள், நாம் எப்போதோ பக்கத்திலிருந்து பார்த்த சம்பவங்களையே திரைக்கதையாக்கிய விதம்... இதுதான் சுப்பிரமணியபுரத்தின் மாபெரும் வெற்றிக்கான காரணங்கள்.

சொல்லப்போனால் இந்தப் படத்தைத்தான் கடந்த ஆண்டின் மிகச் சிறந்த வெற்றிப் படமாக குறிப்பிட வேண்டும். இந்தப் படம் மூலம் வினியோகஸ்தர்களுக்குக் கிடைத்த லாபம் கிட்டத்தட்ட 400 சதவிகிதம்!!

இந்தப் படம் மூலம் கவனிக்கப்படும் படைப்பாளிகளுள் ஒருவராக, மணிரத்னம் போன்றவர்கள் தேடி வந்து பாராட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டார் இயக்குனர் சசி. நேர்மையான உழைப்புக்குக் கிடைத்த மரியாதை அது.

4. ஏகன்

ஐங்கரன் பேனரில் வந்த முதல்படம். கலகலப்பான படமாக இருந்தாலும், அஜீத் ரசிகர்களுக்கே பிடிக்காத படமாகிவிட்டது ஏகன். ஒருவேளை படத்தில் தன்னைப் பற்றிய விமர்சனங்களை தானே அஜீத் சொல்வதுபோல வரும் காட்சிகள் பிடிக்கவில்லை போலிருக்கிறது.

ஏற்கெனவே சில படங்களின் விநியோகத்தில் ஏற்பட்ட நஷ்டத்துடன், ஏகன் படத்தில்பட்ட அடியும் சேர்ந்து அவர்களை எழமுடியாத அளவுக்குச் செய்துவிட, இப்போது மீண்டும் துவங்கிய இடத்தில் போய் நிற்கிறது ஐங்கரன்!

5. குருவி

இந்தப் படம் ஒரு வெற்றிப் படம் என விஜய் தரப்பு கூறிக் கொண்டாலும், ரசிகர்களின் நம்பிக்கைக்கு கிடைத்த அடி என்று சொல்வதே சாலப் பொருந்தும்.

கில்லி என்ற நல்ல கமர்ஷியல் பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்த தரணியும், இளைஞர்களின் நம்பிக்கை நாயகர்களின் ஒருவரான விஜய்யும் கொஞ்சமும் லாஜிக் இல்லாத இப்படியொரு படத்தைக் கொடுப்பார்கள் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை.

6. அஞ்சாதே

தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களுள் ஒன்று அஞ்சாதே. சிறந்த திரைக்கதை மற்றும் மிகைப்படுத்தல் இல்லாத இயக்கத்துக்கு சிறந்த உதாரணம் அஞ்சாதே.

மிஷ்கின் என்ற படைப்பாளிக்குள் இன்னும் பல வண்ணங்கள் புதைந்து கிடப்பதையும், நல்ல ரசிப்புத் தன்மை எனும் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் அந்த வண்ணங்கள் தமிழ் சினிமாவையே கலர்புல்லாக்கும் என்ற நம்பிக்கையையும் விதைத்த நல்ல படம். தரத்தில் மட்டுமல்ல... வணிக ரீதியாகவும் இந்தப் படம் பெற்ற வெற்றி தமிழ் ரசிகர்களின் நல்ல ரசனைக்கு சான்று.

7. காதலில் விழுந்தேன்

நல்ல படமாக இருக்கும்... ஆனால் போதிய விளம்பரம் இல்லாமல் துவண்டு போய் தோல்விப் பட்டியலில் சேர்ந்துவிடும். தமிழ் சினிமாவில் இன்று நேற்றல்ல... ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் முக்கிய குறைபாடு இது.

சரியான நேரத்தில் சன் பிக்சர்ஸ் அந்தக் குறையைக் களைய முன்வந்தது. அந்த முயற்சியின் விளைவுதான், தயாராகி பல மாதங்கள் பெட்டியில் தூங்கிக் கிடந்த காதலில் விழுந்தேனை வாங்கி திரையிட வைத்தது. மார்க்கெட் உள்ள நடிகர்களோ இயக்குநரோ இந்தப் படத்தில் இல்லைதான். ஆனால் நினைத்தால் ஒரு மார்க்கெட்டையே உருவாக்கும் ஆற்றல் படைத்த சன் நிறுவனத்தின் கைக்குப் போன பிறகு, காதலில் விழுந்தேன், ஒரு சூப்பர் ஸ்டார் பட ரேஞ்சுக்கு பேசப்பட்டது. தமிழ் சினிமாவின் கடந்த ஆண்டு சாதனைகளுள் ஒன்று இந்தப் படம் பெற்ற வெற்றி.

8. அபியும் நானும்

சில மிகைப்படுத்தல் இருந்தாலும், அபியும் நானும் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத, மறுக்க முடியாத நல்ல திரை முயற்சி.

நல்ல சினிமா வரவில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பதில் என்ன லாபம்? பிரகாஷ் ராஜ் மாதிரி துணிந்து சில நல்ல முயற்சிகளைச் செய்து பார்த்தால்தானே, ரசனையின் அளவுகோலைத் தெரிந்து கொள்ள முடியும். இந்தப் படம் சி சென்டர்களில் இப்போதைக்கு எடுபடாமல் கூடப் போகலாம்.

ஆனால் இளைஞர்கள், சக கலைஞர்களுக்கே கூட, இந்த மாதிரி நல்ல முயற்சியில் நாமும் இறங்கலாமே என்ற தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது நிஜம்.

9.சந்தோஷ் சுப்பிரமணியன்

'ஃபீல் குட்', 'க்ளீன் எண்டர்டெய்ன்மென்ட்' போன்ற ஆங்கில வார்த்தைகளுக்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப் படம். அருமையான படைப்பு. வணிக ரீதியாகவும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களைத் திருப்திப்படுத்திய படம் இது. எந்த வித தூண்டுதலும் இல்லாமலேயே தியேட்டர்காரர்கள் சந்தோஷமாக 100 நாட்கள் ஓட்டிய வெகு அரிதான படங்களில் ஒன்று. ஜெயம் ரவி என்ற இளைஞரால் எந்த மாதிரி வேடங்களையும் அநாயாசமாக செய்ய முடியும் என நிரூபித்த படம் இது.

10. பூ

ஒரு தமிழ் நாவலின் அழகு கொஞ்சமும் கெடாமல் ஒரு திரைப்படத்தைத் தர முடியும் என இந்தப் படத்திலும் நிரூபித்திருந்தார் சசி. பார்வதி என்ற நல்ல நடிகையை இந்தப் படம் மூலம் தந்தார். வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், தமிழ் சினிமாவின் தரத்தை இன்னும் ஒரு எட்டு முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாகவே இந்தப் படத்தை நாம் பார்க்கிறோம்.

இன்னும் கூட சில நல்ல படங்கள் இந்த ஆண்டில் வெளியாகின. சத்யம் போன்ற பெரும் ஏமாற்றங்களும் இந்த ஆண்டில் கிடைத்தன. இந்த வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் தொழில் நேர்மை, அக்கறையின்மை அல்லது அலட்சியம்தான். இந்தப் பாடிப்பினைதான் நம் படைப்பாளிகள் கற்றுக் கொள்ள வேண்டியது!

ஊட்டிக் குளிரில் லூட்டி காதல் தோழி கலகல...!


காதல் தோழி என்ற தலைப்பில் மறுபடியும் ஒரு காதல் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. குளிர் 100 படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் சதீஷ் இந்த புதிய காதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஜோடி, விமலாராமன்.

நட்பாக பழகிக் கொண்டிருக்கும் ஹீரோ, நண்பர்களின் வற்புறுத்தலால் காதலிக்க துவங்குகிறார். ஆனால், அந்த காதலை தோழி ஏற்றுக் கொண்டு காதலியாக பிரமோஷன் ஆனாளா? இந்த ஒரு வரி கதையை, சுவாரஸ்யமாக அலசப் போகிறது காதல் தோழி. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கும் நிதின் ராமகிருஷ்ணனுக்கு பதினேழு வயசுதான் ஆகிறதாம். பள்ளிக்கூட காதலை, சொல்லிவிடத் துடிக்கும் இந்த சினிமாவை இவரை விட பொறுத்தமாக யாரால் இயக்க முடியும்?

இருபது இளசுகள் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளாக நடிக்கிறார்கள். வாட்டி எடுக்கும் ஊட்டிக் குளிரில் ஜாலியாக லூட்டி அடிக்கிறது இந்த பட்டாளம். முழு கதையும் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

வி.தஷி இசையமைக்கிறார். தமிழ்சினிமாவில் பிறருக்காக எழுதியே புண்ணியம் கட்டிக் கொண்ட பத்திரிகையாளர்களில் சிலர், இப்போது தனக்காகவும் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படத்தில் சில பாடல்களை எழுதியிருக்கும் நெல்லை பாரதி, முருகன் மந்திரம் இருவரும் பத்திரிகையாளர்கள்!

உருட்டுங்கய்யா காதல் சோழியை!

என்னை டம்மியாக்கிட்டாரு... -வேதனையில் சினேகா


பந்தய தூரத்தில் எல்லைக் கோடுதான் இலக்கு. ஆனால் அந்த கோடும் சேர்ந்து ஓட வேண்டும் என்று நினைத்தால் அதுதான் பெரிய ஜோக்? சிலம்பாட்டம் படத்தில் சினேகாவுக்கும் முக்கிய ரோல். முன்பாதி சனாகான். பின்பாதி சினேகா என்ற கணக்கு போட்டு காயை நகர்த்திய சரவணனுக்கு படம் முடிந்த பிறகுதான் தலைவலியே!

தனக்கு வேண்டியவர்களிடம் “என்னை டம்மியாக்கிட்டாரு சரவணன்” என்று புலம்பினாராம் சினேகா. அது ஒவ்வொரு காதுகளாக தாவி, கடைசியில் சரவணனுக்கும் எட்டியது. இதுபற்றி அவர் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனாலும் விடாமல் வேதனைப்பட்டு வருகிறார் சினேக்ஸ். “என்னை வைத்து நிறைய காட்சிகள் படமாக்கினார்கள். ஆர்வத்தோடு தியேட்டருக்கு போனால், எடுத்ததில் பாதி காட்சிகள் இல்லவே இல்லை. அதற்காக நான் கவலைப்படல. ஒரு காட்சியை எடுக்கவோ, குறைக்கவோ டைரக்டருக்கு உரிமை இருக்கு. இதை தவிர சொல்வதற்கு வேறு என்ன இருக்கு” என்கிறார் அதே விரக்தியோடு.

கலைகள் ஓய்வதில்லை... ராதாவும் தமிழ்சினிமாவும்


கலையும், அலையும் ஒன்றுதான் போலிருக்கிறது. ஓய்வதேயில்லை! அலைகள் ஓய்வதில்லையில் அறிமுகமான ராதா, இப்போது தனது ஜுனியர் ராதாவை சினிமாவுக்கு அனுப்பிவிட்டார். தெலுங்கில் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் மகள் கார்த்திகாவுக்கு ஷட்டிங் துணை நம்ம ராதாதான்.

ஒருகாலத்தில் தமிழ்சினிமா ரசிகர்கள் மொத்தமும் சரணமாகிக் கிடந்த ராதாவுக்கு இப்போதும் தமிழ்சினிமா மீது பெருமளவு காதல் இருக்கிறது. “நதியா மாதிரி ரீ என்ட்ரி கொடுக்கனும்ங்கிற ஆசையும் இருக்கு. ஆனால், இப்போதைக்கு குடும்பத்தை பார்க்கனும். கார்த்திகாவோட கேரியர் இருக்கு. எதிர்காலத்திலே நல்ல கேரக்டர்கள் அமைஞ்சா நிச்சயம் நடிக்க வருவேன்” என்கிறார் ராதா உறுதியாக.

மும்பையில் ஹோட்டல் நடத்தும் கணவருக்கு துணையாக இருக்கும் ராதாவிற்கு இப்போதும் பழைய தோழிகளின் நட்பு தொடர்கிறதாம். யார் யார் தெரியுமா? இளஞ்ஜோடிகள் படத்தில் பழக்கமான விஜயசாந்தி. அப்புறம் சரிதா, பானுப்பிரியா! ஒருவேளை மூணு பேரும் சேர்ந்து மேக்கப் போடுவாங்களோ என்னவோ?

Friday, January 2, 2009

2008 கருத்துக் கணிப்பு முடிவுகள் ரஜினியின் செலவாக்கு?

ஒவ்வொரு வருடமும் உலகத் தமிழர்களிடம் 'திரையுலகத் தேர்தல்' நடத்தி வருகிறது தமிழ்சினிமா.காம் இணைய இதழ். ஏராளமான வாசகர்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருகிறார்கள். வாக்களிப்பவர்களின் பெயர், இ-மெயில் முகவரி, மற்றும் அவர்கள் வசிக்கும் நாடுகள் பற்றிய விபரங்களுடன் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது இக்கருத்துக்கணிப்பில் ஏராளமான வாசகர்கள் பங்கேற்றனர். வெளிநாட்டு வாசகர்கள் மட்டுமல்ல, தமிழகத்தை சேர்ந்த பலரும் இந்த வாக்கெடுப்பில் ஆர்வமுடன் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த கவர்ச்சி நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த படம், சிறந்த இயக்குநர் என்ற வரிசைப்படி நடத்தப்படும் வாக்கெடுப்பு இது. கடந்த 2008-ம் ஆண்டில் யார் யார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் தர வரிசைப்படி கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-

சிறந்த நடிகர்

அஜித்(56%)
விஜய்(26%)
ரஜினிகாந்த்(10%)

சிறந்த நடிகை

நயன்தாரா(37%)
அசின்(20%)
திரிஷா(10%)





சிறந்த கவர்ச்சி நடிகை


நமீதா(34%)
நயன்தாரா(29%)
ஸ்ரேயா(4%)

சிறந்த இசையமைப்பாளர்

யுவன் சங்கர் ராஜா(28%)
ஏ,ஆர்.ரஹ்மான்(26%)
ஹாரிஸ் ஜெயராஜ்(24%)

சிறந்த நகைச்சுவை நடிகர்

வடிவேலு(40%)
விவேக்(23%)
சந்தானம்(12%)


சிறந்த படம்

ஏகன்(27%)
தசாவதாரம்(20%)
சுப்ரமணியபுரம்(10%)

சிறந்த இயக்குநர்

கே.எஸ்.ரவிகுமார்(14%)
ஷங்கர்(11%)
சசிகுமார்(5%)

சிறந்த வில்லன்

பிரகாஷ் ராஜ்(47%)
சுமன்(12%)
ரகுவரன்(7%)

சிறந்த ஆண் பாடகர்கள்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்(28%)
ஹரிஹரன்(13%)
கார்த்திக்(11%)

சிறந்த பெண் பாடகர்கள்

சித்ரா(18%)
சாதனா சர்கம்(9%)
சின்மய்(8%)

சிறந்த குணசித்ர நடிகர்


பிரகாஷ் ராஜ்(10%)
பசுபதி(8%)
விவேக்(5%)


கடந்த சில வருடங்களாகவே ரஜினியின் நிலை மூன்றாவது இடத்திலேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, தமிழக அரசியலில் குறிப்பிட்ட அளவுக்கு முன்னேற்றம் கண்டுவரும் விஜயகாந்த், உலக தமிழர்கள் மத்தியில் மிகவும் சொற்ப செல்வாக்குடனேயே இருக்கிறார் என்பதும் பலத்த அதிர்ச்சி தரக்கூடிய செய்தி.

MailPrint பிரகாஷ் ராஜுக்குக் கிடைத்த "மகள்"!


பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ளது அபியும் நானும். திரிஷா, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம், தந்தை - மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட படம்.

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் பிரகாஷ் ராஜை நெகிழ வைத்த ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சென்னை மாயாஜாலில் அபியும் நானும் படத்திற்கு எப்படி ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்பதை நேரில் பார்க்கப் போயிருந்தார் பிரகாஷ் ராஜ்.

படத்திற்கு நல்ல கூட்டம். படத்தைப் பார்த்து விட்டு பிரகாஷ் நிறைவுடன் வந்தபோது ஒரு இளம் பெண் பிரகாஷ் ராஜிடம் ஓடி வந்தார்.

சார், உங்களை கட்டிப் பிடித்து அப்பான்னு ஒரு முறை சொல்லிக்கட்டுமா என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டதும் அப்படியே நெகிழ்ந்து போய் விட்டாராம் பிரகாஷ் ராஜ்.

எனது படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இதைக் கருதுகிறேன் என தனது நண்பர்களிடம் சொல்லி மகிழ்கிறாராம்.

'சுறா'வில் சுறுசுறுப்பு காட்டும் கௌதம் மேனன்


'வாரணம் ஆயிரம்' நல்ல பெயர் பெற்று தந்த சந்தோஷத்தில் மூழ்கி மூழ்கி முத்தெடுக்காமல் அடுத்த வேலையை பார்க்க ஆயத்தமாகிவிட்டார் கௌதம் மேனன். 'சென்னையில் ஒரு மழைகாலம்' படத்திற்காகதான இருக்கும் என்று நினைத்தால் தவறு. அந்த படத்தின் வேலைகளை பாதியிலேயே நிறுத்தியுள்ளார் கௌதம் மேனன்.

'சென்னையில் ஒரு மழைக்காலம்' படத்திற்கு முன்பாக 'சுறா' படத்தை இயக்கி முடிப்பதுதான் கௌதம் மேனனின் தற்போதைய திட்டம். இதற்காக இரவு பகல் பாராது பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார். ஆந்திர இளசுகளின் இதயத்தில் லேட்டஸ்ட்டாக இடம்பிடித்துள்ள அல்லு அர்ஜூன்தான் 'சுறா'வின் நாயகன்.
அலலு அர்ஜூனிற்கு இருக்கும் தெலுங்கு மார்க்கெட்டை மனதில் கொண்டு ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இருமொழிகளில் தயாராகிவருகிறது 'சுறா'. ஹாரிஸ் ஜெயராஜின் பிரிவிற்கு பிறகு இசைப்புயலுடன் கைக்கோர்த்திருக்கும் கௌதம், 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படத்தை தொடர்ந்து 'சுறா'விற்கும் ஏ.ஆர்.ரஹ்மானையே இசையமைக்க கேட்டிருக்கிறாராம்.

காசு பற்றி கவலை வேண்டாம் என தயாரிப்பாளர்கள் சுதந்திரம் கொடுத்துவிட்டதால் பிரம்மாண்ட செட், வித்தியாசமான லொகேஷன் என பட்ஜெட் பற்றி யோசிக்காமல் மெகா ப்ராஜெக்டாக 'சுறா'வை செதுக்கி வருகிறாராம்.

ஆர்யாவுடன் கல்யாணமா? பூஜாவின் ‘திடுக்’ பதில்


சிவா மனசுல சக்தி மாதிரி, பூஜா மனசுல ஆர்யான்னு படமே எடுக்கலாம்.இருவருக்கும் இடையேயான காதல், ஆர்யாவின் பெற்றோர் எதிர்ப்பால் அந்தர் தியானம் ஆகிவிட்டது என்பதை முன்பே எழுதியிருந்தோம். இந்நிலையில், பூஜா மனசிலிருந்து ஆர்யாவுக்கு விடுதலை இல்லை என்பதை நான் கடவுள் விழா உணர்த்தியது.

பாலுமகேந்திரா பேசும்போது, இந்த கதையில் நடிக்க எவ்வித எதிர்ப்பும் சொல்லாமல் ஒப்புக் கொண்டதற்காக ஆர்யாவை பாராட்டிக் கொண்டிருந்தார். இதை கவனிக்காமல் பக்கத்திலிருந்த சூர்யாவிடம் பேசிக் கொண்டிருந்தார் ஆர்யா. சட்டென்று ஒரு சீட் தள்ளி உட்கார்ந்திருந்த ஆர்யாவை அழைத்த பூஜா, பாலுமகேந்திரா பேசுவதை கவனிக்க சொல்லி சைகை செய்தார். ஆர்யா பற்றி யார் பேசினாலும், முதலில் கைதட்டிக் கொண்டிருந்ததும் இவர்தான்.

விழா முடிந்ததும் பூஜாவிடம், “உங்களுக்கும் ஆர்யாவுக்கும் காதல்னு சொல்றாங்க. ஆர்யாவை கல்யாணம் செஞ்சுப்பீங்களா?” என்று கேட்டோம். “இரண்டு ரவுடிங்க கல்யாணம் பண்ணிகிட்டா என்னாகும்?” என்று பதிலுக்கு அவரும் ஒரு கேள்வியை கேட்டுவிட்டு பலமாக சிரித்தார். அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்னுதான் புரியலே!

பஞ்சாமிர்தம் விமர்சனம்


தமிழ்சினிமாவுக்கு பழக்கமான ஆள்மாறாட்ட கதையில், கொஞ்சம் மாயாஜாலத்தை கலந்தால் பஞ்சாமிர்தம் ரெடி. தொண்டையில் வைத்தால் கரைகிற பஞ்சு மிட்டாய் போல ஜில்லென்று கரைகிறது இரண்டரை மணிநேரமும்.

இராமாயண காலத்தில் துவங்குகிறது கதை. 'ஸ்சொய்ய்ய்ங்...' என்று டைவ் அடித்து பழங்கால சம்பவத்தை நிகழ்காலத்தோடு முடிச்சு போடுகிறார் இயக்குனர் ராஜு ஈஸ்வரன். எப்படி என்பதை விளக்கி சொல்வதற்கும், விளங்கிக் கொள்வதற்கும் அதிக கவலை வேண்டாம். ஏனென்றால் இந்த படத்தில் லாஜிக் என்பது கர்சீப்பைவிட சின்ன சைஸ்தான்!

மாரீசனுக்கும் இடும்பனுக்கும் சண்டை. காதலியை மாலையாக்கி கழுத்தில் அணிந்து கொள்ளும் மாரீசன், இடும்பனை தண்டையாக்கி காலில் அணிந்து கொள்கிறான். இராமனை ஏமாற்ற மான் வேடமிடும் மாரீசன் அவன் கையாலேயே அம்பு பட்டு கல்லாகிறான். சாப விமோசனம் உண்டல்லவா? அதுதான் கலியுகமான இந்த காலம்.

நாசரின் எஸ்டேட்டில் வேலை செய்யும் சரண்யா மோகன், கெடுபிடியாக வேலைக்காரர்களிடமும் உறவினர்களிடமும் நடந்து கொள்ள, இவரை மலையுச்சியில் கூலிப்படையினர் உதவியோடு தள்ளிவிடுகிறார்கள். தப்பிக்க நினைக்கும் இவரது கைபட்டு உயிர்தெழுகிற மாரீசன், சரண்யாவின் கண்களுக்கு மட்டுமே தெரிகிறார். இவரது உதவியோடு உயிர் தப்பும் சரண்யா, மீண்டும் எஸ்டேட்டுக்கு வர, அங்கே நாசர் போலவே இன்னொரு நாசர். ஒரிஜனல் நாசரை கட்டிப் போட்டுவிட்டு உள்ளே நுழைந்த கள்ள நாசர் இவர். இந்த ஆள்மாறாட்ட குழப்பத்தில் இடையே நுழைந்து கும்மியடிக்கிறான் இடும்பன். சரண்யாவுக்கு மாரீசனும், நாசருக்கு இடும்பனும் உதவ, பிசி சர்க்காரின் மேஜிக் ஷோவுக்குள் நுழைந்த சந்தோஷம் சிறுசுகளுக்கும் பெரிசுகளுக்கும்! இளசுகளும் மகிழ்வதற்கு வசதியாக சரண்யா, அரவிந்த் லவ் டிராக்கும் உண்டு.

இடும்பனை கொன்று, ஒரிஜனல் நாசரை மீட்டு சுபம் போடுகிறார்கள். இடையே வரும் இன்னொரு ட்விஸ்ட், இந்த சரண்யா நாசரின் பேத்தி!

மீன் வாசம் பிடிக்காத நாசரை விட, மீன் பிடிக்கிற நாசர் சூப்பர். திடீர் பணக்காரனான சந்தோஷத்தில் இவர் ஆடுகிற ஆட்டத்திற்கு தியேட்டரே ஆடுகிறது. அரவிந்த்-சரண்யா இருவரும் காதலிக்கிறார்களா, இல்லையா என்ற குழப்பத்தை தீர்த்து வைக்கிறது ஒரு டுயட். ஃபிரஷ் ஆப்பிள் போன்ற சரண்யாவுக்கு கொஞ்சம் அழுத்தமான கேரக்டர்தான் அரவிந்தை விட!

கூலிப்படையாக கருணாஸ், கஞ்சா கருப்பு. மலையிலே இருந்து தள்ளிவிடப்பட்ட பெண், வீட்டில் டைனிங் டேபிளில் உட்கார்ந்திருப்பது அதிர்ச்சி என்றால், காலே இல்லாமல் நடந்து போவது இன்னொரு அதிர்ச்சி.

எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, இளவரசு கூட்டணி கிச்சுகிச்சு முட்டுகிறார்கள். இடும்பனாக படத்தின் இயக்குனர் ராஜு ஈஸ்வரனே நடித்திருக்கிறார். சரித்திர கால முகம். கொஞ்சம் முயற்சித்திருந்தால் சரித்திரம் பேசும் குழந்தைகள் படத்தையே கொடுத்திருக்கலாம்.

பாராட்டுக்குரிய லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறது கிராபிக்ஸ்! அடுத்த இடத்தில் இசையமைப்பாளர் சுந்தர்சி பாபு.

குழந்தைகளின் ருசியறிந்து குறையில்லாமல் திறந்திருக்கிறார்கள் ஒரு பஞ்சாமிர்த கடையை!

விளையாட்டு- 2008


மற்ற நாடுகளுக்கு எப்படியோ, இந்திய விளையாட்டுத் துறைக்கு 2008ம் ஆண்டு அமோகமான ஆண்டு.

வாராது வந்த மாமணியாக ஒலிம்பிக்கில் நமக்கு தங்கப் பதக்க கிடைத்த ஆண்டாச்சே, சும்மாவா!

ஒலிம்பிக்கில் இந்தியா அசத்திய ஆண்டு, ஐபிஎல் டுவென்டி20 போட்டி மூலம் கிரிக்கெட் உலகை இந்தியா பிரமிக்க வைத்த ஆண்டு, பேட்மிண்டனில் சாய்னா நேஹ்வால் உலக அரங்கில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறிய ஆண்டு, கும்ப்ளே, கங்குலி ஆகிய ஜாம்பவான்ள் ஓய்வு பெற்ற ஆண்டு, சச்சின் டெண்டுல்கர் 12 ஆயிரம் ரன்களைத் தொட்ட ஆண்டு என 2008ம் ஆண்டு இந்திய விளையாட்டுத் துறைக்கு பெருமிதம் தந்த ஆண்டு.

ஒலிம்பிக்கில் முத்திரை ..

ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில், இந்தியா ஒரு தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.
இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், தங்கம் வென்று இந்தியாவின் நூற்றாண்டு கால கனவை நனவாக்கினார்.
மேலும் மல்யுத்தத்தில் சுஷில்குமார், குத்துச்சண்டையில் விஜேந்தர் குமார் ஆகியோர் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

இதுவரை இந்தியாவுக்குக் கிடைத்திராத கெளரவ சாதனை இது என்பதால் ஒட்டு மொத்த இந்தியாவும் குதூகளித்து சந்தோஷப்பட்டது.

சாய்னாவின் ரேங்க் சாதனை ...

இந்திய பேட்மிண்டன் துறைக்கும் 2008ம் ஆண்டு மிகப் பெரிய ஆண்டாக அமைந்தது. ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேஹ்வால், காலிறுதி வரை தகுதி பெற்று இந்தியாவுக்கு புது உற்சாகத்தை ஏற்படுத்தினார்.பதக்க வாய்ப்பு நழுவினாலும் கூட சாய்னாவின் திறமையான ஆட்டம் அத்தனை இந்தியர்களையும் கவர்ந்து விட்டது.

ஒலி்ம்பிக்கி்ல் பதக்கம் போனாலும் கூட, சைனீஸ் தைபே கிரான்ட்பிரி, ஜூனியர் காமன்வெல்த், உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றார் சாய்னா.

இதற்கெல்லாம் உச்சமாக, உலக தரவரிசைப் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்து புதிய வரலாறும் படைத்தார். இந்திய வீராங்கனை ஒருவர் தர வரிசைப் பட்டியலில் இந்த அளவுக்கு உயர்வு பெற்றது இதுவே முதல் முறையாகும்.

சாய்னாவின் தொடர் சாதனைகளால் சிறந்த வளரும் வீராங்கனையாக உலக பேட்மிண்டன் சம்மேளனம், சாய்னாவை தேர்வு செய்தது.

ஐபிஎல் திருவிழா ..

கிரிக்கெட் உலகை மட்டுமல்லாமல், உலக விளையாட்டு அரங்கிலும் பெரும் சலசலப்பையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐபிஎல் டுவென்டி 20 போட்டித் தொடர்.
கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து வீரர்களை ஏலம் எடுத்த 8 இந்திய அணிகள், இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்றன.

அதிகபட்சமாக இந்திய கேப்டன் டோணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 6 கோடிக்கு ஏலம் எடுத்தது. உலக அளவில் ஜாம்பவான் வீரர்கள் பல்வேறு அணிகளில் இடம் பெற்றனர்.

இறுதிப் போட்டியில் சென்னை அணியும், ஷான் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் வார்னே அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
உலகிலேயே மிகப் பணக்கார அமைப்பு என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய இந்தப் போட்டித் தொடரின் ஆடம்பரம், பிரமாண்டம் நிரூபித்தது.

சச்சின் 12,000 ...

சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கருக்கு 2008ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டு. காரணம், இந்த ஆண்டில்தான் அவர் லாராவின் உலக சாதனையை ஒரு வழியாக முறியடித்தார்.

அக்டோபர் 17ம் தேதி நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது லாரா வைத்திருந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் சாதனையை (11,953) கடந்தார் சச்சின்.

12 ஆயிரம் ரன்களைத் தற்போது தாண்டி தொடர்ந்து சாதனை தாகத்துடன் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார் சச்சின்.

உலக அளவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சச்சின் குவித்து வைத்துள்ள சாதனை ரன்களை தாண்ட மற்ற வீரர்களுக்கு ரொம்ப காலமாகும்.

ஜாம்பவான்களுக்கு டாடா ...

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான அனில் கும்ப்ளேவும், செளரவ் கங்குலியும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.

இந்திய பந்து வீச்சாளர்களிலேயே அதிக அளவிலான விக்கெட்களை வீழ்த்திய சாதனைக்குரியவர் கும்ப்ளே. 619 விக்கெட்களை வீழ்த்திய சாதனைக்குரியவர் கும்ப்ளே.

நவம்பர் மாதம் நடந்த இந்திய - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான டெல்லி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றுக் கொண்டார் கும்ப்ளே.

அருமையான கிரிக்கெட் வீரர், நிஜமான ஜென்டில்மேன் என சக கிரிக்கெட் வீரர்களால் பாராட்டப்பட்டவர் கும்ப்ளே. அவரது நிழலுக்கு அருகில் கூட இன்னொரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் யாரும் இல்லை.

கும்ப்ளேவைப் போலவே பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான கங்குலியும் இதே ஆண்டில்தான் ஓய்வு பெற்றார்.

தனது கடைசிக்கால கிரிக்கெட்டின்போது பல கசப்பான அனுபவங்களை சந்தித்திருந்தாலும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கங்குலி இருந்தபோது நிஜமாகவே இந்திய அணியைப் பார்த்த மற்ற அணிகள் மிரண்டது நிஜம்.

டோணிக்கு முன்பே உலக கிரிக்கெட் அணிகளின் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் கங்குலி. 12 ஆண்டு காலம் கிரிக்கெட் ஆடிய கங்குலி, நவம்பர் 10ம் தேதி நடந்த நாக்பூர் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

சரிந்த சானியா ..

இந்திய டென்னிஸின் இளம் புயல் சானியா மிர்ஸாவுக்கு இந்த ஆண்டு நிச்சயம் நல்ல ஆண்டு இல்லை.

தொடர் காயத்தால் 31வது இடத்திலிருந்து 100வது ரேங்குக்கு இறங்கிப் போய் விட்டார் சானியா.

வருடத்தின் ஆரம்பத்தில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய ஒபன் போட்டியில் 3வது சுற்று வரை முன்னேறியதே அவர் செய்த ஒரே சாதனை. அதன் பின்னர் தொடர்ந்து அவர் காயத்தால் அவதிப்பட்டு வந்ததால், போட்டிகள் எதிலும் பங்கேற்கவில்லை.

இப்படி காயத்தால் தேக்க நிலையைக் கண்ட சானியா 2009ம் ஆண்டில்தான் தனது வெற்றிக் கணக்கை துவக்குவார் எனத் தெரிகிறது.

அடித்த சிங் .. அழுத சாந்த் ...

டிரவுசர் போட்ட நர்சரி பள்ளிச் சிறார்கள் அடித்துக் கொண்டு அழுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஹர்பஜன் சிங் அடிக்க, ஸ்ரீசாந்த் தேம்பித் தேம்பி அழுததை டிவியில் பார்த்தபோது இந்தியாவே 'கலங்கித்தான்' போனது.

ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணிக்காக ஆடினார் ஹர்பஜன் சிங். பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தார் ஸ்ரீசாந்த்.

லீக் போட்டியின்போது மும்பை அணியை பஞ்சாப் தோற்கடித்தது. அப்போது அணிக்குத் தலைமை தாங்கிய ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் ஜாலியாக வார, கடுப்பான சிங், சாந்த்துக்கு விட்டார் ஒரு பளார் அறை.

இதை சற்றும் எதிர்பாராத ஸ்ரீசாந்த், மைதானத்தில் நின்றபிட தேம்பித் தேம்பி அழ ஒட்டு மொத்த ஸ்டேடியமும் உச் கொட்டியது.

சக வீரர்கள் தேற்றிப் பார்த்தும், அடக்க முடியாமல் ஸ்ரீசாந்த் அழுததுதான், விளையாட்டு உலகில் இந்த ஆண்டின் உருக்கமான சம்பவம் எனலாம்.

ஆனால் அதன் பின்னர் அவர் அண்ணன், நான் தம்பி, அவர் அடிக்கலாம் என்ற ரேஞ்சுக்கு ஸ்ரீசாந்த் பேசி சமாதானமாகிக் கொண்டார்.

'குப்புறடித்த' ஹாக்கி ...


இந்திய ஹாக்கி அணிக்கு 2008ம் ஆண்டு ஏழரை சனிக் காலம்.

இதுவரை இல்லாத பெரும் கேவலமாக, ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறத் தவறியது இந்திய ஹாக்கி அணி.

ஒலிம்பிக்கில் எட்டு முறை தங்கம் வென்ற பெருமைக்குரியது நமது ஹாக்கி அணி. ஆனால் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற தவறியபோது அதைக் கண்டு வேதனைப்பட்டனர் இந்திய ஹாக்கி ரசிகர்கள்.

இதை விட மோசமான சம்பவம் ஒன்றையும் இந்திய ஹாக்கி சம்மேளனம் சந்தித்தது.

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான அணியில் இடம் பெறுவற்காக இந்திய ஹாக்கி சம்மேளன செயலாளர் ஜோதிகுமரனிடம், டெல்லி வீரர் ஒருவர் லஞ்சம் கொடுத்தது ஸ்டிங் ஆபரேஷன் மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஜோதிகுமரன் ராஜினாமா செய்தார். இந்திய ஹாக்கி சம்மேளனத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் கலைத்து விட்டது.

இதற்கு மேல் இந்திய ஹாக்கி அணியின் 2008ம் ஆண்டு செயல்பாடு குறித்து விசேஷமாக கூற எதுவும் இல்லை.

திருமங்கலம்: யாருக்கும் ஆதரவில்லை-ராமதாஸ்


விழுப்புரம்: திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என்று பாமக பொதுக்குழு முடிவு செய்துள்ளது.
தற்போது திமுக கூட்டணியில் தாங்கள் இல்லை என்றும், தமிழகத்திலும் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சியே தலைமை தாங்க வேண்டும் என்றும், அடுத்த மாதம் மீண்டும் பொதுக்குழு கூடி கூட்டணி பற்றி முடிவு செய்யும் என்றும் பாமக அறிவித்துள்ளது.

பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.இதில் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ், வேலு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில், மக்களவை தேர்தல், கூட்டணி, திருமங்கலம் இடைத்தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பொதுவாக தேர்தல் அமைதியாக நடத்தப்பட வேண்டும். வாக்காளர்கள் சுதந்திரமாக சிந்தித்து சுயமாக வாக்களிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் அண்மை காலமாக நடைபெறும் இடைத் தேர்தல் களத்தில் ஜனநாயக மரபுகள் பலியாகிக் கொண்டிருக்கின்றன.

எனவே, இடைத் தேர்தல்களே தேவையில்லை. பொதுத் தேர்தலில் எந்த கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சிக்கே வாய்ப்பளித்து மற்ற கட்சிகள் ஆதரிக்க வேண்டும்.அதன் மூலம் செலவு, நேரம் மிச்சமாவதுடன் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார். நடுநிலையாளர்களும், முன்னாள் நீதிபதிகளும், சட்டவல்லுனர்களும் இந்த கருத்துக்கு வலு சேர்த்துள்ளனர்.

திருமங்கலம் இடைத் தேர்தலில் நடந்து வரும் நிகழ்வுகள் தெரிவிக்கப்பட்டு வரும் புகார்களும் ராமதாசின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளன.

அரசியல் கட்சிகள் மூர்க்கத்தனமாக மோதிக் கொள்ளும் இடைத் தேர்தல்கள் தேவையில்லை. எனவே திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளரையும் பாமக நேரடியாக ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்கிறது.

எனினும், தொகுதி வாக்காளர்கள் மீது தேர்தல் திணிக்கப்பட்டிருப்பதால் அத்தொகுதியைச் சேர்ந்த பாமகவினர், தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடக்கூடிய வேட்பாளரை முடிவு செய்து விருப்பப்படி வாக்களிக்கலாம் என பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை:

2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தல், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஆகியவற்றின்போது தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை.

இடதுசாரி கட்சிகள் ஏற்கனவே கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டன. பாமகவுடன் தோழமையை முறித்துக் கொண்டதாக திமுக தானாக முடிவெடுத்து அறிவித்துள்ளது.

திமுகவின் இந்த முடிவால் அந்த கூட்டணியில் பாமக இப்போது இல்லை. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக மாநிலத்தில் செயல்படும் பாமக, மத்தியில் காங்கிரஸ் தலைமை தாங்குகிற ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தொடர்கிறது.

தமிழகத்தில் காங். தலைமையில் கூட்டணி:

மாநிலத்திலும் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சியே தலைமை தாங்க வேண்டும் என்ற கருத்தை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்றும் விரும்புகிறது.

புதிய மக்களவையையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் மாநிலத்தில் கட்சிகளின் அணி சேர்க்கை, கூட்டணிகள் எப்படி அமையும் என்பது பற்றி தற்போது தெளிவற்ற நிலை நிலவுகிறது.

பாமகவின் வளர்ச்சி, கட்சியின் நலன் ஆகியவற்றை உத்தேசித்து வரும் பிப்ரவரி மாதத்தில் மீண்டும் பொதுக்குழு கூடி விவாதித்து கூட்டணி குறித்து முடிவெடுக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

100 கலைஞர்களுக்கு விருது வழங்கிய கே.பாலச்சந்தர், ராம.நாராயணன்


ஆங்கிலப் புத்தாண்டையொட்டி 100 நடிகர் நடிகையர் மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் மற்றும் இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் இந்த விருதுகளை வழங்கினர்.

வி 4 எண்டர்டைனர்ஸ் நிறுவனம் வழங்கும் பாப்புலர் திரைப்பட விருதுகளுக்கான விழா, சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது.

தினத்தந்தி, மாலைமலர், ஹலோ எப்.எம், மெடிமிக்ஸ், பாபுலர் அப்பளம், கலைஞர் டி.வி. ஆகிய நிறுவனங்கள் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கே.ஆர்.ஜி, டைரக்டர் கே.பாலசந்தர், தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், நடிகை குஷ்பு ஆகியோர் வழங்கினார்கள்.

நடிகர்கள் பிரபு, ஜெயம் ரவி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், பரத், பிரசன்னா, பசுபதி, பாண்டியராஜன், சாந்தனு, ஆர்.கே, விவேக், அலெக்ஸ், டாக்டர் ராம், மனோபாலா, நடிகைகள் சினேகா, விமலாராமன், விஜயலட்சுமி, கீர்த்திசாவ்லா, சரண்யா, கோவை சரளா, இயக்குநர்கள் சேரன், கே.எஸ்.ரவிகுமார், தரணி, சசி, ராதாமோகன், வெங்கட்பிரபு, ஜெயம்ராஜா, மிஸ்கின், பேரரசு, ஜி.சிவா, ஆதி மற்றும் ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், புதுமுக நடிகர்-நடிகைகள் உள்பட 100 பேர் விருது பெற்றார்கள்.

சிறந்த கலை வித்தகருக்கான விருது பிலிம்நியூஸ் ஆனந்தனுக்கும், வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகள் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், நடிகை வைஜயந்திமாலா ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.

ஈழத்திற்கு புத்தாண்டில் விடிவு?


ஈழம் தொடர்பாக தொடர் முழக்கம் நடத்திக் கொண்டிருப்பவர் சீமான். ராமேஸ்வரம் பேரணி கூட்டத்தில் தனி ஈழம் மலரும் என்று பேசியவர் உணர்ச்சி பிரவாகத்தில் சில வார்த்தைகளை கொட்டப் போக, கைது, சிறையடைப்பு என்று போனது விவகாரம். இவரோடு அந்த பேரணியில் பேசிய அமீரும் கைது செய்யப்பட்டார். வெளியே வந்ததும் அமீர் கொஞ்சம் அடக்கி வாசிக்க, சீமான் அதே முரட்டு பிடிவாதத்துடன் பேசிக் கொண்டிருந்தார்.

பின்பு ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மீண்டும் உணர்ச்சிவயப்பட்டார் சீமான். இது தொடர்பாக ‘மாயாண்டி குடும்பத்தார்’ படப்பிடிப்பில் இருந்த போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் அமைந்துள்ள இவரது அலுவலகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கும் மர்ம மனிதர்கள் தீ வைத்தார்கள். தற்போது சிறையில் இருக்கும் இவரை இயக்குனர் மணிவண்ணன் தவிர வேறு யாரும் சென்று பார்க்கவில்லை.

மதுரை சிறையில் சீமானும், அமீரும் அடைக்கப்பட்டிருந்தபோது பாரதிராஜா, செல்வமணி, சேரன், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் சென்று ஆறுதல் கூறினர். ஆனால் இந்த முறை ஒருவருமே வராதது சீமானை அதிர்ச்சியுற செய்திருக்கிறது. “யார் வந்து பார்த்தாலும் எனக்கு மகிழ்ச்சியில்லை. வராமல் போனாலும் வருத்தமில்லை. ஈழம் மலரும் நாளே மகிழ்ச்சியான நாள். புத்தாண்டில் ஈழம் மலரும்” என்கிறாராம் சிறை தோழர்களிடம்.

பாலா ஐ லவ் யூ..... ‘நான் கடவுள்’ விழாவில் பூஜா!


இந்த விழாவுக்காவது வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இசைஞானி இளையராஜா, வழக்கம்போல் அல்வா கொடுக்க, அவரது இசை மட்டும் பொங்கலின் ருசியோடு வெளியிடப்பட்டது. படம்- நான் கடவுள். இடம்-சத்யம் திரையரங்கம்.

தமிழ்சினிமாவின் ஜாம்பவான்களான மணிரத்னம், பாலுமகேந்திரா, வாலி, விக்ரம், சூர்யா, உள்ளிட்ட பல்வேறு விவிஐபிகள் விழா மேடையை அலங்கரிக்க, மேடைக்கு கீழேயே அமர்ந்திருந்தார் படத்தின் இயக்குனர் பாலா. எத்தனையோ பேர் அழைத்தும் மேடைக்கு வராதவரை, நன்றி சொல்லும் நேரத்தில் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து மேடையேற்றினார்கள் விக்ரமும், சூர்யாவும்.

“நான் பாலாவோட ரசிகனா இங்கே வந்திருக்கேன்” என்று மணிரத்னம் கூறியதற்கு Suryaதியேட்டரில் செம அப்ளாஸ். சூர்யாவின் பேச்சில் அளவு கடந்த குருபக்தி. “பாலா அண்ணன் படத்திலே நடிக்கலைன்னா நான் இந்தளவுக்கு வளர்ந்திருப்பேனா தெரியாது. இந்த படம் பொங்கலுக்கு வரலே, தீபாவளிக்கு வரலேன்னு பரவலா பேசுறாங்க. பொங்கல், தீபாவளிக்கு வருவதற்கு இது ஒன்னும் கரும்போ, பட்டாசோ இல்லை. பாலா அண்ணன் எப்போ கொண்டு வராரோ அப்போதான்! சேதுவுக்கு பிறகு விக்ரம் மாதிரி வித்தியாசமாக நடிக்கனும்னு அவரை பார்த்து ஓடிட்டு இருந்தேன். இப்போது போட்டிக்கு இன்னொரு ஆள் வந்தாச்சு. இன்னும் வேகமா ஒடனும். நேத்து என்னை பார்க்க என் வீட்டிற்கு வந்திருந்தார் ஆர்யா. இப்போ டிரெய்லரை பார்த்ததும், அவரா இவரு என்று நினைக்க வைத்திருக்கிறார்” என்றார்!
“இந்த டிரெய்லர் வித்தியாசமாக இருக்கு என்றார்கள். இதில் எனக்கொன்றும் ஆச்சர்யம் இல்லை. பாலா படத்தில் வித்தியாசம் இல்லைன்னாதான் வித்தியாசம். அடுத்ததாக பாலா படம் உருவாக ஐந்து வருடம் கூட ஆகலாம். ஆனால் பாலா படத்திலே நடிக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்” என்றார் விக்ரம்.

“கடவுள்னா பூஜை இருக்கும். இங்கே பூஜாவே இருக்கு” என்று அவரை பேச அழைத்தார் விழா தொகுப்பாளர் யூகிசேது. (என்ன ஒரு அற்புதமான தொகுப்பு!) மைக் முன் வந்த பூஜா தமிழில் ஆரம்பித்து ஆங்கிலத்தில் நீந்தி பின்பு தமிழில் வணக்கம் போட்டார். “நான் என்ன பேசறதுன்னே தெரியலே. பாலா சார் ஐ லவ் யூ” என்றார் உணர்ச்சிவசப்பட்டு. வந்ததில் இருந்தே முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாத பாலா, இதற்கும் அதே போல் ஒரு முக பாவனையை காட்டினார்.

‘நான் கடவுள்’ என்ற வார்த்தை எப்படிப்பட்ட வைபரேஷன் உடையது என்பதை விளக்கிய பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் தலைவர் சுவாமிநாதனின் பேச்சுதான் மிக மிக சுவாரஸ்யம்! “ரிக் வேதத்தில்தான் இந்த வார்த்தை முதன் முதலில் உச்சரிக்கப்பட்டது. இந்த வார்த்தையை உச்சரித்த அடுத்த வினாடி அவர் உயிரோடு இல்லை” என்று துவங்கி, இந்த வார்த்தையால் பலியானவர்களின் பட்டியலை அடுக்க அடுக்க திகில் பற்றிக் கொண்டது அரங்கில். நல்ல வேளையாக தனது உரையை பாசிட்டிவாக முடித்தார் சுவாமிநாதன்.

வெள்ளிவிழா ஆண்டு... -சிம்பு போடும் சீரியஸ் பிளான்


‘ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார். ஆவேண்டா சூப்பர் ஸ்டார்’ என்று சிம்பு ஆட வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது. சிலம்பாட்டம் அவரது 24 வது படமாம். அடுத்து இவர் நடிக்கப்போகும் படம் 25 வது படம். வயதும் 25 ஆகிறதாம் சிம்புவுக்கு. இந்த வெள்ளி விழா ஆண்டில், சொல்லிக் கொள்கிற மாதிரி ஒரு படத்தை இயக்கி நடிக்க விரும்புகிறார் சிம்பு.

அடுத்ததாக இவர் நடிக்கவிருந்த ‘போடா போடி’ டிராப் ஆகிவிட்டது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுக்கும் சிம்பு, கெட்டவன் முதலில் வருமா? போடா போடி முதலில் வருமா என்ற கேள்விக்கு பட்டும் படாமலும் பதில் சொன்னார். “வெள்ளி விழா படம் என்பதால் இன்னும் ஒரு முடிவுக்கும் வரலே. ஆனால், சொல்லியடிக்கிற மாதிரி படமா இருக்கும் என்பதை மட்டும் இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியும்” என்றார்.

“எனக்கு போட்டி பொறமையெல்லாம் கிடையாது. மூணு வருஷமா வேற படங்கள் எதிலேயும் கமிட் ஆக முடியாமல் தவிச்சிட்டு இருந்த ஆர்யாவுக்கு போன் பண்ணி ஆறுதல் சொன்னேன். ‘நான் கடவுள்’ ஷ§ட்டிங் சமயத்திலே போன் பண்ணி, கவலைப்படாதே மச்சான். இந்த படம் வெளியான பிறகு உனக்கு பெரிய அந்தஸ்து காத்திருக்கு என்று சக ஹீரோவை வாழ்த்தியிருக்கேன். இந்த மனசு சினிமாவில் ரொம்ப பேருக்கு இல்லை” என்றார் சிம்பு.

பெரிய மனசுதான்!

Thursday, January 1, 2009

காத்துக்கிடக்கும் குடும்பத்தார்

பத்து இயக்குனர்கள் முதல் முறையாக நடிக்கும் படம் என்று விளம்பரப் படுத்தப்பட்ட படம் 'மாயாண்டி குடும்பத்தார்'. ஏவி.எம்.-ல் பிரமாண்டமாக பூஜை போடப்பட்டு ஷூட்டிங்கும் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காக இயக்குனர் சீமானை கைது செய்தது போலீஸ்.

ஏற்கனவே ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் இதே பிரச்சனை எழ, சீமான், அமீர் இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்கள். அந்த வழக்கே முடியாதபோது மீண்டும் சீமான் கைது செய்யப்பட்டதால் மாயாண்டி குடும்பத்தார் மேற்கொண்டு படத்தை தொடர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பூமகள் ஊர்வலம், பாண்டி ஆகிய படங்களை இயக்கிய கருப்பையா என்கிற மதுரவன், ராசுமதுரவனாகி இயக்கிக் கொண்டிருக்கிறார். சீமானை படத்திலிருந்து ‌நீக்கிவிட்டு படத்தை தொடங்கலாம் என்று சொன்னதற்கு மதுரவன் மறுத்துவிட்டாராம். காரணம் சீமானும், மதுரவனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் சீமான் நடிக்க வரும் வரை காத்துக் கொண்டிருப்பதாக கூறி வருகிறார்.

மத்தியப் பிரதேசம் செல்லும் மணிரத்னம்

தமிழிலிருந்து தன்னுடைய கவனத்தை இந்திக்கு முற்றிலுமாக திருப்பிவிட்டார், இயக்குனர் மணிரத்னம். இவரது முந்தையப் படம் குரு, இந்தியில் தயாராகி தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

தற்போது தயாராகிவரும் ராவணன் (தமிழ்ப் பெயர் இன்னும் முடிவாகவில்லை) இந்தி, தமிழ் இரு மொழிகளில் தயாரானாலும், முக்கியத்துவம் இந்திக்குதான் என்கிறார்கள். காரணம் படத்தின் பட்ஜெட்.

ராவணனுக்குப் பிறகு மணிரத்னம் அனேகமாக ரன்பீர் கபூர் நடிக்கும் படத்தை இயக்கலாம் என்கின்றன தகவல்கள். ரன்பீர் பிரபல நடிகர் ரி‌ஷ‌ி கபூரின் மகன்.

அறிமுக படமான சாவரியா சரியாகப் போகாவிடினும் ரன்பீருக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் மணிரத்னம் ரன்பீரை சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் ராவணன் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மணிரத்னம் ஜனவரியில் மத்தியப் பிரதேசம் செல்கிறார். அங்குள்ள குக்கிராமம் ஒன்றில் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம் நடிக்கும் காட்சிகளை எடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

மும்பையில் ஈரம் கிளைமாக்ஸ்

­ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படம் ஈரம். அறிமுக இயக்குனர் அறிவழகனின் இந்தப் படத்தின் முலம் ரீ எ‌ண்ட்ரி ஆகிறார் மலையாள நடிகை சிந்து மேனன்.

மிருகம் படத்தில் நடித்த ஆதி, நந்தா இருவரும் ஈரத்தின் கதாநாயகர்கள். சிந்து மேனனுடன் சரண்யா மோகனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறர். தமன் படத்துக்கு இசையமைக்கிறார்.

திருச்சி மற்றும் புது‌ச்சேரியில் ஈரத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடந்தது. படத்தின் ஹைலைட்டான கிளைமாக்ஸை மும்பையில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். கதை மும்பையில் நடப்பதால் அங்கு கிளைமாக்ஸை எடுக்க தீர்மானித்திருப்பதாக ­ஷங்கர் அலுவலக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

­ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் ஒரே நேரத்தில் ஈரம் உள்பட 3 படங்களை தயாரித்து வருகிறது. ஆனந்தபுரத்து வீடு, ரெட்டச்சுழி படங்களின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாததால் முதலில் ஈரம் திரைக்கு வருகிறது. அடுத்த மாதம் படத்தின் இசையை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஜாக்குவாரின் இந்தியன்

மகன் விஜய சிரஞ்சீவியை சூர்யா படத்தின் முலம் கலைத்துறைக்கு அர்ப்பணித்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் அடுத்த அதிரடி, இந்தியன்.

சூர்யா வணிக ரீதியாக சுமார் என்றாலும், ஆக்­ஷன் காட்சிகளால் விஜய சிரஞ்சீவிக்கு நல்ல பெயர். உலகின் அனைத்து இடங்களிலிருந்தும் மகனுக்கு வாழ்த்துகள் குவிவதாக பூரிக்கிறார், ஜாக்குவார். அதே சூட்டுடன் அடுத்தப் படத்தை தயாரித்து, இயக்கி வெளியிட முடிவு செய்துள்ளார்.

புதிய படத்தின் பெயர், இந்தியன். ­ஷங்கரின் இந்தியனுக்கும் இதற்கும் கதை ரீதியாக எந்த ஒற்றுமையும் கிடையாது என்றாலும் இதுவும் தேசபக்தியை ஊட்டும் படம்தானாம்.

ஆக்­ஷன் கிங் அர்ஜுனுக்கு வாழ்வளித்த தேசபக்தி, அவரைப் போலவே அடிதடியில் தனி ஆவர்த்தனம் காட்டும் விஜய சிரஞ்சீவிக்கும் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சிலம்பாட்டம் - சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்

சிலம்பாட்டம் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டுள்ளது.

சிம்பு, சினேகா, சனாகான் நடித்த சிலம்பாட்டம் படத்தில் ஆபாசம் அதிகமிருப்பதாகக் கூறி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். படத்தில் வழக்கறிஞர்களை அவமதிப்பதுபோல் சிம்பு வசனம் பேசியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் படத்தில் வழக்கறிஞர்களை குறிப்பிட்டு சிம்பு பேசும் சர்ச்சைக்குரிய வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமிருப்பதாகவும், பத்து வயது சிறுவன் கொலைகள் செய்வதாகவும் சமுக பொறுப்பில்லாமல் சிலம்பாட்டம் படத்தை எடுத்திருப்பதாக வழக்கு தொடுத்தவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சிலம்பாட்டம் படத்தின் இயக்குனர் சரவணன், படம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. சிலர் சொல்வதைப்போல் ஆபாசத்தை என்னுடைய படத்தில் திணிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

இந்த மாதம் வெளியான படங்களில் அதிக கலெக்­சனுடன் சிம்புவின் சிலம்பாட்டம் அனைத்து சென்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சூர்யா நடிக்கும் ஆதவன்

அயன் படத்தில் நடித்துவரும் சூர்யா, கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முதல் முறையாக நடிக்கிறார்.

அயனை தொடர்ந்து 3 படங்கள் சூர்யாவுக்காக காத்திருக்கின்றன. நந்தலாலாவை இயக்கிவரும் மிஷ்கினின் முதல் சூப்பர் ஹீரோ படமான முகமூடி. ஹரி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் சிங்கம். மூ‌ன்றாவதாக கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் ஆதவன்.

முகமூடியை யு டிவி தயாரிக்கிறது. இந்த ப்ராஜெட் டேக் ஆஃப் ஆக இன்னும் பல மாதங்கள் ஆகும். சிங்கத்தை தொடங்க ஹரி தயாராக இருந்தாலும் சூர்யா முதலில் கே.எஸ். ரவிக்குமாரின் ஆதவனில்தான் நடிப்பார் என்பது உறுதி செய்யப்படாத தகவல்.

குருவியை தயாரித்த உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் ஆதவனை தயாரிக்கிறது. இது உதயநிதியின் இரண்டாவது தயாரிப்பு.

ஆதவனில் நடிக்க நயன்தாராவிடம் கால்‌ஷ‌ீட் கேட்கப்பட்டுள்ளது. லிங்குசாமியின் பையா படத்திலிருந்து விலகிய நயன்தாரா ஆதவனில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பது கடைசியாக கிடைத்த தகவல்.

நடிகைகளை எரிச்சலூட்டும் நடிகன்

ஒத்துவராத நடிகைகளை கழட்டி விடுவதில் சிம்பு கில்லாடி. ஏற்கனவே 'கெட்டவன்' படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட நடிகை லேகா வாஷிங்டன் ஒரு வாரம் ஷூட்டிங் முடிந்த பின் அவர் வேண்டாம் வேறு நடிகையை வைத்து ரீ ஷூட் பண்ணலாம் என்று சொல்ல... அந்தப் படமே வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார் பரதன் பிலிம்ஸ் திருச்சி ஆர். விஸ்வநாதன்.

அதன்பின் 'போடா போடி' என்றொரு படம் ஆரம்பிக்கப்படுவதாக செய்தி மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சிம்புக்கு ஜோடியாக நடிக்க, சரத்குமார் மகள் வரலட்சுமியை தேர்வு செய்தார். அதற்குள் சிலம்பாட்டம் பாதியில் நிற்பதால் அந்தப் படத்தை முடித்துவிட்டு போடா போடி ஆரம்பிக்கலாம் என்று வரலட்சுமியை காத்திருக்க வைத்தார்.

தற்போது சிலம்பாட்டம் வெளியாகியும்விட்டது. ஆனால், போடா போடியை ஆரம்பிக்காமல் கெட்டவன் படத்தை மீண்டும் ஆரம்பிக்க கையிலெடுத்திருப்பதால் கெட்டவன் முடிந்ததும் ஆரம்பிக்கலாம் என்று சொல்ல... கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டு வந்துவிட்டார். எப்படியும் கெட்டவன் முடிய இரண்டு வருடங்கள் ஆகும். அதுவரை இளமையை கயிறு போட்டா கட்டிவைக்க முடியும்...?

முதலிடத்தில் சிலம்பாட்டம்

ஆபாசம் என்ற விமர்சனங்களை தாண்டி செ‌ன்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது சிம்புவின் சிலம்பாட்டம். இந்த வருடத்தின் கடைசி ஹிட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

1. சிலம்பாட்டம்

வார இறுதியில் 35 லட்சங்கள் வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது சிலம்பாட்டம். ஆக்­ஷன் காட்சிகளும் படத்தின் பாடல்களும் இளைஞர்களை திரையரங்கை நோக்கி ஈர்ப்பது சிலம்பாட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். சென்னையில் மட்டும் இதுவரை ஒன்றரை கோடி வசூலித்து எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது சிம்புவின் இப்படம்.

2. அபியும் நானும்

இந்த வருடம் வெளியான வெள்ளித்திரை, ராமன் தேடிய சீதை, பூ படங்களின் வரிசையில், நல்ல படம் ஆனால் சுமாரான கலெக்ச­ன் என்ற அபாயத்தை சின்ன இடைவெளியில் கடந்திருக்கிறது, ராதா மோகனின் இந்தப் படம். நடிப்பு, திரைக்கதை, இசை என அனைத்தும் கவரும் விதத்தில் இருப்பது படத்தின் சிறப்பு. வார இறுதியில் 10.68 லட்சங்கள் வசூலித்திருக்கும் இப்படம், இதுவரை 41 லட்சங்கள் சென்னையில் மட்டும் வசூலித்துள்ளது.

3. பஞ்சாமிர்தம்

வருட இறுதியில் நமிபிக்கை அளிக்கும் விதமாக வெளியாகியிருக்கிறது ராஜ ஈஸ்வரனின் பஞ்சாமிர்தம். குழந்தைகளை கவரும் காமெடி படத்தின் ப்ளஸ். வெளியான முதல் நான்கு தினங்களில் ஒன்பதரை லட்சங்கள் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் 3வது இடத்தை பிடித்துள்ளது.

4. திருவண்ணாமலை

பேரரசுவின் மெகா ப்ளாப் என்றால் அது திருவண்ணாமலைதான். வார இறுதி வசூலில் திண்டுக்கல் சாரதிக்கு அடுத்த இடத்தில் வரும் இப்படம் இதுவரை 41 லட்சங்களை வசூலித்துள்ளது. தினமும் குறைந்துவரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை படத்தின் தோல்வியை உறுதி செய்கிறது.

5. திண்டுக்கல் சாரதி

சென்னை பாக்ஸ் ஆபிஸில் கருணாஸின் திண்டுக்கல் சாரதிக்கு ஐந்தாவது இடம். முதல் வார இறுதியில் 27 லட்சங்களை வசூலித்துள்ளது இப்படம். உபயம் சன் தொலைக்காட்சியின் அபிரிதமான விளம்பரம். வெளியூர்களில் படத்தின் வசூல் சுமார் என்பது கவலைதரும் செய்தி.

வில்லு .. முமைத் 'ஜில்லு'!


வில்லு படத்தில், விஜய்யுடன் இணைந்து முமைத்கான், சரியான குத்தாட்டம் போட்டுள்ளாராம்.
தமிழ் சினிமாவின் முக்கிய குத்தாட்ட நாயகிகளில் முமைத்துக்கு முக்கிய இடம் உண்டு. படு கிளாமரான குத்துப பாட்டு என்றால் கூப்பிடு முமைத்தை என்று கூறும் அளவுக்கு படு கிராக்கியாக ஆடிக் கொண்டிருப்பவர்.

இப்போது தெலுங்கில் முமைத் ஒரு ஹீரோயினும் கூட. தெலுங்கில் அதிரடி ஆக்ஷன் ராணியாக ஒரு படத்தில் நடித்துள்ள முமைத்கான் அடுத்து ஒரு அதிரடிப் படத்தில் தலை காட்டவுள்ளார்.

இந்த நிலையில் வில்லு படத்தில் ஒரு செமையான குத்தாட்டத்தைப் போட்டுள்ளாராம் முமைத்கான். அவருடன் இன்னொரு கவர்ச்சி ராணியும் ஆடியுள்ளாராம். இருவருக்கும் ஈடு கொடுத்து ஆடியிருக்கிறார் விஜய்.

பிரபுதேவா டான்ஸ், முமைத்கான் கவர்ச்சி, விஜய்யின் ஆட்டம் என அட்டகாசமாக வந்துள்ளதாம் இந்த குத்துப் பாட்டு. படத்தின் ஹைலைட்டாக, படு ஹாட்டாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் குசுகுசுக்கப்படுகிறது.

இப்படத்தில் குஷ்புவும் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார் என்பது தெரியும்தானே?

'தங்கச்சி'யை வெறுக்கும் சரண்யா!


கேரளத்து இளம் நாயகி, சரண்யா மோகன், இனிமேல் தங்கச்சி வேடங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார். நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பாராம்.

காதலுக்கு மரியாதை படத்தில் குட்டிப் பெண்ணாக வந்து போனவர்தான் சரண்யா மோகன். தொடர்ந்து ஒரு நாள் ஒரு கனவு படத்திலும், நடித்தார். சமீபத்தில் யாரடி நீ மோகினி படத்தில் நயனதாராவின் தங்கச்சியாக நடித்தார். இந்தப் படத்தில்தான் அவர் அதிகம் பேசப்பட்டார். பின்னர் ஜெயம்கொண்டானிலும் நடித்திருந்தார்.லேட்டஸ்டாக வெளியான மகேஷ், சரண்யா மற்றும் பலர் படத்தில் நடித்திருந்தார். பஞ்சாமிர்தம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தற்போது பரத்தின் தங்கச்சியாக ஆறுமுகம் படத்தில் நடித்துள்ளார். அஆஇஈ படத்தில் இவரும், மோனிகாவும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளார் சரண்யா. மேலும், இனிமேல் தங்கச்சி வேடத்தில் நடிக்க மாட்டாராம். நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பாராம். பரத்துக்கு தங்கச்சியாக நடித்ததோடு சரி. இனிமேல் ஒன்லி ஹீரோயின் ரோல் மட்டுமே என்கிறார் இந்த குட்டையழகி சரண்யா.

மலையாளத்திலிருந்து வந்திருந்தாலும் முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே நடித்து வருவதாக கூறும் சரண்யா, தமிழ் திரையுலகம்தான் எனக்கு சவுகரியமாக இருப்பதாக கூறுகிறார்.

ரசிகர் தொல்லை: கிளம்பிய ரஜினி-ஐஸ்!


வேலூரில் ரசிகர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் எந்திரன் படப்பிடிப்புக் குழு சென்னை திரும்பிவிட்டது. வேலூரில் இன்னும் இரு தினங்கள் எடுக்க வேண்டியிருந்த மீதிக் காட்சிகளை சென்னையில் வைத்துப் படமாக்கி வருகின்றனர்.

வேலூரில் ஒரு வாரமாக எந்திரன் படப்பிடிப்பு நடந்தது. அப்போது திரண்ட கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் எக்கச்சக்கமாக போலீஸ் குவிக்கப்பட்டது. உயரதிகாரிகள் வந்து கட்டுப்படுத்தியும் முடியவில்லை.ரஜினி, எந்திரனை உருவாக்குவது போலவும் அவரது உதவியாளர் ஐஸ்வர்யாராய் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டன.

பின்னர் எந்திரனை உருவாக்கியது பற்றி பத்திரிகையாளர்களுக்கு ரஜினி தெரிவிப்பது போன்ற காட்சிகளை எடுத்தனர். இதற்காக வேலூர் மற்றும் சென்னையில் இருந்து 50க்கும் மேற்பட்ட போட்டோகிராபர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ஆராய்ச்சி கூட வாசலில் ரஜினி நடந்து வருவது போலவும் அவரை போட்டோகிராபர்கள் சூழ்ந்து படம் பிடிப்பது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன. படம் பிடிக்கும் போது அதில் பிலிம் இருக்கக் கூடாது பிளாஷ் மட்டும் செய்ய வேண்டும் என்று போட்டோகிராபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

குவிந்தனர் ரசிகர்கள்:!

இதற்கிடையில் ஐஸ்வர்யா, ரஜினியை காண வேலூர் சுற்றுப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். அவர்கள் கூச்சலிட்டபடியே இருந்ததால் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியவில்லை.எனவே ரஜினி, ஐஸ்வர்யா ராய் மற்றும் படக்குழுவினர் சென்னை திரும்பிவிட்டனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நள்ளிரவில் இந்த படப்பிடிப்பு நடந்தது. ஒரு வீட்டில் ரஜினியும், ஐஸ்வர்யா ராயும் தங்கியிருப்பது போன்ற காட்சிகளை ஷங்கர் படமாக்கினார்.இன்னும் இரு தினங்களுக்கு இங்கு படப்பிடிப்பு நடத்தும் திட்டமுள்ளதாம். ஆனால் இங்கும் ரசிகர்கள் திரண்டால், வேறு இடத்துக்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.

இந்த ஷெட்யூல் முடிந்தததும் ரஜினி, ஐஸ்வர்யா ராயுடன் படக் குழு, குலு மனாலிக்குப் பயணமாகிறது.

பரீட்சைக்காக படத்தை மறுத்த பார்வதி!

பி.ஏ. பரீட்சைக்கு படிப்பதால் 'அவள் பெயர் தமிழரசி' பட வாய்ப்பையே மறுத்திருக்கிறார் 'பூ' படத்தின் மூலம் புகழ்பெற்ற பார்வதி.

இது குறித்து பார்வதி கூறுகையில்,

பூ படத்தை பார்த்தவர்கள் பலரும் பாராட்டினார்கள். சமீபத்தில் சென்னையில் நடந்த சர்வதேச பட விழாவிலும் பூ திரையிடப்பட்டது. அதன் மூலம் நிறைய பாராட்டுகள் கிடைத்தன. இப்போது கன்னடத்தில் 'மலை வர்லே மஞ்சு விர்லி' படத்தில் நடித்து வருகிறேன்.

ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டும் நடிக்க வேண்டும்; அதுவும் அர்த்தமுள்ள படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். அதன்படிதான் படங்களை ஏற்கிறேன்.

சமீபத்தில் அவள் பெயர் தமிழரசி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. பூ படம் தயாரித்த மோசர் பேர் நிறுவனம்தான் இதைத் தயாரிக்கிறது.

இதில் ஜெய் ஹீரோ. இதுவும் புதுமையான கதை கொண்ட படம். ஆனால் கன்னட படத்தை முடித்துவிட்டு இதில் நடிக்க முடியாத சூழல். காரணம், பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறேன். மார்ச்சில் பரீட்சை வருகிறது. அதனால் இப்படத்தை ஏற்கவில்லை.

இந்தப் பட வாய்ப்பு போனால் போகட்டும். படிப்பு முக்கியமில்லையா..., என்றார் பார்வதி.

நியாயம்தான்!

அரசியலில் ஷாரூக்-காங். சார்பில் போட்டி?


வடக்கு மும்பை தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நடிகர் ஷாரூக்கான் நிறுத்தப்படக் கூடும் என்று தெரிய வந்துள்ளது.இத்தொகுதியின் தற்போதைய எம்பி கோவிந்தா. இவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படாது என்று சிலரும், மீண்டு்ம் தேர்தலைச் சந்திக்க கோவிந்தா விரும்பவில்லை என்று சிலரும் கூறுகின்றனர்.

இதுகுறித்து மும்பை பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கிருபா சங்கர் சிங் கூறுகையில், கோவிந்தாவின் செயல்பாடு குறித்து நான் எதும் கூறுவதற்கில்லை. ஆனால் ஷாரூக்கானை இந்தத் தொகுதியின் எம்பியாக்க விரும்புகிறோம். கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு ஷாரூக் கானுக்கு மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

ஷாரூக் ஒப்புக் கொண்டால் கோவிந்தாவுக்கு பதில் வடக்கு மும்பை தொகுதியில் அவருக்கு சீட் தரப்படும் என்றும் கிருபா சங்கர் தெரிவித்தார்.

ஷாருக் கானுக்கு பல காலமாகவே காங்கிரஸ் வலை வீசி வருவது குறிப்பிடத்தக்கது. இம்முறை அவர் காங்கிரஸ் கோரிக்கையை ஏற்பார் என்று கூறப்படுகிறது.

குடும்ப பிரச்சனையையே தீர்க்காதவர்-சிரஞ்சீவி மீது ரோஜா தாக்கு!


தன் குடும்பப் பிரச்சினையையே தீர்க்க முடியாத சிரஞ்சீவி நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கப் போகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவி நடிகை ரோஜா.

ஹைதராபாத்தில் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,

சிரஞ்சீவி 3 நாள் பிரசாரம் செய்தாலே தொண்டை வலி என்கிறார். 4 நாள் பிரசாரம் செய்தால் இடுப்பு வலி என்கிறார். தொடர்ந்து அவரால் பிரசாரம் செய்ய முடிவதில்லை. ரதத்தில் இருந்து இறங்கி தனது தம்பி பவன் கல்யாணை ஏற்றி விடுகிறார். அவர் எத்தனை நாள் பிரசாரம் செய்வார் என தெரியவில்லை.

பவன் கல்யாண் ஒருவரை திருமணம் செய்து மற்றொருவருடன் குடித்தனம் நடத்துகிறார். இவர் எப்படி மக்களை வழி நடத்துவார். இவர் சொன்னால் யார் கேட்பார்கள். முதலில் மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்ட வேண்டும்.

சிரஞ்சீவியால் தனது குடும்ப பிரச்சினையையே தீர்க்க முடியவில்லை. இவர் எப்படி நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார். பிரஜா ராஜ்யம் கட்சி தொடங்கி 4 மாதம் ஆகியும் அதற்கு ஒரு வடிவம் கொடுக்க சிரஞ்சீவியால் முடியவில்லை.

சிரஞ்சீவி சூப்பர் ஸ்டார் என்று சொல்லுகிறார். ஆனால் நடிகர் சங்க தேர்தலில் சிரஞ்சீவி குடும்பத்தினர் தோல்வியை தழுவியுள்ளனர்.

நடிகர் சங்க தேர்தலிலேயே குடும்பத்தினரை வெற்றி பெற வைக்க முடியாதவர் பொதுத்தேர்தலில் எப்படி ஜெயிப்பார். நடிகர்களை பார்த்து யாரும் ஓட்டு போடுவதில்லை. என்.டி. ராமராவ் குடும்பத்தினரை யாரும் நடிகர்களாக பார்க்கவில்லை. அரசியல்வாதிகளாக பார்க்கிறார்கள். அவர்கள் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.

சிரஞ்சீவியோ, சுயலாபத்துக்காக கட்சி தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். அவரது இந்த ஷோ சீக்கிரம் முடிந்துவிடும் என்றார் ரோஜா.

எதற்கும் தயாராம் பூனம் ஹோம்லி, கிளாமர்


சேவல், தெனாவெட்டு படங்களின் நாயகி பூனம் பாஜ்வா, கிளாமர் குளத்தில் குதிக்கத் தயாராகி விட்டார்.பூனம் பாஜ்வாவுக்கு முதல் படம் சேவல். அதைத் தொடர்ந்து தெனாவெட்டு படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார்.

இரு படங்களிலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. ஆனால் அடுத்து அவரது கிளாமர் பேசப்படப் போகிறது. காரணம், பூனமும் கிளாமர் குளத்தில் காலெடுத்து வைக்கவுள்ளார்.

பூனம் அடுத்து நடிக்கவுள்ள இரு படங்களிலும் ஜீவாதான் நாயகன். இந்த இரண்டு படங்களுக்கும் ஜீவாவே, பூனத்தின் பெயரை ரெக்கமன்ட் செய்தாராம்.

முதல் படத்தை தெனாவெட்டு படத்தை எடுத்த இ.எல்.கே. நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்தில் படு கிளாமராக நடிக்கப் போகிறாராம் பூனம். இந்த கேரக்டரில் பூனம் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் எனக் கருதிய ஜீவா, அவரே நேரடியாக பூனத்திடம் பேசி விளக்கியுள்ளார்.ஜீவாவே சொல்லி விட்டதால், அப்ஜெக்ஷன் இல்லை என்று கூறி ஒப்புக் கொண்டு விட்டாராம் பூனம்.

அதேபோல ஜீவாவின் அடுத்த படத்தின் கதையும் பிடித்துப் போனதால் அதிலும் நடிக்க ஓ.கே. சொல்லி விட்டாராம்.இனிமேல், ஹோம்லி, கிளாமர் என எந்த மாதிரியான கேரக்டர் கிடைத்தாலும் நடித்துக் கொடுக்கத் தயார் என ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார் பூனம்.

குட்டை பாவாடையும், கட்சி சின்னமும்.... - 2008 ஒரு 'விபரீத' அலசல்!


2008 ல் இருக்கிற இரண்டு சைபர்களும் முழி போல் பிதுங்கியதுதான் 'மேற்படி' வருடத்தின் மெகா சாதனை! உலக்கை தேய்ஞ்சு லட்டியான கதையாக புஷ்டி நிறுவனங்கள் கூட, நோஞ்சானாகிப் போனது இந்த வருடத்தில்தான்.

சிவப்பு கார்ப்பரேட் விரித்து வரவேற்கப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் கார்ப்பரேஷன் Kuselanலாரி போல கவலைக்குள்ளாயின. இந்த ஆர்டிஎக்ஸ் தாக்குதலுக்கு உலக பொருளாதார சந்தையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் காரணம் காட்டினாலும், ரஜினி, அஜீத் போன்ற திரையுலக தாவூத்துகளும் முக்கிய பங்காற்றினார்கள். 'டைட்டில் விஷயத்தில் பாசிட்டிவாக யோசிங்க' என்று படத்தின் தயாரிப்பாளர்களே அட்வைஸ் பண்ணுகிற அளவுக்கு, 'குசேல' ஆட்டம் குருரமாக இருந்தது.

இறுக்கி பிடிச்சு உம்மா தருகிற அளவுக்கு அன்புதான். இன்னும் இறுக்கி பிடிச்சு மூச்சுக்கே மோசம் வைக்க பார்த்தார்கள் ரசிகர்கள். "ஆரம்பிச்சா வழக்கு தொடுப்பேன்"னு இவரும், "தொடுத்தா பரவால்லே" என்று ரசிகர்களும் மாற்றி மாற்றி அறிக்கை விட்டபின் ஒருவழியாக உதயம் ஆனது, ரஜினி கட்சி!

கட்சி தலைவருக்கும், காமெடி நடிகருக்கும் நடுவிலே எழுந்த மோதல் இன்னொரு சினிமாவானது மக்களுக்கு. இந்த இலவச சினிமாவில் அதிகம் பேசியது காமெடி நடிகர்தானே தவிர, பஞ்ச் டயலாக் கூட பேசவில்லை கட்சி தலைவர். "வீட்டிலே கல்லெறிஞ்சவங்களை சும்மாவிட மாட்டேன்" என்று விடாமல் சொல்லெறிந்து கொண்டே இருக்கிறார் காமெடி நடிகர். அடுத்த வருடத்திலாவது இருவரும் ராசிக்கு வருவார்களா என்று ராசிபலன் பார்க்க வேண்டும். "கோடம்பாக்கம் ஜோதிடர்களே, வாயை திறங்கப்பா" இந்த விஷயத்தில்.

அது கோஷ்டி சண்டை என்றால், இது குடும்ப சண்டை! யுவன் சங்கர் ராஜாவை டு விட்டுப் பிரிந்தார் அவரது மனைவி சுஜயா. நல்லவேளை இன்னும் இரண்டு குழந்தைகள் பிறந்த பின் கேட்காமல், இப்போதே விவாகரத்து கேட்டு பிரிந்தார்கள் ஊர்வசியும் மனோஜ் கே ஜெயனும். துக்கம் இது என்றால், சந்தோஷம் இன்னொன்று. திமிரு படத்தில் தன்னுடன் பின்னி பிணைந்து ஆடிய ஸ்ரேயா ரெட்டியை அண்ணியாக்கிக் கொண்டார் விஷால். (புதுசு புதுசா கலாச்சாரம், விடுங்க இது பெரிய இடத்து சமாச்சாரம்.)

குளித்துவிட்டு அவசரத்தில் அப்படியே வந்துவிட்டாராம்! முதல்வர் விழாவுக்கு Shreyaஆபாசமாக வந்த ஸ்ரேயா சொன்ன பதில்தான் இது. (நல்லவேளை, சோப்பு நுரையை துடைத்துக் கொண்டு வந்தாரே?) பின்னாளில் ஸ்ரேயா ரசிகர்கள் கட்சி ஆரம்பித்தால் குட்டை பாவாடையை சின்னமாக கேட்கலாம். அதையும் சின்னதாக கேட்பார் ஸ்ரே! கடந்த வருடத்தின் பெரும் பரபரப்பு இந்த மேட்டர்தான் என்பதால், ஸ்ரேயாவின் முகத்தில் ஸ்பெஷல் சிரிப்பு.

என் பையன் மேல திட்டமிட்டு ஒரு கேரக்டர் அசாசினேஷன் நடக்குது. ஏன்? என் தலையை சிலுப்பிக் கொண்டு கேள்வி கேட்டார் விஜய டி.ராஜேந்தர். அதையே சாந்தமாக கேட்டார் சிம்பு. கார் திருட்டு போன விவகாரத்தில் இன்னமும் மர்மமாக இருப்பது சிம்பு பேசிய ஒரே விஷயம்தான். நான் இதுவரைக்கும் தண்ணியடிச்சதே இல்லை! (பணக்கார வீட்டு புள்ளையாச்சே, குழாயிலே தண்ணியடிக்க வேலைக்காரி இருந்திருப்பாங்க)

ஆடி மாசத்திலே கூழ் ஊத்துவாங்களா தெரியாது. கூடி கும்மாளமடிக்க வசதியாக நமீதாம்மன், நயன்தாரம்மன்களுக்கு கோவில்கள் கட்டுவதற்காக உழவார திருப்பணிகளை மேற் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இதற்கு இரு அம்மன்களும் சம்மதித்திருப்பதுதான் கடந்த வருடத்தின் காஸ்ட்லி வரம்!

தமிழ்நாட்டு மண்ணை மிதித்துவிட்டு ஒரு கிசு கிசு கூட ஒட்டாமல் போனால் எப்படி? ஆணானப்பட்ட ஜாக்கி சானையே ஜாக்கியை விட்டு து£க்கி நிறுத்தினார்கள் பத்திரிகையாளர்கள். பிரபல நட்சத்திர ஓட்டல் சமையல்காரரை நம்பவில்லை. தண்ணீர் கூட அங்கேயிருந்து வந்ததுதான் Jackie Chanஎன்றெல்லாம் கதை எழுத, இங்கே குடித்த தண்ணீரை அங்கே போய் கண்கள் வழியாக வெளியேற்றினார் நிஜ உலகநாயகன். தனது வெப்சைட்டில், "நான் இந்தியாவில் தண்ணீர் குடிக்காமல் போனேனா?" என்பதற்கு பெரும் விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது. "முதல்வர் விழாவில் சிக் உடை? ஏன்?" என்று விளக்கம் கேட்டு மல்லிகா ஷெராவத்தையும் கோர்டுக்கு இழுக்க பார்த்தார்கள் சொக்கனாம்பட்டி சொக்கலிங்கங்கள்! இன்னொரு ஸ்ரேயா ஆவதற்கு முன் தப்பித்தார் மல்லிகா.

வரப்போகிற பெண்டாட்டிக்கு கவிதை எழுதி, அதை ஊருக்கெல்லாம் கொடுத்தார் பாடலாசிரியர் யுகபாரதி. (அதை அவரு பெண்டாட்டிக்கு கொடுத்தாராங்கிறதை நேரில் பார்க்கும்போது மறக்காம கேட்கனும்)

சில ஆறுதல்களும் அங்கங்கே... ஸ்டார் அந்தஸ்தை நம்பி கோடிகளை கொட்டி, தெருக் கோடிக்கு போன தயாரிப்பாளர்களுக்கு அட்வைஸ் பண்ணுகிற மாதிரி, 45 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் படமான சிலந்தி பெரும் வசூலை குவித்தது. (இந்த படத்தின் பட்ஜெட்டில்தான் பல பெரிய தலைகளின் படங்களுக்கு டிஜிட்டல் இமேஜே செய்கிறார்கள்)

ஊர் மக்களின் கண்களுக்கு பத்து அவதாரம் எடுத்திருந்தாலும், தயாரிப்பாளர் கண்களுக்கு மட்டும் பதினொன்றாக எமன் அவதாரம் எடுத்து நின்றார் உலகநாயகன். நல்லவேளை, தசாவதாரத்தின் வெற்றிக்கு தயாரிப்பாளர் ரவிச்சந்திரனின் வியாபார நுணுக்கமும் ஒரு முக்கிய காரணம்!

'கண்கள் இரண்டால்' என்ற மெலடியையும், 'நாக்க முக்க' என்ற அதிரடியையும் ஒரே தட்டில் தாங்கினார்கள் ரசிகர்கள். பேசாமடந்தை சசிக்குமார், ஊர் உலகமே பேசுகிற மாதிரி ஒரு படத்தை இயக்கி விநியோகஸ்தர்களுக்கு மத்தியில் குபேரக் கடவுளாக விஸ்வருபம் எடுத்து நின்றார். படம் சுப்ரமணியபுரம்.

எல்லாவற்றுக்கும் மேல் தமிழன் ஸ்மரணை அற்றுப் போய்விடவில்லை என்பதை பறைசாற்றியது திரையுலகம். இலங்கை தமிழர் பிரச்சனையில் நெல்லிக்காய் மூட்டையாக சிதறி நின்றாலும், எதிர்ப்புகுரலை ஒரே டெசிபலில் பதிவு செய்திருந்தது கலையுலகம். அமீரும், சீமானும் சிறைசென்று நிருபித்தார்கள் தமிழுணர்வையும், இன உணர்வையும்!

Wednesday, December 31, 2008

வருமான வரித்துறை வலையில் சோனா சோனாவுக்கு கைவசம் 'இரவு தொழில்'


சென்னையில் பிரம்மாண்டமான அணிகலன் ஷோரூமை திறக்கவுள்ள சோனா மீது வருமான வரித்துறை கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.'குசேலன்', 'மிருகம்', 'அடைக்கலம்', 'பத்து பத்து' உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளவர் சோனா, தமிழ் தவிர மலையாள படங்கள் சிலவற்றிலும் நடித்துவரும் சோனா சென்னையில் செயற்கை நகை மற்றும் பேன்சி ஆபரணங்களை விற்கும் மெகா ஷோரூம் ஒன்றை தொடங்கவுள்ளார்.

வரும் 9-ந் தேதி நடக்கவுள்ள ஷோரூம் திறப்பு விழாவில் நடிகை ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டு கடையை திறந்து வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சோனா மெகா ஷோரூம் திறக்கும் விஷயம் கோடம்பாக்கத்தில் உள்ள பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் சில படங்களே நடித்திருக்கும் சோனா அதற்காக வாங்கிய சம்பளமும் சொற்பம்தான். வேறு வருவாயே இல்லாதபோது மெகா ஷோரூமை திறக்க இவருக்கு எங்கிருந்து பணம் வந்தது என பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாம். ஒரு சின்ன நடிகை பெரிய ஷோரூமை திறக்கும் அளவிற்கு அவரது பின்னணி என்னவாக இருக்கும் என வருமான வரித்துறையும் தன் பங்கிற்கான ஆய்வில் இறங்கியுள்ளதாம். இதனை கண்டுபிடிப்பதற்காக சோனாவை கண்காணிக்க தொடங்கியுள்ளதாம்.

இதற்கிடையே சோனா கடை திறப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை என சாதாரணமாக சொல்லும் சிலர் அவரது வருமானம் பற்றி பக்கம் பக்கமாக எடுத்துரைக்கின்றனர். சோனாவுக்கு கைவசம் 'இரவு தொழில்' இருப்பதாக சொல்கின்றனர். பெரிய பெரிய தொழிலதிபர்களுடன் சோனாவிற்கு நல்ல 'Friend Ship' இருப்பதாகவும் அதன் மூலம்தான் அவருக்கு ஏகப்பட்ட வருமானம் கிடைப்பதாகவும் சொல்கின்றனர்.

கோலிவுட் - 2008

இந்த ஆண்டும் தமிழ் சினிமாவுக்கு சம்பவங்கள் நிறைந்த வருடமாகவே இருந்தது.

நல்ல பல படங்கள் வெளியாகின. நட்சத்திர திருமணங்கள், பிரபலங்களின் மறைவுகள், எதிர்பாராத போராட்டங்கள், விவாகரத்துகள் என பிசியான ஆண்டாக 2008 கோலிவுட்டுக்கு அமைந்தது.

நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தார். ஏற்கனவே இருந்த பார்வர்ட் பிளாக்கிலிருந்து விரட்டப்பட்ட நடிகர் கார்த்திக்கும் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற புதுக் கட்சியை ஆரம்பித்தார். நடிகர் சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார்.

தமிழ் சினிமாவில் 2008ம் ஆண்டு தயாரான நேரடித் தமிழ்ப் படங்கள் 90.

இத்தனை படங்கள் வந்தாலும் கூட 15 படங்கள் மட்டுமே செஞ்சுரி அடித்தவை.

கமல்ஹாசனின் தசாவதாரம், ஜெய், ஸ்வாதி நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம், ஜெயம் ரவி, திரிஷாவின் சந்தோஷ் சுப்ரமணியம், அஜீத்தின் பில்லா, நரேன்-அஜ்மலின் அஞ்சாதே, தனுஷ்-நயனதாராவின் யாரடி நீ மோகினி, தனுஷின் பொல்லாதவன், விஜய்யின் குருவி, ரித்தீஷின் நாயகன், விஷாலின் மலைக்கோட்டை, ஜீவனின் தோட்டா, சுந்தர்.சி.யின் சண்டை, சூர்யாவின் வேல் ஆகியவை 100 நாட்களைத் தாண்டி ஓடிய படங்கள்.

2008ல் ரஜினி - கமல்:


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு 2008ம் ஆண்டு மற்றும் ஒரு சம்பவங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குசேலன் அவரை மகிழ்ச்சிப்படுத்தவில்லை. அதேசமயம், பிரமாண்டமான எந்திரன் படத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். நாளுக்கு நாள் படத்தின் பட்ஜெட் எகிறிக் கொண்டே போவதாலும், சன் பிக்சர்ஸின் தயாரிப்பு என்பதாலும் படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன.

ஓகனேக்கல் விவகாரத்தில் ரஜினி பேசிய பேச்சால், கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்தன. ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

ஆனால் தான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய ரஜினி பின்னர் வருத்தம் தெரிவித்ததால், போராட்டங்கள் அடங்கின.

இலங்கைத் தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தி்ல, விடுதலைப் புலிகளை மறைமுகமாக அவர் பாராட்டிப் பேசியதை திரையுலகினர் மட்டுமல்லாமல் ஈழ ஆதரவு அரசியல் தலைவர்களும், தமிழார்வலர்களும் வரவேற்றனர்.

தனிக் கட்சி தொடங்க வேண்டும் என்று பல காலமாக வலியுறுத்தி வரும் ரசிகர்களை திடீரென சென்னைக்குக் கூட்டி வந்து அவர்கள் மனதில் தோன்றிய கேள்விகளைக் கேட்கக் கூறி, அதற்கு நச் சென்று பதிலளித்து குஷிப்படுத்தினார் சூப்பர் ஸ்டார்.

கமல்ஹாசனைப் பொறுத்தவரை இந்த ஆண்டு ஒரு மெகா ஆண்டு. இந்தியாவே எதிர்பார்த்த தசாவதாரம் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைத்தது. அப்படத்தில் அவர் ஏற்று நடித்த சில கதாபாத்திரங்கள் படு வேகமாக பிரபலமடைந்தன. குறிப்பாக பல்ராம் நாயுடு கேரக்டரை இமிடேட் செய்து பேசாதவர்களே அல்லது பேச முயலாதவர்களே இல்லை எனலாம்.

தசாவதாரத்தை முடித்த கையோடு மர்மயோகிக்கு திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால் நிதிப் பிரச்சினையில் படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த படமான தலைவன் இருக்கிறான் -ஐ இயக்கி, நடிக்கும் முயற்சியில் கமல்ஹாசன் ஈடுபட்டிருக்கிறார்.

மறைந்த பிரபலங்கள்..:

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கலைஞர்கள் சிலர் இந்த ஆண்டில் மறைந்து திரையுலகை மட்டுமல்லாமல், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தினர்.

பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியாரின் மறைவு அனைத்து திரை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. 1000 படங்களுக்கு மேல் நடித்த அற்புதமான நடிகரான நம்பியார் உடல் நலக்குறைவு மற்றும் வயோதிகத்தால், நவம்பர் 19ம் தேதி மரணமடைந்தார்.

மிகப் பெரிய இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீதர், அக்டோபர் 20ம் தேதி மரணமடைந்தார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ஸ்ரீதர் காதலுக்குப் புது மொழியும், புது வடிவும் கொடுத்த சிறந்த இயக்குநர் ஆவார்.

எழுத்தாளர், அறிவாளி, அறிவியலாளர், தமிழார்வலர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகம் கொண்டா சுஜாதாவும் இந்த ஆண்டுதான் மறைந்தார். பிப்ரவரி 27ம் தேதி சுஜாதா இறந்தபோது, எழுத்துலகும், இலக்கிய உலகும், திரையுலகும் சேர்ந்து வருந்தின.

வித்தியாசமான வில்லனாகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அறியப்பட்ட ரகுவரன் மார்ச் 19ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

அதேபோல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா, ரஷ்யாவுக்கு தாம் தூம் படத்தின் ஷூட்டிங்குக்காக போன இடத்தில் உயிரிழந்தார்.

நடிகர் பாண்டியன், குணால், குன்னக்குடி வைத்தியநாதன், பூரணம் விஸ்வநாதன், தேனி குஞ்சரம்மாள், தியாகராஜ பாகவதரின் மனைவி ராஜாம்பாள், பிரபு தேவாவின் மகன் விஷால், பழம்பெரும் தெலுங்கு நடிகர் சோபன்பாபு ஆகியோரும் 2008ல் மறைந்த திரையுலகினர்.

வைகைப்புயலின் வேகம்... தயாரிப்பாளர்கள் சோகம்!


வரப்போகும் புத்தாண்டு வடிவேலுவுக்கு இடி கொடுக்கும் போலிருக்கிறது. Vadiveluதினந்தோறும் 7 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் ஒரேயடியாக 9 லட்சமாக உயர்த்திவிட்டாராம். அதிர்ந்து போயிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதையும் தர தயாராக இருக்கிற சிலருக்கும், வடிவேலுவின் தினப்படி ஷெட்யூல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அதை மட்டுமாவது சீரமைக்கும்படி கேட்கிறார்களாம்.

காலை 11 மணிக்கு படப்பிடிப்புக்கு வரும் வடிவேலு, சரியாக ஒரு மணிக்கு லஞ்ச் பெல் அடித்துவிடுவாராம். அதன் பின் ஸ்பாட்டுக்கு வருவது 3 மணிக்குதானாம். மாலை ஆறு மணிக்கெல்லாம் இவருக்கு பேக்கப் சொல்லிவிட வேண்டும். சொல்லாவிட்டாலும், காரில் ஏறி போய் கொண்டேயிருப்பாராம். இந்த கால நேரத்தை கொஞ்சம் மாற்றிக் கொண்டாலாவது பரவாயில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

எதற்கும் சம்மதிக்காத வடிவேலு தனது பிடிவாதத்தை தளர்த்த மறுப்பதால், வைகைப்புயலின் வாசல் படி மிதிக்கவே அஞ்சுகிறது திரையுலகம். விளைவு...? வில்லுவை தவிர வேறு படங்கள் எதுவும் கையில் இல்லை அண்ணாச்சிக்கு. சும்மாதானே இருக்கிறோம் என்று நினைத்திருப்பார் போல... சொந்த ஊருக்கு பிள்ளை குட்டிகளோடு போயிருக்கிறாராம்.

ஒருவேளை அரசியல் ஆசை பிடித்து ஆட்டுகிறதோ என்னவோ?

கை தவறிய வெற்றி கவலைப்படும் லட்சுமிராய்


மகிழ்ச்சி ஒருபுறம், அதிர்ச்சி மறுபுறம் என்று அல்லாடிக் கொண்டிருக்கிறார் லட்சுமிராய். கிரிக்கெட் வீரர் டோனிக்கும் இவருக்கும் ‘அது வந்திருச்சு’ என்று மீடியாக்கள் கொளுத்தி போட, மார்க்கெட்டில் லட்சுமிராயை, ஐஸ்வர்யாராய் அளவுக்கு வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். சொல்லவே வேண்டியதில்லை, இது மகிழ்ச்சி.

அதிர்ச்சி என்ன தெரியுமா? திண்டுக்கல் சாரதி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதும், நிமிடத்திற்கொரு டிரெய்லர், நேரத்திற்கொரு பாட்டு என்று சன் டிவி கொடுக்கிற பிரமோஷனும்தான்! ஒருமுறை மலேசியாவில் இவரை சந்தித்த கருணாஸ் திண்டுக்கல் சாரதி கதையை சொல்லி, என்னுடன் ஜோடியாக நடிக்க சம்மதமா? என்றாராம்.

முகத்திற்கு நேராகவே “முடியாது” என்று மறுத்துவிட்டாராம் ராய். அதன்பின் ஒரு டஜன் நடிகைகளிடம் இந்த கதையை சொல்லி மூக்கறுபட்டாராம் கருணாஸ். ஆனால் படத்தின் வெற்றி, லட்சுமிராய்க்குதான் முதல் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அறிமுகம் ஆன நாளில் இருந்து ஒரு வெற்றிப் படத்திலும் நடிக்காத தன்னை, தேடி வந்த வெற்றியை தவற விட்டேனே என்று வருந்தினாராம். நேரடியாக கருணாசுக்கே போன் செய்து தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டாராம்.

விடுங்க, அடுத்த படத்திலே ஜோடி போட்டுடலாம்!

மணிரத்னத்தின் பாராட்டு மகிழ்ச்சியில் இயக்குனர்


ஊட்டியில் நடந்த படப்பிடிப்பில் கார் டிரைவர்களின் களேபரத்தால் இரண்டு நாள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னைக்கு வந்திருந்தார் மணிரத்னம். ஊரெல்லாம் சுப்ரமணியபுரம் படத்தை பற்றிய பேச்சாக இருந்த காலத்திலேயே பார்க்க நேரமில்லாமல் தள்ளிப் போட்டவர், இந்த முறை ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் தனக்காக தனி ஷோ ஏற்பாடு செய்து பார்த்தாராம்.

தியேட்டரை விட்டு வெளியே வருவதற்குள் அப்படத்தின் இயக்குனர் சசியை நேரில் வரச்சொல்லி பாராட்டி மகிழ்ந்தாராம். “உங்களிடம் நிறைய பேசனும். போன் பண்றேன். அவசியம் என் ஆபிசுக்கு வரனும்” என்று அழைத்துவிட்டு போனாராம்.

இன்றைய இயக்குனர்கள் பலருக்கும் ரோல் மாடலாக விளங்கும் மணிரத்னமே அழைத்தபின்பும், வழக்கம்போல் சந்தோஷத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அடக்கமாக இருக்கிறார் சசி. யூகம் என்னவென்றால், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்க அழைக்கப்பட்டிருப்பாரோ என்பதுதான்!

விக்ரம் வழங்குகிறார் சூர்யாவிடம் நான் கடவுள் ஆடியோ விழா


சுமார் மூன்று வருடங்கள்... நான் கடவுளை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிய பாலா, படத்தை முடித்து தணிக்கையையும் முடித்துவிட்டார். டிசம்பர் 30 ந் தேதி தணிக்கை அதிகாரிகளுக்கு நான் கடவுள் திரையிடப்பட்டிருக்கிறது. படம் பொங்கலுக்கு வருமா? அல்லது தள்ளிப் போகுமா? என்ற பெருங்கேள்வியோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். நாம் கேள்விப்பட்டவரை நான் கடவுள் பொங்கலுக்கு இல்லை. ஜனவரி 29 ந் தேதிதான் திரைக்கு வரும் என்கிறார்கள்!

இதற்கிடையில் புத்தாண்டு தினத்தன்று சென்னை சத்யம் காம்ப்ளக்சில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. ஒலிப்பேழையை நடிகர் விக்ரம் வழங்க, நடிகர் சூர்யா பெற்றுக் கொள்கிறார்.

கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், இளையராஜா, வாலி, பாலுமகேந்திரா, மகேந்திரன், ராம.நாராயணன் இவர்களுடன் பிரமிட் சாய்மீரா நிறுவன தலைவர் சாமிநாதன் கலந்து கொள்கிறார். தான் இசையமைத்திருந்தாலும், அந்த படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வதை விரும்பாதவர் இசைஞானி இளையராஜா. ஆனால், நான் கடவுள் படத்திற்காகவும், பாலாவுக்காகவும் இந்த விழாவிற்கு வர இசைந்திருக்கிறாராம் ராஜா.

பின்னல் முதுகு, ஜன்னல் முதுகு பரவசமூட்டும் ‘ரன்வே’ முதுகு...!


பின்னல் முதுகு, ஜன்னல் முதுகு, பார்த்தாலே பரவசமூட்டும் ‘ரன்வே’ முதுகு என்று புறமுதுகு காட்டும் நடிகைகளின் படங்கள்தான் மேலே நீங்கள் பார்ப்பது.

முகத்திற்கு செலவிடுகிற தொகையில் பாதியையாவது முதுகிற்கும் செலவிடுகிறார்களாம் இந்த நடிகைகள். சென்னையில் அமைந்திருக்கும் பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல்களில் அமைந்திருக்கும் பியூட்டி பார்லர்கள்தான் இவர்களின் முதுகேற்றத்தில் அக்கறை காட்டி வருகின்றன. முதுகு காட்டி படுத்திருக்கும் இவர்களுக்கு விலையுயர்ந்த க்ரீம்களால் அபிஷேகமே நடக்கிறதாம்.

இத்தனை செலவு செய்து மேற்படி பிரதேசத்தை இவர்கள் அழகுபடுத்தி வருவதால், இந்த அழகு மைதானத்தை ஒரு முறையாவது திரையில் காட்டுங்கள் என்றும் இயக்குனர்களுக்கு கோரிக்கை வைக்கிறார்களாம்.

கலங்கி போயிருக்கிறார்கள் இயக்குனர்கள்!

ஈழத்திற்கு புத்தாண்டில் விடிவு?


ஈழம் தொடர்பாக தொடர் முழக்கம் நடத்திக் கொண்டிருப்பவர் சீமான். ராமேஸ்வரம் பேரணி கூட்டத்தில் தனி ஈழம் மலரும் என்று பேசியவர் உணர்ச்சி பிரவாகத்தில் சில வார்த்தைகளை கொட்டப் போக, கைது, சிறையடைப்பு என்று போனது விவகாரம். இவரோடு அந்த பேரணியில் பேசிய அமீரும் கைது செய்யப்பட்டார். வெளியே வந்ததும் அமீர் கொஞ்சம் அடக்கி வாசிக்க, சீமான் அதே முரட்டு பிடிவாதத்துடன் பேசிக் கொண்டிருந்தார்.

பின்பு ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மீண்டும் உணர்ச்சிவயப்பட்டார் சீமான். இது தொடர்பாக ‘மாயாண்டி குடும்பத்தார்’ படப்பிடிப்பில் இருந்த போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் அமைந்துள்ள இவரது அலுவலகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கும் மர்ம மனிதர்கள் தீ வைத்தார்கள். தற்போது சிறையில் இருக்கும் இவரை இயக்குனர் மணிவண்ணன் தவிர வேறு யாரும் சென்று பார்க்கவில்லை.

மதுரை சிறையில் சீமானும், அமீரும் அடைக்கப்பட்டிருந்தபோது பாரதிராஜா, செல்வமணி, சேரன், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் சென்று ஆறுதல் கூறினர். ஆனால் இந்த முறை ஒருவருமே வராதது சீமானை அதிர்ச்சியுற செய்திருக்கிறது. “யார் வந்து பார்த்தாலும் எனக்கு மகிழ்ச்சியில்லை. வராமல் போனாலும் வருத்தமில்லை. ஈழம் மலரும் நாளே மகிழ்ச்சியான நாள். புத்தாண்டில் ஈழம் மலரும்” என்கிறாராம் சிறை தோழர்களிடம்.

Tuesday, December 30, 2008

சாரா பாலினின் மணமாகாத மகளுக்கு குழந்தை!


ஆன்கரேஜ், அலாஸ்கா: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அலாஸ்கா ஆளுநர் சாரா பாலினின் மகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம்.சாரா பாலினின் 18 வயது மகள் பிரிஸ்டல். இவர் கர்ப்பமாக இருந்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு ஞாயிற்றுக்கிழமை அலாஸ்காவின், பால்மர் நகரில் ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு டிரிப் ஈஸ்டன் மிட்சன் ஜான்சன் என பெயரிட்டுள்ளனராம். இந்தத் தகவலை சாரா பாலினின் உறவினரான காலின் ஜோன்ஸ் வெளியிட்டுள்ளார்.தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.இருப்பினும் இதுகுறித்து சாரா பாலின் தரப்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

விசேஷம் என்னவென்றால் பிரிஸ்டலுக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனது பள்ளிக்கூட நண்பரான லெவி ஜான்ஸ்டனை அவர் காதலித்து வருகிறார். கல்யாணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளார்.

சாரா பாலின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, தனது மகள் கர்ப்பமாக இருப்பதை சாரா பாலின் வெளிப்படையாக அறிவித்தார். இதை மீடியாக்கள் ஒரு பிரச்சினையாக கிளப்பின. இருப்பினும் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பாரக் ஓபாமா, சாரா பாலின் குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கையை தான் மதிப்பதாகவும், இதை தான் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

பிரிஸ்டலின் வருங்கால மாமியாரான ஷெர்ரி, போதை வழக்கு ஒன்றில் இந்த மாதம் கைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

மறக்க முடியாத-2008

யாராலும் மறக்க முடியாத, நிகழ்வுகள் நிரம்பிய ஆண்டாக, முடிவுக்கு வந்துள்ளது 2008.

ஆண்டின் தொடக்கம் முதல் முடிவு வரை பரபரப்பான நிகழ்வுகளுக்குப் பஞ்சமே இல்லாமல் ஓடி முடிந்துள்ளது 2008.

வருடத்தின் முதல் நாளிலேயே இந்தியாவின் ராம்பூரில், சி.ஆர்.பி.எப் முகாம் மீது தீவிரவாதிகள் வெறித் தாக்குதல் நடத்தினர். இலங்கையிலோ தமிழ் எம்.பி. தியாகராஜய்யா மகேஷ்வரன் கொல்லப்பட்டார்.

இந்த ஆண்டைப் புரட்டிப் போட்ட முக்கியமான மூன்று விஷயங்கள் தீவிரவாதம், பொருளாதார நெருக்கடி மற்றும் கச்சா எண்ணை விலை உயர்வு.கசப்போடு தொடங்கிய இந்த ஆண்டு, விரக்தியும், வேதனையுமாக முடிந்திருக்கிறது.

மறக்க முடியாத ஆண்டாக மாறிப் போன 2008ஐ திரும்பிப் பார்ப்போம்...

ஜனவரி:

தேதி 1 - உ.பி மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 7 வீரர்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

- இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தமிழ் எம்.பி. தியாகராஜய்யா மகேஷ்வரன் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.

3 - சரத்குமாரின் புதிய கட்சித் தொடக்க விழா மாநாட்டுக்கான பந்தல் கால் மதுரையில் நடப்பட்டது. ராதிகா அடிக்கல் நாட்டினார்.

- விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

- அரசியலில் ஈடுபடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார்.

- அஜீத்-ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

4 - தேசியக் கொடிக்கு அருகே கால் வைத்திருந்ததாக டென்னிஸ் புயல் சானியா மிர்ஸா மீது போபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

6 -விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் கர்னல் சார்லஸ் (சண்முகநாதன் ரவிசங்கர்) ராணுவத் தாக்குதலில் பலியானார்.

- ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய அணி, ஹர்பஜன் சிங் மீதான தடையை ஐசிசி நீக்கும் வரை சிட்னி நகரை விட்டு இந்திய அணி கிளம்பாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஆஸ்திரேலிய டூரையும் அது சஸ்பெண்ட் செய்தது.

- சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு குஷ்பு வணக்கம் செலுத்ததால் சர்ச்சை எழுந்தது. கவிஞர் அறிவுமதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களுடன் குஷ்பு கத்தி வாதிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

- மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பாக்கு திருடிய திருடனைப் பிடித்த ஊர் மக்கள் அவரை சரமாரியாக அடித்து, ஜீப்பில் கட்டி சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்று, கண்களில் ஆசிட் ஊற்றிக் கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

- இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க தடை விதித்துள்ளதாக மலேசிய அரசு அறிவித்தது.

8 - கொழும்பு அருகே நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் இலங்கை தேச கட்டமைப்புத் துறை அமைச்சர் டி.எம் தசநாயகா பலியானார்.

- தவறான தீர்ப்புகளைக் கொடுத்து சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்த சர்ச்சைக்குரிய நடுவர் ஸ்டீவ் பக்னர், இந்தியா - ஆஸ்திரேலிய தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

- மாலத்தீவு அதிபர் மாமூன் அப்துல் கயூமைக் கொல்ல நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. 15 வயது சிறுவன், அதிபரைக் காப்பாற்றினான்.

- கணவரை தன்னிடமிருந்து பிரித்து விட்டதாகவும், அவரை பார்க்க விடாமல் தடுப்பதாகவும் நடிகை ஷோபனா மீது நோய்டாவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாலினி கூறிய புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.

9 - தொழிலதிபர் தன்னைக் கற்பழிக்க முயன்றாக கூறி ஓசூர் போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் பெற அனுமதிக்குமாறு கோரிய நடிகை விந்தியாவின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
செய்தது.

10- டாடா குழுமத்தின் புரட்சி காரான ரூ.1 லட்சம் மதிப்புடைய டாடா நானோ டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

- நடிகர் பாண்டியன் (48) உடல் நலக்குறைவால் மதுரை மருத்துவமனையில் மரணமடைந்தார்.

- மதுரையை கலக்கி வந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீசார் இன்று கைது செய்தனர்.

- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி தமிழகத்திற்குள் வந்திருப்பதாக வதந்தி பரவியது.

- கன்னடர்களை புறக்கணிக்கும் ரயில்வேயின் போக்கைக் கண்டித்து பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகத்தின் பல ஊர்களில் ரயில் நிலையங்கள், அலுவலகங்கள் மீது கன்னட அமைப்பினர் வெறித்தனமான தாக்குதலை நடத்தினர்.

11 - ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

- கஞ்சா வழக்கில் ஆஜராகாமல் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.

- சென்னை போலீஸார் தேடி வந்த மதுரை ரவுடி டாக் ரவி மதுரை, திருமங்கலம் கோர்ட்டில் சரணடைந்தார்.

- எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலாக ஏறி சாதனை படைத்த நியூசிலாந்தின் எட்மண்ட் ஹில்லாரி மரணமடைந்தார்.

13 - ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து அலங்காநல்லூர், பாலலமேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அலங்காநல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

- சிவாஜி பட வெள்ளிவிழாவின்போது ஆபாச உடை அணிந்து வந்த நடிகை ஷ்ரியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சி போலீஸில் புகார் கொடுத்தது.

14 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னை வந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

15 - ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து அலங்காநல்லூரில் துக்க பொங்கல் அனுசரிக்கப்பட்டது.

- நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

- இலங்கையின் மொனரகல்லா மாவட்டத்தில் பஸ் குண்டு விபத்தில் 24 பேர் பலியானார்கள்.

17 - எம்.ஜி.ஆர் வாழ்ந்து மறைந்த ராமாவரம் தோட்ட இல்லத்திற்கு பெரும் இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக வருகிற ஜெயலலிதா சென்றார். எம்.ஜி.ஆர். குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார்.

- பெர்த் டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளே 600வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.

- திருப்பூர் மாநகராட்சி மேயர் செல்வராஜுக்கு பணம் கேட்டு லண்டனிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

18 - என்.டி.டி.வியின், 2007ம் ஆண்டின் சிறந்த பொழுதுபோக்காளருக்கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. பிரதமர் மன்மோன் சிங் வழங்கினார்.

- தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், 3 அதிமுகவினருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை தடை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

19 - பெர்த் டெஸ்ட் போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது.

- சிராவயலில் நடந்த மஞ்சு விரட்டின்போது ரகளை செய்ததாக நடிகரும் அமைச்சர் சுப. தங்கவேலனின் பேரனுமான ரித்தீஷ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

21 - தீவிரவாதப் பாதையிலிருந்து விலகி அமைதிப் பாதைக்குத் திரும்புமாறு தனது தந்தை பின் லேடனுக்கு அவரது மகன் ஒமர் பின் லேடன் கோரிக்கை விடுத்தார்.

- மலேசிய உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) சட்ட ஆலோசகர் உதயக்குமார் உள்ளிட்ட 5 தலைவர்களும் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

23 - தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படும் என சட்டசபையில் ஆளுநர் அறிவித்தார்.

- செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி அதை படம்பிடித்து வரும் ஸ்பிரிட் விண்கலம் (6 சக்கர ரோபோட்) அனுப்பிய படத்தில் ஒரு பெண் அமர்ந்திருப்பதைப் போன்ற காட்சி இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

- விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த முக்கிய முகாமான எக்ஸ்ரே தளம் மீது குண்டு வீசியதாகவும், பிரபாகரன் மயிரிழையில் தப்பியதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்தது.

24 - சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் விசாவை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.

- ரஜினிகாந்த், விஜய்யைத் தொடர்ந்து சிம்புவும் இனிமேல் சினிமாவில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார்.

- தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், பஸ் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன.

25 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மீதான சிறுதாவூர் நில மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணாவுக்கு லண்டன் கோர்ட், போலி பாஸ்போர்ட் வழக்கில் 9 மாத சிறைத் தண்டனை விதித்தது.

26- அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அரசே அதை நிறைவேற்றலாம் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது.

27 - முன்னாள் இந்தேனேசிய அதிபர் சுகர்தோ மரணமடைந்தார்.

28 - ஹைதராபாத் அருகே நடிகர் ராஜசேகர், அவரது மனைவி ஜீவிதா மற்றும் குழந்தைகள் மீது சிரஞ்சீவி ரசிகர்கள் கொலை வெறித் தாக்குதலை நடத்தினர். இதற்காக ராஜசேகர் வீட்டுக்கு நேரில் வந்து சிரஞ்சீவி மன்னிப்பு கேட்டார்.

- பலாலி ராணுவ தளத்திற்கு வந்த அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோதாபாயா ராஜபக்சே மீது விடுதலைப் புலிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். ஆனால் கோதாபாயா தப்பி விட்டார்.

- ஈழ தமிழ் இலக்கியத்தின் முன்னோடியும், பிரபல எழுத்தாளருமான செ.யோகநாதன் யாழ்ப்பாணத்தில் மரணமடைந்தார்

29 - இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீதான இனவெறி குற்றச்சாட்டை ஐசிசி மேல் முறையீட்டு ஆணையம் ரத்து செய்தது.

- உடற்பயிற்சி செய்தபோது மூக்கின் மீது எடைக் கல் விழுந்து நடிகர் தனுஷ் காயமடைந்தார்.

30 - சென்னையில் ரூ. 76.32 கோடி மதிப்பீட்டில் மத்திய செம்மொழி தமிழ் மையத்தை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

31 - நடிகை தேவயானிக்கு சென்னையில் 2வது பெண் குழந்தை பிறந்தது.

- விருத்தாச்சலம் நகர தேமுதிக ஒன்றிய செயலாளர் லெனின் மறைவைத் தொடர்ந்து அவரது குடும்பத்தார் கட்சித் தலைவர் விஜயகாந்த்.

பிப்ரவரி:

1 - தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

- ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் மீது இனவெறி ரசிகர்கள் முட்டைகளை எறிந்தனர்.

- இலங்கையின் தம்புலா நகரில் பஸ்சில் வெடிகுண்டு வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர்.

2 - பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கும், அவரது இத்தாலி காதலி கார்லா ப்ரூனிக்கும் பாரீஸ் நகரில் திருமணம் நடந்தது.

4 - மும்பை ஜூஹு பகுதியில் உள்ள சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டின் மீது கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

- நடிகை விந்தியா தொடர்ந்த கற்பழிப்பு முயற்சி வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

6- ஆழ்நிலை தியானத்தை மேற்கத்திய நாடுகளில் புகழ் பெறச் செய்த மகரிஷி மகேஷ் யோகி (91) நெதர்லாந்தில் மரணமடைந்தார்.

7 - மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார்.

- செக்ஸ் டாக்டர் பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

- சிறுநீரக மோசடி டாக்டர் அமீத் குமார் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.

8 - முன்னாள் சபாநாயகர் ராஜாராம் சென்னையில் மரணமடைந்தார்.

9 - சமூக சேவகர் டாக்டர் பாபா ஆம்தே (94) மரணமடைந்தார்.

10 - சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாடு மதுரையில் நடந்தது.

11 - சென்னையைச் சேர்ந்த கால் சென்டர் ஊழியரைக் கடத்திய வழக்கில் நடிகை பாபிலோனாவின் தம்பி பாலு கைது செய்யப்பட்டார்.

- இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், அவரது மனைவி சுஜயா சந்திரனுக்கும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

- நீண்ட காலமாக காதலித்து வந்த மான்யதாவை நடிகர் சஞ்சய் தத் மணந்து கொண்டார்.

13 - வட இந்தியர்களுக்கு எதிரான கலவரத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பை போலீஸார் கைது செய்தனர். ஆனால் உடனடியாக அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டார்.

- மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மார்ச் 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

15 - அமெரிக்காவின் தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் 7 மாணவர்களை சுட்டுக் கொன்ற மாணவர் தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

16 - நடிகை விந்தியாவுக்கும், நடிகை பானுப்பிரியாவின் தம்பி கோபாலகிருஷ்ணனுக்கும் குருவாயூரில் திருமணம் நடந்தது.

17 - செர்பியாவிடமிருந்து பிரிந்து சுதந்திர நாடாக தன்னை கொசாவோ பிரகடனம் செய்து கொண்டது.

18 - பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடந்தது.

- தமிழகப் பள்ளிக்கூடங்களில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதுதொடர்பாக மலையாள அமைப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

19 - 50 வருடங்களாக வகித்து வந்த கியூப அதிபர் பதவியிலிருந்து விலகினார் பிடல் காஸ்ட்ரோ.

20 - இந்தியன் பிரீமியர் லீக்கில் இடம்பெற்றுள்ள 82 சர்வதேச மற்றும் தேசிய வீரர்கள் மும்பையில் ஏலம் விடப்பட்டனர். எம்.எஸ்.டோணியை அதிக விலைக்கு (ரூ. 6 கோடி) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

- பிரபல மத போதகர் டி.ஜி.எஸ். தினகரன் சென்னையில் மரணமடைந்தார்.

22 - சென்னை எழும்பூர் கோர்ட்டில் வக்கீல் ரஜினிகாந்த்தை சக வக்கீல்கள் அடியாட்கள் உதவியுடன் படுகொலை செய்தனர்.

24 - திருவண்ணாமலை அருகே குரங்குகள் சரமாரியாக சாலையின் குறுக்கே பாய்ந்ததால், நிலை தடுமாறிய டாடா சுமோ கார் புளியமரத்தில் மோதி அதில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர்.

25 - கியூப அதிபராக பிடல் காஸ்ட்ரோவின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

- விக்ரம், ஸ்ரேயா நடிக்கும் கந்தசாமி படப்பிடிப்பின் போது வேப்ப மரத்தில் பால் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

27 - எழுத்தாளர் சுஜாதா மரணமடைந்தார்.

- மனைவியின் ஆட்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான தாசரி நாராயண ராவின் மகன் தாசரி பிரபு அவர்களிடமிருந்து தப்பி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

- பெனாசிரின் கணவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவருமான ஆசிப் அலி சர்தாரி மற்றும் பெனாசிர் பூட்டோவின் பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மான் மாலிக் ஆகியோர் மீதான அனைத்து ஊழல் வழக்குகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன.

29 - இயக்குனர் ஏஆர் முருகதாஸ் திடீரென கைது செய்யப்பட்டார்.

- விவசாயிகளின் ரூ. 60 ஆயிரம் கோடி கடன் ரத்து செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.


மார்ச்:

1 - எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் மனைவியை இழந்த வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

2 - சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடியவர்களை தடுத்த தீக்ஷிதர்களை போலீஸார் குண்டுக் கட்டாக தூக்கி வந்து வெளியே விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

- ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.



4 - தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

5 - கர்நாடக முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமான எஸ்.எம்.கிருஷ்ணா தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக மகாராஷ்டிர ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

- அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளராக ஜான் மெக்கெய்ன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

6 - கிளிநொச்சியில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ் எம்.பி. சிவநேசன் கொல்லப்பட்டார்.

7 - பாமகவுக்கு ராஜ்யசபா தேர்தலில் சீட் ஒதுக்க இயலாது என்பதை முதல்வர் கருணாநிதி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

8 - மலேசிய பொதுத் தேர்தலில் ஆளும் பாரிசன் தேசியக் கூட்டணிக்கு பெரும் அடி கிடைத்தது. சாதாரணப் பெரும்பான்மையுடன் அது வெற்றி பெற்றது. 8 முறை தொடர்ந்து வென்ற டத்தோ சாமிவேலு தோல்வி அடைந்தார்.

- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து, கொழும்புக்கு பெண் பைலட்டுகள், ஊழியைகள் இடம் பெற்ற விமானம் இயக்கப்பட்டது.

9 - உளுந்தூர்பேட்டை அருகே எறையூரில், வன்னிய கிருஸ்துவர்களுக்கும், தலித் கிருஸ்துவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள்.

- டெல்லி மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் அலுவலகத்தின் மீது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

- கண்டியில் நடைபெறுவதாக இருந்த சார்க் உச்சி மாநாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்புக்கு மாற்றப்பட்டது.

- விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவுக்கும், நடிகை ஷ்ரேயா ரெட்டிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.

10 - மலேசிய பிரதமராக 2வது முறையாக அப்துல்லா அகமது படாவி பதவியேற்றார்.

- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரலாற்றிலேயே மோசமான விபத்தாக, அபுதாபி - துபாய் நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்தனர். 150க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றன் மீது ஒன்று விழுந்து சேதமடைந்தன.

11 - போலி விசா மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற நடிகை புளோரா கைது செய்யப்பட்டார்.

14 - காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்தன. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் அதிக காலம் நீடிக்கும் புதிய சாதனையையும் படைத்தார்.

- ஈவ் டீசிங்கில் சென்னை மாணவி சரிகா ஷா கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

- ஆசிப் அலி சர்தாரி மீதான கடைசி ஊழல் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

- இந்தியாவின் முதலாவது க்ரீன்பீல்டு விமான நிலையம் என்ற பெருமையைக் கொண்ட புதிய ஹைதராபாத் விமான நிலையத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஷாம்ஷாபாத்தில் தொடங்கி வைத்தார்.

- அஜீத், ஷாலினி மகளுக்கு அனோஷ்கா என பெயர் சூட்டப்பட்டது.

15 - வக்கீல் ஜோதி அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்தார்.

16 - ஓகனேக்கலில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

- அகில இந்திய முஸ்லீம் பெண்கள் தனி நபர் சட்ட வாரியம், புதிய விவாகரத்து வழிமுறைகள் அடங்கிய 'ஷரியத் நிக்கநாமா'வை அறிவித்தது.

- இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் தம்பியும், முன்னாள் அமைச்சருமான அனுரா பண்டாரநாயகே மரணமடைந்தார்.

17 - மலேசிய அமைச்சரவையில், 4 தமிழர்கள் இடம் பெற்றனர்.

- அமெரிக்கா செல்ல போலி ஆவணங்களைக் காட்டி விசா பெற முயன்றதாக கைதான நடிகை புளோராவுக்கு ஜாமீன் கிடைத்தது.

19 - திமுகவின் அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரஸின் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன், அதிமுகவின் பாலகங்கா ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

- நடிகர் ரகுவரன் மரணமடைந்தார்.

- பாகிஸ்தானின் முதல் பெண் சபாநாயகராக ‌பாமிதா மிர்சா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- பிரபல அறிவியல் நாவலாசிரியர் ஆர்தர் கிளார்க் உடல் நலக்குறைவினால் இலங்கையில் காலமானார்.

- வேலூர் சிறையில் நளினியை பிரியங்கா ரகசியமாக சந்தித்துப் பேசினார்.

20 - நடிகர் சோபன்பாபு மரணமடைந்தார்.

22 - திரைப்பட வசனகர்த்தா என்.பிரசன்ன குமார் புற்று நோயால் மரணமடைந்தார்.

23 - பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் முன்னாள் மனைவி செசிலியா சிகானர் அல்பெனிஸ், மொராக்கோவைச் சேர்ந்த தனது காதலரை நியூயார்க்கில் திருமணம் செய்து கொண்டார்.

25 - மாநில சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து லதிமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் ராஜினாமா செய்தார்.

- பாகிஸ்தான் பிரதமராக சயீத் யூசுப் ரஸா கிலானி பதவியேற்றுக் கொண்டார்.

- அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

26 - முதல்வர் கருணாநிதி கோட்டைக்கு வந்த போது ஒரு முதியவர் வேட்டியை அவிழ்த்து விட்டு ஜட்டியுடன் ரோட்டில் ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

27 - சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சென்னை அருகே உள்ள கிராமங்களில் நிலங்களைக் கையகப்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

29 - தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (பிளாட்), தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்) மற்றும் ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி ஆகியவை சேர்ந்து புதுக் கூட்டணியை அறிவித்தன.

- டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் 10,000 ரன்களைக் கடந்தார்.

- முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி, திருமணமாகி 18 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையானார். அவரது மனைவி ரித்துவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

30 - பிரபல முருகன் இட்லி கடை நிறுவனத்தின் சென்னை, திருச்சி, மதுரை நகர்களில் உள்ள கடைகள், உரிமையாளரின் இருப்பிடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

31- ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட இரு தியேட்டர்கள் சூறையாடப்பட்டன.

ஏப்ரல்:

3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக பிரகாஷ் காரத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4 - ஓகனேக்கல் விவகாரத்தில் கன்னட அமைப்பினரின் போராட்டத்தைக் கண்டித்து சென்னையில் நடிகர், நடிகைகள் மாபெரும் உண்ணாவிரதம் இருந்தனர்.

6 - இலங்கையில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ படுகொலை.

16 - சென்னையில், சுருட்டு சாமியார் என்று அழைக்கப்பட்ட பழனிச்சாமியும், அவரது காதல் மனைவி டாக்டர் திவ்யாவும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.

17 - முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் 2 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

23 - திருவள்ளூர் அருகே தடுப்பூசி போட்ட 4 குழந்தைகள் பலியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

24 - இசையமைப்பாளர் இமான் - மோனிகா திருமணம் நடந்தது.

25 - அரசு ஆணைகளி்ல் இனி திருவள்ளுவர் ஆண்டையே பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

மே:

1 - பிரபல காந்தியவாதியும், சமூக சேவகியுமான நிர்மலா தேஷ்பாண்டே மரணமடைந்தார்.

2 - இந்தியர் சரப்ஜித் சிங்கின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது பாகிஸ்தான் அரசு.

- தமிழகத்தை உலுக்கிய பல கோடி ரூபாய் தங்கக் காசு மோசடி தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

5 - மியான்மரை நர்கீஸ் புயல் தாக்கியது. 1 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

8 - தா.கிருட்டிணன் கொலை வழக்கிலிருந்து மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

- சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

13 - ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 80 பேர் உயிரிழந்தனர்.

14 - ஊழல் வழக்கில் சிக்கிய உறவினருக்காக சிபாரிசு செய்து மாட்டிக் கொண்ட தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ராஜினாமா செய்தார்.

18 - தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளில் விஷச் சாராயம் சாப்பிட்டு 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

30 - தென் மாநிலங்களில் முதல் முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. கர்நாடகத்தில் பாஜகவின் எதியூரப்பா முதல்வராகப் பொறுப்பேற்றார்.

ஜூன்:

2 - தமிழ ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை குறைக்கப்படுவதாக அருச அறிவித்தது. ஆனால் இந்த விலைக் குறைப்பு இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகி விட்டது.

4 - எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்.

9 - பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து துரத்தப்பட்ட நடிகர் கார்த்திக், அகில இந்திய நாடாளும் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.

10 - மத்திய அரசின் சிறந்த நடிகைக்கான விருது பிரியாமணிக்கு அறிவிக்கப்பட்டது.

13 - திமுக கூட்டணியிலிருந்து பாமகவை உடனடியாக விலக்க வேண்டும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி பரபரப்பு கோரிக்கையை வைத்தார்.

17 - திமுக கூட்டணியிலிருந்து பாமக விலக்கப்படுவதாக திமுகவின் உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அதை முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

21 - மத்திய அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை உ.பி. முதல்வர் மாயாவதி விலக்கிக் கொண்டார்.

25 - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனாத்வாலா மரணமடைந்தார்.

26 - முன்னாள் ராணுவத் தளதி பீல்ட் மார்ஷல் மானெக்ஷா மரணமடைந்தார்.

ஜூலை:

7 - காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. 41 பேர் பலியானார்கள்.

- குலாம் நபி ஆசாத் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பதவி விலகியது.

- தமிழக காங்கிரஸ் தலைவராக தங்கபாலு நியமிக்கப்பட்டார்.

8 - ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டனர்.

12 - வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் இருவரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றது.

15 - சத்துணவுடன் வாழைப்பழம் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

17 - தொலைபேசி ஒட்டு கேட்பு வழக்கில் சிக்கிய லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் டிஜிபி உபாத்யாயா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

19 - இலங்கை கடற்படையைக் கண்டித்து சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம். கருணாநிதி தொடங்கி வைத்தார்.

22 - பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு வெற்றி பெற்றது (275-256)

- நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டுப் போடாமல் இருக்க ரூ. 1 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பாஜக எம்.பிக்கள் மூன்று பேர் லோக்சபாவில் பணக் கட்டுக்களைக் கொட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.

23 - லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

- எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் மதிமுகவை விட்டு நீக்கப்படுவதாக கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.

25 - பெங்களூரில் 8 இடங்களில் குண்டுவெடிப்பு. ஒரு பெண் பலி, பலர் படுகாயம்.

26 - அகமதாபாத்தில் 14 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு. 55 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்.

27 - சென்னை, மதுரை, நெல்லையைத் தகர்க்கும் திட்டத்துடன் இருந்த அப்துல் கபூர் நெல்லையில் கைதானார்.

31 - கன்னடர்களை உதைக்க வேண்டும் என்று கூறியதற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை குசேலன் உள்ளிட்ட ரஜினி படங்களை திரையிட தடை விதிக்கப்படுவதாக கன்னட அமைப்புகள் அறிவித்தன. தனது பேச்சுக்கு ரஜினி வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து தடை விலக்கப்பட்டது.

ஆகஸ்ட்:

1 - இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு சர்வதேச அணுசக்தி ஏஜென்சி ஒப்புதல் அளித்தது.

- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மரணமடைந்தார்.

- தமிழகத்தின் 9வது மாநகராட்சியானது வேலூர்.

5 - தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக தூத்துக்குடி உருவானது.

7 - ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா டிஸ்மிஸ் ஆனார்.

12 - அமர்நாத் நில விவகாரம் பெரும் கலவரமாக மாறியது. ஜம்மு ஸ்தம்பித்தது. துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியானார்கள்.

25 - தமிழகத்தில் திடீரென ஏற்பட்ட பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மாநிலத்தையே உலுக்கியது. பெட்ரோல், டீசல் கிடைக்காமல் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

- ஒரிசாவின் காந்தமாலில் பயங்கர வன்முறை வெடித்தது. 2 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். சர்ச்சுகள், கிறிஸ்தவ பள்ளிகள் தீவைத்து எரிக்கப்பட்டன.

27 - ஜார்க்கண்ட் முதல்வராக சிபு சோரன் பதவியேற்றார்.

28 - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விலகினார். புதிய முதல்வராக வைத்திலிங்கம் தேர்வானார்.

செப்டம்பர்:

1 - சென்னை தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 2 ஊழியர்கள் மரணமடைந்தனர்.

5 - சென்னை பல்கலைக்கழக 150வது ஆண்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

6 - பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெற்றார்.

- இந்தியாவின் அணு வர்த்தகத்தை அங்கீகரித்து அணு எரிபொருள் சப்ளை நாடுகள் கூட்டமைப்பு அனுமதி அளித்தது. இந்தியாவின் அணுத் தனிமை முடிவுக்கு வந்தது.

7 - விஜயன் கொலை வழக்கில், சுதாவின் தங்கை பானுமதி உள்ளிட்டோர் கைது.

8 - வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் மரணமடைந்தார்.

10 - 6வது முறையாக அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

13 - டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 20 பேர் பலியானார்கள்.

15 - ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

23 - விபத்தில் மூளை மரணமடைந்த மாணவர் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை தானம் செய்து அவரது பெற்றோர் தமிழகத்தையே நெகிழ வைத்தனர். தமிழகத்தில் அதிகரித்துள்ள உறுப்பு தானத்திற்கு முன்னோடியாக இந்த நிகழ்வு அமைந்தது.

அக்டோபர்:

1 - பழம்பெரும் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் மரணமடைந்தார்.

2 - ரேஷன் கடைகளில் ரூ. 50க்கு பத்து சமையல் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

- பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்ட சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

3 - மமதா பானர்ஜியின் தொடர் போராட்டம் காரணமாக சிங்கூரிலிருந்து வெளியேறுவதாக ரத்தன் டாடா அறிவித்தார்.

6 - இலங்கையில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் முன்னாள் ராணுவ தளபதி ஜனக பெரேரா, அவரது மனைவி உள்பட 26 பேர் பலியானார்கள்.

7 - பொருளாதார நெருக்கடியால், வேலையை இழந்த அமெரிக்கா வாழ் தமிழர் தனது மனைவி, 3 மகன்கள், மாமியாரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

11 - இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

17 - இலங்கைப் பிரச்சினை தொடர்பாக திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்பட 16 எம்.பிக்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கினர்.

19 - இலங்கையில் தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் திரைப்படத் துறையினர் மாபெரும் போராட்டம் நடத்தினர்.

20 - பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதர் மரணமடைந்தார்.

23 - இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், அவைத் தலைவர் கண்ணப்பனும் கைது செய்யப்பட்டனர்.

24 - கடும் நெருக்கடியைத் தொடர்ந்து இயக்குநர்கள் சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டனர்.

25 - புதிய திருப்பூர் மாவட்டம் உதயமானது.

26- மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பமாக பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் புரோஹித் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

- இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சென்னையில் அறிவித்தார்.

28 - விடுதலைப் புலிகள் கொழும்பு அருகே விமானத் தாக்குதலை நடத்தினர்.

30 - அஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 70 பேர் பலியானார்கள்.

நவம்பர்:


1 - இலங்கைப் பிரச்சினையை தீர்க்கக் கோரி சென்னையில் நடிகர், நடிகையரின் பிரமாண்ட உண்ணாவிரதம், கமல், ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்பு.

3 - ஆண்டவன் தீர்மானித்தால் நாளைக்கே அரசியலில் இறங்குவேன் என ரசிகர்களிடம் அறிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

5 - அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஓபாமா சரித்திர சாதனையுடன் மாபெரும் வெற்றி பெற்றார்.

8 - திருமங்கலம் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ வீர இளவரசன் மரணமடைந்தார்.

- இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி சென்னையில் சின்னத்திரை நடிகர், நடிகையர் உண்ணாவிரதம்.

12 - சென்னை வந்த பாஜக தலைவர் அத்வானி, ரஜினிகாந்த்தை வீடு தேடிச் சென்று சந்தித்தார்.

- சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் கொலை வெறித் தாக்குதல் - 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். போலீஸ் கை கட்டி வேடிக்கை பார்த்த அவலம்.

13 - சட்டக் கல்லூரி வன்முறையை போலீஸார் வேடிக்கை பார்த்ததைத் தொடர்ந்து கமிஷனர் மாற்றம். புதிய கமிஷனராக ராதாகிருஷ்ணன் நியமனம்.

16 - இலங்கைத் தமிழர்களுக்காக நடிகர் விஜய், தனது ரசிகர்களுடன் தனி உண்ணாவிரதம்.

19 - பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என். நம்பியார் சென்னையில் மரணமடைந்தார்.

26 - மும்பையில் தீவிரவாதிகள் வெறித் தாக்குதல். 180 பேர் பலியானார்கள். அஜ்மல் கஸாப் என்ற தீவிரவாதி பிடிபட்டான். 9 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

27 - முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மரணமடைந்தார்.

28 - நாரிமன் ஹவுஸ் மற்றும் டிரைடென்ட் ஹோட்டல் தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டது.

29 - தாஜ் ஹோட்டலையும் கமாண்டோப் படையினர் மீட்டனர். தீவிரவாதிகளின் 60 மணி நேர வெறியாட்டம் முடிவுக்கு வந்தது.

30 - உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகினார். ப.சிதம்பரம் புதிய உள்துறை அமைச்சராக நியமனம்.

- பாமக பொருளாளரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர்:


1 மகாராஷ்டிர துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் பதவி விலகினார்.

3 - மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் பதவி விலகினார். அசோக் சவான் புதிய முதல்வரானார்.

8 - டெல்லி, ராஜஸ்தான், மிஸோரம் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி. மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் பாஜக வென்றது.

11 - மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்குக் காரணமான லஷ்கர் இ தொய்பாவின் முகமூடியான ஜமாத் உத் தவா அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலĮ