
நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் பிரபுதேவாவின் மகன் விஷால் (13) உடல் நலக்குறைவால் இறந்தார்.
கடந்த 14 வருடங்களுக்கு முன் லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார் பிரபுதேவா. இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திராதேவா, ஆதித்யாதேவா ஆகிய மூன்று மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் விஷாலுக்கு 13 வயது.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 6 மாதங்களாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விஷால் மரணம் அடைந்தார்.
கடந்த சில வருடங்களாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஷால் எமனின் பார்வைக்கு ஆளானார். பார்க்காத மருத்துவர்களே இல்லை. எனினும் நோயின் தீவிரம் மட்டும் குறைந்ததாயில்லை. இந்நிலையில் இன்று காலை விஷால் தனது கடைசி சுவாசத்தை இழந்தார்.
சமீப்ததில் தனது மகனின் ஆசை ஒன்றை நிறைவேற்றினார் பிரபுதேவா. வில்லு படத்தில் விஜய்யை தனது அப்பா எப்படி இயக்குகிறார் என்பதை காண விஷாலுக்கு ஆவல். எனவே மலேசியாவில் வில்லு படப்பிடிப்பு நடந்தபோது விஷாலையும் அழைத்துச்சென்று அவனது ஆசையை நிறைவேற்றினார் பிரபுதேவா. அதுதான் மகனின் கடைசி ஆசை என்பது அப்போது அறிந்திருக்கவில்லை பிரபுதேவா.
விஷாலின் உடல் சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபுதேவாவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு நடிகர்கள் விஜய், பிரகாஷ்ராஜ், ஸ்ரீமன், அருண்பாண்டியன், ஆதித்யா, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பிரபு தேவா-லதா தம்பதிக்கு விஷால் தவிர ரிஷி, ராகவேந்திரா, ஆதி தேவா ஆகிய மகன்கள் உள்ளனர்.

1 comments:
வருத்தம்தான்.
பிரபுதேவாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்(ரொம்ப முக்கியம்)
அந்த குழந்தையை இழந்து மனம் வருந்துபவர்களுக்கு மனம் சாந்தி அடைய வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Post a Comment