Thursday, November 20, 2008

வாரணம் ஆயிரம் முத‌லிட‌ம்!


சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது வாரணம் ஆயிரம். சென்ற வாரம் வெளியான கெளதம் வாசுதேவ மேனனின் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமிருந்தது. முதல் 3 நாட்களில் சென்னையில் மட்டும் இப்படம் ஏறக்குறைய 74 லட்ச ருபாய் வசூலித்துள்ளது.

சென்ற வார இறுதி வசூலில் ஏகன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அஜித்தின் இப்படம் வெளியான தினத்திலிருந்து சென்ற வாரம் வரை 2.83 கோடிகள் வசூலித்துள்ளது. 3 ஆம் இடத்தில் சேவல். வசூல் இதுவரை ஒன்றேகால் கோடிகள். சென்றவார வசூல் நாலேகால் லட்சம்.

ஐந்தாம் இடத்தை பிடித்துள்ள வெங்கட் பிரபுவின் சரோஜா இதுவரை சென்னையில் மட்டும் 3.77 கோடிகள் வசூலித்து மொத்த வசூலில் முதலிடத்தில் உள்ளது. இதன் சென்ற வார வசூல் ஒன்றரை லட்சம்.

வாரணம் ஆயிரம் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் வரும் நாட்களில் வசூலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

1 comments:

Arnold Edwin said...

வாரணம் ஆயிரம் அணிக்கு வாழ்த்துக்கள்

Followers